top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?-62 Part 2

அத்தியாயம் 62 Pre Final2 - 2:


சிவா கிட்டத்தட்ட எல்லாம் முடிந்த நிம்மதியில் இருந்தான்… ஒரு வகையில் அவன் தீட்டிய திட்டங்கள் எல்லாம் படு தோல்வி அடைந்தது போல் இருந்தாலும்… அதன் முடிவென்னவோ சுபமாகவே முடிந்திருந்தது…

எதற்காக இத்தனை தூரம் போராடினானோ… சந்தியாவை-ராகவ்வை இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்தினானோ…. அந்த உண்மைகளைச் சொல்ல அதீனா ஒப்புக் கொண்டு நீதிபதி முன்பு மொத்தமாகச் சொல்லி விட… அதீனா சொன்ன தகவல்களை ஆதாரமாகக் கொண்டு… காவல் துறை அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியிருந்தது…

சந்தியாவை பத்திரமாக அவளது கணவனிடம் சேர்த்து விட்டான்… இதோ சற்று முன் சிவாவுக்கு நிரஞ்சனா செய்தி அனுப்பி இருந்தாள்… ராகவ்வும் அபாயக்கட்டத்தில் இருந்து மீண்டு வந்து விட்டான்

மனம் வெகுநாட்களுக்குப் பிறகு நிம்மதியில் திளைத்தது… இனிமேலாவது… தன் குழந்தைக்காக வாழ வேண்டும்… அவளை தன்னோடு வைத்துக் கொள்ளவேண்டும் என்று மனம் சிந்திக்கத் தொடங்கி இருந்தது… இருந்தும் கடமை இழுக்க… மீண்டும் நடப்புக்கு வந்தான்…

அதீனா… அவள் செய்த பயங்கரவாத செயலினால்… தன் மனைவியை இழந்து தனிமரமாக நின்ற போது… ஏனோ முதலில் இருந்த வெறுப்பெல்லாம் அவள் மேல் வரவில்லை…. அதே போல் அவளின் போராட்டமெல்லாம் அவன் முழுவதுமாக உணரவில்லை என்றாலும்… வாழ வேண்டிய பெண்… திசை மாறி சென்று விட்டாள் என்று தோன்ற…

அவளது அருகில் வந்தமர்ந்தவன்…

“நீ அப்ரூவரா மாறினதுனால… உனக்கு தண்டனைக் காலம் குறையலாம் அதீனா” என்றான் காவல் துறை அதிகாரியாக…

வேதனையுடன் சிரித்தாள் சிந்தியா…

“எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் சிவா சார்,… என் அப்பாவை மறுபடியும் மீட் பண்ணனும்… “ என்று தன் கோரிக்கையை வைக்க… சிவா மறுக்கவெல்லாம் இல்லை…

சற்று முன் கணேசன் வந்த போது…. அவரும் தன் மகளைப் பார்க்க சிவாவிடம் கோரிக்கை வைத்திருக்க… இப்போது முடியாது என்று… பிறகு பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்க… இப்போது அதீனாவும் கேட்க… தந்தை-மகள் இருவரும் மீண்டும் பார்க்க உதவுவதாக வாக்களிக்கவும் செய்தவன்…

“ராகவ் கண் முழிச்சுட்டானாம்…” என்று சந்தோஷமாகச் சொல்ல…

”அவன் கண்முழிக்காம இருந்தால் தான் ஆச்சரியம்…” என்று புன்னகைத்தவளுக்கு ராகவ் சந்தியாவின் காதல் எந்த அளவுக்கு புரிந்ததோ… அதே அளவு சந்தியாவிடம் கணேசன் காட்டிய பாராமுகமும் நன்றாக புரிந்திருந்தது…

கணேசன் சந்தியா புறம் சற்றும் திரும்பாமல் இப்போது கண்களில் தோன்ற.. மனம் வலித்தது….

“உனக்குக் கொடுக்காத பாசத்தை நான் யாருக்கும் கொடுக்கலைடா… கொடுக்க விரும்பலைன்றதைக் காட்டிலும்… கொடுக்க முடியலை….” என்ற தந்தையின் வார்த்தைகள் அவளை குளிர்வித்த அதே வேளை சந்தியாவை நினைத்து வருந்தவும் தான் செய்தது… இனி மாற்ற ஏதும் இல்லையே… தந்தை பாசம் இல்லையென்றால் என்ன… அவளுக்காக துடிக்க ஒருவன் இருக்கின்றானே… ராகவ் நினைவு வந்த போதே… சற்று முன் சந்தியாவிக்காக வருந்திய அந்த வருத்தமும் அதீனாவுக்குள் இப்போது இல்லை…

சிவா அவளிடமிருந்து விடைபெற்று ராகவ்வை பார்க்க வெளியே வந்தான்… அவளுக்கு காவலாக ஒரு பெண் காவல் துறை அதிகாரியையும் வைத்து விட்டுத்தான் போனான்…

அவன் அந்தப் பக்கம் போன சில நிமிடங்களிலேயே… அதீனா கண்களை மூடிப் படுத்திருக்க… திடீரென அவளுக்குள் அசாதரண உணர்வு… சட்டென்று கண்களைத் திறக்க… எதிரே கரண் நின்றிருக்க… அதிலும் அவன் கையில் துப்பாக்கி இருக்க… சட்டென்று எழுந்து அமர்ந்திருந்தாள் அதீனா… கண்களில் கலக்கம் எல்லாம் இல்லை… நிமிர்வாகவே கரணைப் பார்க்க

“நீ உண்மையைச் சொல்லிட்டா தண்டனையில் இருந்து தப்பிச்சுருவியா” என்று அவள் முன் துப்பாக்கியை நீட்டியிருக்க.. சட்டென்று அதீனா வேகமாக கட்டிலில் இருந்து இறங்கி அவனிடம் பாய்ந்திருக்க… எழக் கூட முடியாமல் இருந்தவள்… எப்படி… தலையில் அடிப்பட்டு மயங்கி கிடந்தவளுக்கு இத்தனை வேகமா… அதீனாவின் தீடிர் வேகத்தை அவள் பாய்ச்சலை எதிர்பார்க்காதவராக கரண் நிலை குலைய…

அதே நேரம் சிவா… ராகவ்வின் பொருட்கள் அடங்கிய பேகை எடுத்துக் கொண்டு… ராகவ்-சந்தியா இருந்த அறையை நோக்கிப் போக… அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது சந்தியாவின் கையில் இருந்து தவறி விழுந்திருந்த அவளது மாங்கல்யத்தை அதீனா இருந்த அறையிலேயே விட்டு வந்திருக்க…

“ஓ அதை மறந்துட்டேன்..” ட்ராகவ்- சந்தியாவைப் பார்க்க போக இருந்தவன்… மீண்டும் அதீனா இருந்த அறைக்கு போக…

சிவா உள்ளே நுழையும் போதே வெளியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரி… கரண் உள்ளே இருப்பதாகவும்… யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறியதாகவும் கூறி தன்னை வெளியில் அனுப்பி வைத்து விட்டதாகவும் கூற… விபரீதம் உணர்ந்தான் சிவா… அடுத்த நொடி… அறைக்குள்ளும் நுழைந்திருந்தான்..

அங்கே அவன் கண்டதோ… கரணின் பிடிக்குள் லாவகாமாக மாட்டி இருந்த அதீனாவைத்தான்…

அதீனா கரணின் பிடிக்குள் இருக்கிறாள்… கரணின் கைகளால் எந்நேரமும் சுடப்பட்டு விடுவாள் என்று தெரிந்த … வேகமாக தன் கைகளில் தன் துப்பாக்கியைக் கொண்டு வந்தவன்… கரணைக் குறி வைத்தபடி…

‘”கரண்… லீவ் ஹெர்…” என்ற போதே… கரண் சிரித்தபடி… சிவாவால் தன்னை மிரட்ட மட்டுமே முடியும் சுடவெல்லாம் முடியாது என்பதை நன்கு அறிந்திருக்க…

“ஃபர்ஸ்ட் உன்னைச் சுட்றலாமா சிவா… அடுத்து இவ உன்னைச் சுட்டுட்டான்னு என்கவுண்டர்ல கேசை முடிச்சுறலாம்…” என்ற போதே சிவா யோசிக்கவெல்லாம் இல்லை… தன் கரங்களில் இருந்த பிஸ்டலின் விசையை முடுக்கியவன்… சரியாக கரணின் நெற்றிப் பொட்டில் சுட சரிந்தார் கரண்… அடுத்து என்ன என்று உணர்வதற்குள் கரணின் உயிரும் அவரை விட்டு பறந்திருக்க… சிவாவுக்கு ஏன் இந்த வேகம் என்று அவனுக்கே தெரியவில்லை… சந்தியாவுக்கு நியாயம் செய்தானா இல்லை… அதீனாவுக்கு நியாயம் செய்தானா அவனுக்குத் தெரியவில்லை… சுட்டு விட்டான்…

இனி அடுத்து என்ன… தெரியவில்லை… விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக கடைசியாக அவனே நின்றிருந்தான்… கூட கூட்டி வந்த விட்டில் பூச்சிகளை எல்லாம் மீட்டெடுத்து காப்பாற்றி விட்டான்… இன்று தானே மாட்டி நிற்க… நிலை குலைந்து அமர்ந்திருந்தான்… அவன் குழந்தைக்கு தாய் மட்டும் இல்லை… தந்தையும் அருகில் இருக்கப் போவதில்லை என்பதால் வந்த அதிர்வில் அப்படியே உறைந்திருக்க

அதீனா அதிர்ந்து அவனைப் பார்க்க… அவனோ அப்படியே நின்றிருக்க… ஏனோ சிவாவை இதிலிருந்து தப்பிக்க வைக்க நினைத்தவள்… பரபரவென்று செயலாற்றினாள்…

கரணின் துப்பாக்கியை கையில் எடுத்தபடி… அதீனா வேகமாக சிவாவின் அருகில் வந்தவள்… சிவா சுதாரிக்கும் முன்னரே அவனது துப்பாக்கியையும் பறித்துக் கொண்டவளாக… சிவா ஒரு நிமிடம் சுதாரித்து அவள் அருகே வர… இங்கு நடந்த சத்தத்தில் வெளியே இருந்த காவல் துறை அதிகாரியும் உள்ளே வர… சட்டென்று தன் பிஸ்டலின் விசையை தன் நெற்றிப் பொட்டில் வைத்து அழுத்த… அடுத்த நொடி அதீனா சரிந்திருந்தாள்…

ஏனோ அவள் தனக்கான தண்டனையை அடுத்தவர்களிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை…

என்னதான் நியாயம் தேடினாலும்… அவள் தேர்ந்தெடுத்த தவறான வழிதான்… அப்பாவி உயிர்களை பலி வாங்கிய குற்ற உணர்வு… தன் கூட்டத்தைக் காட்டிக் கொடுத்த துரோகம் என பல எண்ணங்கள் அவளைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்க.. இறுதியாக தன் தந்தையைப் பார்த்த நொடிகள்… அவளுக்கான இந்த வாழ்க்கையின் திருப்தியை கொண்டு வந்திருக்க… இந்த உலகத்தோடு தனக்கான பந்தத்தை முடித்துக் கொண்டாள்… தன் கையாலேயே…

தன் தந்தையை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்… என்ற ஆசை மறுபடியும் மறுக்கப்பட்டது… அப்போது வசந்தியால்… இம்முறை கடவுளால்….

சிவா அதிர்ந்து அப்படியே நின்றிருக்க…

அந்த பெண் காவல்துறை அதிகாரி… வெளியே ஓடினாள்… அதீனா கரணைச் சுட்டு விட்டு… தானும் சுட்டுக் கொண்டதாகவும்… காலையில் இருந்து பரபரப்பாக இருந்த மீடியா அப்போதுதான் ஓய்ந்து இருக்க… மீண்டும் அதற்கு தீனி கிடைக்க… படபடவென்று மீடியாக்கள் பாய்ந்து வந்திருக்க..

அதற்கு முன்னமே சிவா… அங்கிருந்த சந்தியாவின் மாங்கல்யத்தை எடுத்து பத்திரப்படுத்தியவனாக… சந்தியாவை தொடர்பு படுத்தும் பொருட்கள் ஏதும் இருக்கின்றனவா என்று ஆராய… ஏதும் இல்லையென்று நூறு சதவிகிதம் உறுதி செய்தவன்… தன் கையில் இருந்த பேகை அங்கு வந்த வெங்கட்டிடம் கொடுத்து ராகவ்விடம் ஓப்படைத்துவிடும்படி கூறியவன்… கணேசனுக்கு எக்காரணம் கொண்டும் இப்போதைக்கு தெரியவராமல் பார்த்துக் கொள்ளும்படி கூறியவன்…

இனி தான் சொல்லும் வரை ராகவ்-சந்தியா இவனைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அவனிடம் சொல்லி அனுப்பியிருந்தான்…

இதோ இன்று வரை அவன் பேசவில்லை… ஏனென்றால்… இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்கு வரும் போது… சந்தியாவும் கூட மாட்டலாம்.. அதைத் தவிர்க்க எண்ணியவன் வெங்கட்டிட்டிடம் சொல்லி… அவர்கள் மீண்டும் சென்னை திரும்பும் வரை உடனிருந்து பத்திரமாக கவனிக்கச் சொல்லி விட்டு… சந்தியா-ராகவ் இருவருக்கும் இடையிலான தன் தொடர்புகளை எல்லாம் தற்காலிகமாக தள்ளி வைத்தவனுக்கு… ராகவ்வை ஒருமுறையாவது பார்த்துவிட்டு வர வேண்டுமென்று ஆசை இருந்தும்… இப்போதைய சூழ்னிலைக்க்கு அது சரியாகப்படாது என்று விட்டு விட்டான்..

முக்கியமாக கணேசனைக் கண்காணிக்க சொல்லி இருந்தான்… ஏனென்றால் அவர் உணர்ச்சி வசப்பட்டால் சந்தியா இந்த வழக்குக்குள் மீண்டும் உள்ளே இழுக்கப்படுவாள் என்பதால்… கணேசனை அடக்கி வைத்திருக்க.. வெங்கட்டிடம் சொல்லியும் அனுப்பினான்…

--------

சில தினங்களுக்குப் பிறகு…

காதம்பரி இல்லத்தில்… காதம்பரியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்து கொண்டிருந்தது…

மொத்த குடும்பமும் அங்கு வந்திருந்தது… சந்தியா மற்றும் ராகவ் குடும்பத்தினரும் அங்குதான் இந்த இரண்டு வாரங்களாகத் தங்கி இருந்தனர்… புதிதாக என்றால் திவாகரும் மோகனா குடும்பம் மட்டுமே

அறுவைச்சிகிச்சை செய்த இரண்டு தினங்களில் ராகவ்வும் ஓரளவு சரியாகி விட.. உடனே சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தனர்… ஆனால் காதம்பரியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா அருகில் வர… காதம்பரி அனைவரையும் அங்கிருக்கச் சொல்லி வற்புறுத்த வேறு வழி இன்றி அனைவரும் அங்கேயே தங்கி இருந்தனர்…

ராகவ்-சந்தியாவுக்கு விபத்து என்றே காதம்பரி வீட்டில் சொல்லி இருந்தனர்… சுகுமார்-யசோதா வந்த போது… அவர்களுக்கும் அதையே சொல்லி மறைத்து விட்டனர்…

இதை எல்லாம் விட… சந்தியா ஜெயவேல் விவகாரத்தைப் பற்றி… ராகவ்விடம் வாய் திறக்கவில்லை…. அன்று அந்த சம்பவம் நடந்த போது தன்னவனிடம் சொல்ல தவித்தவளுக்கு… கணவன் மரண வாசலை தொட்டு வந்திருக்கும் இந்த சூழ்நிலையில் அதை சொல்லி.. அவனை துயரப்படுத்த மனம் வரவில்லை…

இவர்கள எல்லோரையும் விட…. அதீனா மறைவில் கணேசன் மிகவும் நொந்து போயிருந்தார்… மகளைப் பார்க்க மனம் தவித்ததுதான்… ஆனால் அவர் அதீனாவின் தந்தையாகத் தன்னைக் காட்டிக் கொண்டால்… சந்தியாவுக்கு இதில் பல அபாயங்கள் வரும் என்று வெங்கட் பலமுறை சொல்லி அவருக்கு புரிய வைக்க… கணேசனுக்கு… இறந்த மகளைப் பார்ப்பதால்… உயிரோடு இருக்கும் தன் மகளின் வாழ்க்கைக்கு பிரச்சனை என்று எப்போது உணர்ந்து கொண்டாரோ… அதன் பிறகு…. அதீனாவைப் பார்க்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ய வில்லை… சந்தியாவுக்கு கொடுக்காமல் மறுத்த பாசத்துக்கு ஈடுகட்டினாரோ என்னவோ… இல்லை துப்பாக்கிச் குண்டு பட்டு இறந்த தன் மகளின் முகம் பார்க்க தைரியம் இல்லாம விட்டுவிட்டாரா தெரியவில்லை… டிவியில் அதீனாவின் முகத்தைக் காட்டும் போது கூடப் பார்க்க வில்லை அவர்…

வசந்தி, சந்தியா என அனைவருக்குமே அது பெரிய துக்கம் தான்… ஆனால் என்ன செய்ய… சந்தியா கூட தன் தந்தையிடம் பேசிப் பார்த்தாள்…. யாருடைய ஆறுதலும் அவரை தேற்றவில்லை…

ஆனால்… மிருணாளினியிடம் மட்டும் பேசினார்… தன் மகளை அவள் மூலம் திரும்பப் பார்க்கலாம் என்று நினைத்து விட்டார் போல…. மிருணாளினி மட்டுமே அவரின் பிடிப்பாக இருக்க… மற்றவர்களிடம் அவர் பேசவே விரும்பவில்லை…

சந்தியாவும் கணேசனுக்காக பாவப்பட்டாளே தவிர… அவரின் பாசத்துக்காகப் போராடாவில்லை… தந்தை பாசம் என்பது இயல்பாகவே வர வேண்டியது… தனக்கு கொடுக்கக் கூடாது என்று வேண்டுமென்றே பிடிவாதமாக இருப்பவரிடம்… அதற்காக போராடுவது கேவலமாக இருக்க… விட்டு விட்டாள்…

எப்போதும் போலவே கணேசனின் மகள் கடமைக்கான உரிமையாக மட்டுமே இருக்க... அப்படியே தொடரவும் விரும்பினாள்… அவரும் வழக்கம் போல தன் தந்தைக்கான கடமைகளை ஆற்றப் போகின்றார்…

இனி இதில் தான் மெனக்கெட எதுவும் இல்லை… அதிலும் அந்த வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்கு வந்து விட்ட பின்னர்… பெரிதாக இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று அவளுக்கு தோன்றியதால்… தந்தைப் பாசத்தை நினைத்து பெரிதாக வருத்தப்படப் என்ன இருக்கின்றது… துக்கப்பட இருக்கின்றது..

தனக்கே தனக்காக ஒருவன் தாயுமானவனாகவும்… தந்தையுமானவாகவும் அவள் வாழ்க்கையில் வந்து விட்டிருக்க… இனி எதற்காக வருத்தப்பட… துக்கப்பட… உனக்காக நான் இருக்கின்றேன் ஓவ்வொரு நொடியும்… நிமிடமும் என தனக்காக துடிக்கின்ற உயிர் இருக்கும் போது.. கிடைக்காத பாசத்துக்காக ஏங்கித் தவிக்க சந்தியா முட்டாள் அல்ல… தன் வாழ்க்கையை தனக்கான பாதையில் சந்தோஷமாக மாற்றிக் கொண்டாள்…

அப்போதும் தாய் அதீனா இறந்த வேதனை தாங்காமல் மனம் வருந்தினாள்… அவளைத் தான் மட்டுமே தேற்ற முடியும் என்று தேற்றியும் இருந்தாள்…

ஆம் சந்தியா… தன் தாய் வசந்தியை அவள் வெறுக்கவில்லை… வெறுக்கவும் மாட்டாள்… எதற்காக தன் தாயைத் தான் வெறுக்க வேண்டும்… உலகம் ஆயிரம் சொன்னாலும்… ஏன் தன் தாயே தன்னிடம் வந்து கெட்டவள் என்று சொல்லிக் கொண்டாலும்… தன் தாயின் நிலைமை அவள் முற்றிலும் உணர்ந்து கொண்டவள்… அவள் மட்டுமே

அன்னை செய்த ஒரே தவறு… கணேசனை விடாமல் தன்னோடு அந்த வாழ்க்கையை இருத்திக் கொண்டதே தவிர… சிந்தியா என்ற பெண்ணிற்கு நடந்த எந்த அநியாயத்திற்கு தன் தாய் எப்படி பொறுப்பாவாள்

ஒரு பெண்ணாக வசந்தி அதைத்தான் செய்திருக்க முடியும்… திடிரென்று ஒருத்தி வந்து இது உன் கணவனின் மகள்… இவளை உன் பெண்ணாக வைத்துக் கொள் என்று கெஞ்சினாள் எந்த மனைவி சம்மதிப்பாள்…

முழுக்க முழுக்க கணேசன் என்ற ஒரு முதுகெலும்பில்லாத ஆண் செய்த தவறால் ஏற்பட்ட பிழை என்பதை சந்தியா உணர்ந்து கொண்ட பிறகு தன் தாயை எப்படி குறை சொல்வாள்…

யார் என்ன சொன்னாலும்… தான் வசந்தியின் மகள்.. தன் தாய்க்கு தான் மட்டுமே… தாயின் நினைவு வந்த போதே.. அவளை கட்டிக் கொள்ளவேண்டும் போல் இருந்தது…

கணவன் இருந்த நிலைமையில் தாயை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை… இப்போது கணவன் தான் சரி ஆகி விட்டானே… தாயை நினைத்த அடுத்த வினாடி… சமையலறையில் தாயிடம் போய் ஒன்றினாள் சந்தியா

“வசந்தி… ஐ மிஸ் யூ சோ மச்” என்று செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க… எதார்த்தமாக வந்த காதம்பரியின் கணவன் முரளியின் கண்களில் அது பட்டு விட்ட

மொத்த இளைஞர் பட்டாளத்திடம் வந்து வத்தி வைத்து விட்டான்… ராகவ்வுக்கு தெரியும் இது திருந்தாத கேஸ் என்று… முரளி சொன்ன போது சாதரணமாகக் கேட்டுக் கொண்டிருக்க…

ஆனால் அடுத்து முரளி கேட்ட கேள்வியோ… ”அசிங்கப்பட்டான் குமாரு” என்றாகிப் போயிருந்தது ராகவ்வுக்கு

“ராகவ் உன் ட்ரெயினிங் சரி இல்லை போல…. என் மச்சினிச்சி இன்னும் அம்மா அம்மானு எங்க அத்தை பின்னாடி சுத்திட்டு இருக்கு” என்று ஒரே போடாக போட…

பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான் ராகவ் இப்போது…

’நீ மட்டும் போது… உன் குரல் மட்டும் போது…. உன் கையணைப்பு மட்டும் போதும்’ என்று என்னமாக உருகினாள்…

தனக்குள் நொந்து கொண்டிருக்க… சந்தியா மட்டும் அங்கு நின்றிருந்தாள் பஸ்பமாகி இருப்பாள் அவன் அக்கினிப் பார்வையில்…

சுகுமார் தான் வேகமாக வக்காலத்து வாங்கினார் தன் மருமகளுக்காக… ”எங்க சந்தியா இனி எங்க வீட்டுக்கு வந்த பின்னால அவங்க அம்மா கூட கொஞ்ச முடியாதுதானே… ” என்று சொல்லி சமாளித்துக் கொண்டிருக்க…

இவர்களின் உரையாடல்களின் நாயகியோ… தன் தாயோடு சரியாக வந்து சேர… இருவரும் அந்த பெரிய குழுவில் சங்கமிக்க…

”என்னோட ப்ளேஸ்” என்று வழக்கம் போல் அடித்துப் பிடித்து திவாகரின் அருகில் போய் அமர்ந்து விட்டவள்.. அதன் பின்னர்தான் கணவன் ஞாபகம் வர… நிமிர்ந்து பார்க்க… அங்கு புன்னகையா இருக்கும்… எள்ளைப் போட்டால் வெடித்துவிடும் அளவிற்கு இருக்க… நாக்கைக் கடித்துக் கொண்டவள்… இருந்தும் சமாளித்தாள்

“ரகு… அங்க ப்ளேஸ் கம்ஃபர்ட்டபிளா இருக்கா… யாரும் இடிக்காம பார்த்துக்கோ…” என்று கணவன் நன்றாக அமர வேண்டும் என்பதற்காகவே இங்கு அமர்ந்தது போல காட்டிக் கொண்டவள்

”முரளி மாமா… தள்ளி உட்காருங்க… அது என் வீட்டுக்காரர்… காதம்பரி இல்லை” என்று ராகவ்வின் அருகில் இருந்த முரளியையும் சந்தர்ப்பம் கிடைத்த போது சரியாக பயன்படுத்தி ஓட்டி தன் மனக்குறையைத் தீர்த்துக் கொண்டாள …

ராகவ் இன்னும் கட்டு பிரிக்காமல்தான் இருந்தான்… அது மட்டுமின்றி… இத்தனை பெரிய கூட்டத்திற்கு தனியாக அறை எல்லாம் அந்த வீட்டில் இல்லை… ராகவ் குடும்பத்திற்கு ஒரு அறை… சந்தோஷ் குடும்பத்திற்கு ஒரு அறை என மொத்தமாகத்தான் தங்கி இருந்தனர்…

கும்பல் கும்பலாகத்தான் நாட்களை ஓட்டினர்… அப்போதும் கணேசன் இவர்களிடம் ஒட்டாமல் தான் இருந்தார்… ஆனால் மணிகண்டன், சுகுமார் இருக்க..ஓரளவு அவர்களோடு சேர்ந்து பேசியபடி இருந்தார்.. மற்ற நேரங்களில் மகளைப் பற்றிய நினைவுகளில் வேதனையோடுதான் கழித்துக் கொண்டிருந்தார். அவரின் உலகத்தை யாரும் கலைக்க நினைக்கவில்லை… பெரிய இழப்புதான் அந்த குடும்பத்துக்கு… ஆனால் அந்த மகளை இந்த குடும்பத்துக்குள் திணிக்க முடியவில்லை… வசந்திக்கு மட்டுமே கவலை இருந்தது… அதுவும் இரண்டு வாரங்கள் ஓடி இருக்க… தன் நிலையில் இருந்து மீண்டு வந்து விட்டார்… சந்தோஷுக்கு பெரிய வருத்தம் எல்லாம் இல்லை… அச்சோ பாவம் என்ற பரிதாபம் மட்டுமே… அதிலும் அவள் செய்த தவறுகளுக்கு அவளே தண்டனை கொடுத்துக் கொண்டாள் என்று விட்டு விட்டான்

இதில் எங்கு சந்தியாவும் ராகவ்வும் தனியே இருப்பது…

ராகவ் இப்போது… “நீ என்கிட்ட தனியா மாட்டுவதானே… அப்போ இருக்கு உனக்கு” என்று கண்களாலேயே தன் முறைப்பைக் காட்ட…

அவன் மனைவியின் மீதான கண்டிப்பின் இலட்சணம் இந்த உலகமே அறிந்திருக்க.. அவன் சகிக்கு தெரியாதா அவள் கணவனை எப்படி சரிகட்டுவது என்று… இவளின் ஒரே ஒரு வார்த்தை… “ரகு” என்று அவள் காதலோடு சொல்லும் அந்த ஒரு பாவனையிலேயே தன்னவனை அடியோடு வீழ்த்தி விடமாட்டாளா…

கணவனின் முறைப்பை எல்லாம் அந்தப் பக்கம் போட்டவளாக… திவாகர்.. காதம்பரி… கூட்டணியோடு தன் அரட்டைக் கச்சேரியை ஆரம்பிக்க.. முரளி ராகவ்விடம் திரும்பி…

“இப்டித்தான் ராகவ்… இந்த சதிகார கும்பல் என்னை மட்டும் கழட்டி விட்ரும் …. இப்போவாது நீங்க எனக்கு இருக்கீங்க… நான் உங்களுக்கு துணைக்கு இருக்கேன்னு ஒரு சப்போர்ட் கிடைச்சிருக்கு… ” என்று பெருமூச்சு விட…

உண்மையிலேயே ராகவ் இப்போதுதான் கலவரம் ஆனவனாக…

“ப்ரோ… எக்ஸ்பீரியன்ஸ் ஹெவியா இருக்கும் போல… இப்பவே எனக்கு கொஞ்சம் அல்லு விடுதே” என்று பயந்தவனாகச் சொல்ல..

”பின்ன… என்னதான் பேசுங்கன்னு தெரியாது ரகு… இதுங்க ஒண்ணா சேர்ந்தால் போதும் என் பக்கமே வரவே மாட்டா என் பொண்டாட்டி.. சந்தியாவுக்கு மேரேஜ் ஆகிருச்சே… இனியாவது குறையும்னு பார்த்தால்… உங்க கூட உட்கார வச்சுட்டா என் ராட்சசி கொழுந்தியா” என்று நம்பியார் பாவனையில் சொல்லி முடிக்க.. ராகவ் முரளியின் பாவனையில் சத்தமாக சிரித்து விட…

இப்போது சந்தியா-காதம்பரி- திவாகர் கூட்டணி திரும்பிப் பார்க்க…

“முரளிண்ணா.. விடுங்க… நாம என்ஜாய் பண்ணலாம்… நம்ம கூட்டணில மோகனாக்காவையும் சேர்த்துக்கலாம்” என்று சத்தமாகச் சொல்ல…

”அப்படியா” என்று வியப்பும்… கேலியும்… நீ செய்து விடுவாயா என்ற அலட்சியமும் தோன்றும் படி புருவம் உயர்த்தி சந்தியா தன் கணவனைப் பார்க்க… அவனும் அதற்கு சற்றும் குறையாத சளைக்காத பார்வையை அவளை நோக்கி வீச…

’நான் உன்னை வீழ்த்துவேன்’ என்று போட்டியாக ஆரம்பித்த அந்த பார்வை எப்போது ஒருவரை ஒருவர் ஈர்க்கும் காந்தப் பார்வையாக மாறியது என்று அவர்களுக்கே தெரியவில்லை… அந்தப் பார்வையை மாற்றாமல் அமர்ந்திருந்ததும் அவர்களுக்கு உறைக்கவில்லை…

“ஹ்ம்க்கும்… ஹ்ம்ம்… ஹலோ… ஹேய் என்ன நடக்குது இங்க” என்ற குரல்கள் ஏதேதோ கேட்கத்தான் செய்தது… அதை எல்லாம் அவர்கள் கண்டு கொண்டால் தானே…

ஆனால் அடுத்தடுத்து அங்கு கேட்ட பல செறுமல்களுக்குப் பின்னரும் தங்கள் உலகத்தில் இருக்க…

காதம்பரிதான்… வேகமாக சந்தியாவைக் அவள் கையில் கிள்ளி வைக்க…

“ஆ… அவுச்ச்” என்று தன் நிலைக்கு வந்து முகத்தைச் சுருக்க.. ராகவ் இப்போது தன் நிலை மீண்டவன்… மனைவியின் முகச் சுருக்கத்தில்… காதம்பரியை முறைக்க நினைத்தாலும்…. அதைச் செய்யாமல் முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ள… அதைப் பார்த்து அங்கு சிரிப்பலைதான் வந்திருந்தது…

அடுத்து சில நிமிடங்களில் காதம்பரி-முரளியின் தவப்புதல்வனுக்கு பெயர் சூட்டும் விழா முடிந்திருக்க… காதம்பரி முரளிக்கு மிகப்பெரிய சந்தோஷம்… தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இத்தனைப் பேர் முன்னிலையில் இந்த வைபம் நடக்கும் என்றே எதிர்பார்க்கவில்லை காதம்பரி… இவளது திருமணம்.. வளைக்காப்பு என எல்லா நிகழ்ச்சிகளும் இவர்களின் பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்று முடிந்திருக்க… இருவரின் முகத்திலும் அப்படி ஒரு மட்டற்ற ஆனந்தம் …

அது மட்டுமல்லாமல் காதம்பரி… இன்று குழந்தையோடு கணவன் வீட்டிற்கு செல்லும் தினமும்… முரளி… இத்தனை நாள் மனைவியை மாமியார் வீட்டில் விட்டு வைத்திருந்ததே அதிகம்… எப்படியோ பேசி இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்து இதோ இன்று தன்னோடு அழைத்துச் செல்லவும் போகிறான்…

கணவனோடு செல்லப் போகிறோம் என்ற உற்சாகத்தில் வளைய வந்து கொண்டிருந்த காதம்பரியை… அப்படியேத் தனியாகக் கடத்தி இருந்தாள்… சந்தியா

வந்தவள்… சில நிமிடங்கள் பேசாமலேயே யோசித்துக் கொண்டே இருக்க…

காதம்பரி யோசனையாய் அவளைப் பார்க்க…

”காது…” என்று டன் டன்னாக வழிந்தாள் சந்தியா…

“என்னாச்சு… ஏன் இவ்வளவு வழியற… நீ இப்படி கொஞ்சல்ஸ ஆரம்பிச்சாலே… எனக்கு ஏதோ ஆப்பு வச்சுருப்பியே… சொல்லித் தொலை… ஆனா அதுக்கு முன்னால… இந்த கேவலமான முகத்தை மாத்து” என்று காதம்பரி முடிக்க…

சந்தியா தன் திட்டத்தைச் சொல்ல… அவள் சொன்ன எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவள்…

“சோ இங்க இருந்து நான் போகும் போது என் கூட இந்த மொத்த கும்பலையும் கூட்டிட்டு போகனும்… நாளைக்கு வரை எங்க வீட்ல அரெஸ்ட்டும் பண்ணி வச்சுருக்கனும்…”

“ஹ்ம்ம்” அப்பாவியாக சோகமாக முகத்தை வைத்துக் கொள்ள

“பண்ணலாம்… என் ஆளு என்ன சொல்வார்னே தெரியலையே… அது மட்டுமில்லாமல் உன்னையும்-ரகுவையும் அங்க கூப்பிடனும் தானே“ என்று யோசிக்க ஆரம்பிக்க…

“ஹலோ… என்ன உன் ஆளு சொல்வாரு…. அதான் பிள்ளையெல்லாம் பொறந்துருச்சுல்ல… அப்புறம் இன்னும் என்ன கொஞ்சல்ஸ் வேண்டிக்கிடக்கு… பொறுப்பா குழந்தைக்கு அப்பா அம்மாவா மாறி… உங்க கொஞ்சல்ஸை ஜூனியருக்கு காட்டுங்க... ஆண்ட்டி அங்கிள்ஸ்குள்ளாம் இன்னும் என்ன ரொமான்ஸ் சீன் கேட்குது” என்ற போதே காதம்பரியை முறைக்க ஆரம்பிக்க…

“முறைக்காத… உண்மைதானே… சரி அதை விடு… ரகு இருக்கிற நிலைமைல அங்கெல்லாம் வரமுடியாதுன்னு நான் சமாளிச்சுக்குவேன்… நீ நான் சொன்னதை மட்டும் செய்” என்ற போதே

”ஆனால் அதெல்லாம் சரி... உன் ஆளே கை ஃபராக்சர்ல கட்டுப் போட்டுட்டு இருக்காரே… உன் வேகத்துக்கெல்லாம் என் கொழுந்தனார் தாங்குவாரா தங்கையே” என்ற போதே…

“அது எங்க பாடு… நாங்க பார்த்துக்கிறோம்… வந்ததுலருந்து நர்ஸ் வேலைதான் பார்க்கிறேன் ரகுவுக்கு…. நர்ஸ் கூட பேஷண்ட்ட பார்க்கும் போது எல்லாரையும் வெளிய அனுப்புவாங்க…இங்க அது கூட முடியலை” என்று சலிப்பாகச் சொல்ல… காதம்பரி… அவளை நக்கலாகப் பார்க்க

”சரி… சரி… நான் சொன்ன வேலையைக் கவனி… கிளம்பு கிளம்பு…” என்று காதம்பரியை அழைத்துக் கொண்டு போனாள்…

சந்தியா ஆரம்பித்த திருவிளையாடல் வெற்றி பெறாமல் இருக்குமோ… ஒரு வழியாக… மொத்த குடும்பமும்… 6 மணி அளவில்.. அங்கிருந்து கிளம்பி விட… இருவருமாக வாசல் வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்தவர்கள்… மீண்டும் உள்ளே நுழையும் போதே… வேகமாக சந்தியா தன்னவனை இறுகக் கட்டிக் கொள்ள… அவளின் வேகத்தினாலோ… இல்லை சற்றும் எதிர்பாராத அவளது அணைப்பினாலா தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் ராகவ் தடுமாறி நிற்க..

“சகி… சந்தியா…” என்று இவன் என்ன அழைத்தாலும் கேட்காமல் இன்னும் இன்னும் இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொள்ள…

அவளுக்கு இந்த அணைப்பு… இதைவிட தன்னவனின் வலிய கரங்களின் அணைப்பு தேவைப்பட்டது… ஆனால் அது இப்போது முடியாதல்லவா… தனக்குள் பட்ட வேதனைகளை… தான் சிறையில் அனுபவித்த வேதனைகளை சொல்ல நினைக்கவில்லைதான்… ஆனால் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்ததே… இத்தனை நாள் இந்த தனிமை கிடைக்காமல் போக… இன்று தானே ஏற்படுத்திக் கொண்டு… தன்னவனைக் கட்டிக் கொண்டவள் அவன் மார்பில்… தன் முகத்தைப் பதித்துக் கொண்டவள்… தன்னவனிடம் சரணடைந்த அதே வேகத்தில் அழவும் ஆரம்பித்திருந்தாள்…. வெளியில் நிற்கின்றோம் என்றெல்லாம் அவள் நினைக்கவே இல்லை….

3,078 views2 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

2 Comments


Tee Kay
Tee Kay
Jul 24, 2020

Nice update with lots of happiness.

Like

Saru S
Saru S
Jul 23, 2020

Superb dear pravee

Like
© 2020 by PraveenaNovels
bottom of page