top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே !!! என் உறவே ??? - 4

அத்தியாயம் 4:

அன்று காலை எழுந்தது முதல் கீர்த்திக்கு உற்சாகம் அளவுக்கு மீறி இருந்தது.ராகவுக்கும் மைதிலிக்கும் தான் வாங்கி வந்த ஆடைகளை கொடுத்து அணியச் செய்தவள் வழக்கம் போல் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். அதே போல் மைதிலி அவளுக்கு தாங்கள் வாங்கி வந்த சேலையினை கொடுத்து அணிந்து வருமாறு கூறினர்.அவர்கள் கொடுத்த பார்சலுடன் உள்ளே போனவள், வெளியே வரும் போது அரைமணி நேரம் முடிந்து விட்டிருந்தது.வெளியில் வந்த தங்கள் மகளைப் பார்த்தவர்கள், அப்படியே சிறிது நேரம் தங்கள் ஆசை மகளின் அழகில் மயங்கி நின்றனர்.ராகவினின் மனதினிலோ அவளது தோற்றம் குமரியாக காட்டினாலும், முகத்தில் இருந்த குறும்புத்தனம் அவளைக் குழந்தையாகவே நினைக்க தோன்றியது.மைதிலியின் தாய் மனமோ வெகுவிரைவில் தன் மகளுக்கு திருமணம் செய்து கண் குளிர பார்க்க வேண்டும்.தன் உடன் பிறவா அண்ணனிடம் விரைவில் பேச வேண்டும் என்று நினைத்தது.

ஹ‌லோ ஹீரோ,ஹீரோயின் எந்த உலகத்தில் இருக்கீங்கஎன்று கீர்த்தி கேட்ட பொழுதுதான் நனவுலகத்திற்கு வந்தனர்.

எனக்கு சேலை நல்லாயிருக்காப்பா, உங்க மைதி அளவுக்கு இல்லைனா கூட ஏதோ பரவாயில்லைதானேப்பாஎன்று குழந்தை மாதிரி கேட்டவளிடம் ,மைதிலி

கீர்த்தி இப்பதான் உனக்கு 22 முடிந்து 23 வயதாகியிருக்கிறது என்பதை நம்பியிருப்பார்.இல்லைனா நீ அவருக்கு 6 வயது குழந்தைதான்.அப்பப்ப அவருக்கு ஞாபகப்படுத்தத்தான் உனக்கு சேலை எடுத்து கொடுக்க சொல்வது என்று அவர்களது மகள் இன்னும் குழந்தை இல்லை திருமணத்துக்கு தயாராகி நிற்கும் குமரி என்பதினை கணவனுக்கு ஞாபகமூட்டினாள்.

அச்சச்சோ நீங்க வேறம்மா, நான் 6 வயதாக இருந்தால்தான் அப்பாக்கு ஒரு 15 வயது குறையும். நல்ல நாள் அதுவுமா அப்பாக்கு என்னால வயது ஏறிவிட்டதே என்று போலி வருத்தத்துடன் என்ன ஹீரோ சார் அப்படித்தானே என்று ராகவை வம்பிற்கு இழுத்தாள்.

உன்னோட சரிக்கு சரி பேச இப்போ நேரமில்லை .எனக்கு ஆஃபிஸ் போகனும்என்றபடி பெண்கள் இருவரையும் கோவிலுக்கு கிளப்பினார். அவர்கள் மூவரும் கீழிறங்கி வந்த போது அவர்களது அப்பார்ட்மென்ட் வாசிகள் பலரது வாழ்த்துக்களையும் புன்னகையுடன் கடந்து வந்தனர்.

காரி பின்னால் ஏறப் போன மைதிலியை ,”அம்மா முன்னால ஏறிக்கோங்க , உங்க திருமண நாள் அதுவுமா ஹீரோ,ஹீரோயினை பிரிச்ச பாவம் எனக்கு வேணாப்பா,” என்றபடி பின்சீட்டிற்கு சென்றாள்.

உனக்கு இந்த வாய் எப்போதான் குறையப் போகுதோ ,தெரியவில்லை, அளவுக்கு மீறி பேசுகிறாய். ” என்று கண்டித்தவளிடம்,

அப்படி என்ன இப்போ அளவுக்கு மீறி பேசிவிட்டேன், போய் அப்பா பக்கத்தில் உட்காருங்கன்னா போகணும். புரிஞ்சதா, இங்க எல்லோரும் நான் சொல்வதைதான் எல்லோரும் கேட்க வேண்டும் என்னங்கப்பாஎன்று அதிகாரத் தோரணையுடன் கூறிய கீர்த்தியைப் பார்த்து சிரித்தவர்

பின்ன கீர்த்தி வார்த்தைக்கு இங்க நோ அப்பீல்என்று சரண்டரானவர், அப்புறம் கீர்த்தி நாங்க ஹீரோ ,ஹீரோயின் அப்போ நீ யாரும்மா என்று அவளிடமே திருப்பி கேட்டார்.

இப்போழுது மைதிலி முந்திக் கொண்டு கீர்த்திமா நீ செகெண்ட் ஹீரோயின் தானே என்றபோது கீர்த்தியின் முகம் சிவந்தது.தாயினை பார்த்து முறைத்தபடி,

இது உங்க film . அதனால் அப்படி சொன்னேன். நான் இதுல child artist போதுமா என்று கோபத்துடன் முறைத்தவள், என்னைப் பார்த்தால் Second heroine மாதிரி தெரியுதா, பாருங்க என் hero வரட்டும், அதன் பிறகு நீங்க இரண்டு பேரும் character artist ஆகப் போறீங்க. என்று கோபம் சற்றும் குறையாமல் கூறினாள்,.அதைப் பார்த்தவர்கள்

” sorry சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். நீ இதெல்லாம் சீரியஸாக எடுத்துக்கலாமாஎன்று மைதிலி தனது வார்த்தைக்கு மன்னிப்பு வேண்டியவள் ,தன் மகளின் முகம் மலர்ந்த பார்த்த பிறகுதான் ஆறுதல் அடைந்தாள்.

……………

“Global Net ” அலுவலகம் வழக்கமான சுறுசுறுப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அதன் MD பாலாவோ மனதில் அமைதியின்றி தந்தையின் வார்த்தைகளுடன் போராடிக்கொண்டிருந்தான்.பலவாறாக சிந்தித்தவன், நேரடியாக சௌந்தர்யாவுடன் பேச முடிவு செய்தான். கண்டிப்பாக அவன் தனது மனதினை அவளிடம் சொல்லிவிட்டால் அவளும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டாள் என்ற முடிவு செய்த போது அவனது மனம் ஓரளவு நிம்மதி அடைந்திருந்த்தது. ஒருவாறாக தன்னைச் சமாதனப்படுத்தியவன் அன்றைய தின வேலைகளை ஆரம்பிக்க ஆரம்பித்தான்.

கீர்த்தி அன்று வழக்கத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தாள்.அவளை கண்ட கவி புருவத்தினை உயர்த்தியவள், ‘என்ன கீர்த்தி இவ்ளோ சீக்கிரம் வந்து விட்டாய்என்று கேள்வி கேட்டவளிடம், புன்னகையினை மட்டும் பதிலாகத் தந்தாள். இந்த சிரிப்பு ஒண்ணு போதும்டி உனக்கு, எல்லாரும் கவுந்துடுவாங்க. என்ற படியே

ஏய் எங்க உன் பிறந்த நாள் ட்ரெஸ் . saree ன்னு சொன்ன சல்வாரில் வந்திருக்கிறாய்என்று வினவினாள்

இல்ல கவி இன்னைக்கு புது டீம் மெம்பர்ஸை சார் இன்ட்ரடியூஸ் பண்றேணு சொன்னார். அதுனாலதான் வழக்கம் போல வந்துட்டேன் என்று பதில் கூறினாள்.

ஓ என்றபடி , by the way பாலாவை மீட் பண்ற டைமில் ,இந்த கவி மேடத்தை பற்றி சொல்லி வை. பின்னால் உனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் என்று மிரட்டும் தொணியில் கூறிய கவியிடம் உங்கள் உத்தரவு மேடம்என்று பவ்யமாகக் கூறியவளை பார்த்தபடியே கவி கடந்து சென்றாள்.

கவி கடந்து செல்வதற்கும் , அவளது டேபிளில் தொலைபேசி அழைக்கவும் சரியாக இருந்த்தது. அட்டெண்ட் பண்ணியவள்ஒகே சார் ,i will come என்றபடி போனை வைத்தவளுக்கு ஏதோ ஒன்று உறுத்தியது. பாலா குரல் மாதிரி எங்கேயோ கேட்டிருக்கிறோமோ என்று மூளையினை கசக்கியவளுக்கு,பாலாவின் குரலில் ஏதோ சோகம் இருந்த மாதிரி தெரிந்ததது.இதே போல்குரலில் வலியுடன் ஏற்கனவே கேட்டது போல் இருந்த கீர்த்திக்கு, எங்கே என்று நினைவுகளின் தேக்கத்தில் தேடத் துவங்கிய கீர்த்தியினை கவியின் குரல் மீட்டு வந்தது. இல்லை கவியின் உருவில் அவளது நினைவுகளை விதி தடுத்தது எனலாம்.

என்ன கவி, திரும்ப வந்து நிற்கிறாய் , என்ன விசயம் என்றாள் கீர்த்தி

வினோத்தா போனில் என்று நிறுத்திவிட்டு , வினோத்னா சும்மா உன்னை கிண்டல் பண்ணலாம்ல, எனக்கு வேற போரடிக்குதுஎன்றவளை நக்கலாகப் பார்த்தவள்,

வினோத் இல்லை வேற யார்னு கண்டுபிடிஎன்றவளிடம்,

போனை வைத்துவிட்டு கனவு கண்டு கொண்டிருப்பதைப் பார்த்தால் வினோத்னுதான் தோணுது.வேற யாராய் இருக்கும்?” என்றபடி உதட்டை பிதுக்கினாள் கவி.

சொல்லட்டுமாஎன்றபடி பாலாவின் பெயரைக் கூறினாள்

பாலாவா என்று முகத்தினை சுருக்கினாள்,

கவி என்ன கோபம் வருதாஎன்று சீண்டியவள்,”

இந்த கோபத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு இருக்கிற 1 month ல பாலாவைக் கரெக்ட் பண்ற வழியப் பாரு .இப்போ என் வழியை விடு என்று அவளது மூக்கினை திருகியபடி பாலாவின் அறையினை நோக்கி விரைந்தாள்.

அனுமதி கேட்டபடி பாலாவின் அறையினுள் நுழைந்த கீர்த்தி புதியதாக நின்றிருந்த ஐவரின் மேல் பார்வையினை ஓட விட்டவள், நான்காவதாக நின்றவனின் மேல் சற்று ஆச்சரியத்துடன் நின்றது. கீர்த்தனா என்ற பாலாவின் குரலில் வேகமாக பாலாவின் புறம் திரும்பினாள்.

இவங்கதான் புது மெம்பர்ஸ்.” என்றபடி அவர்களிடம் திரும்பியவன் இவங்க கீர்த்தனா இந்த ப்ராஜெக்டோட டீம் லீடர் என்றபடி அவளைப் பற்றி ,அவளது திறமைகளைப் பற்றி பேசி கீர்த்தனாவை அறிமுகப் படுத்தினான்.அதன் பிறகு கீர்த்தனாவிடம் அவர்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தான் நடேசன் ,குமார், மிருதுளா, கார்த்திக் எனும் போதே கீர்த்தியும் கார்த்திக் என்றாள். பாலா ஆச்சரியமாக ஏற்கனவே

கார்த்திக்கை தெரியுமா என்றபோதுகார்த்திக் தொடங்கினான்.

கீர்த்தியை எனக்கு தெரியும் சார்”, என்ற கார்த்திக் கூறியபோது கீர்த்தி என்ற வார்த்ததையில் அவனையும் அறியாமல் சற்று மனம் பின்னோக்கி சென்ற போதும் உடனடியாக சுதாரித்தவன் கார்த்திக்கை கவனிக்க ஆரம்பித்தான்

நாங்க ஒரே காலேஜ் . நான் கீர்த்திக்கு 2 வருடம் சீனியர்என்றபடி கீர்த்தியை இங்க எதிர்பார்க்க வில்லை எனும் போதே கார்த்திக்கின் முகம் வெளிறியிருந்தது.

ஒருவாறாக அறிமுகப் படலம் முடிந்து மற்றவர்கள் வெளியேறி இருந்தனர். அதன் பிறகு பாலா அவளிடம் இந்த வேலைக்கு தேவையான குறிப்புகள்,மற்றும் விளக்கத்தினை அளித்தான். அவற்றையெல்லாம் கவனமாகக் கேட்டபடி கீர்த்தி விடை பெற்று திரும்பியபோது ,கீர்த்தனா ஒரு நிமிடம் இங்க உங்களை கீர்த்தினுதான் சொல்வாங்களா, என்று கேட்டான்

எல்லாரும் இல்ல சார், எனக்கு நெருக்கமானவங்க மட்டும் சார் என்று புன்னகைத்தாள்.

ஓ என்றபடி, சற்று தயங்கி நீங்க தப்பா எடுக்கவில்லை என்றால் நானும் கீர்த்தி என்று கூப்பிடலாமா என்றவனை புரியாமல் பார்த்தவள் சற்று விழித்தாள்.அவளது கண்களின் மூலம் அவளைப் படித்தவன் , இல்ல என் பெஸ்ட் ஃப்ரென்டோட மனைவி , எனக்கும் அவ ஃப்ரெண்ட் .கீர்த்தினு பேர் அவ ஞாபகம் வந்துடுச்சு. என்று மதுவின் உயிர் தோழி கீர்த்திகாவை நினைத்தபடி பேசினான்

இப்பொழுது கீர்த்தியும் சுதாரித்தவளாய் ”ஓ தாரளாமாய்.இதில் என்ன சார் இருக்குஎன்றபடி வெளியேறினாள்.

வெளியே வந்தவள் கவியை தேடிச் சென்றாள்.

தன்னைக் பாலா கீர்த்தி என்று அழைக்கலாமா என்று கேட்டதைக் கூறி அவள் கோபத்தில் முகம் சிவப்பதைக் காணலாம் என்று நினைத்து போன‌வளுக்கு எதிர்மாறாய் பதில் வந்தது.

கீர்த்தி கூறியதைக் கேட்ட கவி, கண்கள் விரிய அப்படியா கீர்த்தி, ”உன்னை கீர்த்தினு கூப்பிடலாமானா கேட்டார். என்றவள் , ” பரவாயில்லை கீர்த்தி , நம்ம ஆள் கொஞ்சம் rough and type மாதிரியான ஆள் மாதிரி தெரியுதே, எப்படி வழிக்கு கொண்டுவரலாம்னு நினைத்தேன்.இப்ப கொஞ்சம் நம்பிக்கை வந்துடுச்சு. தேத்திராலாம்என்ற படி கீர்த்தியிடம் அபிப்ப்ராயம் கேட்கும் பாவனையில்

என்ன கீர்த்தி தேத்திராலம்லஎன்றாள்.

அவள் பதிலில் அதிர்ந்த கீர்த்தி சிரித்த படியே திருகியவள் , எப்படி கவி…. எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ம்ம் தேத்திரலாம்,தேத்திரலாம் ஆனால் நம்ம ஆளை இல்லை உன் ஆளைஎன்று அவளின் வார்த்தைகளை திருத்தியபடியே தனது இருக்கைக்கு சென்றாள்.

அதன் பிறகு புது வேலைக்கு தேவையானவற்றை பார்க்க ஆரம்பித்தவள் அப்படியே அதில் ஆழ்ந்தும் விட்டாள்.

கிட்டத்தட்ட தனக்கு தேவையான தகவல்களை திரட்டிய திருப்தியில் , சற்று ஓய்வாக இருக்க கண்களை மூடியவளுக்கு அப்போதுதான் கார்த்தியின் ஞாபகம் வர,

கீர்த்தி உன்னெல்லாம் என்ன பண்றது, உன்னோட சீனியர் இங்கே ஜாயின் பண்ணிருக்கான். அவனிடம் போய் ஒரு வார்த்தை கூட பேச போகமல் மறந்து விட்டாயே என்ற மனதிற்குள் கடிந்தபடி கார்த்திக்கைத் தேடிச் சென்றாள் கீர்த்தி.

தன்னைத் தேடி கீர்த்தி வருவதைக் கண்ட கார்த்திக் , கொஞ்சம் முகம் வெளுத்தவனாய் அவளை எதிர் கொண்டவன் ஹாய் கீர்த்தி என்றபடி வரவேற்றான்.

ஹாய் கார்த்திக் சாரி கொஞ்சம் வொர்க் இருந்தது.அதனால் வர முடியவில்லை. நீங்க இங்க எப்படி என்ற கேள்வியை கேட்க கூடாது.ஆனால் உலகம் உருண்டைதான் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும் . உங்களை பார்த்தவுடன் எனக்கு நம்ம காலேஜ் ஞாபகம் வந்து விட்டது. என்று அவனிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் துள்ளளாக பேச ஆரம்பித்தாள் கீர்த்தி, அவனோ கீர்த்தியை வைத்த கண் வாங்காமல் அவள் பேசுவதேயே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏனென்றால் அவன் அவளுடன் படித்த பொழுது தான் சீனியர் என்ற கெத்துடன் , ஹீரோ போல் அவளை வம்பிழுக்கப் போய் அவள் பிரின்ஸ்பாலிடம் ரிப்போர்ட் பண்ணியதால் பெரிய பிரச்சனை ஆகி இருவருக்குமே அங்கு ஒருவருக்கொருவர் பேசியதுமில்லை

கார்த்திக்கிற்கோ அவள் திமிர் பிடித்தவள் என்ற நினைப்பு, அவளுக்கோ அவனைக் கண்டாலே ஆகாது.பெரும்பாலும் அவன் திசைக்கே வர மாட்டாள். ஆனாலும் இவன் தேடிப் போய் வம்பிழுப்பான்.அதன்பிறகு அவன் அடுத்த வருடமே தனது கடைசி வருடப் படிப்பை அவனது அப்பா இறந்த காரணத்தினால் வேறு கல்லூரிக்கு மாற்றி சென்று விட்டிருந்தான். அதனால்தான் இன்று கீர்த்தியை பார்த்தவுடன் சற்று வெளிரியதும், ஆனால் அவளோ தன்னுடன் படித்த நண்பனை மீண்டும் பார்ப்பது போல் அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்

அவன் ஒன்றுமே பேசாமல் இருப்பதைப் பார்த்த கீர்த்தி, கார்த்தி என்ன மெய் மறந்து பார்த்துட்டு இருக்கீங்க , சீனியர் சார்க்கு வந்த உடனே மரியாதை செய்ய வில்லை என்றா அவள் சற்று சத்தமாக, அழுத்தமாக கூறிய போதுதான்,

…….. இல்லை கீர்த்தி, உன்னைப் பார்த்துதான் ஆச்சரியாமாய் இருக்கிறது.ஏன்னா நான் அவ்வளவு டார்ச்சர் பண்ணியிருக்கேன் உன்கிட்ட. ஆனால் அதெல்லாம் நடக்காதது மாதிரி நீயே வந்து ஒரு பழைய நண்பனைப் பார்ப்பது போல் பேசிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் பார்த்த உடனே எனக்கு நான் உன்கிட்ட பண்ணுன சில்லறைத் தனமான செயல்கள் ஞாபகம் வந்து விட்டது. Sorry for everything… நீ என்கிட்ட பழசெல்லாம் ஞாபகம் வைத்து பேசாமால் இருந்து விடுவாயோ என்று நினைத்தேன்

அதுதான் என்று இழுத்தான்.

கார்த்தி அதெல்லாம் அப்போ, இன்னைக்கு உங்களைப் பார்த்த பொழுது நான் எவ்வளவு சந்தோச‌ப்பட்டேன் தெரியுமா, அதே மாதிரி நீங்களும் என்னை விரோதி மாதிரி பார்க்கவில்லை. அதெல்லாம் நாம் மறந்து விடுவோம், இனிமேல் நாம் ஒரே இடத்தில் இருக்கப் போகிறோம் .ஸோ இப்போதிலிருந்து நாம் நண்பர்கள் என்றபடி , தென் ,இன்னைக்கு என்னோட பிறந்த நாள், நாம் எல்லோரும் லஞ்ச் சாப்பிட வெளியே போகலாமா, வருவீங்கதானேஎன்றபடி கார்த்தியை அழைத்தாள்.

அப்படியா கீர்த்தி என்றவன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தான்

அதன் பிறகு கீர்த்தி, கவி, கார்த்திக் மூவரும் அருகில் இருந்த ஹோட்டலுக்கு கிளம்பினர். அங்கு கார்த்திக்கை கவிக்கு அறிமுகப் படுத்தினாள்.அதன் பிறகு கல்லூரியில் தங்களுக்கிடையே இருந்த நட்பின் அழகினையும் கூறினாள்

கவி அங்கும் தன் குறும்பை ஆரம்பித்தாள், கார்த்திக் கை கழுவ சென்ற வேளையில்

கீர்த்தி பையன் ஸ்மார்டாத்தான் இருக்கான், பேசாமல் விநோத்திற்கு பை சொல்லி விட்டு கார்த்திகை கவர் பண்ணலாம் என்றவளை உண்மையாகவே முறைத்தவள் ,

ஒழுங்கா சாப்பிடற வேலைய மட்டும் பாரு.இந்த‌ ஜோடி சேர்க்கிற வேலையெல்லாம் உன்னோடயே நிறுத்திக்கஎன்றாள் கடுமையாகாவே

அவளது கோபத்தைனை பார்த்து சற்று மிரண்ட கவி

தப்பா எடுத்துக்காதே கீர்த்தி, சும்மா சொன்னேன், ஏதோ சொல்வாங்க மோதலில் ஆரம்பிப்பது காதலில் முடியும்னு.இப்போ பாரு கார்த்திக் எதுக்கு நீ இருக்கிற இடத்துக்கே என்று ஆரம்பித்தவள், கீர்த்தியின் அக்னிப் பார்வையில் சொல்ல வந்ததை அப்படியே முழுங்கிவிட்டு அதன் பிறகு ஒன்றும் பேசாமல் சாப்பிடும் வேலையை மட்டும் பார்க்கத் தொடங்கினாள்.

அதே நேரத்தில் பாலா தனக்காக அப்பா பார்த்து வைத்திருப்பதாகச் சொன்ன சௌந்தர்யாவினைப் பார்க்க புறப்பட்டான்.

1,530 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


Commenting has been turned off.
© 2020 by PraveenaNovels
bottom of page