அத்தியாயம் 57:
வினோத் மற்றும் கீர்த்திகா… அறையின் வெளியே இருக்க……….. அருந்ததி தன் அண்ணன் மகளின் அருகில் இருந்தாள்…….. அவளயே பார்த்தபடி…….. கண்கள் வேறு கலங்கி கொண்டே இருந்த்து…. அவளுக்கு…. அவளின் நிலையை நினைத்து…….
வினோத் மேல் சாய்ந்து கண் மூடி இருந்தாள் கீர்த்திகா……..ஆனால் நினைவுகளின் ஓட்டத்திலே இருந்தாள்…… மனம் பிரதாப்பின் நினைத்து பயத்தில் சுழழ……… ஆதி… மது இவர்களுக்கு தன்னால் ஏற்பட்ட வேதனையான நிலையினை எண்ணி மருகிக் கொண்டிருந்தாள்……… எல்லாம் தன் மேல் காதல் மற்றும் பாசம் வைத்த ஒரே காரணம் தான் எனும்போதே……….. கண்கள் அருவியை உகுக்க……….. அடுத்து வினொத்தையும் நினைக்க……… அவனுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று தோன்ற நிமிர்ந்து வினோத்தை பார்க்க
அவளின் அசைவில் …….
“என்ன கீர்த்தி…………” என்றவன் அவளது கண்களின் நீரை உணர்ந்தவன்
“ஹேய்……. என்ன ஆச்சு……………. மதுதான் வந்துட்டாள்ளடா………. அவளோட நிலையைநினைத்து ஃபீல் பண்றியா………… மாறிறும் கீர்த்தி………….” என்றவனிடம்
கண்ணில் முழுவதும் பயம் விரவி இருக்க
“அந்த பிரதாப்பை நினைத்து பயமா இருக்கு வினோ…………..அவன் இன்னும் அடங்கலைனு நினைக்கிறேன்……………….. என்னால இன்னும்………….. என்னை நேசிக்கிற யாருக்கும் பிரச்சனை வருமோன்னு பயமா இருக்கு……………….. எது நடந்தாலும் எனக்கு நடக்கவேண்டியதுதானே வினோ………… என் அம்மா……… ஆதி………. இப்போ மது……………… இப்டி என்னை சுத்தி இருக்கிறவர்கள் எல்லோரும் என் ராசியில் அடி வாங்கிட்டாங்க ………… எனக்கு …………. இந்த கல்யாணம்,,,,,,,,,, காதல்………….குடும்பம்……………. இதெல்லாம் ஒட்டாது போல வினோத்………… உங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோனு பயமா இருக்கு…… நீங்க நல்லா இருக்கணும்….என்னை விட்டுட்டு……” அதற்கு மேல் முடியாமல் அழ
பதிலுக்கு அவன் கோபப்படவில்லை……… அவளின் நிலையை உணர்ந்தவன்
”நீ சொல்வது போல் உன்னை விட்டுட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணினா……… என் உயிர் போகாதுன்னு உன்னால நூறு சதவீதம் அடிச்சு சொல்ல முடியுமா கீர்த்தி………………. உனக்கு நடந்தது எல்லாம் கஷ்டம்தான்……… உன்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாம் பாதிக்கப்பட்டிருக்காங்க…………..அது உண்மைதான்…….. ஆனால் இது உன்னால மட்டும் இல்ல கீர்த்தி………. அது அவங்கவங்க விதி…………. ஆதி இறப்பு………. மது நிலைமை என்று எல்லாமே நீ இல்லையென்றாலும் நடந்திருக்கும்……….. புரிஞ்சுக்கோ……………உன்னால உன்னாலனு சொல்லி உன்னையே வருத்திக்காதம்மா………… எனக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்ல நான் ஒண்ணும் கடவுள் இல்லை…….. ஆனா பிரதாப்பால் அதுவும் ஆகாது…………. அது மட்டும் உறுதியா சொல்றேன்…………….. நம்பிக்கைதான் வாழ்க்கை கீர்த்தி………….. கண்டிப்பா…….. நாம நல்லா இருப்போம்………… புரியுதா…” என்றவனிடம்
ஏதோ அப்போதைக்குத் தலை ஆட்ட…………
”அதற்காக……. கல்யாணம் வேண்டாம்… நீங்க வேற பொண்ணைப் பாருங்கன்னு சொன்ன…………………..எனக்கு கோபம் அடிக்கடி எல்லாம் வராது…………….. வந்துச்சுனா…………. நீ தாங்க மாட்ட” என்று மிரட்ட
அவனிடம் கண்கள் பளிச்சிட
“என்ன பண்ணுவீங்க………” என்று தன் கவலையில் இருந்து மீண்டவள் காதலனைச் சீண்ட
“உன்னை…………. அப்படியே ஸ்வாஹா பண்ணிடுவேன்………………. இந்தக் கன்னத்துல கையால அறையிறதுக்கு பதிலா…………… உதடால……… முத்த அறைதான் உனக்கு……………” என்றவனிடம்
“ஆரம்பிச்சுட்டீங்களா………..உங்க பல்லவிய………..” என்று அவளும் நார்மல் ஆக
வினோத்துக்கோ அவளிடம் பேசிக் கொண்டிருந்தாலும்
தன்னவளின் கவலையை மனதில் நினைத்துக் கொண்டிருந்தான்…………. அந்த பிரதாப்புக்கு ஒரு வழி பண்ண வேண்டும்……. இவள் மனதில் அவனைப் பற்றிய பயத்தைப் போக்க வேண்டும்………………… என்று முடிவு செய்திருந்தான்
மூன்று மணி அளவில் விழித்த மது………… ஓரளவு நன்றாக இருக்க…………… அறையை ஒரு முறை நோட்டமிட்டவள்…………
அருகில் இருந்த அருந்ததியைப் பார்த்தாள்
“அத்தை” என்று அழைக்க
அருந்த்தி உடனே எழுந்துவிட்ட்டாள்
“என்னம்மா………….”
“தண்ணி வேணும்…” என்றவள்……பாத்ரூமையும் கைகாட்ட
“இதோமா…..” என்றபடி
“தண்ணீரை எடுத்து அவளுக்கு புகட்ட கீர்த்தியும் வினோத்தும் உள்ளே வந்தனர்……..
அதன்பிறகு கீர்த்தி…..மதுவுக்கு உதவி செய்தாள்………
எழக் கூட முடியாத மதுவின் நிலையை பார்த்தவள்….. இத்தனை வருடம் அவள் பட்ட வேதனை நினைத்து கீர்த்தி மனம் துடித்த்து………. கீர்த்தி மீண்டும் மதுவை பார்த்து அழ ஆரம்பித்த படி….. படுக்கையில் மீண்டும் படுக்க வைத்தாள் கீர்த்தி
இப்போது அருந்ததியும் அழ………
“இப்போ எதுக்கு அழறீங்க…… நான் வந்துட்டேன் இன்னும் என்ன…………. சும்மா…………. எனக்கு டென்சன ஏத்தாத கீர்த்தி………….. சந்தோசப் படு……. இப்போவது வந்துட்டேன்னு” என்றவள்………
“கீர்த்தி………… அம்மாகிட்ட பேசனும்……………… இப்போதே பேசனும்…………. என்னைத் தவிர யாருமே இல்ல கீர்த்தி அவங்களுக்கு…….. வாயில்லா பூச்சி…. துக்கத்தை கூட மனசுலேயே வச்சுப்பாங்க” என்ற போதே
இதோ போன் பண்றேன் மது……அங்கிளும் ஆன்ட்டியும் வந்துட்டுதான் இருக்காங்க…… இப்போதான் பேசினாங்க.. என்றபடி போனைக் கொடுக்க
நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தாய் தந்தையிடம் பேச இப்போது மது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்……
“அம்மா…………… எனக்கு உங்கள பார்க்கனும் போல இருக்குமா….. சீக்கிரம் வாங்கம்மா……” என்று குழந்தையாய் மாறி இருந்தாள் மது………….
அப்பா… அம்மா என இருவரிடம் பேசிய உணர்ச்சி வெள்ளத்தில் சிறிது நேரம் இருந்தவள்……
அறையை மீண்டும் பார்த்து……..தன்னைச் சுற்றி நின்றவர்களின் மேல் பார்வையை ஓட்டியவள்….
“பாலா எங்க” என்று கேட்க
கொஞ்சம் ஆடித்தான் போனர் மற்றவர்கள்……………… பதிலை எதிர்பார்க்காமல் அடுத்து
”அந்த பொண்ணு வீட்டுக்கு பத்திரமா போய்ட்டாளா………..” என்று கேட்க
உடனே வினொத்……
“போய்ட்டா….. பாலாதான் கூட்டிட்டு போனான்” எனச் சொல்ல
“ஓ……. என்றவள்
“எதுக்கு அவனோட போகச் சொன்னீங்க………. இவன் என்னோட நிலையை பார்த்து…… அந்தப் பொண்ணுகிட்ட……. .உம்முனு முறைச்சுக்கிட்டு இருந்தான்……………….. கார்ல கூட அவ டிரைவ் பண்ண முடியாதுன்னு சொல்றா………. இவன் அவளோட நிலைமைய புரிஞ்சுக்காம… ட்ரைவ் பண்ணச் சொல்றான்……. அவளுக்கு கார் ஓட்டத் தெரியுமா.. தெரியாதானு கூட கேட்கலை………… பாவம் அந்த்ப் பொண்ணு……… இவனைப் பார்த்து மிரண்டுட்டா………..” என்றவள்.
“அத்தை………. அந்தப் பொண்ணு கன்சீவா இருப்பா போல…………….. என்றவள்….. அங்கு நடந்த விபரத்தை சொல்ல………
மூவரும் இன்னும் அதிர்ந்து…….கீர்த்தியை நினைத்து கலங்க
மது பேசிக் கொண்டே இருந்தாள்………..
“அவளுக்கே தெரியாது போல…. இல்லேன்னா…. இப்படி என்னைக் காப்பாற்ற வந்திருப்பாளா…. நாளைக்கு வரச் சொல்லணும் கீர்த்தி….. நான் அந்த பொண்ணுகிட்ட ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை..” என்று சொல்ல
அருந்ததி அதிர்ச்சியும்……. ஆனந்தமும்… துக்கமும்………கலந்த கலையாய் ஆனாள்…..
“கீர்த்தி நீயும் மாட்டிட்டியோன்னுதான் நான் பயந்து போய்ட்டேன்…….. பாலா கூட உன்னைதான் தேடி வந்திருப்பான் போல… உன் பேரைத் தான் சொன்னான்…..” என்று சொல்லியவள்
“பாலா………… ஏன் போய்ட்டான்” என்றபடி அருந்ததியைப் பார்க்க
வினோத் அதற்கு பதில் சொன்னான்
“அவனுக்கு கொஞ்சம் அலைச்சல்மா…. அதுனால நான் தான் போகச் சொன்னேன்……..” என்று சொல்ல
சரி என்று தலை ஆட்டியவள்
அதன் பிறகு….. வினோத்தைப் பற்றி…….. கீர்த்தியிடம் விசாரிக்க…. கீர்த்தியுடன் பேசியபடி இருந்தாள்…….
கிட்டத்தட்ட 5 மணி அளவில்….. மதுவின் பெற்றோர் வர…….. தன் அண்ணனைக் கண்ட அருந்ததி……. வேகமாய் அங்கிருந்து கிளம்பினாள்
மதுவின் தந்தையும் தாயும்………….. துடித்துப் போய் விட்டனர்……… தாங்கள் பெற்ற மகளின் நிலையைப் பார்த்து………
கீர்த்தியை அழக்கூடாது என்று சொன்னவள்…… தன் தாயின் அணைப்பில் கரைந்து தன் 5 வருட வேதனை எல்லாம் கரைக்க ஆரம்பித்தாள்
------------
வீட்டிற்கு வந்த அருந்ததி…………. நேராய் நின்றது… மகனின் அறை வாசல் முன்தான்……. வரும் வழியிலேயே பாலாவுக்கு போன் செய்து விட்டாள்…….. அவனை உடனே பார்க்க வேண்டும் என்று………..கீர்த்தியையும் பார்க்க வேண்டும் என்று…. பாலாவும் எழுந்து காத்திருந்தான்……….அன்னைக்காக…. கீர்த்தியை எழுப்ப வில்லை………….
உள்ளே வந்தவள்……..
கீர்த்தியைப் பார்த்துக் கொண்டே சில நிமிடம் கழிக்க
“மது சொன்ன தகவலை பாலாவிடம் சொல்ல……….” அமைதியாய் இருந்தான் பாலா
”என்னடா….ஒண்ணும் பேச மாட்டேங்குற…..”
“கீர்த்திக்கு தெரிந்துதான் போனாள் என்ற உண்மையைச் சொல்லவில்லை பாலா… அருந்ததி எப்படி எடுத்துக் கொள்வாள் என்றே மறைத்தான்………… ஒருவேளை கீர்த்தனாவைப் பற்றி தவறாக எடுத்துக் கொண்டால்…… அதனால் சொல்லாமல் விட்டு விட்டான்”
“எதுவும் ஆகலைல விடுங்க”…. நாளைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு பொறேன்….” என்று சிடு சிடுத்தவன்
பேச்சை மாற்றி
“மது எப்படி இருக்கா……… எழுந்தாளா….. என்னைக் கேட்டாளா…..” என்றபடி பேச ஆரம்பித்தான்
”என்னடா….. இவ்ளோ பெரிய விசயம் சொல்றேன்…… நீ என்னடா ரியாக்சனே காட்ட மாட்டற….. இது அவளுக்கு தெரியாது போல…. இல்லேனா அவ இப்படி போய் இருக்கமாட்டா” என்றவளிடம்
இவங்க விட மாட்டாங்களா என்று இருந்தது….. தான் மறக்க நினைப்பதையே ஞாபகப் படுத்தறாங்களே…….. என்று கடுப்பாகியவன்
“அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்றீங்க…. குத்தாட்டம் போடச் சொல்றீங்களா நான் அப்பா ஆகப் போறேனு.. அப்பா ஆகப் போறேனு…… ஏம்மா……. நீங்க வேற.” என்று விட்டேற்றியாய் அவன் சொன்ன பதிலில்….. கொஞ்சம் அரண்டாள் அருந்ததி
மது வந்த பின்னால்… கீர்த்தியிடம் இருந்து தள்ளிப் போகிறானோ என்று……. தேவை இல்லாத கவலை கொண்டாள் அவனது அம்மா….
ஆனாலும் மகன் மேல் பெரிதாய்ப் பயமில்லை……. இவனால் கீர்த்தி மனம் வருந்தி விட்டால் என்று மனம் மருமகளைப் பற்றி கவலை கொள்ள ஆரம்பித்தது……..
கீர்த்தியும்………பாலாவும் மதுவைப் பார்க்க கிளம்பி இருந்தனர்……. கூடவே கீர்த்தனாவுக்கு செக்கப் செய்யவும்…….
வரும் வழியில் கீர்த்தனா கொஞ்சம் மனம் உளைச்சலில் தான் இருந்தாள்………… மதுவின் நிலையை நினைத்து………… அவள் பாலா இப்போது அவளவன் இல்லை என்ற உண்மை தெரியும் போது அவள் மனம் என்ன பாடுபடும்………. அந்தத் துன்பம் அவளுக்கு பெரிய கொடுமை………… ஏன் தான் அந்த வேதனையை அனுபவிக்க வில்லையா………. பாலாவிடம் திருமணம் ஆனதை இப்போது சொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பார்க்க…. அவனது முறைப்பைத்தான் பதிலாக தந்தான்…………… இவள் இப்படி நினைத்துக் கொண்டு வர…….. அவனோ
மதுவிடம் எப்படி சொல்வது…………. என்ற குழப்பமே தவிர சொல்லாமல் இருக்கவெல்லாம் அவன் நினைக்கவில்லை……… கண்டிப்பாக மது புரிந்து கொள்வாள்…….. ஆனால்……………. தற்போது போதையின் பிடியில் இருக்கும் அவள் அதிலிருந்து மீள வேண்டுமென்றால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட வேண்டும்… இவனைப் பற்றிய உண்மை தெரிந்து இன்னும் மோசமானால்….. என்ற நினைவு வேறு அவனைக் கொல்ல…. எதுவானாலும் கீர்த்தனாவைப் பற்றி அவளுக்கு சொல்லி விட வேண்டும் ……… என்று முடிவெடுத்திருந்தான்
இவ்வாறு அவன் யோசிக்கும் போதே கீர்த்தனா அவனை அழைக்க…. திரும்பி பார்த்தான்………. அவன் முகமே……….. அவன் சரி இல்லை என்பதை உணர்த்த
“என்ன பாலா…………… ஏன் டல்லா … இருக்கீங்க………….. மதுவ எப்டி ஃபேஸ் பண்ணப் போறீங்க………. அவங்க உங்கள திட்டுவாங்களா பாலா………….” என்று கேட்க
“திட்டினா கூட மனம் ஆறிரும் கீர்த்தி……… ஆனா அவ திட்ட மாட்டா…………. அது எனக்குத் தெரியும்……. அவ நம்ம வாழ்க்கைல பிரச்சனையே இல்ல……… ஆனா அவ மனசு………. ஆரம்பத்தில் நான் அவள காதலிக்கவே இல்லை கீர்த்தி……… அவள எவ்வளவு அவமானப்படுத்தி இருப்பேன் தெரியுமா……… கொஞ்சம் கூட கவலைப் படாம……….. என் காதலுக்காகப் போராடுனா……… கிடைத்தும்…….” என்று மௌனமாக சில நிமிடம் இருந்தும்
“ஏன் கீர்த்தி அவ காதல் தோத்துப் போச்சு………… அவளுக்கு ஏன் இந்த நிலைமை……“ என மனைவியிடமே கேள்வி கேட்டான் அவன்
இதைக் கேட்கும் போதே அவன் கண்கள் கலங்க
”பாலா…………….. ப்ளீஸ்…….. நீங்களே…….இப்படி ஃபீல் பண்ணினா……….”
”அவள இந்த நிலைமையில என்னால பார்க்க முடியல கீர்த்தி…………… அவளுக்கு என்னால் எந்த ஆறுதலுமே கொடுக்க முடியாது………….. அவள மறுபடியும் எ,,,,,,,,” என்று உணர்ச்சியின் வேகத்தில் பேச…………இருந்தும் சுதாரித்து
சட்டென்று வார்த்தையை மாற்றிவிட்டான்
“பழைய மதுவா பார்க்க முடியுமா கீர்த்தி…………… “ என்றவனின் உணர்வுகள் புரிய
“பாலா நான் ஒண்ணு சொல்லவா………. நீங்க என்னைத் திட்டக் கூடாது………. முறைக்கக் கூடாது……….தென் கை நீட்டவே கூடாது” என்று அவள் சொல்ல…………..
”அது நீ சொல்றதைப் பொறுத்து……….. ஆனா உன்னை அடிக்க மாட்டேன்…………… அதுக்கு பதிலா…………….. எனக்குத் தண்டனை கொடுத்துப்பேன்………….. சொல்லு………… கேட்கிறேன்…………. நீதான் ஆட்டி வைக்கிறேல்ல………… நானும் ஆடுறேன்ல……….” என்றவனிடம்
“உங்களுக்கு திருமணம் ஆனதைச் சொல்ல வேண்டாம் இப்போ………….. நான் வினோத்தை ரிலேட்டிவ்னு சொல்லிக்கலாம்….. அவங்க வீட்ல போய் இருந்துக்கறேன்……….. மது ஓரளவு தேறினதுக்குப் பிறகு சொல்லலாம் பாலா” என்றவளிடம்
“ஹ்ம்ம்ம்….. பரவாயில்ல……….. என் பொண்டாட்டிதானே………….. ப்ளான் லாம் போடத் தான் செய்வாய்………….. அப்புறம்……. சொல்லுங்க மேடம்…. மங்கையின் மணாளன் யார்னு கேட்டா என்ன சொல்வீங்க………. மது கண்டிப்பா கேட்பா……… சொல்லுங்க என்ன சொல்வீங்க”
”US ல இருக்காருனு சொல்லிடலாம் பாலா………….” என்றவளின் திட்டம் அழகாய் விளங்க
”ம்ம்ஹூம் US ல இருக்காரு…… நல்லது…….. அவருக்கு பேர் இல்லையாம்மா.. நான் கேட்க மாட்டேன்… மது கேட்பா…..என்ன சொல்வீங்க மேடம்” என்று நக்கலாக கேட்ட விதமே அவன் கோபம் சொல்ல
”இப்போதைக்கு இவ்வளவு சொல்வோம் பாலா……..”
“நான் பேர் என்ன சொல்லப் போறேன்னு கேட்டேன்…….அதச் சொல்லு” குரல் அதிகாரத் தொணியில் ஏறி இருக்க
சொல்லாமல்… சொல்லமுடியாமல்…. அமைதியாக குனிய
”நான் சொல்லவா…………… கார்த்திக்…….. மேடமோட சீனியர்…………..தென் காதல் கதைலாம் எப்படி சொல்றதுன்னு யோசிச்சு வச்சுட்டீங்களா மிஸஸ் பாலா ……………. இல்லேணா………. நாலு ரொமான்ஸ் நாவல் வாங்கித் தாரேன்……. படிச்சுட்டு அத அவகிட்ட ஓட்டு………. நம்பனும்ல…….. என்ன திமிரு உனக்கு…… என்கிட்டேயே இன்னொருத்தன உன் புருசன்னு சொல்ல பெர்மிஷன் வாங்குற………. நாம கதை ஓட்டினதே……… தாங்க முடியல…… இதுல இன்னொரு புதுக் கதை……………… ஆள விடும்மா……….. இந்த நிலைமையில……… உன்னை விட்டுட்டு………….. என்னால முடியாதும்மா….. ஏன் கீர்த்தனா……… என்னைக் கொல்ற……………. ” என்று வலியும்…….. கேலியும் கலந்து அவளை நோக்கியவன்
“ஒரு முறை நாடகம் போட்டதே ஆயுளுக்கும்… இல்லையில்லை ஜென்மத்துக்கும்……. கொல்லும்………… இதுல இன்னொரு நாடகம்…….”
“பாலா…” என்று இடையில் பேச
“நீ கொஞ்சம் வாய மூடிட்டு வர்றியா…………. மதுவை எப்ப்டி சமாளிக்கிறதுன்னு நான் பார்த்துப்பேன்…………………. உன் அம்மாவையே சமாளித்தவன் நான்………..“ என்ற போது
“இல்ல பாலா…. நான் என்ன சொல்ல வருகிறேன்னு……………
“ப்ளீஸ் கீர்த்தனா…………. ஸ்டாப் ……………… இதுக்கு மேல பேசாத,,,,,,,,,,,,,,,,,, பேசுவேன்னு பிடிவாதம் பிடித்தாய் என்றால்….. என் பதில் வேற மாதிரிதான் இருக்கும்…………… என்றவன்…………. பார்த்தில்ல அன்னைக்கு என்றவன் தன் கையைக் காட்ட………….” தானாய் வாய் மூடினாள் கீர்த்தி………..
------------------
மருத்துவமனையில் வினோத், கீர்த்திகா, பாலா மூவரும் மதுவின் அருகில் இருக்க……… கீர்த்தனா உள்ளே போகவில்லை……….பாலாவை மட்டும் அனுப்பிவிட்டு வெளியிலேயே நின்று விட்டாள்……… அவன் முதலில் அவளுடன் தன்னைப் பற்றி எந்த இடையூறும் இல்லாமல் பேச வேண்டும் என்று………..
வினோத்…. பாலா, கீர்த்தி வந்தவுடன்…….. அவர்களிடம் கீர்த்தியின் நிலைமையைச் சொல்ல…….. தங்களுக்கும் தெரியும் என்று அவனிடம் மட்டும் கீர்த்தி தெரிந்தே இதைச் செய்திருக்கிறாள் என்று விளக்கி வைத்தனர்.
உள்ளே நுழைந்த பாலாவைப் பார்த்து புன்னகைத்த மது……….
“என்னடா……….என்னைப் பார்க்க முடியாம ஒடி போய்ட்டியா……….”. என்று கூற…….
”சாரி மது……. கொஞ்சம் அலைச்சல்…………. அதுதான் வினோத்தை……….. விட்டுட்டு போனேன்………” என்று அமைதியாகச் சொல்ல………..
“பாலா…….. நீயா பேசுற….. இவ்ளோ பொறுமையா……. உண்மையாவா………. நம்பவே முடியலயே”
“ஏய்………” என்றவன்… அவள் அருகில் போய் அமர்ந்து அவள் கைகளைப் பார்க்க.………… அதில் அடிக்கடி ஊசி குத்திய வடுக்கள்……….. கை முழுவதும் இருக்க…………கண்களில் நீர் கோர்த்தது பாலாவுக்கு
”என்ன பார்க்கிறடா… அந்த பிரதாப் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன்…… இல்லேனா என் மானம் கூட என்னை விட்டு போயிருக்கும் பாலா……….. அதைத் தடுக்க கூட என்னால் முடிந்திருக்காது பாலா……… என்ன… அப்படி ஏதாவது ஆகி இருந்திருந்தா…… மது உயிரோட வந்துருக்க மாட்டா……..” என்றவளை வேதனையோடு பார்த்தவனின் வேதனை தாங்காமல் அவனுக்கு ஆறுதல் கூறுவது போல் அவன் கைகளோடு தன் கைகளை இணைக்க.……….
பாலா……. அவளறிய முடியாதபடி தன் கைகளை இயல்பாக விலக்குவது போல் விலக்கிக் கொண்டான்………….
வினோத்துக்கும் பாலாவின் நிலை புரியாமல் இல்லை…….
மது இப்போது……….. பாலாவிடம்……..
“நான் உன்கிட்ட தனியா பேசனும்……….” என்றபடி வினோத் கீர்த்திகாவைப் பார்க்க……….
பாலா………… மனதுக்குள் பிரளயமே உருவாகத் தொடங்கி இருந்தது……………. வினோத் பாலாவை மட்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு நகன்றான்……….
வினோத்தும்…… கீர்த்திகாவும் வெளியில் வர…….. பாலாவைக் காணாமல் கீர்த்தி விழித்தாள்………. அவர்களிடம் வந்தவள்………..
”வினோத் …. மது..நல்லா இருக்காங்களா…….நான் போய்ப் பார்க்கவா…….” .என்றவளிடம்
“ஹ்ம்ம்…. பார்க்கலாம்……….. அவ பாலாகிட்ட தனியா பேசனும்னு சொன்னா……… அதுதான் நாங்க வெளில வந்தோம்………”. என்றவனிடம்
“சரி…………” என்று சொல்லியவள்
அந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி போய் நின்று வெளியே வெறிக்க ஆரம்பித்தாள்……
என்னதான் மனம் அவனை முழுமையாக நம்பினாலும்………….. இன்னொரு பெண்ணோடு………. அதுவும் காதலித்த பெண்ணோடு தனியே இருக்கும் போது மனம் அடித்துக் கொண்டதுதான்…………. அது சந்தேகத்தில் இல்லை…………. அது இயல்பாகவே ஒவ்வொரு மனைவிக்கும் உள்ள பயம் தான்……….. அவன் வெளியே வரும் வரை……. அவள் நெருப்பின் மேல் நிற்கும் நிலையில் இருந்தாள்…………
வினோத்-கீர்த்திகா வெளியேறியவுடனே………… சில நொடிகள் அப்படியே இருந்தவனுக்கு வெளியே மனைவியின் மனம் தன்னை நினைத்து அடித்துக் கொண்டிருக்குமே என்று தவித்தவன்…… அவளைப் பற்றி அவனுக்கு மட்டுமே தெரியும்……… இந்நேரம்………. தன்னவள் தவித்துக் கொண்டிருப்பாள் என்று…….. நினைத்த உடனே
“மது ஒரு நிமிசம்…….. இதோ வருகிறேன்……..” என்று எழ…………
“என்னடா…………..” என்றவளிடம்……
”5 நிமிசம் மது……..நான் வந்துடறேன்” என்றபடி வெளியேறினான்…….. அவன் நினைத்த படியே…… அவள் வெளியே வெறித்துக் கொண்டிருக்க…………..
அவளின் அருகில் போய் நிற்க………. திரும்பாமலே கீர்த்தி பாலாவை உணர………. திரும்பிய வேகத்திலேயே அவனோடு சாய்ந்தாள்………
”சத்தியமாய்ப் பாலா சந்தேகம்லாம் இல்லை……… ஆனாலும் முடியல பாலா………..“ என்றவளிடம்……
“தெரியும்டி…. நீ இப்படி….. குழம்பி நிற்பேன்னு தெரியும்………. என் மேல உனக்கு இருக்கிற நம்பிக்கை எப்போதும் போக விட மாட்டேன் கீது………… அவகிட்ட நான் இன்னும் பேசக் கூட இல்லை…………. வினோத் கீர்த்தி வெளியே வந்தவுடனே நீ இந்த மாதிரி லூசு மாதிரி பரிதவிப்பாய் என்று தெரியும்” என்றவன்…….
“ப்ளீஸ் கீர்த்தி……….. உனக்குப் பிடிக்கலைனா சொல்லிரு………….. சேர்ந்து நாம அவளோட பேசுவோம்…… ஆனா அவளோட பேசி ஆகனும் கீர்த்தி” என்றவனிடம்…………
வேகமாய் கண்களைத் துடைத்தவள்…
“ச்சேய் நான் என்ன இவ்ளோ பெரிய சுயநலக்காரியா ஏன் மாறிட்டேன்…….. எனக்கு நீங்க இருக்கீங்க………………. அது போதும் எனக்கு……….. அவங்க பாவம்……….. என்னைப் பற்றி நினைக்காம…….. அவங்க பட்ட வேதனையை எல்லாம் மறக்கிற மாதிரி பேசுங்க பாலா………… போங்க” என்றவளிடம்
“ஷ்யூர்………… நீ ஃபீல் பண்ண மாட்டேல்ல” என்று பலமுறைக் கேட்டுவிட்டு மீண்டும் உள்ளே செல்ல…………
தன்னவனை நினைத்து பெருமை கொண்டாள் கீர்த்தி…………… அதே நேரத்தில் மதுவும் அவனை புரிந்து கொள்வாளா…… இந்த நிலையில் இருந்து மீள்வாளா……….என்ற கவலையிலும் ஆழ்ந்தாள்……. கீர்த்தி
மனைவிக்குத் தன்னைப் புரிய வைத்து அவளின் தேவை இல்லாத கவலையை நீக்கிய திருப்தியில்……..இப்போது பாலா தெளிவாக..மது என்ன சொன்னாலும் தன்னை………..அவளுக்கு புரிய வைக்கும் நிலையில் உள்ளே சென்றான்…….
தன் அருகில் மீண்டும் வந்து அமர்ந்தவனை………… பார்த்தாள்……. பார்த்துக் கொண்டே இருந்தாள்……. கண்களில் எல்லாம் கலந்திருந்தது……….. அவள் அவனைப் பார்த்தது முதல்………. அவனின் காதலைப் பெற அவள் செய்த சேட்டைகள்…… அதன் பின் அவன் தன்னை காதலித்தது………… திருமணம் வரை சென்றிருந்தனர்…………. இடையில் இந்த ஆதி மரணம்…………. என நினைவுகளை ஓட்டியவள்……….. அவனையே இமைக்காமல் அவன் கண்களையே பார்த்தபடி இருக்க……………பாலாவோ….. சிறிது நேரம் அவளைப் பார்க்க…… பிறகு அறையைச் சுற்றி பார்வையை ஓட்ட………….. மீண்டும் அவளைப் பார்க்க என்று இருந்தவன்… முடிவில் மொபைலை எடுத்து…………. ஏதோ நோண்டுவது போல் அதில் இருந்த அவனும் கீர்த்தனாவும் இருக்கும் புகைப்படத்தில் பார்வையை பதித்து விட்டான்…..
மதுதான் அவளை கலைத்தாள்….
“என்ன பாஸ்………. இந்த 5 வருசத்தில ரொம்ப அமைதி ஆகீட்டீங்க போல……………….. ஆனா இந்த பாலா எனக்கு பிடிக்கவே இல்லையே………….” என்று சிரிக்க
”மது……….. தனியா என்ன பேசனும்னு சொன்ன……. என்ன………… அதச் சொல்லு ….” என்று அமைதியாகச் சொன்னபடியே
”இப்போ என் அமைதி ரொம்ப முக்கியம்” என்று அவளிடம் முறைக்க…………
“அப்பா……. இதுதான் பாலா….. இப்போதான் பாலாகிட்ட பேசுன மாதிரி இருக்கு என்றவளிடம் வழக்கமாக இருக்கும் ’என் பாலா’ என்ற முன்விளிப்பு இல்லை………. என்பதை உணர்ந்தான் பாலா……….
”மது……. விளையாடாத மது………… என்ன மது… நடந்துச்சு……. உன்னைத் தேடி………. 4 வருசமா பைத்தியக்காரனா திருஞ்சுருக்கேன்…….. நீ காமெடி பண்ணிட்டு இருக்க…….. ”
“எப்டி மது இதையெல்லாம் தாங்கிட்டு……….. இத்தனை வருசம்………” என்றவனிடம்
”இதுலாம் ஈசி பாலா…………. மருந்து உள்ள போயிருச்சுனா……. உன் நினைவு வராம போயிரும்…… சோ 5 வருசத்தில முக்கால்வாசி நாள்…………. நான் நல்லாத்தான் இருந்தேன்………. ஆனா…… என் சுயநினைவில் இருக்கும்போது…… உன் நினைவு என்னைக் கொல்லும் போது……. அப்போதாண்டா நான் தாங்க முடியாம தவிப்பேன்…………. நான் கூட பரவாயில்ல………. அப்போ அப்போ நினைவு வரும் போது தவிப்பேன்……..ஆனா நீ இந்த 5 வருசமும் என்னை… என் நிலையை……. என்ன ஏது என்று தெரியாமல்…. மனசுல ஆயிரம்… நினைவுகள் என்னை பற்றி ஒவ்வொரு நிமிசமும்……….. உனக்கு இம்சை தானே பாலா………. என்றவளிடம்
கீர்த்தனாவை திருமணம் செய்யும் முன்னர்…… செய்யும் முன்னர் என்ன…. திருமணம் முடிந்தும் கூட…….. அவள் தன் மனதில் இடம் பிடிக்கும் வரை……. மது சொன்ன நிலையில்தானே இருந்தான்……… அவள் சொன்னதும்…….. அது நினைவில் வர…………. அவனையுமறியாமல் தலை ஆட்டினான் பாலா…….. கல்லாய் இறுகிய முகத்தோடு…………………. தலை குனிந்த வாறே………….
அவன் பட்ட வேதனையை அவன் முகமே சொல்ல……..
“டேய்………… இங்க பாரு………………… அழப் போறியா…………. நேத்துல இருந்து அழற சீனா பார்த்து……. பார்த்து போரடிச்சு போச்சுடா……………… சீனை மாத்துடா” என்றவளிடம்………
அதற்காக அவன் என்ன அவளிடம் ரொமான்ஸ் சீனா போட முடியும்…………..
“மது நீ மாறவே மாட்டியா……………. எல்லோரும் அழறது உனக்கு போரடிக்குதா….. உன்னை……… ஆனாலும் இந்த லொள்ளு மட்டும் உன்கிட்ட போகாதா” என்றவன்
”நான் எங்க அழுதேன்……………..” என்ற போதே கண்கள் கலங்கி விட………… அதை மறைத்து………
“என்ன விசயம் மது… சீக்கிரம் சொல்லுமா…….. உனக்கு மறுபடியும் ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டுமென்று வினோத் சொன்னான்” என்று சொல்ல
“சரி சரி அழுதுடாத………….. ”
என்றவளை முறைக்க…….
அவனின் முறைப்பை…….. ரசித்து பார்த்து விட்டு…………
”இதை ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டேண்டா…………” என்ற படி……… கண்களை மூடித் திறந்தாள்……….. ஏதோ பேசும் முடிவோடு……
“பாலா……….. நான் …உன்கிட்ட” என்று தடுமாற…………
அவளின் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்த பாலா…….
“மது ………. நம்மைப் பற்றியா ” என்று கேட்க
ஆம் என்று தலை ஆட்ட
“மது நீ முதலில் இந்த கொடுமையிலிருந்து வெளிய வா… அதன் பிறகு எல்லாம் பேசலாம்மா”
“இல்ல பாலா…….. நான் இப்போ….. இந்த நிமிசமே பேசனும்……..” என்று தீர்மானமாக பேசியவளையே பார்த்தபடி இருக்க
‘”எனக்கு ஒரு சத்தியம் உன்கிட்ட இருந்து வேண்டும் பாலா……. நான் என்ன சொன்னாலும் கேட்பாய் என்று” சொன்னதோடு கையை அவன் புறம் நீட்ட
“மது……. இது என்ன சத்தியம்…….. நீ சொல்லு பண்ண முடிந்தால் கண்டிப்பா பண்ணுகிறேன்……….”
“ப்ளீஸ்…….” என்று நீட்டிய கையை நீட்டியபடியே இருக்க……
”சோ உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை……… அப்படித்தானே” என்ற போதே
”சரி…………..உன்னை நம்புறேண்டா…….. என் வார்த்தையை மீற மாட்டாய்தானே” என்றபடியே…….
”பாலா” என்று நிறுத்தி விளித்தாள்
பாலா என்று சொன்னவளின் குரலில் அந்நியத்தை உணர……….
அவள் சாதரணமாய் பாலா என்று சொன்னாலே காதல் வழியும்…. இன்று அவள் பேசிய போது கூட அது இல்லை……. ஆனால் இப்போது அவள் சொன்ன பாலா என்ற வார்த்தையில் அதை முற்றிலும் உணர…….. அவள் பார்வையும் அதையே சொல்ல…………… பாலா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்……
அவளும் பேச ஆரம்பித்து இருந்தாள்
”உன்னை என்னால மேரேஜ் பண்ணிக்க முடியாது பாலா………ஏனென்றால்……… என்று நிறுத்தியவள்…………..
“நீ வேற பொண்ணைப் பார்த்து திருமணம் செய்துக்கோ பாலா….....” பாலா அதிர்ந்து பார்க்க…….
“என்னடா… நம்மை உருகி.. உருகி.. துரத்தி துரத்தி லவ் பண்ணியவள்…. இப்படி சொல்றானு பார்க்கிறாயா……. ஆமாம் பாலா…. உன்னை லவ் பண்ணியதால் தான் இந்த முடிவை சொல்கிறேன்……..” என்று அவளது காதலைக் கூட இறந்த காலத்தில் சொல்ல
பாலாவுக்கு வார்த்தைகள் அற்றவனாய் அவளையேப் பார்த்த்க் கொண்டிருக்க
”இது நான் என் காதலைச் சொன்னது போல அரை மணி நேரத்துல எடுத்த முடிவு இல்லை…. பாலா……. நான் தனிமையிலேயே இந்த 5 வருசத்தை ஓட்டி……….. அதுலயே மூழ்கிட்டேண்டா……….. என்னால் இனி குடும்ப வாழ்க்கையை நினைக்க முடியாதுடா…… இது இன்னைக்கு நேற்று எடுத்த முடிவு இல்ல……….. ஊட்டில உன்கிட்ட பேசியும் என்னால உன்னைச் சேர முடியலயே அப்போ எடுத்த முடிவுடா….. இனி நீயும் நானும் சேரவே போறதே இல்லை என்று…….. அப்போதிருந்து தனிமைய நான் விரும்ப ஆரம்பிச்சுட்டேண்டா…….. எனக்குனு ஒரு ஸ்பேஸ் உருவாக்கிட்டேன் பாலா…………… இப்போ அதை உடைத்து இனி உன்னை உள்ள வர வைக்க முடியாது பாலா………… என்று சாதரணமாகச் சொல்லி….. அவனைப் பார்த்தாள்…………..
கண்டிப்பாக அவன் கோபப்படுவான்…………. திட்டப் போகிறான் என்று அவள் நினைக்க……… அவனோ திகைப்பில் இருந்தான்…….. மதுவின் வார்த்தைகளில்………………. அவன் தன்னைப் பற்றி வாய் திறக்கும் முன்னே…………. அவனது கவலைகள் யாவும் போக்கிய மதுவை பார்த்து திகைப்புடன் இருக்க
அவன் திகைப்புடன் இருந்த நிலை கவலை தர வைத்தாலும்…….அவனைப் பார்த்து சிரித்தபடியே……….
“உன்னைப் பிடிச்சுருந்த ஏழரை சனி………. உன்னை இன்னையோட விடுது………..பாலா……………….” என்று சொல்லி முடிக்கும் முன்……….. அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே பாலா அதற்கு மேல் அங்கு இருக்கவில்லை
வெளியில் வந்தவன்……………….. அமர்ந்திருந்த கீர்த்தனாவைத் தேடி மண்டியிட்டு அவள் மடியில் தன்னை புதைத்து அழ ஆரம்பிக்க………………
அங்கு இருந்த… கீர்த்திகா…வினோத்……. மதுவின் பெற்றோர் எல்லோருக்கும் அதிர்ச்சி ஆக……….. கீர்த்தனாதான்….. கொஞ்சம் தைரியமாக இருந்தாள்
“பாலா……என்ன இது சின்னக் குழந்தை மாதிரி….. என்ன நடந்தது பாலா” .என்று நிமிர்த்தி………… அவனின் கண்களைத் துடைத்தவள்…….
வினோத்தும், கீர்த்திகாவும் அருகில் வர………….. பாலா கீர்த்திகாவிடம் திரும்பிச் சொன்னான்…….
“உன் ஃப்ரெண்ட் என்னை பழி வாங்கிட்டா கீர்த்தி………….. நான் என்னைக்கோ சொன்னதை இன்னும் மனசுல வச்சு………… என்னைக் கொன்னுட்டா கீர்த்தி” என்று சொல்ல……. அனைவரும் அதிர
வினோத்…. அவனிடம்
“பாலா…………என்னடா தெளிவா சொன்னாத்தானே புரியும்…………… சொல்லுடா……… கீர்த்தனாவைப் பாரு…… அவ கலவரம் ஆகிறா” என்று சொன்னவுடன் அவளைப் பார்த்த பாலா….. அவள் முக மாறுதலில் உடனே உள்ளே மது சொல்லியவற்றைச் சொல்ல………….
“நீ உன்னைப் பற்றி………. கீர்த்தனாவைப் பற்றி….. சொல்வதற்கு முன்னாலே மது இப்படி சொன்னாளா பாலா” என்று வினோத் கேட்க
“ஆமா வினோத்” என்று பாலா சொல்ல………..
அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் நிம்மதி……….
மதுவின் பெற்றோருக்கு தன் மகள் பாலாவின் நினைவில் இனி தன்னை வதைத்துக் கொள்ள மாட்டாள்” என்ற நிம்மதி….
வினோத்துக்கு “இனி மது கீர்த்தி வாழ்வில் இல்லை என்ற நிம்மதி”
கீர்த்திகாவிற்கு………….. கீர்த்தி-பாலா திருமணம் பற்றி கேள்விப்படும் போது தன் தோழி துன்பப் பட மாட்டாள் என்ற நிம்மதி……….
பாலாவுக்கோ…………………… தான் எதுவும் சொல்லாமலே அவள் தனக்கு தீர்வு கொடுத்துவிட்டாள் என்றாலும்………….. அவனைக் கொஞ்சம் கூட வருத்தாமல்… ….. வழக்கம் போல இதிலும் அவன் மீதான தன் காதலை நிலை நிறுத்தி விட்டாள் என்ற குற்ற உணர்ச்சியில் இருக்க………….
யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்…………
Comments