top of page
Writer's picturePraveena Vijay

அன்பே நீ இன்றி 48

அத்தியாயம் 48:

இரவு 9 மணி ஆகியிருக்க…. விஜய் தனது அலுவலக அறையில் இருந்து அப்போதுதான் தன் அறைக்கு வந்திருந்தான்………….

தீக்‌ஷா வேலைக்கு செல்ல விரும்புவதாக தீபன் வந்து கூறியதும்….

”திடீரென்று ஏன் இந்த முடிவுக்கு வந்தாள்” என விஜய் விசாரிக்க… வேறு வழியின்றி… ஜெயந்தி… தீக்‌ஷாவிடம் அவளுக்கு நோய் இருப்பதாக தான் சொன்ன விசயத்தை கூறி… அதன் பிறகு தான் தீக்‌ஷா இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூற….விஜய்க்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை… ஆனால் அதற்காக ஜெயந்தியை அவனால் திட்டவும் முடியவில்லை….

”இல்ல தம்பி… இப்போ எல்லாம் சரி ஆகி விட்டதுனு அவகிட்ட சொல்லிட்டேன். அதுனால பெரிய பிரச்சனை இல்லை….. எனக்கும் வேற வழி தெரியலை தம்பி” என்று அவனின் கோபத்தை உணர்ந்த ஜெயந்தி… பயந்து சொல்ல…. விஜய்யும் ஒன்றும் சொல்லாமல்.. தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி அடுத்த 2 நாட்களிலேயே பம்பரமாய் சுழன்று VD ப்ரோமோட்டர்ஸை ஆரம்பித்து விட்டான்… ஏற்கனவே இருக்கும் விஜய் பில்டர்ஸின் 2-ஆம் கட்ட வேலைகளான….விளம்பரம்…. வாடிக்கையாளர் தொடர்புகள்…. நிதி நிலை என சில பொறுப்புகளை இதில் மாற்றியவன்….. தன் மனைவி மற்றும் தன் பெயரிலே ஆரம்பித்தான்…………… ஆனால் தீக்‌ஷாவிடம் சொல்லப்பட்டதோ விஜய் மற்றும் தீபன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது என்று….

சுரேந்தருக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்க… இத்தனை வேகமாக விடி ப்ரோமோட்டர்ஸ் உருவாக அவனின் பங்கு அதிகமாக இருந்தது…. ஆனால் யாருக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அவளோ தனக்கு அனுபவம் இருக்கும் மென்பொருள் துறைக்கே செல்ல விரும்புவதாக பிடிவாதம் பிடிக்க….. யாராலும் அவளின் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை… அதே போல் விஜய்யும் தன் பிடிவாதத்தில் நிற்க…. தன் விஷயத்தில் முடிவெடுக்க அவன் யார் என்ற கோபத்தில் இன்னும் பிடிவாதத்தில் நின்றாள்….

விஜய்க்குதான் என்ன சொல்லி அவளை சம்மதிக்க வைப்பது என்று தெரியவில்லை…. தீக்‌ஷா மட்டும் சம்மதித்துவிட்டால்…. பகல் முழுவதும் அவன் பார்வையில் இருப்பாள்… அது மட்டும் தான் அவன் எண்ணம் முழுவதுமாய் ஓட…. அதிலேயே சுழன்று கொண்டிருந்தான்… இப்போதும் அதே நினைவோடுதான் படுக்கையில் விழுந்து விட்டத்தை வெறித்தபடி இருக்க..அப்போது அவனின் மொபைலுக்கு அழைப்பு வர….

எடுத்து காதில் வைத்தவனின் காதுகளில் “விஜய் அத்தான்,…. நான் தீக்‌ஷா பேசுறேன்’ என்ற தீக்‌ஷாவின் குரல் தேனாய் விழ….. படுக்கையில் இருந்து உற்சாகமாய் எழுந்து உட்கார்ந்தான்… ஆனால்….பதில் கூட சொல்லாமல்… தன் மனைவியின் குரலில்…. ஆழ்ந்து போயிருக்க….

“அத்தான்,……………… “ என்று இந்த முனையில் இருந்து தீக்‌ஷா கத்த…. விஜய் சுதாரித்து….

“என்ன என் பொண்டாட்டி…. இவ்ளோ பவ்யமா பேசுறா…..இவ இப்படி பேசுறான்னா… கண்டிப்பா காக்கா பிடிக்கிறதுக்காகத்தானே இருக்கும்”

தனக்குள் யோசித்தவன்…

“சொல்லு” என்று மட்டும் விளிக்க…

“நான் நாளைக்கு உங்க கிட்ட தனியா பேசனும்…. எனக்காக கொஞ்சம் டைம் ஒதுக்குவீங்களா” இது கூட பணிவாகத்தான் கேட்டாள்….

விஜய்யும் ஓரளவு யூகித்தான்… எந்த விசயம் என்று….. எப்படியும் அவளுக்கு இவன் சம்மதம் சொல்லப் போவதில்லை…. ஆனால் அவளோடு தனியாக பேச வாய்ப்பு கிடைக்குமே….. என்று மறுநாள் வருவதற்கு சம்மதம் சொன்னவன்…

“எத்தனை மணிக்கு வீட்டுக்கு நான் வரட்டும்” உள்ளிருந்து வந்த ஆவலை மறைத்து விஜய் கேட்க….

“வீட்டுக்கா….. அங்க வேண்டாம்….. நாம பப்ளிக் ப்ளேஸ்ல….. ஏதாவது ஒரு ரெஸ்டாரெண்ட்ல பார்க்கலாம்…. நீங்க வந்து என்னைக் கூட்டிட்டு போங்க…..” என்றவள்… “ட்ரைவர் கூடத்தானே வருவீங்க….” என்று எச்சரிக்கையாக பேச…

அவனோடு தனியாக வர அவள் விரும்பவில்லை என்பதை மறைமுகமாக சொல்கிறாள் என்பதை உணர்ந்தவன் முகம் இங்கு மாறியது…. அந்த எரிச்சல் அவன் குரலிலும் வர….

”ரெஸ்டாரெண்ட்ல கூட காத்தமுத்துவை இடையில் வைத்துதான் பேசுவியா…. அப்புறம் என்ன……. தனியா பேச.....” என்று பல்லைக் கடிக்க….

“இல்ல இல்ல… அங்க நம்ம சுத்தி… ஆட்கள் இருப்பாங்கள்ள….. சோ அங்க காத்தமுத்து தேவையில்லை…..” என்று விம் போட்டு விளக்காத குறையாக சொல்லி வைத்தவள்…. எப்படியும் விஜய்யை சம்மதிக்க வைத்து விடலாம் என்று முடிவோடு இருந்தாள்…. அவன் முடியவே முடியாது என்றால்… தன் மேல் அவனுக்கு தற்போது இருக்கும் பரிதாபத்தை பயன்படுத்தியாவது….. தன் காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு உறங்க…

அவள் கணவனோ…. “என்னை நம்பி தனியா வரமாட்டியாடி நீ….. “ என்று பொங்கிக் கொண்டிருந்தான்…. அவனின் படுக்கையில்….

”போனை போட்டு அத்தான் பொத்தானுனு உசுப்பேத்தி விட்டுட்டு…. நீ தூங்கியிருப்ப….. என்னை புலம்ப வச்சுட்டடி” என்றவனுக்கு…. இத்தனை நாட்களாய் அடங்கியிருந்த… அடக்கி வைக்கப்படிருந்த அவன் தேகத்தின் தேவைகள் அவனை மீறி அவன் மனைவியைத் தேட ஆரம்பிக்க….. விஜய்யின் அரைகுறை தூக்கத்தையும் துரத்திய புண்ணியத்தையும் கட்டிக்கொண்டாள் அவனின் மனைவி………….

…………………..

ரெஸ்டாரெண்ட்டில் தன் எதிர்புறமாய் அமர்ந்திருந்த தன் மனைவியை நேற்றைய மோகத்தின் தாகம் தீராமல் ரசித்தபடி அமர்ந்திருந்தான் விஜய்…………… அணிந்திருந்த கண்ணாடியின் வழியே…………..

இத்தனை நாள் மருத்துவமனை வாசத்தில் அவள் தேகம் இன்னும் இளைத்திருக்க…… கண்களில் பழைய துள்ளல் எல்லாம் இல்லை….. இவனை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தவளாய்…… சுற்றிலும் பார்வையினை ஓட்டிக் கொண்டிருக்க…. விஜய்க்கு அது இன்னும் வசதியாக போக….. சந்தோசமாய் தன் பார்வையின் பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்க………. தீக்‌ஷா அப்போதுதான் அவனைக் கவனித்தாள்….

”அந்த கூலரக் கழட்றீங்களா……”. என்றவள் மனதிற்குள்ளே

“ஏற்கனவே வில்லன் ரேஞ்ஜ்தான் இதுல இது வேற” தாளித்தபடி அமர்ந்திருக்க… வேறு வழியின்றி விஜய்யும் அதைக் கழட்டி மேஜையில் வைத்தபடி

“ம்ம்ம்ம் சொல்லு…. என்ன விசயம்….….. அதுவும் தனியே வந்து பேசுகிற அளவுக்கு” என்ற போதே அவனின் மொபைலும் அடிக்க… எடுத்துப் பார்த்தான்

“இளமதி” என்று முணுமுணுத்தவாறே போனை காதில் வைக்க….

“விஜய்………. எப்படி இருக்கீங்க…. ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க……. கூலர்ல சூப்பரா….” என்று அவளை முடிக்க விட வில்லை…

“ஹேய் இங்கதான் இருக்கியா….. எங்க இருக்க…..” என்றபடி விஜய் சுற்றும் முற்றும் தேட….. தீக்‌ஷாவும் அவனோடு சேர்ந்து யார்… என்று ஆவலாய்ப் பார்த்தாள்…. இளமதி இரண்டு டேபிள் தள்ளி அமர்ந்திருந்தாள்….

விஜய்யைப் பார்த்து கையசைத்த இளமதி… தான் அங்கு வருவதாகச் சொல்லி கை காட்டி சொல்ல….. விஜய் வேகமாய்…. மறுத்து…. தான் அங்கு வருவதாய்க் கை காட்டியவன்….

“5 மினிட்ஸ்” என்று தீக்‌ஷாவிடம் சொன்னபடி இளமதியை நோக்கிச் செல்லப் போக… தீக்‌ஷாவோ அவனைத் தடுத்து நிறுத்தும் விதமாக

”5 மினிட்ஸ்தான் நான் பேசிட்டு போய்டறேன்…. அதுக்கப்புறம்…. உங்க கேர்ள் ஃப்ரண்ட்டோட பொறுமையா பேசிட்டு வாங்க” என்று வெடித்தாள் தீக்‌ஷா….

அவளையும் மீறி வார்த்தைகளில் பொறாமை ஜ்வாலை விட்டு எறிய…. விஜய்……… அதை எல்லாம் லட்சியம் செய்யாமல் இளமதியின் அருகில் போயிருந்தான்..

முதலில் இளமதி தீக்‌ஷாவைப் பற்றித்தான் விசாரித்தாள்…..

இன்னும் அதே நிலையில் தான் தீக்‌ஷா இருக்கிறாள்…. என்றும்

எங்கு ஏதாவது இளமதி உளறி விடுவாளோ என்று பயந்துதான்… தானே அவளை நோக்கி வந்ததாக விஜய் கூற…… இளமதி தீக்‌ஷாவை ஒரு பார்வை பார்த்தபடியே விஜய்யை பார்த்து ஆறுதலாய் புன்னகைத்தாள்…

“எல்லாம் என் அண்ணனால வந்தது…..” என்று விஜய்யிடம் தன் அண்ணனைச் சாட,….

விஜய் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல்….

“இளமதி…. அவளுக்கு இளமாறன் இறந்த விபரம் எதுவும் தெரியாது….. ” என்று மட்டும் சொன்னவன்… இளமதியோடு சில வார்த்தைகள் பேசிவிட்டு…. மீண்டும் தீக்‌ஷாவிடம் வர…. தீக்‌ஷாவின் முகத்தில் எள் போட்டால் வெடித்துவிடும் அளவில் கொதி நிலையில் அமர்ந்திருந்தாள்….

”சாரி எக்ஸ்ட்ரா 5 மினிட்ஸ் ஆகிருச்சு…. என்று அமர்ந்தவனை முறைத்தவளுக்கு……

”அவளை எல்லாம் பார்த்தவுடன்….. முகத்தில் பிரகாசம் வரும்…. என்னைப் பார்த்தால் மட்டும் கடுப்பு வரும் இவனுக்கு” மானசீகமாகத் திட்டியபடி…. அமைதியாகவே இருக்க…. அவளின் திடீர் மௌனம் உணர்ந்த விஜய்…

“சொல்லு..” என்று தானே ஆரம்பித்தான்…

“பரவாயில்ல… நீங்க அவங்க கூடவே பேசிட்டு வாங்க… நான் வீட்டுக்கு போகிறேன்….. நாம இன்னொரு நாள் கூட பேசிக்கலாம்” பட படவென பொறிந்தாள் தீக்‌ஷா….

அவளின் பேச்சை… கோபத்தை…. மனதோடு மட்டும் ரசித்தவன்…. அவளிடம்

“இப்போ உன் பிரச்சனை என்ன…. இளமதி இங்க வந்ததா??? இல்லை…” என்று இழுக்க

வேகமாய்…

“அவ வந்தா எனக்கு என்ன பிரச்சனை” என்று பட்டென்று சொன்னவள்…. உடனடியாக தன் குரலை மாற்றி

”எனக்கு உங்க ஆஃபிஸுகு வர பிடிக்கலை…. அதுதான் என் பிரச்சனை எனக்கு பிடித்த வேலை பார்த்தாத்தான் எனக்கு ஆறுதலா இருக்கும்… எங்க வீட்டில் உங்ககிட்ட பேச மாட்டறாங்க,,,, அதுனாலதான் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட….. சண்டைக்காரன் காலில் விழலாம்னு சொல்வாங்கள்ள….”என்று நிறுத்தி அவனை நேருக்கு நேராய்ப் பார்க்க…

”யார் சண்டைக் காரன்….”. என்று இவன் முறைத்தான்…..

“ப்ச்ச்ச்ச்ச்ச்……… எனக்கு பதில் வேண்டும்…. என் விசயத்தில் ஏன் நீங்க தலையிடுறீங்க…… நான் வாழப் போற கொஞ்ச நாளில் என் விருப்பம் போல வாழ விடுங்க… உங்கள கெஞ்சிக் கேட்டுக்கறேன்….” அவள் சொல்லும் போதே விஜய் முகம் சுருக்கினான்….

“என்ன லூசு மாதிரி….. வாழப் போற கொஞ்ச நாள்னு…. என்ன உளர்ற….” என்று அதட்ட

“எனக்கு எல்லாம் தெரியும்,.. அம்மா சொல்லிட்டாங்க… என் மேல அந்த பரிதாபம் இருக்கிறதுனாலதானே நான் என்ன பேசினாலும் பொறுமையா இருக்கீங்க…. “

“வாய மூடு….. உன் மேல எனக்கு எந்த பரிதாபமும் இல்லை…. அதே விஜய் தான்… நான்…. நீ வேலைக்கு போக வேண்டும் என்றால் என்னோடு வர வேண்டும்… இல்லை வீட்டில்…. ரெண்டு ஆப்ஷன்ல எது வேண்டுமென்றாலும் உன் இஷ்டம்…. போதுமா…..“ என்று இவனும் சுள்ளென்று விழ….

அதற்கு மறுத்து தீக்‌ஷாவும் பேசப் போக…. அப்போது அங்கு வந்த இளமதி….

“பை விஜய்….பை தீக்‌ஷா” என்றவள்….. விஜய்யிடம்…

“விஜய் கூலர்ல சூப்பரா இருந்தீங்க…..” என்று வேறு சொல்லி தீக்‌ஷாவைப் பார்க்க…’

”ஏன் முறைக்கிறோம் “ என்று புரியாமலே தீக்‌ஷா அவளை முறைத்தாள் தன் இயல்பை மாற்றி……

“விஜய்…. தீக்‌ஷா ரொம்ப சூடா இருக்காங்க போல….. கூல் பேபினு சொல்வாங்க…. என்ன விசயம்… எனி வே…. கூல் பேபிக்கு கூலா வாங்கி சமாதானப்படுத்தி கூட்டிட்டு போங்க….” என்று விளையாட்டாய் சொன்னாலும்…. தன் பல நாள் குமுறலை ஏதோ ஒரு வகையில் ஆற்றியவள்…. அங்கிருந்து அகல….

விஜய்க்குத்தான் இப்போது டென்சன் ஏறியது,,,, இருந்தும் மறைத்தபடி…. இளமதியைப் பார்த்து புன்னகைத்து வழி அனுப்ப….

விஜய் கழட்டி வைத்திருந்த கண்ணாடியைப் பார்த்தபடியே… தீக்‌ஷாவும் கடுப்பில் இருந்ததால்….. இளமதியின் வார்த்தைகள் அவளை பெரிதாகப் பாதிக்கவில்லை……….

“ஏன் தனக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்று உணரவும் முடியாத நிலையில் இருந்தவள்…. எரிச்சலில் இன்னும் அதிக கோபத்துடன்,

“நான் உங்க ஆஃபிஸுக்கு வந்தேன் என்றால் உங்களுக்குதான் தலைவலி அதிகம்….. என்னை வலுக்கட்டாயமா வரச் சொன்னால்…. நீங்க தான் என்னால் அனுபவிக்கனும்….. அதுக்கபுறம் அம்மா தாயேனு கையெடுத்து கும்பிட்டு நீங்களே என்னை வீட்டுக்கு அனுப்புவீங்க……” என்று இகழ்ச்சியாய்ப் பார்க்க….

“அப்படி ஒரு நிலைமை வராது போதுமா” என்று விஜய்யும் சளைக்காமல் பேச….

“ஓ……… நீங்க கையெடுத்துலாம் கும்பிட மாட்டிங்கள்ள… ஸ்டேட்டஸ் தடுக்கும்….. கழுத்தை பிடிச்சுதானே தள்ளி விடுவீங்க… அதுதானே உங்க பழக்கம்………….” என்றவளின் குத்தலான வார்த்தைகளில் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போனவன் அவள் கணவன் தான்…

அமைதியாக அமர்ந்திருந்தவனிடம்….

“உங்களை நம்பி என்னை அனுப்பி வைக்க நினைக்கிறாங்க… நான் உங்களை பற்றி உங்க தம்பி யுகி கிட்ட மட்டும் தான் சொல்லி வச்சேன்….. அவனே உனக்கு சப்போர்ட் பண்ணும் போது… உன்னைப் பற்றி தெரியாத என் அம்மா அப்பா அண்ணாவ எப்படி குத்தம் சொல்ல முடியும்….. “ என்று முடிக்க வில்லை….

“நான் அன்னைக்கு என்னடி பண்ணினேன் உன்னை…. என்னமோ ரொம்ப சீன் போடற…..” என்று பொறுக்க முடியாமல் விஜய்யும் பேச ஆரம்பிக்க…. தீக்‌ஷா கனலாய் சிவந்தாள்

”யார் சீன் போடுறா… அப்போ எதுக்குடா சட்டையை கழட்டிட்டு உள்ள வந்த….. அதுக்கு பதில் சொல்லு….” என்று சத்தமாய்ப் பேச….

விஜய் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனித்து… அவளை விடுத்து வேறு திசையில் வெறிக்க ஆரம்பித்தான்…

“சொல்ல முடியலதானே….. என்னை நேருக்கு நேராக கூட பார்க்க முடியவில்லைதானே…. ஆனாலும் உன் கேவலமான புத்திய எங்க வீட்ல இது வரைக்கும் சொல்லாம இருக்கிறதுக்கு ஒரே காரணம் என் அண்ணி தான்….” தன் படபடப்பை உணர்ந்தவள்…. அதைக் குறைத்து

“இங்க பாருங்க….. நான் மறக்க நினைக்கிற விசயத்தை மறுபடியும் பேச வைக்காதீங்க…. என்னை விட்ருங்க…. என் விசயத்தில் தலையிடாதீங்க” என்று அவனுக்கு மரியாதையை மீண்டும் கொடுத்து… சமாதானமாய் பேசி முடித்து நிமிர….

“மாட்டேனு சொன்னா என்ன பண்ணுவ…. எனக்கு ஒரு வாய்ப்பு கொடு…. நான் நல்லவன்னு உனக்கு நிருபிக்கிறேன்…. போதுமா…. இதுதான் என் முடிவு….. என்னோட என் ஆஃபிஸுக்கு வரலாம் இல்லை வீட்டில் இருக்கலாம்…... யோசிச்சு இரண்டில் ஒண்ணச் சொல்லு… இப்போ வா போகலாம்” என்று எழுந்தே விட்டான் விஜய்…..

அவனது இந்த பிடிவாதத்தால் ஏற்கனவே விஜய் மேல் இருந்த கோபத்தின் அளவு இன்னும் அதிகமாகத்தான் செய்தது தீக்‌ஷாவுக்கு ….

இருந்த ஆத்திரத்தில், அவன் மேசை மீது விட்டுப் போன கண்ணாடிக்குதான் பாதிப்பாகியது….. கோபத்தோடு காரின் அருகே வந்தவள்…. விஜய் பார்க்கும் படி அந்த கண்ணாடியை கீழே போட்டு உடைக்க… விஜய் அவளிடம்…

“கோபத்தை என்கிட்ட காட்டு…. மனசுல வச்சு மனசுல வச்சு…. உன்னை நீயே அழிச்சுக்காத” என்றவனிடம் அதற்கு மேல் பேசமால் உள்ளுக்குள் பொறுமியபடியே வீடு வந்து சேர்ந்தாள் தீக்‌ஷா….

“நான் எதுக்குடா என்னை அழிச்சுக்கனும்…… என் கோபத்தினால உன்னைத் தான் அழிப்பேன்” என்றவள்….

“உன்னைப் பழி வாங்க கடவுளா எனக்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கார்னு நெனச்சுக்கிறேன்… நான் ஒதுங்கிப் போகலாம்னுதான் பார்த்தேன்… நீயே வலிய வந்து இம்சை வேண்டும்னு சொல்றா…. “ மனதுக்குள் திட்டம் வகுத்தவள்… தன் வீட்டில் விஜய்யோடு வேலைக்கு செல்ல சம்மதம் சொல்லி… அதைச் செயலாற்றவும் ஆரம்பித்தாள்….

விஜய் அலுவலகத்திற்கு அழைக்க அவளது வீட்டுக்கு வந்தால்….. குறைந்தது, 1 மணி நேரமாவது அவனை காக்க வைத்து அதன் பின் கிளம்புவது….. முக்கியமான வேலையில் இருக்கும் போது…. தான் வீட்டிற்கு போக வேண்டும் என்று உடனே கிளம்புவது….. மெயில்களை எல்லாம் டெலீட் செய்வது…. கஸ்டமர்களிடம் ஒழுங்காய் பதில் சொல்லாமல் தவிர்ப்பது…..” என்று அவனுக்கு தொழில் ரீதியாக தொல்லை கொடுக்க… விஜய் ஓரளவு தாக்குப் பிடித்தான் தான்…..

ஆனால் கஸ்டமர்களிடம் அவளின் நடவடிக்கைகள்…. வேறு சில பிரச்சனைகளை இழுத்து விட,

கஸ்டமர் சம்பந்தமான பணிகளுக்கு எல்லாம்…. வேறொரு ஆளை நியமித்து விடலாம் என்று விஜய் முடிவெடுத்து… அதற்கும் ஆள் எடுக்க….. அந்தப் பெண்களிடம் இந்த அலுவலகம் சரியில்லை என்று ஆரம்பித்து.. ஏதாவது சொல்லி பயமுறுத்த…. வந்த 2 பெண்களும் வந்த 2 நாட்களிலேயே வேலையை விட்டுச் செல்ல… சுரேந்தர் ஓரளவு நிலைமையை யூகித்தவன்…. விஜய் பில்டர்ஸில் வேலைக்கு வந்திருந்த சாருமதி என்ற பெண்ணைப் பற்றி விஜய்யிடம் சொன்னான்…

“அண்ணா.. அந்த பொண்ணு ரொம்ப தைரியசாலி…. எதையும் ஆராய்ந்து பண்ணுவா… கண்டிப்பா தீக்‌ஷா சொல்றதை எல்லாம் நம்ப மாட்டானுதான் நினைக்கிறேன்….. நம்ம வேலைக்கும் ஏற்ற கேன்டிடேட்…… வெறும் கஸ்டமர் பாயிண்ட் ஆஃப் வ்யூ ல எடுக்காமல்…. மேனேஜ்மெண்ட்டுக்கும் சேர்த்து அப்பாயிண்ட் பண்ணலாம்….. இது என்னோட ஒப்பீனியன் மட்டும் தான்….” என்று அண்ணன் மனம் கோணாதாவாறு முடிக்க….. விஜய்யும் யோசிக்க ஆரம்பித்தான்….

விஜய் முதலில் எடுத்த பெண்கள் எல்லாம்….. வாடிக்கையாளார் சேவைக்கு மட்டும் தான்…

இப்போது சுரேந்தர் சொல்வதை யோசித்தவனுக்கு…. சுரேன் சொன்னது போல சாருமதியை விடி பிரமோட்டர்ஸ்க்கு நியமனம் செய்ய ஒப்புக் கொண்டான்….

இதற்கிடையே தீனாவின் ப்ராஜெக்ட் பல குழறுபடிகளால்…. நிறுத்தப்பட்டிருக்க…. தீனாவுக்கு விஜய்யின் உதவி தேவைப்பட… விஜய்யோ பிடிவாதமாய் மறுத்து ஒதுங்கி விட்டான்…..

-----

அன்று சாருமதி விடி ப்ரமோட்டர்ஸில் சேரும் தினம்…. வழக்கம் போல விஜய்யை காக்க வைத்து பின் கிளம்பிய தீக்‌ஷா…. போகும் வழியில்…..

“இன்னைக்கு புதுசா இரு கேன்டிடேட் வராங்களாமே… சுரேந்தர் அத்தான் சொன்னாரு….. ஆஃபிஸ்ல இருக்கிறது 30 பேரு…. ஏற்கனவே ஒரு 10 பேர் என் புண்ணியத்தில் ஓடிப் போய்ட்டாங்க…. பார்க்கலாம் இந்த பொண்ணை….” என்று விஜய்யைப் பார்த்துச் சொல்ல……………

“நீ எத்தனை பேரை விரட்டினாலும்…. என்னை விட்டு வெளியில் போக முடியாது…” என்றவனிடம்….

”உங்களுக்கு கல்யாணம் ஆகிற வரைதான் ஆடுவீங்க….. அதுக்கபுறம் பார்க்கலாம்………” எள்ளளாய்ப் பார்க்க…

இதற்கு பதில் சொல்ல வில்லை விஜய்…. வெளியில் வேடிக்கை பார்த்தபடி வந்தவனை……… பார்த்தபடி வந்தவள்…………… விஜய்யின் இன்றைய தோற்றம் உறுத்த…

“நீங்க ஏன் இளமதிய வேண்டாம்னு சொன்னீங்க” என்று கேள்வியை சந்தேகமாய் இழுக்க….

விஜய் இதற்கு வாய் திறந்தான்………..

“எனக்கு மேரேஜ் ஆகிருச்சுனா….. உன்னை எப்படி மிரட்டுறது………….. அதுனாலதான்” சொன்ன வார்த்தைகள் அவனுக்கே புரியவில்லை எனும்போது…. தீக்‌ஷாவுக்கு புரியுமா…..

தீக்‌ஷா விழிக்க…. அதை உள்ளுக்குள் ரசித்தபடி

“என்னை ஒருத்தி கண்ட்ரோல் பண்ண வந்துட்டான்னா….. என்னோட கெத்து என்னாகிறது…. அதுனாலதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” விளக்கமாய் சொல்ல……. தீக்‌ஷா புரிந்தும் புரியாமல் முறைத்தவள்….

லிஃப்ட்டுக்கு வரும் வரை அவன் சொன்னதன் அர்த்தத்தை அனைத்துக் கோணத்திலும் யோசித்தவள்…

”என்னை மிரட்டுறதுக்காக கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டானா…. இல்லை ஒரு பொண்ணோட தன் வாழ்க்கையை ஷேர் பண்ணிக்க கூட விரும்பாதவனா….. இவன் என்ன சொல்ல வருகிறான்… என்னையவே குழப்பிட்டான்” என்று குழம்பியபடி லிஃப்டினுள் நுழைந்தவள்….

விஜய் காத்தமுத்து இருவரும் வரும் முன்னரே மூடியபடி மேலே ஏற….

விஜய் காத்தமுத்துவிடம்…

“ஒரு 2 மினிட்ஸ் லேட் பண்ணினேன்…. என்ன பண்ணிட்டா பாருங்க…… தனியா போய்ட்டு இருக்கா” என்று வேகமாய் படிகளில் ஏறினான்…. இவனது அலுவலகம்…. 6 வது தளம்…. மூச்சிறைக்க வேகமாய் ஏறியவன்… தீக்‌ஷா கதவைத் திறந்து உள்ளே நுழைவதைப் பார்த்த பின். தான் தன்னை ஆசுவாசப்படுத்தி மூச்சை இழுத்து விட்டான்…

அதன்பின் உள்ளே நுழைய…..

தீக்‌ஷாவிடம் அந்தப் பெண் உரிமையாய் பேசிக் கொண்டிருக்க….. தீக்‌ஷா சந்தோசமாய் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது அவள் பின்புறமிருந்தே உணர்ந்தவன்…… அவள் அருகே கடந்து செல்ல…

உனக்கு வேற ஆஃபிசே கிடைக்கவில்லையாடி…………போயும் போயும் இதுதான் கிடைத்ததா”

அவன் காதுகளில் கேட்ட வார்த்தைகளில் நிமிர… தீக்‌ஷாவின் முன் நின்ற அந்தப் பெண் விஜய்யைப் பார்த்து விழித்தாள்…

அவள் பணி நியமனத்திற்கு வந்த புதிய பெண் என்பதை உணர்ந்த விஜய்க்கு… அவள் தீக்‌ஷாவுக்கு தெரிந்த பெண் என்பது புரியாமல் இல்லை………… முதலில் வேலைக்கு எடுப்போம்.. அதன் பின் எந்த அளவுக்கு நெருக்கமானவள் என்பதை வைத்தே அவளிடம் தீக்‌ஷாவைப் பற்றி சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து……. சாருமதியை உள்ளே அழைக்க….. அவளோ………….. தீக்‌ஷாவுடன் பள்ளித் தோழி பார்வதி என்பதும்…….. அதிலும் சாரகேஷ் இவள் அண்ணன் என்பதும் தெரிய வர…. விஜய்………. மனது ஆட்டம் கண்டது……….

சாரகேஷ் தீக்‌ஷாவிடம் மீண்டும் பழைய கதையை புதுப்பிப்பானோ…. என்றுதான் அவன் மனம் தூக்கி வாரிப் போட…. விஜய்க்கு பட படப்பு அதிகமாக அலுவலகத்தை விட்டு வெளியெறி வந்தவனுக்கு………… ஏனோ அவனுக்கு சிகரெட்டின் துணை தேவைப்பட…………. அதை நாடி போனவனுக்கு……… ஏனோ அதை வாயில் வைத்து அனுபவிக்க முடியவில்லை………… ஒரு பாக்கெட் முழுவதையும் கையில் வைத்து கீழே போட்டவன்……… அசோக்கை அழைத்து சாரகேஷ் பற்றிய விபரத்தை சேகரிக்கச் சொல்லி விட்டுத்தான் மீண்டும் அலுவலகம் வந்தான்……

அதன் பிறகு பார்வதி….. சாரகேஷ் மூலம் தீக்‌ஷா செய்த திருவிளையாடல்களை நினைத்து சிரித்தவன்……… தன்னவள் எப்படியோ தன்னிடம் வந்து சேர்ந்து விட்டாள் தான்…….. ஆனால் தன் மனைவியாய் வரவில்லையே…………. ஆற்றாமையில் கண்கள் கரித்தன விஜய்க்கு……………

தன்னை கணவனாய் தேடி தன் வீட்டிற்கு வந்தவள்………….. தன்னைக் கணவனாய் உணர்ந்து வரவில்லையே என்ற துக்கம் அவனுக்குள்ளே அவனை சுழன்றடிக்க……….

தீக்‌ஷாவின் ஞாபகம் வாட்டும் போதெல்லாம், அவளின் பழைய குவார்ட்டர்ஸின் இளம் தோழர்கள் தான் இவனுக்கு ஆறுதல்

விளையாட்டு மைதானத்தில், கடந்த கால நினைவுகளில் சங்கமித்திருந்தவனை…

சிவா அழைத்தான்…………

‘விஜய் அண்ணா………. அடுத்து நாம் ஃபீல்டிங் பண்ண போகிறோம்……….. எப்படியாவது ஜெயிக்கனும் அண்ணா…” என்று அழைத்துக் கொண்டு போக… விஜய் தன் துக்கம் மறந்து…. மறைத்து……….. அவர்களோடு சென்றான்………..

-------------

சாரகேஷ்………. வீட்டிற்குள் நுழைந்த வேகத்திலே……….. அவன் நிதானம் தவறி இருப்பது புரிய…. பார்வதி அவனருகில் வேகமாய் வர…………. சாரகேஷ் தடுமாறினான்…..

அவன் விழாமல் பிடித்து நிறுத்திய பார்வதி….

“என்ன அண்ணா…. என்ன ஆச்சு… ஏன் இப்படி இருக்க….” என்று விசாரிக்க

“நம்ம தீக்‌ஷா ப்ரெயின் டெத்ல இறந்து போய்ட்டாளாம்… இப்போ இருக்கிறது சக்தி “ என்று திக்கித் திணறி ஆரம்பித்தவனை………..

அதிராமல், அவனை முறைத்தாள் பார்வதி….

அவளின் முறைப்பை லட்சியம் செய்யாமல் அகல்யா சொன்னவற்றை சொல்ல….

பார்வதியோ…..

“சத்தியமா நீ டாக்டர்க்கு படிச்சுதான வந்த…… இல்ல காப்பி அடிச்சு வந்துட்டியா….. என் ஃப்ரெண்ட் எனக்கு தெரியாதா……. நீ உண்மையிலேயே அவள லவ் பண்ணியிருந்தா…. உனக்கு தீக்‌ஷா பற்றிய சந்தேகமே வந்திருக்காது” என்றவள்…… வேகமாய் உள்ளே போய் விஜய் கொடுத்திருந்த டாக்குமெண்ட்ஸை எடுத்து வந்து அவன் முன் வைத்தவள்…….

“நானும் இன்னும் இதைப் பார்க்கலை….. ஆனால் என் ஃப்ரெண்ட் தீக்‌ஷா உயிரோட இருக்கானு உறுதியா சொல்வேன்” என்று சாரகேசைப் பார்க்க…

அப்போதும் நம்பிக்கை இல்லாமல் ஃபைலில் பார்வையைப் பதித்து…. பக்கங்களை வேகமாய்த் திருப்ப… அது திருமதி தீக்‌ஷா விஜயேந்தரைப் பற்றிய விபரங்களை எல்லாம் சொல்லி முடித்திருக்க…. சாரகேஷ் நிம்மதியாக பார்வதியைப் பார்த்தான்…

விஜய் வீட்டிலோ….. விஜயேந்தரை எதிர்பார்த்து காத்திருந்த தீக்‌ஷாவிடம் யுகி வசமாய் மாட்ட……….. விஜய்யிடம் காட்ட வேண்டிய தன் ஆவேசத்தை எல்லாம் யுகியிடம் காட்டிக் கொண்டிருந்தாள் தீக்‌ஷா………

2,027 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 Comment


அப்பாடா......... எவ்ளோ............ பெரிய ஃப்ளாஷ் பேக்

Like
© 2020 by PraveenaNovels
bottom of page