அத்தியாயம் 44:
காத்தமுத்துவும், முருகேசனும்………… சொல்லி முடிக்கும் போது விஜய்…. முற்றிலும் நிலைகுலைந்து போய் தொய்ந்து கீழேயே அமர்ந்து விட்டான்… தீனாவும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்க…. யுகி மட்டும் தாங்க முடியாமல்…………… இருவரையும் பந்தாடி விட்டான்….
முருகேசனும்… காத்தமுத்து இருவருமே அதை எல்லாம் அமைதியாக ஏற்றுக் கொண்டனர்… யுகியின் தாக்குதலை எல்லாம்….. ஒருகட்டத்தில் யுகி தங்கள் ஆட்களிடம் சொல்லி அவர்களை அங்கிருந்து கொண்டு போகச் சொல்ல… இருவரும் விஜய்யிடம் கெஞ்சினர்….
”தம்பி…. நாங்க தங்கச்சி கண்ணு முழிக்கிற வரை இங்கதான் இருப்போம்….எங்களால போக முடியாது….. சொல்லுங்க….எங்களாலதான் அதுக்கு இப்படி ஒரு நிலைமை….அதை மறுபடியும் பழைய நிலைமையில பார்க்கிற வரை இங்கிருந்து போக மாட்டோம்….. நாங்க ரவுடிதான் தம்பி… கூலிக்கு மனசாட்சிய விக்கிறவங்க தான்….. ஆனா எங்களையும் மனுசனா பார்த்துச்சு தம்பி…… எங்கள மட்டும் இங்க இருந்து போகச் சொல்லிறாதீங்க தம்பி”
விஜய்……… யாருக்கும் பதில் சொல்லாமல்… எதையும் தடுக்காமல்…. அமைதியாக இருந்தான்…. சிலை போல
தீனாதான் யுகியை சமாதானப் படுத்தி அங்கிருந்தி கூட்டிச் செல்ல…. விஜய் யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் தன் மனைவியை நாடிச் சென்றான்…..
அவனுக்கு இளமாறனின் மேல் எல்லாம் கோபம் இல்லை…. கோபம் இல்லை என்பதை விட……….. கோபம் வர வில்லை…. ஆனால் இளமாறன் செய்த துரோகத்துக்கு சரியான தண்டனைதான் என்று சமாதானமும் அவனுக்குள் வர வில்லை…. அவன் மட்டுமா அந்த விமானத்தில் போனான்… அவனோடு பயணித்த ஒவ்வொரு பயணீயும் இவனைப் போல துரோகிகளா……. அந்த நேரத்திலும் அவன் மனம் இவ்வாறெல்லாம் யோசிக்க…..
அதுமட்டுமில்லாமல்…………… தீக்ஷாவின் இந்த நிலைக்கு காரணம்.. அவனால் வேறு யாரையும் பழி போட முடியவில்லை…………… அவளுக்கு நடந்த எல்லாவற்றிற்கும் காரணம்!!!! தான்…. தான் மட்டுமே….. இந்த எண்ணத்தில் தான் இருந்தான் விஜய்,…..
அன்று கோபத்தில் கண் மண் தெரியாமல் மாடி அறையில் அவளைத் தள்ளி விட்ட அவனின் வெறித்தனம்…. இன்று அதை விட அதிகமான உக்கிரத்தோடு அவனை நோக்கித் திரும்பியிருந்தது…..
இளமாறன், கடத்தினான்… நம்பிக்கை துரோகம் செய்தான் என்று… சொன்னாலும்…. இவனின் மனைவி என்ற ஒரே காரணத்தால் மட்டுமே தீக்ஷா கஷ்டம் அனுபவித்தாள்…. அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை எண்ணி மருகினான் விஜய்..
கிட்டத்தட்ட தீக்ஷாவின் மானமே பறி போக வேண்டிய நிலை…. அது கூட அறிய முடியாத நிலையில் இருந்திருக்கிறாள் தன் மனைவி…. காரணம்…. இவனின் நிலை பற்றி அறியாத அவளின் மனக் குழப்பம்….. அவள் அந்தச் சூழ்நிலையில தன்னைக் காப்பற்றிக் கொள்ளக் கூட முயற்சிக்க வில்லை….. என்று நினைத்த போது…. அதற்கும் காரணம், அந்த அளவு அந்த விபத்துச் செய்தி அவளை அடியோடு தாக்கியிருக்கிறது…. அதன் பிறகு சுரேனின் வாய் வார்த்தைகளில் அவள் அனுமானித்த தன் மரணத்தை… உறுதிப்படுத்த முடியாமல்…. மயங்கி விட்டாள்…. இதற்கும் தானே காரணம்… சுரேன் வாய் வார்த்தையில் தான் உயிரோடிருப்பதாக சொல்லி இருந்தால் தன் மனைவி… இந்த நிலைக்கு போயிருக்க மாட்டாளோ ….
மனச்சாட்சியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் உழன்றான் விஜய்….
ஆக மொத்தம்…. தீக்ஷாவின் இந்த நிலைக்கு விஜய் தான் முழுக்க முழுக்க காரணம்… என்று உணர்ந்த போது
“அவனின்…. ஆணவம்… கோபம்….. தொழில் மேல் உள்ள வெறி…. தான் எடுத்த முடிவுகள்” என அவனின் ஒவ்வொரு நடவடிக்கையுமே….. அவனை பூமராங் போல திரும்பி வந்து அவனையே தாக்கின…… அவன் மனைவியின் உருவின் மூலம்….
ஆனால்…. எப்போதோ போயிருக்க வேண்டிய தன் உயிர்.. தீக்ஷாவின் கணவன் என்ற காரணத்தினாலே இன்னும் தங்கியிருக்கிறது…. அவளால் தான் வேதனைகளை அனுபவிக்கவில்லை… அவள் நினைவோடு இருந்த வரை அதை அனுபவிக்கவும் விட்டதில்லை….. என் மனைவி என்னைத் தேடி வருவாள்… என்னைத் தவிக்க விட மாட்டாள்….. அவளின் இந்தரை ஒரு போதும் அவள் தவிக்க விட்டதில்லையே…. காதலில் கூட தவிக்க விடவில்லை….. கணவனாய் ஏங்க விட்டதில்லை…. ஆனால் இன்று ஒட்டு மொத்தமாய் தன்னை உருக்குலைய வைக்கிறாளே…. இதற்குதான் விதி இருவரையும் சேர்த்ததா… நொந்துக் கொண்டிருந்தான் விஜய்…. ஒவ்வொன்றையும் நினைத்து
மனைவியின் தலை மாட்டில் அமர்ந்தவன்…………. வந்து அவள் கைகளைப் பிடித்தபடி தலை சாய்த்தவன் தான்…………. அதே நிலையிலேயே அப்படியே அமர்ந்து விட்டான்………………..
யார் வந்தார்கள் போனார்கள்… என்றெல்லாம் உணரும் நிலையில் இல்லை…… தீக்ஷாவிடமிருந்து சிறு அசைவினை மட்டும் எதிர்பார்த்தபடி…. அவள் கைகளைப் பிடித்தவன் தான்…. அவளின் மூடிய விழிகள் திறக்க வேண்டுமென்று கூட அவன் பேராசைப்படவில்லை… அவளின் மூடிய விழிகளின் கண்பாவை அசையாதா என்றுதான் அவன் ஏங்கினான்….
அவளின் இந்தர் என்ற அழைப்புக்கு அவன் தவிக்க வில்லை…ஆனால் அவளின் முணங்கல் சத்தமாவது வருமா என்று காத்திருந்தான்….. பட்டினிக் கொடுமையால் போகப் போகும் உயிர் பாலும் பழத்துக்கு ஏங்குமா…. நாவறட்சியை போக்கும்… ஒரு துளி நீருக்கு ஏங்குவது போல…. அந்த நிலையில் இருந்தான் விஜய்………………
அவள் மனைவி அவனின் ஏக்கத்தினை தீர்ப்பாளா?????….
இதை எல்லாம் உணராமல்……………ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் தீக்ஷா… நிம்மதியாகவா என்றால்…. அது இல்லை என்பது அவளின் முகம் சொன்னது… அதில் இறுக்கம் உறைந்திருந்தது… கணவனின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட வேதனையோடு உறைந்திருந்தாள் தீக்ஷா…. வேலை நிறுத்தம் என்பதை அறியாத அவளின் உதடுகள்…. அழுத்தமாய் முடி இருந்தன………… வேதனையின் சாயல் அவள் முகத்தில் அப்படியே நின்று போயிருந்தது… உறங்கும் போது கூட தன் மனைவியை ரசித்திருக்கிறான் விஜய்… அப்போது கூட அவளின் முகம் மலர்ந்திருக்கும்….. இந்த சில கால வாழ்க்கையில்…. அவன் அருகில் அவள் உறங்கும் போது கூட…. அவனின் அருகாமை இல்லாமல் அவள் உறங்கியதே இல்லை.. அவனாய் சற்று விலகினால் கூட…… தூங்கிய நிலையிலே அவனைத் தேடி சிறு குழந்தை போல… அவனோடு ஒன்றுவாள்… இன்று….
படபட பட்டாசாய் வர்ண ஜாலம் காட்டியவள்……. அவளின் வர்ண ஜாலத்தின் கோலத்தில் திளைத்திருந்த அவளின் கணவனுக்கு.. வெற்றிடத்தை காட்டி……. அவனின் உணர்வுகளை எல்லாம் தன்னோடு சேர்த்து வாங்கி……….. தனக்குள் அடக்கி… தானும் அடங்கியிருந்தாள்….
எத்தனை மணி நேரம் விஜய் அப்படியே அமர்ந்திருந்தான் என்று தெரியவில்லை…. திடிரென்று விஜய்யின் கால்களில் யாரோ விழுவதைப் போல உணர்ந்தான்….அப்போது கூட விஜய் அசையவில்லை… ஆனால் கால்களில் பட்ட ஈரம்…..அவனைப் பதறச் செய்ய…. வேகமாய் எழ….நடுத்தர வயது தம்பதி….
விஜய் பதறிப் போய்…. நகர…. நர்ஸும் அங்கும் வர…. அந்த பெரியவர்களை அழைத்தபடி வெளியே வந்த விஜய்க்கு…. அவர்கள் இருவரும் சக்தியின் பெற்றோர் என்று புரியாமல் இல்லை….
“என் பொண்ண எங்ககிட்ட காப்பாற்றிக் கொடுத்ததுக்கு நன்றி சார்…. உயிருக்கு போராடிட்டு இருக்கிற பொண்ணுகிட்ட… இப்படி நடப்பான்னு நாங்க எதிர்ப்பார்க்கலை சார்” என்று சக்தியின் பெற்றோர்…. கதறி அழ….
“கவலைப்படாதீங்க…. உங்க பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாது…. சீக்கிரம் குணமாகிடுவா….. அது மட்டும் இல்லாமல்… அவங்க ட்ரீட்மென்டுக்கும் நான் ஏற்பாடு பண்ண சொல்லி இருக்கேன்…. “ என்ற போது… அவன் கவலை மறைத்து விஜய் தெளிவாகப் பேசினான்…
”அவ காதலிச்ச பையனே இப்படி பண்ணுவான்னு தெரியாம போச்சே….. என் பொண்ணை இப்படி பண்ணீட்டானே….” என்று அவர்கள் வாய் விட்டு அழ….
விஜய்தான் ஆறுதல் கூறி தேற்றி அனுப்பி வைத்தான்…. சுரேந்தரிடம் சொல்லி அவர்களை கவனிக்கும் படியும் வைத்துக் கொண்டான்
-----
ஒருபுறம் சக்தியின் உடல் ஓரளவு முன்னேறிக் கொண்டிருக்க… தீக்ஷாவின் நிலையிலோ ஒரு மாறுதலும் இல்லை…. ஒரு வாரம் கடந்திருக்க….. விஜய்யைத் தவிர மற்ற அனைவரும் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர் என்றே சொல்லலாம்….
விஜய்…. போட்டி இடாததால் அடுத்த இடத்தில் இருந்த தீனாவுக்கு… சுலபமாக அந்தப் ப்ராஜெக்ட் கையகம் ஆகி இருந்தது… ஆனால் தீனாவால் அந்த வெற்றியை சுகிக்க முடியவில்லை… ஏனோ அவன் மனம் அந்த வெற்றியில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டிருந்தது…..
கேள்விப்பட்ட விஜய் வாழ்த்துக்கள் கூறியதோடு சரி…. அதற்கு மேல் பெரிதாக அதைப் பற்றி பேச வில்லை …..
காத்தமுத்துவும்.. முருகேசனும்… சக்தியின் பெற்றோடு மருத்துவமனைக்கு அருகிலே வீடெடுத்து தங்கவைக்கப் பட்டனர்….
சக்தியும் ஓரளவு சரியாக ஆரம்பித்து இருந்தாள்…… ஆசிட்டின் வீச்சு ஒரு பக்க கன்னம்… கழுத்தின் முன் பகுதி என்பதால்…. அந்த தாக்கத்திலிருந்து வெளி வந்து விட்டாள்…. ஆனால் அவள் அதிர்ச்சி எல்லாம் அவளின் காதலன் நடந்து கொண்ட முறையில் தான்…. தன் உயிர் என நினைத்தவன்…. தன் நோயின் காரணத்தால் அவனுக்காக…அவனின் நல் வாழ்க்கைக்காக அவனை விட்டு தள்ளி போக நினைக்க…. அவன் இவளை நேசிக்க வில்லை…. இவளுடைய மனதை நேசிக்க வில்லை….உடலை மட்டுமே விரும்பியிருக்கிறான்… …அவளின் இதயம் சுரீரென்று வலித்தது
தவறான் ஒருவனை இதயத்தில் வைத்து பூஜித்த காரணத்தினாலோ என்னவோ… அந்த இதயமே அவளுக்கு பயனற்றதாகி விட்டது போல….. காதலின் ஏமாற்றம்…. அதன் துரோகம் அந்த இதயத்துக்கு தந்த வலியை விட…. தனக்கு வந்த நோயால் வந்த வலி…. அந்த இதயத்துக்கு பெரிதாய் இருக்க வில்லை…
ஓரளவு சரியானவள்…… முதலில் தேடியது தன்னைக் காப்பாற்றிய ஆபத்பாந்தவனைத்தான்…. அவனைத் தவிர…. யார் யாரோ வந்தார்கள்… வந்த ஒருவரைக்கூட இவளுக்குத் தெரியவில்லை…. …
அதே போல் தான் இருக்கும் இடமும் உணர்ந்தாள்… அந்த மருத்துவமனையின் தரம் அவளுக்கும் புரிய…. தாய் தந்தையிடம் முதலில் அதைத்தான் விசாரித்தாள்….
சக்தியின் தாய் விஜய்யைப் பற்றி சொல்ல…… சக்திக்கு விஜய்யின் மேல் இன்னும் மரியாதைதான் பெருகியது…. அவளைப் பொறுத்தவரை…. அவன் அவளுக்கு கடவுளுக்கு நிகரானவன்….. அவன் மட்டும் அங்கு வந்திருக்காவிட்டால்….. நினைக்கும் போதே அவள் உள்ளம் நடுங்கியது…. காதலனே கயவனாக மாறிய நிலை… எந்த ஒரு பொண்ணுக்கும் நடக்கக் கூடாத ஒன்று…….
விஜய்யைப் பார்க்க வேண்டுமென்று சைகையால் சொல்ல…. விஜய் இருக்கும் சூழ்நிலையில்…. அது முடியாமல் போனது….
விஜய் அன்று வந்து சக்தியைப் பார்த்ததுதான்…. அதன் பிறகு தன் மனைவியை விட்டு நகர மறுத்தான்…..அவள் கண் விழிக்கும் போது அவள் அருகில் தான் இல்லாமல் போய் விடக் கூடாது…. என்று அனைவரிடமும் சொன்னவனுக்கு………. மனதில் வேறொரு பயமும் இருந்தது…. அது எங்கே தான் இல்லாத நேரத்தில் காலன் தன் மனைவியை அபகரித்து விடுவானோ என்ற பயம் தான்…
தீக்ஷா சொல்வது போல… தன் அத்தான் இருக்கும் இடத்தில்…. தன்னை துன்பம் நெருங்காது என்று…. அதைக் கடைபிடித்தான் அவளின் இந்தர்
அவளின் இதயத்துடிப்பை பார்த்தபடியே இருந்தவனுக்கு……….. ஏதேதோ நினைவுகள் வாட்டியது…………இப்போது அவனின் உயிரே மானிட்டரில் ஓடும் அலைகளில் தான் இருந்தது… அதன் சத்தம் தான் அவனின் இதயத்தின் அடுத்த துடிப்பை உறுதி செய்து கொண்டிருந்தது……..
களைப்பில் சற்று கண் மூடினாலும்….. அவனின் கைகள் அவன் மனைவியின் மேலேயெ இருக்க….… காதுகள் அந்த பெட்டியின் ஒலியிலே கூர்மையாக இருந்தன…. அவன் உறங்கவே இல்லை என்று கூட சொல்லலாம்….. ராதா இல்லை கலைச்செல்வி இருவரில் ஒருவர் அவனைக் எப்படியோ கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து விடுவர்…………. சாப்பிடுவான்…. அவ்வளவுதான் சொல்லமுடியும்…. ஒருவாராமாய் இப்படியே விஜய்யின் நிலையும் இருக்க…. அவன் நிலை சற்று கவலை தந்தது அனைவருக்கும்…. ஒழுங்கான உறக்கம் இல்லை… ஒழுங்கான சாப்பாடு இல்லை…. உட்கார்ந்த நிலையிலெயே இப்படியே இருந்தால் என்ன ஆவது…அவனைச் சேர்ந்த அனைவரும் துடிக்க ஆரம்பித்தனர்… இவனைப் பார்த்து…
கலைச்செல்வி…. தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவனை வீட்டுக்கு அனுப்ப முயற்சித்ததெல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் வீணாக ஆனது என்றே சொல்லலாம்
ஜெயந்தி…வைத்தீஸ்வரன் நிலைமையோ அதை விட….… மகளின் நிலை தாங்காமல் வைத்தீஸ்வரனின் உடல்நிலை சரி இல்லாமல் போக……… ஜெயந்தி தன் கணவனையும் தேற்ற வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருந்தாள்….
-------------------
அன்று விஜய் நல்ல உறக்கத்தில் இருந்தான்………………… அப்போது….. இந்தர் என்ற அழைப்புக் கேட்க…. விஜய் அசைந்தான்… ஆனால் விழிக்க முடியவில்லை………
ஆனால் அவனால் தீக்ஷாவினை பார்க்க முடிந்தது……….. அவளின் இளம் பிங் வண்ண புடவையில்………. அவன் முன் சிரித்தாள்…….
தீக்ஷா அவனின் வாய் அவனையுமறியாமல் அழைக்க…. அவனால் எழ முடியவில்லை…. அது ஏனென்றும் தெரியவில்லை…
“அத்தான் நீங்க தூங்குங்க….நான் டிஸ்டர்ப் பண்ணலை…. ஆனால்…………… எனக்காக நீங்க வாங்கி வந்தீங்கள்ள அந்த கிஃப்டை மட்டும் கொடுங்க…. அத வாங்கிட்டு போகிறேன்…. சீக்கிரம் போகணும் அத்தான் எனக்கு லேட் ஆகிருச்சு” என்றவள் புன்னகைக்க……….
“விஜய்க்கு அவள் எதைச் சொல்கிறாள் என்றே புரியவில்லை….
“எதும்மா” என்றான் வாய்விட்டே..…
“என் பேர்த்டே கிஃப்ட்… சீக்கிரம் அத்தான்…………… அதற்காகத்தான் வெயிட்டிங்.. இல்லை எப்போதோ போயிருப்பேன்.“ வழக்கம் போல அவனை அவசரப் படுத்த….
விஜய் இப்போது சுதாரித்தான்…
“இல்ல நான் தர மாட்டேன்,…. தர மாட்டேன்………………… நான் அதைக் கொடுத்தால் என்னை விட்டு போய் விடுவாய்” என்று கத்தியபடி எழ முயற்சிக்க…………….அவனால் அப்போதும் முடியவில்லை…………..
ஒரு கட்டத்தில் தன்னை முழு முயற்சி செய்து எழுந்தவன்…………. உட்கார…. எதிரில் அதே நிலைமையில் தான் தீக்ஷா படுத்திருந்தாள்…….. தீக்ஷாவின் அருகில் கலைச்செல்வி தலைசாய்த்து படுத்திருக்க….
தன் மனைவியை பார்த்தவன்…… அவளின் நிலைமையை ஒரு முறைக்கு இருமுறை ஆராய்ந்தவன்…. அப்போதுதான் உணர்ந்தான்… தான் அருகில் இருந்த கட்டிலில் இருப்பதை…
இங்கு எப்படி வந்தோம்… என்று ஆராய்ச்சிக்கு முதலில் போனவன்….. கனவில் தீக்ஷா……….. அவனிடம் பேசியதை உணர….. தன் ஆராய்ச்சியை எல்லாம் விட்டு விட்டு……. வேகமாய் எழுந்தவன்……………
அந்த டாலர் இருந்த பெட்டியைத் தேடினான்….. அங்கு இருந்த பீரோவில் பத்திரமாய் இருக்க…. அவசர அவசரமாய் எடுத்தவன்…. குளியலறைக்குள் நுழைந்து…. நொடி கூட தாமதிக்காமல் டாய்லெட்டில் எறிந்தவன்………… அதை ஃப்ளஷ் செய்து… அந்த வைர டாலர் தன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்தவன்………. அது மறைந்தவுடன் நிம்மதியாக வெளியே வந்தான்………
“அவள் கேட்ட பொருளைக் கொடுத்தால் தானே தன்னை விட்டு போவாள்… இனி அவள் தன்னை விட்டு போக மாட்டாள்….” என்ற குருட்டு நம்பிக்கையில்….கொஞ்சம் மனம் ஆறுதல் ஆனவன்… அறையை விட்டு வெளியேறி வந்தான்……………
அப்போது சக்தியின் ஞாபகம் வர….
“ச்சேய் அந்தப் பொண்ண பார்க்கவே இல்லையே” என்று தனக்குள் திட்டியபடி… சக்தியின் அறைக்குப் போக…. சக்தியும் நல்ல உறக்கத்தில் இருந்தாள்………………
அவள் அருகில் சில நிமிடங்கள் நின்றிருந்தவன்….. கிளம்புவோம் என்று வெளியேறப் போக… அப்போது சக்தியும் விழித்தாள்…
எப்படித்தான் இவனை உணர்ந்தாளோ தெரியவில்லை……. விஜய்யைப் பார்த்த அவள் விழிகளில் அத்தனை பிரகாசம்… அதை பார்த்த விஜய்…. இதழ்களில் வலிய வரவழைத்த புன்னகையோடு அவள் அருகில் அமர….
“நன்றி சார்” என்று இதழ் திறந்து சொல்ல… விஜய்….
”இப்போ எப்படி இருக்க சக்தி…………” அவன் கவலையோடு கேட்டான்…. 22 வயதிருக்கும் அவளுக்கு…. இந்த வயதில் இத்தனை போராட்டமா இவளுக்கு….. மனம் வலித்தது அவளைப் பார்த்த விஜய்க்கு….
விரக்தியாய்ச் சிரித்தவள்….
“இருக்கேன்….. தப்பான ஒருத்தனை வாழ்க்கையில் நேசிச்சதுக்கு தண்டனை தான் என்னோட இந்த நிலைமை….. ” கசப்பாய்ச் சொன்னாள்….
“அவனும் அவனோட ஃப்ரென்ட்ஸும்…. இப்போ ஜெயில்ல இருக்காங்க சக்தி…. வேற கேஸ்ல உள்ள தூக்கிப் போட வச்சுட்டோம்… வெளியிலயே வர முடியாதபடி…..” என்ற போது…. சக்தியின் கண்களில் ஆவேசம் தான் வந்தது…
”அவன் மனுசனே இல்லை சார்… அவன்லாம் இந்த உலகத்துல வாழ தகுதி இல்லாதவன்….” என்ற போதே…. அவள் உணர்ச்சி வசப்பட்டு பேச ஆரம்பிக்க…. அவளால் முடியவில்லை…. பட படப்பாய் உணர்ந்தவளின் இதயம் வேகமாய்த் துடிக்க ஆரம்பிக்க…
“சக்தி….அமைதி…..” வாய் வார்த்தைகளால் அமைதிபடுத்த முயல… அவனால் முடியவில்லை… அங்கு நடந்த போராட்டதில் சக்தியின் பெற்றோரும் எழுந்து விட…. அவர்களாலும் முடியவில்லை… விஜய் அவளைச் சமாதானப் படுத்த…. அதன் பிறகுதான் அவளும் தணிய…. அதன் பின் சிகிச்சை அளிக்க…. சகஜமானாள் சக்தி….
விஜய்யால் சக்தியின் துடிப்பை பார்க்கவே சகிக்கவே முடியவில்லை…. வாழ வேண்டிய பெண்… இந்த நிலைமையில் கிடக்கிறாளே அவர்களின் பெற்றோரின் நிலையோ பரிதாபமாக இருந்தது..
அதை விட…. முக்கியமானது
விஜய் தான் இருக்கும் நிலையில் அவன் அடுத்தவர் மீதும்…….. பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தான்…………
அதிக நேரம் தூங்கியதாலோ இல்லை அதிகாலை சில்லென்ற காற்று அவனுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியதா தெரியவில்லை…. இல்லை… மனைவி கேட்ட அந்த கிஃப்ட்டை தூக்கி எறிந்ததால்..அவள் தன்னை விட்டு போக மாட்டாள் என்று நம்பிக்கை வந்ததாலோ… என்னவோ…. அன்று வரை தீக்ஷாவின் அருகிலே அந்த அறையிலே அடைந்து கிடைந்தவன்… வெளியேறி கீழே வந்தான்……
வந்தவனின் கண்களில் காத்தமுத்துவும் முருகேசனும் பட… இவர்கள் இருவரும் இன்னும் இங்கு இருக்கிறார்களா…. ஆச்சரியமுடன் அவர்களை நோக்கிப் போனான்… இருவரும் டீ யோ காஃபியோ குடித்துக் கொண்டிருக்க….
அவர்களின் எதிர்புறம் இருந்த பெஞ்சில் அமர்ந்தான் விஜய்…..
இவனைப் பார்த்த அவர்கள் இருவரும்….. எழ முயல… பார்வையால் அவர்களை அமரும்படி சொன்னவன்…. தனக்கும் ஒரு டீ வாங்கி வரச் சொல்ல…. இருவரும் தயங்கி…
“தம்பி……….. “ என்று இழுத்தனர்
விஜய் புருவம் சுருக்கிப் பார்க்க..
“இது இங்க இருக்கிற கடையில வாங்கியது…. உங்களுக்கு பிடிக்குமானு தெரியல…. “ என்ற போதே….
”பரவாயில்லை வாங்கிட்டு வாங்க…. நீங்க குடிக்கிறீங்கள்ள… நல்லா இருக்கிறதினாலதானே குடிக்கிறீங்க…. என்றவன்… நல்லா இல்லைனாலும் குடிப்பேன்….. எனக்கு சூடா ஏதாவது சாப்பிடனும் போல இருக்கு…. என்றான் ஒரு மாதிரி குரலில்…
இதோ என்று முருகேசன் கிளம்ப….
விஜய் காத்தமுத்துவிடம் கேட்டான்….. உங்க உண்மையான பேர் என்ன” என்று விசாரிக்க…
”தீக்ஷா தங்கச்சி வந்து ஒரு நாள் உங்ககிட்ட சொல்லும் தம்பி…. எங்க உண்மையான பேர் என்னவென்று,,,, அதுவரை நாங்க சொல்ல மாட்டோம்” என்று உணர்வின் தாக்கத்தில் சொல்ல
ஒரு வாரம் கழித்து அன்றுதான் இதழ் விரித்தான் விஜய்….
எனக்கும் உங்க தங்கச்சி வச்சுருக்க பேர் என்னன்னு தெரியுமா….
“இந்தர்னு சொன்னுச்சு….. “ இதைச் சொன்னவன் முருகேசன்…. அவனிடமிருந்து டீ டம்ளரை வாங்கி விஜய்………….
”அது என் பேர்ல பாதிதானே….. அது இல்லை…. உங்க மாதிரியே எனக்கும் பேர் வச்சுருக்கா… என்னைத் திட்றப்பவெல்லாம் அந்தப் பேர்தான் எனக்கு….”
”என்ன தெரியுமா…. விருமாண்டி….” என்றவன்
“எப்படி இருக்கு என்னோட பேர்….” என்று டீயை உறிஞ்சியபடி பேசியவன் கண்களில் பிங்கி காட்சி அளிக்க…
“குடித்த டீயை அப்படியே வைத்தவன்…” வேகமாய் அதன் முன் வந்து அதில் இருந்த ’தீக்ஷா விஜய் என்ற பெயரைப் பார்த்தபடி இருந்தவனிடம்…
“அன்னைக்கு கார் எடுத்த வேகத்தில மோதி கொஞ்சம் டேமேஜ் ஆகிருச்சு… நேத்துதான் மெக்கானிக் ஷாப்லருந்து எடுத்து வந்தோம்… சில பார்ட்ஸ் மட்டும் மாத்திருக்கோம்…. தம்பி”
அவர்களுக்குப் பதில் சொல்லவில்லை… ஆனால் மனதோடு பிங்கியோடு பேசிக் கொண்டிருந்தான்…
தீக்ஷாவாக இருந்தவரை அவளுக்கும்… பிரச்சனை இல்லை… உனக்கும் பிரச்சனை இல்லை… என்று அவ தீக்ஷா விஜய்யா மாறினாளோ அவ மட்டும் பிரச்சனையில் சிக்க வில்லை… நீயும் சிக்கிட்ட…. என்று ஆசையோடு அதைத் தடவியவன்…..
“நீ வந்த மாதிரி… என் தீக்ஷா என்கிட்ட வந்துருவாளா” அவனின் கேள்விக்கு அங்கிருந்து பதில் வரவில்லை…. வாய் ஓயாமல் பேசும் அவன் மனைவியே பேசா மடந்தையாகி விட்ட போது…. அந்த உயிரற்ற பொருள் பேசும் என்று எதிர்பார்க்கலாமா அவன்…..
சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கோண்டிருந்தவன்……. அவர்கள் மருத்துவமனையின் அருகில் ஒரு வீடெடுத்து தங்கியிருப்பதை அறிந்த விஜய்க்கு….. வார்த்தையே வரவில்லை…
இவனாவது அவள் கணவன்… இவர்கள் தீக்ஷாவுக்கு என்ன உறவு…. எப்படி இப்படி ஒரு பாசம்…. தீக்ஷா தன் தமக்கையின் கணவனின் தங்கை என்ற உறவு முறையில் இருக்கும் போது கூட அவள் மயங்கி விழுந்த போது…. தான் சுயநலமாய் நடந்தது நினைவுக்கு வர…… அப்போது தனக்குத் தெரிந்தே இரு முறை மயங்கி இருக்கிறாள்…. என்பது வேறு அவனைக் கொல்ல….
சிந்தனைகளின் ஓட்டத்தில் இருந்தவனுக்கு நேற்றி இரவு வந்த கனவு ஞாபகம் வர…. அந்த அளவு தான் தூங்கி இருக்கிறோமோ என்று நினைத்த போது….. ஒரு வாரம் களைப்பில் உறங்கி விட்டோம் போல என்று முதலில் விட்டு விட்டான்…
எல்லோருக்குள்ளும் மனிதம் இருக்கிறது