top of page
Writer's picturePraveena Vijay

அன்பே நீ இன்றி-42

அத்தியாயம் 42:

விஜய் தன் கையில் வைத்திருந்த… சிறு பெட்டியை தீனாவிடம் காண்பித்தான்…. இன்னைக்கு அவ பிறந்த நாள்டா….. என்ற போதே அவன் குரல் உடைய…. தீனா…. சமாதானப்படுத்த வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தான்….

விஜய் தொடர்ந்தான்…

”பேசிட்டே இருப்பாடா….ஒரு நொடி வாயை மூட மாட்டாள் தெரியுமா….. ரொம்ப விளையாட்டுத்தனம்… ஆனால் அவளுக்கு தவறுனு தெரிந்தால் எதிர்த்து கேட்காமல் விட மாட்டாள்…. ஆர்த்திய கடத்தி உன்னை மிரட்டினப்ப… அவ பண்ணின ஆர்ப்பாட்டம் இருக்கே….. " – அன்றைய நினைவுகளின் தாக்கத்தோடு தொடர்ந்தான்

“எனக்கு பயமா இருக்குடா…. கத்தி எடுத்தவனுக்கு கத்தியிலதான் சாவுன்னு கேள்விப்பட்டிருக்கேன்…. அது போல… எனக்கும் நடந்திடுமோன்னு பயமா இருக்கு தீனா…. “ என்றவன்…

“இப்போ இந்தப் பொண்ணைக் கூட அவங்க வீட்ல தேடுவாங்கள்ள தீனா…” விஜய் விழிகள்…. அலைபாய்ந்தன…

“சரிடா….நான் கிளம்புறேன்…’ என்று எழப் போனவனை நிறுத்திய தீனா…

“எங்க போற” என்று கேள்வியினை கேட்க…

“ப்ச்ச்……..எங்கேயோ…. தெருத் தெருவா தேடப் போறேன்….. அவ கிடைத்தால் விஜய்யா வருவேன்… இல்லை……… பொணமா வருவேன்…. என் உயிரே அவ தாண்டா….. இந்த நிமிசம் என் இதயம் துடிக்குதுனா… அப்போ அவளுக்கும் ஒண்ணும் ஆகி இருக்காது…. “ என்றவன் தன் நண்பனிடம்…

“ஒண்ணும் ஆகி இருக்காதுலடா…” நப்பாசையாய் வார்த்தைகள் விழுந்தன….

தீனா…. பதில் சொல்லாமல் அவன் கைகளை ஆறுதலாய்ப் பிடித்து தலை அசைக்க….

“என் தீக்ஷா எனக்கு கிடைப்பாள்டா….” இப்போது நம்பிக்கையாய் உறுதியாய்ச் சொன்னான் விஜய்….

அதே வார்த்தைகளை அவனுக்குள்ளே சொல்லிக் கொள்வது போல… தனக்குள்ளே பல முறைச் சொல்ல… தீனாவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது,…

“விஜய்…. நம்பிக்கையை தளர விடாதடா…. நீ தைரியமா இருந்தால் தான்…. நாங்க எல்லோரும்… தைரியமா இருக்க முடியும்…. நீ இப்டி தளர்ந்து போனேன்னா…. உன் குடும்பமே இடிஞ்சு போய்டும்டா….” என்று முடிந்த வரை ஆறுதல் சொல்ல… விஜய் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை…. அவன் போக்கில் பேசிக் கொண்டே இருந்தான்….

”தீனா…. இதுதான் என் மனைவி…. நீ பார்க்கவே இல்லைல….. என்று தன் மொபைலில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தபடி சொன்னவன்…. தீனாவிடம் அதைக் காட்ட வில்லை…. அதையே பார்த்தபடி இருந்தவன்…

“டேய் 2 சர்ப்ரைஸ்னு சொன்னா… ஒண்ணு அவ பிறந்த நாள்… இன்னொன்னு என்னவா இருக்கும்….” என்று தனக்குள் தான் பேசிக் கொண்டான்…………

தீனாவுக்கு அவனின் நிலை புரியாமல் இல்லை…. அவன் தனியே இப்படியே புலம்பினால் அவனுக்கு நல்லதில்லை.. இந்த நேரத்தில் அனைவரும் விவேகமாக… வேகமாக செயல் பட்டாக வேண்டும்… சும்மா புலம்புவதில்…. இல்லை ஆறுதல் படுத்துவதில் எதுவும் நடக்காது என்று முடிவு செய்தவன்..

“விஜய்… பேசிப் பேசி ஒண்ணும் ஆகாது…. வா… போகலாம் ” அந்த இடத்தை விட்டு அவனைக் கூட்டிக் கொண்டு தீனா நகரப் போகும் போது….. சுரேந்தர்…. போன் செய்தான்… மருத்துவர் விஜய்யைப் பார்க்க வரச் சொன்னதாக….

தீனா விஜய்யை அழைத்துக் கொண்டு அங்கே போக… அங்கும் அதிர்ச்சி காத்திருந்தது,….

“இந்தப் பொண்ணு ஒரு பேஷண்ட்… ஒரு இதய நோயாளி…… அவளைப் போய் பலாத்காரம் பண்ண முயற்சி செய்து இருக்காங்க…. ஆசிட் வேற ஊற்றி இருக்காங்க…. ரொம்ப டேஞ்சரஸ் கண்டிஷன்ல தான் இருக்கா அந்த பொண்ணு…. எங்களால முடிந்த வரை ட்ரை பண்றோம்…” என்று முடிக்க… வெளியில் வந்தனர் கனத்த இதயத்துடன்

நிலைகுலைந்து போயிருந்த விஜய்யைக் கூட………… அதிர்ச்சிக்குள்ளாக்கியது…

இப்போது விஜய் ஓரளவுக்கு தன் உணர்வுக்கு வந்திருந்தான்….

“தீனா இந்த நம்பர் தாண்டா அவனுங்க வந்த கார்…. நம்ம செல்வாக்கைப் பயன்படுத்தி.. அவனுங்கள உள்ள தள்ளனும்டா.. ஆனால் அந்தப் பொண்ணு விசயம் வெளிவராமல் பார்த்துக்கோ…. என்றவன்,… அதற்கும் முன்னால் இவளப் பற்றி தெரியனுமே…..” என்று குழப்பமாய் முடிக்க…

தீனா அவனிடம்..

“நான் பார்த்துக் கொள்கிறேன்… நீ உன்னையே குழப்பிக்காத……” என்றபடி சுரேந்தரை தனியே அழைத்துக் கொண்டு போனான்…..

“சுரேன்…. விஜய் ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கான்…. கொஞ்ச நேரத்துக்கு முன்னால அவனையுமறியாமல் பேசிட்டு இருந்தான்…. இப்போ டாக்டர் இந்தப் பொண்ணைப் பற்றி பேசியதில் …. கொஞ்சம் நார்மல் ஆகி இருக்கான்…. அவன் தீக்ஷா நினைவுல தன்னை மறக்கிறப்பலாம்.. இந்த பொண்ண வச்சுதான் டைவர்ட் பண்ணனும்… நாம காப்பாற்றின பெண்… அவளுக்கு ஒண்ணும் ஆகிடக் கூடாதுனு ஒரு அக்கறை அவன் மனசுல வந்திருக்கு…. தீக்ஷா கிடைக்கிற வரை… விஜய்ய நாம இத வச்சுதான் அவனை கொண்டு போகனும்…. இல்லை உங்க அண்ணா நிலை ரொம்ப மோசமாகிடும்” என்று சொல்ல… சுரேனுக்கு துக்கம் தாள முடியவில்லை..

தனியே நின்று கொண்டிருந்தான் விஜய்…. கண்ணாடியின் வழியே… உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணையே பார்த்தபடி இருந்தான்….. போராட்ட நிலையிலும் அவள் தன்னை நோக்கி கை கூப்பியது ஞாபகம் வர…. அவனையுமறியாமல் கண்கள் கலங்கியது……………. அந்த அபலைப் பென்ணுக்காக மனமாற வேண்டிக் கொண்டவனின் உள்ளம்….. தன்னவளையும் தன்னிடம் கொண்டு வந்து சேர்த்திட வேண்டி…. தவிக்க ஆரம்பித்தது,,,,

சுரேந்தர் விஜய்யிடம் வந்து…. ”அண்ணா…. நானும் தீனாவும்… போகிறோம்…. நீங்க இங்க இருங்க…. இந்த பொண்ணுக்கு டிரிட்மெண்ட் ஸ்டார்ட் பண்ண வேண்டுமென்று” டாக்டர் சொன்னார் என்று ஆரம்பிக்க….

விஜய்……. எதுவும் பேச வில்லை… பேச முடிய வில்லை…. அவர்களுக்கு பதில் சொல்லாமல்… தீக்ஷாவின் எண்ணையே தொடர்பு கொண்டிருந்தான் இப்போது…. அது அணைக்கப்பட்டிருப்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது…. இவனின் நிலை புரியாமல்….

சுரேந்தரும் தீக்ஷாவிடமிருந்த விஜய்யின் நம்பருக்கு முயற்சி செய்து கொண்டுதான் இருந்தான்… அணைக்கப்பட்ட நிலையிலே அந்த எண்ணும் இருக்க…. ஒரு கட்டத்தில் விட்டு விட்டான்…

ஆனால்…. விஜய் இன்னும் விடாமல் தொடர்பு கொண்ட்ருப்பதைப் பார்த்தவனுக்கு…… உயிர் துடித்தது…

சற்று தள்ளி வந்து…. அவன் அண்ணன் நம்பருக்கு தொடர்பு கொண்டான்…. நம்பிக்கையின்றிதான்…. ஆனால் நடந்ததோ வேறு..

அதுவரை அவன் முயற்சித்த போதெல்லாம் அவனை ஏமாற்றிய அந்த எண்… இப்போது அவனை ஏமாற்ற வில்லை….. ஆனால் எதிர்முனையில் இருந்து பதில் தான் இல்லை…. ரிங் மட்டுமே போனது….. இருந்தும் பரபரத்த உள்ளத்துடன்.. மீண்டும் தொடர்பு கொண்டான்…. எதிர்முனையில்………… ஹலோ என்ற ஆணின் கர கரத்த குரல் வந்து… மீண்டும் கட் ஆகியது

சுரேந்தர் தன் அண்ணனின் அருகில் போனான்… கத்தியபடி.

”அண்ணா…உங்க போன் ரிங் போகுது…. எடுத்தாங்கண்ணா.. ஆனால் தீக்ஷா இல்லை…… என்ற போதே விஜய்யின் முகம் வாடியது…

மீண்டும் சுரேந்தர் போன் செய்ய….. இப்போது ஹலோ வெல்லாம் பதில் வர வில்லை….

“சார்… நீங்க தீக்ஷாக்கு என்ன வேண்டும்… அவங்க எங்க கூட இருக்காங்க… விஜய் சார் கிட்ட நாங்க பேச முடியுமா” என்ற போதே சிக்னல் விட்டு விட்டு கிடைக்க… மீண்டும் கட் ஆக…. சுரேன் மனம் நிம்மதியில் லேசாகியது…

“அண்ணா நம்ம தீக்ஷா… கிடைச்சிட்டாண்ணா… உங்க கிட்ட பேசனுமாம்” என்ற போதே அவன் குரல் நடுக்கமும் சந்தோசமுமாய் வெளி வர…. விஜய் நம்ப முடியாமல் அவனைப் பார்த்தான்…

அண்ணா சிக்னல் ஒழுங்கா கிடைக்க மாட்டேன் என்கிறது… என்று மீண்டும் தொடர்பு கொள்ளப் போக

“யாருடா அவங்க…. “

“தெரியலண்ணா…. அநேகமா கடத்துனவங்களா கூட இருக்கலாம்”

விஜய் சொன்னான்..

“அவனுங்க பேசினால் நான் ஃப்ளைட் ஆக்சிடெண்ட்ல செத்துட்டேனு சொல்லுடா….. பரிதாபப்பட்டாவது என் தீக்ஷாவை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துருவாங்க” என்றவனின் வார்த்தைகளில் சுரேந்தர் அதிர்ச்சியாய்ப் பார்க்க

”அவளைக் கடத்தி வச்சுட்டு ப்ளாக்மெயில் பண்றவனுங்க…. நானே இல்லைனு தெரிந்தால் அவள விட்ருவாங்கடா…. அதுனாலதாண்டா”

என்ற வார்த்தைகளில் சுரேந்தரும்… அரை மனதாக தலை ஆட்டியபடி மொபைலில் கால் செய்ய ஆரம்பிக்க…

விதி விஜய் வாழ்க்கையில் அவன் வார்த்தைகளை வைத்தே மீண்டும் விளையாட ஆரம்பித்தது….

எதிர்முனை எடுக்கப்பட்டவுடன்…

சுரேந்தர் வேகமாய் பேச ஆரம்பித்தான்…

“இங்க பாருங்க…. நீங்க யார்…. தீக்ஷா எப்படி உங்ககிட்ட மாட்டினாள்…. அவ கிட்ட போனைக் கொடுங்க…. இப்போ அவ கணவனுடைய நிலை என்னனு தெரியுமா” என்று வேக வேகமாய்ச் சொல்ல…

“சார்…. எங்களை மன்னிச்சுருங்க…. விஜய் சாருக்கு என்ன ஆச்சு… அதை மட்டும் சொல்லுங்க…. “ என்றது எதிர் குரல்…

சுரேந்தருக்கு எரிச்சலாக வந்தது… தீக்ஷா பற்றி கேட்டால்… இவன்… நம்மகிட்ட பதில் சொல்லாம கேள்வி கேட்கிறான்… என்றபடி…

“விஜய் சார் பேசற நிலைமைல இல்லை…. புரிஞ்சுக்கங்க….. நான் அவர் தம்பிதான்… தீக்ஷா கிட்ட போனைக் கொடுங்க….“ என்று கோபத்தோடு சொல்ல,...

விஜய் பதறினான்…

‘”டேய் கோபப்படாமல் பேசு..” என்று சைகை காட்ட…

“விஜய் சார் பேசற நிலைமல இல்லைனா…..“ இழுத்தது அந்தக் குரல்…

சற்று நேரத்தில்… தீக்ஷா தங்கச்சிட்ட போனைக் கொடுக்கிறேன்… பேசுங்க என்று போன் மாறிய போது…

“டேய் புரிஞ்சுக்கோங்க… பேசுற நிலைமல இல்லை என்றால்….. இன்னைக்கு நடந்த ப்ளைட் ஆக்சிடெண்ட்ல….” என்றவன் அதற்கு மேல் சொல்ல பொய்யாக கூட வார்த்தை வராமல் நிறுத்த

”சு…. ரே…. ன் அ…….த்……..தா…….ன்…………. ” என்ற தீக்ஷாவின் நடுங்கிய அதிர்ச்சியான குரல்தான் அவனை அடைந்தது……

அவளின் நிலை தெரியாமல் சுரேன் மனம் துள்ள சந்தோஷத்தோடு…

“தீக்ஷா நான் சுரேன் அத்தான் பேசுறேன்மா…” என்று அவன் முடிக்க வில்லை… விஜய் பறித்து…

”தீக்ஷா தீக்ஷா… நான் நான் இந்தர் பேசறேன்.. உன் இந்தர் பேசறேன்….” உணர்வுக் குவியலாய்ப் பேசியவனின் குரலுக்கு எதிர் முனையில் பதில் இல்லை…. மௌனமே அவனுக்கு பதிலாய் வர…. விஜய்………… ஏதேதோ பேசினான்… எதற்கும் பதில் வராமல் போக….இப்போது….. தீக்ஷாவுக்குப் பதில் வேறொரு குரல் பேசியது….

”சார் நாங்க வீட்டுக்கு வருகிறோம்…. ஆனால் அட்ரெஸ் தெரியலை… உங்க போனையும் ஆபரேட் பண்ண முடியலை… விஜய் பில்டர்ஸுக்கு போய்ட்டு இருந்தோம்” என்று முடிக்க வில்லை…

”அவளுக்கு என்ன ஆச்சு……. ஏன் பேச மாட்டேன்கிறா….. என்று கோபமாய்க் கேட்டான் விஜய்….

”அவங்க அதிர்ச்சியில இருக்காங்க சார்…. அவங்க டிவியில் நியுஸ் பார்த்து….. ஃப்ளைட் ஆக்ஸிடெண்ட்ல…” என்ற போதே

‘டேய் நான் அவ புருசன்தான்டா பேசுறேன்…..பேசச் சொல்லுங்கடா” என்ற போதே விஜய்க்கு குரல் உடைய…. உடல் நடுங்க… அவனை உணர்ந்த தீனா …போனை வாங்கி பேசினான்….

”தீக்ஷா அதிர்ச்சியில் இருக்கிறாள்” என்பதை உணர்ந்த தீனா…. தாங்கள் இருக்கும் மருத்துவமனை முகவரி சொல்ல…..

சற்று நேரத்தில் தீக்ஷா அங்கு வந்தாள்… வந்தாள் என்று சொல்வதை விட கூட்டி வரப் பட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்..

அது மட்டும் இல்லை… தீக்ஷா அங்கு வருகிறாள்… என்று இரு வீட்டாருக்கும் சொல்லப் பட…. அனைவரும் குழுமி விட்டனர்… யார் அவளைக் கடத்தியது… அவளைக் கூட்டிக் கொண்டு வருபவர் யார் எந்த விபரமும் தெரிய வில்லை அங்கிருந்த அனைவருக்கும்… போனில் பேசி… எதையும் குழப்பாமல் … அந்த நபர்களை … அவர்கள் வரும் வழியை எல்லாம் கேட்ட சுரேந்தர்…. அவர்கள் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மைதானா என்று அறிய ….. தங்கள் ஆட்களை அனுப்பி இருந்தான்…

கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில்…. அதுவரை அனைவரையும் தவிக்க விட்ட தீக்ஷா…. அவர்கள் கண்பார்வையில் தோன்றினாள்… விஜய் பாய்ந்து அந்தக் காரின் அருகே போக…. தீக்ஷா வழக்கம் போல்…….தன் துள்ளளுடன் இறங்குவாள் என்று எதிர்பார்க்க… அவளோ தான் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்க…. விஜய் அவள் காரின் உள்ளே போய் அவள் அருகே அமர்ந்து…. ஒரு முறை…. முழுவதுமாய் பார்வையால் அலசியவன்… நிம்மதியில் தன் தோளோடு சாய்க்க…. தீக்ஷாவின் உடல் நடுக்கத்துடன் தூக்கி வாரிப் போட்டது.

“நான் உயிரோடத்தான் இருக்கேன்…. என்னைப் பாரு தீக்ஷா…. எனக்கு ஒண்ணும் ஆகலடா” என்று அவள் முகம் திருப்ப…. அவள் கண்கள் மட்டுமே சுழன்றது…………… ஆனால் அதில் நிராசை மட்டுமே இருக்க……….. விஜய்யைப் பார்த்தபடியே கண் மூடினாள் தீக்ஷா……………

ஏதேதோ சொல்லிப் பார்த்தான்…… பதில் தான் வர வில்லை..

“பேசுடி………. என்னைப் போக விடாமல் பண்ணி… என்னைக் காப்பாத்திட்ட தீக்ஷா…. நம்ம காதல் என்னைக் காப்பாத்திச்சுருச்சுடி…. பேசு தீக்ஷா…..” என்று மனைவியைத் தோளில் சாய்த்தபடி பேசியவனிடம்… தீபன் தான் பேசினான்…

”விஜய் அவ அதிர்ச்சில இருக்கா…. கொஞ்சம் நேரம் ஆச்சுனா சரி ஆகிடுவா” என்று சொல்ல… விஜய்… தானே தூக்க போனான்… ஆனால் அவனால் முடியவில்லை…. கை காலெல்லாம் நடுங்கியது….

யாரோ ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்ற போது…. வேகமாய் செயல்பட்ட அவன் மனமும் உள்ளமும்… அவன் மனைவி விசயத்தில் வேலை நிறுத்தம் செய்ய…. தடுமாறினான் விஜய்… அதைக் கவனித்த தீபன்… அவனைத் தடுத்து.. தன் தங்கையைத் தூக்கியபடி மருத்துவ மனைக்கு போக…. ஜெயந்தி…. முதல் அனைவரும் அவன் பின்னால் போக…. விஜய் வெறித்தபடி அமர்ந்திருந்தான்……….

அவனுக்கு தீக்ஷா அவனைப் பார்த்தபடியே கண்மூடியது ஞாபகம் வந்து உயிரைக் கொல்ல……… அவளைக் கூட்டி வந்தவர்களைப் பார்க்க…. அவர்கள் இருவரும் அவளைக் காப்பாற்றி கூட்டி வந்தவர்கள் போல இல்லை… அக்மார்க் ரவுடிகள் போல் இருக்க… விஜய் அசோக்கிடம் சொல்லி… இருவரையும் அவன் கஷ்டடியில் வைத்திருக்கச் சொல்லி விட்டு…… தன் மனைவியை நோக்கிப் போனான்

தீக்ஷாவை பரிசோதித்த மருத்துவர்…. அவளுக்கு ஒன்றுமில்லை… அதிர்ச்சி மட்டும் தான்… ஓய்வெடுத்தால் சரி ஆகி விடும் என்று சொல்ல… நிம்மதியில் இரு குடும்பமும் அப்போதுதான் பெருமூச்சு விட்டது….

விஜய் மட்டும்……….. அப்போதும் ஏதும் பேச வில்லை…. நிம்மதியாய் இருக்க முடியவில்லை… எங்கோ மனம் நிம்மதி அடைய மறுத்தது…………. அவள் தன்னைப் பார்த்து இந்தர் என்று சொல்லும்வரை அவனின் மனம் சாந்தமாகாது… என்றே அவனுக்கு தோன்ற….. இறுகிய முகத்தோடு தன் மனைவியின் அருகில் அமர்ந்திருந்தான்….

இடையில்.. இத்தனை பேர் அங்கிருந்தால் மருத்துவமனையின்… சூழல் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த.. சுரேந்தர்… அனைவரையும் அழைத்துக் கொண்டு…. கிளம்ப….. யுகியும்.. ஜெயந்தியும் மட்டுமே விஜய் தீக்ஷாவோடு இருந்தனர்….

தீனா……. விஜய்யிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப….. விஜய் அவனைப் பிடித்து நிறுத்தினான்…

“தேங்க்ஸ்டா… இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் நான் வந்து உதவி பண்ணி இருப்பேனா என்று தெரியலைடா…….. ஆனால் நீ” என்று சொன்ன போது விஜய்யின் குரல் கிணற்றுக்குள் இருந்து வருவது போல் இருந்தாலும்… உணர்ச்சியின் பிடியோடு சொல்ல……

“என்னடா மச்சான்……….. எந்த நேரத்தில் எதைப் பேசுறதுனு உனக்குத் தெரியாதா….. முதலில் உன் மனைவியைக் கவனி… நீயும் ரொம்ப தளர்ந்து இருக்க….. உன்னையும் பார்த்துக்கோ… நான் அந்தப் பொண்ணை கடத்துனவங்களை விசாரிக்கச் சொல்லி இருக்கேன்…… டேக் கேர்” என்றபடி நகரப் போக…. விஜய் அவன் கைகளை விடவே இல்லை…

“தீனா……….. இன்னைக்கு மட்டும் என் கூட இருக்கியா….. ஒரு மாதிரி நடுக்கமா இருக்குதுடா….. தீக்ஷா கண் விழிக்கிறவரை…. ப்ளீஸ்” என்று சிறுவன் போல் கெஞ்சியவனைப் பார்த்த தீனா… மறுப்பேதும் சொல்லாமல் அவனருகில் அமர்ந்தவன்……… சரி நான் கீழ இருக்கேன்….. நீ இங்கேயே இரு என்று கீழே இறங்கினான்….

ஜெயந்தி…….. மகளின் அருகில் சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தாள்….. மகளுக்கு ஒன்றுமில்லை என்று மருத்துவர் சொன்னாலும்…. தாயாக அவளின் மனமும்…. சஞ்சலப்பட்டது….. அதுவே அவளின் அழுகையாக வந்து கொண்டிருக்க……….. விஜய் தீக்ஷாவின் கையைப் பிடித்தபடி அவளின் தலைமாட்டில் தன் தலையை வைத்து கண் மூடினான்….

அவன் அவனாகவே இல்லை… என்றுதான் சொல்ல வேண்டும்…. நினைவுகள் எதைப் பற்றியும் இல்லை… வெறுமையாக இருந்தது….. இனி என்ன ஆகும் என்று யோசிக்கவும்… இதுவரை என்னவெல்லாம் நடந்தது என்று பின்னால் செல்லவும் இல்லை…. தன்னவள் கண் விழித்து தன்னை இந்தர் என்று கூப்பிடும் நிமிடத்தைத்தான் அவன் எதிர்நோக்கி காத்திருந்தான்…………..

யுகியோ கண்ணாடியின் வழியே…………. தன் அண்ணாவையும்…. தீக்ஷாவையும் பார்த்தபடியே தான் நின்று கொண்டிருந்தான்………….. விழிகள் அவனையுமறியாமல் கண்ணீரை உகுத்தது……

தீக்ஷாவை முதன் முதலில் பார்த்ததில் இருந்து……………. அவள் கடைசியாக அவன் காரை விட அவள் பைக்கை பெருமையாக பேசியது ஞாபகம் வர…….. துக்கம் நெஞ்சை அடைத்தது….. அவனால் தீக்ஷாவின் நிலையைத் தாங்கவே முடியவில்லை……. அதை விட தன் அண்ணனின் நிலை…. ஒரே இரவில் தன் கம்பீரம் தொலைத்து………… தன் சுயத்தை இழந்து…….. அனைவரின் பரிதாபப் பார்வைக்கும் ஆளானது போல் தோன்ற……….. உதடுகள் துடித்தன யுகிக்கு………….

ஜெயந்தி அழுதபடியே வெளியே வர……. யுகி அவளின் அருகில் போய் அமர்ந்து….

“தீக்ஷாக்கு ஒண்ணும் ஆகாது அத்தை…. இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுந்து உட்கார்ந்து நம்ம அத்தனை பேரையும் ஓட்டுவா பாருங்களேன்…..“ என்று தன் துக்கமெல்லாம் தூரப் போட்டு விட்டு அவளை ஆறுதல் படுத்த…

”இது போல ரெண்டு தடவை ஆகி இருக்கு தம்பி… ரெண்டு மணி நேரத்தில் எழுந்துட்டா…. இப்போ என்னமோ பயமா இருக்கு….” கண்களைத் துடைத்தபடியே சொன்னவளை நம்பிக்கையோடு பார்த்தான் யுகி….

“இன்னைக்கும் அதே போலதான் நடக்கும்………. வைஜெயந்தி அத்தை” என்று சிரிக்க….. ஜெயந்தி விசும்பலோடே சிரித்து வைத்தாள்….….

அப்போது ஒரு செவிலி வேக நடை எடுத்து வைத்து அவர்களை நோக்கி வர…. யுகியும் அருகில் போனான்…

“சார் அந்த ஆசிட் கேஸ்… கார்டியன் ..’ என்று இழுக்க…

“சொல்லுங்க…. என்று யுகியும் பதட்டமாய்க் கேட்க….

“அவங்க ட்ரீட்மெண்ட்டுக்கு கோ-ஆப்ரேட் பண்ண மாட்டேங்கிறாங்க… அது மட்டும் இல்லாமல் அவங்க பக்கத்தில் யாருமே இல்லை” என்று வேக வேக மாய் சொல்ல…

யுகி முன்னே போக….. ஜெயந்தியும் ஒரு பெண்ணின் தாய்தானே…. அவளின் தாயுள்ளம் உருக ஆரம்பிக்க…. யுகி பின்னாலே அவளும் சென்றாள்….

அங்கு திமிறியபடி இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்த யுகிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை…. என்ன சொல்லி அழைப்பது….. பெயர் கூட தெரியாது…. யுகி அவஸ்தையாய் ஜெயந்தியைப் பார்க்க…

“நீங்க விஜய் தம்பியை கூட்டிட்டு வாங்க” என்றபடி...... வலியால் முணங்க கூட முடியாமல் தவித்த அந்த இளம்பெண்ணின் அருகில் தாய்மை உள்ளத்தோடு அமர்ந்து…. அவள் தலை கோத… அந்தப் பெண் அப்போதும்…………. மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இருக்க…. விஜய் வந்தான்…………

“என்னாச்சு” என்றபடி வர….. திமிறிக் கொண்டிருந்த அவள் இவன் குரலைக் கேட்டதும்…. தன் போராட்டத்தை தளர்த்த….

“சார் கொஞ்சம் கூட ஒத்துழைக்க மாட்டேன்கிறாங்க…. எப்படி ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறது…” அங்கிருந்த நர்ஸ் எரிச்சலுடன் கூற…

விஜய் அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்து…. அவள் கைகளை ஆறுதலாக பிடித்தபடி…

“உன் பேர் கூட தெரியாதும்மா எனக்கு…. நீ சரியானால் தான்… உன்னைச் சேர்ந்தவங்கள கண்டுபிடிச்சு உன்னை ஒப்படைக்க முடியும்… நீ இப்போ இருக்கிற நிலைமைல… உன்னாலும் சொல்ல முடியலை…. உனக்கு ஒண்ணும் ஆகலை... நீ தைரியமா இருக்கணும்….” என்ற போதே…

தைரியம் என்ற வார்த்தைகளைக் கேட்ட போதே….. சக்தியின் கண்களில் நீர் வழிந்தது… அவளின் பெயரிலே சக்தி இருக்கிறது…. ஆனால் தனக்கு நடந்ததை தடுக்க முடியாத கோழையாகி போனேனே….

தன் தாய் தந்தை நினைவுகள் ஒருபுறம் வாட்ட…….. தனக்குள் முடிவு செய்தவளாய் விஜய்யின் கைகளை… அவளது கை அழுத்தமாய் பற்றி விட…….. விஜய் அவள் முகத்தைப் பார்க்க…. அதில் கண்ணீர் வழிய….. அதைத் துடைக்க கூட அவனால் முடியவில்லை…..

அவள் அமைதியானாள்… ஆனால் விஜய் உள்ளம் எரிமலையாய்க் குமுறியது……….. அதன் பிறகு அங்கிருந்த மருத்துவர்கள்….. சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பிக்க… ஜெயந்தியும்…. விஜய்யும் வெளியேறினர்…..

தீனா வெளியே இருந்து இதையெல்லாம் கவனித்துக் கோண்டேதான் இருந்தான்…

ஜெயந்தியை மட்டும் அங்கே விட்டு விட்டு….

தீனா…. விஜய்யிடம் தனியே வந்து பேச ஆரம்பித்தான்..

“விஜய்…. அந்தப் பொண்ணு பேரு சக்திடா….. அந்த பசங்கள பிடிச்சுட்டாங்க…. இவகிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணியது…. அவளோட காதலன் தானாம்…. அவங்க அப்பா அம்மா டீடெயில்ஸ்லாம் கலெக்ட் பண்ணியாச்சு… வந்துட்டு இருக்காங்க” என்றவனிடம்…

”ஹ்ம்ம்ம்ம்………..” என்று தலையாட்டியவனை கவலையோடு பார்த்தவன்…

“தென்…. தீக்ஷாவைக் கூட்டிட்டு வந்தவங்க….. தீக்ஷா கண் முழிக்காமல்… அவளப் பார்க்காமல் போக மாட்டேனு பிடிவாதம் பிடிக்கிறாங்கடா….. என்ன பண்ண…” என்ற போது நிமிர்ந்தான் விஜய்…………..

“யாரு அவங்க….” விட்டேற்றியாகக் கேட்டான்…

அவங்க என்று ஆரம்பிக்கும் போதே…

மருத்துவர்…. விஜய்யை மீண்டும் பார்க்க வரச் சொன்னதாக கூற விஜய்……அங்கு சென்றான்……

நேற்று மாலை தொடங்கிய அலைச்சல்…. இன்னும் அவனை விட்ட பாடில்லை….. உடலும் மனமும் சோர்ந்து போய் இருந்தாலும் உறக்கம் என்பது அவனை எட்டவே இல்லை….

இந்தப் பெண் சக்தியை பார்த்து விட்டு வந்த பிறகு..

மனம் முழுக்க ஒரே ஒரு கேள்விதான் அவனை ஆட்சி செய்து அரித்துக் கொண்டிருந்தது…. அது என்னவென்றால்…

சில மணி நேரத்திற்கு முன் தான் அந்தப் பெண் சக்தி தன்னை பார்த்தாள்………. அதற்குள்ளாகவே என் குரலை…. என்னை…. உணர்ந்து கொண்டாள்…. ஆனால் தீக்ஷா….. தன் மனைவி….. தன்னை உணராமல் இருக்கிறாளே என்ற நினைவுதான்….

தன்னையே நொந்தபடி மருத்துவரின் தனி அறை நோக்கி நடந்தான்…

அவனுக்கு எதையும் எதிர்கொள்ளவே பயமாய் இருந்தது….. ஒருபுறம் இளமாறனின் இறப்பு…. மனதில் உறுத்திக் கொண்டிருந்தது… இன்னொரு புறம் தீக்ஷா….. அவள் கிடைத்து விட்டதால் மனம் இலேசாக வேண்டும் தான்…. ஆனால் முடியவில்லை …

இதை எல்லாம் விட்டு அந்த சக்தி….. பரிதாபமாக இருந்தது அவளை நினைத்து…. ஒரு பெண்ணாக அவள் அனுபவிப்பது எல்லாம் கொடுமையாக தோன்றியது விஜய்க்கு…. காதலித்தவனே அவளுக்கு எதிராக மாறி நடந்தது இன்னும் வேதனையை அளிக்க… பல எண்ண ஓட்டங்களுடன்தான் அவன் மருத்துவரை சந்தித்தான்…


அங்கும் மட்டும் அவனுக்கு நல்ல செய்தியா காத்திருக்கும்…. அதிர்ச்சிகளின் தொடர்ச்சி அவனைத் துரத்தியது…

கையில் ரிப்போர்ட்டோடு இருந்த ரேவதியின் முன் அமர்ந்த போது………..விஜய் குழப்பமாய் அவளையே பார்க்க…

ரேவதியின் கணவன் விஜய்யின் தோழன்….

ரேவதியின் தாய் தான் இந்த மருத்துவமனையின்….. தலைவர்……

“என்ன ரேவதி…… “ என்ற போதே

”விஜய் அண்ணா…. தீக்ஷா பற்றி அம்மா உங்க கிட்ட பேசனும்னு சொன்னாங்க… வெயிட் பண்ணுங்க” என்ற போதே அவள் தாய்….. உள்ளே வர

விஜய்க்கு இன்னும் குழப்பம் … தீக்ஷாவுக்கு என்ன…. என்று குழப்பத்தோடு பார்க்க…

“விஜய் நான் உனக்கு மருத்துவராக மட்டும் தெரிந்திருந்தால் இந்த விசயத்தை எந்த தடங்கலும் இல்லாமல் சொல்லி இருப்பேன்….” என்று நிறுத்த

விஜய்யின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது… வார்த்தையே வராமல் நிலை குத்திய விழிகளுடன் அவரையே பார்க்க…..

சொல்லித்தான் ஆக வேண்டும்…..என்பதால்… அவரும் தொடர்ந்தார்

உன் மனைவிக்கு அதிர்ச்சியில்…. நினைவு தப்பியது மட்டும் இல்லை…. கருச்சிதைவும் ஏற்பட்டிருக்கிறது……. 35 நாள்” என்று சொல்லி விஜய்யைப் பார்க்க………. விஜய்……………… அந்தச் சூழ்நிலையிலும் தன்னை அடக்க முயற்சித்தான்.. உதடுகளை அழுந்த மூடியவன்……. உட்கார்ந்திருந்த நாற்காலியின் முனையை அழுத்தமாக பற்றினான்……. இருந்து அவன் கண்கள் கலங்கியதை அவனால் தடுக்க முடியவில்லை… ஒருவாறு தன்னைச் சரிபடுத்தியவன்……..

”என.. எனக்கு தீக்ஷா நல்லபடியா கிடைத்தால் போதும் ஆண்ட்டி………. அது போதும் ஆண்ட்டி..” என்றவனின் குரல் தடுமாறி வெளிவர…..

விஜய்… கண்ட்ரோல் யுவர்செல்ஃப்.. இந்த மாதிரியான சூழ்நிலையில் நீ தைரியமா இருக்க வேண்டும்…. என்றபடி………….

”அதுமட்டும் இல்லை உன் மனைவிக்கு முன் தலையில் சமீபத்தில் அடிபட்டிருக்கிறது போல…” என்று எடுத்த ரிப்போர்ட்டை காட்ட விஜய்யின் ரத்த ஓட்டத்தோடு அமிலம் கலந்தது போல துடித்து நிமிர………

“இதுவும் ஒரு காரணம்… அவளோட இப்போதைய நிலைக்கு…………. ஒரே நேரத்தில் பல அதிர்ச்சிகள்.. மனதளவிலும்…. உடலளவிலும்………” என்ற போது…………. விஜய் என்கின்ற விஜயேந்தர்க்கு அதன் பின் அவர் என்ன பேசினார்.. என்ன சொன்னார் என்றெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை………..

தீக்ஷா கோமா ஸ்டேஜில் இருக்கிறாள் என்பது காதில் விழுந்த விசயங்களை சேகரித்து மூளை நிரப்ப……. விஜய் நடைபிணமாய் தன்னவளை நோக்கிப் போனான்……..

இடையில் வந்த யுகி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவன் பதில் சொல்லாமல்…………. தன் அடையாளமே இல்லாமல் அமைதியாய் கண் மூடி படுத்திருந்த தீக்ஷாவின் முன் மண்டியிட்டு அமர……………..

அவனைத் தொடர்ந்து வந்த யுகிக்கும் கலவரம் கூடியது…….

“என்னாச்சு அண்ணா” என்ற போதே

விஜய்யின் கண்களில் கண்ணீர வர……………….

“உன்னோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணமா தீக்ஷா…………..“ என்று தன்னையே கட்டிலின் முனையில் முட்டிக் கொள்ள… பதறித் தடுத்தான் யுகி…

”என்னை விடுடா……….. நான் ஒரு பாவிடா…. அரக்கன்…. உயிரோடவே இருக்கக் கூடாது………… இன்னைக்கு இந்த நிலைமையில இருக்காளே அதுக்கு காரணம் எதுனு தெரியுமா…. அன்னைக்கு நான் தள்ளி விட்ட வேகத்தில் நெற்றியில முட்டியதுதானாம்…. இவதான் எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்குருவாளே…. ஈசியா விட்டுட்டா…. இன்னைக்கு… என்னை நோக்கி எல்லாமே திரும்பி வருதுடா….. அவளை எழுந்து என்கிட்ட பேசச் சொல்லுடா…. என்ன தண்டனைனாலும் அவள கொடுக்கச் சொல்லுடா…. ஆனா அவள வருத்தி எனக்கு தண்டனையக் கொடுக்கிறாடா…. எனக்கு பயமாருக்கு யுகி…. எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குடா…. “ என்று துடித்தவனைப் பார்த்த யுகி……… கதறினான்…

“என்னண்ணா சொல்றீங்க…. தீக்ஷாக்கு என்னாச்சு” என்ற போதே…………..

“எனக்கு என் தீக்ஷா கிடைப்பாளாடா……… பயமா இருக்குடா….” என்ற போதே விஜய்யின் மொபைலுக்கு இளமதியிடமிருந்து கால் வர…. யுகி தான் எடுத்தான்…

போனை வைத்த போது….யுகியின் கண்கள் சிவந்திருக்க….

“அந்த இளமாறனை நம்புனீங்கள்ள….. நம்ம தீக்ஷாவைக் கடத்தச் சொன்னதே அவன் தானாம்…. கடத்த மட்டும் இல்லண்ணா…………. அதுக்கும் மேல” என்ற போதே அவனால் சொல்ல முடியவில்லை…

”அவன் இப்படி இறந்திருக்கக் கூடாது,…. என் கையால சாகாமல் விபத்தில் போய்ட்டானே…. “ இறுகினான் யுகி………

புரியாமல் பார்த்தான்

“அவன் ஏண்டா தீக்ஷாவைக் கடத்தனும்” என்ற போதே யுகி எரிந்து விழுந்தான்………

“இப்போ கூட அவன நம்புறீங்களா…. தீக்ஷாவைக் கடத்தி….. அவள……. அவள……..” என்றவனின் வார்த்தைகள் விஜய் காதில் தீயாய் விழ………… தீக்ஷாவை அவன் விழிகள் அவசர அவசமாய் அளவெடுக்க ஆரம்பிக்க….. அவனால் தாங்க முடியாமல்…….கீழே ஓடினான் விஜய்………….

தீனா,யுகி பிடித்து நிறுத்த முயற்சித்தும் முடியாமல் பைத்தியக்காரன் மாதிரி ஓடியவனைப் பார்த்த இருவரும் அவன் பின்னே ஓட…

விஜய் நின்றது… தீக்ஷாவைக் கூட்டி வந்தவர்களிடம்தான்………………

அவன் அவர்களிடம் கோபம் கொண்டு அவர்களைக் குதறவில்லை…. மாறாக…. விஜய் அவர்கள் முன் கை கூப்பி கேட்டான்……………. தன் கம்பீரம் எல்லாம் தொலைத்து…….

“என்ன ஆச்சு என் தீக்ஷாக்கு…………….. எதையும் மறைக்காதீங்க………… உங்களுக்கு எல்லாம் தெரியும்…………. தானே… என்னடா பண்ணுனீங்க அவள…. அவ இருக்கிற இடம் எப்படி இருக்கும் தெரியுமா…. சூறாவளி மாதிரி சுத்திட்டு இருந்தவளை இப்டி ஒரே நிலைல படுக்க வச்சுட்டீங்களே…. “ என்ற போதே அவன் அவர்கள் முன்னே தொய்ந்து விழுந்தான்…………….. அதற்கு மேல் பேச முடியாமல்…

“அய்யோ தம்பி…. எங்கள மன்னிச்சுடுங்க………….. எல்லாமே எங்களால்தான்” என்று சொல்ல ஆரம்பித்தனர்….…

-------------

தீக்ஷா கைகளைக் கட்டியபடி…. தன்னை நோக்கி வந்தவர்களைப் பார்த்து நின்றிருக்க…..

“டேய் என்னடா இந்த பொண்ணு கொஞ்சம் கூட பயம் இல்லாம நிற்குது” தங்களுக்குள் பேசிக் கொண்டே அருகில் வர…

”என்னைக் கடத்தப் போறிங்களா…. சரி வாங்க போகலாம்” என்றபடி அவர்கள் வந்த வாகனத்தை நோக்கி முன்னே நடக்க…. குழம்பினர் வந்த இருவரும்…

“என்ன அங்கேயே நிற்கறீங்க… வாங்கப்பா” என்றவள்………..ஒரு நிமிசம்… இந்த பைக் சாவியப் பிடிங்க…. நீங்க ஒட்டிட்டு வாங்க…

அவளிடமிருந்து சாவியை வாங்கியவன்

”டேய் நீ போடா…. நீ போய் காரை ஓட்டு… பொண்ணு தப்பிச்சு போகப் போறா…” என்று சொல்ல…

இவன் போவதற்குள் தீக்ஷா வாகனத்தில் அமர்ந்திருந்தாள்…..

“ஒகே போகலாமா… இது என்னோட போன்… ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டேன்….” என்றபடி அவனிடம் கொடுத்தவளின் கைகளை கட்டப் போக….

”கையைக் கட்றதெல்லாம் சரி…. நான் பேசிட்டேதான் வருவேன்…. இவ்ளோ ஒத்துழைப்பு கொடுக்கிறேன்… அதுனால வாயெல்லாம் கட்டக் கூடாது….” என்றவளை வித்தியாசமாய்ப் பார்த்தான் காரில் அமர்ந்தவன்…

“ஹலோ உங்க ரவுடி ஃப்ரெண்ட்… என் பிங்கிய ஓட்டிட்டு கிளம்பிட்டாரு…. கிளம்புங்க” என்று சிரித்தவளை பார்த்தவனுக்கு…… சந்தேகமே வந்து விட்டது… எதற்கும் மீண்டும் சரி பார்த்துக் கொள்வோம் என்று ஒருமுறைக்கு இருமுறை தன்னிடமிருந்த புகைப்படத்தை பார்த்து உறுதி செய்தபடி…. காரைக் கிளப்பினான்……….

தீக்ஷாவுக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும்….அவளுக்கும் வேறு வழி இல்லை என்றே தோன்றியதால்…. மித மிஞ்சிய தைரியம் என்று தெரிந்தும் இவர்களுடன் ஏறி விட்டாள் தான்….

தீனாவின் ஆட்கள் என்று நம்பியதாலே அவளின் இந்த தைரியம்… ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று தீனாவின் மேல் இருந்த ஏதோ ஒரு நம்பிக்கையில்… ஏறியவளுக்கு தன்னால்…. அவன் கனவாகிய இந்த ப்ராஜெக்டை தன் கணவன் இழந்து விடுவானோ என்றுதான் கவலை…. சரி கடவுள் விட்ட வழி என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டவள்…………..

”அண்ணா……………………” என்று ஏதோ பேச ஆரம்பிக்க……….

“என்னது அண்ணனா” என்று காரை ஓட்டியவன் உறும………..

அவனின் உறுமலில் தீக்ஷாவும்

“என்ன ஆரம்பமே சரி இல்லை…. சரி கொஞ்ச தூரம் போனதும் பேச ஆரம்பிக்கலாம்” என்று வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்……………….

1,537 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 comentario


மக்கு தீக்ஷா.... அச்சச்சோ பாவம்

Me gusta
© 2020 by PraveenaNovels
bottom of page