top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே !!! என் உறவே ??? - 46

அத்தியாயம்46:

மருத்துவ மனையில்….

வினோத்…… நல்ல உறக்கத்தில் இருக்க… கீர்த்திகா அப்போதுதான் உறங்கியிருந்தாள்……..

கிட்டத்தட்ட 12.30 மணி அளவில் வினோத் கண் விழித்தான்…….விழித்தவன் அறையைச் சுற்றி நோட்டமிட…. கீர்த்திகா…. அருகில் இருந்த மேசையில் தலை வைத்துப் படுத்திருக்க……….அவளையே சிறிது நேரம் பார்த்தபடி இருந்தான்……….

“இந்த சின்ன வயதில் இவளுக்கு எவ்வளவு பெரிய வேதனை…. என்று நினைத்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து… அது தவறென்று புரிந்து பார்வையை மாற்றினான்……..மாற்றியவனின் கண்களில்….. சுவர்கடிகாரம் கண்ணில் பட….. அதிர்ந்தான்……………. மணி 12.30…….. அவனுக்கு கீர்த்தியின் பிறந்த நாள் அனிச்சை செயலாய் ஒவ்வொரு வருடமும் ஞாபகம் வந்து விடும்…. என்பதால்…. ஆச்சரியம் இல்லைதான்… மனதினுள்ளே

“ஓ காட்” என்று தனக்குள் பேசிக் கொண்டே மொபைலைத் தேட…. அது அருகில் இல்லை…….

கீர்த்தனாவுக்கு எப்போதும்… 12 மணி அளவில் அவன் வாழ்த்தை சொல்லி இருக்க வேண்டும் இல்லை…. சொல்ல முடிய வில்லை என்றால்…. முந்தின நாளாவது சொல்ல முடியாத காரணத்தை சொல்ல வேண்டும்…. இல்லை என்றால் வேப்பில்லை இல்லாத குறைதான்…. சாமியாட்டம் ஆடுவாள்… கோபம் அவள் மேல் இருந்தாலும் வாழ்த்தைச் சொல்ல வேண்டும்…” என்று நினைத்தவன் கையில் மொபைல் சிக்கவே இல்லை….. எழவும் முடியவில்லை…. கையில் ட்ரிப்ஸ் வேறு ஏறிக் கொண்டிருந்தது…

அன்று அவள் ராகவன் – மைதிலி மகளாய் இருந்தாள்….. இன்றோ அவள் திருமணம் செய்தவள்……. இன்னொருவனின் மனைவி ….. இந்த நேரத்தில் போன் செய்யலாமா என்றெல்லாம் அவனுக்கு உறைக்க வில்லை….

அவனின் அசைவில் கீர்த்திகாவிற்கும் உறக்கம் கலைய…..

“என்ன வினோத்….” என்று கேட்க

“போன் வேணும் கீர்த்திகா….” என்றவுடன்…. தனதருகில் இருந்த அவனின் போனை எடுத்துக் கொடுக்க….

கீர்த்திக்கு இன்னைக்கு பிறந்த நாள்…. லேட்டாகி விட்டது …. அவ அப்பா…அம்மாவும் இல்லை இப்போ……. ஏங்கிப் போய்டுவா……. என்ற படி அவளது நம்பரை அழுத்தியவனின் போனை அருகில் வந்து கட் செய்தாள் கீர்த்திகா…

அவளின் இந்த செய்கையில் கோபமானான்தான் வினோத்…. இருந்தாலும் அவளிடம் கோபப்படுவது முறையில்லை என்பதை உணர்ந்து… அமைதியாகவே….

“என்னங்க போனைக் கட் பண்றீங்க…. என்ற படி மீண்டும் கால் செய்ய..

போனைப் பறித்த படி….

“என்ன வினோத் தெரிஞ்சுதான் பண்றீங்களா… இல்லை தெரியாமத்தான் பண்றீங்களா…. இந்த நேரத்தில கீர்த்திக்கு போன் பண்ணலாமா” என்றவளிடம்…

“ஏன்….. பண்ணினால் என்ன……..” என்று கேட்க

“போன வருடம் வரை…. நீங்க பண்ணியிருந்தால் தப்பில்லை…. ஆனா…. இப்போ அவளுக்கு திருமணம் ஆகி விட்டது…… இப்போ பண்றது தப்பில்லையா..” என்று கேட்க

“ச்சேய்… ” என்று தன்னைத் தானே திட்டியவனின் மனதில் இன்னொன்றும் உலா வந்தது…. ஆமா… இவன் ஒரு மூலையில… அவ ஒரு மூலையிலனு தூங்கிட்டு இருப்பாங்க… இதுல நான் போன் பண்றது வேற தப்பா போயிருமா….. என்றும் நொந்தவன்…..

“இல்ல கீர்த்தி… போனைக் குடு… எனக்கு போன் பண்ணனும்…. அவங்களுக்கு இது டிஸ்டர்ப்லாம் இல்லை…. எல்லாம் உனக்கு தெரிந்ததுதானே என்று கேட்டபடி கை நீட்டியவனிடம்… தயக்கமாகவே சொன்னாள் கீர்த்தி…..

“வினோத்…….. என்னதான் இருந்தாலும்… அவங்களுக்குரிய ப்ரைவசியான இந்த நேரத்தில பண்றது தப்பு” என்று அவனுக்கு புரிய வைக்க முயன்றாள் …….

வினோத் பொங்கி விட்டான்…

“என்னங்க பிரைவசியான நேரம்… அப்படிப் பார்த்தா… உங்களுக்கு எனக்கும் என்ன பல வருடப் பழக்கமா.. என்ன… ரெண்டு இல்ல மூணு தடவை பார்த்திருப்போம்….. இப்போ இந்த டைம்ல நீங்க கூடத்தான் என் பக்கத்தில இருக்கீங்க…. அது தப்பு இல்லையா… நான் கீர்த்திக்கிட்ட பழகுறதுல்ல உங்களுக்கு என்ன பிரச்சனை…. காலையில என்ன்ன்னா… பாலா அவளுக்கு தேவையானத வாங்கிக் கொடுக்க மாட்டாரானு கேட்டீங்க… இப்போ என்னடாவென்றால்………..இப்படி சொல்றீங்க… “ என்று எரிச்சலாய் பேசியவன்……..

“ஆமா நீங்க எதுக்கு இங்க தங்கறேனு ஒத்துக்கிட்டீங்க…. அந்த பாலா வேற.. கீர்த்தனாவ விட்டுட்டு போகாம உங்கள விட்டுட்டு போயிருக்கான் மடையன்…. சரி கீர்த்திக்கு பிறந்த நாள்…அவனோட போகட்டும்னு விட்டேன்……” என்ற போதே அவன் மனதில் கீர்த்திகாவுக்கு உரிய இடம் தெளிவாய் புரிய… கண் கலங்கி விடும் போல் தோன்ற… வேகமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்… அப்படி இருந்தும், கண்ணில் இருந்து நீர் வெளியேறி விட…. வேகமாக முகம் கழுவி வரச் சென்றாள்…

வினோத்துக்கு கீர்த்திக்கு போன் செய்யும் மூடே போய் விட்டது… கீர்த்திகாவிடம் வேறு கோபமாய்ப் பேசியது வருத்தம் தர போனை எரிச்சலுடன் கீழே வைத்தான் வினோத்

முகம் கழுவி திரும்பி வந்தவளைப் பார்த்து பேசப் பிடிக்காமல் கண்களை மூடப் போக… அவள் நெற்றியின் வெறுமை பளிரென இவன் மனதில் மின்னல் அடிக்க… மீண்டும் கண்களைத் திறந்து அவளைப் பார்க்க… கீர்த்திகா எதுவும் சொல்லாமல் பழையபடி அவள் இருந்த இடத்திலேயே அமர்ந்தாள்….

அவளின் அந்தத் தோற்றம் … மனதைத் தாக்க….. முகம் கழுவும் போது விழுந்திருக்கும்…. சொன்னால் வேறு வைத்துக் கொள்வாள் என்று தோன்ற….

“கீர்த்தி…” என்று அழைத்தான்

”நர்சைக் கூப்பிடனுமா வினோத்” என்று கேட்டபடி அவனருகில் சென்றாள் அவள்….

“இல்லை… உன் நெத்தில இருந்த பொட்டு முகம் கழுவும் போது விழுந்து விட்டது போல…. நல்லா இல்ல… வேற இருந்தா எடுத்து வச்சுக்கோ” என்று சொன்ன போது ஏனோ ஒருமையில் பேச

“பரவாயில்ல விடுங்க… நாளைக்கு வச்சுக்கிறேன்…. எனக்கும் அதுக்கும் ராசி இல்லை போல….” என்று குரலில் பிசிறடிக்க கூறியவளைப் மனதில் பாரத்துடன் பார்த்தான் வினோத்… அப்போதுதான் அவனுக்கும் ஞாபகம் வந்தது… மனதினுள் வைக்காமல் கேட்டும் விட்டான்…

“புக் ஸ்டால்ல பார்க்கும் போதே கேக்கனும்னு இருந்தேன்… திடீர்னு பொட்டு வச்சுருக்கீங்கன்னு,… நான் அன்னைக்கு சொன்னதினாலா….” என்று கேட்ட போது அவள் ஆமாம் என்று சொல்வாள் என்றெல்லாம் நினைக்க வில்லை அவன்…

தலையை மட்டும் ஆட்டினாள் அவள் …. வினோத்தின் விழிகள் அவளிடமே நின்று விட்டது…

மறுபடியும் கேட்டான்… நம்ப முடியாமல்…..

“நான் சொன்னதுனாலாயா…” என்ற போது அவன் வார்த்தைகள் அவனுக்கே கேட்காதது போல் இருக்க……..

“ஆமாம் என்று வாய் வார்த்தையால் பதில் சொன்னாள் கீர்த்திகா……….. கண்களில் அவள் மறைக்க நினைத்த போதும்… இமைகள் பட படத்தன….

அது வினோத்துக்கு ஏதேதோ கதை சொல்ல…….. அவளையே பார்த்தபடி இருந்தான்…….. அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த கீர்த்திகா……… அவனை விட்டு நகரப் போக.. வினோத்தின் கரம் அவனையுறியாமல் அவள் கரத்தைப் பற்றியது அவளைப் போக விடாமல்….

கீர்த்திகா……… அப்படியே நின்றாள்………… கண்களில் கண்ணிர் பெருகியது….உணர்வுகளின் தாக்கத்தில்…. வார்த்தைகள் வர வில்லை……..

“வினோத்துக்கு முதலில் ஒன்றும் புரிய வில்லை……. ஏனோ அவளை நகர விடாமல் தடுக்க வேண்டும் என்று மனம் சொல்ல …கையைப் பற்றி விட்டான்…. ஆனால் அவள் கண்ணீர்…… அவனுக்கு அவளின் மனதை சொல்லாமல் சொல்லி விட்டது…….

‘தன் மீது ……… அவளுக்கு…… எப்படி…….. நினைக்கவே தடுமாறினான் வினோத்…… மனம் அலை பாய்ந்தது…….. சட்டென்று மனம் முடிவெடுக்க திணறியது………. ” இருந்தாலும்

“கீர்த்தி………… நான் உன்கிட்ட பேசனும்…. “ என்ற போது கீர்த்தி அவனை நிமிர்ந்து பார்க்க….

அவளின் தீர்க்கமான பார்வையில்……. முடிவெடுக்கத் திணறிக் கொண்டிருந்த மனம்… அவளிடம் சரணடைந்தது… அதன் பிறகு அவன் யோசிக்க எதுவும் இல்லாமல் போயிருந்தது….

அவன் எதுவும் சொல்ல வில்லை… அவளிடம்…….. கையில் போட்டிருந்த ட்ரிப்ஸை பிய்த்து எறிந்தவன்……அறையை விட்டு வேகமாக வெளியேறி….. அந்த மருத்துவமனையில் கோவில் எங்கு உள்ளது என்று விசாரித்தவன்…போன வேகத்திலேயே திரும்பி வந்தான்….

வந்தவனின் கைகளில் குங்குமம் இருக்க…. கீர்த்திகா முன் போய் நின்றான்…

‘கீர்த்தி………… என்னைப் பாரு…… நான் சொன்னதுனாலதான் பொட்டு வச்ச…. அப்டித்தானே… என்று கேட்க……..

அவள் இப்போதும் மேலும் கீழுமாய்த் தலையை மட்டும் ஆட்ட….

“அதை வேற யாரும் சொல்லி இருந்த வச்சுருப்பியா… என்று கேட்க…

“மாட்டேன்” என்றும்படி தலையை இடமும் வலமும் ஆட்டியவள்……வினோத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்….

வினோத்துக்கு அதுவே போதும் என்று தோன்ற…. அவளை தன் கைகளால் தொட்டு நிமிர்த்தியவன்….. அவளிடம் தன் மனதைச் சொல்ல வில்லை… அவள் மனதையும் கேட்க வில்லை…அவள் மனம் சொன்ன செய்தியை கண்கள் ஒளிபரப்ப…….. அதை அவன் கண்கள் வாங்கி மனதுக்கு அனுப்ப……… அந்த நொடி அவளின் நெற்றியில் தன் தன் விரல்களால் அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்தான்…………. அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட கீர்த்திகா அந்த நொடியில் தன் சாபம் எல்லாம் நீங்கியவளாய் அவனோடு கலந்தாள்………….

அவளின் மனம் புரிய தன்னோடு அணைத்து கொண்டான்…………. அப்படியே சிறிது நேரம் இருந்த இருவரில் கீர்த்திகாதான் தன்னை நிலைப் படுத்திக் கொண்டு,,,, விலகினாள்….

அவனும் தடுக்க வில்லை….அதே நேரத்தில் முற்றிலும் விலக விட வில்லை அவளை………

“கீர்த்தி……..” சொன்னபோது அவன் குரலே அவனுக்கு புதியதாக இருந்தது…………… தன் மன வீட்டிற்குள் வாசம் செய்யப் போவது இந்த கீர்த்திகாவே என்பதை பரிபூரணமாக உணர்ந்தான் வினோத்………..

கீர்த்திகா……. இப்போது. தன் வாய் திறந்தாள்… வினோத்

“என் ஆதியோட காதல் என்னை வாழ வச்சுடுச்சு” என்ற போது அவள் கண்களில் மாலை மாலையாக …… நீர் வடிந்தது………….

“என்னை யாரும் நிர்பந்தபடுத்தல………. கட்டாயப் படுத்தல……….. ஆனால் நீங்க… உங்களை முதல் முறை பார்த்த அன்று அத்தனை முறை சொன்ன கீர்த்தி என்ற வார்த்தை என்னைச் சலனப்படுத்தியதுதான் உண்மை… அதன் பிறகு கவியோடு சேர்ந்து பார்த்த பிறகுதான் என் மனம் உங்களை விரும்ப ஆரம்பித்து இருந்தது புரிய வந்தது…. அன்றே நீங்க சொன்ன படி பொட்டு வைக்க ஆரம்பித்து விட்டேன்…….ஆனால் உங்களுக்கு தகுதி ஆனவள்தானா….” என்றவளை நிறுத்தியவன்……

நீயும் ஆதியை விரும்பி இருக்கிறாய்… நானும்… கீர்த்தியை… விரும்பி இருக்கிறேன்…. ஆம் அதுதான் உண்மை கீர்த்தி…. என் மனசுல இருந்தாள்ன்றது உண்மைதான்…. காதலை விட அதிகமாக அவள் மேல் பாசமும் இருந்ததுதான் என்னை அவகிட்ட நெருங்க விடாமல் பண்ணி விட்டது………… சத்தியமாய்ச் சொல்கிறேன்… பாலா மட்டும் இடையில் வராமல் இருந்திருந்தால்……… கீர்த்திக்கும்………… எனக்குமான பந்தம் திருமண பந்தம் தான்…….. அது நிச்சயம்…. ஆனால் பாலா வந்து விட்டானே……….. அவள் சந்தோசமாக இருந்தால் அது போதும்……… என்று விட்டு விட்டேன்……… ஆனால் இன்று…. சோகமானவன்… கீர்த்தியின் முக மாறியதை உணர்ந்து

“ஹேய் ….இப்போ எதுக்கு இப்படி இருக்க……… நான் என்ன சொல்ல வரேன்ன…” என்ற போது பழைய உற்சாக வினோத்தாக மாறி இருந்தான்…

“இந்த தகுதி….விகுதி எல்லாம் தூக்கிப் போட்டுட்டு……… நாம நம்ம வாழ்க்கைகான அடுத்த பகுதிய பார்க்கலாமா… என்று கண்ணடித்தவன்………..

இங்க ஒரு பொண்ணு எனக்காக ஏங்கிட்டு இருக்குதுனு தெரியாம…. சுத்திட்டு இருந்திருக்கேனே…. என்றவனை…..

“அப்டிலாம் இல்ல……… ரொம்ப கனவு காணாதீங்க” என்று பொய்யாய்க் கீர்த்தி சொல்ல

சரி விடு…. இனிமே சுத்த வச்சுரலாம்… என்றவனின் கரம் அவள் இடையில் ஆழமாக பதிய……

பதறி விலகினாள் கீர்த்தி…………

“வினோத்……… இது ஹாஸ்பிட்டல்……….. நம்ம ரெண்டு பேரயும் நம்பி விட்டுட்டு போயிருக்காங்க…… பாலாவும்..கீர்த்தியும் என்றவளை……..

”நம்மள என்ன அவங்க ரெண்டு பேர் மாதிரியும் நெனச்சுட்டாங்களா……. பத்திக்கிட்டு வருது…….. ஆம்பளயா நாலு அறைய விட்டு குடும்பம் நடத்துற வழிய பார்ப்பானா… அவ சம்மதம் வேணுமாம் இவருக்கு…… தொங்கிட்டு இருக்கான்…. கீர்த்தியப் பத்தி தெரியாம இருக்கான்….”. என்றவன்… பேச்சு மீண்டும் மீண்டும் அவர்களிடமே வருவது போல் தோன்ற

இந்த நேரத்துல அவங்க ரெண்டு பேரயும் எதுக்கு இழுக்கிற…... இப்பொதான் பிரைவசி… டைம் அப்டிலாம் பெருசா பேசுன…. என்றவன் அவளை அருகில் இழுக்க…

“கழுத்தில தாலி… அப்புறம் தான் மத்தது எல்லாம்” மது சொல்லி இருக்கா…. நான் என்னைக்கும் அவ பேச்சை மீற மாட்டேன் என்று சொன்னபோது…….

இப்போது வினோத்தின் மனம் கனத்தது…

அதுவரை இருந்த உல்லாசம் போய்….

“மது……. பாலா வாழ்க்கைல குறுக்க வர மாட்டாதானே கீர்த்தி…. என்று கேட்டவனை வலியோடு பார்த்தாள் கீர்த்திகா…………

“அவளுக்கு பாலான்னா ரொம்ப இஷ்டம் வினோத்……….. பாலா எவ்வளவோ இன்சல்ட் பண்ணி இருந்தாலும் துரத்தி துரத்தி லவ் பண்ணி……… எல்லாம் வேஸ்ட்………. இன்னைக்கு பாலா அவள விட்டு வெகு தூரமாய்ப் போய்ட்டார்………. இப்போ பார்க்கிற பாலா…. சத்தியமா மதுவோட பாலா இல்லை………. கீர்த்தனாகிட்ட மொத்தமா தன்னை இழந்துட்டார்னுதான் நினைக்கிறேன்….” என்ற போது வினோத் கொஞ்சம் சமாதானம் ஆனான்

அதன் பிறகு……… அங்கு திசை மாறி சேர்ந்த இரு காதல் பறவைகளின் கீதம் அங்கு கானம் பாட ஆரம்பித்தது……..

--------------------------------

4 மணி அளவில் படுத்த கீர்த்திக்கு 6 மணிக்கெல்லாம் வினோத்திடம் இருந்து கால் வர… தூக்க கலக்கத்திலேயே எடுத்தாள்…

“கீர்த்திடா…” என்று வழக்கம் போல் விளித்து கூப்பிட… வினோத்துக்கு தன் மேல் இருந்த கோபம் போய் விட்டதை உணர்ந்து சந்தோசமாக பேச ஆரம்பித்தாள்..

அவனது வாழ்த்தை ஏற்றவள்…

“என் மேல கோபம் இல்லேல வினோத்…. என்று தயக்கத்தோடு பேச…

“இருந்துச்சு….. இப்போ இல்லேணும் சொல்ல முடியாது… ஆனா அதுக்காக உனக்கு விஷ் பண்ணாம எல்லாம் இருக்க மாட்டேன்… நானும் கீர்த்தியும் வீட்டுக்கு கிளம்பிட்டோம்… நீங்க ரெண்டு பேரும் இங்க வர வேண்டாம்… அதச் சொல்லவும் தான் போன் பண்ணினே… அப்புறம்… அப்பாவும் அம்மாவும் போன் பண்ணினால்… என்னைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம்.. நினைவு படுத்தவும் மறக்கவில்லை… அதன் பிறகு அவனிடமிருந்து இருந்து போனைப் பறித்த கீர்த்திகாவும்…

கீர்த்திக்கு வாழ்த்துச் சொல்ல…. கீர்த்தியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு போனைக் கட் செய்தாள்…

அடுத்தடுத்து கவி..மோகனா…விஸ்வம் என வாழ்த்துக்களை வழங்க… பெற்றவர்களின் வாழ்த்துதான் இனி இல்லை என்றும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையில் … உற்றவனின் வாழ்த்தும் இன்னும் கிடைக்கவில்லை என கண்கள் விழி நீரை வெளியேற்றிய வண்ணம் இருந்தது..

--------------------

அழகிய இளம் கிளிப்பச்சை மற்றும் நாவல் பழம் சேர்ந்த சில்க் காட்டன் புடவையில்…. தன் முன் வந்து நின்ற தங்கள் மருமகளைப் பார்த்த ஜெகநாதன் – அருந்ததிக்கு…. முகமும்… உள்ளமும் நிறைந்தது…

சந்தோசமாக இருவரும் அவளை ஆசீர்வதித்தனர்…

அவர்களும் எங்கோ கிளம்பிக் கொண்டிருப்பதை உணர்ந்த கீர்த்தி….

“அத்தை…. கேட்கக் கூடாது…. வெளில கிளம்புறீங்க போல அதுவும்.. இத்தனை சீக்கிரமா…” என்று தயங்கிக் கேட்க

அருந்ததி சிரித்தபடி…

“இன்னைக்கு… எங்க வீட்டுப் பொண்ணோட பிறந்த நாள் இல்லையா… அதுதான்… கோவிலுக்கு கிளம்பி இருக்கிறோம்….. உன்னையும்… பாலாவையும் கூட்டிட்டு போகலாம்னு…பார்த்தால்…. வினோத்துக்கு அடிபட்டுடுச்சு…. நேற்றும் லேட்டாத்தான் வந்தீங்க ரெண்டு பேரும்… சரி நீங்க வருவீங்களோ இல்லையோனு…. நாங்க மட்டும் கிளம்பிட்டோம்…. நீங்க ரெண்டு பேரும்… தனியா போய்ட்டு வாங்க…. “ என்றபடி கிளம்பினர்…

வழக்கம் போல்..அருந்ததியின் பாசத்தில் நெகிழ்ந்தாள்..கீர்த்தி

மகனும்…மருமகளும் தனியே போக வேண்டுமென்ற ஒரே காரணத்தால் இப்படிச் செய்திருந்தாள் அருந்ததி…. அவள் மகன்… இப்படி தன் மனைவியின் பிறந்த நாள் அறியாமல் இருக்கிறான் என்று தெரிந்திருந்தால்… ஏதாவது செய்திருப்பாள்… பாவம்.. அது அவளுக்கு தெரிய வில்லை….. மகன் எப்படி நினைவில் வைக்காமல் இருப்பான் என்று நினைத்து விட்டாள் போல்

----------------------------

அவர்கள் போன பிறகு மேலே ஏறினாள் கீர்த்தி…

பாலா உறங்கிக் கொண்டிருக்க….. சுரு சுரு வென்று கோபம் ஏறியது… வேகமாக குளியலறையினுள் நுழைந்தவள்…. ஒரு கப் தண்ணீரை எடுத்து வந்தாள்… அவன் முகத்தில் ஊற்ற… ஊற்றப் போகும் போது திரும்பி படுத்த பாலாவின் முகம் பார்த்தவள்.. மனம் இல்லாமல்… கைகளில் மட்டும் நீரை எடுத்து… அவன் முகத்தில் தெளிக்க…

திடீரென்று நீர் தன் முகத்தில் பட… கோபத்திலும் …பதற்றத்திலும் எழ… கோபமாய் பேச வந்தவன்… முன்னால் தேவதை போல் நின்ற மனைவியின் அழகில்…. வார்த்தைகள் எல்லாம் உள்ளே போய்… விழித்தான்….

”என்ன …. இன்னைக்கு இப்படி ஜொளிக்கிறா… லேசுல புடவை கட்ட மாட்டாளே…. என்று அவன் உள்ளம் ஆயிரம் கேள்வி கேட்க…

“ஓ இன்னைக்கு அவ டீம் பார்ட்டிக்கா..” என்று அதுவே பதிலும் வைத்தது….

“எழுந்து உட்கார்ந்தவன்…

”என்ன கீது…. இப்படி தண்ணிய தெளிக்கிர….. என்று அவள் கைகளை பிடித்து வளையல்களை அளந்தவனிடம்… வெடுக்கென்று கையைப் பறித்தவள்… “இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை.” என்று முணங்கியபடி

அருகில் இருந்த கப்பைக் காட்டி…

“இது எல்லாத்தையும் ஊத்தலாம்னு இருந்தேன்…. போனா போகுதுன்னு…. ஜஸ்ட் கையால தெளிச்சேன்..” என்று சூடாகச் சொல்ல…

வழக்கம் போல கோபம் என்றுதான் நினைத்தான் பாலா…

“இன்னைக்கு லேட்டா போகலாம்னுதான் தூங்குனேன்… ஏன் இப்போ எழுப்பற… நீயும் ரெடியா இருக்க… என்ன விசயம்” என்று கேட்க

பொறுமை இழந்தாள் கீர்த்தி…

“லூசு மாக்கானே… என்று நொந்தவள்….”

“நான் இன்னைக்கு சீக்கிரம் போகனும்… கார்த்திக்கோட மீட்டிங் இருக்கு…..அவன் சீக்கிரம் வரச் சொன்னான்…” என்று கூற

பாலாவோ பட்டென்று

“இன்னைக்கு கார்த்திக் லீவ் தானே…. நேற்றே மெயில் அனுப்பி இருந்தாரே..” என்று அலுவலக MD யாகப் பேச

இப்போது விழித்தாள் கீர்த்தி…

உனக்கு என் பிறந்த நாள் தெரியவில்லை… ஆனால் இதெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கும்….: என்று பொருமித் தீர்த்தவளாய்

“ஏன் கார்த்தி கூட பெர்சனலா பேசக் கூடாதா.. அவன் என்னோட சீனியர்…. இங்க ஜாயின் பண்றதுக்கு முண்ணாடியே தெரியும் எனக்கு…. ஏதோ பேசனும்னு சொன்னான்…. அவ்வளவுதான் தெரியும்… ஏன் நீங்க படிச்ச காலேஜ்ல மட்டும் தான் சீனியர்-ஜூனியர் ரிலேஷன்ஷிப் இருக்குமா என்ன…” என்று தான் மாட்டிக்கொண்ட காரணத்தால்… வாய்க்கு வந்ததை உளர….

பாலாதான்…. மொத்தமாய் அடி வாங்கினான்… ஒன்று தெரிந்து விட்டது அவனுக்கு…. கீர்த்தனா இனி எது நடந்தாலும்… அதை தன் கடந்த காலத்தோடு ஒப்பிட்டு தன் மனதை கூறாக்கப் போகிறாள் என்று…

உணர்ந்த அவன் ஒன்று மட்டும் வேண்டினான்… அது தன் மனைவி எவ்வளவு எல்லை மீறி போனாலும் ..பொறுமை ஒன்றைத் தான் கைவிடாமல் இருக்க வேண்டும் என்று….. ஆனால் இன்று இரவே அது முடியாமல் போகிறதென்று உணராதவனாய்….

---------------------------

மனைவி சீக்கிரமாக கிளம்பச் சொன்னதால் வேறு வழி இன்றி… வேகமாக கிளம்பி கீழே வந்தவன்… தாயைக் காணாமல்.. எங்கே என்று கேட்க….

அருந்ததியோடு பேசினால்…. தன் பிறந்த நாள் அவனுக்கு தெரிந்து விடும் என்று உணர்ந்து….. கோவிலுக்கு போயிருப்பதாகவும்…. தன்னிடம் சொல்லித்தான் சென்றார்கள் என்றும் சொல்லி.. அவனைப் போன் செய்ய விடாமல் தடுத்து விட்டாள்.. பாலாவும் விட்டு விட்டான்…

காலையிலேயே என்ன…. இத்தனை சீக்கிரமா கோவிலுக்கு…. ஏது விசேசமா என்று மட்டும் தோண்ற அதைக் கீர்த்தியிடமே கேட்க…

”அதை கோவிலுக்கு போயிருக்கவங்ககிட்ட கேளுங்க.. என் கிட்ட கேட்டால் எனக்கு என்ன தெரியும்….” என்று சிவகாசி வெடியை வெடிக்க ஆரம்பிக்க…

என்ன ஆச்சு இவளுக்கு…. சரி இவகிட்ட கேள்வியே கேட்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்து பேச்சை வினொத் பக்கமாக மாற்ற ஆரம்பித்தான்…

கீர்த்தி… ஹாஸ்பிட்டல் போகணுமே…. அங்க போய்ட்டு…. போலாமா.. இல்ல உன் சீனியரோட மீட்டிங்தான் மேடமுக்கு முக்கியமா… நக்கலாய்க் கேட்க…..

அக்னிப் பார்வையை வீசியபடி

வினோத் காலையில் பேசியதை சொன்னாள்…

“அப்படியா… அப்போ அவன் வீட்டுக்கு போய்ட்டு போவோமா….” என்று கேட்க

”அப்போதுதான்,,, கீர்த்திகாவும் அவனுடன் வீட்டுக்கு சென்றிருப்பது மூளையில் உறைக்க… தலையில் கை வைத்தவளாய்…

”அய்யோ…. பாலா… கீர்த்தியும் அவனோட போயிருக்கா…. யாரும் எதுவும் தப்பா பேசிறப் போறாங்க…. ஹாஸ்பிட்டல் இருக்கறது வேற.. வீட்டுல அவனோட தனியா இருந்தா அது தப்பாகி விடும்… என்று பெண்ணாய் அடுத்த பெண்ணின் மானத்திற்கு ஒரு பங்கமும் வரக்கூடாது என்று பேசியபடி

வேகமாய் போனை எடுத்து வினோத்துக்கு பேச ஆரம்பித்தாள்…. ஹலோ என்று கூட சொல்லாமல்..

”வினோத்…கீர்த்திய வீட்டுல விட்டுட்டு வந்துருக்க வேண்டியதுதானே…“ என்று படபடக்க

”எதுக்கு…” என்று மறுமுனையில் வினொத் கேட்க

“அவங்க வீட்டில விட்டுட்டு வராம.. என்னடா இது கேள்வி…. யாராவது தப்பா பேசிட்டா…” என்று இழுத்தவளை..

“யார் பேசுவா…. என்ன பேசுவாங்க… அவளுக்கு உரிமையான வீட்ல இருக்கும் போது…” என்று எதிர் கேள்வி கேட்க… சாப்பிட்டுக் கொண்டிருந்த சாப்பாடு தொண்டையிலேயே விக்கி கீர்த்திக்கு புறை ஏற…

புருவத்தை நெறித்த பாலா..என்ன என்பது போல் பார்க்க

கீர்த்தி தன்னை சரிபடுத்திக் கொண்டு…

“டேய் வினோத்… நீ என்ன பேசுறேன்னு தெரிந்துதான் பேசுகிறாயா…. கீர்த்தி..கீர்த்திய….உனக்குப் பிடிச்சுருக்கா….” என்று தடுமாறிக் கேட்க…

பாலா கண்களில் ஆர்வத்துடனும்… கேள்வியுடனும் கீர்த்தியை நோக்க … கீர்த்தி மகிழ்ச்சியோடு பாலாவிடம் கைவிரலை உயர்த்தி சைகை செய்தவள்… போனை ஸ்பீக்கரில் போட்டாள்…

”பிடிக்காமத்தான் சொல்லிட்டு இருக்கேனா… நாங்க ரெண்டு பேரும் நேத்தே பேசி முடிவுக்கு வந்துட்டோம்…. நீ இப்போ வந்து கேள்வி கேட்கிற” என்ற போது

பாலாவே வியந்து போனான்

“டேய் ஒரே நைட் லயா… நல்லா யோசிசிட்டியா… அத்தை மாமாவை எல்லாம் கன்வின்ஸ் பண்ணிடுவியா… என்று விடாமல் கேட்டவளிடம்

“ஏன்… மனச சொல்றதுக்கு ஒரு நைட் என்ன ஒரு நிமிசம் போதும்…. ஊர் உலகத்துல ரொம்ப பேர் அது தெரியாமத்தான் சுத்திட்டு இருக்காங்க கீர்த்தி… என்று அவளையும் குட்டியவன்… நான் எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணிடுவேன்…. நான் என்ன உன் புருசனா… கட்டின பொண்டாட்டியக் கூட கன்வின்ஸ் பண்ணத் தெரியாம தவிக்கிரதுக்கு… என்று பாலாவைத் தாக்க.. இது வேண்டுமென்றுதான் சொன்னான்… பாலாவைத் தாக்க இல்லை… கீர்த்தியின் மனதைப் அவளுக்கு புரிய வைக்க….

அது பாலாவுக்கும் புரிய விரக்தியாய்ச் உதடைச் சுழித்தான்

“என்னடா ரொம்பப் பேசுற…. வந்தென்னு வச்சுக்கோ….” என்று எகிற

“ஹலோ…. உன் ரவுடியிசம்லாம் பாலாகிட்ட செல்லும் கீர்த்தி செல்லம்… என்கிட்டலாம் நடக்காது… சரி சரி… எனக்கு முக்கியமான வேல இருக்கு… எனக்கு என் வருங்கால மனைவிக்கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு… என்ன டிஸ்டர்ப் பண்ணாம சீக்கிரம் பேசி விட்டு வை…. என்று முறுக்க

தன் நிலையை நொந்து கொண்டவனாய்… போனை வாங்கிய பலா…

“வினொத்… என்னை மொத்தமா டேமேஜ் பண்ணிட்ட…. ரொம்ப நாள் ஆசை நிறவேறிருச்சா“ என்று சொல்லியவன்…

”இல்ல பாலா… அது கீர்த்திய கிண்டல் பண்றதுக்காக” என்று வினோத் சங்கடமாக பேச ஆரம்பித்த்த்தை நிறுத்தியவன் பொறுப்பாக பேச ஆரம்பித்தான்

“வினோத்… நீ …விளையாண்டெதெல்லாம் போதும்… என்ன நடந்தது… கீர்த்திகா.. எங்க… அவளோட வாழ்க்கைல ஏற்கனவே அடிபட்டிருகா…. புரியும்னு நினைக்கிறேன்… அது மட்டும் இல்லை… பிரதாப்… இப்போ வெளில வந்துட்டான்.. அவன் இப்போ அடிபட்ட பாம்பு… அவன்கிட்ட எச்சரிக்கையா இருக்க வேண்டும்…. விளையாட்டா அவனை நினைத்துதான் கீர்த்தி இந்த நிலைமைல இருக்க காரணம் .” என்றவனிடம்

“தெரியும் பாலா…. கீர்த்தியப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்… அந்த பிரதாப் விசயத்திலே நானும் எச்சரிக்கையா இருப்பேன்… என்று பேச…

பிரதாப் என்று சொன்னவுடன் கீர்த்தனா பாலாவைச் சற்று கலவரத்துடன் பார்க்க

மனைவியின் கலக்கத்தை கண்டவன்… அவளுக்கு கண்களாலேயே…. வினோத்துக்கு ஒன்றும் ஆகாது என்று கண்களாலே சமாதானம் சொன்னவன்….

“சரி நான் போனை வைக்கிறேன்.. ஒரு நல்ல நாளா பார்த்து கீர்த்தி அப்பாகிட்ட பேசலாம்…” என்று சந்தோசமாகவும்…நிம்மதியாகவும் பேசியவன்….

சற்று தொண்டையைக் கனைத்தபடி….

“கீர்த்தி ரொம்ப நேரம் உன் வீட்டில இருக்க வேண்டாம்…. நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்…. என்ற போது

”சரி பாலா… என்ற வினோத்..சற்று நிறுத்தி

“கட்டிக்கப் போறவன்… அவளுக்கும் விருப்பம் என்று தெரிந்த போதும் உனக்கு அவள… தனியா என்கிட்ட விட மனசு இல்லைல… ஏன்னா அவ மானம் மரியாதை அவ்வளவு முக்கியம்னு நினைக்கிற… உன்னோட பாதுகாப்பில இருக்கிற பொண்ணு… உங்க வீட்டு பொண்ணுனா மட்டும் துடிக்குதா பாலா….” என்று மனதில் நினைத்ததை கேட்டே விட்டான்…

அடுத்த அடி வினோத்திடம் வாங்கினான் பாலா… கீர்த்திக்கோ வினோத் பேசுவது கோபம் வருவது போல் இருக்க…

பாலாதான் தன்னைச் சமாளித்தபடி… “நல்லாத்தான் பேசுற வினோத்…..ஆனா ஒண்ண மறந்துட்ட.. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறத சொல்றதுக்கும் முன்னாடியே … நான் அவள உன் கூட எந்த நம்பிக்கைல விட்டுட்டு வந்தேனு கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்” என்று கூற

வினோத் இதற்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போனான்

அந்தப் பக்கமும் போன் ஸ்பீக்கர் மோடில் இருந்தது போல்… கீர்த்திகாதான் இப்போது பேசினாள்…

“பாலா…… உங்களுக்கு முன்னமே தெரியுமா..என்று தயங்கிக் கேட்க….

“ஹ்ம்ம்ம்ம்ம்…. கீர்த்திதான் சொன்னா.. அதன் பிறகுதான் எனக்கு கூட தெரியும்,,,,, உனக்கு வினோத்தை பிடிச்சுருக்கா கீர்த்தி” எனுபோதே அவன் மனது ஆதியின் அல்ப ஆயுளை நினைத்து வருந்தாமல் இல்லை….

முடிந்து போன எதையும் நினைத்து இனி பிரயோசனம் இல்லை… என்று தெளிய

“பிடிச்சுருக்கு பாலா…. ஆனால்… எனக்கு பயமா இருக்கு” எனும் போது..

“கீர்த்தி… எதை நினைத்தும் கவலைப்படாதம்மா…. மோகனா ஆண்ட்டியும்…விஸ்வம் அங்கிளும் கண்டிப்பா ஒத்துகுவாங்க.. அவங்கள நினைத்து கவலைப் படாத…. இந்த நிமிசத்திலருந்து… நீ இழந்த இந்த 5 வருச சந்தோசத்தையும் வினொத்தோட சேர்ந்து அனுபவி…. அதுமட்டும் இல்ல ..ஆதி.” .என்று நிறுத்தியவன்…

“இன்னைக்குதான் அவன் ஆத்மா நிம்மதியா உறங்கியிருக்கும்” என்று கூறி சிறிது நேரம் அவளிடம் சாதரணமாக பேசியபடி கீர்த்தியிடம் கேட்காமலே…” போனை வைக்க…

அய்யோ பாலா ஏன் போனை வச்சீங்க…. என்று பதற

:”ஏன் என்னாச்சு…” என்ரு கூறும்போதே வினோத்திற்கு மீண்டும் அழைக்க

அவளின் குரலில் கடுப்பாய் வினோத் “ஏய்… என்ன குற….” என்று சொல்ல வந்த்தை சொல்லாம நிறுத்த”

“டேய் உன் ஆள் பேரும் அதுதான். .அடக்கி வாசி… இல்ல எனக்கும் ஆள் இருக்கு…. உன் ஆள கூப்பிட வைத்து விடுவேன்…” என்று சந்தோசமாக மிரட்டியவள்…

“ஆல் பெஸ்டுடா” என்று சொல்லியபடி அவன் பதிலை எதிர்பாராமல் போனை வைத்தவளை… பாலா முறைக்க

”என்ன…. என்னயவே பார்த்துட்டு இருக்கீங்க…. … கிளம்புங்க”

ஒரே நாளில்… இல்லையில்லை… ஒரே இரவில்… வினோத்-கீர்த்தி வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்… ஏன் தங்கள் இருவரின் வாழ்க்கையிலும் வர வில்லை… என்று தோன்ற வலித்த மனதை வேறு திசையிலும் மாற்ற முடியாமலும் தவித்தன அந்த இரு உள்ளமும்….

பாலாதான் ஆரம்பித்தான்

”ஊர்ல இருக்கிரவனுக்கேல்லாம் ஆல் பெஸ்ட் சொல்லு…. இங்க ஒருத்தன் நிலை வொர்ஸ்டா இருக்கிறது உனக்கு தெரியுதா இல்லையா….” என்றவனிடம் சட்டென்று திரும்பி உடனே

“ஆல் பெஸ்ட் ” என்றாள்… பாலா புரியாமல் விழிக்க

“கேட்டீங்க… சொல்லிட்டேன்… போதுமா… வாங்க” என்று சொன்னவள் காரை நோக்கிப் போனாள்…

“அப்டியே நான் கேட்டது எல்லாம் தந்துட்டாலும்” என்று சத்தமாகத்தான் சொன்னான்…

அவள் வெளியே செல்வதை உணர்ந்தவன்

“ஏய்… எதுக்குடி இப்போ சொன்ன…. சொல்லிட்டு போய்ட்டே இருக்க…. “ என்றவனின் வார்த்தைகள்… ஹாலில் மட்டும் எதிரொலிக்க.. கேட்க வேண்டியவளோ வெளியே காரின் அருகில் இருக்க…. வேறு வழி இன்றி காரை எடுத்தான் பாலா

1,522 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page