அத்தியாயம் 22
கடந்த நாட்களில் நடந்த நினைவுகளில் மூழ்கியிருந்த இருவரையும் பாலாவின் போன் கால் மீட்டது…..
அது குமாரின் கால் என்பதால் அவசரமாக எடுத்துப் பேசினான் பாலா…
“என்ன குமார் அப்பாக்கு ஒன்றுமில்லையே” என்று பட படத்தவனின் முகத்தைப் பார்த்த கீர்த்திக்கும் தானாய் பதட்டம் ஒட்டிக் கொண்டு விட்ட்து…..
ஆனால்…எதிர் முனையில் என்ன கூறப் பட்டதோ தெரியவில்லை.. பாலாவின் முகம் அமைதியாகியது….
”குமார் நானும் வீட்டுக்குத்தான்… போய்ட்டு இருக்கேன்…. நீங்க எப்போ வருவீங்க நான் வந்த பிறகு நீங்க போங்க…..நான் வந்த பிறகுதான் நீங்க போக வேண்டும் என்று அழுத்திக் கூறியபடி போனை வைத்து விட்டு கீர்த்தியிடம் திரும்பினான்…
“கீர்த்தி … குமார் தெரியும்ல உனக்கு… அவரோட பொண்ணு சிந்து …..பாட்டி வீட்ல இருந்து படிக்கிறாள்… ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்… அடுத்த வருடத்தில் இருந்து இங்குதான் படிக்க போகிறாள்… இப்போ….
என்று நிறுத்தியவன்..
சிந்து பெரிய பெண்ணாகி விட்டாளாம்… அதுதான் குமார் கால் செய்தார்…. முழு ஆண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது…. இன்னும் இரண்டு தேர்வுகள் உள்ளனவாம்… முடித்து விட்டு உடனே கூட்டி வந்து விடுவாராம்…. அப்பாவிற்கு குமாரின் உதவி தற்போது பெரிதும் தேவை என்பதால்…. இப்போது கூட போகத் தயங்கினார்….ஆனாலும் சிந்துவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கும் அல்லவா… நான் கிளம்பச் சொல்லி விட்டேன்.. என்று சொன்னவன் சிந்துவைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்…
எங்க அம்மாவுக்கு சிந்து என்றால் மிகவும் இஷ்டம்…..விடுமுறையில் இங்குதான் இருப்பாள்… சரியான அறுந்த வாலு…. நீ உங்க அப்பா அம்மாகிட்ட எப்டி இருப்பாயோ அதே மதிரி எங்க வீட்டில் சிந்து அட்டகாசம் பண்ணுவாள்…. எங்க வீட்டில் அவளுக்கு என்று ஒரு தனி இடம் என்று கீர்த்தியிடம் விவரித்தபடி… காரினை திருப்பினான் ….
அடுத்த இருபது நிமிடங்களில் தி.நகரின் பிரபல ஜவுளிக் கடையில் இருவரும் இருந்தனர்…
கீர்த்தியிடம் திரும்பி சிந்துவுக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும்… ஒரு பட்டுப் புடவை தென் சுடிதார் என்றவன்…. செலெக்ட் பண்ணு…. என்று அவளைப் போகச் சொன்னான்…
செலெக்ட் பண்ணு என்றால்… எந்த ரேஞ்சில் என்று சொல்ல வேண்டாமா என்று யோசித்து அவனைப் பார்த்து வழக்கம் போல் அக்மார்க் முறைப்பை வழங்க…
பாலாவும் வழக்கம் போல் அதை சட்டை செய்யாமல்…. அவள் முறைத்த முறைப்பை வைத்தே அவள் என்ன யோசிக்கிறாள்… என்பதை உணர்ந்தவன்
உனக்கு ஒரு தங்கை இருந்து நாம் கணவன் மனைவியா என்ன பண்ணியிருப்போமோ…. அந்த எண்ணத்தில் போய் எடு…. என்று பாலா சொன்னவுடன் கீர்த்தியின் கண்களில் ஒரு மின்னல்….
முதல் முறை யாருக்காகவும் இல்லாமல், தனிமையில் தன் கணவன் தங்கள் உறவினை முன்னிறுத்திக் கூறியதை உணர்ந்தாள்…
அதற்கு காரணமான முகம் தெரியாத சிந்துவின் மேல் பாசம் வந்தது. பாலாவிற்கும் அவள் மேல் மிகவும் பாசம் என்பதினை உணர்ந்தவள்….
சிந்து…….. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று கேட்டிருக்கிறோம்…… சீதையை மீட்கும் முயற்சியில் அணில் ராமனுக்கு உதவி செய்ததாம்….. அது போல் கீர்த்தி – பாலா வாழ்க்கையில் விளக்கேற்ற ……. திரியின் தூண்டுகோல் போல் அவள் அவர்கள் வாழ்வில் வந்தாள்……. ஒருமுறை….. பாலாவை அவன் கைப்பற்றி இழுத்து கீர்த்தியோடு சேர்த்து……. அவனின் மனதில் கீர்த்தி வரத் தூண்டினாள் ……. இன்னொரு முறை…… கீர்த்தியின் அடிமனதில் வெகுநாளாய் உறுத்திய முள்ளை எடுக்கவும் காரணமாகவும் இருந்தாள் …..
முதன் முதலில் கடைக்கு வருகிறோம் தனக்கென்று என்று ஒன்றும் வாங்காமல்..வெறொரு பெண்ணிற்கு வாங்குகிறோம் என்ற பொறாமை உணர்வெல்லாம் இல்லாமல் அவளுக்கு திருப்தி ஆகும் வரை சிந்துவுக்காக பார்த்து பார்த்து எடுத்தாள்… அதன் பிறகு…. நகைக் கடையிலும் அதுவே நிகழ்ந்தது..
கீர்த்திக்கு அவன் வாய் மொழியாக வந்த கணவன் – மனைவி என்ற வார்த்தையிலேயே குளிர்ந்த மனம் மூலமே அவன் மேல் உள்ள காதலை உணர்ந்தாள்……எப்படி வந்தது என்று அவளால் சொல்ல முடியவில்லை….. ஆனால் நிலையில்லா உறவின் மேல் வந்து விட்டது… பாலா மேல் ஏன் காதல் வந்த்து …. தன்னைக் காதலிக்காதவன்…… மனைவி என்று நினைக்காதவன்… இன்னொரு பெண்ணை மனதில் சுமப்பவன் … இப்படி காதலின் அடிப்படையே ஆட்டம் கொண்டிருக்க….. வெறுத்து….. தள்ளி வைக்க வேண்டிய ஒருவன் மேல் காதல் வருமா?.. வந்துவிட்டதே…. என்று அவளின் மனம் அவளிடமே எள்ளி நகையாடியது…. இதுதான் தான் அவள் வாழ்க்கை…. அவனோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் தன் மனதில் சேமித்து வைக்க ஆரம்பித்தாள்….. அவனுக்கு தெரியாமலே..
வீடு திரும்பியவர்கள்… குமாரிடம் தாங்கள் வங்கிய பொருகளை கீர்த்தி மூலமாகவே கொடுக்க செய்தான்…. கீர்த்தியின் மூலம் இதை அறிந்த மைதிலி-ராகவனுக்கு தங்கள் மருமகன் மேல் மிகவும் பெருமையாக இருந்தது.. மைதிலியின் மனம் மெல்ல மெல்ல பாலாவை மருமகனாக முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்த்து…
ஜெகனாதன் இன்னும் மருத்துவ மனையில் தான் இருந்தார்… … அருந்த்தி யும் அவருடனே இருந்தார்… வீட்டிற்கும் போகப் பிடிக்க வில்லை… ஜெகனாதனும் அவளை வீட்டிற்கு போகச் சொல்லி வற்புறுத்தவில்லை… மகன் – மருமகளின் தனிமையை கெடுக்க நினைக்க வில்லையோ என்னவோ ?????....
இவ்வாறு மூன்று நாட்கள் போக…. குமாரும் சிந்துவுடன் சென்னை திரும்பினான்…
சிந்து பார்க்க கீர்த்தியும் பாலாவும் அன்று சீக்கிரமாகவே வீடு திரும்பினார்கள்.
குமாரின் வீட்டில் … அமைதியாய் அமர்ந்திருந்த சிந்துவை மிகவும் பிடித்து விட்டது… ஒல்லியாய் அவளது அம்மாவின் தோற்றத்தில் இருந்தாள்… புதிதாய் உணர்ந்த பருவ மாற்றத்தில் அமைதியாய் இருந்தாள்… கீர்த்தியை பார்த்து புன்னகைத்தவள்… பாலாவைப் பார்த்து வெட்கத்துடன் தலை குனிந்தாள்…
அவள் அப்படி குனிந்த போது தன் பருவம் எய்திய போது வினோத்தைப் பார்த்து செய்தது போல் இருந்தது…… ஆனால் அதற்கு அடுத்த நொடியே “குறத்திக்கு வெட்கமெல்லாம் வருது” என்று அவன் வாய்விட்டதும்…. அருகில் பாதுகாப்புக்கு என்று போடப்பட்டிருந்த இரும்புக் கம்பியால் அடி கொடுத்ததும் நினைவு வர அன்றைய ஞாபகத்தில் முகம் மலர்ந்தாள்…
இவள் அராத்து வாயாடி என்றெல்லாம் பாலா சொன்னாரே… இவ்வளவு அமைதியாக இருக்கிறாளே என்று நினைத்தபடி
சிந்துவின் அருகில் போய் அமர்ந்தாள்….
அவள் அமர்ந்ததும் சிந்து
“ஐயையோ அக்கா நீங்க என் பக்கத்தில் உட்காரக் கூடாது…. தீட்டு ஒட்டிக்கிறுமாம்… உங்களுக்கு தெரியாதா…. “ என்று அலறியபடி தள்ளி அமர்ந்தாள்…
பாலா…கீர்த்தியிடம்…. ”கீர்த்தி சிந்து பெரிய மனுசியாய்டால்ல …. அதுனால அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு….. உனக்குதான் ஒன்னும் தெரியல..” என்றபடி
“என்ன பாப்பா அப்படித்தானே” என்று சொல்ல
அவன் எப்போதும் சிந்துவை அப்படித்தான் கூப்பிடுவான்… அவன் இப்போது அதுவும் கீர்த்தியின் முன் பாப்பா என்று கூப்பிட்டவுடன் சிந்து வேகமாகவும்… அதே நேரத்தில் சிணுங்கலாகவும்
“அய்யோ பாலாண்ணா.. என்ன பாப்பானு கூப்பிடாதீங்க ப்ளீஸ்” என்று கூறியபடி…முதலில் இருந்த தயக்கமெல்லாம் போய் சகஜமானாள்….
”பாலாண்ணா நா உங்க கூட பேச மாட்டேன் போங்க” என்று வேறு புறம் முகத்தை திருப்ப….
“ஏன் பாப்பா” என்றவன்
“என்னை மறந்துட்டீங்க … உங்க கல்யாணத்துக்கு ஏன் கூப்பிடவில்லை…. எங்க அப்பா அம்மாவும் என்னைக் கூட்டி வர வில்லை… உங்களுக்கெல்லாம் வந்து கச்சேரி வைக்கலாம்னு பார்த்தால்… எல்லாரும் எஸ் ஆகீட்டிங்க….. “ என்றாள் தன் நிலையினை உணர்ந்து..
கீர்த்தி இப்போது உணர்ந்தாள்…. அவள் வாயாடிதான்…..
”இப்போ கூட கோபம்தான்…. ஆனா கீர்த்தி அக்காவுக்காக பார்க்கிறேன்…”
பாலாவோ ..
”அது என்ன அக்காவுக்காக…. அவ மட்டும் என்ன ஸ்பெஷல் … நான் இல்லாம உங்க அக்கா மட்டும் வந்து விட்டாளா என்ன? ” என்று விடாமல் வம்பிழுக்க
”கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு சுத்திட்டு திருஞ்ச எங்க பாலா அண்ணாவையே கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல வைச்சுடாங்கல்ல்… அப்போ ஸ்பெஷல் இல்லையா ” என்று எதிர் கேள்வி கேட்டு தாக்க அதிர்ந்தது கீர்த்திதான்…
“நான் எங்க சம்மதம் சொல்ல வைத்தேன்… என்னை அல்லவா இவன் சம்மதம் சொல்ல வைத்தான்” என்று மனதிற்குள் பொறுமியபடி இருக்கும் போதே
பாலாவும்…
“அந்த விசயத்தில் உங்க அக்கா ஸ்பெஷல்தான்” என்று அவளை ஆமோதிக்க”
கீர்த்திக்கோ…
“இவன் வேறு எரியிற நெருப்பில் எண்ணெய ஊற்றுகிறான்” என்றிருந்தது….
அதன் பிறகு…. பாலா கிளம்பிவிட … கீர்த்தி மட்டும் அவளோடு பேசிக் கொண்டிருக்க….. தன்னோடு பதிலுக்கு பதில் வாயடித்த சிந்துவை அவளுக்கு பிடித்து போனது…….
-------------------
ஜெகனாதன் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவ மனையில் சொல்லப் பட்டிருந்தது…..
இதற்கிடையே
பாலா-கீர்த்தி உறவு முறையில் எந்த வெளிச் சலனமும் அண்டாமல் எப்போதும் போல் போய்க் கொண்டிருந்தது…
அவளுடன் தனி அறையில் இருக்கும் போது பாலா மிகவும் கவனமாக இருந்தான்… அவள் தூங்கிய பின்னே அறைக்குள் தூங்கச் சென்றான்….காலையில் அவள் எழுந்திருக்கும் முன் எழுந்து அறையை விட்டு வெளியேறி விடுவான்… அப்படியே இருவரும் இருக்கும் சூழ்னிலையில் கூட எந்த விதமான மனதைச் சங்கடப் படுத்தும் சலனப் படுத்தும் விதமாக எதுவும் நடக்க வில்லை….. இல்லை அது பாலாவின் எச்சரிக்கையான நடவடிக்கையால் நிகழவில்லையா என்பது தெரியவில்லை…. உடை மாற்றும் விசயத்தில் இருந்து… உறக்கம் வரை கீர்த்தியினை பாதிக்காதவாறு நடந்து கொண்டான்….
கீர்த்திக்கு மட்டும் அவன் மேல் காதல் என்று ஒன்று இல்லாவிட்டால்… இவனை மாதிரி நல்லவனே உலகத்தில் இல்லை.. இவனை நம்பி இந்த உலகத்தின் மொத்த மங்கையர் கூட்டத்தை கூட விடலாம் என்று முதல் ஆளாய் உத்திராவாதம் தருவாள்.. ஆனால் காதல் வந்து விட்டதே… அவனின் கண்ணியமான நடவடிக்கையில் கடுப்புதான் வந்தது…
பாலாவோ தன்னை நம்பி வந்த கீர்த்தனாவிற்கு…. பிற்கால வாழ்க்கையில் தன்னோடான இந்த வாழ்வு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தக் கூடாது…. அவனுக்கு ஒரு எண்ணம் இருந்த்து… வினோத்தின் பழக்க வழக்கம் ஒரு மெச்சூர்டாய் இருந்ததால்….. அவனிடம் தங்களைப் பற்றி சொன்னால் புரிந்து கொள்வான்… அப்படியே ஏற்கனவே பேசி வைத்து இருந்த திருமணத்தினைக் கூட இருவருக்கு நடத்தலாம் வேண்டும் என்று… ..
எந்த ஒரு கணவனும் சிந்திக்காத எண்ணம்…இதை மட்டும் கீர்த்தனாவிற்கு தெரிந்திருக்க வேண்டும்… நல்ல வேளை மனிதன் நினைப்பது எல்லாம் மற்றவருக்கு தெரியாத காரணத்தால்…… இந்த விசயத்தில் பாலா தப்பித்து விட்டான் கீர்த்தியிடமிருந்து..
----------------------
கீர்த்தி வெள்ளி இரவு தாய் வீட்டிற்கு சென்று சனிக்கிழமை இருந்து விட்டு ஞாயிறு மாலை பாலா வந்து கூட்டிச் செல்லும் பழக்கத்தை ஆரம்பித்திருந்தாள்….மைதிலிக்கு சந்தேகம் வராதவாறு இருக்க பாலாவின் ஞாயிற்றுக் கிழமை வருகை… மகளின் வருகையும்…மருமகன் அதற்கு அனுமதி அளித்து… வந்து கூட்டிச் செல்வதும் ………… மகளின் திருமண வாழ்வில் பெருமிதம் கொண்டனர்…….
கீர்த்தியும், சிந்துவும் நன்றாகப் பழகத் தொடங்கி இருந்தனர்……
கீர்த்தி தன் வீட்டிற்கு ஒருமுறை சிந்துவை கூட்டிச் சென்றாள்… கீர்த்தி பெற்றோரிடம் பழகும் முறையினை பார்த்து…. கீர்த்தியிடம் சிந்துவிற்கு நெருக்கம் அதிகரித்தது எனலாம்..
சிந்து ஊரில் ஆங்கில வழிக் கல்வியில்தான் படித்த்தாள்….. இங்கு இருக்கும் பள்ளிகள் போல் இல்லாமல் அங்கு பேர்தான் ஆங்கில வழி…. அதற்காக கீர்த்தியிடம் தான் தனது ஆங்கிலப் புலமையினை மேம்படுத்த கற்றுக் கொண்டிருந்தாள்….
அன்றும் அப்படித்தான் கீர்த்தி அவளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே… சிந்து அவள் சொல்தை கவனிக்காமல்
”அக்கா பாலா அண்ணாவிற்கு என்ன கிஃப்ட் கொடுக்க போறீங்க” என்று வினவ
கிஃப்டா பாலவுக்கா…எதற்கு என்று தெரியாமல் விழிக்க…
சிந்துவோ… அதையெல்லாம் கவனிக்காமல்.
.சரி சரி உங்க ஆத்துக்காரர் பிறந்த நாளிற்கு வாங்கி வச்சிருக்கறதை எனக்கு சொல்வீங்களா” என்று பாடத்தில் மூழ்க…
இப்போது கீர்த்திக்கு கவனம் சிதறியது…
“பிறந்த நாள் இன்றா….. இல்லை… நாளையா……. இல்லை இந்த வாரமா?... சிந்துவிடம் கேட்க முடியாது… அப்புறம் அவள் கேள்விக் கணைகளில் இருந்து தப்பிக்க முடியாது… எனவே அவளிடம் கேட்க வில்லை..
அன்று இரவு பாலா அறையினுள் வரும் வரை விழித்திருந்தாள்…
அவள் உறங்கி இருப்பாள்… என்று நினைத்திருந்த பாலா அவள் உறங்காத போதே அவள் அவனிடம் பேசக் காத்திருக்கிறாள் ….என்பதை
உணர்ந்து அவளிடம் என்ன விசயம் என்று விசாரித்தான்…
கீர்த்தி பாலாவை பார்த்தாள்… அவன் முகம் துக்கம் நிரம்பி இருக்க….
கேட்கலாமா… இல்லை வேண்டாமா என்று யோசித்தவளுக்கு இந்த பிறந்த நாளை விட்டு விட்டால் இனிமேல் தனக்கு வாய்ப்பே கிடைக்காது என்ற எண்ணம் வலுப் பெற….
மாலையில் சிந்து கூறியதைச் சொன்னாள்….
அவனும் நாளைதான் தனக்கு பிறந்த நாள் என்றும் …. கடந்த நான்கு வருடங்களாக அதைக் கொண்டாட பிடிக்கவில்லை….என்றும் சொன்னவன் என் வாழ்வே அர்த்தம் இல்லாமல் போய் விட்டது. ஏன் பிறந்தோம் என்று ஆகிப் போன வாழ்க்கைக்கு தயவுசெய்து வாழ்த்துக்கள் சொல்லி விடாதே கீர்த்தி…. அதுவும் என்னைப் பற்றி தெரிந்த நீ வாழ்த்து சொன்னால் அது…. என்னைக் கேலி பண்ணுவது போலிருக்கும் …என்று அவளது வாழ்த்தை நாசுக்காய் மறுத்து விட்டு தளர்வாய் நடந்த படி உறங்கச் சென்று விட்டான்..
கீர்த்திக்கு பாலாவின் துக்கம் அடி வரைத் தாக்கியது….
தன் பிறந்த நாளைக் கொண்டாட,, வாழ்த்தை கூட ஏற்க முடியாமல் துக்கத்தில் துவளும் கணவனை ஆறுதல் படுத்த முடியாமல்… அவனையே பார்த்தபடி நின்றாள்…. தன் ஒருதலைக் காதல் தான் நிறைவேறப் போவது இல்லை…. தன் கணவனாவது சந்தோசமாய் இருக்க வேண்டும்.. அவன் காதலாவது நிறைவேற வேண்டும்…. அதற்கு அவன் மது கிடைக்க வேண்டும் என்று மனதார கடவுளிடம் வேண்டினாள்… அதே நேரத்தில் தன் நிலைமை வேறு எந்தப் பெண்ணிற்கும் வரக் கூடாது என்றும் வேண்டியபடி உறங்கினாள்…
அவள் எழும் போதே……… அவள் பெற்றோர்கள் அவளுக்கு கொடுத்திருந்த மிஸ்ட் காலினால்….. கால் செய்ய
ராகவன் தான் பேசினார்… பாலாவைக் கூப்பிட்டு வந்திரும்மா? இன்னைக்கு அவரோட பிறந்த நாள் அல்லாவா, அருந்ததி, ஜகன் ஹாஸ்பிட்டலில் இருப்பதால் …. மைதிலிதான் இங்கு பாலாவைக் கூப்பிட வேண்டும் என்று சொன்னாள்…. எப்போ வறீங்க??.... என்று கேட்க
கீர்த்தியோ…. இவங்களுக்கு எப்படி தெரியும்….. என்று யோசித்தாள்…. அவர்களின் ஜாதகம் பார்க்கும் போது மைதிலி குறித்து வைத்திருந்தாள்.. அது தெரியாமல் கீர்த்தி யோசித்தாள்
“எப்படியோ தெரிந்து விட்டது” அதை விட்டு விட்டாள்… இவங்க ரெண்டு பேரும் பாலாக்கு wish பண்ணுகிறேன் என்று அவரது துக்கத்தை கிளரி விடப் போகிறார்கள் என்று பதறியவள்….. உடனே
“அப்பா அவரிடம் கேட்டு விட்டு சொல்கிறென் …. ” என்று சொல்லும்போதே….
“கீர்த்திமா… உனக்குதான் முதலில் கால் செய்தோம்…. நீ தூங்கிக் கொண்டிருந்த்தால் எடுக்க வில்லை…. பாலாதான் உன் மொபைலில் இருந்து பேசினார்…. என்று கூற…
கீர்த்திக்கு அப்பா பாலாவிடம் பேசினாரா…..என்ன பேசினார்…. வீட்டுக்கு வேறு வரச் சொல்கிறார்…. என்றிருந்தது….
அவளை மேலே யோசிக்க விடாமல் மைதிலி பேசினாள்…
” கீர்த்தி… பாலாகிட்ட நீ ஒன்றும் கேட்க வேண்டாம்… நாங்களே பேசிட்டோம்… வருகிறேன் என்று சொல்லி விட்டார்… உன் தூதெல்லாம் எங்களுக்கும் … பாலாக்கும் தேவை இல்லை…. நீ முதலில் எழுந்து இங்கு சீக்கிரம் வரும் வழியைப் பார்…. அவரே எழுந்து விட்டார்…. நீ இப்போதான் எழுந்திருக்கிறாய்……. சீக்கிரம் கிளம்பு….” என்று கண்டிப்பு பாதி…கொஞ்சல் பாதியாக முடித்தாள்….
மைதிலி பேசியதிலேயே அவள் உற்சாகத்தை காட்டியது…. இந்த அம்மா வேற ….என்று அலுத்தபடி எழுந்தவள்…. குளிக்கச் சென்றாள்….
பின் பாலாவை பார்க்கச் சென்றாள்…. அவன் தன் பெற்றொருக்காகச் சொல்லியிருப்பான்… அவன் என்ன முடிவில் இருக்கிறான் என்று தெரியவில்லை அவளுக்கு….
பாலா கீழே ஹாலில் இருந்தான்….
கீர்த்தி அவனிடம்….
“ஸாரி பாலா….அம்மாவும் அப்பாவும் உங்களை காலையிலயே ப்ரெஷர் ஏற்றி விட்டு விட்டார்கள் போல…. “ என்று சுற்றம் மறந்து பேசியவளை…. இழுத்துக் கொண்டு அவர்களது அறைக்குச் சென்றான்…
”இப்போ சொல்லு….”
கீர்த்தி சொல்லும் நிலையில் இப்போது இல்லை… அவனது இறுக்கமான கை பிடித்தலில் தன்னை மறந்திருந்தாள்…. அவன் கரம் பற்றியதிலே அவள் பேச்சை இழந்திருந்தாள்…..
அவள் பதில் சொல்லாமல் அப்படியே நிற்பதைப் பார்த்தான்… அவனுக்குத் தெரியவில்லை… தன் கை தீண்டலில் தான் தன் மனைவி தன்னை மறந்து நிற்கிறாள் என்று….
“கீர்த்தி” என்ற சத்தமான பாலாவின் அழைப்பில் தன்னிலை வந்தவள்… தன்னை சுதாரித்தவளாய்….
“அவங்களுக்கு எப்படி தெரியும்னு தெரியல பாலா…. ஆனால் நான் எதுவும் சொல்ல வில்லை…. உங்க நிலைமை அவங்களுக்கு தெரியாமல்… ப்ச்ச்.” என்று பெற்றவர்களை நொந்தவளை…
”கீர்த்தி …. எதுக்கு இப்படி ஃபீல் பண்ணுகிறாய்…. உனக்கு மதுவைப் பற்றி தெரியும்… அதனால் அப்படி சொன்னேன்… மாமா அத்தையிடம் அப்படி சொல்ல முடியாது அல்லவா? நாம இப்போ கிளம்பலாமா…எனக்கு வேலை இருக்கிறது… இப்போதே கிளம்பினால்தான் சரியாக இருக்கும்..என்றவனின் பதிலில் நிம்மதி அடைந்தாள்…
ஆனால்.. அங்கே தன்னைப் பெற்றவர்கள் என்ன கூத்து பண்ணி வைத்திருப்பார்களோ என்று எண்ணியவள்…
பாலாவிடம்…
பாலா… அங்கே உங்கள் பிறந்த நாள் என்பதால் கொண்டாட்டம்…சமையல் என்று விசேசமாய் ஏதாவது ப்ளான் செய்து வைத்திருப்பார்கள் …. அவர்கள் எது செய்தாலும் எனக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்… உங்களுக்கு கோபம் வந்தால் கூட என்னிடம் காட்டுங்கள்… ப்ளிஸ்…. என்று கெஞ்ச
”கீர்த்தி சொன்னால் நோ அப்பீல் “ என்று சிரித்தபடி அவளைக் கடந்து போனான்…
அவன் போய் விட்டான்… அவன் சொன்ன வார்த்தைளை அவன் சொன்னவாறு தனக்குள் சொல்லிப் பார்த்தவள்..
அடேங்கப்பா…. நான் சொல்வதை எல்லாம் நீ கேட்டு விட்டாலும்…. இதில் நான் சொன்னால் நோ அப்பீல் –னு வேற வெட்டியா லூஸ் டாக்
என்று மனதிற்குள் திட்டியபடி…. சேலைதான் கட்ட வேண்டும் என்று சொன்ன மைதிலியையும் மனதிற்குள் அர்சிக்க தவறவில்லை…
அவளுக்கும் புடவை கட்ட பிடிக்கும் தான்… நேர்த்தியாகவும் கட்டுவாள்தான்…. ஆனால் கட்டியபிறகு நடப்பது கூட அவளுக்கு சிரமம்... சாதரணமாய் இருக்க முடியாது…. அதனாலேயெ புடவை அணிவதை தவிர்ப்பாள்…. கவனம் எல்லாம் அதிலேயே இருக்கும்…. அசெளரியமாக இருப்பதாகவே படும் அவளுக்கு…. அதுவும் பாலாவின் முன்…… இயல்பாகவே அவளுக்கு நாணம் வந்தது.. அவன் தன்னைப் பார்ப்பானா என்றிருந்தது…
ஆனால் பாலாவோ கிளம்பும் அவசரத்தில் இருந்தானே தவிர அவளது உடையில் எல்லாம் கவனம் பதிக்க வில்லை.... அப்படியே பட்டாலும் அதை அவன் பார்த்து ரசிக்கப் போவதும் இல்லைதான்…..
கீர்த்தனா.. அறையில் இருக்க…. பாலா ஹாலில் அலுவலக ஃபைல்களை சரிபார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்…… நேற்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஃபைலை அறையிலேயே விட்டு விட்டான்… அதை எடுக்க தன் அறைக்குள் மாடியில் ஏறிய வேகத்திலேயே நுழைய… கீர்த்தியும் அப்போதுதான் வெளியேற கீர்த்தி அறைக் கதவை இழுக்க… பாலா அதே நேரத்தில் பலமுடன் கதவினைத் தள்ள… ஏற்கனவே கீர்த்தி இழுத்தபடியால் பாலா கதவின் மேல் கை வைத்திருந்தாலே கதவு திறந்திருக்கும்..
ஆனால் எதிர்பாராமல் கீர்த்தியின் புறம் அதிகப்படியாக தள்ளப் பட…. அதை எதிர்பார்க்காத பாலா தான் முதலில் தடுமாறினான்… தன்னை நிலைப் படுத்த ஒரு ஆதரமாக கதவைப் பிடிக்க முயன்றவன் அது கைக்கு எட்டாமல் கீர்த்தியின் மேல் மோதப் போக…இருந்தும் அவளின் மேல் மோதலை தவிர்க்க நினைக்க…. கீர்த்தனாவோ கதவு வேகமாகத் தள்ளப் பட்டவுடன் பாலாவைப் பார்த்து பதட்டமாகச் சற்று பின்னே நகர வழக்கத்திற்கு மாறாக அணிந்திருந்த சேலையின் காரணமாக அவள் கால் சிக்க கீழே விழப் போனாள்.. அவள் மேல் மோதாமல் தவிர்க்க நினைத்தவன்… வேறு வழியின்றி அவள் கீழே விழாமல் இருக்க தன் கைகளால் அவள் இடையை பற்றித் அவளை தன் புறம் இழுத்தான் ……
காலையிலேயே தன் கரம் பற்றும் போதே தன்னிலை மறந்த கீர்த்தியின் நிலைமைதான் இப்போது பரிதாபமாகியது….
அவளை தன் புறம் இழுத்த போது பாலாவும் பேலன்ஸ் இல்லாமல்தான் இருந்தான்… இப்போது இருவரும் கீழே விழும் நிலை ஆகும் போல இருக்க…. பாலா தன்னை நிலைப் படுத்த கீர்த்தியின் இடையில் இருந்த தன் கரத்தை அழுத்தி தன்னோடு கீர்த்தியை சேர்த்து அணைத்து பின் இருவரும் ஒரு நிலைக்கு வந்த நொடியே கீர்த்தியிடமிருந்து தன்னைப் பிரித்தான் …
இதெல்லாம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே நடைபெற்றது… பாலாவின் அணைப்பு அவனைப் பொறுத்த வரை…. கீர்த்தி கீழே விழாமல் தடுக்க…. அவ்வளவுதான்…. அதற்கு மேல் அவன் எதையும் உணர வில்லை….. எதற்காக மேலே வந்தானோ அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டான்….
அவனிடமிருந்து விலகிய அந்த நொடி அவளுக்கு பல விசயங்களை சொல்லாமல் சொல்லியது….. அவனிடம் விழுந்தது அவள் மனம் மட்டும் அல்ல…. அவள் தேகமும் தான்…. அவன் தொட்ட நொடியில்…. அவனின் வாசனை தன்னுள் கலப்பதை உணர்ந்தாள் …. தன் பெண்மையை உணர்ந்தாள்…. அதைத் தெரிந்த போதெ அது தேடும் ஆண்மையையும் உணர்ந்தாள்… அதை ….. தன் பெண்மை தன்னை முதன் முதலாகத் தொட்ட கணவனிடம் மட்டும் அதை உணர தொடங்க… அவள் அவனிடமிருந்து பிரிக்கப் பட்டாள் … அவன் விட்ட நொடி அவளின் ஒவ்வொரு செல்லும் அவனின் தொடுகைக்காக ஏங்கியது…. கண்கள் கலங்கி விட்டன கீர்த்திக்கு…. மனதில் சாட்டையால் அடி வாங்கியது போல் இருந்தது… அவனின் முதல் தொடுகையிலே அவளுள் அவனை உணர வைத்தான் பாலா… ஆனால்… அவளது பெண்மை…. அவளது இளமை…..அதற்கும் மேல் அவளது அழகு…. அவனைத் தடுமாற வைக்க வில்லை….. அது புரிந்த போது ….. தன் பெற்றோருக்கு தெரியாமல் தான் செய்த தவறுக்கு ஆயுள் முழுவதும் தண்டனை அனுபவிக்கப் போவது தெரிந்தது….. அந்த ஆயுள் தண்டனை பாலாவின் நினைவுகளோடு போராடப் போகும் தனது மனமும்… உடலும்....
----------
சிந்துவும் அவர்களுடன் கிளம்பினாள்.. மைதிலி அவளையும் அழைத்து வரச் சொல்லி இருந்தபடியால்…. கீர்த்தி அவளையும் தன் வீட்டுக்கு கிளம்பச் சொல்லி இருந்தாள்….சிந்து அம்மா மஞ்சுதான் சற்று தயங்கினாள்…. புதிதாய் திருமணம் ஆனவர்கள்… அவர்கள் தனிமைக்கு இடையூறாக என்று… ஆனால் கீர்த்தனாதான் பிடிவாதமாக அவளையும் கிளப்பச் சொன்னாள்.. அதன் பின் மஞ்சுவால் மறுக்க முடியாமல் சிந்துவையும் அவர்களுடன் அனுப்பினாள்….
முதல்முறையாக அப்போதுதான் சிந்து கீர்த்தியை புடவையில் பார்க்கிறாள்…. அவளைக் கட்டியவனுக்கு அதில் உற்சாகமோ…. இல்லையோ சிந்துவிற்கு வந்த உற்சாகத்தை கட்டுப் படுத்த முடியவில்லை…
அருகில் பாலாவும் இருந்தான்… கீர்த்தியோ சாவி கொடுத்த பொம்மை போல் இருந்தாள்…. கணவனின் முதல் தீண்டலில்…..
“ஹைய்யோ அக்கா… சாரில சூப்பெரா இருக்கீங்க…. அழகா இருக்கீங்க” என்றவள்…
சட்டென்று பாலாவின் புறம் திரும்பி…
“பாலாண்ணா சாரி…. உங்க வைஃப்தான்…. பட்… நா ஒரே ஒரு கிஸ் பண்ணிகிறேன்…. பொறமைப் படாதீங்க“ என்று கீர்த்தியின் கன்னத்தில் முத்தமிட்டவள்……
ரெண்டு பேரும் ரொம்ப சூப்பரா…பொருத்தமா இருக்கீங்க… என் கண்ணே பட்டுடும் போல…. அக்கா வீட்டுக்கு போய்ட்டு வந்ததும்…. அம்மாகிட்ட சொல்லி சுத்திப் போடச் சொல்லனும் என்றபடி காரில் ஏறி அமர்ந்தாள்….
கீர்த்தானாவிற்குதான் நேரம் சரி இல்லை போல…. காலையில் கணவனின் கரம் பற்றல்….அதன் பின் அவனின் அணைப்பு…இப்போது சிந்துவின் வார்த்தைகள்…. இப்படியெல்லாம் நினைத்தப்படி.. கணவன் முகம் பார்க்காமல் வெளியே பார்த்தபடி இருந்தாள் மனைவி….
அன்றைய கோட்டா முடியவில்லை போல அவளுக்கு…
பாலாவாவது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்….
“பிறந்த நாள் எனக்கு…. கிஃப்ட் உன் அக்காவிற்கா” என்று வாய்விட….
சட்டென்று சொன்னாள் சிந்து …. எதையும் யோசிக்காமல்….
“வேண்டுமென்றால் அக்காகிட்ட நான் குடுத்த கிஃப்ட வாங்கிக்கோங்க…. ஒரு தடவ தான் கிஃப்ட் கொடுக்க முடியும்…” என்றபடி வெளியே தெரிந்த கட்டிடத்தின் உயரத்தை அளக்க ஆரம்பித்து விட்டாள்…
இப்போது பாலா அதிர்ந்து கப்சிப் ஆகி விட்டான்…
கேட்ட கீர்த்தி …கணவன் புறம் திரும்புவாளா என்ன?
”தேவையாடா உனக்கு…. சின்ன பெண்ணிடம்… சின்னப் புள்ளத்தனமா வாய் விட்டு … என்று மனசாட்சி எள்ளியது… ஒரக் கண்ணால் கீர்த்தியை பார்த்தான்… அவளோ… வெளியே பார்த்தபடி வர….
”ஹப்பா… இவளோட அக்மார்க் கோபப் பார்வையில் இருந்து தப்பித்தோம்… “ என்று நிம்மதி ஆனான்..
கீர்த்தனாவின் வீட்டில்… கீர்த்தி நினைத்தது போல…. பாலாவிற்கு கேக் வெட்டி … தன் மருமகனின் பிறந்த நாளை அமர்க்களமாக்க் கொண்டாடினர்… கோவிலுக்கு சென்றனர் அனைவரும்….
பாலா மட்டும் அலுவலகம் கிளம்ப …. சிந்துவும்… கீர்த்தியும் அங்கேயே தங்கினர்…
வழக்கம் போல் கீர்த்தியின் குடும்பம்… கலகலப்பாகி விட.. சிந்துவும் அதில் ஐக்கியம் ஆனாள்…
ராகவன்…மைதிலியிடம்… கீர்த்தியை விட இரண்டு மடங்காக இருந்தாள் சிந்து… கீர்த்தி பழையபடி இல்லை என்றாலும்… ஓரளவு நார்மலாக இருந்தாள்… இவர்கள் மூவருடனும் இருந்ததால்… காலையில் இருந்த மனநிலை ஓரளவு மாறியிருந்தது……. ஆனாலும் கணவனின் தீண்டல் மனதில் இருந்து அவளை அவ்வப்போது நனவுலகத்தில் இருந்து ….. வேறு உலகத்திற்கு கொண்டு சென்றது…
ராகவன் சொல்லியே விட்டார்… என் பொண்ணு சைலெண்டா ஆகிட்டாளேனு பார்த்தால்…. அவளுக்கு ஒரு சப்ஸ்டியூட் கொண்டு வந்த பின்னால் தானா… அவ அமைதி ஆகிவிட்டாளா …. ஆனா சிந்து குருவையே மிஞ்சிட்ட… என ராகவன் சிரிக்க… மைதிலி ராகவனைப் பார்த்து முறைக்க…
“ஹை ஆன்ட்டியும் அக்கா பாலா அண்ணணை பார்த்து முறைக்கிறது போல் உங்களையும் முறைக்கிறார்கள்…” என
ராகவனோ…. அந்த முறைப்பு….. உங்க அக்காகிட்ட இருந்து ஆன்ட்டிக்கு வரவில்லை….அவங்க அம்மாகிட்ட இருந்துதான்… உங்க அக்காவிற்கு வந்திருக்கிறது… நான் ஒருத்தன் தான் பாவமென்று நினைத்திருந்தேன்…இப்போ என் மருமகனும் சேர்ந்துட்டாரா எனும் போதே தாய்-மகள் இருவரின் முறைப்பில் தன் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தார்…
கீர்த்திக்கோ தன் கோபம் பிறருக்கு தெரியும் அளவிற்கா நடந்து கொண்டிருக்கிறோம்.. அதுவும் சிந்து போன்ற சின்னப் பெண் பார்த்து சொல்லுகின்ற அளவிற்கா… நல்லவேளை அம்மா இதற்கு ஒரு அட்வைஸ் கொடுக்க வில்லை…. அந்த மட்டில் தப்பித்தோம்….. என்று நினைத்தாள்…
மாலையில் பாலா வந்து இருவரையும் அழைத்துச் சென்றான்…
மூவரும் காரில் போகும் போது சிந்து சொன்னாள்..
ராகவன் அங்கிள்…மைதிலி ஆன்ட்டியோட கம்பேர் பண்ணும் போது…. உங்க ஜோடிப் பொருத்தம் சுமார்தான்… ஏதோ மிஸ் ஆகுது… அது என்ன கீர்த்திக்கா…. என்று கேட்க…
மனம் பொருத்தம் தான்…என்று தனக்குத் தெரிந்த பதிலை அவளுக்கு சொல்ல முடியுமா என்ன?
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்…… உடனே கீர்த்தி மைதிலிக்கு கால் செய்தாள்…
“அம்மா உடனே நீங்களும் அப்பாவும் சுத்திப் போட்டுக்கோங்க…சிந்து உங்களைப் பார்த்து கண் வைத்து விட்டாள்” என்ற கீர்த்தியைப் பார்த்து சிந்து முறைக்க…
அவளைப் பார்த்து கீர்த்தியும் ….பாலாவும் சிரித்தனர்..
תגובות