top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே !!! என் உறவே ??? - 49

அத்தியாயம்-49

உட்கார்ந்த நிலையிலேயே உறங்கியிருந்த பாலாவின் மேல் எதுவோ விழ சட்டென்று பாலா விழித்துப் பார்த்தான்……….

அது மைதிலி-ராகவன் புகைப்படத்தில் இருந்த மாலை……… அறுந்து அவர்கள் மேலே விழுந்திருந்தது………

பாலாவுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை……. மூளை சிந்திக்கும் திறனைத்தான் நேற்றே இழந்து விட்டதே…….

ஆனாலும்…. அடுத்த நிமிடமே அவர்கள் ஆசிர்வாதம் கொடுத்தது போல் அது தோன்ற …… மனதுக்குள் தன்னை எண்ணி ஏளனமாக சிரித்தான்……..

“உங்க பொண்ணத்தான் நான் கொன்னுட்டு இருக்கேனே……. எனக்கு இந்த ஆசீர்வாதம் எதுக்கு……. நீங்க உயிரோட மட்டும் இருந்திருந்தா………… உங்க பொண்ணு நிலைமையப் பார்த்திருந்தா…. கடவுளே………..” என்றவனுக்கு……….ஒரே நிலையிலேயே உட்கார்ந்திருந்த நிலை…..இப்போது வலிப்பது போல் தோன்ற……… எழுந்தான்

தன் மேல் சாய்ந்து படுத்திருந்த மனைவியை தூக்கியவனுக்கு…..கைகளின் நேற்றைய காயம் வேறு விண்ணென்று தெறிக்க…….. தன் முகத்தின் அருகில் தெரிந்த மனைவியின் முகத்தில் தெரிந்த அமைதி…… அதன் பின்னெ இருக்கும் எரிமலை உணர்ந்தவனுக்கு…..கைக் காய வலி பின் செல்ல…..மனம் வலிக்க ஆரம்பித்த்து…

சிறு அசைவில் கூட எழுந்துவிடுபவள் கீர்த்தனா….. அது பாலாவுக்கும் தெரியும்…. ஆனால் இன்று……. உறக்கம் சற்று கலைந்த போதும்…. எழாமலே……..அவன் மேலேயே மீண்டும் ஒன்றியவளை….. குழந்தையைப் போல் துஞ்சியவளை …. பார்த்தவனுக்கு……… தன்னை… அவளை மறந்து…… அவளின் நெற்றியில் முத்தம் வைக்க…….

அவளோ விலகாமல் இன்னும் அவனோடு ஒன்றினாள்……….. ’பாலா’…………… என்ற சிணுங்கலோடு”

அவள் மனம் உறக்கத்திலும் தன்னைத் தேடுகிறது……… தன் தொடுதலை புரிந்து அதற்கு சம்மதம் சொல்கிறது…….. இதை உணராமல் இருக்கிறாளே என்று கோபம் வேறு வந்து தொலைத்தது….

நெற்றியில் முத்தமிட்டவனின் மனம் அடங்காமல்……. அவள் கன்னங்களை குறி வைக்க……. அதற்கும் இசைந்து கொடுத்தாள் உறக்கத்தில் அவன் மனைவி…….

அவன் உணர்வுகள் ஆட்டிப் படைக்க ஆரம்பிக்க……. அடுத்து இதழ் என்று அவனையுமறியால்………அவளை நோக்கி குனிந்தான் பாலா………..

ஆனாலும்………… தன் உணர்வில் இல்லாமல் உறக்கத்தில் இருக்கும் மனைவியிடம்……….. அவன் ஆண்மையைக் காட்ட விரும்பாமல்…………… அவளுக்காக காத்திருப்போம் என்று முடிவு செய்தபடி……….

அவளைக் கட்டிலில் கிடத்தியவன்……..அந்த அறையைப் பார்க்க… அங்கிருந்த அலமாரியில் பொருள்கள் களைந்து கிடந்தது…. டைரியை எடுத்தாள் போல என்று நினைத்தான்… எல்லாவற்றையும் சரி செய்து அதை அதை அந்தந்த இடத்தில் வைத்தவனுக்கு தூக்கம் சுத்தமாக தொலைந்திருந்தது………… மணி 5 தான் ஆகி இருந்தது……….

வெளியே வந்தவன்…………. சிறிது நேரம் அமர்ந்திருந்தான்……… உலாவினான்…….. டிவி பார்த்தான்……ஆனால் மனம் எதிலும் அடங்க வில்லை…………. காரை எடுத்துக் கொண்டு வெளியே போகலாம் என்றால் கீர்த்தியை தனியே விட்டு செல்ல மனம் வரவில்லை……. கண்களை சுழல விட்டு……….. பார்வையை ஹாலுக்குள் ஓட்டியபடி இருக்க…….. அவன் தூக்கி எறிந்த டைரியின் மீது பார்வை பட….. அவள் என்ன கணக்குப் போட்டாள்…….என்று தெரியத் துடித்தது… கோபம் வேறு வந்து தொலைக்க…… வலித்த மனதை அடக்கியபடி…… அதைச் சென்று எடுத்தவன்….. அதை பிரித்துப் பார்க்க ஆரம்பித்தான்…….. எந்தப் பக்கமும் எழுதப் படவில்லை…….. மீண்டும் ஒருமுறை வேகமாக முழுமையாக பார்த்தவன்… சும்மா அவனை மிரட்டி இருக்கிறாள்… என்ற உண்மை புரிய…………

“ராட்சசி……………….. வெறும் டைரிய கொண்டு வந்து நீட்டி விட்டு……….. பேங்க் மேனேஜர் பொண்ணாம்……. கணக்கை தப்பா போட மாட்டாங்களாம்…….. அப்பா……….. என்ன மாதிரி பேசுறா……… துடிக்க வச்சுட்டா……… ”.. என்று நினைத்தவனுக்கு

அவள் பேசியது எல்லாம் கொஞ்சம் அதிகப்படி என்று தோன்ற………… தன் அலுவலகத்தில் பணி புரிந்த கீர்த்தனாவாக அவளை நினைத்துப் பார்த்த பாலா……

“அப்படியே சாந்த சொரூபி போல் சீன் போடுவா……… மத்தவங்க முன்னாடி ………..என் பொண்டாட்டி…. தொட்டா சிணுங்கி….” என்று மனதுக்குள் சிரித்தான்……..

அவளின் தற்போதையை நிலை அவனுக்கு கவலையைக் கொடுக்க வில்லை…….. காலம் அவளை மாற்றும் என்று நினைத்தான்… தன் காதல் அவளை மாற்றும்…. அவள் மனம் கண்டிப்பாக மாறும் என்றே தோன்றியது………. உறக்கம் மறந்த நிலையில் அவனுக்கு அவள் இசைந்து கொடுத்தது ஞாபகம் வர அவள் மனமும்…. உடலும்… அவனிடம் மட்டுமே சரணடையும் எந்தச் சூழ்நிலையிலும் என்பதை புரிந்தவனுக்கு இதழில் குறுநகை வந்த்து………

அதே நேரம்……………….. நினைவு வராமல் தடுக்க முடிய வில்லை……… அவனால்…………… தன் தன் மனைவியின் உணர்வுகளை எண்ணி……….. அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவனின் மனது………. ’மது’ என்று அதிர்ந்தது…….. அவளுக்கு ஏதாவது………… நினைக்கும் போதே ……….சத்தியமாய் அப்படி ஏதாவது நடந்திருந்தால் அவள் உயிரோடே இருக்க மாட்டாள் என்று தோன்ற…………. நடந்திருக்காது……. அவள் உயிருடன் இருந்தால்…………அவள் மானத்திற்கும் பங்கம் வந்திருக்காது………….. அதையும் மீறி……..

“நினைக்காதே……….. அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது……………. அவளை வேறு யாராலும் அணுக முடியாது…” என்று மனதிற்குள் கடந்த பல வருடங்களாய் சொல்லிய ஆறுதலை மீண்டும் சொல்லித் தேற்றப் பார்க்க………. வெகு நாட்களுக்குப் பிறகு……. மதுவின் நினைவுகளும் அவனை ஆட்டுவிக்க ஆரம்பித்தன………….. தான் கீர்த்தனாவுடன் பரிபூரணமாக வாழ வேண்டுமென்றால்… மது திரும்பக் கிடைக்க வேண்டும்………என்று மனம் வேண்ட ஆரம்பித்தது….………

தான் எப்படி கீர்த்தனாவின் மேல் இத்தனை காதல் கொண்டேன்…………….. என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது…………….. மதுவின் காதலின் வலிமை அவன் உணர்ந்தவன்…………. அவளையே மறக்கடிக்கும் அளவுக்கு இவளிடம் என்ன உள்ளது…….. யோசித்தவனுக்கு ஒன்றும் கிடைக்க வில்லை………….. மது போல்……… இவள் ஒன்றும் அவனைத் துரத்தி துரத்தி காதலிக்க வில்லை……… காதலைக் கூட மனதுக்குள் வைத்திருந்தாள்….. ஆனாலும் எதுவோ ஒன்று அவர்களை பிணைத்து வைத்திருக்கிறது…….. இருவரும் விலகி எத்தனை தூரம் இருந்தாலும்….. இல்லை….. சென்றாலும்……. பிடித்து இழுத்துச் சேர்க்கும் அது எது என்று யோசித்துக் கொண்டேதான் இருக்கிறான்……………… மூன்று முடிச்சில் அமைந்த திருமண பந்தமா……… பதில்தான் கிடைக்க வில்லை………..

---------------------------

அவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போதே தூக்கம் விழித்தாள் கீர்த்தனா…. விழித்தவள்………… .கணவனை அருகில் காணாமல் எழுந்து வெளியே வந்தாள்…..….

கையில் நேற்று அவள் கொடுத்த டைரியுடன் அவன் இருப்பதை பார்த்த அவள்………..லேசாய் புன்னகைக்க……… அவனோ முறைத்தான்…

அவன் அருகில் வந்து அமர்ந்தவள்…….

அவன் காயம் பட்ட அவன் கையின் நிலையை சரிபார்த்தபடியே………

“டைரிய கொடுத்தப்பவே பிரித்துப் பார்த்திருக்க வேண்டும்……. இல்ல என்னை நாலு அறை விட்டிருக்க வேண்டும்……..அத விட்டுட்டு………..கைல சுட்டுக்கிட்டு… சின்னப் புள்ள மாதிரி…. ” என்றவளை

“நான்…. சின்னப் புள்ள தனமா….. ஆனா நீ பேசுன பேச்சுக்கெல்லாம்…….அப்படியே இழுத்துக்கிட்டு விடனும் போலத்தான் இருந்தது…….” என்று கேட்க

“அப்படியா… அப்போ இப்போ விடுங்க……. ஆனா வலிக்காம……….” என்று கன்னத்தைக் காட்ட

“படுத்துறடி…………. ஆனாலும் ….. I love u டி ….. இப்டிலாம் எங்க இருந்துட பேசக் கத்துக்கிட்ட……. பேசாம வக்கீலா.. போயிருந்துருக்கலாம்………. நீ நடந்துகிட்டதெல்லாம் சத்தியமா உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல என்று கூறியபடி ” என்று கணவனாய் அவளை தன்னொடு சாய்த்தான்

“ஆனா நாம பேசுகிற வார்த்தை எப்படி ஒருத்தவங்கள கொல்லும்னு எனக்கு நல்லா புரிய வச்சுட்ட கீது…………… நான் எத்தனையோ தடவை எத்தனையோ பேர……குதறியிருக்கேன்………….. அதுக்குதான் கடவுளா பார்த்து நல்லா திருப்பிக் கொடுத்துருக்கான்”…. என்றான் மதுவின் நினவில்

தான் நேற்று நடந்து கொண்ட முறை எண்ணி…… தலை குனிந்தாள். அவள்…

“என்னைய ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டாங்க பாலா…….. அம்மா… அப்பா… வினொத்…. அத்தை மாமானு ……. நான் என்ன சொன்னாலும் கேட்டு….. எனக்கு எந்த ஒரு கஷ்டமும் வரக் கூடாதுன்னு பார்த்து பார்த்து செஞ்சு……… எனக்கு கஷ்டம் வரும் போது அதைத் தாங்கிக்க மனப் பக்குவம் வராம பண்ணிட்டாங்க பாலா.. ஒருவேளை அப்படி என்னை பழக்கி இருந்தாங்கன்னா… நான் பணத்துக்காக இந்த வழிய தேர்ந்தெடுத்திருக்காமல் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன் பாலா………. நான் நேற்று பேசியது எவ்வளவு அசிங்கமோ……….. அதே போலத் தான் பணத்துக்காக உங்களைத் திருமணம் செய்ததும்.. கொஞ்சம் யோசித்து இருந்தால் கண்டிப்பா வழி கிடைத்திருக்கும்……… அவசரம்……… அப்பாவைக் காப்பாற்ற வேண்டும்,,, அதுதான்…. அதிலிருந்து மீளுவது எப்படி… .வேறு வழி என்ன என்று நான் யோசிக்கவே இல்லை பாலா……….. வேற யார்க்கிட்டேயாவது மாட்டியிருந்தா…. என்ன பண்ணியிருந்திருப்பேன் லேசுல கோபம் வராது எனக்கு…… இல்ல பிடிவாதம் பிடிக்க மாட்டேன்… வந்தா… இந்த மாதிரி எல்லை மீறிருவேன்… அம்மா கொஞ்சம் கண்டிப்பாங்க… அப்பா சுத்தம்…. அது போறதுக்காக என்ன டைவர்ட் பண்ணத்தான் பார்ப்பாரே தவிர அது தப்புனு சொல்ல மாட்டார்……… வினோத், அத்தை மாமாவ US க்கு கூட்டிட்டு போன பின்னால நான் ஆடுன ஆட்டம் இருக்கே… என் பேச்சை கேக்காம விட்டுட்டு போய்ட்டாங்கனு நான் பண்ணின அலம்பல் இருக்கே…. அதுக்கப்புறமா என் மனச மாத்த டிரிப் ஒண்ணு போட்டு……..அங்க “ என்றவளிடம்

தலை சாய்த்து

“உனக்கு கோபம் வராது……..வந்தா இப்படி ஆகிடுவ…. இதுதானே சொல்ல வருகிறாய் …..உனக்கு அப்படி… ஆனா எனக்கு அடிக்கடி கோபம் வருமே…. என்ன பண்றது……… “ என்று கண் சிமிட்ட

”அடிச்சுடுங்க…………………..” என்றாள் சாதாரணமாக

”உன்னையவா…………… நேத்தே உன்னை பின்னி பெடல எடுத்துருக்கனும்……….. என்னால முடியல கீது……….. எப்டிடி ராட்சசி இப்படி ஆக்குன… மாமா விட்ட வேலையத்தான் நான் பார்த்துட்டு இருக்கேன்.. அதாவது நானும் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்கேன்” என்று கொஞ்சியவனிடம்

அதுவரை இருந்த நிலையை மாற்றுவது போல்…

”பாலா………. என்னைக்கு ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று கேட்க முகம் மாறினான் பாலா… இறுகிய மனதோடு….

கீர்த்தி. ஹாஸ்பிட்டலாம் வேண்டாம்.. நீ மாறிருவ…. அது எனக்கே தெரியுது….. உனக்குப் புரியாதா… இந்த அளவுக்கு நெருங்கி வருகிற உன்னால….முடியும் கீது” என்று சொல்ல….

“ப்ளீஸ் பாலா…. என்னால முடியாதுனு எனக்குத் தோணுது” என்றவள் உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள……..

யாரோ ஒரு மூன்றாம் மனிதரின் வார்த்தையில் மனம் மாறும் என்று நம்புவள்… ஏன் அவன் காதலில் நம்பிக்கை வைக்க வில்லை என்று மனம் வலித்தது,….

“சரி…சரி போகலாம்…. என்று அவளுக்காக சொன்னான்…

ஆனா அதுக்கும் முன்னால இன்னொரு இடத்துக்கு போகலாம்…..”

“எங்க….” என்று கேட்டவளை….

“எங்கேனு சொன்னாத்தான் வருவியா…” என்று முறைக்க

எதுவும் கேட்காமல்…………. தயாராகப் போனாள் கீர்த்தனா…

பாலாவின் மனமோ ஊமையாய் அழுது கொண்டிருந்தது…. மனைவியின் முடிவில் சுத்தமாய் விருப்பம் இல்லை

தன் எண்ண ஓட்டத்திலே இருந்தவனுக்கு அவனது மொபைலில் அழைப்பு வர……. எடுத்தான்………

“ஹலோ” என்று சொல்லும் முன்….

“என்ன பாலா……….. எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்……….. ஒருத்தன் இங்க அடிபட்டு கிடந்தானே… என்ன ஆச்சு… ஏது ஆச்சு… சரி அதை விடு…….. கீர்த்தியப் பத்தி நான் சொன்னேனே….. அதுக்காகவாது.. வந்து என்ன,,,,ஏதுனு பார்க்க வந்தீங்களா... புருசனும் பொண்டாட்டியும்…. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்காக நேற்றிலிருந்து வெயிட்டிங்….” என்ற போதே…

“சாரி சாரி வினொத்,… ஆக்சுவலா…. நானும் கீர்த்தியும்,,,, உன்னைப் பார்க்க வரலாம்னுதான்……… இருந்தோம்….. கீர்த்தி அப்பாகிட்ட வேற பேசலாம்னு இருந்தேன்…. ஆனா…… நேத்து என்னால வர முடியல……………” என்றவனிடம்

“ரொம்ப ஃபீல் பண்ணாத…………. நானே கீர்த்தி அப்பாகிட்ட பேசிட்டேன்………….. எங்க வீட்லயும் சொல்லிட்டேன்………… அது உங்க அப்பா-அம்மா வரைக்கும் தெரியும்” என்ற போது

’ஆ’ என்றி வாய் பிளந்து அமர்ந்திருந்தான் பாலா……

“எப்டி வினோத்…. கீர்த்தி வீட்ல விடு… ஆன்டியும்…..அங்கிளும் கீர்த்தியப் பற்றி எதுவும் கேட்கலயா….” என்று கேட்க

“எனக்கு கூட ஆச்சரியம் தான் பாலா…. அப்பாவும்…அம்மாவும்……… சந்தோசம் தான் பட்டார்கள்……… என்னவோ எதிர்பார்த்திருந்ததைப் போல” என்று கூறியவனுக்கு தெரியவில்லை….அவன் பெற்றோர் தான் ஏற்கனவே ஒரளவு அறிந்தது தானே……….. கொஞ்சம் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தனர்…அவ்வளவுதான்,,,,,,,,,,,,,,,

“வினோத்…. சான்ஸே இல்லை…. எப்படிடா” என்று இன்னும் நம்பாமலே கேட்டான்….

“ஒரு தடவ தான் பாலா விழ முடியும்……. அதுக்கப்புறம் சுதாரிச்சுக்கற வேண்டும்…. இந்த தடவை காலம் எனக்கு கொடுத்த வாய்ப்பை இழக்கக் கூடாதுனு முடிவெடுத்து விட்டேன் …………. முடிவெடுத்த பின்னால …..யாருக்காகவும்… எதற்காகவும் கீர்த்தியை விட்டுக் கொடுக்க்க் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்.. அதுதான்,… உன்னைக் கூட எதிர்பார்க்காமால் நானே பேசி விட்டேன்…………… கீர்த்தி வீட்ல ஒரே சந்தோசம் தான் பாலா………… அவ அப்பாவோட கூட பேசிட்டா பாலா…………. நான் அவள………….. சந்தோசமா வைத்துக் கொள்ள வேண்டும்” என்று சொன்னவனிடம்

“தேங்க்ஸ் வினோத்…. கீர்த்திய நீ இந்த அளவு நேசிக்கிறதுக்கு…. நான் நேற்றே வந்து பார்த்திருக்கனும்… கீர்த்திகிட்ட வேற இன்னும் பேசல…… நேற்று கொஞ்சம்……....” என்று தடுமாறி…. “பிஸி” என்றவனிடம்

”கவி போன் பண்ணினா… எனக்கு….. ” என்றான்…எல்லாம் தெரியும் என்பது போல

லேசான வருத்ததோடு………….. நேத்து ஆபிஸ்ல நடந்தத கவி சொல்லிட்டா…….. ஆனா……. வீட்டுல கீர்த்தி என்ன பேசியிருப்பான்லாம் தெரியாது,,,, ஆனா கண்டிப்பா ஆட்டம் ஆடியிருப்பான்னு மட்டும் எனக்கு தெரியும் பாலா…….. அவ கோபம் வந்தா அவகிட்ட நெருக்கமானவங்க கிட்ட மட்டும் தான் காண்பிப்பா…. அப்படி பார்த்தா………. உன்னை எந்த அளவுக்கு விரும்பி இருப்பாளோ அந்த அளவுக்கு ஆடியிருப்பா…. ஆனா எதை வச்சு மலை இறக்குன பாலா அந்த மாரியாத்தாவ” என்ற அவன் குரலில் உண்மையிலேயே கேலியை விட வருத்தம் தான் இருந்த்து,…

தொடர்ந்தான்

“சாரி பாலா…… உனக்கு இது புதுசுனு நினைக்கிறேன்……………”

“என் கீர்த்திக்காக நீ சாரி கேட்பாயா…. அவ என்னை எவ்வளவு வேணும்னாலும் பேசலாம்… அது அவளோட உரிமை” என்று பாலா கோபத்துடன் ….அதே நேரத்தில் சிறு குழந்தை போல் பேச

சிரித்தான் வினோத்…..

”சரிப்பா உங்க புருசன் பொண்டாட்டி விவகாரத்துல இனி நான் வரல…. எனக்கே இனி நேரம் பத்தாது…”. என்றவன்

“மீண்டும் சாரி… இது அவ நேத்து பேசினதுக்காக இல்லை…………. அவள நாங்க வளர்த்த முறைக்காக……. கண்டிப்பா………. அவ உன்னை குத்திக் கிழிச்சுருப்பா பாலா……….. நான் எத்தனை முறை உனக்கு போன் பண்ணி இருக்கிறேன்…. ஆனா அதை எல்லாம எடுக்கவே இல்லை…எனும் போதே தெரியுது…. நீ எந்த நிலையில் இருந்திருப்பாய் என்ற போது

பாலா……….என்றபடி கீர்த்தி கிளம்பி வெளியே வர………..

உடனே வினோத்..

“பாலா… இப்போ நான்தான் பேசுறேனு சொல்லி…. உடனே …என்கிட்ட பேசாம உன் கிட்ட பேச்சு என்னன்னு குதிப்ப்பா பாரு” என்று சொல்ல…… அவன் சொன்னது போலவே

”யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க….”

”வினோத்” என்றான் அவளையே பார்த்த படி

”வினோத்தா……. அவனுக்கு உங்ககி” என்று ஆரம்பித்தவள்… கணவனின் அடக்கிய சிரிப்பு தெரிய

அவர்கள் இருவரும் தன்னை ஏதோ கேலி செய்கிறார்கள் என்று புரிய

போனைப் பறித்தவள்…

“டேய் …. இவருக்கிட்ட என்ன காலையிலயே…. போய் உன் ஆளுக்கிட்ட போய் பேசு…”

என்றபடி பேச ஆரம்பிக்க அவளிடம் சிரித்த படியே தன் விசயங்களைச் சொல்ல……. கீர்த்தனா மிகவும் சந்தோசமானாள்………… பேசி முடித்து இருவரும் தயாராகி வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்…..

பாலா வெளியில்தான் பேசினான்.. சிரித்துக் கொண்டிருந்தான்….. மனமெங்கும் அவளை கவுன்சிலிங் கூட்டிப் போகாமல் எப்படி தடுப்பது என்ற யோசனை தான் இருந்தது… அங்கு கூட்டிப் போய்த்தான் அவள் தன்னோடு வாழ்வாள் என்றால் அப்படி ஒரு வாழ்க்கை வேண்டவே வேண்டாம் என்றுதான் நினைத்தான்… ஏனோ அது அவனுக்கு பிடிக்க வில்லை….. அது மட்டுமே அவனை ஆட்கொண்டிருக்க தன்னிலை மறந்தவனாய் ஆனான்..

அதன் விளைவு…. அவன் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தன…. கார்க்கீயை வீட்டிலேயே விட்டுவிட்டு இறங்கி வந்து பின் மீண்டும் எடுத்து வந்ததில் இருந்து… இடது பக்க இண்டிகேட்டர் போட்டு… வலது பக்கம் காரைத் திருப்பி திட்டு வாங்கியதில் என்று தன் நிலை மறந்திருந்தான்… கொஞ்சம் தாமதமாகத்தான் கணவனைக் கவனிக்க ஆரம்பித்தாள் கீர்த்தி…. அவளுக்கும் அது ஏனென்று புரிய

பாலா……….ப்ளீஸ் இப்ப்டி முகத்தை வச்சுருக்காதீங்க…. நீங்க இவ்வளவு ஃபீல் பண்ணுவீங்கனு தெரிந்திருந்தால்…… உங்க கிட்ட சொல்லாம நான் தனியாவே போய் இருந்திருக்கலாம்” என்றவளிடம்.

“அம்மா…தாயே…. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு செய்…. நான் வருத்தபடுவேன்…. ஃபீல் பண்ணுவேன்னு சொல்லிட்டு நீயே முடிவு பண்ணிக்கிட்டு எதுவும் செய்து வைக்காதே… துக்கமோ… சந்தோசமோ.. எதுவா இருந்தாலும் என்னிடம் சொல்லிவிடு” என்றவனிடம் தலையை வேகமாக ஆட்டியவள்……….. பின்னொரு நாளில் அவன் சொன்னதை மறந்து ஆபத்தில் மாட்டிக் கொண்டாள்…………. அவன் கோபத்திற்கும் ஆளானாள்……..

அவன் நிறுத்திய இடம்……….பிரபல நகைக் கடையின் முன்……………….. காரை பார்க் செய்ய சற்று சுற்ற வேண்டியிருக்க. அவளை இறக்கி விட்டு அவன் மட்டும் சென்றான்………

கீர்த்தனா அவன் வரவை எதிர்பார்த்துக் கடையின் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தாள்…. அப்போது

“அம்மா…என்னால அவனோட வாழ முடியாது…எனக்கு நரகம் தான் அது” என்று சத்தமாக பேசிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்…

அங்கு நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் அது கேட்கிறது என்ற உணர்வே இல்லாமல் உணர்ச்சி மயமாய் பேசிக் கொண்டிருக்க…. கீர்த்தியின் காதிலும் அது விழுந்தது…

ஏதோ பிரச்சனை போல…. காதலித்து மணந்தவன் போல அவளது கணவன்… அவள் பேசிய விதத்திலேயே கீர்த்திக்கு புரிந்த்து………

“இல்லமா…….அவன் எவ்வளவுதான் எனக்கு பார்த்து பார்த்து செஞ்சாலும் எனக்கு மறக்க முடியல… ஆற மாட்டேங்குது… நான் உங்க கூடவே வந்து விடுகிறேன்…” என்று அந்தப் பெண் இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க…

எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பிரச்சனை… என்று கீர்த்தி நினைத்த படி பாலா கண்ணில் படுகிறானா என்று சாலையை நோக்க……….

திடிரென சாலையில் ஒரே பதற்றம்…….யாருக்கோ விபத்து…… அனைவரும் பதறி ஓட…….. கீர்த்தனாவுக்கும் பதறியது………..

“பாலா வேறு போனாரே………. ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தாரே…. ஆகிஸிட்டெண்டை நினைத்தாலே தலை சுற்றும் அவளுக்கு….. அவள் பெற்றோர் நினைவில்… இருந்தும் பாலாவின் நினைவில் பதற்றமுடன் போக…. அங்கு

சற்று முன் பேசிய பெண்ணின் கணவன் போல்…. தலையில் அடிபட்டிருக்க… கொஞ்சம் பெரிய அடிதான்…ஆனால் உயிர் இருந்த்து…. காப்பாற்றி விடலாம் ..என்று தோன்றியது கீர்த்திக்கு…. அவனைக் கட்டிப் பிடித்து கதறிய அவளைப் பார்த்தவளுக்கு… சற்று முன் அவள் பேசிய விதமும்…. இப்போது அவள் நிலைமையும் தோன்ற வருத்தமாகவும் பதற்றமாகவும் அவளையே பார்த்தபடி நின்றிருந்தாள் கீர்த்தி……

அதன் பின் உடனடியாக காவல்துறை வந்து அடிபட்ட அந்தப் பெண்ணின் கணவனையும்..அவளையும்….. மருத்துவ மனைக்கு அனுப்பியது………. கூட்டத்தையும் கலைத்து விட்டது

எல்லாம் சில நிமிடத்தில் நடந்து முடிக்க………..இப்போது மீண்டும் அனைவரும் தங்கள் இயல்பு நிலைக்கு மீள…. ஆனாலும் ஒவ்வொருவர் மனதிலும் அந்த விபத்தே இருக்க….அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்…

அப்போதுதான் கீர்த்தியின் அருகில் இருந்த பெண்மணி சொன்னார்….. அருகில் இருந்த இன்னொரு பெண்ணிடம்…

“என்ன பேச்சு பேசிகிட்டு இருந்துச்சு அந்தப் பொண்ணு…. அவ்வளவு ஆக்ரோசமா… வாழ மாட்டேன்னு… ஆனா பாரு அவனுக்கு ஆக்சிடெண்ட் ஆன உடனே கதறுது…”

இப்போ இருக்கற பொண்ணுங்க எல்லாம்…. வாழ வழி பல இருந்தும் ………… அத தெரிந்து வாழத் தெரியல……..ஈகோதான்…. எல்லாம் முடிஞ்ச பின்னால வருந்துதுங்க… இப்போ அந்த பையனுக்கு ஏதாவது ஆகி இருந்தா…. வாழ்க்கைய இருக்கும் போது அனுபவிக்காம… அப்புறம் அய்யோ அம்மானு கதறி என்ன பிரயோசனம் என்று அவள் பேசப் பேச..

கீர்த்தியின் மனதில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது… அந்தப் பெண்மணி அவளுக்கு தன் மனதைப் புரிய வைத்த கடவுள் போல் தோன்றினாள்….

தன் பிடிவாதம் எல்லாம் எங்கோ பறந்து போவது போல்…அவளை விட்டு விலகுவது போல் இருந்தது…. மதுவைக் காதலித்த பாலாவே அனைத்தையும் மறந்து அவளோடு வாழக் காத்திருக்கும் போது… எங்கோ இருக்கும் மதுவுக்காக…. பிடித்திருந்தும் வாழ முடியாமல் வீம்பு பிடித்த அவள் மனதில்………

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கையில்…….. இருக்கும் நிமிடத்திலாவது மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று தோன்ற……….. அந்த நிமிடம்… அவள் மனக்கதவு அவள் கணவனுக்காகத் திறந்தது….. அந்தப் பெண்மணியின் ஒவ்வொரு வார்த்தையுமே அவளுக்கு போதுமானதாய் இருக்க.. மனதை மாற்ற அவளுக்கு வேறு எதுவும் தேவைப்பட வில்லை ,அவளுக்கு வேறு எதுவும் இப்பொது தடையாக இருக்க வில்லை……

அப்போதே… அந்த நிமிடமே…. அந்த கணமே….. பாலாவுடன் எந்த நிர்பந்தமுமில்லாமல் வாழ முடிவெடுத்திருந்தாள்……….. கீர்த்தனா

நாளை என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம்….

மது வரலாம்… ஏன் பாலாவே மாறலாம்……. அப்போது கூட பாலாவின் காதலில் நம்பிக்கை வைக்க முடிய வில்லை அவளால் என்பதே உண்மை……. ஆனால் இந்த நிமிடம்… இந்த வாழ்க்கை அவர்களுடையது…. அவனும் அவளை விரும்புகிறான்…. தானும் வாழ வேண்டும்.. அவனையும் வாழ வைக்க வேண்டும்…. நான் அவனை விரும்புகிறேன்… தன் காதல் தன் கணவனை சந்தோசப் படுத்த வேண்டும் என்று நினைத்தவள்……………… அவனோடு முற்றிலும் கலக்க தீர்மானித்தாள்……….. தன் காதலை முழுமையாக்க……..

அவளுக்கு உடனே பாலாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது…. தன் மனது முற்றிலும் உணர ஆரம்பித்தவளுக்கு………..கணவன் கண்ணில் படாமல் ஆட்டம் காட்ட…. உடனே போன் செய்தாள……

அவனும் எடுத்தான்…

“இதோ வந்துட்டேன் கீது,…. ஏதோ ஆக்சிடெண்ட்டாம் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது…நீ உள்ள போ.. செலெக்ட் பண்ணு நான் வந்துட்டே இருக்கேன் “ என்று சொல்ல

“இல்ல நீங்க வாங்க… வெயிட் பண்ணுகிறேன்… என்றபடி அவனுக்காக காத்திருக்க… அவள் கணவனும் காட்சி தந்தான்…………

சாலையின் எதிர்புறமாய் நின்று கொண்டிந்த…… கணவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மனைவி….

அவன் முகம் எதையோ பறி கொடுத்தது போல் இருந்தது……………மதுவினாலும் அவள் கவலை கொண்டிருந்தான் தான்……. ஆனால் அப்படிப்பட்ட ஒரு சோகம் அவனுக்கு பின்னால் உள்ளது என்று யாருக்கும் தெரியாது…. அந்த அளவு அவன் முகம் உணர்ச்சிகளை துடைத்து வைத்திருக்கும்… ஆனால் இப்போது அவன் முகம்.. அதில் பல எண்ண ஓட்டங்கள்…. அவன் எதையோ நினைத்து மருகிக் கொண்டிருக்கிறான் என்று அப்பட்டமாக பார்ப்பவர்களுக்கு உணர்த்துவது போல் தோன்றியது கீர்த்திக்கு…அது தன்னால்தான் என்றும் புரிந்தது ….

தன்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த மனைவியையே பார்த்த படியே பாலா வர……..தான் நிற்கும் இடத்திலிருந்தே… சாலையை பார்த்து வரும் படி எச்சரிக்கை செய்ய… அதைக் கணவனும் நிறைவேற்றி அவளின் அருகே வந்தான்……

கீர்த்தனாவிற்கு உடனே வீட்டுக்கு போக வேண்டும் போல் இருக்க…. வீட்டுக்கு போகலாம் என்று சொன்னால் கணவன் மனம் வருந்துவான் என்று தோன்ற.. அவனோடு கடையினுள் நுழைந்தாள்..

தன் கணவனிடம் தன் மனதைத் திறக்க வேண்டும்…. அவனோடு தன் வாழ்க்கையைத் வேண்டும்…..என்று அவள் மனம் பரவசத்தோடு போராடிக் கொண்டிருக்க….

கணவனோ அதற்கு எதிர்மாறான நிலையில் இருந்தான்…………..மனம் எங்கும் வருத்தமுடன்………… அவளை எப்படி.. அவள் மனதுக்கு புரிய வைப்பது….. தன் காதல் அவளுக்கு புரியவே இல்லையா………… இல்லை தன் மனைவிக்கு தன் காதலை புரியவே வைக்க முடியாதோ என்று

இருவரும் அவரவர் மனநிலையில் இருக்க ஏதோ பெயருக்கு வாங்கி வெளியே வந்திருந்தனர்……. ஆனாலும் கீர்த்தனாவுக்கு…. புத்தருக்கு போதி மரத்தின் அடியில் ஞானம் வந்தது போல்….. தனக்கு அந்த இடம் வாழ்க்கையை புரிய வைத்திருக்கிறது என்று தோன்றியது-------------

இருவரும் அலுவலகம் நோக்கி பயணிக்க

கீர்த்தனாவுக்கு அலுவலகம் செல்லவே பிடிக்க வில்லை…. பாலா அமைதியாக காரை ஓட்டி வர……

கீர்த்தனாதான்… ஆரம்பித்தாள்

“பாலா………என்னை வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு அதன் பிறகு ஆபிஸ் போறீங்களா என்று கேட்க

நேற்றும் அவள் தாமதமாகத்தான் உறங்கினாள்… முந்தின நாள் சுத்தம்… அவளை உணர்ந்தவனாய்… எதுவும் பேசாமல்…. தலையை மட்டும் ஆட்டி விட்டு… வீட்டை நோக்கி செலுத்தினான் காரை…………

மீண்டும்…..மௌனம் அங்கு அமர்ந்து கொள்ள….

கீர்த்தனாவே மீண்டும் மௌனத்தை உடைத்தாள்… பாலாவிடம் பேச வில்லை…. அவளுக்குள் பேசுவது போல்தான் பேசினாள்…ஆனால் சத்தமாக

‘ச்சேய்… எங்க அம்மா…. 4 த் படிக்கும் போதே பாட்டுக் கிளாஸ்க்கு அனுப்புனாங்க… ஒழுங்கா போய் இருந்துருக்கலாம்…இந்த வினொத் கெடுத்துட்டான்….” என்று அலுக்க

பாலா அவளைப் புரியாமல் ஒரு பார்வை பார்க்க

அவன் பார்வை புரிந்தவளாய்….

“அங்கேயும் ஒருநாள் வந்து என்னைக் குறத்தின்னு கூப்பீட்டான்னா… எல்லாருக்கும் தெரிஞ்சு போய்விட்டது… so பாட்டு கிளாஸையே நிறுத்தி விட்டேன்…” என்று பாவம் போல் சொல்ல

”எதற்கெடுத்தாலும் அவன் ஒருத்தன் உனக்கு மாட்டினான்… உண்மையிலேயே உனக்கு அங்க போக பிடித்திருக்காது… தட்டிக் கழிக்க காத்திருந்திருப்பாய்… பாவம் வினோத் மாட்டிக்கிட்டான்” என்று மனைவியின் போகாததின் உண்மையான காரணத்தை சொல்ல

“கண்டுபிடிச்சுட்டீங்களே “ என்று சொன்னவள்…

”இதெல்லாம கரெக்டா கண்டுபிடி…. இப்போ என் முகத்தை பார்த்து ஒண்ணுமே தோணலையாடா உனக்கு…. எனக்கு வேற என்ன பேசறதுனே தெரியலையே…. நீ போடற மாதிரி பாட்டு போடலாம்னா….. எனக்கு அது வராது… அப்படியே வந்தாலும் திடீர்னு எங்க இருந்து போடறது…..அதுக்கும் டைம் இல்லையே…. ச்சேய் என்ன ஒரு அவஸ்தை…” என்று மனதினுள் நினைத்தபடி வர

பாலாவோ வேறு ஒன்று நினைத்தான்…

கீர்த்தி மதுவோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு வருகிறாளோ என்று…. தோன்ற இன்னும் மனம் வலிக்க ஆரம்பித்தது … அப்போது இன்னொன்றும் ஞாபகம் வந்தது… அது…… மதுவே பாடி… அவனுக்கு பல சிடிக்களை கொடுத்திருந்தாள்…. அவன் அவளைக் காதலிக்காத போது………. அவளைக் காதலிக்க ஆரம்பித்த பின் தான் கேட்டான் அவற்றையெல்லாம்… அவள் அவனை விட்டு மறைந்த போது………….அவைதான் அவனுக்கு எல்லாமாக இருந்தது……….அவை எல்லாம் இன்னும் வீட்டில் தான் இருந்தன………… முதலில் அதை எல்லாம் தூக்கிப் போட வேண்டும்… இல்லை.. எங்காவது மறைத்து வைக்க வேண்டும்…. அதை எல்லாம் மறைக்க வேண்டும் என்று எண்ணமில்லை அவனுக்கு… அவை எல்லாம் தன் மனைவியை வருத்தும் என்று கலங்கி அவ்வாறு நினைத்தான்…

இருவரும் அவரவர் உணர்ச்சிகளிலேயே வர மீண்டும் மௌனம் ஆட்சி செய்ய ஆரம்பித்து இருந்தது….

கீர்த்திக்கு மீண்டும் பேசப் பிடிக்காமல்…. எஃப்மை போட……………………. கடவுளுக்கு இருவரின் மேலும் கருணை வந்து விட்டதோ என்னவோ… கீர்த்தியின் மன நிலையை அதில் ஒலித்த பாடல் பிரதிபலித்தது……………

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப்பூங்கொடி கொஞ்சிப்பேசி கொஞ்சிப்பேசி கொஞ்சும் பைங்கிளி வாசப்பூவில் தேனே வண்ண நிலாவே மானே காவல் ஏது கட்டுக்கள் ஏது காட்டாறு பாயும்போது (மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்... நீயில்லாது நித்திரை ஏது பாயில் வாடும் பைங்கிளி நீயிருந்தால் சித்திரைக் கூட வாடைவீசும் மார்கழி நீயில்லாது நித்திரை ஏது பாயில் வாடும் பைங்கிளி நீயிருந்தால் சித்திரைக் கூட வாடைவீசும் மார்கழி மாதம் தேதிப் பார்த்து காதல் பூக்காது நீரை மீனும் சேர ஊரைக் கேட்காது பருவ ராகம் பாட புதிய கோலம் போட ஆதியந்தம் அனைத்தும் சொந்தம் நீங்காது கூடும்போது (மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்... நாலு பேர்கள் கண்படக்கூடும் நீயும் நானும் கூடினால் ராஜயோகம் கைவரும் இன்று தோளில் தொகை ஆடினால் நாலு பேர்கள் கண்படக்கூடும் நீயும் நானும் கூடினால் ராஜயோகம் கைவரும் இன்று தோளில் தொகை ஆடினால் தேவன் எந்தன் ஜீவன் தேவி உன்னோடு மானின் கால்கள் போகும் மாமன் பின்னோடு வாழும் நாட்கள் யாவும் உன்னுடன் வாழவேண்டும் சொந்தம் என்று பந்தங்கள் என்று நீயின்றி யாருமில்லை (மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்...

பாடலின் கடைசி வரியில் கீர்த்தனா அதன் வார்த்தை வீச்சின் வேகம் தாங்காமல் அவன் தோளிலே சாய்ந்து தன்னை அவனுக்கு முழுமையாய்க் கொடுக்க நினைத்ததை தன் பார்வையாலே அவனுக்கு உணர்த்த ……….. பாடலும் ….அது சொல்லிய மனைவியின் நிலையும் கணவன் மனதிற்கு தப்பிதம் இல்லாமல் சரியாகப் புரிய …… அதனால் கீர்த்தனாவின் பார்வை சொன்ன சம்மதமும் புரிய……….. பாலா மொத்தமாய் தன்னை அவளிடம் இழந்தான்……….

….

மனைவியோடு எப்படி தன் அறைக்கு வந்தானோ…..அவனுக்கே தெரிய வில்லை…அப்படி ஒரு நிலையில் இருந்தான் அவன்

“உள்ளே அவளை அழைத்து வந்தவன்…. கதவைத் தாழ் போட்டான்

“கீர்த்தி…. கீது….. நீ நீ” என்று உணர்ச்சி வயமாக ஆரம்பிக்க… அவளோ அவனை விட உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாள்

“ஆமாம் பாலா…. நான் உங்களை காதலிக்கிறேன்…. காதலிப்பேன்…….. காதலித்துக்கொண்டே இருப்பேன்……….. I Love u… I Love my பாலா………. I love my husband” என்று அவனைப் பார்த்தபடியே மூச்சு விடாமல் சொன்னவளின் குரலில் உணர்ச்சி வழிந்தது…

“நான் நேற்றும் சொன்னேன்,,,, ஆனா இப்போ சொல்றது……….. எல்லா விதத்திலும் நான் உங்ககிட்ட என்னை ஒப்படைக்க வேண்டும் பாலா… எல்லா விதத்திலும் தயாரா இருக்கேன் பாலா…….. நாம ரெண்டு பேரும் இனியும் துன்பப் பட வேண்டாம்.. என்றவளைக் கட்டியணைத்தவன்

“தேங்க்ஸ் கீர்த்தி….இது என்னோட வாழத் தயாராகி விட்டாய் என்று சொன்னதற்காக மட்டும் இல்லை…. யாரோ ஒருவரிடம் போய்…. நம் வாழ்க்கையைச் சொல்லி…. அவர் அதற்கு தீர்வு சொல்லி….. அப்படி ஒரு வாழ்க்கையா வாழ வேண்டும் என்று மருகி துடித்துக் கொண்டு இருந்தேன் கீர்த்தி…. என் துடிப்பை.. என் கலக்கத்தை எல்லாம் போக்கிட்டடி……….இப்போதான் நான் சந்தோசமா இருக்கேன் கீர்த்தி…. இல்லேனா… வாழ்நாள் முழுக்க இதுவும் என்னை குத்திக் கொண்டிருக்கும் முள்ளாகி விடும்…. இதுவும் என்று சொன்ன போதே அந்த இன்னொன்று மதுவின் நினைவும் என்று கீர்த்திக்கு தோன்றாமல் இல்லை.. ஆனால் அது அவளை பாதிக்க வில்லை….

அவனோடு சாய்ந்த படியே…. எப்படி…எங்கு… மனம் மாறினாள் என்று சொல்ல…..

‘அப்போ கூட என் காதல்னால இல்ல…. எங்க இவன் செத்து கித்து போய்த் தொலஞ்சுருவானோ…. போனாப் போகுதுனு வாழ ஆரம்பிச்சு இருக்க அப்டித்தானே” என்று சொல்ல

கண்ணில் வலியோடு அவனைப் பார்த்தவள்

“ஹேய்,,,, இப்டினு சொன்னவுடனே ரியாக்சன மாத்துற….. மாத்திடலாம்.. கொஞ்சம்…… நான்வெஜ் கலந்தாத்தான் நீயும் அடங்குவ……. .இன்னும் கொஞ்ச நாள்ல பாரு உனக்கு… என் காதலுக்கு முன்னால தோத்துப் போகப் போற… என்றவன்,,, சற்று நேரம் அவளை அணைத்தபடியே நின்றான்……. அவளுக்கான அவனின் போராட்டமெல்லாம் ஓய்ந்தது போல் தோன்ற மன நிம்மதியுடன் அவளுடன் லயித்திருந்தான்…

பின் சிறிது நேரம் கழித்து அவளை விலக்கி நிமிர்த்தினான்….

“கீர்த்தி………… டைம் ஆகிருச்சு ஆஃபிஸுக்கு போகனும்………என்றவனை நிமிர்ந்து முறைத்தாள்…

“என்ன பாலா…….. ஆஃபிசுக்கா இன்னைக்கா…” என்றவளிடம்’’”

“ஆமாம்மா…. ரெண்டு நாளா ஒண்ணுமே பார்க்கலை…. முடிச்சுட்டு வந்துடறேன்… என்றவனிடம் அவனை விட மாட்டாதவள் போல் மீண்டும் ஒன்றினாள்

”போகலைனா… கால் பண்ணியே கொல்லுவாங்கடி………… எல்லாத்தையும் முடிச்சுட்டு ஈவ்னிங் வந்து………….. என் கீதுவ” என்றவனிடம்

“பேச்சுதான் … ஒகே னு சொல்லு ஆபிஸாவது மண்ணாங்கட்டியாவது னு…. செயல்ல ஒண்ணும் காணோம்” என்று கீர்த்தி அவனிடம் துடுக்காய் பேச

“ஏய்ய்ய்ய்ய்ய்ய்… என்று மிரட்டியவன்

“என் செயல பத்தி அப்புறம் பேசலாம்” என்று அவளிடம் சரசமாட ஆரம்பிக்க..

“சரி..சரி…கிளம்புங்க இங்க ஒருத்தி உங்களுக்காக காத்துட்டு இருப்பேனு……….. மனசுல வச்சுக்கிட்டே வேலை பாருங்க “ என்றபடி அவனை விட்டு விலகவே மனம் வராமல் இன்னும் அவனுள் அடங்க

“கீது…………. உன் லவ்வ எனக்கு ப்ரூஃப் பண்ணவே இல்லை…. என்னை நெருங்கத்தான் முடியலேனு சொன்னததான் ஞாபகம்…. உன்னை நம்ப முடியலேயே……..” என்று சீண்ட

அவனிடமிருந்து விலகியவள்

நக்கலாகவும்..கோபமாகவும்

“வேணும்னா நானும் சூடு போட்டு காட்டவா” என்று கேட்க

“பச்ச்ச்.. அதையே சொல்லாத…. எனக்கே அசிங்கமா இருக்கு…. ஏதோ ஒரு வேகத்துல உன் வாயை அடக்கனும்னு” என்றவன்

”உனக்கு 5 மினிட்ஸ் டைம் தருகிரேன்….ப்ரூஃப் பண்ணு…..”

”5 நிமிசமா இதுலாம் ஓவர் பாலா” என்றவள்

“பேப்பர்ல எழுதித் தரவா,,,,

”என்னனு…”. கேட்ட அவனின் பார்வையே நக்கலாக அவள்மேல் பதிந்தது…

“வேற என்ன ’Bala I Love U’ னுதான்” என்றவளிடம்

கடவுளே என்று தலையிலடித்தான் பாலா….

“லூசுப் பொண்டாட்டிதான்… உனக்கு லவ் பண்ண தெரியாதுதான் …. அதுக்காக இப்படிலாம் ப்ருஃப் பண்ணுவியா நீ” என்று … ஒற்றைக் காலை சுவரில் வைத்து.. விலகி நின்றிருந்தவளை தனக்குள் மீண்டும் கொண்டு வந்தவன்

”சீக்கிரம் கீர்த்தி....டைம் போய்ட்டே இருக்கு…” என் பாலா அவளை அவசரப் படுத்த

”ப்ராமிஸ் பண்ணவா எங்க அப்பா அம்மா மேல” என்றவளுக்கு முறைப்பை பதிலாய் கொடுக்க....

”வேறு என்ன பண்ணுவது பாலா” என்று கொஞ்சினாள் அவனது பைங்கிளி…

கொஞ்சிப் பேசிய வஞ்சியியினை யோசிக்க விடாமல்…. அவனது பார்வை அவளது உதட்டில் நிலைக்க

அது புரிந்தவள்….

கேடி என்றபடி….. நாணம் தடுக்க நினைத்தாலும்……. அவள் காதலை அவனிடம் உணர்த்தும் முனைப்பே இருக்க

அவள் கணவனைப் போல் முதல் முத்தத்தை தனது இதழ் முத்தமாகவே அவனுக்கு திருப்பிக் கொடுத்தாள் மனைவி….

இருவருக்கும் யுகமாய் கழிந்த நிமிடங்கள் முடிவுக்கு வர…. கீர்த்தி அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கண்களை மூடி அந்த நிமிடங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான…

பாலா…..என்று மெல்ல அவனைக் கூப்பிட….

“கீர்த்தி…… MD யா இருந்த என்னை KD யா மாத்திட்டடி” என்று கண்களை மூடி அவன் பரவச நிலையில் சொன்னதை வேறு எந்த அர்த்தத்திலும் கீர்த்தி எடுக்க வில்லை…

அதன் பிறகு…………அவன் அலுவலகத்திற்கு கிளம்பினான்…………… மனைவியின் முதல் முத்தத்தில் மயங்கி இருந்த அவன்……. தான் காரில் நினைத்த மதுவின் சீடிகளை அப்புறப்படுத்தாமலேயே அவளை விட்டுப் போனான்………………

கீர்த்தனாவிற்கு…………. அவன் வரும் வரை நிமிடங்கள் யுகங்களாய் நீள்வது போல் இருந்தது……….

”ஆணின் தவிப்பு அடங்கிவிடும்………பெண்ணின் தவிப்பு தொடங்கிவிடும்” என்று ஒரு பாடல் வரி கீர்த்திக்கு ஞாபகம் வர….

”ஹேய் கீர்த்தி பரவாயில்லயே…. உனக்கு கூட சிசுவேசன் சாங்லாம் வருது” என்று பெருமை வேறு பட்டுக் கொண்டாள்………..

என்னவெல்லாமோ செய்து பார்த்தாள்… நேரமே போக வில்லை….

அருந்ததியும் மருமகள் மேலும் ஒரு கண் வைத்துதான் இருந்தார்….

மகன் கீழே இறங்கியபோது………அவனின் மலர்ந்த முகம் அருந்ததிக்கு நிம்மதியை வரவழைத்திருந்தது… வீட்டிலே தங்கிவிட்ட மருமகளோ… கனவிலேயே மிதந்ததும் அவள் பார்வையில் சிக்காமல் இல்லை………

மதியம் 3 மணிக்கு மேல் அவளால் பொறுக்க முடியாமல் பாலாவுக்கு கால் செய்ய அவனோ… மனைவியின் அவஸ்தை தெரியாமல் கட் செய்து கொண்டே இருக்க,,,, இவள் குறுஞ் செய்தி அனுப்ப…….. அவனோ……….

“தொந்திரவு செய்யாதே…………நான் மிகவும் பிஸி” என்று பதில் அனுப்பி இருந்தான்………..

இந்த மெஸேஜ் செய்வதற்கு ஒரு ஹலோ சொல்லலாம்ல என்று அலுத்துக் கொண்டாள் …

போரடிக்க………….தனது அறையை சுத்தம் செய்தவள்………..அவனது படுக்கை இனி அவர்களின் மஞ்சமாக போவதை எண்ணியபடி நாணத்துடன் அதை தயார் செய்தாள்……

திடிரென்று அவளுக்கு தங்கள் திருமண புகைப்படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்க….அது அவளுக்கு எட்டாத உயரத்தில் இருந்தது……….. நாற்காலியைப் போட்டு ஏறி அதை எடுக்க தயாரானபோது.. ஒரு திரைப்படத்தில் கதாநாயகி இப்படித்தான் கணவன் வரவிற்காக ஏங்கி……கடைசியில் இறந்து போன காட்சி அவள் மனதில் வர

அவளது மனசாட்சி ஆஜரானது

“கீர்த்தி… கையக் கால வச்சுகிட்டு சும்மா இரு……… எதையாயவது பண்றேனு சொல்லி…… கீழ மேல விழுந்து தொலைக்காதே” என்று சொல்ல……

ஆல்பம் பார்க்கும் ஆசையையே விட்டபடி பேசாமல் கட்டிலிலே வந்து அமர்ந்து விட்டாள்……..

அதன் பின்னும் அவளுக்கு…….. அந்தப் பாடல் காட்சியே மனதில் ஓடிக் கொண்டிருக்க……

அவளுக்கு இருந்த மோன நிலை சுத்தமாய் வடிந்து போனது போல் இருக்க… மனம் எதை எதையோ நினைத்து.. அலை பாய்ந்தது…….. ஓடிய எண்ணங்கள் எல்லாம்… நல்லபடியாகவே இல்லை… தங்களுக்கு மீண்டும் ஏதாவது பிரச்சனை வருமோ… என்று கலங்கியவள்….

”கடவுளே என்னை இன்னைக்கு ஒருநாள் மட்டும் என் பாலாவோட வாழ வச்சுடு” என்று வேண்டினாள்..

பின் உடனே

“இல்ல இல்ல…. ஒருநாள்லாம் வேண்டாம்…. அவர்கூட வாழ்நாள் முழுசும்… நான் வாழனும்… ” என்று மீண்டும் கடவுளிடம் வேண்டுதலை மாற்றினாள்…

மறுபடியும்…

அட்லீஸ்ட்… மது கிடைக்கிற வரைக்குமாவது… அதுக்கப்புறம் எனக்கு என்ன ஆனாலும் பராவாயில்லை” என்று மதுவையும் இழுத்து தன் வேண்டுதலை மாற்றியபடி இருந்தவளுக்கு…

அந்தத் திரைப்பட பாடல் மனதினை விட்டு போகவே மாட்டேன் என்றது….

அது அந்த நேரத்திற்கான மூடை அவளுக்கு கெடுப்பது போல் இருக்க…. சரி வேறு ஏதாவது பாடல் கேட்டு தன் மனதை மாற்றலாம் என்று முடிவு செய்து…….

சிடியை எடுக்கப் போக…. அங்கிருந்த சிடிகளில் ஒரு ஓரமாய் ’மது (ற) கானங்கள்’ என்ற தலைப்பில் அடுக்கப் பட்டிருந்த தகடுகளின் மேல் அவளின் கவனம் பதிந்தது…

மது மற்றும் கானங்களுக்கு இடையில் வந்த ’ற’ காதலின் அடையாளமான இதய வடிவத்திலும் தோன்றுவது போல் எழுதப்பட்டிருக்க …. அதை எடுக்கவே……. கீர்த்திக்கு கைகள் நடுங்கியது.. அதே போல் ஒரு 7 அல்லது 8 குறுந் தகடுகள் இருக்க…….. கண்டிப்பாக… அதற்கும் மதுவுக்கும் ஏதோ சம்பந்தம் உண்டு என்று மனம் சொல்ல… ‘

இப்போது எடுப்போமா… வேண்டாமா என்று மனம் அடித்துக் கொள்ளத் தொடங்கியது……….. என்னதான் இருக்கும்…. பாலாவுக்கும்.. மதுவுக்கும் பிடித்த பாடல்களாக இருக்கும் கேட்டுதான் பார்ப்போம் என்று அவற்றில் இருந்து ஒரு சிடியை எடுத்து வந்து மடிக்கணினியில் போடப் போனாள்… சிடியை பார்த்தவளுக்கு கணவன் பலமுறைக் கேட்டிருப்பான் போல… தேய்ந்திருந்த அதன் நிலையே சொல்லியது…. மனதில் சிரித்தபடி… போட்டு ஆன் செய்தவள்… …….காதில் ஹெட் செட்டை மாட்டினாள்…… பாடலைக் கேட்க…… ஆனால் அதிலோ

“ஹாய் பாலா” என்று மதுவின் உரிமை கலந்த குரலில்…………….கேட்ட கீர்த்தியின் மனம் பட படவென்று அடிக்கத் தொடங்கியது……

அவள் சொன்ன பாலா என்ற வார்த்தையே அவள் காதலைச் சொல்லியது போல் இருந்தது… அத்தனை உரிமை…. அத்தனை காதல்…….. அது அவளை என்னவோ செய்ய… வேகமாக அணைக்கப் போனவளின் மனது

“கீர்த்தி… நீ பாலாவை விரும்புகிறாய்…………அவன் உன் கணவன்…நீ எந்தச் சூழ்னிலையிலும் தெளிவாக இருக்க வேண்டும்…………. இது உனக்கு ஒரு பரிட்சை போல்………. எதுவாகிலும் பாலாவுடன் நீ வாழ வேண்டும் …இதைக் கேட்கவே பயப்படுகிறாய் என்றால் நாளை மது வந்தால்…….. என்று அவளை அவள் வாழ்க்கைக்கான தெளிவான முடிவை எடுக்கச் சொல்லி மனம் சொல்ல……. அதைக் கேட்டு தொடர்ந்து கேட்க ஆரம்பித்தாள்…

“ஹாய் பாலா….”

இது உனக்கு நான் உனக்கு கொடுக்கிற 6 வது சிடி……….

நீ இதுவரை நான் கொடுத்து அனுப்பினது எதுவுமே கேட்கவில்லை என்று தெரியும்……. ஆனாலும் நான் ஆதிக்கிட்ட கொடுத்து அனுப்பிக்கிட்டே இருப்பேன்…………

ஓகே…போன தடவை நான் அனுப்பின பாட்டோட முதல் வரி இதுதான்…

”ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் “ பாடல்… திரும்ப போய் கேட்டுக்கோ…

இன்னைக்கு நான் கோபத்துல இதை அனுப்பி இருக்கேன்… நீ என்னை ஆதிக்கிட்ட ரொம்ப திட்டினாயாமே….அதுனால இந்த முறை தயவு தாட்சன்யமின்றி… உனக்கு ரொமான்ஸ் பாட்டுதாண்டா………….கேளு,,,

எப்போதும் போல இடையில இருந்துதாண்டா……… இதுக்கும் திட்டித் தொலைக்காத…

இப்போது கீர்த்தி இதழ்கள் புன்னகையில் விரிந்தன…. இடையில் பாடல் போடும் பழக்கம் கணவனுக்கு எங்கிருந்து வந்திருக்கிறது என்று…. கணவனுக்கு காதலிக்க கற்றுக் கொடுத்திருக்கிறாள்…” மனம் குறுக்காக யோசிக்காமல் நேர்க் கோட்டில் சென்று கொண்டிருந்த்து அவளுக்கு

பாடல்வரி அவள் குரலில் ஒலித்த்து….

கன்னி பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும்

முத்தம் போடும் போது எண்ணிக் கொல்ல வேண்டும்

முத்தங்கள் சங்கீதம் பாடாதோ

என் கூந்தல் பாயோன்று போடாதோ

கண்ணா கண்ணா உன் பாடு

என்னை தந்தேன் வேரோடு

உன் தேகம் என் மீது

உன்னை போன்ற ஆணை கண்ணால் பார்த்ததில்லை

உன்னை அன்றி யாரும் ஆணாய்த் தோன்ற வில்லை

பூவொன்று தள்ளாடும் தேனோடு

மஞ்சத்தில் எப்போது மாநாடு

பூவின் உள்ளே தேரோட்டம்

நாளை தானே வெள்ளோட்டம்

என்னோடு பண்பாடு ”

கீர்த்தனா கலங்கி விட்டாள் பாடல் வரிகளில்……. சில வார்த்தைகளை மது மாற்றி இருந்தாள்….

மதுவின் குரல் தொடர்ந்து ஒலித்தது…

”என்ன பாலா பாட்டு எப்படி இருக்குடா….”

”ஒருவேளை நீ கேட்கிற முதல் சிடி இதுதான் என்றால்……… உனக்கு இன்னைக்கு துக்கம் கோஹயாதான்…………. இந்த மதுதான் உன் கனவுல வருவா………

அய்யோ…. நீ … ரொமான்ஸ் மூடை மூட்டை கட்டி வச்சுட்டு….பாடலோட முதல் வரிய யோசிச்சுட்டு இருக்கியா…………

இந்த பாட்டுக்கு மட்டும் உனக்காக முதல் வரி பாடரேன்………..சமத்தா கேட்டுட்டு ……… கனவில் என் பாலாவா எந்த சேட்டையும் பண்ணாமல்.. எல்லை மீறாம ரொமான்ஸ் பண்ணுனும் சரியா……….

சரி சரி நீ திட்டுறது கேக்குது…. நான் என் திரு வாய மூடிக்கிறேன்,,,, பாய்……..பாட்டைக் கேளு…

அணைத்து விட்டாள்…

கீர்த்தனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது,,,, என்ன ஒரு காதல்……….. எதையும் எதிர்பார்க்காத காதல்…….. என்னவெல்லாம் கனவுகள்………… என்னவெல்லம் கற்பனைகள்….. எல்லாம் வீணாகப் போனது ஏன்…………… என்ன தவறு செய்தனர் இருவரும்………… ஒருவேளை..தான் இந்த பூமியில் பிறந்திருக்காமல் இருந்திருந்தால்… இருவரும் ஒன்று சேர்ந்திருப்பார்களோ….மதுவுக்காக கணவனின் 4 வருடக் காத்திருப்பு தவறில்லை…. அதற்காக தன்னைத் திருமணம் செய்து……… தன்னிடம் சலனப்படாதது கூடத் தவறே இல்லை…….. இப்படிப் பட்ட காதலியை விட……… தன்னை எப்படி நினைத்திருப்பான் அவன்………… அவளை எப்படி விட்டுக் கொடுப்பான்……என்று துடித்த போதே…………….விட்டு விட்டானே உனக்காக…………… இன்று உன் பார்வைக்காக.... உன் காதலுக்காக….உன் சம்மத்துக்காக……………..உன் ஒருத்திக்காக எப்பேற்பட்ட காதலை மறந்திருக்கிறான்……….அவனுக்காக நீ என்ன செய்திருக்கிறாய்…. வலியும்…….. வேதனையும்……………… குத்திக் காட்டும் வார்த்தைகளும் தான்…

என்ற போதே…. ”மதுவை மறந்து விட்டானா” என்ற சந்தேகமும் அவளுக்கு வந்து தொலைக்க……… இப்போது அவன் மனதில் இருப்பது நாம்தான் என்ற நினைவில் மனம் அமைதி ஆகியது….

மது-பாலா காதல் இப்போது அவளை இம்சிக்க வில்லை… கணவன் அவன் காதலில் தொலைத்த சந்தோசத்தை எல்லாம்………… தன் மூலம்… தன் காதல் மூலம் அவனுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவு அவள் தெளிந்திருந்தாள்….

சற்று நேரம் கண்களை மூடியபடி இருக்க…. அப்போதுதான் அந்தப் பாடலின் முதல் வரி பற்றி ஞாபகம் வந்தது…..

நல்ல வேளை மதுவே சொல்லிட்டாங்க… இல்லை அதை வேற தேடனும்…தேங்ஸ் மது என்று மீண்டும் போட்டாள்

அதுவே பாலாவுக்கும் கீர்த்திக்குமான வாழ்க்கையை ஆரம்பித்து வைக்க மதுவின் வாய் வார்த்தை மூலம் சம்மதமாக தோன்றும்படி ஆகிப் போனது.. மது பாடிய அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் கீர்த்திக்காகவே பாடியது போல் இருந்தது……கீர்த்தியை பாலாவோடு சேர்ந்து வாழ அவளே சொன்னது போல் இருந்தது

ஒரு காதல் என்பது

உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

பெண் பூவே வாய் பேசு

பூங்காற்றாய் நீ வீசு

காதல் கீதம் நீ பாடு

’கீர்த்தியின் கண்களில் இப்போது ஆனந்தக் கண்ணீர் வழிந்தது,,,, அவளையுமறியாமல் அதை திரும்பக் திரும்பக் கேட்டாள்…

”காதல் கீதம் நீ பாடு” என்ற என்ற கடைசி வரியில்……………..மது பாலாவை மொத்தமாய் அவளிடம் தந்து சொல்லியது போல் இருக்க…………. கீர்த்தனா……… கொஞ்ச நஞ்சம் இருந்த தன் மனச் சலனம் எல்லாம் நீங்கி……… பாலாவிடம் தன் காதல் கீதத்தை எந்தத் தடங்கலும் இல்லாமல் பாட ஆரம்பித்து இருந்தாள்….. மனம் லேசாய் ஆனது……..

மது பாடிய பாடலையே அவள் உதடுகளும் முணுமுணுத்துக் கொண்டிருந்தன….

கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும்

முத்தம் போடும் போது எண்ணிக் கொல்ல வேண்டும்

பாடியபோதே நேற்று… அவள் எண்ணிய அவன் முத்தங்களின் ஞாபகம் வர முகம் சிவந்தாள் கீர்த்தனா…

பூவொன்று தள்ளாடும் தேனோடு

மஞ்சத்தில் எப்போது மாநாடு ”

என்ற வரிகளை பாடியபடி அவர்களின் மஞ்சத்தை மல்லிகையால் பரப்பினாள்……… ஆனால் இன்று அந்த மஞ்சத்திற்குஅதன் தவப் பலனான அவர்கள் இருவரின் சங்கமம் கிடைக்கப்போவதில்லை என்று அறியாமல்

2,028 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page