அத்தியாயம் 6:
வழக்கம் போல் அன்றைய வேலைகளின் ரிப்போர்ட்களை பார்த்துக் கொண்டிருந்த பாலா, இன்னும் கீர்த்தியிடம் இருந்து அன்றைய பணியின் ரிப்போர்ட் வராததைக் கவனித்தான்.
”கீர்த்தி ஏன் இன்னும் அனுப்ப வில்லை. அனுப்பாமலேயே அவள் அலுவலகத்தினை விட்டு கிளம்பிச் சென்றிருக்க மாட்டாள். அப்படி என்றால் அவள் இன்னும் அலுவலகத்தில் தான் இருக்க வேண்டும்” என்று தனக்குள்ளாக யோசித்த படி வெளியே வந்தான் பாலா.
அவன் எண்ணியபடியே அவள் மானிட்டரின் மேல் பார்வையினை தீவிரமாக ஓட விட்டுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த படியே மணியைப் பார்த்தான். மணி எட்டு அடிக்க இன்னும் 5 நிமிடங்களே இருந்தது.
ஆனால் கீர்த்தியோ நேரம் போய்க் கொண்டிருப்பதும் தெரியாமல், அவள் முன்னே பாலா நின்று கொண்டிருப்பதையும் அறியாதவளாய் கணினியோடு ஐக்கியம் ஆகியிருந்தாள்.
மாலை 5 மணியிலிருந்து போரடிக் கொண்டிருக்கிறாள். இன்னும் அவளது ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான ஒரு முக்கியமான ப்ரொக்ராம் வொர்க் ஆக வில்லை. அது மட்டும் ஓகே ஆகி விட்டால் அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்.கீர்த்தியும் முயன்று கிட்டத்தட்ட முடித்திருந்தாள்.
ஆனால் ஒரு சின்ன ப்ராப்ளம் . அதை மட்டும் சரிப் படுத்தி விட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என்றபடி அதை சரி செய்ய ஆரம்பித்தவளுக்கு நேரம் போனதே தெரிய வில்லை.
அவளைப் பொருத்தவரை அன்றைய வேலையில் இதை முடித்து விட்டு சென்றோம் என்றிருக்க வேண்டும். எதையாவது வரவில்லை என்று நிலுவையில் வைத்து விட்டு போனால் அவள் நிம்மதியாகவே தூங்க முடியாது. அதுவும் இது சின்ன பிரச்சனைதான் ஆனாலும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. சற்று எரிச்சலுடன் புருவத்தை சுருக்கியவள்,
”என்ன கீர்த்தி , நீங்க இன்னும் கிளம்ப வில்லையா ,மணி எட்டாகப் போகுது.ரிப்போர்ட் அனுப்பிட்டு கிளம்புங்க. நாளைக்கு காலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம்” என்ற பாலாவின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
பின் சுதார்த்தவளாய்…..
“ஒரு சின்ன வொர்க் தான் சார்.அதை முடித்து விட்டால் போயிடுவேன் ” என்றாள் கீர்த்தி.
“அப்படியா” என்றபடி யோசித்தவன் ஏற்கனவே லேட் ஆகி விட்டது. என்று நெற்றியை சுருக்கியவன்
“சரி எவ்வளவு நேரமாகும். ஒரு 15 மினிட்ஸ்ல முடிச்சுடலாமா என்று கேட்டவனிடம்
” சின்ன ப்ராப்ளம் தான் சார். ஆனா நானும் ஈவ்னிங் லயிருந்து ட்ரை பண்றேன் பிக்ஸ் ஆக மாட்டென்கிறது” என்று அவளால் முடியாத ஆதங்கத்தில் அவனை நோக்கினாள்
பாலாவும் அந்த ப்ரொஜெக்டில் இன்வால்வ் ஆகி இருப்பதால்
”சரி நான் பார்க்கிறேன்” என்றபடி அவளை நகரச் சொன்னவன் அவள் போட்டிருந்த கோடின் மேல் பார்வையினை ஓட்டினான்.
இதை இனிமேல் பார்த்து அதில் உள்ள தவறைக் கண்டுபிடிக்க குறைந்தது 2 மணி நேரம் ஆகும். அதற்கு அவளே கொஞ்சம் முயன்றால் சரி செய்து விடலாம். என்று எண்ணியவன் கீர்த்தியிடம்
”கொஞ்சம் லேட் ஆகும் போல தெரியுது கீர்த்தி. நாளைக்கு காலையில் வந்து பாருங்க. நிதானமா பண்ணினால் 5 மினிட்ஸ் தான் ஆகும். அப்படியும் முடியவில்லை என்றால் நான் பார்க்கிறேன். இப்போ கிளம்புங்க.” என்றவனிடம்
“இல்லை சார் நான் இப்பவே பார்த்துவிட்டு கம்ப்ளீட் பண்ணிட்டு போய் விடுகிறேன்.எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை”
”கீர்த்தி லேட் ஆகுது, நீங்க பையனா இருந்தா கூட நான் கம்பெல் பண்ண மாட்டேன்”. என்றவனை இடையிலேயே தடுத்து நிறுத்தி
”பராவாயில்லை சார், இது என்னொட மன திருப்திகாகத்தான் இருக்கிறேன். இல்லை யென்றால் இந்த சின்ன எரரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒரு மாதிரி இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த டாஸ்க் கம்ப்ளீட் பண்ணலைனு எனக்கு தூக்கமே வராது. சார் ப்ளீஸ்” என்று உறுதியான் குரலில் கெஞ்சியவளை கூர்ந்து நோக்கியவனுக்கு ,
அவளை நினைக்கும் போது பெருமையாக இருந்தது. அந்த கம்பெனி முதலாளி அவன். அவனே போகச் சொல்கிறான். ஆனால் அவளோ மறுக்கிறாள். பணத்துக்காக மட்டும் வேலை செய்பவள் என்றால் இந்நேரம் வீட்டில் இருந்திருப்பாள் , ஆனால் இந்த தொழிலின் மேல் உள்ள பிடித்தமே இந்த அளவு தீவிரம் காட்டுகிறாள்.இப்படி பட்ட எம்ப்ளாயி அவனது கம்பெனிக்கு ஒரு கிடைத்திருப்பது அதிர்க்ஷ்டமே என்று எண்ணியவன், ஆனாலும் அவளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஏனென்றால் இன்று அவள் எவ்வளவு முயன்றாலும் அவள் கொஞ்சம் டென்சனாக இருப்பதால் அவள் சரி பண்ண முடியாது . நாளை வந்து பார்த்தால் சில நிமிடங்களில் சரி படுத்தி விடுவாள் என்று அவளது திறமையின் மேல் இருந்த நம்பிக்கை சொல்லியது.
“கீர்த்தி என்னவாயிருந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளாலம். கிளம்புங்க ” என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் கூறியவனை கொஞ்சம் அச்சமாகப் பார்த்தபடி, தாழ்ந்த குரலில் அதே சமயம் பிடிவாதமான குரலில்
”சார் ப்ராஜெக்ட் டெலிவெரி டைமில் எல்லாம் 10 மணி வரைக்கும் வரை இருக்கிறது இல்லையா சார். அது மாதிரினு நினைத்துக் கொள்கிறேன்.”
இதற்கு மேல் இவளிடம் பேசி பிரயோஜனமில்லை. இப்படி பிடிவாதம் பிடிக்கிறாளே என்ன பண்ணலாம் என்று யோசித்த பாலா,
“சரி கீர்த்தி இப்போ என்ன இந்த டாஸ்க் முடிக்க வேண்டும் அவ்வளவுதானே . நான் பார்த்து எத்தனை மணி நேரம் ஆனாலும் முடித்து விட்டு போகிறேன் போதுமா . இப்போ கிளம்புங்க என்றவனிடம்
“இல்லை சார் அது வந்து” என்று இழுத்தவளை “அழுத்தமான பார்வையுடன் நோக்கியவன்
”என்ன நீங்க கம்ளீட் பண்ணாத்தான் தூக்கம் வருமா” என்று வார்த்தைகளில் மட்டும் கிண்டல் தொணிக்க முகமோ அதே அழுத்ததில் இருந்தது.
அவனின் குரல் மாறுதலை உணர்ந்தவள்.. அதற்கு மேல் இருப்பது சரி இல்லை என்று நினைத்து…
“அப்படியெல்லாம் இல்லை சார் நான் கிளம்புகிறேன் ”
என்றவாறு ரெஸ்ட் ரூமுக்கு செல்ல ஆயத்தமானாள். அவளது இருக்கை ஓய்வு அறையின் அருகிலேயே அமைந்திருந்தது. சில நிமிடங்களில் அறையிலிருந்து வெளியே வந்தவள் தனது இருக்கையில் அமர்ந்திருந்த பாலாவிடம்
“சார் நான் கிளம்புகிறேன்” என்று போக மனமில்லாமல் கிளம்பினாள். சிறிது தூரம் சென்றவள் அவனைத் திரும்பிப் பார்த்து தயங்கியபடி
”சார் நாளைக்கு புது டாஸ்க் இப்போ பண்ணினது முடிந்தால்தான் ஆரம்பிக்க முடியும்” என்று தயங்கியவாறு சொன்னவளிடம் ,
“தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றபடி அதற்கு மேல் அவளிடம் பேச ஓன்றுமில்லை என்பது போல் கணினி திரையின் மேல் பார்வையினை ஓட்ட ஆரம்பித்தான் பாலா.
கீர்த்தி கிளம்பிச் சென்ற 5 நிமிடத்தில் அவளது சிஸ்டத்தை shut down செய்து தனது அறையினுள் நுழைந்தவன் , அடுத்த அரை மணி நேரத்தில் அவனது அலுவலகத்திற்கு வெளியே இருந்தான்.
---------------------------------
“கீர்த்திமா சாப்பிட வா. வந்தது லேட் இன்னும் என்ன பண்ற ரூம் உள்ள” என்ற மைதிலியின் குரலில் இதோ வந்துட்டேம்மா கவியோட பேசிட்டு இருக்கேன் என்ற பதில் கூறியவள்
“சரி கவி அம்மா கூப்பிடறாங்க. நீ எனக்காக வெயிட் பண்ணாததுக்கு இவ்ளோ சாரியா கேட்பாய். நெக்ஸ்ட் வீக் ஊருக்கு போக உனக்கு இருக்கிற வேலை எனக்கு தெரியாதா கவி. சொல்லப் போனால் நான்தான் உன்னிடம் சாரி கேட்க வேண்டும் , இந்த சூழ்நிலையில் உனக்கு உதவியாக் உன்னோடு வர முடியவில்லை என்று கவியிடம் குழைந்தபடியே வெளியே வந்தவள், அவளுக்காக வெளியே சாப்பிட காத்திருந்த தனது பெற்றோர்களை பார்த்தவள்
கவியிடம் ”
சரி கவி நான் வைக்கிறேன். நாளை பார்க்காலாம்” என்றபடி அழைப்பைத் துண்டித்தாள்.
”என்னம்மா இன்னைக்கு வெறும் பொங்கல்தானா”
என்றபடி அழுத்தவளை முறைத்தபடி
”ஏன் உங்க ஆஃபிஸ்லயே டின்னரையும் முடித்து விட்டு வர வேண்டியதுதானே ” என்று அவள் லேட்டாக வந்தததை குத்திக் காட்டினாள்.
”ஏன்டா இவ்ளோ லேட், ஏதும் முக்கியமான் வொர்க்கா. கவி கூட சீக்கிரமா கிளம்பிட்டா போல. நீ போன் பண்ணிட்ட இருந்தாலும் இந்த உலகம் மோசமான உலகம் . அதை நம்ப முடியதுடா. இனிமேல் 7 மணிக்குள்ள கிளம்புகிற மாதிரி பாத்துக்கோடா. தனியா வண்டில வேற வருகிறாய். அதுதான் எனக்கும் , உங்க அம்மாக்கும் பயம். உன்னோட ஆஃபிஸில் உன்னோட பொறுப்பு கூடுதல் ஆகியிருக்கிறது என்று தெரிகிறதுடா. ஆனால் உன்னுடம்பை வருத்தி பண்ணுகிற வேலை உனக்கு அவசியமில்லை. புரிஞ்சுக்கோடா. என்ற ராகவனிடம்
“இல்லப்பா எங்க MD கூட” என்று ஆரம்பித்தவளை
”சரி, சரி சாப்பிடு நீ பசி தாங்க மாட்டாய். சாப்பிட்டுவிட்டு உங்க MD கதையை பேசலாம்” என்ற வாறு அவளது பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தாள் மைதிலி.
கிட்டத்தட்ட சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் அவளது அழைபேசி சிணுங்கியது. திரையில் நம்பரைப் பார்த்தவள் சிந்தனையுடன் ஹலோ என்றாள்
”கீர்த்தி நான் பாலா பேசுகிறேன்” என்ற குரலில் சற்று அதிர்ச்சியில் நின்று ”
சார் நீங்களா என்ன சார் என்ன விசயம் ” என்றவளிடம்
”இல்ல கீர்த்தி , அந்த ப்ரோகிராம் ரன் ஆகிவிட்டது. நீங்கதானே சொன்னீங்க அதை கம்ப்ளீட் பண்ணாதான் தூக்கம் வரும் என்று இப்போதான் ஞாபகம் வந்தது. நான்தானே உங்களை வீட்டுக்கு போகச் சொல்லி வற்புறுத்தினேன். உங்க தூக்கத்தை கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம் கீர்த்தி.அதுதான் இப்போ போன் பண்ணினேன். நிம்மதியா இப்போ தூங்குங்வீங்களா. ” என்று சிரித்த அவன் குரலில்
”வேறு எதுவும் தோண்றாமல் நன்றி கூறிவிட்டு போனை வைத்தவளுக்கு அவனது குரலில் இருந்த மலர்ச்சி அவனது முகத்தில் இருக்குமா என்று தோன்றியது, அப்படி இருந்தால் எப்படி இருப்பான் என்று யோசிக்கும் போதே ராகவன்
அவளிடம் யாரும்மா போனில் நன்றியெல்லாம் பலமாய் இருக்கிறது என்று கேட்டவுடன் அவளுக்கும் பாலாவுக்குமான் அன்றைய தின நிகழ்சிகளை விளக்கினாள். அதைக் கேட்ட மைதிலி
”அடிப்பாவி ஒரு கம்பெனி MD யே உன்னை வீட்டுக்கு போன்னு துரத்துகிற அளவுக்கு இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறாயா, இத்தனை நாள் நாங்க ரெண்டு பேர்தான் பாவம் என்று நினைத்தோம்.இப்போ எங்க பாவத்தை க்ஷேர் பண்ணிக்க கூட ஆள் இருக்கு போல” என்றவளிடம் ,
“இம்சை பண்றேன்னா நானா …….. அம்மா ……… என்று இழுத்தவள் நான் இம்சை பன்றவளாயிருந்தால் அவர் எதுக்கு கால் பண்ணி ப்ரோகிராம் ரன் ஆகுதுன்னு சொல்லனும்” என்று சிணுங்கியவளிடம்
”பாருங்கங்க பாலா அந்த கம்பெனியொட MD . அவரே நான் வொர்க் முடித்துவிட்டேன் என்று கால் பண்ணுகிற அளவுக்கு இவ மிரட்டி வைத்திருக்கிறாள்” என்று விடாமல் கிண்டல் பண்ணியவளிடம் வாயடிக்க ஏனோ வார்த்தைகள் வராமல்
”நான் போறேன்பா இன்னைக்கு அம்மா full swing la இருக்காங்க அவங்களுக்கு counter கொடுக்க என்னால் முடியாது. கீர்த்தி எஸ்கேப் ” என்றபடி தனது அறையினுள் அடைக்கலம் ஆனாள் கீர்த்தி
கீர்த்தியிடம் பேசி விட்டு போனை வைத்தவன் மனது ஏனோ லேசாக இருந்தது.
“கீர்த்தியுடன் இருந்தால்….. அவளுடன் பேசிக் கொண்டிருந்தால் போதும்…… என் மனம் எவ்வளவு பாரமாயிருந்தாலும் லேசாகிவிடும் என்று மது அடிக்கடி சொல்லுவாள்.
கீர்த்தி என்ற பெயருக்கே உள்ள மகிமை போல என்றவாறு நினைத்தவன் ,
நாளை ,,,, அவள் விட்டபடியே அந்த ப்ரொகிராம் இருப்பதை பார்த்து விட்டு அவள் முகம் முகம் போகும் போக்கை பார்க்க வேண்டும்…..
ஏனென்றால் அவளால் அவனைக் கேள்வியும் கேட்க முடியாது. திட்டவும் முடியாது.அவளைக் கட்டுப் படுத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்….
”என்ன ஒரு பிடிவாதம். எனக்கேவா” என்ற படி கண்களை மூடியவனிடம்
”இனி உன்னிடம் எனக்கென்ன பிடிவாதம்” என்றபடி வெகு நாட்களுக்கு பிறகு தூக்கம் வந்து அவனோடு உறவாடியது.
Comments