அத்தியாயம் 58:
யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்…………
”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா”
“இல்லை கீது……. அவ என்னைப் பேசவே விட வில்லை” என்று கூற……… எழுந்தாள் ஆவேசமாக
கூடவே பாலாவின் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்தபடி உள்ளே போக
மதுவும் யோசனையில் தான் இருந்தாள்……….
அவள் பாலாவின் கோபத்தை எதிர்பார்த்திருந்தாள்……………. அவனோ முகம் வெளுத்தவனாய் வெளியேற…………… ஏதோ நடந்திருக்கிறது………. நாம் அவனுக்கு சொன்னது சாதகமான பதில்தான் போல……… அதனால்தான் கோபப் படாமல் போகிறான்…….என்று நினைக்கும் போதே அவன் வாழ்க்கையில் இன்னொருத்தி வந்து விட்டாளோ என்பதையும் அவள் மனம் உணரத் தொடங்கி இருந்தது….……… ஆனால் அது வலிக்கவில்லை அவளுக்கு………… 5 வருடத் தனிமையில் அவள் பாலாவை விட்டு வெகுதூரம் போயிருந்தாள்……….
உள்ளே…… பாலாவையும் இழுத்துக் கொண்டு…………. கீர்த்தனா நுழைய…………… மது வித்தியாசமாகப் பார்த்தாள் அவர்கள் இருவரையும்….
அதுவும் ஆவேசமும் கோபமுமாய் நுழைந்த கீர்த்தனாவை புரியாமல் பார்த்தாள்……….
”நீங்க இவரை திருமணம் செய்யச் சொன்னீங்களா” என்று அதிரடியாய் அவளிடம் பேச
பாலா ஆடிப் போனான்……..
பின்னால் வந்த அனைவருமே புரியாமல் விழித்தனர்………..
”இவள் ஏன் கோபப்படுகிறாள்……. ஒழுங்காகப் போய்க் கொண்டிருப்பதை குழப்புகிறாளே” என்று வினோத் அவளை பார்க்க
அவளோ மதுவையே பார்த்தபடி……………அவளின் பதிலுக்காக நிற்க
மதுவும் அசராமல் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்………….அவளையே பார்த்தபடி இருக்க
“நான் உங்க கிட்டதான் கேட்கிறேன் பதில் சொல்லாம இருக்கிங்க……..” என்று கேட்க
“நீங்க யாரு…. நான் எதுக்கு உங்ககிட்ட பதில் சொல்லணும்…….. ஒருவேளை நீங்க என்னைக் காப்பாற்றி இருக்கிறதால வேணும்னா நான் சொல்றேன்……. ஆமா சொன்னேன்… அதுனால உனக்கு என்ன பிரச்சனைமா” என்றபடி……..பாலாவின் கையை அவள் பிடித்த்க் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தாள்…….. பாலாவும் அவள் கைப்பிடிக்குள் நிற்பதையும் உணர்ந்தாள்
“ஓ…….. உங்களுக்கு………… காதல் வந்துச்சுனா…. துரத்தி துரத்தி… அவர காதலைச் சொல்றவரை விடாமல் விரட்டி காதல் பண்ண வைப்பீங்க…….. இப்போ உங்களுக்கு காதல் இல்லைனா………. உங்கள விட்டு விட்டு இவர் வேற கல்யாணம் பண்ணிக்கனுமா” என்று கேட்க
தான் எடுத்த முடிவில்… எதிர்த்து கேள்வி கேட்ட கீர்த்தனாவை……. எதிர்கொள்ள முடியாமல் மது திணர………. பெரும்பாலும் அவள்… தான் எடுக்கும் முடிவுகள் யாரையும் பாதிக்காத வண்ணம்தான் முடிவெடுப்பாள்……. இப்போது கூட யாரையும் பாதிக்கவில்லைதான் என்று நம்பினாள்………
ஆனால் அவளை நினைத்துக் காத்திருந்த அவனின் காதல் மனதை அலட்சியம் செய்து விட்டாள்…….” என்று கீர்த்தனா நினைத்தாள்
ஆனால் தற்போதைய… கீர்த்தனாவின் பாலா…. அதை நினைக்கவில்லை………… அதனால் பாதிக்கப்படவும் இல்லை……….
அவன் மனைவிக்கோ…. அவன் மது மேல் கொண்டிருந்த காதலுக்கு அர்த்தமே இல்லாமல் போனது போல் ஆக……….கொதித்து விட்டாள் அவள்…….
பின்னே கூட இருந்து அனுபவித்தவள் அவள் அல்லவா……. அந்த உணர்வுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டதே………… மதுவுக்காக தவித்த அவன் காதலுக்காக மதுவிடமே சண்டைக்கு வந்து விட்டாள்………. பாலாவின் மனைவி………. கீர்த்தனா…….
முதலில் தடுமாறிய மதுவுக்கு….. பின்….. தன்னைக் காப்பாற்றியவள்….. பாலாவின் மனைவி என்பது திண்ணமாக விளங்க
மதுவும் அவள் கேள்வியை தைரியமாக எதிர்கொண்டாள்…….
”உங்க கோபம் எனக்கு ஏன்னு புரியல… நான் சொல்லியது எதுவுமே தவறு என எனக்குப் படவில்லை………மிஸஸ் பாலா” என்று அவளையும்……பாலாவையும் பார்த்துச் சொல்லி…… பாலாவை, கீர்த்தனாவை, மட்டுமின்றி அங்கிருந்த அனைவரையும் அசர வைத்தவள்
“அதோடு மட்டுமில்லாமல்……….உங்களுக்கு நான் சொன்ன பதில் சாதகமானது கூட” என்று சொல்ல……..
இப்போது மதுவும் ஆவேசமாக பேச ஆரம்பித்து இருந்தாள்………..கோபப் படக்கூடாது என்றுதான் நினைத்தாள்………இப்போ என்ன இவளுக்கு வேண்டுமாம்……… அதுதான் பாலா வாழ்க்கைல கூட நான் குறுக்கே வர வில்லையே…. இவளுக்கு ஏன் இத்தனை கோபம்…… என்று தன்னைக் காப்பாற்றியவள் எனற எண்ணத்தில் முதலில் பேச ஆரம்பித்தாலும்.. இப்போது கோபமாக இருக்க………….
பாலா பேசவே இல்லை……….. மது சொன்னதில் தவறே இல்லை எனும் போது….. மது சொன்னது தவறு என்று…… கீர்த்தனாவுக்காகவா சப்போர்ட் பண்ணி பேச முடியும்…. பைத்தியக்காரத்தனாமய் பேசிக் கொண்டிருக்கும் கீர்த்தியை இத்தனை பேர் முன்னாலும் மற்றும் மதுவின் முன் திட்டவும் அவனுக்கு மன வரவில்லை……………
கீர்த்தானாதான் பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கிறாள் என்று தெளிவாக விளங்கியதால்......அனைவரும் மதுவின் பக்கமே நியாயம் என்று நினைத்திருக்க
வினோத் கீர்த்தனாவிடம் எரிந்து விழுந்தான்………
“ஏய்க் கீர்த்தனா…….. இப்போ எதுக்கு பிரச்சனை பண்ற….……. மது உனக்கு நல்லதுதானே பண்ணி இருக்கா…………” என்ற போது………….
”நேற்று பாலா…. ’கீர்த்தி’ என்று வலியோடு கதறி அழைத்த விதம் மதுவுக்கு புரிய……. பாலாவை ஒரு பார்வை பார்த்தாள் மது….. ஆனால் பாலாவோ கீர்த்தனாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்……. ’ஏன் இப்படி பண்ணுகிறாள்’ என்று……… மனதில் கோபத்தோடு…….
கீர்த்தனா வினோத்துக்கு மறுமொழி புரிந்தாள்
”எனக்கு நல்லதுதான் பண்ணி இருக்காங்க வினோத்……….. ஆனா இவருக்கு……………” என்ற போது பாலா… அவளைப் பற்றி அறிந்திருந்ததால்…. இவளை விட்டால் கோபத்தில் இன்னும் கிறுக்குத்தனமா பேசிட்டே போவாள் என்று முடிவு செய்தவன்
கீர்த்தியிடம்
“கீர்த்தி நாம போகலாம்…………….“ என்று இழுத்தபடி வெளியேற முயல…………… கையை உதறிய கீர்த்தி……….. இன்னும் ஆவேசமாக கத்த ஆரம்பித்தாள்………
“எதுக்கு பாலா………. நாம போகனும்……. எனக்கு பதில் தெரிய வேண்டும்……. மதுவிடம் இருந்து…. இவளுக்காக 4 வருசம் நீங்க காத்துட்டு இருந்தீங்க பாலா………… அந்த நாலு வருசமும் உங்க தவிப்பு…… உங்க காதல்……. உங்க வலி………. அதுனால உங்க குடும்பத்தில ஏற்பட்ட பிரச்சனை……. இது எல்லாம் எதுக்கு பாலா………..இவ திரும்பி வரும் போது இந்த பதில கேட்பதற்கா பாலா………… சொல்லுங்க பாலா………….“ என்று கணவனை உலுக்கியவள்
“தாங்கி இருக்க மாட்டீங்க பாலா……… துடிச்சுப் போயிருப்பீங்க பாலா…. இவ சொல்லி முடிக்கும் போது….. கோபத்தில இவள அறைஞ்சிருக்க மாட்டீங்க சொல்லுங்க………. இப்போ நான் உங்கள கல்யாணம் பண்ணிட்டேன்………………. அதனால் இப்போ இவளோட பதில் உங்களுக்கு சாதகமான பதில்தான்…… இந்த திருமணம் ஒருவேளை……. நாம என்ன நினைத்து பண்ணிணோமோ அதே போல் நடந்திருந்தால்…….. சொல்லுங்க பாலா……….”
என்றவளிடம் அதுவரை மதுவுக்கு அவள் கொடுத்த மரியாதை எல்லாம் பறந்திருந்தது …..ஆனால் அவளிடம் நேருக்கு நேராக பேசும் போது அது திரும்பி வந்தது….
மதுவிடம் திரும்பி
“உங்கள இவர் எத்தனை தூரம் காதலித்து இருக்கிறார் என்று தெரியுமா…………. உங்களுக்கு………….. என்ன தெரியும்……….எதுவும் தெரியாது…………. உங்களுக்காக 4 வருசம் இல்ல ஆயுள் முழுக்க காத்திருக்க தயாராக இருந்தார்…….. ஆனா மாமா விடல…. ஒரு கட்டத்தில இவர பிளாக் மெயில் பண்ண……… வேறு வழி இல்லாம என்னைக் கல்யாணம் செய்தார்……. நீங்க வர்ற வரை மனைவியா நடிக்கும் படி………… இதோ என் கழுத்தில இருக்கிற இந்த தாலி கூட அவர் உங்க மேல வச்சுருக்கிற காதலைச் சொல்லும் மது…. என்றபடி அவள் மாங்கல்யத்தை வெளியே எடுத்து அவளிடம் காட்ட
அவளின் ஆவேசம் உணர்ந்த பாலா…… பயந்தே விட்டான்… அவளுக்கு ஏதோ ஆகி விட்டதோ என்று கூட துடிக்க ஆரம்பித்து இருந்தான்………
“”ஹேய் கீது …………. என்னடி ஆச்சு………….. இப்போ ஏண்டி இப்படிலாம் பேசுற…….. நீ ஃப்ர்ஸ்ட் ரிலாக்ஸ் ஆகு…………… நாம் அப்புறம் இத பேசலாம்……. உனக்கு…. நம்ம குழந்தைக்கு எதையாவது இழுத்து வச்சுக்காத கீர்த்தி…. ப்ளீஸ் கீர்த்தனா” என்று கணவனின் அக்கறையாக அவளிடம் கெஞ்ச ஆரம்பிக்க……….
மதுவுக்கு கோபம் போய்…….. பாலாவின் மாற்றம் புரிய…………. அதை மனமாற ஏற்றவள்……….. கீர்த்தனாவின் கோபத்தில் உள்ள நியாயம் புரிய ஆரம்பித்து இருந்தது………….அதே நேரம் பாலாவையும் முறைத்து பார்த்தாள்……. கீர்த்தி சொன்ன………….. மனைவியாக நடிக்கும் படி என்ற வார்த்தைகள் தந்த வலியில்……
கீர்த்தனாவோ இன்று மட்டும் புதிதாய் அவள் தன் கணவன் பேச்சைக் கேட்பாளா என்ன…… அவனை லட்சியம் செய்யாமல் பேசிக் கொண்டே இருந்தாள்………
“உங்க காதல் உயர்ந்ததுதான்…………….. ஆனா………. பாலாவோட காதலுக்கு என்ன மதிப்பு மது………….. அவர் மனச நீங்க நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்களா மது…… நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்களே………… அவருக்கு மேரேஜ் ஆகிருச்சா இல்லையா….. எதுவுமே தெரியல உங்களுக்கு……… தெரிஞ்சு சொல்லி இருந்தா கூட பரவாயில்லை மது…. நீங்க அவர் மனசைப் புரிந்து விலகிட்டீங்கன்னு நினைக்கலாம்……….. ஆனா அவரைப் பற்றி எதுவுமே தெரியாம…… நீங்க எடுத்த முடிவு சரியே இல்ல மது…………. உங்க மனச மட்டும் தான் அப்பவும் பார்த்தீங்க…. இப்போதும் பார்க்கறீங்க…… அன்னைக்கு இவர உங்கள வலுக்கட்டாயமா காதலிக்க வச்சீங்க………. அப்போதும் அவர் மனசைப் பார்க்கல……. உங்களுக்கு பாலாவோட காதல் தேவை……… ஜெயிச்சீங்க… இப்போ உங்களுக்கு பாலா காதல் தேவைபடல……. மே பி… நீங்க நல்ல எண்ணத்தோட கூட சொல்லி இருக்கலாம்……. ஆனா நீங்க பாலாவோட ஆப்சனே கேக்கவே இல்லயே மது…….. அப்போ அவரோட காதலுக்கு நீங்க கொடுக்கும் மதிப்பு என்ன மது…… சொல்லுங்க………….. சத்தியமா சொல்கிறேன்…….. நான் இவரோட வாழ்க்கைல குறுக்கிடலேனா…… இவர் உங்கள விட்டிருந்திருக்க மாட்டார் மது………… அது எனக்குத் தெரியும்…….…. நான் யாரோ ஒருத்தி…………. என்னையே அவர் வாழ்க்கைல இருந்து போகக் கூடாதுன்னு அந்தப் பாடு பட்டவர் இவர்……….. நீங்க அவர் உயிருக்குயிரா காதலிச்ச பொண்ணு உங்கள விட்டு விடுவாரா என்ன…….. நீங்க எந்த சூழ்நிலையில திரும்பி வந்திருந்தாலும் உங்கள ஏத்துட்டு இருந்துருப்பாரு…………… இல்ல…….உங்க முடிவுக்காக காத்துட்டு இருந்திருப்பாரு மது………. நீங்க இவரை இப்போதும் காதலித்து……….. ஏண்டா என்னை விட்டு இவள திருமணம் செய்தாய் என்று கேட்டிருந்தால் கூட… நான் விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன் தான்… ஆனா நான் என் புருசனுக்காக போராடியிருப்பேன் உங்க கிட்ட…. ஆனா நீங்க……….. அவர் காதலையே நினைத்து பார்க்கவில்லையே கோபம்தான் வருது மது உங்க மேல…………… அவருக்கும் ஒரு மனசு இருக்குனு ஏன் நினைக்க வில்லை நீங்க…….. அதுல என்ன இருக்குனு ஏன் நீங்க கேட்க வில்லை மது” என்று முடிக்கும் போதே அவள் தள்ளாட………..
பாலா……….. தனக்காக….. தன் காதலுக்காக போராடும்… சண்டையிடும்……….. தன்னவளை……… தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் உணர்ச்சியின் வேகத்தில்…..………… மதுவின் மீதான தன் காதல் எந்த அளவிற்கு அவளுக்குள் வேரோடி இருந்தால்……. இன்று இப்படி பேசிக் கொண்டிருப்பாள் என்று உணர்ந்தவனின் மனம் அவளை அமைதிப் படுத்த வேண்டுமே….. என்று முதலில் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்
மது………. அவர்களையே பார்த்தபடி இருக்க………. அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அவள் இந்த ஒருவருடம் அனுபவித்த வேதனை…… அவன் மேல் கொண்ட காதல் தவிர….. அவனின் முதல் காதலை எந்த அளவு மதித்து இருக்கிறாள் என்பதும் புரிய……. அசந்து போனர்…… கீர்த்தனா….. பாலா மேல் கொண்ட காதலின் ஆழத்தை……….. அவள் கணவனே அப்போதுதான் உணர்ந்திருந்தான் போல என்ற நிலையில் தான் இருந்தான்……….
மது பாலாவை அருகில் அழைக்க………. கீர்த்தனாவோடு அருகில் போக…….
மதுவுக்கும் கீர்த்தனாவின் காதல் புரிய ………தன்னை நினைத்து சிறிதளவு வெட்கம் கூட கொண்டாள்…. ஏனென்றால் அவள் சொல்வது போல அவன் மனதை அவள் நினைக்கவில்லையோ என்று கொஞ்சம் சந்தேகம் கூட வந்து விட்டது அவளுக்கு………. ஆனால் இவள்……. அவன் மனதை மட்டுமே……….. அவன் உணர்வுகளை மட்டுமே நேசித்தவள்...... என்று யோசிக்க…… கீர்த்தனா மாதிரி ஒரு பெண் அவனுக்கு கிடைத்ததில் சந்தோசம் கொண்டாள்…
மதுவுக்கு தெரியாத விசயமும் இருந்தது…….
கீர்த்தனாவும் அவன் உணர்வுகளை புரியாமல் ஆடினாள்தான்…… எதற்காக மதுவுக்காக….. மதுவுக்கான வாழ்க்கையில் தான் பாதகம் செய்கிறோமோ என்று குற்ற உணர்வில் பாலாவைக் கூறு போடத்தான் செய்தாள் என்று தெரியவில்லை……… அது பாலா சொன்னால் மட்டும் தான் தெரியும்……. மதுவைப் பற்றி கீர்த்தனாவுக்கு தெரிந்திருந்தால் தவறில்லை…………… ஆனால் கீர்த்தனாவைப் பற்றி….. அவர்களது அந்தரங்கம் பற்றி பாலா மதுவிடம் சொல்வானா என்ன……….. ஒருபோதும் அது நடக்க வாய்ப்பில்லை………..அதனால் அது மதுவுக்கும் தெரியப் போவதும் இல்லை…….
”பாலா………. எங்க இருந்துடா பிடிச்ச உன் தேவதைய…………” என்று மது கேட்க……… ’
பாலா பெருமையாய் மனைவியை நோக்கினான்……………..
தான் இவ்வளவு பேசியும் தன் மேல் கோபம் இல்லையா இவளுக்கு என்று அவனொடு சாய்ந்த படியே மதுவை சந்தேகமாய்ப் பார்க்க…
மது…… தன் குறும்பைக் கீர்த்தனாவிடம் காட்டினாள்
“சரிடா பாலா…… உன் கீதுவே ஒக்கேனு சொல்கிறாள்…….. எனக்கு தாலி மட்டும் கட்டி மனைவியா ஏத்துக்கோ…… அது போதும்……. மற்ற எல்லாத்துக்கும் தான் கீர்த்தி இருக்காள்ள………” என அவனிடம் சொல்லி.. கீர்த்திகா புறம் திரும்பி கண் சிமிட்ட
பாலா…….. விழிக்க…….
கீர்த்தி………… ஆ….. என்று வாய் பிளந்து…………. நின்றாள்…….
மது கிண்டலாகச் சொல்கிறாள் என்பதை உணர்ந்த … வினோத் கீர்த்தனாவைப் பார்த்து…….
“ஏன் கீர்த்தி மூச்சுவிடாமல் பேசி இது உனக்குத் தேவையா” என்று சிரிக்க
கீர்த்தனா மெதுவாய் பாலாவிடம் மட்டும் கேட்கும் குரலில் ”நான் எப்போ ஓகே சொன்னேன் பாலா….. அப்டியா பேசுனேன்……….” என்று அப்பாவியாய்ச் சந்தேகம் கேட்க
”அடங்குடி……. அப்போ அப்போ ஓவர் எமோசனல் ஆகி நீ பண்ற வேலைல எனக்குதான் சர்வ நாடியும் ஒடுங்கிடுது…………. இப்போ என் காதலை நிருபிக்க யாரும் இல்லைனு உன்கிட்ட வந்து நின்னேனா………. அவ வேற இப்டி சொல்றா………உன்னை” என்று மற்றவர்களை மறந்து தங்களுக்குள் பேச…….
“பாலா…………. சத்தியமா………… நீயாடா இது……………. இவ்ளோ ஃப்ளாட்டாடா நீ………….. அவ கூட உன்னை விட்டுக் கொடுத்துருவா போல………… நீ……. இந்த முழி முழிக்கிற…… ” என்று மதுவே கலாய்க்க
பாலா வாழ்க்கையில் முதல் முறை வெட்கமும் பட்டான்………. அதை மறைக்க போராடியும் கொண்டிருக்க……….. மதுவை முறைத்து…….. முடிவில் கீர்த்தனாவிடம் முடித்தான் பாலா…………
“பாரு உன்னால அவ என்னை ஓட்ரா…………” என்று அவளை முறைத்தவாறே அவளை விட்டு தள்ளி நிற்க
”நீங்க தைரியமா இன்னும் இவதான் என் மனைவினு சொல்லவே இல்லை…….. இப்போ கோபம் வேறயா…………”
“ஆமாடி……… இன்னும் தனியா வேற சொல்லனுமா………… அதுதான் கண்டுபிடிச்சிட்டாளே ….. என்னை மொத்தமா ஆளறேன்னு”
என்றவனிடம் வெட்கத்தில் சரணைடய……………
எல்லோரும் இருக்கிறார்கள் என்று அவளை விலக்கவில்லை அவனும்……………..
பாலா யாருக்காகவும் இன்று அஞ்சவில்லை…. ஏன் மதுவின் முன்னால் கூட அது அவனை பாதிக்கவில்லை……. அவளின் நெருக்கத்தை மனப் பூர்வமாக ஏற்று தன்னோடு சேர்த்துக் கொண்டான் பாலா…………
மது…. பாலாவிடம்
“இவதாண்டா உனக்கு சரியான ஆளு”
என்று சொல்ல………… மதுவைப் பார்த்து நிம்மதியாய் சிரித்தான் பாலா…………. பாலாவின் நிம்மதியில் கீர்த்தனா மன அமைதி கொள்ள……… மற்ற அனைவரும் அவர்கள் மூவரையும் பார்த்து சந்தோசம் கொண்டனர்…………….
அதன் பின் மதுவுக்கு சிகிச்சை அளிக்கப் பட வேண்டி இருக்க வெளியேறினர்………….. அனைவரும் மனம் முழுவதும் நிம்மதியுடன்
Comments