ஹலோ ஃப்ரெண்ட்ஸ்
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்…
படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க… கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றிகள்…
நன்றி
உங்கள் பிரவீணா…
அத்தியாயம் 7:
நாயகன்:
”வெண்ணிலவை தட்டித் தட்டி
செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது
அமுதல்ல விஷம் என்று கண்டேன்
அதன் நிழலையும் தொடுவது
பழியென்று விலகிவிட்டேன்”
நாயகி :
”ஓ காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ காற்றும் என்னை ஆதரிக்க வில்லை
கன்னி வெண்ணிலாகாத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும்
ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ”
அடுத்த நாள்… செழியன் தன் அலுவலகத்தில் இருக்க… வரவேற்பறையில் இருந்து அவனுக்கு அழைப்பு…
“சார்… பூஜான்னு ஒருத்தவங்க உங்களப் பார்க்கனும்னு சொல்றாங்க…”
“நேற்று தான் வேண்டாமென்று சொன்ன அந்த ஃபீமேல் கேண்டிடேட்… ஆனால்… “ யோசனையுடன்… சில நொடிகள் இருந்தவன்…
“வரச் சொல்லுங்க” என்றபடி போனை வைத்தவன்…
“இதுவே ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி… இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா ப்ராஜெக்ட் கெடச்சுட்டு இருக்கு… நாம ஒண்ணு நினச்சா…” என்று யோசித்தபடி இருந்த போதே… பூஜா என்ற பெண் அவனது அறைக்கதவின் முன் வந்து நிற்க… இவனும் உள்ளே வர அனுமதி அளிக்க… அவளும் உள்ளே வந்தாள்…
“உட்காருங்க பூஜா…” என்றவன்… அவள் பதிலை எதிர்பாராமலேயே
“சாரி… உங்களுக்கு கோபம் இருக்கும்… இண்டெர்வியூ எடுக்காமலேயே உங்கள ஹோல்ட் பண்ணினதுக்கும்… அதுக்கு சொன்ன காரணத்துக்கும்…” என செழியன் ஆரம்பித்த போதே…
”ஏன்… பொண்ணுங்கள்ளாம் அவ்ளோ கீழானவங்களா… ஏன் அவங்களுக்கு திறமையே இருக்காதுனு நினைச்சீங்களா” வந்திருந்த பூஜா செழியனைப் பார்த்து நேருக்கு நேராகப் பார்வையை வைத்து கேட்க..
செழியனுக்கு விஷயம் சட்டென்று புரிந்தது… அந்த விஸ்வா இவளிடம் பேசி இருக்கின்றான் என்பதும்… அதைக் கேட்டுக் கொண்டு இந்தப் பெண் வந்திருக்கின்றாள் என்பதும்… இப்போது கேள்விக் கேட்டுக் கொண்டும் இருக்கிறாள் என்பதையும்…
அனைத்தும் புரிந்திருக்க… கோபம் வரவில்லைதான்… ஆனால் ஒரு வித எரிச்சல்தான் வந்தது…
ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்…
“சாரி…” செழியன் சட்டென்று மன்னிப்பு கேட்டவனாக… விஸ்வாவைப் பற்றியும் பேசாமல்… பூஜாவிடம் பேச ஆரம்பித்தான்…
“ஆனால் இந்த வேலைக்கு… பசங்க பொருத்தமா இருப்பாங்கன்னு நினைத்தேன்… அதுவும் இல்லாம நீங்க சிங்கிள் மதர்… சோ… வெளிநாட்டுப் பயணம் … உங்க குழந்தையை விட்டு நீங்க போற மாதிரி இருக்கும்… இதெல்லாம் மைண்ட்ல வச்சுட்டுத்தான்” செழியன் எடுத்துச் சொல்ல ஆரம்பித்த போதே
”நீங்க பிரச்சனைனு நினைச்சதெல்லாம் எனக்குப் பிரச்சனையான்னு… என்கிட்ட கேட்ருக்கனும்… இண்டர்வியூ எடுத்திருக்கனும்… அதுக்கப்புறம் என் திறமையைப் பார்த்துட்டு… நீங்க நெக்ஸ்ட் ஸ்டெப் எடுத்திருக்கனும்…” பூஜா பட்டென்று சொல்ல…
செழியன் அவளையே பார்த்தபடி இருந்தவன்… பின் தன் குரலை உயர்த்தாமல்
“ஒகே… இப்போ சொல்றேன்… என்னோட முடிவு இதுதான்… உங்க பிரச்சனைகளா சொன்னதை இன்வால்வ் பண்ணலை… அதை விட்றலாம்… எனக்கு மேல்கேண்டிடேட்தான் தேவைப்பட்டது பூஜா… வேலை கொடுக்கிறது நான் தான்… எனக்கு என்ன தேவைப்படுதோ… எனக்கு யார் தேவைப்படுதோ எனக்கு எது பெனிஃபிட்டோ… அதைத்தான் செயல்படுத்த முடியும்” செழியன் ஆர்ப்பாட்டமில்லாத முதலாளித்துவ அதிகாரக் குரலில் அழுத்தமாகச் சொன்னவன்…
“சொல்லப் போனால் உங்களுக்கு விளக்கமே கொடுக்கத் தேவையில்லதான்…” என்றபடியே… உடனே தணிந்தவனாக…
“எங்க பக்கம் ஒரு சின்ன மிஸ்டேக் இருந்ததுனால… இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கேன்… என்ன மிஸ்டேக்னு உங்களுக்கும் தெரியும்… ஜெண்டர் மென்ஷன் பண்ணாமல் ஒப்பெனிங்க்ஸ் கால்ஃபெர் பண்ணிட்டாங்க… நான் வேற டென்ஷன்ல இருந்ததுனால கவனிக்கலை… இது எங்களோட தப்புதான்… தப்பு எங்க மேல இருந்ததுனாலதான்… ஹோல்ட் பண்ணினோம்… இல்லைனா உங்களை ரிஜெக்ட் பண்ணிருப்போம்… ஹோல்ட் பண்ணும் போதே உங்களுக்கு காரணம் அனுப்பி இருந்தோமே… அதாவது” என்று அவளைப் பார்த்தபடி தன் பேச்சைத் தொடர்ந்தான்
’உங்க ஆஃபர ரிஜெக்ட் பண்ணாம… ஹோல்ட்ல போட்றோம்… கண்டிப்பா அடுத்த ஒபனிங்ஸ்ல உங்கள ப்ரிஃபெர் பண்றோம்…’
”மெயில் பார்த்திங்க தானே… இதுதான் உங்க மன உளைச்சலுக்கான எங்களோட பதில்... ஐ திங்க்… எக்ஸ்ப்ளேனேஷன் என்னோட சைட்ல இருந்து அதிகப்படியாவே கொடுத்துட்டேன்… இதுக்கு மேலயும் பிரச்சனை பண்ணனும் நினைத்தால்… என்னோட வழியில அதை எப்படி ஹேண்டில் பண்ணணுமோ அப்படி பார்த்துக்கிறேன்” செழியன் தன் பேச்சு முடிந்தது என்பது போல பூஜாவைப் பார்க்க…
இப்போது பூஜா…
“என்ன மிரட்டுறீங்களா மிஸ்டர் செழியன்…” பூஜா நிதானமான அழுத்தத்துடன் கேட்க
“நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே… நீங்க ஏதோதோ மீன் பண்ணிக் கேட்கிறதுக்கெல்லாம் என்கிட்ட பதிலும் கிடையாது… பை த… வே… என்னோட ஷெட்யூல் போயிட்டு இருக்கு… இஃப் யூ டோண்ட் மைண்ட்… “ எனும் போதே வாசல் பக்கம் அவன் பார்வை சென்றிருக்க…
அவன் தன்னை இடத்தைக் காலி பண்ணச் சொல்கிறான் என்பதை உணர்ந்தும்… அதை எல்லாம் கண்டுகொள்ளாமல்… செழியனை இன்னும் தீர்க்கமாகப் பார்த்தவள்…
“மெயில் வர்றதுக்கு முன்னாடியே இங்க நடந்த விசயத்தை விஸ்வா சொல்லிட்டார்தான்… சோ ரிஜெக்ஷன் மெயில்கூட எதிர்பார்க்கலைதான்..… ஆனால் செலக்ஷன் ப்ராசஸை ஹோல்ட் பண்றோம்னு ஒரு மெயில்… அதுனாலதான் உங்களைப் பார்க்கனும்னு வந்தேன் செழியன் சார்… “ என்றபோது இதழில் அடக்கிய சிரிப்புடன் செழியனை அவன் கண்களை ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்தபடியே இருக்க…
செழியனுக்கும் இப்போது அந்தப் பார்வை வித்தியாசமாக இருந்தது தான்… உணர்ந்த அடுத்த நொடியே… யோசனையுடன் சுதாரித்த பார்வையுடன் புருவம் சுருக்கிய நொடி…
’நீ மாறவே இல்லடா செழியா…” பூஜா சட்டென்று செழியனைப் பார்த்துச் சொல்ல…
செழியனுக்கோ இப்போதோ சட்டென்று தூக்கிவாறிப் போட்டிருக்க… அதே நேரம் வந்திருந்த ’பூஜா’ என்ற அந்த யாரோ ஒரு பெண் இவ்வளவு உரிமையுடன் அவனைப் பேர் சொல்லி… அதிலும் ஒருமையில் விளிக்கும் உரிமை யார் அவளுக்குத் தந்தது…
அதை உணர்ந்த அடுத்த நொடியே… அவளது பெயர் ‘பூஜா பத்ரிநாத்’ ஞாபகத்திற்கு வந்திருக்க… நொடியில் அவள் கண்களில் தெரிந்த நட்பின் உரிமை பரிச்சயம் ஆகி… இவனின் பார்வையும் அவளிடம் விரிந்திருக்க இவனின் உதடுகளும் புன்னகையைக் கொண்டு வந்திருந்தது…
“ஏய்… பூ… பூஜா… நீ.. நீயா… நம்பவே முடியலை… சத்தியமா அடையாளமே தெரியல…” செழியனின் முகத்திலும் சந்தோஷ அலை… பேசியபடியே வேகமாக எழுந்தவன் அவளை நோக்கிச் சென்றிருந்தான்…
----
தன் பால்ய காலத்து சினேகிதியை நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு செழியன் சந்தித்திருக்க… பூஜாவின் இல்லத்தை நோக்கி இருவரும் பயணித்துக் கொண்டிருந்தனர் செழியனின் வாகனத்தில்…
செழியன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி… பூஜாவுக்குமே…
”ஆளே மாறிட்ட பூஜா… என்னால உன்னைக் கண்டுபிடிக்க முடியல… ஆனால் நீ எப்படி என்னைக் கண்டுபிடிச்ச… அப்படியேவா இருக்கேன்“ செழியன் காரை ஓட்டியபடியே தன் அருகில் அமர்ந்திருந்த பூஜாவிடம் புன்முறுவலாக கேட்க
“அதெல்லாம் இல்லடா… டோட்டலா நீ மாறிட்டதான்…. நேத்து அந்த மேனேஜர் சொன்னவுடனே… எவண்டா அவன் இண்டெர்வியூவே எடுக்காம நம்ம ரிஜெக்ட் பண்ணினதுன்னு ஒரு ரிசெர்ச்ஜை போட்டேன்… உண்மையைச் சொல்லனும்னா… நீ இல்லாம வேற யாரா இருந்திருந்தாலும் பார்த்துட்டு விட்ருப்பேன்… உடனே அடுத்த வேலைக்கு அப்ளை பண்ணியிருப்பேன்… செழியன்னு பேரைப் பார்த்த உடனே ஒரு ஸ்பார்க்… ஒரு நப்பாசை… நம்ம நண்பனா இருப்பானோன்னு ஒரு நம்பிக்கை… என் நம்பிக்கை வீண் போகல… ’செழியன் முத்துராம்’… இந்தப் பேரைப் பார்த்தவுடனே கன்ஃபார்ம் பண்ணிட்டேன்… எவ்ளோ நாள் கழிச்சு உன்னைப் பார்க்கப் போறோம்னு அவ்ளோ ஹேப்பி… நேர்லயும் வந்து பார்த்துட்டேன்… அவ்ளோதான்… மத்தபடி சும்மா உன்கிட்ட விளையாடினேன்…” பூஜாவின் கல கல வார்த்தைகளில் செழியனும் சிரித்தபடியே
”பூஜா பத்ரிநாத்னு… ரெஸ்யூம்ல பார்த்ததும்… எனக்கும் உன் ஞாபகம் வந்துச்சுதான்… ஆனால் நீயா இருப்பியோன்னு நினைக்கல… ஏன்னா எனக்குத் தெரிஞ்ச பூஜா மேடம் அவ்ளோ தைரியமான பொண்ணாச்சே…. இந்த இடத்தில இருப்பேன்னு நினைக்கல…” என்றவன்… தோழியின் பார்வை உணர்ந்தாலும்… அவள் புறம் திரும்பாமலேயே
”சாரி… உன்னைக் குறைச்சு பேசலை… நான் பார்த்த என் ஃப்ரெண்ட் பூஜா… அடிக்கடி அழற பூஜா… அம்மா அப்பாக்காக வருத்தப்பட்டு கவலைப்பட்ற பூஜா… ஒரு சின்ன லவ் லெட்டர்க்கே… அழுது.. பயந்து… என்னன்னு வந்து கேளுன்னு… என்கிட்ட வந்து நின்ன பூஜா… அதுனாலதான் என் நண்பி பூஜா இந்தப் பூஜாவா இருப்பாள்னு நினைக்கல”
செழியன் சொன்ன போதே… பூஜாவின் கண்கள் சோகமாக மாறி.. பின்…
“ஹலோ ஹலோ ரொம்ப ஓட்டாத…. எனக்கு இப்போ ட்வெண்டி ஃபைவ் இயர்ஸ்… இப்போ என்கிட்ட இருக்கிற மெச்சூரிட்டி… உன்கிட்ட கூட இருக்காது… இந்த வயசுக்கு எல்லாத்தையும் நான் பார்த்து முடிச்சுட்டேன்…” என்றவள் முகம் சுருங்கியதுதான் இருந்தும் சட்டென்று முகத்தில் மலர்ச்சியைக் கொண்டு வந்தவளாக… பேச்சையும் மாற்றி இருந்தாள்…
“சொல்லு… அம்மா அப்பா எப்படி இருக்காங்க… கமலியக்கா எப்படி இருக்காங்க… எங்க பாட்டி எப்போ பார்த்தாலும்… இப்போ கூட கமலியக்காவைத்தான் இன்னும் எக்ஸாம்பிளா சொல்லுவாங்க..”
“பொண்ணுனா அப்படி இருக்கனும்னு… படிப்புலயும் சரி… குணத்துலயும் சரி… அழகுலயும் சரின்னு… வேலையிலயும் சரின்னு”
செழியன் புன்னகை பெரிதாகி இருந்தது தன் அக்காவின் பெருமையில்… ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் தன் தோழியை பொய்யாக முறைக்க
”அட ஆமா செழியன்… முறைக்காத… பொய்லாம் சொல்லல… உண்மையிலேயே உங்க அக்கா அவ்ளோ ஃபேமஸ்… எங்க பாட்டிகிட்ட” என்றவள்
“அப்புறம் முகிலன் எப்டி இருக்கான்… அப்புறம் கமலியக்காவை சுத்திட்டே இருக்குங்களே அந்த ரெண்டு சில் வண்டுகளும் எப்படி இருக்குதுங்க…” பூஜா கேட்ட போதே செழியனின் கண்களில் ஆராதனாவின் சிறு வயது தோற்றம் வந்து நிற்க… அவ்வளவுதான் தன் அருகில் இருப்பவளுக்கு பதில் சொல்லாமல் தன்னவள் நினைவில் ஊர்வலம் போயிருக்க… தோழியின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையிலா இருந்திருப்பான்…
“டேய்… டேய்… செழியா… என்னாச்சு… “ திரும்பி சத்தமாக அவனிடம் கேட்க
செழியனும்…. சுதாரித்து…
“எ.. என்ன என்ன சொன்ன… யாரைக் கேட்ட…” சமாளிக்கும் விதமாக பூஜாவிடம் மீண்டும் கேட்க
”அதான் அந்த ரெண்டு சில் வண்டும்… நான் கூட பட்ட பேர் வச்சு சொல்வேனே…. பார்பி டால் செல்வி... ” என்று ஆரம்பித்தவள்… செல்வியைப் பற்றி பெரிதாகப் பேசாமல் ஆராதனாவிடம் வந்தாள்
“அப்புறம் அந்த டாம் பாய்… ஆனால்… உன்னைப் பார்த்தால் மட்டும் பம்முமே உன் மாமா பொண்ணு ‘தனா’… அப்பா சரியான அராத்துடா அது… ஆனால் உன்னைப் பார்த்த உடனே நல்ல புள்ள மாதிரி சீனைப் போடும் பாரு…” பூஜா கேட்டபடியே ஏதோ ஞாபகம் வந்தவளாக… செழியனின் பதிலை எதிர்பார்க்காமல்
”அப்புறம் கார்த்தி அண்ணா எப்படி இருக்காங்க…. அவங்களுக்குத்தானே கமலிக்காவை மேரேஜ் பண்ணப்போறதா சொல்வாங்க… மேரேஜ் ஆகியிருச்சா…”
இப்போது ஆராவின் செழியன் இயல்பான செழியனாக மாறி இருந்தான்…
“ஹ்ம்ம்… கமலிக்கு போன வாரம் தான் மேரேஜ் ஆனது” எங்கோ பார்த்தபடி சொன்னான் செழியன்… சொல்ல விருப்பமில்லை என்றாலும்… சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சொன்னான்…
அவன் சொல்லி முடிக்கவில்லை… பூஜாவின் முகம் சோகத்தை பூசியிருந்தது இப்போது
“அச்சோ… அப்போ நான் மிஸ் பண்ணிட்டேனா… ஜஸ்ட் ஒன் வீக் பிஃபோர் நான் உன்னைப் பார்த்திருந்தா… கமலிக்கா மேரேஜை அட்டெண்ட் பண்ணியிருப்பேனே… உங்க ஊர்லதானே மேரேஜ் நடந்திருக்கும்… அப்போ நான் எல்லோரையும் பார்த்திருக்கலாமே” பூஜா படபடவென்று பேசிக் கொண்டே போக
செழியன் அதற்குமேல் பொறுமை காக்கவில்லை… கமலியின் திருமணவிசயத்தில் நடந்த அத்தனை பிரச்சனைனகளையும் சொல்லி முடித்திருக்க... அனைத்தையும் கேட்ட பூஜாவும் இப்போது அமைதியுடன் இருந்தாள்… அதே நேரம் பூஜாவின் வீடும் வந்திருக்க… பூஜாவும் செழியனும் ஏதும் பேசாமலேயே வீட்டுக்குள் நுழைய இருவரையும் வரவேற்றார் பூஜாவின் பாட்டி…
அவருக்கு செழியனை முதலில் அடையாளம் தெரியவில்லை… ஆனால் செழியனை யார் என்று சொல்லி பூஜா அறிமுகப்படுத்தியவுடனேயே…
“யாரு நம்ம கல்லு வீட்டுக்காரங்க செழியனா… எப்படிப்பா இருக்க…” என்று ஆரம்பித்தவர்… பேசிக் கொண்டே இருக்க… செழியனும் அவரோடு அளவளாவிக் கொண்டிருக்க…
பூஜா அவனுக்கு குளிர்பானம் எடுத்து வரச் சென்று விட்டாள்…
--
சில நிமிடங்களில் கைகளில் குளிர்பானத்தோடு மீண்டும் திரும்பி வந்திருந்தாள் பூஜா… அவள் கொடுத்த குளிர்பானத்தைக் கைகளில் வாங்கியபடியே
“உங்க அப்பா எங்க பூஜா…” செழியன் கேட்க
“பாப்பாவுக்கு ஸ்கூல் விட்ற நேரம்… கூப்பிடப் போயிருக்காரு… இப்போ வந்துருவாரு…” என்றவளை முதன் முதலாக ஆராய்ச்சியுடன் பார்த்தவனிடம்… பூஜா என்னவென்று கேட்க
செழியன் ஒன்றுமில்லை என்பது போல அவளிடம் தலை ஆட்டிவிட்டு மீண்டும் பாட்டியுடன் பேச ஆரம்பிக்க… பூஜா அமைதியாக அமர்ந்தாள்…
”என்னமோப்பா… யார்கிட்ட.. என்ன சொல்லி என்ன பிரயோசனம்… என் மகனுக்கும் ஒத்த வாழ்க்கை… அதே போல அவன் பெத்த பொண்ணு… என் பேத்திக்கும் ஒத்த வாழ்க்கைனு ஆகிப் போச்சு… என் மகனாச்சும் லவ்வுனு ஏதோ பண்ணி மோசம் போனான்… என் பேத்தி வாழ்க்கை… நாங்களே கெடுத்துட்டோம்… நாசமா போறவன்…”
“ப்ச்ச்… பாட்டி… அடுப்புல பால் வச்சுருக்கேன்… அதைப் போய்ப் பாரு” என பூஜா மிரட்டி சமையலறைக்கு அனுப்ப
“என்னாச்சு பூஜா… பாட்டி சொன்னதெல்லாம் கேட்டதுலருந்து ரொம்ப கஷ்டமா இருக்கு” செழியன் கவலை தோய்ந்த முகத்தோடு கேட்க
பூஜா விரக்தியாகச் சிரித்தாள்… பின்
“அதெல்லாம் சொல்ற அளவுக்கு பெரிய விசயமும் இல்லை… கவலைப்பட்ற அளவுக்கு ஒர்த்தும் இல்லை… ” என்றவள்… முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமலேயே தொடர்ந்தாள்…
“அப்பா… பாட்டி ரெண்டு பேரும் பார்த்து பார்த்துதான் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணினாங்க… கல்யாணத்துக்கு முன்னால மூணு மாசம் டைம் இருந்தது… காதலோ காதல்னு உருகினான்… காவியக் காதல் மாதிரி உனக்கு நான் எனக்கு நீ படைக்கப்பட்டவங்கன்னு வசனம் பேசினான்… கல்யாணம் ஆன ஒரே வாரத்துல… எல்லாம் காலி… எல்லா பேச்சும் வேஷம்… தண்ணீல எழுதின மாதிரி போயிருச்சு”
”உன் அம்மா மாதிரி நீயும் வேறொருத்தவனோட போயிருவியான்னு… உன் அம்மா மாதிரிதானே நீயும் இருப்பேன்னு… இன்னும் என்னென்னவோ… என் அழகு… என் படிப்பு… என் திறமை… எல்லாமே போட்டில வந்து நின்னு… ஒரே மாசத்தில வீட்டுக்கு வந்துட்டேன்”
கைகளைக் கட்டிக் கொண்டவள்…
”அந்த ஒரு மாச வாழ்க்கைல… கர்ப்பமும் ஆகிட்டேன்… அப்பாவும் பாட்டியும் எவ்வளவோ பேசினாங்க அவன்கிட்ட… அவன் மாறலை… இன்னும் சொல்லப் போனால் என் வயித்துல இருந்த குழந்தையவே சந்தேகமா பார்க்க ஆரம்பிச்சான்… அப்புறம் என்ன கோர்ட் கேஸ்… விவாகரத்தும் கிடச்சிருச்சு… 21 ல மேரேஜ்… 25 வயசுல மூன்றரை வயசுக் குழந்தையோட…” பூஜா தன் கதையைச் சொல்லி முடித்தவளாக…
”கழட்டி விட்றதுக்கு என்னவெல்லாம் காரணம் சொல்றான்… என் அம்மாவை இழுக்கிறான்… என் அம்மா குணம் எப்படியோ.. அப்படித்தான் என் குணமும் இருக்கும்னு…” இதைக் கவலையோடு சொல்லவில்லை அவள்… ஒரு வித சலிப்புடன் சொல்லிக் கொண்டிருக்க
இங்கு செழியன் மனதிலோ சட்டென்று மேகலாவின் பிம்பம் வர நினைக்க… சட்டென்று ஆராதனாவை தனக்குள் நினைத்துக் கொண்டான்… அடுத்த நொடியே தாய்-மகள் ஒப்புமையை மனமும் நிறுத்த… பூஜாவைக் கவனிக்க ஆரம்பித்தான்…
”ஃபீல்லாம் பண்ணாதடா… அழுது வடியுறதுக்கு நானும் பழைய பூஜா இல்லை… கர்ப்பமா இருக்கும் போதே வேலைக்குப் போனேன்… ஒன் இயர்ல டைவர்ஸும் கிடச்சிருச்சு… பாப்பாக்கு எட்டு மாசத்துல அமெரிக்கா போயிட்டேன்… பாப்பாவையும் அப்பாவையும் அடுத்த ஆறுமாசத்துல கூப்டுக்கிட்டேன்… அங்கதான் இருந்தோம்… பாட்டிக்கு கொஞ்ச நாளா முடியல… வேலையை விட்டுட்டு இங்க வந்துட்டேன்… இப்போ பாட்டி ஓகே… அதான் வேற வேலை தேடிட்டு இருக்கேன்… அப்போதான் உன் கம்பெனி ஓபனிங் பார்த்தேன்… அதை விடு… யூ எஸ் ஆஃபர் தான் தேடிட்டு இருக்கேன்…. அடுத்து தேடனும்… அதெல்லாம் கெடச்சுரும் ” பூஜா நம்பிக்கையுடன் சொன்ன போதே
செழியன் அதன் பின் பூஜாவிடம் வேறு ஏதும் திருமணம் பற்றி பேசவில்லை… சில நிமிடங்கள் மற்ற விசயங்களைப் பற்றி பேசியபடி இருந்தார்கள்..
செழியனுக்கும் நேரம் கடந்திருக்க… பூஜாவின் தந்தை பத்ரிநாத் அப்போதும் வராமல் இருக்க…
“ஓகே பூஜா… அப்பா வந்தா நான் கேட்டதா சொல்லு… நானும் கிளம்பனும்… டைம் இல்ல… இன்னொரு நாள் வந்து பார்க்கிறேன்… வேலைலாம் பெண்டிங்ல இருக்கு” என்றபடி… அங்கிருந்து வெளியேறி இருக்க…
பூஜாவும் தலை ஆட்டியவளாக… அவனிடம் விடைபெற… கிளம்புவதற்காக எழுந்த செழியன்… பூஜாவிடம்
“இந்த போஸ்டுக்கு நீ சரியான ஆள இருப்ப பூஜா… “ என்று சொல்ல… பூஜா புருவம் சுருக்கிப் பார்க்க
“ஃப்ரெண்டுன்றதுனால இல்லை… நீ உன் வாழ்க்கையை இவ்ளோ தைரியமா சமாளிச்சு வந்துருக்கியே… அந்த ஒரு காரணத்துக்காகவே உனக்கு ஆஃபர் கொடுக்கலாம் பூஜா… அக்செப்ட் பண்ணிக்கிருவியா” செழியன் கேட்க
பூஜா யோசிக்கவெல்லாம் இல்லை… அவளுக்கு இந்த வேலையும் இப்போது தேவையாக… தன் சம்மதத்தைச் சொல்லியும் இருந்தாள்…
அவளோடு பேசியபடியே தன் கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து காரில் ஏறி அமர்ந்தவன்…
“ஏதாவது சந்தேகம்னா போன் பண்ணு பூஜா…. “
“உங்க அப்பாகிட்ட இந்த வேலையைப் பற்றியும் சொல்லு.. முக்கியமா… உடனே நீ அமெரிக்கா கிளம்பனும்ன்ற முடிவை அவர்கிட்ட சொல்லு… பாப்பா… அப்பா… பாட்டி இவங்களையும் நீ சீக்கிரமா கூட்டிட்டுப் போகலாம்… ஆனால் இப்போ உன் கூட அவங்கள்ளாம் வர முடியாது… அதையும் சொல்லிரு… பேசிட்டு பதில் சொல்லு” என்றபடி செழியனும் பூஜாவின் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான்…
----
இரண்டு நாட்கள் கடந்திருக்க… இங்கு ஆராதனாவின் கிராமத்தில்…
ஆராதனா… மேகலா… நீலவேணி மட்டுமே வீட்டில்..
மணி பத்தரையைத் தாண்டி இருக்க…
வேலாயுதம் தன் அறையை விட்டு வெளியே வந்தார்…
“ராஜா இன்னும் வரலையா…” மனைவியிடம் மகனைப் பற்றிக் கேட்டவராக… தன் மருமகள் புறம் திரும்பியவராக
“இவனும் வரலையா…” கார்த்திக்கையும் விசாரிக்க…. மேகலா பதில் சொல்லவில்லை…. நீலவேணிதான் தன் கணவருக்கு பதில் சொன்னார்
“ராஜாவும் வரலை… கார்த்திக்கும் வரலை…”
“மணி பத்தாகிருச்சே.. ஒன்பதறைக்கெல்லாம் ராஜா வீட்டில் இருப்பானே… இன்னைக்கு என்னாச்சு…” தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டவராக… வேலாயுதமும் உள்ளே சென்று விட்டார்…
--
மாமனார் கேட்டதும் அறியாமல்… அங்கிருந்து போனதும் அறியாமல் கேட்டதற்குகூட மேகலாவோ யோசனையுடன் ஆராதனாவையே பார்த்துக் கொண்டிருக்க…
”என்னம்மா… அப்போதிலருந்து என்னையே பார்த்துட்டு இருக்கீங்க…” ஆராதனா தன் தாயின் பார்வை வித்தியாசம் உணர்ந்து கேட்க…
“ஒண்ணுமில்லை…” என்ற மட்டும் சொல்லி மேகலா ஏதும் பேசாமல் இருக்க… நீலவேணி கண்களாலேயே மேகலாவுக்கு ஜாடை செய்ய…. மேகலாவும் புரிந்து பேசாமல் இருக்க…
“நீ உள்ள போ… மணி ஆகிருச்சுல ’தனா’… தூங்கப் போ ” என்ற நீலவேணியிடம்
“அண்ணன் இன்னும் வரலையே அப்பத்தா…”
“நீ என்ன அவனுக்கு சாப்பாடா போடப் போற… அம்மா பார்த்துப்பா… நீ தூங்கப் போ…” என்றவர் அழுத்தம் கொடுத்த போதே அங்கிருந்து ஆராதனா செல்ல வேண்டும் என்ற கட்டளை இருந்தது…
கார்த்திக் சகோதரனாக இருந்த போதிலும்… அவன் குடித்து விட்டு வரும் போது… ஆராதனா அவனுக்கு சாப்பாடு பறிமாறக் கூடாது என அவள் தந்தை ராஜசேகர் கண்டிப்பாக சொல்லியிருந்தார்… பெரும்பாலும் ஆராதனா தாயின் அருகில் இருந்து பறிமாறும் போது அவர் கேட்டதை மட்டும் எடுத்து கொடுப்பாள்… அதற்கே ராஜசேகர் ஆராதனாவை திட்டுவார்…
இப்படியாக கார்த்திக் நிலை மாறி இருக்க… இன்று ஏனோ கார்த்திக் இன்னும் வரவில்லை…
இதற்கும் மேலும் அவள் தூங்காமல் தன் அண்ணனுக்காக காத்திருந்தால்… அவள் அப்பாத்தா இல்லை அவள் அப்பாவிடம் இருந்து திட்டு கிடைக்கும்…
ஆகவே… ஆராதனா அனிச்சையாகவே எழுந்து… அவள் அறைக்குள் நுழையப்போக
அப்போது நீலவேணி…
”ஏய் ’தனா’… அப்டியே… பனியாரத்துக்கு அரிசி உளுந்து எடுத்து வச்சிருக்கேன்… அதுக்கு தண்ணி ஊத்தி வச்சுட்டு போ… போன மாசம் நீ கேட்ட… செஞ்சு கொடுக்க முடியல… இங்க நடந்த பிரச்சசனைல மறந்துட்டேன்… இன்னைக்குத்தான் ஞாபகம் வந்துச்சு…” பேத்தியிடம் நீலவேணி சொன்னபோதே…
ஆராதனாவுக்கு அத்தை திலகா ஞாபகம் தான் வந்தது… கண்கள் கலங்கத்தான் செய்தன… தனக்கே இப்படி என்றால் அவள் அப்பாத்தாவுக்கு எப்படி இருக்கும்… அவருக்கு அவர் மகளின் ஞாபகம் வராமலா இருக்கும்…
திலகாவுக்கு பனியாரம் என்றால் அதுவும் அவர் அம்மா சுட்டுக் கொடுக்கும் பனியாரம் என்றால் உயிர்…
மகள் கிராமத்துக்கு வரும் போதெல்லாம்… தன் மகளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வார்… அதே போல் சென்னைக்கும் மாதம் ஒரு முறை சென்று வந்து விடுவார்…
அப்படி பாசம் காட்டி வளர்த்த மகளை ஒதுக்கி வைத்து விட்டு எப்படி இப்படி இருக்க முடிகிறது… தன் சித்தாப்பாவுக்கு கூட ஏதோ காதல் திருமணம் என்று காரணம் இருந்தது… ஆனால் அத்தை என்ன தவறு செய்தார்… அவர் பிள்ளைகள் செய்த தவறுக்கு அவர் தண்டனை அனுபவிப்பதா…
மனதோடு கேள்வி கேட்டுக் கொண்டவளாக… ஆராதனா அங்கிருந்து நகர்ந்தாள்
---
ஆராதனாவின் தலை மறைந்ததுமே… நீலவேணி மேகலையிடம்…
“இப்போ ஏன் மேகலை… அவ மூஞ்சிய மூஞ்சிய பார்த்துட்டு இருக்க… அந்த ஜோசியக்காரன் சொன்னதையா நம்பிட்டு இருக்க… அவன் ஒரு ஃப்ராடு… அவன் கார்த்திக் ஜாதகத்தைப் பார்த்து சொன்ன இலட்சணத்தைத்தான் பார்த்தோமே…” என்ற போதே மேகலையின் கண்களில் இலேசாக நீர் கோர்த்திருந்தது…
மருமகள் அவ்வளவு சாதாரணமாக அழுபவள் இல்லையே.. அப்படிப்பட்டவள் கண்களில் இருந்து கண்ணீர் கசிவதைப் பார்த்த நீலவேணி பதறிப் போயிருந்தார்…
“என்னமோ தெரியலத்த… கார்த்திக்கு பிரச்சனைதான்… அப்போ கூட மனசு தைரியமா இருந்தேன்… ஆனால்”
“ஆனால் இப்போ என்ன… ஏன் இவ்ளோ கவலைப்பட்ற” மருமகளிடம் ஆறுதலாகப் பேச ஆரம்பித்திருக்க
“இல்லத்த ’தனா ஜாதகம்’ பற்றி அந்த ஜோசியர் சொன்னதுதான் மனசு ஃபுல்லா இருக்கு… அது உண்மையா இருக்காதுதானே அத்தை… அவளுக்கு நேரம் காலம் ஏதுமே சரி இல்லைனு சொல்றாங்களே… அவ வாழ்க்கையை அவளே அழிச்சுக்குவான்னு… இப்போதைக்கு அவளுக்கு கல்யாணப் பேச்சே எடுக்கக் கூடாதுன்னு… ஏன் ஜாதகக் கட்டைக் கூடத் தூக்கக் கூடாதுனு… “ மேகலாவின் குரல் தடுமாறி வர
“ஆமா அவன் கிடக்கிறான்… என்னத்த சொல்லிக் கிழிச்சான் அவன்… அவனை விடு… கல்யாணம் பண்ணிக் கொடுக்கக் கூடாது… கல்யாண வாழ்க்கை நல்லா இருக்காதுன்னுதானே சொன்னான்… அது கூட நாலு வருசத்துக்குதானே.. அவ்ளோதானே… விடு… நம்ம புள்ளைக்கு ராஜ குமாரன் வருவான்… அதுவரை நம்ம கூட இருக்கட்டும்” என்றவர்
“அந்த ஃப்ராடு ஜோசியக் காரன் சொல்றதை நம்பி நீ அழறியே.. அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு… கார்த்திக்கு என்ன சொன்னான்… அவன் வாழ்க்கைல இனிதான் சந்தோசமாம்… தேவதை அவனைத் தேடி வரப் போறான்னு… நல்லா ஜோசியக்காரனைத் தேடி… ஜோசியம் பார்க்கப் போனோம்… ’கார்த்தி’ ஜாதகத்தைப் பற்றி அவன் சொன்ன பின்னாடி… ’தனா’ ஜாதகத்தை அவன்கிட்ட காமிச்சுருக்கவே கூடாது… என் தப்பு” என்றபடி நீலவேணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
ஒரே சத்தம்… அனைவரும் திரும்பி பார்க்க… ராஜசேகர் தான் வந்து கொண்டிருந்தார்… வரும் போதே அங்கிருந்த பொருட்களை எல்லாம் கால்களால் துவசம் செய்தபடியே உள்ளே வர…
மனைவியாக கணவரின் ஆவேசம்… கோபம் உணர்ந்தவராக… மேகலா பதறி அவர் அருகே ஓடி இருந்தார்…
---
அதே இரவு…
ஏர்ப்போர்ட்டில் இருந்த செழியன்… முகிலனுக்கு அழைத்தான்…
“என்னடா… திடீர்னு… இந்த டைம்ல ” முகிலன் வினவ… தன் வெளிநாட்டுப் பயணத்தைச் செழியனும் அவனிடம் சொல்ல
“ஒகே… உன் பிஸ்னஸ்க்காக கிளம்பியிருக்க… அதெல்லாம் விடு… ஆராதனா விசயத்தில என்ன முடிவு எடுத்திருக்க… நீ பாட்டுக்கு ஊருக்கு போறேன்னு சொல்ற… நான் சொல்ல வர்றதைக் கேளுடா… ” முகிலன் ஆரம்பிக்க
“ப்ளீஸ்டா… அன்னைக்கு மாதிரி…ஏதும் நெகட்டிவா ஏதாவது பேசி வச்சுறாதா… “ என்று செழியன் முன்னெச்சரிக்கையாகச் சொல்லியவாறே
”உனக்கு ஒரு விசயம் தெரியுமா…. என்னோட ஒரு நாள்ல உன்னோட சந்தோஷமான நிமிசம் எதுன்னு கேட்டா… அது உன்கூட பேசுற நிமிசம்தான்னு சொல்வேன்… அது ஏன்னு தெரியுமா…” என்று நிறுத்திய செழியன்
“சுயநலமான காரணம் தான்… அது உனக்கும் தெரியும்” என்று தணிந்த குரலில் சொன்னவனாக…. மீண்டும் தன் குரலைச் சரிசெய்து தன் நண்பனிடம் பேச ஆரம்பித்தான்
“ஏன்னா உன்கிட்ட பேசுறப்ப மட்டும் தான் நான் என் ’ஆரா’ மேலா வச்சிருக்கிற காதலோட நிஜமான நிமிடங்கள்… அவளோடான என்னோட வானம் தாண்டிய கற்பனைகளுக்கும்… கனவுகளுக்குமான சில நிமிச நேரடி பேச்சுக்கள் உன்கிட்ட மட்டுமே… அப்படிப்பட்ட அந்த சந்தோசமான நிமிடங்கள்ல… நீ என்னைக் கார்த்திக்கோட கம்பேர் பண்ணிப் பேசிட்ட… சுத்தமா என்னோட சந்தோசமே போச்சு… ப்ளீஸ் அது மாதிரி இன்னைக்கு ஏதும் பேசிறாத… இனி பேசனும்னும் நினைக்காத…” செழியனின் குரலில் அழுத்தமும்… வேதனையும் வந்திருக்க
“டேய்…” முகிலன் பேச ஆரம்பித்த போதே… செழியன் அவனைப் பேச விடவே இல்லை… அன்று முகிலன் சொன்ன ஒற்றை வார்த்தையில் காயம் கொண்டவனாக… மனம் குமுறி பேசிக் கொண்டிருந்தான்…
”இந்தச் செழியன்… முத்துராமன்-திலகா பையனா பாசக்காரனா இருக்கலாம்… கமலியோட அண்ணனா தைரியமா இருக்கலாம்… ஒரு CTOவா எதையும் ஹேண்டில் பண்ணலாம்… இப்படி என்ன முகம் இருந்தாலும்… ’ஆரா’ வோட செழியனா நான் ரொம்ப பலவீனமானவண்டா… அது உனக்கும் மட்டும் தானடா தெரியும்… அது தெரிஞ்சும் ஏண்டா அப்படி பேசுன…” செழியன் குரல் கீழிறங்கி இருக்க
“டேய் லூசு மாதிரி பேசாதா… அன்னைக்கு நான் சொல்ல வந்தது என்னன்னா… நீ தனாகிட்ட பேசுன்னு சொல்ல வந்தேன்… உன் மனசுல இருக்கிற அவகிட்ட அட்லீஸ்ட் மறைமுகமாவது சொல்லி வை… ஏதாவது நடந்தா கூடா அவளும் சமாளிப்பாள்ள உனக்கென்ன நீ பையன்… அவபொண்ணுடா… பாவம்டா அவ…” முகிலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
”என்ன… உன் தங்கச்சி மேல அக்கறையா… இல்லை உன் நண்பன் மச்சான் என் மேல அக்கறையா” சிரித்த செழியன்…
“ஆனால் என் மேல அக்கறையா கேட்கிற மாதிரி தெரியலையே…” – முகிலன் முறைத்தான் நண்பனை…
”முறைக்காதடா…அவளே என் மேல செம காண்டுல இருப்பா… இப்போ போய் அவகிட்ட என்ன பேசச் சொல்ற…” நண்பனின் கோபம் உணர்ந்தவனாக செழியன் சலிப்பாகச் சொல்ல…
”தனா காலேஜ் முடிக்கிற வரை பிரச்சனை இல்லைனு நினச்சுட்டு கூலா இருக்க… அப்படித்தானே” முகிலன் கேட்க
செழியனின் முகமோ தீவிர பாவத்திற்கு மாறி இருந்தது…
“இல்லடா… இன்னும் சீரியஸா இருக்கேன்… இப்போ யூ எஸ் போறதே எல்லாத்தையும் முடிச்சுட்டு இந்தியா வர்றதுக்குத்தான்… இங்க இருந்தே எல்லாத்தையும் ஹேண்டில் பண்ண ஸ்டார்ட் பண்ணனும்”
“எனக்கு நீ பண்றது ஏதுமே புரியலடா… இதுக்கு மட்டும் பதில் சொல்லு…. இப்போ இங்க இருக்கிற நிலவரத்துல… நிலவரம்னு சொல்றது கூடத் தப்பு… கலவரம் தான் சரியான வார்த்தை… சொல்லும்… இப்போ இந்தப் பயணம் முக்கியமா” முகிலன் கடுப்பாகக் கேட்க
“ஹ்ம்ம்… முக்கியம் தான்… இனிமேல்தாண்டா எனக்குப் பிரச்சனை… இப்போதுலருந்தே அவளுக்கு அலையண்ஸ் பார்க்க ஆரம்பிச்சுருவாங்கன்னு தோணுது… ஏதாவது நல்ல வரன் வந்தா அவ படிப்பைப் பற்றியெல்லாம் யோசிக்க மாட்டாங்க… அதுதான்” செழியன் கவலையாகச் சொன்னவன்…
“ஆனாலும் அவங்க என்ன ட்ரை பண்ணினாலும் கல்யாணம்லாம் நடக்காது… எல்லா வழியிலயும் நான் செக் பண்ணி வச்சுருக்கேனே… அவளுக்கு சொந்தத்துலதான் மேரேஜ் நடக்குமாம்… வெறும் சொந்தம் இல்லை நெருங்கிய சொந்தத்துலதான்… அவ ஜாதகம்லாம் எப்போவோ சுட்டுட்டேன்… எங்களுக்கு பொருத்தமும் பார்த்துட்டேன்…” செழியன் சொல்ல
“நீ அதெல்லாம் செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியம் டா… இப்போ என்ன சொல்ல வர்ற… அதைச் சொல்லு” முகிலன் நண்பனைத் தெரிந்தவனாகச் சொன்னவன்… செழியனுக்கு புரிய வைக்கும் நோக்கில் பேசினான்…
“சின்னப் பொண்ணுடா அவ… பெரியப்பா வீட்ல… அவளுக்கு இப்போலாம் மேரேஜ் பண்ணலாம் அவங்க நினைக்க மாட்டாங்க… நீ அவகிட்ட பேசுன்னு சொன்னா… உன் மனசுல இருக்கிறதை அவகிட்ட சொல்லுனு சொன்னா… என்னென்னமோ பேசுற…” என்ற போதே
“இல்லடா… நானும் அவ மேரேஜ் பற்றி பெருசா பயப்படல… ஜாதகமும் எனக்கு சாதகமாத்தான் இருக்கு… ஆனாலும் என்னமோ பயமா இருக்கு… நான் எப்போதுமே என் இன்ஸ்டிக்ட்ட அலட்சியமா விட மாட்டேன்… இந்த 2 வீக்ஸ் கூட எனக்கு பயமாத்தான் இருக்கு…” செழியனின் குரலே கம்மியிருந்தது
”பூஜாவும் வர்றாளா…” நண்பனின் கவலையில் முகிலன் பேச்சை மாற்றினான்… பூஜாவைப் பார்த்ததை நண்பனிடம் சொல்லி இருந்தான்… முகிலன் கூட பூஜாவிடம் பேசி இருந்தான்…
“ஹ்ம்ம்… வந்துட்டா… ஏர்போர்ட்லதான் இருக்கா… அவங்க ஃபேமிலி கூட பேசிட்டு இருக்கா… அவ பொண்ணு அவ்ளோ க்யூட்… அதுலயும் அந்த உச்சிக் குடுமி அவ்ளோ க்யூட்… “ என்று அழுத்திய செழியனிடம்
“தெரியுமே… அந்த உச்சிக் குடுமிக்கு இவ்ளோ இம்பார்ட்டண்ட் கொடுக்கிறேன்னு…” முகிலன் நக்கலாகச் சொல்ல… செழியன் முகத்திலோ செவ்வானம்…
முகிலன் நண்பனின் மௌனம் உணர்ந்தவனாக
“டேய்… உன் லவ் ஃபீலிங்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்… ’ஆரா’ புராணத்தை விட்டுட்டு நான் சொல்றதைக் காது கொடுத்து கேளு” என்று முகிலன் தீவிரமாகப் பேச ஆரம்பித்தான்…
“’ஆரா’வை விடலாம் முடியாது.. சொல்லு… சீரியஸா அப்படி என்ன சொல்லப் போற” தன் காதல் விசயத்தில் தெளிவாக இருப்பவனாக அப்போதும் காட்டிக் கொண்டான் செழியன்…
முகிலனோ இப்போது பூஜாவைப் பற்றி பேச ஆரம்பித்தான்
“பூஜா நல்லவதான்… ஆனாலும் அவளால உன்னை ஒருத்தன் விரோதியா பார்க்கிற அளவுக்கு கலவரம் ஆகியிருக்கு… அதையும் மறந்துராத…” என்ற முகிலனிடம்
“நரேன் என்னை விரோதியா பார்க்கிறதுக்கு… பூஜா என்னடா பண்ணுவா… இந்த ரெண்டு நாள்ள அவ நரேனைப் பற்றி ஏதாவது பேசினாளா… செல்வி… ஏன் அவங்க அம்மாவை அப்பாவைப் பற்றி கூட அவ பேசலையே… சும்மா பூஜாவையே குறை சொல்லாத” என்றபடியே
“நான் அமெரிக்கா போறது ’ஆரா’ வுக்கு தெரியுற மாதிரி போட்டு வை… வாட்சப் க்ரூப்ல இருந்து வெளியே போய்ட்டா… “ என்றவன்…
“இல்லல்ல என்னைப் பற்றி அவகிட்ட நீ ஏதும் பேசி வைக்காத… உளரிருவ…ரெண்டு மூணு நாள்ல… நானே செல்விக்கு மெசேஜ் பண்ணிக்கிறேன்… அவ மூலம் ’ஆரா’க்கு எப்படியும் தெரிஞ்சிரும்” என்றும் வைத்தவன்… தன் தோழி பூஜாவுடன் விமானத்திலும் பறந்திருந்தான்…
---
Hi All,
Sorry, indha week mattum adjust pannikanga...next week vanthuren... and thank you so mucy for allyour comments and reading
Thanks
Praveena
Next update plz
Sis adutha ud epo? Seekaram podunga
O. K. Nice
Nice
Lovely praveee