அத்தியாயம்:38
வினோத்திற்கு சிகிச்சை அளிக்கபட்டிருந்தது….
கொஞ்சம் தெளிவாகத்தான் இருந்தான்….. கீர்த்திகா உடன் இருந்த படியால் தான் இருந்த நிலையை உணர்ந்து அவஸ்தையாக புன்னகைத்தான்…
”சாரி என்னால உங்களுக்கு கஷ்டம்…. “ என்று மன்னிப்புக் கேட்டான் வினோத்..
“பரவாயில்ல…. நான் பார்த்ததால உங்கள…. இங்க வந்து சேர்த்துட்டேன்…. நீங்க வேற குடிச்சிருந்தீங்க…. யாரும் பக்கத்துல கூட வரல….. ஏன் வினோத்…. என்ன ஆச்சு… இப்போ நீங்க இருக்கற நிலைமைக்கு நான் தானே காரணம்…. நான் காலையில மதுவ பத்தி வாய் தவறி சொல்லியதுதானே இத்தனை பிரச்சனைக்கும் காரணம்…. “ என்று மனம் வருந்திச் சொல்ல
“ஹ்ம்ம்ம்… என்று ஆயாசத்துடன் தலையசைத்தவன்… கண்களை மூடி பின்னால் சாய்ந்தான்…. இன்னும் கீர்த்தியின் வாழ்க்கையில் நடந்த விசயங்கள் அவனை அலைகழித்துக் கொண்டிருந்தன… கீர்த்திகாவுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை…. அவன் கண்கள் மூடியிருந்தாலும்… கண்ணிமையின் அசைவு… அவன் மனம் நோகும் வண்ணம் ஏதோ நடந்திருக்கிறது அங்கு என்பது மட்டும் புரிந்தது.
சிறிது நேரம் அப்படியே இருந்தவன்…. மெதுவாய் கண்களைத் திறந்து….கீர்த்திகாவை சில வினாடிகள் பார்த்தவன்… அவளிடம் தன் விசாரணையைக்… கேள்விக் கணைகளை ஆரம்பித்தான்…
”யாரு கீர்த்திகா…. அந்த மது?…… அவ என்ன பெரிய இவளா என்ன…. அவளுக்காக …. கீர்த்தனவோட வாழ்க்கைய சின்னா பின்னமாக்கிட்டான் இந்த பாலா… அவ காணாம போயிட்டாளா… இல்ல… பாலாவ விட்டுட்டு வேற ஒருத்தன் பின்னால போய்ட்டாளா…” என்று… மது அவளின் உயிருக்கு உயிரான தோழி என்பதை மறந்து வார்த்தைகளில் வெறுப்பை உமிழ
கீர்த்திகா சூடானாள்…. ஆனாலும் இந்த 5 வருட அனுபவம் அவளுக்கு கை கொடுக்க… பொறுமையுடனும்…அழுத்தத்துடுடனும்
“வினோத்.. ப்ளீஸ்…. மதுவப் பத்தி தப்பா பேசாதீங்க… இதுவே வேற யாராக இருந்தாலும் என்னுடைய பதில் வேறு மாதிரி இருக்கும்…” என உள்ளம் கொதித்தாலும்… இழுத்து வைத்த பொறுமையுடன் பேசினாள்…
அதெல்லாம் அவனுக்கு எட்ட வில்லை .. வினோத் எகிறினான்… அவனுக்கிருந்த கோபத்தில் கீர்த்திகா பலிகடா ஆனாள்….
“சொன்னா என்ன பண்ணுவ…. எல்லாரும் சேர்ந்து எங்க வீட்டு பொண்ண உயிரோட கொன்னுட்டு… இதுக்கெல்லாம் காரணமாக இருந்த மதுவ பத்திக் கேட்ட…. கோபம் வருதா உங்களுக்கு எல்லாம்… விட மாட்டேன் நான்…. கீர்த்திக்கு கேட்க ஆள் இல்லனு அவன் நெனச்சுட்டு இருக்கானா ….. “ என்று ஆவேசமாக்க் கத்த
கீர்த்திகாவிற்கு ஒன்றும் புரியவில்லை….. இருந்தாலும் அவளும் வேகமாக
“என்ன …என்ன பண்ணினோம்…மது என்ன பண்ணினா…. அவள எதுக்கு இழுத்து பேசறீங்க… அவ என்ன ஆனாள்னு தெரியாம… நாங்களே தவிச்சுட்டு இருக்கோம்…. ஏன் வினோத் இப்படி எல்லாம் பேசறீங்க…” தளுதளுத்தாள் கீர்த்திகா…
“அவ என்ன ஆனாள்னு தெரியலேன்னா…. அவ அத்தனை முக்கியம்னா….. அவ கிடைக்கிற வரைக்கும் தேட வேண்டியதுதானே… அத விட்டுட்டு கஷ்டம்னு அவகிட்ட வந்த பொண்ண …தன்னோட சுயனலத்துக்கு பகடைக்காயா மாத்திட்டான்… ச்சேய் அவன்லாம் ஒரு மனுசன்…. “ என்று இளக்காரமும்…. அனலும் மாறி மாறி விழுந்தன அவன் வார்த்தைகளில்
கீர்த்திகா என்னவென்று புரியாமல் விழிக்க…
‘என்ன உனக்கும் தெரியாதா…. அவங்க பண்ணி வச்சுருக்குற திருவிளையாடல் எல்லாம்…. இப்போ தெரிஞ்சுக்கோ..என்று.. பாலா-கீர்த்தியின் திருமண வாழ்க்கையில் நடந்த கதைகளை எல்லாம் அம்பலமாக்க…
கீர்த்திகாவால் நம்ப முடியவில்லை… பாலாவா இப்படிச் செய்தது…. காரணம் மதுவின் மேல் அவன் கொண்ட காதலா….
“சத்தியமா வினோத் ..பாலா இப்டி பண்ணுவார்னு என்னால் நினைக்கக் கூட முடியல… ஆனா… அவர் மதுவ மறந்துட்டு கீர்த்தியோட புது வாழ்க்கைய தொடங்கி இருக்கார்னு நெனச்சேனே… இது தெரிந்தால் மது கூட பாலாவ மன்னிக்க மாட்டா.. ஏன் இப்டி பாலா பண்ணினார் “ என்று உண்மையான கவலையோடு பேச…
வினோத்…. கீர்த்திக்காவிடம்….
“கீர்த்திக்கு இப்படி ஒரு நிலைமையா….. பணத்தால கஷ்டப்பட்ருக்கா…. பாலாவோட நாடகமா ஒரு கல்யாணம்… எங்க அத்தை—மாமா இறப்பு…. இப்போ.. தன் மனசோட போராடிட்டு இருக்கா…. கிட்டத் தட்ட 8 மாதத்தில்… அவளுக்கு இத்தனை சோதனையா… வாழ்கையோட கரடு முரடுகள் எதுவும் தெரியாமல் வளர்ந்த அவள் எப்படி தாங்கினாளோ…”. என்று கண் கலங்கியவனுக்கு
“ப்ளீஸ்….வினோத்.. பாலாதான் தப்ப உணர்ந்துட்டாரே… கீர்த்தியும் புரிஞ்சுக்குவா…. மதுவப் பத்தி நீங்க கவலப் படாதீங்க…. அவ கீர்த்தி லைஃப்ல கண்டிப்பா பிரச்சனை பண்ண மாட்டா….” என்று விவாதம் நடந்து கொண்டிருந்த போதே
கீர்த்தியும் …பாலாவும் உள்ளே நுழைய
வினோத்துக்கு என்ன ஆனதோ என்று படபடத்த..பரிதவித்த நெஞ்சத்துடன் நுழைந்த கீர்த்தனா… வினோத்தை பார்த்த பிறகே சமாதானமாள்….
கீர்த்தனாவைப் பார்த்த வினோத் எதுவும் பேச வில்லை… பாலாவையோ பார்க்கவே பிடிக்க வில்லை அவனுக்கு…
கீர்த்திகாவை பார்த்து மட்டும் முறைத்தான்… இவர்களை இங்கு ஏன் வரச் சொன்னய் என்பதைப் போல….
கீர்த்திகா பாலாவைப் பார்த்த பார்வையிலேயே… தங்கள் விசயம் அவளிடமும் கடை விரிக்கப் பட்டிருந்தது புரிந்தது அவனுக்கு…. அதனோடு அவள் நெற்றியில் புதிதாய் இருந்த பொட்டும் அவன் பார்வையில் சிக்காமல் இல்லை….
அங்கு இருந்த சூழ்னிலையில் யார் முதலில் பேசுவது என்றே தெரியவில்லை….
அந்த நேரத்தில் மருத்துவர் வர…. அவர் வினோத்தை பார்த்து விட்டு… நாளைக் காலையில் கூட்டிப் போகலாம் என்று சொல்லி விட்டுப்போக…. அங்கிருந்த செவிலி… அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்து விபரங்களை….கீர்த்திகாவிற்கு சொல்லி விட்டுச் சென்றாள்…
அதில் அப்போதே கொடுக்க வேண்டிய மாத்திரை ஒன்று இருக்க…. கீர்த்திகா… அதை அவனிடம் கொடுக்கப் போனாள்…
சட்டென்று கீர்த்தனா… வினோத்திடம் தானே கொடுக்க நினைத்து கீர்த்திகாவிடமிருந்த மாத்திரையை வாங்க கை நீட்ட
”கீர்த்திகா அவகிட்ட குடுக்காதீங்க… நீங்களே குடுங்க” வினோத் கோபத்துடன் சொல்ல….
கீர்த்தி….மெதுவாய் அவனருகே அமர்ந்தாள்…
“ஏண்டா…. நீயும் என்னக் கொல்ற…. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல…. நான்தான் எல்லாருக்கும் இப்போ பிரச்சனையா இருக்கேன்…… உனக்கு….அருந்ததி அத்தைக்கு…. மதுவுக்கு….அப்புறம்….பாலாக்கு….பாலா என்ற வார்த்தையில் அவள் தடுமாறினாள்தான்….
பாலா தலையடித்துக் கொள்ளாத குறைதான்… இவ எப்போ இந்த பல்லவிய நிறுத்தப் போறாளோ….
”நான் என்னைப் பெத்தவங்க போய்ச் சேர்ந்தபோதே போயிருக்க வேண்டும்….. ஆனா எப்படி போறதுன்னு தெரியலடா…. தற்கொலை செய்யிற அளவுக்கு தைரியம் இல்லடா எனக்கு….. இல்லேன்னா….” அவள் அழுது விட்டாள்… அழுகையை அடக்க உதட்டைக் கடித்து கட்டுக்குள் கொண்டு வந்தவள்
”நான் அன்னைக்கே போய் இருந்திருப்பேன்….. நான் இத்தன பேர் வாழ்க்கைல பிரச்சனையா இருப்பேனு நினைக்கல…. நான்தான் எல்லாருக்கும் இப்போ பாரமா ஆகிட்டேன்…”
ஏற்கனவே … பாலாவிடம் தன் காதலைச் சொல்லி அவன் வேறு வழி இல்லாமல் தன்னோடு வாழ ஆரம்பித்து விட்டானோ என்ற நினைவில் இருந்தவள்…. வினோத்தை சமாதானப் படுத்த வேண்டுமென்று… என்னென்னவோ பேசி பாலாவை வேறு காயப்படுத்திக் கொண்டிருந்தாள்…
வினோத்திற்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை…
“கீர்த்திடா… எங்களுக்கு நீ பாரமா…. நீ வரம் டா…. ஏண்டா இப்டிலாம் பேசுற…. நீ ஒரு வரம்னு தெரியாம உன்ன… கால்ல போட்டு… மிதிக்கறவங்க.. கூடலாம் இருக்க வேண்டாம்… அதப் புரிஞ்சுக்கோ…….
என்று பாலாவை பார்த்துக் கொண்டே சொல்ல….. பாலாவின்… கோபம் வேறு ஏறிக் கொண்டே இருந்தது… எப்போது எரிமலை வெடிக்கும் என்று தெரியவில்லை…. இருந்தாலும்
“வினோத்…. எங்கள விடு வேற பேச்சு பேசலாம்…. “ என்று பாலா பேச்சை மாற்ற
அவனோ.. அவர்களையும் விட வில்லை… அதோடு மதுவையும் விடாமல் பிடித்துக் கொண்டு இருந்தான்….
“ஏன் பாலா…. உன் மதுவுக்காகத்தானே போராடிட்டு இருக்க நீ… கீர்த்திய விட்டுடு.. நா கையெடுத்துக் கேட்கிறேன்,…எங்க வீட்டு பொண்ண எங்க கிட்ட குடுத்துரு….எங்கள விட்டுடு… நானும் எதுவும் பிரச்சனை பண்ணல…. கீர்த்தியும் உன் பிரச்சனைக்கு வர மாட்டா… ப்ளீஸ்…” என கெஞ்ச ஆரம்பிக்க
பாலா நெற்றிக்கண் இருந்திருந்தால் அவனை எரித்திருப்பான்…
கீர்த்திக்கோ “நான் பிரச்சனை மாட்டேனு இவன் கிட்ட வந்து சொன்னேனா… என்னையும் வேற கூட்டுச் சேர்த்து பேசறானே” என்று தோன்றியது
“என்ன வினோத் தெரிஞ்சு பேசறியா… இல்ல தண்ணியடிச்ச மப்புல பேசறியா….. என்ன வேணும்னாலும் பேசிக்க….எனக்கு அதப் பத்தி எல்லாம் கவலை எல்லாம் இல்லை….. ஆனா.. என்னிடமே என் பொண்டாட்டிய உன்கிட்ட குடுத்துருனு கூசாம பேசுற… இதப் பேச அசிங்கமா இல்ல உனக்கு… எவ்வளவு தைரியம் உனக்கு” என்று கணவனாக கோபத்தில் கண் சிவந்து கத்த
இதை சொல்லும்போதே பாலாவின் மனம்… தான் ஒரு நேரத்தில் இப்படிக் கூட எண்ணியிருந்தோம் என்பது நினைவுக்கு வேறு வந்து தொலைக்க…. எவ்வளவு கீழ்த்தரமா எண்ணி இருந்திருக்கேன்…..இன்னைக்கு அவன் பேசிக் கேட்கும்போது எத்தனைக் கேவலமாக இருக்கிறது இந்த வார்த்தை… என்று நினைத்தான்… அது வேறு அவனை ஒருபுறம் இம்சிக்க… அவன் கட்டுப்பாடுகள் எல்லாம் ஒருபுறம் கரைந்து கொண்டிருந்தது…
பெண்கள் இருவரும் என்ன சொல்வதென்று புரியாமல் விழிக்க…
””என்னடா அசிங்கமா இருக்கு,… எப்ப வந்துச்சு இந்தக் காதல் உனக்கு அவமேல.. யாரும் அவளுக்கு இல்லேனு பரிதாபப் பட்டு வாழ்க்க பிச்ச போடுறியா.. நீயே வச்சுக்க அத…. காணமல் போன உன் காதலிக்காக.. உன் ஆயுள் முழுக்க காத்திரு…. எங்கள விடு……” என்று நக்கலாகச் சொல்ல…
இந்த 5 வருட அனுபவத்தில்…. உச்சக் கட்ட கோபத்திலும் வார்த்தைகள் நிதானமாக வந்தன பாலாவுக்கு…
“வினோத் ….. நான் மதுவுக்காக இந்த ஜென்மம் இல்ல….. எத்தன ஜென்மம் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராகத்தான் இருந்தேன்…. ஆனா அதை எல்லாம் மீறி இவ…. இதோ இங்க நிக்கிறாளே …. அவ என் மனசுல வந்துட்டா….. அத அவளும் புரிஞ்சுக்க மாட்டேங்குறா…. நீயும் நான் பண்ணினதிலேயே நிக்கிற…… இப்போ நான் எந்த நிலைமையில இருக்கேனு புரிஞ்சுக்காம … எல்லாரும் சேர்ந்து என்னைக் கொல்லாதீங்க….. எனக்கே தெரியல… மதுவோட காதலை நான் எப்படி மறந்தேனு …இல்ல…. அவளோட நினைவுகளை கீர்த்தியின் மேல் வந்த என் காதல் எப்படி பின்னுக்கு தள்ளியது என்று… ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்… இனி.. என் மரணம் மட்டும் தான்… இவள விட்டு என்னிடமிருந்து பிரிக்கும் ” என அவன் கூறும் போதே….
“என்ன ஒரே அடியா மது மதுனு உருகற,,,, அவ காதலை இவளுக்காக மறந்தேனு வேற பெரிய பில்டப் குடுக்கற… அப்டி லவ் பண்ணவ எங்க சொல்லாம போனா….. காதலாம் காதல்… இப்போ எங்க எவன் கூட “ என்று அவன் மேலே சொல்லும் முன்
வெறிப் பிடித்தவன் போல் பாய்ந்தான் பாலா… காலையிலிருந்து கீர்த்தனாவுக்காக மட்டுமே இத்தனை நேரம் பொறுமையாக இருந்தான்.. அதற்காக..மதுவை கேவலமாக அவன் பேசுவதை அவனால் பொறுக்க முடிய வில்லை… ஆவேசமாக மாறியவனின் கை ஒரே தாவலில் வினோத்தின் சட்டையை பிடித்தது
கீர்த்திக்கு - இதுவரை அவள் பார்த்த பாலாவின் கோபம் எல்லாம்… இந்த ஆவேசத்திற்கு முன் அதெல்லாம் சாதாரணமே என்று தோன்றியது..
அவனை மட்டும் பார்த்து கொண்டிருந்தாள் கீர்த்தி…
மதுவைப் பற்றி வினோத் கூறிய போது பாலாவின் கண்களின் ஆவேசத்தை பார்த்த படி செயலற்று நிற்க…
பாலா கோபத்தில் விறைக்க…. அவன் கோபத்தை பார்த்த கீர்த்திகா… எதுவு. ரசவாதம் நடந்து விடாமல்… இடையே புகுந்தாள்… ஆவேசமாக
”என்ன வினோத்…. பாலா பண்ணினது தப்புதான்…. அதுக்காக எதுக்கு மதுவ தப்பா பேசறீஙக…. அவ பாலாவை எந்த அளவு விரும்பினாள் என்று தெரியுமா? எதுவுமே தெரியாமல் இஷ்டத்திற்கு பேசாதீங்க” என்று பேச
வினோத்தோ….. அதில் எல்லாம் கொஞ்சம் கூட இளகாமல்….
“ஓ அப்படி என்ன காதல்.. இவர் மேல… ஒரு அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கைய அழிக்கற அளவுக்கு வந்த காதல்… கொஞ்சம் சொல்லுங்க நாங்களும் கேக்குறோம்….. பெருசா பேச வந்துட்டான் இவன்…. நீயும் வக்காலத்து வாங்க வந்துட்ட… நல்லவளா இருந்திருந்தா இவனத் தேடி இந்நேரம் வந்திருக்க மாட்டா… இவன் ஆளும் நல்லாத்தான் இருக்கான்… பணமும் இருக்கு… வேற என்ன இவன்கிட்ட இல்லைனு” என இன்னும் மட்டமாக பேச ஆரம்பிக்க
கீர்த்திகா….. தன் தோழி மதுவைப் பற்றி அவன் சொல்வதை எல்லாம் தாங்க முடியாமல்…. அவனிடம் அவளைப் பற்றி சொல்ல ஆரம்பிக்க….. தன் மனைவி தன் கடந்த காலத்தை… அதுவும் மதுவின் காதலை அறிந்தால் கண்டிப்பாக…. தாங்க முடியாமல் தவித்துப் போவாள் என்று தெரிந்திருந்தும்… வேறு வழியின்றி… கீர்த்திகாவை நிறுத்த சொல்ல முடியாமல் பாலாவும் அதில் மூழ்க…. கீர்த்தனாவும்… வினோத்தும் அவர்களிருவரின் வாய் வார்த்தை மூலம் பாலா-கீர்த்திகாவின் கடந்த காலத்திற்குள் இழுத்துச் செல்லப் பட்டனர்…
------
அந்த பொறியியல் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் கீர்த்திகா தனது நடன ஒத்திகையை பார்த்துக்கொண்டிருந்தாள்…. வரும் இன்டெர் காலேஜ் காம்பெட்டிசனுக்காக…
“ஏய்ய்ய்ய்ய்ய்…. யாரு இங்க கீர்த்தி” என்று அரங்கம் அதிர்ந்த பாலாவின் அதட்டலில்… அனைவரும் ஒத்திகையை நிறுத்தி சத்தம் வந்த பக்கம் திரும்பினர்,
நடுவில் நின்று இருந்த கீர்த்தி மட்டும் சற்று நடுக்கத்துடன் அவனைப் பார்த்தாள்… அதே நேரத்தில் பக்கத்தில் நின்ற ஆதியை பார்த்தவள்… நிம்மதி வந்து.. சற்று தெளிந்து.. தைரியம் வந்தவளாய் முறைத்தபடி நின்றிருந்த பாலாவைப் பார்க்க
அவள் பார்வையை… அதில் தெரிந்த அச்சத்தை தாங்க முடியாதனாய் ஆதி பாலாவிடம்
“டேய் பாலா,,,,எதுக்குடா.. இப்ப இப்படிக் கத்தி ஊரக் கூட்டுற… ஜஸ்ட் ஒரு வார்ன் மட்டும் பண்ணிட்டு போய்டலாம்” என பாலாவை சமாதானமாக்க பேசப் போக இன்னும் பாலா குதித்தான்…
“என்னடா..பொண்ணப் பார்த்த உடனே பம்முற.. ஒருவாரமா… நாம ரிகர்சல் பண்ற டைம்லயே வந்து ரிகர்சல் பண்ணிட்டு… இப்ப்போ என்னமோ ஒண்ணும் தெரியாத பச்சப் பாப்பா மாதிரி முழிக்கிறா.. வார்ன் பண்ணணுமா இவளுக்கு… சரி சின்னப் பொண்ணுதானே ரெண்டு நாள் பொறுத்துப் போனா.. ஒரு வாரம் முழுவதும் அவளே இந்த டைம எடுத்துக்கிட்டா… நம்ம கிட்டக் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லை .. சரி நாம பேசக்கூடாதுன்னு… HOD க்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணினால்… அவரு அதுக்கு மேல… நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… கீர்த்தி திறமையான் பொண்ணு… அவ ரொம்ப அமைதியான பொண்ணுனு ஒரு பல்லவி பாடினதோட இல்லாம… இவ கண்டிப்பா… கப்பு வாங்கிக்கொடுப்பானு பில்டப்போட சப்போர்ட் வேற…. அப்போ நாமல்லாம்..இத்தன நாள் வாங்கிக் கொடுத்தது என்ன…. இப்போ நீயும் வார்ன் பண்ணச் சொல்றியா….. கடுப்படிக்காத…” என்று பொறுமித் தீர்த்தவன் நடுவில் முழித்தபடி நின்ற கீர்த்தியைப் பார்த்து
”நீ தான் கீர்த்தியா” என்று கோபம் குறையாத அலட்சியத்துடன் கேட்க
“ஆமாம் “ என்று தலையை மட்டும் ஆட்டினாள்… அவளை சற்று எகத்தாளமாகப் பார்த்தவன்….
“ஆள் பார்க்க நல்லா இருக்கேல்ல… அதுதான் இவ்வளவு சப்போர்ட்டா.” .என்று இகழ்ச்சியாகக் கூறி கீர்த்திகாவை இன்னும் டென்சன் ஏற்ற..
கீர்த்தியின் விழிகள்….முத்துகளைக் கோர்க்க ஆரம்பித்து இருந்தன….
இவன் விட்டால் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல்… வார்த்தைகளை விட்டு விடுவான் என்பதை தெரிந்திருந்த ஆதி
கீர்த்தியிடம் திரும்பி… அவளைப் அப்போதைக்கு அங்கிருந்து போகுமாறு சைகை செய்ய…… அவளோ..கோபப்பட்டுக் கத்திக் கொண்டிருந்த பாலாவை விட்டு விட்டு… ஆதியை முறைத்தபடி கடந்து போக
இதைக் கவனிக்காமல் இருப்பானா பாலா…...
ஆதி இவளுக்கு சப்போர்ட்டாதான பேசினான்… பிறகு ஏன் அவனப் பார்த்து முறைக்கிறாள் என்று தோன்றியது….
ஆதியை முறைத்தபடி போன அவளை.. முன்னால் கை மறித்து தடுத்த பாலா…
“அவன்கிட்ட என்ன முறைப்பு…. மொறைக்கிறதுக்கு… அப்புறம் கண் இருக்காது… ஃபர்ஸ்ட் year படிச்சுட்டு… எங்களயே மொறைக்கிற… தைரியம்தான் உனக்கு….. இன்னும் ஒரு வாரத்திற்கு… நாங்கதான் இங்க பிராக்டிஸ் பண்ணுவோம்…. இந்த பக்கம் எட்டி கிட்டி பார்த்துடாதா… ஏன்னா…. உனக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தையும் நாங்க எடுத்துக்க போறோம்….. இவன் என்ன சொல்றது. நாம் என்ன கேக்கிறதுனு …. என் பேச்சை மீறி வந்த…. என்ன செய்வேனு எனக்கே தெரியாது.. என்ன புரிஞ்சதா,,, என்ற அதட்டலில்.. வந்த கண்ணீரைக் கூட அடக்கியவள்… வேகவேகமாக வெளியேற எத்தனிக்க
மீண்டும் நிறுத்தினான் பாலா…
“என்ன பதில் சொல்லாம போற… தொண்டத்தண்ணி வரள கத்திட்டு நிக்கிற என்னப் பார்த்தா கேனப் பையன் மாதிரி தெரியுதா….” என்று உரும
தலையை வேகமாக அசைத்தவளுக்கு அவமானமும்..அழுகையும் ஒரு சேர வர அந்த இடத்தை காலி செய்தாள்…
அவளை அதட்டி வெளியேற்றியவன்… சாவாதனமாக….ஆதியை இழுத்தபடி..மேடையை நோக்கிப் போக…
ஆதிக்கோ…. மனம் தவித்துக் கொண்டிருந்தது….கீர்த்தியின்…கோபப் பார்வையில்…அவள் கண்ணீர் வேறு அவனை அரித்துக் கொண்டிருக்க
“ஏதோ பார்க்க மட்டும்தான் செஞ்சுட்டு இருந்தேன் புண்ணியவான் அதுக்கும் வேட்டு வச்சுட்டான்…” என்று பாலாவைத் திட்டியபடி பாலாவின் பின் சென்றான்…
”வாடா மச்சி… நாமதான் இனி முழுக்க முழுக்க… இங்க…” என்று அவர்கள் குழு அவர்களின் ஸ்கிட்டிட்ல் மூழ்கினர்..
அதன் பிறகு அவனுக்கு கீர்த்தியின் மேல் அத்தனை கோபம் இல்லை எனலாம்…
ஆனால்… பயிற்சி முடித்து வெளியேறிய பாலாவை கீர்த்தியின் வகுப்புத் தோழன் பிரதாப் … மறித்து தடுத்து நிறுத்த.. என்னவென்று புரியாமல் பாலா விழிக்க
அவனோ.. பாலாவை மிரட்டினான்.. கீர்த்தியை அவன் திட்டியது தவறு என்றும்.. இதோடு நிறுத்திக்கச் சொல்லியும் எச்சரிக்கைச் செய்பவன் போல் பேச..
தன்னை விட சின்னவன்… அதிலும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன்…. அவன் முன் எதிர்த்துப் பேச… அவன் மீது கோபம் வர….. அவனெல்லாம் ஒரு ஆளா,,,, என்று பிரதாப்பை அலட்சியப் படுத்தி வந்து விட்டான் பாலா… ஆனால் கீர்த்தியின் மேல் சற்று எரிச்சல் கூடியது போல்தான் இருந்தது…
சற்று நேரத்தில்… ஆடிட்டோரிய பொறுப்பை ஏற்றிருந்த ப்ரொபசரும் அழைத்து கீர்த்தியை மிரட்டியது பற்றி விசாரணை செய்ய… பாலாவின் கோபம் கீர்த்தியின் மேல் ஏற ஆரம்பித்தது…
----------
இது எதுவும் அறியாமல் ஆதியும் ”கீர்த்திகாவை பாலா..திட்டி விட்டானே” என்று பாலாவின் மேல் கோபமாய் இருக்க……
கடுப்பாய்… கோபத்தில் அருகில் அமர்ந்திருந்த பாலாவை எதுவும் கண்டுகொள்ளவில்லை…
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பாலா
“இங்க ஒருத்தன் இப்படி இருக்கானே… என்ன ஆச்சு… ஏது நடந்தது…எனக் கேட்கக் கூட தோணலையா உனக்கு.. நீ எல்லாம் ஒரு நண்பன்…” என்று அவனுக்கு இருந்த கோபத்தில் ஆதியைக் கடித்துக் குதற…
ஆதியும் பதிலுக்கு குதற ஆரம்பித்தான்..
”ஆமாடா பண்ணியது எல்லாம் நீ… நீ ஏண்டா மச்சி.. உனக்கு ஏண்டா கோபம் வேற வரனும்.. எனக்குதானே நீ ஆப்ப வச்சுட்டு வந்துருக்க” என்று அவனும் எகிற
இப்போது பாலா புரியாமல் விழிக்க.. சுதாரித்து..
“நாம என்ன பண்ணினோம்… இவனுக்கு” என்று அனல் பார்வையை வீச
”என்னடா… என்ன பண்ணினோம்னு புரியலயா… இன்னைக்கு நீ திட்டி வெளியே அனுப்புனேல்ல… கீர்த்தி… அவள நான் லவ் பண்றேன்.. அவ எங்க ஏரியாதான்… 6 மாதமா… அவளை காதலிக்கிறேன்… … முடிவு செஞ்சுட்டேன்,, அவதான் என் காதலி.. என் மனைவினு.. இன்னும் கொஞ்ச நாளில் சொல்லலாம்னு முடிவு பண்ணி வச்சுருந்தேன்…. நீ இப்படி பேசி காரியத்தையே சொதப்பி வச்சுட்ட.. அவ வேற மொறச்சு பார்த்துட்டு போய்ட்டா.. எல்லாத்துக்கும் சங்கு…. இனி என்ன ஆகுமோ” என்று ஆதி காதல் வேதனையில் பிதற்ற…
பாலா தன் நண்பனைப் பார்த்து நீ லவ் பண்றியா… என்று நம்பாமல் விழிவிரிக்க..
தலையை ஆட்டினான் ஆதி
“அது எப்டிடா… காதல்னு வந்துட்டா.. ப்ரெண்ஷிப்ப உடனெ கழட்டி விட்டுறீங்க” என்று எரிச்சலும்… கோபமும் சரிவிகிதத்தில் பேச
“சாரிடா… மச்சி.. ஆப்போசிட் ரியாக்சன் என்னன்னு தெரியாம… உன்கிட்ட சொல்லத் தோணல…” என்று அவனை சமாதானப்படுத்தும் விதமாக கெஞ்ச
ஒருத்தன் லவ் பண்ண ஆரம்பிச்சா முதன் முதலில் சொல்வது அவன் நண்பனிடம்தான்… அதுக்கு கூட கொடுப்பினை இல்லையா பாலா உனக்கு என்று அலுத்து நண்பனை உரிமையாய் முறைத்தான்
“அதுதான்.. சாரி சொல்றேன்ல… விடுடா… இனிமே கீர்த்திய திட்ட மாட்டேல்ல…” என்று கெஞ்சல் பார்வை பார்த்தான்.
அவனின் பார்வையை புரிந்த பாலா
“சரி…சரி… உன் ஆள ஒண்ணும் சொல்ல வில்லை…. அவளோட டைம்ல அவளே வந்து ப்ராக்டிஸ் பண்ணட்டும்… போதுமா…. பார்த்துடா… ரொம்ப உருகாத… இந்த பொண்ணுங்க எல்லாம் நம்மள உருக வச்சுட்டு அவளுங்க ஸ்ட்ராங்கா ஆகிருவாளுங்க… “ என்று எச்சரிக்கையும் செய்தான்…
“அத நான் பார்த்துக்கறேன்.. தேங்க்ஸ்டா பாலா… அவள திட்ட மாட்டேனு சொன்னதுக்கு… எனக்காகத்தானேடா” என்று பாலாவை கட்டிப்பிடிக்க
“டேய் நான் பாலாடா… உன் ஃப்ரெண்டுடா… வேற யாரும் இல்லை” என்று கல்லுரி மாணவனுக்கே உரிய நக்கல் பாணியில் கண்ணடித்தபடி கலாய்க்க… அருகில் இருந்த சக தோழர்களும் .. அவனின் சத்தத்தில் திரும்பி… என்னவென்று கேட்க ஆதியின் காதல் பாலாவின் மூலம் அம்பலம் ஆக…. ஒரே கேலியும் கிண்டலும்.. ஆதியை சுற்றி வளைக்க ஆரம்பித்தது..
ஒருவன்
“டேய் இனிமே நம்ம ஆதிக்கு… இனி கீர்த்தி தாசன்னு பேரு வச்சுடலாம்” என்று கூற
இன்னோருவனோ
“டேய்… அந்தப் பொண்ணையாடா.. ரூட் விட்டுட்டு இருக்க.. ஆள் சூப்பரா இருப்பாளே… உனக்கு ஓகே சொல்வளானு டவுட்டா இருக்கே” என்று அவனை வெறுப்பேற்ற
“டேய் ஆதி-கீர்த்தி..பேர் பொருத்தமே அமோகமா இருக்குடா… அப்படியே எனக்கு கவித வருதுடா என்று கூற
பாலா…
“வினித்… நீ சொல்லுடா…. உன் கவிதை மழையில நாங்க நனையிறோம் என்று சப்போர்ட் செய்ய… மற்றவர்களும் அதை ஆமோதிக்க
வினீத் என்பவன் சொல்ல ஆரம்பித்தான்..
“கீர்த்தி… கீர்த்தி…. கீர்த்தீதீ
இவன் தான் உன் ஆதீ…
உன்னால் அவன் ….
நெஞ்சில் காதல் தீ…”
பாலா தலையிலடித்துக் கொண்டான்... உன்னப் போய் நம்பி கவிதைய கேட்டேனே என்று நொந்தவன்…
”இப்போதான் தெரியுது உனக்கு ஏன் ஆளு அடிக்கடி மாறுதுன்னு… நீ கவிதைன்னு கண்ட கருமத்த சொல்லி சொல்லியே விரட்டிட்ட போல” என்று கேலி கிண்டல் வினீத் புறம் திரும்ப
ஆதி புகுந்தான் இடையில்…
“டேய்… இனிமேல் யாரும் ..இவன் கிட்ட கவிதை கேட்பீங்க…என் நிலைமைதான் உங்களுக்கும்.. உஷாரா இருந்துக்கோங்க ..இவன்கிட்ட” என்று ஓட்ட வினீத் ரோசமாக
”போங்கடா… டேய் பாலா… ஆனாலும் உனக்கு இருக்கற லொள்ளு இருக்கே என்ன கவிதை சொல்லச் சொல்லி ஏத்தி விட்டு விட்டு…. அத கேட்டுட்டு இப்போ கிண்டலும் பண்றியா…”
பாலாவோ..
“டேய் நீ கவிதைனு ஒண்ணு சொல்றேனு சொன்னியே அத எப்போடா சொல்லப் போற….” என்று அப்பாவியாய் மாறி அவனை அசராமல் அடிக்க.. அவனின் பேச்சில் பற்களைக் நற நற வென்று கடித்த வினீத்…
”டேய் உனக்குலாம்… இந்த நக்கலுக்கெல்லாம் வருவாடா ஒருத்தி…. அசராம அடிப்பா பாரு….” என்று பாலாவின் புறம் திரும்ப…
“ஆஹா… நமக்கே ஆப்பு திரும்பற மாதிரி இருக்கு… ரூட்ட மாத்துடா பாலா” என்று ஆதியின் புறம் திருப்பினான்..
“டேய் எனக்காடா இப்போ முக்கியம்.. நண்பன் இன்னைக்குதான் தன் காதல நம்மகிட்ட சொல்லியிருக்கான்… அவன விட்டுட்டு … தனியாளா இருக்கிற என்ன ஓட்டி என்ன பண்ண… “ என்று சொல்ல… மீண்டும் ஆதி-கீர்த்தியிடம் கிண்டல் வந்து நின்றது
அப்போது ஆதியின் அறையில் இருக்கும் இன்னொரு தோழன்
“டேய் இவன் கரெக்டா 7.30 க்லாம் கிளம்பும் போதே டவுட்டுடா எனக்கு.. ஆதி …உனக்கு ஒரு விசயம் தெரியாது மச்சி… அவளோட ப்ரெண்டொ ஒருத்தி இருக்கா…… எவனோ ஒருத்தன் அவகிட்ட தப்பா பேசினான்னு அறஞ்சே போட்டுட்டாளாம்… நம்ம ஏரியால தான் இது நடந்துச்சு… ஞாபகம் வச்சுட்டு களத்துல இறங்கு…என்று பேச
”தெரியும்டா… எனக்கு… அவ அறஞ்சா இல்ல நானே அவனுக்கு விட்டுருப்பேன்… ”என்று ஆதி கூற…
கிண்டலும்.. கேலியுமாய்… ஒவ்வொருவருக்கும் அங்கு ஒருவித சந்தோசமாய் போக
கீர்த்திகா மட்டும் அழுத..சிவந்த விழிகளாய் மதுவிடம் நடந்ததைச் சொல்ல கல்லூரி முடியும் வரை காத்திருந்தாள்… மது அன்று விடுமுறை எடுத்திருந்த காரணத்தால்…
Comments