top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே!! என் உறவே!!! - 33

அத்தியாயம் 33:

கவியின் வரவுக்குப் பிறகு கீர்த்தி …. தன் மனதை அவளிடம் கொட்டிய பிறகு….பழைய கீர்த்தியாக அவளிடம் மாற்றங்கள் வரத் தொடங்கி இருந்தன…….பாலா..முதல் அருந்ததி….சிந்து வரை உணர்ந்திருந்தனர்….

கவியின் வழக்கமான பேச்சு…..குறும்பான விசயங்கள் கீர்த்தியை தனிமையில் இருந்து முற்றிலுமாக வெளிக் கொணர்ந்து கொண்டிருந்தது…

அதிலும் சிந்துவும்… கவியும்…. சேர்ந்தால்….. பாலா - கீர்த்தியின் நிலை கேட்க வேண்டாம்…. பாலா கூட தப்பித்து விடுவான் … கீர்த்திதான் மாட்டுவாள்…. கவி மட்டும் இருந்தால் கூட அவள் வாயை அடைத்து விடுவாள்… சிந்து அருகில் இருந்தால்…. அது கூட முடியாது…… முகம் சிவக்க சிவக்க இருவரும் திணறடிப்பர்…

சிந்துவை….சின்னப் பெண்…. என்று திட்டிக் கூட பார்த்தாகி விட்டது..அடங்க வில்லை அவளும்….

-----------------------

காலையில் அலுவலகத்தினுள்… நுழைந்த கீர்த்தியிடம்…. வழக்கம் போல் வம்பு வளர்க்க வந்தாள்…கவி….

“என்னடி உன் ஆளக் காணோம்… தனியா வர்ற “ எனும்போதே காரை பார்க் செய்து வந்த பாலா உள்ளே நுழைய

“அதானே மனுசன் விட்டுவிடுவாரா உன்ன“ எனும் போதே…..கீர்த்தி முறைக்க…..

“ஹலோ மேடம்….இந்த ரொமான்ஸ் லுக்க எல்லாம்… அதோ வர்றாரே நம்ம பாஸ்… அவர்கிட்ட காட்டு…. எவ்வளவுநாளும் அவர் தாங்குவாரு….” என பாலாவைப் பார்த்தபடி சொல்ல….

பாலாவும் அவர்களை பார்த்து…பார்க்காதது போல் கடந்து போனான்……

”கீர்த்தி காலையிலேயே மாட்டிட்டா போல கவிகிட்ட……. அவ என்ன சொன்னாலும் என்ன வேற வந்து தாளிப்பா….என் பொண்டாட்டி…” என்று மனதினுள் நினைத்தவனாய்…தனது அறைக்குள் நுழைந்தான்……….

”ஹேய் போடி காலையிலேயே வந்துட்டா…. வேலையப் பாரு “ என்று முறைத்தவளிடம்….

“ஓ…. அம்மணி கம்பெனி ஓனர் இல்ல…தெரியாம பேசிட்டேனே….” என்று இழுத்த கவியை.

“ஏண்டி படுத்தற… நீ வேலையப் பாரு….. பார்க்காட்டி போ…. எனக்கு என்ன வந்தது“ என்று கூறிய கீர்த்தி தன் கம்ப்யூட்டரில் பார்வையை பதிக்க….

கவியும் தன் வேலைகளில் கவனத்தை திருப்பினாள்….

கிட்டத்தட்ட 1 மணி நேரம் கழிந்து…கீர்த்திக்கு போன் செய்தான் பாலா…. அவள் MD யாக…

கீர்த்தி மற்றும் கேசவன் அவனது அறையில் இருந்தனர்…

கீர்த்தியிடம் பாலா….

“நீங்க …டீம் லீட்ல இருந்து பண்ணிய ப்ரோஜெக்ட்…..கம்ப்ளீட் டெலிவ்ரி நெக்ஸ்ட் மன்ந்தோட முடியுது…. சோ.. இனி ரிசோர்ஸ் எல்லாம் ரிலீஸ் பண்ணிடலாமா….. ஏனென்றால்… அப் கம்மிங் ப்ரஜெக்ட்டுக்கு ரிசோர்ஸ் அலோகேசன் பண்ணனும்” என்று கேட்க…..

கேசவனிடம் திரும்பிய பாலா அவனிடம்…

“இது பெரிய ப்ராஜெக்ட் கேசவ்…. டைம் அண்ட் ரிசோர்ஸ் கோட் பண்ணிக் கொடுத்துட்டேன்…. நீங்க கீர்த்தியோட டீம்ல இருந்து இந்த ப்ராஜெக்டுக்கு தேவையான் ரீசோர்ஸ செலெக்ட் பண்ணிட்டு……அதன் பிறகு ரெக்ரூட்மெண்ட் டீம் க்கு மெயில் அனுப்புங்க” என்றவன்….

”கீர்த்தி நீங்களும் செக் பண்ணிட்டு…. ரிலீஸ் பண்ணப் போறவங்கள எனக்கும் கேசவனுக்கும் மெயில் பண்ணுங்க” என்றபடி…. தன் வேலையில் கவனம் செலுத்த…..

கேசவன் கீர்த்தியைப் பார்த்து ஏதோ சொல்லச் சொல்ல

கீர்த்தியும் ….

”பாலா….” என்றாள்

”என்ன… “ பார்வையால் கேட்டபடி அவளிடம் திரும்பினான்….

”இந்த ப்ராஜெக்ட் ஆரம்பித்து நெக்ஸ்ட் மந்தோட 1 இயர் ஆகப் போகுது… சோ டீம் மெம்பெர்ஸ்….. ப்ராஜெக்ட் சக்ஸசுக்கு டீம் பார்ட்டி கேட்கிறார்கள்…” என்று கூற….

அதே நேரம் கேசவனும்

”ஆமாம் சார்…… என்னோட டீம் மெம்பெர்ஸும்” எனக் கூற

”ஓ என்று சொன்னபடி… சில வினாடிகள் யோசித்துவிட்டு… ஒகே…. என்றவன்… தன் குறிப்பில் அந்த ப்ராஜெக்ட் ஆரம்பித்த நாளை நோட் செய்தவன்…. இந்த வருடம் அதே நாளில் ட்ரீட்டையும் முடிவு செய்தான்….”

அவன் அந்த அலுவலகத்தின் MD யாக மட்டுமே அப்போது இருந்ததால் அந்த நாள் தனது மனைவியின் பிறந்த நாள் என்பதை மறந்து விட்டான் போல் பாலா….

கீர்த்திக்கு அது தனது பிறந்த நாள்…தன் பெற்றோரின் திருமண நாள் என்பதால் திகைத்தாள்…. ஆனால் கேசவன் இருந்த்தால் வேறு எதுவும் சொல்லாமல் வெளியே வந்தாள்….. தேதியை மாற்றவும் இயலாமல் அனைவருக்கும் மெயில் வேறு அனுப்பப் பட்டுவிட்டது….கீர்த்தியும் அத்துடன் அந்த விசயத்தை விட்டு விட்டாள்…

அன்றுதான் ஞாபகம் இல்லாமல் போனது பாலாவுக்கு…..அது கூடத் தவறில்லை… ஆனால் அவளது பிறந்த நாள் அன்றும் அவன் மறந்ததுதான் அவன் நேரம்….. வேறென்ன சொல்ல……..

----------------------

முக்கியமான நாள் அன்று பாலாவிற்கு….. அந்த பெரிய ப்ராஜெக்ட் ப்ரோபோசல் இன்று எழுத்து மூலம் கன்ஃபார்ம் ஆகும் நாள்… ஒரு ராசியான் கோட் வைத்திருப்பான் இந்த மாதிரியான தினங்களில் அணிய…. இது ஆதியின் பழக்கம்…. அவனோடு பழகி பாலாவிற்கும் தொற்றிக் கொண்டு விட்டது….

குளித்து விட்டு வெற்று மார்புடன் வெறும் துண்டுடன் குளியலறையில் இருந்து வந்தவன்….. அந்த கோட்டைத் தேட….. காணவில்லை… பொறுமையாக மறுபடியும் தேட…

ஆனாலும் கண்ணில் பட வில்லை…..

“கீர்த்தி” என்று கத்தினான்…

கீழே இருந்த அருந்த்தி…

“என்னாச்சு இவனுக்கு…ஏன் இப்படிக் கத்துறான்…போய் பாரும்மா “ என்று தன் மருமகளை மேலே அனுப்பினாள்…

கீர்த்தியும் அதே நினைவில் வேகமாக உள்ளே நுழைந்தாள் …..

உள்ளே நுழைந்தவள்… அவன் நின்ற கோலம் பார்த்து …கொஞ்ச நாளா அமைதியா இருக்கிறானே என்று நினைத்திருந்தால்.. மீண்டும் ஆரம்பித்து விட்டானோ… என்று அவன் அருகே செல்ல தயங்கியபடி நிற்க…

‘’கீர்த்தி இன்னைக்கு ….அந்த ப்ராஜெக்ட் ரிட்டர்ன்ல சைன் பன்ன்னும்… கிளைண்ட் வந்திருக்காங்க…. இந்த மாதிரி டேஸ்ல நான் ஒரு ராசியான் கோட் தான் போடுவேன்…. எல்லாம் இந்த ஆதியால் வந்தது…பழக்கப் படுத்திட்டு போய்ட்டான்… இப்போ அத காணோம்… நீ எங்கேயாவது மாற்றி வைத்தாயா..” என்று சீரியஸாக பேச…

அவன் தீவிரத்தில் கீர்த்தியும் நம்பி உள்ளே வந்தாள்.

அவள் அருகே வந்தாளா இல்லையா.. என்று கூட கவனிக்காமல் திரும்பி தன் தேடுதலை தொடர்ந்தான்……..

அவன் அருகில் சஞ்சலத்துடன் வந்தவள்….

‘தள்ளிக்கங்க நான் பார்க்கிறேன்..என்ன கலர்” என்றபடி அவள் தேட ஆரம்பிக்க

”அதோட பேண்ட் கீழ இருந்துச்சு.. ‘ என்றபடி குனிந்து கீழே எடுக்கப் போக…. கீர்த்தியின் மேல் அவன் வெற்று மேனி தீண்டியது.. அதில் அவள் தடுமாறினாலும்…. வெளியில் நிதானமாக இருப்பது போல் தேடிக் கொண்டிருந்தாள்…. அதை அவன் உணர்ந்தாலும்…. சகஜமாக… அவளின் மேல் தன் தீண்டலை ரசித்தவாறு….. ஏதோ பாடலை ஹம் செய்யத் தொடங்கினான்….

கூகூஉ குக்குகூஉ…

வாய்விட்டுப் பாடினான்…..

இப்போது விசிலடித்தான்.. அதன் முதல் வரியை…

சங்கமத்த நினைக்குது… என்று வாய்விட்டுப் பாடினான்…அதன் பிறகு சில வரிகள்..ஹம்… விசில்..வார்த்தை என்று மாறி மாறி வந்தன..

கீர்த்திக்கோ ஏகக் கடுப்பு

”இவனுக்கு வேற வேலை இல்ல… ஆரம்ப வரியையும் பாட மாட்டான்.. தனக்குத் தேவையான…என்னை இம்சப் படுத்தற வரியை மட்டும் பாடிட்டு… அவன் பாட்டுக்கு போய்டுவான்… நான் தான் அன்னைக்கு முழுதும்… அது என்ன பாடல்…பாடல்னு நெட்ல தேடி மண்ட காயனும்…. பாடுறதுன்னா… ஒழுங்கா… ஃப்ர்ஸ்ட் லைன்ல இருந்து பாட வேண்டியதுதானே..” என்று நினைக்கும் போதே அவள் தேடிய கோட் கிடைக்க அவனிடம் நீட்டினாள்….

”தேங்ஸ் பேபி…” என்றபடி தன் வேலையத் தொடர்ந்தான்… வேறு எதுவும் செய்யாமல்..

ஆனாலும் பாடுவதை நிறுத்தாமல்…

கோட்டைக் கையில் கொடுத்த அவளைப் பார்த்தபடியே

“உன்னைக் கரை சேர்க்காமல் எந்தன் அலை ஓயாது…..”

“காமன் கனை ஏவல் எனைக் …..

காவல் மீறத் தூண்டுதே

என்று கண் சிமிட்டிப் பாட..

சட்டென்று வெளியேறினாள்…… ஆனால் அவன் பாடல் வரிகள் மட்டும் அவளைத் தொடர்ந்து அவளை இம்சையில் தள்ளின…. ஆனால் ஃபுல் மூடோட இருந்தான்… நம்மகிட்ட .ஒண்ணும் வம்பு பண்ண வில்லை அதுவும் அந்தக் கோலத்தில்….ஏன்?…. என்ற மாபெரும் சந்தேகமும் கீர்த்திக்குத் தோன்றியது… அதை அவனிடமா…கேட்க முடியும்.. இவன புரிஞ்சுக்கவே முடியலடா சாமி… என்றவளிடம்…. இப்போ அவன் உன்ன வம்பு பண்ணலைனு உனக்கு வருத்தமா?…உன்னக் கூடத்தான் எனக்கு புரிஞ்சுக்க முடியல கீர்த்தி என்று மனசாட்சி அவளுக்கு பதில் கவுண்டர் கொடுக்க …. அவளாகவே அவளுக்குள் அசடு வழிந்தாள் கீர்த்தி

காரில் அலுவலகம் போகும் போது கூட இதே வரிகளை அவன் பாட முறைத்த படியே வந்தாள்….

இறங்கப் போகும் முன்

அவளிடம்….. ”என்ன கீது மேடம் ரொமான்ஸ் சீன் எதிபார்த்து ஏமாந்திட்டீங்களா… இன்னைக்கு காலைல” என்று வேண்டுமென்றே வெறுப்பேற்ற…

“உங்களுக்கு… பாவம்னு கோட் எடுத்துக் கொடுக்க வந்தேன்ல…. எனக்கு வேணும்…” என்றபடி இறங்க

“என்ன பேபி வேணும்…. நீ கேட்டா நான் தர மாட்டேனா சொல்வேன்: என்று சீண்ட

“உங்கள எல்லாம் திருத்த என்னால முடியாது….. நான் போறேன்” என்றவளிடம் கோபத்தை விட நாணம்தான் இருந்தது……

அதைப் புரிந்த பாலா

”என்னடா என் பொண்டாட்டி ஃபுல் ஃபார்ம்ல இருந்திருப்பா போல மிஸ் பண்ணிட்டோமோ…“ என்று உண்மையாக வருந்தியவன்….அன்று வியாழக்கிழமை என்பதால்…. கீர்த்தி வீட்டில் அவளைப் பார்த்துக் கொள்வோம் என்று சந்தோசமாக கிளைண்ட் மீட்டிங்கிற்காக சந்திக்க இருந்த ஹோட்டலுக்கு காரைத் திருப்பினான்…

-----

கீர்த்தி நெட்டில் கூகுளில் எப்படித் தேடிப் பார்த்தாலும் அந்த பாடல் கிடைக்காமல் போக…..எரிச்சலுடன் உட்கார்ந்திருந்தாள்….

அந்த நேரம் கவியும் அவள் இடத்திற்கு வர….

“என்னடி… ஒவர் டென்சனா இருக்க…… என்னாச்சு….. பாலா வரலேன்னா….”

”கவி……” என்று அவளை முறைக்க நினைத்தவள்…. சட்டென்று முகத்தை மாற்றிக் கொண்டு…. கொஞ்சம் உற்சாகமாக..தோழியை தாஜா செய்தபடி

”கவி எனக்கு ஒரு பாட்டு மிடில் லைன் தான் தெரியுது….முதல் வரி என்னனே தெரியல….. நான் சொல்றேன்… உனக்குத் தெரியுதானு பார்க்கறியா…..” என்ற தோழியை ஒரு மாதிரியாகப் பார்த்தாள் கவி..

“ஏண்டி ….இதுதான் உன் டென்சனுக்கு காரணமா..என்று கேட்க…..விழிகளில் வேண்டுமென்றே அப்பாவித்தனத்தை தேக்கியபடி… தலையை ஆட்டினாள் கீர்த்தி….

“நல்லா வருவடி நீ.. சொல்லித் தொலை…” என்று கேட்டவளிடம்…. பாலா காலையில் பாடிய வரிகளை பாடிக் காட்டினாள்…….

அவள் சொன்ன வரிகளைக் கேட்டவள்.. இது பாலாவின் திருவிளையாடல் என்று அப்பட்டமாக புரிய…..

“ஏண்டி… அது எப்டி…. இந்த வரிகள் மட்டும் தெரியும் கீர்த்தி…” தெரிந்தும் தோழியின் வாயைக் கிளற.. விழித்தாள் கீர்த்தி…. எங்கே வாய் விட்டு விடுவோமோ என்று

“சரி சரி நீ போ… நானே தேடிக்கறேன்” என்று நழுவப் பார்க்க….

”ரொம்ப பண்ணாதடி…பாலா தான பாடினது…. உன்ன நல்லா சுத்த வைக்கிறார்டி…. அது மட்டும் நல்லா தெரியுது” என்று கிண்டல் செய்ய முறைத்தாள் கீர்த்தி….

“பாட்டை மட்டும் கண்டுபிடிச்சு சொல்லு….. தேவையில்லாதத பேசாத….” என்க….

“சரி…அப்போ நான் போறேன் ‘ என்று கவியும் முறுக்க….

“செல்லம்ஸ்ல.. உன் கீர்த்திக்கு ஹெல்ப் பண்ண மாட்டியா………’ என்று கெஞ்சல் + கொஞ்சலில் இறங்க…….

இந்த கொஞ்சலை எல்லாம் பாலாகிட்ட காட்டி இருந்தா….அவர் ஏன் உன்ன இப்படி தேட விடப் போறார்……..இவ்வளவு என்கிட்ட கேக்குறவ… அவர்கிட்டயே கேக்க வேண்டியதுதானே என்று சொல்ல….

“அது தெரியாமத்தான் உன்கிட்ட வந்து நிக்கறேன்… ஏண்டி நீ வேற உன் பங்குக்கு என்ன போட்டுப் பாக்காத…..ஒழுங்கா சொன்ன வேலையை மட்டும் பாரு…..”

ஒருவாறாக ..இருவரும் சமாதானாமாகி … மீண்டும் கூகுளில் அலசிய அலசலில் பாடல் கிடைக்க….

ஆளூக்கொரு ஏர் போனில் அதன் வரிகளை கேட்க ஆரம்பித்தனர்……

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது கூகூ.. குக்குகூகூ கூகூ என கூவும் குயில் சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும் செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது கூகூ.. குக்குகூகூ கூகூ என கூவும் குயில் சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும் செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

முத்தம் இடும் மாலை வேளை மூடு விழா நாடகமோ நித்தம் இதழ் தேடும் நேரம் நாணம் எனும் நோய் வருமோ பூமாலை சூடாது பாய் தேட கூடாது எல்லை தனை தாண்டாது பிள்லை என தாலாட்டு மஞ்சள் தரும் நாள் கூறு வஞ்சம் இல்லை தாள் போடு காமன் கணை ஏவல் எனை காவல் மீற தூண்டுதே

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

மங்கை இவள் தேகம் நோகும் மோகனமாய் தாளமிடு கங்கை நதி பாயும் நேரம் காதில் ஒரு சேதி கொடு நாள்தோறும் ராக்காலம் ஏதிங்கே பூபாளம் இன்ப கதை காணாது கண்கள் இமை மூடாது உன்னை கரை சேர்க்காது எந்தன் அலை ஓயாது சேவல் அது கூவும் வரை நாணம் ஓய்வு காணுமே

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது கூகூ என கூவும் குயில் சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும் செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

சத்தியமாய் கவிக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை…..

பாவம்டி பாலா…..ரொம்பத்தான் ஏங்கி போய் இருக்கார்…….

“உன்னைக் கரை சேர்க்காமல் எந்தன் அலை ஓயாதா…..”

”ஆமா உன்ன எந்தக் கரைல சேர்க்கப் போகிறார்…. ஷிப் வச்சா.. இல்ல போட்லயா’ சத்தியமா முடியலடி….வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்….

சுற்றுப்புறம் மறந்து சிரித்த கவியை…

“ஏய் அடங்குடி…..” என்று பல்லைக் கடித்து அதட்டினாலும் அடங்குவாளா அவள் என்று தொடர்ந்தாள்

”சங்கமத்த நினைக்குதாம்ல….. “

“காமன் கனை ஏவல் எனைக் காவல் மீறுதாம்ல…

பாவம்டி பாலா…..ஏங்க வச்சுட்ட்டி மனுசன….

என்று அன்று முழுவதும் அவள் கிண்டல் தொடர அவளை அடக்க வழி இல்லாமல்…..அவளிடம் சொன்னதுதான் தான் செய்த தவறு என்று புரியாமல்… இதற்கெல்லாம் காரணகர்த்தா பாலா என்று பாலாவின் மேல் கோபம் திரும்பியது…

……………………..

அலுவலகம் வராவிட்டாலும் அன்று மாலை பாலாவே வந்து அவளை பிக்கப் செய்ய வந்தான்… அவளது வீட்டிற்கு போவதால்… காரினுள் அவன் காலையில் பாடிய பாடலை போட்டவன்….. அதில் தனக்கு தேவையான வரிகள் வந்த போது தானும் சேர்ந்து பாட…. கவி செய்த கிண்டலில் ஏற்கனவே கோபத்தில் இருந்தவள்…..வேகமாக ஆஃப் செய்தாள்… அவனோ சிரித்த படி ஆன் செய்ய….. நடக்கப் போகும் விபரீதம் புரியாமல்…. மாறி மாறி… தங்கள் விளையாட்டை தொடர்ந்தனர்…. விளையாட்டு வினையும் ஆகியது

ஒரு கட்டத்தில்..பாலாவே

”என்னடி பிரச்சனை இப்ப உனக்கு”

“இத காலையிலயே ஒழுங்கா பாடித் தொலைக்க வேண்டியதுதானே… அதுவும் அங்க… இங்கனு பாடி…. தேவையில்லாத டென்சன் எனக்கு”

“இதுல என்ன டென்சன் உனக்கு” என்றவனை முறைத்தபடி… கவி கேலி செய்ததைக் கூற….

பாலா முறைத்தான்…..

”ஏண்டி நியாயமா பார்த்தா எனக்குதான் கோபம் வரணும் …உனக்கு என்ன கோபம்…நம்ம மானத்த…. இல்ல… என் மானத்த கவிட்ட ஏலம் விட்டுட்டு வந்து …என்கிட்டயே கோபம் வேறயா உனக்கு…. கவியிடம் நீ இதெல்லாம் சொல்வியா என்ன….. ” கொஞ்சம் கோபமும் இருந்தது. அவன் வார்த்தைகளில்...

“இல்ல … தயங்கியபடி சொன்னாள்

“நா சும்மாதான் எனக்கு முதல் வரி தெரியலேன்னு கேட்டேன்….. ஆனா.. அவ வரியக் கேட்டதும் நீங்கன்னு புரிஞ்சுக்கிட்டா…. நான் என்ன பண்ண” என்று கொஞ்சம் கூட புரியாமல் பேசியவளை

“ஆமா……நா என்ன உன்னப் பார்த்து கோவில்ல போடுற பஜனைப் பாடலா பாடிருப்பேன்…. கடவுளே….. அதுவும் நான் பாடின மத்த லைன்ஸ் போதாதாடி… அதுவே அவளுக்கு நான் தான் உன்கிட்ட பாடிருப்பேனு சொல்லிருக்கும்….. அவளுக்கெல்லாம் என்ன பற்றி தெரியுது…… இத அவகிட்ட போய் கண்டுபிடிச்சு தான்னு கேட்ருக்கியே உன்னலாம் வச்சுக்கிட்டு நான் என்னதான் பண்ணப் போறேனோ….. என்று தலையில் அடித்தான் பாலா….. அவன் கவலை அவனுக்கு கவிக்கு தெரிந்து விட்டது என்று….

ஏற்கனவே டென்சனில் இருந்த கீர்த்தி… காலையில் அவனிடம் அவள் உணர்ந்த ஏமாற்றமா… இல்லை கவியின் கிண்டலிலா…. இல்லை இப்போது அவன் சொன்ன “உன்ன வச்சுட்டு என்ன பண்ண போறேனோ” என்ற வார்த்தையோ எதுவோ ஒன்று அவளைச் சுட்டது…

என்ன பேசுகிறோம் என்று தெரியாமல்…

“ஆமா… எனக்கு உங்கள பத்தி ஒண்ணும் தெரியாது…..என்னத் தவிர… அத்தன பேருக்கும் உங்கள புரியுதா…. வேணும்னா ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் நான் ட்யூசன் எடுத்த்துட்டு வரவா“

என்று பட படவென்று பேசியபடி வாய் விட ஆரம்பித்தாள்…

’ஒண்ணு பண்ணுங்க…. அப்பிடியே ’உங்க’ மதுவையும் கூட்டிட்டு வாங்க….. அவதான உங்கள நல்ல புரிஞ்சு வச்சுறக்கவ…. அது மட்டும் இல்லாம…. இந்த ரொமான்ஸ்ல எல்லாம் உங்கள எப்படி புரிஞ்சுக்கறது எப்படினு அவளத் தவிர வேற யாரும் எனக்கு ட்யூசன் எடுக்க முடியாதுல்ல….” என என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஆர்பரிக்க

”கீர்த்தி …. வாய மூடு….” கோபத்தின் எல்லையில் வார்த்தைகளை கடித்து துப்பினான்

அதற்கெல்லாம் அசராமல் கீர்த்தி வாய் மூடாமல்… அதனால்…. தான் அடையப் போகும் விபரீதம் புரியாமல் பேசினாள்…..

“ஏன்னா.. அவதான் லைவ் ட்ரையல் எனக்கு,…. கூட்டிட்டு வாங்க அவள… உங்க மூடுக்கு ஏத்த மாதிரிலாம் எப்படி இருக்க வேண்டுமென்று டெமோ காட்டச் சொல்வோம்…. நானும் கத்துக்கறேன்” என்று ஏக வசனத்தில் கணவனின் கோபம் புரியாமல் கண்டபடி பேச

அவன் கார் எகிறிய வேகத்தில் அப்போதுதான் அவன் முகம் பார்க்க…அதில் இருந்த கோபத்தின் அளவில்… தானாகவே வாயை மூடினாள்….இப்போது அவள் பேசிய பேச்சின் அர்த்த விளங்க உள்ளுக்குள் உதறல் எடுத்தது…

இருந்தாலும்…

“என்ன நான் உண்மையத்தானே சொன்னேன்…என்கிட்டயே இந்த காட்டு காட்டரவர்.. லவ் பண்ண பொண்ணுக்கிட்ட ஒண்ணும் பண்ணாமா.. அதுவும் ஒரு கிஸ் கூட இல்லாம……. இருந்திருப்பானா…. நான் சொன்னவுடனே உண்ம சுட்ருக்கும் …அதுதான் துரைக்கு கோபம் எகிறுது” என்று அவளுக்கு அவளாகவே சமாதானமும் ஆனாள்…..

ஆனாலும். தேவை இல்லாமல் பேசி விட்டோமோ…. என்று மனசாட்சி அவளைச் சாட….

சற்று குறுகுறுத்த மனதுடன் மீண்டும் பாலா முகத்தைப் பார்க்க…

அது கரைகாணாத கோபத்தில் இருந்தது….

மனதில் கிலி பரவியது கீர்த்திக்கு….

அப்பார்ட்மெண்ட் வாசலில் அவளை இறக்கி விட கீர்த்தி வீட்டினுள் பயத்துடன் தான் உள்ளே நுழைந்தாள்..

இங்க வேற வந்துருக்கோம் இன்னைக்கு… அவன் என்ன சொல்லப் போறானோ இல்லை… என்ன செய்யப் பொறானோ….” என்று நினைக்கும் போதே மனமும் …உடலும் அச்சத்தில் நடுங்கியது

வாயை விடாமல் இருந்திருக்கலாமோ என்று அப்போதுதான் நிதர்சனமாய்த் தோன்றியது…… ஆனால் அது காலம் கடந்த ஞானதோயம் என்பது சற்று நேரத்தில் புரிய வைத்தான்….பாலா…..

கோபத்தின் மொத்த உருவமாக …. புயலென உள்ளே நுழைந்தவன்… அவளது அறையில் யோசனையுடன் நிற்பதைப் பார்த்தவன் …. யோசிக்காமால் அவளை தன்னோடு இழுத்து…. ஆவேசமாக தன் இதழை… அவள் இதழுடன் சேர்த்தான்….. கீர்த்திக்கு என்ன நடக்கிறது என்று புரிவதற்கு முன்னரே…. அவள் இதழ்களில் தன் வன்மையைக் , கோபத்தைக் காட்ட ஆரம்பித்தான் பாலா…. காதலைக் காட்டுவதற்கு பதில்…

’உன் மது’ என்ற வார்த்தையில்… தான் வலுக்கட்டாயமாக மறக்க நினைக்கும் மதுவின் நினைவுகளை கீர்த்தி கிளறி விட…. அது தந்த தன் மனதின் வலிக்கு மருந்தை கீர்த்தியின் இதழில் தேட ஆரம்பித்தான்.. வலியின் அளவு அதிகம் போல்… மருந்தின் தேவையும் அதிகமாகவே இருந்தது…

அவள் தன்னை சுதாரிக்கும் முன்னரே இத்தனையும் நடக்க…. இப்போது வலுக்கட்டாயமாக விலக நினைக்க…

முதல் முத்தம் ….அதுவும்…. இதழ் முத்தம்…. அவளால் அவனோடு .. அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடினாள்…. தனது கணவனின் இதழ் தீண்டலில் காதல் இருந்திருந்தாலே… தடுக்க நினைப்பவள் அவள்… முரட்டுத்தனமாக தன்னில் பதிந்த அவனது இதழ்களோடு ஒன்ற முடியாமல்…. விலக நினைக்க…. அது இன்னும் அவளுக்கு வினையாக மாறி இன்னும் அழுத்தமாக மாறத் தொடங்கியது…

அவள் விலகலை உணர்ந்தவனுக்கு ….கோபம் தலைக்கேற…..அவளை மென்மையாக ஆள நினைத்திருந்த அவனே… அவளைக் காயப்படுத்த ஆரம்பித்தான்…. கீர்த்தி அவனைத் தடுக்க முடியாமால்…துவண்டாள்…. அவனை விலக்கவும் முடியாமல்…… இதழிலும்..மனதிலும் வலி தாங்க முடியாமல் கண்கள் கண்ணீரை உகுத்தன…

அவளின் கண்ணீர் தன் முகத்தில் பட…. பாலா அப்போதுதான் நிதானத்திற்கு… தன் நிலைக்கு வந்தான்… அவளின் வலியை உணர்ந்தவன் …. தள்ளி நிறுத்தினான் … ஆனாலும் அவன் கோபம் குறையாமல்…

”ஏண்டி… நல்லவனாவே இருக்க விட மாட்டீங்களாடி…. உன்கிட்ட என்ன மொத்தமா குடுக்கறதுக்குதான் அவ என்னத் நெருங்க விடலயோ என்னவோ…… அவளப் போய்…. ச்சேய்…… இப்போ நீ அனுபவிச்சது உனக்கு மட்டும் இல்ல எனக்கும்தான் முதல் அனுபவம்….. இன்னொரு தடவ நீ மதுவப் பத்தி என்கிட்ட பேச நினச்ச…. உனக்குதான் ஆபத்து… இந்த மாதிரிதான் அனுபவிப்ப என்கிட்ட. “ என்று கண்களில் ரௌத்திரமுடன் பேசியவன் மறுபடியும் அவளை இழுத்து தன் இதழ்களை அவளிடம் படர விட்டவன்…. தானாகவே விட்டும் போனான்…..

அவள் அவனிடம் சேர யார் காரணமாக இருந்தாளோ.. அந்த மதுதான் அவளேதான்… இன்றைய அவளோடான அவனின் முதல் இதழ் தீண்டலுக்கும் காரணமாக இருந்தாள்……

கீர்த்திக்கு அழுகை அழுகையாக வந்தது… இதழைத் தடவியவளுக்கு அதில் இருந்த ரத்தம் அவன் கோபம் சொல்ல…. இன்னும் அழுகை கொப்பளித்தது….. அவள் யாருக்கு என்ன துரோகம் செய்தாள்…. தன் வாழ்வில் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது….. தன் பாலாவா இப்படி எல்லாம் செய்தான்… கோபம் வந்தால் தன் உணர்வுகளை… இல்லை….. என் உணர்வுகளைக் கூட மறந்து விடுவானா…. தனக்கு எதுவுமே தன் வாழ்வில் ஒழுங்காக நடக்காதா என்று மனம் கனத்தது….….” அப்படியே சுவரில் சரிந்தவளாய் அமர்ந்தவளின் முகம் எதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தெரிய… கலவரமானாள் கீர்த்தி..

“கன்னங்களில் வழிந்திருந்த கண்ணிர்… இதழ்களின் காயம்.. கலைந்த கேசம்… கண்களில் இருந்த நிராசை….” இது… இது…. இதே மாதிரிதானே… இல்லையிலை இதைவிட மோசமாய்… அவளும்.. நம்மிடம் வந்தாள்… நினைவுகள் மனதைப் பிசைய தடுமாறினாள் கீர்த்தி…

நீண்ட நாட்களாய் அவள் மனதின் அடியில் புதைந்து இருந்த அந்த சம்பவம் அவள் முன் நின்றது…. அதிர்ந்தாள் கீர்த்தி… தன் தாய் தந்தையால் சாதாரண விசயம் என்று மறக்கடிக்கப் பட்ட சம்பவம் இன்று அவள் முன் பூதாகாரமாக உருவெடுத்து நின்றது…

அவள் கண் முன்… அன்று தன்னிடம் நிராதராவாய் நின்ற அந்தப் பெண்ணின் முகம் தோன்ற…

அதே நிலை இன்று தன் முகத்தில் தெரிகிறதோ என்று கண்ணாடியில் மீண்டும் தன்னையே பார்த்தாள் கீர்த்தி….

அந்தப் பெண் …முகத்தில் பல அறைகள் வாங்கி இருந்தாள் போல…முகம் வீங்கியிருந்தது… ஆனால் அந்தக் கண்களில் தான் காப்பற்றபட்டு விடுவோம் என்ற பெரும் நம்பிக்கை இருந்ததோ… அவளை நான் ஏமாற்றி விட்டேனா….. தான் முயன்றிருந்தால் அவளை காப்பாற்றி இருந்திருக்கலாமோ…. அவள் வேதனை தான் என்னை இந்த நிலைக்குத் தள்ளி விட்டதா…. நம்பி வந்தாள் என்னிடம்… நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டேனா…. அம்மா பேச்சினை கேட்காமல் இருந்திருக்கலாமோ…. சுயநலமாய் இருந்து விட்டேனோ…. தன் தாய் தந்தையின் அகால மரணம் கூட…. தன் மகளை மட்டுமே நினைத்துப் பார்த்தவர்கள்… தன் மகள் போல் தான் அந்தப் பெண்ணும் என்று எண்ணி … காப்பாற்ற நினைக்காமல்…. சுயநலமாய் முடிவு எடுத்தனரே.. அதுதான் காரணமோ… என்னவெல்லாமோ தோன்ற…

இன்று …. அன்று பார்த்த….

அந்த சம்பவம் அவள் முன் தோன்ற …மனதில் புதைந்திருந்த நினைவுகளுக்கு உயிர் தந்தாள் கீர்த்தி….

1,338 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page