அத்தியாயம் 51:
கிட்டத்தட்ட ஒருவாரம் முடிந்த நிலையில் பாலாவின் வீட்டில்…………….. வினோத்தின் பெற்றோரும்…. கீர்த்திகாவின் பெற்றோரும் குழுமியிருந்தனர்………. வினோத்-கீர்த்திகா திருமணத்தை முடிவு செய்ய…. பாலா வீட்டினர் இருவருக்கும் மத்தியமாய் இருந்ததால் அவர்கள் வீட்டிலேயே …. கலந்தாலோசிக்க முடிவு செய்தனர் இரு வீட்டினரும்….
கீர்த்தனாவும்… சிந்துவும்….. கிச்சனில் மஞ்சுவுடன் இருக்க மற்ற அனைவரும் ஹாலில் இருந்தனர்…. கீர்த்திக்குதான் இதில் மிகவும் சந்தோசம்…. கால்கள் தரையில் இல்லை…. அந்த வீட்டு மருமகளாய்.. அங்கும் இங்கும் ஓடி… வந்தவர்களை கவனித்துக் கொண்டு…… அவளைக் கையில் பிடிக்க முடிய வில்லை….
ஹாலில் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டபடியேதான்…… கீர்த்தனா தன் வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்….
பாலாவோடு அவள் வாழத் தொடங்கி இன்றோடு ஒரு வாரம் ஆகிறது…….. ஒவ்வொரு நாளும் அவன் அவளிடம் புதிய கோலம்தான் போடுகிறான்….. ஒவ்வொரு விசயத்தையும் அவளுக்காகப் பார்த்து பார்த்து செய்கிறான்……. உனக்காக நான் இருக்கிறேன் என்று ஒவ்வொன்றிலும் நிரூபித்துதான் காட்டுகிறான்………. ஆனாலும்………… அவனது காதலில் இவளால் முற்றிலும் திளைக்க முடியவில்லை…………… ஏனோ முழுவதும் அவன் மேல் நம்பிக்கை வைக்க முடியவில்லை….. காலம் இதையும் மாற்றும் என்ற நம்பிக்கையில்…….. இந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிக் கொண்டாள்…… பழகியும் கொண்டாள்…… அதை சந்தோசமாகவும் ஏற்றுக் கொண்டு……… கணவனைத் தன்னால் முடிந்த அளவு சந்தோசமாகவும் வைத்துக் கொண்டாள்……”
தன் நினைவில் இருந்தவள்…. மீண்டும் அவர்கள் பேசுவதில் கவனம் வைக்க ஆரம்பித்தாள்
ஆளாளுக்கு பேசி கடைசியாக முடிவுக்கு வந்த போது வினோத்தின் தலையில் தான் இடியை இறக்கினர்…….. அதாவது திருமணம் இன்னும் 4 மாதம் கழித்து எனவும்…. 1 ½ மாதம் கழித்து…. கீர்த்திகாவின் கிராமத்தில் நிச்சயம் எனவும் முடிவு செய்ய…. வினோத்துக்கு மழை விட்டும் தூவனம் முடியாத கதையாக போய் விட்டது… இப்போ ஏன் இத்தனை நாள் தள்ளி போடுகிறார்கள் என்று வருத்தமும் கோபமும் வர எதிரே உட்கார்ந்திருந்த கீர்த்திகாவை இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்…
இருவரின் சாதகப் படி 4 மாதம் கழித்துதான் செய்ய வேண்டும் … அப்போதுதான் எல்லாம் நன்றாக அமையும் என்று சொல்லப்பட்டதால்… மீண்டும் கீர்த்திகா வாழ்க்கையில்… எந்த வித ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம் என்றே எல்லோருக்கும் தோன்ற… அனைவரும் அதற்கு உடன்பட்டனர்… பாலா உட்பட…..
நிச்சயம் மட்டும் இரண்டாம் மாத இறுதியில் பண்ணிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ….. அதற்காக இரண்டு நாட்களை முடிவு செய்தனர்……….
அனைவரும் இரண்டாவது முகுர்த்தநாளை முடிவு செய்து ஒகே செய்யப் போக……… கீர்த்தனா மட்டும்…. அதற்கு மறுப்பு தெரிவித்து… முதல் முகூர்த்த நாளையே நிச்சயத்திற்கு பார்க்கலாமே என்று சொல்ல…….
வினோத்…
“என் கீர்த்தி செல்லத்துக்கு என்னைக்குமே என் மேல பாசம் அதிகம்தான்…. அப்படியே கல்யாணத் தேதியையும் கொஞ்சம் முன்னால் வைக்கச் சொல்லுடா” என்று கொஞ்ச
அங்க ஒருத்தி அவன் முன்னால அவனையே பார்த்துட்டு இருக்காள்ள… அவள கொஞ்ச வேண்டியதுதானே……… இன்னும் என்ன இவளையே …..செல்லம்..னொல்லம கொஞ்சிட்டு இருக்கான்….. கீர்த்திகா வீட்ல இருந்து வேற அவ அப்பா இருக்காரு……… லூசு மாறி பேசிட்டு இருக்கானே என்று தலையிலடிக்காத குறையாக இருக்க
கீர்த்தியோ வினோத்துக்கு ஒரு பெரிய பல்பைக் கொடுத்தாள்…
”வினோத் சாரிடா… என்னைத் திட்டாத….ஆனாலும் நீ ரொம்ப நல்லவன்டா…. இன்னும் என் மேல நம்பிக்கை வச்சுருக்கியே… “ என்று கீர்த்தி சிரிக்க……
வினோத் முழித்த படி….
“அப்போ எதுக்கு இப்போ மாத்த சொன்ன….” என்று முறைத்தான்….
“அது..அது..” என்று தயங்க…
பாலாதான்
“என்ன கீர்த்தி… இங்க எல்லாரும் என்ன பேசிட்டு இருக்கோம்… நீ என்ன விளையாடுறியா….. அவன் கூட” என்று அதட்ட
“இல்ல பாலா…. நீங்க எல்லோரும் குறிச்ச நாள்… நம்ம திருமண நாளுக்கு முந்தைய தினம்…… அதுதான் அப்படி சொன்னேன்…… அதற்கும் முன் முகூர்த்தம் 3 நாளைக்கு முன் வருகிறது…… கீர்த்திகா கிராமத்திற்க்கு போய் திரும்புவதற்கு அதுதான் வசதியாக இருக்கும்” என்று சொல்ல
பாலா……. அசடு வழிய……….. கீர்த்தியிடம் பார்வையாலே மன்னிப்பு கேட்டவனாய் இருக்க…. கீர்த்தனா……..பதிலாய் அவனுக்கு பார்வையாலே நெருப்பை உமிழ……. வினோத்தோ
”அதுதானே…சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன…” என்று அப்போது இருந்த கடுப்பிலும் அவளைக் கிண்டலடிக்க…
மோகனா - விஸ்வம்…. கீர்த்திக்கு சப்போர்ட்டுக்கு வந்து விட்டனர்..
“எப்போ பாரு அவ கூட வம்பிழுத்துட்டே இரு…. என் மருமக சொல்லிட்டா நோ அப்பீல்..” என்று கீர்த்தனா சொன்ன தேதியையே முடிவு செய்தனர்..
அவர்களிடம் சிரித்துக் கொண்டிருந்த கீர்த்தனாவுக்கு……. திடிரென்று…. அங்கு ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோருடன் இருப்பதை பார்த்த வுடன்…..கீர்த்திகாவிற்கு கூட அது சித்திதான்… இருந்தும்…. அவளையுமறியாமல்………… தன் தாய்-தந்தை நினைவில் கண் கலங்க ஆரம்பிக்க…. சட்டென்று எழுந்து விட்டாள்……….. அவர்கள் அனைவருக்கும் சிற்றூண்டி எடுத்து வரும் சாக்கில்……
அவள் முகம் மாறியதை யார் கவனித்தார்களோ… இல்லையோ… அவள் கணவன் கண்ணுக்கு அது தப்பவில்லை……..
அனைவரும் பேசிக் கொண்டிருக்க…. அவன் மட்டும் நழுவினான்….
கிச்சனுக்குள் அவன் நுழைந்த உடனே மஞ்சு சிந்துவை.... கூட்டிக் கொண்டு வெளியே வந்து விட்டாள்…
பாலா வந்ததை உணர்ந்த கீர்த்தி… ஈரமாய் இருந்த தன் கண்களை துடைத்த படி….
“என்ன பாலா… என்ன வேண்டும்…” என்று பட படவென்று கேட்டாள்…
பாலா….வெளியில் கண்களை வைத்துக் கொண்டே….
“இங்க வா……” என்று அவளை தன் கைவளைவில் கொண்டு வந்து
”என்னைப் பாரு….. எதுக்கு இப்போ… டேமைத் திறக்கிற..” என்று கேட்க
“அழக் கூடாதுனுதான் பார்க்கிறேன் முடியல…. என்னை ஏன் பாலா விட்டுட்டு போனாங்க அவங்க ரெண்டு பேரும்…………” என்ற போது கண்கள் அவளையுமறியாமல் முத்துக்களை உதிர்க்க ஆரம்பித்தன……
அவள் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவனாய்
“கீது.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்….. நடந்த எதையும் மாத்த முடியாது…. அதை புரிஞ்சுக்கோடா… எல்லோரும் வந்துருக்காங்கள்ல…. என்ன நினைப்பாங்க…. கண்ணைத் தொட….” என்று பல சமாதானம் சொல்லி… அவள் முகம் தெளிய….அதன் பின் தான்… அங்கிருந்து வெளியேறினான்…
பேச்சு வார்த்தையின் முடிவில் வினோத் ஏக கடுப்பில் இருக்க……. கீர்த்திகா…. அவனைப் பரிதாபமாய்ப் பார்க்க……. இருவரின் நிலைமை புரியாமல்….அவர்கள் வீட்டினர்…… அவர்கள் திருமணத் தேதியைக் குறித்தனர்….
வினோத்தும் ஒருவழியாய் மனதைத் தேற்றி சமாதானம் ஆன போது….. பாலா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்..
கீர்த்திகாவின் தந்தையிடம்…
“அங்கிள்…. திருமணம் நடக்கும் வரை… கீர்த்திகா…. ஊரிலேயே இருக்கட்டும்…. இங்கு இருக்க வேண்டாம்….. அதுதான் வினோத்துக்கு… கீர்த்திக்கும் நல்லது…. பிரதாப் இது நாள் வரை ஏன் அமைதியாக இருக்கிறான் என்று தெரியவில்லை… திருந்தி விட்டான் என்றெல்லாம் நினைக்க முடியவில்லை……… மீண்டும் வினோத்தோடு எங்கேயாவது பார்த்து….. ஏதாவது பிரச்சனை என்று நாமே இழுத்து வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்ல…………” அவன் சொல்வதில் உள்ள உண்மை புரிந்து அவர் அதற்கு ஆமோதிக்க…
வினோத்துக்கு பாலாவின் மேல் கடும் எரிச்சல் வந்தது,…. அவனுக்கோ கீர்த்திகாவை தினம் சந்திப்பதையும் தடுத்து விட்டானே என்றே மனம் குமுறிக் கொண்டிருந்தான்…………..
பெரியவர்கள் அனைவரும் கிளம்ப……………
சற்று நேரம் கழித்து வருவதாகக் கூறி… கீர்த்திகாவுடன் அவன் மட்டும் பாலா வீட்டிலேயே தங்கினான்……….
--------------------------------------------------------------------------------------
மொட்டை மாடியில் …..
சலங்கை மாட்டாத குறைதான் வினோத்திர்கு
“உனக்கு எத்தனை நாள் பாலா… என் மேல கோபம்….. சந்தர்ப்பம் கிடைச்சவுடனே பழி வாங்கிட்ட…” என்று அவன் பாலாவிடம் முறைக்க
“லூசு மாதிரி பேசாத வினோத்…. எனக்கு மட்டும் தான் தெரியும் என்னோட அவஸ்தை…. அந்த கிறுக்கன நினைத்து …………. அவன் என்ன செய்வான்… என்ன செய்யப் போறான்னு கூட தெரியாம தவிச்சுட்டு இருக்கேன்………..” என்ற போதே…. பழைய நினைவுகளில் கீர்த்திகா கண் கலங்கி விட்டாள்….
“என்ன அவன் பெரிய இவனா….. இந்த 4 மாசம் ஓகே….. அதுக்கபுறம்…. அவனுக்கு பயந்துட்டு என்னை இவளக் கூட்டிட்டு இந்தியாவை விட்டே போகச் சொல்லப் போறாயா…. பெருசா சொல்ல வந்துட்டான்” என்று தன் கோபத்திலேயே நிற்க…
இரு பெண்களுக்கும் வினோத் சொல்வதும் சரிதான் என்று தோன்ற…
கீர்த்தனா பாலாவிடம்
“வினோத் சொல்வது சரிதானே பாலா…. எத்தனை நாள்தான் இப்படி ஓடி ஒளிவது….. “ என்று கேட்க….
அவள் கேட்ட்துதான் தாமதம்……
”திருமணம் முடியும் வரை வேறு எந்தப் பிரச்சனையிலும் மாட்ட வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.. அதன் பிறகு அவரவர் விருப்பம்…” என்று கல் போன்ற இறுகிய முகத்தோடு கீழே இறங்கிப் போக முயல………
வினோத்தோ……….. அதற்கு மேல் நிற்க
கீர்த்தனாவிற்கு……. யாருக்கு சப்போர்ட் செய்வது என்று புரியாமல் தடுமாறியபடி நிற்க….
கீர்த்திகாதான்..
“நில்லுங்க பாலா……. நீங்க எது சொன்னாலும்… என் மேல இருக்கிற அக்கறைலதான்னு எனக்குத் தெரியும்……… நீங்க சொன்ன படியே……….நான் ஊருக்கு போகிறேன்” என்று பாலாவிடம் கூற…….. வினோத் அவளை முறைத்தபடி நின்றான்………
“தேங்க்ஸ் கீர்த்திகா” என்றபடி பாலா இறங்கிப் போக… கீர்த்தனாவும் அவன் பின்னே சென்று விட்டாள்…….
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்ற வினோத்தின் அருகில் போனாள் கீர்த்திகா..
“வினோ……. என்ன…. இவ்வளவு டென்சன் ஆகுறீங்க…. “ என்று அவன் தோள் சாய….
“கீர்த்தி…. 4 மாசம்… அதுவே எப்படிடா போகும்னு நான் தவிச்சுட்டு இருக்கேன்…. ப்ரதாப்……அமிதாப்புனு கடுப்பை ஏத்துறாங்க எல்லாரும்…அவன் மட்டும் என் கைல மாட்டட்டும்” என்று கடுப்பாய் கூற………..
“ஜஸ்ட் 4 மாசம்… இடையில் நிச்சயதார்த்தம் அப்போ நீங்க அங்க வரப் போறீங்க….” இதுல என்ன கோபம் வினோக்கு…….” என்று கொஞ்சலாய்க் கூற
கொஞ்சம் நிலைமை புரிந்து சமாதானமானான்…….
“ஆமா…… உனக்கு…. என்ன……..சரி 4 மாதம் னு குண்டைத் தூக்கிப் போட்டாங்க….. உன்னப் பார்த்துட்டே… உன்னோட பேசிட்டே ஓட்டலாம்னு பார்த்தா… இந்த பாலா அதுக்கும் வழி இல்லாம பண்ணிட்டான்…” என்றவன் கிண்டலாக
“ஒருவேளை… என் மேல் பய புள்ளைக்கு ரொம்ப நாள் காண்டா இருந்திருக்கும் போல…. கீர்த்தனாவோட பாசமா இருக்கேனு……..அதுதான் தீர்த்துக்கிட்டானோ” என்று கூற
சிரித்து விட்டாள் கீர்த்திகா…
“சிரிக்காத கீர்த்தி…. அவனுக்கு பொறாமை………… அவன் பொண்டாட்டி என்கிட்ட உரிமையா பேசறாள்னு…………. “ என்று கூற
“எனக்கே பொறாமையாத்தான் இருந்த்து…….. ஆனா இப்போ இல்ல….” என்று அவன் முகம் பார்த்துச் சொல்ல
காதலானாய் மாறினான் வினோத்………..
“அப்டியா…….. என் செல்லத்துக்கு என்ன பொறாமை………. அவ அப்பா…. அம்மா…….. இல்லாத பொண்ணு,…. அவளுக்குனு யாருமே இல்ல கீர்த்தி இப்போ……………. நாங்கதான் இல்ல நாம மட்டும் தான் அவளுக்கு இனி பிறந்த வீட்டு பந்தம்……. கண்டிப்பா அவ மேல எனக்கு பாசம் இருக்கும்மா…. அத நீ புரிஞ்சுக்கணும்….. புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்……….” என்றவனிடம்..
“கண்டிப்பா வினோ……….. அவ மேல எனக்கு பொறாமை எல்லாம் கிடையாது…….. உங்க செல்லம் இனிமே எனக்கும் செல்லம் போதுமா” என்று சொல்ல
“அடேங்கப்பா…… அவ்ளோ பெரிய ஆளாகிட்டியா நீ…. உன் மது மட்டும் இதைக் கேட்டா…………. நான் வளர்த்த கீர்த்தி…. இந்த அளவுக்கு வளர்ந்துட்டாளானு பூரிச்சுப் போய்டுவா” என்று விளையாட்டாய்ச் சொல்ல
கீர்த்தி முகம் மாறியவளாய்
“மது திரும்ப வருவாளா வினோ……. என்னைப் பார்த்த அவ எவ்ளோ சந்தோசப் படுவா தெரியுமா…. அதிலும் ஆதி அவளிடம் கேட்டது போல நான் மாறி விட்டேனு தெரிஞ்சா…… ஏன் வினோ அவளுக்கு இப்படி ஆனது………. அவ என்ன பாவம் பண்ணினாள்….. என்னதான் இருந்தாலும் அவ பாலாவை மிஸ் பண்ணிட்டாதானே….” என்று வருந்திக் கூற…
“அவளுக்கு யாரும் விரோதிங்க இருந்தாங்களா… கீர்த்தி … இல்ல பாலாவை லவ் பண்ணியதால்… இந்த நிலையா……. இத்தனை வருசம் அவளைப் பற்றி ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை என்றால்…… எனக்கு ஒண்ணும் புரியலை……….. பாலா எப்படி தவற விட்டான்… இன்னைக்கு எனக்கு மட்டும் புத்திமதி கூற வந்துட்டான்…… அந்த வீட்டில் அவள எப்டி தனியா விட்டான்…..
”தனியானு சொல்ல முடியாது,,,,,,,,,வசந்தி ஆண்ட்டியும் கூட இருந்தாங்க…..” என்று கூற……
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்…. இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தான் இறைவன்,…. அதுதான் நடக்குது போல…..” என்ற படி அவளிம் அருகில் நெருங்கியபடி………..
“மேடம் ஊருக்கு போறீங்க …………… கொஞ்சம் இந்த சின்னப் பையன பார்த்து கவனிச்சுட்டு போனா நல்லா இருக்கும்….. 2 மாதத்துக்கு தாங்குற மாதிரி” என்று ஏக்கப் பார்வை பார்க்க
”சின்னப் பையன்… நீங்க…. ஓ கவனிக்கலாமே” என்று அவனவள் கூற
வினோத் முகமெங்கும் பிரகாசமாக…………
“கீர்த்தி டார்லிங்……. நிஜமாகவே…….” என்று நம்பாமல் கேட்க
”ஆமாம் இப்படித்தான்” என்று அவன் கன்னத்தில் செல்லமாய் இரண்டு அடி போட்டபடி………. அவனிடம் மாட்டாமால் ……….. துள்ளியபடி இறங்கி ஓட…. அவளைத் துரத்தியபடி கீழே இறங்கினான் வினோத்………….
அதன் பிறகு …………. பாலா வீட்டில் இரவு உணவையும் முடித்து அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றனர்…. கூடவே ஆயிரம் பத்திரங்களையும்…. அறிவுரைகளையும் பாலாவிடம் வாங்கிக் கொண்டே……………
அன்று இரவு…….
கீர்த்தனா, பாலாவிடம்…….
“வினோத்த பார்க்கவே பாவமாய் போச்சு பாலா……… நீங்க ஏன் அப்டி சொன்னீங்க…. பாவம் அவன் ரொம்ப ஃபீல் பண்றான்” என்று வினோத்தின் மேல் அக்கறையாக கணவனிடம் கேட்க
”நல்லா பாவம் பார்ப்படி நீ…………. இப்போ என்ன நடந்திருச்சுனு… அவன் பாவமா போய்ட்டான்……. என்னை விடலாம் கம்மிதான்…….. அது எப்படி கீர்த்தி……….. உனக்கு என்னப் பார்த்தா மட்டும் பாவம் வர மாட்டேங்குது………… என்னைத் தவிர மத்த எல்லார்க்காகவும் பரிந்து பேச முன்னால வந்து நிக்கிற……” என்றவனிடம்
”இந்த முகத்தைப் பார்த்தால் காதல் தான் வரணும்……பாவம் எதுக்கு வரணும் பாலா” என்று அப்பாவியாய் அவன் மீசையைப் பிடித்து திருகினாள் கீர்த்தி..
“ஏய்…..வலிக்குதுடி….. என்றவாறே
”அப்டியே காதல் வந்து உடனே சொல்லிட்ட பாரு……” என்று அவளை வம்பிழுக்க
”நான் சொன்னவுடன அப்டியே உருகியிருப்பீங்க பாருங்க” என்று கணவனுக்கு பதிலடி கொடுக்க
“இந்த வாய எல்லாம் இத்தனை நாள் எங்கதான் ஒளிச்சு வச்சுருந்தியோ” என்ற கொஞ்சியவாறே அவன் இடையில் கைபோட…….. அவன் போட்ட விதமே அவனின் அடுத்த கட்ட நடவடிக்கையை கீர்த்தனாவுக்கு தெளிவாக விளக்க
“பாலா…. எனக்குத் தூக்கம் வருது……..” என்றாள் தயக்கமாக..
அவள் தயங்கிய அழகிலேயே மயங்கியவன்……… ஒரு வாரமாய் அவள் ஒழுங்காக உறங்கவில்லை…….அவனும் விடவில்லை…… என்பதால்
“சரி…தூங்கு….. ஆனா இப்டியே” என்றபடி தன்னோடு அணைத்தபடி உறங்கப் போக….
மெதுவாய் நிமிர்ந்து கேட்டாள்….
“கோபமில்லைல………”
சிரித்தான் கணவன்…………
“உன் மேல எனக்கு எதுக்கு கோபம்…….ஒரு வாரம் ஆபிஸ் வராமல் கூட செமையா எனக்காக வேலை பார்க்கிற…. என்னை மாதிரியா…. ஆபிஸ் ஒரு பக்கம் ………. நீ ஒரு பக்கமுனு……. ஆனாலும் எனக்கே தூக்கம் வரல…….. உனக்கு எப்டி…….. பகல்ல தூங்கத்தானே உனக்கு லீவே கொடுத்துருக்கேன்” என்று கண்ணடிக்க
”கவி வேற …… அன்னைக்கு வேற கோபமா போனீங்க ரெண்டு பேரும்… நீ வேற வரல…. என்ன ஆச்சுனு என் மானத்தை வாங்கிட்டு இருக்க…….வினோத் மேரேஜ் அப்படி இப்படினு சொல்லி…….. ஏதோ சமாளிச்சுட்டு இருக்கேன்……… நாளைக்கு என்ன கேள்விலாம் கேக்கப் போறாளோ….அவள சமாளிக்கிறதுதான் எனக்கு பெரிய பாடு” என்று அலுத்தவளை
“நீ இப்டியே பேசிட்டு இருந்த என்ன கன்ட்ரோல் பண்றது கஷ்டம்…. முன்னால் கூட அது கஷ்டம் இல்லை…….இப்போ அது முடியாது……….எப்படி வசதி” என்று சொல்லி முடிக்கும் முன் கீர்த்தனா கண்களை மூடி இருக்க……….
”அடிப்பாவி” என்றவன் அவளைப் பார்த்தபடியே இருக்க……….. ஆசையோடு மனைவியைத் தளுவியிருந்த அவனை…. சில கணங்களில்….. உறக்கம் வந்து ஆசையோடு தளுவ ஆரம்பித்தது……….
Comments