top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?-63

அத்தியாயம் 63- Final

கிராமத்திற்கு வந்திறங்கிய முதல் நாள்… அந்தக் கிராமத்தின் திருவிழா நாள் என்பதால்… சந்தியாவை எல்லாம் கையில் பிடிக்கவே முடியவில்லை… சும்மாவே மொத்த குடும்பமும் கூடினால் அவளை ராகவ் கையில் வைத்திருக்க முடியாது… இப்போது கேட்கவா வேண்டும்…. ஒரே ஆட்டம் பாட்டம் தான்… ரகளை தான்….

காதம்பரி… மோகனா, அவள் பெண் நர்மதா மட்டுமின்றி.;.. மிருணாளினியும் அவ்வப்போது அந்த கூட்டத்தில் ஐக்கியம் ஆக… பெண்கள் கூட்டம், ஆண்கள் கூட்டம் என இரண்டு பிரிவாகக் காட்சி அளித்தது அந்த குடும்பமே… இல்லையில்லை… அந்த கிராமமே…

காலையில் இருந்தே… கோலம் என்ன… பூஜைகள் என்ன… விதமாக விதமாக உடைகள்… சமையல் என பெண்கள் கூட்டம் ஏதேதோ செய்து கொண்டிருக்க… அந்த கூட்டத்தில் இருந்து ராகவ் தன் மனைவியைத் தனிமைப்படுத்தி.. கூட்டிக் கொண்டு வரவே முடியவில்லை…

கோவிலுக்கு செல்லும் போது மட்டும் நல்ல பெண்ணாக தனக்கும் திருமணம் ஆகி விட்டது… தனக்கும் கணவன் இருக்கின்றான் என்ற ஞாபகம் வந்திருக்கும் போல… இல்லை எல்லோரும் தம்பதிகளாக வருகின்றனர் என்பதால் இவளும் செய்கிறாளா என்று தெரியவில்லை… அவனோடு சேர்ந்து கிளம்பினாள்

தன்னவள்… சாதரணமாகவே புடவையில் அசத்துவாள்… இன்று அலங்காரத்தில்…. பட்டுபுடவையில் பாந்தமாக வந்து நின்றவளிடம் இவன் சொக்கி நின்றிருக்க…. அதே வேளை இவனும் வேஷ்டி சட்டையில் இருந்தான்..

பெண்கள் தான் படவையில் அசௌகரியமாக உணர்வார்கள் என்றால்….இவனின் நிலையும் அதுவே…. பேண்ட் ஷார்ட்டோடு கோவிலுக்கு வந்து விடலாம் என்று பார்த்தால்… அத்தனை பிஸியிலும்

“ரகு மாம்ஸ்… இன்னைக்கு திருவிழாக்கு வேஷ்டி சட்டை தான்… நாளைக்கு சிந்து பாப்பா காதுகுத்துக்கு வேஷ்டி சட்டைதான்… தாய் மாமன்ல…. சோ எனக்கு அன்கம்பர்ட்டபிள் அது இதுன்னு ஜகா வாங்குனீங்க.. அப்புறம் இந்த ஒட்டிக்கோ கட்டிக்கோனு… ரெடிமேட் வேஷ்டி வச்சுருந்தீங்க… அதெல்லாம் வீட்லயே வச்சுட்டு வந்துட்டேன்… எட்டு முழம் வேஸ்டி வாங்கி வச்சுருக்கேன்..… அதுதான் கம்பீரமா அம்சமா இருக்கும்… அதைக் கட்டுங்க… தெரியலைன்னா.. சும்மாதானே இருக்கீங்க கட்டி பழகிங்க” என்று மிரட்டி விட்டு எஸ்கேப்பும் ஆகி இருக்க…

“என்னது எட்டு முழமா…”

பெரும்பாலும் அவன் நான்கு முழ வேஷ்டி இல்லை என்றால் ஒட்டிக்கோ கட்டிக்கொ டைப்பில் கட்டி முடித்து வீட்டு விழாக்களை முடித்துக் கொள்வான்…

“இன்று எட்டு முழமா” என்று யோசனை வந்தாலும்… அவனுக்கு அதைக்கட்டுவது எல்லாம் பெரிய விசயம் இல்லை…

தன் திருமணத்தின் போது மட்டுமே... எட்டு முழ பட்டு வேஷ்டியை அணிந்திருந்தான்… இன்று மனைவி சொல்லி விட்டாளே…. வேறு வழி… மனைவி சொல் தட்டாத கணவனாக வேஷ்டியை அணிந்து கண்ணாடியில் பார்க்க… அழகாகத்தான் இருந்தான்… அதிலும் மீசை வேறு இருக்க அது இன்னும் அவனுக்கு கம்பீரத்தைக் கொடுக்க….

“பரவால்லாடா உன் பொண்டாட்டிக்கு ஈகுவலாத்தான் இருக்க” என்று தன்னையே நெட்டி முறித்துக் கொண்டவனை மனைவிதான் கண்டு கொள்ளவே இல்லை… அப்படித்தான் இவன் நினைத்திருக்க… இருவருமாக சேர்ந்து அங்கிருந்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் போதுதான் கவனித்தான்… அவள் புடவை வண்ணத்திற்கு பொருத்தமாக இவனுக்கு சட்டை வாங்கி வைத்திருக்கின்றாள் என்பதையே…

ஆக இவன் தான் அவளைக் கவனிக்காமல்… இருந்திருக்கானா… என்ற குற்ற உணர்ச்சியில் இருக்க… அவளோ இவனத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்… அதோடு இல்லாமல்

“ரகு மாம்ஸ்… மேரேஜ்ல உன்னை சைட் அடிக்க முடியலை… அந்த ஆசையை இப்போ தீர்த்துக்கறேன்” என்று வேறு காதில் முணுமுணுக்க… இவர்களைப் பார்த்து…. ஒரே வண்ணத்தில் இருவரும் உடை அணிந்திருப்பதைப் பார்த்து…. அங்கிருந்த அத்தனை பேரும்… இருவரையும் கலாட்டா செய்து ஓட்ட ஆரம்பிக்க…. அப்போது இவன் தோளில் ஒளிந்து கொண்டாள்தான் மற்றவர்களின் கிண்டல் தாங்காம…

ஆனால் அதன் பிறகு இவன் தான் அவளைத் தேட வேண்டியதாகி விட்டது… கோவில் சாமி தரிசனம் என்று திருவிழா கொண்டாட்டம் ஆரம்பமாக… இவன் கண்ணில் படவே இல்லை சந்தியா….

சந்தியாவின் கையைப் பிடித்துக் கொண்டு… திருவிழா திடலில் சுற்றலாம் என்று பார்த்தால்… அவள் பெண்கள் கூட்டத்தின் தலைவியாக மாறி… சுற்றிக் கொண்டிருக்க… வெறுத்தே விட்டான் ராகவ்…

ஆனால் அப்போதே முடிவும் செய்து விட்டான்… இனி சந்தியா திருவிழா… ஊருக்கு போகலாம் என்று கேட்டு வரட்டும்…. அப்போது இருக்கு… இப்படி தனித்தனியா சுத்துறதுக்கு மேட்சிங் மேட்சிங் ட்ரெஸ் வேற… என்று உள்ளுக்குள் தன்னவளைக் கடிந்து கொண்டு வேறு வழி இன்றி.. தன் சகாக்களோடு வேண்டா வெறுப்பாக சுற்றி வர… அப்போதுதான் கவனித்தான்…

சந்தோஷ், அவர்களின் இரண்டு வயதுக் குழந்தை சிந்துவை ஒரு கையில் தூக்கிக் கொண்டபடி.. மிருணாளினியை… இன்னோரு கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்த கடை வீதியில் ஏதோ பேரம் பேசியபடி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்க… அந்தக் காட்சியில் ராகவ்வின் உள்ளம் நிறைந்தது… சகோதரனாக… கண்டிப்பாக மிருணாளினி சந்தோஷ் வாழ்க்கை முழுமையடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை அந்த காட்சி… சொல்ல… அதே நிம்மதியோடு தெய்வத்திடமும் தன் கோரிக்கையை வைத்திருந்தான்… இருவரும் சந்தோஷாமாக வாழ வேண்டுமென்று…

அங்கிருந்த அத்தனை பேரும் சந்தோஷமாக… பரபரப்பாக இருக்க… இவன் மட்டும் தனிமையில் இருப்பது போல இருக்க… வீட்டுக்கே திரும்பிப் போய் விடலாமா என்று யோசித்தபடியே திரும்பும் போது….

“ஓய் ட்ரிப்பிள் ஆர்… ” என்றபடியே கையில் பலூனோடு வந்த தன்னருகே வந்து நின்ற மனைவியைப் பார்த்து முறைத்தவன்…

“ஏண்டி… நீ முன்னப்பின்ன… இந்த திருவிழாவையே பார்த்தது இல்லையா...” என்று முறைத்தபடி கேட்டாலும்… எப்படியோ இப்போதாவது வந்தாலே…. என அவளோடு சந்தோஷமாக நடக்க ஆரம்பிக்க….

அதன் பின் ஏன்டா அவளோடு வந்தோம் என்று அவனே நொந்து போகும் அளவுக்கு அவனை நினைக்க வைத்தாள் தான் அவன் மனைவி…. ஆனால்… அது எல்லாமே அவள் தந்தையிடம் ஏங்கி கிடைக்காத நிகழ்வுகள் என்று அவனாகவே புரிந்து கொள்ளவும் செய்தான்…

“ரகு அதை வாங்கித்தா… “

“அப்புறம் இது”

“அந்த கேம் போலாமா…”

“இந்த ராட்டினம் சுத்தலாமா” என்று ராகவ்வை ஒரு வழி பண்ணி விட்டுத்தான் இருவருமாக வீடு போய்ச் சேர்ந்திருந்தனர்…..

ஒரு வழியாக மனைவி கேட்டவற்றை எல்லாம் வாங்கிக் கொடுத்து… அவள் ஆசைப்பட்டவற்றை நிறைவேற்றி வைத்திருந்த நிம்மதியில்… ராகவ்வுக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தான்…

அதே சந்தோஷத்தோடு….

“அரட்டை எல்லாம் முடித்து விட்டு.. அறைக்கு சீக்கிரம் வரும்படி…” யாரும் அறியாமல் மனைவியிடம் சைகை காட்டி விட்டுச் சென்றவன்… சந்தியாவை எதிர்பார்த்து தங்கள் அறையில் காத்திருக்க…

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து வந்திருந்தாள் சந்தியா…

அவள் மேல் கோபம் வந்தாலும்… இப்போதாவது வந்து சேர்ந்தாளே என்று கோபத்தை எல்லாம் அடக்கிக் வைத்தவனாக அவளிடம் திரும்ப… அவள் பண்ணி வந்திருந்த கோலத்தை என்ன சொல்வது…

தலையிலடித்துக் கொண்டவன் ராகவ ரகு ராமே

“ரகு… இந்த மருதாணி சூப்பரா பிடிக்கும்… எப்போ இங்க வந்தாலும் போடாம இருக்க மாட்டேன்… அம்மா எனக்குப் பிடிக்கும்னு அரச்சு வச்ச்ருந்தாங்க… நான் மட்டுமல்ல எல்லோருமே… போட்டோமே“ என்று அவனிடம் ஆசை ஆசையாக கைகளை நீட்ட

பற்களைக் கடித்திருந்தவன் வேறு யாராக இருக்க முடியும்

“ஏண்டி… இங்க நான் உனக்குத் தேவையில்ல தானே… நாளை மறுநாள் நடக்கப்போகிற மிருணா பாப்பா காதுகுத்து விழாவுக்கு வருகிறேன்னு சொன்னப்போ… என்னவோ பெரிய இவ மாதிரி கண்ணைக் கசக்குன…. பெரிய… டேஷ் மாதிரி… நீ வரலைனா… எனக்கு அங்க ஏதும் தேவையில்ல… நான் என்ஜாய் பண்ண மாட்டேன்னு…. உன்ன நம்பி… என் பொண்டாட்டி நாம இல்லைனா ஃபீல் பண்ணுவாளேன்னு… போட்டது போட்டபடி போட்டுட்டு அடிச்சு பிடிச்சு ஓடுற இரயில்ல ஏறி வந்தா… மேடம் நீங்க எங்கள கண்டுக்காமல்… இங்க உங்க மங்கையர் சகாக்களோட சுத்திட்டு இருப்பீங்க… நாங்க உங்களை தூரமா இருந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கணும்… இதெல்லாம் போதாதுன்னு… இவ எப்போட தனியா வருவான்னு இங்க லூசு மாதிரி நடை பழகிட்டு இருந்தா… நீங்க… கால்ல கைல மருதாணிய வச்சுட்டு,.. அது அழியாம அன்ன நடை போட்டு வந்து… அதை என்கிட்ட வேற காமிக்கிற” அன்றைய தினத்தின் மொத்த கடுப்பையும் மூச்சு விடாமல் சொல்லி முடிக்க…

அப்படியே அதிர்ந்து நின்று… பேயறைந்தார்ப் போல பார்த்து நின்றவள் அவன் சகியேதான்…

கண்களில் இருந்து இப்போதா அப்போதா என்று கண்ணீர் வரக் காத்திருந்தது போலக் குளம் கட்ட…

வேகவேகமாக மூக்கை உறிஞ்சியபடி….

“சொன்னாங்க சொன்னாங்க எல்லாரும்… கல்யாணம் பண்ணினால் நெனச்ச நேரத்திற்கு தூங்க முடியாது… நமக்கு பிடிச்சது பண்ண முடியாதுன்னு… நீ இந்த ஆறு மாசத்தில… எவ்ளோ லேட்டா நைட் வீட்டுக்கு வந்தாலும்… முழிச்சுக்கிட்டு … நீ வரும் போது… உன்கிட்ட பல்லை காட்டினேன்ல… நீ இதுவும் பேசுவ… இதுக்கு மேலயும் பேசுவ.. இப்போ என்ன இந்த மருதாணியை நான் எடுக்கணும் அவ்வளவு தானே… போடா… எனக்கு ஒண்ணும் இல்லை… நாளைக்கு எல்லாரும் கையைக் காட்டும் போது… எனக்கு மட்டும்… இலேசா சிவந்திருக்கும்… எனக்கென்ன… என் புருசனுக்கு என் மேல இவ்வளவு ஆசைதான்னு சொல்வாங்க… போ போ…” என்ற படியே கை கழுவப் போக… அவளைப் பிடித்து தடுத்து நிறுத்தியவன்

“சாரி…” என்று சொல்லி முணங்க…

“ஒண்ணும் தேவையில்ல போ… வர வர நீ என்னைத் திட்டிட்டே இருக்க..” என்று மூக்கை உறிஞ்ச

“சாரி சாரி சகி பேபி… ” என்று குழைந்தவனிடம்

“பரவாயில்லை… போ” என்று சொன்னபோதே இப்போதா அப்போதா என்று இருந்த கண்ணீர் கன்னத்தில் இறங்கி இருக்க… கணவனின் மார்பில் சாய்ந்து அவன் சட்டையிலேயே தன் கண்ணீரைத் துடைத்தபடியே…

“இப்போ மருதாணி வச்சா.. உன்னை குவாட்ரப்பிள் ஆர் ஆகக் கூடாதுன்னு சொன்னாங்களா ரகு மாம்ஸ்” கிசுகிசுத்தபடி சொன்னவள்… அப்பாவியாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க

ராகவ் வாய் விட்டு சிரித்தே விட்டான்

”அடிங்… நாளைக்கு நான் வெளிய போனா… என் முகத்தில இருக்கிற மருதாணிச் சிவப்பை பார்த்து என்னை எல்லாரும் ஓட்டனும்னு உனக்கு ஆசையா… அடங்குடி… பெரிய நல்லவளாட்டம் பேச ட்ரை பண்ணாத… “ என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன்..

அவளுக்கு கீழே படுக்கையையும் விரித்துக் கொடுக்க… அப்போதே அவள் பாதித் தூக்கத்திற்கு போய் இருக்க…

”ரகு… நான் தூக்கத்தில கை காலை அசைக்காமல் பார்த்துக்கோ” என்றபடியே படுக்க ஆரம்பிக்க…

“என்னது” என்று அதிர்ந்தவன்…

”போடி… அதெல்லாம் முடியாது” என்று அவளிடம் சொல்லியபடி கட்டிலில் படுக்கப் போக

“அப்போ எங்கம்மாகிட்டேயே போறேன்… வசந்திகிட்ட படுத்தால்… என் கை காலை அப்போப்ப செக் பண்ணிட்டே இருப்பாங்க” என்று எழ முயற்சிக்க…

அவளை முறைத்தபடியே….

”அம்மா பர தேவதையே… அடங்கி படுக்குறியா… ரொம்ப படுத்துறடி…. தள்ளிப் படு…“ என்று விளக்கை அணைத்தபடியே…. அவளருகில் தானும் தலையணையைப் போட்டு படுக்க…

சந்தியாவுக்கு அப்படி ஒரு உடல் அசதி… பின்னே இருக்காதா.. அவ்வளவு ஆட்டம் பாட்டம்… இன்று முழுவதும்… அந்த அசதியில்… கண்மூடித் தூங்கப் போக

சந்தியாவுக்கு இப்போது அவளையுமறியாமல் சிறையில் படுத்திருந்தது ஞாபகம் வந்திருக்க… அதைத் தொடர்ந்து அந்த ஜெயவேலும் கரணும் தன்னிடம் நடந்து கொண்டதெல்லாம ஞாபகத்துக்கு வர குப்பென்று வியர்த்தது சந்தியாவுக்கு… … சட்டென்று எழுந்து உட்கார்ந்தும் விட்டாள்…

கணவனிடம் இதை எல்லாம் சொல்ல வில்லை… மறைக்கவேண்டுமென்று நினைக்கவில்லை… சொன்னால் அவன் வேதனைப்படுவான் என்று மறைத்தவள்.. மெல்ல மெல்ல அதை மறக்கவும் முயற்சிக்க… இன்று அதன் ஞாபக அடுக்குகள்…

அவளின் இந்த வித்தியாசமான நடவடிக்கையில்… ராகவ் அதிர்ந்து அவனும் எழ…

“சகிம்மா… என்னடா” என்ற போதே… மருதாணி வைத்திருக்கிறோம் என்று நினைப்பெல்லாம் இல்லை… அன்றைய தவிப்பு இன்றும்… அன்று கணவன் அருகில் இல்லை… ஆனால் இன்று கணவன் அருகில் இருக்கிறானே…

“ரகு” என்று அவனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பிக்க… இவனும் என்னென்னவோ சமாதானப்படுத்த… அவள் கேட்கவே இல்லை…

”என்னவென்று கேட்டால் அதையும் சொல்லாம இப்படி அழுகிறாளே” என்று கோபம் இருந்தாலும்… இவனும் ஆறுதல் கூறியபடியே இருக்க…

அப்போதுதான் ஞாபகம் வந்தது….

“கீழே படுத்திருந்தோமே… எதுவும் கரப்பான் பூச்சி….. பல்லி” என்று பயந்து விட்டாளோ என்று அவளை இறுக்கி அணைத்தபடி… அதைக் கேட்க…

சந்தியா அதிர்ந்து அவனைப் பார்க்க.. இப்போது.. அவள் முகத்தில் கண்ணீர் கோடுகள் மட்டுமே… அமைதியாக அவனையேப் பார்த்தபடி இருந்தவள்…

“ரகு… கேவலம் இந்த பூச்சி.. இருட்டுக்குப் பயந்து… உன்கிட்ட கதறுனேன்னு நினைக்கிறியா” என்று கேட்க..

அமைதியாக அவளைப் பார்த்தபடியே இருந்தான்… வேதனையோடே…

பயமாக இருந்தது அவனுக்கு…. வெங்கட் சந்தியாவை விசாரித்தபோது நடந்த சம்பங்களை சொல்லி இருந்தான்… இந்த இடைப்பட்ட ஆறு மாதத்தில்….

அதைக் கேட்ட போதே அவனுக்குள் அத்தனை ஆத்திரம்… ஆனால் நடந்து முடிந்த விசயங்களுக்கு இனி ஆத்திரப்பட்டு என்ன பிரயோசனம்… இதை எல்லாம் மனைவி அனுபவிக்க வேண்டியதிருக்கின்றது என்று விட்டு விட்டிருந்தான்…

ஆனால் இன்று… மனைவி… ஏதோ புதிதாக சொல்கிறாளே… என்று புரியாமல் பார்க்க…

”என்னை இறுக்கமா ஹக் பண்ணிக்கோ ரகு… எனக்கு பயமாருக்கு” என்று மீண்டும் தேம்ப ஆரம்பிக்க… இவனுக்குள் இப்போது பெருந்தவிப்பு இடமாற்றம் ஆகி இருக்க…

“என்னடா என்னாச்சுடா…” அவளைத் தனக்குள் கட்டிக் கொண்டபடியே

”நான் சாதனா விசயத்தில் செஞ்ச அதே தவறை நீயும் செய்யாத சகிம்மா.. என்னைக் கஷ்டப்படுத்தும்னு என்கிட்ட இருந்து எதையாவது மறைக்கிறியா” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்க..

”ஹ்ம்ம்ம்..” வேகமாக தலை ஆட்டியவளின் கண்களில் இருந்து இப்போது இன்னும் அதிகமாக அருவி மழை பொழிய…

அன்று அவள் தவித்த தவிப்பும்… தன் பெயரை சொல்ல முடியாமல் தவித்த நிலையும் ஞாபகத்து வர… அவளைப் பிடித்திருந்த கைகளின் இறுக்கம் இன்னும் கூட

“என்னன்னு சொல்லித் தொலைடி… அன்னைக்கும் இப்டித்தான் என்னைப் படுத்தின” என்று கோபமாகக் கேட்க… அதில் இவள் மிரண்டு விழிக்க

“இப்படி பார்த்து பார்த்து தானே என்னை ஒரு வழி பண்ணி வச்சுருக்க… இப்போசொல்றியா… இல்லை உன் சிவா சாருக்கு போன் பண்ணவா” என்று அதட்டல் போட… இனி மறைத்து பிரயோஜனமில்லை என்று சொல்ல ஆரம்பித்தவள்…

”அன்னைக்கு… அன்னைக்கு” என்று முதலில் அழ ஆரம்பித்தவள்…

“நான் அந்த ஜெயவேலை சுட்டுட்டேண்டா” என்று பட்டென்று சொல்லிவிட்டு அழ ஆரம்பிக்க…. புரியாமல் ராகவ் விழிக்க

”அந்தக் கரண்… அதான் அதீனா சுட்டாங்கள்ள… அவனும்… அந்த ஜெயவேலும்… சிவா சார் இல்லாதப்போ…” என்ற போதே

அவளைப் பிடித்திருந்த அவன் கைகளில் இப்போது இறுக்கம் போய்… நடுக்கம் வர… ஓரளவு விசயத்தை அவன் உணர்ந்து கொண்டான்…

ஜெயவேலையும் கரணையும் சம்பந்தப்படுத்தி அரசல் புரசலாக செய்திகள் வந்து கொண்டிருந்தனவே… அதிலும் கரண், பெண் கைதிகளிடம் தவறாக நடந்தது… அவர்களை பயன்படுத்தியது என அதீனா அவனைச் சுட்டுக் கொலை செய்த விசயத்தைப் பற்றிய விசாரணையில் தூசு தட்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட… அதன் பிறகு தான் அதீனா விவகாரம் முடிந்தது…

உதடுகளை அழுத்திக் கடித்தவனாக இருக்க… மனைவியோ… அன்றைய அத்தனை விசயங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்ல…. இவனுக்குள்ளே எரிமலை வெடிக்க ஆரம்பித்து இருக்க… அந்த எரிமலையின் லாவாக்கள் கண்களின் வழியே வந்தது போல அவனின் கண்கள் அப்படி சிவந்திருக்க… பாறையாக இறுகி இருந்தான் ராகவ்

கணவனின் நிலை எல்லாம் உணராமல்…

”அப்போதான் ரகு… உன்னை உன் காதலை நான் தெரிஞ்சுக்கிட்டேன்… எனக்குள்ள உன் மேல இருந்த காதலையும் புரிந்ஞ்சுக்கிட்டேன்” என்றவள்

”அப்டியே உன் கிட்ட ஓடி வந்து… இதோ இப்போ இருக்கிறேன்ல… அந்த மாதிரி உன்கிட்ட.. உன் கையணைவுல அடங்கிறனும்னு வெறி வந்துச்சுடா” என்றவள் அன்றைய நினைவில் நடுங்க ஆரம்பிக்க…

யாரை நொந்து கொள்வது… அன்று இவனுக்கு ஏற்பட்ட உள்ளுணர்வு.. அந்த உள்ளுணர்வில் இவனுக்கு ஏற்பட்ட தவிப்பு… இன்றும் ஞாபகம் இருக்கிறதே… கிட்டத்தட்ட பைத்தியக்காரனாக மாறி இருந்தானே… இதயம் இப்போது அதை நினைத்து படபடவென அடிக்க ஆரம்பிக்க.. அவனது சகியோ இப்போது தன்னவனின் நிலை உணர்ந்து…அவனைப் பார்க்க…

”சகி… நீ ரொம்ப கஷ்டப்பட்டுடடி… எல்லாத்துக்கும் காரணம் நான் தான்…” என்று அழ அவளைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பிக்க…

“கரணை அதீனா சுட்டுட்டா…. ஆனால் அந்த ஜெயவேல் தப்பிச்சுட்டாண்டா…” அந்த வருத்தம் தான் எனக்கு இருக்கு…

”எனக்கு பயமா இருக்குடா…அவனை என்னைக்காவது நான் பார்த்துருவேனோ… அவன் கண்ல நான் மாட்டிருவேனோன்னு பயமா இருக்கு…” என்று மிரண்டவளிடம்… இன்னும் இதையே பேசி அவளையே பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்தவன்

“சரி விடு… அந்த கரணுக்கு அதீனா கையால தண்டனை கிடைத்த மாதிரி… இவனுக்கு தண்டனை கண்டிப்பா கிடைக்கும்… “ என்று அவளிடம் சொன்னாலும்… அந்த ஜெயவேலைக் கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் தான் இவனுக்குள் உள்ளுக்குள்… அவனை மீண்டும் பார்த்தால் அதைச் செய்தும் விடுவான் போல… அப்படி ஒரு கோபம் அவனுக்குள் கனன்றிருந்தது… காலம் அந்த வாய்ப்பை தனக்கு வழங்காமல் இருக்கட்டும்.. அவன் தன் கண்ணில் படாமலேயே இருக்க வேண்டும்… என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்… ராகவ்…

அவன் இப்படி தனக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே

”அவன் என் உதட்டில கை வச்சுட்டாண்ட்டா...”

“அதினான்னு நெனச்சுதான்… ஆனாலும் எனக்கு அப்டி ஒரு அருவருப்புடா… முகம் அஷ்ட கோணலாக மாற

“ப்ச்ச்.. விடுன்னு சொல்றேன்ல ” என்று இவன் சொன்ன போதே…

“அப்படிலாம் விட முடியாது… என்னால மறக்க முடியலடா” … எனும் போதே

அவள் உதடுகளில்… இவன் உதடுகள் மென்மையாக பதிய… அவனைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவள்…

”அதை மறக்கிற மாதிரி… எனக்கு அழுத்தமா வேணும்டா… இந்த இடம் உனக்கு மட்டும் தான் சொந்தம்னு எனக்கு புரியவைக்கிற மாதிரி எனக்கு அழுத்தமா உன்னோட முத்தம் வேண்டும்… உன்கிட்ட இதை எப்படியாவது சொல்லனும்னு நெனச்சுட்டே இருந்தேண்டா… “ என்று அழ ஆரம்பிக்க…

அதற்கு மேல்… அவன் அவளை அழ விடவில்லை… அவன் உதடுகள் அவள் இதழ் மட்டுமின்றி… அவளை மொத்தமாக ஆட்சி செய்ய ஆரம்பிக்க… அவள் தனக்கு மட்டுமே சொந்தம்… தன் உரிமை… என அவன் காட்டிய ஆளுமையின் வேகத்தில்… அவன் உணர்த்திய அதிரடியில் தன்னவளின் அனைத்து கவலைகளையும் மறக்கவும் வைத்திருந்தான் அவளின் கணவன்….

----

அடுத்த நாள்…

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் பசுமை பசுமையே…

பச்சை பசேலென நெற்பயிர்கள்… அனைத்து வயல்களிலும் இளவரசி போல் கம்பீரமாக நிமிர்ந்திருக்க… அதில் நெற்மணிகள் அழகாக கீரிடம் போல வீற்றிருந்தாலும்… அந்த இளவரசியைக் காற்றாகிய இளவரசன் தழுவும் போதெல்லாம் அந்த நெற்பயிற்கள் எல்லாம் நாணம் கொண்டு வளைந்து இளவரசனின் மேல் கொண்ட காதலை பறைச்சாற்றிக் கொண்டிருக்க… பார்க்க அத்தனை அழகாக இருக்க…

அதை எல்லாம் பார்க்க… இல்லை ரசிக்க நேரம் இல்லாதவனாக, ராகவ் அந்தப் பெரு வெளியில் தன்னவளை நோக்கி கத்திக் கொண்டிருந்தான்

“சந்தியா”

தூரத்தில் கோபமாக போய்க் கொண்டிருந்தவளைக் கூக்குரல் இட்டு கத்தி அழைக்க… அங்கும் இங்குமாக அங்கிருந்த வயல்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்க்க…

யாரை அழைத்தானோ…. அவளோ இவனைக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல்…. திரும்பிக் கூடப் பார்க்காமல் வயல்களுக்கிடையே இருந்த வரப்பின் வழியே….. போய்க் கொண்டிருக்க… இவனுக்குத்தான் பெருத்த அவமானம் ஆகி இருந்தது…

அவள் என்னமோ மெதுவாகத்தான் நடந்து போய்க் கொண்டிருந்தாள்…. கோபம் இவன் மேல் தான் என்பது போல… வயல்வெளியை ரசித்தபடிதான் போய்க் கொண்டிருந்தாள்…

இவன் இன்னும் வரப்பில் கால் வைக்க வில்லை… காரணம்… பட்டு வேஷ்டி கட்டியிருக்க… அதனால் தயங்கி நிற்க… அவனவளோ.. புடவையைக் கட்டியபடி… படு நிதானமாக போய்க்கொண்டிருந்தாள்… அவளைப் பிடிக்க வேண்டுமென்றால் இந்த வரப்பில் ஏற வேண்டுமா… தலையைப் பிடித்தபடி அவளையே பார்த்தபடி இருந்தவனுக்கு… வேறு வழியும் தெரியவில்லை

“படுத்துறாளே” என்று மனதுக்குள் சொல்லியபடி… வேகமாக வேஷ்டியை முழங்கால் வரை மடித்துக் கட்டியபடி… வரப்பில் கால் வைத்தான்…

ஏன் இந்த கோபம் அவன் நாயகிக்கு???… காணலாம்…

முள்ளை முள்ளால் எடுப்பது போல. இதுநாள் வரை மனதில் நெருஞ்சி முள்ளாக உறுத்தியிருந்ததை மனதை விட்டு அகற்றி…. கணவனிடம் சொன்னதன் மூலம் தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தாள் சந்தியா…

அடுத்த நாள் எழுந்த போது… காதணி விழா பரபரப்பு…. அந்த பரபரப்பிலும் கணவனைப் பார்க்க…. உற்றுகவனித்த போது…. அவன் முகத்தில் அங்கங்கு மருதாணியின் கீற்றல்கள் தடம் தெரியத்தான் செய்தது… பார்க்க கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது… ஆனால் அவன் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இவளைப் பார்த்து புன்னகைக்க…

அவனின் ஆதுரத்தில் ஓடிப்போய் அவனின் அருகில் நின்றவளாக… தன் கைகளைக் காட்டி… அது சிவந்திருப்பதைக் காட்ட…

”நீ கொஞ்சம் என் மேல லவ்ஸ் அதிகமாத்தான் வச்சுருப்ப போல சகி பேபி” என்ற போதே… யோசனையில் முகம் சுருக்க…

அவன் தன் நெஞ்சினைக் காட்டினான்…

”மொத்தத்தையும் இங்க வச்சுட்டீங்க மேடம்…. அதுனால முகம் தப்பிச்சுச்சு…” என்றவனின் வார்த்தைகளில் இவள் முகம் செவ்வானமாக மாறி இருக்க… ராகவ் அதில் கொள்ளை போகத்தான் ஆசைதான்… ஆனால் அடுத்தடுத்து நடந்த விழா நிகழ்சிகள் அவர்களின் நேரத்தை எடுத்துக் கொண்டன…

மிருணாளினியின் அண்ணனாக…. அவள் குழந்தை சிந்தியாவின் தாய் மாமனாக தன் மடியில் வைத்து காதுகுத்தும் வைபவம் நடந்தேறி இருக்க…

அந்த வைபவத்திற்காக செய்ய வேண்டியவற்றை அனைத்தையும் சுகுமார்-யசோதா தன் மகளுக்கு நிறைவாக செய்திருந்தனர்… கணேசன் வசந்திக்கு அது நிறைவாகவே இருக்க… வழக்கம் போல வள்ளுவன் – வாசுகி தம்பதியை போல் காட்சி அளித்து அந்த சபையிலும் புன்னகை முகத்துடன் இருக்க…

அவர்களின் புன்னகையை விரக்தியாக பார்த்தாள் சந்தியா … இந்த சபைக்கு…. இந்த சமுதாயத்துக்கு முன் காட்டும் இந்த போலிப் புன்னகைக்கு பின் எத்தனை வருத்தங்கள்.. அதனால் எத்தனை பாதிப்புகள்….. முக்கியமாக சிந்தியாவின் வாழ்க்கை திசைமாற்றம் அவளின் இழப்பு… என மனதை வருத்த… கணவனின் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டாள்…

அவள் என்ன நினைக்கின்றாள்.. எதனால் வருந்துகிறாள்… என அவனுக்குப் புரியாமலா…

“சகி… நடந்ததை நினைத்து… யோசித்து யோசித்து நம்மள வருத்துறதுனால பிரயோஜனம் இல்லை…. மிருணாளினி-சந்தோஷப் பாரு… யாருக்காகவும் பார்க்காமல்… தீர்வுக்காக காத்திருக்காமல்… அவங்க வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிக்கிட்டாங்க… ” என்ற போதே சந்தியாவும் தலையை ஆட்ட

இவர்கள் இருவரும் சந்தோஷ் மிருணாளினி பற்றி பேசிக் கொண்டிருக்க

அங்கோ… மிருணாளினியின் கண்களும் கலங்கி இருந்தன…

அந்த விழாவுக்கு வந்திருந்த முக்கால் வாசிப் பேருக்கு.. சந்தோஷ் – மிருணாளினி வாழ்க்கையில் நடந்தவை தெரியும்… இவர்கள் காதுக்கு கேட்பது போலவே பேசினர்..

”இன்னும் சரியாகல போல… இந்த பொண்ணு கூட அவனோட குழந்தை தான் போல… யாருக்கும் தெரியும்… இருக்கலாம்…” இன்னும் ஏதேதோ வார்த்தைகள்…

சந்தோஷ் அவற்றை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் லட்சியம் செய்யாமல் புன்னகைத்துக் கொண்டிருக்க… தன்னவனைப் பெரும் காதலுடன் வெகு நாட்களுக்குப் பின் பார்த்துக் கொண்டிருந்தாள்…

இப்படி அவர்கள் பேச தானும் ஒரு காரணம் தானே… நாலு சுவருக்குள் நடந்ததை… அத்தனை பேருக்கும் கடை விரித்தவள் அவள் தானே… ஆனால் ஒரு நாள் கூட சந்தோஷ் அவளிடம் அந்தக் கோபத்தைக் காட்டியதில்லை… தன்னோடு இருந்தால் போதும் என்று… இன்று வரை அவளிடம் கண்ணியம் காட்டுகிறானே….

நினைத்தபோதே அவளுக்கு கண்களில் கண்ணீர் வர… சட்டென்று.. சந்தோஷின் கைப்பற்றியவளாக

“லவ் யூ சந்தோஷ்… “ என்று கண் இமைகளின் ஈரத்தோடு அவனிடம் புன்னகைக்க…

அவன் புரியாமல் விழிக்க…

”சிந்தியா அண்ணிக்கு சத்தியம் செஞ்சு கொடுத்தது ஞாபகம் இருக்கா சந்தோஷ்…” என்று கண் சிமிட்ட… சந்தோஷுக்கு ஒரு நிமிடம் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை… புரிந்த போது… நம்ப முடியாமல் பார்க்க…

“ஆனால் அதுனால மட்டுமில்லை சந்தோஷ்… சந்தோஷ்… எனக்காக.. என் மேல இருக்கிற உன் காதலுக்காக…. என்னோட ஒரு வார்த்தைக்காக அதை மதிச்சு என்னை விட்டு தள்ளி நிற்கிற உன் கண்ணியதுக்காக… இதை விட என் கொள்கை… ஈகோலாம் பெருசா படலை… தாம்பத்திய பந்தம் உடல் மட்டும் சார்ந்ததில்லை… மனம் மட்டும் சார்ந்ததில்லை.. அதற்கும் மேலே உருவமில்லா ஒரு இணைப்பு… அது வார்த்தைகளில் சொல்ல முடியாத பந்தம்… அது நம்ம வேற யார்கிட்டயும் கொண்டு போய்ச் சேர்க்காது… நம்மையும் பிரிக்காது… அதை உன்கிட்ட உணர்றேன்… அதோ அங்க நிற்கிறாங்கள்ள என் அண்ணா – சந்தியா கிட்ட பார்த்தேன்...” என்று அவள் கண்கள் அவர்கள் இருவரையும் பெருமையுடன் நோக்கியது

சந்தியா ஏதோ சொல்லிக் கொண்டிருக்க… அவள் அண்ணன் புன்னகையுடன் அதைக் கேட்டுக் கொண்டிருக்க… அவர்களைப் பார்த்தபடியே தன் கணவனிடம் பேச ஆரம்பித்தாள்

”யாருக்காகவவோ செய்த பிடிக்காத திருமணம்… இரு வேறு குணங்கள்.. ஆனால் ஒரே நாளில் சந்தியாவுக்காக எங்க அண்ணாவும்.. என் அண்ணாவுக்காக சந்தியாவும் எப்படி மாறினாங்க… இங்க காதல் மட்டுமில்லை… நிறை குறையோட தன்னோட இணையை ஏத்துக்கிட்ட அவங்க பக்குவம்… விட்டுக் கொடுத்தல்னு ஏகப்பட்ட குணங்கள்… அவங்களுக்கு ஒரு துன்பம்னா அதுக்காக கடைசி வரை விடாமல் போராடுற அவங்க நம்பிக்கைனு… ஏகப்பட்ட விசயங்கள் அவங்க திருமண வாழ்க்கைல இருக்கு… காதலிக்கும் போது காதல் மட்டும் இருக்கலாம்… ஆனால் மண வாழ்க்கைனு வரும் போது… இதெல்லாம் அங்க தேவை… அதை நான் புரிஞ்சுக்கிட்டேன் சந்தோஷ்…” என்றவள் அவன் தோள் சாய…

சந்தோஷ்… அவளையே சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்தவன்… தன்னவள் போல சீரியஸாக பேசாமல்…

தொண்டையக் கணைத்தபடி

”நமக்கு இப்போ ஒரு குழந்தை இருக்கு… அதுக்கு இரண்டு வயசு ஆகுது… அடுத்த குழந்தைக்கு இன்னும் ஒரு இரண்டு வருசம் டைம் இருக்கு… அந்த கேப்ல.. இன்னும் பொறுமையா யோசி கண்ணம்மா… எனக்கென்னமோ… உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுத்த மாதிரி இருக்கே இனி” என்று கண் சிமிட்ட…

“சந்தோஷ்” என்று செல்லமாக சிணுங்க… சந்தோஷின் கண்களில் வெகு நாட்களுக்குப் பிறகு….உயிரோட்டம் வந்திருக்க…

“இனி… நீ இப்டி சிணுங்கினா… கேப்லாம் கிடையாது போல” என்று அவள் காதில் கிசுகிசுக்க…

“நான் சொல்லலையே… நீங்க தான் சொன்னீங்க” என்ற போதே… குழந்தைக்கு தோப்பானார் எங்க இருக்காரு இங்க வாங்க…. என்று அங்கிருந்த புரோகிதர் கூப்பிட்டுக் கோண்டிருக்க… அதைக் கூட காதில் வாங்காமல் இருவரும் பேசிக் கொண்டிருக்க… இவர்களின் குடும்பம் மட்டுமல்ல… விழாவுக்கு வந்திருந்த மொத்த கூட்டமும்… சந்தோஷையும் மிருணாளினியையும் பார்க்க ஆரம்பிக்க.. மிருணாளினி… நாணத்தில் குனிய…

இவங்க ரெண்டு பேரும் சும்மாவே தெய்வீக காதல்னு சொல்வாங்க… அதுலயும் உங்க அண்ணா… பின்னி பெடல் எடுப்பான்… அவங்க பெர்பார்மென்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னா… நாமெல்லாம் சைட் கேரக்டர் தான் சகி…” என்ற ராகவ் சந்தியா காதில் கிசுகிசுக்க…

”என் ரகுகிட்டலாம் யாரும் நெருங்க முடியாது” என்றவளின் வார்த்தைகளில் நம்ப முடியாமல் கண் சிமிட்டாமல் அவளையேப் பார்த்தபடி இருக்க…

”என்னைப் பொறுத்த வரைக்கும்… என் ரகு… என் ட்ரிப்பிள் ஆர் … என் ரகு மாம்ஸ் தான் எனக்கு பெஸ்ட்” என்ற போதே…

நெஞ்சில் கை வைத்து… மயக்கம் வருவது போல நடித்துக் காட்ட…

திவாகர்… அவர்கள் அருகில் வந்து

“டேய்… கொஞ்சம் முடிச்சுக்கங்களேடா உங்க ரொமான்ஸை… எங்களால முடியலை… போட்டிக்கு வரலாம்னு பார்த்தால் வயசாகி வேற போச்சு… என் பொண்டாட்டி பக்கத்தில நின்னாலே… என் பொண்ணு வேற வந்துறா … ரொம்ப நாளைக்கபுறம் என் பொண்டாட்டி கூட ட்ரெயின்ல தனியா பேசிட்டே வரலாம்னு பார்த்த… உன் ஆளு அதுலயும் மண்ணள்ளிப் போட்டுட்டா..” என்று ராகவ்விடம் தன் குறையைச் சொல்லி சலிக்க… அதே நேரம் சந்தியாவை யாரோ அழைக்க… சந்தியா அங்கிருந்து சென்று விட்டாள்…

“நீங்கதானே உங்க செப்பி… குப்பினு கொஞ்சுவீங்க… . இப்போ என் ஆளா” இவன் சிலிர்த்துக் கொள்ள

”ஆமாம் அது என்ன செப்பின்னு பேரு… கேட்டால் நழுவுறாளே… சொல்ல மாட்டேங்கிறாள்… அப்டி என்ன ரகசியம் இருக்கு அந்தப் பேர்ல.” என்ற நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்க..

“வேண்டாமேடா… …” என்று திவாகரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் ராகவ் விடாமல் போராட…

“சரி… ஆனால் திட்டக் கூடாது” என்று பீடிகையுடன் ஆரம்பிக்க… ராகவ்வும் கேட்க ஆரம்பித்தான்

“சின்ன வயசுல… இல்லையில்ல குழந்தையா இருக்கிறப்ப… அவ லிப்ஸ்…. பிங்கும் இல்லாமல ரெட்டும் இல்லாமல் பார்க்க சூப்பரா இருக்கும்… அது எனக்குப் பிடிக்கும்…” என்றவன் தயங்கியபடியே…

“மாமாக்கு முத்தா கொடுன்னு சொன்னாலோ…. கிஸ் பண்ணுனு சொன்னாலோ … கொடுக்க மாட்டா… ஆனால் நான் செப்பினு சொன்னால் போதும்…. உடனே ஓடி வந்து கிஸ் பண்ணுவா… அப்டியே கூப்பிட்டு கூப்பிட்டு அவளை நான் கூப்பிடுற பேராகிருச்சு” என்ற போது அலறி இருந்தவன் அந்த செப்பியின் கணவனே…

“டேய் நீ எதுக்குடா இந்த அலறு அலறுர… இதெல்லாம் அவளோட மூணு வயசு வரை..“ என்று திவாகர் சொல்ல… ராகவ் நம்பாமல் பார்க்க

”ஒரு அஞ்சு வயசு வரை தாண்டா… நம்புடா” என்று ராகவ்வின் நெற்றிக்கண் பார்வையில் பயந்தவனாகக் கேட்க…

ஒரு விரல் காட்டி திவாகரை எச்சரிப்பது போல…

“இனி ஒருதரம்… செப்பி சொப்பின்னு என் காதுல விழுகட்டும்… உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு…” என்று முறைக்க

இப்போது திவாகர் மாமா மகனாக.. தன் அத்தை மகளின் மேல் தனக்கிருக்கும் தன் உரிமையை நிலை நாட்டும் பொருட்டு…

”அதெல்லாம் நாங்க அப்படித்தான் சொல்லுவோம்…. நீ ஏன்னு கேட்ட…. அதுக்கு பதில் சொன்னேன்…அவ்வளவுதான் ” என்று முறைத்தபடி போக…

”செப்பி என்ற பெயருக்குப் பின்னால இவ்ளோ ரகசியாமா…”

“செப்பினு கூப்பிட்டா ஓடி வந்து கிஸ் பண்ணுவாளா..” நினைத்த போதே உடல் அவனுக்குத் தூக்கி வாறிப்போட… சற்று முன் அவளிடம் பொய்யாக நடித்துக் காட்டிய நெஞ்சு வலி… உண்மையிலேயே வந்து விடும் போல் இருந்தது ராகவ்வுக்கு…

செப்பின்ற பெயர்காரணத்துக்கு விளக்கம் கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்றே தோன்றியது… இப்போது தோன்றி என்ன பிரயோஜனம்.. கேட்டு விட்டானே…. மனது அடித்துக் கொண்டதுதான்…

”ஓ மை காட்…. ஃபர்ஸ்ட்… செப்பின்ற பேர நமக்கு காப்பி ரைட் வாங்கி வச்சுக்கனும்… அதுக்கு sole proprietor நாம மட்டுமே இருக்கனும்” என்று நினைத்தவனாக தூரத்தில் இருந்த மனைவியைப் பார்க்க…. அவளைக் கைகாட்டி தன்னிடம் அழைத்தும் இவனருகில் அவள் வரவில்லை… விட்டு விட்டான்…

இப்படியாக அங்கு காதுகுத்து வைபோகம் முடிந்திருக்க… அப்போதுதான் நாயகிக்கும் நாயகனுக்கும் பிரச்சனை ஆரம்பித்தது….

இவன் தன்னவளுக்கு சர்ப்ரைஸ் என்று செய்த செயலாம் அவள் கோபம் கொண்டிருந்தாள்…

அத்தனை பேரும் சூழ்ந்திருந்த சபையில்… தான் புதியதாக கட்டி இருந்த வீட்டின் புதுமனை புகு விழா பத்திரிக்கையைக் காட்ட ஆரம்பித்தான்…

சந்தியாவுக்கே தெரியாது… அவனே நாளைத் தெரிவு செய்து… பத்திரிக்கையும் அடித்து வந்திருக்க…

”சந்தியா பவனம்” என்று இருந்ததைப் பார்த்து அத்தனை பேரும் வாயில் கை வைத்து ஆச்சரியமாகப் பார்க்க.. வசந்திக்கு அப்படி ஒரு மனமகிழ்ச்சி.. அது சொல்லால் விளக்க முடியாதது… சுகுமார்-யசோதாவுக்கும் அப்படியே… மகன் அவன் மனைவியோடு வாழும் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனரே…

இப்படி ஒவ்வொருவரும் அந்த இன்விட்டேஷனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்க… சந்தியாவோ கணவனைப் பஸ்பமாக எரித்துக் கொண்டிருந்தாள் பார்வையாலேயே…

அடுத்து கணவனும்-மனைவியும் தம்பதி சகிதமாக குலதெயவம் கோவிலுக்குச் சென்று.. பத்திரிகையை வைத்து பூஜை செய்து விட்டு…. வீட்டுக்கும் வந்திருக்க… மொத்த குடும்பமும்… இரண்டு நாள் அலைச்சலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க… அனைவரும் சேர்ந்துதான் வீட்டுக்கு திரும்பியிருக்க…. சந்தியாவை மட்டும் காணவில்லை…

மாலை நான்கு மணி ஆகி இருக்க… ராகவ், சந்தோஷ் திவாகரோடு பேசிவிட்டு அறைக்கு வர சந்தியாவைக் காணவில்லை… வீட்டின் மற்ற இடங்களில் தேடிப் பார்க்க காணவில்லை…

அவனும் அலட்சியமாகவும் இருக்கவில்லை…. சந்தியாவுக்கு நடந்து முடிந்த நிகழ்வுகளின் காரணமாக.. மனம் தானாகவே எச்சரிக்கை மணியை அடிக்க…

யாரிடமாவது கேட்போமா என்று தோன்றினாலும்… வேண்டாம் என்று உள்ளுணர்வு சொல்ல… மொபைலை எடுத்து அவளுக்கு அடிக்க.. நல்ல வேளை எடுத்தாள்… சந்தியா

போன உயிர் அப்போதுதான் இவனுக்கு மீண்டும் திரும்பியது போல இருக்க…

“எங்கடி இருக்க” என்று கோபமாகக் கேட்டவனிடம்…

“இங்க களத்து மேட்டுல இருக்கேன்” என்ற போதே கடுகடுவென்ற குரல் வந்தடைய….

”அங்க… ஏன் போன… போனவ சொல்லிட்டு போயிருக்கலாமே” இவன் அடுக்கடுக்காக கேள்விகளை வைக்க… அதே நேரம் கால்கள் களத்து மேடை நோக்கிப் போகவும் ஆரம்பித்தது… அடுத்த சில நிமிடங்களில் அங்கும் இருந்தான் ராகவ்

அங்கிருந்த மரத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த பெரிய கல் மேடையில்…. மனைவி தனியே அமர்ந்திருக்க… அதிலும் எதையோ பறி கொடுத்தவள் போல் அமர்ந்திருக்க…

கோபமெல்லாம் போய்… பதறி மனைவி அருகில் போய் அமர… இவன் வந்ததை அவளும் உணர்ந்தாள் தான்… அமைதியாகவே இருக்க

“என்ன சகி…. என்னாச்சு….” என்று அவள் கைகளைப் பிடிக்க…. அவன் கரங்களைத் தட்டி விட்டவளாக….

“நீ ஏண்டா என்கிட்ட சொல்லலை… இன்னைக்கு இன்விட்டேஷன் கொண்டு வந்திருக்கேன்னு… நெக்ஸ்ட் மன்ந்த் நம்ம வீடு பால் காய்ச்சப் போறோம்னு” என்று கேட்க…

“ஊப்ப்ப்ஸ் இதுதான் கோபமா… நான் வேற என்னமோ ஏதோன்னு பயந்து ஓடி வர்றேன்”

”எல்லாரும் என்கிட்ட கேட்கிறாங்க… உனக்குத் தெரியாமல்… உன் புருசன் அவனாவே டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்கான்… இன்விட்டேஷன் அடிச்சிருக்கான்னு… உன்கிட்ட எதுவும் சொல்ல மாட்டானான்னு கேட்கிறாங்க… எனக்கு எவ்வளவு அசிங்கமாகி இருச்சு தெரியுமா”

எரிச்சலாகப் பார்த்தான்… மனைவியின் வார்த்தைகளில்…

“அவங்க எல்லாரும் கேட்டாங்கன்னு…. மேடமுக்கு… கோபம் வேற வருதா…” என்றவன்… அவள் முறைத்ததை அலட்சியாக பார்த்தவன்

“என் புருசன் எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தான் சொல்றதுக்கு என்ன…அதை சொன்னால் இந்த செப்பி வாய்ல முத்து கித்து விழுந்திருமா ” நக்கலாகக் கேட்க

“லூசாடா நீ… எதுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கனும்… எதைச் சொல்லிச் செய்யனும்னு கூட உனக்குத் தெரியாதா” சுள்ளென்று விழுந்தாள்… கணவனிடம்

அவளின் கோபத்தில் ராகவ் சற்று திணறித்தான் போனான்… இருந்தும்… தன்னைச் சமாளித்து யோசனையோடு பார்க்க

“இப்போ கூட என்ன தப்பு செஞ்சேன்னு உனக்கு புரியலை… ரகு” என்று கேட்க…

உதட்டைப் பிதுக்கினான் கணவன்…

தலையிலடித்துக் கொண்டவள்…

“இது நாம ரெண்டு பேரும் சேர்ந்து… ஒண்ணா பண்ண வேண்டிய காரியம்… டேட் ஃபிக்ஸ் பண்றது…இன்விட்டேஷன் செலெக்ட் பண்ணினதுன்னு… நீயே பண்ணிட்டு வந்து எனக்கு சர்ப்ரைஸ்னு சொல்ற… இது சர்ப்ரைஸ் இல்லை…உன் மனைவியா எனக்கு இன்சல்ட்” என்றவள்…

அப்போது, கணவன் புரிந்து கொள்ளாதவனாக அவளை முறைக்க

“ஒகே… இப்போ நான் கன்சீவா இருக்கேன்னு வை” என்ற போதே…

‘சந்தியா… உண்மையாவா” என்று ராகவ் வேகமாக அவன் கைகளை அவள் வயிற்றின் அருகே கொண்டு போக

“அடங்குறியா… இதெல்லாம் பஞ்சதந்திரம் படத்துலயே பார்த்துட்டோம்”

“சொல்றதைக் கேளுடா…” என்ற படி…

“இப்போ நான் கன்சீவா இருக்கேன்னு வச்சுக்கோ…. உன் கிட்ட சொல்லாமலேயே… பத்து மாதம் கழித்து…. இந்த உன் குழந்தைனு உனக்கு சர்ப்ரைஸ் பண்ணினா உனக்கு எப்படி இருக்கும்… சந்தோஷமா இருக்குமாடா” என்ற போதே… அவள் கனெக்ட் பண்ணிய லாஜிக்கில்…

” கேவலாமா இருக்கு உன்னோட லாஜிக்” என்று முகம் சுழிக்க…

‘நீ ரொம்ப ஓவரா பண்றடி….. நீ என்ன சொன்னாலும்… பண்ணினாலும்… உன் பின்னால் வர்றேன்னு ஓவரா ஆடற… என்னைச் சொல்லனும்” என்று அப்போதும் தன் தவறை உணராமல் பேச…

கணவன் வார்த்தைகளில் இவளோ பத்ரகாளியாக மாறி இருந்தாள்… முன்னதை எல்லாம் மறந்து…

“ஓ ராகவ் சார்க்கு இப்டிலாம் ஒரு எண்ணமா…” என்ற அவள் வார்த்தைகளில்தான் அவள் கோபத்தின் உச்சம் உணர்ந்தான் அவள் திருவாளன்

அதிலும் அவள் விளித்த ராகவ் என்ற வார்த்தைகளிலேயே… அவள் அவனை வேறு கிரகத்திற்கே தள்ளிவிட்டு அந்நியப்படுத்தி இருக்க… அப்போதுதான் அவளது கோபத்தின் வீரியம் உணர…

அதை உணர்வதற்குள்… அவள் பல அடிகள் தாண்டிப் போயிருந்தாள்

இதோ அவள் வயலுக்கு நடுவே… இவனோ…. இப்போதுதான் வேஷ்டியைத் தூக்கி கட்டியபடி…

”சகி…” என்று கத்தியபடியே வேகமாக முன்னே நடக்க… அவனால் முடியவில்லை… வேகமாக நடந்தால் கீழே விழுந்து விடுவான் போல் இருக்க…

“ நில்லுடி…”

“செப்பி” என்று சொல்லிப் பார்க்க…. திரும்பி முறைத்து விட்டு முன்னே போக…

“டிர்ப்பிள் எஸ்… உன் டிர்ப்பிள் ஆரைப் பார்த்தால் பாவமா இல்லையா”

“இல்லை” என்று கத்திச் சொல்லியபடி… முன்னே போனவள்….

“யாரும் என் பின்னால வர வேண்டாம்… அப்புறம் சொல்லிக் காட்டுவீங்க” என்று நொடித்தவளாக முன்னே போக

“சகிம்மா… நான் எங்க உன் பின்னாடி வருகிறேன்… நீ என் முன்னாடி போற” என்று அவளை சீண்டலாகச் சொல்ல…

அவன் புறம் திரும்பி நின்றவள்…

“இதெல்லாம் அரதப் பழைய டைலாக்… செட்டாகல” என்றபடி போக…

“ரொம்ப முக்கியம்… ஏண்டி.. உன்னைக் கெஞ்சுறதுக்கு கொஞ்சுறதுக்கெல்லாம் வசனகர்த்தா வச்சா டைலாக் எழுத முடியும்… இவளை எப்படி நிறுத்துவது என்று யோசிக்கும் போதே…. அவளின் பயம் இப்போது ஞாபகத்துக்கு வர…

இப்போது ராகவ் அவன் இடத்தை விட்டு நகரவில்லை…

“ஓய்… மிஸஸ் ராகவ ரகு ராம்…. உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா… தெரியலைனா… உங்க கணவனா ஞாபகப்படுத்துறது என் கடமை…. இந்த டைம்ல இந்தப் பக்கம்லாம் தனியா வந்தா… முனி அடிக்கும்னு சொல்வாங்க… அதுவும் உன்னை மாதிரி… என்னை மாதிரி சின்னபசங்கள்ளாம் வந்தா அதுக்கு ரொம்ப பிடிக்குமாம்…. எங்க பாட்டி சொல்லிருக்காங்க… உங்க பாட்டி சொல்லிக் கொடுக்கலை…” சரியாக அவளது பலவீனத்தை பயன்படுத்தி அவன் அவளுக்குள் கலவரத்தைக் கொண்டு வந்திருக்க

இப்போது சந்தியா நகர்வாளா என்ன…கால்கள் ஆணியடித்தாற் போல அங்கேயே நிற்க… உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுக்க… திரும்ப போகவும் அவளது தன்மானம் இடம் கொடுக்க வில்லை…

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தபடி நின்றவளுக்கு…. அப்போதுதான் உறைத்தது… அவள் பாட்டி சொன்ன கதைகள் இப்போது ஞாபகம் வர…

“டேய்… அது உச்சி வேளை…. இந்த டைம்ல இல்லை… உங்க பாட்டி தப்பா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்று நடக்க ஆரம்பிக்க

“ரொம்ப முக்கியம்டி… ஹையோ… இப்போ என்ன பண்ண…” என்று யோசித்தபடியே நடக்க ஆரம்பித்தவன் வேறு வழி….இவன் பின்னால போய்த்தான் பிடிக்கனும்… “ என்று நடக்க ஆரம்பித்தான்..

”இந்த ஊருக்கு வந்தாலே யாரோ இவளுக்கு, நமக்கு எதிரா சூனியம் வச்சுருவாங்க போல…. குட்டிப் பிசாசா அன்னைக்கும் என்னைப் படுத்தி எடுத்தா… இன்னைக்கு மயக்கு மோகினியாகியும் படுத்தி எடுக்கிறா”

நினைக்க மட்டுமே முடியும் மனைவியிடம் சொல்ல முடியுமா… அதே வேகத்தில்

“குட்டிப்பிசாசு…” என்று ஆரம்பித்தவன்… அப்படியே… பாதியிலேயே நிறுத்தம் செய்து…

“குட்டிம்மா… நில்லுடா” என்று கெஞ்ச ஆரம்பிக்க… இப்போது சந்தியா அதிர்ந்து அவனைப் பார்த்து…

“டேய் ரகு.. அது உன் தங்கையை நீ கூப்பிடுற செல்லப் பேரு… உளறாத” என்ற போதே…

“பொண்டாட்டி வந்ததுக்கப்புறம்… நான் கூப்பிடுற எல்லா செல்லப் பேரும் என் செல்லத்துக்குத்தான்… அதே போல என் செல்லத்துக்கு மத்தவங்க வச்சிருக்கிற செல்லப் பேர் எல்லாம் கூப்பிடுற ரைட்ஸும் எனக்கு மட்டும்தான்” என்ற போதே… சந்தியாவுக்கு சிரிப்பு வர…. இருந்தும் அடக்கிக் கொண்டவளாக… அவளது கைகளை கட்டியபடி அவனையே பார்த்தபடி நிற்க,…

“உண்மை சகிம்மா” என்ற போதே

“ஓ… இன்னைக்கு பொண்டாட்டி கட்சிக்கு தாவிட்டிங்க… அப்போ நாளைக்கு உங்களுக்கு பொண்ணு பொறந்தா…. அப்போ பொண்ணு கட்சிக்கு தாவிட்டு என்னை அம்ம்போன்னு விட்ருவீங்க.. அப்டித்தானே” என்ற போது வசந்தியின் மகளாக மாறியிருந்தாளோ என்னவோ….

ராகவ் இப்போது என்ன சொல்வது என்று யோசிக்க ஆரம்பிக்க…

அவன் மறுத்து ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்க்க… அவன் யோசித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தவள்… வேகமாக அவனை நோக்கிப் போக…

வேகமாக அவள் தன்னைப் பார்த்து வருவதைப் பார்த்தவன்

”ஏய் சகி…பார்த்துடி… கீழ விழுந்துறாதா” என்று இவனும் அவளை நோக்கிப் போக…. இருவரும் சரியாக… அருகில் வரும் போது சந்தியா நிலை தடுமாற…. அவளைப் பிடித்து நிறுத்த இவன் முயற்சிக்க...

அந்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போக…. சந்தியா தடுமாறி விழுந்தவளாக… இவனையும் இழுத்தபடி விழ… சந்தியா கீழே…. இவன் அவளுக்கு மேலே என மொத்தமாக வயலிலுனுள் விழுந்திருக்க….

அந்த வயலில் அப்போதுதான் தண்ணி பாய்ச்சி இருப்பார்கள் போல… சேறும் சகதியுமாக இருக்க

மொத்தமாக இருவரின் முகத்திலும் சேறாக ஆகி இருக்க….. இருவரும் பழைய ஞாபகத்தில் இப்போது நடந்த சண்டையை எல்லாம் மறந்து சிரிக்க ஆரம்பிக்க…

“குட்டிப்பிசாசு….வன்மம் வச்சு… மயக்கு மோகினியா…. பழி வாங்கிட்டடி” என்று எழ முயற்சிக்க… இவளோ எழுந்தவனை மீண்டும் தன் மேலேயே விழ வைக்க… இப்போது அவனும் எழ விரும்பவில்லைதான்…. அவர்கள் என்ன பட்டு மெத்தையிலா படுத்திருக்கின்றார்கள்… வயல் சேற்றில்…. இங்கு ஏதாவது… பாம்பு… பூச்சி என இருந்தால் என்ன செய்வது….

யோசித்தவனாக… இருந்த போதே

”கையில் இருந்த தன் சேறை எல்லாம் அவன் முகத்தில் பூசி விட”

“சகி… இது என்ன விளையாட்டு…. “ என்ற போதே… அவள் விடாமல் இன்னும் அவன் உடலில்…. மார்பில் என பூசியபடி விளையாட ஆரம்பிக்க….

மற்ற யோசனைகள் எல்லாம் பின்னே போய்விட…

இப்போது இவனும் அவள் மேல் சேற்றை பூசி விளையாட ஆரம்பிக்க…

ஒரு கட்டத்தில்….” செப்பி” கிண்டலாகச் சொல்லி என்று இதழ்களைக் தொட்டுக் காட்ட… அவள் விழிக்க…

”உன் திவா மாமா.. இந்த செப்பி ரகசியத்தை சொல்லிட்டாரு… இந்த பேர் எனக்கு மட்டும் தான் எனக்கு” என்ற போதே… ஆவென்று பார்க்க….

”செப்பி… ” என்று கிறக்கமாகச் சொல்ல

“நான் என்றைக்கும் உன் சகி தாண்டா” என்று எழ முயற்சிக்க… அவளை எழ விடாமல் ”செப்பி…” என்று மட்டும் சொல்ல

வேறு வழி… அவன் கன்னத்தில் பட்டும் படாமலும் முத்தம் வைத்தவள்… செப்பின்னு சொன்னா இங்கதான் வைக்க முடியும்… சகின்னு சொல்லு… என்று புருவம் உயர்த்தி சலுகையாக நாணியவளிடம்

“சகி” என்று அவனையுமறியாமல் சொல்ல

அவன் இதழில் அழுத்தமான அதி வேகமான முத்தத்தை பதிய வைக்க… அவனது சகிக்கும், செப்பிக்கும் உள்ள வேறுபாட்டை அவனுக்கு உணர்த்தி அவனைப் பார்க்க…

புரிந்தவனாக… அவளது நெற்றியில் முட்டியவன்..

“எழுந்திரு…. ஏதாவது இருக்கப் போகுது….” என்று அவளை எச்சரித்தபடி முதலில் எழுந்து வரப்பில் ஏறியபடி… அவளுக்கு கை கொடுக்கப் போக…. அப்போது…. அதே நேரம்… அந்த வயலின் சொந்தக்காரர் போல அவரும் அந்த இடத்திற்கு வந்திருக்க….

ராகவ்வைப் பார்த்து முறைத்துவிட்டு… எட்டிப் பார்க்க.,…

”யாரு…. வசந்தி பொண்ணா….” என்ற கேட்டபடியே…. ராகவ்விடம்

‘ஏன்பா… உனக்கு ஏன் இந்த பொண்ணு மேல இவ்வளவு கொலை வெறி…. எப்போ பார்த்தாலும்… அந்தப் பொண்ணை ஏதாவது பண்ணி… அவளுக்கு கஷ்டத்தை கொடுக்கிற… கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு அப்போவாச்சும் ஒழுங்கா வச்சுக்கிறியா…

கவலைப்பட்டவர்…. அறிவுரை என்ற பெயரில் ஏதேதோ ராகவ்விடம் சொல்ல ஆரம்பிக்க

சந்தியாவும் இப்போது ஒன்றுமே தெரியாத அப்பாவியாக நின்றபடி அவரைப் பார்க்க

“ஏம்மா… இவன் கூட சேர்ந்து வாழறியாமே…. பிரச்சனை இல்லைதானே…அப்புறம் ஏன் இப்படி…” என்று அவர்கள் தற்போது நின்றிருக்கும் நிலையைப் பார்த்தபடி சொல்லும் போதே… இனியும் வாய் மூடி இருந்தால் அது தவறாக ஆகி விடும் என்று

“இல்லை தாத்தா… தவறித்தான் விழுந்துட்டோம்” என்று சந்தியா சொல்ல ஆரம்பிக்க…

“நீ சும்மா இரும்மா… களத்து மேட்ல இருந்து பார்த்துட்டுதானே இருக்கேன்… இவன் உன்கிட்ட பிரச்சனை பண்ணினதை… கோபப்பட்டதை…. என்ன பண்றான்னு பார்த்துட்டுத்தான் நான் இங்க வந்தேன்” என்று ராகவ்வைப் பார்த்து முறைக்க

”தேவுடா “ என்றிருந்தது ராகவ்வுக்கு…

”இவர்களைப் நோட்டம் விடுவதற்கென்றே எங்கிருந்துதான் வருகிறார்களோ… நல்ல வேளை… பக்கத்தில் இருந்து பார்க்க வில்லை” என்று நினைத்தவனாக…

அவர் வாயை எப்படி அடைக்கலாம் என்று யோசித்தவனாக

அவர் கண் முன்னாலேயே… சந்தியாவுக்குவுக்கு கூட சொல்லாமல்… சட்டென்று அவளைத் தூக்கியபடி… தன் கைகளில் ஏந்திக் கொள்ள… அந்த தாத்தா ஆவென்று வாயடைத்துப் போனவராக நிற்க…

“ரொம்ப பேசுறார்டி…. இனி இவர் என்னை எங்கேயாவது பார்க்கட்டும்…. ஏதாவது சொல்லட்டும்” என்று பேசியபடியே போக….

“இப்போ… நாம எங்கடா போறோம்…” என்றவள் அவன் கைகளில் இருந்தபடியே கேட்க…

”இப்போ மட் பாத் எடுத்தாச்சு…. அடுத்து என்ன…. வாட்டர் பாத் தான்” என்றவன் நின்று திரும்பிப் பார்க்க…. அந்தப் பெரியவர் இன்னும் முறைத்தபடியே இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்க…

ராகவ் சத்தமாகக் கத்தி சொன்னான்….

“தாத்தா… யார்கிட்டயாவது எங்களப் பற்றி சொல்லனும்னு நினைக்கிறீங்களா… அப்போ இதைச் சொல்லுங்க… ராகவ எங்க தொலைந்தானோ…. அங்க சகியோட ரகுவா கிடைச்சுட்டான்னு… சொல்லுங்க….” என்று அவரிடம் சொல்ல…

அவர் புரியாமல் விழிக்க… அதைக் கண்டு கொண்டால் தானே

”என்ன சகி…. உன் ரகு… சொல்றது உண்மைதானே” என்று அவளிடம் கேட்க….

அவன் கழுத்தைச் சுற்றி தன் கரங்களைப் போட்டவளாக…….

“ஹ்ம்ம்…” என்று மட்டும் சொன்னவள்….

“லவ் யூ ரகு” அவன் அணிந்திருந்த சட்டையை விலக்கி… நேற்றைய இரவில் அவன் நெஞ்சில் பதித்திருந்த தன் மருதாணி தடத்தில் முத்தம் வைக்க…

புன்னகைத்தவன்… அவளின் நெற்றியில் தன் இதழை ஒற்றி எடுக்க வழக்கம் போல அவன் இதழ் பதிவை விட அவனது மீசை உரசலில் தன்னை இழந்தவளாக…

”ரகு….” என்றாள் கிறக்கத்தோடே

”சாரி சகி…. நான் சர்ப்ரைஸ் கொடுக்கிறேன்னு உன் மனசை நோகடிச்சுட்டேன்… இனி உன் பிறந்த நாளுக்குக் கூட சர்ப்ரைஸ் கிடையாது” என்றபடி வரப்பை விட்டு இறங்கி சமதளத்தில் நிற்க….

அவன் சொல்லி முடிக்கவில்லை…. துள்ளி கீழே இறங்கியவள்…

“ஹலோ… கம் அகைன்… நாங்க உங்க பிறந்த நாளுக்கு சுவரெறி குதிச்சு வந்தோம்… ஞாபகம் இருக்குதானே… அதே மாதிரி என் பிறந்த நாளுக்கு நீங்களும் சுவரேறி குதிச்சு வந்து எனக்கு விஷ் பண்ணனும்” என்று இடுப்பில் கை வைத்தபடி சொல்ல

“என் அறிவே… அப்போ என் பக்கத்தில நீ இல்லை… சோ அந்த மாதிரி ஆகிருச்சு…. இப்போ நம்ம வீட்ல …. நீ என் பக்கத்தில இருப்ப… நான் எதுக்கு அதைப் பண்ணனும்…” என்று இவனும் விடாமல் கேட்க…

”அதெல்லாம் எனக்குத் தெரியாது… “ என்று பிடிவாதம் பிடிக்க…

“அநியாயம் பண்றடி…. உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து பழக்கிட்டேனோனு தோணுது…. “ என்று உண்மையிலேயே வருத்தமுடன் சொல்ல

அப்போதும் உம்மென்று இருக்க…

“உனக்காக 6 மாடி கட்டிடத்துல.. சிக்ஸ்த் ஃப்ளோர்ல ஏறி குண்டடி பட்டதெல்லாம் கொஞ்சம் லைட்டா கன்சிடர் பண்ணேன்.. “ என்று வெகு தீவிர பாவத்துடன் கேட்க

அப்போதும் அவள் முகத்தை மாற்றாமல் இருக்க…

யோசிக்க ஆரம்பித்து இருந்தான் ராகவ்

சந்தியா வீட்டைப் போல அவனது வீட்டுக் காம்பவுண்ட் சுற்றுச் சுவர்… உயரம் குறைந்தது இல்லை… 10 அடியாவது இருக்குமே ….

அதைச் சொல்லி…. அப்பாவியாக தன்னவளைப் பார்க்க

சந்தியாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை….

“ரகு மாம்ஸ்… வர வர நீ ரொம்ப நல்ல பையனா மாறிட்டே வர்ற… சும்மா உல்லலாய்க்க்கு சொல்றதெல்லாம் சீரியஸா எடுத்துக்கிற….. ” என்ற சொல்லிக் கொண்டு… அங்கு நிற்காமல் ஓட ஆரம்பிக்க….

“அடிப்பாவி… நல்ல பையனா…. இப்போ எப்படி கெட்ட பையனா மாறப்போறான்னு பாரு….” என்று அவளைத் துரத்த

இந்த பரந்த வெளியில் தான்… இதோ இந்த இயற்கையின் முன்னால் தான் அவன் சந்தியாவின் ரகுவாகவும்…. இவள் ராகவ்வின் சகியாகவும் மாறுவதற்கான முதல் அத்தியாயம் ஆரம்பித்த இடங்கள்… இங்கு ஆரம்பித்த இவர்களின் பயணம் இடையில் பல இடர்பாடுகளை அடைந்தாலும்… அவள் தன்னவனின் மானம் காத்த செயலுக்கு கைமாறு செய்யும் பொருட்டு... தன்னை பணயம் வைத்து சிறைக்குச் செல்ல… இவனோ… தன்னவளின் உயிரைக் காக்க தன் உயிரையே பணயம் வைத்து தன்னவளுக்காக போராடி இந்த உலகிற்கு மீண்டு வந்திருக்க…. இருவரின் காதலுக்கு தாங்கள் எதைப் பரிசாக அளிப்பது பெரிதென்று யோசித்த போதே…

தங்கள் மொத்த ஆசிர்வாதத்தையும்… வாழ்த்துக்களையும் வழங்குவது போல வானம் திடிரென்று மழையைப் பொழிய

அந்த மழையில்… இவர்கள் மேல் இருந்த சேறு சகதிகள் எல்லாம் கரைந்து ஓடிக் கொண்டிருக்க…. அதைப் பார்த்த ராகவ்வுக்கு இதுவரை அவர்கள் பட்ட துன்பமெல்லாம் கரைந்து ஓடுவதைப் போல தோன்ற… சட்டென்று அவளை தன் புறம் இழுத்தவன்…. மழை நீர் தன்னவளிடம் தன்னை விட அதிகமாக உரிமை எடுத்து…. வியாபித்திருந்ததை கண்டு… தாபத்தோடு அதற்கு போட்டியாக தன்னவளிடம் அதிகமாக வியாபிக்க ஆரம்பிக்க… வழக்கம் போல தன்னவனிடம் தன்னை மறந்து நின்றிருந்தாள் அந்த வெட்டவெளியில்…

சில நொடிகள் தான் சுதாரித்த ராகவ்… சுயம் உணர்ந்து… தன்னை மீட்டெடுத்து தன்னவளையும் மீட்டெடுத்தபடி… அவள் கரங்களைக் கோர்த்தபடி… நடக்க ஆரம்பிக்க.. அவன் கரங்களின் பாஷை புரிந்தவள் அவளது மனைவி…. அவன் தோள் சாய்ந்தபடி நடக்க ஆரம்பிக்க….

ஏதோ ஒரு அறுவடைக் காலத்தில்…. வறண்ட அந்த பெரு வெளியில் ஆரம்பித்த அவர்களின் மோதல் பயணம்… இதோ இன்றைய பசுமையான பெருவெளி காலத்தைப் போல இனிமையான பயணமாக மாறியிருக்க… அந்த இனிமை இனி வரும் அவர்களின் பயணங்களிலும் தொடர்ந்திருக்க ரகு மற்றும் அவனது சகியை வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.

************முற்றும்************


/*யாரடியோ அழகதன் வேற்பொருளாய்

உலகினில் நீ பிறந்தாய் சகி

பால் மழையின் துளியடி நீ நிலவின்

நகலடி வா எனதுள் சகி

கால நேரம் பாக்காம

திக்கு ஏதும் நோக்காம

கண்மணி எப்பவும்

எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்

என்னிருந்து நீங்காதே

என்னுயிரும் தாங்காதே

வாழ்வதோ தேய்வதோ

நீயும் நானும் சேர்ந்து

வாழும் வாழ்க்க போதும்

காழ் நீ இருள் பிழை நான்

கான் நீ ஒரு கோடி நான்

வான் நீ ஒரு முகில் நான்

என்னில் சேர்வாயா

பொய் நான் மெய்யடி நீ

கண் நான் இமையடி நீ

உடல்தான் நான் உயிரடி நீ

என்னில் சேர்வாயா

யாரடியோ அழகதன் வேற்பொருளாய்

உலகினில் நீ பிறந்தாய் சகி

புது விதமாய் நினைவலைகள்

உனதுருவாய் தினம் வருதே

பெண்ணே உன்னை காணும் முன்பே

வாழ்க்கை என்பதே வீண் என்றேன்

உன்னை நானும் கண்ட பின்னே

ஜென்ம முக்திகள்தான் கொண்டேன்

இனி வாழும் ஒவ்வொரு நிமிடம்

உனக்காக துடிச்சிடும் இதயம்

மனசள்ளிதாடி பெண்ணே

நீயும் நானும் சேர்ந்து வாழும்

வாழ்க்க போதும்

கால நேரம் பாக்காம

திக்கு ஏதும் நோக்காம

கண்மணி எப்பவும்

எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்

என்னிருந்து நீங்காதே

என்னுயிரும் தாங்காதே

வாழ்வதோ தேய்வதோ

நீயும் நானும் சேர்ந்து

வாழும் வாழ்க்க போதும்

காழ் நீ இருள் பிழை நான்

கான் நீ ஒரு கோடி நான்

வான் நீ ஒரு முகில் நான்

என்னில் சேர்வாயா

பொய் நான் மெய்யடி நீ

கண் நான் இமையடி நீ

உடல்தான் நான் உயிரடி நீ

என்னில் சேர்வாயா

நீயும் நானும் சேர்ந்து

வாழும் வாழ்க்க போதும்

தும் தும் தும் தும்

வாழ்க்க போதும்*/

3,254 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

תגובות


התגובות הושבתו לפוסט הזה.
© 2020 by PraveenaNovels
bottom of page