அத்தியாயம் 60:
அதீனா வழக்கு விசாரணை நாள்… அதிகாலை..
அந்த சிறைச்சாலையில் அதீனா இருந்த பகுதி பரபரப்பாக இருந்தது… கரண்… அம்ரீத்… சிவா.. நிரஞ்சனா… இன்னும் சில காவல் துறை அதிகாரிகள்…
நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு… சிவா அம்ரீத் இருவர் மட்டும் சந்தியா அதீனா இருந்த இடத்திற்கு வர…
நடந்து வரும் போதே... அம்ரீத் , சிவாவிடம்…
“சந்தியாவை நிரஞ்சனா கூட அனுப்பிட்டு… நீங்க அதீனா கூட கோர்ட்டுக்கு வரப் போறீங்களா சிவா” சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில்… எதிர்பார்க்காத கேள்வி அம்ரீத்திடமிருந்து…
அதிர்ந்து சிவா அவரைப் பார்க்க…
“சார்” என்ற சிவாவின் குரல் வெளியே வரவே இல்லை…
அதே நேரம் அம்ரீத்துக்கு தெரிந்து விட்டால் என்ன… அதீனாவைத்தான் கோர்ட்டுக்கு அழைத்து செல்வேன் என்று தனக்குள் முடிவு செய்து அவரை இப்போது தைரியமாகப் பார்க்க…
அம்ரீத் சிரித்தபடி…
“எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்கு… ஒரு அப்பாவி பொண்ணுக்கு துரோகம் செய்தால் அது என் பொண்ணுங்களை எவ்வளவு பாதிக்கும்… காவல் துறை அதிகாரியா நான் மனசாட்சியை கழட்டி வச்சாலும்… ஒரு தந்தையா அதை கழட்டி வைக்க முடியலை”
”நீ அதினாவை வெளிய கூட்டிட்டு வரணும்னு சொன்னபோதே சந்தேகம்… நிரஞ்சனாவை பேசி சமாளிக்கச் சென்றது என…. நான் கனெக்ட் பண்ணிட்டேன்… எனிவே…. இனிமேல் நடப்பதை பார்ப்போம்… இந்த இரண்டு வருட வேலை எல்லாம் வேஸ்ட்… சந்தியாதான் பாவம்… எந்த ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினாளோ… இந்த ஒரு வாரத்தில் அத்தனை கஷ்டம்” என்ற போதே
சிவாவுக்கு வார்த்தைகள் வராமல்… கண்களில் நன்றியோடு பார்க்க…
“இப்போதைக்கு யார்கிட்டயும் எதுவும் பேச வேண்டாம்… நிரஞ்சனா கிட்ட மட்டும் சந்தியா அவ கூட வருகிறாள்னு மெசேஜ் பண்ணுங்க…” என்ற போதே
சிவா அவரிடம்
“அல்ரெடி சொல்லிட்டேன் சார்” என்க…
“ஒகே… சந்தியா நிரஞ்சனா ஒரு ஜீப்… கரணும் நானும் தனியே சேர்ந்து வருகிறோம்… நீங்க அதீனா கூட வந்து சேருங்க… நிரஞ்சனா கிட்ட எல்லாம் சொல்லிட்டீங்களா…” என்று சிவா அம்ரீத் இருவரும்… பேசியபடியே சந்தியா இருந்த சிறை அறையின் முன் வந்து நின்றனர்
சிவாவுக்கு சந்தேகம் வராதது போல… அதீனாவும் தமிழில் பேச… ரகுவைப் பற்றி கேட்க… அது மட்டுமின்றி… கொஞ்சம் அடங்கிய குரலில்… நேற்றைய மயக்கம் இன்னும் தொடர்வது போல பேச… சிவாவுக்கு பெரிதாக சந்தேகம் வரவில்லை...
சந்தியாவை, அதாவது சந்தியாவாக மாறி இருந்த அதீனாவை அம்ரீத்திடம் ஒப்படைத்தான் சிவா…
அதீனா சிறை அறையில் சந்தியா நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தாள்… சிவாவுக்கு அது அதீனா என்று தெரிந்தால் என்ன நினைப்பானோ என்றிருக்க… கலக்கம் வந்திருந்தது மனதில்... ஆனால் அதையும் மீறி... வெகுநாட்களுக்குப் பிறகு இதோ இன்னும் சில மணித்துளிகளில் ராகவ்வை சந்திக்கப் போகிறோம் என்ற நினைவு.. அந்த கலக்கத்தை எல்லாம் பின் தள்ள... அவனைப் பார்த்த பின் ... தான் என்ன செய்வோம்... அவன் தன்னைப் பார்த்த பின்... அவன் என்ன சொல்வான்... என்று நினைத்துப் பார்க்க... எதுவுமே தோன்றவில்லை... அதிகப்படியான மகிழ்ச்சியில்... முடிவில்..
உள்ளங்கையில் வைத்திருந்த தன் மாங்கல்யத்தைப் பார்த்து... அதையே அவளது கணவனாக உருவகித்து... அவனோடு பேசுவது போல
“ரகு மாம்ஸ்... டிர்ப்பிள் ஆர்... உன்னைப் பார்க்க வந்துட்டே இருக்கேன்” சொன்னவள்... தன் உள்ளங்கைக்குள் வைத்து அதை இறுக மூடிக் கொண்டாள்...
சந்தியா இப்படி இருக்க
அங்கு நிரஞ்சனாவோ… தன் முகத்தில் இருந்த மலர்ச்சியை யாருக்கும் தெரியாமல் காட்டிக் கொள்ளவே பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள்… தன்னோடு சந்தியாவைக் கூட்டிக் கொண்டு கோர்ட்டுக்கு போகாமல் தன் வீட்டுக்கு போகப் போகின்றோம் என்பதை…. நம்பவே முடியவில்லை அவளால்… அவள் அடைந்த மகிழ்ச்சியின் அளவு எல்லையின்றி இருந்தது… தோழியிடம் காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்டு அவள் அன்பை மீண்டும் பெற வேண்டும் என்று அதைப் பற்றி இப்போதிருந்தே எண்ண ஆரம்பித்து இருந்தாள் என்றே சொல்ல வேண்டும்…
சிவாவின் திட்டப்படி… சில கிலோ மீட்டர்கள் கடந்த பின்…. இவர்களது வாகனம் தனியாக வேறு பாதையில் பிரிந்து செல்ல வேண்டும் என்றும்… அதோடு சந்தியாவை நிரஞ்சனா வீட்டுக்கு கூட்டிச் செல்லும்படியும்… ராகவ்வை அங்கு வரச் சொல்லி அவனுக்கு செய்தி அனுப்பவும் சொல்லி இருந்தான்… இவளுக்கு அனுப்பிய தகவலில்…
ஒரு வழியாக நிரஞ்சனா, அதீனா, அம்ரீத், கரண் என ஒரு குழு முன்னே சென்றிருக்க… அதே நேரம் ராகவ் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்த கட்டிடத்தில் இருந்தான் தன் நண்பன் வெங்கட்டோடு..
இங்கு சிவாவோ சந்தியாவை அழைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் நீதிமன்ற வளாகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்… தன்னுடன் இருப்பது அதீனாதான் என்று எண்ணத்தில்…
---
காவல் துறை வாகனங்கள் நீதிமன்ற வளாகத்தை நோக்கி சென்று கொண்டிருக்க
திடீரென நிரஞ்சனாவின் கார்… அனைவரின் பார்வையில் இருந்து மறைய…. அதைக் கண்டு கொண்ட கரண் அம்ரீத்திடம் பதறி விசாரிக்க… சிவாவின் திட்டம் என்றும் நீதிமன்றத்தில் சிவாவோடு வந்து சேர்வாள் என்றும் சொல்ல… கரணும் சமாதானமடைந்தவராக அதற்கு மேல் கேள்வி கேட்கவில்லை
அதே போல்… இவர்கள் வந்து சேர்ந்த சில நிமிடங்களிலேயே சிவா… அதீனாவோடு வர… சிவாவோடு வந்திறங்கியவளைப் பார்த்து… விசமப்புன்னகை வந்திருந்தது கரணின் உதடுகளில்…
“இன்னும் சில நிமிடங்களில்… இவள் குண்டடிபட்டு சாகப்போகின்றாள்” என்ற எண்ணத்தில் வந்த புன்னகை அது..
அவர் பார்வையோ எங்கோ இருந்த கட்டிடத்தை நோக்கியது…
ஜெயவேலின் ஆள்தான் தான் தீவிரவாதியாக அங்கு உருமாறி இருக்க.. அவன் அதீனாவின் உயிரைப் பறிக்க… குறி வைத்துக் கொண்டிருந்ததை கரண் தெரிந்திருந்ததால் கரணின் பார்வை அங்கு செல்ல… அங்கு அவருக்குத் தெரியாத சந்தியாவின் கணவனான ராகவ்வும் இருக்கின்றான் என்பதை கரண் அறிய முடியுமோ???
---
சிவா… அதீனாவை கீழே இறங்கச் சொன்னபோதே…
“எனக்கு மனசாட்சி இருக்குனு காட்டிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது நான் நிருபிச்சுட்டேன்… உனக்கு இருக்கான்னு தெரியலை… உன்னோட ரிஷி மூலம் தமிழ்நாடு… அங்க இருக்கிற கணேசன்னு தெரிஞ்சு அதுல நான் தப்பு பண்ணிட்டேன்…” என்று சிவா ஆரம்பித்த போதே….
“அதே தான் நான் இங்க நிற்கிறதுக்கும் காரணம் சிவா சார்… எவ்வளவுதான் தடுத்தாலும்… மாற்றினாலும்… நான் இங்க வந்து நிற்க வேண்டும்கிறதுதான் விதி.. சிவா சார்… என் குடும்பம் பண்ணிய பாவத்திற்கு எனக்கு தண்டனை ஓகே… ஆனா ரகு என்ன பாவம் பண்ணினார்” என்ற சந்தியாவின் குரல் சிவாவை அடைய
சந்தியாவின் வெறுமையான கண்கள்… சிவாவை சந்தித்தன
அதில் ஜீவனே இல்லை… எந்த நிமிடம் அவள் கோர்ட்க்குத்தான் தான் கூட்டிவரப்பட்டிருக்கின்றோம் என்று உணர்ந்தாளோ… அப்போதே தெரிந்து விட்டது… நடப்பது எதுவும் இங்கு யார் கையிலும் இல்லை… இதுபோல தனக்கு இன்று நேற்றா நடக்கின்றது… இனி எதையுமே மாற்ற முடியாது என்பதை அவள் உணர்ந்த போது வாழ்க்கையின் கடைசி முனையில் நிற்பது போல உணர்வு… அவள் மனதில் முற்றிலும் வெறுமையே சூழ்ந்திருந்தது
“சந்தியா…” என்று சிவா அதிர்ந்த பார்வை பார்க்க…
வேறு ஒன்றுமே அவள் கேட்க வில்லை…
“என்னை… மேரேஜ் அப்போதே கடத்த ட்ரை பண்ணுனீங்கதானே சிவா சார்… அப்போ ஏன் சொதப்புனீங்க… ரகு வாழ்க்கைல நான் வராமலே போயிருப்பேனே…” என்றவளின் வார்த்தைகளில் சுத்தமாக வாழ்க்கை மீதான நம்பிக்கை இல்லை… அவள் கண்கள் சிறிது கூட கலங்க வில்லை… அதே நேரம் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு சிவா சந்தியா வந்த காரின் பட்டு சிதறி விழ… அத்தனை பேரும் அதிர்ந்து பார்த்திருக்க…
சந்தியா கண்களை மூடிக் கொண்டாள்… மூடிய கண்களுக்குள் அவன் கணவனே வந்து நிற்க… கணவனுக்கு மட்டுமே அனுமதி என கண்களில் கண்ணீருக்கு கூட அனுமதி அளிக்க மறுத்திருந்தாள் சந்தியா…
“வார்த்தை தவறிட்டேன் ரகு… உன் நம்பிக்கையை நான் காப்பற்றவில்லை… என்னை மன்னித்துக் கொள்” என்ற அவளுக்குள் பொங்கி வெடித்த போதே தலை எதிலோ மோதியது போல உணர்வு வர… மூடிய கண்களுக்குள் கணவன் முகம் மறைந்து இருள் சூழத் தொடங்கி இருக்க... அவள் உள்ளங்கையில் மூடி இறுகப்பிடித்திருந்த அவளது மாங்கல்யமும் அவளிடமிருந்து நழுவி கீழே விழுந்திருந்தது
/*சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா
கங்கையைத் தேடி காவிரி நடந்து கலக்க வருகின்றதோ
காதலின் நதிகள் கலக்கத் துடித்தால் மேடு தடுக்கின்றதோ
நதிகள் இரண்டும் தாகமெடுத்து
நதிகள் இரண்டும் தாகமெடுத்து.. குடிக்கத் துடிக்கின்றதோ
காதல் இன்றி வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை*/
Sema, sema, story avlo Alaska kondu poreenka, and maths pitha seyvathu makkaluku entru solvathu pol avarkal vaalvin ovvoru seyalum, santhiya, sinthiya santhos entru pillaikalai vaaduvathudan avarkalai kaddiyavarkalaiyum vaadduthu. Super aa kathapathurankalaiyum avarkaloda unrvukalaiyum kaaddureenka. Unmaiyil santhiya romba paavam, and kathaiyai viddu nakarave mudiyala. Super .
romba kastama irukku. ipadi santhiyava matti vittuteengale sis
மனிதர்களின் முயற்சியை மீறின கடவுளின் செயல். கடந்த few episodes படிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது.
விதியாடும் சதியில் யார் என்ன பண்ண முடியும், அதீன, சிவா, நிரஞ்சனா, இப்ப அமித் அனைவரும் சந்தியா உயிரை காப்பாற்ற நினைத்தனர் ஆனால் இங்கு விதி அதீனவிற்கு பதில் சந்தியாவை கொண்டு நிறுத்தியிருக்கிறது என்ன செய்ய 🤔🤔🤔🤔என்று முடிவு எடுக்க முடியாத நிலையில் சிவா சந்தியா பேசியதை கேட்டு அதிர அவள் கண்ணில் உயிர்ப்புயில்லை தன் ரகுவை நினைத்து 😪😪😪😪
Very sad