top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே!! என் உறவே!!!-41

அத்தியாயம் 41

நாட்கள் வேகமாகச் சென்றன… கீர்த்தி-ஆதி காதல் ஆழமாக ஆரம்பிக்க.. பாலாவோ மதுவை கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்க வில்லை… இருந்தாலும் மது ‘கஜினி முகமது’ போல்தான் தொடர்ந்தாள்… பலன் தான் பூச்சியமாக இருந்த்து…

கீர்த்தியும் ,மதுவும் இரண்டாம் வருடத்தில் கால் பதித்திருந்தனர்…

ஆதி… தன் தந்தையின் சென்னையில் கன்ஸ்ட்ரக்சன் தொழிலின் பிரிவில் தலைமை ஏற்க… பாலாவோ … தன் தந்தையின் தொழிலில் அல்லாமல்.. அவனுக்கு மென்பொருள் துறையில் இருந்த ஆர்வத்தால்… அதில் அனுபவம் பெற.. தன் தந்தையின் நண்பரின் அலுவலகத்தில் சேர்ந்தான்…அதுவும் மிகக் குறந்த சம்பளத்தில்… அவன் தந்தைக்கு இதில் இஷ்டம் இல்லைதான்..இருந்தாலும் மகனின் போக்கிலேயே விட்டு விட்டார்… அது மட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனத்தில் தனக்கு கிடைத்த வேலையையும் விட்டு விட்டு தந்தையின் நண்பரின் அலுவலத்தில் சேர்ந்தற்கு காரணம்…. நிர்வாகம்…. தொழில்நுட்பம் இரண்டிலும் ஒரே நேரத்தில்… மிகக் குறைந்த நாட்களிலேயே அனுபவம் வேண்டும்… என்று… அதில் அவனும் வென்றான்…

கீர்த்திதான் மதுவிடம் இதைப் பற்றி சொன்னாள்…

”நல்லதுதான் கீர்த்தி… அவனா… அவன் கால்ல நிக்கணும்னு முடிவு பண்ணி இருக்கிறான்… அது ஒண்ணும் தப்பு இல்லை… என்ன இவனுக்கு கொஞ்சம் பொறுமை இல்ல… அதே நேரம் பிடிவாதமும் இருக்கு…. இதெல்லாம் அவனுக்கு தடைக்கல்லா இருக்கும்… இதை எல்லாம் அவன் தாண்டி வர வேண்டும்“ என்று அவனை அறிந்தவளாய்ச் சொன்னாள்

இன்னைக்கு பாலாவும் உங்களப் பார்க்க வருவானு சொன்னேல…என்றபடி தனது அறையினுள் நுழைந்தாள்….

இடைப்பட்ட நாட்களில் எப்போதாவது ஆதியை பார்க்க வருவான்…அப்போது கீர்த்தியும் உடனிருப்பாள்தான்… மது அவர்களை எந்த வித்திலும் தொந்தரவு செய்ய மாட்டாள்…. பாலாவை பார்க்க வேண்டும் போல் இருந்தால் மட்டும் எப்போதாவது பாலா வரும் போது அவளும் வருவாள்… தூரத்தில் இருந்தே பார்த்துக் கொள்வாள்… பாலாக்கு மட்டும் அது தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது… இல்லாவிட்டால் அவன் அவர்களைப் பார்க்கவே வர மாட்டான் என்ற காரணத்தால்

அன்றும் மது முடிவு செய்தாள்… பாலாவை பார்க்க வேண்டும் போல் இருக்க…. கீர்த்தியுடன் கிளம்பினாள்… கையில் ஒரு வாழ்த்து அட்டையுடன்….

கையில் இருந்த வாழ்த்து அட்டையை கீர்த்தி கையில் கொடுத்து அவனிடம் கொடுக்கச் சொல்லியபடி தூரத்தில் அவன் தன் பார்வையில் தெரியும்படி நின்று கொள்ள…..கீர்த்தி மட்டும் ஆதி-பாலாவை நோக்கிச் சென்றாள்…..

மூவரும் சிறிது நேரம் பேசியபடி கழிய… பாலா மட்டும் அவர்களிடமிருந்து விடைபெற நினைத்து… கிளம்பப் போக….கீர்த்தி அவனிடம்…. உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும்.. அதை தன் தோழிக்காக என்ற நினைவில்.. கையில் வைத்திருந்த வாழ்த்து அட்டையை நீட்ட…

பாலா… அதை வாங்கியபடி “என்ன இது” என்று மட்டும் கேட்டபடி

ஏதோ ஒரு ஞாபகத்தில் அதைப் பிரிக்க…. அது மியூசிக் கார்டு என்பதால் அதுவும் மதுவே பாடி அதை அத்துடன் இணைத்திருக்க…. அது பாடத் தொடங்கியது….

பாடல் வரியிலேயே அது மதுதான் எனப் புரிய வாழ்த்து அட்டையை மூடியவன்…. கோபத்துடன் கீர்த்தியைப் பார்த்து முறைத்தபடி கார்டை கீழே வைக்க….

இப்போது கீர்த்தி “மது கொடுத்தாள்…. நீங்க வேலைக்கு போறதுக்கு வாழ்த்து சொல்லி….” என தயங்கியபடி நின்றாள்.

அதே நேரத்தில் அவனது போனும் அழைக்க…. அது ’கீர்த்தி’ என்னும் பெயரைக் காட்ட அட்டெண்ட் பண்ணாமல்… போனைக் கட் பண்ணினான்…

அது மதுவிடமிருந்து வந்திருக்கிறது என்று…

ஏனென்றால் செல்போன் அப்போதுதான் ஓரளவு புழக்கத்தில் வந்து கொண்டிருந்தது…. மதுவும் ….கீர்த்தியும் ஒரே நம்பரைத்தான் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர்….

ஆதிதான் … “டேய் எடுடா பாலா…. போன் பேசுறதுல என்ன இருக்கு..அவ என்ன உன்ன கடிச்சா கொல்லப் போறா….” என்று மீண்டும் வந்த அழைப்பை அட்டெண்ட் பண்ணச் சொல்ல… அதை அட்டெண்ட் பண்ணியவன்…. அவன் பேசுவதற்கு முன்…

மது ஆரம்பித்து விட்டாள்…

“என்ன பாலா போனை அட்டெண்ட் பண்ணக் கூட பயமா என்ன?” என்று கேட்க

அவனோ ”நீ என்னமோ பேசு” என்று பேசாமலே இருந்தான்….

அவன் கோபப்பட்டிருந்தால் கூட அவள் டென்சன் ஆகி இருக்க மாட்டாள்…. அவன் அமைதி அவளைக் கொல்ல…

“டேய் வாயத் திறந்து பேசித் தொலையேன்…. கார்டை பார்த்ததுக்கே வாயடச்சுப் போய்ட்டியா… என்ன” என்று எகிற

இதற்கு மேல் அவனும் சும்மா இருப்பானா….

“என்னடி … நானும் பார்த்துட்டே இருக்கேன்.. ரொம்ப பண்ற.... சும்மா போயிட்டு இருக்கேனு நெனச்சுட்டு இருக்கியா…. ஒருநாள் இல்லை ஒருநாள்… என்கிட்ட வாங்கிக் கட்டிக்கப் போற… அப்புறம்… அவன் என்னைக் கண்டபடித் திட்டினான்னு கண்ணீர வடிக்கப் போற…. பிடிக்கலேனு சொல்றேன்ல… விட்டுத் தொலையேன்…. கார்டு குடுக்கிறாளாம்…. நான் கேட்டேனா” என்ன…..”

”சரி கார்ட் பிடிக்கலேனா … அதக் கிழிச்சுப் போடு… அத விட்டுட்டு ஏன் கீழ வச்ச…” என்று அவனை ஏற்றி விட…

அவள் இங்கேதான் இருந்து பேசிக்கொண்டிருக்கிறாள்.. என்ற உண்மையும் புலப்பட…

“ஓ…. அப்டீங்களா மேடம்… என்றவன்…. கீழிருந்த கார்டை எடுத்து கொஞ்சம் கூடத் தயங்காமல் அதைச் இரண்டாய்க் கிழித்து ….கீர்த்தியின் கைகளிலேயே குடுக்கப் போக…. மது வந்து அதை வாங்கினாள்…..

பாலாவின் கோபம் ஆதியின் மேல் திரும்ப…

“என்னடா…. என்சினியரிங் படிச்சு முடிச்சுட்டு …. காதலுக்கு தூது போற வேல…பார்ட் டைம்ல ஆரம்பிச்சு இருக்கியா…. என்ன வரச் சொல்லிட்டு அவளையும் வரச் சொல்லி இருக்க…. தூது போற வேல பாக்கலேன்னா…. அவ ஃப்ரெண்ட் உன்னோட காதல கட் பண்ணிடுவேனு சொல்லிட்டாளா….”

இடையில் குறுக்கிட்டாள்..மது

“எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு… ஆதியையும்..கீர்த்தியையும் திட்டாத”

“நான் எதுக்கு உன்கிட்ட பேசனும்மா….” என்று மூன்றாம் மனுசியாய் அவளைப் பாவித்து சொல்வது போல் சொல்லியபடி… ஆதியிடம்

“டேய் நா… வரேன்..” என்றபடி கிளம்ப

அவன் கையை பிடித்து நிறுத்தினாள் மது….அவள் அவன் கையை பிடித்த விதம் அவனுக்கு இன்னும் எகிற…

“கைய விடுடி” என்று அவளை உறுத்து பார்த்த விழிகளில்… அடக்கப்பட்ட கோபம் தெரிய…. அவனுக்குள் இருக்கும் கோபம் எப்போது வெடிக்கும் என்று தெரியாமல்…ஆதி….கீர்த்தி அவனையே பார்த்தபடி நிற்க..

மதுவோ அவனின் கோபம் உணர்ந்தாலும….. தைரியமாக….

“நான் வந்தாலே நீ ஏன் ஓடற… மனசுல ஒண்ணும் இல்லாதவனுக்கு என்ன பயம்… உனக்கு பயம்… எங்க என்கிட்ட பேச ஆரம்பித்தால்,,,, என்ன லவ் பண்ணிடுவியோனு பயம் ….அதுதான்… நீ இந்த மாதிரிலாம் பண்ற…”

”கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி…. நான் கார்டைக் கிழின்னு சொன்ன அடுத்த நொடி என் பேச்சைக் கேட்டு பண்ணேல்ல…. அதே மாதிரி எங்க நான் லவ் பண்ணு.. லவ் பண்ணுனு சொல்ற வார்த்தையையும் ஒரு நாள்… செய்யப் போற… அதுதான் எனக்கு பயந்து… என் வார்த்தைக்கு பயந்து ஓடுற”

பாலா… அவளை இகழ்ச்சியாகப் பார்த்தபடி நிற்க….

“உன்னைப் பார்த்துலாம் பயந்து ஓடலம்மா…. துஷ்டனைக் கண்டால் தூர விலகுனு சொல்வாங்க….. அதுமாதிரினு நினச்சுக்கோ” என்ற போது மது தானாகவே அவன் கையை விட்டாள்….

அதற்கு மேல் பாலாவும் அங்கு இல்லை…..

மதுவே அவன் வார்த்தைகளில் கொஞ்சம் ஆடிப் போனாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை….

கீர்த்தி அவளை ஆறுதல் படுத்தும் விதமாய்ப் பேசப் போக…. அவளோ அவன் சொன்ன வார்த்தைகளினால் ஒன்றும் அடிவாங்கவில்லை…. என்பது போல் காட்டிக் கொண்டாள்… ஆதிக்கே பாலாவின் நடவடிக்கை சுத்தமாய்ப் பிடிக்க வில்லை…

அன்று இரவு…..

மது…பாலா கிழித்துக் கொடுத்த கார்டை ஒட்டிக் கொண்டிருந்தாள்… தன் தோழியைப் பார்த்த கீர்த்தி அவள் அருகில் அமைதியாக அமர்ந்தாள்…

“உனக்கு கோபமே வரலையா மது…. குடுத்த கார்டை கிழிச்சு நீட்டினப்ப…..” என்று கேட்க

”எனக்கா அவன் மேலயா…. நானே அவனுக்கு தேங்ஸ் சொல்லிட்டு இருக்கேன்.. நீ வேற..” என்ற தோழியிடம்

“எதுக்கு கிழிச்சு குடுத்ததுக்கா…” என கோபத்தில் முறைக்க…

ஆசை ஆசையாய் தன் தோழி கொடுத்த கார்டைக் கிழித்ததோடு மட்டும் அல்லாமல்..அவளை துஷ்டன் என்று வேறு பாலா இன்று சொல்லியதில் அவளுக்கு வருத்தம்…

அவன் மேல் இவளுக்கு கோபம் வர வில்லையாம்… என்று கோபம் மதுவின் மேல் வந்தது…

அவள் கோபம் உணர்ந்து

தோழியில் தலையில் செல்லமாய்த் தட்டியவள்…

“அவன் கிழித்தது வருத்தம்தான்… ஆனா பாரு என் செல்லம்… கார்டை சுக்கு நூறாக் கிழிக்காம… ரெண்டா குடுத்திருக்கான்….. ஒட்டுறதுக்கு வசதியா…. நெகட்டிவ்லயும் பாசிட்டிவ் பார்ப்பா இந்த மது அப்போ அவனுக்கு தேங்க்ஸ் தானே சொல்லனும்…” என்று சிரித்துக் கொண்டே கூற….

தோழியின் காதல் நிறைவேற வேண்டும் என்ற கோரிக்கையை கடவுளிடம் மட்டும் மானசீகமாக வைத்தாள் கீர்த்தி….

தோழிக்காக வேண்டிய கீர்த்தியின் வேண்டுதலை கடவுளும் நிறைவேற்றினார்… காதலில் மட்டும்…

-----------

அது ஒரு சனிக்கிழமை

சனிக்கிழமை தோறும் தோழியர் இருவரும் அருகில் உள்ள ஆசிரமத்திற்கு சென்று… தங்கள் இருவருக்கும் தெரிந்த நடனம் மற்றும் பாடலை அங்குள்ள குழந்தைகளுக்கு கற்றுத் தரச் செல்வதை தங்கள் வழக்கமாய்க் கொண்டிருந்தனர்..

இதுவும் மதுவின் ஏற்பாடே…. அன்றும் வழக்கம் போல் மது கிளம்பிக் கொண்டிருக்க… கீர்த்திகா… அவளிடம் எப்படிச் சொல்லலாம் என்று கிளம்பிக் கொண்டிருந்த மதுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்…

அவளின் பார்வையை உணர்ந்தபடிதான் அவளும் தயாராகிக் கொண்டிருந்தாள்… ”என்ன கீர்த்தி ரெடி ஆகலையா”

இனி அவளிடம் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்று

தயங்கியவாறே…..

“மது…. நான் ஒண்ணு சொல்வேன் திட்டக் கூடாது”

”சொல்லு நீ ….திட்றதா..வேண்டாமானு நான் முடிவு பண்றேன்…”

”இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ஆதிய பார்த்துட்டு வரவா……. நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஆதி பிஸி…. அதுனாலதான்…” என்று யாசிக்கும் குரலில் கேட்க

கீர்த்தியைப் பார்த்து முறைத்தாள்..

“எத்தனை தடவ சொன்னாலும் புரியாதா… உனக்கு என்ன இஷ்டமோ… அதப் பண்ணக் கத்துக்கோ…. அதுனால மத்தவங்களுக்கு ஒரு கஷ்டமும் வராமல் இருக்க வேண்டும்…. அது மட்டும் தான் முக்கியம்… இப்போ என்ன ஆதியப் பார்க்க வேண்டும் அவ்வளவுதானே… போய்ட்டு வா… நா என்ன சொல்லப் போறேன்….“ என்றபடி கிளம்ப

மொபைல் அடித்தது…

ஆதிதான்… பேசி முடித்த கீர்த்தி… மதுவிடம் வந்தாள்…

“மது நானும் வருகிறேன்… ஆதிய பார்க்கப் போக வில்லை” என்றவளை… என்னாச்சு என்ற விதத்தில் பார்க்க

இல்ல… பாலாவ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனுமாம் அதனால் வர வேண்டாம் என்று ஆதி சொல்லி விட்டார்… என்க

மது பதறி விட்டாள்…

“என்ன கீர்த்தி சாதாரணமா சொல்ற பாலாக்கு என்னாச்சு..” என்று கேட்க

“ஹையோ மது நீ நினைகிற மாதிரி சீரியஸாலாம் இல்ல…. பாலா கம்பெனி ஓபென் பண்ணி இருக்கார்ல…. அதுனால ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி கேட்டிருப்பாங்க போல…. அதுல பாலாவும் லைட்டா ட்ரிங்ஸ் எடுத்திருப்பார் போல… ஆனா அது அவருக்கு ஒத்துக்காம நேத்து ஒரே வாமிட்டாம்… ஆதியோட ரூம்லயே தங்கிட்டாராம்…” என்று கூற

அதற்கு மேல் அங்கு ஒரு நொடி கூட நிற்காமல் மது கிளம்பி விட்டாள்… ஆதியின் வீட்டை நோக்கி

“மது வேணாம்… அது பசங்க மட்டும் தங்கியிருக்கிற வீடு…. ஏதாவது பிரச்சனை ஆகிறபோகுது…” என்று கீர்த்திகாவின் கெஞ்சலை எல்லாம் அவள் காதில் வாங்க வில்லை…

ஆதி தங்கி இருந்த வீட்டின் முன் வண்டியை நிறுத்தி… கீர்த்தியை அங்கேயே நிற்கச் சொல்லியவள்… ஆதியை போனில் வெளியே வருமாறு அழைத்தாள்… அவன் அவர்கள் அருகில் வந்து கொண்டிருக்கும் போதே… கீர்த்திகாவிடம்

“நீ ஆதிக்கிட்ட பேசிட்டு இரு… நான் பாலாவ பார்த்துட்டு வருகிறேன்” ...என்றபடி…

ஆதியிடம் கூட சொல்லாமல் உள்ளே புகுந்தாள்…. அவன் ‘மது… மது…’ என்று அழைத்ததை கூடக் கவனிக்காமல்

ஆதி…. கீர்த்தியிடம்…

”அவன் தன் கண்டுக்க மாட்டேங்கிறான்ல… விடுறாளா இவ… அவன் ஒரு ஆள்னு தொங்கிட்டு இருக்கா… இன்னைக்கு ரெண்டும் என்ன பண்ண காத்துட்டு இருக்கோ… இவன் கோபத்துல எத்தன நாள் என் கூட பேசாம சுத்தப் போறானோ….”

கீர்த்திகாவிற்கோ… “பசங்க தனியா இருக்கற ரூம்க்கு இவ போய் ஆகனுமா” என்ற கடுப்பில் நிற்க…

தவறாமல் அங்கே ரகளைதான் நிகழ்ந்தது…

இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்த பாலா….. காலையில்தான் ஓரளவு நார்மலானான்…. அப்போதுதான் தூங்க ஆரம்பிக்க…. மதுவுக்கும் கொஞ்சம் தயக்கம்தான்.. இருந்தாலும் பாலாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க மற்றவற்றை பின் தள்ளியபடி வீட்டினுள் நுழைந்தாள்

பாலாவைப்…. பார்த்தவள்.. அவன் படுத்திருந்த கோலத்தில் அவன் எப்படி இருக்கிறானோ என்ற கவலையெல்லாம் மாறி மனதினுள் சிரித்தபடி அவன் அருகில் அமர்ந்தாள்…

தலைவலி போல… அவனுக்கு கைக்குட்டையை வேறு தலையில் கட்டியிருந்தான்…. சட்டையின்றி வெற்று மார்போடு படுத்திருந்தான்… மெதுவாய் அவன் நெற்றியில் கை வைத்துப் பார்க்க…. காய்ச்சல் எல்லாம் இல்லை என்பதில் ஆறுதல் அவளுக்கு

அவள் அமர்ந்த நொடியிலேயே…. அவனும் எழுந்து விட்டான்… ஏற்கனெவே முந்தின நாளில் அடித்த மதுபானம் காரணமாக சிவந்திருந்த கண்கள்… இப்போது கோபத்தில் இன்னும் சிவக்க… அவளைத் திட்டப் போனவன்… சட்டென்று

தன் இருக்கும் நிலை உணர்ந்து தன் சட்டையைத் தேட…. அது அவசரத்தில் அவன் கைகளில் சிக்க வில்லை

மது அவனிடம்… அவன் தேடிய அவன் சட்டையை எடுத்து அவனிடம் நீட்ட…. அதை வாங்காமல் அவளை முறைத்தவன்…. ஆங்கரில் மாட்டியிருந்த ஆதியின் டீசர்ட்டை எடுக்கப் போக…

”நீ இத வாங்கலேனா… டெய்லி இத நான் போட வேண்டிய சூழ்நிலை வரும்… எப்படி வசதி…” என்று கூற

வேகமாய் அவளிடமிருந்து பறித்தான் பாலா..

அதை வாங்கிய வேகத்திலேயே அவனது கோபத்தின் அளவு அவளுக்கு தவறாமல் உணர்த்த… இருந்தாலும் வெளியே போகாமல் அங்கேயே நிற்க… திரும்பி தன் சட்டையை அணிந்தவன்… அவள் இன்னும் நிற்பதை உணர்ந்து..

“வெளில போ…. என்ன கொலகாரனா ஆக்கிறாதா….. பொண்ணாடி நீ… பேச்சுலர்ஸ் மட்டும் தங்கியிருக்கற ரூம்கெல்லாம் தனியா வர்ற…. என்ன தைரியம் உனக்கு…. “ என்றவனை

“உனக்கு உடம்புக்கு சரியில்லேனு சொன்னா கீர்த்தி…. அதுதான் உன்னைப் பார்க்க வந்துட்டேன்… நான் என் பாலாவ பார்க்க வந்தேன்… அவன் இங்க இருக்கும் போது எனக்கு என்ன பயம்…. அதுதான் தைரியமா வந்துட்டேன்“ என்று தன் போக்கில் சொல்ல…

“உன் பாலாவா… அது யாரும்மா ….” என்று கேட்க

“தெரிஞ்சுட்டேதான கேக்குற…. பரவாயில்லை… இருந்தாலும் நீ கேட்கிறாய்… நானும் சொல்லாம் இருக்க முடியாது…. கேட்டுக்கோ…. இதோ என் கண் முன்னால நிக்கிறான்ல… இந்த ஸ்வீட் …. கோபக்காரன்தான் என் பாலா….. போதுமா…“ என்று கண் சிமிட்ட

ஏற்கனவே இருந்த உடல் அசதியும்.. தன்னை இந்தக் கோலத்தில் வேறு பார்த்து விட்டாள் என்பதும் அவளைப் பார்த்தால் எப்போதும் வரும் கோபம் இன்னும் அதிகமாக ஆக…

”எங்கே… என் உத்தமத் தோழன்… உன்னை இங்க அனுப்பிட்டு அவன் ஆளோட கடல போட்டுட்டு இருக்கானா…. இன்னையோட உனக்கு முடிவு கட்டுறேன்…என்றவன் அவளது கையைப் பிடித்து இழுத்தபடி அவளோடு வெளியே வந்தான்…

அவனின் முதல் தொடுகையை அனுபவித்தபடி வந்தவள்… இருவரும் வாசலை அடைந்தவுடன்

“என்னடா… முடிவு கட்டுறேனு சொல்லிட்டு…. தொடங்குற…. என்று அவள் கேட்டதை புரியாமல் பாலா முறைக்க

“என் கைய பிடிச்சுருக்க… அதத்தான் சொன்னேன்… இவ்வளவு இறுக்கமா பிடிச்சுருக்கறதா பார்த்தா.. எனக்கு முடிவு கட்டுற மாதிரி இல்ல…. என்னோட உன் வாழ்க்கையை தொடங்குகிற மாதிரி இருக்குனு சொல்ல வந்தேன்….” என்று அலுங்காமல் சொன்னவளின் கையை இன்னுமா பிடித்திருப்பான்…

“அப்பா..வலிக்குதுடா..கையே செவந்திருச்சு” என்று கையை உதறியபடி இன்னும் அவனை வெறுப்பேற்ற…

“டேய் ஆதி” என்ற பாலாவின் பெருங்குரலில் ஆதி கொஞ்சம் கூட அதிராமல் அவனை நோக்கி சாதாரணமாக வந்தான் …

அவனுக்கு மதுவால் ஆதியிடம் கோபப்படும் பாலா வழக்கமாகி விட்டான்

ஆதியின் அலட்சியமான போக்கு பாலாவிற்கு இன்னும் கோபம் ஏற்படுத்த

“ஏண்டா ஆதி நீதான் ஒண்ண லவ் பண்றேன்னு அத இழுத்துட்டு சுத்திட்டு இருக்கேன்னா…..எனக்கு ஒரு ஏழரச் சனியன வேற இழுத்து விட்ருக்க… அது கூட ஏழர வருசம்தான்…. இது எப்போ என்ன விடும்னு தெரியல…” என்று மதுவை பார்த்து நேரடியாகத் தாக்க

அவன் நாக்கின் சுழன்றடித்த பேச்சில் ஆதி..கீர்த்தி இருவரும் அதிர

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் …மதுவின் கண்கள்… அவளியும் மீறி கண்ணீரை உகுக்க….

மதுவின் கண்களில் நீரைப் பார்த்த கீர்த்திக்கு கோபம் தலைக்கேறியது…. எதற்கும் அத்தனை லேசில் அழ மாட்டாள் மது…. அவளையே அழ வைத்து விட்டான் என்று தவித்தவள்…

பாலாவிடம் பேசாமல் ஆதியிடம்

“ஆதி… பாலாகிட்ட சொல்லி வை… ஓவரா பண்றாரு…. அவருக்கு பிடிக்கலைனா.. அதோட நிறுத்திக்க சொல்லுங்க… அன்னைக்கு மதுவப் பார்த்து துஷ்டன்னு சொன்னாரு… இன்னைக்கு இப்படி சொல்றாரு… வார்த்தைகளை பார்த்து பேசச் சொல்லு… “ என்று தைரியமாக பேசிய கீர்த்தியிடமும் பாலா எகிறினான்

“ஏய்.. என்ன… எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு… முன்னாடி தானே நிற்கிறேன்.. அங்க தூபம் போடற வேலை எல்லாம் வேண்டாம்… நீ என்னைக்கு எங்க ரெண்டு பேர்க்கு இடையில வந்தியோ அப்போதே எனக்கு நிம்மதி போச்சு…. “

“டேய் பாலா நிறுத்துடா… இன்னொரு வார்த்தை கீர்த்திய பற்றி வந்தது” என்று ஆதியும் எகிர… அங்கு சூழ்நிலை தன்னால் கலவரமாவதை உணர்ந்தாள் மது

பாலா கட்டுப்பாடு இல்லாமல் வரம்பு மீறிப் பேசுவதையும் தடுக்க வழி தெரியாமல்

“கீர்த்தி வா போகலாம்….“ என்ற போதே அவளது குரல் ’ஙஞணநமன’ வாசிக்க

எப்போதும் அவளின் துடிப்பான குரலையே கேட்டிருந்த பாலாவிற்கு அவளின் கண்ணிரில் தளுதளுத்த குரல் சற்று அசைக்க… மதுவை பார்க்க…. அவள் கண்ணீரோடு வெளியேறிக் கொண்டிருந்தாள்….

………..

பாலா தலையில் கைவைத்துப் படுத்திருக்க…. ஆதி அவனுக்கு திட்டாபிசேகம் வழங்கிக் கொண்டிருந்தான்….

”எப்படிடா… இப்டிலாம் பேசற… ஒரு பொண்ணு உன் பின்னாடி வர்றான்ன இப்படிலாம் பேசத் தோனுமா… உன்னை எல்லாம் போய் லவ் பண்றாளே அவளச் சொல்லனும்….“

நினைத்துப் பார்த்தவனுக்கு தான் பேசிய வார்த்தைகளின் தாக்கம் அவனையே கூறு போட… மனது வலித்தது…தப்பு செஞ்சிட்டோமோ….அவள அப்படி பேசி இருக்கக் கூடாதோ… அழுதுட்டு வேற போனாளே… என்று மனம் படபடத்தது….என்னதான் கோபம் என்றாலும்… அவன்… அடுத்த வீட்டுப் பெண்ணை அப்படிப் பேசியது தவறுதான் என்று மனசாட்சி குத்தியது

“டேய் விடுடா… அவ என் முன்னால வந்தாலே எனக்கு என்ன பேசறதுனு தெரியாம பேசிடறேன்.. நான் பேசினது தப்புதான்… அதுக்காக அவகிட்ட மன்னிப்பு கூட கேட்கிறேன் போதுமா…. என்னைப் பேசி பேசி நீ வேற கொல்லாத” ..என்றவன்

“இந்தா போன்.. உன் ஆள் கூட பேசு ரிலாக்ஸ் ஆகிடுவ… நான் பேசினதுல உன் கீர்த்தி கூட அப்செட்…. மேடத்த கூல் பண்ணு” என்று அவனிடம் இருந்து எஸ்கேப் ஆகியவன்…மனச்சாட்சியின் கேள்வியிலிருந்து…தப்பிக்க முடியவில்லை

மதுவின் கலங்கிய கண்கள் அவனை விடாமல் இம்சைப் படுத்த… தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஆதியிடம் வந்தவன்,,,

‘டேய் ஆதி… கீர்த்திய இன்னைக்கு பார்க்க போவியா…” என்று கேட்க

”போவேன்…அதுக்கென்ன இப்போ” என்று வள்ளென்று விழுந்தான்…

ஆதியின் கோபம் உணர்ந்தாலும்… அமைதியாகவே

“நானும் வருகிறேன்… அவ வருவாளா…” என்று மொட்டையாகக் கேட்க

“கீர்த்தி வராம நான் மட்டும் எதுக்கு போறேன்” என்று ஆதியும் விடாமல் பேச

“கீர்த்தி இல்லடா… அவளோட ஃப்ரெண்ட்….”

“யாரு சந்தியாவா அவ வர மாட்டாளே”

தான் சொல்வது யாரை என்று தெரிந்துகொண்டே விளையாடிய ஆதியிடம் பொய்யாய் முறைத்தவன்

“டேய் … வேணும்னே பண்ற…. சரி… உங்க அன்னை தெரசா… அதுதான் மது பாலா” வருவாளா… அவகிட்ட நான் பேசினதுக்கு சாரி கேட்கணும்”

அவனை ஒருமாதிரியாகப் பார்த்த ஆதி….

“மது என்னைக்கு கீர்த்திய தனியா விட்டுருக்கா…. வருவா…. போகலாம்… ஆனா ஒண்ணு அவகிட்ட ப்ரச்சனை ஏதும் பண்ணின நான் பொல்லாதவன் ஆகிடுவேன்… ஞாபகம் வச்சுக்கோ… உங்க ரெண்டு பேர் பிரச்சனையில மனுசன் நிம்மதியா லவ் பண்ணக் கூட முடியல…..” என்று சொன்னவனிடம்… சமாதானமாய்த் தலை ஆட்டியவன்… மேலும்

“இந்த ஊர் உலகத்துல காதல் காதல்னு சொல்றாங்களேடா…. அப்படினா என்னடா…. எனக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுடா…. சுத்தமா வர மாட்டேங்குது…. எனக்கும் ஒரு பொண்ணு மேலயும் வர மாட்டேங்குது…. என்னை ஒருத்தி சுத்தி சுத்தி வந்தாலும் அவ மேலயும் வர மாட்டேங்குது…. ஏதும் ஹார்மோன் ப்ராப்ளமா இருக்குமோடா” என்று சீரியசாக நக்கலடித்தவனை பார்த்து ஆதி முறைக்க

சொன்னவனோ அந்த முறைப்பையெல்லாம்… தன் தோள் குலுக்கலில் அலட்சியப்படுத்தியபடி போனான்…

------------------------

வீட்டிற்கு வந்த மது அமைதியாகவே இருந்தாள்… கீர்த்திக்கு மனம் குலுங்க.. மது இந்த அளவுக்கு எதற்காகவும் கலங்க மாட்டாள்… இன்று இப்படி இருக்கிறாளே என்று அவளின் அருகில் சென்றவள்…

’மது’ என்று அழைக்க…

கவலை படிந்த முகத்தில் இருந்தவள்… அதையும் மீறி புன்னகையினை தவழ விட்டாள்…..கலங்கிய கண்களை பட்டென்று துடைத்தவள்….

“ஹேய் என்ன… எனக்கு ஒண்ணும் இல்ல…. என்னப் பார்த்து ஏன் இப்படி ஒரு லுக் விடற… பாலா என்னைத் திட்டிட்டான் தான்… வருத்தம்தான் எனக்கு… ஆனா இதை எல்லாம் பார்த்தா…. அவன் எனக்கு கிடைக்க மாட்டான்… வழக்கம் போல அவன் டிஸ்டர்ப் பண்ற வேலைய விட மாட்டாள் இந்த மது….” என்று கூற.. அதில் அவளது வழக்கமான உற்சாகமும் வந்து சேர்ந்தது….

அவனை என்னோட பாலாவா மாத்துற வர இந்த மது ஓய மாட்டாள்… அவனோட ஒவ்வொரு அணுவும் இந்த மதுவோட பேரச் சொல்ல வைக்கல… நான் மது..மது பாலா இல்ல….என்று சொன்ன அவள் குரலில் அதை நிறைவேற்றும் தீவிரமும் இருக்க….

கீர்த்தி அவளிடம்…

”உனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கா மது….அவன் பார்த்தா எனக்கு லவ் பண்ணுவான்னு நம்பிக்கையே இல்ல” என்று கேட்க

”அவன் மனசுல நான் எப்பவோ வந்துட்டேன்…. அது அவனுக்கே தெரியல…. நான் சொல்றது மட்டும் உண்மைனா… அவன் இன்னைக்கு என்னைப் பார்க்க வருவான் பாரு…. என் கண்ணுல தண்ணிய பார்த்துட்டான்ல… நான் அவன் மனசுல ஒரு சின்ன இடத்தில இருந்தாலும் அவன் இன்னைக்கு என்னைப் பார்க்க வருவான்” என்றவள் அன்று கீர்த்தியை மட்டும் இறக்கிவிட்டவள்… தான் மட்டும் வீடு வந்து சேர்ந்தாள்…

பாலாவும்…ஆதியும்… ஆதி-கீர்த்தி வழக்கமாக கீர்த்தியை பார்க்கும் இடத்திற்கு செல்ல.

அங்கு மது வரவில்லை என்பதை அறிந்த பாலாவுக்கு ஏமாற்றத்தில் கோபம் வர..… கீர்த்திகாவிடம் கேட்டு அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு லேண்ட் லைன் போனை அடிக்க… மது போனை எடுத்தாள்…

“ஹலோ” என்று சொல்ல

மறுமுனை இன்னும் அமைதியாக இருக்க….

“ஹலோ யாருங்க” என்றவளின் குரலில் மதுவின் வழக்கமான் துடிப்பு இருக்க பாலாவின் மனம் சமாதானமடைந்தது…..

“நான்தான் பேசுறேன்…” என்றவனின் குரல் மதுவிற்கும் புரிய…

”எதுக்கு சாரி சொல்ல போன் பண்ணுனியா…. எனக்கு உன் சாரிலாம் தேவை இல்ல…. எனக்கு உன்னோட காதல் தான் வேணும்… நீ சாரி கேக்க வருவேனுதான் நான் வராம இருந்தேன்….” என்றவளிடம்…

பெயர் சொல்லாமலே தன் குரலை உடனே அவள் அடையாளம் கண்டு கொண்டதில் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினான் தான்…

“நான் வருவேன்னு தெரியுமா எப்படி” என்று சந்தேகமாய்க் கேட்க

“நீ என் பாலான்னா வருவேன்னு நெனச்சேன்…வந்துட்ட….” என்று சொல்ல..

“நீ பொய் சொல்ற…. சும்மா அடிச்சு விடாத….. இன்னைக்கு உன்னைக் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்… அதுனாலதான் மனசு கேக்காம வந்தேன் … போதுமா…. வேற ஏதும் கற்பனை பண்ணிக்க வேண்டாம்…. சாரி நான் பேசுன எல்லாவற்றிர்க்கும் ” என்று போனை வைக்கப் போனான்..

“பாலா..பாலா..வச்சுடாத….நான் சொல்றத மட்டும் கொஞ்சம் பொறுமையா கேளு… ப்ளீஸ்….” என்றவளின் பேச்சில் ஏதோ ஒன்று மனதைத் தொட கொஞ்சம் இறங்கி

“சொல்லு….கேட்கிறேன்…” என்று அவள் பேசுவதைக் கேட்க அவனும் ஆயத்தமாக

“ஓ காட்.. என் பாலாவா இது… கோபமே இல்லாம என்கிட்ட பேசுறான்… இது கனவா … நனவா… ” என்று மதுவும் ஆச்சரியமாக பேச

அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் வந்த ‘என் பாலா’ என்ற வார்த்தையில் பாலாவும் இளகித்தான் இருந்தான்…

“எல்லாம் நிஜம் தான் … ஓவரா சீன் போடாத… சொல்ல வந்த விசயத்த சொல்லு….”

”ஹைய்யோ நீ என்கிட்ட கோபமே இல்லாம பேசுறியா… எனக்கு அப்படியே வானத்தில பறக்கிற மாதிரி இருக்கு… நானே ஒரு நிலையில இல்லடா… நான் என்ன பேச வந்தேன்னே மறந்துட்டேனே… சரி விடு இன்னொரு நாள் சொல்றேன்” என்று உற்சாகமாக பேசியவளை…

”ஏய்….. கடுப்ப கிளப்பாத…. ஏதோ சொல்ல வருவதைப் போல பில்ட் அப் மட்டும் குடுத்த…. ஒழுங்கா சொல்லு.’

“சத்தியமா பாலா…. மறந்துட்டேன் ….இன்னொரு நாள் சொல்றேன் நான்” என்று அப்பாவியாய்ச் சொல்ல…

”இன்னொரு நாள் நீ போனை மட்டும் பார்த்துட்டு இரு… நான் இனி போன் பண்ண மாட்டேன் வைக்கிறேன்” என்றவனிடம்

“ஆனா நீ எப்டியும் இன்னொரு நாள் என்னைத் திட்டுவதான… நானும் கண்ண கசக்குவேன்… சோ நீயும் எனக்கு போன் பண்ணுவ …. அப்போ சொல்லிகிறேன்” என்று திட்டமாகச் சொல்ல

பாலா சிரித்து விட்டான்..

“ஏய் மது …. நான் திட்டறதெல்லாம் உனக்கு ஏறுதா… இல்லையா… கூலா சொல்ற….”

“பாலா சிரிச்சியா நீ….என் பேரைச் சொன்னியா நீ … என்னடா ஒரே நாள்ல அதிர்ச்ச்சியா குடுக்கிறாய்… இத்தனை அதிர்ச்சியை உன் மது தாங்க மாட்டாளே “ என்று ஏற்ற இறக்கத்தில் பேச

“நான் என்ன ஸ்பெசிமனா… சாதரணமா பேசுனா… கனவா நனவாங்குர… சிரிச்சா… அதிர்ச்சி கொடுக்கிறேன்னு சொல்ற….என்ன நக்கலா….”

“பாலா என் கண்ணீருக்கு இத்தன தூரம் வலிமையா… இது தெரிஞ்சுருந்தா… என் காதல சொன்ன அன்னைக்கே கண்ணுல நாலு சொட்ட வச்சுட்டே சொல்லி இருப்பேனே….11/2 வருசம் வேஸ்ட் பண்ணிட்டியே மது…”

என்று இதுவரை விளையாட்டாகப் பேசியவள்

”பாலா” என்று மட்டும் சொல்லி நிறுத்த

“சொல்லு” என்று அவனும் நிறுத்த

”பாலா” என்று மீண்டும் கொஞ்சம் காதலோடும் சொல்ல

”ம்ம்ம்…”…அவனும் இளக்கமாக பதில் அனுப்ப

“I Love you “ டா…..

இம்முறை பாலா போனை எல்லாம் வைக்க வில்லை…. மது மேல் கோபமும் வரவில்லை…

அமைதியாகவே இருந்தான்… அவன் எந்த மாதிரியான நிலையில் இருக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை..

“என்னடா பதில் வர மாட்டேங்குது… எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்டா… ஏன்னு கேட்டாலாம் தெரியாது… ஆனா… I love you… ஏண்டா உனக்கு என்னைப் பிடிக்கல… எனக்கு உன் கூடவே இருக்கனும் போல இருக்குடா…. கொஞ்சம் கூட நான் உன்னை இம்ப்ரெஸ் பண்ணலையாடா…” என்று அவள் கேட்ட போது அதில் உண்மையான வருத்தமும் இருக்க

பாலாவின் மனமும் மதுவின் மேல் மெல்ல மெல்ல சாயதான் ஆரம்பித்திருந்தது…. அதை உடனே ஒத்துக் கொள்ள்வும் முடியாமல்

“மது… எனக்கு 3 நாள் டைம் தருவியா…. நான் நீ கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்றேன்…” ப்ளீஸ்

சரி என்றபடி மது… மனம் இல்லாமல் போனை வைக்க

பாலாவுக்கோ… மனம் முழுவதும் மதுவின் பேச்சுகளே நிரம்பியிருக்க… புன்னகையுடன் அவளது அழைப்பைக் கட் செய்தவன்,,, தனது மொபைலில் அவர்களது மொபைல் நம்பரை ’கீர்த்தி’ என்ற பெயரில் சேவ் செய்திருந்தான்…. அதை இப்போது ’மதுபாலா’ என்று மாற்றினான்.. மாற்றிய பெயரை திரையிலே வைத்து பார்த்துக் கொண்டே இருந்தான்…

அவள் பெயருக்கு பின்னால் இருந்த தன் பெயருக்கு புது அர்த்தம் கிடைத்தது போல இருக்க…

மது பாலா..

மது பாலா..

மது பாலா

மூன்று முறை தனக்குள் உச்சரித்துப் பார்த்தவனின் இதயம் அவனின் சம்மதம் கேட்காமலே மதுவிடம் சரணாகதி அடைந்தது

……

பாலா முக்கியமான் டிஸ்கஸனில் இருக்க….. அவனது மொபைல் இடைவிடாமல் அதிர்ந்தது.. அதைப் பார்த்தவனுக்கு மதுவின் பெயர் திரையில் ஒலிக்க… அதில் தோன்றிய அவளது பெயரே அவனுக்கு உடலில் அதிர்வலைகளை ஏற்படுத்த… தனக்குள் உருவான இந்த புதுவிதமான உணர்ச்சிக்கு பெயர்தான் காதல் என்பதை முழுவதுமாக உணர்ந்தான்… இருந்தாலும் மீட்டிங் இருக்கின்ற காரணத்தால் அவளின் போனை அட்டெண்ட் செய்ய முடியவில்லை…. அதே நேரத்தில் மீட்டிங் கிலும் கவனம் செலுத்த முடியவில்லை…. பாலா என்கின்ற அந்த இளைஞனுக்குள் வந்த காதல் அவனை முற்றிலும் ஆக்கிரமிக்க… 5 நிமிடத்திற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல்…

இடையிலேயே மற்றவர்கள் அனுமதியுடன் வெளியேறி மதுவின் போனை அட்டெண்ட் செய்தான்

”சொல்லு மது…. என்ன விசயம்…”

“என்ன விசயமா… அடப்பாவி… சுத்தம்… டேய் …. நீதானடா 3 நாள் டைம் கேட்ட… அதுதான் என்ன பதில்னு கேக்க போன் பண்ணினேன்…”

“நான் தான் ஈவ்னிங் வர்றேனு …ஆதிக்கிட்ட சொல்லியிருந்தேனே… அப்புறம் என்ன அவசரம்..” என்று வீம்பாக இவனும் பேச

”நீ என்ன சொன்ன… 3 நாள் டைம்னு… ஆனா என்னப் பொறுத்தவறை 72 hours.. அது கூட 10 minitsக்கு முன்னாடி முடிஞ்சுடுச்சு.. இதுவே என்னைப் பொறுத்த வரை லேட்… அதுதான் போன் பண்ணினேன்” என்றவளின் காதலில் கரைந்துதான் போனான்… இருந்தும்

“நேர்ல சொல்றேன்…இப்போ வை” என்று தன் மனதை மறைத்து சாதாரணமாகச் சொல்வது போல் சொல்ல…

“யெஸ் ஆர் நோ… அதை மட்டும் சொல்லுவேண்டா… வேற எதுவும் சொல்ல வேண்டாம்… உன் மது பாவம் டா… தாங்க மாட்டாடா ஈவ்னிங் வரைக்கும்லாம்..” என்று அடம் பிடிக்க

சிரித்தவன்….. ”உன்னை….” என்று மட்டும் செல்லமாக கோபிக்க

“சொல்லுடா..ப்ளீஸ்… சஸ்பென்ஸ்லாம் தாங்க முடியாது என்னால…” என்றவளின் கெஞ்சல் தாங்காமல்.. நிதானமாக

”உன் பாலாவ இருந்தா நான் என்ன சொல்லி இருப்பேன் மது… அதுதான் என்னோட பதிலும்….” சொன்ன பாலாவுக்கு அப்போதே தன் காதலியை…. மதுவை.. அவள் முகத்தை பார்க்க வேண்டுமென்று மனம் துள்ள…

மதுவுக்கோ… வார்த்தை எதுவும் வராமல்….

”பாலா…..” என்று சந்தோசத்தில் குரல் கம்மியது …

அதற்கு மேல் அவனை நச்சரிக்காமல் கீர்த்தியிடம் விசயத்தை சொல்ல துள்ளிக் குதித்து ஓடினாள்…. மது என்கின்ற அந்த ’மதுபாலா’…. தன் பெயரில் மட்டும்தான் அவன் பாதியாக இருக்கப் போகிறான்… வாழ்க்கையில் அல்ல என்பதை உணராதவளாய்… அதன் உரிமை வேறொருத்திக்கு போகப் போகிறது என்பதை அறியாதவளாய்….

829 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page