அத்தியாயம்: 35
வினோத் அடுத்த இரண்டு நாளில் இங்கு வர…. பாலாவோ அலுவல் விசயமாக அமெரிக்காவிற்கு ஒரு வார பயணமாகப் பறந்திருந்தான்…..
வினோத் வந்திறங்கிய அடுத்த நாளே அவன் கிளம்பி விட்டான்….
வினோத் குடும்பம் தற்காலிகமாக கீர்த்தியின் வீட்டிலேயே தங்கினர்…..
வினோத்தும் தன் அலுவலகம் தொடர்பான விசயங்களில் பிஸியாக இருந்தான்…..
அவர்கள் வந்த சந்தோசத்தில்….. கீர்த்திக்கு விஸ்வம்-மோகனாவோடு அந்த வாரம் கழிய …. அவள் நினைவுகளில் எழும்பிய மதுவின் நினைவுகளும்.. மனதின் ஆழத்தில் மறுபடியும் சென்றது.
-------------
வீட்டில் பாலாவும்… கீர்த்தியும் தொடர்ந்து நான்கு நாட்கள் இல்லாதது வீடே வெறிச்சோடி இருந்தது.. கீர்த்தி இல்லாததால் சிந்துவின் நடமாட்டமும் அதிகமாயில்லை…
ஜெகனாதன் அருந்ததியிடம்…
“கீர்த்தி எப்போ வருவாம்மா” என்று கேட்க…
“பாலா வந்த பின்னால் தான் வருவாள்… ஏன் கேட்கறீங்க” என்று கேட்டாள்
“இல்ல…ஒண்ணுமில்ல..” என்றவர் சொன்ன வார்த்தைகளிலேயே ஏதோ இருப்பது தெரிய
“என்னங்க…எதுவா இருந்தாலும்.. மனசுல வச்சு புளுங்காம வெளில சொல்லிருங்க… அதுதான் உங்க உடம்பு இருக்கிற கண்டிசனுக்கு நல்லது” என்று அவரின் உடல் நிலையைக் கருதியவளாய் அருந்ததி கேட்டாள்
அவரோ
”நம்ம குணா இருக்கான்ல… அவனுக்கு பேத்தி பிறந்திருக்காம்…. நம்ம வீட்டிலயும் எப்போ குழந்த சத்தம் கேட்குமுன்னு இருக்கு…. இவங்க ரெண்டு பேரும் தள்ளிப் போடறேன்னு ஏதாவது பண்ணி வைக்கப் போறாங்க… சொல்லி வை…. முதல் குழந்தை மட்டும் பெத்துக் குடுத்துட்டு… அதுக்கப்புறம் என்ன வேணும்னாலும் பண்ணட்டும்” என்று சொன்னவரை பார்வையாலே எரித்தாள்
ஏற்கனே இவர் படுத்திய பாட்டில் தன் மகன் செய்த காரியங்களை எல்லாம் தெரிந்தவள் அல்லவா அவள்…
“ஏன் இப்போ பேரனோ..பேத்தியோ வேணும்னு பிடிவாதம் பிடிச்சு…. ஹாஸ்பிட்டல்ல மறுபடியும் படுக்கப் போறீங்களா என்ன” என்று கடுமையாகக் கேட்டவள்
“அது அவங்க இஷ்டம்… பெத்துக் குடுத்தாங்கன்னா… வச்சுக் கொஞ்சுவோம்… இல்லையா… பேசாம இருப்போம்… இதப் போய் அவன்கிட்ட கேட்ராதீங்க…” என்று முகத்தில் அடித்தார்ப் போல் சொன்னாள்…
மகனின் நிலை தெரியாதவளா என்ன… அவன் கீர்த்தியோடு போராடிக் கொண்டிருப்பதை…. அவள் அறியாமல் இல்லை. மகனை நினைத்து பெருமூச்சு விட்டபடி கணவனை மட்டும் அடக்கியவளாய்…. தங்களுக்கு அந்தக் கொடுப்பினை எல்லாம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று தன் மனதை அடக்க முடியாமல் திணறினாள்….
”நாம என்ன தப்பா கேட்டோம்… இவ ஏன் இந்த ஆட்டம் ஆடுறா..” என்று நினைத்தபடி தன் அறைக்குச் சென்றார் ஜெகனாதன்…
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தன் அம்மாவைப் பார்க்க உள்ளே நுழைந்த சிந்துவை அவர்கள் இருவரும் கவனிக்க வில்லை..
அவர்களின் உரையாடலை ஓரளவு கேட்டவளுக்கு…
“ஹை… கீர்த்தி அக்காக்கு பாப்பா பிறந்தா… ஒரே ஜாலி தான் நமக்கு” என்று உற்சாகத்தில் துள்ளினாள் ..
--------------------
நாட்கள் சென்றன…. தன் பயணத்தினை முடித்து…. பாலாவும் இந்தியா திரும்பினான் …
-----------------------------
அந்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டெல் வழக்கமான அதன் களையில் இருக்க
வினோத் மற்றும் கவி இருவரும் அமர்ந்திருந்தனர்…. பாலா-கீர்த்திக்காக அவர்கள் இருவரும் காத்திருந்தனர்…. கவி வினோத்துடன் போனில் மட்டுமே பேசி இருக்கிறாள்….. கவியுடன் அவனை அறிமுகப்படுத்துவதற்கே கீர்த்தி இந்த சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தாள்….
வினோத்தை இப்போதுதான் முதல் முறையாகப் பார்த்தாள்… கவி
“ஆள் நல்லாத்தான் இருக்கான்… ஹ்ம்ம்ம்… கீர்த்தியத்தான் மிஸ் பண்ணிட்டான்” என்று வழக்கம் போல் தன் சைட் அடிக்கும் பணியை ஆரம்பித்தாள்….. அவள் பார்ப்பதை உணர்ந்த வினோத்…. நக்கல் கலந்த குரலில்
“கவி … என்ன என் முகத்தில அப்படியே ஏமாளின்னு தெரியுதா” என்று கேட்க….
கவிதான் அவனை கீர்த்தியோடு வைத்து ஓட்டியிருக்கிறாளே…. அதனாலே அவன் இப்படிக் கேட்க
கவிக்கு மனம் வருந்தியது… கீர்த்தி ஏன் இப்படி பண்ணினாள் என்று சொல்லத்தான் துடித்தது... ஆனால் முடியாத நிலையில் இருந்தாள்…. அதனால்…. தடுமாறியவளாய்
“அப்படிலாம் …. இல்ல….. ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே… பாலா….. கீர்த்தி…. சிந்து… மற்றும் கீர்த்திகாவும் வந்தனர்… அவர்களைப் பார்த்தவள்…குறும்புடன்
“நீங்க தப்பிச்சிட்டீங்க…… ஆனா….. பாவம் பாலா மாட்டிக்கிட்டாரு…. கீர்த்திக்கிட்டேனு நினைத்தேன்” என்று சொல்ல….
சிரித்த வினோத்…
“இரு… இரு.. கீர்த்திக்கிட்ட சொல்றேன்….”
”சொல்லிக்கோங்க…. கீர்த்தியே இதத்தான் சொல்றா….” என்று அசால்ட்டாகச் சொல்ல..
வினோத் அவள் பாவனையில் சற்று அதிகமாகச் சிரிக்க
அவர்களைப் பார்த்த படி வந்த நால்வரின் கண்ணிலும் அது பதிந்தது..
பாலா…கீர்த்தியிடம் தலைசாய்த்து அவள் காதில்… ”நம்ம தலதான் உருளுது போல.. பாரு நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும்….பார்த்து ஊரே சிரிக்குது” என்க
கீர்த்தி கொடுத்த அக்மார்க் ரொமான்ஸ் லுக்கை பாலா சந்தோசமாக அனுபவித்தான்
அவன் சொல்லிய உடன் சிந்துவும்…. கீர்த்தியை தன் புறம் கீழாக இழுத்து…
“அக்கா…. கவி அக்கா..வினோத் அண்ணா… சூப்பர் காம்பினேசன்…ரெண்டு பேரும் ஒரு இடத்தில இருந்தா…செம ஜாலி போங்க….இன்னைக்கு ..லன்ச் சூப்பரா போகும்” என ஜாலி மூடில் சொல்ல
கீர்த்தனாவோ….
“சிந்து…வர வர ரொம்ப பேசுற…… நீ இப்டி பேசுரதுக்கெல்லாம்..மஞ்சு அக்கா.. என்னைத்தான் தப்பா எடுத்துக்கப் போறாங்க…..’” என்று அவளை அடக்கி கூட்டி வந்தாள்….
கீர்த்திகாவிற்கோ…
மனம் தாங்க வில்லை…. வினோத் வருகிறான் என்று பாலா சொன்னதற்காகவே இங்கு வந்தாள்.. அலைபாய்ந்த அவள் மனதை அடக்க முடியாமல்….
ஆனால் அவனோ இன்னொரு பெண்ணுடன்… நினைக்கும் போதே பதறிய எண்ணம்… அவளுக்கு அவள் மனதை புரிய வைத்தது… அவள் மனம் அவனிடம் ஏதோ எதிர்பார்த்தது உண்மைதான்…. ஆனால் ’காதலையா’… காதல்தான்… இன்று அவன் இன்னொரு பெண்ணிடம் சிரித்துப் பேசும்போது வந்த வலி அது உண்மை என்று சொன்னது…. முதல் காதலின் அவலமே இன்னும் நெஞ்சை விட்டு போகவில்லை எனும் போது இது வேறா?…. அதுவும் அவன் இவளை ஏற்றுக் கொள்வானா?…… அவன் மனதில் வேறு யாரும் இருந்தால்?…. இந்தப் பெண் யார்?…. என்றெல்லாம் நினைக்கவே தலையே சுற்றியது…
இருந்தாலும்… இனி திரும்பிப் போக முடியாது என்ற நிலையால்… மனதில் பெரும் வலியுடன் அவர்களோடு வந்தாள்….
கவி வினோத்திடம்…. ’நல்ல ஜோடிப் பொருத்தம்…..’ என்று கீர்த்தி-பாலாவை பார்த்துக் கூற…
மனதில் பொறமையின்றி ஒத்துக் கொண்ட வினோத்தின் மேல் கவிக்கு மரியாதைதான் கூடியது…
”அது யாரு வினோத் ….. செமையா இருக்காங்க ரவி வர்மா ஓவியம் மாதிரி…..” என்று கீர்த்திகாவைப் பார்த்தவள் வழக்கம் போல ஆரம்பிக்க…
“நீ ரவிவர்மா ஓவியம் முன்ன பின்ன பார்த்துருக்கியா….அது இப்டித்தான் இருக்குமா..” என கலாய்க்க
“ஹலோ.. பார்க்க.. ஓவர் ப்யூட்டியா இருந்தா இப்டித்தான் நாங்கள்ளாம் சொல்லுவோம்… சொன்னா அனுபவிக்க கத்துக்கோங்க பாஸ்… நோ ஆராய்ச்சி” என்றவளைப் பார்த்துச் சிரித்த வினோத் கீர்த்திகாவையும் ஒரு பார்வை பார்த்து வைத்தான்
“ஒருவேளை இவளும் மற்ற பெண்களைப் போல் இருந்தால்… ரவிவர்மா ஓவியமும் தோற்று விடுமோ’” என்ற எண்ணம் தோன்றியதை அவனால் தவிர்க்க முடியவில்லைதான்.
கவி கீர்த்திகாவை ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி வைத்த கீர்த்தினாவிற்கு… வினோத்தை கவிக்கு அறிமுகப்படுத்தும் அவசியத்தை கவியும்..வினோத்தும் வைக்கவில்லை… அவர்கள் வருவதற்கு முன்னரே இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக் கொண்டு இருந்ததால்
உற்சாகம் மட்டுமே அவர்கள் அனைவரிடமும் இருந்தது…. கீர்த்திகா மனதில் வருத்தம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவர்களுடன் பேசினாள் … மகிழ்ச்சியாகவே
அனைவரும் அவர் அவருக்கான ஐட்டங்களை ஆர்டர் செய்ய….
வினோத் மட்டும் எதுவும் சொல்லாமல் இருக்க…
பாலா….அவனிடம்..
“என்ன வினோத் நீ…ஒண்ணும் சொல்லல…..” என்று கேட்க
கீர்த்தனா மட்டும் வினோத்தைப் புரிந்து…அவனைப் பார்த்து சிரித்தாள்…
”இவ எதுக்கு சிரிக்கறா….” என்று தோன்றியது பாலாவுக்கு
கீர்த்தனாவும் காரணம் இல்லாமல் சிரிக்கவில்லை….
“தன் குடும்பமும்…வினோத் குடும்பமும்… சேர்ந்து இந்த மாதிரி வெளியில் சாப்பிடும் போது…கீர்த்தனா …இருக்கிற அத்தனையும் ஆர்டர் செய்வாள்… எல்லாவற்றிலும் ஒருவாய்..அல்லது டேஸ்ட் மட்டும் தான் செய்வாள்…. கீர்த்தனா… வினோத் டேஸ்ட் ஒரே மாதிரி இருக்கும் என்பதால்… அவள் ஆர்டர் செய்யும் அனைத்தும்… வினோத் வயிற்றுக்குள்ளே செல்லும்….. எனவே கீர்த்தனாவுடன் வெளியில் சென்றால்…. அவன் எதுவும் ஆர்டர் பண்ண மாட்டான்… இன்றும் அதே போல் அவனுக்கென்று அவன் எதுவும் சொல்ல வில்லை”
இதை நினைத்துச் சிரித்தாள் கீர்த்தனா…. இன்று அவளும் அதே மாதிரிதான் இருவருக்கும் பிடித்த வகைகளை சொல்லி இருந்தாள்….
இதை வினோத் சொல்ல….பாலா நிலைமைதான் சொல்ல முடியாத அளவிற்கு கவலைக்கிடமானது……..
“டேய் எங்கிருந்துடா வந்த எனக்கு ஆப்பு வைக்க” என்று நினைத்தவன் ஒன்றை மறந்தான்…
”பாலாதான்..அவர்களுக்கிடையே வந்தான் என்பதை”
கீர்த்தனாவைப் பார்த்து பாலா பகிரங்கமாக முறைக்க…. அதை வினோத்தும் கவனிக்காமல் இல்லை..
கீர்த்தி பாலாவின் முறைப்பு புரிந்தும்… கவனிக்காதவள் போல் வினோத்திடம்
“டேய் …..எப்போ பாரு என்கிட்டேயே பங்குக்கு வா.. என் தட்டுல இருந்து எடுத்தா மவனே கைய ஒடிச்சுடுவேன் “ என்று சொல்ல…
கவி.. ”அய்யோ வினோத் இது தெரியாம உங்க பக்கத்தில உக்கார்ந்துட்டேனே…. ” என்று போலிக் கலவரம் ஆக..
வினோத் சிந்துவிடம் “ டார்லி வாட் அபௌட் டூ ஷேர் தெ ஃபுட் வித் மீ” எனக் கேட்க
“அண்ணா…. கீர்த்திகா அக்கா கிட்ட கேளுங்க… நான் ஏற்கனவே கம்மியாத்தான் சொல்லி இருக்கேன் என்று கீர்த்திகாவை மாட்டி விட…
கவி..சிந்துவுக்கு ஹை பை கொடுத்துக் கொள்ள…..
கீர்த்திகாவிற்கோ அவன் கேட்பானோ என்று நினைக்க…
வினோத்தோ
“ஒகே….. நான் எனக்கு தனியாவே ஆர்டர் பண்ணிக் கொள்கிறேன்”
என்று சொல்லி கீர்த்திகாவின் எண்ணத்தில் மண் போட்டான்…
”கீர்த்தி…. நீ மட்டும் மீதி வை…. அப்புறம் இருக்கு….” என்று கீர்த்தியிடம் சொன்ன வினோத் அவள் சொன்ன ஐட்டங்களையே தனக்கும் சொல்ல… அவன் சொல்லி முடிக்கும் வரை காத்திருந்தான் பாலா…
இப்போது பாலா தன் வேலையைக் காட்டினான் …தான் சொன்ன வகைகளை எல்லாம் கேன்சல் செய்தான்…
”இது என்ன கூத்து…” என்றபடி கீர்த்தி பாலாவைப் பார்க்க…
”நீ எப்படியும் வச்சுடுவ… நான் அதில ஷேர் பண்ணிக்கிறேன்… வினோத் தான் சொல்லிட்டான்ல…..” என்று பாலா கீர்த்தியை பார்த்துக் கொண்டே சொல்ல…
“இதுங்க ரெண்டும் இதுக்கு முன்னாடி எங்கேயும் போனதில்லையா… இல்ல இவன் அவளைக் கவனிக்கவே இல்லையா….” என்று யோசனையில் வினோத் ஆழ்ந்தான்…..
கீர்த்தனாவுக்கு முதன் முதலாக பாலாவை சீண்டும் வாய்ப்புக் கிடைத்தது….
“என் சாப்பாடா…உனக்கு வேணும்” என்று மனதிற்குள் சொல்லியவள்
தன் சொன்ன வகைகளை எல்லாம் மாற்றினாள்… பாலவுக்கு பிடிக்காத மட்டன்… வகைகளாக…..
பாலாவிற்கு அவளின் நோக்கம் புரிய…. இப்போது எனக்கு வேண்டாம் என்று பின்வாங்க மனதும் வரவில்லை… வினோத்திற்கு பயந்தும்…. எங்கே மனைவி சாப்பாட்டில் கை வைத்து விடுவானோ!!! என்ற பயமும் வர அவன் சொல்ல வில்லை….
சிந்து.. ”ம்ம்ம்ம்ம் பாலா அண்ணா ….. கலக்குறீங்க…. நடத்துங்க.. நடத்துங்க…” என்று கிண்டல் செய்ய…
பாலா…சிந்துவை..”ஏண்டா… நீ வேற…. என் நெலம புரியாம….” என்று அடக்கினான்….
கீர்த்திகாவை மட்டும் பாலா அவஸ்தையாய்ப் பார்த்தான்…
அவளோ பாலாவை ஆச்சிர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
”இவன் மட்டன் சாப்பிட மாட்டான் என்ற காரணத்தாலே மதுவும் அதைச் சாப்பிட மாட்டாள்….”
இவனோ இப்போது கீர்த்திக்காக சாப்பிடுகிறான் என்ற நினைவில் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்…..
பாலாவின் காதல்…. வினோத்தின் பாசம்… கவியின் தோழமை…. என்று கீர்த்தியின் மேல் பொறாமையே வந்துவிடும் போல் இருந்தது…. கீர்த்திகாவிற்கு… இது எல்லாம் ஒரு காலத்தில் தான் அனுபவித்த காலம் ஞாபகம் வந்தது…
“ஆதியின் காதல்…மதுவின் தாய்மை கலந்த தோழமை…வினோத் அளவிற்கு இல்லை என்றாலும்…பாலாவும் அவள் மேல் கொஞ்சம் போல் அக்கறை காட்டுவான் அப்போது” என்று பழைய நினைவில் அவளையும் மீறி கண்கள் கசிவது போல் இருந்தது….
பாலா சாப்பிட முடியாமல் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கீர்த்தனாவிற்கு ஒருபுறம் பாவமாகத் தோன்றினாலும்….
”நானா அவன சாப்பிடச் சொன்னேன்?” என்று அவனைக் கண்டு கொள்ளாமல் சாப்பிட
கவிக்கு மட்டும் புரிந்தது…. தன் தோழி ஏதோ வில்லங்கம் செய்கிறாள் என்று… ஆனால் என்ன ஏது என்று தெரியவில்லை…
”இவ பட்டும் கூட அடங்கல போல” என்று மட்டும் நினைத்தவள்…. அதன் பிறகு தன் உணவில் மட்டும் கவனம் செலுத்தினான்…
வினோத் கீர்த்தனா, சிந்து, கவி இவர்களோடு பேசிக் கொண்டே… வம்பிழுத்துக் கொண்டே சாப்பிட்டான்…
கீர்த்திகாவை தங்களுடன் இழுத்து பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த கீர்த்தனா…. ஒன்றைக் கவனித்தாள்
அது… கீர்த்திகாவின் பார்வை வினோத் மேல் அவ்வப்போது சாய்வதை... அதை உணர்ந்தவளுக்கு முதலில் அது சாதரணமாகத் தோன்றினாலும்…. கொஞ்சம் உன்னிப்பாகக் கவனிக்க…. அவள் உணர்ந்தே பார்க்கிறாள் என்ற உண்மை புரிய….. சரி வினோத்தின் ரியாக்சன் என்ன என்று நினைத்து வினோத்தைக் கவனிக்க அவனோ கீர்த்திகாவை எல்லாம் கவனிக்கவில்லை… கவி மற்றும் சிந்துவோடு வாயாடுவதில் தான் குறியாக இருந்தான்.. எல்லவற்றையும் நோட் செய்தவள்.. அவளை விட்டுப்பிடிப்போம் என்று மனதோடு கூறி… கீர்த்திகாவை ”வாட்சபிள் வால்கிளாக்(watchable wall clock)“ லிஸ்ட்டில் சேர்த்தாள்…
அனைவரும் ஒருவழியாக அரட்டை அடித்து பின் சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமானர்…. பாலா மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தான்… அவனுக்கு நிற்கக் கூட முடியவில்லை….. வாமிட் வருவது போல் இருக்க…. யாரிடமும் ஒன்றும் சொல்ல முடியாமலும் தவித்தான்….
வீட்டுக்கு எப்போதடா போவோம் என்றிருந்தது…. உனக்கு தேவையாடா… இப்படிலாம் செஞ்சாத்தான் உன் மனசு அவளுக்கு புரியுமா என்ன… ராட்சசி பிடிக்காதுன்னு தெரிஞ்சே என்ன சாப்பிட வச்சுட்டா… என்று பற்றிக் கொண்டு வந்தது….
வெளியில் எதுவும் காட்டாமல்…. கீர்த்திகாவை வேறு அவள் வீட்டில் விட வேண்டும்….என்ன செய்வது என்று தவித்தவன்…. தன் சூழ்னிலை உணர்ந்து
வினோத்திடம்… கவியோடு …கீர்த்திகாவையும் வீட்டில் சேர்க்கும் வேலையை ஒப்படைத்து வினோத்திடம் ” கீர்த்தி பத்திரம் ” என்று ஒருமுறைக்கு இருமுறை சொல்லியபடி…. கீர்த்திகாவை வீட்டிற்கு சென்றதும் மறக்காமல் போன் செய்யுமாறு கூறி அனுப்பியவன்
கீர்த்தியையும்..சிந்துவையும்… வேகமாக இழுத்துக் கொண்டு தன் காரை நோக்கிச் சென்றான்…
கீர்த்திகாவை பாலா இத்தனை தூரம் பத்திரம் என்று தன்னிடம் சொன்னதையும்… அவளிடம் போன் செய்யுமாறு சொன்னதையும்… வினோத்தும் மனதில் குறித்துக் கொண்டான்….
கவியுடனும்….கீர்த்திகாவுடனும் பயணித்த வினோத்… கவியோடு அரட்டை அடித்தபடி வர… எரிச்சலின் உச்சத்திற்கே போனாள்…. கீர்த்திகா…. கவியை முதலில் இறக்கி விட்டவன்….. கீர்த்திகாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே காரை ஓட்டி வந்தான்…. எல்லார்கிட்டயும் வாயடிக்கிறான்….. என்கிட்ட மட்டும் பேஸ்ட் போட்டு ஒட்டின மாதிரி வருகிறான்…. என்று பொருமினாள் கீர்த்திகா…
கீர்த்திக்காவின் தங்கை திருமணத்திற்கு பின் அவளது குடும்பம் இங்கேயே தங்கி இருந்தது…… அவளது கிராமத்திற்குப் போகாமல்……. அவளது அப்பா அவர் தொழிலைக் கூட இங்கேயே இருந்து கவனித்துக் கொண்டார்.. ஏனென்றால்…. கீர்த்திகாவை அந்த கிராமம் ஏற்கனவே என்னாயிற்று…. ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்… என்று கேள்வியுடன் நோக்கும்.. இப்போது சின்னவள் திருமணம் முடிந்து அங்கே போனால்.. தன் மகளைக் கேள்வியாலும்..பார்வையாலும் கொன்றே விடுவார்கள் என்று இங்கேயே தங்க முடிவு செய்து அதைச் செயல்படுத்தவும் செய்து விட்டார்…. மகளின் வாழ்க்கையை நினைத்து மனதினுள்ளே ஆத்துப் போயிருந்தார் அவர்….
கீர்த்திகாவின் வீட்டில் அவளை இறக்கி விட்ட வினோத்….
”கீர்த்தி…” என்று தயங்கியவன் …ஏதோ சொல்ல வருவது போலும் ஆனால் சொல்லத் தோன்றாமலும் அவளைப் பார்த்தான்…
தயங்கி நின்ற அவனைப் பார்த்த கீர்த்திகா
“என்ன வினோத்…எதுவா இருந்தாலும் சொல்லுங்க” என்றவுடன்
அவள் சொன்ன வார்த்தையில் தைரியமான வினோத்
“கீர்த்தி … நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க …எங்க கீர்த்தனா கிட்ட கூட சொல்வேன்…. ஆனா உங்க கிட்ட சொல்றதா வேண்டாமா என்று தெரியவில்லை…. பொண்ணுங்க வீட்ட விட்டு போகும் போது நெற்றியல பொட்டு வைக்க வேண்டும்…. நெற்றியில ரெண்டு புருவத்துக்கு மத்தியில இருக்கிற பாயின்ட் யாராலும் வசியப் படுத்தக் கூடியது…. அறிவியல் பூர்வமா, மத ரீதியா பல காரணம் இருந்தாலும் பொண்ணுங்க புருவ மத்தியில பொட்டு வைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்… நீங்க உங்க ஆதிய… இந்த பொட்டு கூட சம்பந்தப்படுத்தாம… நான் சொன்ன விசயத்த மட்டும் மனசுல வச்சு உங்கள மாத்தப் பாருங்க… உடனே இல்லைனாலும்…அட்லீஸ்ட் கொஞ்சம் டிரை பண்ணப் பாருங்க” என்று கூறியவன் அவள் ஒன்றும் சொல்லாமல் நிற்பதைப் பார்த்தவன்…’
“அப்பா…அடி வாங்கல நாம….டேய் வினோச் செல்லம்…. அவ அப்படியே நிக்கட்டும்…. இந்த கேப்ல எஸ்கேப் ஆகிக்க” என்றபடி விடைபெறக் கூடத் தோன்றாமல் காரில் ஏறிப் பறந்தான்…
அவன் கூறிய வார்த்தைகளின் திகைப்பிலே உள்ளே நுழைந்தவள்…. கண்ணாடியில் தன் முகம் பார்க்க…. அதில் பொட்டில்லா தன் முகம் ஆதியை நினைவு படுத்த.. அவன் அணிவித்த மாங்கல்யத்தை அவனது கையாலே அறுத்து எறிந்த காட்சி நினைவில் வர…… அதே நேரம்…. மதுவிடம் அவன் இவளுக்காக வாங்கிய சத்தியமும் ஞாபகம் வர….
“அவன் சொன்ன வார்த்தைகள்… இன்னும் காதில் எதிரொலித்தது…
“மது….. நீ எனக்காக….. என் கீர்த்திக்காக ஒரு ப்ராமிஸ் பண்ணிக்கொடு…… இவளுக்கு நீ தான் இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்…… உன் ஃப்ரெண்ட் நான் சொன்னா பண்ண மாட்டா…. செய்ய மாட்டா… ஆனால் நீ சொன்னால் அவள் உன் வார்த்தையை மீற மாட்டாள்…. அதனால்தான் அவளிடம் கூட கேட்காமல் உன்னிடம் நம்பிக்கை வைத்து கேட்கிறேன்…. என்று அவன் கடைசி நிமிடங்களில் மதுவிடம் கேட்ட வார்த்தைகள் எதிரொலித்தன….
”என் கீர்த்திய….. அவ…. வேற கோலத்தில என்னால ஆகக் கூடாது…. அதுக்கு நான் காரணம் ஆகக் கூடாது …. ” அவன் புலம்பல்கள் அவள் மனதில் ரணமாய் வலித்தது
அவன் வார்த்தைகளை மறுக்க முடியாமல் மது சத்தியம் செய்ததும்… அதன் காரணமாக மதுவோடு கீர்த்தி பேசாமல் இருந்ததும்… மதுவின் துன்பம் தாளாத பாலா அவளிடம் பேசி… அவளை சமாதானம் செய்து… அவளை மதுவோடு பேச வைத்ததும் மீண்டும் அவளை பார்க்க வர நினைக்கையில் அவள் காணாமல் போனது… என்று எல்லாம் அவளைச் சுழற்றி அடிக்க…
மனம் தவிக்க ஆரம்பித்தாள் கீர்த்திகா…….
----------------
பாலாவால் காரை ஓட்டவே முடியவில்லை…… கீர்த்தி சற்று பயந்து கூட போய் விட்டாள்….
“பாலா என்ன பண்ணுது” என்று தவிப்பாய்ப் பார்க்க
அவளின் அக்மார்க்கான ரொமான்ஸ் லுக் …அதுதான் முறைப்பை அவளுக்கு காட்டியவன்….. பேசாமல் காரை ஓட்டியபடி வந்தான்….
அவன் முறைப்பை எல்லாம் தன் உதட்டுச் சுளித்தலில் தள்ளியவள்… ஒண்ணும் பயப்படுற மாதிரி இல்ல போல …என்று தைரியமானவள்… சிந்துவிடம் தன் அரட்டைக் கச்சேரியை தொடர்ந்தாள்…..
ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் வாமிட்டை கண்ட்ரோல் பண்ண முடியாமல் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன்….
இறங்கி எடுக்க ஆரம்பித்தான்…
பதறிவிட்டாள் கீர்த்தி… காரினுள் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அவனருகில் போக
பட்டென்று அவளைத் தள்ளி விட்டவன்
”தள்ளிப் போடி …. தெரிஞ்சுதான பண்ணுன… இப்போ எதுக்கு பதறுற…. தண்ணிய எடுத்துட்டு வந்துட்டா…பெரிய இவளாட்டம்..” எனும் போதே மறுபடியும் எடுக்க…
அவனின் கோபத்தில் சிந்து ஒன்றும் புரியாமல்… அவன் கீர்த்தியை திட்டுவதையும் பொறுக்க முடியாமல்
“என்னக்கா ஆச்சு…ஏன் அண்ணா திட்டறாங்க உங்கள “ என்று பாலாவின் கோபத்தில் பயந்து மிரண்ட விழிகளுடன் கேட்க…..
”ஓண்ணும் இல்ல… சிந்து….. நீ போய்க் காரில் உட்கார்” என்று அவளை அனுப்பப் பார்க்க….
பாலாவோ “சிந்து… அந்த வாட்டர் பாட்டிலை வாங்கு” என்று சொல்லி .சிந்துவை அவர்கள் இடையில் நிறுத்த …. கீர்த்தி முகம் சுருங்கி தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் சிந்துவிடம்…..
கீர்த்தியின் முகம் சுணங்குவதை …பார்த்த சிந்து ஒரு மாதிரி கலவரம் ஆகி விட்டாள்….
இருவரையும் மாறி மாறி பார்த்தபடியே இருந்தாள்….. மொத்த சாப்பாட்டையும் வெளியேற்றிய பின்னரே நார்மலானது அவனுக்கு…… தண்ணீரில் வாய் கொப்பளித்து… தன்னை அலம்பியவன் காரில் ஏறி உட்கார்ந்தான்…. வயிறு மொத்தமும் காலியாகி இருந்தது…
தன் நிதானத்திற்கு வந்து தன்னை நிலைப்படுத்தி பின் …காரை எடுக்கப் போக…
“நான் ட்ரைவ் பண்ணவா பாலா” என்றவளின் வார்த்தைகளை அலட்சியம் செய்தவனாய் காரை எடுத்தான்…
ஓரளவு நார்மலான பாலாவை பார்த்த கீர்த்தி அவனைச் சீண்ட ஆரம்பித்தாள்…
”சிந்து ….. இன்னைக்கு உங்க அண்ணாக்கு ஒண்ணு தெரிஞ்சுருக்கும்… பிடிக்காத… ஒத்து வராத விசயத்தை எல்லாம் அடுத்தவங்களுக்காக செய்யணும்னு நினைத்தால்.. என்ன ஆகும்னு…..” என்று சொல்ல…
புரியாமல் கேட்டாள் சிந்து….
”இப்போ அண்ணா.. என்ன பிடிக்காத விசயத்த செஞ்சாங்க”
கீர்த்தியோ… “அது உன் அண்ணாக்கு புரியும்…” என்று அவனுக்கு நேராய் பார்த்து… உருத்து விழித்த அவன் கண்களை தைரியமாக சந்தித்து இதைச் சொன்னாள் கீர்த்தி
”இவ இப்போலாம் ரொம்ப பேசுறா… எத… எத கூட சம்பந்தபடுத்தி பேசுறா…. எகத்தாளமா வேற…..” என்று நினைத்தவன்…. சீண்டலாய் பதிலடியும் கொடுத்தான்
”பாப்பா……… உன் அக்காக்கு அடிக்கடி …..என்கிட்ட இருந்து பனிஸ்மெண்ட் வாங்கனும் போல இருக்கு ….. பார்த்து பேசச் சொல்லு…. அப்புறம் பனிஷ்மெண்ட் சிவியராகப் போகுது” என்று அவளை நக்கலாகப் பார்த்து கண் சிமிட்டியபடி சிந்துவிடம் கூற
கீர்த்தி முகம் சிவந்தவளாய்…. சின்னப் பிள்ளைக்கிட்ட பேசுற பேச்சைப் பாரு’… என்று மனதில் நொடித்தவளாய் சாலையில் கவனம் செலுத்துவது போல் வெளியே பார்க்க ஆரம்பித்தாள்…
சிந்துவின் கலக்கம் அப்போதுதான் போனது….பாலா அண்ணாக்கு உண்மையிலேயே கோபம் இல்லை போல….. வாமிட் வந்ததில் கோபத்தில் பேசி இருக்கிறார் என்று நினைத்தவள்…
பாலாவைக் கிண்டல் செய்யத் தொடங்கினாள்…..
”ஏன் அண்ணா.. நாங்க எல்லாரும் அக்கா வாமிட் எடுப்பாங்களானு எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருக்கோம்……அவங்களுக்கு பதில் நீங்க எடுத்திட்டு இருக்கீங்க“ போடு போட
’சின்னப் பிள்ளை அவள்’ என்று இவளைப் போய் நினைத்தோமே என்று சிந்துவை முறைத்தாள்
பாலா….காரை நிறுத்தியே விட்டான்…..
“அம்மா தாயே…. என்னை விட்டுடு… உன் வாய இங்க திறந்த மாதிரி எங்கயும் திறந்திடாதா… என் மானம் சும்மா ஃப்ளைட்ல கூட இல்ல ஜெட்ல ஏறிப் போகும் போல….. என்று சொல்ல…
கீர்த்தி தான் சிந்துவைத் தாளித்த படி வந்தாள்..
“சின்னப் பொண்ணாவா பேசுற…. இதுதான் உனக்கு ஸ்கூல்ல சொல்லித் தராங்களா இதுல உனக்கு பாப்பானு வேற செல்லம்….” என்று பாலாவிற்கும் வேறு திட்டு…
அவளின் திட்டுகளை எல்லாம் அப்பாவி போல் வாங்கியபடி வந்தவள்…..
இறங்கி….
பாலாவின் காதில் மட்டும்…
“அவங்க மட்டும் ராகவ் அங்கிளையும்..மைதிலி ஆன்ட்டியயும் எப்படி ஓட்டுவாங்க அது தப்பு இல்லையாம்…. நான் கேட்டது தப்பாம்” என்று சொல்ல…. அவள் சொன்னது கீர்த்தி காதிலும் விழ….
“அய்யோ இவ எதுக்கு இவ அப்பா அம்மாவ இழுக்கறா…. டேமத் திறக்கப் போறா நம்ம ஆளு” என்று இவன் நினைக்க
அவளோ “அடிங்க……எனக்கேவா….” என்றபடி துரத்த அவளுக்கு அழகு காட்டியபடி அவள் கையில் சிக்காமல் ஓடியே போனாள் சிந்து….
அவள் தன் கையில் சிக்காமல் ஓடுவதை பார்த்து கலகலப்பாய்ச் சிரித்த கீர்த்தி……
“சேம் சைட் கோல் போடுறா…பாவி” என்ற பாலாவிடம் சொல்லியபடி வீட்டினுள் நுழைந்தாள்….
அவள் மனம் விட்டுச் சிரித்த சிரிப்பில் பாலாவும் நிம்மதி அடைந்தான்..
பாலா அசதியில் சற்று கண் அமர…. கீர்த்தி மட்டும் யோசனையில் இருந்தாள்….
அது கீர்த்திகாவின் பார்வை மாற்றம்….
அரைமணி நேரம் யோசித்தவள்…. முடியாமல்…. சரி பாலாவிடமே கேட்டு விடுவோம் என்று அவன் கட்டிலில் ஏறி உறங்கிக் கொண்டிருந்தவனின் அருகில் ஏறி அமர்ந்தாள்…..
”பாலா….பாலா” என்று அவள் எழுப்பிய விதத்தில் சற்று பதட்டத்துடன் எழுந்தவன்.. தன் அருகில் அமர்ந்திருந்த கீர்த்தியை பார்த்து நம்ப முடியாமல் விழித்தான்….
“கீர்த்தி வீட்டில் தான் அவர்கள் இருவரும் ஒரே கட்டிலில் உறங்குவர்…. இங்கு பாலா வற்புறுத்த வில்லை… தானாக அவள் வர வேண்டும்… தன் உரிமைகளை அவள் எடுக்க வேண்டும் என்று நினைத்த காரணத்தால்…
அதனால் அருகில் அமர்ந்திருந்த மனைவியை விழித்தபடி பார்த்து இருந்தவனிடம்…
அவன் விழிப்பதையும் யோசிக்காமல்….. தன்னையும் உணராமல்…. கீர்த்திகா பார்வையினால் வந்த சந்தேகம் மட்டும் மனதில் இருக்க….அதை அவனிடம் சொல்ல
பாலாவும் தங்களைப் பற்றி மறந்து விட்டு தீவிரமானான்
“உண்மையா கீர்த்தி….. நீ சொல்வது… ஆனா.. என்னால நம்ப முடிய வில்லை…. ….அவங்க அப்பா …அவ அம்மா இறந்த பின்னால் திருமணம் செய்து விட்டார்..என்ற ஒரே காரணத்திற்காக தள்ளி வைத்தவள்….. இன்று வரை பேசாமல் இருக்கிறாள்….என்று கூறி கீர்த்தியை திகைக்க வைத்தான்…..
”ஆனா பாலா அவ பார்த்தா.. அதுல ஒரு ஆர்வம் இருந்துச்சு…. அதுல ஏதோ இருக்கு பார்க்கலாம்….ரொம்ப நாள் மறச்சு வைக்க முடியதுல்ல…” என்றவளிடம்
பாலாவும்…. இப்போது .ஒரு மாதிரியான குரலில்
“ஆமா… கீர்த்தி… ரொம்ப நாள் மறச்சு வைக்க முடியாது….” என்று கூற… அவனின் குரல் மாற்றம் அவளுக்கு வித்தியாசத்தை உணர்த்த…. சட்டென்று அவனைப் பார்க்க அவனின் பார்வை அவளுள் பிரளயத்தை உருவாக்க…. இப்போதுதான் தன் நிலை உணர்ந்தாள்…. மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்…
”பெட்ல ஏறி… இவன் பக்கத்துல உட்கார்ந்தே.. தன் பார்வையில் தன் சம்மத்துக்காக ஏங்கி நிற்பவனிடம் இன்னொரு பெண்ணின் காதல் பார்வை மாட்டாதா என்று அவனிடமே கேள்வி வேறு…. கீர்த்தி…. நீ ஓவர் ஸ்மார்ட் தான்…” என்று தன்னையே கிண்டல் செய்தவள்…. தன்னை சமாளிக்கும் விதமாக… கொஞ்சம் கெத்தாக தொணியை மாற்றியவள்
“சரி சரி இதுதான் என் சந்தேகம்…… நீங்களும் கொஞ்சம் இந்த விசயத்தில் கவனம் வச்சுக்கங்க” என்று கறாராக சொல்லியபடி எழ
அவள் தன்னைத் தானே சமாளிக்கும் விதத்தை புரிந்து நக்கலாக தலைசாய்த்து பார்த்தான் பாலா…
“ஐயோ… நாம முறைத்து பார்த்தாலே… 70 MM ஃபிலிம் ஓட்டுவான்… இப்போ சினிமாஸ்கோப் ஃபிலிமே காட்டுவானே” என்று நினைத்து கட்டிலை விட்டு இறங்க நினைக்க
இப்போது அவனது கரங்களில் அவள் கரம் அடைக்கலமாயிருந்தது.
அவன் தளர்வாகத்தான் பிடித்திருந்தான்.. எடுத்தால் வந்துவிடும்…. அவளுக்குதான் அதை விடுவிக்க மனமில்லை….. அவஸ்தையாய் அவனை நோக்க… அவன் கண்களில் பெரும் காதல் தெரிய… அதில் தாபமும் வழிந்தோட… அதில் தன்னைத் தொலைத்தவளாய் எழும் எண்ணம் இல்லாமல் அவனின் தோள்களிலேயே துவளப் போனவளின் மனதில்………. மதுவின் நினைவு எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை…. அடிபட்ட உணர்வில் சட்டென்று பின்வாங்கினாள் கீர்த்தனா… உணர்ச்சிகள் எல்லாம் சுத்தமாய் வடிய…… அவளுக்கே அவளைப் பிடிக்காமல் கட்டிலில் இருந்து இறங்கி… முகம் வெளுத்தபடி… வெளியேறினாள் கீர்த்தி…
பாலா… ஏதும் சொல்ல வில்லை… தடுக்கவும் இல்லை அவள் நிலை தெரியாதவனா….இல்லை புரியாதவனா…
”கீது நீ என்னிடம் இன்னைக்கு உன்னை தெரியாமல்..உணராமல் உன் உரிமையில் என் அருகில் வந்தாய்…. இதேபோல் உன் உணர்வோடு…... உன் உறவை… உன் உரிமையை என்னிடம் நீயாகவே நிலை நாட்டும் நாள் வெகு தூரம் இல்லை….”
என்று தன் மனதிற்குள்ளாகச் சொல்லியபடி விட்டத்தை வெறித்தபடி பார்த்து படுத்திருந்தவனை….. விதி கூட பரிதாபமாக நோக்கியது... அவனைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாமா என்று கூட நினைத்தது
Comments