top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி-46-2

Updated: Oct 13, 2021

அத்தியாயம்-46-2



“ஏன் டல்லா இருந்த… கேள்விக்கு மட்டும் பதில்” ரிஷி கண்மணியின் வார்த்தைகளை எல்லாம் அலட்சியம் செய்தவனாக தன் பிடியிலேயே நின்றான்…


“ஒண்ணும் இல்ல ரிஷி” கண்மணியி சொன்ன விதமே ஏதோ இருக்கின்றது என்பதை ரிஷிக்கு உணர்த்த அதைப் புரிந்து கொண்டவனாக …


“உனக்கு போன் பண்ணாமல் ரித்விகாவுக்கு கால் பண்ணதுக்கெல்லாம் நீ ஃபீல் பண்ண மாட்ட… வேற ஏதோ இருக்கு… சொல்லு.. எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்ம” ரிஷி தன் பார்வையைக் காணொளியில் தெரிந்த கண்மணியின் முகத்தில் மட்டுமே பதித்திருந்தான்… அவன் முகத்திலோ இலேசான கோபத்தோடு கலந்த தீவிர பாவம்


“ஏன்… எனக்கு கோபம் வரக் கூடாதா என்ன… என்னோட மொபைல் போனுக்கு இன்னைக்கு கொடுத்த அட்டென்ஷன் மாதிரி என்னைக்கும் நான் கொடுத்தது இல்லை ரிஷிக் கண்ணா..” சட்டென்று கோபமுகம் காட்டினாள் கண்மணி…


உண்மையிலேயே அவள் ரிஷியின் காலை தனது அலைபேசியில் எதிர்பார்த்திருக்க… ரித்விகாவுக்கு வந்த அழைப்பில் மனம் சுணங்கியதுதான்… இருந்தாலும் பெரிதாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை… அதற்காகவெல்லாம் சண்டையோ இல்லை முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்பவளும் கண்மணி இல்லை என்ற போதும்… ரிஷி அவனாக அவளைக் கணித்துச் சொன்னதையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… அவளையுமறியாமல் கோபம் வந்து விட… தன் கோபத்தையும் அவனிடம் காட்டி விட்டாள்..


தன் மீதான அவளின் உரிமைக் கோபத்தைக் கண்டவன்.. மனம் விட்டுச் சிரிக்க… அதுவரை இருந்த இறுக்கமான முகம் மறைந்து…. இப்போது இலகுவாகி இருந்தது…


“இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலைங்க மேடம்…” தன் பிடியிலேயே நின்றாலும் அவனது கோபமில்லா செல்லமான தொணியில் கேட்க


”எனக்கு போன் பண்ணாததும் கோபம்தான்” மெல்லிய குரலில் சொல்லலாமா வேண்டாமா என்பது போல் வெளி வந்த வார்த்தைகளோடு இதழ் சுழித்த போது கண்மணியும் சிறு குழந்தை ஆகி இருந்தாள்


“சரி… சாரி… உனக்கு முதல்ல போன் பண்ணாததுக்கு… அப்போ நான் போன் பண்ணாதது உனக்கு செகண்ட் பிரையாரிட்டி…. ஆக்சுவலா எதுக்கு கோபம்... அந்த ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி என்ன… அதைச் சொல்லுங்க பார்க்கலாம்”


“ப்ச்ச்..” கண்மணி இப்போதும் பதில் சொல்லாமல் சலிக்க… அவளது கன்னக் குழிகளும் சலிக்காமல் அவளோடு உறவாட ஆரம்பித்திருக்க… ரிஷியோ தடுமாறினான் தனக்குள்… அவளைப் பார்க்க முடியாமல்


“சரி விடு போனைக் கட் பண்றேன்… ஆஸ்திரேலியா டூ இந்தியா ஃப்ளைட் டிக்கெட் பார்க்கனும் எனக்கு…” என்றவன் இப்போது கண்மணியைப் பார்க்காமல்.. அலைபேசியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்தபடி தலையைக் கோத


“அர்ஜூன் வந்திருக்காரு…” கண்மணி சொன்ன போதே… தலை முடியைக் கோதிக் கொண்டிருந்த அவனது விரல்கள் சிகைக்குள் சிக்கிக் கொண்டது போல் வேலை நிறுத்தம் செய்திருந்தன…


“அப்போ நான் தானே டென்சன் ஆகனும்… எனக்குத்தானே கோபம் வந்திருக்கனும்” ரிஷியிடமிருந்து பட்டென்று வார்த்தைகள் வந்திருந்தன… அவன் முகத்தை கைகள் மறைத்திருக்க… அவன் முகத்தின் உணர்வுகளை கண்மணியால் கவனிக்க முடியவில்லை… அவன் முகத்தைப் பார்க்க முடியாததால்… கண்மணி அறையை நோட்டமிட… அப்போதுதான் தன் தந்தையின் ஞாபகம் வர…


”அப்பாக்கு ஏன் உடம்பு சரி இல்லை… என்ன டென்சன் அவருக்கு” கண்மணி கேட்க…


“டென்சனா…” ரிஷி புருவம் சுருக்க…


“அவர் ஏதாவது நினைத்து குழம்பினால் தான் வீசிங் ப்ராப்ளம் வரும்… என்ன நடந்துச்சு…” அறிந்தோ அறியாமலோ… இருவருமே அர்ஜூனை தவிர்க்க நினைக்க… தானாகே பேச்சு திசை மாறியது…


ரிஷியும் யோசித்துப் பார்த்தான்… ஏர்ப்போர்ட்டுக்கு இவர்களின் ஸ்பான்ஸர் வந்திருந்தனர்… அடுத்து ஹோட்டெல் என வந்து சேர்ந்து விட்டனர்… இந்த நிகழ்வுகளில் தன் முதலாளிக்கு மனம் வருந்தும்படி என்ன நடந்திருக்கப் போகிறது… ரிஷியும் யோசிக்க வித்தியாசமாக நடந்தது போல் ஏதும் அவன் உணரவில்லை… ஆனால் ஏர்போர்ட்டில் இருந்த வரை நட்ராஜ் நார்மலாகத்தான் இருந்தார்…


”வேறு என்னவாக இருக்கும்” ரிஷி யோசித்தபடி இருக்க…


“ஒருவேளை அம்மா ஞாபகம் வந்திருக்கும்… பார்த்துக்கங்க ரிஷி” கண்மணி ஆதங்கமாகச் சொல்ல… இப்போது ரிஷி… தன்னையுமறியாமல் அவளிடம் தலை அசைத்திருந்தான்…


”அப்பா… எங்க… நான் பார்க்கனும்” என்ற கண்மணியிடம் அலைபேசியைத் திருப்பி அவளிடம் காட்ட… தன் தந்தையைப் பார்த்து திருப்தி பாவத்தில் கணவனைப் பார்க்க… அவனை காண வில்லை…


“ரிஷி” கண்மணி சத்தமாகக் கூப்பிட…


“இதோம்மா…” என்றவன் இப்போது தலையணையை கையில் வைத்திருக்க…


அவர்களின் நேரம் நள்ளிரவுக்கு மேல் என்பதால்… கண்மணியும் அவனை தொந்தரவு செய்கிறோமோ எண்ணியபடி


“தூங்கப் போறீங்களா ரிஷி” என்றபோதே அவளது குரலில் அவளே எதிர்பார்க்காத ஏமாற்றம் வந்திருக்க… அதை ரிஷி உணர்ந்தானோ இல்லையோ… கண்மணி உணர்ந்திருக்க… தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தாள் கண்மணி… தனக்கு என்னாயிற்று… ஏன் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தில்…


”தூங்கனும்… ஆனால் தூக்கம்தான் வரலை” ரிஷி சொல்ல


“கைல பில்லோ வச்சுட்டு தூக்கம் வரலேண்ணா என்ன அர்த்தம் ரிஷி… மணி என்னாச்சு…” என்று செல்லமாக அரட்டியவளிடம்


“ப்ச்ச்… இது வேற கதை“ என்றவன் தலையணைப் பார்த்தபடியே கவலையோடு பேச


“என்னாச்சும்மா…” கண்மணி என்னவோ… அவன் கவலையை இங்கிருந்தபடியே உடனே தீர்த்து விடுபவள் போலக் கேட்க…


“டபுள் காட்… பெருசுதான்… ஆனால் செபரேட் பண்ண முடியலை… “ அங்கிருந்த கட்டிலைப் பார்த்தபடியே ரிஷி சொல்லிக் கொண்டிருக்க


கண்மணிக்கோ அவன் என்ன சொல்ல வருகிறான் என புரிந்து கொள்ள முடியாமல் விழிக்க ஆரம்பித்திருந்தாள்…


“நான் மட்டும் தனியா படுத்தா பிரச்சனை இல்லை… பக்கத்தில யாராவது படுத்திருந்தால் கால் போட்ருவேன்… சார் மேல போட்ருவேனோன்னு பயமா இருக்கு கண்மணி…” அந்த 26 வயது இளைஞன் நொடியில் சிறுவனாக மாறியிருந்த தோற்றம் கண்மணிக்கு… அவளையுமறியாமல் ரிஷியைப் பார்த்து புன்முறுவல் பூத்தவள்…


”அதெல்லாம் போட மாட்டீங்க… சும்மா படுங்க… நீங்க அப்படிலாம் போட மாட்டீங்க”


“ப்ச்ச்… விக்கிக்கிட்ட கேட்டுப் பாரு தெரியும்… என் பக்கத்திலயான்னு அரளுவான்… சம்டைம் கிரிக்கெட் பார்க்க ஹால்ல படுப்போம்… அப்போ அங்கேயே தூங்கி்ருவோம்… அப்போதெல்லாம் எனக்கும் அவனுக்கும் இடையில் பில்லோ பாலம் கட்டிட்டுத்தான் படுக்கவே செய்வான்… அந்த அளவுக்கு நான் டெர்ரர் காட்டிருக்கேன்… அப்படியும்… நான் கால் போட்டுட்டேன்னு திட்டிட்டு இருப்பான்”


”சரி… அப்புறம்” கண்மணி ராகமாக இழுக்க…


“என்னடி… ராகம் பாடற… சார் பக்கத்திலயும் படுக்க முடியாது… கீழயும் படுக்க முடியாது… ஏற்கனவே ஜலதோஷம்… ஜன்னி வந்து சாக வேண்டியதுதான்னு நானே புலம்பிட்டு இருக்கேன்… என் நெலமையப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது… ரொம்ப்ப கிண்டலா இருக்கோ… ராகம் பாடிட்டு இருக்க” கடுப்போடு சொல்ல


“அதுதான் நான் தான் சொல்றேன்ல…. அது அப்போ… இப்போலாம் நீங்க அப்படி இல்லை… தாராளமா அப்பா பக்கத்தில படுக்கலாம்…” கண்மணி அடித்துச் சொல்ல…


’என்ன… இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்றா’ யோசித்தவனுக்கு அப்போதுதான் புரிந்தது…

‘ஊட்டி சென்றபோது முதல் நாள் இரவில்… அவளை தன் அருகே உறங்க வைத்திருந்ததை நினைவு கூர்ந்தவனுக்கு. முகத்தில் மென்னகை படர… அன்றைய ஞாபகம் பேச முடியாமல் அவனைப் தடுமாற வைக்க… கண்மணியிடம் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவனாக மொபைலை தன் முகத்திலிருந்து தள்ளி வைத்தவன்… தொண்டையைச் செறும…


கண்மணியும் புரிந்து கொண்டவளாக


“ஹலோ… மிஸ்டர் ஆர் கே… இருக்கீங்களா…” என்று கண்மணி விடாமல் அவனை வம்பிழுக்க…


மீண்டும் அவளின் பார்வைக்கு வந்தவன்… மீண்டும் தொண்டையைச் செறும… இவளும் அவனை மாதிரியே செறுமிக் காட்ட…


“ரவுடி” சிரித்த ரிஷி …


“நீ நடத்தும்மா… நடத்து…” என்ற போது அவனும் கண்மணியிடம் சரளமாக பேச ஆரம்பித்திருக்க



“நடத்திருவோம்… மன்னர் ஆணையே மனையாளின் இஷ்டம்” என்று கண்மணி தலை வணங்கிச் சொல்ல….


“அடி வாங்கப் போற நீ…” என்று ஒற்றை விரல் நீட்டி செல்லமாக எச்சரித்தவன்… இப்போது கொஞ்சமான தீவிர பாவத்துடன்..


“’நீ’-ன்றதுனால… அன்னைக்கு நான் எச்சரிக்கையா கையக் காலை அடக்கி ஒடுக்கி படுத்திருந்திருப்பேன் கண்மணி… அதை வச்சுலாம் சொல்லிற முடியாது” ரிஷி விளக்கம் கொடுத்து முடிக்க…


கண்மணியோ இங்கு பத்ரகாளியின் அவதாரத்தை எடுத்திருந்தாள் பார்வையில்…


“இன்னொரு தரம்… இன்னொரு தரம் சொல்லுங்க” என்றாள்…. வார்த்தைகளில் நிதானம் இருந்தாலும் அதில் இருந்த அழுத்தம் மற்றும் அதிகாரத்தொணி உணர்ந்தவனாக…


“அதாவது நீ என் பக்கத்தில இருந்ததுனால என் கையை, காலை கண்ட்ரோல வச்சுருந்தேன்னு சொன்னேன் கண்மணி… தப்பா ஏதும் சொல்லலையே நான்… நீ ஏன் இவ்வளவு காண்டாகுற” ரிஷியின் வார்த்தை ஒவ்வொன்றும் நிதனானமாக வந்தாலும்… கண்மணி ஏன் கோபமானாள் என்று புரியாத தயக்கத்துடன் வர


“ஹ்ம்ம்… வரே வாவ்… ரொம்பப் சூப்பர் ரிஷிக் கண்ணா… பொண்டாட்டி பக்கத்தில படுத்தா சார்க்கு… எதுவும் நீளாது…. ரொம்பக் கண்ட்ரோலா இருப்பீங்க… ஆனால் வேற யாராவது இருந்தா எல்லாம் நீளும்… சாரும் யோசிப்பீங்க…. பலே… அடேங்கப்பா…” என்று கடுப்போடு சொன்னவளைப் பார்த்த ரிஷியின் கண்கள் விரிந்திருக்க… அவனது மூளையோ


“இவ தெரிந்து பேசுறாளா இல்லையா…. சேச்சே கண்மணி அப்படிலாம் பேச மாட்டா” என்று நினைத்து முடிக்க வில்லை…


“டபுள் மீனிங்… ட்ரிப்பிள் மீனிங்… எல்லா புண்ணாக்கு மீனிங்க்லயும் தான் பேசுறேன்” கண்மணி உச்சக்கட்ட கடுப்போடு முடிக்க…


ஆவென்று திறந்த வாயில் கையை வைத்தபடி… இருந்தவனின் கண்கள் இன்னும் விரிந்த நிலையிலேயே இருக்க


“இன்னா இப்போ இன்னா பேசிட்டேன்னு இவ்ளோ லுக்கு… “கண்மணி எரிச்சலோடு பார்க்க… அவள் பேசிய சென்னை பாஷையே அவளின் எரிச்சலின் உச்சக்கட்ட அளவைச் சொல்ல


“தாயே உன்னைலாம் உலகம் வேற இடத்துல வச்சுருக்கு… நீ இப்படிலாம் பேசுனா தாங்காதுடி அந்த உலகம்” என்று சொன்னவனிடம்


“உலகம் அதை விடுங்க… ரிஷியோட கண்மணி ரிஷிகிட்ட மட்டும் வேறதான்… இது அந்த உலகமே சொல்லும்…”


ரிஷி இப்போது உல்லாசமாக தலை அசைத்து ஆமோதித்தபடியே


”நான் ஆர் கே இல்லடி… நீதான் உண்மையான ஆர் கே” என்றவனிடம்


“எஸ்…. ரிஷியோட கண்மணி… அது அங்க ரிஷி சார்க்கு புரிந்தால் சரி” விளக்கம் கொடுத்தவள் தலை சாய்த்து அவனைப் பார்த்து கண் சிமிட்ட


“நோ… தப்பு… ’ரௌடி கண்மணி’… அதுவும் இந்த ரிஷிக்கு மட்டுமேயான ஸ்பெஷல் ரௌடி” சொன்ன ரிஷியும் இப்போது கண் சிமிட்ட


“இப்போ வெட்கப்படனுமா ரிஷி” கண்மணி அவனைப் பார்த்தே கேட்க


“நீ டெரர் லுக்கே விடும்மா… வெட்கம்… நாணம்னு நமக்கு சம்பந்தமே இல்லாதா பார்டர்லாம் எட்டிப்பார்க்க வேண்டாம்… மீ பாவம்மா “ ரிஷி பாவமாக நடித்துக் காட்ட…


இருவருமே தங்களுக்கான தனி உலகை சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கப் போக… நட்ராஜோ ரிஷி பேசிய சத்தத்தில் மெதுவாக அசைய ஆரம்பித்திருக்க… அதைக் கவனித்த ரிஷி… உடனே


“ஹேய் சரி… பை… சார் எழுந்துட்டார் போல… நான் அப்புறமா பேசுறேன்” சன்னக் குரலில் வேக வேகமாகச் சொன்னவன் அடுத்து வைத்தும் இருக்க… கண்மணிதான் அவனில்லாத அந்த அலைபேசித் திரையை வெறித்துக் கொண்டிருந்தாள்…


தான் செய்வது, பேசுவது எல்லாம் சரியா தவறா… அவனைத் தொந்தரவு செய்கிறோமோ… மனைவி என்ற உரிமையைக் காட்டுகிறோமோ… இல்லை மனைவியாக அவனிடம் தன் எதிர்பார்ப்பை ரிஷிக்கு புரிய வைக்க நினைக்கிறேனா… ஏன் இப்படி ஆனேன்… இப்படி எல்லாம் அவனிடம் பேசக் கூடாது என்று நினைத்துதான் அவனோடான தன் வாழ்க்கையை ஆரம்பித்தோம்… ஆனால் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் நான்… சம்சார பந்தம் என்பது தானாகவே அதன் எல்லைகளை உடைக்குமா…


தலையில் வைத்து அப்படியே அமர்ந்து விட்டாள் கண்மணி… அதன் பின் நினைவுகளோடு உழன்றவள் வீட்டுக்குள் சென்றாளோ…. எப்போது உறங்கினாளோ தெரியவில்லை… மீண்டும் அலைபேசி ஒலிக்க அந்தச் சத்தத்தில் தான் எழுந்தாள்… எழுந்தவள் வேகமாக எடுத்துப் பார்க்க ரிஷியே தான்… மணியைப் பார்க்க… அதிகாலை 3.40….


என்னவோ ஏதோ என்று வேகமாக எடுக்க… அது கூட முடியவில்லை தூக்க கலக்கத்தில்… ஆனாலும் ரிஷியின் அழைப்பை ஏற்க… அவனோ


”சாரி… டிஸ்டர்ப் பண்ணதுக்கு… நான் ஸ்டூடியோ போகிறேன்… சொல்றதுக்காகத்தான் கால் பண்ணேன்…”


எழுந்து அமர்ந்தவள்…


“ஆல் த பெஸ்ட் ரிஷி… அப்பா” என்ற போதே


நட்ராஜிடம் போன் கை மாறி இருந்தது…


அவரோடு பேச ஆரம்பித்தவள்… அவரது உடல்நலத்தையும் விசாரித்தவளாக… அதன் பின் அவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி சில நிமிடங்கள் பேசி முடித்திருக்க… இப்போது மீண்டும் ரிஷியிடம் போன் வந்திருந்தது


“சரி வைக்கவா…” என்றவனிடம் விடைபெறும் விதமாக இவள் தலை அசைக்க போகும் போதே


”நீ தூங்கனுமா என்ன” கரகரத்த குரலில் கேட்ட போதே ரிஷி அலைபேசியை வைக்கும் நிலையில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக கண்மணிக்குப் புரிய… அவன் கண்களில் இவள் கண்ட உணர்வில்… தூக்க கலக்கமெல்லாம் போயிருக்க…


“டைம் ஆகலையா… “ என்றவளிடம்


வார்த்தைகள் இன்றி… அவளையே பார்த்தபடி… ‘இல்லை’ என்பது போல தலையை ஆட்டியவன்…


”நான் கிளம்பிட்டேன்… சார் ரெடி ஆகிற வரை…. என் கூட பேசிட்டு இருக்கியா… தூகம் வருதுன்னா தூங்கு… பிரச்சனை இல்லை…” என்றவன்… அடுத்த நொடியே


“ ஆனால் விடிஞ்சுருத்துதானே… “ என்றவனைப் பார்த்து…


”லைன்லயே இருங்க…” என்றபடி அலைபேசியை வைத்து விட்டு ஓய்வறைக்குச் சென்று… முகம் கழுவி விட்டு வந்தவள்… மீண்டும் அலைபேசியை எடுத்துக் கொண்டு… ரிஷி தங்கி இருக்கும் அறையின் மாடிப்படியில் அமர்ந்தாள்…


ரிஷி நேரடியாகச் சொல்லாவிட்டாலும்…. ரிஷி அவளைத் தேடுகிறான் என்பது அவனின் நடவடிக்கைகளில் புரிந்துகொள்ள முடிந்தது கண்மணியால்… இங்கிருக்கும் போது இருவரும் 24 மணி நேரமும் பேசிக் கொண்டிருக்க வில்லை தான்… அடிக்கடி இவளை விட்டு வெளியூர் செல்பவன் தான்… என்ன ஆயிற்று இவனுக்கு… அடுத்து கண்மணி ரிஷியைப் பற்றி நினைக்க ஆரம்பித்திருந்தாள்…


“ரிஷி….” என்று மீண்டும் அழைக்க…


”ஒரு மாதிரி டௌனா ஃபீல் பண்றேன் கண்மணி… உன்கிட்ட பேசிட்டு இருந்தால்… கொஞ்சம் ரெஃப்ரெஷ் ஆவேன்…” ரிஷி தயக்கமின்றி சொல்ல…


“நீங்க என்னை மிஸ் பண்றீங்களா ரிஷி…” கண்மணி சிரித்தபடி கேட்க


“ஏன் நீ இல்லையா???” ரிஷியின் குரலில் சற்று எரிச்சல் எட்டிப் பார்க்காத்தான் செய்தது…


கண்மணி இப்போது சத்தமாக சிரித்தபடி…


“அது எப்படி ரிஷி… கேள்வி கேட்டால்… கேள்வியையே பதிலா கொடுக்கறீங்க” என்ற போது ரிஷியும் சிரிக்க…


“நான் உங்கள மிஸ் பண்ணல ரிஷி…” சொன்னவள்…


“இதோ… இந்தப் மாடிப்படி…. அந்த கேட்… மேல ரூம்… பைக் ஸ்டாண்ட்… பைக்ல இருக்கிற ஹெல்மெட்… எல்லாமே உங்கள ஞாபகப்படுத்துற இடம்…. உங்க வாசம் இங்கதான் இருக்கு… நீங்க இங்கதான் இருக்கீங்கன்ற ஃபீல் எனக்கு கொடுத்துட்டே இருக்கு… சோ நான் மிஸ் பண்ணலை”


மென்மையாகச் சிரித்தவன்


“இது போங்காட்டம் கண்மணி… இங்க நான் உன்னை எங்க தேடுறது… உன் ஃபீல… உன்னோட குரல்… ரிஷி… ரிஷிக்கண்ணா… ரிஷிம்மா… ஆர்கே… ரிஷிகேஷ்… இப்படி உன் மூடுக்கு ஏத்தமாறி கூப்பிடுவ நீ… கொஞ்சம் நேரம் உன் கூட ஸ்பெண்ட் பண்ணினாலும்… அந்த கொஞ்ச டைம்லயும் என்னோட பேர… அத்தனை தடவை சொல்லிருப்ப… அது எதுவுமே கேட்காமல் ஒரு மாதிரி இருக்கு கண்மணி… உன்னோட குரலை நேரடியாக கேட்க இன்னும் எத்தனை மாதம் ஆகும்னு இப்போவே கால்குலேட் பண்ண ஆரம்பிச்சுட்டேன்… ” ரிஷியின் முகமும் குரலுமே மாறி இருக்க…


“ரிஷிம்மா… இது என்ன… நான் இங்கதான் உங்க கூடத்தான் பேசிட்டு இருக்கேன்…”


“ப்ச்ச்” என்றவனிடம்…


“நான் உங்கள விட்டு தள்ளி இருந்தாலும்… உங்க பக்கத்தில இருந்தாலும்… உங்கள மட்டுமே நினைச்சுட்டே இருப்பேன்… உங்களுக்குத்தான் உங்க உலகம் பெரிசு… எனக்கு ரொம்ப சின்னது… அதுல ரிஷி மட்டும் தான்… உங்க கனவுகள்… குறிக்கோள்… நீங்க ஜெயிக்கனும்… அது மட்டும் தான்” என்றவளிடம்…


“உன்னைப் பற்றி நினைக்க மாட்டியா” - ரிஷி


“நான் ஏன் என்னைப் பற்றி நினைக்கனும்… என் ரிஷி இருக்கும் போது… “


“அது ஓகே… உனக்குனு… ஆசை… குறிக்கோள்… இதெல்லாம் இல்லையா”


“இருக்கு… உங்ககிட்ட சொல்ல காத்துட்டு இருக்கேன் ரிஷி… ஆனால் அதெல்லாம் என் ஹஸ்பண்டோட வெற்றிக்குப் பின்னால… அவரோட சேர்ந்து… நானும் அச்சீவ் பண்ணுவேன்…” கனவுகளோடு கண்மணி சொல்ல…


“முடியுமா நம்மளால… நாம நமக்காக வாழ ஆரம்பிப்போமா” ரிஷி ஏக்கத்தோடு கேட்க


“ப்ச்ச்… அதெல்லாம் முடியும்… இன்னும் கொஞ்ச காலம் தான் எல்லாம் மாறும்… சரியா ரிஷிக்கண்ணா…”


இப்போதும் ரிஷி முகத்தை வருத்தத்துடன் வைத்திருக்க…


முதல் நாளே அவன் இந்த மாதிரி பேசியது… அதுவும் தன்னை நினைத்து வருந்துகிறான் என்பதே அவளுக்குப் பிடிக்கவில்லை… அவன் எதிர்பார்த்து காத்திருக்கும் வெற்றிகள் எல்லாம் அவன் எட்டிப் பிடிக்க இன்னும் சில அடி தூரங்களே இருக்கும் போது அவள் அவனுக்கு தடைகல்லாக இருக்க விரும்புவாளா என்ன…


”இப்போ என்ன என்னோட குரல் கேட்டா… உங்களுக்கு பாசிட்டிவ் வைப் கிடைக்கும்…. அவ்ளோதானே… அதுக்கு எனக்கு ஒரு ஐடியா இருக்கு… நான் சொல்ற மாதிரி செய்ங்க” என்று அதிகாரக் குரலில் சொன்னவள்…


”இப்போ நீங்க டல்லா இருக்கீங்க… ஒகேவா… என்னோட குரலைக் கேட்கணும்னு நினைக்கறீங்க… ஒக்கே”


“கண்ணை மூடுங்க” கண்மணி சொல்ல ரிஷியும் அடுத்த நொடி தன் இமைகளால் கண்களை மூடி இருக்க…


கண்மணி அவனையே பார்த்தபடி


“எப்போலாம் நீங்க என்னை மிஸ் பண்றீங்களோ… அப்போ நீங்க என்னை வெளில தேடாதீங்க… உங்க கண்ல தேடுங்க… நான் தெரியுறனா” கண்மணி கேட்க


“ஹ்ம்ம்” ரிஷி தலையை ஆட்ட…


”இப்போ உங்கள சுற்றி இருக்கிற காற்றுல கவனம் வைங்க… என் குரல் மட்டும் தான் கேட்கும்… ” என்ற போது….


“ரிஷி… ரிஷிக்கண்ணா… ரிஷிமா… ரிஷி சார்… ரிஷிகேஷ்… ஆர் கே…” அவன் காதுகளில் அவள் குரல் மட்டுமே… அனுபவித்தவனாக கண்களைத் திறக்க…


புன்னகையுடன் கண்மணி அவன் முன் காட்சி அளித்துக் கொண்டிருந்தாள்…


“என்னை வெளியில தேடாதீங்க ரிஷி… உங்களுக்குள்ள தேடுங்க… நான் எப்போதுமே உங்க கூடத்தான் இருப்பேன்…” என்றவள்…


”நீ சான்சே இல்லை கண்மணி… உன்னைப் பெத்தாங்களா… இல்லை செஞ்சாங்களா” என்ற ரிஷியும் இப்போது அவளோடு வம்பிழுக்க…


கண்மணியோ இப்போது முகம் கூம்பியிருந்தாள்


“ஹ்ம்ம்.. பெத்துக்காமல் என்னை செஞ்சிருக்கலாம் ரிஷி… அம்மா உயிரோட இருந்துருப்பாங்கதானே” கண்மணி எங்கோ வெறித்தபடி சொல்ல… ரிஷி சுதாரித்திருந்தான் இப்போது


“இந்த எமோஷனல் கண்மணி எனக்குப் பிடிக்கலை… இவ்ளோ நேரம் எப்படி பேசிட்டு இருந்த… இப்போ ஏன் இப்படி” என்றபோதே… கண்மணியும் இயல்பாகி இருக்க


“எஸ்… எமோஷனல் கண்மணி… நாட்டுக்கும்… வீட்டுக்கும்… உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் கேடு…” கண்மணி கண்சிமிட்டிச் சிரிக்க…


இப்போது ரிஷி


“எமோஷனல் கண்மணி… இஞ்சூரியஸ் டூ ரிஷிஸ் ஹெல்த்… இந்த லேபிள் நல்லா இருக்கு கண்மணி” சொன்ன போதே ரிஷியால் சிரிப்பை அடக்க முடியவில்லை… இருந்தும் அடக்கியவன்


“எனக்கு வசந்த மாளிகை படத்துல… சிவாஜி சார் சாங்க் ஞாபகம் வருது” என்றவனாக


“மரணம் என்னும் தூது வந்தது… அது மங்கை என்னும் வடிவில் வந்தது” அவன் பாடிக் காட்டியபோதே கண்மணி முறைக்க…


“முறைக்காத… நான் என்ன சொல்ல வந்தேன்னா…. இந்த குடி… சிகரெட்லாம் நம்மள விட்டுட்டு போயே போயிருச்சுனு நினைத்தேன்… ஆனால் இல்லை கண்மணின்ற ரூபத்துல மறுபடியும் என்னை விடாமல் துரத்திட்டு வந்துருச்சு” ரிஷி சொன்ன போது கண்மணியோ…


“நான் அதை விட டேஞ்சரஸ்… தெரியுமா…”


“இருந்துக்கோ… விடற ஐடியாலாம் இல்லை…” ரிஷி அவனையுமறியாமல்… கண்மணியின் மேல் இருந்த காதலை பகிரங்கமாக சொல்லியிருந்தான்…

என்ன அதை சொன்னவனும் உணரவில்லை… கேட்டவளும் உணரவில்லை…

உணரவில்லை என்பதை விட… ஏற்கனவே இருவரும் ஒருவரின் மீது ஒருவர்… காதல் கொண்டிருக்க.. வார்த்தைகள் தான் அவர்களிடம் நேரடியாக வரவில்லை…


கண்மணி இப்போது அமைதியாக இருக்க…. ரிஷிதான் பெருமூச்சு விட்டவனாக பேச ஆரம்பித்தான்


“நீ ஒரு ஃபேண்டஸி கேர்ள் கண்மணி… இதுதான் நான் ஃபீல் பண்றது”


கண்மணி இப்போதும் அமைதியாக இருந்தாள் தான்… ஆனால் அவள் கண்கள் ரிஷியை உற்று நோக்கிக் கொண்டிருக்க


“முதன் முதலா ’கண்மணி இல்லம்’ வீட்டைப் பார்த்தப்போ… அங்க சுற்றி இருந்த மற்ற இடத்துக்கும் உங்க வீட்டுக்கும் உள்ள டிஃபெரெண்ட் பார்த்தப்போ அது ஒரு மாய உலகம் மாதிரி இருந்துச்சு… அப்போ தெரியல… அந்த மாய உலகத்தோட ராணியும் அந்த மாதிரிதான்னு…”


அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே கண்மணியின் முகம் பிரகாசமாகி இருந்தது…


“நீங்க ஃபீல் பண்ணீங்களா ரிஷி” என்ற போதே கண்மணியின் கண்களில் ஆயிரமாயிரம் ஜாலங்கள்….


“ஹ்ம்ம்…” என்ற போது… கண்மணி அவனை எல்லாம் கவனிக்க வில்லை


“என்னோட உலகம் வேற ரிஷி… பத்து வயசு வரை…. அது ஒரு சந்தோசமான உலகம்… நான் மட்டுமே எனக்கு நானே ராணியா வாழ்ந்த உலகம்… “


“ப்ச்ச்… அதை விட்டு… வெளிய வந்து… “ என்று நிறுத்தியவள்…


சட்டென்று நிதானித்தவளாக… அமைதி ஆகி இருக்க… இருபுறமும் இப்போது அமைதி… ரிஷி அவளையே கவனித்தபடி அவளை அவள் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சிக்க ஆரம்பித்த போது… அவளாகவே பேச்சை திசை மாற்றும் முயற்சியாக… கண்களைத் தேய்த்தபடியே


“தூக்கம் வருது ரிஷி… தூக்கத்துல உளறிட்டு இருக்கிற மாதிரியே ஃபீல் வருது எனக்கு” என்க


“ஓ மேடம்… கொஞ்சம் யோசிச்சு பாருங்க… இவ்ளோ நேரம் பேசுனதுலாம் தூக்க கலக்கத்துல பேசுன மாதிரிதான் பேசுனீங்களா… என்ன…” நக்கலடித்தவனாக


“ஆனால் கடைசி வரை… நீ ஏன் டல்லா இருந்தேன்னு சொல்லவே இல்லை… “ அதிருப்தியான பாவத்தில் சொன்னவனுக்கு… அவளை விடுவதாக எண்ணமே இல்லை… தொடர்ந்து உரையாடலை இழுத்துக் கொண்டிருந்தான்…


”எப்போ நான் உங்க ஸ்பெஷல் ரௌடின்னு சொன்னீங்களோ… அப்போதே என் வருத்தமெல்லாம் போச்சு ரிஷி… “


ரிஷி புருவம் சுருக்க…


“இந்த உலகம் எப்படி என்னைப் பார்க்குதோ அப்டித்தான் ரிஷியும் உன்னைப் பார்க்கிறான்னு அர்ஜூன் சொன்னாரு” வேறேதுவும் பேசாமல் கண்மணி நிறுத்த


ரிஷிக்கு அவள் சொல்லாமலேயே எல்லாம் புரிய…


“அவன் யார்டி… நம்ம ஸ்பேஸ்குள்ள நுழைய… அவனை “ இதுவரை இருந்த ரிஷியின் முகமா எனும்படி செந்தணழைப் பூசி இருக்க… பிறகு தன்னைத்தானே கட்டுப்படுத்தியவனாக…


”கண்டவனெல்லாம் பேசுறதைப் பற்றி நான் ஏன் கோபப்படனும்… என் கண்மணி அவ மனசு மட்டும் தான் முக்கியம் எனக்கு” என்றவன்…


“அது எப்போதும் என்னை யாருக்காகவும்… எதுக்காகவும் விட்டுக் கொடுக்காது” அவளிடம் சொன்னானா…. தனக்கே சொல்லிக் கொண்டானா?… சற்று முன் இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்து ரிஷியின் முகம் வாடி இருக்க


கண்மணியும் தன் தவறு புரிந்தவளாக…



“ஹலோ புருஷா… சாதா ரௌடி… ஸ்பெஷல் ரௌடி ஆகிட்டாதானே… ஆனால் அது வார்த்தைல மட்டும் தான்… சீக்கிரமா ஃபீல் பண்ண வேண்டாமா… வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என் ரிஷிக்காக மட்டும்… இப்போ உங்களுக்கு அங்க உங்க ஷோ தான் முக்கியம்…“ என்று அவனை மீண்டும் இயல்பாக்க… ரிஷியும் தன்னிலைக்கு வந்திருந்தான்… ஆனால் அர்ஜூன் மீண்டும் அவர்களுக்கு இடையே வந்த போதே… அவனுக்கு மனநிலையே மாறி இருக்க… அவனுக்குமே அதற்கு மேல் பேச இஷ்டமில்லை..


“சரி தூங்கு… சாரி இன்னைக்கு ஃபர்ஸ்ட் டேன்றதுனால தான் கால் பண்ணேன்… “ என்று சொல்லியவன் அலைபேசியை வைத்தும் இருக்க…


ரிஷிக்கு மாறாக கண்மணியோ இப்போது தெளிவாகி இருந்தாள்… தங்கள் வாழ்க்கையில் எதுவுமே இனி பிரச்சனை இல்லை… அர்ஜூன் சொன்னது போல ரிஷி ஆறுதல் தேடும் நண்பியாக மட்டும் தன்னை அவன் தேடவில்லை என்பதை ரிஷியே உணர்த்தி இருக்க… தானுமே உணர்ந்திருக்க… உறங்கச் சென்றாள்…


ஆனால் ரிஷியின் வாழ்க்கையில் அவளே பிரச்சனையாக உருமாறப் போகிறாள் என்பதை உணர முடியாதவளாக அன்று நிம்மதியாக உறங்கினாள்…


---

ரிஷி ஆஸ்திரேலியப் பயணம் சென்ற பிறகு சில வாரங்கள் கடந்திருந்தது…


வழக்கம் போல… கண்மணி பள்ளிக்குச் செல்லவிருந்த நிலையில்… அவளது அலைபேசி அழைக்க… பார்த்த போதோ… தெரியாத எண்ணில் இருந்து… சாதரணமாகத்தான் எடுத்தாள் கண்மணி


“கண்மணி தானே… நாராயண குரு பேத்தி… அர்ஜூன்” என்று எதிர்முனை பேசுவது அவர்கள் நினைத்த கண்மணியுடன் தான் என்பதை உறுதி செய்யும் முனைப்பில் இருக்க…


“சொல்லுங்க… “ கண்மணி சொன்னவுடன்


தனது பெயரை அறிமுகப்படுத்திக் கொண்டவனாக…


”மேனேஜர் ஆஃப் ஆதவன் குரூப் ஆஃப் கம்பெனிஸ்” என்று அவன் பேச ஆரம்பிக்க… கண்மணி யோசனையுடன் அவன் பேசுவதை கேட்க ஆரம்பித்திருந்தாள்…


கிட்டத்தட்ட அவன் தான் சொல்ல வந்த விசயத்தை எல்லாம் சொல்லி முடித்து விட்டு


“அர்ஜூன் சார் கிட்ட பேசினோம்… ஆனால் அவர் ஒத்துக்கலை… ஒருவேளை உங்க கிட்ட பேசினால்… எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்னு” என்ற போதே


“அர்ஜூன்… அவர் முடிவு தான் என்னோட முடிவும்… அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை… அண்ட்… இனிமேல் அர்ஜூன் கிட்ட மட்டும் இது விசயமா பேசுங்க… என்கிட்ட வராதீங்க…” சொல்லி விட்டு வைத்தவள்… பெரிதாகவெல்லாம் அந்த அழைப்பை எடுத்துக் கொள்ளவில்லை…


ஆனால் அடுத்த நிமிடமே ‘ஆதவன்’ கண்மணிக்கு அழைத்திருந்தான்…


“அம் ஆதவன் ஸ்பீக்கிங்” அவன் குரல் சிம்மக் குரலாக ஒலித்தது கண்மணியின் காதுகளில்….





2,803 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page