top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?-62 Part 3

அத்தியாயம் 62 Pre Final2 - 3

ராகவ்… தன் ஒரு கரத்தால் இறுக அணைத்திருந்தும்… அவளால் தன்னவனின் முழு அணைப்பையும் உணர முடியாமல் இன்னும் இன்னும் அவனை இறுக்கமாகக் கட்டிக் கொள்ள… அப்போதுதான் ராகவ் கவனித்தான்….

“சகிம்மா… வெளில இருக்கோம்…” என்ற இலேசான அதட்டலில் சொன்ன போதே… அழுகையை நிறுத்தியபடி…

”அதுனால எனக்கென்ன…. என் புருசன நான் கட்டிப்பிடிச்சுட்டு இருக்கேன்.. எவன் கேப்பான் எவ கேப்பா” என்று வேகமாகச் சொல்ல… இப்போது கணவன் முறைப்பில்… அவன் ஏன் முறைக்கின்றான் என்பது புரிய

”மரியாதை… அதுதானே… எவங்க கேட்பாங்க… யார் கேட்பாங்க… போதுமா” வாய் சொன்னாலும்… அவனை விட்டு விலகாமல் மெதுவாக தலையை மட்டும் உயர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தாள் தான்… ஏற்கனவே பட்ட அனுபவம்… கொஞ்சம் அவளுக்குள் இப்போது எச்சரிக்கை மணியை அடித்தது போல…

“அது சரி… அப்போ ஏன் இங்க நிற்க…. இன்னும் கொஞ்சம் ரோட்ல போய் நிக்கலாமா…” என்று அவளின் பறந்த கூந்தலை சரி செய்தவனாகப் பேச ஆரம்பிக்க…

“சிவா சார் சொல்லிருக்கார்.. கொஞ்ச நாளைக்கு பப்ளிக் ப்ளேஸ்லலாம் போக வேண்டாம்… எச்சரிக்கையா இருக்கனும்னு… இல்லேண்ணா ரோட்ல என்ன… ஒரு பெரிய மாலுக்கே உன்னைக் கூட்டிட்டு போய் இறுக்க அணைச்சு உம்மா கொடுப்பேன்” என்றவளிடம்

“ஹான்… உன் இலட்சணம் எனக்குத் தெரியும்டி… வீட்ல இத்தனை பேர் இருக்காங்கனு… டேப்லட்ஸ் கொடுக்க மட்டும் என் பக்கத்தில வந்தவ… என்னமா பேச்சு பேசுற… இவ பெரிய மால்ல நட்ட நடு ப்ளேஸ்ல என்னைக் ஹக் பண்ணி உம்மா கொடுக்கிறவ… நம்பிட்டேன்மா” என்றபடியே அவளோடு உள்ளே செல்ல இருவருமாக ஹாலில் இருந்த சோஃபாவில் அமர.. அவளோ அவன் மடியில் அமர்ந்திருந்தாள்…

“என்னடி… ஒரே ஓவர் அலம்பல் பண்ற… நான் இருக்கிற நிலைமைல… சின்னாபின்னமாகி விடுவேன் போல” என்ற போதே… சொன்ன அவன் வார்த்தைகளைக் கவனித்தாளோ… இல்லை அந்த வார்த்தைகளைச் சொன்ன இதழ்களைக் கவனித்தாளோ… அதை எல்லாம் விட்டு விட்டு அவனின் மீசையை மட்டுமே பார்த்துக் கொண்டே இருந்தாள்…

அவளுக்குப் பிடித்த அவன் மீசை அவனுக்கு இன்னும் அதிக கம்பீரத்தைக் கொடுத்திருக்க.. குனிந்து… அவனின் மேலுதட்டை மட்டும் தன் இதழ்களால் அணைக்க… வார்த்தைகள் நிறுத்தம் செய்து தன்னையே இமைக்காமல் பார்த்தவனது கண்களை சளைக்காமல் பார்த்தவளுக்கு அவனின் கையணைப்பு சரிவர கிடைக்காமல் போக… அவனின் கழுத்தைச் சுற்றி தன் கரங்களை போட்டு வன்மையான இதழ் ஒற்றலை கொடுக்க ஆரம்பிக்க… மொத்தமாக ஆடிப் போனவன் அவளது கணவன் தான்… அப்படி ஒரு இதழ் முத்தத்தை இதுவரை அவன் அவளிடமிருந்து அனுபவித்ததில்லை…

கோபமாக… அவசர அவசரமாக… இல்லை… பயந்தவளாக… நாணத்துடனோ… கடைசியாக கண்ணீரோடு கொடுத்திருந்தாளே தவிர… இது போல… நிதானமாக மென்மையாக… மூச்சுக்காற்றுக்கு ஏங்கவெல்லாம் விடாமல் நீண்டு கொண்டே இருக்கும் அவளின் நிதான முத்தம் இதுவரை அவன் அனுபவிக்காதது…

ஒரு கட்டத்தில் ராகவ் மனைவியின் முத்தத்தை ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல்… மெது மெதுவாக அவளுக்குள் கட்டுண்டு போக… அவன் அடிக்கடி சொல்வது போல புதைகுழிக்குள் விருப்பத்தோடே புதைந்து கொண்டிருந்தான்… தன் மயக்கு மோகினியின் மாய வலையில்…. மயங்கிக் கொண்டிருந்தான்

அதே நேரம்

தன்னிடம் சொல்ல முடியாத வேதனைகளை வார்த்தைகளாக சொல்லுவதற்கு பதிலாக… முத்தத்தால் தன் வேதனைகளை கரைத்துக் கொண்டிருக்கின்றாள் என்பது ராகவ்வுக்கு நன்றாகப் புரிய…

தன்னை அவளிடம் மொத்தமாக கொடுத்து விட்டு… மனைவியை ஆள விட…. அவளது இதழ்கள் இதழில் இருந்து நெற்றி… இமை, கண், கன்னம் என பயணத்தை விடாமல் தொடர்ந்து அவனது இதழ்களில் மீண்டும் இளைப்பாற… ராகவின் கரங்கள்.. இப்போது தன்னவளை அணைத்திருக்க மட்டும் முடியாமல்… மெதுவாக தன் ஊர்வலத்தை தன்னவளின் மேனியில் ஆரம்பித்திருக்க…. மோகங்களின் தாப வலையில் ராகவ் முழ்வதுமாக சிக்கிக் கொள்ள…

இப்போது மனைவியின் மென்மையான இதழ் பயணங்களுக்கு நிறுத்தம் செய்தவனாக… அவனின் வேதனையைச் சொல்லும் பொருட்டு… வன்மையாக பதியப் போக… ஒரு நிமிடம் நிதானித்தான்.. தன் வேகத்தை தாங்குவாளா என்று.. சந்தியா கண்மூடி அவன் மேலேயே சரிந்திருக்க… அதன் பின் ஒரு நொடி கூட அவன் தன்னைக் கட்டுப்படுத்தவில்லை… அழுத்தமான வன்மையான இதழ் முத்தத்தை அவளுக்கு வழங்கிக் கொண்டிருக்க… அது தாங்காமல் அவள் மூடிய இமைகளின் மேலிருந்த புருவங்கள் சுழிந்து அவனுக்கு உணர்த்திக் காட்டினாலும் அவன் வன்மையை விடாமல் இருக்க…

இருவருமாக எத்தனை நிமிடங்களை கடந்து கொண்டிருந்தனர் என்றே தெரியவில்லை… அழைப்பு மணி ஓயாமல் அடித்த போதுதான் ஒரு கட்டத்தில் தங்களை விடுவித்துக் கொண்டவர்களாக ஒருவரை ஒருவர் பார்க்க… அப்போதும் சந்தியா அவன் இதழ்களில் இல்லையில்லை அவனது மீசையில் தன் இதழ் ஒற்றலை வைக்க… மயங்கி கிறங்கிப் போனவன் அவன் கணவனே….

”சகி… “ என்று மட்டும் தாபத்தோடு சொன்னவனுக்கு … யாரோ வந்திருக்கின்றார்கள்… என்று சொல்லத்தான் வாய் வரவில்லை

அவன் அப்படி இருக்க

அவளோ இன்னும் விழி திறக்காமல் “ரகு” என்று மட்டும் சொல்லி மீண்டும் அவன் இதழைச் சரணைடைய…. அதில் எல்லாவற்றையும் மறந்தவனாக மீண்டும் தன்னவளிடம் அடுத்த முத்த யுத்ததுக்கு ஆயத்தமாக… ஆனால் இந்த முறை அழைப்பு மணி வெகு வேகமாக தொடர்ந்து ஒலிக்க…

“ச்சேய்” என்று எரிச்சலோடு… வாய் விட்டே சொன்னவனாக … “யார்.. இந்த நேரத்தில” என்று சந்தியாவை விலக்க..

சந்தியாவும் இப்போது சுய நினைவுக்கு வந்தவளாக… அவனிடமிருந்து எழுந்து கொள்ள… தன்னவளை முழுவதுமாக அலசினான்…

இன்றைக்கு நடந்த விழாவுக்காக புடவை அணிந்திருந்தாள் சந்தியா… சற்று முன் இவன் கரங்கள் செய்த திருவிளையாடலில்… கலைந்திருந்த அவளின் உடையை அவனே சரி செய்து… அவளை எழ விட.. அவளும் தான் கலைத்த அவன் கேசத்தை சரி செய்துவிட்டவள் குனிந்து அவனுக்கு மீண்டும் தன் இதழ் உரசலை அவனுக்கு பரிசளித்து விட்டு… வேகமாக போய்க் கதவைக் திறக்க… வெங்கட்டும் நிரஞ்சனாவும் வந்திருந்தனர்…

வெங்கட் தன் நண்பனைப் பார்த்தபடியே உள்ளே வர நிரஞ்சனா சந்தியா இருவரின் பார்வைகளும் ஒன்றோடொன்று உரசி பின் மீண்டது…

நிரஞ்சனா-சந்தியா இருவருக்கும் இடையில் இன்னும் பிரச்சனைகள் தீர வில்லை என்பது நண்பர்கள் இருவருக்கும் புரியாமல் இல்லை…

ஆனால் சந்தியாவிடம் நிரஞ்சனாவைப் பற்றி பேசவே பயமாக இருந்தது ராகவ்வுக்கு…. நிரஞ்சனா என்று ஆரம்பித்தாலே முகத்தை தூக்கி வைப்பவளிடம் என்ன பேசி சமாதானப்படுத்துவது….

மழை விட்டும் தூவானம் விடாத கதையாக… சிவா இவர்களுக்கு சில தகவல்கள் சொல்லி அனுப்பி இருக்க... அதை விவாதித்தபடியே… அடுத்து இரண்டு மணி நேரங்கள்… வெங்கட் நிரஞ்சனாவோடு சென்றிருக்க…

அதன் பின் இருவரும் கிளம்பும் பொது வெங்கட் ராகவ்வை தனியே அழைத்து..

”டேய் சிஸ்டர் கிட்ட சொல்லி… இவ கிட்ட பேசச் சொல்லுடா… டெய்லி அழறாடா” என்ற போது ராகவ் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை… சிவா தகவல் சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் இருவரிடமும் தானே சொல்லி அனுப்புக்கிறான் அதனால் வெங்கட்–நிரஞ்சனா சேர்ந்து வருவது கூடஅவனுக்கு உறுத்தலாகவே இல்லை…

மீண்டும் தனிமை… சமைக்க வேண்டிய வேலை இல்லை… மதிய விருந்து சமையல்… இன்னும் மீதமிருக்க… அதைச் சூடுபடுத்தி எடுத்து வந்தவள்…. கணவனுக்கு ஊட்டி விட்டு… அவனோடு சேர்ந்து தானும் சாப்பிட்டு முடித்தபடி… அவனுக்கான மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து போட வைத்தவள்… அவனைச் சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லி விட்டு… சமையலறைக்குச் சென்று விட்டாள்

சமையலறையில் பாத்திரங்களை ஒழுங்கு படுத்திக் கோண்டிருக்கும் போதே… தன்னவனை சிரமப்படுத்துகிறோமோ… அவன் கை இன்னும் சரியாக வில்லை எனும்போது அவன் உணர்வுகளை வீணாக சோதிக்கின்றோமா என்று தோன்ற… மனம் சுணங்கியது…

ஏனோ அவனை அருகில் இருக்கும் போது… அவளால் அவனை விட்டு தள்ளி இருக்க முடியவில்லை… தன்னாலேயே எனும் போது… அவனுக்குமே அது கொடுமைதான்… ஆனால் அவனிருக்கும் நிலையில் தான் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமோ… ஆனால் இருக்க முடியவில்லையே… எரிச்சல் எரிச்சலாக வர…

மீண்டும் அறைக்குச் சென்ற போது… இவளுக்காகவே காத்திருந்தவன் போல… சந்தியா உள்ளே நுழையும் போதே… அவளை நோக்கித் தன் கரங்களை நீட்டியவனிடம்..

“ப்ச்ச்” என்று…. சலிப்பாக இதழ் சுழிக்க... அது கூட ராகவ் இப்போதிருந்த நிலையில்… அவனுக்குள் தாபத்தின் அளவை அதிகப்படுத்தும் காரணியாக அமைய…

“மயக்கு மோகினி தான்டி நீ” என்று கிறங்கி தவித்துச் சொல்ல…

“ம்க்கும்…” என்றபடியே கோபத்தில் தன் மொபைலை அவன் மேல எறிய

அவன் நெஞ்சில் பட்டு…. அது கீழே விழ…

“ஆ” பொய்யாக அலறியவனாக…

”ஏய்… பொண்டாட்டி… உனக்கு ஏண்டி இந்த கொல வெறி… படாத இடத்தில பட்டுச்சுன்னா உனக்குத்தான் கஷ்டம்” என்ற போதே நெற்றிக் கண்ணைக் காட்டிய அவள் மனைவி அவனைத் எறிவதற்கு அடுத்த பொருளைத் தேட

“இருடி இருடி… ஐ மீன்… இந்தக் கைல பட்டிருந்துச்சுன்னா… அதைச் சொல்ல வந்தேன்” என்று சமாளித்த போதே

“உன்னை யாருடா இந்த அவசரக் குடுக்கை வேலைலாம் பார்க்கச் சொன்னாங்க… நான் தான் வரப் போறேன்னு தெரியும்தானே… பெரிய ஹீரோ வேலைலாம் உன்னை யார் பார்க்க வரச் சொன்னாங்க… ஒரு சுவரேறி குதிக்கிறதுக்கு அவ்ளோ லெக்சர் அடிச்ச… இப்போ குண்டடி பட்ட்டுட்டு வந்து நிற்கிற…. ஹையோ” என்று தலையில் கைவைத்தபடி புலம்ப ஆரம்பித்தவள் அவன் அருகில் வந்து அமர…

“இப்போ என்ன உனக்கு பிரச்சனை அதைச் சொல்லு… ” எழுந்து அமர்ந்து வாகாக தலையணையை வைத்து கட்டிலில் சாய்ந்தபடி, நாட்டமை போல் விசாரிக்க கிளம்பியிருக்க… இன்னும் இவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது…

“ஹான்… ” என்று வாய் திறந்தவள்… தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல்

“என்னை ஏதாவது பேச வைக்காத… என்னை உலகம் நல்ல பொண்ணுனு நம்பிட்டு இருக்கு… அதை டேமேஜ் பண்ணிறாதா..”

“விளக்கம் கேட்க வந்துட்டாரு துரை” என்ற போதே… அவள் கடுப்பில் வாய் விட்டு சிரித்தவன்… அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அமர்த்திக் கொண்டவன்

“இப்போ யாருடி உன்னை போர்வையைப் போத்திட்டு தூங்கச் சொன்னது” அவள் சொல்லாத வார்த்தைகளை இவன் கண்டுபிடித்து… அதற்கு…. நாகரீக முலாம் பூசி கழுத்து வளைவில் அவன் முகத்தை பதித்தபடி… ஹஸ்கி குரலில் இதழ்கள் உரசியபடி கேட்க…

அந்த இதழ் உரசலை அனுபவித்தாளோ… இல்லையோ… அவனின் மீசை ரோமங்கள் அவளுக்குள் பல சில்மிஷங்களை செய்திருக்க

“ம்க்கும்… போடா… இந்தக் கையை வச்சுட்டு…” என்று சொன்ன போதே அவள் குரல் ஏக்கத்துடன் ஒலிக்க

“ஆனால் எனக்கு ஒண்ணு மட்டும் சொல்லுடி… ஸ்டார்ட்டிங்ல வாலி சிம்ரன் மாதிரி… அப்டியே புருசனுக்கு ஏங்குறவ மாதிரி சீன் போடுவ… பார்க்க எனக்கும் பத்திக்குதுதான்… ஆனா ஃபினிஷிங்க்ல குஷி ஜோதிகா மாதிரி… அங்க ஏன் பார்த்த… இங்க ஏன் கை” என்று முடிக்கவில்லை அவன் வாயிலேயே போட்டவள்…

“பொண்டாட்டிய கையில வச்சுக்கிட்டு… சினி ஹீரோயின்ஸ்லாம் சாருக்கு ஞாபகம் வருதோ” என்று முறைத்தபடி அவனைப் பார்ப்பதற்கு வாகாக அமர்ந்தவள்…

அவனையே பார்த்தபடி இருக்க… இவன் என்ன புருவம் உயர்த்தி கேட்க…

”ஒன்றுமில்லை” என்று தலை அசைக்கும் போதே…. அவனுக்கு புரிந்தது…. அந்த ஒன்றுமில்லை என்பதில் ஆயிரம் இருக்கிறது என்று

அவளின் திடீர் அமைதி … இருவரின் மோகத்தின் பயணத்துக்கான தடை ஏற்படுத்தி இருக்க…

“ஏன் சந்தியா நிரஞ்சா கூட பேசமாட்டீங்கற… எல்லாரையும் புரிஞ்சுக்கிட்டு நடக்கிற நீ அவகிட்ட மட்டும் ஏன் இப்படி பண்ற” என்று சொல்லியவன்… கண்டிப்பாக மனைவி திட்டுவாள்… இல்லை முறைப்பாள் என்று எதிர்பார்க்க..

அவளோ

“கொஞ்ச நாள் கழித்து பேசுறேன்… இப்போ பேசிட்டா… உங்க ஃப்ரெண்ட்டுக்கு அவகிட்ட பேச எதுவும் கிடைக்காது…. ரஞ்சிக்கு ஆறுதல் சொல்றேன் சொல்றேன்னு… ஆளக் கவுத்திட்டாரு போல” என்று விசாரிக்க…

ராகவ்… நம்ப முடியாத ஆச்சரியத்தில் பார்க்க..

“ஹ்ம்ம்.. ரஞ்சி கண்லயும்… உங்க ஃப்ரெண்ட் கண்லயும் , காதல் டன் டன்னா வழியுதே… அதெல்லாம் நாங்க ஒரே நொடில கேப்சர் பண்ணிருவோம்” என்று தன்னைத் தானே பெருமையாக சொன்ன போதே

”ஹ்ம்ம்.. வாவ்…பெருமைதான் சகி… ஆனா நமக்கு மட்டும் புருசன் மேல வந்த காதலைக் கண்டுபிடிக்க… கரப்பான் பூச்சி லாம் தேவைப்படுது” என்று அவளை வம்பிழுக்க ஆரம்பிக்க…

சட்டென்று சந்தியாவுக்குள்… பதட்டம் வந்திருக்க… தன்னையுமறியாமல்… அவனிடம் ஒன்றியவளுக்கு…. இப்போதும் சொல்ல முடியவில்லை…

“லவ் யூ ரகு” என்று மட்டும் சொன்னாள் நடுக்கத்துடன்… அதே நேரம் கணவனின் கரங்களின் இறுக்கம் அதை மறக்கவும் வைத்திருக்க… இன்னும் அவனோடு ஒன்ற

“ஓய் பொண்டாட்டி… இன்னைக்கு ஒரு முடிவோடத்தான் வந்திருப்ப போல… பொண்ணா பொண்டாட்டியான்ற உன் டிபேட்ல…. பொண்டாட்டி டீம் வின் பண்ணிருச்சு போல” என்று கள்ளச் சிரிப்போடு கேட்டவன் கண்சிமிட்டலோடு அவள் நெற்றியில் இதழ் பதிக்க

இவளோ… மீண்டும் தன் நிலை மீண்டு வந்திருக்க…

அவன் இதழுக்கு முன் தன்னோடு உறவாடும் அவன் மீசையை ரசித்தவளாக அதற்கு முத்தம் வைக்க…

“ஓய் ரொம்ப பண்றடி… என் மீசைக்கே முத்தம் கொடுத்துட்டு இருக்க… இப்டியே போணுச்சு… நாளைக்கே நான் க்ளீன் ஷேவ்லதான் இருப்பேன்” என்று அவளிடம் பொய்யாக விளையாண்டபடி…

“சந்தியா” … என்று அவளைக் கட்டிக் கொண்டவன்…. அவளிடம் ஏதோ கேட்க வர

“ஹ்ம்ம்.. சொல்லு” என்று மட்டும் அவனோடு சாய்ந்தபடி கேட்க…

“நாம இப்படி நாடோடி மாதிரி… சுத்திட்டு இருக்கோமே… நம்ம வீட்டுக்கு எப்போ போறது” என்று கவலையோடு கேட்டான்… அவன் நினைத்து சொன்னது என்னவோ… அவன் தன் பெற்றோரோடு இருக்கும் தற்போதைய வீட்டை நினைத்துதான்

சந்தியாவுக்கோ…. அவர்களது புது வீட்டைப் பற்றி சொல்கிறான் என்று நினைத்துவிட்டள்…

வேகமாக அவனை விட்டு தள்ளி அமர்ந்து.. விரல் விட்டு எண்ண ஆரம்பித்தாள்…

“என்னடி பண்ற” என்று புரியாமல் பார்க்க…

”உன்னை மாதிரி அஞ்சு புள்ள…” என வலது கை விரல்களை மொத்தமாக விரித்துக் காட்ட…

”என்னது அஞ்சா..” அதற்கே ராகவ் கண்களைப் பெரிதாக விரித்திருக்க… அடுத்தடுத்து அவள் சொல்லப் போவதைக் கேட்டு மயங்கி விழாமல் இருந்தால் சரிதான்

”ஆமா ரகு மாம்ஸ்… அப்புறம் என்னை மாதிரி அஞ்சு பேர்” என்று இடது கையின் மொத்த விரலையும் நீட்ட

கேட்டவனோ… இப்போது ஆச்சரியத்தில் கண்ணை விரிக்கா வில்லை… மாறாக

“ஹ்ம்க்கும்… உன்னை மாதிரி இன்னொருத்தி இருந்ததுக்கே… இந்த நிலைமை… இதுல இன்னும் அஞ்சு பேரா” என்று சலித்தான் தான்…

ஆனாலும் மனைவியின் பேச்சை சுவாரசியாமாக கவனிக்க ஆரம்பித்திருத்தான்…. தலையணையை மடியில் வைத்தபடியே…

“அப்புறம் சகி… போதுமா” என்ற போதே…

”ப்ச்ச்.. இன்னும் முடிக்கலை ட்ர்பிள் ஆர் ” என்றபடி…

“அப்புறம் அப்புறம்…உன்னை மாதிரி, என்னை மாதிரி சேர்ந்த சாயல்ல பத்து பிள்ளைங்க” என்று இரண்டு கைகளையும் விரித்துக் காட்ட

கேட்ட அடுத்த நொடி…. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்திருந்தான் ராகவ்… அவனின் பாவனையில் இவள் முறைக்க…

அதிர்ச்சியில் இருந்து இருந்து மீள்பவன் போல தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்தவனாக

“அது ஏண்டி… நம்ம ரெண்டு பேர் சாயலும் சேர்ந்து பத்து… ஏன் அஞ்சு பத்தாதா” சந்தேகம் கேட்க

“அப்போ கணக்கு தப்பாயிரும்ல… உன்னை மாதிரி ஃபைவ்… என்னை மாதிரி ஃபைவ்… நம்ம ரெண்டு பேரும் மாதிரின்னா…. டபுள் தானே வரணும்… சோ டென்” என்று முடிக்க,,

“ஹப்பா… முடியலைடி” என்று பெருமூச்சு விட்ட போது அவனின் மனசாட்சி…

“சந்தோஷப்பட்டுக்கோடா ராகவ்… உன் பொண்டாட்டி… டபுள்னு மட்டும் சொன்னான்னு… ஃபைவ் இண்ட் ஃபைவ்னு மல்ட்பிள்ஸ்ல போகலேன்னு” என்ற போதே

“ஹைய்யோ நீ வேற… அடங்குறியா… அவதான் லூசு மாதிரி பேசறாள்னா” என்று தன் மனசாட்சியை அடக்கியவன்… தன்னவளை இழுத்தவன்

“சகிம்மா… இந்த மாதிரி ஒரு உன்னதமான பெத்த ஃபேமிலி ப்ளான் எதுக்கும்மா… அதை மட்டும் சொல்லுங்க உங்க புருசனுக்கு” என்று அவளைத் தனக்குள் வைத்துக் கொண்டு கேட்க

“ப்ச்ச்…. நட்ட நடு காட்டில வீடு கட்டி வச்சுருக்க… அந்த வீட்டுக்கு ஸ்மால் பேமிலிலாம் செட்டாகாது… இந்த மாதிரி பெரிய்ய ஃபேமிலி தான் செட் ஆகும்… ” கவலையோடு சந்தியா சொல்ல

“சோ இத்தனை பிள்ளைகளை பெத்துட்டு… அந்த வீட்டுக்கு நாம போக… ரொம்ப நல்ல ப்ளான்மா… நல்லா வருவடி… மயக்கம் வருதுடி உன் ரகு மாம்ஸுக்கு… இதுக்கு என்னைச் சுட்டவன்கிட்ட இன்னும் ரெண்டு தடவை சுட்ருன்னு சொல்லிட்டு செத்தே போயிருக்கலாம்.. இதைலாம் கேக்கனும்னு தலை எழுத்து…” என்று முறைக்க… உண்மையிலேயே கோபமாகத்தான் பேசினான்

”ஏன் ரகு… இந்த ப்ளான் அவ்ளோ மொக்கையா” இவள் என்னமோ தீவிரமாக பேசுவது போல கேட்க…

“ஹ்ம்ம். . நீதான் கணக்குப்புலி ஆச்சே… லாஜிக் லபக்காச்சே… யோசிச்சு பேசுடி….. 20… அய்யோ… ரகு உனக்கு இந்த நிலைமையா” இருபது என்ற எண்ணே பயமுறுத்துவது போல் இருக்க

“மாம்ஸ்… நீ கால்குலேஷன தப்பா போடுற… ட்ரீ வியூ ப்ராப்ளம் தெரியும் தானே ஷார்ட்டெஸ்ட் பாத் கண்டுபிடிக்கத் தெரியாதா… ” என்ற போதே

”முடியலடி… விட்ருடி “ என்று அழாத குறையாகச் சொன்னவனை விடாமல்

“ஒண்ணு ஒண்ணா போனாத்தானே… நமக்கு டைம் ஆகும்… பேர்ல மட்டும் தான் ட்ரிப்பிள் ஆரா(RRR)… ரொமான்ஸ்ல மட்டும்தான் குவாட்ரபிள் ஆரா(RRRR)… புள்ள பெத்துகிறதுலயும் இருக்கனும்… டிரிப்லெட், குவாட்ரப்லெட் ” என்று ஆரம்பித்தவள்..

“இல்லல்ல… க்யீன்டிப்லெட்ஸ் தான் நமக்கு சரி்…” ஒரு ஏழெட்டு வருசத்துல போய்றலாம் நம்ம வீட்டுக்கு.. பாஸிபிளிட்டிஸ் இருக்கு ட்ரிப்பிள் ஆர் ”என்று தன் லாஜிக் அறிவை நிரூபித்து… தன்னவனை கெத்தாக புருவம் உயர்த்தி பார்க்க…

“டேய் ராகவ் உன்னைச் சொல்லித் தப்பு இல்லை… இந்தப் பேரை வச்சாரே உன் அப்பா அவரச் சொல்லனும்… “ தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன்

“நீ ட்ர்பிள்ள் ஆர், குவாட்ரபிள் ஆர்னு கூப்பிடும் போதெல்லாம்… உள்ளுக்குள்ள குளு குளுன்னு இருந்துச்சுடி…. ஆனால் அதுக்கு பின்னால இவ்ளோ பெரிய உள்குத்து இருக்கும்னு நெனச்சுக் கூட பார்க்கலயே… நான் வேணும்னா நீ கூப்பிடுற மாதிரி ரகுன்னு மட்டும் என் பேரை மாத்தி வச்சுக்கறேன்… ஆளை விடுடி… நெனச்சுப் பார்க்கவே… அய்யோ அம்மா முடியலை“ என்று பொய்யாக அலறியபடி அப்பாவியாக பார்வை பார்த்து சொன்னவனிடம்

”யோவ்… புருசா… பெத்துக் கொடுக்கிறவ நானே இவ்ளோ சீன் போடல… நீ ஏன் இவ்ளோ சீன் போடற..” என்று அவனருகில் நெருங்க…

“ஹேய் மீ பாவம்டி… “ என்று பயந்து விலகியவனை… தன்னருகே இழுத்து முத்த மழை பொழிந்தவளிடம்… சிரித்தபடி… காதோரம் ரகசியம் பேசினான் ராகவ்

“ஓய் பொண்டாட்டி… உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா” காது மடலில் கிசுகிசுக்க

”என்ன ட்ர்பிள் ஆர்… என் ப்ளானுக்கு ஓகேவா” என்று கண் சிமிட்டிக் கேட்க…

“இல்லை… உன்கிட்ட இருந்து ஒரு புள்ள வாங்குறதுக்கே… நான் பாடுபடணும்… தலையால தண்ணி குடிக்கணும்… இதுல மேடமுக்கு ட்ர்பிலெட், குவாட்ரப்லெட்… இன்னும் என்ன க்யீன்டிப்லெட்ஸ்… ஹ்ம்ம்… நீ யார்… உன் இலட்சணம் என்னனு எனக்கு மட்டுமே தெரியும்… உன்னை மொத்தமா தெரிஞ்ச என்கிட்டயே எவ்ளோ சீன்… எவ்ளோ பேச்சு “ என்று அவள் ரகசியத்தை அவளிடமே போட்டு உடைக்க…

அவன் மனைவியோ… ஞே என்று விழிக்க…. அவள் பார்வையில் இவன் விடாமல் சிரிக்க

“அவ்ளோ கஷ்டப்படுறியாடா என்கிட்ட… தத்தியா நான்” என்று வருத்தமாக அப்பாவியாக கேட்டவளைத் தனக்குள் கொண்டு வந்தவனாக….

“ப்ச்ச்… நான் எதுக்கு இருக்கேன்… நீ இப்போதாண்டா ஜஸ்ட் எண்டர் ஆகி இருக்க… அதுமட்டுமில்லாமல்… இந்த க்ளாஸ் கண்டினியூட்டியே இல்லை… அது உன் தப்பு இல்லை… ஸ்பெஷல் கிளாஸ் அரேஞ்ச் பண்ணி… எல்லாத்தையும் சரி கட்டிரலாம் ஓகே வா” என்று கண் சிமிட்ட… முறைத்தவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்த போதும்… அடக்கிக் கொண்டவன்….அவளுக்கு விட்டுப் போன நாட்களுக்கெல்லாம் சேர்த்து… பாடம் எடுக்க ஆரம்பி்த்திருந்தான்… இப்போதைக்கு வாய் மொழியாக மட்டுமே…

---

”ஹேய்….ரகு … எப்டிடா…” சந்தோஷின் ஆச்சரியக் குரல்

“ராகவ் நீ எப்போப்பா வந்த “ என்ற சுகுமாரின் குரல்

ரகு ரகு என்று பெயரே அந்த கம்பார்மெண்ட்டில் ஒலிக்க

தன் கணவனின் பெயர் தன்னைத் தவிர மற்ற அனைவராலும் ஏலம் போடப் பட்டுக் கொண்டிருக்க… அதுவரை தன் கணவனைப் பற்றிய அன்றைய நினைவுகளில் இருந்தவள்… நனவுலகத்திற்கு வர…

அவளது கணவன் ராகவ ரகு ராமனே… அவள் அருகில் நின்று கொண்டிருந்தான்… முகமெங்கும் புன்னகையோடு

தன் அருகே வந்து அமர்ந்தபடி புன்னகைக்க முயன்றான்… இவள் தான் ட்ரெயினில் ஏறும் போதே பார்த்து விட்டாளே… பெரிதாக ஆச்சரியம் இல்லை… இத்தனை நேரமா… இந்த கம்பார்ட்மெண்ட்டை அடைவதற்கு… என்று கடுப்பாக கணவனை முறைக்க…

முரளி அவனிடம்…

“ரகு உன் ஆளு…. செம்ம கோபத்துல இருக்கான்னு நினைக்கிறேன்… செம்ம சைலெண்ட் மோட்… ட்ரெயின் ஏறுகிற வரை…” என்று கலாய்க்க

வேகமாக தன் மனைவியைப் பார்த்தவன்

“அப்படியா” என்று கேள்வியாக நோக்க… சந்தியாவோ முகத்தைத் திருப்பிக் கொள்ள… சந்தோஷ்… அவனிடம்

“வர மாட்டேன்னு சொன்ன… எப்டிடா… கடைசி நேரத்தில ஆஜர் ஆகிட்ட… பரவாயில்லை… என் தங்கச்சிகிட்ட தர்ம அடி வாங்காம தப்பிச்சுட்ட” என்ற போதே

“பட் இப்போ எங்க செப்பி… கோபமா இருக்காளே… எப்படி சமாதானப்படுத்தப் போற அது பெரிய விசயமாச்சே“ என்று திவாகர் கேள்வி கேட்க… காதம்பரியும் திவாகருக்கு ஹைஃபை கொடுத்தபடி

‘சந்தியா…ரகுவை விடாத… ஒரு வாரமா நீ எவ்ளோ கெஞ்சின… நம்ம கூட சேர்ந்து வரச் சொல்லி… பனிஷ்மெண்ட்டா… நீ திரும்பி போற வரைக்கும்… ரகு வோட பேசாத… நீ மட்டும் பேசுன… மனைவி குலத்துக்கே அவமானம்” என்று ராகவ்வின் முன்னாலேயே போட்டுக் கொடுக்க…

முரளியைப் பார்த்தான் அப்பாவியாக ராகவ்… அவனின் பார்வை புரிந்த முரளியும் பொய்யாக அழுவது போல் பாவ்லா காட்ட

“அப்போ…உன் தங்கை என்கிட்ட பேச மாட்டான்னு சொல்ல வருகிற காதம்பரி… அப்டித்தானே” என்று சொல்ல…

“கண்டிப்பா… என் தங்கை ரோசக்காரி” என்று சொல்லி முடிக்கவில்லை….

“ஹை ரகு….எங்க வாங்கின” என்று சந்தியா வாய் திறந்திருந்தாள் ராகவ்விடம்…. அவளை நோக்கி... நீட்டிய அவன் கைகளில் இருந்த பொட்டலத்தைப் பார்த்தபடி துள்ளிக் குதிக்காத குறையாக இருந்தாள்…

”வாவ் மாங்கா போட்ட சுண்டல்… இவங்க வாங்கிக் கொடுத்தது நல்லாவே இல்லை ரகு” என்ற படி அதை வாங்கி சாப்பிட ஆரம்பிக்க…

ரகு தன்னை கலாய்த்த மக்களிடம் புருவம் உயர்த்தினான்…

“எப்புடி…” என்பது போல பெருமையுடன்…

சந்தியாவை நம்பி… ரகுவை ஓட்டிக் கொண்டிருந்த அத்தனை முகத்திலும்… அசடு வழிய….

“தொடச்சுக்கங்க…மக்களே எல்லோரும்… எல்லாருக்கும் பொண்டாட்டியை சரிகட்ட… ஒரு முழம் மல்லிக்கைப்பூ… ஒரு பாக்கெட் ” என்று ஆரம்பித்தவன்… அப்போதுதான் தன் தங்கையும் அங்கு இருக்கின்றாள் உணர்ந்தவனாக…

தனக்குள் நாக்கை கடித்துக் கொண்டவனாக

“என் சகிக்கு அதெல்லாம் தேவையில்லை… அவங்கவங்க வேலையைப் பாருங்க” என்ற போதே சந்தோஷ் முகம் சட்டென்று இருள ஆரம்பிக்க… வேகமாக எழுந்து அந்த இடத்தை விட்டு எழுந்து வெளியே படிக்கட்டில் நின்றபடி வெளிக்காற்றை சுவாசிக்க ஆரம்பிக்க.. ராகவ்வும் எழுந்து அவன் பின்னே போனவனாக… சந்தோஷின் தோள் தொட்டு ஆறுதலாக அணைக்க…

திரும்பிய சந்தோஷ் கண்கள் கலங்கி இருந்தான்

“புரிஞ்சுக்கோ சந்தோஷ்…. என் இவ்ளோ தூரம் உன் குடும்பத்துக்காக இவ்ளோ யோசிக்கிறான்னா.. அது உன் மேல அவளுக்கு இருக்கிற காதல் தான் சந்தோஷ்…”

ஆமோதிப்பாக தலை ஆட்டியவனிடம்

”ஹ்ம்ம்… புரியுது ரகு… இவ்ளோ நடந்ததுக்கப்புறம் என் குடும்பத்தை ஏத்துகிட்டா… சிந்துவுக்கு பண்ணின துரோகத்துக்கு என்னென்ன பரிகாரம் பண்ண முடியுமோ அதெல்லாம் பண்ண நினைக்கிறா” என்ற போதே

“மனசால என்கிட்ட மறுபடியும் வந்துட்டாதான்.. எங்க லைஃபை பூரணத்துவம் ஆக்க ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கிட்டோம் தான்… ஆனால்” என்றவன் அதற்கு மேல் ராகவ்விடம் ஏதும் பேசாமல் அமைதியாக வெளியில் தங்களோடு பயணம் செய்து கொண்டிருந்த மரம் செடி கொடிகளை பார்க்க ஆரம்பிக்க..

”மிருணா ஓரளவு லைஃபை புரிஞ்சுகிட்டாடா… வாழ்க்கைன்றது தவறே செய்யாத பாதை இல்லை… அங்கங்க சில பல பெரிய தவறுகள் இருக்கும்… அதை தாண்டிச் செல்வதா…. தவிர்த்து செல்வதா… இல்லை அந்த தவறுகளோடோயே பயணிப்பதானு… தடுமாறுகிறாள்…. எனக்குத் தெரிந்த என் தங்கை… எப்போதுமே தவறு நிறைந்த பாதையை இக்னோர் பண்ணித்தான் பார்த்திருக்கின்றேன்… ஆனா அவ உன்னோட வாழ சம்மதிச்சுர்க்கான்னா.. உன்னோட தவறுகளையும் மீறி உன்னை லவ் பண்றாடா… அதுக்காக அந்த லவ் ஜெயிக்கிறதுக்காக அவ மனசோட போராடிட்டு இருக்கா… கண்டிப்பா அவ ஜெயிப்பா… உன்கிட்ட மொத்தமா அவ வந்து சேர்றதுக்கு வருசக் கணக்கெல்லாம் ஆகாதுடா… நீ ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற” என்று ஆதரவாக அவன் தோள் தொட்டுச் சொல்ல…

”நம்பிக்கை வைடா… அனுபவத்தில சொல்றேன்… நான் என் சந்தியா மேல வைத்த நம்பிக்கை அவளை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கு… அவ என் மேல வைத்திருந்த நம்பிக்கை அவகிட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்தது… ஒரு சின்ன மயிரிழைல தப்பி எங்க வாழ்க்கையில ஒண்ணா சேர்ந்திருக்கோம்னா அதுக்கு காரணம் காதல் மட்டும் இல்லை… அந்த காதல் மேல… வச்சிருந்த நம்பிக்கையும் தான்…” என அன்றைய நினைவில் சிலாகித்துச் சொல்ல… அதே நேரம் மிருணாளினியும் சிந்துவோடு அங்கு வந்திருந்தாள்… குழந்தைக்கு வாய் துடைக்க வேண்டுமென்று…

மிருணாளினி அங்கு வந்தவுடன்… நண்பர்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டு மிருணாளினியைப் பார்க்க…

‘சந்தோஷ்… பாப்பாவை பிடிங்க…” என்று கொண்டு வந்திருந்த வாட்டர் பாட்டிலின் மூடியைத் திறக்க ஆரம்பிக்க…

ராகவ் சிரித்தபடி இருவரையும் பார்த்திருக்க…

“என்னாச்சு அண்ணி…” என்று கேட்டபடியே சந்தியா வந்தாள்… அவள் பின்னாடியே.. கணேசன் வசந்தி என அவர்களும் வர

“என்னாச்சும்மா… ” என்றபடி கணேசன் சிந்தியாவை தன் கைகளில் வாங்கிக் கொள்ள,,,

“ஹ்ம்ம்… ஏதோ சாப்பிட்டது சரி இல்லை போல மாமா” என்று சொல்லியபடியே… குழந்தையின் முகத்தை அலம்ப ஆரம்பிக்க…

சந்தியாவோ கணவனைப் பார்த்தாள் முறைத்தபடியே….

“இப்போ என்ன ஆச்சுனு… இவ என்னை முறைக்கிற… அவங்க அப்பா பாசம் காட்டுனா நான் என்ன பண்ணினேன்” என்ற இவன் குழம்பிக் கொண்டிருக்க

அதைக் கண்டும் கண்டு கொள்ளாமல் மிருணாளினியுடன் சேர்ந்து குழந்தையைக் கவனிக்க ஆரம்பிக்க… வசந்தி துண்டால் துடைத்தபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல… அவள் பின்னாலேயே மற்றவர்களும் சென்றுவிட….

இப்போது சந்தியாவும் பின்னால் போக… அவள் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து அவளை நிறுத்தியவன்…

“என்னடி வந்ததில இருந்து பார்த்துட்டு இருக்கேன் ஓவரா சீன் போட்டுட்டு இருக்க… இப்போதானே பல்லைக் காட்டுன… மறுபடியும் எதுக்கு முறைக்கிற” என்றவன் அங்கிருந்த ட்ரெயின் சுவரில் அவளைச் சிறை வைத்தபடி கேட்க ஆரம்பித்தான்… கணேசனை எல்லாம் அவன் இழுக்கவில்லை

“ரகு… யாராவது வரப் போறாங்க…” என்று அங்குமிங்கும் பார்த்தபடி பேச ஆரம்பிக்க…

“நீதானே சொல்லுவ… என் புருசன் நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.. யார் கேட்ப்பாங்கனு சொல்வ… எனக்கும் அது அப்ளை ஆகும்” என்ற போதே… யாரோ ஒருவர் வரும் அரவம் கேட்க… சட்டென்று அவளை விட்டவன்…. சாதரணமாக பேசுவது போல பாவ்லா செய்ய ஆரம்பிக்க…

வந்த புன்னகையை அடக்கிக் கொண்டவளாக…

“இப்போ கொடுத்த முறைப்புக்கு நீ காரணம் இல்லை…. பெருசா ஹைஜீனிக் ஃபுட் தான் கொடுப்பேன்னு… உங்க தங்கை சீன் போட்டாங்க.. இப்போ என்ன ஆச்சு… அந்தக் கோபம்… அவங்களை முறைக்க முடியாதுதானே… அதுதான் உன்கிட்ட மொறச்சு வச்சேன்” என்றவளை…

“ஹப்பா… என் தங்கை மேல பல பேருக்கு காண்டு போல…” என்று சொல்ல ஆரம்பித்த போதே அவனை விட்டு விலகிச் சென்று தங்கள் இருக்கையில் அமர்ந்திருக்க…

“ஓய்… இப்போ என்ன பண்ணச் சொல்ற… அது அவ குணம்… நான் இல்லை நீ சொல்லி திருந்தப் போறாளா…” என்று தங்கள் இருந்த பெர்த்தின் திரைச்சீலையை இழுத்து மூட ஆரம்பிக்க… படபடத்தாள் சந்தியா….

“ஏய் என்னடா பண்ற… யாராவது தப்பா நெனச்சுக்க போறாங்கடா“ என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லியபடி வேகமாக எழுந்தவளிடம்

”அதெல்லாம் யாரும் தப்பா எடுத்துக்க மாடாங்க…” என்று இழுத்து தன் மேல் அமர வைத்தபடி…

“என்ன கோபம்… சொல்லித் தொலை… உன் முகமே பார்க்க சகிக்கலை” என்றபடி அவள் முகத்தைத் தன்புறம் திருப்ப

அவன் கையைத் தட்டி விட்டவளாக….

”அதுதான் பார்க்க சகிக்கலைல…. அப்புறம் என்ன” என்று இன்னும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள

“என் சகியோட முகத்தைப் பார்த்து சகிக்கலைனு சொல்ல முடியுமா…” என்றபடியே…

“உனக்காகத்தான் எல்லா வேலையையும் அப்டி அப்டியே போட்டுட்டு வந்தேன் சகி… இத்தனை பேர் இருந்தாலும்…நீ என்னைத் தேடுவேன்னு…“ என்றவன்…

“மிருணாவும்… அவ குழந்தையோட பிஸி ஆகிட்டா… சந்தோஷும் இன்னும் பிஸ்னஸுக்குள்ள வரலை… நான் மட்டும் தான்… நீதானடி சொன்ன.. உன் மாமனர் பிஸ்னஸை பார்க்கனும்னு… அப்புறம் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு இருந்தேன்னா என்ன அர்த்தம்” என்று சொல்லி அவளைப் பார்க்க

”ஹ்ம்ம் சொன்னேன் தான்… அதுக்காக.. வீட்டுக்கு கூட வராமல்…அப்டியே வந்தாலும்.. மிட் நைட்ல வந்துட்டு… மார்னிங் சீக்கிரமா போய்ட்டுன்னு… என்னை ரொம்ப டார்ச்சர் பண்றடா… மாமாவுக்காகத்தான் பொறுத்துக்க்றேன்” என்று பொறும ஆரம்பித்தவள் விட்டால் அழுது விடுவாள் போல… கண்கள் கலங்க் ஆரம்பித்து இருக்க… அதைத் துடைத்தபடியே அவன் மேல் சாய

“அவ்ளோ லேட்டா வந்தாலும்… இந்த பொண்ணு… எனக்காக பொண்டாட்டியா வேலை பார்க்கிறாளே… அப்புறம் அவ புருசனுக்கு கவலை என்ன” என்று சொன்ன போதே அவன் வாயிலேயே போட்டவள்…

”அந்த தைரியம் தாண்டா… உனக்கு” என்று வாய் கோபமாகப் பேசினாலும்… இதழ்கள் அவன் நெற்றியில் பதியப் போக…

”சந்தியா சித்தி” என்ற நர்மதாவின் குரல் அருகில் ஒலித்திருக்க… பதறி… சந்தியா அவனை விட்டு விலக… நொடி நேரத்தில் ராகவ் தன்னை விட்டு அவளைத் தள்ளி நிறுத்தி இருக்க… அதே நேரம் நர்மதா திரையையும் விலக்க… ராகவ்வுக்கும் சந்தியாவுக்கும்.. வியர்வை முத்துகள்… படபடப்பில்… இருந்த அந்த கோச்சின் ஏசி குளிரையும் மீறி

எப்படியோ நர்மதா முன்னிலையில் மாட்டாமல் தப்பித்த நிம்மதியில் சந்தியா பெருமூச்சை விட… ராகவ்வோ… இயல்பாக இருப்பது போல தன் தலைக் கேசத்தை கோதி விட்டபடி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க…

“சித்தி… தூங்கிறாதீங்க… நம்ம பிளான் படி… அங்க க்யூல உப்புமா… இடியாப்பம்… ஞாபகம் இருக்குதானே” என்று கத்த சந்தியாவுக்கும் ராகவ்வுக்கும் இடையில் அமர….

“ஓய் நமு…. உங்க சித்தி அவளை மாதிரியே ஒரு பீஸை ரெடி பண்ணிட்டா போல… அராத்துங்க… ஒரு நிமிசத்துல… ஹார்ட் நின்னு மறுபடியும் துடிக்க ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு…” என்ற போதே…. சந்தியா பக்கென்று சிரித்து வைத்து விட

அவன் என்ன சொல்கிறான்… தன் சித்தி ஏன் சிரிக்கிறாள் என்றெல்லாம் அவளுக்கு புரியவில்லை.. அதை ஆராயவும் இல்லை… மாறாக

”சித்தப்பா… நீங்க மிஸ் பண்ணிட்டீங்க… சந்தியா சித்தி சூப்பரா பாடுனாங்க… அதுவும் உங்களுக்குத்தான் டெடிகேட் பண்ணாங்க அந்த சாங்க” என்ற போதே… ராகவ் வாய் பிளக்கவெல்லாம் இல்லை… பதிலாக அலட்சியமாகக் கேட்டான்

“ஏது அந்த ஆரிராரோ ஆரிராரோ… ஆனந்தம் தந்தாயே சாங்கா” விட்டேற்றியாகக் கேட்க…

நர்மதாவோ… விழி விரித்துக் கேட்டாள்…

“அதேதான் சித்தப்பா…. உங்களுக்கு தெரியுமா”என்று ஆச்சரியமாகக் கேட்க…

“உங்க சித்தி… உங்க சித்தப்பாவை தூங்க வைக்கனும்னு நெனச்சா… கைவசம் இந்தப்பாட்டைத் தான் எடுப்பா” என்ற போது கனல் விழி காட்டிய மனைவியிடம்… உதடு குவித்து கல்மிஷமாக கண் சிமிட்ட… அவனின் கல்மிஷப் பார்வையில் நாணம் வந்து முகம் சிவந்து விட… அவனைப் பார்க்க முடியாமல்… வேறுபுறம் பார்வையைத் திரும்பினாள் சந்தியா…

பாவம் அந்த பத்து வயது பெண்ணுக்கு இவர்களின் பரிபாசைகள் புரியவில்லை… தோளைக் குலுக்கியபடி…

”ஓகே சித்தி… அலார்ம் வச்சுக்கங்க… சித்தப்பா நீங்க என்னோட பெர்த்த எடுத்துக்கங்க… நான் அப்பாகிட்ட போறேன்” என்று திவாகரிடம் போக…

அவளைப் போகவிட்டவன்…

“ஓய் பொண்டாட்டி… அதான் புருசனுக்கு சீட் ரிசர்வ் பண்ணி வச்சுட்டியே… அப்புறம் என்ன சீன் போடற… நீ எப்படியும் எந்த இளிச்சவாயனயாவது ஏமாத்தி…” என்ற போது இன்னும் இவள் மீண்டும் முறைக்க ஆரம்பிக்க்க

”அப்படி சொல்லலைடா… யார்கிட்டயாவது டீல் பேசி… எனக்க சீட் கரெக்ட் பண்ணி வச்சுருப்பேன்ற நம்பிக்கைலதான் வந்தேன்” என்று கண்ணடிக்க..

“அடேங்கப்பா… அவ்ளோ நம்பிக்கை… உண்மையைச் சொல்லுடா… பொண்டாட்டிக்கு ரிசர்வ் பண்ணின சீட் மட்டுமே போதும்… என்ஜாய் பண்ணலாம்னு தானே.. என்னை டிக்கெட் ரிசர்வ் பண்ண விடலை” என்று அவனைப் பார்த்துக் கோபமாகக் கேட்க…

தன்னோடு அவளை இழுத்து தனக்குள் வாகாக அமர வைத்துக் கொண்டவன்….

‘ஓய்… இப்போ மட்டும் மேல இருக்கிற அந்த சீட்… யூஸ் ஆகக் போகுதா… நான் அங்க போகப் போறேனா… ஒண்ணுமே தெரியாதவ மாதிரி… ரொம்ப சீன் போடாதடி” என்று அவளிடம் கொஞ்ச ஆரம்பித்திருக்க… முதலில் பிகு பண்ண ஆரம்பித்தவள் மெல்ல மெல்ல அவனிடம் சரணடையத் தொடங்கி இருக்க…

“அந்த அலார்மை ஒரு பத்து நிமிசத்துக்கு முன்னாடி வைடி…. உன் மாமா பொண்ணு… எப்போ வருவாளோன்னு பக்கு பக்குனு இருக்கு… “ என்று சொன்ன போதே…

”அதெல்லாம் ஒரு அலாரமும் வேண்டாம்… நான் என்ன இன்னும் சின்னக் குழந்தையா… நர்மதா கேட்டான்னு இங்க கிடைக்கிற சாப்பாட்டைப் பற்றி சொன்னேன்” என்று சொல்ல…

புருவம் உயர்த்தினான்… நம்ப முடியாத ஆச்சரியத்தில்…

”ஹலோ… என்ன நம்ப முடியலையா” இவள் கேட்ட போதே

“நம்புறேன்… நம்புறேன்… நீ சின்ன குழந்தை இல்லை என்று” இவன் மீண்டும் அவளிடம் கணவனாக வம்பிழுக்க ஆரம்பிக்க…

அவளோ…. அவன் சீண்டலை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை…. நேற்றைய இரவில்… அலுவலக வேலை காரணமாக அதிக நேரம் விழித்திருந்து வேலை பார்த்திருக்க… இன்று உறக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வர… தன்னவனின் மார்பில் சாய்ந்தவள்… அப்படியே உறங்கவும் ஆரம்பித்திருக்க

அவள் கீழே விழுந்து விடாமல்… அவள உறங்குவதற்கு தோதாக வசதியாக அமர்ந்து… தன்னவளை தன் மீது சாய்த்துக் கொண்டவனுக்கு… இந்த வாழ்க்கைப் பயணம் இன்னும் இவர்களுக்கு எத்தனை திருப்பங்கள் வைத்திருக்குமோ தெரியவில்லை… ஆனால் இப்போதைய பயணம் நிறைவாகவே இருந்தது… திருமணமான சில நாட்களில் அவர்களின் அடைந்த பல சஞ்சலங்கள்… இதோ இரயிலின் வேகத்தில்…. அதி வேகமாக அவர்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த பரந்த வெளியைப் போல… கடந்திருந்தன இந்த ஆறு மாத இடைவெளியில்… அந்த நிறைவோடு மனைவியை அணைத்தபடி அமர்ந்த நிலையிலேயே நிம்மதியாக கண் மூடியிருந்தான் சந்தியாவின் திருவாளன் ராகவ ரகு ராம்… to be continued…

4,203 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

1 Comment


Saru S
Saru S
Jul 23, 2020

Super super cello

Like
© 2020 by PraveenaNovels
bottom of page