top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே !!! என் உறவே ??? - 48

அத்தியாயம்:48

பாலா தன்னிலை மறந்தெல்லாம் அவளை அணைக்கவில்லை…. தன் மனைவிக்கு அவன் மீது உள்ள உரிமையை அவளுக்கு உணர்த்த தன் எல்லை மீறினான் அவளிடம்……. தொட்ட நிமிடமே மூர்க்கம் மறைந்ததுதான் உண்மை…

கீர்த்தியோ………… வன்மையான கரங்களால் தன்னிடம் எல்லைகளை மீறி அவன் உரிமையை நிலை நாட்ட முயன்ற கணவனிடம்….. முரண்டு பிடிக்க வில்லை……. இரும்பாய் நின்றிருந்தாள்…

எப்போதும் தன் கரம் பட்டாலே நெகிழ்வதை உணர்பவன்…. இன்று மரக்கட்டை போல் வீம்பாக நின்று கொண்டிருந்த அவளை உணர்ந்தாலும்…… அணைத்தபடியே…. .தன் இதழ்களால் அவள் இதழ்களை சிறை செய்ய அவள் முகத்தை நோக்கி குனிய…..

கண்களில் உணர்ச்சியின்றி அவனைப் பார்த்தாள்…… அவனும் அதில் கலந்தான்….

முத்தமிடப் போனவனிடம்

“மூன்று” என்றாள் அவன் கண்களைப் பார்த்தபடி………. “என்னடி மூணு…..” கேட்கும் போதே அவன் குரல் கொஞ்சியது

”நீங்க எனக்கு கொடுத்த முத்ததோட கணக்கு…….. ” என்றாள்.. ……

மோகம் சரசமாட…. அவள் இதழ்கள் பேசியதால்…. மாற்றி அவள் கன்னங்களில் தன் முத்தததை அழுத்தமாய் பதிக்க……. அதன் விளைவு கீர்த்தனாவுக்கு உடல் சிலிர்த்தது…. இருந்தும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு விறைப்பாக நின்றாள்….

“கீது……..இனிமே உன் எண்ணிக்கையில அது அடங்காது……..சோ விட்டுடு” என்று மனைவியின் வார்த்தைகளில் உள் நோக்கம் அறியாமல் தன் வேலையைத் தொடர…..

“ஒன்று” என்றாள்……..

”என்னடி தப்பு தப்பா எண்ணுற… மூணுக்கடுத்து நாலு…… இதுக்கே கணக்கெல்லாம் மறந்து போச்சா” –கிசுகிசுப்பாய் வந்தது அவன் குரல்

”அது இதழ் முத்தம்…. இது… என் கன்னத்தில் நீங்க வைக்கும் முதல் முத்தம்… கணக்கு கரெக்டா இருக்கணும் பாலா….”

என்றவளின் பேச்சில் சட்டென்று கொஞ்சம் சுதாரித்தான்தான் பாலா….

“ஏய்….. என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு….. இது என்ன அசிங்கமா…. இதைக் கணக்கெடுத்து நீ இப்போ என்ன பண்ணப் போற…. உளரிட்டு இருக்காத” என்றான் விபரீதம் புரியாதவனாக

சிரித்தாள் கீர்த்தி….. அதில் அவனை வெற்றி கொள்ளப் போகும் கர்வம் தெரிந்தது…. கடித்துக் குதறப் போகும் ஆணவம் தெரிந்தது….

“கணக்கெடுத்து என்ன பண்ணப் போறேனா….” என்று சிலிர்க்க….

“என்னமோ நீ பண்ணு… இப்போ என்னைப் பண்ண விடு.” கிறக்கமாக பேசியபடி…. மோன நிலையில் இருந்தவன்….. மேலும் பேச்சை வளர்க்காமல்…. தனக்கு வந்த மோகத்தை அவளுக்குள் ஏற்றும் வேகத்தில் குறியாய் ஆனான்….. அவன் கைகள் சேலை அணிந்திருந்த வெற்றிடையில் சுதந்திரமாய் உலவ ஆரம்பிக்க….

தன் இடையில் ஊர்ந்த அவன் கைகளின் மேல் தன் கையையும் வைத்தவள்….

“இதுக்கெல்லாம் எப்படி பாலா வசூல் செய்வது” என்று கேட்க

கேட்ட பாலாவின் கிளார்ச்சியிடைந்த உடலெங்கும் குப்பென்று வியர்க்க….. அவளை அணைத்ததில் சூடான ரத்தம் சட்டென்று அடங்க ….அவள் சொல்லிக் கொண்டிருந்த கணக்குப் பாடம் அப்போதுதான் அவன் நடு மண்டையில் நச்சென உறைத்தது……

அவள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் கொஞ்ச நஞ்சம் புரிந்தவனுக்கு கைகள் தளர்ந்தன….. அது அவன் கைகளோடு சேர்ந்திருந்த கீர்த்தியின் கைகளுக்கும் புரிய…….. அவனின் தளர்ந்த கைகளை விடாமல் இறுக்கமாகப் பற்றினாள்….

“சொல்லுங்க பாலா……. முன்னப் பின்ன நான் இந்த தொழில் பண்ணினது இல்லை…. எப்படி வசூல் பண்ணுவாங்க….. தொடுறதுக்கெல்லாம் பண்ணுவாங்களா… இல்லை நேரக் கணக்கா… இல்லை …….எப்படி பாலா” அப்பாவி போல் கேட்டாள்… பார்வை பாலவிடம் மட்டுமே இருந்தது……… தொடர்ந்தாள்…

”அவங்க எப்படியோ பண்ணட்டும்… நாம் ரெண்டு பேரும் சேர்ந்து இதுக்கு டீல் பேசிக்கலாம்… ஏன்னா என்னோட ஒரே கஸ்டமர் நீங்கதான பாலா……” என்ற போது சுத்தமாய் செத்துப் போனவன் அவளது கணவன்தான்…….

கோபமும்.......ஆற்றாமையும்… துக்கமும்… வலியுமாய்………… அவன் அவளிடமிருந்து விலக எத்தனிக்க… அவள் விட வில்லை………..

“ஹலோ………….. என் அப்பா கடனை அடைக்கிறதுக்கு எனக்கு நல்ல பிஸ்னஸ் கிடச்சிருக்கு பாஸ்…………. கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுங்க” என்று முற்றிலுமாய் உயர்ந்த குரலில் தன்னையே தரம் தாழ்த்திப் பேசி…….. மேலும் மேலும் அவனைத் துடிக்க வைத்தாள் அவன் மனைவி

சொன்னவள் அவள் சொன்னதை நிறைவேற்றும் வகையில்………. அவனைத் தன்னோடு இறுக்கமாக அணைக்க…

”ச்சீசீ……….. விடுடி… நீ…… உன் மனசுல…. இத்தனை கேவலமான எண்ணமா…………….உன்னைய போய் …. இதுக்கு நீ உன்னையவே நினைச்சுட்டு இருக்கிற என் நெஞ்சில கத்திய இறக்கி இருக்கலாம்…” என்று வார்த்தைகள் கூட கோர்வையாய் பேச முடியாமல் தடுமாறினான் பாலா…… மனமெங்கும் மரண வலி……..

“அது முடியாது பாலா.. ஏன்னா அங்க நான் மட்டும் இல்லையே…… எனக்கு அதுக்கு கூட முழு உரிமை இல்லை பாலா” என்றவளை நச்சுப் பாம்பினை பார்ப்பது போல் பார்த்தான்………

”அசிங்கமா இருக்கா…. என்னையப் பார்த்தா… அதெல்லாம் பார்த்தா இனி பிரயோஜனமில்லை….” எனும் போதே அவன் அவன் அவளைத் தள்ளி விட்டு,,, அவளிடமிருந்து விலகி இருந்தான்………

அவளை கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல்தான் இருந்தது…. ஆனால் அவன் இருந்த நிலையில்………. அவனால் அந்த அறைக்குள் நிற்கவே தள்ளாடினான்……… பின் அவளை எங்கு அறைவது…..

சட்டென்று ஹாலுக்கே வந்து விட்டான்…………அவனால் கீர்த்தனாவின் வார்த்தைகளை சீரணிக்கவே முடியவில்லை…….. மூச்சு விடக் கூட திணறினான்……. அவனுக்கும் அவளுக்குமான வாழ்க்கையில் அத்தனை வழிகளும் மூடி இருள் சூழ்ந்தது போன்ற உணர்வில்…… சர்வ நாடியும் அடங்கியது போல் தோன்ற… சற்று முன் தோன்றிய அத்தனை உணர்ச்சிகளும்… அடங்கி தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்… அவனின் ஆட்டமெல்லாம் அடங்கியது போல் இருக்க. அவன் மனைவியோ இன்னும் ஆடிக் கொண்டிருந்தாள்….

10 நிமிடம் கழித்து கையில் ஒரு டைரியுடன் வந்தாள் கீர்த்தனா…………….

”பாலா…. என்னைப் பாருங்க…… நாம் பேசி ஒரு முடிவுக்கு வந்துரலாம்…. ”

நிமிர்ந்து பார்த்தான் பாலா… அவளை… அவனின் கண்களில் இருந்து வந்த அடிபட்ட பார்வை… ” இதற்கு மேலும் என்ன என்பது போல்” என்ற செய்தி தாங்கி இருந்தது….

இதுல எல்லாம் எழுதி இருக்கேன்………….. நான் பேங்க் மேனேஜர் ராகவோட பொண்ணு… கணக்கெல்லாம் கரெக்டா இருக்கும்…. என்றாள் நிமிர்த்தலாக,,,

ஆனால் ஒன்றை மறந்து விட்டாள்…. அவர் கணக்கை கோட்டை விட்டதால் தான் இன்று இவள் தாம்பத்திய பந்தத்திற்கே கணக்கு எழுத வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறாள் என்று….

உள்ளே எழுந்த சூறாவளியில்… கண்கள் சிவக்க எழுந்தவன்…………… எதுவும் பேச வில்லை கையில் வைத்திருந்த டைரியை வாங்கி விசிறி அடிக்க… அது இருவரும் திருமணக் கோலத்தில் இருக்கும் போட்டோவின் மேல் பட்டு கீழெ விழ…….. டைரி பட்ட வேகத்தில் புகைப்படம் வேகமாய் ஆடி கீழே விழப் போக……… அந்த நிலையிலும் …அது கீழே விழும் முன் பிடித்து நிறுத்தினான் பாலா…..

“அதில் இருந்த கீர்த்தனாவின் கலங்கிய முகமும்… உணர்ச்சிகள் அற்று மதுவின் நினைவுகளை மட்டுமே கண்களில் தேக்கி இருந்த தன் முகமும்” அவனைப் பார்த்து சிரிக்க

தன் உருவத்தில் ஒங்கி குத்து விட்டான் பாலா….. நல்ல வேளை அது கண்ணாடியில் லேமினேட் செய்யப் படாமல்… ஃபைபரில் செய்யப்பட்டிருந்தது உடைய வில்லை….

சற்று நேரம் அந்தப் புகைப்படத்தையே வெறித்து பார்த்தபடி இருந்தான்………

அவனுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை… முக்கியமாக கீர்த்தனாவை பார்க்கவே பிடிக்கவில்லை…………. இருந்தால் அவளையும் அசிங்கப்படுத்திக்கொண்டு… திருமண பந்தத்தையும்….அதன் நூலான தாம்பத்திய பந்தத்தையும் … சத்தியமாய் அசிங்கப் படுத்தி விடுவாள் என்று தோன்ற… மூச்சை அடைத்தது அவனுக்கு… இங்கிருந்து போனால்தான் மூச்சே விட முடியும் போல் என்று தோன்ற வேகமாய்க் கார்க்கீயை எடுக்கப் போக… அதற்குள் கீர்த்தனா… கதவைப் பூட்டி கையில் சாவியை வைத்துக் கொண்டாள்…

கோபம் அவன் முகத்தில் தாண்டவம் ஆடியது……….’

“எங்க போறீங்க… இங்க ஒருத்தி பேசிட்டு இருக்கறதப் பார்த்தா எப்படித் தெரியுது……...”

‘சாவியக் கொடு கீர்த்தனா…..“ என்று பல்லைக் கடிக்க….

”முடியாது… என்ன இவ்வளவுதானா நீங்க…. என்னமோ டெய்லி மிரட்டுவீங்க… பூச்சாண்டி காட்டிவீங்க… இன்னைக்கு என்ன ஆச்சு… ஓ… கணக்கு மேட்டரா,,,, ஓட்டாண்டியாலாம் ஆக்கிற மாட்டேன்….என் அப்பா … வாங்கின தொகைக்கு மட்டும் தான்…பாலா…. என்னை நம்பலாம்.” என்று அவனை அணைக்க

திமிறினான் பாலா…..

அவன் கையை எடுத்து உடம்பில் படற விட்டவள்…… உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்துச்சே பாலா… நான் பேபியா… இல்ல பொண்ணானு……….. இன்னைக்கு… போக்கிரலாமா” என்று அவன் கையை அதை நிவர்த்தி செய்யும் வண்ணம் கொண்டு கையைக் கொண்டு செல்ல தீ பட்டாற் போல கையை இழுத்தவன்…….

அவளைக் கதவோடு சாத்தி,,,,,,,, கண்ணில் வெறியோடு கழுத்தில் கை வைத்து நெறிக்கப் போவது போல் போனவன்….. அது முடியாமல் அவளைத் தள்ளி விட்டான்

“என்னைக் கொன்னுடுடி…….. நிம்மதியா போய்ச் சேருகிறேன்… எங்க நிம்மதியா…. உன்னைய விட்டுட்டு என்னால போகக் கூட முடியாது…… நீ இப்டினா… அவ எங்க இருக்கானு தெரியாம… நான் செத்தா கூட நிம்மதி இல்லடி எனக்கு… உங்க ரெண்டு பேராலயும்….. நான் யாருக்கு என்ன பாவம் பண்ணினேன்……. எனக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம் போல…… அவ மேலயும் வந்துருக்க கூடாது… உன் மேலயும்” என்று நிறுத்தியவன்… அவள் கண்களைப் பார்த்தபடி

”ஒரு தடவதான் பட்டேன்…. அதுக்கப்புறம்னாலும் நான் சுதாரிச்சுத்துருந்துருக்கனும்… எனக்கு இது தேவைதான்… நீ சாவியக் குடு…. முதல்ல… என்னால் இங்க இருக்க முடியாது…. ” என்று வெளியே போக எத்தனிக்க

கீர்த்தனா அதற்கெல்லாம் அடங்க வில்லை…. பத்ர காளியாக நின்றிருந்தாள்… 10 மாதமாக அவள் பூட்டி வைத்திருந்த உணர்வுகள்…. கணவன் முன்னிலையில் வெளி வந்து கொண்டிருந்தன…. அன்று போல் இல்லாமல்…. சுய நினைவில்…

”ஏன் …. ஏன்… இருக்க முடியாது“ ஒற்றையாய் கிடந்த முந்தானையை அள்ளிபோட்டவள்…அவன் முன்னால் பேயாய் மாறி நின்றாள்…

”உங்களுக்கு இப்போ என்ன ஆச்சுனு…. இத்தனை கோபம்…. நீங்க விரும்பினதுதானே….எடுத்துக்கங்க” என்று மீண்டும் அவன் முன்னால் போய் நிற்க…..

அவள் அள்ளி போட்ட முந்தானை அதன் வேலையை சரியாய் செய்யாமல் கோணல் மாணலாய் களைந்து கிடக்க……… பாலாவுக்கு அவள் கோலம் மோகம் தராமல் இன்னும் கோபம் தந்தது…….

”எனக்கு…. நீங்க வேணும்…………. இன்னைக்கு… இப்போ….. எனக்கு பிறந்த நாள் பரிசா….” என்றாள் ஆங்காரமாக

“விடு என்னை……… பேசுறதெல்லாம் பேசிட்டு….. பரிசு வேணுமாம்………. அதுதான் மொத்தமா என்னைக் கொன்னுட்டியே………. இன்னும் என்ன….. பொணத்த வச்சுட்டு என்ன பண்ணப் போற” என்றான் அவள் வார்த்தைகளின் கனம் தாங்காமல்….

ஆனால் அவளோ அவன் வார்த்தைகளில் எல்லாம் கவனம் கொள்ளாதவளாய் தன் பிடிவாதத்தில் நின்றிருந்தவளாய்……

“சும்மா நடிக்காதீங்க…… என்னைய உங்களுக்கு பிடிக்கலை….. இத்தனை நாளும்… பிடித்திருக்கிற மாதிரி நடிச்சுருக்கீங்க…. என்னோட வம்பிழுக்கிர மாதிரி சீன் போட்ருக்கீங்க….. இன்னைக்கு நானே வரும்போது உங்களால என்னை ஏத்துக்க முடியல… ஏன்னா…..மதுவைத்தான் உங்க மனசும்……” என்றும் நிறுத்தி பின் சொன்னாள்… …… ”உடம்பும் தேடுது”……..

இதற்குமேல் அவளை பேச விட்டால்… போவது அவர்கள் வாழ்க்கை சந்தி சிரிக்கப் போவது நிச்சயம் என்று உணர்ந்தவன்…………

என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினான்……

அவள் வாயை அடைக்கும் வழியைத்தான் அவள் அடைத்துவிட்டாளே….

இப்படியெல்லாம் இவள் பேசுவாள் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை……. அவன் மனதை…… கொத்தி கொத்தி கூறாக்கியிருந்தாள்………. எங்கும் ரண வேதனை…….. அவளை அவனோடு பிரிய விடாமல் வைக்க தான் மறைத்த பண விவகாரம்….. இன்று அவள் தன்னைத் தானே தரம் தாழ்த்திப் பேச காரணமாகி விட்டதை எண்ணி…… சித்தம் கலங்கினான்……

அவள் பேசுவதை எல்லாம் அவனால் கேட்க முடியவில்லை……………. அவளின் இந்த நிலைக்கு.. இப்படி.. கீழான நிலைக்கு இறங்கி பேசும் அளவுக்கு…………… அவளின் குண இயல்பு மாறியதற்கு……….இத்தனைக்கும் காரணமான தன்னை முதலில் வெறுத்தான்………… அவள் தன் மனதைக் குதறும் நிலையைத் தடுத்து நிறுத்த தன்னை சித்திரவதைச் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவெடுத்தவன்

பேசிக் கொண்டே இருந்தவளை தன்னிடமிருந்து வலுக்கட்டாயாமாக பிரித்து தள்ளியவன்… நுழைந்தது………. அந்த வீட்டின் அடுப்பங்கரையினுள்……………..

ஆத்திரத்துடன் அடுப்பைப் பற்ற வைத்தவன்……..மேலே தொங்கிக் கொண்டிருந்த கரண்டியை அதில் வைத்தான்……….

அவன் பின்னாலே அவனை விடாமலே வந்த கீர்த்தனா…… அதிர்ந்து விட்டாள்…. என்ன செய்யப் போகிறான் என்று….. ஒரு நிமிடம்…. தனக்கோ என்று அதிர்ந்தவள்… அவளை அறையக் கூட யோசிப்பவன் இதைச் செய்வானா என்று தோன்ற.. தோன்றிய நொடியே… அது அவனுக்காக என்று உணர……….அதுவரை பேயாட்டம் ஆடிய மனது கணவனுக்காக துடிக்க ஆரம்பித்தது…. அவன் செய்யப் போகும் காரியத்தை தடுத்த நிறுத்த அவனருகில் ஓடினாள்…

ஆனால் அவள் வரும் முன்னே பாலா………தன் கைகளில்.. சூடு நிறைந்த அந்த கரண்டியின் பின்முனையை தன் கைகளில் வைத்து விட்டான்……… வைத்தவன் மனதின் வலி மறையும் வரை எடுக்கத் தோன்றாமல்………நிற்க………

“ப்ப்ப்ப்ப்ப்பால்ல்ல்ல்ல்லா” அலறி ஒடி வந்தாள் கீர்த்தனா…..

சூடில்லாத மறுமுனையை இழுக்க……அவன் இறுகிய முகத்துடன் அதைப் பிடுங்கவே முடியாதவாறு பல்லைக் கடித்துக் கொண்டு பிடித்திருக்க………

கெஞ்சினாள் கீர்த்தி……………. கண்களில் நீர் தாரை தாரை ஆக வடிந்தது…………

”விடுங்க பாலா……… நான் பேசினது தப்புதான்…….. எனக்கு வேண்ணா தண்டனை கொடுங்க” என்று துடித்தாள்……….

இகழ்ச்சியாக சிரித்தான் பாலா…..

”உனக்கு தண்டனையா…. நீ இப்படி பேசுறதுக்கெல்லாம் நான்தானே…. நான் மட்டும் தானே காரணம்…. இனி………… இதுதாண்டி உனக்கு தண்டனை……… உன்னை தொட விடாம பண்ணிட்டேல்ல….. சந்தோசம் தானே உனக்கு…………….” என்றவனிடம்… எதுவும் பேசாமல்…..

சட்டென்று தன் கைகளால் சூட்டோடு இருந்த முனையைப் பிடிக்க….. இப்போது வேறு வழி இன்றி ஆத்திரத்தோடு பாலா கரண்டியை கீழே போட்டான்… போட்டவன் வெளியேறியும் விட்டான்….

கீர்த்திக்கு……..தீக்காயம் இல்லை………நான்கு விரல்களின் முனியும் லேசாக தடித்திருந்தன……கொஞ்சம் வலிதான் அவளுக்கு …வேகமாக அடுப்பை அணைத்தவள்…… கணவனின் காயத்தை எண்ணி …. தன் வாய் விட்டதால் தான் இத்தனை துன்பம் என்று வலியோடு வெளியே வர…………… பாலாவோ…… அவள் தாய் தந்தை புகைப்படத்தின் கீழே வெற்றுத் தரையில் பித்துப் பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தான்…… மனம் வாங்கிய அடியிலிருந்து வெளி வர முடியாமல்……….

அவன் இருந்த நிலையைப் பார்த்தவளுக்கு……….. அவன் கம்பீரம் எல்லாம் போய் உருக்குலைந்து நின்றவனைப் பார்த்தவளுக்கு……… உயிர் நாளம் அனைத்தும் கருகியது…

அலமாரியில் இருந்து மருந்தை எடுத்தவள் அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்………. அவனிடம் எதுவும் பேச வில்லை…… தீப்பட்ட அவன் கையை பற்றி….. எடுத்து.. மருந்தை இடப் போனாள்……. கண்ணில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது…... அவனோ………..அவளிடம் எதுவும் பேசாமல்………அவள் கையில் இருந்த மருந்தை பறித்து தூர எறிந்தான்…….. அது போன தூரம் அவன் கோபத்தை உணர்த்த….

கையெடுத்துக் கும்பிட்டாள் கீர்த்தி…..

உதடுகள் துடித்தபடி… கண்களில் வடிந்த நீர்… கழுத்து வரை இறங்கியிருக்க,,,,,,

“நான் சத்தியமா இனி இப்படி பேச மாட்டேன் பாலா… என்னைப் பாருங்க பாலா…. நான் எனக்கு நீங்க விஷ் பண்ணலேனு….கோபத்தில…. முட்டாள் தனமா… கேவலமா நடந்துட்டேன் பாலா….. என்கிட்ட பேசுங்க பாலா… என் மேல இப்படி கோபப் பட மாட்டீங்களே பாலா…….. பாவி…. என் மேலேயே கோபப் பட வச்சுட்டேனே. “ என்று அவன் மேலேயே விழுந்து அழுதாள் கீர்த்தி

பாலாவோ..அதில் எல்லாம் இளக வில்லை………

“மருந்தைப் போட்டுக்கங்க ப்ளீஸ்” என்று கண்களில் வலியோடு மீண்டும் கெஞ்ச…….. அதில் கொஞ்சம் கூட வருந்த வில்லை……… அப்படியே அமர்ந்திருந்தான் …………..

அவனை சமாதனப்படுத்தும் வழி தெரியாமல் முன் இரண்டு பட்டன்கள் திறந்திருந்த அவன் சட்டையைப் பிடித்தபடி அவன் மார்போடு துஞ்சினாள்….. ……….. அவளுக்கு ஆறுதல் அங்குதான் உள்ளது என்பது போல் சாய்ந்தவள்….. குலுங்கி அழ ஆரம்பித்தாள்.……… அன்றொரு நாள் அழுதது போல…. பாலா அவள் செய்த எதையும் தடுக்கவே இல்ல…….. கல்லாய் அமர்ந்திருந்தான்

எத்தனை நிமிடம் இருந்தாள் என்று தெரிய வில்லை…. அவளுக்கு………. நிமிர்ந்த போது கணவன் அதே நிலையில்தான் இருந்தான்….

கண்களில் வடிந்திருந்த நீரைத் துடைத்தவள்…………………

தன் மனதினை அவனிடம் புரிய வைக்க ஆரம்பித்தாள்….. அப்படியாவது அவன் பேசுவான் என்று… ஆனால் அது எல்லாம் அவள் ஏற்கனவே அவள் அவனிடம் சொல்லி அழுத விசயங்கள் தான்…. அவள் ஞாபகத்தில்தான் அது இல்லை… பாலா அதற்கு பின்னால்தான் மதுவை மறக்க ஆரம்பித்து.. அவளை விரும்ப ஆரம்பித்தான்,,,,, என்ற உண்மை உணராதவளாய்….

“எனக்கு உங்க மேல கோபம் தான்… பாலா… அது கூட பெரிய அளவில் எல்லாம் இல்லை… உங்கலாள கொடுக்க முடிந்த பணத்தை கொடுக்க நினைக்க வில்லையே என்று மட்டும் தான்,,,, மற்றபடி… என் அப்பாவோட தன்மானத்தைக் காப்பாற்றியதற்காக சந்தோசம் தான் பட்டேன்….. அப்போலாம் நான் உங்களால் சிறிதளவு கூட சஞ்சலப் படவில்லை… ஆனா எப்போ நீங்க என் கழுத்துல மூணு முடிச்சு போட்டீங்களோ அப்போதே நான்………கீர்த்தனா ராகவனா இருந்த நான் கீர்த்தனா பாலாவா மாறிட்டேன்…. அப்போ அந்த நிமிசத்தில இருந்து ………….. நான் பைத்தியக்காரியா மாறிட்டேன் பாலா…… என்றவளின் மேல் பாலாவின் பார்வை நிலைத்தது…

’ஆனா…. அந்த நிமிடம் உங்க முகத்தைப் பார்த்தேன் பாலா… உங்களுக்கும் என்னைப் போல உணர்வுகள் வந்திருக்குமா என்று…. ஆனால் நீங்க உங்க……என்றவள்’

“சாரி சாரி” …. என்று மீண்டும் தொடர்ந்தாள்

”மதுவோட நினைவுகளில் தான் இருந்தீங்க… அங்கதான் அதுதான் என் மனசில விழுந்த முதல் அடி….அதன் பிறகு… நம்ம ஃபர்ஸ் நைட்……. கண்ணியமா என்னை பார்த்த உங்க பார்வை… நீங்க என்னிடம் நடந்த விதம்…. மனைவியா எனக்கு விழுந்த இரண்டாவது அடி…….. என்னோட பெட்ல படுக்க விரும்பாத….. என்னை மூன்றாம் ஆளாய் தள்ளி நிறுத்திய விதம்…. இப்படி சொல்லிட்டே போகலாம்…. ஆனா இது எல்லாத்தையும் மீறி என் பெண்மைக்கே நீங்க கொடுத்த அடி எனும் போது…. அவள் கணவன் தொடர்ந்தான்….

“என்னோட பிறந்த நாள்ல… நீ தடுமாறி விழுந்த போது…. உன்னில் நான் மயங்காத விதம்…. அதுதானே” என்ற போது கீர்த்தி அவனை ஆச்சரியம் கலந்து பார்த்தாள்…. அவளைப் பார்க்காமலே தான் அவன் பேசிக் கொண்டிருந்தான்…

ஆனால்…. என் அம்மாவிடம்… உனக்காக பறிந்து பேசியது…. அந்த சௌந்தர்யா முன்னிலையில் விட்டுக் கொடுக்காமல் பேசியது…. மனதில் வலி இருந்தும்…. உனக்காக என் பிறந்த நாளை…உன் வீட்டில் கொண்டாடியது…. இது மட்டும் உன் நெஞ்சோடு கலந்த என் ஞாபகங்கள்… என் துணை இல்லாமல் உன் இறுதி வரை உன்னோடு கொண்டு போக நினைத்த நம் திருமண வாழ்க்கையின்… தடங்கள்…. “ இதுதானே கீர்த்தனா…. நீ சொல்ல வந்தது….

இன்னும் கூட சொன்னாய்…. உனக்கு ஏன் சிந்துவை மிகவும் பிடிக்கும் என்று….. சிந்துவைப் பற்றி பேசும் போதுதான் நான் என் வாய் மூலம் எந்த நிர்பந்தமும் இல்லாமல்… நம் உறவை….அதாவது கணவன்…மனைவி என்று… சொன்னேனாம்… கரெக்ட் தான கீர்த்தனா…. இது எல்லாம் எனக்குத் தெரிந்த விசயம் தானே கீர்த்தி…. புதிதாய் நீ சொல்ல ஒண்ணுமே இல்லையே

என்றவனை விழி உயர்த்திப் பார்த்தாள் அவனவள்…

“எனக்கு எப்போ தெரியும் என்று பார்க்கிறாயா…. இதெல்லாம் அன்று நீ என்மீது விழுந்து சொல்லி அழுது மயங்கியபோது… உன் சுய நினைவின்றி… உன் அடி மனதில் இருந்து வெளி வந்தவை…. அதன் பின்னர்தான்…………. உனை உணர்ந்து நான் உன்னில் பைத்தியமானேன்…….” என்றவன் இன்னும் கோபம் அடங்காமல் தான் இருந்தான் …

அவன் சொன்ன விதத்தில் அவனோடு இன்னும் ஒன்றியவள்….இப்போது தொடர்ந்தாள்….

பாலா…………. என்று நெகிழ்ந்தவள்…

“நேத்து நீங்க கேட்டீங்கள்ள…. என் கடந்த காலம் கேட்டு கஷ்டமாக இருக்கிறதா என்று…

“உண்மையைச் சொல்லப் போனா…. அதில் எனக்கு மகிழ்ச்சிதான்…. ஏன்னா… உங்க வாழ்க்கையில நான் தான்… மதுவுக்கு முன்னால் வந்திருக்கிறேன் என்ற உண்மை தெரிந்து…. மதுவுக்கு உங்க மேல இருக்கிற காதல் மட்டும் தான்… உங்க கடந்த காலத்தில என்னைக் கஷ்டப் படுத்திய விசயம்.. நீங்க அவங்க மேல வைத்திருந்த காதல் எல்லாம் இல்லை” என்ற போது

“ஏன் அதுலயும் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லயா” என்று கசப்போடு கேட்டவனைப் பார்த்து…

“இல்ல… அப்டி சொல்ல வரல நான்……. மது உங்க மேல வச்சுருந்த காதல்… எனக்கு புதிதாய் தெரிய வந்தது,,, அதனால் மனசு கொஞ்சம் கஷ்டம் ஆகி விட்டது… ஆனா அவங்க மேல உங்களுக்கு இருந்த காதல்………. அது எனக்கு உங்க கடந்த காலத்தில எனக்கு பழைய விசயம்…. தெரிந்த ஒன்றுதான்…… புதிதாக ஒன்றுமில்லை… சொல்லப் போனா.. மதுவைக் காதலிக்கும் போது கூட பெரிதாக ஒன்றும் செய்ய வில்லை…. மது உங்கள விட்டுப் பிரிந்த பின்னால் தான் உங்க காதலின் ஆழம் அதிகமாயிருக்குனு சொல்லலாம்… இத்தனை வருசம் காத்திருந்தது…… அத்தை-மாமா கூட சண்டை போட்டது…. அந்தக் காதல இழந்துரக்கூடாதுனு…. நெருக்கடில…. வேறு வழி இன்றி …என் சூழ்னிலையினை பயன்படுத்தி என்னை மணந்தது….. திருமணம் செய்தும் மதுவோட காதலனாவே இருந்தது…. என்றவள்… அவன் கண்களில் கலந்து

“தொட்டுத் தாலி கட்டிய மனைவியிடம் சிறு சலனம் கூட இல்லாம கண்ணியமாக நடந்தது” என்று சொல்லி முடித்தவள்….

“சோ அதுனால பெருசா வருத்தம்லாம் இல்லை….. சொல்லப் போனா… மதுவுக்கு கூட தெரியாது…. இந்த அளவுக்கு நீங்க அவங்க மேல நேசம் வச்சுறீக்கீங்களானு….. அவங்க மீதான உங்க காதலின் வலிமை தெரிந்த ஒரே ஆள் நான் மட்டும் தான்…. என்று அவனைப் பார்த்தவள்…. கண்களில் குறும்புடன்….

”ஆனா உங்களப் போய் துரத்தி துரத்தி லவ் பண்ணியிருக்காங்கலேனுதான் நினைத்து சிரிப்புதான் வந்தது” என்றவள்

“சிரிப்பு வரும்டி உனக்கு,,,, உன் பின்னால் நாயா அலையுறேன்ல…. நீ சொல்லுவ… இதுக்கும் மேலயும் சொல்லுவ” என்ற போது ஓரளவு நார்மல் ஆகி இருந்தான் பாலா

“ஆனாலும் உங்க கிட்ட என்ன இருக்குனு உங்களையும் துரத்தி,,, துரத்தி லவ் பண்ணாங்கனுதான் ஒரு டவுட்…. இது மதுவால மட்டும் இல்ல.. சௌந்தர்யா… அப்புறம்….க…என்று வாய் தவறி விடப் போனவள் தன் தோழியின் பெயரைச் சொல்லாமல்… இனி வரும் சந்திப்புகளில் இருவருக்கும் சங்கடம் ஏற்படும் என்று தவிர்த்தாள்…

”அப்புறம் வேற யாரு… “ என்று விடாமல் பாலா விடாமல் கேட்க

அசடு வழிந்தவளாய்

“வேற யாரு….. ராகவன் – மைதிலியோட ஸ்மார்ட் பொண்ணு……..Global Net MD பாலாவோட லூசுப் பொண்டாட்டி” என்று அவள் சொன்ன விதத்தில் அவள் மேல் இருந்த கோபம் எல்லாம் வடிய அவளை பொய்யாய் முறைத்து …அது முடியாமல்….. அவளை இறுக்கமாக தன் நெஞ்சோடு அணைக்கப் போக…. கையில் இருந்த தீக்காயம் உரசி வலியைக் கொடுக்க

“ஸ்ஸ்ஸ்ஸ் என்று உதறினான் பாலா……

“இப்போவது மருந்து போட்டுக்கங்க பாலா… என்றவளிடம்…. அதற்கு காரணமாக அவள் பேச்சு ஞாபகம் வர…. உடல் விறைத்தான் ….

அதை உணர்ந்தவள்…. சாரி….. என்று மனதாறக் கூறியவள்… தூரக் கிடந்த மருந்தை போய் எடுத்து வந்து அவன் கைகளில் போட்டுக் கொண்டே…. எனக்கு ஊர்ல இருக்கிறவங்க அத்தனை பேரும் விஷ் பண்றாங்க…. சிந்து….முந்தின நாள் ஞாபகம் வச்சு சொல்லிட்டு போறா…. வினோத்… புதுசா வந்த காதல்ல. கூட .என் மேல கோபம் இருந்தும் கூட மறக்காம பண்றான்…. கார்த்திக் எங்கோ இருந்து போன் பண்றான்… .கவி… அத்தை.. மாமா… விஸ்வம் மாமா… மோகனா அத்தை எல்லாரும் சொல்லியாச்சு…

”உருகி உருகி லவ் பண்ணுவாராம்.. வாழ்க்கையே நீதான்னு டையலாக் விடுவாராம்… ஆனா அவளோட பிறந்த நாளை மட்டும் மறந்துருவாராம்.. என்றவள் நிறுத்தி …. கண்களில் நீர் மல்க

”அது மட்டும் இல்லை இத்தனை வருசம் இந்த வீட்ல…. எப்டிலாம் இருந்திருப்போம் தெரியுமா… 12 மணிக்கு ஒவ்வொரு வருசமும்…. சந்தோசம் மட்டும் தான் பொங்கி வழியும்…. அந்த வருத்தம் வேறு… ரொம்ப பேசிட்டேன்…” என்று கூறியபடி அமைதியாக இருந்தாள்… ஞாபகங்கள் தந்த வேதனையில்…. பின் அதிலிருந்து மீண்டவளாய்

“கட்டின புருசன் மட்டும் சொல்லலைனா… கோபம் வருமா வராத சொல்லுங்க…. ” என்று மீண்டும் சண்டைக் கோழியாய்ச் சிலிர்க்க

“தப்புதான்…. இனி சாகிற வரைக்கும் மறக்க மாட்டேன் கீது….. போதுமா….. மொத்தமா பட்டுட்டேன்”

“ச்சேய் என்ன இது…எப்போ பார்த்தாலும்…. சாகிற வரை……. உயிரோட இருக்கிற வரைனு அபசகுனமா”. என்று கைகளால் பொத்தினாள் கீர்த்தி…

“அடிப்பாவி…. இன்னுமா கையால மூடுற” என்றவன் மெதுவாய் அவளை நிமிர்த்தி தன் இதழ்களை அவளொடு சேர்க்கப் போக………. அதில் உடல் சிலிர்க்க… மகிழ்வோடு ஒன்றப் போனவளுக்கு……….

அவன் இன்னொருத்தியின் உடைமை என்று.. ஆணியடித்து பதிய வைத்திருந்த அவளின் மனம் அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது………. அதிர்ந்தாள் கீர்த்தி….

ஆம்… கணவனோடு கலந்து… அவனோடு… ஒன்றப் போனவளின் மனதில்

மது எங்கிருந்துதான் ஞாபகத்தில் வந்தாளோ……… சட்டென்று விலகினாள்……… நீர் மல்க

தற்போது தன் நிலை என்ன… இனி கணவன் நிலை என்ன…. என்பதை உணர்ந்தவள்… விதிர்விதிர்த்து மனம் குன்றி கணவனை நோக்கினாள்……….. உள்ளம் துடிக்க…………..

“கீர்த்தி… இன்னும் என்னம்மா … என்னை நீ புரிஞ்சுக்க்கவே இல்லையா…. என்றவன்…. கைகளில் இருந்த சூடைக் காட்டி கிட்டத் தட்ட 29 வயசு எனக்கு… ஆனா 18 வயசுப் பையன் … ஒரு டீன் ஏஜ் பையன் மாதிரி வேலை பண்ணியிருகேனே… அப்போ கூட நீ என்னோட நிலைய புரிஞ்சுக்கலயா ” என்று பாலா…….. கன்ணில் வலியோடு பார்க்க….

கண்கலில் வழிந்த நீரைத் துடைக்கக் கூட மறந்தவளாய்…. வெற்றுப் புன்னகையினை உதடுகளில் தவழ விட்டவள்…

அவன் சொன்ன அவன் காதலின் அளவை விட்டு விட்டாள்…

“மது சொன்ன மாதிரி… நெருப்பு வளையம் தான் போல பாலா……. நெருங்க முடியல என்று சொன்னவளின் வாய் சிரித்தாலும் உதடுகள் துடித்தன…. கண்ணில் கண்ணிர் காட்சியை மறைத்தன…

அவனைப் பிடித்திருந்தும்… உடலும்… உள்ளமும் அவனுக்காக… அவன் தொடுகைக்காக ஏங்கியபோதும்……… அவளுக்கு… அவனுக்குமான உறவில் அவள் போட்டு வைத்திருந்த வேலி இன்றும்…. அவளை தள்ளி நிறுத்தியது

“பாலா……. I love you……………..” என்று அவன் சட்டையை இறுக்கியவள்…. எனக்கு உங்கள… உங்கள மட்டும் தான் பிடிச்சுருக்கு…. ஆனா……… இதுக்கு மேல என்னால் முடியலயே பாலா………… என்னால என் மனச மாத்த முடியல… உங்களோட கூடத்தான் நினைக்கிறேன்… ஆனா ஏதோ தடுக்குது………. என்னை மன்னிச்சுடுங்க” என்று கதற ஆரம்பித்தவளைப் பார்த்து…………….

அவள் சொன்ன வார்த்தை தந்த அதிர்ச்சியில் பிரமை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான் பாலா… யோசிக்கக் கூட முடியாமல்……………

கதறியவளைப் பார்த்தபடி இருந்தான் பாலா…….. என்ன சொல்வது… என்ன செய்வது,,,,, காதலையும் சொல்லி விட்டாள்… ஆனால் வாழவும் முடியாதென்றால்……….. திணறித்தான் போனான் பாலா………. அவளுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவள் தலையைத் தடவியபடி அமர்ந்திருந்தவனின் மனதில் மீண்டும்…………. பூமாரியைப் பொழிகிறேன் என்று அமில் மழையைப் பொழிந்தாள் கீர்த்தி….

சில நிமிடங்களில் அழுகையை நிறுத்தியவள்…. முகத்தை நன்றாக அழுந்தத் துடைத்தாள்…

எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்த கணவனைப் பார்த்தவள்… அவன் முகம் பற்றி தன்னிடம் திருப்பினாள்… தீர்மானம் செய்தவளாய்…

”நான் எதுக்கு இதுக்கு போய் அழனும்…….. எனக்கு உங்க கூட வாழனும்…. நான் முடிவு பண்ணிட்டேன்…. பாலா… என்னை நாளைக்கே …. ஒரு சைக்காலஜிஸ்ட்ட கூட்டிட்டு போங்க…. அவங்க எனக்கு கண்டிப்பா கவுன்ஸ்லிங் கொடுப்பாங்க….. கவுன்ஸ்லிங்-ல கூட என்னால் முடியலேன்ன்னா… ஹாஸ்பிட்டல்ல தங்கி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன் பாலா… கண்டிப்பா மனசு மாறும்னு நினைக்கிறேன்…. பைத்தியத்துக்கு வைத்தியம் தேவைதான் இல்லையா.. “ என்று நோகாமல் இடியை இறக்கியவளைக் கட்டியனைத்து கதறும் முறை பாலாவாய் ஆனது…………

கீர்த்தி இம்முறை அழ வில்லை….

அவனோடு வாழ முடியாதோ……. அவனின் தேவைகளை தீர்க்க முடியாதோ…. என்ற ஏக்கம் தான் அவள் விழிகளில் இருந்தது,,,,

கம்பீரமாய் மட்டும் இருந்தவன்… ஆண்மகனாய் எப்போதும் எந்தச் சூழ்னிலையிலும்…. கண்ணீரை தனக்குள் அடக்கும் வித்தை அறிந்தவன்.. தன் மனைவியின் மனநிலை அறிந்து…..அத்தனையும் மறந்து கதறினான்…

கதறியவனை தடுக்கும் வழி தெரியாமல் …

“பாலா……… 10 நாள்… இல்லை ஒரு மாசம் … எல்லாம் சரி ஆகிடும் பாலா…. நாம நாளைக்கே நல்ல டாக்டர் கிட்ட கவுன்ஸ்லிங் போகலாமா” என்றவளை பார்த்து… அழுகையை நிறுத்தியவன்… அவளை தன்னிடமிருந்து விலக்கி…….அவள் முகத்தை தன் கைகளால் தாங்கியவன்

“ஏய்ய்ய்ய்ய்ய்…………. இப்போ என்ன ஆகிருச்சுனு…. இந்த மாதிரிலாம் உளர்ற…. எவ்வளவோ நாளிருக்கு…. உனக்கும் எனக்கும்…. அப்டி என்ன வயசாகிப் போச்சு…. பார்க்கலாம்….. கண்டிப்பா…. நீ மாறுவடா…. நீ இந்த அளவுக்கு இறங்கி வந்துருக்க… அதுவே போதும்… சீக்கிரம் என்னோட வாழ ஆரம்பிப்ப…. எனக்கு நம்பிக்கை இருக்கு கீது” என்று தீர்மானமாகச் சொன்னவனிடம் பிடிவாதம் பிடித்தாள் கீர்த்தி…..

“எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை பாலா………. ப்ளீஸ்…. அட்லீஸ்ட் ஒரு ட்ரையாவது பண்ணலாம்….” என்று கெஞ்ச…. மனைவியிடம் என்று அவன் பேச்சு வென்றிருக்கிறது…. சரி என்று தாங்க முடியா பாரத்துடன் தலை ஆட்டினான் பாலா…

அவனிடம் பேசி ஜெயித்தவள் எல்லாம் பேசி முடித்து விட்டோம் என்று நினைத்தவள் போல்…. அவனைப் பார்த்து சிரித்து …..

“பாலா… இந்த வினோத் இருக்கான்ல……. அவன் எனக்கு தப்பா பேர் வச்சுட்டான்…. கீர்த்தி-குறத்தி ய விட கீர்த்தி-கிறுக்கினு வச்சுருந்துருக்கலாம்…. இதுதான் எனக்கு பொருத்தமா இருக்கு இப்போ…. என்று சொல்ல

கணவனோ அவனுக்குள் இறுகிக் கொண்டிருந்தான்………. அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும்………

ஒருவழியாக……….கோபம்..துக்கம்..வருத்தம்…ஏக்கம்…தவிப்பு……..மகிழ்ச்சி…சஞ்சலம்..என தன் உணர்வுகளை எல்லாம் அன்றோடு வடித்தவள்….

தன் பாரம் எல்லாம் இறக்கி வைத்தவளாய்…… நீண்ட நாள்களுக்குப் பிறகு நிம்மதியாக தன்னவன் மடியிலேயே துயில.. கலைந்திருந்த அவள் சேலையை எல்லா விதத்திலும் சரி செய்து…. வாகாய் அவளை உறங்கச் செய்தவனுக்கு…. அலங்கோலமாய்க் கலைந்து போயிருக்கும் தங்கள் வாழ்வை சரி செய்யும் வழி தெரியவில்லை

பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டிருந்தவளை… சிறகுகளைப் பிய்த்து புழுவாய்த் துடிக்க விட்டு விட்டோமோ என்று மருகினான்…..

இருள் நிறைந்த தன் வாழ்க்கையை…… மனைவியோடு அதைக் கடக்கும் வழி தெரியாமல் தடுமாறினான்…

தங்களைச் சுற்றி துக்கம் என்னும் கடல் சூழ… அதை அவளோடு நீந்தி கரை ஏறும் முறை தெரியாமல் மூச்சுச் திணறினான் பாலா…

மதுவின் காதலனாய் அவன் செய்த செயல்கள் எல்லாம்… கீர்த்தனாவின் கணவனாக மாறியபோது திரும்பி வந்து அவனையே குத்திக் கூறாக்கின …….

பல திட்டங்கள் போட்டு கீர்த்தனாவின் வாழ்க்கையை நாசமாக்கியவனுக்கு… அதை நேராக்க நினைக்கும் போது.. அவனை விட்டு திட்டங்கள் ஓடி மறைந்து கொண்டன….. அவன் மூளை செயலிழந்தது போல் இருந்தது…

எதை வரமென்று…… பூரித்திருந்தானோ…………… அது …….. நினைக்கும் போதே கலங்கினான்…

ஆம்…. மதுவின் காதல் தனக்கு கிடைத்த சாபம் என்று தன் மனைவியின் நிலைமையில் மனம் புளுங்கினான் பாலா

கடைசியில் அவளுக்கு தன்னால் கிடைத்தது பைத்தியக்காரப் பட்டமா என்ற பாரம் அவனைத் தாக்க….. தூக்கம் மறந்து…. துக்கம் கலங்கடிக்க… துடிக்க ஆரம்பித்தான் பாலா……

எப்போது உறங்கினான் என்று அவனுக்கே தெரிய வில்லை………

அவர்கள் இருவருக்கும் மேலே … ……….

நேசம் மட்டுமே தவழ்ந்த மைதிலி-ராகவன்… முகமோ…. நல்ல வேளை… காலம் தங்களை………. தங்கள் மகளின் இந்தக் கோலத்தை பார்ப்பதிலிருந்து காப்பாற்றி விட்டது என்று சிரித்த படி இருந்தது….

1,911 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

תגובות


© 2020 by PraveenaNovels
bottom of page