அத்தியாயம் 53:
கீர்த்தனா ப்ரதாப்பையே பார்த்தபடி நின்றிருந்தாள்.... அந்த பொட்ட்டிக் ஷாப்பில் இருந்து வெளியெறியவனை சினேகமாய் பார்த்தபடியே போனை அழுத்த தொடங்கினாள்........அவன் கீர்த்தனாவை எல்லாம் கவனிக்கவே இல்லை…… கீர்த்திதான் பார்த்துக் கொண்டிருந்தாள்……..ஆனால்..... அவன் முகம் திடிரென எதையோ பார்த்து மாற......கீர்த்தியும் அவன் பார்வை போன திசையை நோக்க..... அங்கு ஒரு காதல் ஜோடி நின்று கொண்டிருந்தது....... அவள் தோள் மேல் கை போட்டிருந்தபடி அந்தக் கடையில் நின்று பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தனர்…. இவள் நல்லவன் நினைத்துக் கொண்டிருந்தவன் என்ன செய்தான் என்றால்... ஜோடியாய்…சந்தோசமாய் நின்ற அவர்களைப் பார்த்தவனுக்கு …என்ன ஆனதோ தெரியவில்லை......... அவர்களின் இடது புறமாக இருந்த அந்த கடையின் பலகையின் வைத்திருந்த பொருட்களை எல்லாம் தட்டி விட...அது அந்தப் பெண்ணின் காதலனோ..கணவனோ அவன் மேல் விழ....சட்டென்று நகர்ந்தான் அந்தப் பெண்ணை விட்டு.......பார்த்தால் தெரியாமல் தள்ளி விட்டது போல் தோன்ற…. கீர்த்தனாவுக்கு மட்டும் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததால் அது அவன் வேண்டும்னெறே செய்த செயல் என்று புரிய.......
சற்று முன் அவனைப் பற்றி மனம் நினைத்த நினைவுகளை எல்லாம் வாபஸ் வாங்கியவளாய் விழிகள் அதிர்ச்சியில் நிலைத்திருந்தன.......... அவனிடம் ஏதோ தவறு உள்ளது என்பதை உறுதி செய்தவளுக்கு வேறு என்ன செய்வது என்றே தோன்ற வில்லை...... அவளாக போய் அவனிடம்... அன்று உன் கூட இருந்த பெண் யார் என்றா கேட்க முடியும்.... என்ன செய்வது... என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த பெண்ணின் காயங்கள் நிறைந்த...கண்ணீர் கறை படிந்த முகமுமே மனதில் நிற்க... ஒருவேளை கடவுள் அவளுக்கு கொடுத்த அடுத்த வாய்ப்போ....ஒரு மகளாய்.. அன்று தாயின் பேச்சைக் கேட்கப் போய்....அவர்களை இழந்த நிலை மனதில் வருத்தம் தர....... இன்று தாயாய் அவள் மாறி இருந்த நிலையில்.... இப்போதைய சூழ்னிலையில்.. இது தேவையா என்று யோசிக்க....அவள் மனமோ....கீர்த்தி மறுபடியும் தவறு செய்யாதே....ஒரு முறை நீ செய்த காரணத்தால் உன் தாய் தந்தையை இழந்தாய்... மறுமுறை கிடைத்த வாய்ப்பை விடாதே..... உனக்கு ஒன்றும் ஆகாது… உன் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது… மனம் அடித்துச் சொல்ல....
பாலவை மனம் நினைத்து துணுக்குற்றது...... ஏற்கனவே ஒருமுறை அடிபட்டவன்.... தனக்கு ஏதாவது ஆகி விட்டால்....அவனால் தாங்க முடியுமா… என்று தயங்க.....
அந்த நல்லவனோ காரில் ஏறி கிளம்ப……..
அவ்வளவுதான்..... பாலாவையும் மறந்தாள்… தன் நிலையையும் மறந்தாள்.…….
காலையில் ஆட்டோவில் போகச் சொன்ன பாலாவிடம் பிடிவாதம் பிடித்து….. காரில் கிளம்பியவள்… இப்போது அருகில் நின்ற ஆட்டோவில் ஏறி அவனது காரை தொடரச் சொன்னாள்…….
ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தவளுக்கு………….பலவித எண்ணப் போராட்டங்கள்……… காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள்……. இப்போது செய்து கொண்டிருக்கும் வேலை…..அவனை விட மனதில்லை அவளுக்கு………… அவனது மூலம் மட்டுமாவது தெரிந்து கொள்வோம்…………..அதன் பிறகு பாலாவை வைத்து விசாரனை செய்து கொள்வோம் என்று முடிவு செய்தவள்………. சற்று நிம்மதி ஆகி… கவிக்கு போன் செய்து,…………….. தான் வழியில் ஒரு முக்கியமான.. நீண்ட நாள் தோழியை சந்தித்தாகவும்……அவளுடன் தற்போது போய்க் கொண்டிருப்பதாகவும்……….சிந்துவுக்கு தேவையான பொருட்களை வாங்கிப் போகுமாறு சொன்னவள்…………… முடிந்தால் அவளது பள்ளிக்கே வருவதாக கூறி முடித்தாள்………..
அடுத்து பாலாவுக்கு போன் செய்யப் போனவள்………
அவன் ஏதாவது கண்டுபிடித்து விட்டால்…..தன்னை அனுமதிக்க மாட்டான் என்று ………..பேசாமல் விட்டு விட்டாள்…………….. இவன் இருப்பிடம் மட்டும் பார்த்து வந்து விடுவோம் என்ற நினைவில்…………
அப்போதே இன்னொரு எண்ணமும் வந்தது………அவன் வேறு எங்காவது போனால்……….. என்று யோசித்தவள்…….
கொஞ்சம் அசட்டுத் தைரியமோ…. பாலாவிடம் கண்டிப்பாக திட்டி விழும் என்று தெரியும்……….. பார்த்துக்கலாம்……….. நம்ம கிட்ட பேசாம எத்தனை நாள் இருப்பார்…………. என்று தோன்றும்போதே……….. அவள் அவனிடம் பணம் கிடைத்ததை மறைத்ததை நினைத்து சிரிப்பு வந்தது……………. அப்பா அம்மாவுக்கு இது தெரிந்திருந்தால் எவ்வளவு சந்தோசப் பட்டிருப்பார்கள்…………… தன் தந்தை இந்தப் பிரச்சனையில் மாட்டியிருக்காவிட்டால் தனக்கும்… பாலாவுக்கும் இடையே எந்தவொரு உறவும் ஏற்பட்டிருக்காதோ………….. என்னன்னவோ எண்ணங்கள்… ஆனால் மனம் பாலாவைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது………..
----------
கீர்த்தியின் நல்ல நேரமா… இல்லை கெட்ட நேரமா என்று தெரியவில்லை
அடுத்த அரை மணி நேரத்தில் அண்ணா நகரின் ஒரு வீட்டினுள் கார் நுழைய……….. கீர்த்தனா சற்று பெருமூச்சு விட்டவளாய்.. ஆட்டோவை விட்டு இறங்கியபடி
“அப்பா………..வீட்டுக்குதான் வந்திருக்கிறான்… என்று கண்பார்வையை சுழழ விட்டாள்… அந்த இடத்தின் அடையாளங்களை மனதில் பதிக்க…. ஓரளவு மனதில் பதித்த பின் சரி வீட்டிற்கு கிளம்புவோம்…. பிறகு பாலாவிடம் சொல்லி விசாரிக்க சொல்வோம்…. இதற்கே என்ன பேச்சு பேசுவானோ என்று நினைத்தபடி ஆட்டோவில் ஏற போனவளுக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வருவது போல் இருக்க…….. சட்டென்று நின்று எடுக்க ஆரம்பிக்க………. எதுவுமே வரவில்லை…. ஆனாலும் வயிற்றைப் பிரட்ட……. மயக்கமே வரும் போலிருந்தது,,,,,,,,,,,, ஆட்டோ டிரைவர் கிளம்பலாமா என்று அவசரப் படுத்த…. வேறு வழி இன்றி வேறு ஆட்டோ எடுத்துக் கொள்வோம் என்று அவனை அனுப்பி விட்டாள்………
வயிற்றில் ஒன்றுமில்லை…. போல…..ஆனால் காலையில் நல்லா தானே சாப்பிட்டோம் என்று தோன்ற…… இப்போது தனக்குள் இன்னொரு உயிரும் இருப்பதால் அது இனி பத்தாது போல் என்று மனதில் நினைத்தபடி
அருகில் இருந்த கடையில் இரண்டு பிஸ்கட் பாக்கெட்களை வாங்கியவள்….. இருந்த பசியில் அங்கேயே பிரித்து சாப்பிட ஆரம்பித்தபடி….. அடுத்த ஆட்டோ கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்க…..
பிரதாப் வீட்டிலிருந்து ஒரு பெண் வெளியேறினாள்……………..ஆனால் அவளது கையில் வரும்போது பிரதாப் கையில் இருந்த கவர்கள்…. அந்த கடையின் அடையாளத்துடன் இருக்க……….. அவள் கீர்த்தனாவை கடந்து சென்றாள்………………
கீர்த்தனாவுக்கு பகீறென்று இருந்தது……………… இப்போது இவளைத் தொடர வேண்டுமா…….. அது பெண்களுக்கான பிரத்தியோக ஆடைகள் விற்கும் கடை….. அப்படியென்றால் அந்தப் பெண்ணிற்குதானா…………… தங்கை என்றுதானே சொன்னான்………. மனம் குழம்பியது………. பேசாமல் இன்று வீட்டிலேயே இருந்திருக்கலாமோ……………… ஆனாலும் அன்று போல் விட்டுப் போக மனம் வரவில்லை……..
தன்னையுமறியாமல்…………..அந்தப் பெண்ணின் பின்னாலே போக ஆரம்பித்தாள் கீர்த்தனா…….
இரண்டு தெரு தள்ளி………….. ஒரு இஸ்திரி போடும் கடையில் அந்தப் பைகளை வைத்தவள்… அந்தக் கடைக்காரனிடம் ஏதோ சொல்லியபடி கிளம்பி விட்டாள்………..
கீர்த்தனா இதைக் கவனித்தாள்தான்……..இப்போது அவளைத் தொடர்வதா………..இல்லை இங்கேயே நிற்பதா……..
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே………………. அவளை மிகவும் குழப்பாமல்…. ஒரு நடுத்தர வயது பெண் வந்து அந்தப் பைகளை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் பேசியபடி அங்கிருந்து கிளம்ப……….
இந்தப் பை இன்னும் எத்தனை கை மாறப் போகிறதோ…. என்று நினைத்தவள்…. இரண்டாவது பாக்கெட்டில் பாதி சாப்பிட்டபடி….. மீதியை கைப்பையில் வைத்து அவளையும் பின் தொடர்ந்தாள்….. இம்முறை பை தன் பயணத்தை நிறுத்தி விட்டது…. அந்த தெருவே மிகவும் நிசப்தமாய் இருக்க………
அந்த நிமிடம் வரை கீர்த்தனா ஆபத்தின் கையில் மாட்ட வில்லை…………
அதன்பிறகு………… அவள் எடுத்த முடிவுதான் அவளை ஆபத்தில் தள்ளியது……….
கீர்த்தனா சிறிது நேரம் பார்த்தவள் ……….. அந்த வீட்டில் நுழைந்தாள்…………கதவைத் தட்ட ஆரம்பித்தாள்……….கொஞ்சம் தாமதமாகத்தான் அந்த பெண்மணி திறந்தாள்………. திறந்தவள்….. வெளியே வந்து பேச ஆரம்பித்தாள்……
கீர்த்தனாவின் பார்வையோ அந்த வீட்டினுள் இருக்க…… அந்தப் பெண்மணி அதட்ட ஆரம்பித்தாள்…
“என்னமா வேணும்… ”
கீர்த்தனாவுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் விழித்தாள்………
”இல்ல………. நான் கவர்ன்மெண்ட் எம்ப்ளாயி………… மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒவ்வொரு வீட்லயும் போய் கணக்கெடுத்துட்டு இருக்கோம்……” என்று வாய்க்கு வந்ததைக் கூற……….
அவள் கூறிய விதமே நம்ப முடியாமல் இருக்க……..அந்தப் பெண்மணி………….. வீட்டு வேலைக்காரிமா நான்…….நான் மட்டும் தான் இருக்கேன்…. வீட்டு ஆளுங்க இல்ல… போய்ட்டு நாளைக்கு வாங்க….. என்றபடி அவளது பதிலை எதிர்பாராமல்… கதவையும் அடைத்து விட்டாள்…….
அவளது படபடப்பான பதிலில்……..
கண்டிப்பா தவறு இருக்கு……… என்று நிச்சயமாய் உறுதி செய்தவள்…………. இவள் மட்டும்தான் இருக்கிறாள் என்றால் இவளைச் சமாளிப்பது பெரிய விசயமாய் இருக்காது என்றே நினைத்தாள்………….
கீர்த்தனா போன ஜென்மத்தில் போலிசாய் பிறந்திருப்பாள் போல……….. இல்லை துப்பறியும் பணியில் இருந்திருப்பாள் போல…. வேக வேகமாக அந்தத் தெருவில் ஏதேனும் சூப்பர் மார்கெட் கடை இருக்கிறதா என்று தேடிபிடித்து……….கத்தி….ஸ்ப்ரே….மிளகாய்த்தூள்… என்று தன் தற்காப்புக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்தவள்…………காவல் துறைக்கு இல்லை பாலாவிடம் சொல்லி இருக்கலாமோ……….. எதையும் உறுதி செய்யாமல் யாரையும் அழைக்க அவளுக்கு விருப்பமில்லை………. அவர்களை எல்லாம் தொந்தரவு செய்ய விரும்பவில்லை……… ஆபத்தின் ஆழத்தை அவள் அலட்சியப் படுத்தினாள் என்றே சொல்ல வேண்டும்……. தன் உயிர் தன்னைக் காட்டிலும் தன் கணவனுக்கு முக்கியம் என்பதை மறந்தவளாய்….. மீண்டும் வீட்டின் அருகே வந்தாள்…….. வந்தவள்… ஒரு நிமிடம் தயங்கி……. அந்த வீட்டின் தெரு…..எண் உட்பட அனைத்தையும் டைப் செய்தவள்….. அதை பாலாவுக்கு அனுப்பினாள்………. அவன் போன் பண்ணி ஏதாவது தடுத்து விடுவான் என்று எண்ணியவள்…. அனுப்பிய அடுத்த நொடியே தனது மொபைலையும் அனைத்து விட்டாள்………. ஆனால் கணவனுக்கு தன் இருக்கும் இடத்தை சொல்லி விட்டோம் என்ற திருப்தியில் கதவைத் தட்ட ஆரம்பித்தாள்
----------------------
முக்கியமான காலில் இருந்தவன்………. கீர்த்தனாவிடமிருந்து மீண்டும் குறுஞ்செய்தி வர…….. ஒரு துள்ளளோடு எடுத்து படிக்க ஆரம்பிக்க……..அது ஏதோ ஒரு முகவரி போல் இருக்க…………. வேற யாருக்கும் அனுப்ப வேண்டிய செய்தியை எனக்கு அனுபிட்டாளா….. கீது வுக்கு செண்டெர் லிஸ்ட் ல கைய வச்சாலே என் பேருதான் வருதா என்றபடி அதை அப்படியே விட்டு விட்டு தன் காலைத் தொடர்ந்தான்…….. ஒரு நிமிடம்தான்…… கீர்த்தனா அனுப்பி இருந்த மெஸேசில் இருந்த ஸ்பெல் மிஸ்டேக்ஸ்(வார்த்தைப் பிழைகள்) அவன் கருத்தில் உலா வர….. அவனுக்கு சரியாய் படவில்லை…. காலைக் கட் செய்தவன் கீர்த்தனவுக்கு போன் செய்ய அது அணைக்கப்பட்டிருந்தது………….
கவியும் அவளுடன்தானே இருக்கிறாள் என்று கவிக்கு போன் செய்ய
அவளோ கீர்த்தனா…….. யாரோ ஒரு தோழியைப் பார்த்ததாகக் கூறி அப்போதே அவளுடன் சென்று விட்டதாக கூறியவள் தான் மட்டுமே சிந்துவோடு….. சிந்துவின் பள்ளியில் இருப்பதாக கூற,,,,,,,,
பாலா மனம் சற்று கலவரமானது…….
போனை வைத்தவன்……… ஒருவேளை அவள் போன அந்த தோழியின் வீட்டு முகவரியாக இருக்குமோ என்று சந்தேகித்தவன்………. மீண்டும் கீர்த்தனாவுக்கு போன் செய்ய அது அணைக்கப் பட்டிருந்த செய்தியைத்தான் சொல்லியது மீண்டும்…..
”என்ன ஆச்சு… இவளுக்கு ஏன் இப்படி பண்றா……. ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிட்டு போனாளா……… அப்படி எந்த ஃப்ரெண்டப் பார்த்தா இவ…… மதிக்கிறதே இல்லை…… .இந்த லட்சணத்துல I love you னு மெஸேஜ் வேற….. மனசு வேற கிடந்து அடிச்சுக்குது….“ என்றபடி காரைக் கிளப்பியிருந்தான் அவளைப் பார்க்க…. அவள் சொன்ன முகவரிக்கே போவதற்கு………… ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பி விட்டான்…. ஆனாலும் அவன் கீர்த்தனா மேல் கொஞ்சம் கோபமாவும் இருந்தான் என்பதே உண்மை……………
----------------
இந்த முறை கீர்த்தனாவுக்கு பயம் எல்லாம் இல்லை…. தைரியமாகக் கதவைத் தட்டினாள்…….
திறந்தவள்…….இவளை எதிர்பார்க்க வில்லை போல……….முறைத்தபடி கதவை மூடப் போக……..
“இங்க பாருங்க…. நீங்க என்கூட ஒத்துழைக்கவில்லை என்றால்……… எங்க வேலைய கெடுக்கறீங்கனு… ரிப்போர்ட் பண்ண வேண்டியிருக்கும்…. அதன்பிறகு போலிஸ் துணையோட வந்துதான் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண வேண்டும்” என்று சொல்ல….
பயந்து விட்டாள் அந்த பெண்மணி…….
”இருங்க…. நான் போன் பண்றேன்…. அவர் கிட்டயே பேசுங்க” என்று தடுமாற ஆரம்பிக்க………
போன் செய்து காரியத்தையே கெடுத்து விடுவாள் போல… என்று நினைத்த கீர்த்தனா…..
அவளின் தடுமாற்றத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டாள்
அவளைத் தள்ளியபடி உள்ளே நுழைந்தவள்….
அவள் கையில் இருந்த போனை பறித்து விட்டாள்………
“ஏய் என்ன பண்ற… நீ யாரு………..” என்று கேட்க……
“நான் யாருன்றது இருக்கட்டும்………. இந்த பேக் எல்லாம் எங்க போகப் போகுது……..அது எனக்குத் தெரியனும்……. இப்போ உண்மைய சொல்லல…… போலிஸ் இன்னும் அரை மணி நேரத்துல வந்துரும்…………”. என மிரட்ட ஆரம்பித்தாள்……….
”என்ன மிரட்டறியா…. ஏற்கனவே ஒருத்தி இங்க படாத பட்டுட்டு இருக்கா………. நீ வேற அவன் கிட்ட மாட்டிக்காத………… உன் நன்மைக்குதான் சொல்றேன்…….. போலிஸ் அரை மணி நேரத்துலதான் வரும்…………அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவான்………………… சென்னை வந்ததில் இருந்து அவள் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அவனால் செக் செய்யப்படுகிறாள்” என்பதால் அவளும் விடாமல் பேச
அவள் பேசியதில் தனக்கு கிடைத்த தகவலில் கீர்த்தனா அதிர்ந்தாள்………..அப்போ அந்தப் பெண் தான் இன்னும் இருக்காளா……. இல்லை இது வேற பொண்ணா……….
”ஒழுங்கா சொல்லு……அந்தப் பொண்ணு எங்க…… “
அந்தப் பெண்ணும் விடாமல் பேசி நேரத்தை வீணடிக்க…….இவளிடம் பேசி நேரத்தை வீணாக்குவதை விட …. அவளைத் தேடுவோம் என்ற படி……… ஸ்ப்ரேயை எடுத்து அவள் முகத்தில் அடிக்க மயங்கி விழுந்தாள் அவள்……….
கீர்த்தனா…………………. வேகமாக ஒவ்வொரு அறையையும் தேட………. யாரும் இல்லை………….. ஹால் முழுக்க ஒன்றுமே கிடைக்கவில்லை…. அத்தனை சுத்தமாக இருக்க………….. வேக வேகமாக மாடியில் ஏறினாள்……. கீர்த்தனா…………. தன் கைப்பையை கீழேயே மறந்தும் விட்டாள்……….
மாடியில் அவள் அதிகம் தேட வில்லை………. அங்கு இரண்டாவதாய் இருந்த அறையில்………. அவள் நினைத்தது போல் ஒரு பெண் தரையில் கிடந்தாள்…………. அன்று பார்த்ததை விட மோசமாய்……………
கீர்த்தனாவுக்கு இதயம் நின்று விட்டது……………….. அவள் இருந்த கோலத்தில்……
“கடவுளே” என்று துடித்தது இதயம்……..
அந்தப் பெண்ணின் அருகில் சென்றாள்………..
இவளின் அரவம் கேட்டு…. நிமிர்ந்து பார்க்காமலே. அந்த பெண் புலம்பினாள்………. வார்த்தைகள் தெளிவில்லை…. ஆனால்…
“ப்ளீஸ் எனக்கு ஊசி போடாதீங்க……. அந்த ஊசி போடறதுக்கு பதிலா………. விச ஊசி போடுங்க………. நான் போறேன்………………. என்னை சாகடிச்சுடுங்க…..” என்று புலம்ப
கீர்த்தனா அப்படியே நின்று விட்டாள்………………
தெளிவில்லா விட்டாலும் வார்த்தைகள் அவளுக்கு விளங்கின……………….
கண்ணில் இருந்து நீர் வழிந்து விட்டது………….. அவளாக விரும்பி போதை ஏற்றிக் கொள்ள வில்லை…… என்று அவள் மனம் உணர்ந்த போது…………………… மனம் எங்கும் குற்ற உணர்ச்சி அவளை எல்லா புறமும் வந்து அவளை வதைத்தன…
“இங்க பாருங்க… என்னைப் பாருங்க” என்றபடி அவளைத் தாங்க……………..
குரலின் வித்தியாசம் அவளும் உணர்ந்தாள் போல……….
நிமிர்ந்து பார்த்தாள்………
முன்னே நின்றிருந்த கீர்த்தனாவை பார்த்து…………… சாதாரணமாய் பார்த்தாள்……. மீண்டும் தலை சாய்த்து படுத்து விட்டாள்…….
கீர்த்தனா………அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவள்….
“என்… என்னை தெரியலயா……உங்களுக்கு,,,,,,,,,,,,,, ஊட்டியில………” அவள்தான் மது என்று தெரியாமல் கீர்த்தனா….. பதற……….
மதுவுக்கோ……………. அவளுக்கு அடையாளம் எல்லாம் ஞாபகம் இல்லை…… ஆனால் அந்த பெண்ணா…………. இத்தனை நாள் கழித்தா………… என்று மட்டும் தோன்றியது……………
அவள் மனதின் வேகம் உடலில் இல்லை………….
அவளின் கண்கள் உணர்ச்சிகள் அற்ற நிலையில் வெறுமையில் உதடுகள் மட்டும் சுழிந்தன……….
”ப்ளீஸ் எழுந்திருங்க…..நாம இந்த இடத்தை விட்டு போய்டலாம்….. அன்னைக்கே இந்த பாவிக்கு தெரியல……… இல்லேனா…. நான் கண்டிப்பா எதுனாலும் பண்ணியிருப்பேன்……………… எனக்கு அப்போ ஒண்ணும் புரியல……. என்னை மன்னிச்சுடுங்க…………..” என்று கைகளை கூப்பியபடி கதறினாள்…..
அவளிடம் பேசும் நிலையில் மது இல்லை…………….அதனால்…. அவள் கைகளை மட்டும் பிடித்து விடுவித்தாள்……….
தன் நிலைமை இப்படித்தான் என்று எழுதப்பட்டிருக்க…… அவள் என்ன பண்ணுவாள்……
மதுவின் நிலைமையை உணர்ந்தவள்…… .அவளை தன் முயற்சி கொண்டு தூக்க ஆரம்பிக்க… கீர்த்தனாவால் முடிய வில்லை……… அவளுக்கும் மயக்கம் வருவது போல் இருந்தது……..
”என்னால முடியலம்மா…… நீ போ………. இங்கிருந்து” என்று தட்டுத் தடுமாறி மது சொல்ல
“ட்ரை பண்ணுங்க………. நாம இந்த வீட்டை விட்டு வெளில போய்ட்டா………. போதும்………….அதுக்கப்புறம் ஒரு பிரச்சனையும் இல்லை………..” என்று நம்பிக்கையூட்டும் விதமாய் பேச………..
“நாம… எங்க… எந்த ஊரில்…. இருக்கோம்” என்று கேட்டாள் அவள்
துடித்துப் போனாள் கீர்த்தி…………. இருக்கும் இடம் கூட உணராதவளாய்……………… இப்படி பண்ணியிருக்கிறானே அந்தப் பாவி….. அவன் நல்லாவே இருக்க மாட்டான்… என்று அவனுக்கு சாபம் விட்டவளாய்
“சென்னை ல………….” என்று சொன்னாள்
மதுவின் கண்கள் கலங்கின………….
சென்னை………. எத்த்னை வருடங்களுக்குப் பிறகு…………..சென்னை……… என்று மனதில் நினைத்தவள்………
“பாலாவுக்கு என் ஞாபகம் இன்னும் இருக்குமா……………… இங்கதான் இன்னும் இருப்பானா……………… நான் தப்பிச்சுருவேனா……. இந்த பாவிக்கிட்ட இருந்து” என்று நினைவுகள் சிறகடிக்க கிளம்பின……..
சிறகடிக்க ஆரம்பித்த மனதை அடக்கியவளாய்……….கீர்த்தனாவால் அவளைத் தாங்க முடியவில்லை என்பதை உணர்ந்து…………….தன்னை சமன்படுத்த முயன்றாள்…….. முடியவில்லை………. இருந்தாலும்…… ஓரளவு அவளை நிலைப்படுத்தி கீர்த்தனாவோடு சேர்ந்து வர முயன்றாள்………………..
மாடிப்படி வரை வந்து விட்டனர் இருவரும்…………………… அவளைப் பற்றியபடியே மதுவும் வந்தாள்……….அங்கு வந்த இருவரும் அப்படியே அரண்டு நின்றனர்,……..
கீழே அங்கு இருந்த நாற்காலியில் பிரதாப் அமர்ந்திருந்தான்……….
“கீர்த்தனாவுக்கு தான் செய்த முட்டாள் தனம் அப்போதுதான் உணர்ந்தாள்………………கதவை உள்பக்கம் மூடாமலே மாடி ஏறியது எத்தனை பெரிய முட்டாள் தனம்……………. மதுவுக்கோ…………………….ஐயோ இவளும் இவனிடம் மாட்டி விட்டாளே என்று பதறியது…………
”இறங்கி வாங்க ரெண்டு பேரும்………… என்றவன் மதுவைப் பார்த்து
”என்னடி தப்பிச்சு போகப் போறோம்னு சந்தோசப் பட்டியா………உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்………….” என்றவன்
கீர்த்தனாவினைப் பார்த்து…
“காலையிலதானே காப்பாற்றினேன்……….. யாருடி நீ……………………. ஊட்டில பார்த்த ஞாபகம் இன்னும் உனக்கு இருக்கா,….அது தப்பாச்சே…………… ”
கீர்த்தனா……..கண்கள் விரிந்தன பயத்தில்………………எச்சிலைக் கூட முழுங்க முடிய வில்லை……….. தான் மாடி ஏறிய போதே வந்து விட்டான் போல…..மதுவிடம் பேசியதை எல்லாம் கேட்டிருக்கிறான் என்று நினைத்தாள்………..
மனதில் பயம் இருந்தாலும்………மதுவோடு எப்படியோ இறங்கி விட்டாள்……….
அந்தப் பெண்மணியும் ஓரளவு மயக்கம் தெளிந்திருந்தாள்……….. தெளிய வைக்கப் பட்டிருந்தாள்…..
கீர்த்தனா மாடிப் படியின் கடைசி படியில் இறங்கும் போதே ப்ரதாப் அவளருகில் வந்து மதுவை அவளிடமிருந்து பிரித்து….கீழே தள்ளிவிட
”ஏய்…… நீ பண்றது தப்பு………… யாரு இந்தப் பொண்ணு… அண்ணானு சொன்ன அன்னைக்கு………. அவள விட்டுடு………….” என்று கொஞ்சம் கடுமையாக பேச…………..”
சிரித்தான்………அவன்
“என்னது அவள விடவா………… முதல்ல நீ இங்க இருந்து எப்படி போக போறேனு யோசிடி”
என்றபடி அவள் அருகில் வர சட்டென்று நகர்ந்தாள் கீர்த்தி……………
இப்போது மது………அவன் காலைப் பிடித்து கெஞ்சினாள்……………….. அவளை விட்டு விடச் சொல்லி……….
அவளை லட்சியம் செய்யாதவனாய்…………. கோப முகத்தோடு கீர்த்தனா அருகில் நெருங்க…….
இப்போது கீர்த்தனா
“டேய்,,,,,,,,,,,,,பக்கத்துல வராத……………. என் மேல சின்ன கீறல் விழுந்தா கூட…… என் புருசன் உன்னை கூறாக்கிருவாறு,…………….” என்று ப்ரதாப்பிடம் எதைச் சொல்லக் கூடாதோ அதைச் சொல்லி மிகப் பெரிய தவறைச் செய்தாள்
மது அவளின் வார்த்தைகளை கேட்டு…………
“ஐயோ……………. இவன் கிட்ட போய் இந்த வார்த்தையை சொல்லிட்டாளே………” என்று கைகளை தரையில் அடித்து அழுதாள்………
“இதே இதே போல்தான் தான் சொல்லி………இன்று இந்த நிலைமையில் இருக்கிறோம்………..” என்று மனம் குமைந்தாள்……….
“என் பாலா வைப்பாண்டா ஆப்பு…………. “ என்று சொல்லிய வார்த்தை தான் அவளின் இன்றைய இத்தகைய நிலைக்கு காரணம்…………. இவனிடம் போய் அவள் கணவனைப் பற்றி சொல்கிறாளே என்று தவித்தாள்…………
“ஓஓஓஓஒ உன்னை உன் புருசனுக்கு ரொம்ப பிடிக்குமா………….. சந்தோசமா அவன் கூட வாழுறியா……….. அப்போ நீ கண்டிப்பா உயிரோட இருக்கக் கூடாதே………….. உன் மேல சின்ன கீறல் விழுந்தா கூட அவன் தாங்க மாட்டானா………….. சுற்றும் முற்றும் தேடியவன் திரை மாட்டியிருந்த இரும்புக் கம்பி சுவரோரமாய் சாய்த்தி வைக்கப் பட்டிருக்க………………அப்போ உனக்கு இதுதான் சரி… ஒரே அடி போய்ச் சேர்ந்துடுவ……… உன்னை முடிச்சுட்டு………… இவளையும் அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புறேன்……….. என்றவன்
மதுவின் புறம் திரும்பி…….
“உன்னை அத்தனை சீக்கிரம் சாகடிக்க மாட்டேன்……… உன்ன வச்சுதான் என் காதலிய நான் மடக்கனும்……. அவ எனக்கு கிடைத்த பின்னால்….. உன்னை அனுப்பறேன் இவ கூட” என்ற படி கீர்த்தனாவை நோக்கி வந்தான்………
மதுவால் ஒன்றும் செய்ய முடிய வல்லை….. வேண்டாம்………அவள விட்டுடு என்று சொல்லத்தான் முடிந்தது………………. அது கூட அவளால் முடியவில்லை……
கீர்த்தனாவுக்கோ………….அவன் கையில் இருந்த இரும்புக் கம்பி…………………. நெருங்கி வரும் அவனின் பயங்கரமான முகம்……..மரண பயம் என்ன என்பதை அந்த நொடியில் உணர்த்தியது…….அவள் இதயம் பயங்கரமாக துடிக்க ஆரம்பித்த்து……………கை தானாக வயிற்றினில் கை வைத்தது………அனிச்சையாகவே பின் வாங்கினாள்
அவள் என்ன நிறை மாத கர்ப்பிணியா என்ன…. அவள் உயிர் போனாலும் குழந்தையைக் காப்பாற்ற…….. இருந்தும் தன் வயிற்றினில் மட்டும் அடி விழக் கூடாது என்று……….. அவள் நினைத்தாள்……..மனம் ஒளி வேகத்தில் பலவற்றை நினைக்க ஆரம்பித்தது………….
கணவன்…………. தான் சுமக்கும் தங்கள் இருவரின் உயிர்……. தாய்,,,,,,,,,,தந்தை……………… வினொத்……. கீழெ கிடந்த பெண் என்று எண்ண ஓட்டங்கள் அவள் இதய ஓட்டம் போல் தாறுமாறாக ஓடியது……
கால்கள் தளர்ந்தன…………….இனி அவ்வளவுதானா………….. என்று நொடியில் உணர்ந்தவளுக்கு…………..
நரகத்தில் இருந்தவனுக்கு மீண்டும் சொர்க்கத்தை காட்டி……….. மறுபடியும் நரகத்திலே தள்ளப் போகிறோமோ…………….
அன்று வேண்டினோமே…….இன்று ஒருநாள் மட்டுமாவது கணவனோடு வாழ விடு என்று……….. அது மட்டும்தான் கடவுள் காதில் விழுந்ததா…… அடுத்து தான் வேண்டியதெல்லாம் அவருக்கு விழ வில்லையா……………. மனம் அரற்றியது………….
அவனும் அவளை வெறியோடு நெருங்கி இருந்தான்……………………………….
Commentaires