top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே என் உறவே -2

அத்தியாயம் 2:


ஸாரி சார்என்றவளிடம்,” ok, பரவாயில்லை, கவனம்என்றவன், கீர்த்தியை ஒரு வினாடி பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் தன் வழியில் தொடர்ந்தான் பாலா. அவன் போன போது அவனது விழிகள் தன்னை பார்த்ததோ என்று நினைக்கும் பொழுதே, கவி கீர்த்தியின் காதில் இன்று யார் முகத்தில் விழித்தேனோ பாலா என்கிட்ட பேசிட்டாரே என்று முகம் மலர கிசுகிசுத்தாள்.

ஆமா உனக்கு இன்று நல்ல நேரம், எனக்கு காலையில் இருந்தே சொதப்புது.இப்ப வேற மாட்டிவிட்டேன்என்று அலுத்தாள்.

காலையில் நடந்த விசயம் எதுவும் தெரியாமல் கவி முழிக்க கீர்த்தி லிஃப்டில் நடந்தவற்றை கூறினாள்.

ஓ அப்படியா விசயம் என்றவள் திடிரென முகத்தை வைத்துக் கொண்டு எனக்கு நல்ல நேரம் பாதிதான் வொர்க் அவுட் ஆனது.மீதிய நீ வந்து கெடுத்து விட்டாய்என்று கோபமாக‌ முறைத்தாள்.”

நான் என்ன கவி பண்ணினேன்.” என்றாள் அப்பாவியாய்

என்ன பண்ணலேனு கேளு, நீ மட்டும் பிடிக்காமல் இருந்திருந்தால் என்றவளின் வாயினை பொத்தி, அவள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தாள் கீர்த்தி.

அப்படி இப்படினு ஆகி ஏதாவது ரொமான்ஸ் ஆகியிருக்கும்இதானே சொல்ல வந்த இதெல்லாம் நாங்க வாலி படத்திலேயே பாத்துட்டோம் என்ற கீர்த்தியிடம் அசடு வழிய நின்றாள் கவி.

தொடர்ந்து கீர்த்தி கவி ஒண்ணு கேட்டுக்க, எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு, நமக்கு என்ன நடக்கனும்னு விதி இருக்கோ அது மட்டும்தான் நடக்கும். அதுனால் இன்று பாலா சார் உன்கிட்ட பேச வேண்டுமென்ற விதி தான் எழுதுயிருக்கு ,அது நடந்திருக்குஎன்றாள் கீர்த்தி பெரிய பேச்சாளர் போல்,

அப்புறம் என்ன மேடம்என்று நக்கலாக கேட்ட கவியிடம் அப்புறம் என்று யோசித்த பாவனையுடன் நடித்தவள், இன்னொன்று கூட எங்கப்பா அடிக்கடி சொல்வார்என்றுஆரம்பித்தவளிடம் “அய்யோ தாயே ஆள விடு ,ஆரம்பித்து விட்டாயா உங்க அப்பா புராணத்தை, கடவுளே இந்த அப்பா பைத்தியத்திடமிருந்து என்னைக் காப்பாத்துஎன்றவளிடம்,

அடிப் பாவி, யாரோ ஒரு பாலா புராணத்தினை என் காதில் ரத்தம் வழியர அளவுக்கு பேசுவ, என் அப்பாவ பற்றி பேசினால் கேக்க மாட்டாயாஎன்று அதட்டினாள்

என்னது யாரோ வா அவர் உனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளிஎன்று திருத்தியவளிடம்

இருக்கட்டும் யாரோதானே நமக்குஎன்று அவ‌ளை கேலி செய்தபடி ஓடியவளை துரத்தும் முறை இப்போது கவியினது ஆயிற்று.

மூன்று மணி அளவில் எந்த வேலையும் இல்லாமல் போரடித்த‌து போல் இருந்தது கீர்த்திக்கு. நிமிர்ந்து கவியினை பார்த்தவளுக்கு மனது வலித்தது.அலுவலகத்தில் அவள் மட்டும் தான் கீர்த்திக்கு மிகவும் நெருங்கியவள்.பார்த்த சில நாட்களிலேயே நெருக்கமானவள்.இன்னும் சில நாட்களில் பிரிந்து போகப் போகிறாள். நினைக்கும் போதே என்னவோ போல் இருந்தது,

அவளை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே தொலைபேசி ஒலித்தது.

சொல்லுங்க சார்,” என்றவள், இதோ வருகிறேன் என்றபடி அவளது டீம் லீடர் கேசவன் அறைக்கு சென்றாள்.

அனுமதி கேட்டு உள்ளே சென்றவளை அமரச் சொல்லிய கேசவன் சற்று செருமியபடி,பழைய project ல இருந்து ரிலீவ் ஆகிட்டீங்கதானே கீர்த்தி, இப்போ எந்த வொர்க்லயும் அசைன் ஆகவில்லைதானே அன்று கேட்டார்.

இல்ல சார்என்றவளிடம் “ஒகே உங்களை MD வர சொல்லிருக்கார், இப்ப போய் மீட் பண்ணுங்கஎன்று கூறியபோது இதயம் படபடத்தது. வேறு எந்த நாளாயிருந்தாலும் இப்படி ஆகியிருக்காது. இன்று இரண்டு முறை மாட்டியிருக்கிறாள். அதனால் அவள் கொஞ்சம் டபடப்பானதில் ஆச்சரியம் இல்லைதான்.

இருந்தாலும்,டென்சனை மறைத்தபடி,யோசனை பாவத்தோடு

எதற்காக சார் என்று கேட்டவளிடம்,தெரியவில்லை இப்போதான் கால் பண்ணினார்.உங்க டீம்தானே கீர்த்தனா என்று விசாரித்தார்.அவங்களை 3.30க்கு என்னை வந்து பார்க்க சொல்லுங்க என்றார் சிரித்தபடி, அவரது சிரிப்பை பார்த்த கீர்த்திக்கு ஆத்திரமாக வந்தது,எதற்காக என்று கேட்டால் தெரியவில்லை என்கிறார்.இப்போ சிரிப்பு முக்கியம் என்று நினைத்த படி வெளியே வந்தாள்.

பட படத்த இதயத்திடம் “கீர்த்தி அப்படி என்ன தப்பு பண்ணிட்ட .ஒருநாள் லேட்டா வந்துவிட்டாய்,அவ்ளோதான் இதற்காக இப்படி டென்சன் ஆகலாமா? சமாளி கீர்த்திஅவளுக்குளாகவே பேசியவள் ” May i Come in” என்றபடி பாலாவின் அறையினுள் நுழைந்தாள்.

“come in” என்ற கம்பீரக் குரலில் சற்று முன் அவள் தேற்றி வைத்திருந்த்த தைரியம் எல்லாம் எங்கு போனதோ தெரியவில்லை.அவளையும் அறியாமல் , படபடவென்று ஆரம்பித்தாள்.

”Good evening Sir” வர சொன்னீர்களாமே என்றபடி தொடர்ந்தாள்.அவளது வார்த்தைகளில் இருந்த அவசரத்தையும், படபடப்பையும் உண்ர்ந்தவன், அவளைப் பார்த்து புருவத்தினை உயர்த்தினான். இப்போது அவனது முகத்தைப் பார்த்தவள் தனது இன்னும் வேகமாக பேச ஆரம்பித்தாள்

.”சார், இன்னைக்கு நான் ஏன் லேட்டாக‌ வந்தது தப்புதான்.ஆனால் நான் டெய்லி லேட்டா வருவது இல்லை.இன்று ஒரு ஆக்சிடெண்ட்,ஒரு பைக் என்று ஆரம்பித்தவள்,” கீர்த்தி கூல் கூல் இதெல்லாம் இப்போ சொல்லனுமா, உளராதேஎன்று மனசாட்சியின் குரலில், தான் கூற வந்தவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு, தன் பேச்சுக்கு, இல்லையில்லை தன் உளரலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்

இனிமேல் இந்த தவறு நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறேன் சார்என்று முடித்த பொழுதுதான் தான் அவன் என்ன ஏது என்று கூறாமலேயே உளறியது புரிந்தது .இருந்தாலும் அவன் கேட்ட பிறகு இதைதான் சொல்லப் போகிறோம். என்று தனக்குள்ளாக ஆற்றிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

பாலாவோ எந்த ஒரு பாவத்தினையும் முகத்தில் காட்டாமல் , சைகையினால் முன்னால் இருந்த இருக்கையை காட்டி அமரச் சொன்னான். “ஓ சாரி சார்,” என்று கூறி விட்டு அவனைப் பார்த்தபடியே அமர்ந்தாள்.

கீர்த்தனா ராகவன் am i correct” என்றவனிடம் “ம்என்று தலையசைத்தாள்.

நீங்க ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் நான் கூப்பிடுவதற்கு முன்னதாகவே வந்து சொல்லி இருக்க வேண்டும், ஆனால் நான் உங்களை அழைத்திருக்கிறேன். So” என்றவன் சற்று நிறுத்தினான்.

அவள் இவ்வளவு நேரம் கூறியதெல்லாம் அவனுக்கு தேவை இல்லாத விசயம் என்பதாகக் கூறுகிறான் என்பதை உணர்ந்த கீர்த்தி, பெரிய இவன் ,இந்த லட்சணத்தில் நான் நினைப்பதை எல்லாம் இவன் கேட்க தயாரக இருப்பதை போல பேச்சு வேறுஎன்று மனதிற்குள்ளாக குமுறியவண்ணம் இருந்தாள்.

உண்மையில் அவள் மீதுதான் அவளுக்கு கோபம்.இந்த மாதிரி அசடு மாதிரி அவள் நடப்பது மிகவும் அரிது. அதனால் வந்த கோபம் பாலாவின் மேல் மாறியது.அதையும் அவள் வெளிப் படுத்த முடியாத நிலைமை வேறு.அனைத்தியும் அடக்கிக்கொண்டு “சொல்லுங்க சார்என்றாள் அவன் அவளை அவமானப் படுத்தி விட்டதாக மனதில் நினைத்திருந்ததால் அவள் குரல் சற்று இறங்கியிருந்தது.

ம். good. என்றவன் தொடர்ந்தான். நம்ம கம்பெனிக்கு புதிதாய் project வந்திருக்கிறது.ஸோ அதுக்காக புது மெம்பெர்ஸ் எடுத்திருக்கிறோம். தெரியுமா உங்களுக்கு என்றவனிடம்

தெரியும் சார் என்றவள் தன்னை அழைத்தற்கான் காரணம் வேறு என்பது தெரிந்த போது நார்மலாக மாறியிருந்தாள்

அந்த ப்ரொஜெக்ட்டுக்கு நீங்கதான் டீம் லீடர்என்று எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல் சட்டென்று கூறியவனை ஆச்சரியமாகப் பார்த்த கீர்த்தி அவனிடம் பேச வாயெடுத்தவளை பேசவிடாமலேயே தொடர்ந்தான் பாலா.

நீங்க ஜாயின் பண்ணி 8 months தான் ஆகிறது.அதற்குள்ளாகவா இதுதான் நீங்க கேட்க வந்தது என்றவனிடம் ஒப்புதலாக தலையினை அசைத்தாள்.

அவளின் தலைஅசைவினை பார்த்து சிரித்துவிட்டு “உங்க திறமை மேல எஙகளுக்கு நம்பிக்கை இருக்கு.உங்க டீம் லீடர் கொடுத்த ரிப்போர்ட் படிதான் இந்த போஸ்ட்டுக்கு ப்ரொமோசன் பண்றேன்.அந்த நம்பிக்கையை காப்பாற்றுவீங்கனு நினைகிறேன் என்று முடித்தான். அவன் முடித்த உடனே , sure sir என்றவள் சார் எனக்கு இன்னொரு சந்தேகம் சார். என்றவளைப் பார்த்த பாலா “சொல்லுங்கஎன்றான்

இப்போ எடுத்த மெம்பெர்ஸ் எல்லாருமே experienced persons னு கேள்வி பட்டேன்.அப்போ நான் எப்படி சார் என்று இழுத்தவளிடம்

ம்,தெரியும்.அவங்களுக்கு நம்ம கம்பெனி புதுசு.சோ நம்ம ஆர்கிடெக்ச்சர் பழகுகிற வரைக்கும் தான். அதற்காகத்தான் இந்த projectல போடுகிரேன்.அதன் பிறகு அவர்களுக்கு தனியாக் டீம் ஃபார்ம் பண்ணிடுவேன்,சோ அது ஒண்ணும் பிரச்சனை இல்லை.

என்றபடி அவளது ப்ரமோசன் ஆர்டரை அவளிடம் நீட்டினான் பாலா. அதை அவளிடம் கொடுத்தவாறே இந்த வொர்க் லாஸ்ட் வீக்கே அசைன் பண்ணி உங்களுக்கு ஆர்டெர் கொடுத்துருக்கலாம் .but நான்தான் இன்னைக்கு இதை உங்களுக்கு தரவேண்டுமென்று தள்ளி வைத்தேன். என்றவனிடம் “thank you sir” என்றபடி, இன்று என்ன ஸ்பெக்ஷ‌·ல் என்று மனதிற்குள் நினைத்தபடி வாங்க கை நீட்டினாள் கீர்த்தி.

ஒரு வாரத்திற்கு முன்னமே நீங்க வாங்க வேண்டியது.லேட் ஆகி விட்டது சாரி கீர்த்தனாஎன்றுகொடுத்தவன், “இந்த வருட உங்களோட பிறந்த நாளுக்கு Global net ன் கிஃப்ட் என்றுபுன்னகைத்தான். சட்டென் நிமிர்ந்தவள், இன்றைய ஸ்பெக்ஷ‌·லின் அர்த்தம் விள்ங்கியது.“ எப்படி சார் என்று ஆச்சரியமாக வினவியவளிடம்,

உங்க பயொடேட்டா பார்த்தேன். அப்போதுதான் முடிவு செய்தேன். இன்னும் ஒரு வாரம்தானே அப்பவே கொடுக்கலாம் என்று. இல்லேனா இந்நேரம் project work start பண்ணிருப்போம். என்று சிரித்தான்

இப்படியெல்லாம் பாலா யோசிப்பானா என்று நினைத்துக் கொண்டே அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள் கீர்த்தி

இதற்கு மேலும் அவன் யோசிப்பான்,அதை செயல் படுத்த போகிறான் என்று தெரிய வரும் போது அவள் அதிர்ச்சி அடையப் போகும் நாள் வெகு விரைவில் வரப் போகிறது என்பது தெரியாமல் மகிழ்ச்சியில் துள்ளியது சந்தோசங்களை மட்டுமே அனுபவித்த கீர்த்தியின் இதயம்.

2,051 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 Comment


Commenting has been turned off.
Naga magudaeswari
Naga magudaeswari
Mar 08, 2020

படித்து கதை தான் என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் கதை.கீர்த்தி அண்ட் பாலாவை பார்த்ததில் சந்தோசம்

Like
© 2020 by PraveenaNovels
bottom of page