அத்தியாயம் 27:
விஜய் இதற்கு மேலும் தன் கெத்தை…. தன் ஈகோயிசத்தை எல்லாம் காட்ட விரும்பவில்லை……….. ஏனோ பெற்றோர் சொன்னவுடன் தன் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாமலே தீக்ஷாவை திருமணம் செய்து விடலாம் என்று அவனுக்குள் இருந்த விஜயேந்தர் என்ற ஆணவம் பிடித்தவன்…. கொஞ்சம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தான் தான்…………… ஆனால் கலைச்செல்வி… சுரேந்தர் என்று சொல்ல………… தன்னையே நொந்தவன்…………. தன் தாயிடம்
“அம்மா……. சுரேந்தர் கிட்ட ஏன்மா கேட்கணும்………….. இளமாறன் வீட்ல ஏன்மா பேசனும்” என்று பரிதாபமாய்த் திருப்பிக் கேட்க
கலைச்செல்வி சிரித்தபடி
“சுரேந்தர்கிட்ட கேட்கனும்ப்பா அவன் சம்மதமும் முக்கியம் இல்லையா……….. நம்ம தீக்ஷாவை சுரேந்தர் வேண்டாம்னு சொல்ல மாட்டான் தான்………. இருந்தாலும் ஒரு வார்த்தை தம்பிகிட்ட கேட்கனும்பா………. என்றவள்
”தீக்ஷாவுக்கு குறிச்ச நாள்ளேயே திருமணம் நடக்கனும்னா……….. உனக்கும் இளமதிக்கும் மேரேஜ் நடந்த பின்னால்தான் உன் தம்பிக்கு பண்ணனும்……….. அதுதான் 2 கல்யாணத்தையும் ஒரே மேடையில் பண்ணிடலாம்னு இளமாறன் வீட்ல பேசனும்னு சொன்னேன்……….. என்றவள்
“ராதா புகுந்த வீட்ல நொந்து போயிருக்காங்கடா………. அதுக்கு தீக்ஷா திருமணம்தான் ஒரு நல்ல முடிவு” என்று மகனைப் பார்க்க
“சுரேந்தர்கிட்டயும் சம்மதம் கேட்க வேண்டாம்……….. இளமாறன் வீட்லயும் பேச வேண்டாம்……. “ என்ற போதே
“அப்போ தீக்ஷா மேரேஜ்” என்று இடையில் குறுக்கிட்ட தாயை………… கை மறித்து நிறுத்தியவன்……… தன் பெற்றோர் இருவரிடமும் தீர்க்கமான பார்வையை வீசியபடி…………..
”ஏன்ம்மா, எனக்கு தீக்ஷாவைத் திருமணம் செய்து தர மாட்டீங்களா???? இல்லை தீக்ஷா வீட்ல அவளை எனக்குத் தரமாட்டாங்களா” ………. என்று கேட்க
கலைச்செல்விக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை………….. தன் காதில் வந்து விழுந்தது தன் மகன் சொன்னதுதானா……….. அவளுக்கே சந்தேகம் வந்து விட…………
சுரேந்தருக்கே வேண்டாம் என்று சொன்னவன்……. இப்போது………. இப்படிச் சொல்கிறானே என்று நம்ப முடியாமல் அவனைப் பார்க்க…..
தாயின் பார்வையில் குனிந்தவன்…
தன் தந்தையிடம் வேகமாக
“அப்பா நீங்க சொல்லுங்கப்பா……. எனக்கும் தீக்ஷாவுக்கும் நல்ல பொருத்தம்னு அன்னைக்கு அந்த தாத்தா சொன்னார்லப்பா………….“ என்று சின்னப் பிள்ளை போல் சப்போர்ட்டுக்கு ஆள் சேர்க்க ஆரம்பிக்க
“உனக்குதான் அவள பிடிக்காதேடா………… சுரேந்தருக்கு சொன்னபோதே திட்டினாய் என்று அம்மா சொன்னாளேடா…….. என்று ராகவேந்தரும் அவன் நிலை புரியாமல் பேச….
சுர்ரென்று உச்சிக்கு ஏறியது விஜய்க்கு………….
“இவ்வளவு தூரம் சொல்றேன் …. என் நிலை புரிய மாட்டேங்குதே…….. இவங்களுக்கு…….” என்று தனக்குள் சொன்னவனிடம் அவனது மனசாட்சி………….
“நீ இதுவரை நேரிடையா உனக்கு தீக்ஷாவை பிடிக்குதுனே சொல்லலடா மடையா………….. நீ இப்டி சுத்தி சுத்தி பேசுனா……….. இப்டிதான் ஆகும்…… டேரெக்டா மேட்டருக்கு வா…….” என்று கட்டளை போல் கூற………..
தன் மனசாட்சி கூட இப்போதெல்லாம் தனக்கு ஆணையிட ஆரம்பித்து விட்டது………….. எல்லாம் நேரம்” என்று தனக்குள் கூறிக்கொண்டவன்……. கோபம் குறையாமலேயே
“எனக்கு இப்போ பிடிக்குது… எனக்கு தீக்ஷாவைப் பிடிக்குது………. எனக்கு அவளை மட்டும்தான் பிடிக்குது……….. போதுமா………….. இல்லை இன்னும் வேற மாதிரி சொல்லனும்னு நினைக்கிறீங்களா “ என்று உச்சஸ்தாயில் கத்த….
அவனின் கோபத்தில்… கத்தலில்…… அவன் சொன்ன வார்த்தைகளில் கலைச்செல்வி, ராகவேந்தர் இருவருமே உறைந்தனர்…….. இருந்தாலும் கலைச்செல்வி சுதாரித்து………. தன் மகனிடம்……..
“இந்தக் கோபம் தாண்டா எனக்கு பயமா இருக்கு…… உனக்கும் அவளுக்கு ஒத்து வருமானு……….” என்று கலைச்செல்வி சொல்ல……… அது கூட விஜய்யை…. அவன் குணத்தை அவனுக்கு புரிய வைக்கும் விதத்தில் நிதனாமாய்ச் சொல்ல
அவனோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல்
“ஒத்து வருதா இல்லையானு நாங்க பார்த்துக்கிறோம்……….. நீங்க போய்ப் பேசுங்கம்மா………… ” என்றவன் அடுத்த நொடியே
“அம்மா தீக்ஷாவுக்கு என்னைப் பிடிக்குமாம்மா… அவ பிடிக்கலைனு சொன்னான்னா…. ஏதாவது சொல்லி சம்மதம் சொல்ல வச்சுருங்கம்மா………. ப்ளீஸ்” என்று கெஞ்சிய தன் மகனை அசாதரணமாகப் பார்த்த கலைச்செல்விக்கு தன் மகனின் வாழ்க்கை குறித்து கொஞ்சம் பயம் கூட வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்….
“தீக்ஷா சரினு சொன்னாத்தானே விஜய் நாம் மேற்கொண்டே பேச முடியும் ……. அவ சம்மதம் சொல்வாளானு கொஞ்சம் சந்தேகம் தான்………. “ என்று சொல்ல……….
“அவ சம்மதம் சொல்லலைன்னாலும்…….. பரவாயில்ல………. கட்டி வைங்க……….. நான் பார்த்துக்கிறேன்” என்று மீண்டும் அதிரடியாகப் பேச ஆரம்பிக்க………….
கலைச்செல்வி கலவரம் ஆனதுதான் உண்மை….. அப்போது திடிரென்று.. ராகேஷ் வராமல் போனது ஞாபகம் வர……….. அதுவும் கடைசி நேரத்தில் வராமல் போனது வேறு உறுத்த….விஜய் ராகேஷிடம் பேசி குழப்பம் செய்து அவனை வர விடாமல் செய்து விட்டானோ……….. என்றெல்லாம் தன் மகனையே சந்தேகப்பட்டவள்……..
‘”விஜய்….. ராகேஷ் திடீர்னு வராமல் போனதுக்கும்… உனக்கும் சம்மந்தம் இல்லையே” என்று தன் சந்தேகத்தை விஜய்யிடமே கேட்டு விட்டாள்…………
விஜய்க்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை எனலாம்…. இருந்தும் தன் கோபத்தைக் காட்டும் நேரம் இது இல்லை என்பதை உணர்ந்தவனாய்…….. தன் தாயை முறைத்தபடி
“அப்டியே இதை உங்க மருமககிட்டயும் சொல்லி வைங்க ….. ஏற்கனவே வில்லன் ரேஞ்சுக்கு என்னை பார்த்துட்டு இருக்கா…… ஏம்மா நீங்க வேற……….” என்றவன்
“சத்தியமா அந்த ராகேஷ் வராமல் போனதுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை…….நம்புங்கம்மா” என்று சொல்ல……….. கலைச்செல்வி அப்போது கூட அவனை முழுதாய் நம்ப வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்…….
கலைசெல்விக்கு இப்போதுதான் தலைச்சுற்றுவது போல் இருந்தது………..
விஜய் ”மருமகள்” என்று தன்னிடம் சொல்லியது வேறு அவன் தீவிரத்தை உணர்த்த……….. கலைசெல்வி தீக்ஷாவை விஜய்க்கு பேச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள்,…………….. அந்த சூழ்னிலைக்கு அவள் விஜய்யால் தள்ளப்பட்டாள் என்பதே மறுக்க முடியாத உண்மை…
தீக்ஷாவை சுரேந்தருக்கு கேட்க நினைத்தபோது இந்த அளவுக்கு சஞ்சலம் ஆகவில்லை…….. சொல்லப் போனால் சந்தோசம்தான் நிரம்பியிருந்தது………… ஆனால் விஜய்க்கு தீக்ஷாவை கேட்பதில் பல சிக்கல்கள் இருந்தது………… தீக்ஷா முதற்கொண்டு………… தீபன் …அவன் பெற்றோர் வரை யாருக்கும் … விஜய் மீது அந்த அளவுக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது……….. என்ன சொல்வார்களோ………. ஏது சொல்வார்களோ என்று பயந்தபடியே விஜய்க்கு தீக்ஷாவை பெண் கேட்க…………. அவள் பயந்தது போல் ஜெயந்தியும் பேச ஆரம்பித்தாள்……
விஜய்க்குதான் எத்தனை சோதனை………..
“இல்ல சம்பந்தி அம்மா………. இது ஒத்து வராது……………. விஜய் தம்பிக்கும் தீக்ஷாவுக்கும் எதுவும் ஒத்து வராது……….. இன்னைக்கு அவசரத்தில் முடிவெடுத்துட்டு ……….. அதுக்கப்புறம்………….. கண்ணிர் வடிக்கிறதில் ஒரு பிரயோஜனமும் இல்லை………… நீங்க இந்த அளவுக்கு எங்க குடும்பத்து மேல…….தீக்ஷா மேல.. அக்கறை வச்சுருக்கதே போதும்……. ஊர் உலகத்தில் எத்தனையோ கல்யாணம் நின்னுருக்கு………. ஏன் மணமேடை போய் கூட நின்னுருக்கு… அதுனால அந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணமே ஆகாமல் போச்சா என்ன…… தீக்ஷாவுக்குனு ஒருத்தன் பிறந்திருப்பான்……… நேரம் வந்தால் வருவான்” என்று முடித்தபோது அவள் குரலில் வேதனையும் கவலையும் தான் மிச்சம் இருந்தது………….
தன் தாய் பேசும்வரை எதுவும் பேசாமல் விஜய்யையே பார்த்துக் கொண்டிருந்த தீபன்……… ஜெயந்தியிடம்………..
“அம்மா……….. அத்தை இவ்வளவு தூரம் கேட்கிறாங்கள்ள………… அவங்களுக்கு என்ன மரியாதை……… நாம தீக்ஷாவைக் கேட்போம்………… அவளுக்கு பிடிச்சிருந்தா…………. மேல பேசலாம்………இல்லையென்றால் விட்டுடலாம்……..” என்ற தீபன் சொன்ன போது விஜய்க்கு சுத்தமாய் நம்பிக்கை போய் விட்டது……….. ஆனாலும் ஒரு முடிவுடன் தான் இருந்தான்……..
தீக்ஷா இன்று… சம்மதம் சொல்லவில்லை என்றால் கூட பரவாயில்லை…….. எப்படியாவது தன் காதலை அவளிடம் நிருபித்து அவளை கைப்பிடித்து விட வேண்டும் என்று……..
இதற்கிடையே தீபன் தனியாக… தீக்ஷாவிடம் பேசப் போக……….
”இவன் தனியா போனா..குட்டைய குழப்பிருவானே……….” என்று விஜய்……….. வேகமாக
“தீபன் தனியா வேண்டாமே……………. இங்க எல்லோர் முன்னாலயும் வைத்தே கேளுங்க………….’ என்று கூற……….. தீபன் நின்றவன்……… ராதாவை விட்டு தீக்ஷாவை அழைத்து வரச் சொன்னான்……….
தீபனுக்கு விஜய் மனது புரிந்தாலும்……….. தீக்ஷா சம்மதம் சொல்ல மாட்டாள் என்றுதான் நினைத்தான்……………. அதனால் தனியே போய் அவளுக்கு எடுத்துச் சொல்லி சம்மதம் சொல்ல வைக்கலாம் என்றுதான் தனியே போக போனான்……….. ஆனால் விஜய் அவன் போவதை தடுக்க………….. அதற்கு மேல் தீபனும் முயற்சிக்கவில்லை………… நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டான்
கீழே இறங்கி வந்தவள்……… விஜய்யைப் பார்க்க……. அப்போதுதான் விஜய் ஒரு புத்தகத்தை எடுத்து மிகத் தீவிரமாக அதற்குள் தன்னை புதைத்துக் கொண்டான்……….
விஜய்யை ஒரு பார்வை பார்த்தவள்………. அவன் இப்போது தன்னைப் பார்க்க மாட்டான் என்று புரிய…… அவனை விட்டு விட்டு…… அத்தனை பேரையும் பார்க்க………
புத்தகத்தில் தன் கவனத்தை வைத்திருப்பது போன்ற பாவனையில் இருந்த விஜய்க்கோ இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது……………..
இறங்கி வந்த தன் தங்கையிடம் தீபன்
“தீக்ஷா உனக்கு ஃபிக்ஸ் பண்ணிய முகூர்த்தத்திலே……….. திருமணம் செய்தால்தான்மா எங்க எல்லோருக்கும் மன நிம்மதி………… அதனால்” என்று நிறுத்த
”அதனால………….ஏன் நிறுத்திட்ட…….. மேல சொல்லு………..” என்று அவள் கேட்ட தோரணையே அங்கு அனைவருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்க……………..
”ராதா வீட்டில்… அத்தை உன்னை மூத்த மருகளாய் எடுக்க கேட்கிறாங்க என்று விஜய் பெயரைச் சொல்லாமல் தீபன் சொல்ல
தீக்ஷா அமைதியாக அமர்ந்திருந்தாள்…….
”இது அத்தை எடுத்த முடிவு போல….. இவனும் உடனே இதுதான் வாய்ப்பு என்று தலையை ஆட்டி இருப்பான் போல………….” என்று விஜய்யைப் பார்க்க…. அவனும் இப்போது இவளைப் பார்க்க…………. ஒரு முறைப்பான பார்வையை அவனை நோக்கி வீச………. தன்னவள் தனக்கு சம்மதம் சொல்லப் போவதில்லை என்று விஜய் முடிவே செய்து விட்டான்…………….
பின் சிறிது யோசித்த தீக்ஷா…………..
“எங்க அப்பா அம்மா கேட்டிருந்தால் கூட யோசிச்சு இருப்பேன்……… ஆனால் அத்தையே கேட்ருக்காங்க…………… அவங்க வார்த்தைக்கு மறுப்பு சொன்னா அது மரியாதை இல்லை……………. அதுனால எனக்கு சம்மதம்” என்று என்னவோ கலைச்செல்வி வந்து கேட்டதால் தான் சம்மதிக்கிறேன் என்பது போல சொல்லி விட…………..
ஜெயந்தி வைத்தீஸ்வரன் இருவருக்கும் கவலையெல்லாம் போய் மீண்டும் சந்தோசப்பட ஆரம்பிக்க……… அங்கு மீண்டும் கலகலப்பு வந்து சேர…………………யுகிக்கு தான் இதில் மிகுந்த சந்தோசமாய் போய் விட்டது………………
“ஹேய் தீக்ஷா…………” என்று கத்த ஆரம்பிக்க……………… சுரேந்தர் தான் அவனை அடக்கி வைத்தான்
தீபன் அவளிடம்…………… ”தீக்ஷா……….. நல்லா யோசிச்சுதான் சொல்றியா…………. நாளைக்கு ஏதாவது……… என்று ஆரம்பிக்கும்போதே
”எனக்கு யோசிக்க தெரியாதுனா அப்போ என் சம்மதத்தை எதுக்கு கேட்ட” என்று கோபமாய்ப் பேச…………. தீபன் அமைதி ஆனான்………….. தன் கோபத்தை உடனே மாற்றிய தீக்ஷா……….. கலைச்செல்வியிடம்………..
“அத்தை உங்களுக்குத்தான் என்னை மூத்த மருமகளா எடுக்க சம்மதமா……….. உங்க பையனுக்கு ஓகே இல்லயா” என்று கேட்டவள்……………. சிரித்தபடி
“அவருக்கு ஓகே இல்லைனா கூட பரவாயில்ல………… உங்க வீட்டு மூத்த மருமகளா வருவதற்கு எனக்கு ரொம்ப இஷ்டம்” என்று சொல்ல…. உடனே விஜய் நிமிர்ந்து அவளை யோசனையுடன் பார்க்க……………. தீக்ஷா அவனைப் பார்த்து கண் சிமிட்ட….. விஜய் வேகமாய் வேறு திசையில் பார்க்க ஆரம்பித்தான்
விஜய்க்கு மனம் எங்கும் ஒரே பய ரேகைகள்………. அவள் உடனே சம்மதம் சொன்னதில் சந்தோசம் வருவதற்குப் பதில் பயம் தான் வந்தது……….. காலையில் பார்த்த போது கூட அவள் தன்னிடம் விட்டேற்றியாகப் பேசியது ஞாபகம் வர…………. இவ உடனே ஓகே சொல்றாளே எதுவும் ப்ளான் பண்றாளா என்னைப் பழிவாங்க… எதுவா இருந்தாலும் என்னைக் கல்யாணம் பண்ணிட்டுக் கொடுடி………. என்றெல்லாம் யோசித்தபடி அவன் இருக்க……… தீபனும் விஜய்யின் எண்ணத்தில்தான் கிட்டத்தட்ட இருந்தான் என்று கூட சொல்லலாம்….
தன் அண்ணன் மற்றும் தன் வருங்காலக் கணவன் இருவரையும் தன் சம்மதத்தால் சிந்தனையில் தள்ளி விட்ட நம் நாயகியோ……………… வழக்கம் போல் தன் அம்மாவோடு வாதாடிக் கொண்டிருந்தாள்…..
”அம்மா…….. என்னமோ இந்தப் புடவை ராசி இல்லேனு சொன்னீங்க….. இப்போ என்ன சொல்றீங்க……..” என்றவள்………
“உங்களுக்கு எப்படியோ எனக்கு இது ராசியான புடவைதான்ப்பா……….” என்றபடி தன் முந்தானையை இடுப்பில் சொருக…. விஜய்க்கு மட்டும் அவள் செய்ததின் அர்த்தம் விளங்க……… அவள் சந்தோசமாக சொல்கிறாளா இல்லை வேறு எண்ணத்தில் சொல்கிறாளா என்று பிரித்தறிய முடியாமல் விஜய் முகமெங்கும் குப்பென்று வியர்த்துப் போய் உட்கார்ந்திருந்தான்…..
ஒருபுறம்……… யுகேந்தரோ ராதாவிடம்……….
“ராதா நாங்கள்ளாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தானே…………. ஒரு மரியாதை கூட…. அதை விடு…. அட்லீஸ்ட் பொண்ணு கையால ஒரு காபி கூட கிடைக்க மாட்டேங்குதுப்பா இங்க” என்று சலிக்க……
“ஆமாம் யுகி… அதிலயும் பொண்ணு கொஞ்சம் வாய் சாஸ்தி…….. நம்ம அண்ணாக்கு செட் ஆக மாட்டனுதான் தோணுது” என்று சுரேந்தர் கிண்டலாய்ச் சொல்ல
“அடப்பாவிங்களா………….. எனக்கு செட் ஆக மாட்டானு நான் சொல்லனும்டா” என்று யோசித்த விஜய்க்கு…. சுரேந்தருக்கு கூட அவள் பொருந்த மாட்டாள் என்று இந்த வாய்தானே சொன்னது என்று தன்னையே வேறு கடிந்து கொண்டவன்………. தீக்ஷாவைப் பார்க்க
அவளோ “சுரேந்தர் அத்தான்………… விடுங்க உங்க அண்ணா தலை எழுத்து அவ்ளோதான்… அதை எல்லாம் இனி மாத்த முடியாது…………..” என்று சொல்லி யுகிக்கு ஹாய்ஃபை கொடுக்க……… விஜய் யுகியை முறைக்க…….. யுகி அவன் முறைப்புக்கு பயந்து தானாக கைகளை பின்னே இழுத்தான்……….
அதைப் பார்த்த தீபன் யுகியிடம்………….
“யுகி இனி நீ பயப்பட வேண்டியது உங்க அண்ணாக்கு இல்ல……… என் தங்கைக்கு என்று சொல்ல………
தீபனின் பேச்சில் விஜய்க்கு கொஞ்சம் தெளிவு வந்து… தீபன் தன் கோபமெல்லாம் மறந்து விட்டான் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு தீபனைப் பார்க்க……தீபனும் அவனைப் பார்த்து சிரிக்க…
ராதா இரண்டு வாரங்களாக மனதில் சுமந்திருந்த பாரம் விலகி நிம்மதி ஆனாள்………ஆனாலும் கணவனுக்கு கொடுக்க வேண்டிய தண்டனைக் கணக்கெல்லாம் இன்னும் தீர்க்காமல் மனதோடு வைத்திருந்தாள்………….
அதன் பிறகு இரு குடும்பத்தாரும்…. மற்றும் வந்திருந்த உறவினர்கள் சிலரோடு பேசி ஒரு முடிவுக்கு வந்து ராகேக்ஷோடு தீக்ஷாவுக்கு குறித்த நாளிலே விஜய்க்கும் – தீக்ஷாவுக்கு பேசி முடிவு செய்ய….. விஜய்……. அவர்களோடு பேச்சில் கலந்து கொண்டானே தவிர மறந்தும் தீக்ஷா புறம் திரும்பவில்லை……… தீக்ஷாவோ அவனைப் பார்த்தபடிதான் சுற்றிக் கொண்டே இருந்தாள்……..
காலையில் அவனிடமிருந்து கிடைத்த அவன் பார்வை தனக்குக் கிடைக்காதா என்று அவளது இதயமும், பார்வையும் அவளை விட்டு பிரிந்து… ஏக்கமாய்ச் சுற்றி வர………… அவனோ………….. மனம் எங்கும் குழப்பத்துடனே இருந்தான் அவனவளின் எண்ணம் அறியாமல்……. இதற்கிடையே இளமாறனிடம் வேறு தன் திருமண விபரம் சொல்ல வேண்டும் என்ற குழப்பம் வேறு…..
மாலை 6 மணி ஆக விஜய் வீட்டினர் கிளம்ப ஆயத்தமாக………… தீக்ஷா அவர்களிடம்
“யுகி…… பொண்ணு கையால ஒரு கப் காஃபி கூட சாப்பிடாமல் போகலாமா என்றபடி அனைவருக்கும் தன் கையாலே காஃபி கலந்து எடுத்து அனைவருக்கும் வழங்க……….. விஜய்க்கும் கொடுத்தவள்………
அவன் வேறு ஒரு கப்பைக் கையில் எடுக்க……….
“விஜய் அத்தான் அது உங்களுக்கு இல்லை…………. இதை எடுங்க…” என்று சத்தமாகச் சொன்னபடி
“தீக்ஷா ஸ்பெஷல் ப்ரிப்பேரேஷன் ஃபார் ஹெர் விருமாண்டி அத்தான்” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி வேறு ஒரு கப்பைக் கொடுக்க
விஜய் அவளை அவஸ்தையாகப் பார்த்தான்
“இந்த பார்வையெல்லாம் எனக்கு வேண்டாம்டா………… காலையில நீ பார்த்த பார்வை….. அதுதான் எனக்கு வேண்டும்…. அதுக்காக நான் ஏங்கித் தவிக்கிறேன்டா…. உனக்குப் புரியலையா” என்று மனம் எங்கும் ஏக்கமாய் அதைக் கண்களிலும் கொண்டுவர……
விஜய்க்கோ அவளின் பார்வையும் புரியவில்லை…. காதலும் புரியவில்லை……….. ஏக்கமும் புரியவில்லை…..……….. குழப்பம மட்டுமே அவன் மனதில் இருந்தது…….
அவளைப் பார்த்தபடியே அவள் தந்த காபியைக் குடிக்க……….. முகம் அஷ்ட கோணலாய் மாறியவன் வேகமாய் கப்பைக் கீழே வைக்கப் போக……..
அதைப் பார்த்து சிரித்தபடி யுகி அருகில் அமர்ந்த தீக்ஷா
“யுகி…………. உங்க அண்ணாக்கு நான் முதன் முதலில் கொடுக்கும் காஃபி…….. மிச்சம் வைக்காமல் குடிக்கச் சொல்லு……..” என்று அதிகாரமாய்ச் சொல்ல……….
வைக்கப் போன கப்பை … மீண்டும் தன் அருகே கொண்டு வந்து ………. முகம் மாறாமல்… அதில் இருந்த கசப்போடு குடித்தவன்……
“நீ என் வாழ்க்கைல இதே போல் கஷ்டம் தருவேனு சிம்பாலிக்கா சொல்ல வருகிராயடி…. நீ என்னோட இருந்து என்னை என்ன பாடு படுத்தினாலும் சந்தோசமா அனுபவிப்பேன் தீக்ஷா” என்று அவன் மனம் நினைக்கத் தொடங்க……… காபி கப்பை வைத்தவன்……..
“சரி நான் கிளம்புகிறேன்……..முக்கியமான வேலை இருக்கு” என்று எல்லோரிடமும் சொல்லி விட்டு விஜய் மட்டும் முதலில் கிளம்பினான்……
அவன் காஃபியை குடிக்க மாட்டான் என்றே நினைத்தாள் தீக்ஷா………. அவன் முழுவதுமாய் குடித்த விதத்தைப் பார்த்தவளுக்கு……….. அவன் காதலின் ஆழம் உணர………..அவன் வெளியேறிய அடுத்த நிமிடம்… வேகமாய் தன் அறைக்கு போனவள்…….. பால்கனியில் போய் அமர்ந்தாள்…………..
அவளைப் பார்த்த விஜய்யும் காரை எடுக்காமல் அவளைப் பார்த்தபடியே நின்று விட்டான்
அந்த அந்தி மாலையில் தன்னவளின் தரிசனம் தந்த மயக்கத்தில்… அதைத் தாங்க முடியாமலும்……….. அவளை விட்டு போக முடியாமலும்……………. காரில் சாய்ந்தபடி கண்களை மூட…………… தீக்ஷா அவனின் பாவத்தில் மொத்தமாய் அவனோடு கரைந்தாள்………………
“இவ்ளோ காதாலாடா என் மேல உனக்கு…………… என்கிட்ட பேசக் கூட பயப்படுறியா நீ” என்று அவனையே பார்த்தவளுக்கு……….. கைகளை கட்டியபடி காரின் மேல் சாய்ந்திருந்த அவன் கைகளை விலக்கி ஓடிப் போய் அவன் கைகளுக்குள் அடங்க வேண்டுமென்று எண்ணம் வர……… தன்னை அடக்க முடியாமல் திணறியவள்….. காதல் என்னும் இன்ப வேதனையில் துடிக்க ஆரம்பித்திருந்தாள்…….
அவனோடு இந்த நிமிடமே.. இந்த நொடியே… செல்ல வேண்டும் போல் இருக்க……… அவனையே பார்த்தபடியே இருந்த தீக்ஷாவின் கண்களில்…. விஜயேந்தர் என்ற ஆண் சிங்கத்தை.. அதன் ஆரவாரத்தை…. தன் காதலால் அடக்கிய கர்வம் சற்று வர………… அந்தக் கர்வமும் சிறிது நேரத்தில் கண்ணீராய் மாறி கசிய ஆரம்பித்தது………….. சற்று நேரம் அப்படியே தன்னவனைப் பார்த்தபடி அவனோடு லயித்திருந்தவள்… அவன் இன்னும் விழி மூடியே இருப்பதை உணர்ந்தவள்…. அவனை தன்னை விழி திறந்து பார்க்க வைப்பதற்காக……
தன் மொபலை எடுத்து அவனுக்கு கால் செய்ய போனவளுக்கு………… தனக்குப் பிடித்த ஒரு பாடல் ஞாபக வர……….. அவனுக்கு பாடல் பிடிக்காது என்று தெரிந்தும்…. பாட்டை ஓட விட்டாள்…………..
பாடலைப் போட்டவள்… அவனை பார்த்தபடி……….. இருக்க………..
விஜய்யும் அவள் பாடல் போட்டதை உணர்ந்தும் தன் கண்களைத் திறக்காமலே இன்னும் தன் காதலின் ஆழத்திற்குள் மூழ்கினான்…………….. அந்த பாடலில்………
பாடல் வரி இருவரையும் வேறு உலகத்திற்கு அழைத்து செல்ல………….. இருவரின் உணர்வுகளின் பிரதிபலிப்பது போல்….. அங்கு பாடல் வரிகளே ஆட்சி செய்ய ஆரம்பித்த்து
”மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
பூங்காத்து வீசுது.. அனலைப் பூசுது
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா
தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்
தாலாட்டுப் பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா
சேலை கட்டும் நந்தவனம் நீயா.. செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா
கண்ணுக்குள்ளே காதலெனும் தீயா.. சின்ன இடை தேய்வதென்ன நோயா
கட்டியணைச்சா.. முத்தம் பதிச்சா.. நோய் முழுக்கத் தீர்ந்துவிடும் வாம்மா.. ஹோ..
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
கல்யாண மாப்பிள்ளை.. எனை நீ பார்க்கலை.. கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
..
என்ற இடத்தில் விஜய் சட்டென்று நிமிர்ந்து முறைக்க……….தீக்க்ஷாவும் அதைப் பார்க்க………
”ஓகே நம்மாளை டென்சன ஏத்திட்டோம் போல…….தீக்ஷா எஸ்கேப்” என்றபடி மொபைலை ஆஃப் செய்தவள் வேகமாய் இறங்க ஆரம்பிக்க……
அவள் அங்கு இறங்கும் அவசரம் பார்த்த விஜய்க்கு பயமே வந்து விட்டது……..
எப்போ பார்த்தாலும் இப்டி உட்கார்ந்து இருக்காளே …..முதலில் இதுக்கு தடை உத்தரவு போடனும்… அவ உட்கார்ந்திருப்பது எனக்கு இங்க பயமாருக்கு” என்றபடி காரை எடுக்கப் போக…… உள்ளே போன தீக்ஷா மீண்டும் திரும்பி வந்து ’விஜய் அத்தான் பாய்’ என்று சொல்ல…….. விஜய்யும்……. திரும்பி அவளுக்கு பை சொல்ல கைகளை உயர்த்தப் போக… அப்போது உள்ளே இருந்து அனைவரும் வர…….. பை சொல்ல உயர்த்திய கைகளைக் கீழே இழுத்துக் கொண்டான்
”அண்ணா நீங்க வந்து 15 மினிட்ஸ் ஆச்சு……. இன்னும் போகலையா” என்று யுகி விஜய்யைப் பார்த்துக் கேட்க…..
“டேய் நீ மணிக்கணக்கா பேசி போன் பில் வருதே அதெல்லாம் கேட்கிறேனாடா நான்………. வந்துட்டான் கேள்வி கேட்க……” என்று யுகியை மனதுக்குள் திட்டியவன்
”என்னை மாட்டி விடுறதுக்கே ப்ளான் பண்றா ராட்சசி…………. பாட்ட போட்டு என்ன ஆப் பண்ணிட்டு……. இருக்குடி உனக்கு…… கல்யாணம் முடியிற வரை ஆடு……….. எனக்கே வெட்கமானு பாட்டு போட்டு கேக்குற……. தைரியம் தாண்டி………… உன் வெட்கமெல்லாம் எந்த அளவுனு நானும் பார்க்கத்தானே போகிறேன்…….” என்றபடி காரில் ஏறி அமர்ந்து போனவன் மனதில் வந்த போது இருந்த பாரமெல்லாம் போய் இப்போது தீக்ஷா பற்றிய ஞாபகத்திலும் குழப்பத்திலும் போக…….அவன் பின்னாலே அவன் குடும்பமும் மற்றொரு காரில் வந்தனர்………….
விஜய் மனதில் கொஞ்சம் குழப்பம் இருந்தாலும்………. இருந்தும் அவள் போட்ட பாடலின் வரிகளில்
“அடிப்பாவி நேத்துவரை என்னை நெனச்சு கூட பார்த்திருக்க மாட்ட… என் வரவை ராப்பகலா தேடுறியா நீ…… ஓவர் கொழுப்புதாண்டி உனக்கு……… வா வா நானும் உன் வரவை எதிர்பார்த்துதான் காத்திருக்கிறேன்” என்று தனக்குள் பேசியபடி போனவனின் மொபைலில் மெசேஜ் வர.. அது தீக்ஷா என்று காண்பிக்க……………. அதை வாசித்தவன்………. தன்னையே மறந்து……… அவன் வீட்டையும் கடந்து செல்ல…………..
அவன் பின்னே சென்ற சுரேந்தர் இதைப் பார்த்து… யுகியிடம் சொல்லி விஜய்க்கு கால் செய்யச் சொல்ல…. யுகியின் போன் அழைப்பில் தன் உணர்வுக்கு வந்த விஜய் காரைத் திருப்ப………..
அதே நேரம்…….. தீக்ஷாவின் நிழலோடு ஒன்றி… அவள் நினைவுகளோடு கலந்திருந்தவனின் அறைக்கதவும் தட்டப்பட……. தன் நினைவுகளான கடந்த காலத்தை விட்டு நிஜமான நிகழ் காலத்திற்கு வந்தான் விஜய்
அவன் அறைக்கதவு தட்டப்படும் விதமே வந்திருப்பது யார் என்று உணர்த்த….
திரும்பி…. தீக்ஷாவின் நிழல் முகத்தில் அழுத்தமாய் தன் இதழைப் பதித்தவன்…………. ”வாயாடி……. உன்னால என்னை விட்டு எங்கேயும் போக முடியாதுனு எனக்கு தெரியும்டி…………” என்றபடி………… நொடியில் தன் முகத்தை மாற்றி………… தன் தலைமுடியைக் கோதியபடி………….
“என்னைச் சோதிக்க அடுத்த ரவுண்டாடி………… எதையும் உன் இந்தர் சமாளிப்பாண்டி…….” என்றபடி கதவைத் திறக்கப் போனான் விஜயேந்தர் என்கின்ற இந்தர்………..
இனி இளமதி இளமாறன் பிரச்சினை பாக்கி இருக்கிறது... விஜய்.......
ஸ்டில் ஐ ஹேட் ஹிம்