top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே!! என் உறவே!!! 28

அத்தியாயம் 28

ஹாலில் அருந்ததி இருந்ததை உணர்ந்தாலும்… நிற்கக் கூட முடியாமல் கீர்த்தனா மாடி ஏறினாள்,,,,

”என்னாயிற்று இவளுக்கு” என்று நினைக்கும் போதே கீர்த்தனா வந்ததிற்கு முற்றிலும் எதிராக பாலா உல்லாசத்துடன்… உற்சாகத்துடனும் வந்தான்…

இருவரின் நிலையும் அவள் கண்களுக்கு தப்பவில்லை…. ஏதோ நடந்திருக்கிறது..என்று மட்டும் தீர்மானத்திற்கு வந்தாள் அர்ந்த்தீ……..

கீர்த்தனாவிற்கு…… ஒன்றும் புரியவில்லை…. பாலா நடந்து கொண்ட முறையில் எவ்வளவு படபடப்பை உணர்ந்தாளோ அவ்வளவு கோபமும் கொண்டாள்….

”மனைவியாம்… கணவனாம்… இவன் மட்டும் நினைத்தால் போதுமா…..இவனுக்கு என்னைப் பார்த்து பரிதாபம் வந்தால்…. அய்யோ பாவம் பொண்ணு அனாதையா நிற்குதுனு பாவம் பார்க்க மட்டும் வேண்டியதுதானே…..”

இதை நினைக்கும் போது அழுகை வேறு வந்து தொலைத்தது அவளுக்கு…

“அத விட்டுட்டு எனக்கு வாழ்க்கை கொடுக்கிறாரா துரை… அதிலும் அவரது அமரத்துவ காதலைக் கூட கை விட்டு விட்டு” …என்றெல்லாம் யோசித்தவள்….

”மேலே வரட்டும் …. என்னை என்னவென்று நினைத்தான் அவன்…. இவன் வா என்றால் வருவதற்கும் …. போ என்றால் போவதற்கும் கேட்க ஆளிள்ளாதவளா…”

ஆனால் அந்த நிலையில்தான் அவள் இருக்கிறாள்….என்பதே உண்மை என்பது புரிய இப்படி தன்னை தவிக்க விட்டு அவசர அவசரமாகப் போன பெற்றோரை நினைத்து தாங்க முடியாமல்… தன் மேலேயே கழிவிரக்கம் வர…. கண்களில் கண்ணீர் அருவி போல் வழிந்தது…..

பாலா ஒரு அரைமணி நேரம் கழித்துதான் மேலேயே வந்தான்…. வந்தவன் கீர்த்தி சோபாவில்… கண்களில் கண்கள் வழிய உட்கார்ந்த நிலையிலேயே சாய்ந்திருந்தவளை பார்த்து… கொஞ்சம் அதிகப்படியாக நடந்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றி அவனை சஞ்சலத்திற்கு தள்ள…

மெதுவாய் அவளிடம் வந்து…. கீர்த்தி என்று அழைக்க

அவளோ… அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள்… அதில் கோபமில்லை… கலக்க மில்லை…. எல்லாம் பேசிவிட்டு…. செய்து விட்டு… இப்போது என்ன என்றபடி பார்த்தாள்…

” கீழ வா… சாப்பிடப் போகலாம்…” என்று அழைக்க…. அடக்கி வைத்திருந்த கோபம் கரை உடைத்து வார்த்தையாய் வெளி வர ஆரம்பித்தது

“எனக்கு சாப்பாடு வேண்டாம்… இதற்கு கூட.... அதாவது சாப்பிடுவதற்கு கூட நீங்க என்ன சொல்றீங்களோ அதைத்தான் செய்ய வேண்டுமா?

என்றபடி வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தாள்…

ஒன்றும் சொல்லாமல் அவளைப் பார்த்தவன் அருந்ததிக்கு போன் செய்து…

“அம்மா… நாங்க வெளியில் சாப்பிட்டு வந்து விட்டோம்… சாப்பாடு வேண்டாம்… நீங்க சாப்பிடுங்கள் “ என்று சொல்லி விட்டு போனை வைத்தான்…

சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி.அவன் போனை வைத்தவுடன்…

“என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்….. இப்போ எதற்கு சாப்பாடு வேண்டாம் என்று சொன்னீர்கள்… எனக்கு பசிக்கிறது நான் கீழ போகிறேன்….என்று அவன் சொல்லி விட்டான் என்பதற்காகவே பிடிவாதம் பிடித்து கிளம்ப எத்தனிக்க…

அவளின் சிறுபிள்ளைத்தனம் உணர்ந்தாலும்…. பாலா இயல்பிலேயே பொறுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவன்…. ஏதோ இப்போதுதான் கொஞ்சம் அந்த வார்த்தையை எல்லாம் தன் வாழ்வில் கடைபிடிக்கிறான்…ஆனால் அதற்கு தன் மனைவியே வேட்டு வைத்து விடுவாள் போல் இருந்தது….

“கீர்த்தி என்ன இது….இப்போதானே சாப்பாடு வேண்டாம் என்றாய்…அதனால் தான் அம்மாவிடம் அப்படி சொன்னேன்…இப்போ இப்படி பேசினால் என்ன அர்த்தம்? .. அம்மாவிற்கு எதுவும் தெரிய வேண்டாம்… ஏற்கனவே பாவம் அவர்கள் … நாம் செய்து வைத்திருக்கிற வேலையில் நொந்து போயிருப்பவர்கள்… என்பதால்… என்று பல்லைக் கடித்து அதட்ட….

அதற்கெல்லாம் அசராமல்…

“ஓ நான் மட்டும் தான் இப்போ ஒண்ணு…அப்போ ஒண்ணு என்று பேசக் கூடியவள்…சார் எப்படி” என்று கோபமும் நக்கலும் சரிவிகித்தில் கலந்து அவனிடம் கேட்க…

“கீர்த்தி …..என்றபடி அவள் அருகில் அமர்ந்து

“இப்பொ என்ன பிரச்சனை உனக்கு…. சொல்லு ….. நான் என்ன பண்ணினால் என் மேல் உனக்கு கோபம் போகும்…. நான் அதைச் செய்கிறேன்…” என்று.. அவளை சமாதானமாக்கும் முயற்சியில் கெஞ்சல் பாதி கொஞ்சல் பாதியாக கேட்டான் பாலா…

தீர்க்கமாக அவனைப் பார்த்து…. அவனுக்கு அவனை புரிய வைக்கும் விதமாய்!!!

”என் மேல பரிதாபப்பட வேண்டாம்… ப்ளீஸ்..பாலா…. புரிஞ்சுக்கோங்க…. காதலுக்கும்…பரிதாபத்துக்கும் வித்தியாசம் தெரியாதா எனக்கு….. நீங்க மதுவை…” எனும் போதே அவள் தடுமாறினாள்….

அதற்கு மேல் சொல்லப் பிடிக்காமல்….. நிறுத்தினாள்….. ஏற்கனவே அழுத படி இருந்ததால்… இன்னும் அழுகை வர வார்த்தைகளும் குழறின….

அவளின் நிலைமையை உணர்ந்தவன்…

“எனக்கும் காதலுக்கும்…பரிதாபத்துக்கும் வித்தியாசம் தெரியும்….. ஒண்ணோட அம்மா…அப்பா..இறந்த்தால் மட்டும் நான் உன்னைக் காதலிக்கவில்லை” என்று

தான் சொல்ல வந்ததை கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல் நிறுத்தி நிதானமாக சொல்ல ஆரம்பிக்க இடையிலேயே

“நீங்க என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்…பாலா…. நான் சொல்வதை எல்லாம் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மாட்டீர்களா…. என்று கொதினிலைக்குப் போனாள் கீர்த்தி…

பாலா அவளுக்கு பதிலாய் கோபத்தைக் காட்டாமல்…. குளுமையைக் கையாள ஆரம்பித்தான்…

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்…. கொஞ்ச நாளா உன்னைத் தான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்…… ஆனான் இந்த நிமிடம்..இந்த நொடி…. நீ மட்டும் தான்… உன்னை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று……” கூலாக கூறி அவளைப் பார்த்து கண்ணடிக்க….

கீர்த்திக்கு கோபம் எல்லை மீறியது…

“ஓஹோ அப்படியா…. இந்த நிமிசம் நான்…. போன மாசம் மது…. அப்போ அடுத்த மாதம்?”

என கோபத்தில் அவனைக் குதற ஆரம்பித்தாள்….

அவளின் வார்த்தை பிரயோகத்தில் பாலா கொஞ்சம் அடிதான் வாங்கினான்…. ஆனால்… இதெல்லாம் அவன் அவளிடம் அவன் எதிர்நோக்கியே இருந்த்தால்…. தன்னை சமாளித்துக் கொண்டு..

“என் மனதில் மது இருந்தாள்… என்பது உண்மை….. மறுக்கவில்லை….. ஆனால்… ஒருவருக்கு காதல் இரண்டாம் முறை வரக்கூடாதா…. நான் மதுவை மறக்க வில்லை…அவள் நினைவை உன்னோடான என் காதலுக்கு அடித்தளமாக மாற்றி விட்டேன்…. மது என்ற ஒருத்தி என் வாழ்வில் இருந்த்தால் மட்டுமே நீ என் வாழ்வினுள் வந்தாய் என்கிற போது அவளை எப்படி மறப்பேன்…. ஆனால் இனி என் வாழ்வு இறுதி வரை உன்னோடு என்பது நான் முடிவு செய்து விட்டேன்... இதற்கு மேலும் மது….அவள் காதல் என்று உன்னையும் வருத்தி என்னையும் வருத்தாதே” என்று சொல்ல

”நீங்க ஒரு பெண்ணைக் காதலிப்பீர்கள்,,,, அவளுக்காக என்னை மாதிரி ஒரு சூழ்நிலைக் கைதியாய் தவித்த பொண்ண … தாலி கட்டி கூட்டி வந்து…. உங்க கைப் பாவையா வைத்திருப்பீர்கள்…. அதேபோல் அவளை மறந்து விட்டேன் .. உன்னோடு தான் வாழ்வேன் என்று சொன்னவுடன்… சொன்ன அடுத்த நிமிடம் நானும் உங்களோடு வந்து கொஞ்சிக் குலவி குடும்பம் நட்த்த வேண்டுமா ..என்ன ஒரு எதிர்பார்ப்பு உங்களுக்கு…… ஏன் எனக்கென்று விருப்பு ..வெறுப்பு என்று ஒன்று இருக்காதா…. ஆண்களுக்கு காதல் வந்து விட்டால்.. அவளுக்காக மலையையே புரட்டுவீர்கள்…. அவளுக்காக.. அவள் காதலுக்காக என்று காதல் மன்னன் ஆகி விடுவீர்கள்… இதே காதல் எனக்கு உங்கள் மேல் வந்திருந்தால்…. நான் வந்து சொல்லி இருந்தால்..என்னை ஏற்றுக் கொண்டிருப்பீர்களா… நீங்கள் இன்று என்னிடம் நடந்தது போல் நான் என் காதலை…உரிமையை உங்களிடத்தில் காட்டி இருந்தால்….என்னைப் பற்றி உங்கள் எண்ணம் என்னவாக இருக்கும் பாலா… அந்த சௌந்தர்யாவை விட மோசமாகத்தானே நினைத்து இருப்பீர்கள்….. என்று உணர்ச்சிகளின் மொத்தக் குவியலாய் பேசியவளின் வார்த்தைகளில் இருந்த உண்மை பாலாவைச் சுடாமல் இல்லை….

“தெரியல கீர்த்தி… ஒருவேளை நீ சொல்லி இருந்தால்…. நான் மாறி இருந்திருக்கலாம்…. காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லி இருக்கலாம்….. என்றான் பரிதாபமாக

கீர்த்திதான் அவன் காதலை உணர வைத்தாள்… அதை உணர்ந்து சொல்ல வில்லை…. சொன்னதையும் உணரவில்லை ஆனாலும் அவன் அவளிடம் அதை…. அதுவும் இந்த சூழ்நிலையில் சொல்ல விரும்பவில்லை…. சொல்லவுமில்லை…. நீதான் என்னிடம் அழுதாய்…. உன் காதலைச் சொன்னாய். அதில் தான் நான் மாறினேன் என்றால்…. அவள் இப்போது இருக்கும் மனநிலையில் இன்னும் உச்சாணிக் கொம்பில் போய் ஏறிக் கொள்வாள்…… அதன் பிறகு அதிலிருந்து அவளை இறக்க நமது பாடுதான் திண்டாட்டம் ஆகும் …என்று நினைத்தவன் அப்படியே அதை மறைத்தும் விட்டான்……

“காலம்…பதில் சொல்லுமா…. பதில் தெரியவில்லை என்றால்…காலத்தின் மீதும்… விதியின் மீதும் பழியைத் தூக்கிப் போட்டு விடுவீர்கள்….ப்ச்ச்” என்று கோபத்திலிருந்த வார்த்தைகள்…எகத்தாளமாய் மாறியது அவளிடம்..

”கீர்த்தி… நாம தூங்கலாம்… இனிமேல் பேசினால்… வார்த்தைகள் தடிக்கும்….” என அப்போதைய விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போக…அவளோ அதைக் கமாவாக ஆக்கித் தொடர்ந்தாள்…

”எனக்கு ஒரே ஒரு சந்தேகம் பாலா… நீங்க மதுவை காதலித்தீர்கள்…அதற்காக என்னை மணந்தீர்கள்… இன்று அவள் இருந்த இடத்தில் நான் என்கிறீர்கள்….. இதே போல் நானும் ஒருவனைக் காதலித்து இருந்தேன் என்றால் என்ன செய்து இருப்பீர்கள்….” என்று வினோத்தின் பெயரைக் குறிப்பிடாமல் சொல்ல

பாலா….. அதிர்ந்து நின்றான்….

”என் அப்பா அம்மாவிற்காக…. எனது காதலை மறைத்து…உங்களோடு நிர்பந்தத்திற்கு சம்மதித்தேன் என்றால்,,,, என்ன செய்திருந்திருப்பீர்கள்…. சொல்லுங்கள்…. என்னை நான் விரும்பியவனுடன் சேர்த்து வைப்பீர்களா?” என்று வார்த்தையில் அமிலம் தோய்த்தாள்…

“நீ யாரையும் விரும்ப வில்லைதானே கீர்த்தி…வினோத்தோடு கூட பெரியவர்கள் தானே பேசி இருந்தார்கள் என்றாய்” என்ற போது அவன் வார்த்தைகள் அவனின் வழக்கமான கம்பீரம் இன்றி மெலிதாக வலியுடன் ஒலித்த்து

அதை கீர்த்தி உணராமல் இல்லை….. இருந்தாலும் கூட தனது வீரியத்தை நிறுத்தாமால் பேசினாள்…

“ ஏன் …. பெரியவர்கள் பேசினால்…அவர்கள் பேசப் பேச எனக்கும் ஆசை இருந்திருக்காதா” என அடிபட்ட சிங்கத்திடம் மல்லுக்கு நிற்கும் மானைப் போல் அலட்சியமாக நோக்க…

இப்போது பாலா என்னும் சிங்கம் சுதாரித்துக் கொண்டது….

அவள் தன்னைத்தான் விரும்புகிறாள்…. தன்னைக் காயப்படுத்துவதற்காகவே இவள் இந்த மாதிரி பேசுகிறாள்… அதைப் புரிந்தவனுக்கு…. விட்டால் இவள் என்னைக் குதறுவதாக நினைத்துக் கொண்டு வரம்பு மீறி போவாள் என்று தோன்றியது அவனுக்கு….

அவளின் அலட்சியமான பார்வையை …. பார்த்தபடி….

“நீ எவன வேண்டும் என்றாலும் நினைத்திருந்திருந்திருக்கலாம்… அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை எனக்கு…. ஆனால் இப்போது நீ என் மனைவி…… இனி நான் மட்டும் தான் உன் நினைவில் இருப்பேன்…. இருக்க வேண்டும்…. காலம் முழுவதும் நீ விரும்பினாலும்… விரும்பாவிட்டாலும்….” என்று கர்ஜித்தவன்

அதற்கு மேல் ஒன்றும் பேசுவதற்கு இல்லை என்பது போல் திரும்பி தனது கட்டிலை நோக்கிப் போக…

“நீங்க யாரோட மனசத்தான் நினத்துக் கவலைப் பட்டிருக்கிரீர்கள்… அடுத்தவங்க மனதை மதித்து….அடுத்தவங்க மனதை என்ன…. உங்க அப்பா-அம்மா மனதையே புரிந்து நடக்க வில்லை… நீங்க என் மனசத்தான் பார்க்க போறீங்களா?” என்று இஷ்டத்திற்கு பேச

பாலா ருத்ரனாய் மாறினான்…அது கூட மனதினுள் தான்…

“ஏய்”; அவளைப் பார்த்து ஒற்றை விரலை உயர்த்தியவன்… அவளின் கண்களின் தவிப்பில் .தனது கோபத்தினைக் கட்டுக்குள் நிமிடத்தில் கொண்டு வந்தான்

”என்ன… நான் யாரோட மனசையும் புரிந்து நடக்காதவனா …அப்படியே இருந்திருக்கலாம்… என் அப்பா மனதிற்காகவும்….உடல் நலத்திற்காகவும்….மனம் கஷ்டப்படாமல் இருந்திருக்கலாம்… ஆஃபிஸ் எம்ப்ளாயி கிட்ட எல்லாம் ஏன் அவங்க கவலையா இருக்காங்கனு… அவங்க கவலையப் பத்தி கண்டுக்காம இருந்திருக்கலாம்…. அதைக் கேட்ட போது கூட சும்மா இருக்காமல் அதை வாங்கித் தருகிரேன் என்று சொல்லாமல் இருந்திருக்கலாம்…..என்னைய நீ அறைந்த போது கூட நீ மனசு கஷ்டப்படுகிறாய் என்று நினைக்காமல் உன் மேல் கோபப்பட்டிருக்கலாம்….. ஆனா இதெல்லாம் செஞ்சுட்டேனே… ” என்று நிறுத்தியவன்

”ச்சேய். என்னப் போய் …. என்றவன்… அப்போ கூட உன்ன நான் கட்டாயப் படுத்த வில்லையே… நீயாகத்தானே மீண்டும் வந்தாய்…. நான் செய்த ஒரே தவறு என்னவென்றால்… அது…. என்னால் பண்ண முடிந்த உதவியை…. பணயமாக வைத்து செய்ததுதான்….. இப்போ சொல்கிறேன் கேட்டுக்கோ…… இத்தனை நாள் மற்றவர்களுக்காகவே வாழ்ந்து விட்டேன்… மற்றவர் மனம் கோணாமல் வாழ வேண்டும் நினைத்திருந்தேன்…. இனி இந்த பாலா…. அவனுக்காக மட்டும் வாழ்வான்…. அதில் யாருடைய கவலையும் பார்க்க மாட்டான்…. நான் உன்னோடு வாழ வேண்டும் ….. எனக்கு நீ வேண்டும்…. நாம் இருவரும் வாழப் போகும் வாழ்க்கைக்காக நான் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்….. உன்னையும் எப்படி என் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று எனக்குத் தெரியும்….” என்றவன் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் போய் படுத்தும் விட்டான்…

கீர்த்தி… சோபாவிலேயே படுத்து விட்டாள்… பாலாவை நினைத்து.. அவன் செய்கைகளை நினைத்து சிறிது நேரம் அழுதாள்… ராகவன் - மைதிலியை நினைத்து அடுத்து அழுதாள்…. தன்னைப் பற்றி ஒன்றும் தெரியாமல் போய் விட்டார்களே… தாங்கியும்…. ஏங்கியும்… சீராட்டியும்..பாராட்டியும் தன்னை வளர்த்து விட்டு இப்படி அம்போவென்று விட்டு போய்விட்டார்கள்…. இப்படி சீக்கிரமாக போவதற்குதான் …தன் ஆயுள் முழுவதும் காட்ட வேண்டிய அன்பை…23 வருடத்திற்குள் காட்டி விட்டு போய் விட்டனர் போல என்றெல்லாம் பலவாறாக சிந்தைனைகளின் தாக்கத்தில் உளன்றவள்…. அப்படியே உறங்கிப் போனாள்…

பாலாவிற்கோ அவள் அன்று அழுகையில் பேசியதில் இருந்து தன்னைத்தான் நேசிக்கிறாள் என்று புரிந்தும் அவள் வினோத்தை காதலித்து இருப்பாளோ என்று சஞ்சலம் உண்டாக… தூக்கம் வரவில்லை… எதுவாயிருந்தாலும் அவள் மனதில் நான்தான் இப்போது இருக்கிறேன்… அதை எப்படி வெளிக் கொணர்வது என்ற யோசனையிலே உறங்கியும் விட்டான்….

பாதி இரவில் பாலாவிற்கு விழிப்பு வர கீர்த்தியை பார்த்தவன்… அவள் சோபாவிலேயே உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவளை தூக்கி கட்டிலில் போடுவோமா என்று நினைத்தவன்….. அவர்கள் இருவருக்கும் உள்ள் சூழ்னிலையில் அது அதிகப் படியாய்த் தோன்ற.. அதை கைவிட்டு விட்டு அவளின் படுக்கையை விரித்தவன்…. அவளின் அருகில் வந்தான்…. தூக்கலமா.. வேண்டாமா.. என்று ஒற்றையா.. இரட்டையா போட்டவன்…அவளின் அசைவில் …

“அம்மணி ஏற்கனவே மலை ஏறித்தான் இருக்காங்க …. அதை இறக்கவே என்ன பண்ணுவது என்று தெரியவில்லை…. அடங்குடா பாலா…”. என்றவன் அவளை தொட்டு எழுப்பினான்…. தொட்ட உடனே அடுத்த நொடி பதறி எழுந்தாள்…. கீர்த்தி….

“இதில் எல்லாம் உஷாரா இரு” என்று நினைத்தவன்…

”அங்க போய் படு” என்று படுக்கையைக் காட்ட

தனக்காக விரித்தானா….என்று நினைத்தவள்…. நடந்ததெல்லாம் நினைவில் இருந்தாலும்….

“தேங்க்ஸ் பாலா” என்றபடி அவன் விரித்த படுக்கையில் படுக்க…

“இப்ப தேங்க்ஸ்… ரொம்ப முக்கியம்… பொண்டாட்டிக்கு கீழ படுக்கை விரிச்சு அவள அதில் படுக்கச் சொன்ன ஒரே புருசன் நானாத்தான் இருப்பேன்…. அவளை தொட்டு தூக்கக் கூட தைரியம் இல்லை…. நீ எல்லாம் வெளில சொல்லிடாதடா….ஆண் குலத்துக்கே கேவலம்…..என்று தன்னைத் தானே திட்டியவன் ….பின் அவனாகவே… தைரியம் எல்லாம் இருக்கு….. அவ மனசு நோகக் கூடாது என்றுதான் பார்க்கிறேன்….. ” தன் மனதிற்குள் தேற்றிக் கொண்டான்…

அடுத்த நாள் கீர்த்தி பாலா எழுவதற்கு முன் வேகமாக எழுந்து ரெடியானவள்… கீழே போய் விட்டாள்…

பாலா கொஞ்சம் லேட்டாகத்தான் எழுந்தான்.. அவன் கீழே வரும் போது.. கீர்த்தியும்…ஜெகனாதனும் சாப்பிடுக்கொண்டிருந்தனர்…. கீர்த்தியை பார்த்தபடியே வந்தவன்….. போன் வர காதில் வைத்த படி கீர்த்தியின் அருகில் அமர்ந்து…அவளது தட்டில் உள்ள சப்பாத்தியை எடுத்து சாப்பிட்டபடி போனில் பேசிக் கொண்டிருந்தான்… ஜெகநாதன் மனமோ மகனின் செய்கையில் குளிர்ந்தது… தன் மகனும்… திருமண உறவை புரிந்து கொண்டான்…. அதில் வாழவும் ஆரம்பித்து விட்டான் என்று சந்தோசப் பட்டார்..

அவர் முன்னால் ஒன்றும் சொல்ல முடியாமல் கீர்த்தி தவிக்க…பாலா அவள் தவிப்பை… அவளை ரசித்தபடி தன் வேலையை தொடர்ந்தான்..

அவன் எப்போது அவள் தட்டில் கை வைத்தானோ அப்போதே கீர்த்தி தட்டில் கை வைப்பதை நிறுத்தி விட்டாள்….

இது அனைத்தும் அருந்ததி கண்ணில் தப்பவில்லை….அவர்களைப் பற்றி தெரிந்ததால்… அவர்கள் இருவரும் அழகாக மாட்டினார்கள் அவளிடம்….

மகனின் அருகே வந்தவள்… கீர்த்தியின் அவஸ்தையைக் காண முடியாமல்

”பாலா நேற்று இரவு சாப்பிடவில்லை என்றால்… அதற்காக இப்படியா.. கீர்த்தியை சாப்பிடவிடு…. என்ற படி அவனுக்கு தனியே தட்டு வைக்க… தாங்கள் இருவரும் நைட் சாப்பிடவில்லை என்ற அவன் குட்டு எப்படி உடைந்தது என்று அவன் அம்மாவிடம் அசடு வழிந்தான்… கீர்த்தி சொல்லி விட்டாளோ என்று பார்க்க ..அவளும் தன் அத்தையை அதிர்ச்சியோடுதான் பார்த்துக் கொண்டிருக்க… அவளும் சொல்ல வில்லை என்பதை உணர்ந்தான்….

அருந்ததிக்கு தன் மகனின் மன மாற்றம் நன்றாகப் புரிந்திருந்தது.. அவன் சொல்லாத போதும்…. அதேபோல் கீர்த்தியின் மனமும் அவள் பிடிவாதமும் புரிந்தது.. அவளும் அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை…. ஆனால் ..அவர்கள் வாழ்க்கை சுமூகமாக தன்னால் முடிந்தவற்றை அவர்களுக்கு பண்ண வேண்டும் என்று நினைத்தாள்….

ஏற்கனவே முடிவு பண்ணியிருந்த விசயம் தான்.. கீர்த்தி வீட்டில் வெள்ளிக் கிழமை மட்டும் கீர்த்தியே அவள் அம்மா-அப்பாவிற்கு விளக்கேற்ற வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.. வெள்ளிக் கிழமை தோறும் மஞ்சு மற்றும் சிந்துவை அவளுடன் அனுப்ப வேண்டும் நினைத்திருந்தாள்… இப்போது அதில் சின்ன மாற்றம் செய்தாள்..அதன் படி

சாப்பிட்டுக் கொண்டிருந்த கீர்த்தியிடம்

“கீர்த்தி நாளைக்கு ஈவ்னிங் நீ மைலாப்பூர் போய் தங்கி இருந்துவிட்டு வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் நீயே பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து விட்டு வர வேண்டும்… அப்படியே ராகவன் அண்ணா..மைதிக்கு உன் கையால் பூ போட்டு வா…. வீடு ஆளே இல்லாமல் வெறிச்சோடி இருக்கக் கூடாது” என்றவளின் வார்த்தைகளில்

உளமாற உருகி நெகிழ்ந்தாள் கீர்த்தி….. இப்படிப்பட்ட மாமியார் கிடைக்க அவள் கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்…

பாலாவோ …. மனதிற்குள்ளாக…அப்போ நாமளும் அங்கே ஆஜர் ஆகி விட வேண்டும் என்று நினைத்தபடி சாப்பிட..

அருந்ததி…. பாலாவிடம்…

”பாலா நீயும் கீர்த்தியோட போயிரு.. சிந்துவுக்கு எக்ஸாம்… அதனால் மஞ்சுவும்… சிந்துவும் வர முடியாது….” என்று சொல்ல…

பாலா அப்போதிருந்தே தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தான்….

அருந்த்தி பின்னாலெ வந்த பாலா…

“அம்மா…சாரிம்மா…தேங்க்ஸ்மா..என்றவனிடம்….

“நீ என் பிள்ளைதான் என்பது எனக்குத் தெரியும் பாலா…. அதனால்தான் நீ வழிமாறிப் போனாலும் தவறு புரிந்தால் திரும்பி விடுவாய் என்று நம்பினேன்.. அது நடந்து விட்டது…. ஆனால் என்ன அதற்கு நீ கொடுத்த விலைதான் அதிகம் பாலா…. என்று ராகவ்-மைதிலி இறப்பை உணர்த்த… வருத்தமுடன் தலை குனிந்தான் பாலா…

“கீர்த்தி நீ எப்படி வைத்திருக்கிறாய் என்பதில் தான் அவர்களின் ஆத்மா….. நிம்மதி அடையும்… அவர்கள் முன் போட்ட நீங்க போட்ட வேசம் நிஜமாக வேண்டும்….அது போதும் எனக்கு” என்றவளிடம்…

மானசீகமாக சொன்னான் பாலா…

”இனி கீர்த்தி என்னவள்.. என் உயிரும் உறவும் அவளே அம்மா” என்றவனை உளமாற ஆசிர்வதித்தாள் அவன் தாய்…

-----------

அன்று வியாழக்கிழமை…. காலையில் இருந்தே ஒரு வித பதட்டமாகவே இருந்தாள்… கீர்த்தி….. இங்கு ஒரே அறையில் தனியாகத்தான் இருக்கிறார்கள்….ஆனாலும் அங்கு…. கீர்த்தி வீட்டில்… எனும் போது பட படப் பாகவே உணர்ந்தாள்…

அது அலுவலகம் வரையிலும் தொடர்ந்தது…

பாலாவும் அதைக் கவனிக்கத் தவறவில்லை….

இருவரும் ஒன்றாகக் கிளம்பி கீர்த்தி வீட்டிற்கு வந்தனர்…. இரவு சாப்பிட்டு முடித்தவுடன் கீர்த்தி சமையலறையில் புக….பாலா சிறிது நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்தவன் …. தூக்கம் வர கீர்த்தியின் அறைக்குள் போய் படுத்து விட்டான்…

கீர்த்தியோ….. அவன் எப்போது என்ன பண்ணுவானோ என்ற பயத்திலேயே இருந்தாள்…. அவன் தூங்கப் போன பின் தான்… நிம்மதி ஆனாள்… ஆனாலும் ஏதோ ஒரு ஏமாற்றமும் தோன்ற அதை பின்னுக்குத் தள்ளினாள்…..

எல்லாம் முடித்து விட்டு தன் அறைக்குள் நுழைந்தவள்…. கண்ட காட்சி அவளை நிலை தடுமாற வைத்தது…. அவளது கட்டிலில் பாலா படுத்திருந்தான்…. அவன் கீழேதான் படுத்திருப்பான் என்று நினைத்தாள் கீர்த்தி….

எந்த இடம் அவன் சொந்தமில்லை…. என்று சொன்னானோ.. அதில்… இது இந்த இடம் தன் உரிமை… இந்த இடத்தை அவளோடு பங்கு போட பிறந்தவன் அவனே என்பது போல் தலையணையைக் கட்டிக் கொண்டு படுத்திருந்தான்.

அவனின் அந்தச் செயல் நான் உன்னவன்…. நீ என்னவள் என்ற உணர்வை….சொல்லாமல் சொல்லியது…. அது புரியாதவளா…கீர்த்தி.. அவன் தூங்குவதையே சில நிமிடங்கள் பார்த்து நின்றவள்….. பிறகு ஹாலுக்கு வந்தவள்… அப்படியே அமர்ந்திருந்தாள் சில மணி நேரம்…. எதிரே உள்ள புகைப்படத்தில் ஜோடியாக அவளைப் பார்த்து சிரித்தபடி இருந்த அவளின் பெற்றோரை….. பார்க்க பார்க்க… அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் அவர்களை இருவரின் நினைவுகளை … அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஞாபகப்படுத்த …. துக்கம் தாளாமல்…. துவண்டாள் அவர்களின் செல்ல மகள்…. ஒரு கட்டத்தில் கண்ணீரைத் துடைத்தவள்… அங்கிருந்து எழுந்து டிவியின் மேல் இருந்த அவர்கள் மூவரும் சேர்ந்து இருந்த போட்டோவையும்… அறையினுள் நுழைந்தவள்….. மைதிலியின் சேலையை எடுத்து வந்தவள் போட்டோவை தன் மார்போடு அணைத்தவள் …. தன் தாய் சேலையில் தன் தலையை வைத்து படுத்தாள்…. அது மைதிலி மடியில் தலை வைத்து படுப்பது போல் இருக்க நெஞ்சோடு அணைத்திருந்த புகைப்படம் அவர்கள் மூவரும் மட்டும் வாழ்ந்த நினைவை வழங்க அவர்கள் இருவரும் அவளுடன் இருப்பது போல உணர்வு தோன்ற கண் உறங்கினாள்….

இதெல்லாம் அறியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தான் பாலா….. அதிகாலை எழுந்தவன்… கீர்த்தியை அறையினுள் பார்த்தான்….. அருகில் படுத்திருக்க மாட்டாள்தான்… கீழே கூட படுக்கப்பிடிக்கவில்லையா அவளுக்கு.. நான் என்ன செய்தேன் அவளை!! என்று நினைத்தான்… இந்த அறையில் இல்லாமல் எங்கே படுத்தாள் என்று கடுப்பானவன்… ஹாலிற்கு வந்தவன் தன் மனைவி படுத்திருந்த கோலத்தில்.. அவனது மனம் அவளின்பால் கசிந்து உருக …..அவனது கடுமையெல்லாம்….இருந்த இடம் தெரியாமல் போனது… அவளை எந்த வித தொந்தரவும் செய்யாமல்……. கிச்சனுக்குள் நுழைந்தவன்… தானே காபியை கலந்தான்….காஃபியை எடுத்துக் கொண்டு அவளின் எதிரில் அமர்ந்து அந்த அழகான காலை வேளையில்….தன்னவளின் முகத்தை… படுத்திருந்த விதத்தை தன் கண்களால் பருகியபடி… காஃபியை அருந்தினான்….

அவளை தன்னோடு… தன் மார்போடு அணைத்து…. உனக்கு நான் இருக்கிறேன் கண்மணி… என்று சொல்லத் துடித்த…. மனதையும்…. கைகளையும் அடக்கியவன்…. அவளைப் பார்த்தபடி மட்டும் இருந்தான்….. அவளை அணைக்க முழு உரிமை இருந்த போதும் அவளிடம் அதை செய்ய முடியாத தன் நிலையை எண்ணி வருந்தினான்…….

அவனின் பார்வையாலோ …. இல்லை தானாகவே விழிப்பு வந்ததோ தெரிய வில்லை… எழுந்தவள்…..தன் எதிரே அமர்ந்து தன்னையே பார்த்து அமர்ந்திருந்த பாலாவைப் பார்த்தவள்… பட்டென்று எழுந்தாள்… தான் படுத்திருந்த நிலையை உணர்ந்து…. அவன் என்ன நினைத்திருப்பானோ என்றபடி எழுந்து போனாள்…..

பாலாவிற்கோ தன்பார்வை அவளை தொடர்வதை தவிர்க்க முடியவில்லை….

கீர்த்தியோ அதை உணர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் நடமாடிக் கொண்டிருந்தாள்

அதன் பிறகு விளக்கேற்றி வைத்து விட்டு… தன் தாய் தந்தைக்கு பூவை அணவித்து விட்டு அவர்களின் முன் வேண்டியபடி நின்றாள் கீர்த்தி ….

பாலா அவர்களைப் பார்த்தபடி …. தன்னை மட்டும் நம்பி விட்டுப் போன அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற அவனுக்கு அவர்கள் துணை புரிய வேண்டும் என்று மனமாற வேண்டினான்….

அலுவலகம் செல்லும் வழியில் கீர்த்திக்கு வினோத்திடமிருந்த்து கால் வந்தது….

ஓரளவு நார்மலாக இருந்த்தால்….உற்சாகமாகவே பேசினாள். கீர்த்தி….

“வினோத் இன்னும் 15 நாளில் வருகிறாயா…. என்ன விசயம்… “ என்று கேட்க

அவன் அலுவலகம் வைப்பதற்கான இடம் ஒன்று நல்ல விலையில் கிடைக்கிறது…உடனே அதை பேசி முடிக்க வேண்டும்….என்றும்…அது மட்டும் முடிந்தால்…. விரைவில் இங்கு திரும்ப செட்டிலாக முடிவு செய்திருப்பதைக் கூறினான்…….

வினோத்திற்கும்..அங்கு இருக்க பிடிக்க வில்லை…. அவளை அப்படியே விட்டு விட்டு வந்தது போல் இருந்த்து… மனதே அங்கு இல்லை…எல்லாம் இங்குதான்… கீர்த்தியின் மேல்தான் இருந்தது…. ஒருவேளை தாங்கள் US வராமல் இருந்திருந்தால்…. இதெல்லாம் நடந்திருக்காதோ… கீர்த்தியை மிஸ் பண்ணாமல் இருந்திருக்காலாமோ…. ராகவன் – மைதிலியை இறப்பு நடந்திருக்காதோ.. அவர்கள் முகத்தை கூட பார்க்க முடியவில்லை என்று மறுகிக் கொண்டிருந்தான்… இதற்கு மேலும் அங்கு இருந்து இன்னும் எதையும் மிஸ் பண்ணக் கூடாது என்று முடிவெடுத்தவன் இங்கு செட்டிலாகும் வேலைகளைத் துரிதப் படுத்த… அதன் விளைவே அவனின் இந்தியப் பயணம்…

அவனின் முடிவைக் கேட்டவள்…. சந்சோசத்தில் அவனிடம் துள்ளளாகப் பேச ஆரம்பித்தாள்… பழைய கீர்த்தி அவளிடம் திரும்பி இருந்தாள்…

வினோத்தும் அவளுடன் சரிக்கு சரியாக வாயாட ஆரம்பித்தான்…. குறத்தி என்று கூப்பிட்டெல்லாம் கிண்டல் செய்யாமல் .. தற்போதைய அவளின் உற்சாகத்தை கெடுக்காமல் …ஒழுங்காக பேசினான்…

பிறகு பாலாவிடமும்…. தன்னுடைய முடிவைக் கூறியவன்… தன் தொழில் தொடர்பாக தனக்கு அவன் உதவியும் தேவை என்பதைச் சொல்லி போனை வைத்தான்….

கீர்த்தி அவன் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள்…..

கீர்த்தியின் உற்சாகம் பாலாவுக்கு சந்தோசத்தைக் கொடுத்தாலும்…. அதற்கு வினோத் தான் காரணம் என்கிறபோது மனம் சிறிது சுணங்கத்தான் செய்தது.

1,431 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page