அத்தியாயம் 47:
மனைவியை ரசித்த படியே காரை ஓட்டிச் சென்ற பாலாவுக்கு… கீர்த்தியின் நடவடிக்கையில் ஏதோ ஒன்று புதியதாய் உணர்ந்தான்… அது என்னவென்று உணர முடியவில்லை….அவனுக்கு..
லிஃப்டினுள் இருவரும் ஒன்றாகச் செல்ல… கைகெட்டும் தூரத்தில் … கண்ணுக்கு அழகாய் மனைவி…….. ரசிக்க மட்டும் தான் முடிந்தது அவனுக்கு… கண்களுக்கு மட்டும் கிடைத்த வாய்ப்பை பாலாவும் முடிந்த அளவு பயன்படுத்திக் கொள்ள… அவளை அணு அணுவாய்.. உரிமையுடன் தன் பார்வையை அவள் உடலோடு உறவாட விட்டான்…..
கீர்த்தனாவோ உரிமையோடு தன் மேல் படிந்த அவனது பார்வையை தடுக்கும் உரிமை அற்றவளாய்… அவஸ்தையோடு கீழே குனிய… தன் தேகத்தில் அவனின் பார்வை தீண்டிய இடங்கள் எல்லாம் அனல் மேல் பனி போல அவளைச் சிலிர்க்க வைக்க சுவரோடு ஒன்றினாள்…
இரு நிமிடத்திற்கும் குறைவான அந்த லிஃப்ட் பயணம்…. பாலாவுக்கு கண நேர உற்சாகம் கொடுக்க…. கீர்த்தனவிற்கு… யுக நேர அவதியைக் கொடுக்க….
ஒருவாறாக.. அவர்களுக்கு காமன் வைத்த சோதனையை முறியடித்து… அலுவலகத்தினுள் நுழைந்தபோது மணி 8.30…………
காவலாளியைத் தவிர யாரும் வந்திருக்க வில்லை…. தனது அறைக்கு பாலா செல்ல…. கீர்த்தி தன் இருப்பிடத்தில் அமர்ந்து… தன் கணினியை உயிர்ப்பித்தாள்…..
½ மணி நேரம் கழிய…. பாலாவுக்கு போரடிக்க… மனைவியை எட்டிப் பார்த்தான்… அவளோ முன்னால் இருந்த திரையை வெறித்த படி …சோகமே உருவாக அம்ர்ந்திருந்தாள்… கார்த்திக் ஞாபகம் வர… அவனை ஆன்லைனில் இருக்கிறானோ என்று எதிர்பார்க்க….. அவன் அலுவலக சாட் ஐடியில் ஆன்லைனில் இல்லை…. ப்ரைவேட் ஐடி அவர்கள் அலுவலகத்தில் பயன்படுத்த முடியாது என்பதால்… அவனோடும் பேச வில்லை என்றால்… வேறு என்ன பண்ணூகிறாள் இத்தனை சீக்கிரம் வந்து” என்று யோசித்தபடி…. கீர்த்தியின் ஐடி காட்டிய அவெய்லபில் பச்சை நிறமும்… அவள் அணிந்திருந்த புடவையின் நிறமும்…. அவன் காதலுக்கும் பச்சைக் கொடி காட்டுவதைப் போல் தோன்றி… அவனைக்… கணவனாக உசுப்பேற்ற…
அலுவலக ஐடி என்று தெரிந்து முதலில் MD யாகத் தயங்கி பின் ….என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கணவனாக வென்று…. ஹாய் என்று அனுப்பினான்…
பதில் இல்லை
மீண்டும் அதையே அனுப்ப ரிப்ளை இல்லை…
”சேலையில் அழகா இருக்கடி…. என்னைக் கொல்லுற…..” என்று அனுப்ப…
இதைப் பார்த்த கீர்த்தி மனம் மயங்கியது…… ரொம்ம்ம்ம்ப சீக்கிரமா சொல்லிட்டான்… என்று மனதில் நினைத்தாள்…
ஆனாலும்… தன் கோபம் குறையாமல்
ஸ்மைலியை மட்டும் அனுப்பினாள்… கோபத்தைக் குறிக்கும் வகையில்
இப்போது பாலா… சிரித்தபடி …காதலைத் தெரிவிக்கும் வகையில் ஒரு ஸ்மைலியை அனுப்ப
இவள் அவனை அடிப்பது போல ஸ்மைலி அனுப்ப…
அவனோ பதிலுக்கு சமாதானக் கொடி பறப்பது போல ஸ்மைலி அனுப்ப…. இருவரும் அதற்கடுத்த 20 நிமிடமும் ஸ்மைலியை அனுப்பி சிறு குழந்தைகள் போல் விளையாண்டு கொண்டிருக்க….. அலுவலகத்திலும் ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து இருந்தனர்….. பாலாதான் முதலில் விளையாட்டை நிறுத்தி….
“பை..” என்று சொல்லி விட்டு MD ஆக தனது வேலைகளில் மூழ்கினான்…
அதற்கடுத்து அவள் அனுப்பிய பதிலை படிக்காமால் இன்னொரு கணிணியில்…தனக்கு வந்த மெயில்களுக்கு பதில் அனுப்பும் வேலையில் மூழ்கினான்….
அவள் அனுப்பிய பதிலில்
“MD யா இருக்க மட்டும் தான் லாயக்கு…. கம்பெனிய கட்டிட்டே அழு……” என்று முடித்திருந்தாள்…. அவனிடமிருந்து அதற்கு பதில் வராமல் போக ஸ்மைலிகளின் சராமரியான ஊர்வலம் அவனது ஐடிக்கு சென்று கொண்டிருந்தது…..
10 மணி ஆக…. அவளின் பிறந்த நாள் வாழ்த்தை அவன் அவனாக யோசித்து சொல்லப் போவதில்லை என உணர்ந்தவளுக்கு கண்கள் கலங்கியது,,,, இதுதானா …இவ்வளவுதான் அவன் தன் மீது வைத்துள்ள காதல்..என்று நினைக்க பொறுமியது மனம்…. அந்த நேரம் கவி வர.. வந்தவள்…. தன் வாழ்த்தைச் சொல்ல…. கவியை அடிக்காத குறைதான்…
“போடி… எனக்கு விஷும் வேண்டாம்… ஒண்ணும் வேண்டாம்… இருக்குற கடுப்புல ” என்றவளைப் பார்த்து திகைத்த கவி…. சற்று யோசிக்க….
கீர்த்தி கட்டியிருந்த புடவையைப் பார்த்தவள்…..
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கலக்குற கீர்த்தி…. நம்ம… “ என்று சொல்ல கீர்த்தி நெற்றிக் கண்ணைத் திறக்க
“அம்மா தாயே முறைக்காத நம்ம MDன்னு சொல்ல வந்தேன்… எனக்கு எதுக்குப்பா வம்பு… உன் ஆளு… பெரிய பெர்த் டே ட்ரீட் குடுத்துட்டாரு போல…. நீ சூடா இருக்கறதப் பார்த்தாலே தெரியுது…” என்று கண்ணடிக்க
“மண்ணாங்கட்டி…. இவனுக்கெல்லாம் எதுக்குடி கல்யாணம்… பொண்டாட்டி… .குடும்பம்னு…. பெரிய ட்ரீட்டாம்…. விஷ்ஷே இன்னும் பண்ணல… என் பிறந்த நாளே ஞாபகம் இல்லை… இவருதான் எனக்கு ட்ரீட் தரப் போறாரு… போய்டு உன் MD மேல இருக்கிற கோபத்தில உன்னை அடிச்சுரப் போறேன்…” என்று வெடித்தவளைப் பார்த்த கவிக்கு…
பாலா..இவளது பிறந்த நாளை மறந்து விட்டாரா… என்று அதிர்ச்சியில் நிற்க
“இன்னைக்கு 10.30 வரைக்குதான் டைம்…. அதுக்குள்ள வந்து சொன்னான்னா தப்பிச்சான்… இல்ல” என்று மரியாதை எல்லாம் மறந்தவளாய்ச் பேசியவளைப் பார்த்து பிரமித்தபடி நின்ற கவிக்கு அது என்ன 10.30 டைம் என்று யோசிக்க… அது அலுவல மெயிலில் வரும் பிறந்த நாள் வாழ்த்தை கீர்த்தி சொல்லுகிறாள் என்று உணர… உடனெ மணியைப் பார்க்க
10.15… எனக் காட்ட…
“ஒன்று பாலாவிடம் சொல்ல வேண்டும்… இல்லை…மெயில் அனுப்பாமல் தடுக்க வேண்டும்….இதில் ஒன்று நடக்காமல் போனாலும் …பாலாவை இவள் படுத்தி எடுக்கப் போவது திண்ணம் என்று உணர்ந்து… கீர்த்தியிடம் இருந்து… கிளம்பப் பார்க்க. அவள் எண்ண ஓட்டத்தை உணராதவளா கீர்த்தி….
கவியை இழுத்து தன் அருகில் அமர வைத்தவள்..
‘”மவளே…. இங்க இருந்து ஒரு அடி எடுத்து வைக்கக் கூடாது…. உன்னைப் பற்றி எனக்குத் தெரியாது… சப்போர்ட் வேற அவருக்கு …. .” என்று சிறை வைத்தாள் அவளை… போனைக் கூட பறித்து வைத்துக் கொண்டாள்…
சற்று நேரத்தில் அவளின் பிறந்த நாள் வாழ்த்து தாங்கி வந்த மெயில்…” புதியதாய் வந்த மெயில் பகுதியில் அவளைப் பார்த்து சிரிக்க…
அங்கு பாலாவோ………….
தங்கள் திருமண நாளை வைத்து திட்டம் தீட்டியிருந்தவன் …அவள் பிறந்த நாளை நினைவில் வைக்க கோட்டை விட்டிருந்தான்
“உச்சக் கட்ட அதிர்ச்சியில் உறைந்திருந்தான்…… தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே அவனுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது…. நா வறண்டது போல் இருக்க… ஒரு பாட்டில் தண்ணிரை ஒரே மடக்கில் குடித்தான்…. ஆனாலும் அவனால் முடிய வில்லை…
வேகமாக வெளியே வந்தவன்…. கீர்த்தியைச் சுற்றி இருந்த மற்ற ஸ்டாப்ஸின் மத்தியில் நிற்க மனம் இல்லாமல் மீண்டும் அறைக்குள் வந்தவன் இருக்கையிலேயே தொப்பென உட்கார்ந்து விட்டான்….
அந்த நேரம் கார்த்திக் வேறு ஆன்லைனில வந்து அவனுக்கு அழைப்பு விடுக்க…
வெறு வழி இன்றி அவனுக்கு ரிப்ளை செய்ய…
அங்கு ஏதோ வேலையில் பிரச்சனை என்று 10 நிமிடம் அவனோடு பேசிவிட்டு…. கட் செய்யப் போக
பாலா கேட்டான்…
“கார்த்திக் இன்னைக்கு நீங்க லீவ்தான சொன்னீங்க.. ”என்ற போது…
“இப்போதும் லீவில் தான் இருக்கிறேன்…. கொஞ்ச நேரம் முன்னால் கீர்த்திக்கு பேசினேன்…. இன்னைக்கு அவளோட பிறந்த நாள் என்று… சரி அப்படியே உங்களுக்கும்… ரெக்குயர்மெண்ட் ப்ராப்ளம் பற்றி க்ளைண்ட் சொன்னதையும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று ஆன்லைனில் வந்தேன்” என்று நோகாமல் பாலாவின் தலையில் இடியை இறக்கினான் கார்த்திக்…
அடுத்து அருந்ததி வேறு போன் செய்து… இருவரும் கோவிலுக்கு போய் வந்தனரா என்று விசாரிக்க
தலையில் கைவைத்து படுத்து விட்டான் பாலா….
காலையிலிருந்து நடந்த ஒவ்வொன்றையும் யோசித்து பார்த்தான் பாலா….
அப்போது அவன் படிக்காமல் விட்ட அவளின் மெஸெஜ் இருக்க அதைப் படித்தவனுக்கு மின்னலாய்… ஒன்று வெட்ட… கண்களில்… மகிழ்ச்சி ஆனந்த தாண்டவம் ஆடியது…. கீர்த்தனாவின் நடவடிக்கைகளை நினைத்து பார்த்தவனுக்கு அது எல்லாம் அவளின் தன் மீதான உரிமை கலந்த ஊடல் என்பது புரிய…. இதயம் ஆனந்தக் கூத்தாடியது,… கீர்த்தனா இதுவரை அவனிடம் தானாய் வலிய வந்து அவனிடம் எந்த உரிமையையும் எதிர்பார்த்ததில்லை… எதிலும் ஒரு தயக்கம் இருக்கும்… இல்லை தனக்குள்ளாக ஒளிந்து கொள்ளும் இயல்பு இருக்கு,,,, இது இரண்டும் இல்லை என்றால் தன்னை மறந்து அவளின் உணர்வுகள் வெடித்தவளாய் காட்சி தருவாள்… ஆனால் இன்று… அவள் செய்தது எல்லாமே தன் உணர்வுடன்… அவனிடம் உரிமையுடன் போட்ட சண்டைகளை நினைத்தவன்… தன்னை கட்டுப் படுத்த முடியாமல் கீர்த்திக்கு போன் செய்ய… அவளோ அதைக் கட் செய்து கொண்டே இருந்தாள்
------------
வேறு வழி இன்றி கவிக்கு போன் செய்து அவளிடம் கொண்டு போய்க் கொடுக்கச் சொல்ல
அவளோ
“அடப் போங்க சார்… அவ சுனாமியும்…சூறாவளியும் கலந்த கலவைல இருக்கா… என் மொபைல குடுத்தேன்… அவ்வளவுதான்…. 20000 ஹோகயா” என்று அவனின் நேரம்… காலம் தெரியாமல் பேச
“கவி உனக்கு போன்தானே … அவ ஒடச்சா நான் வேற ஒரு போன்… ஏன் ஐ-போனே வாங்கித் தருகிறேன்…. கொண்டு போய்க் குடு.. ப்ளிஸ்” என்று கெஞ்ச
“எப்டி சார் இப்டி மறந்தீங்க…. கஷ்டம் தான்…” என்ற படி போனை
ஓய்வறையில் தலைசாய்த்துப் படுத்திருந்த அவளிடம் கொடுக்க… மொபைலை வாங்கியவள்..பார்த்துவிட்டு… அலட்சியமாக… அதை அப்படியே வைத்து விட்டு… மீண்டும் தலை சாய்த்து படுக்க ஆரம்பிக்க…
கவிக்கு கோபம் ஏறியது..
“ஏய்… என்னடி….ரொம்பத்தான் பிகு பண்ற…. இப்போ பாலா என்ன பண்ணனும்னு நீ நினைக்கிற…. உன் கால்ல விழுந்து… மறந்துட்டேன்… என்ன மன்னிச்சுடுனு கெஞ்ச சொல்றியா…. ஒரு மனுசன் இறங்கி வந்தா… நீ இப்டிதான் தூக்கிப் போட்டு மிதிப்பியா…. நானும் இங்க வந்ததுல இருந்து பார்த்துட்டுதான் இருக்கேன்….ஒண்ணு அவர்கூட சேர்ந்து வாழு…. இல்ல அவரை விட்டுத் தொலை…. ரெண்டும் பண்ணாம ஏண்டி உன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு அவரையும் இந்தப் பாடு படுத்தற…. பார்க்கவே பரிதாபமா இருக்கு…. என்கிட்ட கூட கெஞ்சறாரு….“ என்றவளின் ஆவேசப் பேச்சில் கீர்த்தியும் ஆவேசமானாள்…
“ஓ…. அவர் மேல பரிதாபம் வருதா மேடத்துக்கு… ஏன் வராது உனக்கு…. இந்த வருசம் நான் என் பிறந்த நாளைக் கொண்டாடக் கூட கூடாது… என் அப்பா ..அம்மா இறந்த வருசம்…. இன்னைக்கு அவங்க ரெண்டு பேரோட கல்யாண நாளும்… இத்தனை துக்கம் எனக்கு… எனக்கு எப்படி இருந்திருக்கும்… இருந்தாலும்… இவன் எனக்கு ஒரு விஷ் பண்ணுவான்னு… நைட் 12 மணில இருந்து காத்துட்டு இருக்கேன்… என்னைப் பார்த்த உனக்கு பரிதாபம் வரல… அவனப் பார்த்தா உனக்கு பரிதாபம் பொத்துகிட்டு வருதோ… சரி நைட்டுதான் மறந்துட்டான்…. மனசு எல்லாம் துக்கம்…. போன வருசம் எப்படி இருந்தோம்… இந்த வருசம் எப்படினு.. இருந்தாலும்… இவன் கண்டுபிடிக்க வேண்டுமென்று மனச கல்லாக்கிகிட்டு… புடவையை கட்டி… அலங்காரம் பண்ணிட்டு… இவன் முன்னால போய் நின்னா…. எதுக்கு இவ சேலை கட்டி இருக்கானு தெரியாம முழிக்கிறான்…… இவன் என்னை உயிரா நினைகிறானாம்…. சும்மாடி… இவன் மனசுல நான் இல்ல………….. எப்போதுமே இல்ல…….. அவனுக்கு அவன் ம……. என்ற போதே பாலாவின் கரங்கள் அவளது வாயை பொத்திவிட்டன…
கவி….என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தபடி நிற்க….
போனின் வழியே அவள் பேசுவதை எல்லாம் கேட்டவன் அங்கு வந்திருந்தான்
“ப்ளிஸ்… கீர்த்தி… இதுக்கு மேல எதுவும் பேசாத…. நான் மன்னிப்பு கேட்கக் கூட அருகதை இல்லாதவன் தான்…. ஆனா என்ன வேண்டும்னாலும் பேசு… ஆனா என் மனசுல நீ இல்லைனு மட்டும் சொல்லாத…. அதுல நீ……..” என்கின்ற போதே
இகழ்ச்சியாகச் சிரித்தாள் கீர்த்தி
“பாலா… இங்க நான் எதுவும் பேச விரும்ப வில்லை…. பேசினால் நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையும் தான் இங்கு கேலிப் பொருளாகும்… பிளீஸ் இந்த இடத்தை விட்டுப் போங்க… கவி கேட்டா… அதில ஏதோ நான் என் ஆதங்கத்தை கொட்டிட்டு இருக்கேன்…” என்றவளிடம்
“சரி… நான் எதுவும் பேசலை…. வா.. நாம் ஷாப்பிங் போய்ட்டு வரலாம்…” என்று அவளை அழைக்க…
கையெடுத்து கும்பிட்டு விட்டாள் கீர்த்தி
“பாலா… என்னைக் கொல்லாதீங்க… நான் என்ன நீங்க கிஃப்ட் வாங்கிக் கொடுக்க வில்லையென்று இப்படி இருக்கிறேன் என்று நினைத்து விட்டிற்களா….. பணத்துக்காகத்தான் உங்களை திருமணம் செய்தேன்… அதற்காக இப்படியெல்லாம் நினைக்கிறீர்களா…. ச்சேய்… போய்டுங்க… இதுக்கு மேல இங்க ஒரு நிமிசம் நீங்க இங்க இருந்தீங்கன்னா… நான் வீட்டுக்கு போய்ட்டே இருப்பேன்… இன்னைக்கு என் டீம் ட்ரீட் இருக்கு….. நான் இல்லாம போனா… எனக்கு ஆயிரம் கேள்வி வரும் என்றுதான் இங்கு இருக்கிறேன்… இல்லை… என்னைத் தொந்திரவு செய்வேன் என்று நினைத்தால்… எதையும் பார்க்க மாட்டேன் …. போய்ட்டே இருப்பேன் என்று…. உதடுகள் துடிக்க பேசியவளிடம்… பாலா எதையும் சொல்ல முடியாமல்… பேச முடியாமல் மனம் வலிக்க வெளியேறினான்…
கவியோ…. யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மௌனமாய் இருவரையும் திகிலுடன் பார்த்தபடி இருந்தாள்..…. அதிலும் தோழியின் கோபமும்…. பாலாவின் அமைதியும்…. வாழ்க்கைப் பயணம்… காலம் என்னும் மந்திரக்கோல் சுழற்றும் சக்கரம் என்பதை உணர்ந்தாள்…
கீர்த்தியோ இறுகிய முகத்தோடு அங்கிருந்து தன் இருப்பிடத்திற்குச் சென்றாள்….
கிட்டத்தட்ட 4 மணி அளவில் கீர்த்தி மற்றும் கேசவன் டீமில் உள்ள அனைவரும் கிளம்ப… கீர்த்தனாவும் அவர்களுடனே கிளம்பி விட்டாள்…. கவி அவள் டீம் இல்லை என்பதால் அலுவலகத்திலே தங்க…. பாலாவும் அவர்களோடு கலந்து கொள்ள… கீர்த்தனா கிளம்பிய 10 நிமிடத்தில் கிளம்பிச் சென்றான்…
கிட்டத் தட்ட 8 மணி அளவில் அனைவரும் பார்ட்டி முடிந்து வெளியேற…… கீர்த்தனா…பாலாவிற்கு கோபத்தை வரவழைக்கும் ஒரு காரியத்தை செய்தாள்…
அது பாலாவுடன் காரில் சென்று ஏறாமல்… ஆட்டொவை அழைக்க…. அவளின் செயலில்… ருத்ரனாய் ஆனான்…
“கீர்த்தி…என்ன விளையாட்டு இது…. என்ன கோபம் என்றாலும் …. வா வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம்…”
“முடியாது… நான் வர மாட்டேன்………..” என்று அழுத்தமான முகத்தோடு பிடிவாதம் பிடிக்க... அவன் பிடியை விலக்கியவள்… ஆட்டோவில் ஏறியபடி பாலா வீட்டு முகவரியினை வேண்டுமென்றே அவன் முன் சொன்னாள்….
அதில் ஓரளவு கோபம் தணிந்த பாலா…….. அவள் பின்னே காரை எடுத்து வர… ஆட்டோ ஒரு சிக்னலில் அவன் கண் பார்வையில் இருந்து மறைய.. வேறு வழி இன்றி தன் வீட்டை அடைந்தான்…
ஆனால் கீர்த்தி இன்னும் வர வில்லை என்ற அருந்ததியின் பதிலில் அதிர்ச்சியுற்ற பாலா…
மனம் முழுதும் பதற்றத்துடன் …உடனே கீர்த்தனாவிற்கு போன் செய்ய…. அவள் அதனைக் கட் செய்தபடி இருக்க…. அருந்ததியோ பதற்றம் நிறைந்த விழியோடு என்ன ஆயிற்று என்று விசாரிக்க,….
நடந்ததைக் கூறியவன்…. மனம் பட படத்தவனாய்…
“போனை எடுக்க மாட்டேங்கிறாம்மா… பயமா இருக்கு” என்று தளு தளுக்க…
அருந்ததிக்கு மகனின் நிலையைப் பார்த்து பெற்ற வயிறு பரிதவித்தது. இருந்தாலும்…ஆறுதல் படுத்தும் விதமாக
“என்னடா… நீ … ஏன் இப்படி பண்ணினாய்… அவ எங்க போகப் போறா… வினொத் வீட்டுல இருக்கணும்… இல்ல அவ வீட்ல இருப்பா…..” என்றபடி தன் மொபைலில் இருந்து அழைக்க…. இப்போது போனை எடுத்தாள் கீர்த்தி….
”கீர்த்தி” என்று அருந்ததி ஆரம்பிக்க பட்டென்று போனைப் பறித்த பாலா
“கீர்த்தி இப்போ… எங்க இருக்க…. ஏன் இப்படி பண்ணுகிறாய்” என்று பேச…
“எதுக்கு இப்போ… இப்படி சீன் போடறீங்க… நான் எங்க வீட்லதான் இருக்கேன்… எனக்கு எது நிரந்தரமான இடமோ… அங்குதான் இருக்கேன்… போதுமா…. இங்க வந்தீங்க அப்புறம் நான் பொல்லா” என்ற போதே போனைக் கட் செய்தவன்… காரில் ஏறி பறந்தான்…
அருந்ததியோ இது எல்லாம் என்ன சோதனை…. என்று மருகினாள்
-------
கீர்த்திக்கு அழுதழுது கண்கள் சிவந்து…. முகமெல்லாம் வீங்கி இருக்க…. மனம் முழுக்க கோபம் கோபம் கோபம் தான்… தன் பிறந்த நாளைக் கூடத் தெரியவில்லையே… அவளுக்கு தன்னவன் மனதில் தான் இருக்கிறோமோ இல்லையா…. இதுவே இப்போது மிகப் பெரிய சந்தேகத்திற்கு வந்து விட்டது… அதை நினைக்கும் போதே கீர்த்தி… நீ செய்வது எல்லாம் சரியே இல்லை… மிகவும் சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொண்டிருக்கிறாய் என்ற மனசாட்சியின் அறிவுரையையும் கணவன் மேல் கொண்ட காதலால் புறம் தள்ளினாள்….
அப்படியே புடைவையைக் கூட மாற்றாமல்… வெற்றுத் தரையில் படுத்திருந்தாள் கீர்த்தி…. ஆனால் விழிகளோ…. திறந்திருந்த நிலையில் நீரை வடிக்க… உதடுகள் துடித்த நிலையில்…கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரியின் நிலைமையில் இருந்தாள்….
மனமெங்கும் பாலாவே வியாபித்து இருந்தான்……. கூடவே அவனின் கடந்த காலமும் அவளை நோக வைக்க… நேற்று இரவிலிருந்து அவனுக்காக.. அவன் ஒரு வாழ்த்துக்காக தவித்த தன் வெட்கம் கெட்ட மனதை வெறுத்தாள் அவள்….…….
வினோத் சொன்னது போல் தான் அவனிடம் மயங்கிக் கிடக்கிறோமோ….. என்று நினைத்தவளுக்கு… வினோத் நேற்றுக் கூறிய வார்த்தைகள்…. இன்று அமிலத்தை ஊற்றியது போல் இருந்தது….
மனைவி பைத்தியக்காரி போல் மன்றாடிக் கொண்டிருக்க… கணவனோ….. கண் மண் தெரியாமல் காரை ஓட்டி வந்து கொண்டிருந்தான்… கீர்த்தி செய்து கொண்டிருக்கும் வேலைகளில்… அவள் மீது கோபம் இருந்தாலும்…. நேற்று இரவிலிருந்து தன் வாழ்த்துக்காக பரிதவித்த தன்னவளின் நிலைமை அவனுக்கு புரிய… தன் தவறு புரிந்து கோபத்தை அடக்கிக் கொண்டான்… காரை நிறுத்தியவன்… லிப்டினில் கூட நுழையாமல்… இரண்டு இரண்டு படிகளாய் தாவி ஏறினான்…. மனைவி எந்த நிலையில் இப்போது இருப்பாள் என்பதை அறிந்து…
தாழ் போட்டிருந்த கதவைத் தட்ட.. அவளோ திறக்காமல் அடம் பிடிக்க… போனில் இருந்து கால் செய்ய… அதை எடுக்காமல் பிடிவாதம் பிடிக்க…. பாலா கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொறுமையை இழந்து கொண்டிருந்தான்… அவள் மீதுள்ள கோபத்தை கதவின் மேலாவது காட்டி கதவை உடைப்போம் என்று முடிவிற்கு வந்து அதைச் செயல்படுத்த நினைக்கப் போக
நல்ல வேளை………. கீர்த்தி என்ன நினைத்தாளோ தெரிய வில்லை…. கதவை வந்து திறந்தாள்…. இருவரின் விழிகளும் ஒன்றையொன்று சந்திக்க…. கீர்த்தியின் விழிகள் அவனைப் பார்த்த உடன் இன்னும் கோபமாய் மாற…. அவள் கணவனின் விழிகளோ கோபத்தை மறந்து நிம்மதியில் சாந்தமாகின….
அழுதழுது சிவந்திருந்த முகமும்…… நலுங்கிய சேலையும்… கலைந்த கூந்தலும்…….. அவனை அவள் அவமதித்துக் கொண்டிருந்த போதும்..... அவள் மேல் கோபம் இருந்த போதும்… அவள் நிலை அவனை அதை எல்லாம் மறக்கச் செய்ய… உணர்ச்சிக் குவியலாய் மாறினான்
கதவைத் திறந்தவளை…….பார்த்த நொடியிலேயே அப்படியே தன்னோடு தன் மார்போடு சேர்த்து இறுக்க அணைத்தான்…….. அதில் காமமில்லை…. காதல் மட்டும் தான் இருந்தது… உனக்காக நான் இருக்கிறேன் என்ற செய்தி இருந்தது…… அவள் காதருகே ஒலித்த அவனது இதயத் துடிப்பு அவளுக்காக மட்டுமே அவன் என்று சொல்லத் துடித்தது…….. கீர்த்தியும் அதை அனுபவித்தாள்….. எதுவும் சொல்லாமல்… அவனிடமிருந்து விலகாமல்… அவனுக்குள் அவள் அப்படியே அடங்கினாள்……. நேற்றிலிருந்து அவள் அனுபவித்த மனப் போராட்டம் முடிவுக்கு வருவதைப் போல் இருக்க…… பாலா மீண்டும் மீண்டும் தவறு செய்தான்………
அது……… ”எங்கே மீண்டும் கோபப்பட்டு விடுவாளோ” என்ற பதற்றத்தில் அவளை அவனாகவே விலக்கியவன்… பேசாமல் உள்ளே சென்றான்…
அவன் விலக்கிய நொடியிலேயே மீண்டும் கீர்த்தியின் மனம் சண்டித் தனம் பண்ண ஆரம்பித்தது…
இத்தனை கோபம் இருந்தும் அவன் அணைத்தவுடன் அவனிடம் சரணாகதி அடையத் துடிக்கும் தன் கேவலமான நிலையினை எண்ணி மீண்டும் பழைய நிலைக்கே போக
“இங்க ஏன் வந்தீங்க” என்று முன்னால் சென்ற கணவனின் முதுகை வெறித்தபடி அழுத்தமாய் கேட்க
நிதானாமாய்த் திரும்பியவன்
“நீ இங்கே இருக்கிறாய்….அதுனால போதுமா” என்று மட்டும் சொன்னான்
“நான் நிம்மதியா இருக்க வேண்டுமென்று இங்கு வந்தேன்…… தயவு செய்து என்னைத் தனியா விடுங்க… எனக்கு தேவை இப்போ தனிமை….தனிமை… அது மட்டும் தான்” என்று பொறுமையாகப் பேசினாள்
“என்னை நீங்கித்தான் உனக்கு நிம்மதி இருக்குமென்றால்… அந்த நிம்மதி உனக்கு என்னைக்குமே கிடைக்காது கீர்த்தி..am Sorry” என்றவன்….
“உன்கிட்ட இப்போ…. பேசற …இல்லை… சண்டை போடுகிற நிலையில் எல்லாம் நான் இல்லை … ஏற்கனவே உடலாலயும் உள்ளத்தாலயும் … களைத்துப் போயிருக்கிறேன்.. ப்ளிஸ்… என்னைய பேசி பேசி கொல்லாத….”
என்று அவளை கடந்து செல்வதிலேயே குறியாக இருந்தான் பாலா,,,,
அதற்கு இரண்டு காரணம்…. ஒன்று…. அவள் ஏதாவது பேசப் போய்….அவள் மேல் தன்னை மீறி கோபப் பட்டு விடுவோமோ இன்னொன்று…… அவன் முன் அவள் நின்று கொண்டிருந்த நிலையும்…….. அதுவும் புடவையில்,,,,, கலைந்த ஓவியமாய் நிற்கும் அவளின் அழகில்.. தன்னை மீறி அத்துமீறி விடுவோமோ என்று… பயந்ததே காரணம்…
இது எதுவும் உணராமல்……..
“ஓ…… உங்களுக்கு களைப்பு வேறு வருகிறதா பாலா…. அட ஆமால்ல…. இன்னைக்கு உங்க பொண்டாட்டிக்கு பிறந்த நாள்.. நீங்களும் அவள கூப்பிட்டு போய் ஊரெல்லாம் சுத்தி… நாலு கடை ஏறி இறங்கி….அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி கொடுத்துட்டு வந்துருக்கீங்க… உங்களுக்கு கண்டிப்பா…களைப்புதான் வரும்… போங்க…. போய் படுத்து தூங்குங்க” என்று எக்காளமிட்டாள் கீர்த்தி…
பாலா நின்றான்.. திரும்பி வந்தான் அவளிடம்…..
“இப்போ என்னடி… வேணும் உனக்கு… காலையில வந்து கூப்பிட்டேன்ல… நீதானே வர மாட்டேன்னு சொன்ன… உனக்கு கிஃப்ட் என்னடி கிஃப்ட்… வா கடையையே வாங்கித் தருகிறேன் .. என்று பேசியதில் மீண்டும் மாபெரும் தவறு செய்ய …… அங்கே கீர்த்தியின் மனதில் எரிமலை வெடித்த்து…
“ஓஓஓஓஓஓ …………. கடையையே வாங்கித் தருவீங்களா,,, பாலா…. பொண்டாட்டிக்கு கிஃப்ட்னா கடை ……… காதலிக்கு கிஃப்டனா……. முத்தமா…” என்று மூக்கு விடைக்க அவன் முன் நின்றாள்….
பாலா………… அப்படியே நின்றான்…….. தரையில் உயிருக்கு துள்ளிய மீனாக துடித்தான்….. தன் கடந்த காலத்தைச் சொல்லி …வாழ்வில் மிகப் பெரிய தவறு செய்து விட்டோமோ என்று துடித்தான்……
ஆனால் அன்று அவன் மனைவி இன்னும் பல வார்த்தை அம்புகளை விசம் தோய்த்து அவனை எறியக் காத்திருந்தாள்…. என்பதை அவன் அப்போது அறிய வில்லை..
இருந்தும் துடித்த மனதை அடக்கினான்…….
“ஏய்……… நானே உனக்குதானடி……. ஏன் இப்டி பைத்தியக்காரி மாதிரி பேசுற…” என்று அவளை…. அமைதிப் படுத்தும் விதமாய்ப் பேச… மனைவியோ… வீறு கொண்ட பெண் சிங்கமாய்ப் பேசிக் கொடிருந்தாள்….
”இல்ல…. இல்ல…….. நீங்க என்னைக்குமே என்னோட பாலா இல்ல…. எனக்கும் இல்ல… நீங்க அந்த மதுவோட பாலாதான்…….“ அவள் பேசிய விதத்தில்…. இல்லை இல்லை என்று கத்திய விதத்தில் பாலாவே அதிர்ந்து போனான்,,,,
புள்ளி மானாய்… மகிழ்ச்சியோடு சுற்றிக் கொண்டிருந்தவளை…. இப்படி ஆக்கி விட்டோமே என்று மனம் அவனைக் கூறு போட
“கீதும்மா…… இங்க பாரு நீ தூங்கு… நேத்துல இருந்து நீ தூங்கல போல… கொஞ்சம் ரெஸ்ட் எடு… காலையில பேசலாம்… நீ குழப்பத்தில இருக்க… ” என்று அருகில் போக
அவன் சட்டையைப் பிடித்தாள் கீர்த்தி”
“ஏண்டா என்னப் பார்த்த பைத்தியக்காரி மாதிரி தெரியுதா,,,,,,,,,,,” அவன் கண்களைப் பார்த்துச் சொல்ல….
“ஆனா… அது உனக்கு வசதிதான்,,, ஈசியா டைவர்ஸ் கிடச்சிடும் உனக்கு,,,,, அப்புறம் இன்னொரு கீர்த்தனா இல்ல சந்தனா கிடைக்க மாட்டாளா என்ன…….. ச்சேய் வேண்டாம்… மது பாவம்…….. எல்லாரும் என்னை மாதிரி இருக்க மாட்டாங்க……. மதுவுக்கு நீங்க அவளோட பாலாவா கிடைக்கனும்……. ”
”கீர்த்தனா………. இதோட நிறுத்திக்க… வரம்பு மீறி பேசுற…”
“நான் அப்டித்தான் பேசுவேன்…. உனக்கு பிடித்த மாதிரிலாம் பேச நான் என்ன உன் மதுவா” என்றவளை நோக்கி … இழுத்து வைத்த பொறுமை எல்லாம்,,,, வேண்டிய வேண்டுதல் எல்லாம் காற்றில் பறக்க அருகில் நெருங்க
அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை ஊகித்தவளாய்…. ஆனால் நகராமல்….
“என்னடா… என் வாய மூடப் போறியா…….. வா…“ என்று அதிரடியாய்த் தாக்க
நின்று விட்டான் பாலா………
சளைக்காமல் தன்னை சுழன்று அடிப்பவளை என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க
“என்ன …. இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க… நீங்க மதுவோட பாலாதான்……………….. என் பாலா இல்ல…. அவ உங்க மது…… உங்க மது…………மதுதான்… நான் சொல்லிட்டேதான் இருப்பேன்… உங்க மது ……….உங்க மது……” என்றவளை இதற்கு மேலும் விட அவன் என்ன முட்டாளா…..
“என்னடி உன் பாலா இல்ல………. நானும் போனாப் போகுது… சின்னப் பொண்ணு….. புரிஞ்சுக்குவ… இன்னைக்கு மனசு மாறுவ.. நாளைக்கு மாறுவ…. என்னோட. வாழ ஆரம்பிப்ப…..ன்னு பொறுமையா போனா….. இந்த ஆட்டம் ஆடுற,,,,, இப்போ என்ன நான் யாரோட பாலா…. அதுதான் உன் பிரச்சனை,,, இன்னைக்கு அதுக்கு உனக்கு பதில் சொல்றேன்…. உன்னை என் கீர்த்தியாவும்…. என்னை உன் பாலாவாகவும் மாத்திறலாம்.. அதுக்கப்புறம் எவ வந்தாலும் அவளும் அவ பாலானு சொல்ல முடியாது… நீயும் இப்டி ஆட முடியாது” என்றபடி ஆவேசமாக அறையினுள் இழுத்து வந்து அவளைக் கட்டிலில் தள்ளியவன் தான் அணிந்திருந்த சட்டையின் பட்டன்களை விடுவித்தவனாய் அவளை நெருங்கினான்…… கோப முகமாய்……….
ஆனால் என்றும் அவனின் அருகாமையில்.. திணறும்… தவிக்கும் கீர்த்தி… இன்று சுவற்றில் அடித்த பந்து போல …அவன் தள்ளிய வேகத்தில் துள்ளி எழுந்து அமர்ந்தவள்….. சிலிர்த்து எழுந்த பெண் சிங்கமாய் நிற்க…
எப்போதும்… மருண்ட மானின் விழியாய் நோக்கும் மனைவியின் பார்வையில் தன்னை திருப்பி எடுப்பவன்… இன்று அவனோடு மல்லுக் கட்ட நிற்கும் சிங்கம் போல் நின்ற மனைவியை பார்த்து…….. இன்னும் வேகத்தோடு அருகில் வர……….. ஏதோ ஒரு தீர்மானம் எடுத்தவளாய்… வெறியோடு வரும் கணவனைச் சளைக்காமல் எதிர் கொண்டாள்… தன்னை மூர்க்கத்தனமாய் அணைத்தவனிடம்
கீர்த்தனா………… கொஞ்சம் கூட யோசிக்காமல்
விசம் தோய்ந்த வார்த்தைகளைத் தடவி தனது கடைசி பானத்தை…….. பாலா என்னும் அந்த ஆண் சிங்கம் மேல் தயவு தாட்சண்யம் இன்றி வீசினாள்…….
அதில்பாலா……..குற்றுயிரும்குலை உயிருமாய்ஆனான்…….. அவள்வீசியவார்த்தைகளின்வலிதாங்காமல்அவளைவிட்டுவிலகியவனை… செத்தபாம்பாய்நின்றவனை…..,அதைஉணராமல்வார்த்தைகளால்அடித்துக்கொண்டேஇருந்தாள்….
Comments