top of page
Writer's picturePraveena Vijay

அன்பே நீ இன்றி-33

அத்தியாயம் 33:

அந்த ஹோட்டலின்… கார்ப் பார்க்கிங்கில் தன் வண்டியை நிறுத்தியவள்….. பைக் கீயை சுழற்றியபடி துள்ளல் நடை போட்டு…. ஹோட்டலின் உள்ளே வந்தாள்….

நடை துள்ளளாக இருந்தாலும்… அவள் மூளைக்குள்…. யாரிடமும் சொல்லாமல் இங்கு வந்தது சரியா தவறா என்று வேறு இருக்க….

“என்ன ஆகப் போகுது….. என்னை யார் என்ன பண்ணிடுவாங்க…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்….பார்வையைச் சுழற்றினாள்…. தன் பார்வை வட்டத்தில் இளமதி சிக்குகிறாளா என்று நோட்டமிட்டவள்… இளமதியின் எண்ணிற்கு மீண்டும் கால் செய்தாள்….

“இளமதி எங்க இருக்கீங்க” என்றவளின் முன் இளமதியே வந்து நின்று புன்னகைக்க…. தீக்‌ஷாவும் பதிலுக்கு அவளுக்கு புன்னகையை சிந்தியபடி…..

”எதற்காக இளமதி தன்னை சந்திக்க வேண்டும் என்று கால் செய்தாள்” என்ற சிந்தனை உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது…..

கிட்டத்தட்ட 10 நிமிடம் எந்த ஒரு பேச்சும் இல்லாமல் அமைதியாக போய்க் கொண்டிருந்தது…..

தீக்‌ஷா இளமதியிடம் எதுவும் பேசாமல்… இளமதி ஆர்டர் செய்த பழரசத்தை மிகவும் கண்ணும் கருத்துமாக குடித்துக் கொண்டிருக்க… இளமதியோ உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தாள்….

பின் தானே பேச்சை ஆரம்பித்தாள்…

”கங்கிராட்ஸ் தீக்‌ஷா“ வெளியில் புன்னகையும் உள்ளுக்குள் நஞ்சினையும் தேக்கியவளாய் தீக்க்ஷாவுக்கு திருமண வாழ்த்துக்களை சொன்னாள் இளமதி…

அவளின் வாழ்த்தினை ஏற்றுக் கொண்ட தீக்ஷா… மீண்டும் பேசாமல் இருக்க….

இளமதியே மீண்டும் எரிச்சலுடன் தீக்‌ஷாவுடன் பேச ஆரம்பித்தாள்

“தீக்‌ஷா நீ வாய் ஓயாமல் பேசுவேனு கேள்விப்பட்டிருக்கிறேன்….. ஆனால் எதிர்மாறா அமைதியா இருக்கிறாயே” என்ற போது…

“ஹ்ம்ம்…. ஆனால் உங்ககிட்ட பேசுறதுக்கு எதுவுமே இல்லை இளமதி…. அதுமட்டுமில்லாமல் நீங்கதான் என்கிட்ட பேசனும்னு சொன்னீங்க” என்றபடி மீண்டும் ஜுசைப் பருக ஆரம்பித்தாள்….

”ஏன் என்கிட்ட பேச விசயம் இல்லை…. விஜய் …. போதாதா… நாம ரெண்டு பேரும் பேசுறதுக்கு” என்றாள் இளமதி….. இப்போது இளமதியும் சூடாகவே பேச ஆரம்பித்திருக்க

தீக்ஷாவுக்கு சுள்ளென்று ஏறியது…. இளமதியின் ‘விஜய்’ என்ற உச்சரிப்பில்… வந்த கோபத்தை அடக்கியவள்…

“விஜய் அத்தானா”…. என்று குழப்பான பாவனையில் முகத்தினை மாற்றியவள்….

“ஓ…… உங்களுக்கும் அவருக்கும் பேசி இருந்தாங்கள்ள…. யுகி சொல்லி இருக்கான்…. “ என்றவள்…..

ஆனால் உங்களுக்கோ… விஜய் அத்தானுக்கோ இதுல பெருசா இஷ்டம் இல்லைனு கேள்விப் பட்டேன்….” என்று இழுக்க…

இளமதி ஒருமாதிரியாகச் சிரித்தாள்….

“இஷ்டம் இல்லைனு நான் உன்கிட்ட வந்து சொன்னேனா தீக்ஷா… இல்லை விஜய் கிட்ட சொன்னேனா…. இல்லை விஜய் சொன்னாரா…. அவருக்கு இஷ்டம் இல்லைனு…“

“என்ன பண்றது….. விதினு ஒண்ணு இருக்கே…… உன்னை மேரேஜ் பண்ணிக்கிறப் போறவர் வராமல் போய்ட்டாராமே…. விஜய்க்கு தங்கை மேல ரொம்ப பாசம்…. அவ புகுந்த வீட்ல…. பிரச்சனைனு தெரிந்த பின்னால் வேற வழி இல்லாமல் உனக்கு ஓகேனு சொல்லிட்டாரு………….“ என்று இகழ்ச்சியாகச் சொல்ல….

தீக்ஷா அவளைக் கூர்மையாகப் பார்த்தாள்… பின் அப்பாவியாக முகத்தை மாற்றி…

“ஓஓஒ பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்கிறார்னு சொல்றீங்களா இளமதி” என்று கேட்க

இப்போதுதான் தீக்ஷா தன் வலையில் விழுந்திருக்கிறாள் என்று உணர்ந்த இளமதி…

“கண்டிப்பா தீக்ஷா…. நல்லா யோசிச்சுப் பாரு…. நீ விஜய்யை மேரேஜ் பண்ணிக்கிட்டா கண்டிப்பா சந்தோசமா இருக்க மாட்ட….. விஜய் ஒரு சுயநலவாதி…. அன்னைக்கு என்னை மேரேஜ் பண்ணிக்கிறேனு சொன்னான்… இன்னைக்கு உன்னை…. இது கூட ஏதோ ஒரு வகைல அவனுக்கோ அவன் குடும்பத்துக்கோ நன்மையா இருக்கப் போய்த்தான் உனக்கு ஓகே சொல்லி இருப்பான்…. தீக்ஷா நல்லா யோசி…..” என்று விஜய்யை ஒருமையாக பேச ஆரம்பிக்க

தீக்ஷா அமைதியாக இருந்தாள் சில நிமிடங்கள்….

”இப்போ உங்க பிரச்சனை என்ன இளமதி” கொஞ்சம் எரிச்சலும் அவள் குரலில் தெரிந்தது….

இளமதி கோபமாகக் கேட்டாள்…

”எனக்குப் பிரச்சனையா…. லூசா தீக்ஷா நீ…. உன்னைப் பற்றி…. உன்னோட பிரச்சனை பற்றி பேசிட்டு இருக்கேன்…. உனக்குப் புரியலையா…. விஜய்யை நம்பாத… நம்ப வச்சு கழுத்தறுத்துறுவான்…. முதலில் என் அண்ணனை…. அதுக்கப்புறம் என்னை…. கண்டிப்பா உன்னையும்… ஒருநாள்” என்று அழுத்தமாக கூறி நிறுத்த…

தீக்ஷாவும் நிமிர்ந்து அவளைப் பார்த்தாள்…. நேருக்கு நேராக இளமதியைப் பார்த்தவள்…..

“உங்க அண்ணன் என்ன ஏமாந்தார் இளமதி…. இன்னொருத்தனை விரும்புற ஒரு பொண்ணை கூசாம நான் கட்டிகிறேன்னு சொன்ன உங்க அண்ணனை நம்பி ஏமாந்தது விஜய் அத்தான் தான்…. நல்ல வேளை எங்க அண்ணி கடைசி நேரத்தில் தப்பிச்சுட்டாங்க…. அடுத்து…………………… நீங்க என்ன ஏமாந்தீங்க இளமதி….. உங்ககிட்ட ஆசை வார்த்தை பேசி ஏமாத்திட்டாரா விஜய் அத்தான் சொல்லுங்க” என்று கேட்க

“ம்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ம்….” புருவம் உயர்த்திய இளமதி…

”உன் வருங்காலக் கணவனுக்கு பலமான சப்போர்ட்தான் …. பின்ன வசதியான இடம்…. பையனும் ஹீரோ மாதிரி இருக்கான்….. விடுவியா நீ… விஜய் மாதிரியான ஆளு உனக்குலாம் தேடுனாலும் கிடைப்பானா…. அதுதான் நீ இப்டி பேசுற….. உனக்கும் விஜய்க்கும் ஏணி வச்சாலும் எட்ட முடியாது…. அவரோட குணநலன் எல்லாம் எனக்கு இளா அண்ணா சொல்லி இருக்காரு….. அது,,, அந்த குணங்கள் தான் எனக்குப் பிடிச்சது…. ஹ்ம்ம்….. பார்க்கலாம் என் முன்னாடிதானே நீங்க வாழப் போறிங்க… உன்னை மாதிரி ஒரு பொண்னோட அவன் எப்படி வாழப் போறான்னு…...” என்று கூற…

“இளமதி நீ விஜய் அத்தானை விரும்பினாயா…. சொல்லு” என்று கேட்டாள்….

தீக்ஷாவுக்கு மனம் முதல் முறைத் திடுக்கிட்டது……. இருந்தும்… விஜய் மனதில் அவள் இல்லை என்பதால்… ஒருதலைக் காதலுக்காகவெல்லாம் தன் காதலை விட முடியுமா என்று தனக்குள் ஆறுதல் சொன்னாலும்… தீக்ஷாவிடம் மட்டும் அவன் என்ன காதலையா சொன்னான்……… மனம் கொஞ்சம் படபடப்பானது என்னவோ உண்மைதான்… இருந்தும் தன் பதட்டத்தை மறைத்து அவளையே பார்த்தபடி இருந்தாள்…

சில நொடிகள்…. அமைதியாக இருந்தாள் இளமதி…

பின்

‘ஹ்ம்ம்… ஆனா அது இறந்த காலம்…. இப்போ இல்லை… உன்னை மாதிரி ஒருத்திய மேரேஜ் பண்ண ஓத்துக்கிறேனு சொன்னவர்க்குலாம் என் மனசில் கண்டிப்பா இடம் கிடையாது….. என்னோட தகுதிகெல்லாம் உன் கூட பேசுறதே அதிகம்” என்று கேவலமான பார்வையைப் பார்க்க….

“ஆனா நான் உன்கிட்ட பேசனும்னு சொல்லலையேமா இளமதி… நீதான் என்கிட்ட வலிய வந்து பேசி… என்கூட தனியா பேசனும்னு சொன்ன…. ஓகே…. என்கூட பேசுறதெல்லாம் உன் குணத்துக்கு இழுக்குனா… நான் கிளம்பறேன்…” என்றபடி…. எழுந்தவள்

மீண்டும்…. அமர்ந்து…

“விஜய் அத்தானை மறந்துட்டேனு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்… ஏன்னா… என்னோட விஜய்….. சாரி,…. விஜய்னு நீ கூப்பிட்டுடேல்ல… என்னோட இந்தர் வேற யார் மனசிலயும் விளையாட்டா கூட இருக்கக் கூடாது…. அப்புறம் இன்னொரு விசயம்…. இந்தர் பரிதாப்பபட்டு என்னை ஏத்துக்கிட்டார்னு சொன்னேல… பரிதாபப்பட்டாவது என்னை ஏத்துக்கிட்டாரேனு எனக்கு சந்தோசம்தான்ப்பா….. “ என்றவள் இளமதியை சிரிப்போடு பார்க்க.. அவளோ

“நீ அவ்ளோ கேவலமானவளா…. ஒருத்தன் உன்னை பரிதாபப்பட்டு ஏத்துக்கிட்டான்னு சொன்னா சுயமரியாதை உள்ள எந்த பொண்ணும் வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு போய்ட்டே இருப்பா…. நீ என்னடாவென்றால்” இளமதி முகத்தைச் சுழிக்க

தீக்ஷாவுக்கு உள்ளுக்குள் சிரிப்பாய் வந்தது…

“நல்ல வேளை எனக்கும் விஜய் அத்தானுக்கும் நடந்த உள்நாட்டுக் கலவரமெல்லாம் இவளுக்கு தெ.ரியாது… தெரிஞ்சுருந்தால் இன்னும் கேவலமா ஆகி இருக்கும்…… ஏதோ தப்பிச்சேன்….” என்று பெருமூச்சு விட்டவள்…

இளமதியிடம் மீண்டும்

“இன்னொரு விசயம் சொல்லவா…. விஜய் அத்தான் என்னை காதலிக்கிறாரா? இல்லை பரிதாபப்பட்டு ஏத்துக்கிட்டாரா? இதெல்லாம் அடுத்த விசயம்…..ஏன்னா நான் என் அத்தானை விரும்புகிறேன்…. என்னைப் பிடிக்கலைனா கூட அவர் என் கூடத்தான் வாழனும்…. அவரே நினைத்தாலும் … என்னைய பிடிக்கலைனாலும் கூட என் கூடத்தான் இனி அவர் வாழ்ந்தாகனும்…. இல்லை எனக்குள்ள ஒளிஞ்சுட்டு இருக்கிற வில்லி கேரக்டரை வெளியில எடுத்தாவது அவர் கூட நான் சேர்ந்திருவேன்…. என்றவள்…. கண்சிமிட்டியபடி…

“நான் ஹீரொயினா இல்லை வில்லியானு என் ஆளு முடிவெடுக்கிற டெஷிஷன்ல தான் இருந்தது,…. நல்ல வேளை… விஜய் அத்தானுக்கு நல்ல நேரம் போல…. எனக்கு ஓகே சொல்லி என்னை ஹீரோயினா மாத்திட்டாரு…. “ என்று தோரணையாகப் பேசியவள்…

“என்னடா நாம வில்லி ரேஞ்சுக்கு இவள மிரட்ட வந்தா இவ வில்லி மாதிரி பேசுறாளேனு பார்க்கிறியா….. நான் கண்ணாடி மாதிரி இளமதி….” என்றவள்..”

”அடடா என் கேரக்டரா இப்போ முக்கியம்…. கடைசியா நான் சொல்ல வருவது என்னன்னா….. என் இந்தரை நான் லவ் பண்றேன்…. அவருக்கே என்னைப் பிடிக்கலைனா கூட என்னை அவர் காதலிச்சுதான் ஆகனும்… என்னையும் அவரையும் பிரிக்கனும்னா அது மரணம் மட்டும் தான் போதுமா…. மேரேஜ் டேட் தெரியுமா… தெரியாதா……… என்றவள்

இளமதி மொபைலை எடுத்து தங்கள் திருமண தேதியை செட்யூலில் போட்டவள்... “… கைக்கடிக்காரத்தைப் பார்த்தபடி….

”ச்சேய்…. இந்த நேரம் என் இந்தரோட ட்ரீம் ல இருந்திருப்பேன்…. கெடுத்துட்ட…” என்று அசால்ட்டாகச் சொன்னபடி…

“கூல்ட்ரிங்ஸுக்கு பே பண்ணிடு…. என் டைம வேஸ்ட் பன்ணதுக்கு அதுதான் உனக்கு பனிஷ்மெண்ட்” என்று கிளம்பியவளை… கைப்பிடித்து தடுத்து நிறுத்தி தீப்பார்வை பார்த்தாள் இளமதி…

ஆனால் தீக்ஷாவோ

“ஹலோ மேடம் என்னைத் தொட்டு பேசுனா உங்க ஸ்டேட்டஸ் … உங்க மரியாதை எல்லாம் கீழ இறங்கிடப் போகுது…. கைய விடறீங்களா ….” என்றவள்…. அவளின் முறைப்புக்கு சற்றும் சளைக்காமல்….

“உன்னை முதல் முதலா மீட் பண்ணும் போது உன்னை கூப்பிட்டு பை சொன்னேனே அன்னைக்கே நீ யார்… உன் குணம் என்னனு எனக்கும் தெரியும்… இருந்தும் எங்க அண்ணியோட அண்ணன் மனைவியா ஆகப் போறேன்ற ஒரே எண்ணத்திலதான் வலிய வந்து பேசினேன்…. சும்மா என்னை டென்சன் ஆக்காத…… எனக்கு அது ஒத்து வராது… உனக்கும் ஒரு அட்வைஸ் பேபி….. நீயும் ரொம்ப கோபப்படாதா….கூல் பேபியா இரு ஒகே வா….” என்று தன்னைப் பிடித்திருந்த அவளின் கையை தட்டி விட்டவள்…. அதே வேகத்தில் அங்கிருந்த பேரரை அழைத்தவள்…

“எக்ஸ்க்யூஸ்மி…. மேடத்துக்கு கூலா ஜில்லுனு எதுவா இருந்தாலும் எக்ஸ்ட்ராவா எடுத்துட்டு வாங்க…. அதைக் குடிச்சும் இதே எக்ஸ்பிரஸோனடோ இருந்தா இன்னும் அதைவிட கூலா இருந்தா கொண்டு வந்து கொடுங்க….”

தீக்ஷாவின் பேச்சில் அந்த வேலையாள் திகைத்து நிற்க…

“பணத்தைப் பற்றியெல்லாம் நோ வொரி சார்….. மேடம் பெரிய இடம்….’ என்றவள்…

“வரட்ட்ட்ட்ட்ட்டா இளமதி….” என்று நெற்றியில் கைவைத்து சல்யூட் அடிப்பது போல் சொன்னவள்..

”ச்சேய்… இந்த தீக்ஷா பேசக் கூடாதுன்னுதான் நினைக்கிறா… ஆனா பேச வச்சுடறீங்களே……………….. நீங்க பேசக் கூப்பிட்டீங்க மேடம்….. ஆனால் என்னைப் பேச வச்சுட்டீங்க….. ஆனாலும்…. தீக்ஷா பேசுறதுக்கு அஞ்ச மாட்ட.. பாய்……” என்றபடி இடத்தைக் காலி செய்ய…. இளமதி ஆவேசமும் கோபமுமாய் அவளை வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்…

இளமதி…. இளமாறன் தான் ஒருநாள் விஜய்யைப் பற்றி சொல்லி… அவனின் தங்கையை தான் திருமணம் செய்யப் போவதாகவும்…. இளமதியை விஜய் திருமணம் செய்ய சம்மதம் சொன்னதாகச் சொல்ல… முதலில் யாரோ ஒருவனைக் காதலிக்கும் பெண் தன் அண்ணனின் மனைவியா என்று இளமாறனிடம் மறுப்புத் தெரிவித்தவள்…. அதன் பின் விஜய்யின் புகைப்படம் பார்த்து தன் மனதை அவனிடம் பறிகொடுத்திருந்தாள்…. விஜய்யின் புகைப்படம் பார்த்து சலனமடைந்த இளமதி….அதன் பின் சென்னை வந்த போது….. அவனின் குணம்…. அவனின் தொழில்…. அதில் அவன் வெற்றிக் கொடி நாட்டி வரும் பாங்கு…. அவனின் ஆளுமையான பேச்சு…. தோற்றம்…. என மொத்தமாய் அவனிடம் சாய்ந்தாள் இளமதி….. அதிலும் அவனின் குணம்…. இளாவின் மூலம் கேள்விப்பட்டிருக்கிறாள்….. கிட்டத்தட்ட ஒரே குணம்…. இருவரும் சேர்ந்தால் என்று கற்பனைக் கோட்டையை வளர்த்திருந்தாள் இளமதி… அதெல்லாம் விஜய்யின் திருமண விபரம் கேட்டு தூள் தூளாய் நொறுங்கிப் போக இளமதி கொஞ்சம் இடிந்துதான் போனாள்….ஆனாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டாள் தான்…. இந்த விஜய்யையே நினைத்து தன் வாழ்நாளை வீணடிக்கும் அளவுக்கு பத்தாம் பசலி அல்ல அவள்…. இருந்தும் தனக்குப் போட்டியாக கேவலம் அந்த தீக்ஷாவா என்ற இடத்தில் தான் அவளின் கோபம்…… அவளுக்கெல்லாம் விஜய் மாதிரி பையனா…. விஜய் பார்த்தாலே அவனின் பார்வைக்கே அவளால் பதில் சொல்ல முடியாது என்ற மட்டில் நினைத்திருந்தாள்…. அதனால் அவளை ஒரு மிரட்டு மிரட்டி…. கொஞ்சம் குழப்பி விடுவோம் என்ற மிகப் பெரிய நல்லெண்ணத்தில் தான் அவளை தானே போன் செய்து அழைத்தாள்….

ஆனால்… தீக்ஷாவின் குணம் தெரியாமல் அவளை அழைத்து…. தானே வாங்கிக் கட்டிக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்

தீக்ஷாவின் மேல் லேசாக இருந்த பொறாமை போய்………… அவளின் அலட்ச்சியமான பேச்சில்…. தன்னை இம்மி அளவு கூட மதிக்காத அவளின் பேச்சில் இளமதி மனதில் பொறாமை தீயோடு கோபமும் கொழுந்து விடத் தொடங்கியது…. கோபம் மட்டும் இருந்திருந்தால் பெரிய பிரச்சனை ஆகி இருக்காதோ என்னவோ அதில் பொறாமையும் சேர….. இளமதிக்கு தீக்ஷா எதிரி ஆகி இருந்தாள்…..

ஒரு காலத்தில் தீக்ஷாவின் இந்த பேச்சுதான்…. விஜய்யின் கோபத்துக்கு கூட காரணமாக இருந்த்து………….. அது மெல்ல மெல்ல மாறி…. இன்று காதலின் விளிம்பில் வந்து நின்று கல்யாண மேடையில் வந்து நிற்கிறது….

ஆனால் இளமதியின் கோபம்….. அதானால் இளமாறனின் பழிவாங்கும் எண்ணம்…. இவை தீக்ஷாவை எங்கு நிறுத்தப் போகிறது என்பதை தீக்ஷா அன்று உணர வில்லை…. விளையாட்டாகப் பேசி………… வினையை தன் வாழ்க்கையில் இழுத்து விட்டுக் கொண்டாள்…….. அது மட்டும் இல்லாமல் விஜய்யின் மனைவி என்ற காரணத்தினாலும்…. விதி அவள் வாழ்க்கையில் கொடுர தாண்டவம் ஆடியது……… ஒருவேளை அவள் விஜய்யின் மனைவியாக ஆகி இருக்கா விட்டால்….. இதை எல்லாம் அனுபவித்திருப்பாளோ என்னவோ…..

---------

இளமதியிடம் பேசி விட்டு வந்த தீக்ஷா நேராய் வந்து சேர்ந்தது….. விஜய் பில்டர்ஸுக்குத்தான்…

வரும் வழியில் இளமதியையும்.. விஜய்யையும் தன் பிங்கியிடம் தாளித்தபடியேதான் வந்தாள்….

விஜய்னு அவர் கூப்பிடச் சொன்னாராம்னு என்கிட்டயே சொல்றா… ஆனா நான் விஜய்னு சொன்னா மட்டும் இந்த சிடுமூஞ்சிக்கு கோபம் பொத்துகிட்டு வரும்….. அவகிட்ட விஜய்னு சொல்லுனு சொன்னவர்…. என்கிட்ட வந்து எதற்கு ரொமான்ஸ் லுக்கை விட்டார்… அதை அங்கயே விட்ருக்க வேண்டியதுதானே…. என்று புலம்பியபடி வந்தவளுக்கு இப்போது உண்மையிலேயே சந்தேகம் வந்து விட்டது…. நாம பார்த்தது உண்மைதானா…. இல்லை நானே கற்பனை பண்ணிக்கிட்டேனோ… என்று நினைத்தவள்… அடுத்த நொடியே அது கனவோ நிஜமோ நீ என் மனசில வந்துட்ட… இனி நான் உன்னை விட மாட்டேன் என்றெல்லாம் மனதுக்குள் குழம்பி… ஒருவாறாக மீண்டும் தீர்மானத்துக்கு வந்தவள்…. சுரேந்தரின் அறைக்குச் சென்றாள்…

தீக்ஷாவைப் பார்த்த சுரேந்தர்…..

“ஹேய் தீக்ஷா என்ன இந்தப் பக்கம்….. “ என்று அவளை வரவேற்றவன்

“முதல்ல எல்லாம்…. ஏதோ என் உதவி தேவைனு வருவ….. ஆனால் இப்போ மேடம் என்னைப் பார்க்க வரலைதானே….என்ன நான் சொல்றது கரெக்ட்தானே”

கேலியாக கூறி அவளைப் பார்த்து கண்சிமிட்ட….. அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் அவன் மேஜை மேல் இருந்த வாட்டர் பாட்டிலை அப்படியே கவிழ்த்தவள் அதில் முக்கால் பாட்டிலைக் காலி செய்து விட்டுதான் அவனிடம் திரும்பினாள்…

“உங்களப் பார்க்கதான் இந்த வேகாத வெயில்ல வருவேனா… “ என்று நக்கலாக கூற… சுரேந்தர் முகம் சுருங்கிவிட்டான்…

‘இது தேவையா… என்னலாம் ஓட்டனும்னு நெனச்சா… உங்களால் முடியுமா சுரேந்தர் அத்தான்…. கூல் பேபி…. உங்களுக்குனு ஒருத்தி பிறந்திருப்பா…வருவா” என்று சிரிக்க…. விஜய்யும் ஏதோ ஒரு வேலையாக சுரேந்தர் அறைக்குள் வரவும் சரியாக இருக்க… அதுவரை சிரித்துக் கொண்டிருந்த சிரித்த தீக்ஷா உம்மென்று ஆனாள்…

விஜய் அவளைப் பார்த்துச் சிரிக்க…. தீக்ஷாவோ அவனை முறைத்து பார்த்து வழக்கம் போல் விஜய்யை குழம்ப வைத்தாள்… இருந்தும் அவளின் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்த விஜய்…

தீக்ஷா கொஞ்சம் டென்சனாக இருப்பதை உணார்ந்தவன்… அதை அவளிடம் எப்படிக் கேட்பது என்ற ரீதியில் சிந்தித்தபடியே ஃபைலில் கவனம் வைத்துக் கொண்டிருப்பது போல் ….. பாவனையில் இருக்க

சுரேந்தரே அதை ஆரம்பித்தான்

“என்ன தீக்ஷா கொஞ்சம் டென்சனா இருக்க போல…. எங்க அண்ணனைச் சொல்லுவ….. இப்போ நீயே சூடா இருக்க”

சும்மா இருக்காமல் தீக்ஷா வாயைக் கிளற…

தீக்ஷா கொதித்து விட்டாள்….

“என்ன பண்றது எனக்குனு வந்து வாய்க்கிறாங்களே” என்றவள்

“எல்லாம் அந்த யங் மூன் கிட்ட பேசிட்டு வந்த எஃபெக்ட்…” என்றவள் விஜய்யை ஒரு பார்வை பார்க்க

விஜய்க்கு ஒரு நிமிடம் அவள் யாரைச் சொல்கிறாள் என்று உடனே புரியவில்லை…. ஆனால் கொஞ்சம் யோசிக்க… அவள் சொல்வது ’இளமதி’ என்று புரிந்து விட்டது அவனுக்கு….. அதே நேரம் இளமதி தன்னிடம் எதுவும் பேசாமல் அவளிடம் போய் ஏதோ பேசி இருக்கிறாள்… என்றால்…. எங்கோ தவறு நடக்கிறதே என்று சிந்திக்க ஆரம்பிக்க

சுரேந்தருக்கோ தீக்ஷா சொன்ன அந்த ‘யங் மூன்” யாரென்றே தெரியவில்லை…. இருந்தும் ….

“உனக்கு ஃப்ரெண்ட் சீனா நாட்டைச் சேர்ந்த பையனா” என்று கேட்க..

தீக்ஷாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை……

“ஹைய்யோ அத்தான்….. சீனா நாட்டைச் சேர்ந்த பையனா” என்று கேட்டபடியே சிரித்துக் கொண்டிருக்க…

விஜய்க்கும் சிரிப்புதான் வந்தது….. ஆனாலும் தன் தம்பியைப் பார்த்து சிரிப்பவனா அவன்…. சிரிப்பை அடக்கியபடி…

தீக்ஷாவை நோக்கி…

“அவகிட்ட உனக்கு என்ன பேச்சு….. நீ எப்போ அவளப் பார்த்த” என்று கேள்விக் கணைகளை அடுக்க…

தீக்ஷா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…

“இப்டி பார்த்தா என்ன அர்த்தம்….” கேட்டதுக்கு பதில் சொல்லு” என்று அதட்ட

தீக்ஷா மனதுக்குள்

“இவனுக்கு நார்மலாகவே பேச வராதா…. இப்படிப் பார்த்தா என்ன அர்த்தம்னு இவன் மட்டும் கேட்கிறான்…. இவன் பார்த்த பார்வைக்கு நான் அர்த்தம் கேட்டிருந்தால்…” என்று யோசித்துக் கொண்டிருக்க… அவளின் மன ஓட்டத்தை நிறுத்துவது போல்… சுரேந்தர் தான் இப்போதும் தீக்ஷாவிடம் பேசினான்….

”ஓ அது பொண்ணா தீக்ஷா” என்று கேட்க

தீக்ஷா இப்போது விஜய்யைப் பார்த்து வாயை மூடியபடி சிரிக்க…. உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கினான் விஜய்….

இருந்தும் விஜய் சுரேந்தரை நினைத்து மனதில் சிரித்தபடி

“டேய்… அவ இளமதிய சொல்றாடா….. நீ வேற…. சும்மாவே அவ நம்மள ஓட்டுவா….. நீ இப்படிலாம் பேசுன…. சொல்லவே வேண்டாம் “ என்று சொல்ல

சுரேந்தருக்கு அப்போதுதான் ‘யங் மூன்” என்று தீக்ஷா சொன்னதற்கு அர்த்தம் புரிய… தீக்ஷாவைப் பார்த்து அசடு வழிந்தான்…

விஜய்… தீக்ஷாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்….

“அவ உனக்கு போன் பண்ணினாளா”

விஜய்யின் ஊடுருவும் பார்வையில் … அவனின் கேள்வியில் சுதாரித்த தீக்ஷா இளமதியுடன் பேசிய எல்லாவற்றையும் சொல்லாமல்…. விஜய் பரிதாபப்பட்டு தான் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்து இருக்கிறான்… என்ற ரீதியில் இளமதி தன்னிடம் பேசியதாகச் சொல்ல…. விஜய் கொஞ்சம் குழம்ப… சுரேந்தரோ

“அண்ணா உங்ககிட்ட சிரிச்சு பேசி கங்கிராட்ஸ் சொன்னவ… தீக்ஷாவை தனியே வர வைத்து பேசி இருக்காள்னா…. எங்கேயோ இடிக்குது….. அவ அண்ணன் பேசினானா” என்று தன் மனதில் நினைத்ததை அப்படியே கேட்டான் சுரேந்தர்

“இல்லடா இளமாறன் பேசலை… ஆனா இந்த பொண்ணு ஏன் இப்படி பண்றானு தெரியலையே” என்றவன் முகத்தில் தீவிர ரேகைகள் ஓட…

விஜய்யும் சுரேந்தரும்… யோசிக்க ஆரம்பிக்க… தீக்ஷாதான் சமாளித்தாள்….

“பெருசா ஒண்ணும் பேசலை… எனக்கு கங்கிராட்ஸ் சொல்லத்தான் கூப்பிட்டாங்க…. அவ்ளோதான்…. விசயத்தை பெருசாக்க வேண்டாமே” என்று சொல்ல…..

”உண்மையிலேயே அவ வேறொண்ணும் பேசலையே… எதையும் மறைக்காத…” என்று விஜய் அவளிடம் கேட்க… அவனின் குரல்… சற்று மாறி இருந்தது,…. வழக்கமான தொணியில் இருக்காமல் அக்கறை வழிந்தோட…. தீக்ஷா அதை ரசித்தபடியே

“நிஜமா அத்தான்….. என்னை நம்புங்க…” என்றவள்….

“என் மேல நம்பிக்கை இல்லேண்ணா… உங்க தம்பி மேல சத்தியம் பண்ணவா” என்று விழி விரியக் கேட்க… விழி பிதுங்கியவன் சுரேந்தர் தான்…

“அம்மா தாயே…. உனக்கு நான் தான் கிடைத்தேனா….. என்னை ஆளவிடு சாமி” என்று அரண்ட முகத்தினாய்ச் சொல்ல….

விஜய் இப்போது சிரித்தபடி…. எழுந்தவன்….

“என் தம்பி மேல எதுக்கு பண்ற,…. உனக்கு ரொம்ப பிடிச்சவங்க மேல பண்ணு” என்று லேசாய்ப் போட்டு பார்க்க… அவள் அப்போதாவது தன்னைச் சொல்லுவாள் என்று விஜய் எதிர்பார்த்தான்தான்…

அவள் சொல்வாளா என்ன….. அதற்குப் பதில்

“எனக்கு ரொம்ப பிடிச்சவங்களா” என்று யோசித்தவள்…

“எனக்கு என் அண்ணனை ரொம்பப் பிடிக்கும்” என்றி தீக்ஷா சொல்லி முடிக்கவில்லை…. ராதாவின் சகோதரர்களாய் இருவரும் பதறி விட்டனர்..

சுரேந்தர் வேகமாய்… ”என் மேல கூட சத்தியம் பண்ணும்மா… என் தங்கை வாழ்க்கைல விளையாண்டுராத என்று சுரேந்தர் சொல்ல…. விஜய் எதுவும் பேசவில்லை….

அப்போது அவனுக்கு ஏதோ ஒரு போன் வர... வெளியேறினான்…. இதற்கு மேல் இருந்தால் தீக்ஷா ஏதாவது பேசி இருக்கிற மூடை எல்லாம் கெடுத்தாலும் கெடுத்து விடுவாள் என்று போனைக் காரணம் காட்டி வெளியேறி விட்டான் விஜயேந்தர்….

இந்த முறை தீக்ஷா வழக்கம் போல் ஏதாவது வாய்விட்டு அவனைக் குழப்பவில்லை… சந்தோசமாகவே அவர்களின் சந்திப்பு முடிந்திருக்க…

இளமதி தீக்ஷாவுடன் பேசியதை தீக்ஷா சாதாரணமாகச் சொன்னது போல் ….. விஜய் சாதரணமாக எடுத்துக் கொள்ளவில்லை….

விஜய் போனவுடன்…. தீக்ஷாவும் கிளம்ப ஆயத்தமானவள்….

சுரேந்தரிடம்

“அத்தான் நீங்க இன்னும் வளரனும்” என்று சொல்லியபடி எழ

“ஏன் இப்பவே பனைமரத்தில் பாதி இருக்கேனு சொல்றாங்க….. அது போதாதா” என்று சலிக்க

”கண்டிப்பா நீங்க வளரனும்… என் ஆளு சும்மா கலக்கிறாரு…. “ என்று நக்கலாகச் சிரிக்க

அவள் இளமதியைப் பற்றி சொன்ன போது தான் மொக்கை வாங்கிய விசயத்தை சொல்கிறாள் என்பது புரிந்த சுரேந்தர்…. இப்போது தீக்ஷாவை முறைக்க

”என்ன அத்தான் முறைப்பு….. நான் சொன்னது உண்மைதானே” என்றவளிடம்

“நீ சொன்னதெல்லாம் சரிதான்…. ஆனால் அதுல ஒரு கரெக்ஷன்….. நான் வளரனும்னு சொன்னேல்ல அது தப்பு… ஏன் அண்ணன் உன் ரேஞ்சுக்கு இறங்கி வந்துட்டாரு… அதுதான் நீ பேசுறதுலாம் புரியுது…. என்று சுரேந்தர் பதிலுக்கு பேச

தீக்ஷாவா விடுவாள்…

“சரி விடுங்க… யார் வளர்ந்தா என்ன… இறங்கினால் என்ன… உங்க அண்ணா சொல்ற மாதிரி….. லெவல் ஈகுவல் ஆனா ஓகேதானே… “ என்று சொல்லி சுரேந்தரை திகைக்க வைத்து விட்டுத்தான் கிளம்பினாள் தீக்ஷா என்னும் புயல்….

அதன் பிறகு வந்த நாட்கள் அனைத்துமே சக்கரம் கட்டி பறந்தது…

தீக்ஷா வீட்டில் ஏற்கனவே திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததால்…. அவர்களுக்கு இது திடீர் திருமணம் இல்லை…. ஆனால் விஜய் வீட்டைப் பொறுத்தவரை தீடீர் திருமணம் என்பதால்….. விஜய்க்கு மட்டும் இல்லை அங்கு யாருக்குமே நேரம் போத வில்லை…. ஒவ்வொருவருக்கு ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டிருக்க… பிஸியாக இருந்தனர்… விஜய்க்கோ அவனின் திருமணத்தை அவசரமாக நடத்திய போதிலும்…. எதிலும் குறை வைக்க விரும்பவில்லை….. யாருக்கு அது அவசரத் திருமணம் என்று தெரியாத வகையில் நடத்தி விட வேண்டுமென்று மெனக்கெட்டான். இதில் அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய நன்மை என்னவென்றால்.. அலைச்சலில்… தீக்ஷா தன்னை விரும்புகிறாளா இல்லையா என்று குழம்பிய மனதில் இப்போது திருமண வேலை….. ஆக்கிரமித்துக் கொள்ள….. அதில் மூழ்கினான்…

இடையில் இளமாறன் அவனாகவே வந்து அவனைச் சந்தித்து விட்டும் போக…. இளமதியைப் பற்றி விஜய் இளமாறனிடம் சொல்ல…. இளமதி இனி விஜய் விசயத்தில் தலையிட மாட்டாள் என்று இளமாறனே …. வாக்குறுதி அளித்துப் போக…. விஜய் இளமதி விசயத்திலும் பெரிதாகக் குழம்பவில்லை….

ஆக மொத்தம்…. தீக்ஷா தன்னை விரும்புகிறாளா…. இல்லையா… இது பற்றிய விஜய்யின் குழப்பம் தெளியாமலே….. திருமணத்திற்கு முந்திய நாள் விஜய்-தீக்ஷா திருமண வரவேற்பு வந்தது….

2,014 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

1 Comment


யங் மூன் ரொம்ப பிரச்சினை பண்ணுவாளோ?

Like
© 2020 by PraveenaNovels
bottom of page