அத்தியாயம் 49-1:
/* கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது */
வசந்தி சொல்லி முடித்தவற்றை எல்லாம் கேட்டபடி அமைதியாக தனக்குள் அசைபோட்டபடி இருந்த மிருணாவைப் பார்த்தார் வசந்தி…
”நான் அமைதி, கணவனுக்கு கீழ அடங்கி அடிமை வாழ்க்கை வாழ்கிற ஒண்ணுமே தெரியாத அப்பாவி… இதுதான் இப்போ நீங்க பார்க்கிற வசந்தி… அது கிடையாது நான்…
பிடிக்காத மேரேஜ்… என்னை விட எல்லா விதத்திலும் குறைந்த கணவன்… எனக்கு அவரைப் பிடிக்கலை… மேரேஜை நிறுத்துங்கன்னு கெஞ்சிப் பார்த்தேன்… அவர் நிறுத்தலை… மேரேஜும் நடந்துச்சு… ஆனால் அவரை மதிக்கவேயில்லை… எல்லா விதத்திலும் அவரை ஒதுக்கினேன்… அதை மீறி அந்த பிடிக்காத வாழ்க்கையிலும் குழந்தை…. இது எல்லாத்துக்கும் மேல இவரோட இன்னொரு வாழ்க்கை… அதிலும் எனக்கு முன்னமே அவர் வாழ்க்கையில் இன்னொரு பெண்… அதில் குழந்தை… அந்த வாழ்க்கையை இடையூறு இல்லாமல் அனுபவிக்க என்னோட ஒதுக்கம் அவருக்கும் இன்னும் ஒரு வசதியாக போக, அது தெரிந்த போது.. அதில் இன்னும் ஆக்ரோசம்… அதுனால என் அண்ணா மூலமா அந்த பொண்ணை மிரட்டி… இந்த ஊரை விட்டே அனுப்பினேன்… வசந்தி இப்போ பார்க்கிற வசந்தி கிடையாது மிருணா..
ஆனால் தற்கொலை வரை போய்… என் பொண்ணு அதைப் பார்த்து… டிப்ரஷன்ல போனப்போதான்… என்னோட ஆட்டமெல்லாம் நின்னுச்சு.. எனக்காக ஒரு ஜீவன் இந்த உலகத்தில் உண்மையான பாசம் காட்டியதுன்னா… அது என் சந்தியாதான்… என் பொண்ணோட பாசத்துக்கு அடிமையாகி... அவளுக்கு நான் குழந்தையா மாறினப்போ… என் வாழ்க்கைக்கு வேறொரு அர்த்தம் கிடைத்தது… கணவனோட அன்பு கிடைக்கலை… ஆனால் என் வாழ்க்கைக்கு என்னோட பிடித்தமா என் பசங்க ஆனாங்க… அந்த வாழ்க்கைக்கு அப்படியே பழக்கிக் கொண்டேன் நான்… என் பசங்களும் என்னை எல்லா விதத்திலும் என்னைத் தாங்க ஆரம்பித்தனர்… அதிலும் சந்தியா… எந்த ஒரு விசயத்திலும் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்க… அவளுக்காக ஒரு கட்டத்தில் நான் வாழவும் பழகிக் கொண்டேன்… கிட்டத்தட்ட என் சந்தோஷத்துக்காக என் குழந்தைகளை என்னோடு இருக்கும்படி வைத்துக் கொண்டேன்… அவர்களுக்காக நான்… எனக்காக அவர்கள்… என்ற வாழ்க்கை…
ஆனால் என்னோட குழந்தைகள் தான் அவரோட வாரிசா இருக்கனும்னு இந்த உலகம் நினைக்கனும்னு நான் எடுத்த முடிவு தான்… என்னோட பிடிவாதம் தான் தவறு… உன்னை மாதிரி நான் அப்போ முடிவெடுத்திருந்தால்… என் பையன் நல்லா இருந்திருப்பானோ எனக்குத் தெரியலை… இன்னும் அந்த சின்னப் பொண்ணு கண்ணுல தெரிந்த வேதனை என் கண்ல இருக்கு மிருணா… என் வாழ்க்கை அசிங்கமாக எல்லோருக்கும் தெரிஞ்சுறக் கூடாதுனு… அந்த பச்ச மண்ணு வாழ்க்கைல மண்ணள்ளி போட்டுட்டேனோ தெரியலை… சந்தியா மாதிரிதான் அந்தப் பொண்ணும்னு ஏன் நினைக்கத் தோணலை…” என்று கண்களைத் துடைக்க…
ஆனால் சந்தியா அப்பாக்கு சந்தியாவைப் பிடிக்காது… காரணம் அவர் என்ன சொன்னாலும் எதிர்த்துதான் பேசுவா… அவர் சொன்னதுக்கு மாறாகத்தான் செய்வாள்… அதுனால என்னவோ சந்தோஷை ஏற்றுக் கொண்ட அவரால் சந்தியாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை… அவருக்கு சிந்தியான்னா அவ்வளவு பிடித்தம்… அவ அவரை விட்டுப் போனதை அவரால ஏத்துக்க முடியவில்லை… அவ அவரை விட்டு போன பின்னால… என் பொண்ணுகிட்ட இருந்து சிந்தியாவோட பாசத்தை தேடினார்தான்… ஆனால் சந்தியா அவர் பாசத்தை புரிஞ்சுக்க ட்ரை பண்ணாம அவரை ஒதுக்கத்தான் செய்தாள்… ஆக மொத்தம் என்னை மட்டுமே நம்புகிற… எனக்காகவே வாழுகிற… எனக்காக மட்டுமே கவலைப்படுகிற சந்தியா எனக்கு கிடைத்தாள்.. சந்தியாக்கு நான் அன்னையா பாசத்தைக் காட்டினேனோ என்னவோ… சந்தியா என் மேல உயிரா இருந்தா… அவளோட ஒவ்வொரு வார்த்தையிலும்… கவலையிலும்… சந்தோஷத்திலும் நான் இருந்தது… அது மட்டுமே எனக்கு இந்த வாழ்க்கையில் மிச்சம்…
என்ற வசந்தியை… மிருணாளினி.. இப்போது சந்தேகமாகப் பார்த்தாள்
’ராகவ் சந்தியா உறவை வசந்தியால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா’… என்று தோன்ற… அதைக் கேட்டும் விட
“என் பொண்ணு வாழ்க்கைலலாம் நான் குறுக்க நிற்க மாட்டேன்… என் பொண்ணு நல்லா இருக்கணும்… ” என்றவர்…
“ஒருவேளை… நான் அவங்க ரெண்டு பேருக்கு இடையில அதிகமா வருகிற மாதிரி இருந்தா… கண்டிப்பா சந்தியா கிட்ட இருந்து என்னை விலக்கிக்கத்தான் நினைப்பேன்… எனக்கு என் பொண்ணோட சந்தோஷம் மட்டுமே முக்கியம்”
என்று முடித்த போது… வசந்திக்கு அழுகை வந்து விட்டது…
“ப்ச்ச் அத்தை அழாதீங்க… “ என்றவளிடம்
“என் பையன்… அந்த மனுசன் மாதிரி இல்லை மிருணா… உனக்கு சந்தோஷை பிடிக்கலைனா கூட நான் இதைச் சொல்லி இருந்திருக்க மாட்டேன் மிருணா… உனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு… அவனும் நீ இல்லாம வாழ மாட்டான்… அவன புரிஞ்சுக்க முயற்சி பண்ணு மிருணா… ”
”நான் பண்ணின தவறைத்தான் நீ பண்ண நினைக்கிற… என்ன ரிவர்ஸா… பிடிக்காத ஒருத்தனை என் வாழ்க்கைல நீட்டிக்க விரும்பின என்னோட பிடிவாதம்.. யாருக்குமே நிம்மதி இல்லாத வாழ்க்கை தான் மிச்சமாயிற்று…”
“நீ உனக்குப் பிடித்த ஒருவனை வாழ்க்கையிலிருந்து விலக்க நினைக்கிற பிடிவாதம்…”
”ஒரு கட்டத்தில் ஓய்ந்து திரும்பிப் பார்க்கும் போது… நாம கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம்னு தோணும்… அவரோட அன்பைப் பெறனும்னு நான் நினைக்காதப்போ… அந்த பிடிக்காத வாழ்க்கையை வாழ ஏன் அவ்வளவு போராடினேன்… ஏன் சந்தியா அப்பாவோட சந்தோசத்தை கெடுத்தேன்னு இப்போ நினைக்கிறேன்… அவரை விட்டு விலகி இருக்கலாமோனு தோணுது”
”சந்தியாவுக்கு இந்த மேரேஜ்ல பெரிதா ஈடுபாடு இல்லை ஏன் உன் அண்ணாக்கு கூடத்தான் பெருசா ஈடுபாடு இல்லை… என் பொண்ணுகிட்ட ரெண்டு மூணு தடவை மிரட்டி இருக்கிறார் இந்த மேரேஜை நிறுத்தச் சொல்லி… ”
மிருணாளினிக்கு இந்த தகவல் புதிதாக இருக்க… வியப்பில் வசந்தியைப் பார்க்க
”ஆனால் திருமணத்திற்கு பின்னால… அவங்க வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிஞ்சுகிட்டாங்க… எனக்குள்ள அந்த ஆச்சரியம் இன்னும் இருக்கு… அது பெரிய ஆச்சரியம் இல்லை… புரிதல், பரஸ்பர விட்டுக் கொடுத்தல்னு சந்தியா என்கிட்ட சொன்னப்போ புரிஞ்சுக்கிட்டேன்… அவங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற… அந்த புரிதல் எனக்கு இல்லைனு நினைக்கும் போது எனக்கு என்னை நினைத்து வருத்தமா இருக்கு… ஏன் உனக்கும் இல்லைனுதான் தோணுது…
என்றவர்…
“சந்தியாவோட முகத்தில் இருக்கிற ஒவ்வொரு புன்னகைக்கும் காரணம் … ரகு மட்டுமே காரணம்… அவ முகத்தில இருக்கிற அந்த பூரிப்பு அது போதும் என்னோட வாழ்க்கைகு…” என்று மகளின் நினைவில் சிலாகித்தவர்… உடனடியாக
“பெத்த அம்மா கண்ணுதான் புள்ளைக்கு பெரிய கண்ணுனு சொல்வாங்க” என்று உடனடியாக தன் மகளுக்கு தான் வைத்த கண்ணைத் தானே திருஷ்டி கழித்தவர்…
“ப்ச்ச் அதெல்லாம் விடு மிருணா… நேசிக்காத ஜீவன் கூட நான் குடும்பம் நடத்தும் போது… உன்னையே உயிரா நினைக்கிற என் மகன் சந்தோஷ் கூட வாழ முயற்சி செய்ய நினைத்தால் என்ன மிருணா… ” என்று முடிவாகக் கேட்க
தன்னைப் பற்றிய பேச்சை தவிர்த்த மிருணாளினி
”அவங்கள தேட ட்ரை பண்ணலையா அத்தை… ” என்று தன் வாழ்க்கைப் பற்றி விட்டு விட்டு… வசந்தியின் கடந்த காலத்திற்கு போக…
“இல்லை மிருணா… சந்தியா கொஞ்சம் பெரிய பொண்ணான போதுதான்… எனக்கு அவங்க ஞாபகமே வந்தது… ஏன்னா சந்தியா வளர்ந்த பின்னால அப்படியே சிந்தியா சாயல்ல இருந்தாள்… இப்போ கூட சந்தியாவைப் பார்க்கும் போதெல்லாம்… சிந்தியாவும் இப்படித்தான் இருப்பாளா இல்லை வளர்ந்த பின்னால் வேறு மாதிரி சாயல் வந்திருக்குமோன்னு யோசிப்பேன்… ஆனால் என் எண்ணமெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்… எங்க இருந்தாலும் அவ நல்லா இருக்கனும்… சந்தியாவுக்கு ராகவ் போல மாப்பிள்ளை கிடைத்த மாதிரி அவளும் குழந்தை குட்டியா குடும்பமா சந்தோசமா இருக்கனும்… இதுதான் என்னோட அனுதின வேண்டல் மிருணா… நான் அந்த சின்னப் பொண்ணுக்கு பண்ணின துரோகம் என் பொண்ணத் தாக்கிருமோன்னு… நித்தம் நித்தம் செத்துட்டு இருந்தேன் மிருணா… சந்தியாவை என்னை விட்டு எங்கயும் விடாமல் என் கைக்குள்ளேயே வச்சுருந்தேன் மிருணா… 2 மணி நேரம் என் பொண்ணு கூட நான் பேசாமல் இருக்க மாட்டேன் மிருணா… நான் பண்ணின பாவம் என் பொண்ணத் தாக்கிருமோன்னு அவளை கண் கொத்தி பாம்பா பாதுகாத்துட்டு இருந்தேன்… அவ மேரேஜ் ஆன பின்னாலதான் அந்த கவலை எல்லாம் போய் நிம்மதியா இருந்தேன்… ஆனால் சந்தோஷ் வாழ்க்கைல விதி விளையாடிருச்சு… ”
என்று முடிக்க
“அந்த பொண்ணு நல்லா இருக்கனும்னுன்ற வேண்டுதல் கூட… உங்க பொண்ணு நல்லா இருக்கனும்தானா அத்தை… உங்க போரட்டத்தில அந்த சின்னப் பொண்ணு வாழ்க்கையைப் பற்றி ஏன் அத்தை நினைக்கலை… “
அமைதியாக இருந்த வசந்தியிடம்
“சரி… இப்போ நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க…” என்று தன் அத்தை வசந்தியைப் பார்த்து கேட்க…
மிருணாளினி சட்டென்று இப்படிக் கேட்க…
வசந்தி என்ன சொல்வதென்று புரியாமல் பார்க்க…
“அதுதான் சொல்றீங்களே… நீங்க பண்ணின பாவம் தான் உங்க பிள்ளை அனுபவிக்கிறான்னு… “ என்று தன் அத்தையைப் பார்க்க…
“நான் இந்த வசந்தி மருமகளா வருகிறேன்… சந்தோஷ் மனைவியா இல்லை… “ என்ற போதே
வசந்தியின் கண்கள் கலங்கியபடி… மருமகளைப் பார்க்க..
“என்னால சந்தோஷை இந்த நிமிசம் வரை மன்னிக்க முடியலை… ஆனால் அவரை விட்டும் கொடுக்க முடியலை அத்தை… அவர் கூட இருக்கும் போது ஏதாவது என்னை மாத்திருமோன்னு நினைத்துதான் அவர்கூட இருக்க விரும்பலை… ஆனால் இப்போ.. அப்படி என்னை மாற்றுகிற விசயம் நடக்கட்டும்னு நினைக்கத் தோணுது அத்தை…” என்று கண்கலங்கியவள்
“நாம அந்தப் பொண்ணைத் தேடுவோம்... அதுல உங்க பிரச்சனை தீருதோ என்னவோ… என்னோட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கலாமான்னு பார்க்கலாம் அத்தை”
சொல்லி முடித்தவள் வசந்தியோடு வெளியே வந்து…. அனைவரிடமும் வசந்தியோடு செல்ல முடிவெடுத்திருப்பதாகக் கூற… அனைவருக்குமே அது ஆச்சரியத்தைத் தர…
சந்தோஷ் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை என சொல்லலாம்…
நம்பவே முடியாமல் மிருணாளினியைப் பார்க்க.. அவளோ..
“நான் உன்னை மன்னிக்க மாட்டேன் சந்தோஷ்… நீ சொன்னது போல பக்கத்தில இருந்துட்டு உன்னை மறக்க ட்ரை பண்ணப் போறேன் சந்தோஷ்” சீண்டுவதுபோல…. அவன் சொன்ன வார்த்தைகளையே அவனிடம் சொன்னாள் தான்… இப்போதும் அவளது கண்களில் வலி இருக்க…
அதே வலியோடு சிரித்தான் சந்தோஷும்…
“தேங்க்ஸ் மிருணா… என்னோட காதல் எப்போதாவது உன்னை என்கிட்ட சேர்க்கும்… அதுவரை நான்… மேரேஜுக்கு முன்னாடி ஒரு சத்தியம் கேட்டேல்ல.. உன்னைத் திருமணம் செய்கிற வரை தொடக்கூடாது என்று… என் வாழ்க்கை முழுவதும் அதை காப்பாத்துவேன் மிருணா” என்று தனக்குள் மட்டும் சொல்லிக் கொண்டவன்…. ஒரு வார்த்தை கூட மிருணாளினியிடம் பேசவில்லை…
ஒரு வழியாக மிருணா… சந்தோஷ் வீட்டுக்குச் செல்ல முடிவெடுக்க… அதிலும் அன்றே செல்ல முடிவெடுக்க…
பிரச்சனை மொத்தமாக முடியாவிட்டாலும்… ஓரளவு மகள் தெளிந்திருக்க… அந்த நிம்மதியில் சுகுமார் – யசோதா இருக்க
பிரச்சனைகள் அனைத்தும் முடிந்த விசயத்தை தன் மனைவியிடம் சொல்லி இந்த சந்தோஷத்தை அவளோடு சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தவனாக ராகவ் தனது அலைபேசியை எடுத்துக் கொண்டு அறைக்குள் போனான் சந்தோஷமாக…. அது மட்டுமின்றி சந்தியாவிடமிருந்து பல அழைப்புகள் வந்திருக்க…
இத்தனை கால் எதற்கு பண்ணியிருக்கின்றாள் என்ற சந்தேகத்துடன் அவள் எண்ணிற்கு அழைக்க… நீண்ட அழைப்பிற்கு பிறகு எடுத்தவள்…
துள்ளலாக
“ரகு… உனக்கு எத்தனை தடனை போன் பண்ணினேன்… ஏன் எடுக்கலை…”
உற்சாகமாக தன் காதில் ஒலித்த குரலில்… காதில் இருந்து அலைபேசியை எடுத்தவன்… ஒரு முறை போனை தன் முன் வைத்துப் பார்த்தவன்… புருவம் சுருக்கினான் யோசனையில்… பின் நிதானித்து கேட்டான்…
“சந்தியா எங்கே நிரஞ்சனா… இது என்ன விளையாட்டு… அவ அம்மாகிட்ட அவளை மாதிரி பேசி ஏமாத்துற மாதிரி… என்கிட்ட விளையாடறீங்களா… அவ எங்க” என்ற போதே சற்று முன் வசந்திக்கு சந்தியாவிடமிருந்து வந்த அழைப்பு ஞாபகம் வந்து போக… மனதில் திடீரென்று ஒரு மாதிரியான திடுக்கிடல்… எதையுமே நினைக்கத் தோன்றாத வெற்று நிமிடங்களாக கடக்க
அப்போது…
“ப்ரிலியண்ட் ராகவ்… தெய்வீக காதல் தான்… வைஃப் வாய்சுக்கும்… மத்தவங்க வாய்சுக்கும் கரெக்டா டிஃப்ரென்ஸ் தெரியுதே ராகவ்…” என்ற ஆண் குரல் இவன் காதில் விழ
திடிரென்ற கேட்ட ஆண் குரலில்… கைகள் நடுங்கியது… ராகவ்வுக்கு… மனம் தடதடக்க….
”நி… நிரஞ்சனா அவ எங்க… சந்தியா எங்க… அவகிட்ட நான் பேசனும்.. .நீ நீ யாரு…” என்று வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வர…
இப்போது… சிவா
“நான் சிவா பேசுகிறேன் ராகவ்… அதிகமா என்னை அறிமுகப்படுத்த தேவையில்லைனு நினைக்கிறேன்… நாம சீக்கிரம் மீட் பண்ணுவோம்னு சொன்னேனே…”
“சிவா சார்…” பல மின்னல்கள் அவனுக்குள் ஒரே நேரத்தில்… தன்னால் தன் மனைவி மாட்டிக் கொண்டாளா… என்ன நினைப்பது என்றே தெரியவில்லை…
”என்ன சொல்றீங்க… எனக்குப் புரியலை… என் மேல பிரச்சனைனா என்னை கைது பண்ணுங்க… அதை விட்டுட்டு என் மனைவி கிட்ட ஏன் பிரச்சனை பண்றீங்க… சந்தியாவை ஏன் இதுல இழுக்கறீங்க… “ என்றான் படபடக்க….
சிவா அமைதியாக நிதனாமாக அழுத்தமாக பேச ஆரம்பித்தான்…
”என்னது சந்தியாவை விடறதா…. 2 வருசமா சந்தியாவை ஃபாளோ பண்ணி அவள எங்க பார்வை வட்டத்துக்குள்ள வச்சிருந்து… இப்போதான் எங்க திட்டமெல்லாம் முடிவடைகிற தருணத்துக்கு வரப் போகுது… அந்த போதை மருந்து கேஸ் சும்மா போலியான ஒன்றுதான்… சந்தியாவோட நிச்சயதார்த்ததை நிறுத்த வேண்டியே… ஒகே.. உனக்கு குழப்பமா இருக்கும்… எல்லாவற்றையும்…ஏன் எதுக்குனு போன்ல விளக்கம் சொல்ல முடியாது ராகவ்… உடனடியா டெல்லிக்கு வாங்க… தென் சந்தியா எங்க கிட்ட இருக்கான்னு யார்கிட்டயும் நீங்க மூச்சு விடக் கூடாது… விட மாட்டீங்கன்னு தெரியும் எனக்கு… ஏனென்றால் ராகவ் ஸ்மார்ட்னு தெரியும்… ” என்ற போதே
மற்றதெல்லாம் விட்டவன்
“சந்தியா கூட பேசனும் நான்… சந்தியா எங்க சார்… “ என்று கேட்க… இப்போது போன் உண்மையிலேயே சந்தியாவின் கைகளில் மாறி இருக்க…
“ரகு…” என்றவளின்… அழுகை குரல் மட்டுமே இவனை வந்தடைய…
“சகிம்மா” என்ற இவனின் குரல் கேட்ட அடுத்த நொடி
“என்னை இங்கிருந்து கூட்டிட்டு போ ரகு…” என்றவளின் கதறல் மட்டுமே இவனை அடைய…
தன் மனைவியைச் சுற்றி என்ன நடக்கிறதென்று புரியாமல் குழம்பியவனாக… டெல்லிக்கு புறப்பட ஆயத்தமாகினான் ராகவ்…
/*பிரியசகி நான் பிரியசகி பிரியசகி உன் பிரியசகி வருவாய் வாசல் தேடி வருந்தும் பூங்கொடி தருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிளி இளைய தேகம் ஓ இணைய வேண்டும் இனிய ராகம் ஓ புனைய வேண்டும்*/
Comentários