அத்தியாயம் 53:
விஜய் கோபமாகச் சென்ற பிறகு…. தீக்ஷாவும் வர மறுத்து விட… ஜெயந்திக்கு தான் மகளை அங்கேயே விட்டுப் போக மனமே வர வில்லை…..
விஜய்யே போ என்று சொல்லி இருந்தால் கூட தீக்ஷா போயிருந்திருக்க மாட்டாள் தான்…. ஜெயந்தி வற்புறுத்தியும்…. தீக்ஷா தன் முடிவில் இருந்து மாறாமல் இருக்க…. தீபன் தான் ஒருவாறு சமாளித்து… தன் குடும்பத்தைக் கூட்டிச் சென்றான்…
கிளம்பும் போது… முக வாட்டத்தோடு இருந்த தன் தாயிடம்….
“அம்மா…. நீங்க இப்படி போனால் என்ன அர்த்தம்… இந்த வீட்டுக்கு ஏற்கனவே நல்ல நேரம் பார்த்து வந்த போது எல்லாம் நல்லவிதமா நடந்ததா… எது நடக்கனுமோ அது நடந்துதான் ஆகும்…. நான் பார்த்துக்கிறேன்…. என்றவள்… தன் பெற்றோரின் ஆசிர்வாதங்களையும் வாங்க மறக்கவில்லை…
ஜெயந்தியின் ஆதங்கம்…. கலைச்செல்வியையும் வருத்த
“நீயாவது அவன்கிட்ட பேசும்மா….” என்று மருமகளிடம் சொல்ல…
“உங்க பையன் பிடிவாதம் தான் உங்களுக்குத் தெரியும்ல…. இந்தக் கோபம், பிடிவாதம் எல்லாவற்றையும் வளர்த்து விட்டுட்டு இப்போ பேசு பேசுன்னா…… வீட்டுக்கு வந்தவங்களைக் கூட வழி அனுப்ப கீழ இறங்கி வந்தாரா அத்தை….. “ என்று மகளாய் தீக்ஷாவும் கோபமாய் பேச…
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே விஜய் கீழே இறங்கி வர…. தீக்ஷா வாயை மூடினாள்…
வந்தவன்
“சாரி” என்று பொதுவாகச் சொல்லியபடி…
தீக்ஷாவைப் பார்த்து
“வா…. போகலாம்…” என்றான்
தீக்ஷா புரியாமல் பார்க்க…
“உங்க அம்மா வீட்டுக்குதான்… உன் கோபத்தையெல்லாம் தாங்குற சக்தி எனக்கு கிடையாதும்மா…. நானே கொண்டு போய் விட்டு வருகிறேன்… உனக்கு எப்போது தோணுதோ…. இல்லை இவங்க எல்லோருக்கும் நமக்கு நல்ல நேரம் வந்திருச்சுனு எப்போ தோணுதோ…. அப்போது வா “ என்று அவளைப் பார்த்தபடி பேச…
உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு அவன் பேசியது தீக்ஷாவுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் அடக்கியபடி… அவன் கையில் இருந்த கார்ச் சாவியைப் பறித்தவள்…. அங்கிருந்த சோபாவில் தூக்கிப் போட….
தன் மனைவியின் செயலில்….. விஜய் உள்ளம் குதுகலித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க… அப்போது……
சுனந்தா அழ ஆரம்பித்தாள்…
அவளுக்கு விபரம் தெரிந்ததில் இருந்து தீக்ஷாவோடு தான் இருக்கிறாள்… இந்த சில நாட்களாக தன் அத்தையைத் தேடியவள்…. இப்போது தன் அத்தை தங்களோடு வர வில்லை என்பதை உணர….
தீக்ஷாவும் வர வேண்டுமென்று அடம் பிடித்தாள்…. விஜய் சத்தியமாய் நொந்தே போய் விட்டான்….. விஜய்யின் முகத்தைப் பார்த்த தீக்ஷாவுக்கு சத்தியமாய் சிரிப்பை அடக்கவே முடியவில்லை….. இருந்தும் வந்த சிரிப்பை தன் வாய்க்குள்ளாகவே அடக்கியவள்…
ராதாவிடமிருந்து சுனந்தாவை வாங்கியபடி…
“சுனோ செல்லம்…. அத்தை…. டாக்டர் கிட்ட ஊசி போடப் போகிறேனாம்… நீயும் வந்தால் உனக்கும் போடுவாங்களாம்…. உனக்கு வலிக்கும்ல….. சோ நீ இப்போ அம்மா கூட போவியாம்…. அத்தை ஹாஸ்பிட்டல் போய்ட்டு…. சுனோவுக்கு சாக்கி எல்லாம் வாங்கிட்டு வருவேனாம்” என்று சமாதானமாய்ப் பேச…. அதில் சுனந்தாவும் சமாதானமாகிப் போக….. விஜய் நிம்மதியில் யாருக்கும் தெரியாமல் பெருமூச்சு விட்டான்…
எப்படியோ தீக்ஷா குடும்பம் சமாதானமாகி கிளம்ப…
அதன் பிறகு கலைச்செல்வி தீக்ஷாவிடம்….
சுரேன், யுகி… வெளியிலேயே சாப்பிடுக்கிறேனு சொல்லிட்டாங்கம்மா…. நீ அவனப் போய் சமாதனப்படுத்தி சாப்பிடச் சொல்லு….” என்றவளிடம்
ராகவேந்தர்
“ஆனாலும் உன் பையனுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகக் கூடாது…” என்று கலைச்செல்வியை முறைக்க….
கலைச்செல்வி… அவரிடம்
“உங்க பிடிவாதம் அப்படியே வந்துருக்கு’ என்று பதிலுக்கு தன் கணவனை முறைத்தபடி…. அவர் பின்னே செல்ல….
தீக்ஷாவோ…
“அடேங்கப்பா… பையனோட பிடிவாதம்… இன்னைக்குதான் ரெண்டு பேருக்கும் கண்லயே தெரியுது போல… ரொம்ம்ம்ம்ம்ம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சுட்டாங்க” என்று மனதிற்குள் நினைத்தவள்…
“சும்மாவே நம்ம ஆளு சாமி ஆடுவான்…. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்……. தீக்ஷா உன்னால சமாளிக்க முடியாதா “ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்…. தன் அறைக்குப் போக…
இவள் நினைத்ததைப் போலதான் அவனும் இருந்தான்….
இவள் உள்ளே வந்து விட்டாள் என்று உணர்ந்தும்… கண் திறக்காமல் படுத்திருந்தான்… அவன் படுத்திருந்த விதமே…. அவன் இன்னும் கோபத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்தியது….
கட்டிலின் குறுக்கே… படுத்திருந்தவன்….கால்களை தரையில் ஊன்றியபடி நெற்றியில் கையை குறுக்கே போட்டபடி…..கண் மூடிப் படுத்திருக்க…
அவனுக்கு பிடிக்காது என்று தெரிந்தே….. கதவை டமாரென மூடியபடி…. தாழ்ப்பாளைப் போட… விஜய் அப்போதும் கண் திறக்க வில்லை….
“சார் நெற்றிக் கண்ணைத் திறக்க வில்லையே…. இது இன்னும் ஆபத்தாச்சே” என்று அவனின் அருகில் போய் நின்றவள்….
“ம்ஹ்க்க்ம்ம்” என்று செரும… அதிலும் திரும்பாதவனாய் இருக்க….
”தீக்ஷா இனி வேலைக்காகாது” என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவள்….
கொஞ்சம் கூட தாமதிக்காமல்… அவன் மேலே அப்படியே விழ…. திடுக்கிட்டு விஜய் கண் திறக்க…
கண் சிமிட்டியவள்… அவனின் இருபுறமும் கைகளை ஊன்றியபடி…. அவன் மேல் முழுவதும் சரியாமல்… அவனைப் பார்த்து காதலாய்ச் சிரிக்க…..
”நீ இன்னும் போகலையா…. நான் உன் அம்மா வீட்டுக்கு அவங்களோடே போய்ட்டேன்ல நினைத்தேன்” என்று நக்கலாய்ப் பெச…
சட்டென்று அவன் மேல்……. தன் மேனி முழுவதும் படுமாறு விழுந்தாள் தீக்ஷா
விஜய்யின் தேகம் மனைவியின் ஸ்பரிசத்தை முழுமையாக உணர…….. அதன் வீச்சில் கொஞ்சம் தடுமாறியவனாய்,,,,
“என்ன…டி.... “ என்றான் குரலில் கடுமையைக் காட்டியபடி… இருந்தும் அவன் குரல்…. மென்மையைப் பூசி இருக்க….
“ஒண்ணுமில்லை……. “ என்று தோளைக் குலுக்கியவள்…. அவனின் கையை எடுத்து தன்னை சுற்றிப் போட்டவள்……… அவன் இதழ்களை நோக்கி குனிய…
“விடுடி….” என்று முகத்தைத் திருப்பியவன்…. பட படவென பொறிந்தான்
“நான் கோபமா இல்லைனா…. அத்தை சொல்றாங்க…. அம்மா சொல்றாங்கனு அவங்க பின்னாடிதானே போயிருப்ப…. என்னைப் பார்த்தால் அலையிறவன் மாதிரி தெரியுதா…. எனக்கு ஒண்ணும் உன் சமாதானமும் தேவையில்லை… வேற ஒண்ணூம் தேவையில்லை… என்றபடி எழப் போக…
அவனால் எழ முடியவில்ல… எழ முடியவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது… ஆனால் தீக்ஷா அதைச் செய்ய விடாமல் அவனை தடுத்து நிறுத்தும் படி… அவனை இன்னும் இறுக்க… பேசாமல் மீண்டும் படுத்தான்…
“ரொம்ப பண்ணாதீங்க அத்தான்….” தீக்ஷா சலித்தவளாய் உதடு சுழிக்க….
“நான் ஒண்ணுமே பண்ணலடி” என்று விஜய் நக்கலாயும் ஏக்கமாயும் சொல்ல….
“பாருடா…. விருமாண்டி கூட காமெடிலாம் பண்றாரு…” என்றபோதே அவன் முறைக்க…
”5 செகண்ட் தான் டைம் தருவேன்…. அதுக்குள்ள நீங்களே சமாதானம் ஆகி சரண்டர் ஆகீட்டீங்கன்னா… தப்பிச்சீங்க்க……. இல்ல…” அவள் நிறுத்தினாள்
“இல்லைனா என்ன பண்ணுவ….. “ சவாலாய்த்தான் கேட்டான்… இருந்தும் அவனுக்குள் இருந்த அவன் மனசாட்சி…. “விஜய் நீ அடங்கவே மாட்டியாடா… உன் ஈகோவை இப்போதான் காட்டனுமா…. நீ இப்படியே பண்ணிட்டு இரு,,, அவ அம்மா வீட்டுக்கே கெளம்பப் போறா…… அப்புறம் அவ காலில் தான் விழப் போறடா நீ… “ என்று மனசாட்சி எச்சரிக்க….. அதில் சுதாரித்தவனாய்..
“சும்மா 10 நிமிசம்…. அவ என்னதான் பண்றானு பார்ப்போம்” என்று மனசாட்சியை அடக்கியவன்…. மனைவியைப் பார்த்தபடியே இருக்க….. அவளோ அவன் காது மடலைக் கடித்தபடி…
“யூ நோ இந்தர்….. நான் இன்னும் பச்சப் பாப்பா இல்லை….. அது உங்களுக்கும் தெரியும்….. நீங்களா வந்தா சமாதானம்… இல்லை சேதாரம்… எதுனு முடிவு பண்ணிக்கங்க” என்றவளின் குரல் அதிரடியாக இருந்தாலும்…. அதில் நாணமும் இருக்க…
அவளின் பேச்சில்… விஜய்யை மீறி…. அவன் முகத்தில் இளநகை தோன்றி மறைந்தது…..
”ஹா…. சமாதானம் இல்லைனா சேதாரமா…யாருக்கு எனக்கா….. கிழிச்ச” என்றவனின் கை அவனை மீறி அவள் தேகத்தோடு விளையாட ஆரம்பித்திருக்க….
அதை உணர்ந்த தீக்ஷா….
“என்ன நக்கலா” என்றவளின் வார்த்தைகளில்
“நீ இன்னும் பாப்பாதான்….“ என்றவனின் குரலில் இருந்த உல்லாசம் அவன் கைகளையும் தொற்றிக் கொள்ள…..
இப்போது தன் மனைவியை தனக்குக் கீழ் கொண்டு வந்திருந்தான்…..
“யார் சொன்னா நான் இன்னும் பாப்பாதானு….. எனக்கு எல்லாம் தெரியும் …. என்று ரோசமாகச் சொன்னவள்…
“எனக்கு ஒண்ணும் தெரியலைனு நிங்க சொன்னீங்கன்னா… சொல்லிக்கொடுத்த டீச்சர் சரி இல்லை… எனக்கு கற்பூர புத்தி….” என்றவள்…
“உங்களுக்குத் தெரியுமா… நான் 12 த் மேக்ஸ்ல… 200 அவுட் ஆஃப் 200” என்று பெருமையாகச் சொல்ல
விட்டால் இந்த நேரத்தில் இவள் சாரகேசையும் இழுப்பாள் என்று நினைத்தவன்… வேகமாய்….
”உன்னை இந்த விசயத்திலயும் ஃபுல் மார்க் வைக்கிறேன்… போதுமா… நீ பேச்சைக் குறை….” என்றவனிடம்
“செயல்ல நீங்க காட்டுங்க…. “ என்று விடாமல் பேசியவள் வாயில் கைவைத்து மூடியவன்…
“அடங்கவே மாட்டியாடி…. ” என்று அவள் கழுத்துவளைவில் தன் பாடத்தை ஆரம்பிக்கப் போக…
தன் இதழை மூடியிருந்த அவனது கைகளை பிரித்தவள்…
“டீச்சர் சரி இல்லை பாஸ்….. பட் ஸ்டூடன்ட் புத்திசாசாலியாக்கும்…. சொல்லிக் கொடுத்த பாடத்தை என்னைக்கும் மறக்க மாட்டாள் இந்த தீக்ஷா’ என்றபடி…. அவனின் அழுத்தமான இதழ்களை தனதாக்க…. சற்று நேரத்திலேயே தீக்ஷா மீண்டும் மாணவியாக மாற… அவளின் கணவன் ஆசிரியராக மாறியவன் திணறடித்துதான் அவளை விட்டான்….
விஜய் இன்னும் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்தவள்….. அவனிடமிருந்து விலகி…. எழுந்து அமர்ந்தவள் தன்னைச் சமாளித்து……
“சாப்பிட போகலாம் இந்தர்… ” என்ற போதே அவள் குரலில் கொஞ்சலும் கெஞ்சலுமாய் வர….
”ஏன் தெம்பில்லையா” என்றவன் அவளை ஆராய்ந்தபடியே எழ…. தெளிவாகத்தான் இருந்தாள்…
“நான் கொட்டிக்கிட்டேன்…. தீபனும் அண்ணியும் போகும் போதே”
“அடிப்பாவி…. புருசன் சாப்பிட்டானா இல்லையா அதப் பற்றியெல்லாம் கவலை இல்லை”
உதட்டைச் சுளித்தவள்….
“இப்போ கூப்பிடறேன்ல ….. வாங்க போகலாம்” என்றபடி கதவை நோக்கிச் செல்ல…..
“ஏய் இருடி… என்று அவள் பின்னால் போனவன்….
“எனக்கு பசி இல்லை…. ” என்றவன் மனைவியைத் தன்புறம் திருப்பியவன்….
“நாம இன்னொரு முக்கியமான வேலை பார்ப்போமா” என்று கொஞ்சலாய்ச் சொல்ல…
”அதைத்தானே பார்த்துட்டு இருக்கோம்…” என்றவளை அதற்கு மேல் பேச விடாமல்….
கீழே வைத்திருந்த….. அவர்கள்… இருவருமாய் சேர்ந்திருந்த புகைப்படத்தை…. அவளிடம் கொடுத்து….. அவளை தூக்க… தீக்ஷா அந்தப் புகைப்படத்தை கண் கலங்க பார்த்தபடி… சுவற்றில் மாற்றியவள்….
கலங்கிய கண்களை… விஜய்யின் மேலேயே சாய்ந்து அவனது சட்டையில் துடைத்தபடி….
“இது நான் மாட்டின போட்டோ… இன்னொரு போட்டோ…” என்று கேள்வியாய்க் கேட்க…
“இது நீயும் நானும் சேர்ந்து மாட்ட முடியும்… அது பெரிய போட்டோ…. 4 பேர் வேண்டும்…. ஆர்வக் கோளாறில் பெருசா போட்டுட்டேன்…. “ என்று சிரிக்க…
“இறக்கி விடுங்க அத்தான்….” அவனிடமிருந்து இறங்கியவளிடம்
’இன்னும் ஒண்ணு பாக்கி….” என்றான் விஜய்
அவள் ”என்ன” என்று யோசிக்கும் முன்னரே…. அவள் தூக்கி எறிந்த தாலிச் செயின் அவன் கைகளில் இருக்க
அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தவளின் இதழ்கள்…
“இந்தர்” என்று தழுதழுக்க
அவளின் கழுத்தில் மீண்டும் அதைப் பூட்டினான்… அவளது கணவன்…..….
”நல்ல நேரம் பார்க்க வேண்டும்…. சாமி சன்னிதானம் முன்னால போடனும்…. இதெல்லாம் எனக்கு தோணல தீக்ஷா…. நீ என்னை இந்தரா உணர்ந்த தருணம் அது மட்டும் தான் எனக்கு நல்ல நேரம்,,,,, கழுத்தில் தாலி இல்லை என்றால் கூட… உன்னோட மனைவின்ற உரிமைய நீ காட்டிய விதம்….. இது இதுக்காகத்தான் நான் ஏங்கி இருந்தேன் தீக்ஷா…” என்றவனை தன்னோடு இறுக அணைக்க…. அவளின் அணைப்பில் தன்னை அடக்கியவன்…. அதில் ஆழ்ந்திருந்தவன்…
“எனக்கு நீ…. நீ…. மட்டும் தான் வேண்டும் தீக்ஷா…. மொத்தமா… முழுசா…. என்னோட ஒவ்வொரு அணுவும் செத்துட்டு இருக்குடி….. உன்னைத் தீண்டாமல்…. ”
”நான் உடம்புக்காக அலையிறவன் இல்லை… ஆனால் உனக்காக ஏங்குறேன்…. மனசும் உடலும்…. இத நான் சொல்றதுக்கு வெட்கமே பட மாட்டேன்” என்றவனை அடுத்த ஒரு வார்த்தையுமே பேச விடாமல்…….. தன் கணவனை…..அவன் பட்ட ஏக்கங்களுக்கெல்லாம் தீர்வாக தன் இதழ் சிறையால் அவனைப் பூட்ட……. அந்தச் சிறையில் சந்தோசமாய் அடைபட்டான் அவளவன்… தன்னவளை மீண்டும் சிறை எடுக்க கூட அவன் விரும்பவில்லை…. தீக்ஷாவாகவே தன்னை விட்ட போதுதான் விஜய் தன்னை மீட்டெடுத்துக் கொண்டவன்….
சிரித்தபடி…..
“நானும் உன் அளவுக்கு ட்ரை பண்ணவா… என்னை மிஞ்சிட்டடி……” அவனின் பொய்யான கிண்டல் வார்த்தைகள் எல்லாம் அவளைத் தீண்டவில்லை
தீக்ஷா அவனைப் பார்த்தபடியே இருந்தாள்…. பார்த்துக் கொண்டே இருந்தாள்….
”ஹேய் என்ன…..தீக்ஷாவுக்கும் செண்டிமெண்ட்டுக்கும் ஆகாதே” என்றவனிடம்….
சாய்ந்தவள்….
“ப்ச்ச்….இப்படியே பேசிட்டே இருங்க…. நான் தூங்கப் போகிறேன்………….. “ என்க
புரியாமல் விழித்தான் விஜய்….
“புரியலையா… நீ வேண்டும்… உனக்காக ஏங்குகிறேன்… இதச் சொல்ல வெட்கமே பட மாட்டேனு வாய் தான் சொல்லுது…. இதே டையலாக் நான் சொல்கிற வரை நீங்க பேசிட்டேதான் இருப்பீங்கனு தோணுச்சு…. ஆனால் நான் சொல்ல மாட்டேன் பா…. ஏன்னா பேசிக்கா அச்சம் மடம் நாணம் பயிர்ப்பெல்லாம் உள்ள பொண்ணு நான்……. இந்த அடக்கமான தீக்ஷா புள்ள அந்த டையலாக் லாம் சொல்லுமா… அதுதான் தூங்கப் போகிறேன்….. நீங்க கட்சி மேடைல பேசிட்டு இருக்கிற மாதிரி பேசிட்டே இருங்க….” என்று உலகின் அடக்கத்தை எல்லாம் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவள் போல்… அப்பாவியாய்ப் பேச…
அடக்க முடியாமல் சிரித்த விஜய்…
“உன்னை….. “ என்க
‘என்னை” என்று இவளும் சளைக்காமல் பார்க்க….
அவளை பூமாலையாய் அள்ளியவன்………. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்பது போல… தீக்ஷா என்னும் தேக வீணையில் தன் விரல்களாலும்….. இதழ்களாலும் புதிய நாதம் மீட்ட ஆரம்பிக்க…. விஜய்யின் விரலும் இதழும் தன் தேகத்தில் மீட்டியதற்கேற்ப…. அவள் மனைவி லயமும் சுருதியும் மாறாமல்…. ஸ்வரம் பிசகாமல்….. தன்னை அவனிடம் ஒப்படைக்க ஆரம்பித்தாள்….
வெகு நாட்களாய் காமனின் கச்சேரி நடக்காமல் மூடப்பட்டிருந்த அந்த சபை இன்று… அவர்களின் இன்னிசையில்… இழந்த பொலிவை மீண்டும் அடைய….. கச்சேரி பண்ணிய அந்த இரு குயில்களோ தங்கள் சங்கமத்தில் மூழ்கி தாம்பத்திய கச்சேரியின் உச்சம் அடைந்து திரும்பிய போது……….. விஜய்யின் மனைவி தன்னவனின் முகத்தில் இருந்த பழைய தேஜசை கொண்டு வந்திருந்தாள்….
------------
2 வாரங்கள் கழித்து………..
இளமாறன் வீட்டில் தீக்ஷாவும் விஜய்யும் அமர்ந்திருந்தனர்……
தீக்ஷா வரவே பிடிக்காமல்தான் விஜய்யோடு வந்திருந்தாள்……
வீட்டின் உள்ளே நுழைந்த போதுதான்…. தீக்ஷா அதிர்ந்தாள்… காரணம்… இளமாறனின் புகைப்படம் மாலையோடு புன்னகைத்திருக்க… கணவனின் கரங்களை நடுங்கிய தன் கரங்களால் பற்றினாள்….
விஜய் அதை உணர்ந்து…. கண்களால் சமாதானப்படுத்தியபடி உள்ளே அழைத்து வந்தான்…
இளமதி இவர்களைப் பார்த்தவுடன்… சந்தோஷாமாய் வரவேற்க… விஜய், இளமாறன் பெற்றோரிடம்….தன் தம்பியின் திருமண அழைப்பிதழை தன் மனைவியோடு சேர்ந்து கொடுத்து….. அவர்களை அழைத்தவன்…. இளமதிக்கும் தனியே கொடுத்தான்…
“இல்லை பரவாயில்லை…. அம்மா அப்பாகிட்ட கொடுத்திட்டீங்கள்ளா… அது போதும்” என்றவள்…
தீக்ஷாவைப் பார்த்தாள்…. தீக்ஷாவை வம்பிழுக்கும் எண்ணம் மட்டும் போக வில்லை அவளுக்கு…
“விஜய்… உங்க கூல் பேபி… என்னைப் பார்த்தால் மட்டும் பேசவே மாட்டேங்கிறாங்க…. கூல் பேபிக்கு… குடிக்க கூலா…. ஹாட்டா” என்று விசாரிக்க…
விஜய் சிரிக்க….
“தீக்ஷா கண்களாலேயே எரித்தாள் அவனை….”
“என்னை எதுக்கு முறைக்கிற….. என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி விஜய் கேட்க…
“யங்மூனைப் பார்த்த அப்படியே பல்பு போட்ட மாதிரி முகம் பிரகாசம் ஆகுது… அவ என்னைக் கிண்டல் பண்றா… அது உங்களுக்கு சிரிப்பா” என்று பல்லைக் கடிக்க
“உன்னைப் பார்த்தால் தான் நான் ஆஃப் ஆகிடுறேனே… அப்புறம் எங்க பிரகாசம் ஆகிறது” என்று பயந்தவனாய்ச் சொல்ல…
”நம்பிட்டேன்” என்றவளின் சிந்தனையில் இளமாறன் எப்போது எப்படி இறந்தான் என்ற எண்ணம் மட்டுமே வர….
விஜய் அதை உணர்ந்தவன் போல் அவளை யோசிக்கவே விடாமல்…
“தீக்ஷா….. வேணும்னா…. யங்மூன் கிட்ட சொல்லிடலாம்… என் பொண்டாட்டி கூல் பேபி இல்லை….. ஹாட் பேபின்னு அதிலும் எனக்கு மட்டும் தான்னு” என்று கொஞ்சம் கூட முகம் மாற்றாமல் சொல்ல… தீக்ஷாவுக்குதான் புரை ஏறியது…..
இளமதி அமைதியாக அவர்களைப் பார்த்தபடியே இருந்தாள்…
பின்… அவளது பெற்றோர்
”இளமதிக்கு நெக்ஸ்ட் மன்த் என்கேஜ்மெண்ட்…. பையன்…. வேற யாருமில்லை… நிர்மலாவோட அண்ணன் தான்…” என்று சொல்ல…
விஜய்யும் தீக்ஷாவும் அவளுக்கு தங்கள் வாழ்த்துக்களைச் சொன்னார்கள்…..
பின் விஜய் தயங்கியபடி
‘நிர்மலா எப்படி இருக்காங்க” என்று தயங்கியபடி கேட்க….
”அண்ணி சந்தோஷமா இருக்காங்க….. அவங்க புது வாழ்க்கையில்…. அவங்க லவ் பண்ணிய பையனோடே நானும் அவரும் மறுபடியும் சேர்த்து வச்சுட்டோம்….” என்று சிரித்தபடி சொல்ல…
தீக்ஷா குழம்பினாள்… இளமாறன் இறந்து விட்டான்… என்பது மட்டும் தான் தெளிவாக தெரிந்தது.. மற்றது ஒன்றும் அவளுக்கு புரியவில்லை… இருந்தும் அப்போது ஏதும் கேட்கவில்லை…..
விஜய் இப்போது…
‘ஓ.. நிர்மலாவோட அண்ணன் எப்படினு யோசிச்சேன்… இப்போ எப்படினு புரியுது” என்று முகம் மலர்ந்து சொன்னவன்…. அங்கிருந்து மனைவியோடு கிளம்பினான்…
காரில் வரும் போதே… தீக்ஷாவுக்குள் ஆயிரம் கேள்விகள்… அதை உணர்ந்தவனாய்…
விஜய் அவளிடம்… ”உன்னை கண்டதை யோசிக்கக் கூடாதுனு சொல்லி இருக்கேன்…. இப்போ என்ன பிரச்சனை…. இளமாறனைப் பற்றிதானே…. இப்போ உன் சந்தேகம் எல்லாம் கேளு.. சொல்கிறேன்” என்றபடி அவளைப் பார்க்க
“விமான விபத்தில் இறந்தது இளமாறன்தானா” என்றவள் அவனுக்காக கலங்க ஆரம்பிக்க…
”ஹ்ம்ம்ம்ம்… நான் போக வேண்டியது…. அவன் போய்ச் சேர்ந்துட்டான்…. “ என்றவனின் முகம் இறுகி இருந்தது… அவனின் இறப்பு கூட அவனின் நம்பிக்கைத் துரோகத்தை ஆற்றவில்லை…. தன் தொழிலில் அவன் செய்த துரோகம் கூட அவனை இம்சிக்க வில்லை…. தன் மனைவிக்கு அவன் செய்ய நினைத்த காரியம்… “ நினைக்கும் போதே அவனின் கோபம் அவனையும் மீறி வெளிவர… அவனது காரின் வேகமும் அவனைப் போலவே கட்டுப்பாடில்லாமல் பறக்க…
அதைப் பார்த்தவள் தீக்ஷா….
“என்னத்தான்…. ஏன் முகம் ஒரு மாதிரியா ஆகி விட்டது…. இளமாறனை மிஸ் பண்றீங்களா…” என்றவளின் கேள்வியில்…
முறைத்தான்….
“அந்த தூரோகியப் பற்றி பேசாதே….அவனால உன்னை…. நம்ம குழ………. “ என்று ஆரம்பித்தவன்…
“சரி விடு” நெக்ஸ்ட் நாம ஒரு முக்கியமான இடத்திற்கு போகப் பொகிறோம் என்று மாற்ற,,…
தீக்ஷா…. அவனின் கோபத்தை உணர்ந்து….. யோசித்தவள்…. பின்
“அன்னைக்கு என்னைக் கடத்தச் சொன்னது தீனா இல்லையா…. இளமாறன் தானா…” என்றவள் அவனின் கேவலமான புத்தியில் கடுஞ்சினம் கொண்டாள்….
“பொறுக்கி….” என்று வாய்க்குள் முணங்கியவள்….. விஜய்யை முறைத்தாள்….
“அவனைலாம் நம்பி….. உங்க தங்கையை கொடுக்க போட்டி போட்டீங்க………….” என்றவள்….
அப்போதுதான் அவன் சற்று முன் நிறுத்திய வார்த்தைகளை உள்வாங்கியவள்…. அவன் சொல்ல வந்த வார்த்தைகளை தனக்குள் சொல்லிப் பார்த்தவள்….. மனதின் அடிஆழம் வரை அடி வாங்கினாள்….
“அத்தான் காரை நிறுத்துங்க…..” என்ற அவளின் ஆவேசமான கத்தலில்…. பதறி நிறுத்த
“என்னம்மா….” என்றவனின் அருகே வந்து ஆதரவாய் அணைக்கப் போக…
”அவனால எனக்கு நடந்தெல்லாம் ஓகே… ஆனா அடுத்து என்ன சொல்ல வந்தீங்க… ” வார்த்தைகள் நடுங்க…. கண்களில் குளம் கட்டி இருக்க… விஜய்…. பயந்தே விட்டான்
‘தீக்ஷா என்னைப் பாருடா…. ஒண்ணுமில்லைடா… ரிலாக்ஸா இருடா…… டென்சன் ஆகாதம்மா…” என்று ஆறுதலாய் பேசியவன்…. நாம இப்போ வீட்டுக்கு போகலாம்… ஏகப்பட்ட வேலை இருக்கும்மா…. என்று பேச்சை மாற்ற முயல…………..
அவன் சட்டையைப் கொத்தாகப் பற்றியவள்…
”நான் டென்சன் ஆகக் கூடாதுனா… எனக்கு இப்போதே தெரியனும்…. இல்லை” என்றவளின் உச்சக்கட்ட ஆவேசத்தில்….
அவளை தன்னோடு இறுக அணைத்தவன்… அவளின் உணர்வுகள் புரிந்து……
“ஒண்ணுமில்லைடா…. நமக்கு இன்னும் வயசு இருக்கு…. எத்தனை குழந்தைகள் வேண்டுமென்றாலும் பெத்துக்கலாம்” என்றபோது அவன் குரலும் உடைந்திருக்க…. விஜய்யின் கைகளின் நடுங்க… அதை உணர்ந்த தீக்ஷா…..
அதுவரை தன் உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவள்… தன் கணவனை தேற்றும் விதமாய் அவனின் கரங்களை அழுத்த….
“யாருக்குமே தெரியாது தீக்ஷா…. ஆனால் அதை நினைத்து வருந்தக் கூட முடியாத ஒரு நிலையில் இருந்தேன்… நீ மட்டும் எனக்கு கிடைத்தால் போதும் என்று நம் முதல் வாரிசு கருவிலேயே அழிந்தது கூட பெருசா தெரியலை தீக்ஷா….. அந்த 3 மாதமும் அணு அணுவா நான் செத்தேண்டி…. நீ கோமாவிலேயே என்னை விட்டு போய் விடுவாயோனு….. அந்த நரக வேதனைலாம் யாருக்குமே வரக் கூடாது தீக்ஷா……..” என்றவன்…
அவளின் நெற்றியில் இருந்த காயத்தின் தழும்பில் அழுத்தமாய் முத்தமிட்டவன்…
“என்னை மன்னிச்சுட்டேனு சொல்லு தீக்ஷா….” என்றவன்…
“என்னைப் பொறுத்த வரைக்கும் உன்னை ரூம்ல தள்ளினேன்… அடைத்து வைத்தேன் ,கழுத்தை பிடிச்சு தள்ளினேன்….. இதெல்லாம் சாதரணமா நெனச்சுட்டேன்…. ஆனால் உன்னோட வேதனை அவமானம்லாம் என்னை விடல…. உப்பைத் தின்றவன் தண்ணி குடித்துதான் ஆக வேண்டும்… தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்….. என் விசயத்தில் கரெக்டா நடந்திருக்கு தீக்ஷா… “ என்று புலம்ப ஆரம்பிக்க….
“அய்யோ அத்தான்… விடுங்க…ப்ளிஸ் ஃபீல் பண்ணாதீங்க… நீங்க ஒரு தப்பும் பண்ணலை…. என்னை அடிக்க உங்களுக்கில்லாத உரிமையா… அன்னைக்கு உங்க முன்னால நின்ற நிலைமை பொண்ணா அவமானம் தான்… ஆனா நான் தான் உங்களோட முழு உடைமை ஆகிட்டேனே.. அதனால அந்த அவமானமும் இல்லை…..” என்று விஜய்யை தேற்ற ஆரம்பிக்க….
”ப்ச்ச்… ராதாவோட காதலுக்கு அந்தஸ்தைக் காரணம் காட்டி எதிர்ப்பு காட்டியது…. ஆர்த்திய கடத்தி தீனாவை மிரட்டினது, உன்னைத் கழுத்தைப் பிடிச்சு தள்ளினது, உன்னை மட்டும் இல்லை உன் குடும்பத்தையே வெளியேற்றியது…. இதுக்கெல்லாம் நான் அனுபவிச்சுட்டேன்”
விஜய் பேசிக் கொண்டே போக, தீக்ஷா அவன் உதட்டில் தன் விரல் வைத்து..
“ஷ்ஷ்ஷ்……” என்று மிரட்டியபடி…
அவனின் அருகில் நெருங்கிய அமர்ந்தவள்…. அவன் தோள் சாய்ந்து…
“பேசாமல்… ட்ரைவ் பண்ணுங்க.. டிரைவர் சார்.” என்று அவனிடம் குறும்பாகக் கூறி விட்டு…. அவனின் கையை எடுத்து தன் மேல் போட்டுக் கொள்ள
விஜய்யும் இப்போது…. தன் கவலை மறந்தவனாய்…. இதழ் மலர்ந்தவன்…
“அதுசரி… ட்ரைவ் பண்றது எப்படிமா” என்று அவன் உதடுகள் சொன்னாலும்…. அவனின் கை மனைவையை இன்னும் அழுத்தமாய் அரவணைத்துக் கொள்ள…. கணவனை அவன் கவலையிலிருந்து மாற்றிய நிம்மதியில் தீக்ஷா ஆறுதலானாள்…
ஆனால் அவளின் உள்ளமோ ஆறுதலடைய மறுத்தது..
எந்த ஒரு துன்பத்தையும் எதிர்நோக்காமல்… பயந்து தனக்குள்ளேயே ஒழிந்து கொண்ட தன் கோழைத்தனத்தை நினைத்து இப்போது வெட்கினாள்…. அதனால் தாங்கள் இழந்தது 10 மாத மண வாழ்க்கை மட்டும் இல்லை….. தங்கள் வாரிசைக் கூட……… உள்ளுக்குள்ளே மறுகினாள் தீக்ஷா….
தன் கணவன் இப்போது கூட எதையும் சொல்ல முடியாமல் தன் மனதோடு வைத்து… தான் கொடுத்த துன்பத்தை எல்லாம் தாங்கிக் கொண்ட அவனின் திடமான மனதை நினைத்தவள்…. தன் கணவனையே பார்த்தபடி வர….
அவளின் பார்வை உணர்ந்தவன்…. அவளை கேள்விக் குறியாக நோக்க…
மீண்டும்… தன் கவலையால் அவனை நோகடிக்க விரும்பாமல்….. சட்டென்று தன் பார்வையினை மாற்றி….
“நாம இப்போ எங்க போறோம்” என்று பேச்சை மாற்றினாள்…
அவள் பேச்சை மாற்றுவதை புரிந்து கொண்டான் தான் விஜய்….
ஆனாலும் ஒன்றும் கேட்கவில்லை….
அடுத்து அவன் காரை நிறுத்தியது சக்தியின் இல்லம் தான்…
”நாம் ஏற்கனவே வந்தோமே அத்தான்… “ என்றவளுக்கு ஒப்புதலாய் தலை அசைத்து… அழைத்துப் போனவன்…
அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு…. சக்தியைப் பற்றி அங்குதான் தீக்ஷாவுக்குச் சொன்னான்….
விஜய் தீக்ஷாவிடம் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் திணிக்காமல்…. அந்தந்த நபர்களின் அறிமுகத்திலேயே அவர்களைப் பற்றி.. தன் மனைவிக்குச் சொன்னான்…..இது கூட மருத்துவரின் அறிவுரையே
”நமக்காவது… 35 நாள் குழந்தை…. அதன் கருவிலேயே அது அழிந்தது கூட தாங்க முடியலை… 22 வருசம் பார்த்து பார்த்து வளர்ந்த தங்களோட பொண்ணை இவங்க பிரிஞ்சது கொடுமைதானே… தீக்ஷா… நம்மை விட துனபங்களை அனுபவிப்பர்கள் ஏராளம் இந்த உலகில்…..”
விஜய் கூறியதை உணர்ந்தவளாய் மௌனமாய் இருந்த தீக்ஷா..
அதன் பின்…..
தீக்ஷா அவர்கள் மகளின் இடத்தை நிரப்புவேன் என்றெல்லாம் சக்தியின் பெற்றோர்களை தேற்றவில்லை…. பொதுவாக ஆறுதல் கூறினாள்… பிறகு கிளம்பினார்கள்
விஜய் எதிர்பார்த்தான் தான்…. தீக்ஷா அவ்வாறு கூறுவாள் என்று…
ஆனால் அவளிடம் அங்கு ஏதும் அதைப்பற்றி பேசாமல்…. தனிமையில் கேட்க…
“நான் எப்படி அத்தான் …. சக்தியோட ப்ளேஸ ரீப்ளேஸ் பண்ண முடியும்…. ஆறுதலாகத்தான் இருக்க முடியும்... யாராலும் யாரோட இடத்தையும் ரீப்ளேஸ் பண்ண முடியாது அத்தான்… ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு இண்டிவாஜுவலிட்டி இருக்கும்… நான் அவங்களுக்கு மகள் போல ஆறுதல் சொல்லலாமே ஒழிய… மகளா என்னை உணர வைக்க ஒருபோதும் முடியாது” என்றவளிடம் விஜய்யும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை….
-----
நாட்கள் கடந்தன…. சுரேந்தர்-பார்வதி….. சாரகேஷ்-அகல்யா திருமண நாளும் வந்தது
முதலில் சாரகேஷ்-அகல்யாவின் திருமணம் நடக்க, அடுத்து பார்வதி-சுரேந்தர் திருமணம். சாரகேஷ்- அகல்யாவோடு சேர்ந்து நின்று பார்வதியை சுரேந்தருக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க… தேவகியின் முகத்தில் தாயாகப் பரவசம்….
திருமண வரவேற்ப்பில்…. ஆர்த்தி… விஜய்யை…. பாடச் சொல்லி ஒற்றைக் காலில் நிற்க… விஜய் முதலில் மறுத்தவன்….
”விஜய் அத்தான் ப்ளீஸ் ” என்று…. அவள் கெஞ்சலில்…. வேறுவழியின்றி விஜய் மேடைக்கு ஏற….. அவன் ஏறிய மேடையின் எதிர்புறம்.. இருந்த மணமேடையில் மணமக்களோடு நின்று கொண்டிருந்த தீக்ஷா திகைத்தாள்…
விஜய்யை வெற்றிகரமாக மேடை ஏற்றிய சந்தோசத்தோடு…ஆர்த்தி தீக்ஷாவின் அருகில் வந்து நிற்க….
”ஆர்த்தி…. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை…..” என்று சிரிக்க….
மணமகளாய் நின்ற பார்வதியோ தன் தோழியிடம்
”விஜய் அத்தான் நல்லா பாடுவாராம் தீக்ஷா….. சுரேந்தர் சொன்னார்… உனக்குதான் தெரியலை… ” என்றவள்…… தோழியின் முகம் பார்க்க…..
”எனக்கு தெரியாமல் இருக்குமாடி…. அவர் நல்லா பாடுவார்னு தெரியும்…. என்ன பிரச்சனைனா…. பாசத்தில்…… ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைனு….’ உங்க விஜய் அத்தான்… அவர் தம்பிங்களோட பாட ஆரம்பிச்சுருவாரோனு பயமா இருக்கு” என்று வழக்கம் போல் தன் குறும்பான பேச்சால் தன் தோழி…. மற்றும் ஆர்த்தியை சிரிக்க வைக்க….. அப்போது… விஜய் பாட ஆரம்பித்தான்…
ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்
ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
போகமே என் யோகமே என் காதல் ராகமே
கீதமே என் வேதமே என் ஜீவ நாதமே
பாவை உந்தன் பாதமே பாரிஜாதமே
பாதை எங்கும் பூவனம் தாது தூவுமே
மண்ணில் சொர்க்கம் வந்ததே
மார்பில் சாய்ந்து கொண்டதே
சிந்தாத முத்துக்கள் செவ்வாயில் சிந்தக் கண்டேன்
வானம்பாடி ……
மன்னவன் கண் மூடினால் என் வானில் ராத்திரி
மங்கையே உன் பார்வை தான் என் வானில் வைகறை
இன்பம் என்னும் வேதனை இன்று பார்க்கிறேன்
நானும் கொஞ்சம் சோதனை போட்டுப் பார்க்கிறேன்
காற்று வண்டு தீண்டுமோ
கற்பு என்ன ஆகுமோ
பூங்காற்றும் தீண்டாமல் நீ என்னை கட்டிக் கொள்வாய்
வானம்பாடி ……
விஜய் பாடும் போதே…. மணமக்களை விட்டு…. அனைவரும்…. பாடிய விஜய்யையும் தீக்ஷாவையும் பார்க்க….
யுகி… ஆர்த்தி…. பார்வதியின் கிண்டல் மழை தாங்க முடியாமல், தீக்ஷா நாணக் குடை பிடித்தவள்….
”இப்படி பாடி… என்னையே ஓட்ட வச்சுட்டானே…..’” என்றபடி….. தீக்ஷா வாய் முணங்கினாலும்…. கணவனின் பாடலில் தன்னைத் தொலைத்து… மனம் நெகிழ்ந்துதான் இருந்தாள்…
பாடி முடித்த விஜய்….. அவள் அருகில் வந்து….
”எல்லோரும் பாராட்டினார்கள்… யாருக்கு இந்தப் பாடல் பிடிக்கும்னு சொன்னாங்களோ…. அவங்க ரியாக்ஷனே கொடுக்கலை….. பெருசாலாம் வேண்டாம்…. ஏதோ இந்த ஏழைக்கு ஏற்ற மாதிரி…” என்று காது கடிக்க….
மௌனமாய் அவனுக்கு காதல் மொழியைக் கண்கள் பனிக்க…. கூற… அவள் கணவனோ….
”செண்டிமெண்ட் தீக்ஷாவுக்கு கூட வருமா… ” என்று தன் பங்குக்கு கிண்டல் செய்ய….
முகம் சிவந்தவள்… மூக்கு விடைக்க….
”எப்போதோ பிடிக்கும்னு சொன்ன பாட்டை பாடிட்டு…. அதுக்கு பாராட்டு பத்திரம் வேற படிக்கனுமா உங்களுக்கு…. பாடப் போகும் போது என்ன பாட்டு பாடனும்னு என்கிட்ட ஏன் நீங்க கேட்கலை…..” பொய்க் கோபமாக விஜய்யைத் தாக்கிப் பேச….
அதிர்ந்த பார்வை பார்த்தான்… பரிதாபமாய் அவள் கணவன்…
அவனின் பார்வையில் குறும்பாய்ச் சிரித்த தீக்ஷா…..
”என்கிட்டேயேவா….” என்பது போல் பார்க்க…
வழக்கம் போல் தன்னவளின் குறும்பில் தன்னைத் தொலைத்தான் விஜயேந்தர்……
-----
ஒருவழியாக திருமணம் அதன் தொடர்ச்சியான சடங்குகள் எல்லாம் முடிந்து…. சுரெந்தர்-பார்வதிக்கு ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் முதல் இரவுக்கு சூயூட் புக் செய்திருந்தான்…. அவர்களின் தேனிலவுக்கும் ஏற்பாடு செய்திருந்தான்….
சாரகேஷ் அகல்யாவுக்கும்…. விஜய் அதே போல் ஏற்பாடு செய்ய நினைக்க….சாரகேஷ் மறுத்து அவன் வீட்டிலேயே தங்கள் முதல் இரவை ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டான்… தேனிலவும் அவனின் அந்தஸ்திற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்திருந்தான்…
விஜய்யும் கட்டாயப்படுத்த முடியவில்லை….
ஒருவழியாக… திருமண வேலைகளை முடித்து…. நல்ல நேரம் பார்த்து பார்வதி-சுரேந்தரை அனுப்பி வைத்து…. விஜய் தீக்ஷா தங்கள் அறைக்கு வந்த போது மணி 11ஐத் தாண்டி இருக்க…
விஜய் …
“தீக்ஷா…. so tired… “ என்று சொல்லியபடியே படுக்கையில் விழ… அவனுக்கு இந்த திருமண வேலையினால் அலைச்சல்…. தீக்ஷாவுக்கும் அது புரிந்ததால்….
“குட் நைட் அத்தான்” என்றபடி… தன் அணிகலன்களை எல்லாம் கழட்டி வைக்க ஆரம்பித்தாள்….
அவளுக்கும் களைப்பாக இருக்க எப்போதடா கண் மூடுவோம் என்றுதான் இருந்தது….…. கணவனை நினைத்து பயந்தபடியே வந்தவள்… அவனே உறங்கப் போகிறேன் என்றவுடன்… தீக்ஷாவும் வேகமாய் குட்நைட் சொல்ல…
“என்ன மேடத்துக்கு வேகமா குட் நைட் வருது…. அந்தளவு புருசனால தொந்திரவா” என்று அவள் புறம் திரும்பியவனைப் பார்த்து முறைத்தவள்…. தன் வேலையைத் தொடர்ந்தாள்…
அவளது முறைப்பில்….
“சரி சரி முறைக்காத…. நாளைக்கு 3’0 க்ளாக் ஃப்ளைட்…. சீக்கிரம் எழனும்…. அலார்ம் வச்சுட்டு படு” என்று விஜய் முடிக்கவில்லை…
”என்னது ஃப்ளைட்டுக்கா…. ” கோபமாய் நின்றாள் அவன் முன்…
“ஆமாம்…” என்றவன் இதழோடு புன்னைகையை மறைத்து வைத்துக் கொண்டபடி அவளைப் பார்க்க
“தங்கைக்கு வீடு… தம்பிக்கு ஃப்ர்ஸ்ட் நைட்டுக்கு ஸ்டார் ஹோட்டெல்ல சூட்… அப்புறம் ஃபாரினுக்கு ஹனிமூன் டிக்கெட்…” என்றவளிடம்
”ஏன்...??? என் தங்கை, என் தம்பிக்கு செய்தால் உனக்கு என்ன….” என்று விடாமல் இவனும் பேச…
“என்னவா… நல்லா செய்யுங்க…. ஆனா பொண்டாட்டிய பார்த்தால் மட்டும் இளிச்சவாயாத் தெரியும்…. அப்போ ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட்னு…. எதுவும் இல்லை… இத்தனை நாளாக…. தம்பி திருமணம்னு…. பிஸி…. என்னைப் பார்த்தால் எப்படி தெரியுது” என்றவளிடம்
“லூசு… அவங்க புதுசா மேரேஜ் ஆனவங்கடி…. அவங்க கூட போட்டி போடலாமா” என்றவன்… “நமக்கு இந்த ரூம் போதாது….” என்று மனைவியை தன் புறம் இழுக்க…
”கிஃப்ட் கேட்டால் அதுக்கு ஒரு கனவுக் கதை சொல்லி. நான் இனிமேல் கிஃப்ட்டே தரமாட்டேனு அதுக்கும் தடா…. வெளியில சொல்லிடாதீங்க…. ஒருத்தன் கூட பொண்டாட்டிக்கு கிஃப்ட் வாங்கித் தர மாட்டான்… நல்ல சாக்கு…… உங்களுக்கு இனி எப்போ நல்ல கனவு வருமோ…… ” என்று பொறுமியவளை…
“படுக்கலாம்…. எனக்கு தூக்கம் வருது” என்று பேச்சுவார்த்தையினை முடிப்பது போல் அழுத்தமாய்க் கூறி…. இழுத்து படுக்கையில் விழ வைத்து…. அவளையும் தன் கையணைப்பில் படுக்க வைக்க…
“விடுங்கத்தான்….” என்று திமிறியவளை…
விடாமல் பிடித்தபடி…. கண் மூடியவன்… அடுத்த நிமிடமே தூங்கியும் விட…. தீக்ஷா அதன்பின் தான் அவனை விட்டே எழ முடிந்தது…
“அழுத்தக்காரன்…. விருமாண்டி” என்று திட்டியபடியே எழுந்தவள்… கண்ணாடி முன் அமர்ந்த படி… தன் உருவத்தைப் பார்த்த படியே
”தீக்ஷா…. இப்போ புலம்பு…. இந்த மாதிரி கண்ணாடியில பார்த்துதானே கவிழ்ந்த” என்று தன்னையே கண்ணாடியில் குத்திக் கொண்டவள்… இப்போது தன்னையும் மீறி உறங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு கண்ணாடி வழியே முத்தம் பதிக்க….
“திருந்த மாட்டியே” என்று தன்னைப் பார்த்தே சிரித்தவள்…. அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் படுக்கையில் விழுந்தவள்…உறங்கிக் கொண்டிருந்த கணவனின் கைகளுக்குள் வந்தவள் உறங்கியும் போனாள்…..
இதுதான் தீக்ஷா…. தன் கணவனை அவன் இயல்புகளோடே ஏற்றுக் கொண்டவள்… தன் இயல்புகளையும் மாற்றாமல்… தங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள்…. தன் கணவனையும் வாழ வைத்தாள்.. வாழ வைப்பாள்
---------------------------------------------
சில வருடங்களுக்குப் பிறகு
சென்னையின் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற ஹோட்டலின் நுழை வாயிலிலே ”VD Promotors இல்லத் திருமண விழா” என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட வாசகம் அந்த திருமண வரவேற்புக்கு வந்திருந்தவர்களை…. பிரமாண்டமாய் வரவேற்றது….
அதன் கீழே
யுகேந்தர் – ஆர்த்தி என்ற மணமகன் மணமகள் பெயர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க… அந்த இடமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது…
விஜயேந்தர் மற்றும் தீனா இருவரும் இணைந்து 2 பிராஜெக்ட்ஸை வெற்றி கரமாக முடித்திருந்தனர்… கட்டுமானத் தொழிலில் புதிய பல தொழில் நுட்பங்களை புகுத்தியிருந்தற்காக அவர்கள் இருவரும் கூட்டாகத் தொடங்கியிருந்த VD promoters பல விருதுகளை அள்ளி வந்திருந்தது…. அடுத்து பல நாடுகளின் நிறுவனங்களும் அவர்களோடு ஓப்பந்தம் செய்ய காத்திருந்தன….
சுரேந்தர் இதே துறையில் இவர்களோடு சேராமல் தான் மற்றும் தன் மனைவியோடு தனியே கால் பதித்து அதில் வெற்றியும் பெற்றிருந்தான்….
யுகேந்தர் ஆர்த்தி திருமணத்தை 2 வருடத்திற்கு முன்னரே முடிக்கலாம் என்று தீனா வீட்டினர் வந்து பேசியபோது… யுகேந்தர் மறுத்து விட்டான்…. தன் சுயத்தில் தானே ஒரு நிறுவனத்தை தொடங்கி அதில் காலூன்றிய பின்தான் தன் திருமணம் என்று அதில் வெற்றி பெற்ற பின்னர் தான் இந்தத் திருமணமே…
விஜய்க்கு அதில் மிகவும் பெருமிதம்… தன் தம்பி தன்னைப் போல் அல்லாமல் தன் குறிக்கோளை அடைந்த பின்னரே திருமணம் செய்து முடித்தது…. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது…
காதல் என்ற மாய வலையில் யுகி விழுந்திருந்தாலும்…. தன் முடிவில் மாறாமல்…. தன் காதலிலும் வெற்றி அடைந்திருந்தான்…..
தன் மனைவி சொல்வது போல….
“நாங்கள்ளாம் பார்க்கத்தான் விளையாட்டுத்தனமாய் இருப்போம்…. காரியம் என்று வந்தால் சாதிக்காமல் இருக்க மாட்டோம்” நடத்திக் காட்டி விட்டான் யுகி
விஜய் சிரித்தபடி மேடையில் யுகியோடு சிரித்துக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்தான்…
இதுதான் இப்போதெல்லாம் அவன் மனைவியின் ஸ்லோகம்…
யுகி தீக்ஷா தீபன் மூவரும் சேர்ந்துதான் தொடங்கி இருந்திருந்தனர் அந்த மென்பொருள் நிறுவனத்தை…
ஓரளவு வெற்றிகரமாக தங்கள் 3 ஆம் ஆண்டினைத் தொட்டிருந்தது…
தீக்ஷா கடந்த வாரம் தான் இந்தியா திரும்பியிருந்தாள்…
யுகிதான் க்ளைண்ட் சம்பந்த பணிகளுக்காக வெளிநாடு செல்வது வழக்கம்….. ஆனால் அவனின் திருமணத்தால் இங்கேயே இருக்க…. தீக்ஷா தான் 3 மாத காலமாக Uk போய் இருக்க நேர்ந்தது…
சக்தியும் தன் தாயை சந்தோஷமாக வழி அனுப்பி வைத்திருந்தாள்…..
சக்தி…….. விஜய் – தீக்ஷா இருவரின் பெண் வாரிசு,,,, நான்கு வயது,…
தீக்ஷா விஜய்யிடம் … ப்ரசவ அறைக்கும் போகும் முன் சொன்னது இதுதான்
“அத்தான் நாம நம்ம குழந்தைக்கு சக்தினு பேர் வைக்க வேண்டும்…. அது பெண் குழந்தை என்றாலும் ஆண் குழந்தை என்றாலும் கூட…. அந்த சக்தியை வளர்க்கும் பொறுப்பை சக்தி அம்மா- அப்பாவிடம் கொடுக்க வேண்டும்” என்பதுதான் அது….
இப்போதும் சொல்வாள் தீக்ஷா….
”தீக்ஷா டூ சக்தி… சக்தி டூ தீக்ஷா ” அதன் படியே தன்னிலிருந்து உருவாகிய தன் மகளுக்கு சக்தி என்று பெயரிட்டு அவளை வளர்க்கும் பொறுப்பை சக்தியின் பெற்றோரிடம் ஒப்படைத்திருந்தாள் தீக்ஷா…
இறந்து போன சக்தியின் ஆத்மா கண்டிப்பாக…. இதில் சாந்தி அடையும் என்று …. தீக்ஷா- விஜய் நம்பினர்…..
பார்வதி – சுரேந்தர்க்கு 2 வயது மகள்….. என ராகவேந்தர் - கலைச்செல்வி குடும்பம் அடுத்த தலைமுறையைத் தொட்டிருந்தது…..
ராதா - தீபன் இருவருக்கும் சுனந்தாவுக்கு அடுத்து ஆண் வாரிசு….
சாரகேஷ் திருமணத்திற்குப் பின் வெளிநாட்டிற்குச் சென்று விட்டிருந்தான்…. அகல்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறாள்….
விஜய்யின் நினைவுகள் அனைவரையும் சுற்றி நின்ற போது….
சக்தி அவனின் அருகில் வந்து அவனைப் பிடித்து இழுக்க…. குனிந்து விஜய் தன் மகளைத் தூக்கியபடி பார்க்க… அதில் கண்ணீர்…
“என்னடா…. சக்தி செல்லம் ஏன் அழறாங்க”
அவள் வாசித்ததோ தன் தாயின் மேல் புகார்….
“அப்பா… அம்மா என் ஜெயின்…” என்று தேம்பியபடி பேச…. புரிந்து கொண்ட விஜய்…. தன் மகளைத் தூக்கியபடியே…. தீக்ஷாவிடம் வந்தான்
”ஏன் தீக்ஷா அவகிட்ட வம்பிழுக்கிற… அவ ஜெயினைக் கொடு….” என்று கை நீட்ட….
”இந்த வருசம் அவளோட பிறந்த நாளுக்கு போட்டது அவளுக்கு போட்டு விட்டுட்டேன் அத்தான்… இது அவளோட ஃபர்ஸ்ட் பிறந்த நாளில் எடுத்தது… அது எதுக்கு இவளுக்கு” என்று முறைக்க
”அவதான் அழறாள்ள… கொடு…” என்று கை நீட்ட…
தன் மகளை முறைத்தவள்…
“பிடிவாதம்… அப்படியே விருமாண்டி போல” என்று மனதுக்குள் திட்டியபடியே கொடுக்க…
அதன் பின் தான் சக்தியின் முகம் சந்தோஷமாய் மாற” விஜய் சிரித்தபடி தீக்ஷாவைப் பார்க்க….
அவளோ உம்மென்றிருந்தாள்…
விஜய் அவளைப் பார்த்தபடியே தன் மகள் காதில் ஏதோ சொல்ல…
“அம்மா” என்று தீக்ஷாவை அழைக்க…
திரும்பிப் பார்த்தாள்…
“இப்படி உம்முனு இருந்தால் டிஸ்கவரி சேனலுக்கு லோகோ ஆகிடும்மா” என்றவள்
“அப்புறம் என்ன அப்பா” என்று தன் தந்தையை பார்த்துக் கேட்க…
“அடிங்க… எனக்கேவா” என்றபடி தன் கணவனையும் மகளையும் முறைக்கும் போதே ஜெயந்தி அதைப் பார்த்தபடி…
“ஏண்டி… புள்ளைய திட்டுற….” என்று பேத்திக்கு ஆதரவாகப் பேசியபடி விஜய்யிடமிருந்து சக்தியை வாங்க….
”அம்மா” என்று பல்லைக் கடித்த தீக்ஷா….
“அவ பேசுற பேச்சுக்கெல்லாம்” என்ற போதே
“உன்னை விடல்லாம் என் பேத்தி கம்மியாத்தான் பேசுறா… அதை நீ சொல்லாத” என்று நொடித்தபடி போனாள்
வாய்க்குள்ளேயே சிரித்த விஜய்யைப் பார்த்தவள்… அதற்கு மேல் முறைக்க முயன்று… முடியாமல்…
“தீக்ஷா எல்லாம் நேரம்டி…. “ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்…. விஜய்யிடம்
”ஹலோ இங்க என்ன பார்வை.. ஒழுங்கா வீட்டுக்கு மூத்த மகனா வந்தவங்களை கவனிங்க” என்று அவனைக் கடந்தவள்…. மீண்டும் திரும்பிப் பார்க்க…. விஜய் அதை எதிர்பார்த்திருந்தவன் போல்….
“எல்லாம் நேரம்டி” அவள் காதில் விழும்படி சத்தமாய்ச் சொல்ல…. தீக்ஷா சிரித்தபடியே சென்றாள்…
------
அன்றிரவு….
யுகி, சுரேன் மற்றும் விஜய் மூவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்..... யுகி பொறுமை தாண்டியவனாய் மணியைப் பார்க்க…. மணி 10ஐக் கடந்திருக்க… ஆர்த்திக்கு மெசேஜ் செய்தான்…. ‘
“டைம் 10” என்று மட்டும் அனுப்பி வைக்க… மொபைல் ஆர்த்தியிடம் இருந்தால் தானே….
மொபைலின் பீப் சத்தத்தில் தீக்ஷா வேகமாய் பார்வதியிடம்…
“ ‘பாரு…’. தலைவர் மெசேஜ் அனுப்பி இருக்காரு… அவர் பொண்டாட்டிக்கு…. “ பார்வதி சிரித்தபடி தீக்ஷாவின் அருகே போனாள்…
”என்ன அனுப்பி இருக்கின்றானோ” என்ற சங்கடத்துடன்.. “அக்கா ப்ளீஸ்” என்று மொபைலை நோக்கி ஆர்த்தி கை நீட்ட…
”சரி சரி படிக்கலை…..பட் படிச்சுட்டு…. சென்சார் போக… என்ன அனுப்பி இருக்கானு சொல்லனும்” என்றவள் மொபைலை கையில் கொடுக்காமல் அவள் புறம் திருப்ப… வேகமாய்ப் படித்தவள்…
”மணி 10னு “ அனுப்பி இருக்கான் என்று சொல்ல…
பார்வதி ஆர்த்தியிடம்
“ஏன் ஆர்த்தி உனக்கு மணி பார்க்கத் தெரியாதா என்ன…..” என்று கண் சிமிட்ட….
ஆர்த்தியோ…
”காலேஜ்லதான் சீனியர் ராகிங் பார்த்திருக்கேன்… இங்கேயுமா” என்றவள்…
”எனக்கென்ன…. உங்க ஃப்ரெண்ட் தானே….” என்றபடியே தீக்ஷாவைப் பார்த்துச் சொல்ல….
”பரவாயில்லை ஒரு நாள்தானே…. என் ஃப்ரெண்ட் யுகி என்ன அடிச்சாலும் தாங்குவான்…. அதுக்குதானே அவன வேற எங்கேயும் விடாமல்…. இங்க பிடிச்சு வச்சுருக்கோம்” என்று பார்வதியிடம் கண் சிமிட்டியவள்
“பாரு நீ தப்பிச்சுட்ட… அந்த டைம்ல தீக்ஷா கொஞ்சம் செண்டிமெண்டா லாக் ஆகி இருந்தாள்… இல்ல நீயும் மாட்டி இருப்ப ” என்க…
அதே நேரம் சுரேன் பார்வதிக்கு கால் செய்ய
“என்ன சுரேன்” என்றபடி பாரு நழுவப் போக…
தீக்ஷா அவளை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு…
“இங்க இருந்தே பேசு”
“என்ன பண்றீங்க…. யுகி இன்னும் இங்கயே இருக்கான்” என்று கத்த ஆரம்பிக்க…
”அது நல்ல நேரம் இன்னும்..” என்று ஆரம்பித்த பார்வதியிடமிருந்து போனை வாங்கிய தீக்ஷா…
“சுரேன் அத்தான் ஆர்த்தியத்தான் நல்ல நேரம் பார்த்து அனுப்பச் சொல்லி இருக்காங்க…. பார்த்துக்கங்க உங்க வசதி எப்படி…. பாருவையும் நல்ல நேரம் பார்த்து அனுப்பி வைக்கனுமா” என்று தீக்ஷா சுரேனைக் கார்னர் செய்ய….
“என்னமோ பண்ணுங்க” என்று போனை வைத்து விட்டான்
சுரேந்தர் கடுப்போடு போனை வைப்பதை பார்த்த விஜய்..
“என்னடா” என்று சுரேனை கேட்க..
”யுகி… உன் ரெண்டு அண்ணியும்… ஆர்த்திய இப்போ அனுப்ப மாட்டாங்க போல… என்னவோ ப்ளான் பண்ணி இருக்காங்க போல… என்று யுகியைப் பரிதாபமாகப் பார்த்தவன்
“அண்ணா தீக்ஷதான்,, மாஸ்டர் ஆஃப் தி ப்ளான்… போல” என்றபடி எழ…
விஜய் யுகியிடம்
“சும்மா விளையாடுவாடா…. உனக்கு அவளப் பற்றி தெரியாதா… உன் ஃப்ரெண்டை உன்னால சமாளிக்க முடியாதாடா” என்று தன் மனைவிக்கு சப்போர்ட்டாகப் பேசியபடி நழுவி விட்டான்
”யுகி…. உன் சமத்துடா” என்று சுரேந்தர் தன் அறைக்குச் சென்றவன்… பார்வதியையும் அழைத்துக் கொண்டான்…
யுகி அதன் பிறகு 10 நிமிடம் பார்த்தான்….
இனி வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த யுகி…. ஆர்த்தி இருந்த அறைக்கே போனவன்… தீக்ஷாவிடம்…
“ரொம்ப நல்லவம்மா நீ… எத்தனை நாள் ப்ளான்…. “ என்றபடி…. ”ஆர்த்தி நீ வா” என்று கையைப் பிடித்து இழுக்க…
“ஹலோ என்ன ரூம்ல புகுந்து அராஜகம் பண்றியாடா…. நல்ல நேரம் வந்த பின்னாலதான் ஆர்த்தி இந்த ரூமை விட்டு வெளியே அனுப்புவேன்…” என்று யுகியைப் பார்த்து மிரட்டலாய்ச் சொல்ல…
யுகி சிரித்தபடி…
“அப்போ சரி…” என்று ஆர்த்தியின் அருகில் வந்தவன்… அவளைத் தன்புறமாய் அணைத்து அவளுக்கு முத்தமிடப் போக..”
தீக்ஷா…பதறியவளாய்
“டேய்… என்னடா பண்றா”
“நீதானே சொன்ன நல்ல நேரம் வந்த பின்னால இவள அனுப்புவேனு….. நான் அதுவரை இங்கேயே ரொமான்ஸ் பண்ணிக்கிறேன்” என்று கொஞ்சம் கூட தயங்காமல் சொல்ல…
“உன்னை” என்றபடி…
”போடா…. உன் ரூமுக்கு… நான் அனுப்பி வைக்கிறேன்“ என்று அதட்டியவளை…
“ஒண்ணும் தேவையில்லை…. நீ இடத்தை காலி பண்ணு… அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்க…
“ஆர்த்தி… பார்த்துக்கோ உன் ஆளுக்கு எவ்வளவு தைரியம்னு… அவங்க அண்ணாக்களுக்கு இல்லாத தைரியம்….. நீ அடிக்கடி புலம்புவேள்ள.. உன் யுகி அண்ணாக்களுக்கு பயந்து பயந்துதான் எல்லாம் செய்வான்னு’ என்று விளக்கியவள்…
“யுகி ஆனாலும் தைரியம் தாண்டா உனக்கு…..” என்று சிரித்தபடி தீக்ஷா கிளம்பினாள்… அவர்களுக்கு தனிமை கொடுத்தவளாய்…
நேராகச் சென்றது… சக்தியை நோக்கித்தான்…. சுனந்தாவும் சக்தியும் மட்டும்…. சக்தியின் பெற்றோரிடம் கதை கேட்டபடி இருக்க… அவர்களுக்கு தொந்திரவு செய்யாமல் மெதுவாய் உள்ளே போனா ள்…
தீக்ஷாவைப் பார்த்தவுடனே
“சக்தி….” தீக்ஷாவிடம் ஓடி வர….. அவளைத் தூக்கியபடி… சக்தியின் தாயிடம்
”ஆண்ட்டி…. அவ ரொம்ப நாளா என்னை மிஸ் பண்றாள்ள…. நானே தூங்க வைக்கிறேன்” என்றபடி…
“ஸ்னோ… நீ அத்தைகிட்ட வரலையா… ” என்று சுனந்தாவை அழைக்க…
“இல்ல நான் கதை கேட்டுட்டு இருக்கேன்…. வைஜெயந்தி பாட்டிக்கு இந்த கதைலாம் தெரியலை” என்றபடி கதை கேட்கும் ஆர்வத்திலேயே இருக்க….
தன் மகளோடு தன் அறைக்குச் சென்றவள்… சக்தியைத் தூங்க வைத்து விட்டு…. அதன் பின் தன் கணவனைத் தேடி ஹாலிற்கு வந்தாள்….
”விஜய் அத்தான் தூங்கலையா” என்றபடி அவன் அருகில் அமர்ந்தாள்…. தன் லேப்டாப்பை திறந்தபடியே
“ஹ்ம்ம்… ஒரு மெயில் வர வேண்டி இருக்கிறது…. வெயிட்டிங்க்” என்றவனிடம்…. தீக்ஷாவும் பேசாமல் தன் கணிணியில் மூழ்க ஆரம்பித்தாள்….
விஜய்க்கு அவன் எதிர்பார்த்த மெயில் வர… அதற்கு உடனடியாக ரிப்ளை செய்தவன்….. தன் கணிணியை மூடியபடி
“போகலாமா” என்றபடி தன் மனைவியைப் பார்க்க…
“போகலாம்… அத்தான் இதைப் பாருங்க… இதுல எது ஓகேனு சொல்லுங்க” என்று தங்கள் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தின் ப்ளானைக் காட்ட
வாங்கிப் பார்த்த விஜய்… முறைத்தான்…
”மூன்றுமே நல்லா இல்லை… எவன் போட்டுக் கொடுத்தான்…. “
“ஹ்ம்ம்ம்… ஏதோ எங்க காசுக்கு ஏற்ற மாதிரி ஒரு பில்டர்ஸை பார்த்தோம்…. நீங்கள்ளாம் பெரிய இடம்…. உங்க கிட்ட வந்தோம்னா…3 வருசம் சம்பாதித்ததுலாம் கோஹயாதான்… சரி பணம் கூட ஒரு பிரச்சனை இல்லை….. ஆனா இந்த சின்ன பில்டிங்கை எல்லாம் உங்க கம்பெனி திரும்பிக் கூட பார்க்காது…. இது மட்டும் இல்லை காத்தமுத்து முருகேசன் ட்ராவல் ஏஜென்சியோட கூட காண்ட்ராக்ட் போடப் போகிறோம்…. ஏதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டை…. எங்க பட்ஜெட்ல…. …” என்று ஒரே மூச்சில் முடிக்க…
அவளோடு வாயாடாமல்…. அவளின் லேப்டாப்பை மூடி வைத்தவன்….
“சக்தி தூங்கிட்டாளா..” என்று கேட்க….
“அவள தூங்க வச்சுட்டுதான் உங்ககிட்ட வந்தேன்….”
”என்னை ரொம்ப மிஸ் பண்றா போல….. இனி நான் போக மாட்டேன்பா…. யுகியை இல்லை தீபனைத்தான் அனுப்ப வேண்டும்…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்…
”அப்போ என்னை நீ மிஸ் பண்ணலையா” என்று அவளின் மேல் சாய்ந்தவனிடம்
முறைத்தாள்…
”போக மாட்டேனு சொன்ன என்னை அனுப்பி வச்சுட்டு.. மிஸ் பண்ணலையானு கேள்வி வேற….. ஆனால் நான் மேனேஜ் பண்ணிட்டேன் அத்தான்…. தனியா…. இப்போ போதுமா… நான் முழுசா குணமாகிட்டேனு நம்பறீங்களாத்தான்… ”
”நான் அதுக்காக உன்னை அனுப்ப வில்லை.. உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும்…. அதற்காகத்தான்…. “ என்றவன்….
“தீக்ஷா” என்று அழைக்க….
அவனின் குரல் மாற்றத்தை உணர்ந்தவள்.. அவனைப் பார்க்காமலே
“என்ன பாஸ்….“ என்று சிரிக்க…
“காலையில் இருந்தே ஒரே ஃபீல்….”
தீக்ஷா கேள்வியாய் புருவம் சுருக்க
“நீ போட்டிருந்த சக்தி ஜெயினைக் கழட்டச் சொல்லிட்டேன்ல…. அதுனால” விளக்கமாய்ச் சொல்ல…
“அதுனால,,, என்னைக் கூட்டிட்டு போய் கிஃப்ட்டா வாங்கித் தரப் போறீங்களா இந்தர்” என்று ஆர்வமாய்ப் பார்க்க…
“இல்லை… நாம வேற மாதிரி யோசிக்கலாம் தீக்ஷா” என்றவன் அவளை அணைத்தபடி.
“சக்தி என்னை மாதிரி பிடிவாதம் பிடிக்கிறாள்ள…. உன்னை மாதிரி எதையும் லேசா எடுத்துக்கிற மாதிரி ஒரு குழந்தை பெத்துக்கெல்லாம்… நான் அந்தக் குழந்தைக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுப்பேனாம்…. நீ அதைப் போட்டுக்கலாம்” என்றவனின் குரல் காதலோடு கனிந்திருந்தது….
”எனக்கு கிஃப்டே வேண்டாம் சாமி…. ஆள விடுங்க” என்றபடி எழப் போக…
“எனக்கு வேண்டும்….” அடம் பிடித்தவனாய் அவளைத் தன் புறம் இழுக்க….
கிறக்கமாய் பார்த்தவனிடம்…. அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று புரிந்தும்
“கிஃப்ட் தானே… வாங்கித் தருகிறேன்…” என்று அசால்ட்டாக சொன்னவள்….
”சக்தி மட்டும் தனியா படுத்திருக்கா வாங்க போகலாம்….” என்றபடி…. மாடிப்படி ஏறியவள்…. தன் கணவனைத் திரும்பி பார்க்க…. அவன் அதே இடத்தில் அமர்ந்திருக்க….
மீண்டும் வந்தவள்…
அவனின் கையைப் பிடித்து இழுத்தபடி மேலே ஏறினாள்….
”நீ பழைய தீக்ஷாவாகவே இல்லை…. இதே என் தீக்ஷாவா இருந்திருந்தால் என்னைத் தூக்கிட்டு போங்கத்தானு நின்றுப்பா….” என்று அலுத்தவனிடம்
”ஆமாம் என் இந்தர் கூட பழைய மாதிரி இல்லை… நான் என்ன சொன்னாலும்…. என்னைத் திட்டறதே கிடையாது” என்று பதிலுக்குப் பதில் சொல்ல…
இந்த வாய் மட்டும் என் பொண்டாட்டிக்கு குறையாதே என்றவன்…. அவளைத் தூக்க….
‘ஐயோ அத்தான்” என்றவள்…. சுற்றும் முற்றும் பார்க்க…
“யாரும் இல்லை…. இருந்தாலும் பரவாயில்லை” என்றபடி தன் அறைக்குச் செல்லாமல் மாடிக்குச் செல்ல….
“சக்தி……… தனியா” என்று தயக்கமாய் என்று தங்கள் அறையைப் பார்க்க…
“அவளுக்கு துணைக்குத்தானே அடுத்து ரெடி பண்ணப் போகிறோம்” என்றவனின் கண் சிமிட்டலில்
அவனோடு ஒன்றியவளை…. பார்த்தபடியே மாடி ஏறினான் விஜய்…..
மாடியின் நிலவொளியில் ஜொலித்த தன்னவளை…. இன்னும் இறக்கி விடாமல் கைகளிலேயே வைத்திருக்க….
“கை வலிக்கலை…” என்று வியப்பாய்ப் பார்த்தாள் தீக்ஷா
“அதெல்லாம் பார்த்தால்…. கிடைக்க வேண்டியது கிடைக்குமா” கொஞ்சம் கூட தயங்காமல் கணவனாகச் சொல்ல….
“அப்போ சரி… எனக்கும் பிரச்சனை இல்லை” என்றவள்
“அத்தான், சுரேன் அத்தான் மேரேஜ் முடிச்ச பின்னால சர்ப்ரைஸா ஹனிமூன் பிளான் பண்ணி இருந்தீங்கள்ள.. அதுமாதிரி யுகி மேரேஜ்ஜுக்கு இல்லையா” கேட்கும் போதே தீக்ஷா கஷ்டப்பட்டுத்தான் சிரிப்பை அடக்கினாள்,,,,
ஆனால் அவள் உடல் குலுங்கியதே அவள் சிரிப்பை அடக்க முடியாமல் திணறுகிறாள் என்பது விஜய்க்குப் புரிய…. கோபமாய் முறைத்தவன்…
”என் பொழப்பு சிரிப்பா இருந்திருக்குடி உனக்கு”
தீக்ஷா சிரிப்பதற்கும் , விஜய் கடுப்பானதற்கும் காரணம் உண்டு…
ஏனெனில்…. அன்று சுரேந்தர் – பார்வதி திருமணம் முடிந்த அடுத்த நாள்… தீக்ஷாவை அதிகாலை எழுப்பியவன்… எதுவுமே தெரிவிக்காமல் அவள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாமல் என்னென்னவோ சொல்லியவன் ஏர்போர்ட் அருகில் வரும் வரை…. கொஞ்சம் பதட்டத்துடன் தான் வந்தான்….. ஆனால்… தீக்ஷா முதலில் முகம் சுருக்கியவள்… விஜய்யின் கைகளை பற்றியபடி உள்ளே வந்தவளை… விஜய்யும் பதட்டத்துடன் கவனித்தபடி கூட்டி வந்தான்….
”தீக்ஷா… நாம ஒரு பிரச்சனையை எதிர் நோக்கும் போதுதான்… அது நம்மை விட்டு போகும்… அதைப் பார்த்து ஓடி ஒழிந்தால்….. அந்த பிரச்சனை நம்மை சுற்றிக் கொண்டேதான் இருக்கும்… சோ…” என்று விஜய் ஆரம்பிக்க…
”Avoid fear…. It grows… face fear…. It goes…. இதைத்தானே சொல்லப் போறீங்க“ முடித்து வைத்தவள்….. ஏர்போர்ட் உள்ளே நுழையும் போது சாதாரணமாகி இருக்க.. விஜய் அப்போதுதான் நிம்மதி அடைந்திருந்தான்….
இருந்தும்…. ஆயிரம் முறை அவளிடம்….”ஆர் யூ ஓகே” என்று கேட்டிருப்பான்… ஒரு வழியாக செக் இன் செய்து விட்டு விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்க…
அப்போது தீக்ஷாவுக்கு ஒரு மாதிரி இருந்தது….…. விஜய்யிடம் சொல்லாமல் சில நிமிடங்கள் சமாளிக்க நினைத்தாள்…. ஆனால் முடியவில்லை….
”அத்தான் காலையில சீக்கிரமா எழுந்தது ஒரு மாதிரி இருக்கு போல” என்ற போதே அவளுக்கு வாமிட் வருவது போல் இருக்க… வேகமாய் அவனை விட்டு எழுந்தவள் அதை எடுக்க ரெஸ்ட் ரூமை நோக்கிப் போக…. விஜய்யும் அவள் பின்னாலே ஓடினான்… ஆனால் அது பெண்கள் பிரிவு என்பதால் வெளியே பதற்றத்துடன் அவளுக்காக காத்திருக்க…
தீக்ஷா ஓரளவு அனுமானித்தவள்… சந்தோஷமாக தன் கணவனிடம் நாள் தள்ளிப் போனதைச் சொல்ல வந்தவள்… வெளியே வந்து தன் கணவனிடம் சொல்லும் முன்னரே மயங்கிச் சரிய…
விஜய்யின் முகம் இருண்டது…. ஓடிப் போய் தன் மனைவியைக் கைகளினால் தாங்கியவன் அங்கிருந்த முதலுதவிப் பிரிவுக்கு அவசரமாய்த் தூக்கிக் கொண்டு போக….
அங்கு அவனுக்கு இன்ப அதிர்ச்சி பரிசாய்க் கிடைக்க…. விஜய்யின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்…. அதன் பின் ஹனிமூனாவது… ஒன்றாவது…. அந்த விமானப் பயணமும் ரத்தானது…
அதன் பின் இருவருக்கும் தனித் தனியேதான் விமானப் பயணம் இருந்தது… இப்போது கூட தீக்ஷா Uk போய் தங்கியிருந்த 3 மாதத்தில்…. விஜய் அவளை அனுப்பி விட்டு அதன் பின்னர் இடையில்தான் தன் மனைவியைப் பார்த்து வந்தான்…..
இந்தக் காரணத்தினாலே தீக்ஷா சிரித்தது….
தீக்ஷா சிரித்தபடி இறங்கி ஓட…. விஜய் அவளைப் பார்த்தபடியே நின்றவன்…. தன்னைப் பின் தொடாமல் நிற்கும் தன் கணவனை திரும்பிப் பார்த்தவள்….
“என்ன” என்று தலை அசைக்க…
“ஒன்றுமில்லை” என்பது போல் இவன் தலை அசைக்க…
மீண்டும் அவனின் அருகில் வந்தவள்..…….
கணவன் இன்னும் அமைதியாகவே இருக்க….
“ஹப்பா…. மறுபடியும் செண்ட்டிமண்ட்டா…. முடியலை விஜய் அத்தான்”
விஜய் அவளிடம்…
“உன்னை மாதிரி… எதையும் விளையாட்டா எடுத்துக்கிற பக்குவம் எனக்கு வரணும்னு ஆசையா இருக்கு தீக்ஷா… ஆனால் என்னால முடியலை…. ”
தீக்ஷா…
“நீங்க ஏன் என்னை மாதிரி இருக்கனும்னு ஆசைப்படறீங்கத்தான்…. உங்க அழுத்தமான குணம் தான்… எந்த சூழ்நிலையையும் தாங்கிக்கிற சக்திய கொடுக்கும்…… அது எனக்கு இல்லத்தான்..” என்றவள் குறும்பாக…
”அழுத்தமான இந்த குணத்தினால் தான் என்னை மாதிரி ஒரு லூசுப் பொண்ணை எல்லாம் நீங்க சமாளிச்சு வாழறீங்க…. அதுக்கே உங்களுக்கு ஒரு பெரிய ஓ போடனும்…. தெரியுமா…. “
விஜய் அவளிடம்
“இல்ல தீக்ஷா நீ யாரை மேரேஜ் பண்ணி இருந்தாலும்… சந்தோஷமா இருந்திருப்ப… அவங்களையும் சந்தோஷமா வச்சுருப்ப…. “ என்றவனின் வாயைப் பொத்தியவள்… கோபமாக
“இப்போ இது தேவையா…. என் இந்தரைத் தவிர வேறு யாருமே வேண்டாம் எனக்கு….. என் விருமாண்டியோட கோபம், என் இந்தரோட காதல்….. என் விஜயேந்தரோட கம்பீரம்… இது இது மட்டுமே இந்த தீக்ஷாவுக்கு வேண்டும்…. ”
என்றவளின் வார்த்தைகளில் அவளையுமறியாமல் குரல் நடுங்க….
விஜய் சிரித்தபடி…
“இந்த மாதிரி நீ தனித்தனியா என்னைப் பிரிச்சு வச்சுருக்கத நெனச்சுதாண்டி எனக்கு பயம்…” போலியாய் வருந்த..
“பின்ன முதன் முதலில் பார்க்கும் போதே சின்னக் குழந்தைய மிரட்டினா… நான் என்ன பண்ணுவேன்….”
”நீயும் என்னைப் பார்த்து பயந்து நடுங்கிட்ட…. ” என்றவன்…
“வா கீழ போகலாம்… என் பொண்ணு தனியா இருப்பா…. “ என்று இறங்க…
“அடப்பாவி… கொஞ்ச நேரம் முன்னால… ரொமான்ஸ் மன்னனா இருந்தப்போ பொண்ணு ஞாபகம் வரலயா….. கஷ்டப்பட்டு மாடி ஏற வச்சு…” என்று அலுத்தவளை….
“நீயாடி படி ஏறி வந்த…. “ என்று முறைக்க
”ஆமாம்ல… நானா இப்போ இறங்கப் போறேன்… எனக்கென்ன கஷ்டம்… என் இந்தர் இருக்கும் வரை” என்று கணவனைப் பார்த்து குழந்தை போல கைகளை தூக்கியவளை…..
சற்றும் தாமதிக்காமல்….. கொஞ்சம் கூட அலுக்காமல் தூக்கிய விஜயேந்தர் காதலுடன் மாடிப்படி இறங்க…. தன் கணவனிடம் காதலுடன் சரணடைந்தாள் தீக்ஷா ”
தீக்ஷா எனும் அந்தப் புயலின் ஆரவாரம்… அவள் கணவனிடமிருந்து என்றும் கரை கடக்காமல் இருக்கும் என்ற நம்பிக்கையோடு சந்திரன் அவர்களின் மேல் ஆசீர்வாதமாய் தன் ஒளியை வீசியபடி இருக்க…. நம்மை விட்டு கடந்து கொண்டிருக்கும் நம் ’தீக்ஷா’ புயலை அவள் கணவனோடு வாழ்த்தி.. நாமும் விடைபெறுவோம்….
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
மடி மீது தலை வைத்து
மடி மீது தலை வைத்து
கண்ணே உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும்
இதழோடு இதழ் சேரும் நேரம் ....
என் பேரை மறந்து நான் இருந்தேன்
நீ எந்தன் நினைவாக வந்தாய்
ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்
உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்
கச்சேரி கேளாத இசையுண்டு மானே
நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம் தானே
என் மேனி உன் மார்பில் தானே
என் மேனி உன் மார்பில் தானே
இதழோடு இதழ் சேரும் நேரம் ....
சில நாளாய் துடித்தன விழிகள்
ஏனென்று கேளுங்கள் நீங்கள்
கண் தூக்கம் மறந்தன இமைகள்
நீயின்றி நகராது நாட்கள்
கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன்
பினி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்
இதழோடு இதழ் சேரும் நேரம் ....
கதை ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது. ரொம்ப பெரிய ஃப்ளாஷ் பேக் தவிர வேறு எந்த குறையும் இல்லை.... அதுவும் கூட கதை தேவை தான்... எனக்கு விஜய் யை விட தீக்ஷா தான் ரொம்ப பிடித்து இருந்தது... ஒருவேளை முதலில் விஜய் யை பிடிக்காமல் போனதால் கூட இருக்கலாம்.... நிறைய ஜோடிகள் நிறைய ட்விஸ்ட்... நிறைய காதல்கள்... நிறைய பிரச்சினை... நிறைய கோபங்கள்... நிறைய... ஹஹஹ கடத்தல்கள்... அதிலும் தீக்ஷா கடத்தல் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது... நிறைய கல்யாணங்கள்... எல்லாம் நிறைய நிறைய கொடுத்து மகிழ்ச்சி அடைய வைத்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள் 🌹💐💐🌺🌸🌸🏵️🌹