top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி- 81



அத்தியாயம் 82


/*காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு


உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது என் காதல் எடையென்ன உன் நெஞ்சு காணாது ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே*/


அதிகாலை 4 மணி … முந்தைய தினம் படுக்கும் போதே 4 மணிக்கு எழ வேண்டும் என்று மனதில் நினைத்தபடியே படுத்ததாலோ என்னவோ…. ரிஷிக்கும் சரியாக 4 மணிக்கு உறக்கம் கலைந்து விழிப்பு வந்திருந்தது…


உறக்கம் கலைந்தாலும்… அவனால் எழத்தான் முடியவில்லை… நேற்றிரவு ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து சேரும் போதே மணி இரண்டைத் தொட்டிருக்க… உறங்கியவன் இதோ அடுத்து அதிகாலை 4 மணிக்கு எழுந்தும் விட்டான்… இடைப்பட்ட இரண்டு மணி நேரம் தான் அவனது மொத்த உறக்கமே…


உடலும் மனமும் உறக்கத்துக்கு ஆசைப்பட்டாலும்… முடியாதே…. பாண்டிச்சேரி செல்ல வேண்டுமே… நினைத்த அடுத்த நொடி… படுக்கையில் இருந்து வேகமாக எழுந்து அமர்ந்தவன்… விக்கிக்கும் செய்தியை அனுப்ப அடுத்த நொடி விக்கியிடமிருந்தும் பதில் வந்திருந்தது… அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருப்பதாக…


விக்கி அனுப்பிய செய்தியைப் பார்த்தவன்…. அதன் பின் அலைபேசியை தள்ளி வைத்தவனாக… சோம்பல் முறித்தபடியே ஒருவழியாக ரிஷி எப்படியோ எழப் போக… அவனால் எழ முடியவில்லை… கண்மணிதான் அவன் கைகளைப் பிடித்திருந்தாள்… அவனை எழ விடாமல்…


”ஏன் இவ்ளோ சீக்கிரம்” பாதித் தூக்கத்திலேயே விழித்தும் விழிக்காமலும் கண்மணி கேட்க


“நைட்டே சொன்னேனே… விக்கி வீட்டுக்கு போறேன்னு” சொன்னபடியே ரிஷி அவளைத் திரும்பிப் பார்க்க… கேள்வி கேட்ட கண்மணியோ மீண்டும் உறங்கி இருந்தாள்…


மெல்ல அவளிடமிருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டு… எழுந்தவன்… வேகமாகத் தன் அலமாரியைத் திறந்து… அணியும் உடையைத் தேர்வு செய்ய ஆரம்பித்தான்… இந்த இடைப்பட்ட காலங்களில் வழக்கமாக இதற்கெல்லாம் நேரம் செலவழிக்கும் ஆள் கிடையாதுதான் ரிஷி… கையில் கிடைப்பதை அணிந்து கொண்டு வேலைக்குச் சென்றவன் தான்… இன்று அப்படிப் போக முடியாது… எப்போதும் அணியும் சட்டை வகைகளை அணிய முடியாது என்பதால்… நிதானமாகத் தேர்வு செய்தவன்… ஒரு வழியாக தேர்வு செய்து எடுத்து மேசையில் வைத்தபடி… மீண்டும் மனைவியின் புறம் திரும்பி


“கண்மணி” என அழைக்க அங்கிருந்தோ பதில் இல்லை…


“மணி…” மீண்டும் சத்தமாக அழைக்க… இப்போது இலேசான அசைவு கண்மணியிடமிருந்து


“ஏய் எழுந்திருடி… இதை மட்டும் அயர்ன் பண்ணிக் கொடுத்துரு…. லேட் ஆகிருச்சு…”


“ப்ச்ச்…. தூங்க விடறீங்களா ரிஷி.. எனக்குத் தூக்கம் வருது” என்றபடியே தூக்கத்தைத் தொடர…


வேகமாக அவள் அருகே போய் அமர்ந்தவன்…


“ப்ளீஸ்டி… மீசை தாடியெல்லாம் ட்ரிம் பண்ணனும்டி…. 2 வீக்ஸ் ஆகிருச்சு… நான் மேல மொட்டை மாடிக்கு போய்ட்டு ஷேவ் பண்ணிட்டு குளிச்சுட்டு வந்துர்றேன்… நீ இதை மட்டும் அயர்ன் பண்ணி வச்சுட்டு… மறுபடியும் தூங்கிரு… ப்ளீஸ் ப்ளீஸ்…” என்று அவளிடம் கெஞ்ச…


“சரி… “ என்றாள் தான்… ஆனால் அப்போதும் எழாமல் உறக்கம் கலையாமல் சொல்ல…


“நான் வேணும்னா…. உன்னை தூக்கிட்டுப் போய் பாத்ரூம்ல போய் விட்டுட்டு போகவா அம்மு…” எனும் போதே சட்டென்று எழுந்து அமர்ந்தவள்… கையெடுத்துக் கும்பிட்டபடி


“அய்யா… சாமி… அயர்ன் தானே பண்ணனும்…. போங்க…” சொன்ன போதே


“அது…. அந்தப் பயம் இருக்கட்டும்… ஒர்க் அவுட் ஆகுதுடி… உனக்கும் பயம் இருக்கு” என்றபடியே ரிஷி எழுந்து வெளியே போக… கண்மணிக்கும் இப்போது உறக்கம் முற்றிலும் கலைந்திருந்தது…


எழுந்தவள்… பல் துலக்கி… முகம் அலம்பி வந்தவள் ரிஷி மேஜையில் எடுத்து வைத்திருந்த ஆடைகளை பார்த்தவள்… யோசித்தபடியே… அயர்ன்பாக்ஸை கையில் எடுத்தவளுக்கு மனதில் திடீரென்ற ஒரு யோசனை… முகம் பளிரென்று புன்னகையில் விரிய….


”மாட்டுனியா ரிஷிக் கண்ணா… இதோ வர்றேன்” என … உடைகளைத் தேய்க்காமல்… மீண்டும் அயர்ன் பாக்ஸை வைத்த இடத்திலேயே வைத்துவிட்டு வேகமாக மொட்டை மாடிக்கு ஏற ஆரம்பித்திருக்க…


ரிஷியோ அங்கிருந்த குளியலறைச் சுவரின் வெளிப்புற ஆணியில் கண்ணாடியை மாட்டியபடி தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்… தனக்குள் பேசிக் கொண்டும் இருந்தான்


”ச்சேய்… லாஸ்ட் வீக்கே ட்ரிம் பண்ணிருக்கலாம்… இன்னைக்கு எவ்ளோ பண்றது… பெர்ஃபெக்டா வேற பண்ணனுமே… பண்ணாமலும் போக முடியாது… இப்படியே போனால் அவ்ளோதான்… விக்கி தாத்தா நம்மள ரவுடின்னு நினைத்து அப்டியே அனுப்பிறப் போறாரு” தனக்குள் பேசிக் கொண்டே… முன்னால் வைத்திருந்த நாற்காலியில் இருந்த சவரம் செய்யும் பொருட்களை எடுக்க ஆரம்பித்திருக்க… அவன் மனைவியோ அவன் முன் வந்து நின்றிருந்தாள்…


கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவன்… இப்போது பார்வையை மனைவியிடம் மாற்றியிருந்தான்…


தன்னிடம் கேள்விக் குறியோடு புருவம் உயர்த்தியவனிடம்…


“ட்ரிம் பண்ணப் போறிங்களா… ரிஷிக்கண்ணா…” என இடுப்பில் கை வைத்தபடியே… கண்மணி ராகம் போட்டுக் கேட்க


“பார்த்தால் எப்படி தெரியுது… இதெல்லாம் வச்சுட்டு என்ன பண்ணுவாங்க… சாப்பாடா சாப்டுவாங்க… என்ன கேள்வி இது” ரிஷி நக்கலாக அவளுக்குப் பதில் சொன்னபடியே… தண்ணீரை எடுத்து தன் தாடியில் தடவ


”கீழ பார்த்தேன்…. உங்க ட்ரெஸ் செலெக்‌ஷன்லாம் …. எப்போதும் போல இல்லையே… அதுதான் “


“அதுக்கு என்ன… நேத்தே சொன்னேனே விக்கி தாத்தாவைப் பார்க்கப் போறேன்னு”


“ஹான்… அது எல்லாம் தெரியும்து… எனக்கு என்ன சந்தேகம்னா… ட்ரெஸ் மட்டும் அப்படி… ஆனால் லுக்கு அதே லுக்கா” கண்மணி ஒரு கையைத் தன் இடுப்பில் கை வைத்தபடி மறு கையால் அவன் முகத்தின் முன் ஆட்டி கேட்க


ரிஷி ஒரு நொடி அவளையே பார்த்தபடி இருந்தவன்… தன்னைச் சமாளித்தபடி… செருமிக் கொண்டவனாக… கண்மணியை முறைத்தவன்


“ஏண்டி… காலம் காத்தால இப்டிலாம் முன்னால வந்து நின்னா மனுசன் வேற வேலை பார்க்க முடியுமா… தள்ளிக்கோ” ரிஷி பார்வையை அவளிடமிருந்து மாற்றியபடியே கண்ணாடியில் தன் முகத்தில் பதிக்க


“பேச்சை மாத்தாதீங்க… நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளுங்க… ட்ரெஸ் சேஞ்ச் ஆகுதுன்னா… எல்லாமே சேஞ்ச் ஆகனும் தானே…சோ “ கண்மணி சுற்றி வளைக்க


“என்ன செய்ய… சொல்றதை நேரடியா சொல்லு… என்னாச்சு உனக்கு… இப்படிலாம் பேச மாட்டியே ரௌடி… “ என்றவன்… அவளை மேலும் கீழுமாகா நக்கலாகப் பார்த்து விட்டு….


“மல்லிப்பு அல்வான்னு… போன்ல என்ன பேச்சு பேசுன…. வீட்டுக்கு வந்தால்… கதவைத் திறந்து விட்டுட்டு… ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி தூங்குனவ நீதானே… பெரிய இவ மாதிரி பேசுன… போடி” ரிஷி இப்போது கடுப்பாக அவளைப் பார்க்க


“நான் சொன்னதை வாங்கிட்டு வந்தீங்களா.. வரலைதானே…. அப்புறம் என்ன… பெரிய இவரு மட்டும் ஒழுங்கா என்ன… வேலையைப் பாருங்க…” என்று அசால்ட்டாக அவனைப் பந்தாடியவள்…


“நான் என் வேலையைத் தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்… நீதான் இடையில வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க..” என்றபடி ஷேவிங் கிரீமை தடவப் போக


“ப்ச்ச்… நேத்து நைட் வரும்போதே நீங்க என்ன சொன்னீங்க???… 4 மணிக்கு எழனும்னு… வந்தது எத்தனை மணிக்கு???… 2 மணிக்கு… உங்களுக்கு உங்க உடம்பு மேல அக்கறை இல்லாம இருக்கலாம்… ஆனால் நான் உங்க பொண்டாட்டி ஆச்சே… அக்கறை இருக்கனுமே… அந்த அந்த… ஒரே காரணம் தான் ரிஷிக் கண்ணா” கண்மணி நீட்டி முழங்க


”ஹ்ம்ம்… என்ன மாதிரிலாம் பேசிச் சமாளிக்கிற… இந்த வசனத்தை எல்லாம் கதைனு சொல்லி நீ ஒண்ணு எழுதிட்டு இருக்கியே அதுல வை அம்மு… என்கிட்ட சொல்லாத…. வாயிலேயே பாயாசம் காய்ச்சுறவடி நீ….” முகத்தைத் திருப்பிக் கொண்டவன்


“ஆனால் உனக்கு இருக்குடி… என் தங்கச்சி மேரேஜ் முடியட்டும்… ஃபேக்டரி கைக்கு வரட்டும்… அதுக்கப்புறம் இருக்கு….. என்ன சொன்ன… என்ன சொன்ன… 24*7… அதுக்கு நான் அர்த்தம் சொல்றேன்… “


“ஓ ஓ… ஓஹ்… அப்படீங்களா ரிஷி சார்… நீங்க என்னை 24 ஹவர்ஸ்……. அப்படினா… அ…ந்… த கடிகாரத்துல இருக்குமே அதுவா… அப்புறம்… அப்புறம் என்ன சொன்னீங்க 7… அது நாளா… ஹ்ம்ம்ம்… திருவாளர் ரிஷி அவர்கள் ஒண்ணு மறந்துட்டீங்க… எங்களச் சொன்னீங்க வாயாலேயே பாயசம் காய்ச்சுவீங்கன்னு… … நானாவது வாயிலேயே பாயாசம் மட்டும் தான் காய்ச்சுவேன்…. ஆனால் சார் யார்னு தெரிய்ய்மா… வாயிலேயே வடை சுடுவீங்க… வடை என்ன விருந்தே போடுவீங்க… வெஜ்… நான் வெஜ்னு... மெனு… “ என்ற போதே….


ரிஷி அவளைத் தன் புறம் இழுத்தவன்…. அவள் கீழ் உதட்டைக் கைகளால் பிடித்து இழுத்தபடி…


“வாய் ஜாஸ்தி ஆகியிருச்சுடி…. எல்லாம் என்னைச் சொல்லனும்…. ஆஸ்திரேலியாவில இருக்கும் போது… போனை வச்சுருவியோன்னு பயந்து உன்கிட்ட பேச்சை வளர்த்து பேச வைப்பேன்ல… அதான்… என்கிட்டேயே நீ இவ்ளோ பேச்சு பேசுற…”


”ஆ… வலிக்குது” என்றபடியே அவனிடமிருந்து விலகியவள்… அப்போதும் அடங்காமல்


“ஓ… கண்மணிக்கு இவர்தான் பேசச் சொல்லித் தந்தாராமா… அடேங்கப்பா… நம்பிட்டாங்க… ப்ச்ச்… அதெல்லாம் விடுங்க… இப்போ நான் உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசனும்” என எச்சரிக்கையாக சற்று தள்ளி நின்றவளிடம்…


“விக்கி தாத்தாவை எப்படி சமாளிக்கிப் போறீங்கன்னு கேட்கப் போறியா”


“அதெல்லாம் இல்லை… இதெல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை… சும்மா கில்லி மாதிரி பெர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டு வந்துருவீங்க…. உங்களுக்கா பேசத் தெரியாது…. கண்டிப்பா விக்கியோட தாத்தா இந்த மேரேஜுக்கு சம்மதம் சொல்வாரு பாருங்க…. எனக்குத் தெரியாதா என் புருசனைப் பற்றி” கண்மணி பெருமையுடன் சொல்ல


”அடேங்கப்பா… என்ன ஒரு நம்பிக்கை என் பொண்டாட்டிக்கு…. ஆனால் கணக்கு டீச்சரம்மா இதை வஞ்சப் புகழ்ச்சி அணியில சொல்லலையே… ” என்றபடியே


“ஆனால் இந்த விக்கி தாத்தாவை எப்படி கரெக்ட் பண்றது அதைத்தான் யோசிட்டுட்டு இருக்கேன்டி…. ஏதாவது ஐடியா கொடேன்… ” எனும் போதே முறைத்தவளிடம்


“சரிம்மா…விக்கியைப் பற்றி பேசலை… நானே சமாளிக்கிறேன்…” என முடித்துக் கொண்டவனாக


“சரி…. ட்ரெஸ் அயர்ன் பண்ணிட்டியா… தள்ளிக்கோ… முதல்ல நீ இடத்தைக் காலி பண்ணு… அப்புறம் நான் ஏதாவது அட்வாண்டேஜ் எடுத்து ஏடாகூடாமானா நான் பொறுப்பில்ல” என ஷேவிங் மெஷனை கையில் எடுத்தவனிடம்….


“ரிஷி… ரிஷி…” கண்மணி பதற


“என்னடி… என்னாச்சு உனக்கு… என்னதான் உனக்கு வேணும்…”


“ஒண்ணுமில்ல ரிஷி… இந்த ட்ரிம் பணறதுக்கு பதிலா நீங்க ஏன் க்ளீன் ஷேவ் பண்ணக் கூடாது… ” கண்மணி பாவமாக முகத்தைப் வைத்தபடி சொல்ல


அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தவன்


”இதுக்குத்தான் இவ்ளோ பதறுனியா… இன்னைக்கு டைம் இல்லை… இன்னொரு நாள் பார்க்கலாம்… ” என்ற படியே ரிஷி மீண்டும் தன் வேலையில் கவனமாக ஆரம்பித்திருக்க


“அதெல்லாம் டைம் இருக்கும்… ரிதன்யாவை சம்பந்தம் பண்ணப் போற வீட்டுக்கு… அதுவும் விக்கி தாத்தாவை மீட் பண்ணப் போறிங்க… உங்கள முதன் முதல்ல பார்த்த உடனே ஒரு நல்ல இம்ப்ரஷன் கிடைக்க வேண்டாமா…”


“அதெல்லாம் என்னை ஏற்கனவே பார்த்திருக்காங்க… ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷனாம்… ஆமாம் உனக்கு என்ன வேணும் இப்போ முதல்ல அதை சொல்லு…”


“நீங்க இந்த தாடிய எடுக்கனும் அவ்ளோதான்… எடுத்தாகனும் ” பிடிவாத பாவனையில் சொல்ல ஆரம்பித்தவள்…


”ஆறு வருசமா உங்களை இப்படியே பார்த்து பார்த்து போரடிச்சுப் போச்சு… நான் பாவம் இல்லை… நீங்க தாடிய மட்டும் எடுங்களேன்… த்ரீ இன் ஒன் பர்போஸா இருக்கும்”



ரிஷி முறைக்க


“ஆமாம் ரிஷிக்கண்ணா… உங்களுக்கே தெரியும்… என்னோட ரொம்ப நாள் ஆசை… இந்த தாடியை உங்க முகத்தில இருந்து எடுக்கனும்… அது தெரியும் தானே… அடுத்து இரண்டாவது விக்கி தாத்தா கிட்ட இந்த தாடி எல்லாம் இல்லாமல் பேசினால்… ஒரு மாதிரி பணிவா இருக்கும்… பேச்சு வார்த்தையும் சுமூகமா முடியும்… மூணாவது … ” என யோசித்தவள்


”அது வேண்டாம்… 18 ப்ளஸ் டாபிக்…” என அவள் பேச்சை மாற்றிய போதே


”என்ன… கிஸ் கொடுக்கும் போதெல்லாம் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதோ” ரிஷி நக்கலாகக் கேட்க


“பின்ன இல்லை…யா… “ என்ற போதே ரிஷியின் கரங்கள் அவள் இடையை சுற்றி வளைத்திருக்க… இருப்பில் வெறும் துண்டோடு வெற்று மேனியில் நின்றிருந்தவனின் மேனியில் படாமல் அவனிடமிருந்து விலக முயற்சித்தவாறே…


“ஷேவ் பண்ணச் சொன்னேன் ரிஷிக்கண்ணா… ரொமான்ஸ் பண்ணச் சொல்லல… டைம் ஆகுது பாருங்க…” என்று தன்னைப் பற்றியிருந்த கைகளை பிரிக்கப் பார்க்க… அதுவோ உடும்பாக அவளைப் பற்றி இருக்க… வேறு வழியின்றி அவனிடமே சரணடைந்தவளிடம்


“அப்டியா…” என அவள் காதில் கிசுகிசுத்தவனின் மூச்சுக் காற்றே… அந்த அதிகாலை குளிரையும் மீறி அவளுக்குள் அனல் மூட்ட ஆரம்பித்திருக்க… கண்மணி அவஸ்தையுடன் அக்கம் பக்கம் பார்த்தபடியே அவனிடமிருந்து விலக நினைக்க… ரிஷியோ அவன் பிடித்த பிடியை கிஞ்சித்தும் விடவில்லை


“சும்மாதானே… இருந்தேன்… மாடி ஏறி வந்து… நின்னு… பேசி உசுப்பேத்தி விட்டுட்டு…. அப்புறம் எதுக்கு மேடத்துக்கு இப்படி ஒரு பார்வை… கணக்கு டீச்சரம்மா போட்டுட்டு வந்த கணக்கு தப்பாகிருச்சோ…. ஆனால் பாருங்க மேடம்… நாங்கள்ளாம் அந்த புத்தகக் கணக்குல வேணும்னா வீக்கா இருக்கலாம்.. இந்தக் கணக்குல செம்ம ஸ்ட்ராங் தெரியும்ல…” என தன்னோடு இன்னும் அணைத்துக் கொண்டவனின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொண்டு தடுமாறி்னாள் தான் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்….


“ஹ்ம்ம்… ஆனால்… ரிஷிக்கண்ணா… நீங்க ஒண்ணை மறந்துட்டீங்க…. அப்டியே… கொஞ்ச நாள் முன்னால ஃப்ளாஸ்பேக் போங்க…. பேருக்கு ஏத்த மாதிரி சாமியாரா இருந்த உங்களை…. இந்தக் கணக்கு டீச்சர்தான் வலுக்கட்டாயமா இந்த சம்சாரக் கடல்ல விழ வச்சது… கணக்குல ஸ்ட்ராங்காம்… யார்கிட்ட” என எப்படியோ அவனை சீண்டி விட்டு விலக நினைத்திருக்க


“ஓ…. ஓ… மேடம் நீங்க எங்களை சம்சாரக் கடல்ல விழ வச்சீங்க… நாங்களும் உங்களுக்கு ஒண்ணு ஞாபகப்படுத்தனும்… சொல்லட்டுமா… நீங்களும் எங்க கூடவே கொஞ்சம் ஃப்ளாஸ்பேக் வர்றீங்களா” என்றவன்


“சம்சாரக் கடல்ல இழுத்துட்டு போனிங்க…. அதெல்லாம் சரி…. ஆனால் மேடம் உங்களுக்கு நீச்சலே தெரியாமலேயே என்னையும் உள்ள இழுத்துட்டு விழுந்தீங்களே… அது ஞாபகம் இருக்கா… உங்கள… “ என்ற போதே… அவன் வாயைத் தன் கைகளால் மூடியபடியே… வேகமாக அவனைத் தள்ளிவிட்டு நகரப் போக… விலகியவளை விட்டு விலகினாலும்… விடாமல் கைப்பிடித்து நிறுத்தியவன்… இப்போது வம்பிழுக்காமல்…. சிரித்தபடியே…. அவளின் மூக்குத்தியை தொட்டுப் பார்த்தபடி….


“இருக்கா இல்லையான்னு செக் பண்ணேண்டி… அப்போப்ப இது காணாமல் போய் உன்னைக் காட்டிக் கொடுத்துருது…. சரி விடு… இப்போ என்ன நான் க்ளீன் ஷேவ் பண்ணனும்… இதுதானே உன் அக்ரிமெண்ட்… பண்ணிடலாம்…” என்றவனிடம் அப்பாவியாகத் தலையாட்டிய கண்மணியிடம்


“என் பொண்டாட்டி கேட்டு இல்லைனு சொல்லிருவேனா என்னா” என மீண்டும் அவள் கையைச் சுண்டி இழுத்து தன்னிடமே விழவைத்தவன்


“ஓகே… ஆனால் த்ரீ இன் ஒன் பர்போஸ் வேணும்னா… இப்போ டூ இன் ஒன் பர்போஸ் ஒர்க் அவுட் ஆகனும்… நீ ஷேவ் பண்ணி விடுறியா… இதுக்கு ஓகேனா சொல்லு… நான் க்ளீன் ஷேவ் பண்றேன்… இல்லைனா… அப்டியே கெளம்பு” என்று ரிஷி தன் பக்க ஒப்பந்தத்தை வைக்க… கண்மணியும் இப்போது… அசரவில்லை…


”இவ்ளோ தானே… இது ஒண்ணுதான் நான் உங்களுக்காகப் பண்ணலை… அதுவும் பண்ணிடலாம் இன்னைக்கு… எப்படி பண்ணனும்… நீ….நீங்க… சொல்றீங்களா… இல்லை யூ ட்யூப் பார்த்து நானே பண்ணி விடவா” கண்மணியும் கெத்தாகக் கேட்க…


அவளைப் குறும்புடன் பார்த்தவன்


“நாங்க என்ன சொல்றோமோ…. அதை மட்டும் செய்யுங்க… அதிகப்பிரசிங்க்கிதனம் எல்லாம் வேண்டாம்… அந்தக் ட்ரிம்மர் அப்புறம் அது… ஹான் அதுதான் எடு…” என்றபடியே கண்ணடித்தவனின் விரல்கள் அவள் இடையை அழுத்தி தன்னோடு சேர்த்திருக்க…


“என் கைல கத்தி… ட்ரிம்மெர்லாம் கொடுத்துட்டு… தைரியம் தான் ரிஷி…” பேசியபடியே பொருட்களை எடுத்து சரி பார்க்க…


“என் பொண்டாட்டி உனக்கு… உன்னை விட என் உயிர் உனக்குத்தானே முக்கியம்… அந்தத் தைரியம்தான் தான்… சரி சரி பண்ணு…” அவளை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவனாக முகத்தைக் காட்ட


“முதல்ல இந்தப் பக்கம்” கண்மணி களத்தில் இறங்கி இருக்க


“ஓய் அம்மு… எனக்கு இப்போ என்னென்னவோ பண்ணனும்னு தோணுதேடி… ” அவளிடம் மெல்ல கிசுகிசுக்க… இப்போது கண்மணி கணவனின் கிறக்கமான பேச்சில் தன்னை இழக்கவில்லை…. மாறாக காரியமே கண்ணாக அவன் தாடையைத் தொட…


“அட்லீஸ்ட் பாட்டுப் பாடவா…” ரிஷி இன்னும் அருகில் வந்து அவள் காதில் சேதி சொல்ல….


“பாடலாம்…. ஆனால்.. கண்மணின்ற வார்த்தை அதுல வரக் கூடாது… கண்மணின்ற வார்த்தைல வர்ற பாட்டெல்லாம் போன்ல எடுத்து வச்சு… மொபைல்ல… போட்றதோட மட்டுமில்லாமல்….டெய்லி பாடி என்னைக் கொல்றீங்களே… அது மட்டும் கூடாது…”


“ஏண்டி… அவ அவனுக்கு வெறும் சிச்சுவேஷன் சாங் கிடைக்கும்… அதுலயே ஸ்கோர் பண்றானுங்க… ஆனால் பாரு.. பொண்டாட்டி பேர்லயே சிச்சுவேஷன் சாங் பாடுற சான்ஸ் எனக்குக் கெடச்சுருக்கு… ஆனால் நீ என்னைப் பாட விடாமல் கட்டிப் போட்ற… சரி விடு… ’கண்மணி’ வார்த்தைல வர்ற சாங்க் பாடக் கூடாது அவ்ளோ தானே…. மாமா பெர்பார்மன்ஸைப் பாரு” என சவால் விட்டபடி பேசியபோதே….


”ப்ச்ச் கொஞ்சம் குனிங்க ரிஷி…. இல்லை இல்லை இதுல உட்காருங்க” என அவனை நாற்காலியை எடுத்து அவன் புறம் போட்டு… அமர வைத்தவளின் இடையில் கைப் போட்டு வாகாக அமர்ந்தவனிடம்


“மிரர்ல செக் பண்ணிக்கோங்க…சொதப்பினாலும் சொதப்பிறப் போறேன்” என தீவிர பாவனையில் பேச ஆரம்பித்தவளிடம்…


”நாணம் என்னை விட்டுச்சே மோகம் என்னை தொட்டுச்சே கையணைக்க கையணைக்க”


ரிஷி அந்த அதிகாலை வேளையில்… கரகரப்பான குரலில் பாட ஆரம்பித்திருக்க


கண்மணி…. அதில் எல்லாம் அசரவில்லை…. தன் கவனத்தையும் சிதற விடவில்லை… அதற்கு காரணமும் இருந்தது… அதாவது அவள் கவனமாக இல்லாவிட்டால்… ரிஷியின் கன்னம் காலி…. அதனாலேயே என்னவோ… கணவனின் சரசங்கள் எல்லாம் அவளை இம்சிக்க வில்லை… ரிஷிக்கு அதுவே இன்னுமே வாய்ப்பாகப் போனது….


”கன்னி விழி பட்டுச்சே காளை மனம் கெட்டுச்சே மெய்யணைக்க மெய்யணைக்க”


அவன் அடுத்தடுத்துப் ஃபாடிக் கொண்டிருக்க… இப்படியும் சொல்லலாம் அவளைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்க… எதற்கும் அசராமல் கவனமாகத் தன் வேலையில் இருந்தவள்… எப்படியோ ஒரு பக்க கன்னத்த்ல்… அவன் தாடி முழுவதையும் எடுத்திருக்க…


”தேகம் தன்னை நாளும் மூட ஆடை இந்த ஆண் ஆச்சே”


”முறைத்தவள்… இப்போ நான் தான் உங்களை மூடிட்டு இருக்கேன்… சிச்சுவேஷன் சாங்கை ஒழுங்கா பாடுங்க பாஸ்… ”


ரிஷி இப்போது இன்னும் கிறக்கமாக…


”முன்னாலும் பின்னாலும் முக்காட இந்நேரம் மோகம் கொண்டு அப்பப்பா தப்புக்கு தவிச்சேன்”

”ஹப்பா… அடங்கமாட்டீங்களா… காலம் காத்தால… என்ன ஒரு சாங்… உதை வாங்கப் போறிங்க ரிஷி…” கண்மணி அவன் தோளிலேயே அடி போட… அதெல்லாம் அவன் கண்டு கொண்டால் தானே


”வாழவைக்கும் காதலுக்கு ஜெய் வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய் தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே அம்பு விட்ட காமனுக்கும் ஜெய் வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜெய்”


அவன் பாடிக் கொண்டிருக்கும் போதே அவள் பார்வை அவனைத் தாண்டி… சென்று மீண்டு வந்திருக்க… ரிஷி இப்போது பாடலை நிறுத்தியபடி யோசனையுடன் அவளைப் பார்க்க


“வாசலுக்குத் தென்றல் வரலை… எங்கப்பா தான் வந்திருக்கார்” கண்மணி பதறாமல் சொல்ல…


கண்மணி என்னவோ பதறாமல்தான் சொன்னான்… பதறியதென்னவோ ரிஷிதான்… கண்மணி சொன்ன அடுத்த நொடி… சட்டென்று ரிஷி கண்மணியை விட்டபடி… தள்ளி நின்றபடி… வேகமாகத் திரும்பிப் பார்க்க… அங்கோ எவருமில்லை… அதே நேரம்… கண்மணி அவனை விட்டு மாடிப்படிக்கு அருகே சென்றிருக்க


“ஹேய்… ஃப்ராடு இது சீட்டிங்… அப்பா வந்தார்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்ட தானே… ஏய் யார்டி இந்தப் பக்கம் பண்ணுவா… “


“ஒரு பக்க கன்னத்தை முடிச்சுட்டேன்… இனிமேல் நான் கெஞ்சத் தேவையி்ல்லையே… அடுத்த கன்னம் கண்டிப்பா பண்ணித்தான் ஆகனும்… சோ நீங்களே பண்ணிட்டு… வேகமா கீழ இறங்கி வாங்க செல்லம்…”


”ஓய் ரவுடி… ப்ரிலியண்டா பேசுறீங்கன்னு நினைப்பா… என்னைப் பார்த்து பயந்து ஓடுறதானே… அதுதாண்டி உண்மை “ ரிஷி இப்போது வம்பிழுக்க…


“பயமா… எனக்கா… உங்க கிட்டயா… நீங்க விக்கி வீட்டுக்கு போகனுமே… அந்த ஒரு காரணம் தான் பாஸ்… வேலையைப் பாருங்க…. ஹ்ம்ம்… சீக்கிரம்” என்று அவனை கேலியாகப் பேசியபடியே… கீழே இறங்கிப் போய் விட…. ரிஷிக்கு வேறு வழி… அவளை மனதுக்குள் திட்டியபடியே… அடுத்த கன்னத்தில் சவரம் செய்ய ஆரம்பித்திருந்தான்….


---


அடுத்த பதினைந்து நிமிடங்களில் குளித்து முடித்து வந்தவன்,… தங்கள் அறைக்கு வந்திருக்க… கண்மணி அறையில் இல்லை…. ஆனால் அதே நேரம்அவன் உடைகளைத் தேய்த்து வைத்திருந்தாள்… எடுத்து அணிந்தவன்… தன்னைக் கண்ணாடியில் பார்த்தபடியே தலைக் கேசத்தை வாரிக் கொண்டிருக்க….


கண்மணியும் அடுத்த சில நிமிடங்களில் வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டு மாடிக்கு வந்திருந்தாள்…


“ஹாய் ரிஷிக் கண்ணா… ” என அழைத்தபடியே வந்தவளை திரும்பிப் பார்க்காமாலேயே… கை நீட்டி… வேகமாக இழுக்கப் போக…



“ஏய்… இதானே வேணாங்கிறது” விலாங்கு மீனாக அவனிடமிருந்து நழுவியவள்


”நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னால… வாசல் தெளிக்கனும் அதான்… கீழ போனேன்… காஃபி போடலாம்னுதானே போனேன்…. ஆனால் நீங்க குளிச்சிட்டு வந்திருப்பீங்கன்னு… இந்த புது லுக்ல… அப்டியே நம்ம புருசனை சைட் அடிச்சுட்டுப் போயிறலாம்னு ” எனப் பேச ஆரம்பித்தவளிடம் ரிஷியும் திரும்ப…


ஒரு நிமிடம் கண்மணி அப்படியே அவனைப் பார்த்தபடி நின்று விட்டாள் தன் பேச்சையும் மறந்து… சில நிமிடங்கள் ரிஷியைப் பார்த்தபடி அவளையே அவள் மெய் மறந்தபடி நின்றிருக்க… ரிஷி அவள் முன் வந்து கைகளை ஆட்ட….


“ஹேய் ரிஷிக் கண்ணா… சூப்பர் ரிஷி செம்ம…95 % அதே ரிஷி… என்ன அந்தக் கண்ல இன்னோசன்ட் லுக் இருக்கும்.. அது இல்லை இப்போ… பரவாயில்ல… அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் ” கண்மணியின் குரலில் அப்படி ஒரு சந்தோசம்… அவள் குரல் கூட சற்று நெகிழ்ந்துதான் வெளியே வந்திருந்தது…. இப்போதும் தன் பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்தபடி நிற்க…


“அப்டியா… என்ன பண்றது… அவன் பொண்டாட்டி முன்னால நிற்கிறாளே… எப்படி இன்னொசண்ட் லுக் வரும்… வேற லுக் தான் வரும்” என்றவன் அவளைத் தன் புறம் இழுக்க… கைகளை நீட்ட ஆரம்பித்த போதே… அவனிடம் மாட்டாமல் அந்த அறையின் மற்றொரு புறம் சென்றவளைத் துரத்த நினைக்கும் போதே


“ரிஷி…. ரிஷி நில்லுங்க… அப்டியே நில்லுங்க… இப்போ திரும்புங்க” எனக் கட்டளைகளைப் பிறப்பித்தபடியே அவளது அலைபேசியில் அவனைப் படம் எடுத்துக் கொண்டிருக்க…


“ஏய் என்னடி பண்ற” ரிஷி குழப்பமாகக் கேட்க


“ரிஷி ரிஷி… கீழ ஊஞ்சல் இருக்குதானே… நீங்க ஊஞ்சல் ஆடுவீங்களாம்…. அதையும் போட்டோ எடுப்போமாம்… உங்கள முதன் முதல பார்த்தப்போ ஒரு சீன் ஞாபகம் இருக்கே… மேட்ச் பண்ணுவோம்… ” கண்மணி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்க


“ஏய் அடங்குடி… என்னைப் பார்த்தால் எப்படி தெரியுது…என்னை வச்சு காமெடி பண்றியா என்ன… வேற வேலை ஏதாவது இருந்தால் போய்ப்பாரு..” என்றபடி முறைக்க…


”ஓகே… ஓகே… ஓவரா தெரியுதோ… சாரி சாரி…. சரி விடுங்க…” எனும் போதே அவன் அருகில் வந்தவள்


“ரிஷி ரிஷி… நாம ரெண்டு பேரும் ஒரு செல்ஃபி எடுத்துப்போம்… ஆஸ்திரேலியால எத்தனை பொண்ணுங்களோட செல்ஃபி எடுத்தீங்க… பொண்டாட்டிக்காக ஒண்ணு… ஒண்ணே ஒண்ணுதான்… ப்ளீஸ் ப்ளீஸ்” குழந்தையாக மாறி கெஞ்சலாகக் கேட்ட மனைவியை கண்களில் நிறைத்துக் கொண்டவன்… அவளிடமிருந்த அலைபேசியை தன் கைகளில் வாங்கியவனாக…. அவளைத் தோளோடு அணைத்தபடி அலைபேசியை உயர்த்த…


அதே நேரம்ரிஷி அம்சமாக உடை அணிந்து ஆண் அழகனாகக் காட்சி அளிக்க… கண்மணியோ இரவு உடையில்… கூந்தல் கலைந்து… வாடி வதங்கி இருக்க… அதைக் புகைப்படத்தில் கண்ட கண்மணி


“ரிஷி ரிஷி… ஒரு நிமிசம் ” எனக் கண்மணி் அவனிடமிருந்து விலக


“என்னாச்சு….” ரிஷி திரும்பிப் பார்க்க


“ரிஷி… நான் கேவலமா இருக்கே… நீங்க மட்டும் ரேமண்ட் மாடல் மாதிரி இருக்கீங்க… உங்க பக்கத்துல நான் வேலைக்காரி மாதிரி இருக்கேன்… … வெயிட்… அட்லீஸ்ட்… புடவையை மட்டும் மாத்திட்டு வந்துறேன்… “


“அப்படில்லாம் இல்லைடி… நல்லாத்தான் இருக்க… நீ எப்படி இருக்கேன்னு நான் சொல்லனும்” ரிஷி பேசியபடியே புகைப்படம் எடுக்கப் போக…


”ப்ளீஸ்… 2 மினிட்ஸ்…” என்றபடி தள்ளிச் சென்றவள் முந்தையை நாள் இரவு கழட்டிப் போட்ட புடவையை நோக்கிப் போக…


“வெயிட் பண்றேன்… ஆனால் என்னைலாம் வெளிய போகச் சொல்லக்கூடாது…” எனக் கறாராக பேசியபடி ரிஷி அங்கிருந்த மேஜையின் மேல் அமர…


“உங்களை யார் போகச் சொன்னது… ஒரே ஒரு கண்டிஷன் தான்… இருந்த இடத்தில இருந்து நகரக் கூடாது…” கண்மணி புடவையைக் கையில் எடுக்க…


சொன்ன மனைவியைக் கடுப்பான பார்வை பார்த்தவன்


“இதுக்கு என்னை வெளியில போடான்னே சொல்லிருக்கலாம்டி நீ…. “ என்றபடி ரிஷி வெளியேறப் போக…


“அபச்சாரம் அபச்சாரம்… உங்களைப் போய் வெளியில போகச் சொல்வேனா ரிஷிக்கண்ணா…”


“ஆமாடி… நீ சொன்னதே இல்லை…” ரிஷி பதில் கொடுத்தபடி அவளைத் திரும்பிப் பார்க்க


“அதெல்லாம் கண்மணி இல்ல வீட்டுக்காரம்மாவா சொன்னது… ரிஷிகேஷோட வீட்டுக்காரம்மாவா இல்லை…” காதுகளில் விழும்படி சத்தமாகச் சொன்னவள்… அப்போதும் உடை மாற்றாமல் இருக்க…


“செல்ஃபி எடுப்போமா… இல்லை அப்படியே இறங்கிப் போகவா…” ரிஷி மிரட்டலாகக் கேட்க


”சரி சரி… கோபப்படாதீங்க பாஸ்… ஒரு போட்டோக்கு ரொம்பத்தான் பிகு பண்றீங்க….” அவனை வேண்டுமென்றே சீண்டியவளிடம்… அவன் பதில் பேசாமல் படாரென்று கதவை மூடியபடி சொல்ல … இவளோ புன்னகையுடன் உடை மாற்ற ஆரம்பித்திருந்தாள்…


---


புடவையை அணிந்து முடித்தவள்… வெளியே நின்றிருந்த ரிஷியை அழைக்க…. அவனும் வர… அடுத்த சில நிமிடங்கள்… இருவருமாக விதவிதமான கோணங்களில் தங்களைப் புகைப்படம் எடுத்து முடித்திருக்க… கண்மணி அலைபேசியில் அந்த புகைப்படங்களைப் பார்த்தபடியே….


“ரிஷி… இது நல்லா இருக்கு ரிஷி… இதை ஃப்ரேம் பண்ணுவோமா… நாம ஆஸ்திரேலியால எடுத்த போட்டோக்கு பக்கத்தில இதை வைக்கனும்…” அவள் பேசிக் கொண்டே இருக்க… ரிஷியிடமிருந்தோ பதில் வரவில்லை…


”சொல்லுங்க ரிஷிக் கண்ணா… இது ஓகே தானே….” கண்மணி கேட்க… இப்போதும் ரிஷியிடமிருந்து மௌனமே…


“ரிஷி…” என்றபடி நிமிர்ந்து அவன் புறம் திரும்ப… அவன் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க… அதுவும் கண்களில் காதலும் மோகமும் கலந்த அனலை அந்தப் பார்வை கொண்டு வந்திருக்க…


கணவனின் பார்வை புரிந்த மனைவியாக உள்ளுணர்வு எச்சரித்திருக்க… தன்னையுமறியாமல் அவனை விட்டுத் தள்ளி நின்றவளாக


“ரிஷி… பாண்டிச்சேரி போகனும்… இப்படிலாம் பார்வை பார்த்தால்… எல்லாக் காரியமும் கெட்ரும்… போங்க போங்க சமத்து புள்ளையாம்… இப்போ ரிதுவோட அண்ணனா போய் வேலையைப் பாருங்க…” என்று மெதுவாக அவனை விட்டு நகரப் போனவளிடம்


சட்டென்று அவள் முந்தானையை இழுத்தவன்… அடுத்த நொடி தனக்குள் கொண்டு வந்திருக்க… அவள் அணைத்திருந்த வேகமே அவன் தாபத்தைச் சொல்ல… விலக முயற்சி செய்தாள் தான்… ஆனால் அவன் கரங்கள் அவள் கரங்களை சிறை செய்திருக்க…. நழுவ முடியாமல்


‘ரி… ரிஷிக்கண்ணா…” கண்மணி மென்று முழுங்க


”ரௌடி… உன்கிட்ட மாட்டிட்டு தவிக்கிறேண்டி… முதன் முதல்ல உன்னைப் பார்த்தப்போ உன்கிட்ட இப்படி மாட்டுவேன்னு…. பைத்தியமாவேன்னு நினைச்சுக் கூட பார்க்கலடி… என்னடி பண்ணின என்னை… பைத்தியக்காரனா சுத்தவிடுறடி… ஐ லவ் யூடி….” என்றவனின் உதடுகள் அவள் காது மடலில் கதை சொல்லி… அவள் கழுத்து வளைவில் பயணிக்க…


“நீங்க சொன்ன டைலாக்கை அப்டியே காபி பேஸ்ட் பண்ணிக்கோங்க… அந்த ’ஐ லவ்யூ டி’ யை ’ஐ லவ் யூ டா மாத்திக்கங்க’” என அந்த நேரத்திலும் ரிஷியிடம் வம்பிழுக்க…


“இப்போ கூட ஸ்மார்ட்னு ப்ரூவ் பண்றடி… என் புத்திசாலி பொண்டாட்டியே…” என்றவனின் உதடுகள் சொற்களை உச்சரிக்க… கரங்களோ அவன் தாபத்தை தீர்க்கும் வழி தேடி பயணத்தை ஆரம்பித்திருக்க


“ரி… … ஷி… கா… காஃபி போடப் போகனும்…” எனும் அவள் அவனிடம் நழுவ முயற்சிக்க….


“காஃபியா…” ரிஷி அவள் இதழில் பார்வை பதித்தபடியே…


“ப்ச்ச்…. நல்ல விசயம் பேசப் போறேன்… சோ நல்லது நடக்கனும்னு ஸ்வீட்டா வேணுமே… பால் பாயாசம் பண்ணுவோமா… “ தன் ஒரு கையால் சிறை பிடித்திருந்த அவள் கரங்களை விட்டபோதே…. அவன் உதடுகள் அவள் இதழ்களின் அருகில் சென்று முற்றுகையிட ஆரம்பித்திருக்க.


கண்மணி இப்போது பேசினால்… நிச்சயம் அவள் இதழ்கள் அவன் உதட்டைத் தீண்டித்தான் பேச வேண்டும்…. கண்மணியை வார்த்தை கூடப் பேச முடியாமல் ரிஷி சிறை எடுத்திருக்க… எப்படியோ சமாளித்தவளாக… மெல்ல விலகி….


“அப்போ விடுங்க… பால் பாயாசம் வேணும்னா விட்டால் தானே நான் பண்ண முடியும்…” என்ற போதே… அவள் குரல் அவன் தாபத்தில் பாதியைத் தனக்குள் கொண்டு வந்திருக்க


“அதெல்லாம் இங்கயிருந்தே… பண்ணலாம்… பண்ணுவோமான்னுதானே கேட்டேன்… இந்தப் பால்பாயாசத்துக்கு அந்த இன்கிரிடியெண்ட்ஸ்லாம் லாம் தேவையில்ல… நீ நான் மட்டும் போது… நீ கவலைப் படாத நானே பார்த்துக்கிறேன்… “ என்றபடி அவன் உதட்டை அவள் இதழில் வைக்க…


அதே நேரம்… கண்மணி… நொடியில் அவனை விட்டு முகத்தை விலக்கி… அவனுக்கும் அவளுக்கும் இடையில் அயர்ன் பாக்ஸைக் கொண்டு வந்திருக்க…


ரிஷியும் இப்போது அதிர்ந்து விலகி இருக்க


“பால் பாயாசமா தேவைப்படுது சாருக்கு…” கண்மணி அவன் முன் அயர்ன் பாக்ஸை அப்படியும் இப்படியுமாக ஆட்ட


“அடியே… ரௌடி… இதை வச்சுதான் மிரட்டுவாங்களா…. சுட்ருந்தா என்னா ஆகிருக்கும்…. ”


“என்ன ஆகிருக்கும்… ரிஷிக்கண்ணாக்கு சூடா பால் பாயசம் கிடச்சிருக்கும்” எனச் சிரிக்க ஆரம்பித்திருக்க…


“உன்னை…” என ரிஷியும் அவளை தன் புறம் இழுக்க


“வேண்டாம் ரிஷி… அப்புறம்… ஏதாவது ஆனா என்னைச் சொல்லக் கூடாது… “


ரிஷியோ அவளை விடாமல் தன் புறம் இழுக்க…


“பார்க்கலாம்… எங்க சுடு பார்க்கலாம்..” எனும் போதே


“ரிஷி விளையாடாதீங்க… விக்கி தாத்தாகிட்ட பேசனும்… வாய்தான் இன்னைக்கு உங்களுக்கு முக்கியம்… பார்த்துக்கங்க“ அவனை வம்பிழுக்க


“அப்படியா… ப்ளாக்மெயில் பண்றியாடி நீ… பார்த்துறாலாம்டி” என ரிஷியும் அவளிடம் சரிசமமாக போராட ஆரம்பித்த போதே… சட்டென்று ரிஷி அமைதி ஆகி … கண்மணியை விட்டு விலகியவன்…


“ஏய் மாமாடி…” எனக் கிசுகிசுக்க


கண்மணியோ


“அப்பாவா….. ஏன் ரிஷிக்கண்ணா உங்களுக்குச் சொந்தமா யோசிக்கத் தெரியாதா… ஹாட் கிஸ் “ எனக் கண்மணி வாயை மூடாமல் பேச ஆரம்பிக்க


”வாயை மூட்றி… ” பல்லைக் கடித்துக் கொண்டு… தரையைப் பார்த்தபடி…. அவள் காதில் மெதுவாக சொல்ல…


“அப்பப்பா… என்ன ஒரு பவ்யம்… என்ன ஒரு நடிப்பு” என சொன்னபடியே திரும்ப.. வாசலிலோ அவள் தந்தை நட்ராஜ்… உண்மையிலேயே நின்று கொண்டிருக்க… அடுத்த நொடி…


“அப்பா…” கண்மணி நாக்கைக் கடித்தவளாக… வேகமாக ரிஷியை விட்டு தள்ளி நிற்க…


அவரின் கண்கள்… அவள் கையில் இருந்த அயர்ன் பாக்ஸை தொட்டு மீண்டு மீண்டும் அவளிடம் வர… அவர் பார்வை உணர்ந்தவளாக…. வேகமாக அதை மேசை மேல் முதலில் இருந்த இடத்திலேயே வைத்தபடி


“சும்மா அப்பா…“ கண்மணிக்கே அவள் பேசியது கேட்கவில்லை… நட்ராஜுக்கு கேட்குமா என்ன… ரிஷியோ உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க…


“மணிடாம்மா… இதெல்லாம் சம்மந்தி அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க…”


“இல்லப்பா… சும்மா விளையாட்டுக்கு” என பவ்யமாகச் சொல்ல.. அதற்கு மேல் கண்மணியிடம் பேச்சை வளர்க்காமல்…


நட்ராஜ் ரிஷியிடம் திரும்பி…


“மொட்டை மாடில லைட் எரிந்தது… எக்சர்சைஸ் பண்றேன்னு பேச வந்தேன் ரிஷி… சரி அப்புறமா பேசுறேன்” என வேகமாக இறங்கிப் போய்விட… கண்மணியோஒ தலையில் கை வைத்தபடி….


“ஹையோ… உங்களால தான் எல்லாம்… எங்க அப்பாவே என்னைத் திட்டிட்டாரு…” ரிஷியைத் திட்ட ஆரம்பிக்க


“ஏன் உனக்கு இவ்ளோ பதட்டம்… நீ என்ன முத்தமா கொடுத்த… அயர்ன் பாக்ஸை வச்சு மிரட்டிட்டுட்டுத்தானே இருந்த… சீனைப் போடாதடி…”


“பேசாதீங்க… ஒரு வார்த்தை பேசுனீங்க… உண்மையிலேயே… அந்த அயர்ன் பாக்ஸை வச்சு இழுத்துருவேன்.. உங்கள” என அவனை அடிக்க ஏதுவாக பொருட்களைத் தேட


“முதலாளி…. உங்க பொண்ணப் பாருங்க… நீங்க அவ்ளோ சொல்லியும் மறுபடியும்… என்னைத் திட்றா…. அடிக்க வர்றா… முதலாளி…. மாமா…. “ என மீண்டும் ரிஷி கத்த ஆரம்பிக்க


அடுத்த நிமிடம் ரிஷியின் உதடுகள் உச்சரித்த வார்த்தைகள்… கண்மணியின் இதழ்களுக்குள் சரணடைந்திருக்க… சரண்டைந்த இதழ்கள் எப்போது தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது என்று தெரியவில்லை… கண்மணி மெல்ல அவனிடம் தன்னை இழந்து கொண்டிருந்தாள்… தவணை முறையில்…. தவணைகளோ நிறுத்தம் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்க…. மாடிப்படியில் யாரோ மீண்டும் படியேறும் சப்தம்… இருவரின் மோனநிலையைக் கலைக்க… இருந்தாலும் ரிஷி அவளை விடாமல்


”ஏய் என்னடி…. ஏன் ப்ளீஸ் …ப்ளீஸ்,,, இன்னும் கொஞ்சம் “ கெஞ்ச


“உதை வாங்குவீங்க… ஏற்கனவவே அன்லிமிட்டெட்ல போய்ட்டு இருக்கு… இன்னும் கொஞ்சமா,… அடி” கள்ளச் சிரிப்புடன் எச்சரித்தபடியே கண்மணி அவனிடமிருந்து விலகி… வெளியே வந்திருக்க…. அங்கு மேலே ஏறி வந்து கொண்டிருந்ததோ… விக்கி…


அறை வாசலிலேயே கண்மணி நின்று விட்டாள்…


“நல்ல வேளை…. சுதாரிச்சோம்” படபடத்த இதயத்தை மறைத்தபடியே தன்னைச் சமாளித்து விக்கியைப் பார்க்க… விக்கியும் அவள் அருகே வந்து நின்றவனாக…


“குட்மார்னிங் கண்மணி” மலர்ந்த முகத்துடன் புன்னகையுடனே அவள் முகம் பார்த்துச் சொல்ல…


“ஹ்ம்ம்… குட்மார்னிங்” கண்மணி எப்படியோ வழக்கமான அவள் குரலைக் கொண்டு வந்து சொல்லி முடித்திருக்க… ரிஷியும் இப்போது கண்மணியின் அருகே வாசல் படியில் வந்து நின்றிருந்தான்….


“வாடா… ரொம்ப சீக்கிரம் வந்துட்ட போல” என நண்பனிடம் இயல்பாகப் பேச ஆரம்பிக்க… கண்மணி இப்போது


“ரிஷி… காஃபியா… டீயா… குடிப்பாங்களா… உங்க ஃப்ரெண்ட்” எனக் கேட்டு ரிஷியைப் பார்க்க


கண்மணி தன்னைப் பார்க்க வில்லை என்றாலும்… விக்கி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்…


“கண்மணி… உன் கையால எது கொடுத்தாலும் எனக்கு ஓகே தான்…. ஆனால்… ரொம்ப நாளா உனக்கும் எனக்கும் நான்சிங்க்லயே போயிட்டு இருக்கு… இன்னைக்கு அதை முடிச்சு வைக்கிற மாதிரி… ஸ்வீட் எடு கொண்டாடுனு மாத்தலாமா… முதல்ல இருந்து ஆரம்பிப்போமா… ஃபர்ஸ்ட் டைம் அந்தப் பால் பாயாசம் கொடுத்தப்போ ஆரம்பிச்சது அந்த நான்சிங்க்… சோ… அதே பால்பாயாசத்துல” என விக்கி ஆரம்பித்த போதே


கண்மணி ரிஷியைப் தீப்பார்வை பார்க்க…. மனைவியிடம் கண்களாலேயே யாசிப்பை வேண்டியபடியே… சட்டென்று நண்பனின் பேச்சை நிறுத்தியவன்


“மச்சான்… அதெல்லாம் அவ்ளோதான் கதம் கதம் தான்……இப்போலாம் என் பொண்டாட்டி பால்பாயாசம்லாம் போட்றதே இல்லை… அப்படியே போட்டாலும் அது எனக்கு மட்டும் தான்… நீ சொல்லு காஃபியா டியா...”


“டேய்… நான் என்ன சொல்ல் வர்றேன்னு…” என விக்கி ஆரம்பித்த போதே…. கடுகடுத்த முகத்துடன் கண்மணி நின்று கொண்டிருக்க… அவளைப் பார்த்த ரிஷி


“நீ போய்க் காஃபி போடும்மா…. அவன் அதெல்லாம் குடிப்பான்,… போ… நீ போம்மா “ என தாஜா செய்து அவளைப் போக வைக்க… கண்மணியும் ஏதூம் பேசாமல் இறங்கிப் போயிருக்க…


”நீ வாடா உள்ள….” என ரிஷி விக்கியை இழுத்துக் கொண்டு உள்ளே போக…



விக்கியோ புரியாத பார்வை பார்த்தபடி….


“என்னடா நடக்குது இங்க… அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்…. முறச்சுட்டுப் போறா உன் பொண்டாட்டி… என்னை எப்போதுமே நல்லவனாவே பார்க்க மாட்டாளா என்ன” புலம்பியபடியே அறைக்குள் நுழைந்தான் விக்கி தன் நண்பனுடன்…


-------------

சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கிய பயணம்…


யோசனையுடன் வாகனத்தை ஓட்டி வந்து கொண்டிருந்த நண்பனைப் பார்த்தபடியே வந்து கொண்டிருந்தான் விக்கி…


என்னதான் அவன் தோற்றம்… உடை என பழைய மாதிரி மாறி இருந்தாலும் அந்த முகத்தில் பழைய ரிஷி என்பவனை பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான்… இப்படியெல்லாம் யோசனையுடன் என்றாவது ஒருநாள் கல்லூரியில் அவனைப் பார்த்திருந்தாப்பானா…. ”


”இன்று தான் வாகனத்தை ஓட்டும் மனநிலையில் இல்லை என்பதால் தான் அவனிடம் சாவியைக் கொடுத்ததே… ஆனால் ரிஷியோ அவனை விட அதி தீவிர யோசனையில் வாகனத்தை ஓட்டியபடி வர


“என்னடா… ஏதோ திங்க் பண்ணிட்டே வர்ற… நல்லாத்தானே இருந்த…. திடீர்னு ஏன் இப்படி மாறிட்ட… “ என்று விக்கி நண்பனின் யோசனையைக் கலைக்க


“ஹ்ம்ம்ம்… ஒண்ணுமில்லைனு சொல்ல மாட்டேன்… ஆதவன் பெயில் கேஸ் இன்னைக்கு கோர்ட்டுக்கு வருது… அதுதான் யோசிச்சுட்டே இருக்கேன்” என்றபடி சாலையில் கவனம் வைக்க…


“ஏண்டா… ஏதாவது ப்ராப்ளமா…”


’ஆம்’ என்று தலையாட்டினான் ரிஷி…. தலை அசைத்ததோடு இல்லாமல் பேச்சையும் தொடர்ந்தான்


”உனக்குத் தெரியுமா விக்கி… நீ அப்ராட்ல இருக்கும் போது… நம்ம விசயம் தெரிந்து உன்கிட்ட ஆதவன் பேசினானே… அப்போ அந்த டைம்ல… அவன் உங்க அண்ணன் பாப்பாவை கடத்த ட்ரை பண்ணினான் தெரியுமா…” ரிஷி அலுங்காமல் குலுங்காமல் சொல்ல… விக்கி அதிர்ந்து ஆத்திரத்துடன் ரிஷியைப் பார்க்க…


“கோபப்படாதடா… அதெல்லாம் சரி பண்ணிட்டேண்டா… இப்போ அது பிரச்சனை இல்லை…. அவன் இப்போ ரிதன்யாவை குறி வைக்கிறாண்டா… அதுதான் திங்க் பண்ணிட்டே வர்றேன்“ அடுத்த அணுகுண்டை ரிஷி தூக்கிப் போட


”அவளை ஏண்டா… அவன் ஆம்பள தானே.. நேருக்கு நேரா மோதாமல் பொண்ணுங்கள வச்சுதான் விளையாடுவான்…“ விக்கி ஆத்திரம் அடங்காமல் வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்திருக்க


ரிஷியின் மனம் குறுகுறுக்கத்தான் செய்தது… யமுனா விசயத்தில் தான் நடந்து கொண்ட முறையை நினைத்து… ஆனாலும் தன் குற்ற உணர்வெல்லம் புறம் தள்ளியவனாக


“ரிதன்யா எனக்குத் தங்கை… உனக்கு வருங்கால மனைவி…. அதுதான் காரணம் “ குரலே சுரத்தில்லாமல் ஒலிக்க… தொடர்ந்தான் ரிஷி


“அவன் வெளியில வந்தால் அவன் நம்மளை மீறி ஒண்ணும் நடக்க விட மாட்டான்தான்… ஆனால் நம்மால நிம்மதியா இருக்க முடியாதுடா… அவன் உள்ள இருந்தால் என்ன பண்ணுவான்… வெளிய வந்தால் என்ன பண்ண நினைப்பான்… யார் யாரெல்லாம் இதுல பாதிக்கபடுவாங்கன்னு… ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு… இதுல நம்ம ஃபேக்டரி கேஸ் ஃபைனல் ஜட்ஜ்மெண்ட் வேற நெக்ஸ்ட் வீக்… எதை நோக்கி ஓட ஆரம்பிச்சேனோ… அந்த இடம் இதோ என் பக்கத்தில வந்துருச்சு… என் குடும்பத்தை விடு…. திருமூர்த்தி அவர் ஃபேமிலி… இந்தப் பக்கம் ஹர்ஷித்னு… ஒவ்வொருத்தவங்களையும் கவனிக்க வேண்டியிருக்கு… ஹர்ஷித்தை வெளிநாடு கூட அனுப்ப முடியாது… இந்தக் கேஸ் முடியற வரை… ஒரு மாதிரி ஃபீல்… என்னமோ பெருசா நடக்கப் போகுதோன்னு… என் அப்பா இறந்தப்போ கூட இந்த மாதிரிதான் ஃபீல்… என்னன்னு சொல்லத் தெரியலை…. ஆனால் சமாளிக்கனும்… சமாளிப்பேன்“ திடமான குரலில் பேசியபடி வர…


விக்கி… அவனிடம்


“டேய் ரிஷி… ஃபேக்டரி கேஸ் முடிந்த பின்னால கூட நாம எங்க கல்யாண விசயத்தைப் பார்த்துக்கலாம்டா… எல்லாத்தையும் போட்டு ஒண்ணா குழப்பிக்க வேண்டாமே” நண்பனிடம் சமாதானமாகப் பேச ஆரம்பிக்க


“ப்ச்ச்… எங்கயோ நான் கவனக் குறைவா இருக்கேனோன்னு தோணுதுடா… அது என்னன்னு எந்த இடம்னு என்னால யோசிக்க முடியலை… அதுதான்… ஒரு மாதிரி இருக்கு… இதுல இந்த அர்ஜூன் வேற… மறுபடியும் வந்து நிற்கிறான் அது வேற கடுப்பாகுது…”


“எனக்கு வாழ்க்கைல பிரச்சனையே இல்லாத விசயம்னா… அது என் பொண்டாட்டிதான்…. மத்த எல்லாமே எனக்கு பிரச்சனைதான்….. விடு சமாளிப்போம்… தனியா இருந்தே சமாளிச்சாச்சு… இப்போ இத்தனை பேர் என்கூட இருக்கீங்க… என்ன பயம் “ என பெருமூச்சு விட்டவனைப் பார்த்து விக்கி புன்னகைத்தபடி… அவன் கைகளில் தன் கைகளை வைத்து நம்பிக்கையோடு அழுத்த… அதே நேரம். ரிஷியின் அலைபேசியும் அடிக்க…. அந்தக் கார் முழுவதும் அவள் மனைவியின் குரல் எதிரொலிக்க ஆரம்பித்திருந்தது


“சொல்லுடி” ரிஷி கடுப்புடனே கேட்க…


“கோபமா… ”


“இல்லையே… ரொம்ப சந்தோசமா போயிட்டு இருக்கேன்… கீயை நான் வேணும்னே மிஸ் பண்ணது தெரிஞ்சும் எடுக்காம விட்டுட்டு… இப்போ என்ன சமாதானத் தூது” விக்கி இருக்கின்றான் ரிஷி என்றெல்லாம் பார்க்கவில்லை


“கொஞ்சம் கோபத்தைக் குறைங்க பாஸ்… இப்போ எதுக்கு கால் பண்ணேன்னு மட்டும் சொல்லிட்டு போனை வச்சுறேன்… சமத்துப் பிள்ளையா… நல்ல பையனா…. விக்கி தாத்தாகிட்ட பேசி விக்கி-ரிது கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டு வருவீங்களாம்… நான் பால்பாயாசம் மட்டும் இல்லை… உங்களுக்கு செம விருந்து வைப்பேனாம்… ஓகே வா… அதைச் சொல்லத்தான் கால் பண்ணேன்…”


“கார்ல கனெக்ட் பண்ணிருக்கேன்… நீ பேசுறதை எல்லாம் விக்கியும் கேட்டுட்டு இருக்கான்“ ரிஷி நிதானமாகச் சொல்ல


”ஹ்ம்ம்… தெரியுது… அதான்…. இவ்ளோ நல்ல பிள்ளையா பேசிட்டு இருக்கேன்… வைக்கவா” என்றபடி கண்மணியும் நிறுத்தி நிதானமாகச் சொல்லி வைக்க


ரிஷி புன்னகையுடன் அலைபேசியை அணைத்தவன்…. விக்கியைப் பார்த்து பின் மௌனமாக சாலையைப் பார்த்து ஓட்ட… அவன் முகத்தில் இருந்த புன்னைகையை நோட்டமிட்டபடியே


“ஏண்டா… காலையில பால்பாயாசம் நான் கேட்ட உடனேயே… ரெண்டு பேரும் ஜெர்க்கானீங்களே… அப்போதே டவுட்… இப்போ க்ளியர்… ஹ்ம்ம்…. கோட் வேர்ட்… நடத்துங்கடா… நடத்துங்க…” விக்கி பொய்க் கோபத்துடன் சொன்னவன்


”ஆனால் கண்மணிக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லனும்…. நீ ரொமான்ஸ் பண்ண நெனச்சு கீயை வீட்ல மிஸ் பண்ணிட்டு வந்த… ஆனால் கண்மணி அதை எடுக்காமல் போனதுனாலதானே ரிது எடுத்தா…… எப்படியோ நான் கூல் இப்போ… என் நண்பன் தான் சுயநலவாதி… நண்பனோட பொண்டாட்டியாவது நம்ம பக்கம் நிற்கிறாளே” விக்கி ரிஷியை வேண்டுமென்றே வம்பிழுக்க…



“என் தங்கச்சிய மேரேஜ் பண்ணப் போற… அதுனால உன்னை ஓட்ட முடியல.. இல்லை மவனே இன்னைக்கு நடந்ததுக்கு… உன்னை வச்சு செஞ்சுருப்பேன்…” சொல்லி ரிஷி முறைக்க


“ஓகே… ஒகே…. டேய்… இதே மாதிரிதானே… ஃபர்ஸ்ட் செமஸ்டர் முடிந்து நாம என் வீட்டுக்குப் போனோம்… வரும் போது வாங்கிக்கலாம்னு சொல்லியும் கேட்காமல் அடம் பிடிச்சு… போகும் போதே… முக்கியமான ஐட்டம்லாம் வாங்கி பதுக்கி வச்சியே… என் தாத்தாகிட்ட எப்போடா மாட்டப் போறொம்னு என்னை டென்சன்லயே சுத்த வச்சியே… ஞாபகம் இருக்காடா…. இந்த தடவையும் வாங்கலாமா… தண்ணி அடிச்சேன்னு கண்மணிகிட்ட சொல்லவா…” விக்கி கேட்க…


“நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ… அவ என்னை… என் வார்த்தையை மட்டும் தான் நம்புவா… அப்படியே நான் அவளுக்குப் பிடிக்காததை செய்தாலும்… ஏன் செஞ்சேன்… எதுக்காகன்னு… யோசிக்கிற அளவு அறிவாளிடா… மத்தவங்க சொல்றதெல்லாம் கேட்டு ஆடற பொண்ணு அவ கிடையாது…”


பெருமையுடன் சொன்ன தன் நண்பனைப் பார்த்து சந்தோசமாக விக்கி பார்க்க……


பழைய நினைவுகளோடு… புதிதாக இந்த நினைவுகளையும் மனதில் தேக்கி வைத்தபடி…… மற்றதெல்லாம் மறந்து… சந்தோசத்தோடும்… உற்சாகத்தோடும் நண்பர்களின் பயணமும் தொடர்ந்தது…


/*காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடுநானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய் நீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய் என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே*/


2,177 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page