அத்தியாயம் 14:
அடுத்த நாள் காலை சாரகேஷ் வழக்கம் போல கிளம்பிக்கொண்டிருக்க……….. அண்ணா எனக்கு பெட்ரோலுக்கு இந்த மாசத்தில் இருந்து பட்ஜெட் அதிகமாகும் என்றபடி தன் முன் வந்து நின்றவளைப் பார்த்து
சிரித்த சாரகேஷ்……
“சுத்தி வரச் சொன்ன உங்க பாஸ்கிட்டேயே எக்ஸ்ட்ரா சார்ஜ் வாங்கு… என்கிட்ட கேட்கிற” என்று கிண்டல் செய்ய…….
“அண்ணா” என்று கொஞ்சியவளாய் இருவரும் சாப்பிட அமர…..பார்வதி யோசனையுடனே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்…..
சாரகேசிடம் நேற்று வந்தவுடனே நடந்ததெல்லாம் சொல்லி இருந்தாள் பார்வதி…. அதனால் சாரகேஷ்…..
“பாரு….என்னடா யோசனையிலே இருக்க……….. தீக்ஷா பற்றி யோசிக்கிறாயா…” என்று வினவ
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்………… ஆமாம் அண்ணா………. எனக்கு அவ நினைப்புதான்…………. எனக்கு கொஞ்சம் பயமாயிருக்குணா……………. நேத்து அவ மயங்கி விழுந்து அவ துடிச்சதை பார்க்கும் போது அவளுக்கு ஏதோ பயங்கரமா நடந்திருக்குன்னா…………அதுவும் ஃப்ளைட் சத்தம் தாங்க முடியாம அவ துடிச்சதை நீ பார்த்திருக்கனும்…… சத்தியமா என்னால தாங்க முடியலண்ணா……..” என்றபடி………
“ஃப்ளைட்டுக்கும் அவளுக்கு என்ன சம்பந்தமா இருக்கும் …….. ராகேஷ் ஃபாரின்ல இருந்தார்னு தானே சொன்னா………… அவளுக்கு ராகேஷ் கூட மேரேஜ் ஆகியிருக்குமோண்ணா…………. ” என்று கேள்விக்குறியாய் நிறுத்தியவள்
“அவருக்கு ப்ளைட் ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்குமோ………… இவ அதுனால இப்டி ஆகிட்டாளாஅ…….. அப்டி இருக்குமோ…. இப்டி ஆகி இருக்குமோனு எனக்கு மண்டையே வெடிக்குதுண்ணா………… நைட் வீட்டுக்கு வந்தவுடனே லாஸ்ட் இயர் ஏதாவது ஃப்ளைட் ஆகிஸ்டெண்ட் ஆகி இருக்கான்லாம் பார்த்தேன்……….. அந்த அளவுக்கு நான் டிஸ்டர்ப் ஆகிட்டேன்… என்று சொல்ல……..” சாரகேஷ் அவளின் தீவிரத்தை உணர்ந்து
“ஹேய் பாரு………….ஏன் இப்டி குழப்பிக்கிற நீ…………….” என்று கேட்க
“இல்லண்ணா………. நேத்து அவ துடிச்சதை பார்த்துருக்கணும் நீ…………. அந்த விஜய் கூட பதறிப் போய்ட்டாரு………….” என்றபடி சாப்பாட்டை கைகளால் அளந்தவள்
“அண்ணா………… இண்டெர்னேசனல் ப்ளைட் ஆக்ஸிடெண்ட் எதுவும் லாஸ்ட் இயர் நடக்கலை அண்ணா………… ஆனா ஒரு ஃப்ளைட் ஆகிஸ்டெண்ட் நடந்திருக்கு…. அதுவும் இந்தியாக்குள்ள……….. உனக்கு தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்………..” என்று சொல்ல
“ஆமாம்……….. டெல்லி போன விமானம்……….. எல்லோருமே இறந்துட்டாங்க……….”. என்று வருத்தமாய்ச் சொல்ல…….
“எனக்கென்னமோ டவுட்டா இருக்குண்ணா………. அதுதான் என் ஃப்ரெண்ட்கிட்ட………… அதுல இறந்தவங்க லிஸ்ட் எல்லாம் கேட்ருக்கேன்………… 2 டேஸ்ல தரேனு சொல்லி இருக்கா……. ஏண்ணா……... தீக்ஷாவுக்கு மேரேஜ் ஆகிருக்குமோ…..” என்று கவலையோடு கேட்க
சாரகேஷ் நிமிர்ந்து பார்த்து………..
“ஆகி இருக்கலாம்……. ஏன் பாரு நீ உன்னை இவ்ளோ குழப்பிக்கிற ………… “
“ப்ச்ச இல்லண்ணா…………. தீக்ஷா ரொம்ப ஜாலியான பொண்ணுண்னா………… இப்போ அவ சந்தோசமா இல்ல……… அவ மனசுக்குள்ள ஏதேதோ போராட்டம் அண்ணா……. அவகூட பேசுறதுலயே தெரியுது………….. பேசிட்டே இருக்கா……….. திடிர்னு அமைதி ஆகிறா………….. அவளுக்குள்ள என்னமோ இருக்கு………….. என் கூட ஸ்கூல்ல படிச்சா தீக்ஷாவானு கூட சந்தேகமா இருக்கு…..அந்த அளவு அவ கேரக்டர் கொஞ்சம் டிஃபெரெண்ட் ஆகி இருக்கிற மாதிரி இருக்கு…………… முதலில் எல்லாம் அவ பேச்சில் ஒரு துள்ளல் இருக்கும்…… எதையும் நினைக்காம சட்டு சட்டுனு பேசுவா…. ஆனா இப்போ அவ பேச்சுல அது மிஸ்ஸிங்…… யோசிச்சு யோசிச்சு பேசுறா…. ஆனா முன்ன இருந்த தீக்ஷாவா இருக்க ட்ரை பண்றா…… அது அவளோட நடவடிக்கைலையே தெரியுது…… உனக்கு டிஃபெரெண்ட் தெரியுதாண்ணா” என்று சாரகேஷை கேள்வியாய் நோக்க
”அவளைப் பார்த்து 7 வருசம் ஆகி இருக்கும் போது கண்டிப்பா சேஞ்ச் ஆகி இருப்பாதான்………. இதில் என்ன ஆச்சரியம் இருக்கு……… அவளும் உன்கிட்ட கூட டிஃபெரெண்ட் உணர்ந்திருப்பா பாரு……….. நீண்ட நாளைக்குப் பிறகு நாம யாரைப் பார்த்தாலும் இந்த ஃபீல் வரும்மா……….. பேசுவதில் கொஞ்சம் தயக்கம் கூட வரும்……….. அதுமட்டும் இல்லை…… அவளோட உடல்நலக் குறைவும் அவளோட அமைதிக்கு காரணம்னு சொல்லலாம்……… ”என்று சொல்ல
“புரியுதுண்ணா………” என்று சொன்னவள்……….. அடுத்து ஏதோ பேச ஆரம்பிக்க……….. அவர்களின் அன்னை அருகில் வர………… இருவரும் பேச்சை மாற்றினர்
நேற்று சுரேந்தருடன் வந்திருந்ததால்……… அவள் ஸ்கூட்டி அலுவலகத்திலேயே இருக்க… இருவருமாய்க் காரில் கிளம்ப…….காரை ஓட்டி வந்த சாரகேஷைப் பார்த்த பார்வதி…. தன் அண்ணனையே பார்த்தபடியே வந்தாள்……..
“அண்ணா……….. தீக்ஷா இப்போவும் உன் மனசுல இருக்காளாண்ணா…. ஒருவேளை அவளுக்கு மேரேஜ் ஆகி இருந்தது என்றால்……….. வருத்தப்படுவியா” என்று கேட்க
சற்று நேரம் அமைதியாய் வந்த சாரகேஷ்……. அவளைப் பார்க்காமலே பேச ஆரம்பித்தான்
“முதல் காதல் என்னைக்குமே அடி மனசுல இருக்கும்மா……… எல்லோருக்கும் அதில் ஜெயிக்கிற பாக்கியம் கிடைக்காது………..” என்று சொன்னவன் முகத்தில் பெரியதாய் வருத்தம் இல்லைதான்……
தங்கையின் முகத்தைப் பார்க்க………… அவள் யோசனையில் இருக்க……
“அதுவும் ஒருதலைக் காதல்……….. கொஞ்ச நாள் வருத்தமா இருந்துச்சு………. அதுக்கப்புறம் மறந்துட்டேன்……. மறந்துட்டேனு சொல்றதைவிட………. விட்டுட்டேன்……… ஏனென்றால்… அப்பாவோட மரணம்….. அதிலும் படிப்பின் இடையிலே நம்ம அப்பா இறந்துட்டாரு….. மகனா,அண்ணனா பொறுப்புகள் வந்த போது…… காதல் எல்லாம் பின்னால் போய் விட்டது….. அதன் பிறகு……. வேற யார்க்கிட்டயும் அந்த எண்ணங்கள் தோன்றவில்லை” என்று சொல்லும் போதே அவனுக்கு அகல்யா ஞாபகமும் வராமல் இல்லை………..
“இப்போ மறுபடியும் அதே பொண்ணப் பார்த்தாலும்……… முதலில் அவளிடம் இருந்த அந்தக் காதல் இல்லை………… ஆனா அவ நல்லா இருக்க வேண்டும்….. அவ வாழ்க்கைல எந்த பிரச்சனையும் நடந்திருக்கக் கூடாதுனு மனசு துடிக்குது… அதை விட பெருசா ஒண்ணும் தோணலை” என்றவனிடம்
”அந்த விஜய்…. தீக்ஷா மேல ரொம்ப அக்கறையா இருக்காண்ணா……………. விஜய் அவள ரொம்ப ப்ரொடெக்ட் பண்றார் அண்ணா……”. ஆனால் என்று மென்று முழுங்கியவள்
“அவ அந்த நிலைமையில இருக்கா………. அவள தூக்க ரொம்ப யோசித்தார் தெரியுமா………… ” என்று கூற
”ஒருவேளை அவளைத் தூக்கறதுக்கும் ஸ்டேட்டஸ் பார்த்திருப்பானோ என்னவோ……” என்று சாரகேஷ் எரிச்சலாய்ச் சொன்னவன்….. தங்கையின் பார்வையில்
“சரி சரி முறைக்காத………. தீக்ஷா சொல்றத வச்சுப் பார்க்கும் போது அவன் மேல பெருசா அவளுக்கும் விரோதம் இல்லை………. தன் குடும்பத்தில அவன் மூக்கை நுழைக்கிறான் அதுதான் அவளுக்கு பிடிக்க வில்லை…….. மற்றபடி அவ அத்தானை அவளும் விட்டுக் கொடுக்கலை……………… அதுனால……….இப்போதைக்கு நீ இதப் பத்தி எல்லாம் யோசிக்கிறத விட்டுட்டு….. “ என்று நிறுத்தியவன்
“சீக்கிரம் வேற கம்பெனிக்கு ட்ரை பண்ணலாம்னு நினைக்கிறேன்………. நீ விஜய்கிட்ட வேலை பார்க்கிறது பிடிக்கவில்லை…………….. அவன எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை……. அவன மட்டும் இல்லை அவன் தம்பினு ஒருத்தன் வந்தானே…… அவனையும் தான் பணத்திமிர் அவனுங்க ரத்ததிலேயே ஓடுது போல………… ஒரு முறைதான் ரெண்டு பேரையும் பார்த்திருக்கேன்….. எனக்கே இப்டி இருக்குனா……….. தீக்ஷாவ நினைத்துப் பார்….” என்று கசப்பாய்ச் சொல்ல
அதிர்ந்தாள் பார்வதி………….. ”சுரேந்தர் கோபப்பட்டான் தான் ஆனால் அதன் பிறகு தன்னோடு பேசிய முறையில் அவனை பணத்திமிர் பிடித்தவன் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை……. ஏன் விஜய் மேல் கூட அவளுக்கு அந்த அளவு பயம் இல்லை எனலாம்…….. நேற்று கூட கோபம் இருந்தும்….. அவளை அவன் திட்ட வில்லையே” என்றெல்லாம் சிந்தனையில் உழன்றவள்
சாரகேஷிடம் எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் வெளியில் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்…….பின் தன் அண்ணனை நோக்கி……
“விஜய்க்கு மேரேஜ் ஆகலைனு தீக்ஷா சொல்றாண்ணா………….. எதை யோசிக்கிறதுனே தெரியலை…. தீக்ஷாவைப் பார்த்து ஒருவாரம் கூட ஆக வில்லை….. இவ்ளோ குழப்பம் எனக்கு…….” என்று சொன்னவள்….. வெளியில் சொல்லாமல்
“இதுல நேற்றிலிருந்து சுரேந்தர் ஞாபகம் வேறு…… ” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்…
”அண்ணா உனக்கு தீக்ஷாவை பார்த்ததும் அது காதல்னு எப்டி கன்ஃபார்ம் பண்ணின” என்று மெதுவாய்த் தயங்கிக் கேட்க
தங்கையை கொஞ்சம் கலக்கமாகப் பார்த்தான் சாரகேஷ்……..
“ஏன் கேட்கிற………..” என்று கேட்டபோதே அவன் கவலை தோய்ந்த முகம் பார்வதிக்கும் புரிய…… தன் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வந்தவள்
“சும்மாதான்………….ஒரு ஜென்ரல் நாலெட்ஜுக்குதான்” என்று கண் சிமிட்ட…. சாரகேஷ் இப்போது… காரை நிறுத்தினான்…….
“ ’பாரு’ நீ தீக்ஷா விசயத்தில் ரொம்ப குழம்பி இருக்கேனு நினைக்கிறேன்….. தீக்ஷா பற்றி நீ குழம்பி…. அவளையும் குழப்பி விட்ராத……… அந்த விஜய்யப் பற்றி நானும் விசாரிக்க வேண்டும்…… ஆனால் அடுத்த வாரம் எனக்கு ஒரு கேம்ப் இருக்கு…….. அது முடிந்த பின்னால்தான் தீக்ஷாவைப் பற்றி யோசிக்க வேண்டும்….. இப்போதைக்கு அவளுக்கு உடல் நலத்தில் பெரிதாக பிரச்சனை இல்லை….. அந்த வகையில் நிம்மதி எனக்கு…. ஆனால் ஏன் விஜய் அவளை அப்படிச் சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறான்…. அது தீக்ஷா குடும்பத்திற்கு தெரியுமா……….. இதெல்லாம் கேள்விக்குறியா இருக்கு….. கொஞ்சம் பொறுமையா அவ விசயத்தில் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறிய சாரகேஷிடம்…. சரி என்று தலை ஆட்டினாள் பார்வதி….
ஆனாலும் அவள் குழப்பம் தீக்ஷா மட்டும் இல்லை என்பதை உணர்ந்த சாரகேஷ்….. சற்று கிண்டலுடன்
“ ’பாரு’ ………….. காதலை எப்டி கன்ஃபோர்ம் பண்ணேனுலாம் கேட்கிற………… என்னவோ சரி இல்ல நீ ………..” என்று ஆரம்பித்து………… ”என்ன உனக்கு ஏதாவது கன்ஃபார்ம் பண்ண வேண்டுமா” என்று முடிக்க
பார்வதி சுதாரித்தபடி……….
“டவுட் கேட்கக் கூடாதே…….. உடனே திருப்பி விட்ருவீங்களே” என்று சிரிக்க………… அதன் பிறகு அண்ணனும் தங்கையும் வேறு விசயங்களை பேச ஆரம்பித்தனர்…… .
பார்வதி தன் அலுவலகத்தில் இறங்கிக் கொள்ள……….. சாரகேஷ் மருத்துவமனை நோக்கி சென்றான்….. அவனுக்குள்ளும் பல குழப்பம்தான்……….ஆனால் பெரியதாக இல்லை…… அடுத்த நாள் சுரேந்தரைப் பார்க்கும் வரை தீக்ஷா விஷயத்தில் தடுமாறாமல் தெளிவாகத்தான் இருந்தான் அவன் ………..
-----------------
சாரகேஷ் மருத்துவமனையை அடைந்த போது தன் குழப்பங்களை எல்லாம் ஒத்தி வைத்து விட்டு…. மருத்துவனாய் மாறி இருந்தான்.
அவனின் இன்றைய பணிகளை யோசித்தபடியே…… தன் அறைக்குள் நுழைய…… அங்கு அகல்யா அமர்ந்திருந்தாள்….
அகல்யா……. அவனை கடந்த 2 வருடங்களாக காதலிப்பவள்……………. அதற்கு முன் 1 வருடம் தோழியாக பழகியவள்……….
அவளைப் பார்த்து புருவம் உயர்த்தியவன்……..
“ஹாய் அகல்யா” என்று சொல்லியபடி
“என்ன மேடம் காலையிலேயே இந்தப் பக்கம்” என்று சிரிக்க……….. அவன் சிரிப்பை தனக்குள் உள்வாங்கிய அகல்யா………….. அவனைப் பார்த்து சிரிக்கவில்லை………… அவன் வரவேற்பையும் கண்டுகொள்ள வில்லை…………
அதிரடியாக ஆரம்பித்தாள்…………..
“சாரகேஷ்…………… நீங்களும் நானும் டீன் ஏஜ் பசங்க இல்ல…….. கண்ணாமூச்சி ஆட்டம் ஆட………. நான் ஏற்கனவே உங்களைப் பிடிக்கிறது என்று சொல்லி விட்டேன்……… எனக்குப் பதில் என்ன” என்று பட படவென்று கேட்டவளை அமைதியாகப் பார்த்தான் சாரகேஷ்
”டீன் ஏஜ் பையன் இல்லை நானும்………… எனக்குப் பிடிக்கலைனு சொல்லலை இது ஒத்து வராதுனு விலகிட்டேன்..............”
”அதுதான் ஏன்னு கேட்கிறேன்…….” என்று சொல்லும்போதே குரல் கம்ம ஆரம்பித்தது…….
”ப்ச்ச் எல்லாத்துக்கும் விளக்கம் சொல்ல முடியாது…… உனக்கு ஏன் என்னைப் பிடிச்சுருக்குனு உன்னால சொல்ல முடியாதது மாதிரி…… ஏன் இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு……….. இப்டி வந்தவுடனே என்கிட்ட குதிக்கிற….. இவ்ளோ டென்சன் ஆக மாட்டியே” என்றவனின் அருகில் நெருங்கி நின்று அவன் கண்களைப் பார்த்தபடி பேச ஆரம்பித்தாள்…..
இதுவரை அவள் இவ்வளவு அடாவடியாகவெல்லாம் நடந்ததில்லை…. அவள் கோபம் புரிந்து சாரகேஷ் விலக முயல்….
அவளை விட்டு அவன் விலக எத்தனித்த போதும் விடாமல் அவன் கைகளை பிடித்தவளின் கண்களில்…. கோபம் போய் இயலாமை வந்திருந்தது…..
“அப்பா மேரேஜுக்கு அவசரப்படுத்துறார் சாரகேஷ்………… எனக்கும் அவர் 1 இயர் டைம் கொடுத்துட்டார்………..உங்க கிட்ட கூட பேசினாரு………. ஏன் என்னைப் பிடிக்கலை…………. சொல்லுங்க………..” என்று தளுதளுத்தவள்
”நாளைக்கு எனக்கு டெல்லில ஒரு கான்ஃப்ரென்ஸ் இருக்கு………… அது முடிச்சுட்டு வந்த பின்னால் எனக்கு உங்க கிட்ட இருந்து பாஸிட்டிவ் பதில் வேண்டும்…. நான் என் அப்பாகிட்ட சொல்லனும்….. உங்க தங்கச்சி மெரேஜ் முடிந்த பின்னால் கூட நம் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்……” என்று தன் போக்கில் சொல்லிக் கொண்டே போனவளை ஆழமாய்ப் பார்த்தவன்
“என்ன மிரட்றியா” என்று கேட்க
”எப்டி வேண்டுமென்றாலும் வச்சுக்கோங்க………… இங்க ஒருத்தியோட மனசை புரிஞ்சுக்கவே முடியல …. நீங்களாம் ஹார்ட் சர்ஜன்னு வெளில சொல்லிடாதீங்க…. ” என்று சொன்னவள்
“ஒருவேளை உங்க வைஃபும் ஹார்ட் சர்ஜனா இருக்கனும்னு எக்ஸ்பெக்ட் பண்றீங்களா சாரகேஷ்” என்று கேட்க
“அகல்யா……… ப்ளீஸ்……….. ஏன் இப்டிப் பேசுற………..” என்றபடி…………
“மேகசின்ல ஆர்டிக்கிள் எழுதப் போறேனு சொல்லிட்டு இருந்த எப்போ ஸ்டார்ட் பண்ணப் போற………. போட்டோஸ்லாம் கலெக்ட் பண்ணிட்டியா…………“ என்று பேச்சை மாற்ற…………..
”பேச்சை மாத்தறீங்களா சாரகேஷ்………. அதுவும் என்கிட்டேயாவா…….” என்று கேட்டவள்…..
“கொஞ்சம் இதயத்தை மாத்தறதைப் பற்றியும் யோசிங்க……….” என்று சொன்னவள்…… அதே வேகத்தில்….
“ஹலோ….. டாக்டரா….. இதயத்தை மாத்துறதை பற்றி யோசிக்க ஆரம்பிச்சிராதீங்க….. இந்த அகல்யாவோட காதலனா இதயத்தை மாற்றுவதைப் பற்றி யோசிங்க……..” என்று கண்ணடிக்க…………
சாரகேஷ் அழுத்தமாய் முறைக்க அதைக் கண்டுகொள்ளாமல்…..
”மண்டே நல்ல பதில் எனக்கு வேண்டும்…………. இல்லை ஸ்ட்ரைட் அட்டாக்தான் உங்கள இல்ல…… என் வருங்கால மாமியாரை” என்று சொல்லிப் போனவளை
சற்று எரிச்சலோடு பார்த்த சாரகெஷ்………..
“ஒருதடவை சொன்னால் புரியாதா இவளுக்கு…………” என்றபடி நோயாளிகளைப் பரிசோதிக்க…. தன் அறையை விட்டு வெளியேறினான்.
------------------------
அன்றைய பொழுது யாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் தராமல் அமைதியாகவே கழிய……….
அடுத்த நாள் தீக்ஷாவும் பார்வதியும் அலுவலகத்தில் வெட்டி அரட்டையுடன் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்
தீக்ஷா வழக்கம் போல் க்ளைண்ட் மெயிலை எல்லாம் டெலீட் செய்ய………….. பார்வதி முறைத்தாள்……
“எதுக்குடி உனக்கு இந்த வேலை………… எல்லாம் முக்கியமான மெயில் தீக்ஷா…. என்றவளிடம்
சிரித்தவள்……… அதையெல்லாம் பெர்மெனண்ட் டெலிட் பண்ணலைல………….. விருமாண்டி ரீஸ்டோர் பண்ணிருவான்…………. ஏதோ நம்மளால் கொடுக்க முடிந்த சின்ன சந்தோசம்” என்று குறும்பும்…. கடுப்பும் கலந்து சொன்னவள்………
“வேலைக்கு போகலாம்னு பார்த்தா இந்த ஆஃபிஸ்ல கொண்டு வந்து அடச்சுட்டான்……… அதுதான்……… போடி……. எனக்கு பிடிக்கவே இல்லை…………” என்று புலம்ப ஆரம்பித்தவளிடம்
”உன் ஃப்ரெண்ட்ஸ் யார்கிட்டயும் பேச மாட்டியா……….” என்று பார்வதி கேட்க……….
”காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட அப்போப்ப பேசுவேன்………. ஆஃபிஸ் ஃப்ரெண்ட்ஸ்லாம் பேசுவாங்க……… இப்போ எப்டி இருக்கேனு கேட்டு கேட்டுக் கொன்னுட்டாங்க…….. நானே கொறச்சுகிட்டேன்……… யுகி செம கம்பெனி எனக்கு………… ஆனால் எனக்கும் அவனுக்கும் இந்த விஜய் அத்தான் விசயத்தில் சண்டை வந்துருச்சு………….. சொல்லாமக் கூட Uk க்கு போய்ட்டான் என்றவள்……….. இப்போ உன்னைப் பார்த்த பின்னால ஏதோ மனசு லேசானது மாதிரி இருக்கு…………. ஆர்த்தி கூட Uk லதான் இருக்கானு நினைக்கிறேன்……….. தலைவர் அவ பின்னாடியே கிளம்பிட்டார்……… இந்த தொல்லைங்களாம் இல்லாம நிம்மதியா லவ் பண்ணுவான் பையன்……………” என்று யுகியின் ஞாபகங்களில் திளைத்தவள்……….
“ரொம்ப நல்ல பையன் ‘பாரு’ அவன்……….. எல்லார்கிட்டயும் ஈசியா பழகிருவான்” என்று அவன் பெருமை பாட
பார்வதிக்கோ………….. சுரேந்தர் பற்றி எதுனாலும் சொல்றாளா இவ….. ஒண்ணு விஜய்யை வசை மாரி பொழியுறா…………. இல்ல அந்த யுகிக்கு புகழ் மாலை சூட்டுறா….. இடையில் இருக்கிற நம்ம ஆளப் பற்றி ஒண்ணும் சொல்ல மாட்டேன்கிறாளே” யோசிக்க
திடுக்கிட்டாள் பார்வதி… நம்ம ஆளா…….. சுரேந்தரா….. மனம் செல்லும் திசை அறியாமல்……….. குழம்ப ஆரம்பித்தாள்……….
கிட்டத்தட்ட 3 மணி அளவில்………….
தீக்ஷா பார்வதியிடம்………. ஷாப்பிங் போகலாமா என்று கேட்க………… மிரண்டாள் பார்வதி……
“ஆள விடுடி……….. நீ என்கூட வர்றதையே ஃபாளோ பண்ணிட்டு வர்றாங்க…………. வேண்டாம்மா………. நீ புலம்புனியே பிரைவசி கூட இல்லை…. யாரோ என்னை வாட்ச் பண்ணிட்டே இருக்காங்கனு……… அந்த நிலைமைல தான் நானும் இருக்கேன்… அது மட்டும் இல்லை…. அன்னைக்கு நீ மயக்கம் போட்டு விழுந்தாயே…அது வேற பயமா இருக்கு” என்று சொல்ல…………
”சரி சரி விடு அரசியல்ல அதெல்லாம் சகஜம்…………” என்று சொல்லியபடியே………… ”போகலாமா” என்று கெஞ்சலாய்க் கேட்ட தீக்ஷாவிடம்
”வேண்டாம் தீக்ஷா………. “ என்று பார்வதியும் அடம் பிடிக்க……….. தீக்ஷா அவளருகே வந்தாள்……….
அவள் அருகே வருவதை பார்த்த பார்வதி………..அவள் என்ன செய்யப் போகிறாள்……. என்பதை உணர்ந்து…… சட்டென்று தன் கன்னங்களை இரு கைகளால் மறைத்தபடி…….. வேகமாய்
“வர்றேண்டி……… முத்தம் கித்தம் கொடுத்து தொலச்சுராத………….. இது என்னடி இப்படி ஒரு பழக்கம்” என்று கேட்க
சிரித்தபடி விலகினாள்….. தீக்ஷா…..
“அது அந்த பயம் இருக்கட்டும்…….. இதை ஏற்கனவே சொல்லி இருக்கலாம்ல……..” என்றபடி
“சுனந்தா கூட பழகிப் பழகி இந்தப் பழக்கம் வந்துருச்சு” என்று சொல்லி சிரித்தவளிடம்….. பார்வதி சிரிப்போடு…..
“சுனந்தாக்கு கொடுத்து பழகுன மாதிரியே எனக்குத் தெரியலயேடி……….” என்று கிண்டல் அடித்தவள்….
“ஆனா ஆஃபிஸ் முடிந்த பின்னால்தான் வருவேன்” என்று கொஞ்சம் பொறுப்பாகவும் சொல்ல……..
“உன் கடைமை உணர்ச்சி… இருக்கே பார்வதி……. அப்டியே புல் அரிக்க வைக்குது எனக்கு” என்று தீக்ஷா ஓட்டிக் கொண்டிருக்கும் போதே
போனும் அடித்தது…………..
இருவரையும் விஜய் தனது அறைக்கு அழைத்திருந்தான்……
அவன் முன்னே நின்ற இருவரிடமும்………
“வீட்டுக்கு கிளம்புங்க………… எனக்கு முக்கியமான வேலை இருக்கு…….. நான் இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பியிருவேன்……….”. என்று பார்வதியைப் பார்த்துச் சொல்ல………..
தன்னைப் பார்க்காமல் பார்வதியிடம் பேசிக் கொண்டிருந்த விஜய்யிடம்….. வேறு வழி இன்றி…
”விஜய் அத்தான்” என்று அழைத்தாள் தீக்ஷா…… முடிந்த வரை அவனிடம் அத்தான் என்ற வார்த்தையைத் தவிர்க்கத்தான் நினைப்பாள் தீக்ஷா………… அவள் தன்னை அழைப்பதை கேட்டவுடன் பார்வதியிடம் இருந்த பார்வையை அவளிடம் மாற்றியவன்……… கேள்வியாய் அவளை நோக்க…..
“நான் ’பாரு’ கூட ஷாப்பிங் போகவா“ என்று கெஞ்சலாய்க் கேட்க…………
அவளின் கெஞ்சலில் விஜய் கொஞ்சம் அதிர்ந்து பார்க்க……….
தீக்ஷா அதை உணர்ந்தவளாய்
“உன்கிட்டலாம் கெஞ்ச வேண்டிய நிலைமைடா எனக்கு……….” என்று உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்க….
விஜய்யோ………..
தன் முன் நின்று கெஞ்சலாய்ப் பேசியவளின் பேச்சில்…. மிஞ்ச ஆரம்பித்த மனதையும்……. அவளின் கோரிக்கையை மறுக்கத் துடித்த உதடுகளையும்…. மறுத்தால் கிடைக்கும் பரிசுக்காக ஏங்க ஆரம்பித்த கன்னங்களயும்………. அடக்கும் வழி தெரியாமல் மன்றாட ஆரம்பித்து இருந்தான்…….. உடலும்……….. மனதும்………… சேர்ந்து………… அவனைப் பந்தாட ஆரம்பிக்க………….
தன் முன் நிற்கும் இருவரும் தன் பதிலுக்காக காத்திருக்கும் நிலைமை உணர்ந்து….. தன்னை……. தன் உணர்ச்சிகளை….. கட்டுக்குள் கொண்டு வந்து……….. தன் பார்வையை மாற்றி…… மானிட்டரில் வைத்தபடி
”போ………….. புதுசா என்கிட்ட பெர்மிஷன்லாம் கேட்கிற………. அதுவும் பவ்யமா……. நான் வேண்டாம்னா கேட்கவா போற” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே……………..
அதே நேரத்தில்………… விஜய் அலுவகலத்தில் வேலை பார்க்கும் ஸ்டாஃப் உள்ளே வந்தான்… வந்தவன் கொஞ்சம் படபடப்பாயும்…. அதே நேரத்தில் சந்தோசமாகவும்…… இருந்தான்
“சார்………. எனக்கு உடனே பெர்மிஷன் வேண்டும்……. 2 நாள் லீவும் வேண்டும்” என்று வந்தவன் கேட்க
”எடுத்துக்கங்க….. என்ன எதுவும் சீரியஸா…… மூர்த்தி….. இவ்ளோ படபடப்பா இருக்கீங்க…… “
”சீரியஸ்லாம் இல்லை சார்………… வைஃப்ஃபுக்கு டெலிவரி ஆகிவிட்டது……….. சொன்ன டேட்டுக்கு முன்னாலே குழந்தை பிறந்திடுச்சு………. வரச் சொன்னாங்க……..” என்று அவனிடம் சொல்ல………..
விஜய்………… அவனிடம்…….. வாழ்த்துக்களைத் தெரிவிக்க……… தீக்ஷாவும் பார்வதியும் விஜய்யைத் தொடர்ந்து தங்கள் வாழ்த்துக்களைச் சொல்ல…… மூர்த்தி விடை பெறப்போகும் போது விஜய் கேட்டான்
“இது உங்க முதல் குழந்தையா” என்று கேட்க
“ஆமா சார்” என்றவனிடம்
”சும்மா கேட்டேன்…… நீங்க போய்ட்டு வாங்க…………. நெக்ஸ்ட் வீக் முழுவதும் லீவ் எடுத்துக்கங்க……” என்று சொன்னவனின்……… மனமும் ஒரு கணக்குப் போட அது ’9’ க்கும் மேல் தாண்ட….. விஜய் மனம் கனத்தது……….. அப்படியே அமைதியாகி பின்னால் சாய்ந்தவனை……….. தீக்ஷாவின் குரல் கலைக்க………… நிமிர்ந்து அவளை பார்த்தான்……….
“அத்தான்…………. ப்ளீஸ்………… எனக்குப் பதில் சொல்லுங்க………… அம்மா போகச் சொன்னாங்க………… இந்த சாட்டர்டே கோவிலுக்குப் போக வேண்டுமாம்…………. அதுனாலதான் இந்த ஷாப்பிங்………….. ப்ளீஸ்”
அவளின் கெஞ்சலான பேச்சு….. கனமாகிப் போன அவன் மனதுக்கு மீண்டும் உற்சாகத்தைக் கொடுக்க……… அவன் மனம் மீண்டும் சந்தோசமாகியது. தன் முன் கெஞ்சி நின்ற அவளைச் சீண்ட வேண்டும் போல் துடித்த மனதை அடக்கியவன்…. அவளைச் சீண்டாமல்…..
“போகலாம்…… ஆனால்” என்று இழுத்தவன்
பார்வதியிடம் திரும்பி………….
”உன் ஃப்ரெண்ட் இன்னைக்கு எத்தனை மெயில டெலீட் பண்ணினாளோ அத்தனைக்கும் ரிப்ளை பண்ணி விட்டு அவளைக் கூட்டிட்டு போ…………. அதுதான் அவளுக்கு இனி பனிஷ்மெண்ட்…………… 30 மெயில் வந்திருக்கு……………. நான் ரீஸ்டோர் பண்ணலை………….. அநேகமா 7 மணி ஆகும்னு நினைக்கிறேன்….. ஷாப்பிங் போகனும்ல……..சீக்கிரம் போய் எல்லா மெயிலுக்கும் ரிப்ளை பண்ணிட்டு………. அந்த அம்மையாரை ஊர்கோலம் கூட்டிட்டு போ” என்று சொல்ல பார்வதி விழிக்க
விஜய் சிரித்தான் பார்வதி விழிப்பதைப் பார்த்து……………..
தீக்ஷாவிடம் திரும்பி…………
”நீயும் போ………………. உன் ஃப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்ணு………. இனிமேல் டெலிட் பண்ணுவ………..” என்று கேட்டவனைப் பார்த்து முறைக்க…………
இப்போது தீக்ஷாவைப் பார்த்து பார்வதி முறைக்க
விஜய் சிரிப்பை அடக்கியபடி………….
”போங்க……….. எவ்ளோ சீக்கிரமா பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரமா பண்ணுனா…..ஷாப்பிங்…………… இல்லை………. யோசிச்சுக்கங்க” என்றவனிடம்
பார்வதி…….. தயங்கி
“நாளைக்கு பண்ணவா” என்று கேட்க
“நோ வே ….” என்று முடித்தவன் அதற்கு மேல் அவர்கள் இருவரிடமும் பேச எதுவும் இல்லை என்றபடி ஏதோ ஒரு ஃபைலில் மூழ்க
வெளியே வந்த தீக்ஷா…..
”பார்த்தியா…………பார்த்தியா…………. இதுதாண்டி விருமாண்டி……… எப்டி பழி வாங்கிட்டான் பார்த்தியா………” என்று கொதிக்க ஆரம்பிக்க
பார்வதி முறைத்தபடி……………
”ஏண்டி……… அவன் உன்னை பழி வாங்கல…. நீ டெலீட் பண்ணினால் எனக்கு பனிஷ்மெண்ட்டா……… ”
”சாரிடி…….. அவன் இப்டி பண்ணுவான்னு நினைத்தே பார்க்கலை………… இப்போ என்ன பண்றது…..” என்றவள் தோழியின் கோபப் பார்வையில்
“சரி வா ரெண்டு சிஸ்டம் எடுத்துக்குவோம்…………. நீ 15 நான் 15….. இனி நான் டெலீட் பண்ண மாட்டேண்டி…..” என்று பாவமாய்ச் சொன்னவளை பார்த்து
”அவர் வீட்டுக்கு கிளம்பலயானுதான் கேட்க கூப்பிட்டாரு…. அவர்கிட்ட ஷாப்பிங் போறதை சொல்லலைனு யார் அழுதது………….. நாம போற வழியில் சொல்லி இருக்கலாம்” என்று பார்வதி புலம்ப
அவள் புலம்பலில் மனம் முழுக்க கோபத்துடன் தீக்ஷா அவனைத் திரும்பிப் பார்க்க…………… அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க…………… பார்வையை மாற்றாமல் ”என்ன” என்று புருவத்தை உயர்த்தியவனிடம்…….
“போடா” என்று முறைப்புடன் வாயசைத்தவளை பார்த்த விஜய்………… மனதினுள் அதை ரசித்தாலும்……….. சிரிக்காமல்
“போடி” என்று வாயசைவிலேயே அதே முறைப்புடன் சொன்னவன்….. ’கொன்னுடுவேன்’ என்று ஆட்காட்டி விரலை உயர்த்தி,,,, அதே விரலால் ’போ’ என்கின்ற மாதிரி விரலை அசைத்தவன்…… அதன் பிறகு தன் பணியில் மூழ்க……….. தீக்ஷாவோ அவனையே பார்த்தபடி அசையாமல் நின்றாள்….
பார்வதியும் இவர்களைப் பார்க்க…….
”என்னடி நடக்குது இங்க…………….” என்று தீக்ஷாவைக் குலுக்க…. தீக்ஷா தன் நிலை மாறி……
“வா வா சீக்கிரம் போகணும்” என்றபடி சிஸ்டமை ஆன் செய்ய…….அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்……..
வேறொன்றுமில்லை அனைத்து மெயில்களும் ரிப்ளை பண்ணப் பட்டு இருக்க………. பார்வதி அவளைப் பார்த்து………….
“ஹேய் நாம இப்போ கிளம்பலாம்” என்று சிரித்தபடி தன் தோழியைக் கட்டிக்கொள்ள…..
அவளோ…. முதலில் இருந்த உற்சாகமெல்லாம்……….போய் வெற்று புன்னகை பூத்தாள்………
விஜய் தங்களிடம் விளையாண்டிருக்கிறான் என்று தீக்ஷாவுக்குப் புரிய…… கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்………… ஆனால் தவறாக
“விருமாண்டி இப்டிலாம் விளையாட மாட்டானே……….. தானே அவன் முன் எத்தனை குறும்புத்தனம் பண்ணி அவனை சீண்டி இருக்கிறோம்……… அப்போதெல்லாம் கூட விறைப்பாகப் போனவன்………..பார்வதியிடம் விளையாடுகிறான் என்றால்………. “ இந்த நினைப்பு வந்த போதே……..
“பார்வதி மேல் பொறாமையாகக் கூட வந்தது….. ஏனோ சுரேந்தரோடு அவளை ஓட்டியவளுக்கு விஜய்யோடு வைத்து ஓட்ட முடியவில்லை…………. சற்று முன் பார்வதியுடன் பேசிய போது இருந்த விஜய்யின் சிரித்த முகம் மனதில் தோன்ற….. ஏன் தன்னிடம் மட்டும் சிடுமூஞ்சியாகவே இருக்கிறான்……..” என்றவளுக்கு விஜய்யைத் திரும்பிப் பார் என்று அவள் இதயம் சொல்ல…….. சட்டென்று திரும்பிப் பார்க்க
அவன் இப்போது வேகமாய் தலையைக் குனிவது தெரிய
“இவ்ளோ நேரம் இங்கதான் பார்த்துட்டு இருந்தானா………….” என்று யோசித்தபடி……… பார்வதியைப் பார்க்க………….
அவளோ மானிட்டரில் பார்வையை வைத்து கொண்டிருக்க…… அதற்கு மேல் தீக்ஷாவும் தன்னைக் குழப்பாமல் பார்வதியுடன் பேச ஆரம்பித்தாள்…….
”போகலாமா………… ஆனாலும் விருமாண்டி டெரர் இம்ப்ரெஸன மெயிண்டெயின் பண்ணிட்டே இருப்பானே………….” என்றபடி இருவரும் கிளம்பத் தயாராக…….. பார்வதி மட்டும்
“விஜய் சார்கிட்ட…. சொல்லிட்டு கிளம்புவோம்” என்று கேட்க
”நீ போய்ச் சொல்லிட்டு வா…. நான் வரலை” என்று சொன்ன தோழியின் முகம் ஏதோ மாதிரி இருக்க……..
“தீக்ஷா ஆர் யூ ஒக்கே…. ஏன் ஒரு மாதிரி இருக்க……..” என்று பதட்டமாய்க் கேட்டவளிடம்…. அவளும் மறைக்கவில்லை
“என்னமோ எதையோ மிஸ் பண்ற மாதிரி ஃபீல் பார்வதி………….. தலை வலிக்கிற மாதிரி இருக்கு….. என்னை விட்டு எல்லாமே போன மாதிரி பீல்……… அது என்னனு எனக்கே தெரியலை…….. இந்த மாதிரி அடிக்கடி தோணும் பார்வதி” என்று கலங்கிய தோழியைப் பார்த்தவளுக்கு………….. அடிவயிறு கலங்காமல் இல்லை………
“அப்போ நாளைக்கு ஷாப்பிங் போகலாமா” என்று கேட்க …………… சட்டென்று முகத்தை மாற்றியவள்…………..
“இப்போ ஓகேவா… நீ போய் அவர்கிட்ட சொல்லிட்டு வா……..நான் வெயிட் பண்றேன்” என்று சொன்னவள்
பார்வதி விஜய்யிடம் சொல்ல அவனது அறைக்கு போக
வெளியே வந்த தீக்ஷா
“கைகளைக் கட்டியபடி……… சுவரில் சாய்ந்து வெறித்தபடி நின்றிருந்தாள்………….. மனம் எங்கும் வெறுமை சூழ்ந்திருக்க………….. பார்வை ஒரே இடத்தில் நிலைக்க மனம் எங்கும் எதற்கோ ஏங்கித் தவிக்க ஆரம்பித்து இருக்க…….. தண்ணீரில் இருந்து தரையில் விழுந்த மீன் போல் துடிக்க ஆரம்பித்தாள்……….”
சட்டென்று தனது கைப்பையை திறந்த தீக்ஷா………… அதில் இருந்த மாத்திரையை வேக வேகமாய் விழுங்க ஆரம்பித்தவள்…. கண் மூடி அப்படியே நின்றாள்………….
-------------
விஜய்யைப் பார்க்க உள்ளே சென்ற பார்வதி அவனைக் காணாமல் திகைக்க…………. அவனது பிரத்யோக அறையில் இருந்து வெளியே வந்த விஜய்யின் முகத்தைப் பார்த்து வியந்தாள்…….. வந்த நாளில் இருந்து இன்றுதான் விஜய்யின் முகம் இந்த அளவு தெளிவாய் இருந்தது……………..
இவனைப் பார்த்தவன் சட்டென்று முகத்தை மாற்றி……….. சிரித்தபடி…………. எதிர்பார்த்தவன் போல்
“இனி உன் ஃப்ரெண்ட் டெலீட் பண்ணுவா……. மாட்டாள்ள” என்று கேட்க
”ஷாக் ட்ரீட்மெண்ட்டா சார்………” என்று கேட்டு பார்வதி சிரித்தாள்……………..
அதற்கு பதில் சொல்லாமல்…………… விரக்தியாய்ச் சிரித்து………..
“அதெல்லாம் எனக்கு வாங்கித்தான் பழக்கம்………..” என்று சொல்லிவிட்டு………. சொன்ன வேகத்திலேயே
“சீக்கிரம் போய்ட்டு வாங்க……..லேட் பண்ணிடாதீங்க……………” என்று நிறுத்தியவன்….. பார்வதியிடம்….. நெகிழ்வாக
“பார்வதி…….. இந்த ஒருவாரமா அவகிட்ட ஒரு மலர்ச்சி………. அதுக்கு நீதான் காரணம்னு தெரியும்……….. தேங்க்ஸ்” என்று சொல்ல…………
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பார்வதி அவனையே பார்க்க……..
“அவள பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வா……………. உன்னை நம்பி அனுப்பி வைக்கிறேன்……. என் நம்பிக்கையை காப்பாற்றுவேனு நினைக்கிறேன் ……” என்றவன் ஞாபகம் வந்தவனாய்………..
“ரிப்போர்ட்ஸ்லாம் பார்த்தாரா உங்க அண்ணா……… என்று கேட்க
தன் அண்ணன் தான் பார்க்கவே இல்லையே…. என்ன சொல்வது…. என்று சிந்தித்த பார்வதி……
“அண்ணா கொஞ்சம் பிஸி இன்னும் பார்க்க வில்லை போல்” என்று தடுமாற………
“ஓ……. மறக்காமல் பார்க்கச் சொல்லு…… உன் அண்ணாவை நான் நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணலாமா” என்று விஜய் கேட்டான்
“நெக்ஸ்ட் வீக் அண்ணாக்கு கேம்ப்….. முடியாதே சார்….. அதுக்கடுத்த வாரம் நீங்க ஃப்ரீயா சார்” என்று கேட்க
”ஓ…. ஓகே….. சாரகேஷ் கேம்ப் முடிச்சுட்டு வந்த பின்னால் சொல்லு…. நான் மீட் பண்றேன்……… நான் எப்போதுமே ஃப்ரிதான்……..” என்று சிரித்தவன்
“சரி சரி…. போ… தனியா இருக்கா அவ….. எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு….. இன்னைக்கு யாரும் உங்கள ஃபாளோ பண்ணல…….. கேர் ஃபுல்…. சந்தோசமா ஷாப்பிங் பண்ணுங்க ” என்று அவனை அனுப்பி வைத்தவன்… அவள் வெளியேறியவுடன்….. எதிரே இருந்த தனது புகைப்படத்தைப் பார்த்தபடி சில நிமிடம் இருந்தவன்…..
தனது மொபைலை எடுத்து……….. அந்த மெஸேஜை படிக்க ஆரம்பித்தான்………
“ ----------------------- ---------------------- நான் உங்களுக்காக படைக்கப்பட்ட புயல்….. அது வேறொரு இடத்திற்கு போகுமா…….. உங்கள இந்த புயல் தாக்க வந்துட்டே இருக்கா………. என்னை நீங்க சமாளிச்சுருவீங்களா,,,,, --------------------------- ------------------------- ”
என்றபடி தொடர்ந்த அந்த மெஸேஜை படிக்க ஆரம்பித்தவன்’……. தனக்குள்….
“நீ…. புயல்தாண்டி…………. நீ எவ்ளோ என்னை தாக்கினாலும்………….. இந்த விஜய்ன்ற கடலோட கரையை கடக்க விட மாட்டேண்டி…………. நீயும் போக மாட்டடி……………….” என்றபடி தன் இருக்கையில் கண்மூடிச் சாய்ந்தவன் மனதில் ஆயிரம் உணர்ச்சிப் போராட்டங்கள்………….. ஆனால் அதை எல்லாம் அடக்கும் வித்தையையும்….. அவனைச் சுழன்றடித்த 3 மாதங்களில் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தாள் அவனது புயல்………….
---------------
தீக்ஷா அமைதியாகவே இன்னும் வருவதை உணர்ந்த பார்வதி……….. நீதானே ஷாப்பிங் போகலாமானு கேட்ட………. இப்போ அமைதியா வருகிறாய்” என்று செல்லமாய்க் கோபிக்க
“ஒண்ணும் இல்லை பாரு…………என்னமோ முதலிலே வந்திருக்கலாம்… இடையில மெயிலுக்கு ரிப்ளை பண்ணச் சொல்லி……. ச்சேய் டோட்டலா மூட் அப்செட்………… என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டானா இந்த விருமாண்டி….” என்று தளர்ந்த குரலில் பேச
“அவர் என்னடி பண்ணினார்………. சும்மா விளையாண்டார் நம்மகிட்ட…………. எனக்கு ஒண்ணும் தப்பா தெரியல………..” என்று பாரு சொல்வதைக் கேட்டபடியே வந்தவள்… கொஞ்சம் நார்மலாகி
”ஹேய் நீ சரி இல்ல………… நேற்று என்னடாவென்றால்…… சுரேந்தர் அத்தானுக்கு மேரேஜ் ஆகிருச்சானு கேட்கச் சொல்ற…… தைரியம்தான்…. பார்த்துடி விருமாண்டிக்கு தெரியாம சைட் அடி….. இல்லை என் தம்பிய பார்வதி பார்த்துட்டானு சொல்லி பூட்டி வச்சுறப் போறாரு……….. என்று சிரிக்க
பார்வதி இப்போது கேட்டாள்
”எனக்கு ஒரு சந்தேகம் தீக்ஷா” என்று கேட்ட பார்வதியிடம்
“தயவு செய்து இந்த லவ், பசங்க………… விருமாண்டி குடும்பம்………. சாரகேஷ், என்னொட உடல்நிலை இது தவிர எது வேண்டும் என்றாலும் கேளு போரடிக்குது…………………. உலகத்தில பேசுறதுக்கு எவ்ளோ டாபிக் இருக்கு” என்று திருப்பி விட………….
அமைதியாய் ஆனாள் பார்வதி…………..
”என்னடி கம்முனு ஆகிட்ட” என்று சிரிக்க………….
“நீ அமைதியா வான்னு டேரெக்டா சொல்லி இருக்கலாம்” என்றவளைப் பார்த்த தீக்ஷா……..
“சோ ஸ்வீட் ஃப்ரெண்ட்………… கரெக்டா புரிஞ்சுகிட்ட…………. “ என்று சிரித்தபடி சொல்ல அந்த நேரம் பார்த்து
சாரகேஷ் பார்வதிக்கு மொபைலில் அழைக்க……… போனை எடுத்து தீக்ஷாவிடம் கொடுக்க……. தீக்ஷா அட்டெண்ட் செய்தாள்
“சொல்லுங்க பாரு அண்ணா நான் தீக்ஷா பேசுறேன்………….. அவ ட்ரைவ் பண்றா என்று ஆரம்பித்து…………
கடைசியில் தாங்கள் போகும் இடத்தைச் சொல்லி முடித்து போனை வைத்தாள்
“பாரு உங்க அண்ணாவும் வருகிறாராம்………” என்றபடி தி நகரின் உள்ளே நுழைய………….. அதே நேரம் சுரேந்தரும்,தீனாவோடு அங்கு ஒரு வேலையாய் வந்திருக்க………. சாரகேஷும் அங்கு வந்து சேர்ந்தான்………….
சூப்பர் சூப்பர்