top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60


காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்………

கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திகாவிடம் பேசிக் கொண்டே வந்தாள்…………

வினோத்தும் பொறுத்து பொறுத்துப் பார்த்தான்…..ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் பாலாவுக்கு…. SMS அனுப்பியே விட்டான்

“டேய் உன் பொண்டாட்டிய முன்னால திரும்ப சொல்லுடா……… அவனவன் இருக்கிற நிலை தெரியாம….. ஏண்டா….. உன்னை நான் கூப்பிட்டேனாடா… எங்களுக்கு ட்ரைவ் பண்ணுனு” என்று அனுப்ப

”இந்த அவமானம் தேவையாடா பாலா………..” என்று பாலா நொந்து போனான்

….பின்னால் திரும்பி வினோத்திடம் கண்களாலே மன்னிப்பு கேட்டுவிட்டு……..

“கீர்த்தி முன்னால் திரும்பி உட்கார்” என்க

”பேசிட்டு இருக்கேன்ல பாலா……… வினோத் தப்பா நினைச்சுக்கப் போறான்……..” என்று சொல்ல

அவனுக்கு எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல் இருக்க…… அதற்கும் வழி இன்றி….

“என் பக்கத்தில வாங்க செல்லம்… ஒண்ணு சொல்லனும் உன்கிட்ட” என்றவனிடம் ”என்ன பாலா” என்று அவனின் அருகே நெருங்கிப் போக………

அவள் மேலும் தவறு சொல்ல முடியாது……… பாலா தனிமையில்தான் சீண்டுவானே தவிர…… தங்களைத் தவிர வேறு யார் இருந்தாலும்…… கொஞ்சம் தள்ளியே இருப்பான்……….. கீர்த்தி சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போதுதான அவன் மற்றவர்களை பார்க்க மாட்டான்… அதனால் பாவம் அவன் மனைவி வினோத்தையும் தன் கணவன் போல் என்று எண்ணி விட்டாள்….

“உனக்கும்……. எனக்கும் மேரேஜ் நடந்துச்சுல்ல……….. அது மாதிரி இல்ல இது…. நீயும் நானும்…… நீ வடக்கே… நான் தெற்கேனு பார்த்துட்டு இருந்தோம்……. அவங்கள விடறியா….. இங்க பாரு….” என்று வினோத் அனுப்பிய மெஸேஜை காட்ட……

”ச்செய்ய்…… கீர்த்தி……. உனக்கு அறிவுன்னு ஒண்ணு இல்லையாடி” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவள்……. அதன் பின் பின்னால் திரும்புவாளா என்ன……..

அதன் பின் வினோத் பாடு கொண்டாட்டம் ஆகி இருக்க……….. கீர்த்திகாவின் பாடு திண்டாட்டம் ஆகி இருந்தது

வினோத் மற்றும் கீர்த்திகாவின் அன்றைய இரவுக்கான ஏற்பாடு பாலா- கீர்த்தியிடம் விடப் பட்டிருக்க……. கீர்த்தனா வினோத் அறையில் எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டு கீர்த்திகாவிடம் சென்று அவளை அனுப்பப் போக…… இடையில் பாலா வந்து

“கீர்த்தி போகலாமா……. வினோத் கீழ இருக்கான் சொல்லிட்டு போகலாம்…வா” என்று அழைக்க……

”கீர்த்திகாவா பேசி… அனுப்பி வச்சுட்டு அத்தை வரச் சொன்னாங்க பாலா” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை

“அய்ய்யோ………… நீ அவள அனுப்பி வைக்கவா………… நீயே இன்னும் ABCD விட்டு தாண்டல…. வினோத் பாவம் டி……… நீ எதுனாலும் சொல்லி……… அவ வினோத்தை விட்டு பத்தடி தூரம் தள்ளிப் போகப் போறா……. வந்துரு தாயே…. வினோத்தே அவள சமாளிச்சுக்கட்டும் வா….” என்று இழுத்தபடி வர

“என்னது” என்று விழித்தவள்……

“ABCD தாண்டமாத்தான் அம்மா ஆகி இருக்கேன் பாருங்க” என்றவளின் பேச்சை எல்லாம் கேட்காமல் மனைவியை அழைத்துக் கொண்டு

வினோத்திடம் சொல்லி விட்டுக் கிளம்பினான் பாலா …..

வினோத் கீர்த்திகாவின் இருந்த அறைக்கு செல்ல…….. அங்கு அவள் கீர்த்தியை எதிர்பார்த்து திரும்ப…………. ஆனால் வினோத் நின்றிருக்க………

“கீர்த்தி எங்க” என்று கேட்க

“ரொம்ப முக்கியம்…… இப்போ அவள் எங்க போனா என்ன………… அவ புருசனோட கிளம்பிட்டா………”… என்றவன் மோகத்தோடு அவள் அருகில் நெருங்கினான்………

அவனைப் பார்த்தபடியே…………..

“ஓ” என்றவளின் உதடுகள் என்ன சொல்ல வந்ததோ அதற்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டு…………..வினோத்தால் சிறை செய்யப்பட………..

கீர்த்திகா முதலில் தயங்கி பின்………..அதில் அடங்க…....... அதன பின் அவன் அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றவன்……… துணைவனாய் பிரதாப்பினால் அவள் கொண்ட அச்சத்தை நீக்கியவன்……….. கணவனாய்…………. அவர்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை மனைவியிடம் எழுதத் தொடங்க…………….. ஆரம்பித்து இருந்தான்………….

-------------------------

வீட்டுக்கு வந்த பாலாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது………. ராஜன் தன் மனைவி மகளோடு வந்திருந்தார்……….

வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த போதே மகள் இழந்த வாழ்க்கை அவரை உறுத்த….. மதுவோ சாதரணமாகத்தான் இருந்தாள்……….. ஆனாலும்……….. தலைகீழாய் மாறிய தன் வாழ்க்கையை இனி நினைத்து……. யாருக்கு என்ன லாபம்… துக்கம் தான் மிச்சம் ஆகும்…..

இந்த வீடு அவள் அத்தை வீடு அவ்வளவுதான்……….. அதற்கு மேல் அவளும் இனி நினைக்க முடியாது………. நினைக்கவும் கூடாது……… இதில் தெளிவாக இருந்ததால் அவள் குழம்பவில்லை…………..

பாலாவும்-கீர்த்தியும் வீட்டிற்குள் நுழையும் போது………. அனைவரும் ஹாலில் பேசிக் கொண்டிருக்க………. பாலாவும்..கீர்த்தியும் அதில் ஐக்கியமாகினர்………… பாலா இடையிலேயே வேலை இருக்கிறது என்று கிளம்பி விட….. கடைசியில் மதுவும்… கீர்த்தனாவும், மட்டுமே இருந்தனர்….

மது கீர்த்தனாவிடம்…

“நீ தூங்கப் போ கீது…. நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்து விட்டு…….. போகிறேன்…..” என்றவளிடம்

“இல்ல எனக்கும் தூக்கம் வரவில்லை……” என்று அமர்ந்து விட்டாள்………..

பாடல்கள் ஓடிக் கொண்டே இருந்தன………… இருவரின் கண்கள் தான் அதில் பதித்து இருக்க……… கீர்த்தி மனமும்…….. மதுவின் மனமும் அலை பாய்ந்து கொண்டிருந்தது………..

மௌனம் மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்தது அங்கே………….

திடிரென கீர்த்தனாவின் மொபைல் அழைக்க……. பாலாதான்………. அழைத்திருந்தான்….

”தூக்கம் வரல பாலா………” என்றவளிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை

”மது இருக்காங்க ……….. தூக்கம் வந்தா வர்றேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் கீழே வந்து விட்டான்………..

“கீர்த்தி……. தூங்க வா…….. படுத்தா தானா தூக்கம் வரும்” என்று அழைத்தவன்…………

”மது நீயும் ….. தூங்கப் போ…….. இப்டியே பழக்கப் படுத்திக்காதம்மா……” என்று சொல்ல…..

”இல்ல பாலா………. இன்னும் ஒரு அரை மணி நேரம்……. ப்ளீஸ்” என்றவளை விட்டு விட்டான்……..

கீர்த்தியை பார்க்க……

“அவளோ பாலாவைப் பார்க்கவே இல்லை……..பார்த்தால் தானே வரச் சொல்வான்…….. அதனால் டிவியை பார்த்த படியே இருக்க……….”

“உடம்பெல்லாம் திமிரு………… மேல தான வரணும்…… “ என்று மனதுக்குள் புலம்பியபடி

வெளியே

“என்னமோ பண்ணுங்க” என்று மேலே ஏறிப் போய் விட்டான்……… அவனுக்கு மதுவை நினைத்தும்…..கீர்த்தியை நினைத்தும் எந்தவொரு பயமும் இல்லை…… அதனால் அவனுக்கு குழப்பமும் இல்லை………. அறைக்குப் போனவன் தூங்கியே போனான்……….

அவன் போன பிறகு கீர்த்தி மதுவின் அருகில் வந்தாள்…………..

“மது” என்று அழைக்க

“கீது……… ப்ளீஸ்………. பாலாவைப் பற்றி மட்டும் என்கிட்ட பேசாத………. வேற எது வேண்டும் என்றாலும் பேசு” என்றவளின் கண்களில் கண்ணீர் கரை புரண்டது……..

“மது……. அழாதீங்க மது… உங்க கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும்…. நீங்க பாலாகிட்ட அவர் நல்லா இருக்க வேண்டுமென்றுதானே அப்படி சொன்னீங்க” என்றவளின் கண்களிலும் அருவியைப் பொழிய………….

மதுவால் அதற்கு மேல் முடியவில்லை

கீர்த்தியிடமே கொட்ட ஆரம்பித்தாள் மது

“உனக்கு மட்டும் தான் தெரியும் கீது…….. நான் என் வாழ்க்கையில இழந்ததோட அருமை………..” என்றவள்……….. கீர்த்தியின் மடியிலேயே விழுந்து அழத் தொடங்க…………..

சற்று நேரம் கழித்து……. அவளாகவே தன் கண்களைத் துடைத்தவள் தன்னை நிலைப் படுத்தி பேச ஆரம்பித்தாள்…….

“சாரி கீது………… ஆனாலும் நான் இப்போ சந்தோசமா இருக்கேன்……… என் காதல் உன்னை மாதிரி ஒரு பொண்ண அவனுக்கு கொடுத்திருக்கே…………. அவன் தப்பு செய்தாலும் அவன் மன்னிச்சு ஏத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ் கீது……… நீ…… இது எனக்கான வாழ்க்கைனு அவனோட வாழாம இருந்தேனு கீர்த்தி சொன்னா…………… இன்னைக்கு பாலா கைல இருந்த காயத்தை பார்த்தேன்…. அவன் சொல்லலை………. ஆனா அது அவன் உன்கிட்ட தன் காதலை நிருபிக்க போராடியிருக்கான்னு எனக்கு சொல்லாம சொல்லிடுச்சு……… அவன் ரொம்ப நல்லவன் கீது……… கோபம் மட்டும் கொஞ்சம் அதிகமா வரும்…… இப்போ அது இல்லைனுதான் நினைக்கிறேன்…….” என்றவள்

”எனக்கு பாலா கிட்ட அதிகம் பிடித்தது அவன் கோபம் தான்………. ஆனா…… அது கூட இப்போ அவன் கிட்ட இல்லை……. மொத்தத்தில இப்போ இருக்கிற பாலா…….. நான் காதலித்த பாலா கிடையாது……….. அவன் கீர்த்தனாவோட கணவன்…….. அதுதான் இப்போ அவனிடம் அவன் ஒவ்வொரு அசைவிலும் நான் உணர்வது கீர்த்தி………… நானே அவன் வேண்டாம் என்று சொன்னேன் தான்….. ஏன்னா…. இப்போ .என் உடம்பில இருக்கிற ரத்தம் முழுதும் போதை மருந்துகளின் கலப்படம்… கீது……. என்னால அவனுக்கு….. என்று தடுமாறியவள்

இதுனாலதான் கீர்த்தி…….. அன்று… அவனிடம் அவன் பேசுவதற்கும் முன் அவனை நான் நிராகரித்தேன் மது……….. அவன் மனசைப் புரியாமல் எல்லாம் இல்லை …… நீ சொன்ன மாதிரி அவன் என்னை விட்டிருக்க மாட்டான் தான் என் பாலாவா இருந்திருந்தா…… ஆனாலும் நான் போராடி இருந்திருப்பேன்…… அவன் வாழ்க்கைல இன்னொரு தேவதைய கொண்டு வர...... இப்போ அந்தக் கவலை இல்லை எனக்கு …… ஆனால் என் காதலே அவனுக்கு உன்னைத் தேடித் தந்து விட்டது…… அந்த சந்தோசம் போதும் கீர்த்தி………… என் காதல் உன்னை மாதிரி ஒரு பொண்ணை அவனுக்கு தேடித் தந்து அதோட முழுமைய அடைந்து விட்டது………… இனி எனக்கான வாழ்க்கை……. என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்து அவர்களின் வாழ்க்கையை திருப்பித் தருவது தான்……. தென்

என் அப்பாகிட்ட சொன்னேன் இன்னொருத்தன என மனசு விரும்பினா கண்டிப்பா சொல்வேனு…. என்னைப் பொறுத்த வரை…. என் காதல் தோல்வி அடைய வில்லை கீர்த்தி…… தோல்வி அடைந்த்தால் தானே இன்னொரு உறவைத் தேடும்…….. அது நடக்க வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன்……… தெரியவில்லை…. காலம் எனக்கு என்ன வைத்திருக்கிறது என்று. அதேபோல் அவனை நினைத்துக் கொண்டும் நான் இருக்கப் போவதில்லை……… கடந்த 5 வருடத்தில்…………… 4 வருடமாக…….. என் மனதில் அவன் நினைவை சிறு புள்ளியாக குறுக்கி விட்டேன் மது……. ஆனால் இப்போது அவனருகில் அது வளர ஆரம்பித்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது கீது…….. அதனால் தான் …………. என்றவள்

”கண்டிப்பா நீ என் வாழ்க்கையை வாழலை கீர்த்தி……. என் மூலம் உனக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது…….. அவ்வளவுதான் இதைப் புரிஞ்சுக்கோ ……… உன் பாலா உன் மூலமாத்தான் காதலை அனுபவிக்கிறான்…….. இப்போ அவனோட சகலமும் நீதான் கீர்த்தி………. நான் அவன் விட்டு போனப்ப என் நினைவுகள் தான் அவனைத் துடிக்க வைத்தது……. ஆனால் நீ போனால் அவன் உயிரே அவனை விட்டு பறந்து விடும்……” என்றவளிடம்

கீர்த்தனா

“அவள் கையை எடுத்து தன் கையோடு வைத்தவள்……….”

”தேங்ஸ் மது…….. இதைத் தவிர எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை……… நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்கள்ள மது…………”

“சப்போஸ்……… இந்த போதை மருந்து விசயம் இல்லை என்றால்…….. பாலா விசயத்தில் உங்க முடிவு என்னவா இருக்கும் மது……”

மது சிரித்தாள்.

“எல்லா பக்கமும் உன் காதலை ஸ்ட்ராங்கா ஆக்கனுமா கீர்த்தி…………… ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்……… கொஞ்சம் கஷ்டம்தான்……… பட் மனசைத் தேத்திருப்பேன்……. அது மட்டும் இல்லை………. இன்னொருத்தி புருசன்னு தெரிஞ்ச பின்னால்…… அவன் பின்னால் போக நான் என்ன லூசா இல்லை அந்த பிரதாப் மாதிரி சைக்கோவா ………” என்று கண் சிமிட்ட……..

”அப்போ நீங்க ரொம்ப ஃபீல் பண்ண மாட்டீங்களா மது………….” என்று தன் மன பாரமெல்லாம் நீங்கி சந்தோசமாய்க் கேட்க

அவளைத் தலையில் செல்லமாகத் தட்டியவள்………….

”மதுவோட பாலாவை கீர்த்தனா மாற்றலாம்…….. ஆனா கீர்த்தனாவோட பாலாவை……. மது என்ன…….. கீர்த்தனாவே நினைத்தாலும் ஏன் பாலாவே நினைத்தாலும் மாற்ற முடியாது……… பொண்டாட்டி மேல தலைவருக்கு அவ்ளோ ஸ்ட்ராங்க்…….காதல் என்றவள்…… அவளுடைய மாங்கல்யத்தை எடுத்தவள்…….. இது என்னோட நினைவைச் சொல்லலாம்….. ஆனா அதனோட உரிமை உனக்கு மட்டும் தான் கீது…….. “ என்று புரிய வைக்க முயல……..

”அதை நான் எப்போதோ உணர்ந்து விட்டேன் மது…………. இப்போது நீங்களும் இதுனால வருத்தப்பட்டாலும்….. .அதை ஏத்துகிற மனப் பக்குவம் உங்களுக்கு இருக்கு..….. அது போது மது எனக்கு” என்றவள் தலை சாய்த்து……

”ஆனா எனக்கு இன்னொரு சந்தேகம் மது” என்றவளை

பாவம்தான் பாலா……….என்றவளை செல்லமாக முறைக்க

”சொல்லு…. அதையும் தீர்த்து வைக்கிறேன்……………………..” என்றவளிடம்

“அன்னைக்கு…. அதாவது ஊட்டில பார்த்த அன்று……….. நீங்க ஏன் எதுவும் பேசாமல் அவனோடு போனீர்கள்……..” என்றவள்……. அவளாகவே

”நான் மாட்டிக்க கூடாது என்றா……… என்று கேட்க…………

தலையை மட்டும் ஆட்டியவளிடம்

“தேங்க்ஸ் மது” என்று சொன்னவளிடம்

“எத்தனை……. தேங்க்ஸ் மா….தாங்க முடியல…………. சரி தூங்க போகலாமா….. எனக்கும் உன்கிட்ட எல்லாம் சொன்ன பின்னால் என் மனம் மிகவும் நிம்மதியா இருக்கு………… என்றவளிடம் மனம் பூரிப்புடன் விடை பெற்றாள் கீர்த்தனா…….. சந்தோசமாக மாடிப்படியை அடைந்தவள்……

மது ஒரு நிமிசம்

மது நிற்க

அடுத்த ஜென்ம்ம்னு ஒன்று இருந்தால்………. நான் பிறக்காம இருந்துக்கறேன்……… இந்த டீல் ஓகேவா………. என்றவளிடம்…..

மது அவளிடம் எதுவும் சொல்ல வில்லை……… ஆனால்

”நீ பிறக்க வில்லை என்றால் உன் புருசனும் பிறக்க மாட்டான்…..” என்று நினைத்துக் கொண்டாள்…. மதுவுக்கு பாலா…..கீர்த்தனாவின் கணவனாக மாறி இருந்தான்

மது… பாலாவை கீர்த்தனாவின் கணவனாக ஏற்றுக் கொண்டு விட்டாள்… அதுவும் மிகப் பெரிய அளவில் வருத்தம் இல்லாமல்…. என்பதால் மனம் உற்சாகத்தில் இருக்க…..

அவள் அறைக்குள் நுழைந்த வேகத்திலேயே…………. பாலாவும் விழித்து விட்டான்……

“ஏய் என்னடி…………. இப்படி ஓடி வர்ற………..” என்றவனிடம்

“நான் ஹேப்பியா இருக்கேன் பாலா……………………. என்கிட்ட எதுவும் கேட்காதீங்க…. எனக்குத் தூக்கம் வருது………. குட் நைட்” என்றபடி……….. அவனது ரியாக்சன் என்ன என்று கூட பார்க்காமல் படுத்தவள்………. தூங்கவும் ஆரம்பித்தாள்…………..’

“என்ன ஆச்சு…. இவளுக்கு………… “

”சந்தோசம் வந்தாலும் ஓவர் எமோசனல் ஆகுறா……….. துக்கம் வந்தாலும் ஓவர் எமோசனல் ஆகுறா……..” என்று குழம்பிய படி………… படுப்பதைத் தவிர வேறு வழி இல்லை அவனுக்குத் தெரியவில்லை…………

-------------------

மதுவை பயணம் அனுப்ப… அனைவரும் வந்திருந்தனர்………………

மது அனைவரிடமும் பேசியபடி இருந்தாள்………… நன்றாகவே தேறி இருந்தாள் அவள்

கீர்த்தி-வினோத்திடம் வந்தவள்

”வினோத்… என் கீர்த்திய… பார்த்துக்கங்க…அவளுக்கு ஒண்ணும் தெரியாது….. அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்……..அவ இப்போ நான் நினைத்தது போல…. எதற்கும் அஞ்சி….. மற்றவரின் முடிவை எதிர்பார்க்கும் பழைய கீர்த்தி அல்ல…….. தன் சிந்தனையோடு………. எதையும் யோசித்து முடிவெடுக்கும் அளவிற்கு வந்து விட்டாள்………சோ…….நீங்க என் செல்லப் பொண்ணு கிட்ட பத்திரமா இருந்துக்கங்க”

என்ற போது கீர்த்தி கண்கலங்க

“ப்ச்ச் கீர்த்தி எனக்கு அழறதே பிடிக்காதுன்னு தெரியும்ல………” என்று அவளின் கண்களைத் துடைத்து விட

“மது அடிக்கடி வருவேல மது……… உன்னைப் பார்க்காம இத்தனை நாள் இருந்துட்டேன்…….. இப்போ நீ மறுபடியும்“ என விசும்ப

வினோத்.. இப்போதான சொன்னேன்……..இவ வளர்ந்துட்டான்னு சொன்னேன்…………. வாபஸ் வாங்கிக்கறேன்………..இவள பத்திரமா பார்த்துக்கங்க………என்ற போதே அனைவரும் சிரிக்க

பாலா,கீர்த்தனாவிடம் வந்தாள் மது…….

“கீது……………. நல்லா சாப்பிடு…….உடம்பை பார்த்துக்கோ………உனக்கு குழந்தை பிறந்தவுடனே அடுத்த நிமிடம்னு சொல்ல முடியாது உடனே இங்க வந்து பார்க்க வருவேன்……….. சரியா……….. தென்………….. இவன மட்டும் நம்பிராத…….. உன்னைக் கவனிக்கவே மாட்டான்……………. ஆபிஸ் ஆபிஸ்னு அதையே கட்டிட்டு அழுவான்…… நீ அத்தையை பிடிச்சுக்கோ……… ” என்றவள் அருந்ததியிடம்

”அத்தை கீர்த்திய பார்த்துக்குவீங்கள்ள…………. உங்க பையன் பார்த்துக்குவான்னு விட்ராதீங்க அவள……….. ” என்ற போது

“ஏய் ஏண்டி என் மானத்தை வாங்குற………….. வாய மட்டும் குறைச்சிராத………….. ” என்றவனிடம்

“என் செல்ல அத்தான்….. எனக்கு இருக்கிற ஒரே ஒரு அத்தான்……. உன் மானத்தை வாங்குவேனாடா…………….. “ என்று சொல்ல

பாலா கீர்த்தியைப் பார்க்க

“அவளோ………. மது…………… உன் அத்தான் பாவம்… அவர விட்ருங்க ப்ளீஸ்…………… வாயில்லா பூச்சி அவர்” என்க

“யாரு இவன்……… ஆனா கீது………….. இவன் உன்கிட்ட மட்டும் ஏன் இந்த நடிப்பு நடிக்கிறான்னு தெரியல…. ஆனா……..ஏமாந்துடாத ……………… ” என்றவள்

பாலாவிடம் வந்தாள்………. வரும்போதே அவள் முகம் மாறி இருந்தது…………… எவ்வளவுதான் மறைத்தாலும்………….முகம் காட்டியது

“வரவா டா……………. என்று உள்ளே போன குரலில் சொல்ல….

”ம்ஹ்ம்ம்ம்…………. பார்த்து…………….. பத்திரம்……… அடிக்கடி போன் பண்ணு மது………….. எனக்கும் கீர்த்தனாவுக்கும்” என்று பாலா தெளிவாய்ச் சொல்ல

மதுவும் நார்மல் ஆனாள்…..

”சரி பாலா………..கீர்த்தி அம்மா அப்பா இல்லாத பொண்ணு…………… நீதான் அவளுக்கு எல்லாம்………….. மறந்துடாத……. என்றவள்………..அவள் கிளம்பும் நேரம் வந்திருக்க………..

இறுதியில் தன் பெற்றோரிடம் பேசியபடி…..

அனைவரிடமும் விடைபெற்று வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றாள்……..

போனவள் வெகுதூரம் போய் நின்று ஒருமுறை பாலாவைத் திரும்பிப் பார்க்க…………….. அவனோ கீர்த்தனாவோடு ஏதோ பேசிக் கொண்டிருக்க………. இதழில் புன்னகையோடு……….. திரும்பி மீண்டும் நடக்க………….. பாலா அவள் வாழ்க்கையில்………………….. தொலைவில் தெரிந்த சிறு புள்ளி போல் ஆனான்……… அவன் அருகாமைதான் அவளுக்கு விஸ்வரூபமாய் மாற வாய்ப்பானாலும் ஆகும்…. அதைத் தவிர்த்து…..அவனை விலக்கி அவனை சிறு புள்ளியாய்க் கரைத்தாள் மது என்னும் மதுபாலா………………………

காலம் அவளுக்கு தந்த வாழ்க்கையை மனப்பூர்வமாக எற்றுக் கொண்டதைப் போல……….. காலம் ஒருவேளை அவளுக்கு மாறுதல் தந்தால் கூட ஏற்றுக் கொள்வாள் என நம்பி…………. காலமும் அவளை எமாற்றாது என நம்பி அவளிடமிருந்து நாமும் விடைபெறுவோம்……

-----

அனைவரும் வீட்டுக்கு திரும்ப அவரவர் காரில் ஏற………… பாலா - கீர்த்தனா இருவரும்………… அனைவரிடமும் சொல்லிக் கொண்டு முன்னால் கிளம்ப……………….

“எங்கடா போறீங்க” என்ற வினோத்தின் கேள்விக்கு சிந்து விடை சொன்னாள்

”வினோ அண்ணா………..டுடே இஸ் வியாழக் கிழமை………. சோ…………… ரெண்டு பேரும்………. அவங்க வசந்த மாளிகைக்கு எஸ்கேப் என்ற போது

கவி அவளிடம்

“சிந்து சும்மா தேறிட்ட போ…………..” என்று சிரிக்க………

குமார் இப்போதே பெண்ணை நினைத்து கவலைப் பட ஆரம்பித்து இருந்தான்………………

------------

காரில் கீர்த்தனா கேட்டாள்……………..

“மது ரொம்ப நல்லவங்கள்ள பாலா………………..”

பதில் சொல்லவில்லை அவன்………….. அமைதியாகவே வந்தான்………… அவனின் அமைதியைப் பார்த்து அவன் முகத்தைப் பார்க்க…………..அது சாதாரணமய் இருக்க………. தன் குறும்பை ஆரம்பித்தாள் அவனிடம்

”ஆக்சுவலா பாலா……… ப்ரம்மன் உங்களைப் படைத்தவுடன் மதுவைத்தான் உங்களுக்கு நேரா படைத்திருப்பார்………….. மதுவை படைத்து முடித்த பிறகு……. இவ்ளோ நல்ல பொண்ணு இவனுக்கானு யோசிச்சுருப்பார்……… பக்கத்துல நான் இருந்திருப்பேன் …. இது போதும் இவனுக்குனு சேர்த்து வச்சிட்டாரு………….” போல என்றவள்

அவன் இன்னும் பேசாம இருக்க

”என்ன பாஸ் மாமா மக போய்ட்டானு சோகமா” என்று விடாமல் வம்பிழுக்க…….

இப்போது பேசினான்

“மாமா மக போன என்ன……….. மாமானு கூப்பிடுறதுக்கு பொண்ணு இருக்காள்ள அது போதும்…… என் தகுதி கூடி நீ எனக்கு கிடைத்திருக்க மாட்டாய் என்றால்……. அப்படி ஒரு தகுதி இல்லை என்பது எனக்கு சந்தோசம் தான் கீது…………” என்றவனிடம் அதை ஆமோதிப்பது போல

”ஆமாம் பாலா………… தங்கத்துல கூட சுத்த தங்கம் ஆபரணமாகாது…………. மது அந்த சுத்த தங்கம் போல……… நான் செம்பு கலந்த தங்கம் போல……….நான் கொஞ்சம் சுயநலம் உள்ளவதான்…. எனக்கு மட்டும் தான் நீங்க வேணும்னு கொஞ்சம் சுயநலம்.. நீங்க என்னை மட்டும்தான் காதலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு……. உங்க மனசுல நான் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற பிடிவாதம்….. அது கிடைத்த பின்னால் ஓவர் சந்தோசம்…. இதுதான்….… நான்….. கொஞ்சம் இல்ல நிறைய குறையுள்ளவ உண்மை அதுதானே பாலா………

இந்தக் குறைகள்தான் உங்க வாழ்க்கையோட காதல் என்னும் ஆபரணத்திற்கு தகுதியாக காரணம் ஆகி விட்டேன் போல………….”

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…………என் பொண்டாட்டி தத்துவமா பேசுறாளே……….இதுக்கே பரிசு கொடுக்கனுமே………… பாலா வேகமா போடா…………… ” என்றவனை

“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்………….நக்கலா உங்களுக்கு……..” என்று அடித்தவள்………

அவனையே பார்த்துக் கொண்டிருக்க

“என்னடி ரொமான்ஸ் லுக் லாம் விடுற………….”

“என் புருசன்…... நான் பார்க்கிறேன்……… அவனுக்கு என் மேல எவ்வள்வு காதல்னு பூரிப்பில இருக்கேன்”

“அது எப்படி கீது……. கோபமும் காதலும் வந்தா மட்டும்…………. மரியாதை எல்லாம் தூள் பறக்குது……………” என்று சீண்ட

அவன் சீண்டலில் மூழ்காமல்

“பாலா உண்மையிலேயே உங்களுக்கு என்னைப் பிடிச்சுருக்கா பாலா………..” என்று கேட்க

“இன்னும் பத்து வருடம் கழித்து கூட இந்த கேள்வியைக் கேட்பியா கீர்த்தனா……….. என் மேல நம்பிக்கையே வராத கீர்த்தனா”“ என்று வருத்தம் சூழ சொன்னவனிடம்

“உங்க மேல நம்பிக்கை இல்லையா………. எனக்கா…………… இப்போ என் காதல் மேல கூட எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ உங்க காதலை முழுவதுமாக நம்புகிறேன் பாலா……… அது எனக்கு கிடைக்க நான் பெருமைப்படுகிறேன் பாலா…… ”

சிரித்த பாலா

“உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா…………….. குட் ஜோக்………………. உன்னோட காதலோட வலிமை எந்த அளவுக்கு………….. என்னை எந்த அளவுக்கு மாற்றி இருக்குனு உனக்கு புரிந்தும் இப்படி பேசுற கீர்த்தி” என்றவனை

நக்கலாக பார்த்தாள் கீர்த்தி

“என் காதல் வலிமைதான்…………..ஆனா சாருக்குதான் என் மேல இன்னும் நம்பிகை வரல………. என்ன அப்டித்தானே பாலா”

“என்ன சொல்ற கீர்த்தி…எனக்கு புரியல………… என் டயலாக் எல்லாம் நீ பேசுற”

“என் காதல் மேல உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரல பாலா…… நம்ம ரெண்டு பேருக்கும் இடையில்….. நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லும் வகையில் …நம் இருவரின் பேர் சொல்ல நமக்குனு குழந்தை வந்த பிறகு கூட……இன்னும் நான் உங்களை விட்டு போய்விடுவேனோ என்று நீங்க பயப்படுறீங்க பாலா….. ஏன் பாலா இன்னும் இப்படி ஒரு தயக்கம்…. இதற்கு மேலும் உங்கள விட்டு போய் விடுவேன் என்று எப்படி பாலா நினைக்கீறீங்க” என்று தன் தந்தையின் பண விசயத்தை மனதில் வைத்து பேச

“என்ன உளற்ர கீர்த்தானா……… நான்… நீ என்னை விட்டு போய் விடுவாய் என்று பயப்படுகிறேனா……….. ஏண்டி பிபியை ஏத்துற… எதை வச்சு இந்த முடிவுக்கு வந்த…….. நான் என்ன சொல்லி இருக்கேன்……. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுனு … உன் மனசுல வச்சு………உன்னை இம்சைப் படுத்தி…என்னையும் இமசைப் படுத்தாதேனு……. எத்தனை தடவ சொல்லி இருக்கேன்… சொல்லு……. எதுனால இப்டி சொல்ற” என்று படபடத்தவனிடம்

அவனையே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்…. பின் கண்களை மூடி அமைதியாகவே வந்தாள்

“பெருசா பார்வை பார்க்கிறா….. இப்போ ஏன் இப்டி சொல்றா இவ” என அவன் மண்டையை உடைக்க ஆரம்பிக்க

சிறிது நேரம் கழித்து… அவளாகவே

“ஏன் பாலா………. அப்பாவோட பணம் திரும்ப கிடைத்தது என்று என்கிட்ட சொல்லவே மாட்டேங்கிறீங்க……. அப்போ என்னை நீங்க முழுசா நம்பலேனு தான அர்த்தம்” என்ற அவளின் வருத்தம் தோய்ந்த குரலில் ……..வலிகள் நிரம்பிய வார்த்தைகளில்

பாலா………. அதிர்ந்து உடனே திரும்பி பார்க்க

அவள் இன்னும் கண்ககளைத் திறக்காமலே இருந்தாள்……………….

காரை ஓரமாக நிறுத்தினான்…..

”கீர்த்தி……….என்னைப் பாரு” என்ற போது விழி திறக்க

தடுமாறாமல் பாலா கேட்டான்…………ஆனால் தெளிவாக… கொஞ்சம் கோபமாகவும்

“உனக்கு…. இது எப்படி தெரியும்…… .வினோத் சொல்லிட்டானா…. எப்போ சொன்னான்……… நான் சொன்ன அடுத்த நாளே சொல்லிட்டான் அப்படித்தானே…… அதுக்கபுறம் தான் என்னை ஓரளவு நம்ப ஆரம்பித்து இருக்காய்… என்ன நான் சொல்வது சரிதானே” என்று கேட்க

இப்போது கீர்த்தி………. ஆவேசமானாள்

“என்னது வினோத்துக்கு தெரியுமா………. அவனுக்கு தெரிஞ்சும் என்கிட்ட மறச்சுட்டானா………. ஒரு நிமிசம்….. உங்ககிட்ட அப்புறம் வருகிறேன்…….அவன” என்ற படி வினோத்தைத் திட்ட போனை எடுக்க

அவளிடமிருந்து போனைப் பறித்த பாலா

“கீர்த்தி அவன் சொல்லலைனா உனக்கு எப்டித் தெரியும்” என்ற கேள்வி கேட்டவனிடம்

சொன்னாள்…. ”மதனைப் பார்த்த விசயத்தை………….அவர் சொன்ன விசயத்தை”

“ஒகே..............தெரிஞ்சுடுச்சுள்ள விடு……. இதுனாலதான் உன்மேல நம்பிக்கை இல்ல… அது இது லூசுத்தனமா பேசுனியா..” என்று கடிந்தவன்…. காரைக் கிளப்ப போக

“என்ன பாலா…. இவ்ளோ சாதரணமா சொல்றீங்க…….”

”பின்ன வேற எப்டி சொல்லச் சொல்ற”

“உங்களுக்கு வேணும்னா இது சாதாரண விசயமா இருக்கலாம்……..இது எனக்கு…என் அப்பா…அம்மாவுக்கு எவ்ளோ பெரிய விசயம் தெரியுமா…… நான் மதன் அங்கிள் சொன்னப்போ எவ்ளோ சந்தோசப் பட்டேன் தெரியுமா……. சொல்ல வார்த்தை இல்ல பாலா………… அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிஞ்சுருந்தா எவ்ளோ சந்தோசப் பட்டிருப்பாங்க தெரியுமா…….. நான் உளருனேன் எங்க அம்மாகிட்ட………….இந்தப் பணம் கிடைத்தால் தான் பாலா கூட நிம்மதியா வாழ்வேனு…... என் அம்மா எவ்ளோ துடிச்சுப் போய்ட்டாங்க தெரியுமா….. பொண்ணு நாம கடன் பட்டதாலதான்….. தன் மனசுக்கு பிடித்தவனோட நிம்மதியில்லாம இருக்காளோனு…….. அதுதான் அவங்களுக்கு பெரிய கவலை பாலா

என்றபோதே…… கண்கள் கண்ணீரை வடிக்க துடைத்தவள்.. தன் நிலையை மாற்றி சந்தோசமாகவே கேட்டாள்

“அத விடுங்க பாலா……… எப்போ பணம் கிடைத்தது…. சொல்லுங்க… என்ன….. அவங்க இருந்திருந்தா சந்தோசப் பட்டிருப்பாங்க……. பறந்திருப்பாங்க……. கால் தரையில இருந்திருக்காது……… உடனே என்னைப் பார்க்க…………..ஓடோடி வந்தி……….”

என்று சொன்ன போதே……….. கீர்த்தனாவுக்கு தன்னைப் பார்க்க வருவதாக சொல்லி அவளை விட்டுப் போன அன்றைய தினத்தின் … தன் பெற்றோரின் அவசரம்………. சந்தோசம் எல்லாம்…… இப்போது விளங்க

அப்படியே வார்த்தைகளை நிறுத்தி……………

பாலாவைப் பார்க்க…. வார்த்தைகள் குழறின அவளுக்கு

“பா…லா…………இத இதச் சொல்ல வந்தப்பதானா…….. பாலா” என்றவளுக்கு அடுத்து வார்த்தைகள் இல்லை………….

அவர்களின் மரணம்..அது நடந்த விதம்…..அன்று அவள் பட்ட வேதனை எல்லாம் ஒன்று சேர்ந்து அவளை வாட்ட……………. தன்னைக் சுத்தமாகக் கட்டுப் படுத்த முடியாமால்…………. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்…………… பாலா எவ்வளவு முயன்றும் அவளை நிறுத்தவே முடிய வில்லை……… இந்த சூழ்நிலையில் அவள் இப்படி அழுதால் என்ன ஆகுமோ என்று பயந்தே விட்டான் பாலா

அது சாலை ஓரம் என்பது நினைவில் இருந்தும்…….வேறு வழி இன்றி………தன்னோடு இழுத்து அனைத்தவன்..அவளை ஆறுதலாக அணைக்க…………கீர்த்தியும் கொஞ்சமாய் தன் நிலைக்கு வந்து நகர்ந்தாள்…. ஆனாலும் விசும்பல் நிற்க வில்லை……… முகம் உடனே சிவந்தும் போய் கண்கள் அதை விட சிவப்பேறி……………பாலாவுக்கு தாங்க முடியவில்லை…….

“கீர்த்தி…………. நீ கேட்டேல……………ஏன் சொல்லலை…..ஏன் சொல்லலைனு………..நீ என்கிட்ட உன்னை ஓப்படைக்கிறதுக்கு முன்னால வேண்டுமென்றால் நீ சொன்னது போல…. என்னை விட்டு நீ போகமல் இருக்கத்தான் அதை மறைத்தேன்….. ஆனால் அதன் பிறகும் உன்கிட்ட சொல்லலை ஏன் தெரியுமா………… இதோ நீ வேதனைப் பட்டு உன்னை வருத்தி அழுகிறாயே……… இதைக் காணப் பிடிக்காமல் தான் நான் சொல்லலை………. இப்போ அழுது கொண்டிருக்கும் உன் இந்த நிலை…………… இது நான் சொல்லி வரக் கூடாது என்றுதான்……. உனக்கா எப்படியாவது ……….. எப்போதாவது தெரியும் வரை சொல்ல வேண்டாம் என்று விட்டு விட்டேன்………ஆனால் நான் மட்டும் சொல்லக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் கீர்த்தி….. என் கீது என்னால நிறைய அழுதுட்டா…… வேதனைபட்டுட்டா……….. கஷ்டம் அனுபவிச்சுட்டா……..மீண்டும் என்னால்…… என் வார்த்தைகள் மூலம் அவ கண்ல கண்ணிர் வரக் கூடாதுன்னு முடிவு பண்ணிதான் நான் சொல்லலை………. ஆனாலும்………..உன் கண்ணிரை என்னால போக்க முடியவில்லை……… ஆனா ஒரு சந்தோசம்…….. நினைத்தது போல என் மூலம் உனக்கு தெரியல……… என்றவன் அன்று அவர்கள் தன்னைப் பார்த்த்து முதல்….அனைத்தையும் சொல்லி முடித்து காரைக் கிளப்பியவன்

“இதுதான் காரணம் கீர்த்தி……….. உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லேனு சொல்லிட்டியே…….. உனக்குள் உருவான …… என் காதலையே எதிர்பார்க்காத…….. உன் காதலோட வலிமை உனக்குக் கூடத் தெரியாது கீர்த்தி……… எனக்கு மட்டும் தான் அது தெரியும்………அது என்னை…. வேறொரு இடத்துல இருந்த என் மனதை ஆணி வேரோட பிடுங்கி உன்கிட்ட சேர்த்திருக்கிறது என்பது உனக்குத் தெரியாதா………… அவ்வளவு பவர்….. தெரியுமா கீது……… “ என்று சொன்னவனின் தோள்களில் அவன் சொன்ன பரவசத்தில் சாய்ந்தாள் கீர்த்தி

“தான்… இவன் கிடைக்க எத்தனை பெரிய தவம் செய்திருக்க வேண்டும்……………. என்று மனம் சந்தோசத்தில் தள்ளாடியது…… அது தாங்காமல் அவனிடம் இன்னும் நெருங்கி அமர……

பாலாவோ

“ஹேய் இது ரோடுடி…… எல்லாருக்கும் ஓசில ரொமான்ஸ் சீன் காமிச்சுட்டிருக்கோம் போல……. தள்ளி உட்காரு………. எதுவா இருந்தாலும் வீட்ல…….. ஓகே………” என்று அவளைச் சீண்டி டீல் பேச

அவளோ கொஞ்சம் கூட நகராமல்

“I love u பாலா………….” என்று உணர்ச்சிகள் ததும்பிய குரலில் சொல்ல முதலில் திகைத்தவன்…. பின் சுதாரித்து

“ஹ்ம்ம்…. கேட்கல கீர்த்தி…. இன்னும் சத்தமா” என்று கொஞ்ச

“I love u டா கேடி” என்று அவனைப் புரிந்தும் அவள் கொஞ்சம் சத்தமாக உரிமையுடன் சொல்ல

“சத்தியமா கேக்கல KB……இன்னும் சத்தமா” என்று விடாமல் பேச

இப்போது குறும்புடன்….அவனிடமிருந்து தள்ளி அமர்ந்தவள்

“ I Love U da புருஷா” என கத்த

“ஏய் பொண்டாட்டி…. இப்போ சுத்தமா கேக்கவே இல்லை “ என்று சிரிப்புடன் கண் சிமிட்டிக் கூற….. அடுத்து எப்படி சொல்ல்லாம் என்று கீர்த்தி யோசிக்க

அவள் எப்படிச் சொன்னாலும் அவள் கணவனுக்கு இப்போது காதில் விழப் போவதில்லை……..

அதேபோல் அவன் மனைவியும் தன் காதலை அவன் காதில் விழும் வரை சொல்லாமல் நிறுத்தப் போவதில்லை………….

அவளோ தங்கள் திருமணம் என்னும் உறவால்……. அவனுள் காதலில் விழுந்து……….அவனைத் தன் உயிராக மாற்றி……….. இருந்தும்…… அந்த உறவின் எல்லையிலே நின்றிருந்தாள்……..

அவனோ…… அவள் காதலால்………. தங்கள் உறவை உணர்ந்து………… தன் உயிராய் அவளை மாற்றி……… தன் காதலின் மூலம்………. தன்னோடு அவளது எல்லைகளை உடைத்து…...தங்கள் உறவினை முழுமை ஆக்கினான்

இதோ ……அவர்கள் இருவரும்………… காதல் புறாக்கள் ஜோடியாய் வாழ்ந்திருந்த…. தங்கள் காதலுக்காக கட்டியிருந்த காதல் மாளிகை… நோக்கிய பயணத்தில் இருக்க

நாம் அவர்களோடான நமது பயணத்தை இத்துடன் முடித்து………………. அவர்கள் இருவரும் பல்லாண்டு……….. வாழ வேண்டும் என வாழ்த்தி விடைபெறுவோம்………..

ஒரு நிமிசம் ஒரு நிமிசம்………..

பாலா-கீர்த்திக்கு…

அவங்க வாழ்க்கைக்கு அவங்களே பாடல் போட்டுருக்காங்க.. கவி,சிந்து… fm,,,ஏன் மது கூட போட்ருக்கா…… நாம் போடாம போகலாம……….சோ……………… இந்த பாடலை அவர்கள் இருவருக்கும் வழங்கி நாம் பயணத்தினை முழுமையாக்குவோம்

என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்

மோகங்கள் நீ காணவா எந்நாளும்

காதல் உறவே

என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே பூவோடு வண்டு புது மோகம் கொண்டு சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான் நான் சொல்லும் போது இரு கண்கள் மூடி எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான் இன்பம் வாழும் உந்தன் நெஞ்சம் தீபம் ஏற்றும் காதல் ராணி சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது காதல் உறவே என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே

தீராத மோகம் நான் கொண்ட நேரம் தேனாக நீ வந்து சீராட்டத்தான் காணாத வாழ்வு நீ தந்த வேளை பூ மாலை நான் சூடி பாராட்டத்தான் நீ என் ராணி நான் தான் தேனீ நீ என் ராஜா ஆஆ நான் உன் ரோஜா தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது காதல் உறவே என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே ராகங்கள் நீ பாடி வா பண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும் காதல் உறவே என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே

************முற்றும்************

3,531 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

என் உயிரே !!! என் உறவே ??? - 57

அத்தியாயம் 57: வினோத் மற்றும் கீர்த்திகா… அறையின் வெளியே இருக்க……….. அருந்ததி தன் அண்ணன் மகளின் அருகில் இருந்தாள்…….. அவளயே...

1 Comment


Alice Alice
Jun 12, 2020

Madhu😢😢😢

Like
© 2020 by PraveenaNovels
bottom of page