அத்தியாயம் 67
/*
மனதினில் ஓ தீபமாக வந்த பொன் மானே விழிகளும் ஓ தெய்வமாக காணும் பூந்தேனே உயிர் மொழி நீயடி உனகென்ன நானடி உயிர் போனாலும் போகாது நம் அன்பு சாட்சிகள்
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ உலகினில் நாளும் காணாத ஏடு இல்லாத தேவ பந்தம் இதுவோ கதிரொளி மாறி போனாலும் மாறி போகாத உண்மை சொந்தம் இதுவோ அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
*/
அன்றைய பகல் பொழுது முழுவதையும்… இருவருமாக ஷாப்பிங் என்ற பெயரில் நேரத்தை ஓட்டித்தள்ளி இருக்க… மாலை 6 மணி அளவில் ஹோட்டெல் அறைக்கும் வந்து சேர்ந்திருந்தனர்…
இந்திய நேரப்படி… இப்போது நள்ளிரவு… ஜெட் லாக்… பயணக் களைப்பு… இப்போது ஊர் சுற்றி வந்த களைப்பு…. ஹோட்டல் வந்து சேர்ந்த போதே… கண்மணியின் கண்களில் மொத்தக் களைப்பும் வந்திருக்க… ரிஷியும் அதை உணர்ந்தான் தான்…. உண்மையில் சொல்லப் போனால் இதைத்தான் எதிர்பார்த்திருந்தான்... அதே நேரம் ஓரளவு தன்னையும் தயார்படுத்திக் கொண்டான்…
உடை கூட மாற்றாமல் கட்டிலில் சாய்ந்தவளுக்கு அவளையும் மீறி கண்கள் சொருக…. கண்களை மூடியவளுக்கு… என்ன தோன்றியதோ… பட்டென்று கண்களைத் திறந்து…
“கொஞ்ச நேரம்தான்…. ப்ளீஸ்….” என்று சொன்னவள்தான் அடுத்து அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கண்களை மூடிப் படுத்துவிட…
“நீ தூங்கும்மா…. எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு… ” ரிஷி அவளுக்கு பதில் சொல்லியபடியே திரும்பிப் பார்க்க… அவளோ அதை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை…. உறங்கியிருந்தாள்….
அவனுக்கு டாக்குமெண்ட்ஸ் தயார் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தது… கடந்த ஒரு வார காலமாக இவன் மருத்துவமனையில் தங்கி இருந்தது… அதன் பின் அறைக்குத் திரும்பிய போதும்… உள்ளங்கையில் கையில் கட்டுப் பிரிக்க வில்லை என்பதால் என கணினியை எடுக்கவே முடியாத நிலை… இன்றாவது முடிக்க வேண்டும்… முடிக்க வேண்டும் என்பதை விட முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம்…
பயணக் களைப்பு மட்டுமே இவனுக்கு இல்லை… மற்றபடி கண்மணி போலவே இவனுக்குமே களைப்பாக இருந்ததுதான்.. ஆனால் உறங்கா முடியா நிலை… குளியலறை சென்று குளித்து வந்தவனுக்கு…. களைப்பு போய் புத்துணர்வு திரும்பி இருந்தது மீண்டும் அவனுக்குள் .
அடுத்து என்ன… நிலுவையில் இருந்த வேலைகள் அவனை இழுக்க… மடிக்கணி இருந்த இடம் நோக்கிப் போன போது…… கண்மணி அணிந்திருந்த மேல் கோட் அங்கிருந்த நாற்காலியில் அவனுக்கு தரிசனம் அளிக்க… இப்போது கண்மணியைப் பார்த்தான் வேகமாகத் தன் தலை திரும்பி……
குளியலறையை விட்டு வெளியே வரும் போதே கண்மணியைப் பார்த்தான் தான்… போர்வையைக் கழுத்து வரை இழுத்துப் போர்த்தியபடி… ஒருக்களித்து உறங்கியிருந்தாள்… அவளின் நிம்மதியான உறக்கம் பார்த்து இவனுக்குமே நிம்மதி வந்து கணினியைத் தேடி வந்திருக்க… அங்கோ… அவள் அணிந்திருந்த கோட்…
போர்வைக்குள் மறைந்திருந்த மனைவியின் தரிசனம் வேண்டி… பார்வையும் எண்ணம் தறிகெட்டு ஓட… கடிவாளம் இடத்தான் நினைத்தான்… ஆனால் அதுவோ அவனை காலையில் நடந்த சம்பவத்திற்குத்தான் இழுத்துச் சென்றது… அதுமட்டுமல்லாமல்…. அதன் பின் அவள் ஏன் இந்த உடையை அணிந்தாள் என்று அவள் கொடுத்த விளக்கமெல்லாம் நினைவுக்கு வந்திருந்தன…
---
ரிஷியும் கண்மணியும் நட்ராஜோடு சேர்ந்துதான் காலை உணவு உண்ண கீழே சென்றிருந்தனர்… மாத்திரை போட வேண்டும் என்று கூறி… நட்ராஜ்…. வேகமாகச் சாப்பிட்டு விட்டு அவர்களின் தனிமையைக் கெடுக்காமல் சீக்கிரமாக கிளம்பிச் சென்று விட… ரிஷி கண்மணி மட்டுமே… எதிர் எதிராக அமர்ந்திருக்க…
ரிஷியோ இப்போது தலை சாய்த்து அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க…. கண்மணியும் பார்த்தவளாக
“என்ன” சைகையால் கேட்க…
“ஒன்றுமில்லை” என்பது போல தலை ஆட்டியவனை… ’என்ன’ என்று மீண்டும் புருவம் உயர்த்திக் கேட்க… இப்போது ரிஷி தான் இருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்தவன்… இருக்கையை ஒட்டி போட்டபடி… அவள் அருகில் வந்து அமர்ந்தான்… பேசவும் செய்தான்… கண்களில் அவளை முழுதாக கொள்ளை கொண்டபடியே
“உன்னை முதன் முதலா பார்த்தப்போ…. இதே மாதிரி ஒரு கோட் மாடல் சுடிதார்லதான் பார்த்தேன்… அந்த ஞாபகம் வந்திருச்சு… அப்போ அந்த வயசுல அந்த ட்ரெஸ்ல சொர்ணாக்கா மாதிரி தெரிஞ்ச… இப்போ இந்த வயசுல… இந்த ட்ரெஸ்ல… இப்போ நீ சாப்பிடற அழகுல… சொர்ணாக்கா மாதிரி… இல்லையில்ல 23 வயசுப் பொண்ணு... அது மாதிரி கூட இல்லை… சின்னக் குழந்தை மாதிரி தெரியற” என்றவனிடம்
”ஓஹ்ஹ்ஹ்…. அப்படியா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரூம்ல…. இந்த சின்னக் குழந்தைகிட்ட ஏதோ வாங்கினப்போ… எப்படி தெரிஞ்சேனாம்… ரிஷிக்கண்ணா… சின்னக் குழந்தை பண்ற வேலையா அது…” கண்மணி சாப்பிட்டபடியே இயல்பாக சர்வ சாதாரணமாகக் கேட்டாள்…
வெட்கப்பட வேண்டியவளோ… கேட்டுவிட்டு… தன் கவனைத்தை ஐஸ்கிரிமில் வைத்து விட… அவளை வெட்கப்பட வைக்க வேண்டியவனோ… இருவரும் இலயித்திருந்த அந்த நிமிடங்களுக்குச் சென்றுவிட…
ரிஷியைப் பார்த்த சந்தோசத்தில் மூழ்கி இருந்த உணர்வின் தாக்கம் எல்லாம் கொஞ்சமாக கொஞ்சமாக தீர்ந்திருக்க… கண்மணி கூட சகஜமாகி இருந்தாள் இப்போது…
“ரிஷி” என்று சத்தமாக கண்மணி அழைத்த போதுதான் தான் ரிஷியும் நனவுலகத்துக்கு வர…
“நான் நல்லா இருக்கேனானு கேட்டேன்… இந்த ட்ரெஸ்ல”
“சூப்பரா இருக்க” உதடுகளுக்கு வேலை வைக்காமல்… கை விரல்களிலும்… புருவங்களிலும் அபிநயம் பிடித்து ரிஷி சொல்ல…
“கிண்டல் பண்றீங்களா ரிஷி” சந்தேகமாக தன்னை ஒருமுறை பார்த்துவிட்டு… மீண்டும்… அவனை நோக்க…
“ச்ச்ச்சேய் அப்படி… இல்லம்மா… நீ வேற லெவல்னு சொல்ல வந்தேன்… சில பேர் எந்த ட்ரெஸ் போட்டாலும் ஒரே அப்பியரன்ஸ் தான் இருக்கும்… ஆனால் நீ போடற ட்ரெஸுக்கு ஏற்ற மாதிரி மாறிடற” என்ற போதே புருவம் சுருக்கி அவனைப் பார்க்க…
“முறைக்காத” என்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்திருந்தான் அவள் கணவன்
”அதாவது சுடிதார்ல இருந்தேன்னு வச்சுக்க…. ரித்விகாக்கும் உனக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது… அப்புறம் தாவணில ஒரே ஒரு தடவை பார்த்திருக்கேன்… ஃபர்ஸ்ட் செம்ம ஃபிகர்னு பார்க்க ஆரம்பிச்சேன்… நீன்னு தெரிந்த பின்னால பெருசா பார்த்துக்கல… ஆனால் அதுலயும் செம்ம அழகா இருந்தா… கொஞ்சம் மேக்கப் அன்னைக்கு தூக்கலா இருந்துச்சோ… ”
என்றவனை கண்மணி முறைக்க… அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்
”அதெல்லாம் விடு… புடவைதாண்டி உனக்கு ஹைலைட்டே…. நீட்டா மடிப்புக் களையாமல்… உடம்புல ஒரு இடம் கூடத் தெரியாமல் கட்டி… ஸ்கூல்க்கு ரெடி ஆகி இருக்கும் போது அக்மார்க் டீச்சரம்மாதான்… ஆனால்…“ என்றபடியே அவள் அருகில் இன்னும் நெருங்கியவண்…
“ஆனால்.. எப்போதாவாது… சேலையை பின் போடாமல்… இழுத்துச் சொருருகிட்டு அவசர அவசரமா வேலை பார்த்துட்டு இருப்பியே… அப்போலாம்…. ரிஷிகேஷோட அக்மார்க் பொண்டாட்டிடி நீ…. ஈவ்னிங்க் டைம் தான் பெரும்பாலும் அந்த மாதிரி என் பொண்டாட்டி தரிசனம் கிடைக்கும்… ஆனால்… அதுக்குப் பயந்தே… எஸ்கேப் ஆகிருவேன் தெரியுமா… விஸ்வாமித்திரரோட தவத்தை கலைக்க வந்த மேனகை மாதிரி காட்சி தருவ…” என்றவனின் குரல் இப்போது மென்மையாக மாறி இருக்க
”நம்பிட்டேன்… ரிஷி… நம்பிட்டேன்… ஒரு ட்ரெஸ் நல்லாருக்கான்னு கேட்டதுக்கு…. அதுக்கு வாய்ல இருந்து நல்லாயிருக்குனு வார்த்தை வரலை…. அதைத்தவிர என்னன்னமோ வருதே… அதுவும் நம்ப முடியாத கதைலாம்…”
“நம்பாத… சரி நான் கேட்கிறேன்… சொல்லு பார்க்கலாம்… என்னைப் பர்ஸ்ட் டைம் பார்த்தப்போ என்ன ட்ரெஸ் போட்ருந்தேன் சொல்லு பார்க்கலாம்” சவாலாக அவன் கேட்டபோதே… கண்மணிக்குப் புரை ஏற… அவள் தலையை மெல்லத் தட்டிக் கொடுத்தவனின் கையைப் பிடித்தபடியே
“இதெல்லாம் போங்காட்டம் ரிஷி… உங்களுக்கு மட்டும் ஈஸி 1 மார்க் கொஸ்ட்டீன்… எனக்கு மட்டும் 5 மார்க் அதுவும் கஷ்டமான ஃபைவ் மார்க் கொஸ்டீன்… அது ஸ்கூல் யுனிஃபார்ம்… ஈஸியா விசுவல் மெமரில ரெஜிஸ்டர் ஆகி இருக்கும்… அதெல்லாம் கணக்கில வராது” என்று கண்மணி அடம்பிடிக்க
”ஹலோ… சொன்னோமா இல்லையா… அதுதான் கணக்கு... டெஸ்டினி... டிஸ்னினுன்னு என்னென்ன கதை சொன்ன... ஆனால் உனக்குத் தெரியலைதானே… நான் சொல்றேன் பாரு”
”உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ… ஸ்கூல் யூனிஃபார்ம்.. தென் நைட்டி… செகண்ட் டைம்… சுடிதான்… கலர் தெரியலை… 3ர்ட் டைம்…” என்று நிறுத்தி யோசித்தவன்..
“அப்போ நான் ஒரு நிலையில இல்லை… தெரியல… ஆனால் உன்னை உன் முகம்தான்… அதை விட உன் கண்… அதுல இருந்த ஏதோ ஒண்ணு…. அதுனாலதான் என்னையுமறியாமல் உன்னை நோக்கி வந்தேன்… “
ஞாபக அடுக்குகளை யோசித்து அவன் சொல்லும் பாங்கை ரசித்தபடி… கண்மணி அவனையேப் பார்த்திருக்க… அவனோ… நினைவுகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தான்…
அடுத்து… எல்லாமே சுடிதார்லதான்… ஆனால் லாஸ்ட்டா அதாவது ஜாலியான ரிஷியா…. இருந்தபோது பார்த்தது தாவணிலதான்…. அதுக்கப்புறம்… அப்புறம் உன் பக்கத்தில வந்தும்… பெருசா உன்னை நோட் பண்ணதில்ல… எனக்குத் தெரிஞ்சு அடுத்து உன்னை நோட் பண்ணிப் பார்த்த ஞாபகம்னா நான் வாங்கிக் கொடுத்த புடவை கட்டி நம்ம மேரேஜுக்கு நீ தயாராகி வந்த போதுதான்…” ரிஷி சொல்லி முடிக்க…
”அதுக்கபுறமும்… அதாவது திருமதி.கண்மணி ரிஷிகேஷா மாறின அப்புறமும் பார்க்கலை… அதையும் சொல்லி முடிங்க ரிஷிக்கண்ணா” என்று திருத்தியவளிடம்
“பார்க்கலைன்னு நீ நம்புற மாதிரி ஜீபூம்பா வேலை பார்த்தேன்… அவ்ளோதான்…” என்று அவள் முகத்தைச் சுற்றி… கைகளை ஜீபூம்மா மாயவித்தை செய்வது போல அவன் செய்து காட்ட… சிரித்தவளிடம்
“பார்த்தேன்னு நம்ப வைக்க… ஆயிரம் சாட்சி இருக்கு… சொல்லவா… நீ… கேட்க ரெடியா” என்றவன் குரல் அவள் காதருகே தேய்ந்து ஒலித்து கிசுகிசுப்பாக மாறி இருக்க…
”ட்ரெஸ் பற்றி… என்னைப் பற்றிய ஆராய்ச்சிலாம் போதும்…” கண்மணி சுதாரித்திருந்தாள்… கணவனின் ஏகாந்த வசீகர குரலில் எங்கோ செல்லத் தோன்றியபோதும்… சட்டென்று தன்னை மீட்டிருக்க…
“இன்னும் முடிக்கலை அம்மு… ப்ச்ச்… சரி அதை விடு… இப்போ எனக்கு என்ன கேள்வின்னா… திடீர்னு இந்த அவதாரம் ஏன்னுதான் ஆராய்ச்சி… ஒரே நாள்ல ப்ளான் பண்ணி வந்தேன்னு சொன்ன… இந்த ட்ரெஸ்லாம் எப்படி…. “ கண்மணியை அந்தப் பொது இடத்தில் அவனும் அசௌகரியப்படுத்த விரும்பாமல்… பேசிக் கொண்டிருந்த தலைப்பை மாற்றி அவளிடம் பேச ஆரம்பிக்க
“அப்பா… இப்போவாது கேட்டிங்களே…” என்றவள் தான்… அடுத்து சொன்னதெல்லாம்… அவள் ஏன் திடீரென்று நவீன மங்கையாக மாறினாள் என்ற கதை மட்டுமே…
அவள் சொன்ன அந்தக் கதையைக் கேட்டு விழுந்து விழுந்து ரிஷி சிரித்துக் கொண்டிருக்க… கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவளோ… அவன் கண்மணி
“ரிஷி… கடுப்பைக் கெளப்பாதீங்க… ஏற்கனவே வைதேகி பாட்டி மேல கோபமா இருக்கேன்… நீங்க வேற ஏத்தி விடாதீங்க…
“எங்க பாட்டி... எங்கூட ஒரு ஃபேஷன் டிசைனர அந்த பெட்டியில பேக் பண்ணி வைக்கல... அவ்ளோதான்… அதை மட்டும் தான் பண்ணலை… நான் என்னமோ சிட்னிக்கு beauty pageants பார்ட்டிசிப்பேட் பண்ண வந்த மாதிரி என் பாட்டிக்கு நினைப்பு… அதை விட கொடுமை என்னன்னா ஒவ்வொரு ட்ரெஸுக்கு மாடல் போட்டோ வேற… கூடவே 4 இன்ச் 5 இன்ச் ஹீ ல்ஸ் வேற….
எங்க வைதேகிப் பாட்டிக்கு… அவங்க பொண்ணு ஞாபகம் வந்திருச்சு போல… ஆக மொத்தம் அவங்க அனுப்பி இருந்த எந்த ட்ரெஸ்ஸும் நான் போடவே முடியாத ட்ரெஸ்தான்… இருந்ததுதிலேயே இது ஒண்ணுதான் எனக்குப் போடத் தோணுச்சு…எனக்கும் பிடிச்சிருந்தது... ஆனால் எடுத்துப் பார்த்தால்” என்ற போதே …
“என்னாச்சு… உங்க பாட்டி உனக்கு அதுல என்ன வேட்டு வச்சுருந்தாங்க செல்லம்” ரிஷி சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியவனாக… பரிதாபமாக கண்மணியைப் பார்ப்பது போல் நடிக்க
“ஸ்கின் லேஸ் மாதிரி தின்னா டீசர்ட்… இந்த கோட் இருந்ததுனால தப்பிச்சேன்…” என்ற போது… பாட்டி அவர் பேத்திக்கு வேட்டு வைக்கவில்லை… தனக்கே என்பது புரிய….அவளைப் பார்த்திருந்தவனின் பார்வை கணவனாக தன் பயணத்தை அவளிடம் மாற்றி இருக்க….. மனதுள்ளே ஒரு பதட்டமான சூழ்நிலைதான் இப்போது ரிஷிக்குள் ஆரம்பித்திருந்தது….
மீண்டும் அறைக்குச் சென்றால்… அவனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன… கண்மணியோடு சேர்ந்து தனிமையான இரவுகளைக் கடக்காதவன் அல்ல… ஆனால் இன்று… பகல் பொழுதை நினைக்கும் போதே…. ’பஞ்சும் நெருப்பும்’ அடிக்கடி கேள்விப்பட்ட வார்த்தைகள்… அதன் அர்த்தத்தை பூதாகரமாக விளக்கிக் காட்டிக் கொண்டிருக்க….
கண்மணியை இன்று மட்டுமல்ல... இங்கு இருப்பது வரை தவிர்ப்பது எப்படி…. அவளிடம் சொல்லி புரிய வைப்பது... அது ஒரு தனி போர்க்களம் என்றாலும்… தன்னை எப்படிச் சமாளிப்பது என்பது தான் ரிஷிக்கு பெரும் யுத்தமாக இருந்தது… விரக தாபம் முதன் முதலாக மெல்ல மெல்ல அவன் அறிந்து கொண்டிருந்தான்… அவனுக்கும் கண்மணிக்கும் திருமணமான அன்றைய இரவில் கூட அவனுக்கு இப்படி ஒரு பதட்டம் இல்லை... அப்போது கூட அவன் மிக நிதானமாகத்தான் இருந்தான்…
ஆனால் இன்றோ… வார்த்தையில் விவரிக்க முடியாதபடி உணர்வுகளின் கொந்தளிப்புகள்…. கண்மணி கழட்டிப் போட்டிருந்த மேல் அங்கியில் கவனம் சிதறி இருந்தவன்… மீண்டும் தலையை உலுக்கி… தன்னைச் சமாளித்து உறங்கிக் கொண்டிருந்த கண்மணியிடம் சென்ற பார்வையைத் திருப்பி இருந்தான்….
ஆக மொத்தம்… எப்படியோ பகல் பொழுதை சமாளித்து… இதோ இந்த நிமிடம் வரை தாக்குப்பிடித்து வந்து விட்டான்…. இதோ அவளை உறங்கவும் வைத்துவிட்டான்…
ஒருவகையான நிம்மதியோடு!!???? மடிக்கணிணியைத் தூக்கிக் கொண்டு… சோஃபாவிற்குச் சென்று அமர்ந்தவன்… டைப் செய்ய ஆரம்பிக்க காயம் ஏற்பட்டிருந்த கைகளின் விரல்களோ அவனுக்கு ஒத்துழைக்கவே இல்லை… ஸ்டியரிங் பிடித்தபோது விரல்களில் வலி தெரியவில்லை… அதனால் சரி ஆகி விட்டது என்றுதான் நினைத்திருந்தான்… அதோடு கையில் இருந்த கட்டையும் வேறு பிரித்திருந்தான்…
ஆனால் இப்போது கீபோர்டில் கை வைக்க… விரல்கள் வலி எடுக்க ஆரம்பித்திருந்தது…. வேறு வழி இல்லாமல்… இடது கையை பயன்படுத்தாமல் வலது கையின் துணையோடு மட்டுமே… அடிக்க ஆரம்பித்திருக்க… ஒரு மணி நேரத்தில் 3 பக்கம் முடிப்பது என்பதே பெரும்பாடாக ஆகி இருந்தது அவனுக்கு….
நாளைக்கு கண்டிப்பாக தயார் செய்ய வேண்டும்… அதுவும் ஃபைனல் ஷோவுக்கான டாக்குமெண்ட்ஸ் வேறு…. தேவையான தகவல் எல்லாம் திரட்டி விட்டான்… அதை ஒன்று சேர்த்து டாக்குமெண்டாக முடிக்க வேண்டும்… மற்ற கவலைகள் எல்லாம் போய்… ரிஷிக்கு இந்தக் கவலை வந்திருக்க… என்ன வலி இருந்தாலும் ஒத்திப் போட முடியாது… மெல்ல மெல்ல அடித்தாவது முடித்துதான் ஆக வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு… வலியோடு மீண்டும் ஆரம்பித்திருக்க… கண்மணியோ அவள் முன் வந்து நின்றிருந்தாள்…
மும்முரமாக கணினியில் மூழ்கி இருந்தவன்…. அரவம் உணர்ந்து நிமிர்ந்தான்… கண்களுக்கு ஏமாற்றம் என்றாலும்… மனதில் நிம்மதிதான்… இப்போது மேல்க் கோட்டுக்குப் பதிலாக ஸ்டோலை அணிந்து வந்திருக்க… நிம்மதி என்று சொன்னாலும்…. ஒரு பக்கம் கடுப்பாகவும் தான் வந்தது… காட்டிக் கொள்ளவா முடியும்…. அமைதியாக அமர்ந்திருக்க…
“ஏன் ரிஷி இப்படி கஷ்டப்படறீங்க… என்கிட்ட சொன்னால் நான் பண்ணித் தரமாட்டேனா…” என்றபடியே… அவனருகில் அமர்ந்தவள்… அவன் மடியில் இருந்த லேப்டாப்பை… தன் மடிக்கு மாற்றியவள்…
“சொல்லுங்க… நான் டைப் பண்றேன்…” அவன் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள்…
ரிஷிக்கு அவள் அருகாமை… இம்சையைக் கொடுத்தாலும்… இப்போது எது முக்கியமோ… அதை நோக்கி மனதைத் திசை திருப்ப… அதன் பின் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கண்மணி அந்த டாக்குமெண்ட்டை முடித்துக் கொடுத்திருக்க…
“டைப் ரைட்டிங்க் க்ளாசும் போயிருக்கியா கண்மணி… இவ்ளோ ஃபாஸ்டா அடிக்கிற… எனக்குலாம் இன்னும் 4 மணி நேரம் ஆகி இருக்கும்” என்று ரிஷி அவளிடம் வியந்திருக்க…
”இல்லை… டைப்பிங் ஃபாஸ்டா வரும் அவ்ளோதான்” என்று தோளைக் குலுக்கியவள்… அவனிடம் லேப்டாப்பை இடம்மாற்ற… ரிஷி அதன் பிறகு மீண்டும் அந்த டாக்குமெண்ட்டை சரிபார்த்து முடித்து மீண்டும் வைத்த போது… மணி அடுத்த அரை மணி நேரத்தைக் கடந்திருக்க… கையை உதறி… வலியைக் குறைப்பது செய்து கொண்டிருந்தவனின்… கைகளைப் பற்றி
“ஏன் கட்டைப் பிரிச்சீங்க… கார் கூட ஓட்டிட்டு வந்தீங்க…. அப்போ வலி இல்லையா என்ன… இப்போ மறுபடியும் வலிக்குதா ” இடைவெளி இல்லாத அடுத்தடுத்த கேள்விகளோடு… ரிஷியின் கைகளைப் பார்த்தபடியே ஆராய்ச்சியை கண்மணி தொடங்கி இருக்க …
இவனோ… கண்மணி மனம் நோகாதாவாறு அவளிடம் எப்படி பேசுவது… எடுத்துச் சொல்வது… என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்…
“என்ன ரிஷி… திங்கிங் மோட்லயே இருக்கீங்க… ’ஷோ’ வை நினைத்தா” நிமிர்ந்து பார்க்காமலேயே… யோசனை பாவத்தில் அவன் இருப்பதை உணர்ந்தளாக…. கண்மணி அவன் கைகளை பார்த்தபடியே வினவ…
இப்போதும் மௌனம் உடைக்கவில்லை… தன் யோசனையையும் விடவில்லை…. ரிஷி…
அவன் அசாதாரண மௌனம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்தான் கண்மணியும்……
”விட்டுப்பிடிப்போம்… தானாக வரட்டும்…” என்று தனக்குள் என்ணிக் கொண்டவள்…. அவனிடம் அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசாமல்…
“ரிஷி…. எனக்கு கொஞ்சம் கொஞ்சம் கைரேகை பார்க்கத் தெரியும்… பார்த்துச் சொல்லவா… உங்க ஃப்யூச்சர் எப்படி இருக்கும்னு பார்ப்போமா… அப்புறம் ’ஷோ’ ரிசல்ட் என்ன வரும்னு பார்ப்போமா” கைரேகை பார்ப்பது போல சம்மணமிட்டு அமர்ந்தவளாக…
”ஹ்ம்ம்… இந்த ஷோவை வின் பண்ணுவீங்க ரிஷி… வாய்ப்பு அதிகமா இருக்கு… அப்புறம் சீக்கிரமா உங்க அப்பா” என்ற போதே ரிஷியும் அவள் பேச்சில் ஐக்கியமானவன்…
“ப்ரொஃபெஷனல்லாம் வேண்டாம்… பெர்சனல் பாரு…” என்று அவள் புறம் நன்றாகத் திரும்பி அமர்ந்திருந்தான் ரிஷியும் இப்போது…
“ஹ்ம்ம்… ஒகே…” என்று தன் விரல்களால் அவனது கைகளில்… அவனது ரேகையை அளந்தபடியே…
“உங்க திருமண வாழ்க்கை ஓஹோன்னு… ரொம்ப ரொம்ப அமோகமா இருக்கும்…” எனும் போதே… அவளின் தலையில் மெல்ல செல்லமாகத் தட்டியவன்
“ஓய்… ஃப்ராடு… என்கிட்டேயாவா” ரிஷியின் குரலிலும் இப்போது குதூகலம் வந்திருக்க..
“அட ஆமாம்ப்பா… இல்லையா பின்ன… மேரேஜ் லைஃப் பற்றி சொன்னது பொய்யா… சொல்லுங்க.… ஃப்ராடா நானு” மனைவியின் கொஞ்சல் மொழி கேட்ட அந்த நொடி தாளாது… கணவனாக அவளிடம் மிஞ்ச நினைத்தான் தான்… ஆனால்… அதற்குப் பதிலாக அவள் கன்னம் நோகாமல் மெல்ல தன் விரல் பதித்துக் கிள்ளி அவளைக் கொஞ்சி தன் வேட்கையைக் தணித்துக் கொண்டவன்…
“உன்னைப் மாதிரி பொண்ணு கிடைத்தால்… யாருக்கும் வாழ்க்கை அமோகமாத்தான் இருக்கும்… இது ரேகை பார்த்துதான் சொல்லனுமா… ” ரிஷி உணர்ந்து உளப்பூர்வமாகச் சொல்ல… கண்மணியும் பெரிதாகப் புன்னகைத்தாள்…
”அடுத்து சொல்லு.…” அவளை ஊக்குவிக்க…
“10 குழந்தைகளுக்கு வாய்ப்பு இருக்கு… ஆனால் இரண்டுக்குத்தான் யோகம் இருக்கு… “ கண்மணி சீரியஸான தொணியில் சொல்ல
”கைரேகை பார்க்கிற ஜோசியர் டோன் மாதிரி தெரியலையே… இவ்ளோதாண்டா உனக்கு லிமிட்னு… பொண்டாட்டி சொல்ற டோன் மாதிரியே எனக்குக் கேட்குதே” என்றவனிடம் அவன் கையைப் பார்க்காமல் அவன் புறமே திருப்பியவள்…
”நம்பிக்கை இல்லாதவங்களுக்கு… கைரேகை பார்க்கக் கூடாது…” என்று சொல்லி.. முடித்து விட… ரிஷியும் அவளிடம் கெஞ்சவில்லை… அவள் விட்ட தன் கையைத் தானே பார்த்தபடி…
“நீயெல்லாம் ரெண்டு வருசம்… அதுக்கடுத்த ரெண்டு வருசம்னுதான் லாங்க் டெர்ம் ஜோசியம் தான் பார்ப்ப கண்மணி… ஆனால் நான் அடுத்த பத்து நிமிசம்… அதுக்கடுத்த ஒன் ஹவர்… இந்த வீக்… அப்டின்னு… ரொம்ப ஷார்ட் டெர்ம் ஜோசியம் சொல்வேன்… நம்பலைனா மாமாகிட்ட போய்க் கேளு… அவர் சொல்வாரு… நீ இங்க வருவேன்னு… லாஸ்ட் வீக் சொன்னேன்… நான் சொன்ன மாதிரியே இந்த வீக் கரெக்டா வந்ததானே… மாமாக்கு கூட ஷாக் தான்…” என்று பெருமையாகச் சொன்னவனை முறைத்தவளைப் பொருட்படுத்தாமல்…
”என்னோட இன்னொரு ஷார்ட் டெர்ம் ஜோசியம் கேட்கறியா… இன்னைக்கு நைட் என்ன நடக்கும்னு சொல்லவா” என்று கொக்கி போட்டு நிறுத்த…
”அப்படியா என்ன… நடக்கும்… சொல்லுங்க” கண்மணியும் அவனைப் புரிந்தவளாக… அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை யூகித்தவளாக அவனைப் பார்க்க… அவனோ அவளைப் பார்க்க வில்லை… மாறாகத் தன் கையைப் பார்த்தபடியே…
”இந்த ரிஷிகேஷ் கை ரேகை என்ன சொல்லுதுனா… இவனோட பிரம்மச்சரியம் இன்னைக்கும் தொடரும்… அதுமட்டும் அல்ல அதாவது இவன் அவன் கண்மணியோட ரிஷிகேஷா மாற இன்னும் சில பல வாரங்கள் ஆகும்னு சொல்லுது…” நிறுத்தி நிதானமாக தன்னைப் பார்க்காமல் அவன் கைகளை பார்த்துச் சொல்லிக்கொண்டிருந்தவனையே… கண்மணி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்…
ரிஷி இப்போது நிமிர்ந்தான்… கண்மணியையும் பார்த்தான்… அந்த முகத்தில் என்ன இருந்தது… அவனால் உணர முடியவில்லை தான்…
குற்ற உணர்வோடு… அது தந்த அழுத்தம் தாங்காமல்… அவளைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் தலையைக் கோதியவனாக வேறு புறம் திரும்பி வெறிக்க ஆரம்பித்திருந்தவனை… கண்மணி இமைக்காமல் பார்த்தபடியேதான் இருந்தாள்… அடுத்து இன்னும் என்ன சொல்லப் போகிறாய் என்கிற ரீதியில்…
அவள் ஏதாவது கேட்பாள் என்று இவன் எதிர்பார்த்திருக்க… அவளின் இந்த அமைதியோ இவன் எதிர்பார்க்காதது… அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான்….
”எனக்கு டைம் தருவியா கண்மணி… ஏன் எதுக்குனு கேள்விலாம் கேட்கக் கூடாது… நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல நான் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் இருக்குதானே… அதேதான் இப்போதும்… அப்போ யாரோவா நான் சொன்னதைக் கேட்டு அக்செப்ட் பண்ணிட்டு… எனக்காக இத்தனை மாதம் காத்துட்டு இருந்ததானே… அதே போல… இன்னும் ஒரு மூணு இல்லை நாலு வாரம்.. மேக்சிமம் அவ்ளோதான்… என்னாலயும் உன்னை விட்டு தள்ளி இருக்க முடியாதும்மா…” ரிஷி சொல்லி முடித்தவனாக அவளைப் பார்க்க…
கண்மணியோ எழுந்திருந்தாள்… ஒன்றுமே பேசாமல் …
இப்போது ரிஷி… அவசரமாக அவள் கைப்பிடித்து நிறுத்தி… அவளை உட்கார வைத்தவன்
“அது மட்டும் இல்லை அம்மு… இன்னொரு விசயமும் இருக்கு… உனக்கு ஞாபகம் இருக்கா… ’கண்மணி இல்லம்’ டபுள் ஹார்ட் போட்ட வீடு… அதோட ராசி… சொல்லிருக்கியே…. அதுவும் ஒரு காரணம்… நம்மளோட ஃபர்ஸ்ட் ” என்ற போதே கண்மணி திரும்பி ருத்ர பார்வை பார்த்திருக்க… தானாகவே வாயை முடி இருந்தான் ரிஷி… கண்மணி பேச ஆரம்பித்திருந்தாள் இப்போது
”இங்க… அதாவது ஆஸ்திரேலியால இருக்கிற வரை… நமக்குள்ள ஏதும் இல்லை… நடக்கப் போறதில்ல… இதுதானே நீங்க சுத்தி வளச்சு சொல்ல வந்தது… புரிஞ்சுகிட்டேன்… அதுக்காக தேவையில்லாத பொய் எல்லாம் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுப்பிடிச்சு சொல்லாதீங்க ரிஷி… எனக்கு அதுதான் தாங்கல… அதுதான் என் கோபமும்… வேற எதுக்கும் இல்லை” என்று அவள் கோபம் கொண்ட காரணத்தையும் விளக்கியவள்
“ரெண்டு விசயம்… ஒண்ணு… டபுள் ஹார்ட் பேட்டர்ன்… ராசி…. செண்டிமெண்ட்… புதுசா கல்யாணமானவங்க… அப்புறம் குழந்தையோட போவாங்க இதெல்லாம் சொன்னேன்தான்… வேற ஏதாவது சொன்னேனா… என் வாயைக் கிளறாதீங்க… ” மொத்தக் கடுப்பையும் குத்தகைக்கு எடுத்தவளாகி இருந்தாள் கண்மணி
“ஆஸ்திரேலியால நமக்கு ஃபர்ஸ்டே டே இருந்தால் கூட… குழந்தை பத்து மாசம் கழிச்சு…. டபுள் ஹார்ட் போட்ட வீட்ல தான் பிறக்கும்… பொய் சொல்றதுக்கு முன்னாடி லாஜிக் வீக்கான மேட்டர்லாம் எடுத்து பொய் சொல்லாதீங்க… அதுவும் என்கிட்ட… அடுத்து… இந்த பிரம்மச்சரியம்… ரெண்டு வாரம்.. டேஷ் டேஷ் இதுலாம்… ஷார்ட் டெர்ம் ஜோசியம் போல இரண்டு மூணு நாளைக்கு முன்னாலதான் வந்திருக்கும் போல… இந்த சூட் புக் பண்ணினப்போ சார்க்கு வரலை போல…” பார்வையாலே அவனை எரித்தபடி கேட்க… அவனால் அந்தப் பார்வைக்கு பதில் சொல்ல முடியுமா என்ன… தலை குனியப் போக…
”ஹான் இன்னொரு முக்கியமான விசயம்… இதுதான் அல்டிமேட் கேளுங்க ரிஷி… இப்பவே தலையை தொங்கப் போட்டா எப்படி”
“நமக்கு நாமே நம்ம கை ரேகை பார்த்து சொல்ற விசயம் மேக்சிமம் நடக்காது… ப்ராபபிலிட்டி கம்மி ரிஷிக்கண்ணா… பார்க்கலாம்… டைம் இப்போ என்ன… ”
”10 கூட ஆகல… இன்னும் எவ்ளவோ நேரம் இருக்கு… பார்த்துக்கலாம் ரிஷிக்கண்ணா” அலட்சியத்துடன் சொல்லியபடி எழுந்தவளை அதிர்ச்சியுடன் ரிஷி பார்க்க…
”எனிவே குட்நைட் மிஸ்டர் ரிஷி சாரி சாரி மிஸ்டர் பிரம்மச்சாரி… ” என்று குத்தலாகச் சொன்னவள்…
”என்ன பண்றது மே பி… நாளைக்கு இந்த வேர்ட் உங்ககிட்ட செல்லாமல் போய்ட்டா…. அதுதான் சொல்லிப் பார்த்தேன்” அவன் கேசம் ஒதுக்கியவளாக அவனை விட்டு அகன்றிருந்தாள் கண்மணி….
அவனது செல்ல ரவுடி… மிரட்டினாளா???… கொஞ்சினாளா???… கோபப்பட்டாளா???… ஆறுதல் சொன்னாளா???…. புரியாமல் சிலையாக அமர்ந்திருந்தவன் ரிஷியே…
----
இரவு மணி 11…
ரிஷியும் கண்மணியும் கட்டிலில் தான் படுத்திருந்தனர்… தனித்தனியே படுக்க வேண்டும் என்றெல்லாம் இருவருமே நினைக்கவில்லை… அந்த எண்ணம் துளி கூட இருவருக்குமே இல்லை என்பதால் இயல்பாகவே அவள் அந்த ஓரம்… இவன் அந்த ஓரம் என… படுத்திருக்க… அதிலும் கண்மணி… தூங்காமல்… அலைபேசியோடு ஐக்கியமாகி இருந்தாள்…
அவளோடு பேசியாவது இரவை ஓட்டலாம் என்று கூட நினைத்தான் தான் ரிஷி… என்ன பேசுவது… உறவில் பிரச்சனை இருக்கும், பேசாத தம்பதியா… இல்லை புதிதாக திருமணம் முடித்த கணவன் மனைவியா என்ன... இருவரும்… என்ன பேச என்றும் தெரியவில்லை… அதுவும் சாதாரணமாக பேசுவதென்பது இன்று சாத்தியமே இல்லை எனும்போது… அவள் புறம் திரும்பாமல் இருப்பதே உத்தமம்… என்றுதான் ரிஷிக்குப் பட்டது… இவனும் அலைபேசியின் துணையை நாட…
அவனால் அதில் ஒன்றவே முடியவில்லை… இந்த அளவு ஒரு இரவு இம்சையாக இருக்குமா?… இதுதான் அவனுக்குத் தோன்றிய எண்ணம்… அவனது அழகிய ரவுடி… இன்று அழகிய ராட்சசியாகவும் தோன்றி இருக்க…
“எப்படி… இத்தனை மாதங்கள் இவளை விட்டு தள்ளி இருந்தோம்… அவனுக்கே ஆச்சரியம் தான்…”
அதே நேரம் தன்னை நினைத்து பெருமையும் கொண்டான் தான்..
”பரவால்லடா ரிஷி நீ கொஞ்சம் ஸ்ட்ராங் தான்… அப்படியே அதே ரிஷியா இன்னும் கொஞ்ச நாள் தாக்குப் பிடிச்சுருடா… நீ என்ன கேட்டாலும் செய்றேன்” என்று தன்னைத் தானே பாராட்டியபடி இருந்தபோதே… கண்மணியின் அசைவை உணர… அனிச்சையாகவே அவன் தலை திருப்பி… அவளைத் திரும்பிப் பார்க்க… அலைபேசியை வைத்து விட்டு… உறங்க ஆயத்தமாகி இருந்தாள் கண்மணி…
தன்னைப் பார்த்தவனை…
“என்ன ரிஷி… தூங்கலையா” அவனைப் பார்த்தவள்… என்ன நினைத்தாளோ நக்கல் சிரிப்போடு சீண்ட வேறு செய்தாள்… ஆனால் அவன் பதிலைக் கூட எதிர்பார்க்கவில்லை அவள்…. உடனே கண்களை மூடியவள்… அடுத்த சில நிமிடங்களில் நல்ல உறக்கத்திற்கும் போயிருக்க… உறக்கம் வராமல்… தவித்துக் கொண்டிருந்தவன் அவள் கணவனே…
அவளையேப் பார்த்தபடி இருந்தவன்… பார்த்து கொண்டே இருந்தான்… கணங்கள் மறந்து… தனை மறந்து… அதிலும் அவள் இதழ் சுழித்து அவனைப் பார்த்து சிரித்த நக்கல் கலந்த புன்னகையின் சீண்டல் வேறு அவனை கொஞ்சம் உசுப்பேற்றத்தான் செய்தது…
ஒரு கட்டத்தில்…. நான் ஏன் இவ்வளவு தூரம் தள்ளி இருக்க வேண்டும்….. தவிக்க வேண்டும்… அவள் முகத்தைப் பார்த்தபடியாவது உறங்க என்ன தடை எனக்கு… தனக்குத்தானே சொல்லியபடி…. மெல்ல அவள் புறம் போனவன்… அவள் முகம் பார்க்கத் தோதாக… ஒருக்களித்துப் படுத்தபடி…. அவளையேப் பார்த்தபடி படுத்திருந்தவன்… இதழ்களில் புன்னகையோடு மனைவி உறங்கும் அழகை கண்களில் பதிவு செய்தபடி… அவளைப் பார்த்தபடி இருக்க
கண்மணியோ உறக்கத்திலேயே அவள் இதழ் சுழித்திருக்க… அதே வேகத்தில் அவளின் கன்னக் குழி உடனே தன் இருப்பை அவள் கன்னத்தில் பதிவு செய்திருக்க… அந்த கணப்பொழுதை இவனும் விட்டுக் கொடுக்கவில்லை… அவளை நெருங்கி…. அவள் கன்னக் குழியில் தன் இதழை இவன் பதிவு செய்திருக்க… மீண்டும் அவள் கன்னம் சுழிக்க… இவன் மீண்டும் பதிக்க… அவள் மீண்டும் சுழிக்க… இவன் மீண்டும் பதிக்க… இவனுக்கோ அந்த விளையாட்டு சுவாரசியமாக இருந்தது… மனைவி மீண்டும் இதழ் சுழிப்பாள் என்று காத்திருக்க… அவளோ இப்போது அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க… ரிஷி இப்போது அவள் இதழ் சுழிப்புக்கும் காத்திருக்கவில்லை… கன்னக் குழிக்கும் காத்திருக்கவில்லை… அவள் கன்னத்தில் முத்தமிட்டு முத்தமிட்டு அவளைப் பார்த்தபடியே இருக்க… கண்மணியோ… தூக்கத்திலேயே கைகளால் துடைக்க ஆரம்பித்திருக்க… ரிஷிக்கு முகமெங்கும் புன்னகை… மனமெங்கும் நிம்மதி… காற்றில் பறப்பது போன்ற உணர்வு… இது போதும்… அந்த உணர்வோடு அவளை விட்டு விலகி படுத்தவன்…
உறங்க முயற்சிக்க…. அதுதான் முடியவில்லை… காரணம்… அவன் மனைவியும் உறங்கவில்லையே….
உறங்கிக் கொண்டிருந்தவளாக நடித்துக் கொண்டிருந்தவளை உணர்ந்தானோ இல்லையோ அப்போதே அவன் இதழ் உணர்ந்த அவளின் ஸ்பரிசம்… அவளை விட்டு விலகவே முடியாதபடி அவனை மீண்டும் அவள் புறம் இழுக்க ஆரம்பித்திருக்க…
அதன் பின் அவனால் மீளவே முடியவில்லை… அவள் அருகே மீண்டும் நெருங்கி இருந்தான் தாபத்தோடு….
“நீ தூங்கலைனு எனக்கும் தெரியும் கண்மணி… கண்ணைத் திறக்காத…” அவள் காதில் அவன் இதழ் வரிகள் தொட்டு… செய்தி அலைகளை பரப்பியபடியே… அவன் கன்னக் குழியில் இதழ் பதித்தவனுக்கு… மூக்குத்தியோ அதன் இளஞ்சிவப்புக் கல்லோ… இப்போது தொந்தரவு செய்யவில்லை… மாறாக சிவந்திருந்த இதழ்கள் அவனை அழைக்க… தன் இதழ் கொண்டு தீண்டாமல்… தன் விரல் கொண்டு தீண்டினான்…
அடுத்த கணமே… அவள் இதழ் தொட்ட கரங்களுக்கு மாறன் அம்புகளின் மலர்கணைகள் சூடப்பட ஆரம்பித்திருக்க… அவன் கரங்கள் மெல்ல… தான் அவளுக்கு அணிவித்த மாங்கல்ய சங்கிலியின் பயணத்துக்கு போட்டியாக… தன் பயணத்தைத் தொடங்கி இருக்க… கண்மணி இப்போது அவனது கரங்களைத் தடுத்து… தன்வசம் கொண்டு வந்திருக்க… ரிஷி தலையை உயர்த்தி தன் பார்வையை அவள் முகத்தில் பதிக்க… அவளோ இப்போதும் கண் மூடி இருந்தாள் தான்… ஆனால் விழி திறக்காத அவள் கண்மணிகளின் அலைப்புறுதல் அவனை ஏதோ செய்ய…
ரிஷி சட்டென்று அவளை விட்டு விலகியும் இருந்தான்…. வெளியே பால்கனி நோக்கியும் வந்திருந்தான்… இந்தப் போராட்டம் ஏன்… இத்தனை அவஸ்தை ஏன்?… ஏன் என்று தெரியாமல் எல்லாம் இல்லை… ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத தன் நிலையை நினைத்து… எரிச்சலில்… கைகளை பால்கனிக் கைப்பிடியில் குத்த நினைக்கும் போதே… கண்மணி அவன் கைகளைப் பற்றி இருக்க… திரும்பியவனுக்கோ இன்னுமே அவஸ்தையே… காலையில் மேல்கோட்… சற்று முன் ஸ்டோல்… அவனின் உரிமையைத் தடுத்த ஏதும் இப்போது அவளின் அணிந்திருந்த டீஷர்ட்டின் மேல் இல்லை… பார்வையை விலக்கி…. திரும்பிக் கொண்டான் ரிஷி…
“எனக்குப் பேசனும் உங்ககிட்ட” கைகளைக் கட்டிக்கொண்டபடி அவன் முன் வந்து நின்றிருக்க…
அவன் முன் அவள் வந்து நின்ற, பேசிய தோரணையே… ரவுடி அவதாரம் மீண்டும் தரித்திருந்தாள் என்பதை உணர்த்தி இருக்க…
“ப்ச்… நீ தூங்கு கண்மணி… சா…” மன்னிப்பு வேண்ட அவன் எத்தனித்த போதே… சட்டென்று தான் கட்டியிருந்த தன் கைகளை தன்னிடமிருந்து எடுத்தவளாக அவன் கழுத்தை வளைத்து தன்னோடு சேர்த்தவள் அடுத்து அவன் இதழ் உச்சரிக்கப் போன எழுத்தை உச்சரிக்க விடாமல் தன் இதழால் அவனை ஆட்கொண்டிருந்தாள்… ரிஷியின் ஸ்பெஷல் ரவுடியாக
வேண்டாமென்று திமிறியவனாக…. விலகியவனாக அவளைத் தடுக்க முயற்சித்தவனின் கண்கள் அவனையும் மீறி அவள் கண்களை சென்றடைய… அவன் இதழைத் தன் இதழால் மூடி இருந்தவளோ… தன் இமைகளை மூட மறந்தவளாக அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்… அவள் மட்டுமே அவனை ஆட்சி செய்ய முடியும்… அவள் மட்டுமே அவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது போல… ரிஷியின் கண்மணியாக ஆட்சி செய்து கொண்டிருந்தாள்…
அவனும் அதுபோலவே அவளுக்கு கட்டுப்பட்டு நின்றானே தவிர… தன் கட்டுப்பாடை உடைத்தெல்லாம் வெளியே வரவில்லை… தனக்குள் கட்டுப்பாடுகள் போட்டு… எல்லை மீறக் கூடாது என்று எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தும்… சற்று முன் அவனை மீறி அவளிடம் எல்லை மீறியதில் அவனே அவனை வெறுத்தபடி இருந்திருக்க… இப்போது அவளைத் தன்வசம் கொண்டு வரவே இல்லை…
ஆனாலும் ரிஷி ஒருகட்டத்தில் அவளிடம் மொத்தமாக அவனை இழந்திருக்க… தான் இழந்த இழப்பை எல்லாம் அவளிடமே மட்டுமே ஈடு செய்ய முடியும்… அவளை தன்னவளாக மாற்றி வெற்றி கொள்ள வேண்டும் என்ற தாபக் கனல் அவனுள் பற்றி எரிய ஆரம்பித்ததுதான்…. இருந்தும் அவன் மனம் இன்னும் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள அனுமதி அளிக்காமல் அவனைத் துண்டாட ஆரம்பிக்க…… மெல்ல அவளிடமிருந்து தன்னை விடுவித்தவன்… அவளைத் தள்ளி நிறுத்தினான் மனச்சாட்சியே இல்லாமல்…
விட்டு விலகினான் தான்…. ஆனால் அவன் கண்கள் அவள் கண்களை விட்டு விலகாமல் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது…
வேறொரு பெண்ணாக இருந்தால்…. என்ன சொல்லி இருப்பாளோ தெரியவில்லை… என்ன நினைத்திருப்பாளோ தெரியவில்லை… அவள் தான் அவன் கண்மணி ஆகிற்றே!!! அவன் பிடிவாதம் தெரியாதவளா… இல்லை அவனைத்தான் தெரியாதவளா…
விலகியவனின் கரத்தை…. பிடிக்க… அவனோ அவளிடம் பிடிவாதம் பிடிக்க… புன்னகை சிந்தியவள்…
அவன் தலைகோதி.. நெற்றியில் அழுந்த முத்தமிட… அவனும் இப்போது கொஞ்சம் தணிந்திருக்க… அவன் கரங்களை இழுத்து தன்னை அணைத்தபடி போட்டபடி… அவனிடம் பேச ஆரம்பித்திருந்தாள் கண்மணி…
“ப்ச்ச்… ரிஷிக்கண்ணா… இன்னும் இப்படியே சின்னப் பிள்ளை மாதிரி இருந்தால்… நாளைக்கு நமக்குனு குழந்தைகள் வரும்போது…. குழந்தைங்களைப் பார்ப்பேனா… இல்லை உங்களைப் பார்ப்பேனா…” என்றபடியே அவன் மூக்கைத் திருக…. அவனோ எப்போதும் போல அவளின் அன்பில் கரைந்திருந்தான்…
“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்னு எனக்குத் தெரியுது கண்மணி.. ஒரு பொண்ணா… உனக்கு இது எவ்ளோ இன்சல்ட்ட்னு எனக்கும் புரியுது…. ஆனால் உன்னை அவாய்ட் பண்றது சத்தியமா உன்னைப் பிடிக்காமல் இல்லை கண்மணி…. உன்னை ரொம்ப… எனக்கு எந்த அளவுக்கு உன்னைப் பிடிக்கும்னு கூட சொல்ல எனக்குத் தெரியல… நீ இல்லைனா… உன்னோட இந்த அன்பு இல்லைனா… நான் சூனியம்னு மட்டும் எனக்குத் தெரியும்… இவ்ளோ அன்பைக் கொட்ற உனக்கு நான் என்ன செய்தேன்… இன்னும் கஷ்டம் தான் கொடுத்துட்டு இருக்கேன்…”
வேதனையோடு ரிஷி அவளைக் கட்டிக் கொண்டவன்… வழக்கம் போல அவளிடமே தன்னை ஒப்புக் கொடுக்க…
“இங்க பாருங்க… என்னைப் பாருங்க” என வழக்கம் போல அவனைத் தாங்க ஆரம்பித்திருந்தாள் கண்மணி….
”ஏன் ரிஷி இப்படி கஷ்டப்படுறீங்க… உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கிறீங்க… நான் எங்க கஷ்டப்படுறேன்… ஆனால் உங்களுக்குத் தெரியும் தானே… நீங்க கஷ்டப்பட்டா என்னால தாங்க முடியாதுன்னு…” கேள்வி கேட்டவளிடம் சிறு குழந்தை ’ஆமாம்’ என்று சொல்வது போல ரிஷி தலை அசைக்க… அந்தப் பாவத்தில் கண்மணிக்கு சிரிப்புதான் வந்து போனது….
“ரிஷிக்கண்ணா” என்று அணைத்துக் கொண்டவள்….
”நீங்க உங்க வேதனையை கஷ்டங்களை மறக்கிறதுக்கு… அதை எல்லாம் கடக்கிறதுக்கு… நான் என்ன பாடுபடுவேன்னு… உங்களுக்கே தெரியும்… அப்படிப்பட்ட எனக்கு… இப்போ இந்த நொடி என் ரிஷிக்கண்ணா கண்மணியோட புருசனா கஷ்டப்பட்றதுக்கு காரணம் அவனோட கண்மணின்னு தெரியும்போது… அதுவும் அந்த வேதனையை அவள் மட்டுமே தீர்க்க முடியும்னு எனக்குத் தெரியும் போது… உங்களப் இப்படி பார்த்துட்டு சும்மா இருப்பேனா ரிஷி… இவ்ளோ நாள் உங்கள விட்டு தள்ளி இருந்தேன்தான்… அப்போ நீங்க இந்தக் கஷ்டத்தை அனுபவிக்கலை ரிஷி… அப்படி தெரிந்திருந்தால்… அன்னைக்கே… அந்த நிமிடமே… உங்க தேவையை நிறைவேற்றி இருப்பேன்…” என்றவளை அதே வேகத்தோடு தன்னோடு அணைத்துக் கொண்டவன்…. பூமாலையாக தன்னவளை அள்ளிக் கொண்டவனிடம்…. அவளும் தன்னை ஒப்படைத்தபடியே… அவன் கண்மணியாக அவன் கண்களோடு கலந்தவள்… அவனையும் தன் கண்மணிக்குள் சிறை செய்தபடியே
“நீங்க சொல்வீங்களே… உங்க உயிர் என்கிட்ட இருக்குனு… அதை என் கண்ல பார்க்க முடியலையா ரிஷி… உங்களுக்காக உங்க உயிரை… அது சுமந்திருக்கிற இந்த அற்ப உடலை… போராடிக் காப்பாற்றி கொண்டு வந்திருக்கேன்… அது புரியலையா ரிஷி… இதுக்கும் மேல உங்க தகுதியா எதை என்கிட்ட நிரூபிக்க போராடிட்டு இருக்கிங்க… கேவலம் நடந்து முடிந்த அந்தக் கடந்த காலத்துக்கு மதிப்பு கொடுக்கறீங்களாநான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் நியாயம் செஞ்சுட்டு என்கிட்ட வரனும்னு நினைக்கிறது முட்டாள் தனமா இல்லையா ரிஷிக்கண்ணா… கடந்த காலம் அது முடிந்தது முடிந்தது தான்… மாற்ற முடியாது… அதுக்காக நம்ம நிகழ்காலம்… வரப் போகிற நம்ம எதிர்காலம்… இன்னும் தேங்கி நிற்கனுமா… ” என்ற போதே ரிஷியின் கைகள் அவளிடமிருந்து நெகிழ… அவன் கைகளை தன்னைச் சுற்றி இறுகப் பற்ற வைத்தவள்… அவன் கழுத்தில் இருந்த தன் கரங்களையும் இறுக்கிக் கொண்டவளாக… அவன் அதிர்ந்த பார்வையை புரிந்தபடியே
“ஓரளவு கெஸ் பண்ணேன்… அதுதான் இங்க கிளம்பி வந்ததே… அப்பாகிட்டயும் பேசினேன்…” என்ற போதே… அவன் ஏதோ பேச வர
“அதை விடுங்க… இப்போ அதைப் பற்றி பேச வேண்டாமே…” என்று அவனைத் தடுத்தவள்
“எல்லாத்துக்கும் ஜட்ஸ்மெண்ட் கொடுத்துட்டுதான்… வாழ்க்கையை வாழனும்னு நினைத்தோம்னா… எல்லாம் முடிச்சுட்டு வந்து பார்க்கும் போது… நாம நமக்கான சந்தோசத்தை விட்டு ரொம்ப தூரம் வந்திருப்போம் ரிஷி… நீங்க தொலச்சீங்களே… இந்த ஆறு வருசம்… அது பத்தாதா… இன்னும் வேண்டுமா ரிஷி” என்றவளிடம்
“இந்த ஆறு வருசம்… நான் என் லைஃபை தொலைக்கலடி…. மறுஜென்மம் எடுத்து உன் ரிஷிக்கண்ணாவா உன்கிட்ட வந்து சேர்ந்திருக்கேன்” என்று வேகமாக அவளைத் திருத்தியவனையேப் பார்த்துக் கொண்டிருக்க… இவனுமே அவளையே அவள் கண்களையேப் பார்த்தபடி இருந்தான்…
தாயாக தாலாட்டியவள்… தோழியாக தோள் கொடுத்தவள்… தாரமாக தன் தாபம் தீர்க்கவும் தயாராக நின்றிருக்க… யாருக்கு கிடைக்கும் இந்தப் பாக்கியம்… புண்ணியம்… அவன் வேதனைகளும்… சோதனைகளும்… இப்படி ஒரு பெண் கிடைக்கத்தான் என்றால்… எவ்வளவு வேண்டுமென்றாலும் தாங்கலாமே…. நினைத்தபடியே அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன் வார்த்தையில் அவன் தேவையைச் சொல்லவில்லை…. ஆனால் உடல் மொழியே அவளுக்கான அவன் தேடலை அவளுக்குச் சொல்லிவிட…
“ஐ நீட் யூ… உங்களோட கண்மணியா… என் ரிஷிகேஷோட கண்ணின் மணியா எனக்கும் மறுஜென்மம் வேண்டும்… இப்போ இந்த நிமிசமே…” அவன் உடல்மொழி அவளுக்கு சொன்ன வார்த்தைகளை இவள் தேகம் உணர்ந்து தன் இதழ் வழியே மொழியாக்கம் செய்து அதை நிறைவு செய்திருக்க….
அவள் அவன் கண்களுக்கு தாயாக… தோழியாக… தாரமாக மட்டும் தோன்றவில்லை அவள்….. குமரியாக அவனை அழைத்த போதிலும்… குழந்தையாக அந்தக் கண்கள் அவனிடம் தஞ்சமடைந்திருக்க…. அவள் மேல் அவன் கொண்ட உணர்வுக்கு காதல் என்று இதுநாள் வரை வரையறுத்தது இல்லை…. இதோ இப்போது இந்த உணர்வுக்கும் என்ன பெயர் என்று தெரியவில்லை… காமமும் கடந்திருந்தான் அவளிடம்…
“என்ன பெண் இவள்… எனக்காக மட்டுமே… என் ஒருவனுக்காக மட்டுமே பிறந்தவள் போல… நான் மட்டுமே… நான் ஒருவன் மட்டுமே இந்த பூமியில் இருப்பது போல மொத்த அன்பையும் வேறு யாருக்காகவும் கொடுக்காமல் சிந்தாமல் சிதறாமல் என் மேல் மட்டுமே வாரி வழங்குபவள்… இதற்கு மேல்… இதை விட கணவனாக ஒருவனுக்கு என்ன தகுதி வேண்டும்…” சிந்தை தெளிந்தவனாக அவளைச் சந்தோசமாக தன் கைகளில் ஏந்தியவன்… அவள் கண்களைப் பார்த்தபடியே அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டியபடி…. இன்னுமே தனக்குள் கொண்டு வந்தவன்… தன் இதழைப் பதிவு செய்திருந்தான்… அவள் இதழில் அழுத்தமாக… கண்மணி மெல்லத் திணற ஆரம்பித்திருக்க… புரிந்து இதழ் சிறையிலிருந்து அவளை விடுவித்தனாக
“மறுஜென்மம் கேட்ட… இதுக்கே திணறுருயே அம்மு…. உன் கூட பல ஜென்மம் எடுக்க தவம் செய்யப் போறேனே… முடியுமா உன்னால… என்னைத் தவிக்கவிட்ற மாட்டியே ” தவிப்பும் குறும்பும் கலந்து கேட்டவனிடம்…
“மாட்டேன் ரிஷி…. நீங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும்… அத்தனை ஜென்மமும் வருவேன்… உங்க உயிர் என்கிட்ட தானே இருக்கு…. வந்து சேர்வேன் ரிஷி…” உறுதியாகச் சொன்னவளோடு சந்தோஷமாக அறையை நோக்கிச் சென்றவன்...
ஏழேழு ஜென்மங்கள் என்ற வார்த்தைகளை எல்லாம் அவன் ஒருபோதும் நம்பியதில்லை…. ஆனால் இன்று… எத்தனை முறை மறு ஜென்மம் எடுத்தான் அந்த எண்ணிக்கை அவனுக்கும் தெரியவில்லை… ஆனால் தான் எடுத்த ஒவ்வொரு ஜென்மத்திலும் தன் உயிரை அவளோடு சேர்த்து… தன் கண்மணியையும் தன்னோடு பிறப்பெடுக்க வைத்தவன்… அவள் கண்களோடு கலக்க… அவன் சொன்னது போல அவள் ஏற்றுக் கொண்டது போல தன் உயிர் தன்னவள் கண்களில் தானோ… அந்தக் கண்களில் அப்படி ஒரு உயிர்ப்பு…
மீண்டும் மீண்டும் தன்னைத் தன் கண்மணிக்குள் தொலைத்து… அதை அவள் கண் மணியில் காண பேராவல் கொண்டவனாக…. அவனின் ஜென்மத் தேடலை தொடர்ந்து கொண்டே இருக்க… அவன் தேடல் அவளே… அவள் மட்டுமே!!! அவன் ஜனனம் அவளிடமே… அவளிடம் மட்டுமே… அவளோடு மட்டுமே!!!… நிறைவு பெறாத தேடலாக அவன் தேடல் மாறி இருக்க… மனைவியிடம் முற்றிலுமாக தொலைந்து போனவனாக… அவளிடமிருந்து மீளும் வழி தெரியாமலும் புரியாமலும் தவித்த கணவனைப் புரிந்தவளாக… தான் இருந்த மோன நிலையிலும்… அவன் தலை கோதி… உச்சி முத்தமிட்டு… ரிஷியை மீட்டெடுத்து அவனுக்கே கொடுத்திருந்தாள்… அவன் கண்ணின் மணி கண்மணி…
மீண்டவனோ… வழக்கமான அவளின் ரிஷிக்கண்ணாவாக அவளிடமே தஞ்சமாகி இருந்தான்… ’ரிஷி’ என்னும் அந்தப் பிடிவாதக் குழந்தை… அவன் நிலை மிஞ்சும் போதெல்லாம்… தாயாக… தோழியாக… அடக்கி தன்னிடம் தஞ்சம் கொள்ள வைத்தவள்……. கணவனாக மிஞ்சிய போதும்… தாரமாக அவனை அடக்கி … இல்லையில்லை…. கொஞ்சி… தன்னில் தஞ்சம் கொள்ள வைத்திருந்தாள் கண்மணி….
ஈருடல் ஓருயிர் என்ற வார்த்தை கூட அவர்களுக்கு மிகையே… கண்மணி வேறு ரிஷி வேறு… என்ற நிலையெல்லாம் கடந்து… இருவரையும் பிரித்தறிய முடியாத தருணங்களாக மாறி இருந்தன…. இருவரும் ஒருவரோடு ஒருவராக கலந்திருந்த அந்த தருணங்கள்….
அவனுக்காக அவள் பிறந்தாளா??…. அவளுக்காக அவன் பிறந்தானா???… அவன் கண்மணியின் ரிஷியா??… இல்லை அவள் ரிஷியின் கண்மணியா???… விடை தெரியாத கேள்வி… அவனுக்குமே… அவளுக்குமே…
/*
அன்பிலே வாழுகின்றேன் இன்ப பேராலயம் மன்னனும் போற்றும் இந்த உயிர்கள் சரணாலயம் வானமே மாறினும் காலமே தேயினும் மனம் தான் தீட்டும் உயிர் காதல் மறையாது அழியாது
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ உலகினில் நாளும் காணாத ஏடு இல்லாத தேவ பந்தம் இதுவோ கதிரொளி மாறி போனாலும் மாறி போகாத உண்மை சொந்தம் இதுவோ அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
*/
Comentarios