top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே !!! என் உறவே ???- 5

அத்தியாயம் 5:

ஹோட்டல் ஆதித்யாவில் சௌந்தர்யாவிற்காக பாலா காத்துக் கொண்டிருந்தான் பாலா. கிட்டத்தட்ட அரைமணி நேரமாகியும் அவள் வராததால், கொஞ்சம் கடுப்பானவன் மீண்டும் அவளுக்கு கால் செய்தான்.அடுத்த முனையில்

இதோ வந்துட்டேன் பாலா. சிக்னலில் நிற்கிறேன். எனக்காக என்னென்னவோ செய்யப் போகிறீர்கள், ஒரு அரை மணி நேரம் காத்திருக்க மாட்டீர்களாஎன்று கொஞ்சலாகக் கூறியவளின் வார்த்தைகளில், எரிச்சல் அடைந்தவன் அதற்கு மேல் அவளிடம் பேசப் பிடிக்காமல் அழைப்பை கட் செய்தான்.

சுற்றியிருந்தவர்களின் மேல் பார்வையினை சுழல விட்டான். வந்தவர்களில் முக்கால் வாசி பேர் காதலர்கள்.அவர்களைப் பார்த்தவன், மதுவின் நினைவுகளுக்கு தாவினான். இன்று காத்திருப்பது போல் ஒருநாள் கூட அவன் அவளுக்காக காத்திருந்தது கிடையாது. எப்படியாவது அவள்தான் முன்னால் வந்து காத்திருப்பாள். இன்று யாரோ ஒருத்திக்காக காத்திருக்கிற தனது விதியினை நொந்தபடி அமர்ந்திருந்த பாலா , தூரத்தில் சௌந்தர்யா வருவதைப் பார்த்தான். யாரையும் உறுத்தாத ஒரு அலங்காரத்தில், ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்திருந்தாள். கையில் கார் சாவியினை சுழற்றியபடி வந்த சௌந்தர்யாவின் கண்களில் பாலா தென்பட்டதும் அவள் கண்கள் சந்தோசத்தினில் சற்று சுருங்கி, விரிந்தது. அங்கிருந்த படியே அவனைப் பார்த்து கையசத்தவள், பாலாவினை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அவனை நோக்கி வந்தாள்.

பாலா- இன்னும் சில நாட்களில் அவளுடையவன் ஆகப்போகிறவன். அவள் அவனிடம் பேசி இருக்கிறாள். அவனும் அவளிடம் சாதரணமாகத்தான் பேசுவான். இந்த நான்கு வருடங்களாகத்தான் அவன் பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. முதலில் அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது சௌந்தார்யாவிற்கு அப்போது கல்லூரி முதல் ஆண்டு சேர்ந்த சமயம், அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்குப் பொதுவான் குடும்ப நண்பர் ஒருவரின் மகள் திருமணம். அதுதான் அவள் அவனை கலகலப்பாக பார்த்த கடைசி நிகழ்ச்சி.அதன் பிறகு அவனைப் பார்ப்பதே அரிது. அப்படியே வந்தாலும் அமைதியாக இருந்து விட்டு போய் விடுவதே அவனது வழக்காமாக இருந்தது.அப்போது அவள், தொழில் தொடங்கிய காரணமாக அதில் மும்முரமாய் இருக்கிறான் என்று நினைத்திருந்தாள் .

ஆனால் ஒரு மாதத்திற்கு முன்புதான் அவனது காதல் விசயம் அவளுக்கு தெரிய வந்தது. அவள் தந்தை அவனைத் திருமணம் செய்து கொள்ள அவள் சம்மதம் கேட்ட போது அவள் உடனே ஒத்துக் கொண்டாள். பாலா மாதிரி ஒருவன் கிடைக்க அவள் கொடுத்து அல்லவா வைத்திருக்க வேண்டும், ஆனால் மறுநாளே பாலாவின் தந்தை மதுவைப் பற்றி சொன்னபோதும் கூட கொஞ்சமும் தயங்காமல், அவனைத் திருமணம் செயவதால் கிடைக்கும் லாபங்களை மட்டும் கணக்கில் கொண்டு அவனைத் திருமணம் செய்ய தலையசைத்தும் விட்டாள், இனி அவன் மனதில் இருந்து மதுவை நீக்கி அவனின் மனதில் தன் நினைவுகளை பதிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தவளிக்கு அவன் அவளைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று கூறிய போது துள்ளிக் குதிக்காத குறைதான்.

அவளது தந்தை நாதனிடம் , சந்தோசமாக விசயத்தினை கூறியவள், தன் தந்தையின் முகம் சுருங்கி விட்டதை கவனித்தாள்.” என்னஎன்று விசாரித்த போது , “அநேகமாக அவளை மணக்க சம்மதமில்லை என்று சொல்லத்தான் இருக்கும்என்று ந்தேகப்பட்டவரை , ” விடுங்கப்பா எனக்கு இதெல்லாம் பெரிய விசயமே இல்லை என்றபடி இங்கு கிளம்பியும் வந்து விட்டாள்.அவளுக்கு அவள் அழகு மேல் அத்தனை நம்பிக்கை

இதோ பாலாவின் அருகில் வந்து விட்டாள் சௌந்தர்யா. அவனது எதிரில் வந்து அமர்ந்தவள் , வழக்கமான் விசாரிப்புகளுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.அவனோ அவளது கேள்விகளுக்கு அதிக பட்சமாக ஒரு வார்த்தையில் பதி அளித்துக் கொண்டிருந்தான், ஒரு கட்டத்தில் அவளும் அலுத்துப் போய் காபியில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

காபிக் கோப்பையினை மெதுவாக மேசையின் மேல் வைத்து விட்டு, , சற்று செருமியப் படி,

சௌந்தர்யா உன்னை எதற்காக கூப்பிட்டேன் என்று தெரியுமா என்றபடி அவளை கூர்ந்து நோக்கினான், அவளோ,

தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண்ணை எதற்காக ஒருவன் அழைப்பான், இதென்ன பாலா கேள்வி,” என்று கூலாகக் கேட்டாள்.

அவளை பரிதாபமாகக் பார்த்த படி , “சௌந்தர்யா என்னை பற்றி உனக்கு ஏதும் தெரியாது, உன்னை உங்க வீட்டில் ஏமாற்றப் பார்க்கிறார்கள், உனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். நான் உனக்கு சரியானவன் கிடையாது என்று இறுக்காமன குரலில் கூறிக் கொண்டிருந்தவனை,

ஏன்என்ற ஒற்றை வார்த்தையில் நிறுத்தினாள்.

நான் ஏற்கனேவே வேறொரு பெண்ணை விரும்புகிறேன் .இதை உனக்கு மறைத்து எனக்கு திருமணம் செய்து வைக்கப் பார்க்கிறார்கள்என்றான் நிதானமாக ஒரு குழந்தைக்குச் சொல்வதப் போல்

இதெல்லாம் எதிர் பார்த்து வந்தவள்தானே அவள், சற்றும் குரல் பிசிரில்லாமல் எனக்கு தெரியாது என்று நினைத்தது உங்கள் தவறு.” என்ற படி அவனைப் பார்த்து சிரித்தவள், என் அப்பா அம்மா என்னை ஏமாற்றப் பார்கிறார்களா நல்ல வேடிக்கை பாலாஎன்றபடி கொஞ்சம் சத்தமாகச் சிரித்தவளை குழப்பமாகப் பார்த்தான் பாலா.

உனக்குத் தெரியுமா, தெரிந்தும் ஏன் ,உனக்கு என்ன தலையெழுத்தா, மதுவைத் தவிர என் வாழ்க்கையில் வேறு யாருக்கும் கிடையாது , இதை உனக்கு சொல்லி, எப்படி புரிய வைப்பது என்று நினைதிருந்தேன் ,உனக்கே எல்லா விசயங்களும் தெரிந்திருக்கும் போது நான் வந்த வேலை சுலபமாகி விட்டது, என்று கூறிவிட்டு, கொஞ்சம் அமைதியானவனுக்கு அப்போதுதான் தோன்றியது,”என்னைப் பற்றி தெரிந்தும் இவள் ஏன் சம்மதித்தாள்.” மனதில் தோன்றிய சந்தேகத்தினை அவளிடம் கேட்டும் விட்டான்.

அவளோ அவளது இதழின் ஓரத்தில் தேக்கிய புன்னகையுடன், என்னை பாருங்கள் பாலா, என்னுடய அழகு ஒன்று போதும் உங்க மனதில் இருந்து அந்த மதுவினை தூக்க, ஆனால் நான் இதை யெல்லாம் விட என் அன்பைக் காட்டி, என் பக்கம் இழுத்து விடுவேன் , என்ற படி அவனது கைகளைப் பற்றியவள், பாலா, பாஸ்ட் இஸ் பாஸ்ட் , கொஞ்சம் சுற்றிப் பாருங்கள் இங்க இருக்கிறவர்களில் நாம்தான் பொருத்தாமா இருக்கிற ஜோடி, நீங்க என்னை திருமணம் செய்த பிறகு பாருங்க என்னோட அன்பு மழையில் மது என்ன, அந்த இந்திரலோக ரதி வந்தால் கூட திரும்பி பார்க்க மாட்டீர்கள், பாலா ப்ளீஸ், இல்லாத ஒருத்திக்காக உங்க வாழ்க்கையை பாழக்காதீர்கள், பாவம் மாமா மிகவும் வருத்தப் படுகிறார்கள் என்றபடி பிடியினை கொஞ்சம் இறுக்கமாகப் பற்றினாள் சௌந்தர்யா.

கிட்டத்தட்ட ஏற்கனவே கோபத்தின் எல்லைக்கு அருகில் இருந்தான் பாலா, அவளது பேச்சு ,மற்றும் செய்கை அவனுக்கு இன்னும் கோபத்தை கிளப்பி விட, அவனது கோபத்தை பற்றி அவனுக்கே தெரியும். கோபம் வந்தால் அது ஆணோ, பெண்ணோ அவனால் கட்டுப் படுத்த முடியாது. அதனால் வேறு எதுவும் பேசாமல் கிளம்பி விடுவது நல்லது என்று யோசித்தவனுக்கு

எல்லாம் தெரிந்தும் இவள் இவ்வளவு பேசுகிறாள் என்றால் தன் தந்தையின் பங்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்று நினைக்கும் போதே அவனது கோபம் மேலும் மேலும் கூடிக் கொண்டிருந்தது. அவர் அந்த அளவுக்கு பேசியிருந்தால் தான், இந்த பெண் இவ்வளவு தூரம் பேசுகிறாள் என்ற போது சௌந்தர்யாவைக் காட்டிலும் அவனுக்கு அவனது அப்பாவின் மேல்தான் கோபம் வந்தது. இனிமேலும் இங்கு இருப்பதும், இந்த பெண்ணிற்கு புரிய வைப்பதும் ஒன்றுக்கும் உதவாத காரியம் என்று முடிவு செய்தவன் அவளது கைகளை விலக்க முயன்றான் . ஆனால் அவளோ இன்னும் இறுக்கமாக பற்றி அவன் கைகளினை அவளது பிடியிலிருந்து எடுக்க முயற்சிப்பதை பார்த்து கேலியாக சிரித்தாள். இப்போது அவளைப் பார்த்து ஒரு முறைத்த படி, வேகமாககக் கைகளினைப் பறித்தவன் , பணத்தினை பர்சிலிலிருந்து வேகமாக எடுத்து வைத்துவிட்டு , கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

தன் தந்தையினை நினைத்த படி ஆத்திரத்துடன் கார் பாரக்கிங்கை அடைந்தவன் , கார் கீயைத் தேடிய பொழுது காணவில்லை.சற்று யோசித்தவனுக்கு அவன் அமர்ந்திருந்த இடத்தில்தான் விழுந்திருக்கும் என்றபடி மீண்டும் அவன் அமர்ந்திருந்த இடத்தினை நோக்கி வந்தான், நல்ல வேளையாக கார் சாவி அங்கேயேதான் கிடந்தது. எடுத்தவன் அப்போதுதான் எங்கே சௌந்தர்யா என்ற படி கண்களை சுழல விட்டவன் , அவள் எங்கே போனால் நமக்கென்ன என்று தனக்குள்ளே முணுமுணுத்தபடி முன்னே சென்றவனுக்கு அருகில் இருந்த செடியின் அருகினில் சௌந்தர்யாவின் குரல் கேட்டது.

அப்பா அந்த பாலா எதோ நல்லா இருக்கான், பணம் இருக்குனு பார்த்தால் என்னவோ ரொம்பத்தான் உருகுகிறான்.எனக்கென்னவோ ஒண்ணும் பிடிக்கலை, நீங்க வேற ஏதோ அவனை மேரேஜ் பண்ணிக் கொண்டால் அவங்க அப்பாவோட க்ஷேர் கிடைக்கும் . கம்பெனிய நாம் வளைச்சுடலாம்னு சொன்னீங்க, அவன் அப்பாவும் நீங்க சொன்னதுக்கெல்லாம் தலை ஆட்டுராருன்னு சொன்னீங்க.இவன் ஒரு கல்லுளி மங்கனா இருக்கான்ப்பா. என் வாழ்க்கை என்னாகும்என்றபடி அவளது தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கோ அவன் அவளை அலட்சியம் செய்துவிட்ட கோபத்தில் சுற்றும் முற்றும் பாராமல் சத்தமாகவே, அவன் போய்விட்டதாக நினைத்து சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தாள். உண்மையாகச் சொல்லப் போனால் பாலாவுக்கு அவள் மேல் அவ்வளவு கோபம் இல்லைதான்.ஏதோ சின்னப் பெண் உளருகிறாள் , என்றளவே எண்ணியிருந்தான்.

மறு முனையில் அவள் தந்தை என்ன பேசினாரோ, அவனுக்கு தெரியவில்லை

இல்லப்பா நானும் எப்படியும் பாலாவை கன்வின்ஸ் பண்ணலாம்னு பார்த்தால் அவன் எனக்கே அட்வைஸ் பண்ணறான். எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமாம், அவன் அந்த வாழ்க்கையை தர முடியாது என்று என்னை மாற்ற ட்ரை பண்றான். என்றவள் என்னால் முடிந்த வரை அவன் மனதில் என் மேல் அதிகமாய் கோபம் வராமல் பார்த்துக் கொண்டேன். நான் சின்னப் பெண்ணாம், ஏதோ தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறேனாம், கடுப்பா வருதுப்பா,என்ன பண்ணலாம், நமக்கு இவன் சரிப் பட மாட்டான்னு தோணுதுப்பாஎன்றவளை அவளது தந்தையின் குரல் தடுத்து நிறுத்தியது

சௌந்தர்யா கொஞ்சம் கக்ஷ்ட‌ம்தான்மா ஆனால் அவன் ஒரு பொன் முட்டையிடுற வாத்துமா அவனை இப்போ விட்டால் பிடிக்க முடியாது,தானா நம்ம வலையில் மாட்டியிருக்கு , அதனால் நீ ஒண்னும் கவலைப் படாதே பாலா அப்பா நம்ம கையில் இருக்கும் வரையில் நமக்கு ஒண்ணும் கவலை இல்லை. என்று அவளை தன் வழிக்கு மீண்டும் கொண்டு வந்தார்.

சரிப்பா இப்போ நான் என்ன பண்ண வேண்டுமென்று எனக்கே தெரியவில்லை. நான் வீட்டுக்கு வருகிறேன்

என்றபடி போனை வைத்தவளின் முன் , நெற்றிக் கண் இருந்தால் அவளை எரித்தே விட்டிருப்பான், அவனது கண்களில் கோபம் கொலை வெறியையும் கலந்த இருந்தது.முகம் கோபத்தில் இறுகி இருந்தது. புருவங்கள் நெறித்தபடி,

ச்செய் நீ லாம் ஒரு பொண்ணு, அவங்களாம் ஒரு பெரிய மனுசங்க, வெட்கமாயில்ல உங்களுக்கு, ஒருத்தனோட வீழ்ச்சியில் லாபம் பார்க்கிற கூட்டங்கள்,உன்னையும் எங்க அப்பா நம்பினார் பாரு அதற்கு அவருக்கு நல்ல பாடம், என்னை கடவுள் கை விட்டு விட்டார்னுதான் நினைத்துக் கொண்டிருந்தேன், இப்போதான் தெரியுது என்னை முழுதாய் கைவிட வில்லை என்று. இல்லைனா உன்ன மாதிரி குள்ள நரி கூட்டத்தை யெல்லாம் தெரிஞ்சிருக்க முடியுமாஎன்று பற்களை கடித்த படி கோபத்துடன் பார்த்தான்.

அவனது கோபத்தை பார்த்தவளுக்கு உள்ளே நடுக்கமே வந்து விட்டது

அது பாலா என்று எதோ சொல்ல ஆரம்பித்தவளை நிறுத்து உன் கதையை இங்கு யாரும் கேட்க வர வில்லை, ஒழுங்கா போய்விடு, இல்லை நான் இருக்கிற ஆத்திரத்தில் கொலை செய்யக் கூட தயங்க மாட்டேன் ஜாக்கிரதை . ஏன்டி நீயெல்லாம் பணக்காரிதானே பிறகு ஏன் இந்த பணத்தின் மேல இவ்வளவு ஆசைஎன்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல், அவளைப் பார்க்க பிடிக்காமல். விருவிருவென்று அவளைக் கடந்து சென்று விட்டான் .

ஒரு நிமிடம் அவனயே பார்த்துக் கொண்டிருந்தவள் , போனை எடுத்து தன் தந்தைக்கு கால் செய்து, அவர்களின் கனவுக் கோட்டை தூள் தூளாய் போனதை தந்தையிடம் கூறினாள்

ஆனால் அவள் தந்தையோ , அப்படியா சொன்னான் அந்த பாலா, பரவாயில்லை விடு நம்மைத் தவிர அவனுக்கும் வேற வழியே கிடையாது எப்படியும் நம்மைத் தேடித்தான் வருவான் . விட்டுப் பிடிப்போம், பாலா அப்பா தான் பாலாவோட கடிவாளம் அது நம்ம கையில் இருக்கு. நீ ஏன்மா கவலைப் படுகிறாய். எல்லாவற்றிர்க்கும் சம்மதம் என்றுதானே சொல்லி இருக்கிறான் .என்ன…. உன்னை நல்ல பெண் என்று பாலா நினைத்துக் கொண்டிருந்தான். பார்க்கலாம். என்று மகளைத் தேற்றினார்.

தனது நிலையினை எண்ணி நோவதா, இல்லை தனக்காக எதிரில் இருப்பது பள்ளம் என்று தெரிந்தும் மகனுக்கு நல்ல வழி கிடைக்கும் என்றால் விழவும் தயாராய் இருக்கும் தன் தந்தையினை எண்ணி நோவதா என்று நினைத்தவன் இப்போதைக்கு அவளைப் பார்த்ததை தன் தந்தையிடம் சொல்ல வேண்டாம் என்று என்ணியவன் அவளிடம் ஹோட்டெல் என்று பார்க்காமல் கோபத்தைக் காட்டியது தவறோ என்று சற்று வருத்தப் பட்டவன், அவளை அறையாமல் விட்டு வந்தோமே அந்த வகையில் தப்பித்தாள் என்று தனக்குள்ளாகவே தேற்றியவனுக்கு , கடந்த 4 வருடத்தில் காணாமல் போன அந்த நாள் பாலா திரும்பவும் வந்ததுபோல் அவனுக்கே தோன்றியவுடன் , சற்று பெருமூச்சு விட்டபடி அலுவலகத்தை நோக்கி விரைந்தான்.

---------------------------------------

என்னங்க போன் அடிக்குது எங்க இருக்கீங்க என்று கிச்சனில் இருந்து ராகவை அழைத்த போதே ராகவன் ரீசிவரை எடுத்திருந்தார்.

சொல்லுடா என்னடா இந்த டைம் பண்ணி இருக்கிறாய், மோகனா எங்க , வினோத் வீட்லதான் இருக்கானா என்ற போதே மைதிலி கைகளில் போன் மாறி இருந்தது

மைதிலிஎன்ற போது வழக்கமானஅவரது குரலில் இருக்கும் உற்சாகம் அவரிடம் இல்லை.

போனை ஸ்பீக்கரில் வைத்தவள் அமைதியாக என்னண்னா ஏதாவது பிரச்சனையா என்ற படி அண்ணி எங்கே கேட்டாள் ,

மைதிலி நானும் அவரும் உங்க ரெண்டு பேரிடமும் பேச வேண்டும் , கீர்த்தி இல்லைதானே, இங்க வினொத்தும் இல்லை. என்ற மோகனாவின் குரலில் ஏதோ பிசிறு தட்டியது.

ராகவன் இப்போது சீரியசாக என்ன டா என்ன விசயம் சொன்னால்தானே தெரியும் என்ற போதுகுரலை செருமியபடி

ராகவ் என்ன சொல்வது என்றே தெரியவில்லை, உன்னிடம் இத்தனை நாள் சொல்லாமல் இருந்தற்கு சாரிடா என்றபடி இங்க நிலைமை ஒண்ணும் சரி இல்லை. வினோத் கம்பெனி பங்கு சந்தை வீழ்ச்சியில் ரொம்ப அடி வாங்கியிருச்சு. எல்லா மூலதனத்தையும் அதிலதான் போட்டிருந்தொம். கிட்டத்தட்ட மூழ்கப் போன ஆபிஸை அங்க இங்க கடன் வாங்கி காப்பாற்றி வைத்திருக்கோம். இதை உங்க கிட்ட யாரிடமும் சொல்லக் கூடாதுன்னு வினோத் சொல்லியிருக்கான், இது கடந்த மூன்று மாதமாக நடந்து கொண்டிருக்கிற விசயம். இப்போ பரவாயில்லை. அது கூட இன்னும் 6 மாதங்களில் சரி ஆகி விடும்.அதன் பிறகு அங்கு செட்டில் பன்ணி விட்டு இங்கே வந்து விடுவோம். ஆனால் இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை. என்றவர் நிறுத்தினார்

அவர் நிறுத்திய சில வினாடிகளில் ராகவின் இதயம் எவ்வளவு கேசுவலா சொல்கிறான், கடன் , மூழ்கப் போனது என்று. ஒரு வார்த்தை தன்னிடம் சொல்ல வில்லை என்று கோபம்தான் வந்தது.

ஏன்டா இதை என்கிட்ட சொல்ல வில்லை. இவனிடம் சொன்னால் என்ன செய்ய போகிறான் என்று நினைத்து விட்டாயோ என்று கோபத்துடன் கேட்ட ராகவனிடம்

வறட்சியாக சிரித்த படி

நீ செய்ய முடியாது என்பதற்காக இல்லை, அங்கிருந்து நீங்க மூணு பேரும் மனசு கக்ஷ்டப் படக் கூடாது. அதற்காகத்தான்என்றவர் தொடர்ந்து இப்போ கூட உனக்கு இதை சொல்ல வர வில்லை என்றவரிடம்

வேற என்ன விசயம் என்றவரின் குரல் சற்று தளர்ந்திருந்தது. தன் நண்பன் கக்ஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கும் போதெ மனது வலித்தது. ஆனாலும் இப்போது நிலைமை மோசமில்லை எனும் போது கொஞ்சம் நிம்மதி ஆகி இருந்தது.

ராகவ் வினோத் தொழிலில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, அவனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு இங்கே ஒரு ஜோதிடரிடம் போயிருந்தோம். இப்போது தொழிலில் இறக்கம் இருந்தாலும், இன்னும் சில நாட்களில் சரி ஆகி விடும் என்ற போது நாங்களும் சந்தோசப் பட்டோம். அதன் பிறகு அவன் திருமண வாழ்க்கையயும் பார்க்கலாம் என்று பார்த்த பொழுது எங்கள் தலையில் ஒரு பெரிய இடியை இறக்கி விட்டார் அந்த ஜோதிடர் என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்தினார்

அவரது மௌனத்தினை பொறுக்க முடியாமல் என்னண்ணா சொன்னார் என்று அவசர‌ப் படுத்தினாள் மைதிலி,

எனக்கு எப்படி சொல்வது என்றே தெரிய வில்லை மைதிலி, வினோத்திற்கு வரப் போகும் பெண், என்ற போதே அவருக்கு குரல் தளுதளுத்து பேச முடியவில்லை,

அண்ணாஎன்ற மைதிலி குரலில் மீண்டு தன்னைக் கட்டுப் படுத்தியபடி கணவனை இழந்த விதவை என்பது மாதிரி சொன்னார்கள் மைதிலி.அதைக் கேட்ட பிறகு எனக்கு என்ன செயவது என்றே தெரியவில்லை

எதேதோ சொன்னார் ராகவ், எனக்கு ஒன்றும் புரிய வில்லை.கடைசியா இது ஒண்ணுதான் புரிந்தது. எனக்கு ஓன்றுமே ஓட வில்லைஅதனால் தான் உனக்கு உடனடியா கால் பண்னினேன்என்றவரிடம்

ராகவ் மெதுவாக விஸ்வாவிநோத்துக்கு இந்த விசயம் தெரியுமா என்று கேட்டார்.

இல்லை தெரியாது, ஏன் கேட்கிறாய்” –விஸ்வம்

சரி விடு அவன்கிட்ட இப்போ எதுவும் சொல்லாதே , நீயும் மனதை போட்டுக் குழப்பாதே”, என்ற ராகவ்,

இந்த ஜாதகம் மண்ணாங்கட்டியெல்லாம் நம்பாதே, கீர்த்திதான் வினோத்திற்கு இது முடிவான விசயம், அதனால் வேற எதையும் நினைக்காமல் ஒழுங்கா கூடிய சீக்கிரம் இந்தியா வர வேண்டிய வழியைப் பாருங்கள்என்றார்.

ராகவுக்கு ஏனோ விநோத்தின் ஜாதகம் பற்றி சொன்னது அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை. அவர்கள் தற்போது இருக்கும் பணக் கக்ஷ்டமே பெரியதாகத் தெரிந்தது. அவன் அங்கு என்ன கக்ஷ்டப் படுகிறானோ எனும் போதே ராகவனின் மனது நிலைகொள்ளாமல் தவித்தது

ராகவ் நான் சொல்கிற விசயத்தை என்று தப்பாக எடுத்துக்காதே நம்ம குழந்தைங்க லைஃப் இது. அதனால் நீயும் அங்கு யாரவது நல்ல ஜோதிடரிடம் போய் வினோத், கீர்த்தி ஜாதகத்தினை காட்டி கொஞ்சம் விசாரித்துப் பார்என்று மெதுவாகக் கேட்டார் விஸ்வம்.

அதைக் கேட்ட ராகவ் கொஞ்சம் கடுப்பாகவே

ஏன்டா அறிவே இல்லையா உனக்கு….. ஜாதகம் பார்க்க வேண்டாமென்றால் விடுவேன். என்றபடி

இபோது குரலை நக்கலாக மாற்றியபடி

ஒருவேளை இங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் சரி இல்லையென்றால் என்ன பண்ண முடியும், சொல்லு. அதைக் கேட்டு நாங்களும் கீர்த்திக்கு வேறு இடத்தில் பண்ணி வைக்கவா என்று கேட்ட போது

டேய் என்னடா உளருகிறாய், நான் ஏதோ மனது நிம்மதியில்லாம இருப்பதினால் நீ ஏதாவது அங்கு பார்த்து நல்ல விசயமா சொல்வாய் என்று சொன்னால் இப்படி பேசுகிறாய் என்றபடிஇங்க விநோத்திற்கு பதில் சொல்ல என்னால் முடியாதுடாஎன்றபடி கொஞ்சம் இயல்பு நிலைமைக்கு வந்தார்

அப்போது மைதிலி

அப்பா இப்பவாவது கொஞ்சம் தெளிவா ஆனிங்களே என்றபடி , சீக்கிரம் இந்தியா வாங்க இந்த கீர்த்தி வாய் வர வர ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு , தாங்க முடிய வில்லைஎன்று தன் மகளைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

இப்போது மோகனா

என்ன மைதிலி மெதுவா எங்க மருமகளைப் பற்றி எங்களிடமே போட்டுக் கொடுக்கிறாயா. இரு இரு நான் அங்க வந்ததும் ஒண்ணை வச்சுக்கறேன்என்று மைதிலியை வம்புக்கு இழுத்தாள்.

மைதிலியோஅண்ணா பாருங்கண்ணா அண்ணிய என்று உடன்பிறவா அண்ணனிடம் சரண்டர் ஆனாள்.

மைதிலி ஆயிரம் மோகனா இல்ல கீர்த்தி வந்தாலும் நீதான் எனக்கு முக்கியம் என்ன இருந்தாலும் நீ இந்த வீட்டு போண்ணு இல்லையாஎன்றார்

அவர்களின் உரையாடலை சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த ராகவ், அடப் பாவி நான்லாம் உன் லிஸ்ட்லயே இல்லயா , இருந்தாலும் உன் தங்கச்சிக்கு இவ்ளோ இடம் கொடுக்க கூடாது நீ இருக்கேன்ற தைரியத்தில் என்னையும் மதிக்கிறது இல்ல, என் பொண்ணையும் மதிக்கிறது இல்ல. இதுல நீ மட்டும் இங்க வந்துட்ட அவ்ளோதான் இவளை கையில பிடிக்க முடியாது. என்று மைதிலியை கிண்டல் செய்து கொண்டிருந்தார்,

ஆனால் மைதிலிக்கோ விஸ்வம் இங்கேயே திரும்பவும் செட்டில் ஆகப் போகிறான் என்ற சந்தோசமான் செய்தியில் ஜாதக மேட்டர்…. இல்லைராகவின் கிண்டல் எதுவும் அவளை பாதிக்க வில்லை.அதன் பிறகு வழக்கமான கிண்டல், விசாரிப்புகளுடன் போனை வைத்தனர் ராகவனும்,மைதிலியும்.

மைதிலியோ மிகுந்த சந்தோசத்தில் இருந்ததால் பால் பாயாசம் செய்யப் போவதாக கூறி சமயலறையில் நுழைந்தாள். அவளின் உற்சாகத்தை ஆச்சரியமாக நோக்கியபடி அவரும் சமயலறைக்கு சென்றார்.

என்ன மைதிலி ஒரே சந்தோசமாய் இருக்கிறாய் , அப்படி என்ன விஸ்வம் சொன்னான். சொன்னதெல்லாம் வருத்தமான விசயங்கள்நீ என்னடாவென்றால் ஒரே சந்தோசமாக இருக்கிறாயே என்ன விசயம்.எனக்கு புரியவில்லையே என்றவரை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு,

எங்க அண்ணா இங்க வரப் போறாங்களே அதை விட எனக்கு வேற என்ன வேண்டும், அவங்க இங்க வந்துட்டால் கீர்த்தியும் இங்கதானே இருப்பாள். இப்போதான் எனக்கு நிம்மதி. என் பொண்ணை விட்டுட்டு எப்படி இருப்பேனோ என்று இவ்ளோ நாள் உங்க கிட்ட கூட சொல்லாமல் மனசோட வைத்து புளுங்கிக் கொண்டிருந்தேன்.இன்னைக்குதான் கொஞ்சம் நிம்மதியாயிருக்குங்க. அதுதான் இந்த சந்தோசத்திற்கு காரணம் போதுமா, என்ற நெகிழ்சி பாதி, மகிழ்ச்சி பாதியாகச் சொன்னவளை

அடிப் பாவி என் நண்பன் அங்க கக்ஷ்டப் படுறேனு சொன்னானே அது உன் காதுலயே ஏறலயா, விநோத் ஜாதகம் பற்றி சொன்னானே அது கூட உன்னை பாதிக்க வில்லையா, உனக்கு உன் பொண்ணைப் பற்றி மட்டும் தான் கவலையா என்று கேட்டவனை முறைத்தவள்

அண்ணா சொன்ன இரண்டு விசயங்களும் பற்றி எனக்கும் கவலைதான் .ஆனால் யோசித்துப் பாருங்க, இப்போ முதலில் இருந்த அளவுக்கு கக்ஷ்டம் இல்லை என்று விஸ்வம் அண்ணனே சொல்லிட்டார். அது மட்டும் இல்லாமல் எங்க அண்ணன் உங்களை மாதிரி இல்ல . எந்த பிரச்சனையையும் தூசு மாதிரி ஊதிடுவார் என்று சந்தடி சாக்கில் கணவனை சீண்டியள், ராகவனை முறைப்பில் சரி சரி முறைக்காதீங்கஎன்றபடி தொடர்ந்தாள்

இரண்டாவதா அந்த ஜாதக மேட்டர், இதில் கவலைப் படுறதுக்கு ஓண்ணுமே இல்ல. விநோத் யாரை மேரேஜ் பண்ணப் போறான். நம்ம கீர்த்தியை . ஸோ அந்த மேட்டரோட அடிப்படையே தப்பு. இதற்கு நான் வேற சோக கீதம் பாடனுமா, அவரைச் சொல்லிவிட்டு நீங்களே வருத்தப் பட்டால் எப்படி? கீர்த்திக்கு இது எதுவும் தெரிய வேண்டாம். நீங்களும் இயல்பா இருங்க. என்றபடி கீர்த்தியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

கிட்டத் தட்ட 6.30 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தவள், தாயின் முகத்தில் ஏதோ தோன்ற ஒன்றும் கேட்காமல் உடை மாற்றி, ஹாலுக்கு வந்தாள். அவள் வந்த வுடன் ராகவன்என்னம்மா டீம் லீடர் எப்படி போனது இன்றுஅவளின் புது பொறுப்பை கிண்டல் பண்ணியவாறு அவளின் அன்றைய அனுபவத்தை விசாரித்தார்.

ம்ம்ம். ஓகே பா. என்று உற்சாகமாகப் பேசியவளின் கைகளில் பால்பாயச கப்பைத் திணித்தபடி

அப்புறம் உன் ஆபிஸ் புராணத்தை ஒப்பிக்கலாம். இதை குடி முதலில்என்றபடி போன தாயினை வித்தியாசமாகப் பார்த்தவள், தன் தந்தையிடம் மீண்டும் பேச ஆரம்பித்தாள்

அப்பா இன்னைக்கு ஒரு சர்பிரைஸ் பா எனக்கு, என்னோட சீனியர் கார்த்திக்னு பேர். புதுசா வந்திருக்கிற டீமில் அவனும் ஒருத்தன். எனும் போதெ

, நீ காலேஜ் படிக்கும் போது உங்க ப்ரின்ஸ்பாலிடம் மாட்டி விட்டாயே அவனாமாஎன்று தன் மகள் அவரிடம் ஏற்கனவே சொல்லியிருந்த படியால் அவரும் நினைவுக்கு கொண்டு வந்தார்.

ஆமாம்பா அவனேதான் , என்னைப் பார்த்தவுடனே அவனுக்கு முகமே சரி இல்லைஎன்று கீர்த்தி கூறியவுடன்

ஏன்டாஎன்று யோசனையோடு விசாரித்தார்

கார்த்திக் சீனியராய் இருந்தப்ப என்னை எவ்வளவு டார்ச்சர் பண்ணிருப்பான். இங்க என்ன அவனுக்கும் மேல ஒரு போஸ்ட்ல எதிர்பார்க்கலை போல.” என்று பால் பாயத்தை ரசித்து சாப்பிட்டவள்

அவளின் மௌனத்தை கலைத்து அப்புறம் என்னாச்சு நீ என்ன பண்ண, பசி வாங்க நீ பதிலுக்கு ராகிங் பண்ணுனியாஎன்று ஆர்வமாக விசாரித்தார்

சேச்சே அப்படியெல்லாம் பண்ணுவாளா உங்க பொண்னுஇன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்அது மாதிரி நானே போய் கார்த்திக்கிடம் போய் பேசி சமரசம் பண்ணிட்டேன், என்றவள்

எப்படிப்பா இந்த கீர்த்திஎன்று காலரைத் தூக்கி விட்டவள் மைதிலி வருவதைப் பார்த்து மெதுவாக தன் தந்தையிடம்

என்ன உங்க மைதி ஒரே சந்தோசமா இருக்காங்க போல, மாமா கால் பண்ணிணாங்களா அன்னைக்குதானே இவ்வளவு சந்தோசமா இருப்பாங்க, உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நாம ஆபிஸ் போனப்பிறகு மாமா கால் பண்ணி தனியா வேற விசாரிப்பு. இதுவே எனக்கு விநோத் சொல்லித்தான் தெரியும். ம்ம்ம் பிறந்தால் மைதிலி மாதிரி பிறக்க வேண்டும். ஒரு சைடு தங்கச்சி தங்கச்சினு தாங்க அங்கே ஒரு அண்ணன் இங்க மைதி மைதினு தாங்க ஒரு ராகவன். கொடுத்து வச்சவங்கம்மாஎன்றவளைப் பார்த்து மைதிலி

ஆமாமா எனக்கு கூடத்தான் உன்னைப் பார்த்தால் தோணும் , கீர்த்திக்கு கிடைத்த மாதிரி எனக்கு அப்பா கிடைக்க வில்லயே என்று , எல்லாரும் என்னைத் தூக்கி எறிந்து விட்டார்களே என்றவளை

சரி சரி விடுங்க எல்லாருக்கும் எதுனாலும் ஓண்ணுதான் கிடைக்கும் எல்லாமே வேண்டுமென்றால் அது பேராசைஎன்று தாயின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தவள்

பால் பாயாசம் நல்லா இருந்ததும்மாஎன்றபடி தனது அறைக்குச் சென்று கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்தாள்.

அப்போதுதான் அவளுக்கு ஒன்று உறுத்தியது. இந்த வாழ்க்கையே எனக்கு சந்தோசமான வாழ்க்கை, இப்படி ஒரு அம்மா அப்பா கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றால் வரப்போகும் கணவனும், திருமண வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்று யோசித்தவளுக்கு, தன் தாயிடம் சொன்னது ஞாபகம் வந்தது. எல்லாம் கிடைக்க வேண்டுமென்று நினைத்தால் பேராசை என்றால் அப்படி என்றால் எனக்கு திருமண வாழ்க்கை நன்றாக இருக்காதா என்று நினைக்கும் போதே,

கீர்த்தி விநோத்தை தானே நீ மேரேஜ் பண்ணிக்க போகிறாய். விநோத், மாமா,அத்தை இவங்களை சந்தேகப் படலாமா என்றபடி தனது தலையினை குலுக்கியவள் அவளுக்கு எதிரே இருந்த மானிட்டரில் பார்வையினை ஓட்ட ஆரம்பித்தாள்.

1,846 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page