top of page

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

Writer's picture: Praveena VijayPraveena Vijay

அத்தியாயம் 94-2


நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது…


நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது போல அவளை நடத்த ஆரம்பித்திருக்க கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை… இன்னும் சொல்லப் போனால்… நட்ராஜை அவள் பெரிதாகக் கண்டு கொள்ளவே இல்லை… உணவு… உடை… அரவணைப்பு… பாசம்… பாதுகாப்பு… என மருதுவே மொத்தமுமாக மாறி இருக்க… தந்தையைத் தேடி வந்தவள்… மெல்ல மெல்ல மருதுவே அவளுக்கு எல்லாம் என்ற நிலைமைக்கு மாறி இருந்தாள்…


மருதுவோடு பழக அவளின் அறிவான குணம் பயன்படாமல் போக… அவனுக்கு ஏற்ற மாதிரி அவள் குணங்களையும் மாற்ற ஆரம்பித்தி்ருக்க… அந்த ஏரியாவில் அவளுக்கு கிடைத்த பெயரோ… லூசு என்ற பட்டப்பெயர்தான்


பள்ளிக்கல்வியைத் தொடரவில்லை… நட்ராஜும் அதைப்பற்றி கேட்கவில்லை…


கண்மணியோ அடுத்த வருடம் சேர்ந்து கொள்கிறேன் என மருதுவிடம் சொல்லி விட மருதுவும் பெரிதாக வற்புறுத்தவில்லை… தூங்கும் நேரம் தவிர மற்ற பெரும்பாலான நேரம் எல்லாம் மருதுவின் அருகிலேயே நேரத்தை செலவிட ஆரம்பித்திருந்தாள்.. இதற்கிடையே வைதேகியையும் கோவிலில் பார்க்கத் தவறவில்லை கண்மணி… மருதுவும் தடுக்க வில்லை… வைதேகியும் மெல்ல மெல்ல தன் இயல்புக்கு வர ஆரம்பித்திருக்க… கண்மணி கந்தம்மாள் ஏரியாவில் எப்படி தன் போக்கில் வாழந்தாளோ இங்கும் அப்படியே வாழ ஆரம்பித்திருந்தாள்… அங்கு கந்தம்மாளின் கெடுபிடியில் வாழ்க்கையை அனுபவித்தாள் என்றால் இங்கு மருதுவின் அன்பான… பாசமான… செல்ல மிரட்டலில் இன்னும் குழந்தையாகவே மாறிப் போனாள் என்றே சொல்லவேண்டும்..


என்ன வித்தியாசம் என்றால்… கந்தம்மாளோடு இருக்கும் போது யாருடைய அன்பையும் எதிர்பார்த்து வாழ வில்லை… ஆனால் இங்கு அவள் தந்தையின் அன்பை எதிர்பார்த்தாள்… அதே நேரம் மருதுவிடம் இருந்து கிடைத்த அன்பை அனுபவித்தவள்… வைதேகிக்கு அதே அன்பை கொடுக்கவும் ஆரம்பித்திருக்க ஒரு மாதிரி வாழ்க்கை தெளிந்த நீரோடையாகவே போய்க்கொண்டிருந்தது…


அப்படிப் போய்க் கொண்டிருந்த போது… ஒரு நாள்…


கம்பெனியில் வாசுவும் மருதுவும் வேலை பார்த்துக் கொண்டிருக்க… கூடவே கண்மணியும் அங்கு இருந்தாள் …


மருதுவும் கண்மணியும் வழக்கம் போல அவர்களது உலகம் தனி உலகம் என கண்மணி பேசிக் கொண்டிருக்க… மருது அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியும் சில நேரம் அவளைத் திட்டியும்… சில நேரம் அவளை ரசித்தபடியும்… இருந்து கொண்டிருக்க…


வாசுவோ தனிமையில் தன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க… அவன் கவனமெல்லாம் அவன் வேலையில் இல்லை… கண்மணி அவனைக் கவனித்தவளாக…


“என்ன வாசுண்ணா டல்லா இருக்காங்க… மீனாக்கா இன்னைக்கு ஏதும் டோஸ் கொடுக்கலையா… “ கண்மணி வாசுவை மருதுவிடம் கிண்டல் செய்து கொண்டிருக்க…


“ஷ் ஷ்… சத்தமா பேசாத பாப்பா… வாசுண்ணா சோகத்துல இருக்கார்… நீ ஏதாவது பேசி உன்னைத் திட்டிறப் போறாரு…” மருது அவளை எச்சரிக்க…


“என்னாச்சு… “ கண்மணி புரியாமல் கேட்க


“உனக்கு அது தேவையில்லாத ஆணி… இந்த வயசுக்கு தேவையானதை மட்டும் தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு..” எனத் திட்ட ஆரம்பித்திருக்க


“உன்னோட இதே வேலையா போச்சு… நீ ரொம்ப ரெஸ்ட்ரிக்ட் பண்ற… திட்டிட்டே இருக்க… நான் கேட்கிற மாதிரி ட்ரெஸ் எடுத்து தர மாட்ற… இப்டி இருக்கனும்… அப்டி இருக்கனும்ற… “ எனும் போதே


“ஆனால் நீன்றதுனால மட்டும் தான் நான் கேட்கிறேன்… வேறொருத்தன் மட்டும் வந்து சொன்னான்னு வச்சுக்கோ அவன் கன்னம் பழுத்திருக்கும்… இல்லல்ல இந்த வெல்டிங் மெஷின்லயே அவன் வாய்க்கு முத்தம் கிடச்சிருக்கும்” என்றவளிடம்


“ஹ்ம்ம்… அடிப்பாவி… கொடுர வில்லியா இருக்க… எவன் உன்கிட்ட மாட்டப் போறானோ… “ மருது பயந்தபடி சொல்ல


கண்மணி… கையில் இருந்த கைச்செயினைத் தள்ளி விட்டவளாக… நம்பியார் போல உள்ளங்கைகளைத் தேய்த்தபடி வில்லி போல முகத்தை வைத்துக் கொண்டவளாக


”வரச் சொல் அவனை” என்றபடியே சிரித்தவள்…


”இது எப்படி இருக்கு… ” என மருதுவிடம் கேட்க…


“வாய் வாய்… உன் பேச்சுக்கு எதிர் பேச்செல்லாம் பேச முடியாது… அந்தத் திறமையும் எனக்கு இல்லை…. சரி… என்னை வேலையைப் பார்க்க விடு” என்று தன் வேலையில் கவனம் வைக்க… அதே நேரம் வாசுவின் அத்தை பெண் அங்கு வந்திருக்க…


”மருது… மீனாக்கா வந்துட்டாங்க…இனி வாசு அண்ணன் ஃபார்முக்கு வந்திருவாங்க” கண் சிமிட்டி மருதுவிடம் சொன்ன போதே


“வாசு… வாடா…” என அந்தப்பெண் வாசுவின் கையைப் பிடித்து இழுக்க… வாசுவோ அவளிடம் ஏதும் பேசாமல்… அவள் கையை தன்னிடமிருந்து விலக்க


“எனக்கு நீதான் வாசு வேணும்… அப்பா கவுன்சிலர் ஆனதுனால… திடீர் பணக்காரர் ஆகி இருக்கலாம்… நான் அப்படி இல்ல… எனக்கு நீதாண்டா வேணும்… “


“ப்ச்ச்… மீனா இனி உனக்கும் எனக்கும் ஏதும் சரிப்பட்டு வராது… உன் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் வேற வெற லெவல்ல மாறிருச்சு.. உன் அப்பா உங்க வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி உனக்கு வாழ்க்கை அமைச்சு கொடுக்க நினைக்கிறாரு… அதை ஏத்துகிட்டு வாழப் பாரு”


“ஏண்டா… புரிஞ்சுக்க மாட்டேங்கிற… என்னோட மனசெல்லாம் நீ மட்டும் தான் இருக்க… எனக்கு பணம் சொத்து அந்த படோப வாழ்க்கை எல்லாம் வேண்டாம்… இரண்டு வேளை சாப்பாடுனாலும் உன்னோட சேர்ந்து சாப்பிடற வாழ்க்கை போதும்டா எனக்கு… நான் என்ன இப்போ இருக்கிற இந்த பணக்கார வாழ்க்கையா வாழ்ந்துட்டு இருந்தேன்…” எனும் போதே


“போடி… ஒழுங்கா இங்கிருந்து கிளம்பிரு” எனும் போதே… அவள் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்தபடி… வாசுவின் கையைப் பிடித்தவளாக…


‘இப்போ இதை என் கழுத்துல கட்ற… அவ்ளோதான்… இதை நீ கட்டாத வரை நானும் இங்க இருந்து போக மாட்டேன்” வாசுவின் அத்தை பெண்… அங்கு அமர்ந்து விட… வாசுவோ அங்கிருந்து சென்று விட்டான்..


கண்மணி மருதுவைப் பார்த்தவளாக…


“நம்ம ஆக்‌ஷன் தான் எல்லா இடத்திலயும்… மீனாக்கா கிட்ட அண்ணா சொல்லிருப்பாங்க போல… நல்ல வேளை அந்த பப்பாளி மரம் இப்போ இல்லை... அன்னைக்கே என் புண்ணியத்தால அதுக்கு ஆயுல் போயிருச்சு... இல்ல எங்கப்பாகிட்ட எனக்கு விழுந்த மாதிரி தர்ம அடி மீனாக்காக்கும் கெடச்சுருக்கும்” கண்மணி அங்கு நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலை தெரியாமல் மருதுவிடம் கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்க… மருது அவள் பேச்சைக் கவனிக்காமல்… மீனாவிடம் போனவனாக


“அக்கா கெளம்புக்கா… ராஜ் அண்ணன் வந்தால் வாசு அண்ணாக்குத்தான் திட்டு கிடைக்கும்… வேலை செய்ற இடம்க்கா” எனும் போதே வாசு திரும்பி வந்திருக்க…


வந்தவன்…


“டேய் மருது வேலையைப் பாரு… அவ தானா போவா “ என மீனாவை நக்கலாகப் பார்த்தபடி கம்பெனிக்குள் சென்று விட… அந்தப் பார்வையின் அர்த்தம் மீனாவுக்கும் விரைவாகவே புரிந்தது…


அவள் அப்பாவின் அடி ஆட்கள் வந்திருந்து அவளை இழுத்துச் செல்ல ஆரம்பித்திருக்க… கண்மணியோ படத்தில் நடக்கும் காட்சிகளைப் போல ஆ வென்று பார்த்தபடியே… மருதுவிடம் ஒன்றியவளாக…


“நீ சண்டை போடு… அன்னைக்கு எனக்காக போட்டேல அது மாதிரி…”


மருது அவளைப் பார்வையாலே அடக்கியிருக்க….


“ஓ…. நீ எனக்காக மட்டும் தானே சண்டை போடுவ…” கண் சிமிட்ட… மருது தலையிலடித்தவனாக சென்றிருக்க… மீனாவை இழுத்துச் செல்ல வந்த கூட்டத்தில் ஒருவன்..


அங்கிருந்த சுவற்றில் மீனாவின் திருமண வாழ்த்து சுவரொட்டியையும் ஒட்டிவிட்டு சென்றிருக்க…


“ஹை அக்கா அழகா இருக்காங்க…. அந்த அண்ணனும் அழகா இருக்காங்க…“ மருதுவை விட்டு விட்டு சுவரொட்டியை வேடிக்கைப் பார்த்தபடி இருந்தவள்


“நான் மேரேஜ் பண்ணும் போது இவ்ளோ அழகா மேக்கப் போடுவாங்களா… இதுக்காகவே மேரேஜ் பண்ணிக்கனும்… எவ்ளோ வயசு ஆகனும் அதுக்கு… 18… தானே… இன்னும் 8 வருசம் இருக்கா” அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக… மருதுவோ அவளைக் கண்டு கொள்ளாமல் வேகமாக ஓட… அப்போதுதான் கவனித்தாள்…


வாசு அங்கு சுவற்றில் தலையை மோதியபடி அழுது கொண்டிருந்ததை…


“அண்ணே… அக்கா வந்தப்போலாம் விட்டுட்டு… அதையும் அவங்க அப்பா கூட அனுப்பிட்டு இப்போ இப்படி பண்ணினா என்ன அர்த்தம்” மருது அவனைத் தடுக்க…


“நான் ஒரு கோழை மருது… அவ அப்பாவை எதிர்த்துட்டு வாழ முடியுமா என்ன… வாழ விட்ருவாரா என்ன… அவளாச்சும் நிம்மதியா வாழட்டும்” என சுவற்றில் இருந்த மீனாவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்திருக்க… நேரம் கடந்திருக்க… சில மணி நேரம் கழித்து வாசுவின் தாய் பதறியபடி வந்தாள்…


“அடேய் வாசு… நாம மோசம் போய்ட்டோம்டா… மீனா நம்மள எல்லாம் விட்டுட்டு போய்ட்டா… விசம் குடிச்சுட்டாளாம்டா” என்று கதறி அழுதபடி வந்திருக்க… வாசுவின் கண்கள் அந்த புகைப்படத்தில் நின்று நிலைத்திருந்தது…


மருது அதிர்ச்சியும் கவலையுமாக பார்க்க… கண்மணியோ எப்போதும் போல வேடிக்கைப் பார்த்தபடி இருந்தாள்…


---



”அண்ணே சாப்பிட வாங்க” நட்ராஜின் முன் வந்து மருது நிற்க…


“ரொம்ப வேலையா மருது… நானும் ரெண்டு வாரமா ஆள் தான் தேடிட்டு இருக்கேன்… ஆனால் வாசு மாதிரி இனி கிடைப்பாங்களா என்ன… வெளி வேலை எல்லாம் அவன் பார்த்துட்டு இருந்தான்… இப்போ நான் என்ன பண்றதுன்னு தெரியல…. என்னாலயும் முடியாது… ஆர்டரை எல்லாம் கேன்சல் பண்ணிட்டு இருக்கேன்… நம்ம சக்திக்கு ஏத்த மாதிரி மட்டும் தான் ஆர்டர் வாங்கனும்…” மருது பதில் ஏதும் பேச வில்லை…


நட்ராஜ் கம்பெனி வைத்திருப்பது சாப்பாட்டுக்கு கூட இல்லை… அவர் தினமும் அருந்தும் மதுவுக்கு மட்டுமே…


மருது கையை உதறியபடி வலியால் முகம் சுருக்கியபடியே… சாப்பிட அமர்ந்தான் கண்மணியோடு…


“ஏய் என்னாச்சு… முடியலேன்னா வேல பார்க்காத” என்றபடி அவன் தோள்ப்பட்டையை அமுக்கி விட்டவளிடம்… ஒன்றும் சொல்லாமல் இருவருமாக சாப்பிட ஆரம்பித்திருக்க… நடராஜும் வந்திருக்க…


“மருது… நல்லாருக்கா கொழம்பு…. மூக்கை மூடிட்டு சமைச்சேன்…. உன்ன மாதிரி வச்சுருக்கேனா” அவள் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த நிமிடம்… சாப்பாட்டுத் தட்டு பறந்திருந்தது…


“என்ன கருமம்டா இது… உன்னைத்தானே சமைக்கச் சொன்னேன்…” என்று மருதுவிடம் கை ஓங்கியிருக்க… வேகமாக கண்மணி அவர் முன் வந்து நின்றவளாக….


நட்ராஜின் கைகளைப் பிடித்தபடி


“மருதுவை அடிச்சீங்க… அவ்ளோதான்… அவன் ஒரு அடி அடிச்சான்னா நீங்கள்ளாம் பத்து நாள் எழுந்துக்க முடியாது… போனாப் போகுதுன்னு முதலாளின்னு பார்க்கிறான்…”


அடுத்த நொடி… கண்மணியின் கன்னத்தில் நட்ராஜின் கை வரிகள் பதிந்திருக்க… மருதுவிடம் திரும்பிய நட்ராஜ்


“அவ இனி சமைக்கக் கூடாது…. புரிஞ்சதா.. ” மருதுவிடம் எச்சரித்தவனாக


கண்மணியிடம் திரும்பியவன்


“என் இடுப்புக்கு கூட வளரல… என் கையையே மறிக்கிறியா… கொன்னுருவேன்…” என்றபடி வெளியேறி இருந்தான்… நட்ராஜின் கோபம் மகள் எதிர்த்துப் பேசினாள் என்பதற்காகவே… அவள் யாருக்காக பேசினாள்… என்ன பேசினாள் என்பதெல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை… கருத்திலும் ஏற்ற வில்லை…


நட்ராஜ் வெளியேறி இருக்க… கண்மணி அடி வாங்கியதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்..


“அவர் அப்படித்தான்… எப்போ பாரு… இதே வேலைதான்”


”ஆனால் உன்னைப் பற்றி தெரியாம இருக்காரு என் அப்பா… நீ கவலைப்படாத… நீ சாப்புடு…. அவ்ளோ கேவலமா இருக்கு நான் வச்ச கொழம்பு…” என்றவளிடம்…


“ஆமா… இவ்ளோ உப்பை போட்டு வச்சா… மனுசன் சாப்பிடுவானா… மணிப் பாப்பா… மத்த கொழம்புக்கெல்லாம் உப்பு போட்ற மாதிரி இந்தக் கொழம்புக்கும் உப்பு போடக் கூடாது” என்றபடியே அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்க… கண்மணி கைப்பிடித்து அவனை நிறுத்தியவள்...


“நீயும் சாப்பிடாதா... வெளில சாப்பிட்டுட்டு வா” என்றபடி சாப்பாட்டை இழுத்தவளிடம்


“சரி வா… நீ தயிர் சாதம்தானே… வா ஹோட்டலுக்கு போகலாம்… உனக்குப் பிடிச்ச பால் பாயாசம் எங்க கெடைக்குமோ… அங்க போறோம்… சரியா… அடி வாங்கினதுக்கு ட்ரீட் போலாம் வா” என்றபடி அவளின் தோள் மீது கை போட்டு அழைத்துக் கொண்டு போனவனிடம்…


“நடந்தா போகனும்… போ மருது… நீ நம்ம வீட்ல இருக்கிற அந்த பைக்கை எடுத்துட்டு வரலாம்ல…. அது துரு பிடிச்சுதானே கெடக்கு… உனக்கு அந்த பைக் ரொம்ப பிடிக்கும் தானே… என்னை விட உனக்கு அந்த பைக் பிடிக்கும் தானே.”


மருது தலை ஆட்டியபடியே


“ஹ்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும் மணி… ஆனால் இப்போ என் ஒரு கண்ணு நீ... இன்னொரு கண்ணு அந்த பைக்” என்ற போதே


“நான் எந்தக் கண்ணு... ஹான்... ரைட் ரைட்... ஓகேவா


“உன் வலது கண்ல ரெண்டு கண்மணி ” கண்மணி ஜாலியாக குதித்தபடி வந்து கொண்டிருக்க... மருதுவோ அவளிடம்


”அந்த பைக்குனா எனக்கு உயிர்தான்… எடுத்தேன்… அண்ணே என்னைக் கொல பண்ணிரும்… ”


“ஏன்… “ கண்மணி கேட்க


“அது உங்கம்மா அவருக்கு வாங்கிக் கொடுத்தது….”


“அட… உனக்கு வேணுமா… அதுதான் என்னோட கேள்வி… யார் வாங்கிக் கொடுத்தா என்ன… அந்த பைக் இனி உனக்குத்தான்…. அந்த பைக்கோட ஓனர் இனி நீதான்…” மருது திகிலோடு பார்க்க…


“பவித்ரா வீட்டுக்காரர் ராஜ்ஜை நினச்சு பயப்பட்றியா…

மருது தலை ஆட்ட…


“மருதுக்குத்தான் அந்த பைக்… எவனாவது தொட்ருவானா இனி… பவித்ராவாவது ராஜ்ஜாவது… போகச் சொல்லு… நீ என்னை அதுல டெய்லி கூட்டிட்டு போகனும்... ரொ...............ம்............தூரம்.... ஸ்...பீ....டா போகனும்... அப்புறம் எனக்கும் சொல்லித் தரனும்” என்ற கண்மணியைப் பார்த்தவன்…


முதன் முதலாகக் கேட்டான்…


“உனக்கு ஏன் என்னை இவ்ளோ பிடிக்குது…” மருது கேட்க


“ஏன்னா எனக்கு நீ மட்டும் தான் இருக்க… எனக்காக நீ மட்டும் தான் சப்போர்ட் பண்ற…. நீ மட்டும் தான் என்னைக் கேர் பண்ற… ” என்றபடியே சொல்ல ஆரம்பித்தவளிடம்..


“ஏய் மணி பாப்பா அங்க அங்க பாரு… இன்னைக்கு ஸ்பெஷல் வடை பாயாசம்…” என்று ஓடப்போனவள் சட்டென்று நின்றிருந்தாள்… அதுவும் அதிர்ந்த பார்வையோடு வாசுவைப் பார்த்தவளாக


அவள் நின்ற விதத்தில் மருதுவும்… அவள் பார்த்த திசையினை நோக்கிப் பார்த்த போதே… வாசுவின் தாய் அங்கு வந்திருக்க…


“அவ இவன் தான் வேணும்னு கதியா நின்னப்போ விட்டுட்டான்.. இப்போ யாரை பார்த்தாலும்… அவன்னு தேடி ஓட்றான்… என் பையன் நிலமையை பார்த்தியா…”


“கண்ணு… உன் வாசு அண்ணனைப் பாரும்மா” எனும் போதே வாசு அவள் அருகில் வந்திருக்க… கண்மணிக்கு திகில் பரவியிருந்தது…


போன வாரம் வரை… சாதரணமாக இயல்பாகப் பேசித் திரிந்த வாலிபன்… இப்படி மாறிவிட முடியுமா… அவளை பயமுறுத்தும் காரணியாக மீண்டும் ஒரு மரணம் அமைந்திருக்க…


வாசுவின் தாய்… வாசுவிடம் ஏதேதோ பேசி.. கூட்டிச் சென்றிருக்க…. தன்னைப் பிடித்திருந்த கண்மணியின் கைகளின் நடுக்கத்தை உணர்ந்தவனாக…


“வா…. வா… பாயாசம்… ” என்று அவளைத் திசை மாற்றி அழைத்தும் சென்றிருந்தான்… அவனுக்கு வாசுவின் விசயம் ஏற்கனவே தெரிந்திருக்க… இன்று அவன் அவ்வளவாக அதிர்ச்சி அடைந்திருக்க வில்லை…


ஆனால் கண்மணிதான் விடவில்லை…


“என்னாச்சு வாசு அண்ணாக்கு… ஏன் இப்படி நடந்துக்கிறாங்க”


சாப்பிட்டபடியே மருதுவிடம் கேட்க…


“மீனாக்கா இறந்து போய்ட்டாங்கள்ள… அதுனாலதான் ”


“ஏன் மருது மீனாக்கா இறந்து போய்ட்டாங்க….”


“அவங்களுக்கு மேரேஜ் பிடிக்கலை…. நீ சாப்பிடுன்னு சொல்றேன்ல… பேசிட்டே இருந்தா உன் ஃபேவரைட் மிஸ் ஆகிறப் போகுது…”


“ஏன் வாசு அண்ணா இப்படி ஆகிட்டாங்க… மீனாக்கா வரும் போதெல்லாம்… பேசும் போதெல்லாம் திட்டிட்டே இருப்பாங்க.. ஆனால் அவங்க இறந்த பின்னால ஏன் இந்த மாதிரி எல்லாரையும் மீனா மீனான்னு ஏன் சொல்றாங்க”


”மணி… அதெல்லாம் சொன்னால் உனக்குப் புரியாது… வயசுக்கு தகுந்தமாதிரி நட…” சொல்லிக் கொண்டிருக்கும் போதே


“ஏன் இறந்தாங்க…. எனக்கு சொல்லு… அமுதினி மாதிரி… என் அம்மா மாதிரி அவங்க சாகலையே… அவங்களா விசம் குடிச்சு செத்துட்டாங்களாமே… ஏன்… சொல்லு சொல்லு…”


”ப்ச்ச்… விட மாட்டியா நீ…. அதான் சொல்றேன்ல கல்யாணம் பண்ணி வச்சதால…”


”அதான் ஏன்னு கேட்கிறேன்…” கண்மணி கேட்க


“வாசுவைப் பார்க்க முடியாதுன்னு… அதான்…” கண்மணி புரியாமல் பார்த்தவளாக


“ஏன் வாசு அண்ணனை வந்து பார்த்தால் என்ன… கல்யாணம் பண்ணினா பார்க்க முடியாதா… அதுக்காகவெல்லாம் சாகனுமா என்ன… மேரேஜ் பண்ணிட்டு வந்து டெய்லி பேசிட்டு போனா என்ன… ஆனா சும்மா சும்மா திட்டிட்டே இருக்கிற வாசு அண்ணாவை பார்க்க முடியாதுன்னு ஏன் செத்துப் போனாங்க அதான் டவுட்டே”


”ஒழுங்கா சாப்பிடு… சரியா… “ மருது மிரட்டி இருக்க… கண்மணியும் வாயை மூடியபடி சாப்பிட ஆரம்பித்தவள்… யோசனையோடே சாப்பிட்டும் முடித்தாள்..


வெளியே இருவருமாக நடந்து வந்து கொண்டிருக்க…


‘ஏன் மருது… எனக்கு ஒரு சந்தேகம்… கேட்டால் திட்டக் கூடாது” அவனிடம் தயங்கிக் கேட்க


மருதுவும் அவளைப் பார்த்தவனாக… அவளைப் புரிந்தவனாக…


“வாசு அண்ணா பற்றி கேட்கக் கூடாது” முன்னெச்சரிக்கையுடன் பேச…


“இல்லல்ல வாசுண்ணா பத்தி இல்ல…” என்றபடியே


“இல்ல… எனக்கும் கல்யாணம் நடக்கும் தானே… கொஞ்ச நேரம் முன்னாடி நீ கூட சொன்னேல…”


“ஹ்ம்ம்”


”அப்போ எனக்கும் கல்யாணம் நடந்தால்… நான் உன்னை விட்டு பிரியனுமா… பேச முடியாதா.. “


”பேசக்கூடாதா…” கண்மணி கவலையோடு கேட்க… மருதுவோ சிரித்தபடி


“அப்படிலாம் இல்ல.... நீ ஏன் பேசக் கூடாது… அதெல்லாம் பேசலாம்…” மருது சாதரணமாகக் பேசியபடி வந்து கொண்டிருக்க…


“அப்போ…. சரி… நீயும் என்கூட வந்துரு… சரியா” என்றவளிடம்


“அது சரி… என்னை அவன் அடிக்கிறதுக்கா ” என்றவாறே வந்து கொண்டிருக்க…


“ஏன் அடிக்கப் போறான்”


உங்க ரெண்டு பேருக்கு இடையில நான் வந்தால் அடிக்கத்தான் செய்வான்...”


அவனைப் பிடித்திருந்த கண்மணியின் கைகள் இறுக ஆரம்பித்திருந்தது…


“எனக்கும் மருதுவுக்கும் இடையே இன்னொருவனா….” நினைக்கவே பிடிக்கவில்லை கண்மணிக்கு….


“எனக்கு எப்போதுமே மருதுதான் முக்கியம்… ” மனதோடு நினைத்தவள் அப்படியே நின்றிருக்க… மருது இப்போது திரும்பிப் பார்க்க… கண்மணியின் கலங்கிய முகம் தான் அவன் கண்ணில் பட… பதறிப்போனவனாக… அவளருகில் வர…


“அப்போ நீயே என்னைக் கல்யாணம் பண்ணிக்க…” கண்மணியின் வார்த்தைகளில் மருதுவின் முகத்தில் அதிர்ச்சி மட்டுமே… அறைவதற்கு கையை உயர்த்தினான் தான்… ஆனால் அறையாமல் நிற்க


”இப்போ எதுக்கு என்னை அடிக்க கை ஓங்குற… நான் என்ன தப்பா சொல்லிட்டேன்… “


“இந்த அடிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேனு உனக்குத் தெரியும் தானே”


கண்மணி பேசிக் கொண்டே இருக்க... மருதுவும் குரலைத் தளர்த்தி இருந்தான்


“லூசு மாதிரி பேசக் கூடாது சரியா… இப்படிலாம் பேசக் கூடாது சரியா பாப்பா” என மருதுவும் இறங்கிப் பேச…. கண்மணி அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை…


“ஏன் நீ யாரையாவது லவ் பண்றியா என்ன… இவ்ளோ கோபம் வருது… மீனாக்கா வாசு அண்ணா பின்னால வர்ற மாதிரி எந்தப் பொண்ணும் உன் பின்னால சுத்தலையே… நான் மட்டும் தானே உன் கூட இருக்கேன்… அப்போ நான் தான் உன்னை லவ் பண்றேன்னு நினைக்கிறேன்” என்றவளிடம்


“வாயை மூடு..”

”உன்னை லூசுன்னு இங்க சொல்றாங்கள்ள அது தப்பே இல்லை மணி…… இப்படிலாம் என்கிட்ட பேசின மாதிரி வேற யார்கிட்டயும் பேசி வச்சுறாத… கேட்டு வைக்காத… அவ்ளோதான்…”


கண்மணி அதன் பின் ஒன்றுமே பேசவில்லை… பேசாமலேயே வந்து கொண்டிருக்க… அப்போது….


“மருது” உற்சாகமாகக் குரல் ஒலித்திருக்க…. அந்தக் குரலைக் கேட்ட உடனேயே மருதுவின் முகமும் மலர்ந்திருக்க…


“என்னை வரச் சொன்ன… என்ன விசயம்” வேகமாக வந்த துரை கண்மணிக்கும் மருதுவுக்கும் இடையே வந்திருக்க…


கண்மணியை முன்னே செல்லுமாறு சொல்லியபடி… துரையோடு சேர்ந்து பேசியபடியே மருது நடந்து வர…. அதன் பின் மருது கண்மணியையைக் கண்டு கொள்ளவே இல்லை….


துரையின் வாகனம் நிறுத்திய இடத்திற்கு வந்திருக்க…


“மணி… நீ வீட்டுக்குப் போ…. எனக்கு முக்கியமான வேலை இருக்கு…” என்றவன்… துரையோடு அவன் பைக்கில் ஏறியிருக்க கண்மணி மருதுவையும் துரையையுமே வெறித்தபடி நின்றிருந்தாள்…

---


மருது, கண்மணி சொன்னதை துரையிடம் சொல்லியபடி கடற்கரையில் நின்றபடி… கடல் அலையைப் பார்த்தபடி சொல்ல


“நீ அவள மேரேஜ் பண்ணனுமா… உன்னைப் பற்றி என்ன தெரியும் அவளுக்கு… உன்னை ரொ……….ம்……..ப நல்லவன்னு நினைக்கிறா போல… நீ யாருனு எனக்கு மட்டும் தானே தெரியும்” என்றவன்


“இங்க பாரு… நீ எப்போ அந்த நட்ராஜ விட்டு வரப் போற…” எனும் போதே மருதுவோ அவன் பேச்சைக் காதில் வாங்காதவன் போல


”மறந்துட்டேன் பாரு… வாசு இல்லாத இடத்துக்கு… முதலாளி ஆள் தேடிட்டு இருக்காரு…நான் உன்னைச் சொல்லலாம்னு இருக்கேன்” என்ற மருதுவை துரை முறைக்க…


“நான் உன்னை அங்கயிருந்து வரச் சொன்னா… நீ என்னை அங்க இழுக்கிற” என்றவன்


“இந்தக் கைல பாரு… உன் பேரை தெள்ளத் தெளிவா பச்சை குத்தி வச்சுருக்கேன்… உன் நட்ராஜ் அண்ணா கேட்டா என்ன சொல்லுவ… நம்ம ரிலேஷன்ஷிப்பை பற்றி சொல்ல ரெடினா நானும் அங்க வரத் தயார்தான்… ஆனா உனக்கு சொல்ல தைரியம் இல்லதானே… அப்போ கூப்பிடாதா… சீக்கிரம் நீ என்கூட வா…” என்று கோபமாகப் பேச ஆரம்பித்திருக்க


“இல்லடா… நான் உன்கூட வந்துரலாம்னுதான் இருந்தேன்…. ஆனால் மணி வந்த பின்னால என்னால முடியல… அவள அவங்க அப்பா கண்டுக்கவே மாட்டார்டா… அவ தனியா இருக்க முடியுமா…” மருதுவைப் பார்த்து வயிறு வலிக்க சிரித்து முடித்தவன்


“ஏன் இருந்து அவள பார்த்து வளர்த்து ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவ பிள்ளைக்கும் சீர் சீராட்டு பார்த்துட்டு வா… நான் வேணும்னா காத்துட்டு இருக்கேன்… ஆளப் பாரு… அது என்னடா இந்தப் பொண்ணுக்குனா மட்டும் இவ்ளோ பார்க்கிற… நீயாடா இது… பொண்ணுனு பேப்பர்னு எழுதினாலே அதை வச்சு மன்மத லீலை காவியம் எழுதுறவன் நீ… எப்படிடா” என்றபடியே


“நான் என்ன நினைச்சேன்னா… அந்த கண்மணி இங்க வந்த ஒரு வாரத்திலேயே அவளப் போட்ருவேன்னு நெனச்சேன்… ஆனா வேற மார்க்கமா இருக்க நீ” என்று மருதுவைப் பார்த்து கேட்க… மருதுவோ தீவிரமாகவே பதில் சொன்னான்


“ஏன்னா… அவ பவித்ரா அக்காவோட பொண்ணு… அவள கருவில இருந்தே வளர்த்துருக்கேண்டா நான்… காப்பாத்திருக்கேன்… அவ என்னோட கண்மணிடா…” என்றவனை துரை முறைக்க ஆரம்பிக்க… மருதுவோ அவனைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் கடல் அலைகளை வெறிக்க ஆரம்பித்திருந்தான்….


----

அடுத்த இரண்டு நாட்கள் கழிந்திருக்க


”மருது”… அதிகாலையிலேயே கண்மணி அவன் காதருகில் வந்து கத்தியிருக்க


“ஏய் என்ன…”


“தூக்கம் வருது போ… அப்புறமா டீ போட்டு தர்றேன்…” என்று மருது மீண்டும் தூங்க ஆரம்பித்திருக்க… இவளோ அவன் போர்த்தியிருந்த போர்வையை இழுக்க ஆரம்பித்திருக்க


வேகமாக உடையைச் சரி செய்தபடியே அவளை அடிக்க கை நீட்டிய போதே அவன் கை தானாகவே நின்றிருந்தது… பார்வையும் அவளிடம் நிலைத்திருக்க


“ஏய்… எப்படி இருக்கு … இந்த ட்ரெஸ்… எங்க அப்பா காசு கொடுத்து வாங்கச் சொன்னார்ல… நீயும் நானும் வாங்கிட்டு வந்தோமே… நல்லா இருக்கா…” என அப்படியும் இப்படியுமாக ஆட்ட…


முதன் முதலாக மருதுவின் பார்வை கண்மணியின் முகத்தை விட்டு அவள் தேகத்தில் அலைபாய ஆரம்பித்திருந்தது…


அந்தப் பட்டுப் பாவாடையின் மேற்ச்சட்டை அவள் இடுப்பை முழுவதுமாக மறைக்கவில்லை… அவள் கையைத் தூக்கி மேலே கீழே ஆட்ட… கண்மணியின் இடையும் அதில் இருந்த மச்சமும் அவன் கண்களின் முன் நன்றாகவேத் தரிசனம் தந்திருக்க… மருதுவின் எண்ணங்களும் தடுமாற ஆரம்பித்திருக்க…


“வா… வா… உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” என அவளை எழுப்பியவளின் வளைகரங்கள் இன்று அவனுக்கு புதிய மாற்றத்தை தந்திருக்க… அப்போதுதான் கவனித்தான்…


“கையில இருந்த ப்ரேஸ்லெட் எங்க… அது தங்கம் மணி… தொலச்சுட்டியா என்ன” மருது இப்போது பார்வையை மாற்றியிருந்தான்


“இல்ல… அதுல சிலும்பலா இருக்கும் போல… அது இந்த ட்ரெஸ்ல மாட்டி மாட்டி டிஸ்டர்ப் பண்ணுச்சு… கழட்டி வச்சுட்டேன்… பத்திரமாத்தான் வச்சுருக்கேன்… நாளைக்கு போட்டுப்பேன்” என்றபடி… அவன் கையைப் பிடித்து இழுத்தவளாக…வெளியே கூட்டி வந்தவள் அவனை இன்னுமே ஆச்சரியப்படுத்தி இருந்தாள்…


“பார்த்தியா… பைக்க எப்படி நீட்டா தொடச்சு வச்சுருக்கேன்னு பாரு… அங்க பாரு… ‘M’ னு எழுதி வச்சுருக்கேன் பாரு… எம் ஃபார் மணி…. எம் ஃபார் மருது.. எப்புடி…” என்றவள்…


“ஆமாம்… அந்த துரை இருக்கான்ல…. அவன் ஏன் உன் பேரைக் கைல பச்சைக் குத்தி வச்சிருக்கான்” பேச்சுவாக்கில் கேட்டவளை… மருது அதிர்ச்சியுடன் பார்க்க… அவளோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்…


“அந்த ‘ஆர்’ மட்டும் தான் டிஸ்டர்ப்பா இருக்கு… இதை கிறுக்கி அழிச்சுரலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்… நீ என்ன சொல்ற…” பைக்கை பார்த்தபடியே கண்மணி பேசிக்கொண்டு இருந்தாள்…


”அன்னைக்கு அந்த துரை இந்த பைக் தானே வச்சுருந்தான்… அதுனால தானே அவன் கூட அடிக்கடி போற… இது உன்கிட்ட இருந்தா அவன் கூட அடிக்கடி போக மாட்டதானே…” கண்மணியின் குரல் அழுவது போல் மாறி இருக்க


அதே நேரம் நட்ராஜ் வெளியில் வந்திருக்க… மருதுவுக்கு முதல் முறை கண்மணியோடு நின்றிருந்தது நடுக்கத்தைத் தந்திருக்க… அதிலும் இந்த பைக்கை வேறு அவள் மகள் தொட்டிருக்கிறாள்… கண்டிப்பாக நட்ராஜ் கோபத்தின் உச்சத்திற்கு செல்லப் போகிறான்… அதுவேறு அவனுக்குப் பயத்தைக் கொடுத்திருக்க


“ஏய் மணி… இது எதுக்கு வேண்டாத வேலை… ” கண்மணியைத் திட்டுவது போல நடிக்க ஆரம்பித்திருக்க… நட்ராஜும் சரியாக பின்னால் வந்து நின்றிருக்க


’யார் இதைத் தொட்டது” மருதுவிடம் நட்ராஜ் கர்ஜிக்க…


“இல்ல அண்ணே… அவ பேர் எழுதனும்னு…”மருது இழுத்தபடியே சொல்ல… பைக்கை மீண்டும் நட்ராஜ் பார்க்க… மருதுவுக்கு உச்சக்கட்ட பயம்… தொண்டைக் குழியில் எச்சிலை மென்று விழுங்கியபடியே


“ஆர் ஏன்னு கேட்டா… உங்க பேரோட செகண்ட் பார்ட் ஃபர்ஸ்ட் லெட்டர்னு சொன்னேன்… மணியும் அதே போல… அவ பேரோட செகண்ட் பார்ட் ஃபர்ஸ்ட் லெட்டர்னு” அவன் பேசிக் கொண்டிருந்த போதே… நட்ராஜ் வேகமாக உள்ளே சென்றவர்… மொத்தமாக அந்த பைக்கில் இருந்த எழுத்துக்களை அழித்து விட்டு…


“சாவி எங்க” கண்மணியிடம் முறைப்போடு கேட்க…


“ஹ்ம்ம்ம் அதைக் காக்கா தூக்கிட்டுப் போயிருச்சு” கண்மணி கடுப்பாகவும் அதே நேரத்தில் நக்கலாகவும் தந்தைக்குப் பதில் சொன்னபடியே தன் கையில் இருந்த சாவியையும் அவரிடம் கொடுத்திருக்க… நட்ராஜ் ஏதும் பதில் சொல்லாமல் விலகிச் சென்றிருக்க…


“ஹலோ நைனா…” நட்ராஜை வம்பிழுத்திருந்தாள் அவர் மகள்…


நட்ராஜ் கோபத்துடன் திரும்பிப் பார்த்த போதே


“ட்ரெஸ்… நல்லாருக்கா… நீங்க மருதுகிட்ட எனக்கு காசு கொடுத்து வாங்கிக் கொடுன்னு சொன்னதை நான் கேட்டுட்டேனே…” என்றபடியே நட்ராஜ் அருகில் வந்தவள்…


“சீக்கிரம் ஒருநாள் நீங்களே என்னைக் கூட்டிட்டுப் போய் ட்ரெஸ் வாங்கித் தர்ற காலமும் வரும்… ஐ லவ் யூப்பா” தன் குறும்புத்தனத்திற்கு பலியாடாக தன் தந்தையையும் விட்டு வைக்கவில்லை...


“பைக்கைத் தொட்ட போதே அடிச்சிருக்கனும்… அடிக்காமல் விலகிப் போனேன்னு… வாய் நீளுது…. “ என்றவர்… வேகமாகச் சென்று விட மருது ஆச்சரியமாக இருவரையும் பார்த்தபடியே இருக்க


“எருமை மாடா இருந்தாலும் கன்னுக்குட்டிக்கு தன் அப்பா மாடு பெருமை மாடு தான்” எனச் சொல்லிக் கண்சிமிட்டியவளிடம்…


“எங்கயிருந்து இப்டி பேசக் கத்துக்கிட்ட…” சிரிப்பை அடக்கியபடி… மருது ஆச்சரியத்துடன் கேட்கும் போதே நட்ராஜும் திரும்பி வந்திருக்க… வேகமாக உதட்டைக் கடித்தவள்… மருதுவின் உயரத்துக்கு எம்பி…


“ஐயோ மாடு டையலாக்லாம் அப்பா கேட்ருப்பாரா…” அவன் காதி்ல் மெதுவாகக் கேட்க… மருதுவுக்கோ பட்டும் படாத அவள் இதழின் உரசல்கள்தான் அவன் கவனத்தை மொத்தமாக ஈர்த்திருக்க… கண்மணியை விட்டு விலக நினைத்தாலும்… அவளை விலக்க நினைத்தாலும் அவனால் அப்படிச் செய்ய முடியவில்லை…


நட்ராஜின் பார்வை மகளின் மீது பட்டு மருதுவிடம் சென்றிருக்க… வேகமாக மருது விலகி நின்றிருக்க… கண்மணியோ அவனை விட்டு விலகி நிற்கவே இல்லை… இன்னும் சொல்லப் போனால்… அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்தபடி நின்றிருக்க…


நட்ராஜ் மருதுவைப் பார்த்தபடியே


”இன்னைக்கு நீ கம்பெனிக்கு வரவேண்டாம்… புதுசா ஆள் எடுக்கிற வரை ஆர்டர்லாம் கேன்சல் பண்ணிட்டேன்” என்றபடி நட்ராஜும் வெளியே சென்று விட


”ஹை அப்போ இன்னைக்கு என்கூடத்தான் இருக்கப் போறியா” என அவனைப் பிடித்துக் கொண்டு அவன் பின்னேயே சுற்ற ஆரம்பித்திருந்தாள் கண்மணி…


சரியா ஒரு மணி நேரம் கூட கடந்திருக்காது… துரை அங்கு வந்திருக்க… கண்மணி மருதுவிடம்


“இவன் ஏன் இங்க வந்துருக்கான்… அவன் வந்து கூப்பிட்டா நீ போகக் கூடாது… போனால் அவ்ளோதான்” என்றவளிடம் ஏதும் பேசாமல் அவனை முறைத்தபடியே… கண்மணியிடம் திரும்பியவனாக


“நீ பக்கத்து வீட்டுப் பாப்பாவைப் பார்க்கப் போகனும்னு சொன்னதானே… போயிட்டு வா…” என அனுப்பி வைக்க முயற்சிக்க…


“இல்ல… நான் இங்கதான் இருப்பேன்… இவன் வந்தாலே நீ என்னை போ போன்னு சொல்ற” என்ற போதே…


“ஹேய் பாப்பா… உன்னைப் பத்தி சொல்லிருக்கான்… நான் அவனோட ஃப்ரெண்ட்… அப்போ உனக்கும் ஃப்ரெண்ட்…” எனக் கை நீட்ட…. கண்மணி மருதுவைப் பார்க்க… அவனோ ஒன்றும் சொல்லாமல் கண்மணியை இப்போது முறைக்க…


“சரி சரி.. நான் போறேன்… நீ முறைக்காத…” என்றபடி ஓடியவள்…


“இவன் கூட பேசிட்டே… சமைக்க மறந்துறாத… ” ஞாபகப்படுத்தி விட்டுத்தான் போனாள் கண்மணி…


துரை மருதுவைப் பார்த்தபடியே


“இப்போ நீ ஏன் மேல கோபமா இருக்க… உங்க கம்பெனிக்கு வேலை பார்க்க வரலைனா…” என அவன் தோள் மீது கை போட…


“ப்ச்ச் விடு… துரை” என்றபடியே எங்கோ பார்த்தபடி இருந்தவன்…


“நீ இனிமேல என்னைப் பார்க்க வராத…” என மட்டும் சொன்னான்… அப்போதும் அவனைப் பார்க்காமல் இருக்க… துரையின் கண்களில் கோப அதிர்வு வந்ததுதான்… ஆனாலும் காட்டிக் கொள்ளாமல்…


“என்னாச்சு” துரை கேட்க…


மருதுவோ அதற்குப் பதில் சொல்லவில்லை… மருதுவை எப்படி மாற்றுவது என அவனுக்குத் தெரியாதா என்ன… விட்டுப் பிடிப்போம் என்று நினைத்தவனாக


“ஓகே… இப்போ எதையும் பேச வேண்டாம்… சும்மா உன்னைப் பார்க்க வந்தேன்… இந்தக் கேமரா புதுசா வாங்கினேன்… நமக்கு பல விசயத்துக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்னு வாங்கினேன்…” என்றவன்


“முதல்ல உன்னைத்தான் இதுல எடுக்கனும்னு உன்னைப் பார்க்க வந்தேன்” துரை மருதுவின் கைகளில் கொடுத்தபடியே… அவனிடம் கை கோர்த்திருக்க… மருதுவும் இப்போது ஒன்றும் சொல்லவில்லை…


சரியாக ஒரு மணி நேரம் தான்… கண்மணி மீண்டும் திரும்பி வந்திருக்க… மருதுவின் வீட்டுக் கதவு மூடியிருக்க…


“மருது மருது” என அவன் கதவை உடைப்பது போல கண்மணி தட்டிக் கொண்டே இருக்க… மருதுவும் துரையும் தாமதமாகவே கதவை வந்து திறந்திருக்க…


“என்ன பண்றீங்க… கதவை மூடிட்டு… “ என்றபடி அடுப்பைப் பார்த்தவள்…


“என்ன இன்னும் சமைக்கலயா…” என்ற போதே துரை அவளிடம்…


“மணிப் பாப்பா… இன்னைக்கு நாம கடையில ஆர்டர் பண்ணிக்கலாம்… சொல்லு உனக்குப் பிடிச்ச ஐட்டமெல்லாம்…” என்றபடி கண்மணியைத் திசைதிருப்பி இருக்க கண்மணியும் அதன் பிறகு கண்டுகொள்ளவில்லை… ஆனால் அங்கிருந்த கேமராவைப் பார்த்தவள்…


“ஏய் இது என்ன… கேமராவா… என்னை ஃபோட்டோ எடுக்கிறியா…. என் பாட்டிகிட்ட கொடுக்கலாம்… அப்புறம் என் வீட்ல மாட்டனும்… ஸ்கூல்ல ஆண்டு விழாவுல எடுத்த ஃபோட்டொ தான் என்கிட்ட இருக்கு…” கண்மணி சொல்ல…. துரை மருதுவைப் பார்த்தபடியே….


”எடுத்துறலாம்… நீ விதமா விதமா போஸ் கொடு பாப்பா நான் எடுக்கிறேன்…. இன்னைக்கே பிரிண்ட் போட்டுத் தந்துரலாம் ஓகேவா…” துரை சொல்ல…


“சரி சரி… இன்னைக்கு நானும் புது ட்ரெஸ் போட்ருக்கேன்…” கண்மணி உற்சாகமாக மாறி இருக்க…


மருதுவோ துரையிடம் வந்திருந்தான்


“இங்க பாரு… அவ என்னோட மணி… உன் வேலையெல்லாம் அவகிட்ட காட்டாத… ஒழுங்கா எடுக்கனும்…” என்ற போதே துரையின் முகம் மாறி இருக்க… இருந்தும் மறைத்தவனாக…


“நான் உன்கிட்ட அப்புறமா பேசுறேன்… வா பாப்பா நீ.” என்று விலகியிருக்க… கண்மணிக்கு இப்போது மருதுவின் கோப முகமே தெரிய…


“துரை நீ வேண்டாம்… மருதுவே எடுக்கட்டும்” என்று மருதுவிடம் கேமராவைக் கொடுத்திருக்க… துரையும் தடுக்கவில்லை…


கண்மணியும் வித விதமான கோணங்களில் போஸ் கொடுக்க ஆரம்பித்திருக்க… மருதுவோ துரையைப் பார்த்தபடியே எடுத்துக் கொண்டிருந்தான்… அவன் கண்மணியைப் பார்த்த பார்வையே அவனுக்கு பிடிக்கவில்லை தான்…. எப்போதடா அவனை வீட்டை விட்டு அனுப்புவோம் என்றிருக்க..


உச்சகட்டமாக… அவள் மரத்தின் மேல் நின்று புகைப்பட எடுக்கச் சொல்ல… மருது புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க… அங்கிருந்து கீழே குதித்தவளை துரையோ கையில் ஏந்தி இருக்க… மருதுவுக்கு எங்கிருந்துதான் தான் அப்படி ஒரு கோபம் வந்ததோ தெரியவில்லை…


அதே நேரம் துரையும் மருதுவைப் பார்த்து சிரித்தபடியே… அவனை நக்கலாகப் பார்த்தபடியே… கண்மணியின் இடையை இறுகப் பிடித்திருக்க…


“இதையும் நாம சேர்ந்தே மடக்கலாமா…” மருதுவின் முன்னாலேயே… கண்மணியின் இடைகளில் அவன் கரங்கள் மெல்ல முன்னேற ஆரம்பித்திருக்க…

மருது வேகமாக அவன் சட்டையைப் பிடித்திருக்க…


“ஷேர் பண்றதெல்லாம் நமக்கு புதுசா என்ன… எத்தனை பேரை உனக்காக கூட்டிட்டு வந்திருக்கேன்… அப்போலாம் சுகம்… இப்போ கோபமா” எனும் போதே… மருது அவனைக் கீழே தள்ளி் மோதலில் இறங்கியிருக்க… கண்மணிதான் இருவரையும் பிரித்தாள்…


”உனக்கு அவ முக்கியமா போயிட்டால்ல… உன்னை அவகிட்ட இருந்து பிரிக்கல… என் பேரு துரை இல்லை… நீ என்னோட மருது அவ்ளோ ஈஸியா உன்னை விட மாட்டேன்” துரை மருதுவிடம் கத்திக் கொண்டு போக… கண்மணியோ புரியாமல் பார்த்தாள்… அவர்கள் இருவரின் உறவுக்கு பெயர் தெரியவில்லை… நட்பு என்று மட்டுமே பெயரிட்டு இருந்தாள்…



---


1,437 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon
bottom of page