top of page
Writer's picturePraveena Vijay

அன்பே நீ இன்றி -47

அத்தியாயம் 47

காரை விட்டு இறங்கிய தீக்‌ஷாவுக்கு அதுவரை இருந்த உற்சாகமெல்லாம் போனது போல் இருந்தது….

விஜய் வீட்டிற்குள் வராமல் போன போது…….. தன் தந்தையும் , அண்ணனும் அவனிடம் வீட்டிற்குள் வரச் சொல்லி கெஞ்சிய காட்சியும்…..அவன் அதைக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல்…. திமிராய் அவன் சென்றதும் அவளுக்கு இன்னும் கோபத்தை தர….

அவளின் நினைவுகளில் சட்டென்று வந்தது…………. விஜய் அவளை அவன் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நினைவுகள் தான்….

இத்தனை மாதங்கள் கடந்தும் வீட்டை இவர்கள் மாற்ற வில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் யோசித்தவள்… தன் ஸ்கூட்டியாகிய பிங்கி நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை வேதனையோடு பார்த்தாள்…. அதைத்தான் விற்று விட்டார்களே என்று பெருமூச்சு விட்டவளை… அடுத்து யோசிக்க விடாமல் ராதா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போக…

வழக்கமான அவளின் குறும்புத்தனத்தோடு… யுகியிடம் மட்டும் மெதுவாய்ச் சொன்னாள்

“ஆரத்தி எனக்கு எடுத்ததுக்கு உங்க விருமாண்டிக்கு எடுத்திருக்கலாம்…. வெத்தலை பாக்கு,ஆரத்தி எடுத்து கூப்பிட்டால் தான் வருவாராம்மா…. ரொம்பத்தான் பிகு பண்ணிட்டு போறாரு…” என்று நக்கல் பாதி கோபம் பாதியாய்க் கேட்க….

யுகி.. பதில் பேசவில்லை……………. மௌனமாகவே இருக்க

”என்னடா…. உம்முனு இருக்க…. “ என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் உள்ளே போனவளை ஓவ்வொருவரும் பாச மழையில் மூழ்கடிக்க…. அதில் நனைந்தவளுக்கு………….. ஏனோ அதில் முற்றிலும் திளைக்க முடியவில்லை…. அவள் மனதின் இருந்த வெறுமையை அங்கிருந்த யாராலும் நீக்க முடியவில்லை

அரைமணி நேரத்திலேயே கலைச்செல்வி தங்கள் வீட்டுக்கு கிளம்ப….. ஜெயந்தி உடனே

“வந்த உடனே கெளம்புறீங்க” என்று கேட்க

“இல்ல…. விஜய் வீட்டுக்கு போயிருக்கான்…. அதுனாலதான்” என்று சொல்லிக் கிளம்பிய கலைச்செல்வி…

தீக்‌ஷாவிடம்…

“சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வாம்மா” என்று கலங்கிய கண்களாய் மறைமுகமாகச் சொல்ல….

தீக்‌ஷா முகத்தில் அடித்தாற் போல் பதில் சொல்லவில்லை என்றாலும்… அந்த கேள்வியையே புறக்கணித்தவள் போல்… வேறு திசையில் பார்வையை மாற்றிக் கொண்டாள்….

கலைச்செல்விக்கோ தன் மூத்த மகன் இன்றுதான் வீட்டிற்கு வந்திருக்கிறான்… அவனைக் கவனிக்க வேண்டும் என்ற ஆவலில் அங்கிருந்து வேகமாய்க் கிளம்பி… வீட்டிற்குள் வந்து…. தன் மகனைத் தேடி அவன் அறைக்குப் போக…. வேரிழந்த மரமாக தன் படுக்கையில் படுத்திருந்தான்….

கண் மூடிப் படுத்திருந்தான் விஜய்…. அவன் படுத்திருந்த கோலமே…. அவன் உறங்க வில்லை என்பதைச்சொல்ல….

”விஜய்” என்று ஆறுதலாய் அணைத்தபடி அவனருகில் அமர………

“அம்மா………. நான் உங்க மடில படுத்துக்கிறேன்மா……………. என்கிட்ட எதையும் கேட்காதீங்க…. எனக்கு அவ ஞாபகம் இல்லாமல் தூங்கணும் போல இருக்கு………… ஆனா முடியலம்மா………….. ஹாஸ்பிட்டல்ல இருந்த வரை கூட இப்படி வெறுமையா இல்லம்மா…. ஆனா இன்னைக்கு இந்த ரூமுக்கு தனியா வரும் போது என்னால முடியலம்மா……………. அவ அந்த அளவுக்கு என்னை ஆக்கிரமிச்சுருக்கானு இப்போதான் தெரியுது… “ என்றவன் மடியில் படுத்தபடியே புகைப்படத்தில் இருந்த தீக்‌ஷாவைப் பார்த்தபடி பேச ஆரம்பித்தவன்…

”27 வயசு வரை அவ யாருனு கூட தெரியாது…. ராதாவால அவ நம்ம குடும்பத்துக்குள்ள வந்தப்போ கூட…. பெருசா அவ என்னை பாதிக்கலை…. ஆனால் இப்போ அவ இல்லாம இருக்க முடியலம்மா……….. என்னை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னே தெரியலம்மா…. என்னை விரோதி மாதிரியே பார்க்கிறாம்மா………….. அவ பேர் நான் சொல்லக் கூடாதாம்…. ரொம்ப பேசுறாம்மா…” என்றவனை

”தூங்குப்பா” என்று சாந்தப்படுத்த… அவனோ புலம்பலை நிறுத்தவில்லை…..

“ஆனாலும் எனக்கு கோபமே வரலம்மா…. அவ பேச்சைக் கேட்போமானு ஏங்கிட்டு இருந்த எனக்கு கோபமே வரலம்மா…. அவ பேசுறதை கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு… என்ன பேசினாலும் ரசிக்கனும் போல இருக்கு…. ஆனால் இப்போ என்னால அவ பக்கம் கூட நெருங்க முடியல… வாய மூடு… வாய மூடுனு சொல்வேன்… இன்னைக்கு என் நிலைமய பார்த்தீங்களாம்மா…. எதற்குமே என்னை ஏங்க விட்டதில்லை அவ….. இப்போ அவள் அறியாமலே என்னைப் படுத்துறா…. அவ தெரிஞ்சு செய்யலதான் …. ஆனா என்னாலதான் தாங்க முடியல…………….” என்று புலம்பியபடியே உறங்கியும் போனான் விஜய்……………

கலைச்செல்விக்கோ……….. தன் மகன் கடந்த சில மாதங்களாய் பட்ட துக்கமெல்லாம் கண்முண் வர…. தன் கம்பீரமெல்லாம் கலைந்த கோலமாய் தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்தவனை… தன் மடியை விட்டு இறக்காமல்………. பார்த்தபடியே இருந்தாள்

சிறுவயதில் இருந்து….. பெரிய மனிதத் தனமாய் இருப்பவன்…. அது அவன் இயல்பிலேயே இருக்கும்…. யாராலும் சுலபமாக அவனை நெருங்க முடியாது… பார்வையிலேயே தள்ளி நிறுத்துவன்… இப்படி ஆகி விட்டானே என்று நினைக்கும் போதே தன் மருமகளின் மீது ஏனோ……. கோபம் தான் வந்தது….. அவள் சந்தோசமாய் சிரித்தபடி அங்கு இருக்கும் போது…. இவன் இங்கு அவள் நினைவால் அல்லாடுகிறானே…. என்றெல்லாம் கலங்கினாள் அவன் அன்னை…

---------

அடுத்த ஒருநாள் முழுவதும் விஜய் தீக்‌ஷாவைப் பார்க்காமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தான்தான் ….. அதுவே அவனால் முடியவில்லை….. என்ன செய்கிறாளோ…. அவளை எப்படி பார்த்துக் கொள்கிறார்களோ.. தனியே விட்டால் என்னவெல்லா யோசிப்பாளோ என்றுதான் அவன் மனம் அவன் மனைவியைச் சுற்றி சுற்றி வந்ததே தவிர…… அவனின் வேலை… அவனின் உடல் நலம் இதெல்லாம்… அவன் கவனத்தில் இம்மியளவும் இல்லை….தீக்‌ஷாவைத் தவிர… அத்தனை பேரிடமும் விசாரித்து கொண்டே இருந்தான்… மற்றவர்களை தொந்திரவு செய்கிறோம் என்று உணர்ந்த போதும் அவனால் முடியவில்லை… அவனின் உடல் மட்டும் அவன் வீட்டில் இருக்க… அவன் ஆவியெல்லாம் அவனின் தீக்‌ஷாவிடம் இருந்தது… ஒரு கட்டத்தில் அவனால் முடியாமல் நேராய் அவள் வீட்டிற்கே செல்ல…. அவளோ இவன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததால்…. அவள் அறையை விட்டே வரவிலை….

ஒரு வாரம் இப்படியே போக…. சுரேந்தர் வேறு விஜய்யிடம் நச்சரிக்க ஆரம்பித்தான்….

“அண்ணா… நீங்க கம்பெனிக்கு கூட வர வேண்டாம்… ஜஸ்ட் என்னை கைட் பண்ணுங்க அது போதும்… மெண்டல் டார்ச்சரா இருக்கு… நான் சக்தி விசயத்தில முடிவெடுத்த்து தப்புதான்…. அதை அவளே எனக்கு உணர்த்திட்டா… உண்மையச் சொன்னால்… என்னால முடியலண்ணா…. ப்ளீஸ்ணா…” என்று பல முறைக் கெஞ்ச… விஜய்க்கும் ஒரு மாறுதல் தேவைப்பட… சுரேந்தருக்கு தலை அசைத்தான்… ஆனால் உடனே முடியாதென்றும்… சில நாட்கள் தனக்கு அவகாசம் வேண்டுமென்றும் அவனிடம் கேட்டுக் கொள்ள அதன் பின் சுரேந்தரும் தன் அண்ணனைத் தொல்லை செய்ய வில்லை….

----

அந்த ஒரு வாரத்திலேயே தீக்‌ஷாவின் உடல்நலம் குறித்து…. அவள் வீட்டு உறவினர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர்…. தீக்‌ஷா மருத்துவமனையில் இருந்த வரை…. அவர்களின் விசாரிப்புகள் ஆறுதலாக இருந்த்து தீக்‌ஷா குடும்பத்தாருக்கு….

ஆனால்… தீக்‌ஷா பிறந்த வீட்டிற்கே வர… அவர்களின் விசாரிப்புகள் எல்லாம் வேறு மாதிரி இருந்தன…

“ஏன் அவங்க இங்க விட்டுப் போனாங்க…”

“நம்ம தீக்‌ஷாக்கு எல்லாம் மறந்து போச்சா…. இப்படி இருப்பாளா இந்த பொண்ணு… பணக்கார சம்பந்தம் கெடச்சும் இப்படி ஆகிவிட்டதே” என்றெல்லாம் வித விதமான விசாரிப்புகள் வர….

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக….

ஜெயந்தியின் அண்ணன் மனைவி... அவளுக்கு தீக்‌ஷாவை தன் மகனுக்கு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க… அந்தப் பேச்சை அதன் ஆரம்பக் கட்டத்திலே மறுத்து விட்டிருந்தாள்….

“ஜெயந்தி…. இதெல்லாம் விதின்னு சொல்றதை தவிர வேறென்ன சொல்ல…. நம்ம லக்ஸ்மி பொண்ணக் கூட நம்ம தீக்‌ஷா மாதிரி பெரிய இடத்தில தான் கொடுத்தாங்க…. இந்தப் பொண்ணுதான் வேணும்னு ஒத்தைக் கால்ல நின்னு கல்யாணம் பண்ணிட்டு போனானாம்….. 2 வருசம் என்னமா ஆட்டம் போட்டாங்க…. இப்போ ஆடி அடங்கி கிடக்கிறாங்க…. வாரிசு இல்லைனு கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க…. போன வாரம் அந்த பையனுக்கு வேறொரு கல்யாணம் நடந்துருச்சு…. நீயும் அது மாதிரி ஏமாந்துராத….. என்னத்த சொல்லு…. நம்ம பொண்ணு இந்த மாதிரி ஆகிருச்சே…. என்றவள்…

“பைத்தியம்னு சொன்னா…. ஈஸியா டைவர்ஸ் கிடைச்சிடுமாமே….. இவர் சொன்னாரு…. யார் கண்ணு பட்டுச்சோ” அவள் பேசி முடிக்க வில்லை… ஜெயந்தி போனை வைத்து விட்டாள்..

விஜய் அன்று பேசிய போது நிம்மதி அடைந்த ஜெயந்தியின் மனம்… மீண்டும் கல்லெறிந்த குளமாக கலங்க ஆரம்பித்தது….

எத்தனை நாட்கள் விஜய்யும் பொறுத்திருப்பான்…. அதுவும் இந்த வயதில்…. விஜய்யை விட… கலைச்செல்வியை நினைத்து தான் இப்போது ஜெயந்திக்கு பயம் வர ஆரம்பித்தது….. தன் மகனுக்கு இப்படி ஆகியிருந்தது என்றால்…. இவள் தாயாக என்ன முடிவெடுப்பாள்….

எல்லாம் சேர்ந்து ஜெயந்தியைத் தாக்க…. கோவில் கோவிலாக போக ஆரம்பித்தாள்…..

அன்றும் அவள் அப்படி அருகில் இருந்த கோவிலுக்கு போக…. ராதா வீட்டில் இருந்தாள்….

ஆனால் சுனந்தாவுக்கு திடிரென்று உடல்நலம் சரியில்லாமல் போக…. ராதாவும் மருத்துவமனை சென்று விட்டாள்… தீக்‌ஷா தனியாக இருக்கிறாள் என்று ஜெயந்தியிடம் சொல்லி விட்டுத்தான் சென்றாள்….

ஆனால் ஜெயந்தியால் உடனடியாக… பூஜையின் இடையிலேயே விட்டு வர முடியவில்லை….

தீக்‌ஷா தனியாக இருக்கிறாள்… என்ற விசயம் உடனடியாக விஜய்க்கு முருகேசன் மூலம் சொல்லப்பட…. விஜய் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு வந்தான்…. கோபத்தோடு….

இவர்களை நம்பிவிட்டுப் போனால்… ஆளாளுக்கு அவங்கவங்க வேலையைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற கோபம் தான் அது…’

அவனின் கோபத்தையும் சாதாரணமாக விட முடியாது…. தீக்‌ஷா தனிமையில் இருந்தாலே விஜய்யைத் தேட ஆரம்பித்து விடுவாள்… அவளின் தேடலின் முடிவு…. நன்மையைக் கொடுத்தால் கூட பரவாயில்லை…. வேதனைதான் எனும்போது விஜய் அதை அறவே வெறுத்தான்….

தன்னை நினைத்து அவள் போராடி… தன்னையே மாய்த்துக் கொள்வதை விட…. தன்னை மறந்து வாழும் அவளின் இந்த நிலையே அவனுக்கு ஆறுதலாக இருந்தது என்றே சொல்லலாம்,…

கார் சத்தம் கேட்ட தீக்‌ஷா…. சுனந்தா வந்து விட்டாள் என்று வேகமாய் எட்டிப் பார்க்க… அது விஜய்யின் கார்…..

முகம் சுருங்கியவள்…. அறையிலே இருந்து விட்டாள்…. எப்படியும் யாரும் இல்லை என்றால் போய் விடுவான் என்று நினைத்தவள்… ஒரு பத்து நிமிடம் அறையிலே இருந்தாள்… கார் திரும்பிப் போகும் ஓசை கேட்காமல் இருக்க…. வீட்டில் வேலை செய்யும் பெண்மனியை அழைத்தாள்…

”அக்கா…. வீட்ல யாருமில்லைனு விஜய் அத்தான் கிட்ட சொல்லிருங்க…. அவர் கெளம்பிடுவாரு” என்று சொல்ல

அந்தப் பெண்ணும் தலை ஆட்டியபடி சென்றாள்….

பால்கனியில் தான் அமர்ந்திருந்தாள் தீக்‌ஷா….. விஜய்யோ வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க…. அறையில் இருந்தே கத்தினாள்

“அக்கா” என்று….

ஹாலில் அமர்ந்திருந்த விஜய் பதட்டமாக…

“உங்கள கூப்பிடறா… என்னன்னு பாருங்க” என்று அப்பாவி கணவனாக அந்த வேலைக்கார பெண்மணியை மேலே அனுப்ப

“உங்ககிட்ட என்ன சொல்லச் சொன்னேன்… சொன்னீங்களா இல்லையா…. அம்மா… அண்ணிலாம் இல்லைனு…. வர லேட்டாகும்… சொல்லுங்க….” என்று இப்போது சத்தமாகச் சொன்னாள்… விஜய் காதில் விழுமாறு…..

விஜய் தன்னை நினைத்து நொந்து கொள்ள வில்லை… எதிரில் புன்னகைத்தபடி புகைப்படத்தில் இருந்த தீக்‌ஷாவை பார்த்து சிரித்துக் கொண்டான்….. வேறு வழி?????….

திரும்பி வந்த வேலைக்கார பெண்மணி என்ன சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி விஜய்யைப் பார்க்க…

”நான் பார்த்துக்கிறேன்… நீங்க போங்க” என்றவன்… அன்றைய செய்தித் தாளில் மூழ்கிவிட்டான்….

விஜய் இன்னும் இருக்கிறான் என்பதை உணர்ந்த தீக்‌ஷா…. அவனுக்கு எதிரே வந்து அமர்ந்தாள் தீக்‌ஷா…..

அவள் வந்ததை உணர்ந்தும் விஜய் அவளை நிமிர்ந்து பார்க்க வில்லை…..

விஜய் அத்தான் என்று தீக்‌ஷாவுக்கு அவனை அழைக்க விருப்பமில்லை…. அதனால்

ரிமோட்டை ஆன் செய்து டிவியை உயிர்ப்பித்து அவனை கவனத்தைத் தன்னை நோக்கி திருப்ப முயல…… அப்போதும் அவன் இவளைப் பார்க்க வில்லை….

எரிச்சல்தான் வந்தது தீக்‌ஷாவிற்கு…. தொலைக்காட்சியை இன்னும் மிகவும் சத்தமாய் வைக்க…. வேறு வழியின்றி…. அவளைப் பார்த்தவன்… அவள் கையில் இருந்த ரிமொட்டை பறித்து ஆஃப் செய்து விட்டு… மீண்டும் பேப்பரில் மூழ்க…..

டிவியின் சத்தத்தைக் கூட்டினால் அவனுக்கு எரிச்சல் வருகிறது என்பதை உணர்ந்த தீக்‌ஷா… மீண்டும் ரிமோட்டை எடுத்து…. அதிகபட்ச சத்தத்தில் வைக்க…. விஜய் அவளை முறைத்தபடி ரிமோட்டை வாங்கப் பார்க்க

வேகமாய்… ரிமோட்டை தனக்குள் கையகப்படுத்தினாள் தீக்‌ஷா சிறு குழந்தை போல…

“சின்னப் பிள்ளை மாதிரி விளையாடாத… ரிமோட்டைக் கொடு” என்று இவன் கேட்க…. அவளோ…. ரிமோட்டை அவன் பறிக்க முடியாதவாறு அழுத்தமாய் பிடித்துக் கொள்ள…

விஜய் அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் பேசாமல்… எழுந்து போய்… மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்து விட்டு அமர….

“அண்ணி…. அம்மா இல்லை… அப்பா அண்ணா ஆஃபிஸ் போய்ட்டாங்க…… நீங்க பெரிய பிஸ்னஸ் மேன்…. ஏன் வேஸ்டா டைம செலவு பண்றீங்க….” தீக்‌ஷாவுக்கு பேசப் பிடிக்கவில்லைதான் இருந்தும் பேச….

“எனக்கு தெரியும் என்ன செய்யனும்னு…….. என்னோட டைம் வேஸ்டாகிறத பற்றியெல்லாம் நீ கவலைப்படாத…. அத்தை வந்ததும் நான் போயிருவேன்…. நீ உன் ரூமுக்கு போ…..” என்று சாதரணமாகச் சொன்னான் விஜய்…

இவள் வள்ளென்று விழுந்தாள்….

“அத்தையா….. ரொம்ப உரிமையா சொல்றீங்க…. என்ன வம்பு பண்றீங்களா… யாருமில்லைனு…….“ இவள் பேசும் போதே யுகியும் அங்கு வந்திருந்தான்… அவனை இருவருமே கவனிக்க வில்லை…. டிவியின் சத்தம் வைக்கும் போதுதான் யுகி கார் உள்ளே நுழைந்ததால் அதை இருவருமே உணர வில்லை…

“தீக்‌ஷா………. இப்போ யாரு உன்கிட்ட வம்பு பண்றா…..“ என்ற போதே

“என் பேரைச் சொல்லாதனு சொன்னேன்ல….. உன்னைப் பார்த்தாலே எனக்கு” என்று பல்லைக் கடித்தவள்….

”முதல்ல கூட உன் மேல கோபம் இல்லை… தப்பு செஞ்ச உன்னை இந்த தாங்கு தாங்குறாங்க…. எங்க வீட்ல… அதைப் பார்க்கும் போது எப்படி வருது தெரியுமா எனக்கு… என்னடா சொல்லி அவங்கள மாத்தி வச்சுருக்க….

எனக்கு ஆகிஸிடெண்ட்னு சொன்னாங்க…. எனக்கு டவுட்டா இருக்கு…. நீயே எனக்கு ஆக்ஸிடெண்ட் பண்ணி என்னை காப்பாத்துற மாதிரி நடிக்கிறியா……. உன் தங்கச்சி நல்ல வாழனும்னு…. இப்படி ஏதாவது பண்ணி… நல்ல பேர் வாங்கிட்டியா…. உனக்கு சாதகமா நடக்கனும்னா நீ என்ன வேணும்னாலும் பண்ணுவியே”

”லூசு மாதிரி பேசாதா…. தீக்‌ஷா” என்ற போதே

“இன்னொரு தடவை என் பேரைச் சொல்லாத…… இங்க பாரு…. உன்கிட்ட பேச எனக்கும் இஷ்டம் இல்லை… மத்தவங்க முன்னால பேசாம இருக்கிறேன் என்றால்… நீ பண்ணியதெல்லாம் மறந்துட்டேன்… மன்னிச்சுட்டேன்லாம் நினைக்காத…. அது இந்த ஜென்மத்தில் மறக்காது... நீயா போனாய் என்றால் உனக்கு மரியாதை….. இல்ல…..” என்று நிறுத்த….

விஜய்யோ ”நீ என்னவோ பேசிக்கொள்” என்பது போல் சாவகாசமாய் அமர்ந்து கொண்டிருக்க….

அதைப் பார்த்த தீக்‌ஷாவுக்கு கோபம் உக்கிரமாய் வர ஆரம்பிக்க….. விஜய் அதை உணர வில்லை… அது கூட அவளுக்கு ஆபத்து என்பதை……

“வேகமாய் அவன் முன் நின்றவள்…

”ஓ இது நீ கொடுத்த வீடுதானே…. அதுதான் இவ்வளவு தெனாவெட்டா உட்கார்திருக்க…. இங்க இருக்கிறது எல்லாம் உன் ஆளுங்கதானே…. நீ இப்படித்தான் இருப்ப… இதுக்காகத்தான் இந்த வீட்டை போகனும்னு நெனச்சேன்…. அந்த ராகேசை மேரேஜ் பண்ணி போயிருந்தால் கூட உன் மூஞ்சில முழிச்சுருக்க மாட்டேன்” என்றவள்…. ஏதோ யோசித்தவளாய்

“ராகேஷ் கிட்ட என்னடா சொன்ன… ஏன் அவன் வரல… நீ என்னமோ பண்ணிட்ட…. நான் சந்தோசமா இருக்கக் கூடாதுனு” என்று ராகேஷைப் பற்றி பேசும் போதே

“அவன் தான் லெட்டர் எழுதி வச்சுட்டு போய்ட்டான்ல…………. என் இந்.” என்று அவளாகப் பேச ஆரம்பிக்க… அப்போது

”தீக்‌ஷா இதுக்கு மேல ஏதாவது பேசின” என்று யுகி…. அவள் முன் நிற்க… யுகியைப் பார்த்த தீக்‌ஷா….. தன் நினைவுகளை நிறுத்தி நிதானமாய் ஆனாள்….

யுகியோ கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல்… அவள் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருக்கும் தன் அண்ணனின் நிலை தாங்க முடியாமல் இதற்கு மேல் வேடிக்கை பார்ப்பது சரியாய் இருக்காது என்று இடையில் வந்து விட்டான்…

வந்தவன்

“சாரி அண்ணா” என்று சொல்ல…

விஜய் அதைக் கண்டு கொள்ளாமல்…. யுகி வந்து விட்டான் என்பதால்…

“யுகி… அத்தை வருகிற வரை இங்க இரு,…. நான் கிளம்புகிறேன்…” என்று சொல்ல…

இது தன் அண்ணனா என்று யுகிக்கே தாள முடியவில்லை….

விஜய் கிளம்ப…. தீக்‌ஷா அவனிடம்

“ராகேஷ் இல்லைனா என்ன….. எனக்குனு ஒரு சாரகேஷ் இல்லாமலா போவான்….. “ என்று வேகமாய் அவளையறியாமல் வார்த்தைகளை விட…

அதைக் கேட்ட விஜய் ஸ்தம்பித்து திரும்பி பார்க்க…..

தீக்‌ஷாவுக்கும் அதிகமாய் பேசியது போல் இருக்க இருந்தும் திமிராய் அவனைப் பார்த்தாள்….

அவளின் மற்ற வார்த்தைகள் எல்லாம் தூசி போல் தட்டியவனால்… இதைக் கேட்டு சும்மா போக முடியவில்லை

“எவன் வந்தாலும்……என்னை தாண்டி…. உன்னை நெருங்க முடியாது…. ” என்று கசப்பாய் வார்த்தைகளை விட

ஏளனமாய்ப் பார்த்தாள் அவனை….

“நான் வழக்கமா லூசு மாதிரி பேசுறேனு நினைக்காத…. சாரகேஷ் என் ஃப்ரெண்ட் பாருவோட அண்ணன்…. உன் பூச்சாண்டி வேலை எல்லாம் அவர் கிட்ட செல்லாது………….” திமிராய்ச் சொல்ல….

அதற்கு மேல் பேசினால்… அவள் எல்லை மீறிப் பேசுவாள் என்பதை உணர்ந்த விஜய்…. பேசாமல் நிற்கும் போதே.. ஜெயந்தியும் உள்ளே வர

“சரி….. நான் போகலாமா…. உங்க அம்மா வந்துட்டாங்க” என்று வெளியேறிப் போக……

உள்ளே வந்த ஜெயந்தி….. விஜய் முன்னாலே அவனே எதிர்பார்க்காமல்…. தீக்‌ஷாவின் கன்னத்தில் அறை விட்டாள்…

விஜய் பதறி தடுக்க… தன் தாய் அறைந்த அறையால்… வலியில் எரிந்த தன் கன்னத்தை பிடித்தபடி… கண் கலங்கி நின்ற நிலையிலும் கூட….

“நீ எதுக்குடா தடுக்கிற…. அவங்க எங்க அம்மா…. என்னைக் கொன்னு கூட போடுவாங்க….. நீ உன் வேலைய பார்த்துட்டு போ… நான் தப்பா பேசினேன்… அதுனால எங்க அம்மா அடிக்கிறாங்க… உனக்கு என்ன வந்துச்சு… எங்க வீட்டை கன்ட்ரோல் பண்ற வேலையை வச்சுக்காத….”

என்று அழுதபடியே சொன்னவள்….

“என் அம்மா கையாலை அடி வாங்க வச்சுட்டேல்ல” என்று அழுகையை நிறுத்தியவள்….

என் சாபம் லாம் உன்னை விடாதுடா…..

உன் ட்ரீம் ப்ராஜெக்ட் கை விட்டுப் போயிருச்சு….. அந்த இளமதிக்கும் உனக்கும் கூட மேரேஜ் லாம் இல்லையாமே…. இவ்வளவு பட்டும் கூட இன்னும் திருந்தாம இருக்க…. என்று அவள் முடிக்க வில்லை… விஜய் வாயே திறக்காமல் வெளியேறி விட்டான்…

யுகி சிவந்த கண்களோடு தன் அண்ணன் பின்னாலே போக…. அந்த நிலையிலும் யுகியை கைப்பிடித்து நிறுத்தினாள்…

“எங்கடா போற… நீ இரு….” என்று நிறுத்த….

“என் அண்ணனுக்கு மரியாதை இல்லாத இடத்தில எனக்கு மட்டும் என்ன வேலை” என்று அவள் கையைத் தட்டி விடப் போக… அதற்கு முன்னரே தீக்‌ஷா அவன் கையை விட்டிருந்தாள்…

கண் கலங்கியவளாய்..

“அன்னைக்கு உன் அண்ணன் என்னை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளினானே…. அப்போ எனக்காக நீ துடிக்கலை…. என் குடும்பத்தையே வெளியே போன்னு கை நீட்டி சொன்னானே…. அப்போதெல்லாம் நீ … நீ என்ன உன் குடும்பமே வாய மூடிட்டு தானே இருந்துச்சு….. அதை எல்லாம் விட உன் அண்ணன் இன்னைக்கு அவமானப்பட்டுட்டாரா….. இந்த நிமிசம் வரைக்கும் நாங்க உங்களுக்கு அடிமையாத்தானே இருக்கோம்” என்று முடிக்க வில்லை

யுகி விஜய் போல வாயை மூடிக் கொண்டு…. அமைதியாக நிற்க வில்லை…. அவனும் பேச ஆரம்பித்தான்

“ஹ்ம்ம்ம்… எல்லாம் தான் பண்ணிட்டியே……. இன்னும் என்ன பண்ணனும்னு இருக்க….. என் அண்ணனை மட்டும் இல்லை… எங்களையும் தான் கைய கட்டிட்டு …. வாய மூடிட்டு இருந்தோம்னு….. என் குடும்பத்தையே தலை கீழா மாத்திட்டியே….. எங்க வீட்டை வந்து பாரு…. எப்படி இருக்குனு…. எவனையோ ஒருத்தனை நீ கல்யாணம் பண்ணிட்டு போயிருந்தாய் என்றால் கூட…. என் அண்ணனை இந்த அளவுக்கு பழி வாங்க முடியாதுனு…… அவர”

”யுகி…..”என்ற தன் அண்ணனின் வார்த்தையில் நிறுத்தினான்…

தீக்‌ஷாவோடு நடந்த வாக்குவாதத்தில் கார்க்கீயை அங்கேயே விட்டு விட.. அதை எடுக்க வந்தவன்…. நல்லவேளை யுகியை அடக்கி விட்டான்… அது மட்டும் இல்லாமல்….. அவனைத் தன்னோடு இழுத்தும் வந்து விட்டான்… யுகி இன்னும் ஆத்திரமாய் இருந்தான்….

யுகி போன பின்னால்…. தீக்‌ஷாவுக்கு இருந்த கோபத்தில் யாரோடும் பேசாமல் மாடியில் போய் படுத்துவிட்டாள்…

என்னதான் யுகி தன்னிடம் நண்பனாய் பழகியிருந்த போது… அண்ணனை விட்டுக் கொடுக்காமல் இப்படி தன்னை பேசிவிட்டானே என்று மனம் கனத்தது தீக்‌ஷாவுக்கு

விஜய் அதன் பின் ஜெயந்தியிடம்,….

“அத்தை அவ ரொம்ப டென்சனில் இருக்கிறாள்… டேப்லட் போட்டு தூங்க வச்சிடுங்க.. அவளோட வாதம் பண்ணாமல்… நீங்க சமாதானமா…. அவளுக்கு ஆதரவா பேசுங்க… கன்வின்ஸ் ஆகிடுவா” என்று போனை வைக்க…. யுகியோ

வரும் வழி முழிவதும் யுகிதான் புலம்பியபடி வந்தான்…

“எப்படிண்ணா இப்படி இருக்கீங்க… என்னால முடியல…. உன் அண்ணன் அனுபவிப்பான்னு சொன்னா… நடத்தி காட்டிட்டா….. எனக்கு அண்ணியா போனதினால மட்டும் தான் விட்டுட்டு வந்தேன்… இல்லை” கண் சிவக்கச் சொல்ல…

”அவ உனக்கு ஃப்ரெண்ட்…. அடுத்து அண்ணி…. ஆனால் அவ என்னில் பாதி….. என் மேலேயே எனக்கு கோபம் வருமா சொல்லு….. நான் இன்னைக்கு படற கஷ்டம் லாம் நான் பண்ணின தவறுகளினால மட்டும் அல்ல…. என்னோட காதல்னாலதான்…. அவளோட ஆதி அந்தமா நினைக்கிறாடா என்னை….. அதுனால தான் இந்த நிலைமையில இருக்காடா….. என்னை வெறும் தாலி கட்டின கணவன்னு மட்டும் நெனச்சிருந்தா…. இப்படி இருந்திருக்க மாட்டாடா…. அதுக்கும் மேல…. என்னைய நினைக்கிறா…..” கண்கள் மூடியபடி சொன்னவன்

“காதல்ல நான் உன்னை விட ஜுனியர் தான்…. யுகி….. ஆனால் அதோட ஆழம் உணர்ந்தவன் நான்” என்றவனை திடுக்கிட்டுப் பார்த்தான்….. தன் விசயம் தன் அண்ணனுக்கு எப்படி தெரியும் என்று…

விஜய் அப்போது கண் திறக்க வில்லை

“உன் மேல அவளுக்கு ரொம்ப பாசம் டா….. ஆர்த்திய பற்றி நானாகக் கேட்ட போதுதான் வாய் திறந்தாள்…. நீ அவ கூட UK போக என்கிட்ட எந்த அளவுக்கு பேசினா தெரியுமா… அப்போ கூட ஆர்த்தி பற்றி சொல்லாமல் தான் போராடி.. என்னை சம்மதம் சொல்ல வச்சாள்….. அவளப் போய்” என்று நிறுத்த..யுகியோ

“என்ன வேண்டும்னாலும் அவ எனக்கு பண்ணிருக்கட்டும்….. அவ மனசில எங்கோ ஒரு ஓரத்தில் உங்க மேல இருந்த வஞ்சம் போகாமல்தானே இருந்திருக்கு….. அது இருந்ததினால தான் ….. இன்னைக்கு இவ்ளோ பேசுறா….”

சமாதானம் அடையமுடியாத தன் தம்பியை வேதனையோடு பார்த்தவன்…

“எனக்கொரு ப்ராமிஸ் பன்ணிக் கொடு…. அவகிட்ட எதையும் உளற மாட்டேன்னு….. “ என்று கை நீட்ட

யுகியோ மறுத்து விட்டான் ….

“சாரிண்ணா….. என்னால ப்ராமிஸ் லாம் பண்ண முடியாது…. நான் இங்க இருந்தேன் என்றால் என்றாவது நானே அவகிட்ட எல்லாத்தையும் என்னை அறியாமல் சொல்லிருவேன்….. நான் UK போறேன்… “ என்றவன் அடுத்த 2 நாட்களிலே கிளம்பவும் செய்தான்…..

தீக்‌ஷாவுக்கு ஒரு நாள் வரை யுகியின் மேல் கோபம் இருந்தது….. ஒரு நாள் தான் அந்தக் கோபம் கூட… போன் செய்தாள் அவனுக்கு அவனோ….. போனை எடுக்கவே இல்லை… இவளும் விடாமல் அடித்தாள்….. அவனும் எடுத்தான்… வேண்டா வெறுப்பாய்

“சாரி யுகி… நான் அன்னைக்கு பேசினதெல்லாம் தப்புதான்… உனக்கு பிடிக்கலைனா உன் அண்ணனைக் கூட திட்டல… நீ மட்டும் பேசாம இருக்காதடா” என்று பேச

“தேங்க்ஸ்… உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்புக்கு…. நான் இப்போ ஏர்ப்போர்ட் போயிட்டு இருக்கேன்….. திடிர்னு கிளம்பிட்டேன்…. பாய்” என்று பட்டென்று கூறியவன் போனை வைக்க….

தீக்‌ஷாவுக்கு அவனைப் பார்க்க வேண்டும் போல் இருக்க…. தீபனை நச்சரித்து அவனோடு கிளம்பினாள்….

விஜய் கூட தீபனிடம் சொல்லிப் பார்த்தான்…. யுகி ஏற்கனவே ஏர்போட்டுக்கு வந்தாகி விட்டது…. இன்னும் சில நிமிடங்களில் கிளம்பிவிடுவான் என்று….. அதையெல்லாம் கேட்காமல் தீக்‌ஷா தீபனுடன் கிளம்ப…… அவள் கிளம்புவதைத் தடுக்க முடியாத விஜய்….. கோபத்தில் தன் அருகில் இருந்த யுகியைத்தான் முறைக்க முடிந்தது

தீனாவும் வழி அனுப்ப வந்திருந்தான் யுகியை….

இரு குடும்பத்திற்கும் யுகி-ஆர்த்தி காதல் தெரிந்து அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்……. விஜய்யின் பெற்றோருக்கு… தன் இளைய மகனாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று… யுகியின் பயணத்தில்…..ஓரளவு சந்தோசமாகவே இருந்தனர்….

தன் காதல் வெற்றி அடைந்த்தில் … யுகி சந்தோசமாகத்தான் இருக்க வேண்டும்…. ஆனால் அவனால் முடியவில்லை…. அதன் காரணம்…. தீக்‌ஷா… ஒன்று… அவளிடம் சொல்லாமல் கிளம்பியது.. மற்றொன்று அவளால் தன் அண்ணனின் நிலை….

சஞ்சலத்துடன் அன்று விமானத்தில் பறந்தவன்…. மீண்டும் இங்கு திரும்பியது…. தன் அண்ணனின் திருமண நாளின் போதுதான்…..அதிலும் சாரகேஷ் விசயம் கேள்விப்பட்டு அன்று தீக்‌ஷா சாரகேஷ் பற்றி வார்த்தைகளாய் விட்டதை நிறைவேற்றி விட்டாள் என்பதில் தான் பெருங்கோபம் கொண்டான்………….

----

யுகி கிளம்பிய சில நிமிடங்களிலே தீபன் விஜய்க்கு கால் செய்தான்………….. தீக்‌ஷா வரும் வழியில் மயங்கி விட்டாள் என்றும்,………… மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது என்றும்… மருத்துவமனையில் இருப்பதாகப் பதறிச் சொல்ல….. விஜய் வேகமாய் அங்கு சென்றான்……………. பதட்டத்தோடு…

மறுபடியும் தன்னைத் தவிக்க விட்டு கோமா நிலைக்கு மீண்டும் போய் விடுவாளோ என்று தவித்த விஜய்…. மருத்துவமனை போன போது………… தீக்‌ஷா சுய நினைவோடு இருக்க…. நிம்மதியில், அவனுக்கு போன உயிர் மீண்டும் வந்தது……..

மருத்துவர்கள் குழு… விஜய்யிடம் ஒவ்வொரு காரணம் சொன்னது…

உங்க நினைவு வராம இருக்கிறதுதான் இப்போதைக்கு அவங்களோட உயிருக்கு பாதுகாப்பு…. ஆனால் எது எதெல்லாம் அவன் நினைவை அவளுக்குத் தருகிறது என்பதை….. யாராலும் அனுமானிக்க முடியவில்லை…

விஜய் அருகில் இருந்த போது அவள் அவனை உணர வில்லை….. ஆனால் கணவனாய் அவனின் நெருக்கம்… அவனை அவளுக்கு உணர வைக்கிறது என்பதாலே விஜய் அவளை தள்ளி விலகி வந்து… தன் உணர்வுகளை எல்லாம் மறைத்து….. அவள் முன் நடமாடிக் கொண்டிருக்கிறான்…

இது தவிர…

இருவரும் சேர்ந்திருந்த புகைப்படம் பார்த்து ….விமானச் சத்தம் கேட்டு…. மயங்கியது என்று ஓரளவு தீக்‌ஷாவை பாதிக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர்….

இதுவரை அவர்கள் அறியாதது…. தீக்‌ஷாவின் நினைவுகளில் ராகேஷ் சுழலும்போது…. அவனால் அவளின் இந்தர் காதல் நினைவுகள்…. ராகேசின் நினைவுகளோடு தொடர்ந்து வருகிறது என்பதுதான்…

ராகேசின் நினைவுகள் வரும் போது தன் இந்தரின் நினைவுகளில் சுழன்றடிக்கப்பட்டு குழம்புவள்…. ராகேஷை நேரில் பார்க்கும் போது…………. அவள் நிலை என்ன ஆகும்…??????…….. பொறுத்திருப்போம் காலம் என்ன வைத்திருக்கிறது விஜய்-தீக்‌ஷா வாழ்க்கையில்………

மருத்துவமனையில் இருந்து வந்த தீக்‌ஷாவைப் பார்த்து, வழக்கம் போல…. ஜெயந்தி புலம்பித் தீர்க்க….. தீக்‌ஷா எரிச்சலுடன் தன் அறைக்கே போய் விட்டாள்…………….

யுகி சமாதானாமாகாமல் போய் விட்டானே என்ற கவலைதான் அவளுக்கு இப்போது…. யுகி பேசினால் தன்னிடம் கொடுக்கும்படி ராதாவிடம் சொல்லி வைக்க… ராதாவும் அவ்வாறே செய்தாள்….

“யுகி சாரிடா… நான் பேசியது தப்புதான்…. அதுக்காக உன்கிட்ட ஆயிரம் முறை வேணும்னாலும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்… இனி அந்த விருமா…. சாரி சாரி…. உன் அண்ணனை ஒண்ணும் உன் முன்னால திட்ட மாட்டேன் போதுமா…. என்கிட்ட பேசுடா…. சொல்லாமல் கூட போயிட்ட.. அந்த அளவுக்கு நான் வேண்டாதவள் ஆகிட்டேனா…. என்று இவள் இறங்கிப் பேசியும்… அவன் மௌனத்தையே பதிலாகத் தர…..

“உன்னைப் பார்க்க வரும்போது…. எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லடா… ஏர்போர்ட் வரைக்கு வழி அனுப்ப வந்தேண்டா.... ஆனால் உன்னைப் பார்க்க முடியல.” எனும் போதே

“எனக்கு உன் மேல கோபம் இல்லை….. ஆனால்,,, உன் ஹெல்த் ப்ராப்ளம் ரீசனாலதான்… நீ பேசுறதெல்லாம் கேட்டு என் அண்ணன் அமைதியா இருக்கிறார்….. அதை மட்டும் புரிஞ்சுக்கோ…. என் அண்ணனை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு… அது போதும் எனக்கு” என்று போனை வைத்து விட தீக்‌ஷா குழம்பினாள்….

அந்த அளவுக்கு என்ன ஆனது என்று யோசிக்க ஆரம்பித்தாள் தீக்‌ஷா… ஆக்ஸிடெண்ட் ஆன நினைவு இல்லை… ஏன் உடலில் காயங்கள் கூட இல்லை…. தனக்கு என்ன பிரச்சனை…. விஜய் கூட அந்த ரிப்போர்ட்டை தர மறுத்தானே….

பல மாதங்கள் கோமா…. அதன் பின் குணமாகி வந்த பின்… நேற்றைய மயக்கம்…. தனக்கு உண்மையிலேயே என்ன… என்று குழம்பியவளுக்கு… மண்டையில் பிரளயமே வெடிக்க… நல்லவேளையாக அவள் தாய் வர…. தன் தாய் மடியில் தலை சாய்ந்தாள்….

“அம்மா………” என்று மடியில் படுத்திருந்தவாறே தன் தாயை அழைக்க… அவள் தாயும் செவி மடுத்தாள்…

“எனக்கு என்ன பிரச்சனை………..உண்மையைச் சொல்லுங்க….. அந்த விருமாண்டி இல்லைனா நான் பிழச்சிருக்கவே மாட்டேன்ற மாதிரி எல்லோரும் அவனுக்கு கோவில் கட்டாத குறையா கும்பிடறீங்க……. அப்படி என்னம்மா பெரிய பிரச்சனை….. ஆனா எனக்கு ஏதோ நடந்திருக்குனு மட்டும் தெரியுது…. அவனும் நான் என்ன பேசினாலும் பரிதாபமாகவே பார்க்கிற மாதிரி தோணுது……. “ என்று தன் தாயிடம் மெல்ல தன் விசாரணையை ஆரம்பிக்க……..

ஜெயந்தி தன் மகளைப் பார்த்து துக்கம் தாளாமல் அழ ஆரம்பிக்க…. தீக்‌ஷா மீண்டும் எரிச்சல் ஆனாள்…

“என்ன ஏதுனு சொல்லித் தொலையாமல் எப்போ பார்த்தாலும்…. அழுதழுது இம்சைய கூட்டாதீங்கம்மா…..சொல்லுங்க…. நீங்க இப்படி டேங்க திறக்கிறது ரீசனபிளா இருக்கானு பார்க்கலாம்…” அந்த சூழ்னிலையிலும் கிண்டலாகக் கேட்க….

ஜெயந்தி அப்போதிருந்த சூழ்நிலையில் உண்மையை உளறிவிடும் மன நிலையில் இருக்க…. அப்போது

“அத்தை” என்ற விஜய்யின் குரல் கேட்க… இருவரும் அறை வாசலை நோக்கினர்

விஜய் அவள் அறை வாசலில் இவர்களின் உரையாடலை எல்லாம் கேட்டபடி நின்று கொண்டிருந்தான்…

”உள்ள வாங்க தம்பி” என்று கண்களை சேலைத் தலைப்பால் துடைத்தவள்…. எழுந்து நிற்க….

தீக்‌ஷா அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை…… விஜய்யும் அவளைப் பார்க்கவில்லை…..

”என்ன தெரியனுமாம் உங்க பொண்ணுக்கு” என்று ஜெயந்தியிடம் கேட்டபடியே அமர்ந்தவன்…. இந்த டேப்லட்ஸ்லாம் டாக்டர்ஸ் மாற்றி இருக்காங்க…. என்று பெரிய பட்டியலையே ஜெயந்தியிடம் சொல்லியபடி அதைக் காட்டிக் கொண்டிருக்க…

தீக்‌ஷா இடையிலேயே

”அம்மா….. கண்டவங்க சொல்றதெல்லாம் சாப்பிட முடியாது….. எடுத்துட்டு போகச் சொல்லுங்க…… எனக்கு ஒண்ணும் இல்லை…. ” என்று பேச ஆரம்பிக்க…. அதைக் வழக்கம் போல, சட்டை செய்யாதவனாய்

“இது உனக்கு…. படப்படப்பா வருகிற மாதிரி நீயே உணரும் போது….. போட வேண்டிய டேப்லட்ஸ்…. எப்போதும் கூடவே வைத்திருக்க வேண்டும்….” என்று தீக்‌ஷாவிடமே கொடுக்க….இன்னும் கோபமானாள் தீக்‌ஷா…. ஆனாலும்

இன்னும் இங்கிருந்தால் ஏதாவது பேசி விடுவோமோ…. என்று பயந்தவளாய்…. தன்னை அடக்கி…. அங்கிருந்து நகல…. விஜய் அவள் போவதை தடை செய்ய வில்லை……

அவள் போன பின் ஜெயந்தி விஜய்யிடம்….

“தம்பி…. எனக்கு என்ன ஆச்சுனு கேள்வி கேட்கிறாள்…. என்ன சொல்றதுனே தெரியலை….. அவள சமாளிக்க முடியலை…. உண்மையை சொல்லிடலாம் தம்பி…. அவ உங்க கூட வாழ்ந்தாலே நல்லாகிருவா தம்பி….” என்று கண்ணீரை உகுக்க…

ஜெயந்தியின் கண்ணீரில் எல்லாம் கரையாமல்… மௌனத்தையே பதிலாக்க் கொடுத்து விட்டு….. விஜய் கிளம்பி விட…. அவன் எப்போது போவான் என்று காத்திருந்த தீக்‌ஷா அறைக்குள் மீண்டும் வந்தாள்…

வந்தவள் வந்த வேகத்திலே தன் தாயின் கைகளில் இருந்த மாத்திரைக் கவரை…..பறித்து தூர எறிய…. ஜெயந்தி திடுக்கிட்டு நிமிர்ந்தாள்….

“இதெல்லாம் போட மாட்டேன் நான்…. அவன் என்னமோ பெரிய டாக்டர் மாதிரி கொடுக்கிறான்…. நீங்களும் ஒண்ணும் சொல்லாமல் வாங்கி வைக்கிறீங்க…. இதெல்லாம் போடலேன்னா நான் என்ன செத்தா போய்டுவேன்….. “ என்று உச்சஸ்தாயில் கத்த….

மகளின் இன்றைய நிலை…. பதிலேதும் சொல்லாமல் சென்ற விஜய் மேல் கோபம் என ஜெயந்தியும் ஆவேசமானாள்…

“போடு… இல்ல போடாமல் போ…. யாரு இங்க என் பேச்சை கேட்கிறாங்க….. போடலேன்னா வந்து அந்த பையனே வந்து போட வைக்கட்டும்…. என்ன கேட்ட செத்தா போய்டுவேன்னா… ஆமா…… செத்து தான் போயிருவ….. போதுமா… உன் உயிரைக் காப்பாத்தி கொண்டு வர நாங்க பட்ட பாடு தெரியுமா உனக்கு…. நீ பேசாமல் படுத்துட்ட… இப்போ மட்டும் என்ன… உயிரோட வந்திருக்க….. அவ்வளவுதான்” என்று கத்த

“அதுதான் எனக்கு என்ன ஆச்சுனு கேட்கிறேன்…. என்ன்னே தெரியாமல் இத்தனை மாத்திரை போட…. பயமா இருக்குமா…. அது மட்டும் இல்லை… இவன் கொடுக்கிறதுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா…. அவன் சரி கிடையாதும்மா…. அவன என்னால நம்பவே முடிலைம்மா…. எது பண்ணினாலும் உள் நோக்கத்தோடே பண்ணுவான்….. “ என்று விசும்ப…

“அம்மாவை நம்புடா…. உனக்கு நான் கெடுதல் செய்வேனா…..” மகள் துக்கம் தாளாமல் ஜெயந்தியும் இறங்க…. தன் தாயை அணைத்தவள்….

“உங்களை நம்புறேன்…. ஆனால் அவனை….. என்றவள் தாயின் கலங்கிய விழிகளைப் பார்த்ததும்

“சரி விடுங்க…. நான் டேப்லெட் போடறேன்…. உங்களுக்காக…. போதுமா…. “ என்றபடி…

மெதுவாய்த் தன் தாயை தன் வலைக்குள் விழ வைத்தாள்…

“விஜய் அத்தான்கிட்ட கேட்டு எனக்கு என்ன நோய்னு சொல்றீங்களா….. அப்போதுதான் எனக்கும் ஒரு பயம் வரும்…. நான் நல்லா இருக்கனும்னு கரெக்டா மாத்திரை போட்டுப்பேன்….” என்று தன் தாயினைக் கட்டிக் கொண்டே பேச….

தலை அசைத்த ஜெயந்தியும் சமாதானாமாகியபடி..

“தீக்‌ஷா… விஜய் தம்பிய…. அவன் இவன் லாம் பேசக் கூடாதும்மா…. ராதா கேட்டா எவ்வளவு வருத்தப்படுவா” என்று தீக்‌ஷாவைத் திருத்த

முறைத்த தீக்‌ஷா

“மகளப் பற்றி யோசிக்காதீங்க… எப்போ பாரு மருமகள் தான் உங்களுக்கு முக்கியம்… “ என்றவள்….

பெரு மூச்சு விட்டபடி….

“எனக்கும் இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைப்பாங்களா…. இனிமே எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது….. மாப்பிள்ளைக்கு மட்டும் இல்லை… மாமியாரையும் எக்ஸாம் வைத்துதான் செலெக்ட் செய்ய வேண்டும்…. “ என்று கண்ணடிக்க…

ஜெயந்தி திரு திருவென்று முழித்தாள்….

தன் அன்னையின் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தை கூர்மையாக நோக்கியவள்…

“என்னம்மா…. ” என்று கேட்க….

”இல்ல ஒண்ணும் இல்லை…..” என்று அவசரமாய் எழுந்த ஜெயந்தியை மீண்டும் அமர்த்தினாள் தீக்‌ஷா…

”எனக்கு வேறொரு டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிக்க தெரியாதாம்மா….. உங்களுக்குத் தெரிஞ்ச விசயத்தைச் சொல்லுங்கம்மா… நான் மேரேஜ், மாப்பிள்ளை…மாமியார்னு சொன்னவுடனே உங்க முகம் டோட்டலா மாறிருச்சு…. சொல்லுங்கம்மா…. என்னைக்காவது தெரியத்தானே போகுது… எனக்கு என்னம்மா….” என்று கண்கலங்கினாள் தீக்‌ஷா,….

முதன் முதலாய் தன் உயிர் பற்றிய பயம் அவளுக்கு வந்திருக்க…. அது தீக்‌ஷாவின் கண்களில் அப்பட்டமாய் தெரிந்த்து….

‘உனக்கு ஒண்ணும் இல்லைடா” சமாளிக்கப் பார்த்தாள் அவள் அன்னை….’

“அம்மாமாஆஅ” என்று இவள் கெஞ்ச….

ஜெயந்திக்கு சக்திக்கு இருந்த நோயின் பெயர் நன்றாகத் தெரியும்….. மகளுக்கு அந்த நோயைப் பற்றி தெரியப் போவதில்லை….. அதைச் சொல்லி வைக்கலாமா…. என்று யோசித்தவளுக்கு அதைச் சொல்லவே வாய் வர வில்லை…..

ஆனால் விஜய் அவனோடு தன் மகளை கூட்டிச் செல்லாத வரையில் மகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே….. இதோ நாளைக்கே ஏன் எனக்கு திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது…. விஜய்யும் சொல்ல மாட்டான்… சொல்லவும் விட மாட்டான்…… இவளிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது நான் தானே என்று விஜய் மீது அதிருப்தி கொண்ட ஜெயந்தி…. அந்த மன நிலையிலேயே சக்திக்கு இருந்த நோயின் பெயரைச் சொன்னவள்…. இப்போது கவலைப்படத் தேவையில்லை…. தீக்‌ஷா அபாயக்கட்டத்தை எல்லாம் கடந்து வந்து விட்டாள் என்று சொல்லிச் சென்று விட்டாள்……

தீக்‌ஷாவுக்கு அந்த பெயரே தெரியவில்லை………….விபரமும் புரியவில்லை…. தாய் சொல்லவிட்டால் என்ன…. அவள் சொன்ன பெயரை வைத்து………….. நெட்டில் ஆராய்ந்தவளுக்கு… அந்த நோயின் கொடூரம் புரிய…… தன் தாய் ஏன் சொல்லாமல் மறைக்கிறாள் என்பதும் புரிய…… தன்னை மீறி தனக்காகவே அழ ஆரம்பித்தாள் தீக்‌ஷா….

தான் இன்னும் சில காலம் தான் வாழப்போகிறோம் என்று உணர்ந்தவளுக்கு…. உயிரின் மதிப்பு புரிய…. யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளே மருகினாள்… ஜெயந்தியிடம் கூட அதன் பிறகு அதைப் பற்றி விசாரிக்க வில்லை…. உயிர் பயம் வந்த பிறகு…. மாத்திரைகளை எல்லாம் போட பிடிவாதம் பிடிக்க வில்லைதான்….

ஒருவாரம் தன் நிலையை எண்ணி வருந்தியவள்…. அதன் பிறகு…. தன் சுய பரிதாபத்தில் இருந்து வெளியே வந்தவள் இனி என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்………..

அதன் தீர்வு….. இந்த தனிமையை விட்டு வெளியே வருவது….. அதற்கு வேலைக்கு போகலாம் என்று நண்பர்களிடம் விசாரிக்க…

அனைவருக்கும் தீக்‌ஷா நிலைமை தெரியும் என்பதால்……… தயங்கினர் என்பதே உண்மை…..

பேசிய அனைவரும் பரிதாபமாய் பேசியே அவளைக் கொல்ல….. தீக்‌ஷா அவர்களைத் தவிர்த்து….. தானே வேலை தேட தீர்மானிக்க…. வழக்கம் போல் விஜய் அவளின் முடிவுக்கு முட்டுக்கட்டையாக நின்றான்….

1,913 views

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

© 2020 by PraveenaNovels
bottom of page