top of page
Writer's picturePraveena Vijay

அன்பே… நீ இன்றி??? 10

அத்அத்தியாயம் 10

விழா ஆரம்பமாக………… கேக் வெட்ட இன்னும் 20 நிமிடங்களே இருக்க………. விஜய் மட்டும் அந்த இடத்தில் இல்லை……….. சுரேந்தரும்………… யுகேந்தரும் சற்று தள்ளி நிற்க………… கலைச்செல்வி தீக்‌ஷாவிடம்…….

“இந்த விஜய் எங்க போனான்………….. போன் செய்தாலும் பிஸி ஆகவே இருக்கு ………… வந்திருக்கிறவங்க பாதிபேர் அவன் கெஸ்ட்” என்ற போதே……….

இளமதியும் இளமாறனும் அவர்கள் அருகில் வந்தனர்…… இளமாறனை தன் அண்ணன் திருமணத்தில் பார்த்திருக்கிறாள் தீக்‌ஷா…… அவன் விஜய்க்கும் மேல்……. அதனால் தீக்‌ஷா அவனைக் கண்டுகொள்ளவில்லை…………… அன்று விஜய்யுடன் இளமதி வந்திருந்தபோது பார்த்த அறிமுகத்தில்… தீக்‌ஷா அவளிடம் ஒரு சினேகப் புன்னகையை வைக்க………….. பதிலுக்கு அவள் தீக்‌ஷாவைப் பார்த்த பார்வையிலே……….. தீக்‌ஷா தெரிந்து கொண்டாள்…………. அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று………. அன்று கூட தன்னுடன் உட்காரப் பிடிக்காமல் தான் கிளம்பி விட்டாளோ என்று தோன்ற…….. தீக்‌ஷாவுக்கு அவள் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பதெல்லாம் பெரிய விசயமாகத் தோன்றவில்லை………….. அதை விட்டு விட்டாள்………….. ஆனால் இன்னொன்றை யோசிக்க…………. அவளுக்கு இளநகை தோன்றியது……

“சிடுமூஞ்சி மகராசனுக்கு….. ஏற்ற சிடுமூஞ்சி மகராணி…………….. “ என்று அவர்களின் ஜோடிப் பொருத்தம் பற்றி நினைத்தவள்………… விஜய்-இளமதியை ஜோடியாக மனக்கண்ணில் வைத்தும் பார்க்கவும் தவறவில்லை…………….

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஜோடி நம்பர் 1 தான்….. சிடுமூஞ்சி ஜோடி நம்பர் 1” என்றபடி தன் அண்ணியின் அருகில் போக……. அவள் எப்போது வருவாள் என்று காத்திருந்தாள் போல….. அவள் அண்ணி………….

”தீக்‌ஷா இந்த ட்ரெஸ்ஸ என் ரூம்ல வச்சுரு…………. பாப்பாக்கு கிஃப்ட் கொண்டு வந்திருப்பாங்க போல,,,,,,,,,, பாப்பா கவரைக் கிழிச்சுட்டா” என்றபடி கொடுக்க…………… அதை வாங்கிக் கொண்டு….. காற்றில் பறந்த தன் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகியபடியே……… வீட்டினுள்ளே சென்றாள்……..

ராதாவின் அறை மாடிக்கு போகும் படிக்கட்டுக்கு அருகில் இருக்க…………. உள்ளே சென்று கையில் கொண்டு வந்த கவரை வைத்தவள்…….. வெளியேறும்போது மேலே விஜய் குரல் கேட்க…………

விஜய் அத்தானும் இங்கேதான் இருக்கிறார் போல….. அவரை அத்தை தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்லி வரச் சொல்வோம்…. என்று மாடிப்படியில் ஏறினாள்………. அப்போது

“என்னடா………… அவன் இன்னைக்கு மட்டும் அந்த டெண்டர்ல மட்டும் சைன் போட்டானு வச்சுக்க…………. அவன் தங்கச்சி இப்போ நம்ம கஸ்ட்டிலா இருக்காள்னு சொல்லியும் வந்து நிற்கிறானா………… ” என்று கேட்க

அதிர்ந்து நின்றாள்………….

“எப்டியோ……. அதை அவன் கிட்ட சொல்லியாச்சு……….. இனி அவன் கைலதான்………… டெண்டர் முடிஞ்சதும் சொல்லு” என்றபடி திரும்ப…………..தீக்‌ஷா அவனை அதிர்ந்த பார்வையும்…. கோப முகமுமாய் நோக்க

“தீக்‌ஷா நீ எப்…. எப்போ வந்த” என்று விஜய் தடுமாற………..

“ஆர்த்திதானே அது……………… இருங்க இப்பவே போய் கீழ சொல்றேன்………. என்று இறங்க எத்தனிக்க………. சட்டென்று எட்டி அவள் கைகளை பற்றிய விஜய்….

“ஏய்…………… இரு…… என்ன சொல்ல போற…….ஃப்ங்ஷன் நடந்துக்கிட்டு இருக்கு” என்றவனின் வார்த்தைகளை காதில் வாங்காமல்………..

விலகி ஓட எத்தனிக்க….

அவள் கைகளை இழுக்க…. அவள் போராடியதால் கொஞ்சம் அழுத்தமாகப் பிடித்து மாடிப்படியில் இருந்து தன்னை நோக்கி மேலே இழுத்தான் விஜய்……….. அவன் சற்று வேகமாக இழுக்க………….. அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் விஜய்யின் நெஞ்சின் மேலேயே முகம் பதிந்து அவன் மேலேயே சரிந்து விழுந்து தடுமாறினாள் தீக்‌ஷா

தடுமாறிய…… அவளை…. விழாமல் பிடித்து தள்ளி நிறுத்தியவன்……….. அவளை போக விடாமல் கைகளை மட்டும் இறுகப் பிடித்தபடி

“தீக்‌ஷா……. ஒண்ணும் பிரச்சனை இல்லைமா…………. சின்ன பிஸ்னஸ்….அது கைவிட்டு போகமல் இருக்க…………. என்று தன்னை புரியவைக்க….. அவன் மெல்லிய குரலில் கிட்டத்தட்ட கெஞ்சலாகச் சொல்ல………….. அவன் கெஞ்சலில் நாயகி மிஞ்சினாள்………

“அதுக்கு பொண்ணைக் கடத்துவீங்களா……… என்னை விடுங்க………… நான் கீழ போகணும்………. கைய விடுங்க………. வலிக்குது” என்று சொல்லும் போது அவள் குரல் என்றைக்கும் விட உயர்ந்துதான் இருந்தது

“உன்னை யார் போக வேண்டாம்னு சொன்னது………….. நீ போகலாம்….. ஆனால்….. கீழ எதுவும் சொல்லி உளறாத போ……………” என்று அவன் அவள்…… கைகளை விடப் போக……….

அவள் வாயில் சனி இருந்து ஆடியதா……. இருவரின் வாழ்க்கையிலும்……………. துன்பத்தின் தொடக்கமா……….. அல்லது இன்பத்தின் தொடக்கமா………….. விதியே குழப்பத்தில் இருக்க

தீக்‌ஷாவோ அவனிடம் ……………

“நான் சொல்வேன்…………… அத்தனை பேர் மத்தியிலயும் உன்னை அசிங்கப்படுத்தல என் பேரு தீக்‌ஷா இல்லைடா……. ஒரு பொண்ணைக் கடத்தி வச்சுட்டு ஒண்ணும் பிரச்சனை இல்லையா……….. அவளக் காணோம்னு எத்தனை பேர் தெரியுமா துடிப்பாங்க ………. ஏன் உன்” என்று ஆரம்பித்தவள் சுதாரித்து…….. யுகேந்தரை இழுக்காமல்………மறைத்தவள்…. என்னை விடுங்க………. நான் கீழ போகனும்…………… என்று அவனின் ’அத்தான்’ மரியாதை எல்லாம் சுத்தமாய்ப் போய்……. சத்தமாகப் பேச ஆரம்பிக்க…..

அவள் கைகள் அவனால் மீண்டும் இறுகப் பிடிக்கப்பட…………… தீக்‌ஷா அதிர்ந்து அவனை பார்த்தவள்………. பேச வாயெடுப்பதற்குள்……………

தன் கைகளால் அவள் வாயைப் பொத்தியபடி மாடியில் இருந்த அறையில் அவளைத் தள்ளிய விஜய்….. வெளியே தாள் போட்டு விட்டு வெளியேறினான்……….

அவன் தள்ளிய வேகத்தில் அங்கிருந்த கட்டிலில் மோதி விழுந்த தீக்‌ஷாவின் நெற்றி விண்ணென்று வலிக்கத் தொடங்க………….. அழுகையே வந்து விட்டது………. இருந்தும் சுதாரித்து எழுந்தவள்…………. விஜய்யை அர்ச்சித்தபடியே கதவைத் தட்ட ஆரம்பித்தாள்

“கதவைத் திறங்க விஜயத்தான்……….. விஜய்…………… திறந்து விடுடா” என்று முடிக்கும் போது கதவைத் திறந்து உள்ளே வந்தான்……………

உள்ளே வந்தவனைப் பார்த்து அதிர்ந்து கண்கள் விரிய பின் வாங்கினாள்………..

காரணம்……….. அவன் உடலில் மேல்ச் சட்டை இல்லை…… வெறும் பனியனுடன் இருந்தான்……….. அவன் அணிந்திருந்த் சட்டை அவன் தோளில் தொங்க…….. உள்ளே வந்தவன் கதவையும் பூட்டினான்

மனதில் எங்கோ எச்சரிக்கை மணி அடிக்க………….. மனதின் எச்சரிக்கை அவள் கண்களில் அச்சமாக வெளி வந்தது……

”கதவைத் திறங்க…… என்னை விடுங்க……….. நான் போகனும்……………” .என்று வார்த்தைகளைச் சேகரிக்கவே தடுமாறினாள் அந்த பேச்சரசி…………..

”என்ன………… தடுமாறுர…………..” என்றவன்……. சாவகசமாய்…. தோள்களில் போட்ட சட்டையை அந்த அறையில் இருந்த கட்டிலில் போட……….

விதிர் விதித்தாள் தீக்‌ஷா

“எ……எதுக்கு சட்டைய கழட்டுனீங்க……….. நான் போகனும்………. நீங்க தப்பு மேல தப்பு பண்றீங்க” என்று அழ ஆரம்பித்தவளுக்கு…….

விஜய் அவளின் சொந்தம் , தன் அண்ணியின் அண்ணன்…… என்பதெல்லாம் போய் ………… அவன் ஒரு அந்நிய ஆடவன் என்பதில் மனம் முன்னெச்சரிக்கை செய்ய…………… உடல் நடுங்க ஆரம்பித்தாள் தீக்‌ஷா…………………. இதுவரை விஜய் முன் அவள் செய்த குறும்புத்தனமெல்லாம்………… எங்கோ பறக்க……………. 23 வயதுப் பெண்ணாக……………. சில நாட்களில் இன்னொருவனுக்கு மனைவியாகப் போகும் பெண்ணாக…………. மாறியிருந்தாள்

”ஸ்ஸ்ஸ்ஸ் எதுக்கு இப்போ அழ ஆரம்பிக்கிற…….. நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்…… ஆனா நீ இங்க இருந்து போய் எதுவும் சொல்ல மாட்டேனு சொல்லு……… இப்பவே போகலாம்” என்றவனிடம்

அவனிடமாவது சரி என்று தலை ஆட்டி விட்டு……. வெளியே போனவுடன் சொல்லி இருந்திருக்கலாமோ………… அதைச் செய்யாமல்…… சொல்லாமல்…… அவன் பேச்சில் தெரிந்த சமாதானத்தில் தீக்‌ஷா மீண்டும் தைரியமானாள்…..

”என்ன பண்ணி விடுவான் இவன்…… தன்னை என்ன செய்தாலும்…………. அவன் கண்டிப்பாக எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும்… அவனால் தப்பித்து போக முடியாது….. அதனால்……………….. அடக்கி வாசிப்பான்” என்று மனம் சொல்ல… அதன் விளைவு

”சொல்வேன்…… என்ன செய்வ நீ……” என்று பிடிவாதம் பிடித்து சொல்லியபடி அவனை இளக்காரமாய் வேறு பார்க்க ….

“தீக்‌ஷா வாழ்க்கையைத் தொலைத்தாளா இல்லை……………. வாழ்க்கையை வாழ்ந்தாளா”

அவளின் பதிலில் எரிச்சலான விஜய்………… அங்கிருந்த சிகரெட்டை எடுத்தவன்……….. பின் ஏதோ நினைத்தவனாய் மீண்டும் கீழே போட்டு விட்டு… மீண்டும் அவள் அருகில் வர…. மருண்ட விழிகளுடன் பின்னே நகர்ந்தாள் தீக்‌ஷா

“அவள விட சொல்லிட்டேண்டி…………. நீ என்னை டார்ச்சர் பண்ணாத…………. இந்த விசயத்த இதோட விட்ரு………….. எல்லோருக்கும் தெரிஞ்சுரும்…… எனக்கு அசிங்கம் தீக்‌ஷா……………” என்று மிரட்டலில் ஆரம்பித்து கெஞ்ச…………

”அசிங்கம்னு தெரியுதுள்ளடா………… தெரிஞ்சே செய்ற அதுவும் பொட்டைப் புள்ளைய கடத்தி வச்சுட்டு………. என்னையும் இப்டி அடச்சு வச்சுட்டு மிரட்டுற….. நீயெல்லாம் ஆம்பளைனு சொல்லிடாதா வெளில” என்று வார்த்தைகளை விட……

விட்ட வேகத்திலேயே…. விஜய்யின் கைகளால்,,,, அவள் கன்னத்தில் அறை கிடைக்க………… ஒரு நொடி தீக்‌ஷாவுக்கு பொறி கலங்கியது போல் இருந்தது……………. அந்த அளவிற்கு வலிக்க……….. அது தந்த வலியோ……… இல்லை மூன்றாம் மனிதனிடம் அறை வாங்கிய அவமானமோ…………. அவள் கண்கள் அருவியைக் கொட்டியது…..

“என்னையே அடிக்கிறியாடா” என்ற போதே …………. அவனிடம் அறை வாங்கிய வேதனை…. அவமானம் எல்லாம் சேர்ந்து………… அவள் குரலில் பிசிரு தட்ட ஆரம்பித்தது…..

”என்னடி………… இஷ்டத்துக்குப் பேசுற…………. கொன்னுடுவேன்…...” என்று ஒரு விரல் காட்டி….. எச்சரிக்கும் போதே………………

“அப்டித்தான் பேசுவேண்டா……. உனக்குலாம் மரியாதை ஒரு கேடா” என்ற போதே………… அவனின் கை தன் அச்சாரத்தை…………. அவளது இன்னொரு கன்னத்திலும் வைக்க……… அதே நேரம் கேக் வெட்டும் அறிவிப்பு காதில் விழுந்தது…….

“உனக்கு பட்டாதாண்டி அறிவு வரும்………….”. என்றவன்…..

சுற்றி முற்றி தேட………. எதுவும் கைக்கு சிக்காமல் போக……………. கழட்டிப் போட்டிருந்த சட்டையையே எடுத்தவன்……. அவளின் கைகளை பின்னால் திருப்பி கட்ட ஆரம்பித்தான்………. அவளோ அவனுக்கு ஒத்துழைக்காமல் திமிற……….

”ஆடாதடி…….. ஏடாகூடமா எங்கனாச்சும் பட்ற போகுது,………….. அதுக்கும் சேர்த்து நீதான் மூலைல உட்கார்ந்து அழனும்” என்று சொன்னவனை முதல் முதலாய் அறுவெறுப்பாக பார்த்தாள் தீக்‌ஷா

“ச்சீ என்கிட்ட…… அதுவும் கொஞ்ச நாளில் ஒருத்தனை மேரெஜ் பண்ணப் போற பொண்ணுகிட்ட இப்டி பேச அசிங்கமா இல்லை…………..” என்று கண்ணிர் வழிய சொன்னவளிடம்

“எனக்கு மட்டும் ஆசை பாரு………” என்று கட்டி முடித்தபடி………. “கஷ்டம்டா” என்று வேறு சொல்லியபடி எழ

“என்னடா கஷ்டம்” என்றவளைப் பார்த்து அவன் சிரித்து விட

“இப்போ கூட வாய மூட மாட்டியா……. ஏன்னு உன்னைக் கட்டிக்கப் போறவன் சொல்வான்” என்று சொன்னவனின் முகத்தில் இருந்த சிரிப்பு……………. தீக்‌ஷாவுக்கு உடலெங்கும் தீயைப் பற்றி எறிய வைக்க……

“சிரிக்கிறியாடா……. இருக்குடா உனக்கு……….. அழிவுகாலம் ஆரம்பம் ஆகிருச்சு உனக்கு…………” என்றவளிடம்

“ராட்சசன் பாரு நான்……. இவ சாபம் விட வந்துட்டா……… நான் உன் விருமாண்டி அத்தாண்டி…………. இப்டிலாம் பேசலாமா….. இது கூட நீயா தேடிக்கிட்டதுதான்……. விட்டா நீ பேசிக்கிட்டே இருப்ப……. ஆனா எனக்கு உன்கிட்ட பேச நேரமில்லை…….. நான் போகனுமே……… அதுக்கும் முன்னால் உன் வாய மூடனுமே……….. என்று அவளைப் பார்க்க………… மூச்சடைத்தது தீக்‌ஷாவிற்கு

அதைப் பார்த்தவன்……..

“பார்த்துடி…… மூச்சு கீச்சு நின்னுறப் போகுது …. அப்புறம் உன் ஸ்லோகம்….. அது என்ன… மூச்சு நின்னாலும் பேச்சு நிக்காது…. அது தப்பாகிடப் போகுது……… மூச்சையே நிறுத்திருவாளாம்…… பேச்சை நிறுத்த மாட்டாளாம்……… அபத்தமான டயலாக் பேசிட்டு….. அத்தனை பேருக்கும் பட்டபேர் வச்சுக்கிட்டு……. நீ பண்ற அலம்பல் இருக்கே” என்றவாறே

அவ இடுப்பில் சொருகி இருந்த அவள் முந்தானையை இழுக்க…… புள்ளி மான் போல் அவனிடமிருந்து விலகியவளாய் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய தள்ளி நின்றவளைப் பார்த்தவன்……….. பார்த்த நொடியிலேயே சட்டென்று பார்வையை விலக்கி… பக்கவாட்டில் திரும்பியவனாய்

”பின்னால திரும்பு……… …….. என்று சொல்ல

அவள் அப்படியே நிற்க

“திரும்புடி……………… “ என்று மீண்டும் சொல்ல

“நீ சொன்னா திரும்பனுமா……… மாட்டேண்டா…….. நீ சொல்றதெல்லாம் செய்ய… கீழ ஒருத்தி காத்துட்டு இருக்கா…………… போ… அவகிட்ட போய்ச் சொல்லுடா” என்ற அவனைப் பார்த்து எகத்தாளமும் கோபமும் கலந்து பேசும்போதே…... அவள் அருகில் வந்து----- தானாகவே அவளைத் தொட்டுத் திருப்பியவன்…………

“ஆடாம இரு………..தயவு செய்து” என்ற போது இப்போது அவன் குரலில் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்க………..அவனைப் பார்க்க அவள் திரும்பும் போதே

அவன் பின்னால் இருந்தே அவளது இடையிலிருந்த தலைப்பை எடுக்க முயற்சிக்க………….. தீக்‌ஷா அவனிடமிருந்து பதறி நகர ஆரம்பிக்க……….. இப்போது அவளை தன் பிடியிலிருந்து அவன் விலக விடவில்லை………… முந்தானையை இழுக்கும் முயற்சியில்……… அவன் கை மொத்தமுமே அவள்….இடையில் நன்றாகவே உரசியது……………..

தீக்‌ஷாவின் பெண்மை விழிக்க ஆரம்பித்து…………….. கூனிக் குறுகிப் போனாள் …………… அவன் கை உரசிய இடமெல்லாம் அவளுக்கு எரிவது போல் இருக்க………….

”விடுடா என்னை…………” என்று பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பிக்க……. அதே நேரத்தில் அவள் வாய் அவள் முந்தானையாலே அடைக்கப் பட…. விஜய் அவளைப் பார்க்காமலே…. கதவைப் பூட்டியபடி வெளியேறி இருந்தான்

அவன் போனபின் அழுதபடியே இருந்தவள்…… பெண்ணுக்கான உணர்வில் தன்னைக் குனிந்து பார்க்க………….. அவள் வலது பக்க முந்தானை சரிந்து நடுவில் கிடக்க…………… இடையிலோ சேலை நிற்காமல் எனோ தானோவென்று கிடக்க………..

அதிர்ந்தவள்….. இன்னும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்------ அவள் வாயை மூடி இருந்ததால் வாய் விட்டு கூட அழ முடியவில்லை……. அவனோடு போராடுவதிலேயே குறியாக இருந்தவள்….. தன்னைக் கவனிக்காமல் விட்டு விட்டாள்……..

”அவன் முன் தான் இப்படியே நின்றிருந்தோமா………. ஐயோ” என்று மனம் புளுங்கியவளாய்….. கலைந்திருந்த தன் ஆடையை…… அதைச் சரி செய்யக் கூட முடியாமல்….. முழங்காலை தன் மார்போடு அணைவுக்கு கொடுத்து சுவரோடு சுவராக ஒன்றினாள் தீக்‌ஷா

--------------

அரைமணி நேரத்திற்கும் மேல் கடந்திருந்தது…………. தன்னை யாரும் தேடக்கூடவில்லையா………… மற்ற யாருக்கும் தான் தோன்றாது……….. பெற்ற தாய்க்கு கூடவா தோன்றாது……. மனதுக்குள் புலம்பியவளாய்……… இருக்க……… அடுத்த நிமிடமே இந்த வில்லன் போய் என்ன சொல்லி வச்சானோ…………என்று நினைத்தவளுக்கு கண்கள் அருவியைப் பொழிந்த வண்ணம் இருந்தன………

வாய் விட்டு கூட அழ முடியாமல் தன்னை இப்படி கட்டி போட்டவனுக்கு……….. தன் அண்ணியின் அண்ணன் என்ற போதும்………..

“கடவுளே இவன் கண்டிப்பாக இதற்கானத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்………… பொண்ணைக் கடத்தி ……. அதைக் கொண்டு பிளாக்மெயில் செய்யும் கேவலமான புத்தி உள்ளவனா இவன்……. இப்படி பண்ணித்தான் இவங்கலாம் இவ்வளவு பெரிய பணக்காரவங்களா ஆனாங்களா……… இதெல்லாம் ஒரு ஸ்டெட்டஸாம்………. இன்றைக்கு நான் பட்ட வேதனையை விட இவன் பல மடங்கு அனுபவிக்க வேண்டும்……….. அதைப் பார்த்து நான் வாய்விட்டு சிரிக்க வேண்டும்………. ” என்று விஜய்க்கு பல சாபங்களை அள்ளி விட…………..

மேலிருந்த கடவுள்………….. தீக்‌ஷா அவருக்கு பிடித்த பெண் என்பதால் அவள் என்ன கேட்டாலும் கொடுப்பேன் என்று விஜய்க்கு அதைக் கொடுக்கும் நாளை தன் டைரியில் புரட்டி மறக்காமல் எழுதி வைத்தார்………… தீக்‌ஷா கொடுத்த சாபங்கள் எல்லாம் அவன் பெற்ற போது…… தீக்‌ஷா அதைப் பார்த்துச் சிரித்தாளா………….. அவனோடு சேர்ந்து அழுதாளா……………. அவன் துன்பம் தாங்காமல் துடித்தாளா………. இல்லை…………… ?????????????????

அழுதழுது சோர்வே வந்து இருந்தது…….. ஏற்கனவே….. மோதியதில் நெற்றி வேறு வீங்க ஆரம்பித்து இருக்க….. கன்னங்களில் விஜய்யின் கைத்தடம் அதன் பங்கு வேலையைக் காட்ட….. இப்போது கைவேறு வலி எடுக்க ஆரம்பித்து இருக்க………… ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தவள் எழ முயற்சி செய்தாள்……..

யாராவது உள்ளே வந்து விட்டால்……… தன் நிலை………. கடவுளே கைய கட்டி வச்சுட்டானே…………….. என்னால புடவையைக்கூட…… கூட சரி செய்ய முடிய வில்லையே…… அவன் மறுபடியும் வேறு வருவானே………….. என்று நினைக்கும் போது கண்ணில் இருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது……….. அப்போது கதவும் திறக்கப்பட………. முழங்காலை தன்னோடு சேர்த்து இன்னும் ஒன்றியவளின் கண்களில்….. பெண்ணின் அச்சமும், அந்நியர்கள் முன் தன் மானத்தைக் காக்கும் வேகமும் தெரிந்தது………….

உள்ளே விஜய் தான் வந்தான்…………… அவன் இப்போது வேறொரு சட்டை அணிந்திருந்தான்………. வந்தவன் மீண்டும் கதவினைப் பூட்ட………… அவனைப் பார்த்தவள்….. பார்த்த வேகத்திலேயே….. அவன் முன் அவள் நின்ற கோலம் அவள் ஞாபகம் உயிரை அறுக்க…… முழங்காலோடு தலை கவிழ்ந்து….. இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள்…..

“எதுக்கு இப்போ அழற……… உன்னை நான் என்ன பண்ணினேன்………….” என்றபடி….. அவளருகே அமர……….. தன் முன் அவன் அமர்ந்ததை உணர்ந்த அவள்…..உடனே நிமிர்ந்து

தன் விழிகளிலே கோபமும்………. வெறியும்……. அச்சமும்……….. விரோதமும்……… காட்டியவள்…. மீண்டும் குனிந்தாள்…… அதன் பின் அவள் நிமிரவே இல்லை……

தன் மேல்ச்சட்டையால் கட்டியிருந்த அவளது கைகளை அவன் விடுவித்த போதுதான் நிமிர்ந்தாள் தீக்‌ஷா….

அவிழ்த்த வேகத்திலேயே தன் கைகளில் இருந்த அந்த சட்டையை விஜய்…. தூக்கி எறிய…….. அது அந்த அறையில் உள்ள கட்டிலில் விழுந்தது……….. பின் சிகரெட்டை எடுத்தபடி வெளியேறினான் விஜய்………

அவன் வெளியேறியவுடன்……….. எழுந்து…………. தன் புடவையைச் சரி செய்துவிட்டு … தன் கையை சரி செய்தவள்…. வாயைக் கட்டியிருந்த முந்தானையை அவிழ்க்க முயற்சி செய்ய அவளால் முடியவில்லை…………

வெளியே போக கதவைத் திறக்கப் போக……. அவள் தன்னைச் சரி செய்து கொள்ள அவகாசம் கொடுத்தவன் போல்…… மீண்டும் விஜய் உள்ளே வந்தான்…… வந்தவன்…………. அவள் வாயைக் கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டபடியே…………

“தீக்‌ஷா………… கீழ உன்னைத் தேடிட்டு இருக்காங்க………….. நான் எதுவும் சொல்லலை…………… நீயும் சொல்ல மாட்டேனுதான் நினைக்கிறேன்………. இல்லை” என்று மென்மையாகச் சொன்னாலும்….. அதிலும் தீக்‌ஷாவுக்கு மிரட்டல் தான் தெரிந்தது…… அவளால் பேச முடியவே இல்லை………….. அவளுக்கு தெரிந்த மொழிகள் எல்லாம் அவளை கைவிட்டார் போல் இருக்க….. மௌனமாக இருந்தாள் குனிந்தபடியே….. அவளுக்கு மூளையே மரத்தது போல் இருந்தது…… அது அதன் சமிக்கைகளை எல்லாம் நிறுத்தியது போல் இருக்க…… அவள் உணர்வுடன் இருக்கிறாள் என்று அவள் கண்ணில் வழிந்த கண்ணிர் மட்டுமே சொல்லியது……..

“நீ கொஞ்சம் புத்தி உள்ள பொண்ணா இருந்தா…... என்கிட்ட மல்லுகட்டாம வெளிய போய் என்னை போட்டுக் குடுத்துருக்கலாம்…….. அந்த புத்திலாம் இல்லை உன்கிட்ட…… டூ பேட்…. பொண்ணுங்க கிட்ட இந்த அவசர புத்தி இருக்க்க் கூடாது……… சமயோஜித புத்தி வேண்டும்……….. நானா இருக்க ……….. உன்னை விட்டுட்டேன்……. ஆழம் பார்த்து காலை விடனும்னு பல பழமொழி உங்களுக்குத்தாண்டி சொல்லி வச்சுருக்காங்க…… அதை ஞாபகம் வச்சுக்கோ…….. ” என்ற போதே அவள் பேசாமல் அங்கிருந்து விருட்டென்று நகர…….. இழுத்து தன் முன் நிறுத்தினான் விஜய்……. நிறுத்தியவன்……………. அவளின் தாடையைப் பற்றி நிமிர்த்தியவன்……………… நிதானமாகவும் அழுத்தமாகவும்…… பேச ஆரம்பித்தான்

“என்ன…. இப்போ….. இங்க நடந்ததை எல்லாம் சொல்லப் போறியா………… ஒண்ணுமே நடக்கலைதான்… எனக்கு ஒண்ணும் இல்லை….. ஆனா நீ…… உனக்கு இன்னும் 2 வாரத்தில நிச்சயம் ……… யோசித்து நட…….. சொன்னால்……….. உனக்குதான் மேரேஜ் நின்னாலும் நிக்கும்……… இப்போ போய்ச் சொல்லுடி………… எல்லோரும் இருக்காங்க…………… நான் கடத்துனதை நீ சொன்னா………. இந்த ரூம்ல தனியா என்கூட இருந்ததையும் சொல்லனும்………… சோ நான் அசிங்கப்பட்டா………. நீயும் அசிங்கப்படனும்……………” என்று சொன்னவனின் மேல் சிகெரெட் வாடையும் அடிக்க…….. குமட்டிக் கொண்டு வர…….. அவன் முகத்தையே பார்க்காமல் குனிந்த படியே நின்றாள்…… அவனுக்கு பதிலடி கொடுக்க அவள் மனம் துடித்தது…. ஆனால் முடியாமல் நின்றாள் தீக்‌ஷா

“இதுக்கும் மேலயும் நீ சொல்லி…… இதுக்காக நான் உன்னை மேரேஜ் பண்ணனும்னு ஏதாவது……… எவனாவது என்கிட்ட வந்து நின்னானுங்க………….. உன் வாழ்க்கைல…………… அதுக்கப்புறம் தான் நீ அனுபவிப்படி…………….” எனச் சொல்ல……….. அவன் வார்த்தைகளில் தன்னுணர்வு வந்த தீக்‌ஷா…………. அவனிடம்………

”ச்சீ போயும் போயும் உன்னை………….. விட…….. அதுக்கு நான் உயிரை விட்டுறலாம்….. “

என்று மீண்டும் வாயைத் திறக்க

“இந்த வாய்தாண்டி…………. உன்னை இந்த நிலைல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு…………. இங்க பாரு தீக்‌ஷா இப்பவும் சொல்றேன்………… இந்த பிரச்சனையை விட்ரு……….. உன்னை அடிச்சதுக்காக கூட மன்னிப்பு கேட்க கூட தயாரா இருக்கிறேன்…………… நீ சொல்லி ராதா-தீபனுக்கு தான் பிரச்சனை வரும்…… என்று சொல்லியபடி சற்று யோசித்தவன்

“இன்னொரு விசயம்……. அது ஆர்த்தினு உனக்கு எப்டித் தெரியும்” என்ற போதே அவன் கையை உதறியவள்………

அதற்கு மேல் அங்கு நிற்க வில்லை……. இறங்கி ஓடோடி வந்தவள்………… ஹாலைத் தாண்டி…….. வெளியே போகப் பார்க்க…….. அங்கு இன்னும் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது……..

ஓடிப் போய் விஜய்யின் முகத்திரையைக் கிழிப்போமா…….. என்று மனம் நினைத்தாலும்……….. கால்கள் பின்னிக் கொள்ள உள்ளேயே வந்தாள்……….. தனக்கு என்ன நடந்து விட்டது…….. அவனும் ஒண்ணும் பண்ண வில்லை…………. ஆனால் இதுவும் அசிங்கம் தானே……… அய்யோ…… யார் எப்டி போனா எனக்கு என்னனு விட்ருக்கலாமோ என்று மனதிற்குள் மன்றாடியவள்………….. அடுத்த நிமிடம் அது யாரோ இல்லையே யுகியோட ஆர்த்தி……….. என்று தனக்கே ஆறுதல் சொல்லியவளுக்கு….. ஆர்த்தியின் நினைவு வர…..

தன்னையே இந்தப் பாடு படுத்தியவன்……….. அவளை நினைக்கும் போதே மனம் பதறியது…… தான் அவமானப்பட்ட நிலையிலும்……………. ஆர்த்திக்கு போன் செய்து பார்ப்போம்……….. என்று…. தன் மொபைலைத் தேட…..

அதை மேலேயே விட்டு வந்து விட்டோமோ………. என்று நினைத்த போதே………. மேலிருந்து கீழே வந்த விஜய்…… அவள் கையைப் பிடித்து………. அவள் தேடிய அவள் மொபைலை அவள் உள்ளங்கையில் வைத்த படி வெளியேறினான் ………….. அவன் போன திசையை வெறித்தவளாய் நின்றிருந்தாள் தீக்‌ஷா……………….

சற்று தூரம் கடந்த பின்….. என்ன நினைத்தானோ……. விஜய் திரும்பிப் அவளைப் பார்த்து………

“உள்ள போ” என்று சைகையால் சொல்லியவன்……….. மீண்டும் தன் வழியில் போக,,,,

அவனைப் பார்க்கப் பிடிக்காமல் வேகமாய் வேறு திசையில் திரும்பினாள் தீக்‌ஷா…………….

இப்போது…… ஆர்த்தி நம்பருக்கு தீக்‌ஷா போன் செய்ய……… அவளும் அதை எடுக்க………. மனம் நிம்மதி ஆனது

“நீங்க தீக்‌ஷா தானே…………. இப்போதான் யுகி கிட்ட பேசினேன்………….. நீங்களும் ட்ரை பண்ணிட்டு இருக்கிங்கனு சொன்னாங்க” என்ற போது

“நீங்க சேஃபா இருக்கீங்களா” என்றபோது

“ஹ்ம்ம்……. நான் வீட்டுக்கு வந்து 20 மினிட்ஸ் ஆச்சு……….. என்ன நடந்துச்சுனா” என்று அவள் ஆரம்பிக்க……….

”நான் அப்புறம் பேசுறேன் ஆர்த்தி…. சாரி தப்பா எடுத்துக்காதீங்க…… வைக்கிறேன் ஆர்த்தி….” என்று அவளின் பதிலைக் கூட எதிர்பாராமல் போனைக் கட் செய்தாள் தீக்க்ஷா

அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தவள்……. அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலும் விஜய் என்ற பெயரை பிரதிபலிக்க…… அங்கு இருந்து போகத் துடித்தாள்…… வெளியே போகவும் வழியின்றி……

நேராய்………. தன் அண்ணா-அண்ணியின் அறைக்குள் நுழைந்து……. விளக்கைக் கூட போடாமல் அங்கிருந்த சோபாவில் குப்புறப் படுத்து மீண்டும் அழ ஆரம்பித்தாள்………

---------------

யுகேந்திரன் பிரதீபனிடம் வந்து…………

“அத்தான் தீக்‌ஷா இங்கதான் இருக்கா……….. இப்போ ரிங் போகுது” என்று சொல்ல………..

”எப்டி சொல்ற…………….. நான் இவ்ளோ நேரம் ட்ரை பண்ணிப் பார்த்தேன்”

என்றபடி மீண்டும் போட

யுகேந்திரனால்…. ஆர்த்தியுடன் தீக்‌ஷா சற்று முன் தான் பேசினாள் என்றா சொல்ல முடியும்…….. அதைச் சொல்லாமல்…. ரிங் போகிறது என்று மட்டும் பிரதீபனிடம் சொன்னான்……

”வாங்க பார்க்கலாம்…….” என்று தீபனை அழைத்தபடி உள்ளே போக……..

“நீ வேண்டாம் யுகி……. இங்க இருந்து கவனி……. விஜய்,சுரேந்தர் கிட்டயும் சொல்லிரு…….. அவங்க வேற தேடிட்டு இருக்கப் போறாங்க” என்று…………. போன் செய்தபடியே உள்ளே போனவன்………….

ராதா அறையில் ரிங் போகும் சத்தம் கேட்க…….. வேகமாய் அறையினுள் நுழைந்து லைட்டை ஆன் செய்தவன்……….

குலுங்கி அழுது கொண்டிருந்த தன் தங்கை கிடந்த கோலத்தில் பதறிப் போனான்

”தீக்‌ஷா” என்ற போதே…………

”அண்ணா” என்று அவன் மார்பில் விழுந்து கதறிய தங்கையை நிமிர்த்தியவன்…… இரு கன்னங்களிலும் விரல் தடம் அச்சாய் இருக்க……………….. திடுக்கிட்டான்

“என்னம்மா……….. என்ன ஆச்சு…………..” அய்யோ யாரும்மா…….. இது வம்பு பண்ணினாங்களா யாராவது……….. என்று தங்கையை மேலும் கீழும் பார்த்தவன்………

“பார்ட்டிக்கு வந்த பசங்க யாராவது வம்பு பண்ணாங்களாடா………” வாயத் தொற தீக்‌ஷா” என்ற போதே அவன் குரல் நடுங்கியது….

“முக்கால் மணி நேரம்………. அய்யோ ……….. தன் தங்கை வேறு இப்படி அழுகிறாளே…….. எதுவும் தப்பா நடந்திருக்கக் கூடாது” என்று உருகி வேண்டியவன்…………..

“சொல்லுடா……. விஜய் கிட்ட சொல்லுவோம்” என்று அவன் சொன்னதுதான் தாமதம்

இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தாள்

“அவன் தான் அண்ணா………… என்னை……………..” என்று மீண்டும் அழ ஆரம்பித்தவள்…… கோபத்தில் கண் சிவந்த அண்ணனை பார்த்து இன்னும் மிரண்டாள் தீக்‌ஷா……

”விஜய்யா…………” என்று அதிர்ந்தவன்

“சொல்லு……….. என்ன பண்ணினான்………….. வெளில எங்களோட சேர்ந்து அவனும் தேடுகிற மாதிரி பாவ்லா பண்ணினான்………. மாடியில் போய்ப் பார்க்கிறேன்னு சொன்னானே தீக்‌ஷா………. அங்கதான் இருந்தியா” என்ற போதே அவன் மனம் எதையோ எதையோ நினைத்து கலங்க

அவனுக்கு ஆமாம் என்று தலையாட்டியவள்…..

நடந்ததை சொன்னாள்……….. அவனின் நடத்தைகளையோ……….. சட்டையைக் கழட்டி தன்னைக் கட்டிப் போட்டான் என்றெல்லாம் சொல்லாமல்……….. அவன் கடத்தல் விபரத்தை சொல்லி அதை தட்டிக் கேட்கப் போக… அறைந்தான் கட்டிப் போட்டான்… பூட்டி வைத்தான்… என்று மட்டும் சொன்னாள்…….

அதற்கே அவள் அண்ணன் உக்கிர மூர்த்தியாக மாறி இருக்க………

“அவன………… இன்னைக்கு” என்று கை முஷ்டியை இறுக்கியவனாய்…………….. வெளியேற…….. முதலில் அவனைத் தடுக்காமல்…………. அப்படியே இருந்தவள்………….

பின் சுதாரித்து….. தன் அண்ணன் பின்னாலே ஓடியவள்…………… அவன் கையைப் பிடித்து தடுத்து…………

“அண்ணா………… ஃபங்ஷன் முடியட்டும்ணா……….. ப்ளீஸ்…………………. அதுக்கப்புறம் கேளுண்ணா….. ” இதைத்தான் விஜயும் கூறினான் என்பதை உணராமலே அவனைத் தடுக்க

கண்ணீர் மல்க கூறிய தங்கையைப் பார்த்து… அவள் இருந்த நிலை தாங்காமல் தன்னோடு அணைத்து ஆறுதல் படுத்தியவன்………

“சரி…. நான் இப்போ கேட்க வில்லை…………… நீ வர வேண்டாம்…….. உள்ள போடா………. வேற யாரவது உன்னை இப்டி பார்த்த நல்லா இருக்காது……..” என்று அவளை உள்ளே போகச் சொன்னவன்…………

தளர்வாய் போன தன் தன் தங்கையே சில நிமிடம் பார்த்தபடி நின்றவனுக்கு…… அவன் ராதா மேல் கொண்ட காதல்…………. இதுவரை இனிப்பான சுவை நிறைந்த பக்கங்களைக் காட்டியது போய்…………… மெல்ல மெல்ல அதன் மறுபக்க கசப்பை உணர்த்த ஆரம்பித்து இருந்தது…..

தீக்‌ஷா அருகில் மீண்டும் சென்ற தீபன்

“தீக்‌ஷா…………. வேற ஒண்ணும் இல்லைலம்மா……….. அண்ணாகிட்ட எதையும் மறைக்கலயே…………. எதுவா இருந்தாலும் மறைக்காதம்மா……….. அண்ணாகிட்ட சொல்லிருடா……….” என்றவனிடம்…………

“இல்லண்ணா………….“ என்றவளின் வார்த்தையில் இன்னும் தெளியாமல்

“ரெண்டு வாரத்தில நிச்சயம் வச்சுக்கிட்டு……… கல்யாணப் பொண்ணை……” என்று முகம் இறுக ஆரம்பித்தவனிடம்………… அவனின் கோபம் உணர்ந்தவள்…..

“நம்ம வீட்டுக்கு எப்போ போகலாம் அண்ணா…………… எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை…………. “ என்று பேச்சை மாற்ற

”போகலாம்……. அதுக்கும் முன்னால அவன சும்மா விட்டுட்டு போகலாமா” என்று கொதித்தவன்….. அவளிடம் தலை குனிந்தபடி

“அது கூட நம்ம வீடு இல்லடா….. அண்ணா தப்பு பண்ணிட்டேண்டா…………………. சுயநலமா இருந்துட்டேன் தீக்‌ஷா…………… எனக்கு ராதாவை மறக்க முடியலடா…………. அவமேல வந்த என் காதலுக்கு………… நீ பலிகடா ஆகிட்டியோனு தோணுது தீக்‌ஷா…….. உனக்கு ராகேஷோட மேரேஜ் முடியட்டும்…………. எல்லாத்துக்கும் முடிவு கட்டுகிறேன்…..” என்றவன்…. இன்னும்

அவள் நிலையைத் தெளிவு படுத்திக் கொள்ள

”நாளைக்கு உனக்கு பட்டுப் புடவை எடுக்க ராகேஷ் வீட்டில் இருந்து வர்றாங்க………… நாளைக்கு வர வேண்டாம்னு சொல்லி விடவா” என்று கேட்க

“சரி” என்று தலை ஆட்ட

“எப்போ வரச் சொல்லலாம்……..” என்று கேட்க

“நாளை மறுநாள்…… வரச் சொல்லுங்கண்ணா” என்று அவள் கூறிய பதிலில்

”திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு எதுவும் பெரிதாக நடக்கவில்லை” என்ற நிம்மதி அடைந்தான் தீபன்

விஜய் கோபத்தில் தான் தங்கையிடம் கை நீட்டி இருக்கிறான்………… வேறு எந்த எண்ணத்திலும்.. தவறான நோக்கில் நடக்க வில்லை என்று…………. ஓரளவு திருப்தியில் மூச்சை இழுத்து விட்டான் தீபன்………….

வெளியில் வந்த தீபன்………………. சுற்றிலும் பார்வையை ஓட்ட….. விஜய்யோ இளமதியுடன் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தான்………………. அதில் இன்னும் கண் சிவந்தான் தீபன்….. ஒரு அண்ணனாக அவன் மனம் கொதிகலானாக மாறி கொதித்துக் கொண்டிருந்தது…………

1,623 views1 comment

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

1 comentario


யாருக்கு தான் இது போல் செய்தால் பிடிக்கும்

Me gusta
© 2020 by PraveenaNovels
bottom of page