top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே!! என் உறவே!!!-37

அத்தியாயம்:37

பாலா அறையினுள் நுழைந்த வினோத்தைப் பார்த்த கீர்த்திக்கு பக்கென்று இருந்தது….. எப்போதும் உற்சாகம் தவழ்ந்த முகமாக இருக்கும் அவன் இன்று சுத்தமாய் தனது உற்சாகமெல்லாம் வடிந்து…. தளர்ந்தபடி உள்ளே நுழைந்தான்….. உள்ளே நுழைந்தவன் உட்கார்ந்திருந்த கீர்த்தியைப் பார்த்தான்…

பார்த்தான் …அவ்வளவுதான்….அதற்கு மேல் ஒன்றும் இல்லை…..

தன்னைப் பார்த்தாலே உற்சாக வார்த்தைகளுடன் சந்திக்கும் வினோத்… இன்று அவளிடம் ஒரு சொல் கூட சொல்லாமல் அவளைத் தவிக்க விட்டான்…..

“வினோத்………………”

“நான்…சொல்றத கேளு…” என அவனின் பாராமுகத்தை தாங்க முடியாமல் தளுதளுத்த அவளிடம் கூட திரும்பாமல்.. பாலாவிடம் திரும்பி…

“பாலா….எதுக்கு வரச் சொன்ன……சீக்கிரம் சொல்லு:…” என்று விட்டேற்றியாக அவனிடம் பேச

“வினோத் என்கிட்ட பேச மாட்டியா”….. என்று கீர்த்தி அவன் அவளைத் தவிர்த்ததை தாங்க முடியாமல் பேசப் போக….

“பாலா….. நீ கூப்பிட்டாய் என்றுதான் வந்தேன்…. இவள என்கிட்ட பேசச் சொல்லாத… ஏற்கனேவே மனசு நொந்து வந்து இருக்கேன்…..” என்று மீண்டும் பாலாவிடமே பேசினான் அவன்…

“வினோத் ….. பொறுமையா இரு….. நான் எல்லாம் சொல்றேன்… அது மட்டும் இல்ல…. நீ நினைக்கிற மாதிரி…. கீர்த்தி…மேல் எந்த தப்பும் இல்ல….எல்லா” என்று கூறும் போதே…..

”உனக்கு எப்படித் தப்பா தெரியும் பாலா…. காத்திருந்து ஏமாந்து போனவன் நான் தான் தெரியுமா? அப்போ கூட வலிக்கல….. ஆனா இன்னொருத்திய நேசிச்ச உன்னோட மனசு புரிஞ்ச அளவுக்கு ஏன் என்னோட மனசு புரியல…. அவளுக்குத் தெரியாதா… எனக்கு அவளப் பிடிக்கும் என்று….. ” தன் மனதில் உள்ளவற்றை உண்மையாகச் சொல்லிக் கேட்டான்…..

அவன் நிலைமை புரியாமலிருக்க அவள் என்ன ஒன்றும் தெரியாதவளா…..ஆனால் அழ மட்டுமே முடிந்தது….

குமுறலில் இருந்தவன் கொட்டிக் கொண்டிருந்தான்…..

இத்தனைக்கும் காரணகர்த்தவாக இருந்தவனோ…. அவன் சொல்வதைக் கேட்பதை விட… இதன் பிறகு தான் சொல்லப் போகும் உண்மையினைச் சொன்னால் என்ன ஆகுமோ …..என்று அவனைச் சமாதானப்படுத்தும் வகையில் தன்னை தயார் செய்து கொண்டிருந்தான்……

”சரி….திருமணம் செய்ய பேசி வைத்திருக்கும் என்னையே… தள்ளி நிறுத்தியவள்….. தாய்…தந்தை….. மனதில் இருப்பவனைத்தான் தன் மனதில் அனுமதிப்பேன்….அதுவும் அவன் மனைவியாகும் போதுதான்…. இப்படியெல்லாம் பெரிய இவளாட்டம் பாச வார்த்தை பேசி என்னை… வாயத் தொறக்க விடாம என் கழுத்த அறுத்துட்டா…. ஆனா உன் காதல் அவள சாய்ச்சிடுச்சாம்…. சொன்னா என்கிட்ட….. ஆனா இப்போதான் தெரியுது…. நீ எவ மேலயோ வச்ச காதல்தான்….இவள் உன்கிட்ட விழ வச்சதா…

என்று நக்கலில் வேறு வார்த்தைகள் விழ….

பாலாதான் ஆரம்பித்தான்….

“வினோத்….ப்ளீஸ்…. கீர்த்திய திட்டாத…. … “ என மீண்டும் இடையே சொல்ல….

“பாலா…… இப்போதும் எனக்கு வருத்தம் இல்ல…. அவ நல்லா இருந்தா எனக்கு சந்தோசம்தான்…. ஒரு வார்த்தை என்கிட்ட உன்னைப் பத்தி சொல்லியிருக்கலாம் அன்னைக்கும் வலி இருந்தது…. இன்னைக்கு கீர்த்திகா சொன்னவுடன் இன்னும் அதிகமாகி விட்டது….. நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத… மனசோட ஆழத்தில் இருந்தது…. இன்னைக்கு வெளில வந்துருச்சு…… இப்போதும்… எப்போதும்..எனக்கு அவமேல இருக்கற பாசம் குறையாது..... அது அவளுக்கு தெரிஞ்சா சரி…. “

அவனின் வார்த்தைகளில் கதறினாள் கீர்த்தி….

“வினோத் என்ன மன்னிச்சுக்கோ….. சத்தியமா… நீ இவ்ளோ மனசு வேதனப் படுவேன்னு எனக்குத் தெரியாது….. என்னை மாதிரியே தான் நீயும் இருப்பேன்னு தப்புக் கணக்குப் போட்டுட்டேன்… நா எப்போதுமே உன் செல்லக் குறத்திதான்…. என்கிட்ட பேசாம இருக்காத…. என்னால தாங்க முடியாது.” கீர்த்தி இடையே பேச

”தெரிஞ்சுருந்தா…… மட்டும்…. சரி விடு” . அவளைப் பார்க்காமலே பேச……

”தெரிஞ்சுருந்தா கூட அவ என்னத்தான் மேரேஜ் பண்ணியிருப்பா……” என்றான் பாலா…. அவன் குரலில்…. வலியுடன்… அவர்களின் திருமணம் நடந்த சம்பவம் பற்றி அவன் கூறுவதற்கான திடமும் வந்திருந்தது…..

வலிக்கு காரணம்….. கீர்த்தியை அன்று….. தன்னை நம்பி தன் சூழ்நிலையினை சொல்லி… தன்னால் அவள் இக்கட்டில் நின்ற அவலம் நெஞ்சில் தோன்றியது.…. அந்த முடிவைச் சொல்லும் கடைசி நேரத்தில் கூட… அவள் கடனாக கேட்டு பார்த்தது நினைவுக்கு வர….. அவன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது…. அப்போது அவனுக்கு ’மது..மது..மது’ மட்டும்தானே நினைவில் இருந்தாள்…. சுயநலக்காரன்…. என்று தன்னையே திட்டிக் கொண்டான்…

பாலாவின் வார்த்தையைக் கேட்ட…. வினோத்தோ வேறு விதமாக நினைத்தான்…..

“அதுதான்..அன்னைக்கு பார்த்தேனே… அவ உன் மேல வச்சுருந்த காதல…….எங்க எல்லார விட நீ அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்று…..பிறகு நீ சொல்ல மாட்ட…..” சூடாக அவனும் வார்த்தைகளை விட்டான்….

”அய்யோ…..இவன் அவ அன்னைக்கு சொன்ன வார்த்தைகளை எல்லாம் சொன்னால் அவ்வளவுதான்… இப்போதான்.. ஏதோ பக்கத்துல வந்துருக்கா… மறுபடியும்… ஏறிக்கிறுவாளே…. சாண் ஏறினால்… முழம் சறுக்குற மாதிரியே நடக்குதே….” நொந்தான் பாலா…. அதற்கு மேலும் அவனைப் பேச விட்டால் நன்றாக இருக்காது என்பதை உணர்ந்த பாலா…. பதறியபடி

“இல்ல வினோத்…. நான் சொல்ல வந்தது என்னன்னா… என் மேல் அவளுக்கு இருந்த காதல்னால இல்ல…….அன்னைக்கும் அவ பெற்றோர் மேல இருந்த பாசத்திலனாலதான் என்னைக் … கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா…. “

”என்ன பாலா சொல்ற…..எங்க அத்தை மாமா… உன்னைக் கல்யாணம் பண்ண சொல்லி இவள கட்டாயப் படுத்துனாங்களா….. என்ன உளர்ற…” என்று தப்பாக நினைத்து அதை வேறு கேட்க…..

“ப்ளீஸ் வினோத்….என்ன சொல்ல விடு….அதுக்கப்புறம் நீ எதுவா இருந்தாலும் பேசு ….”

என்றவன்…. சொல்ல ஆரம்பிக்க…. கீர்த்தி…. அழுகையும்…பயத்துடன் இருவரையும் பார்க்கப் பிடிக்காமல்… தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்…

பாலா… சொல்லச் சொல்ல……………..வினோத்… அதிர்ந்தான்… அடி வரை…. கீர்த்தியைப் பார்க்க.. அவன் பார்வையை உணர்ந்த கீர்த்திக்கு அழுகையுடன் விசும்பலும் சேர…..

பாலா…அவளின் பெற்றேர் இறந்த வரை சொன்னான்… இப்போதும் மறைத்தான்…… கடைசியாக அவர்கள் இருவரும் அவனை வந்து பார்த்ததையும்… அதற்கான விசயத்தையும்……

வினோத்தின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன…..அவனால் பாலா சொல்ல்ச் சொல்ல கேட்க முடியவில்லை… தங்கள் வீட்டுப் பெண்ணை ……..அதுவும்.. கஷ்டம் என்றால் என்ன என்றே அறியாமல்… அன்பையும்.. நேசமும் மட்டுமே தெரியுமாறு தாங்கி தாங்கி வளர்த்த தங்கள் வீட்டு இளவரசிக்கு இந்த நிலைமையா….. வாழ்க்கையையே அடமானம் வைக்கும் அளவுக்கு………….. அவ்வளவு பெரிய ஆளாயிட்டாளா இவ…. கீர்த்தனா செய்த காரியத்தை நினைத்து…. உச்ச கட்ட ஆவேசத்திற்கு ஆளானவன்…

“நிறுத்து பாலா…” வார்த்தைகளில் தீப்பொறி பறக்க….

“இதற்கு மேலும் நீ எதுவும் சொல்ல வேண்டாம்…” என்றவன் கீர்த்தியின் புறம் திரும்பினான்…….

“ஏய்…. நிமிர்ந்து என்ன பாரு…. இவன் இப்ப….இங்க…. சொன்னதெல்லாம் உண்மையா….” என்று நிறுத்தி.. நிதானமாக அழுத்திக் கேட்டான்…. வார்த்தைகளில்…. இழுத்து… பிடித்திருந்த கோபம்…உக்கிரனாய்க் காட்டியது….

நிமிர்ந்தவள் அவன் பார்வையின் உக்கிரம் தாங்காமல் மீண்டும் தலை குனிந்தாள்….

“கேட்டுட்டு இருக்கேன்ல….சொல்லு…எனக்கு பதிலை…இவன் சொல்றானே. கேவலம்…. பணத்துக்காக இவன கல்யாணம் பண்ணிணாய் என்று… நீ சொல்லு….. நாங்க அப்படி வளர்க்கல சொல்லு….….. அப்டிலாம் இல்லேனு… சொல்லு …..” என்று வெறிப் பிடித்தவன் போல் கத்தி அவளை உலுக்கினான்….

தலையை மட்டும் ஆட்டினாள்…. ’ஆம்’ என்று…. அடுத்த நொடி… ஆவேசத்துடன் பளாரென்ற அறை அவள் கன்னத்தில் விழுந்த்து..…..

பாலா… அதிர்ந்து விட்டான்…. தன்மேல் கோபப்படுவான் என்று எதிர்பார்க்க…. கீர்த்திக்கு அவன் விட்ட அறையில் கலங்கியவன்…. சட்டென்று கீர்த்தியை பிடித்து தன் பக்கம் இழுக்க… அவளோ அசையாமல்….. அந்த இடத்தை விட்டு நகராமல்... வினொத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்…

கண்களில் மட்டும் கண்ணீர் வழிய.. வினோத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் சிலையாக…

“வினோத்… திஸ் இஸ் டூ மச்… என் முன்னாடியே அவள….அடிக்கற….என்னதான் உனக்கு அவ மேல உரிமை இருந்தாலும்…” பாலாவும் ஆத்திரமானான்

”ஒ சார்க்கு கோபம் வேற வருதோ….. இங்க அடிச்சா அங்க வலிக்குதா….. இன்னைக்கு உனக்கு வலிக்குதா…. எங்க வீட்டு பொண்ணோட வாழ்க்கைல விளையாடிருக்கியே எங்களுக்கு எப்படி வலிக்கும்….. எத்தன வருசம் டா உனக்கு தெரியும் அவள……. நாங்க எப்டி வளர்த்தோம்னு தெரியுமா…… பாவி…… எப்டிடா மனசு வந்துச்சு….. எவளோ ஒருத்திக்காக…. அவ கருமம் பிடித்த காதலுக்காக… உன்னை எல்லாம் சொல்லக் கூடாதுப்பா… இவளச் சொல்லனும்….. என்று மறுபடியும் கீர்த்தி மேல் பாய்ந்தான்….

“கருமம் பிடித்த காதலா…” என்று மனம் திடுக்கிட்டான் பாலா….. உள்ளங்கையை மடக்கி தன் ஆற்றாமையை…கோபத்தினை அடக்கினான் பாலா… கீர்த்திக்காக… அவள் ஒருத்திக்காக மட்டுமே.. மதுவின் காதலுக்கு கிடைத்த அவப் பெயரைத் தாங்கிக் கொண்டான் பாலா….

”நீ எதுக்கு அழற….. அதான்…. எங்க எல்லாரயும் அழ வச்சுட்டேல….. மாமாவும் அத்தையும்…. இப்டி போய் சேர்ந்துட்டாங்களேனு…..உன்ன விட்டுட்டு போய்ட்டாங்களேனு… அவங்களோட சாவு இப்டி ஆகிருச்சேனு….. நா மருகாத நாள் இல்லை…. இன்னைக்கு சொல்றேண்டி…. நல்ல வேளை போய் சேர்ந்தாங்க….. அவங்க மட்டும் உயிரோட இருந்திருந்தா….. பாவி…. உன்னை பார்த்தே….. அணு அணுவா… செத்துப் போய் இருப்பாங்க…. எந்த தைரியத்தில் இந்த காரியம் பண்ணுன….. இவன் உன்ன கல்யாணம் பண்றேனு சொன்னானே ………… அதுக்கு பதிலா…… வேறு ஏதாவது ……….. ” அதற்கு மேல் அவளிடம் பேசப் பிடிக்காமல் நிற்க….

அவன் தாய் தந்தையை இறப்பைப் பற்றிக் கூற………. இன்னும் அதிகமாக அழுகை வர…….. பாலாவிற்கு தாங்க முடியவில்லை………… தன்னை வினோத் திட்டி இருந்தால் கூட அவனுக்கு ஒன்றுமில்லை….. கீர்த்தியை…. அடித்ததை….. அவளைத் திட்டுவதை அவனால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை….

“வினோத்…… இதோட நிறுத்திக்க…… இதுக்கு மேல அவள பற்றி ஒரு வார்த்தை சொன்ன…. நான் மனுசனா இருக்க மாட்டேன்…. ”

“என்னடா பண்ணுவ….” – வார்த்தைகள்… தடித்தன… இருவருக்கும்

“அவ மேல உனக்கு இருக்கற பாசம் … உனக்கு அவள பேசி இருந்ததால் மட்டும்தான் உன்கிட்ட உண்மைய சொல்லணும்னு நினைத்தேன்…. பொறுமையாவும் பேசிட்டு இருக்கேன்…… அவ்வளவுதான்… நாங்களும் சொல்லிட்டோம்….. இனி நாங்க எங்க வாழ்க்கைய பார்த்துக்கறோம்… நீயும் உன் வாழ்க்கையை பார்த்துக்கோ..இப்போ நீ கிளம்பலாம்………” என்றவனிடம்

”என்ன கிளம்பலாமா….. எதுக்கு அவள கேக்குறதுக்கு ஆள் இல்லாம நீ அவள தெருவுல இழுத்து விடுவதற்கா….. அவ யாரு மதுவா…. அவ வர்ற வரைக்கும்… உனக்கும…. ஊருக்கு காட்டவும்… சுகத்துக்கும் பொண்டாட்டி வேணும் இல்ல….. அவ வரலேனா....... இவளையே கண்டினியூ பண்ணலாம்….. வந்துட்டா… இவள கழட்டி விடலாம்னு ப்ளானா…. அதுக்கு கேக்குறதுக்கு ஆள் இருக்கக் கூடாதுனு பார்க்கிறியா…..”

அவன் ஒவ்வொரு வார்த்தையிலும் கோபத்தின் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தான் பாலா…. ஆக மொத்தம் பாலாவின் பொறுமையெல்லாம் பறந்து விட்டது……

“டேய் என்ன ஓவரா …பேசிட்டே போற…… தப்பு செஞ்சிட்டோம்னு நீ கேக்கறதுக்கு சொல்றதுக்கு எல்லாம் பொறுமையா, அமைதியா இருந்தா.. ஓவரா பேசிட்டு போற…. என்னடா பண்ணுவ நீ… சொல்லு….” …. இவனும் எகிற ஆரம்பித்தான்

”நீ பேசுவடா….. அவதான் உன்கிட்ட மயங்கிக் கிடக்கிறாளே….. அத அவ வாயால வேற சொன்னாளே….. உன் காதல்தான் அவ அப்பா அம்மா பாசத்தை விட பெருசா போச்சுனு… அதுதான் அவள விட்டுட்டு போய்ட்டாங்கனு….. அன்னைக்கு உன் மேல விழுந்து அழுதாளே….. பிறகு ஏன் சொல்ல மாட்ட…. “

என்று ஏழரையை இழுத்து விட்டான் வினோத்…….

கீர்த்தி சட்டென நிமிர்ந்தாள்….. “என்ன…….. நான் சொன்னேனா… அன்று… கதறி அழுத போது சொன்னேனா…….. அதன் பிறகுதான் ……பாலா……… ச்சேய்……. தான்தான்… இன்று அவன் தன்னோடு வாழ நினைக்கும் காரணமா” என்று குமுற……

பாலா மொத்தமும் கலங்கிப் போனான்…

“வந்த வேல முடிஞ்சுடுச்சு இல்ல… என்னப் பத்தி எல்லாம் தெரிஞ்சுருச்சு இல்ல… நீ கிளம்பு…” என்று மீண்டும் அவனை விரட்ட…

இப்போது வார்த்தையில் அனல் பறக்க வில்லை… தவிப்புதான் தெரிந்தது… கீர்த்தி என்ன சொல்வாளோ…என்ன நினைப்பாளோ என்று பதறியது மனம்

”ஏய் இவன போயா நம்புற நீ…. என்னைக்காவது நீ இவன நெனச்சு கண்ண கசக்கிடுதான் வந்து நிக்கப் போற என்கிட்ட…. இவன் ஒரு நல்ல பாம்பு……. சுயநலப் பிசாசு… இவனப் போய்…. எப்படி கீர்த்தி… ” என்று கீர்த்தியை எச்சரித்தவன்.. அவள் இருந்த நிலை பொறுக்காமல்…

”வந்துடும்மா….. என்கூட ….. இவன் எக்கேடோ கெட்டு போறான்….. நான் கொடுக்கறேன் அந்த பணத்தை…. இவன் மூஞ்சில தூக்கி எறியரேன்… வந்துடுடா……. உன்னோட காதலுக்கு எல்லாம் இவன் அருகதை இல்லாதவன்…. நாளைக்கே அந்த மது வந்தா………உன்னை நடுத்தெருவிலதான் நிக்க வைப்பான்…. பணக்காரத் திமிரு என்ன வேணும்னாலும் செய்வான்..” என்று அவளிடமே கெஞ்ச….

வெறித்த பார்வையில்

“நீ போ…….. உன் வாழ்க்கைய பார்த்துக்கோ…. அப்டி ஒரு நிலைமை வந்தா கூட.. எனக்கு கவலை இல்லை….. ஏன்னா…… எனக்கு யாரு இருக்கா….. என்னப் பத்தி கவலப் பட… கேக்க ஆளில்லாத அனாதை தான நான்….. கீர்த்தினு ஒருத்தி இருந்தா….. ஆனா… உன்னோட அத்தை மாமா இறந்தப்பவே அவளும் அவங்களோட செத்துப் போய்ட்டானு நினச்சுக்கோ….” என்று முடித்தாள்….

அவள் என்ன நினைக்கிறாள் என்றே தெரியவில்லை…

“தான் பேசிய வார்த்தைகளாலேயே பாலா இவளைக் காதலித்தானா… அவனாக என்னை நேசிக்க வில்லையா… என்னைப் பரிதாபப்பட்டுக் கூட அவன் விரும்பவில்லையா… நான் தான் அவனிடம் வாயை விட்டு விட்டேனா…. என் காதலைச் சொல்லி அவனை என்னோடு வலுக்கட்டாயமாக இழுத்திருக்கிறேனா… கண்கள் பாலாவை நோக்க…

மனைவியின் நிலை புரிந்து………தவித்துப் போனான்….

வினோத் வெளியேறி விட்டான்…. கீர்த்தி .. ’அனாதை’ என்று சொன்னது மனதினை அரித்தது… அவன் வெளியேறும் போதும்….

அவனின் தளர்வான நடையில் கவி ஏதோ நடந்திருக்கிறது என்று அவனிடம் பேச கீழிறங்கி வந்தாள்….

வந்தவளிடம்…கலங்கினான் வினோத்…

“கவி… அவ…. அவ விசயம் எல்லாம் தெரியுமா உனக்கு… அந்த ராஸ்கல்.. அவள என்ன பண்ணி வச்சுருக்கானு தெரியுமா…. எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கான்… சின்னப் பொண்ணு அவ….. செதச்சுட்டான் அவ வாழ்க்கையவே…. இவ இப்படி நிக்கிறத பார்க்கத்தான்.. நாங்க தாங்கியும்… ஏங்கியும்… வளர்த்தோமா…. முடியல கீர்த்தி.. அனாதைனு என்கிட்டயே சொல்றா…. அவ கண்ணக் கசக்குனாலே எங்க யாரலயும் தாங்க முடியாது.. …இன்னைக்கு…..” என்றவன் நிமிர்ந்து

”அவனுக்காக என்கிட்டயே நீ போடானு சொல்றா….. “ என்று புலம்பித் தீர்த்தான்….

“வினோத்… அவங்க பண்ணினது எல்லாம் தப்புதான்… ஆனா.. பாலா… அவரோட தப்பெல்லாம் உணர்ந்துட்டார். பாலா.. நிச்சயமா….. நம்ம கீர்த்திய விட்டுட மாட்டார்… அவளோட வாழத்தான் அவரும் போராடிட்டு இருக்கார்…. கீர்த்திதான் இன்னும் தப்பு பண்ணிட்டு இருக்கா….” என

“என்ன சொல்ற கவி” புரியல…..

அது..அது ..தயங்கினாள்…கவி…

“பாலாவும்..கீர்த்தியும் இன்னும் வாழவே ஆரம்பிக்கல…. கீர்த்தி அவர ஏத்துக்க முடியாம திண்டாடுறா…. ஆனா.. பாலா இல்லாமலும் அவளால் இருக்க முடியாது…. இன்னும் சொல்லப் போனா… பாலா அவளோட சம்மத்திற்க்காக காத்துட்டு இருக்கார்…” என கீர்த்தி-பாலா தற்போதைய நிலையினை சொல்ல…

இது வேறா????????..…. வினோத் முற்றிலும் உடைந்தே போனான்…..

ஆக மொத்தம்…. கீர்த்தி வாழ்க்கை… உடைந்து போன கண்ணாடிச் சிதறலாய் தோன்ற

நேராகச் சென்றது……………….. மதுபாட்டிலின் துணை நாடி….

-------------------

பாலா…. அப்படியே நின்றிருந்த கீர்த்தியின் அருகில் நெருங்க….

“என் பக்கத்துல வந்தீங்க….. நான் மனுசியா இருக்க மாட்டேன்…..” என்றவளின் வார்த்தைகளில் இருந்தது ஆவேசம்,,, கண்களில் தீப்பொறி பறந்தது

“கீது நான் சொல்றத கேளு…..” என்ற அவனின் வார்த்தைகள் காற்றில் பறக்க …… அவனின் அறையை விட்டு வெளியேறினாள்…

“ச்சேய்……என்று பாலாவால் மேசையைத் தான் கோபத்தில் தட்ட முடிந்தது…

அலுவலகம் என்பதால் அவனால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை…..

கொஞ்சம்………… கொஞ்சமாய் வெளிவரத் துடித்த கீர்த்தியின் காதல் மனம் மீண்டும் அதன் கூட்டுக்குள் அடைந்தது………….

------------------

மிகுந்த போதையில்…………. வினோத் காரை ஓட்டி வந்து கொண்டிருந்தான்………. எண்ணம் முழுக்க… கீர்த்தி……….மட்டுமே இருந்தாள்………. ஆத்திரத்தில் கண் சிவந்து ..உள்ளம் கொதிக்க ……. அவளின் வாழ்க்கை இனி என்ன ஆகும்…. காதலிப்பாளாம்…. ஆனால் வாழ மாட்டாளாம்… பைத்தியக்காரி….. அவன் என்ன இவளை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறானா…. பாவி… பாலாவை நினைக்க… இன்னும் கோபம் வந்த்து… நல்லவன் மாதிரி…. இருந்து…. ராஸ்கல் என்ன வேலையெல்லாம் பண்ணி இருக்கிறான்……. என்றவாறு வந்தவன்

போதையின் உக்கிரமும் சேர….. என்ன செய்கிறோம் என்று தெரியாமல்…. ஓரமாய் நின்ற மரத்தின் மேல் மோதி விட்டான்… நல்ல வேளை… கட்டாயம் போட்டாக வேண்டும் என்பதால் சீட் பெல்ட் போட்டிருந்தான்.. அதனால் பெரிதாக அடிபட வில்லை.. நெற்றியில் மட்டும் ரத்தம் வழிந்தது… ஆனால் அதன் வலியெல்லாம் பெரிதாக இல்லை அவனுக்கு….

------

கீர்த்திகாவுக்கு….. தான் மதுவினைப் பற்றி பேசியதில் ஏதோ தவறு நடந்து விட்டது என்பது பாலாவின் அழுத்தமான …வார்த்தைகளில் தெரிந்தது….. மேலும் வினோத் கோபம் வேறு அலை கழிக்க அதற்கு மேலும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல்……. என்னவோ ஏதோ என்று பாலாவைப் பார்க்க கிளம்பி விட்டாள்…. தனியாக

பாலாவைப் பார்க்க வந்த வழியில்….. வினொத் அவள் பார்வையில் மாட்டினான்….. இது எதிர்பாராத நிகழ்வா… இல்லை விதியின் பொம்மலாட்டத்தில் நடக்கும் நாடகமா …தெரியவில்லை…. இல்லை கீர்த்திகா வாழ்க்கை வினோத்தால் மறு வாழ்வு அடையப் போகும் அச்சாரமா….. சென்னை மாநகரின் ஏதோ ஒரு தெருவில் மோதி இருந்த வினோத்….. அவளின் கண்களில் பட்டான்…. அவன் அடிபட்ட அடுத்த 10 வது நிமிடத்தில்

ஏதோ கூட்டம் என்று இவளும் பதட்டத்துடன் போக… பார்த்தது வினோத்தை…… அலறியடித்துக் கொண்டு முன்னே சென்றவள்… அவனைக் காரில் இருந்து இறக்கி ….. மருத்துவமனைக்கு விரைந்தாள்….. அங்கே…. அவனுக்கு அவன் குடித்திருந்த காரணத்தால் …. சிகி ச்சை எடுக்கத் தயங்க…. வேறு வழியின்றி…. பாலவிற்கு கால் செய்தாள்…. அவனும் அதற்கான நடவடிக்கைகளில் இறங்க… ஒருவாறாக அவனுக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கப்பட்ட்து…….

---------------

”எதுக்குடி இப்போ அழுதுட்டு வர்ற….. மனுசன் இருக்கற நெலமையில ….இப்படியே அழுதிட்டு வந்தேனு வச்சுக்க…. அப்டியே இறக்கி விட்டுட்டு போய்டுவேன்……. கவி கூட வான்னா…. பிடிவாதம் பிடிச்சு வந்த….. நான் சொல்றத எதுவும் கேட்ராத….. என்று கீர்த்தியின் அழுகையில்.. எரிச்சலான பாலா… அவளை வேறு அர்சித்துக் கொண்டே வந்தான்………..

அவன் சொல்வதை என்று கேட்டாள் அவன் மனைவி…..

அழுதபடியே ……..

”மாமா…அத்தை வேற ஊர்ல இல்லை….இந்த நேரத்தில…..எல்லாம என்னாலதான்….. “ என்று இன்னும் வேகமாக அழ………….

பாலா இப்போது அவளைச் சமாதானப் படுத்தும் விதமாக…

“சின்ன அடிதான் கீர்த்தி……….கீர்த்திகா சொன்னா…… சொன்னா கேளும்மா” என்க

“உயிர் போனதையே சின்ன ஆக்ஸிடெண்ட் சொன்ன ஆள்தானே நீங்க……. நான் நம்ப மாட்டேன்….எனக்கு வினோத்த பார்க்கனும்….” அவனின் வார்த்தைகளை நம்பாமல் சிறு குழந்தை போல் தேம்பி அழ

கடுப்பானான் பாலா…

“ஏன்… இப்ப ஓவரா சீன் போடற… பெரிசா அடி இல்ல…. டாக்டர் நாளைக்கு வீட்டுக்கு போகலாம்னு சொன்னார்னு சொல்றேன்… கேக்காம அழுதிட்டே வர… அவன் என்னடானா… ஓவரா கத்திட்டு.. தண்ணியப் போட்டுட்டு காரை மரத்தில விட்ருக்கான்…. என்ன சீன் போட்றீங்களா…. ரெண்டு பேரும்… யார் பாசத்துல பெரிசுன்னு….. சொன்னதக் கேட்டானா….. ரெண்டு நாளு விட்டத்தை பாத்துட்டு உக்கார்ந்துட்டு போவானா…. அத விட்டுட்டு தண்ணியடிச்சானாம்… மரத்தில மோதினானாம்….. இவ மாஞ்சு மாஞ்சு அழறா… நாங்களாம்… 5 வருசமா உக்காந்துருக்கல… இப்போ நீ பேசாம வரல…. நேரா வீட்டுக்கு கார திருப்பிடுவேன்” என்று உச்சஸ்தாயில் கத்த….

கப்சிப் ஆனாள் கீர்த்தி……………..

அமைதியாக வந்த கீர்த்தியைப் பார்த்தவன்.. அவள் கன்னத்தில் வினோத்தின் கைவிரல் தடம் நேரம் ஆக ஆக நன்றாகத் தெரிய ஆரம்பித்து இருந்தது…

“என்ன தைரியம் அவனுக்கு… என் முன்னாலேயே அடிச்சுட்டான்…. படு பாவி…. இவ படுத்தற பாட்டுக்கு… எனக்குதான் கோபம் வரணும்…. எனக்கே இன்னும் அந்த தைரியம் வரல…. கோபம் வந்தா அடிக்க தைரியம் வராம…. ஏதேதோ செய்யிறேன்….” என்ற போதே

“அவன் அடிச்சுச்ட்டான்னு ஃபீல் பண்றியா… இல்ல உன்னால செய்ய முடியாதத அவன் செஞ்சுட்டான்னு கோபம் வருதா உனக்கு….” என்ற மனச்சாட்சிக்கு.. எனக்கு மட்டும் தான் அவளை அடிக்கவும்… அணைக்கவும் உரிமை… வேற யாருக்கும் இல்ல… இன்னொரு தடவை அவன் என் கீர்த்தனா மேல கை வைக்கட்டும்…. என்று மனதினுள்ளே பதில் சொன்னான்…

அப்போது வினோத் போட்டு உடைத்த உண்மையும் ஞாபகம் வர…. இன்னைக்கு நைட் நமக்கு கச்சேரிதான் இருக்கு போல…. என்றவனுக்கு ஒன்று தெரிய வாய்ப்பில்லை…. வினோத்தை பார்த்து விட்டு திரும்பி வரும்போது … வினோத் சொன்னது மட்டும் இல்லை… பாலாவின் கடந்த காலமும் கீர்த்திக்கு தெரியப் போகிறது…. என்று

அவனின் கடந்த காலம் தெரியும் போது… மதுவின் பாலாவின் மீதான அளப்பறிய காதல் அறிய வரும் போது….. கீர்த்தியின் நிலை என்னவாக இருக்கும்…. பொறாமைப்படுவாளா…. கோபப்படுவாளா… வேதனைப்படுவாளா… தன்னவனை அவளுக்காக விட்டுக் கொடுப்பாளா ?????????????

1,336 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page