/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
“எப்படி இருக்கீங்க எல்லோரும்... வந்துட்டேன் செழியன் ஆராதனா... மற்றும் செல்வி-கார்த்திக்கோட....
இது லவ் ஸ்டோரிதான்... கண்டிப்பா மத்த கதை ஹீரோ ஹிரோயின் மாதிரி போல உங்கள செழியன் - ஆராதனாவும் உங்களைக் கவர்வாங்கன்னு நினைக்கிறேன்... நம்புகிறேன்...
அண்ட் இந்தக் கதை கொஞ்சம் பிற்போக்கா ஆரம்பிக்கும்... ஆனால் அப்படியே போகாது. வழக்கம் போல இந்தக் கதை மாந்தர்களுக்கும் உங்க ஆதரவை அளிப்பீர்கள் என ‘உறவான நிலவொன்று சதிராட...” இதோ உங்கள் பார்வைக்கு....
அப்புறம் இன்னொரு விசயம்... கொஞ்சம் ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருக்கும்... கேரக்டரோட கனெக்ட் ஆகிட்டேன்னா... சரி ஆகிரும்... அட்ஜ்ஸ்ட் மக்களே...
என்றும் அன்புடன்...
உங்கள் பிரவீணா...
*/
அத்தியாயம் 6:
தை மாத முதல் வாரம்… அந்தக் குளிரிலும் அறையிl ஏசி ஓடிக் கொண்டிருக்க… அதிகாலையில் இன்னும் அதிகமாக குளிர ஆரம்பித்திருக்க… உறக்கத்திலேயே போர்வையைத் தேடின செழியனின் கைகள்… அப்போது…
“செழியன் அத்தான்… இப்போ எழுந்துக்கப் போறீங்கள்ளா… இல்லையா” அவன் முகத்தின் அருகின் ஒலித்த ஆராதனாவின் உரிமை கலந்த கண்டிப்பான குரலே செழியனுக்கு கதகதப்பைக் கொண்டு வந்திருக்க… போர்வையைத் தேடுவதை விட்டு விட்டு…
“ஆரா…” என்றபடி தன்னவளை விழி மூடியபடியே தனக்குள் கொண்டு வர கைகளால் அவளை சுற்றி வளைக்க அவள் சேலை மறைத்த இடையைத் தேட ஆரம்பித்த போதே… அருகில் இருந்த அலைபேசியில் அலாரம் அடிக்க இப்போது செழியன் கண்ட கனவுலகம் கண்ணை விட்டு சென்றிருக்க… கூடவே அவனின் ஆராதனாவும் மறைந்திருந்தாள்…
”ச்சேய் கனவா..” கனவு என்பதைப் புரிந்து கொண்டவனாக…. சலிப்போடு எழுந்தவன்… அலைபேசியின் ஒலியை நிறுத்தி வைத்தபடியே…
“என்ன கனவுல எல்லாம் வர்ற அளவுக்கு பெர்மிஷன் கொடுத்திருக்கா…” என்றபடி சற்று முன் வந்த கனவை நினைத்துப் பார்த்த போதே
”டேய் செழியா… கனவெல்லாம் எல்லை மீறிப் போகுதே… என்ன விசயம்... பார்த்து” அவன் மனசாட்சி அவனை எச்சரிக்கை செய்ய….
“அதான் அலார்ம் ரூபத்துல வந்து ஆப்பு வச்சாச்சே… உன் நல்லபுள்ள இமேஜுக்கு ஆப்பு ஆகலதானே… அப்புறம் என்ன… “ மனசாட்சியை ஓட விரட்டிய போதே… அவன் கைகளைக் தன் கண் முன்னே கொண்டு வந்தவன்…
“ஹ்ம்ம்… என்னடா ஆச்சு செழியா உனக்கு திடீர்னு… அன்னைக்கு நடந்த கலவரம் எல்லாம் ஒரு பக்கம்னு தூரத் தூக்கிப் போட்டுட்டு… அவ தாவணியோட வந்து உன் முன்னாடி வந்து நின்னதுதான் நினைப்பா இருக்கே…”
பெருமூச்சு விட்டவனாக…
“எப்படியும் நாலு வருசம் ஆகும் இந்தக் கனவு நனவாக… ” தனக்குள் சொல்லிக் கொண்டவன் வார்த்தைகளில் அப்படி ஒரு உறுதி… நம்பிக்கை
உடற்பயிற்சி செய்யத் தயாராகி வெளியே வர… அங்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் அவரது அன்னை…
“என்னம்மா… சீக்கிரமா எழுந்துட்டீங்க போல” என்றபடியே அவர் அருகில் அமர… திலகா இப்போதும் அமையாக இருக்க…
“அம்மா.. இப்படியே இருந்தா… என்ன அர்த்தம்… கமலி ஃபீல் பண்றாம்மா…” தாயிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… முத்துராமும் அங்கு வந்தவராக
“உன் அம்மாக்கு நம்ம எல்லாரையும் விட… அவங்க பிறந்த வீடு தான் முக்கியம்… அவங்க அண்ண வீடு தான் முக்கியம்…” அவ்வளவுதான்…. திலகா கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு வர….
“ஹ்ம்ம்… நல்லா அழு… அப்படியே … உன் அண்ணனும்… உன் அம்மா அப்பாவும் உருகி ஓடி வந்துருவாங்க… பகல் கனவு கண்டுட்டே உட்கார்ந்திரு…” எனும் போதே வேகமாகச் செழியன்…
“அப்பா… பகல் கனவுனா… விடிகாலை கனவும் சேர்த்து இல்லைல…” செழியன் தன்னையும் அறியாமல் கேட்டு விட…
முத்துராம் மகனை முறைக்க…
“கேட்டேன்ப்பா… நீங்க அம்மாகிட்ட பேசுங்க... “ என்றவன் தந்தையைப் பார்க்காமல் தாயைப் பார்க்க…
“என்னடா... என்னைக் கிண்டல் பண்றியாடா… எல்லோரும் சேர்ந்து என்னைத் தனியாளா நிறுத்தி… என் சந்தோசத்தைக் குழி தோண்டிப் புதச்சுட்டு… பேச்சு வேற…” என்றபடி கோபத்தோடு எழுந்து போக…
“ம்மா…” செழியன் வேகமாக தன் அன்னைப் பின்னால் போக நினைக்க…
“போகட்டும் விடுடா… பாசமலர் படம் ஓட்டிட்டு இருக்கா… வேணாம்டா சாமி அந்தக் குடும்பம்… அவங்க பாசமும் வேண்டாம்... அவங்க சாபமும் வேண்டாம்... ஜென்மத்துக்கும் அவங்க தலை வச்சுப் படுக்கக் கூடாது” முத்துராமும்… கடந்து செல்ல…
செழியன் அப்படியே அமர்ந்து விட்டான்…
இரண்டும் குடும்பங்களுக்கு இடையே இப்போதிருக்கும் இந்தச் சூழ்நிலை மாற எப்படியும் மாதங்கள்… ஏன் வருடங்கள் கூட ஆகும்… பொறுமை அவசியம் என்பதை உணர்ந்ததால் அமைதியாக இருக்க முடிந்தது…
வருடங்கள் கடந்து அவன் ஆராதனாவிடம் கொண்டிருந்த காதல் இப்போது அவன் பொறுமைக்கு கை கொடுத்திருந்தது என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மை…
----
எல்லாம் முடிந்து விட்டது…
ராஜசேகர் குடும்பத்துக்கும் அவன் தங்கை திலகா குடும்பத்துக்குமான அத்தனையும் … வீட்டு பெரியவர்கள் நீலவேணியும் வேலாயுதமும்… மகனா மகளா என்று வந்த போது… அதிலும் மகள் வீட்டு பக்கம் தவறு இருந்ததால்…. அவள் பக்கம் போக முடியாமல்…. பேத்தியின் முடிவால்… அவர்களுக்குத்தான் அவமானம்… அதனால் இன்னும் கோபம்தான் மிஞ்ச அவர்களும் திலகாவோடு சண்டைதான் போட்டனர்….
கமலியின் திருமணப் பத்திரிகையோடு தன் பெற்றோரை அழைக்க வந்தவர்… நடந்த எல்லாவற்றையும் மறந்து மன்னித்து பேத்தியை ஆசிர்வதிக்க வரச் சொல்ல….. அது இன்னும் அவர்களின் கோபத்திற்கு எண்ணெய் போட்டது போல ஆகிற்று,,,,
திலகா… தன் பெற்றோரிடம்…
“அப்பா… நீங்க ரெண்டு பேராவது வாங்கப்பா…. அம்மா சொல்லுங்கம்மா” என்று எவ்வளவோ கெஞ்ச…
”ஏற்கனவே ஒருத்தன தலை முழுகிட்டோம்… இப்போ இனி எங்களுக்கு ஒரு பொண்ணு பையன் தான்… என்ற வார்த்தைகளில் உடைந்த திலகா ஒரே அடியாக உடைந்தார் தான்…
“உனக்கு உன் பொண்ணு புள்ள முக்கியமா போய்ட்டாங்க… அவஙகளோடயே இருந்துக்க… என் பேரனை உயிரோட கொன்னுட்டா உன் பொண்ணு…. இதுல ஆசீர்வாதம் தான் அவளுக்கு முக்கியமா… இத்தனை பேரோட சாபத்தோட நல்லா இருந்துருவாளா… இல்லை நல்லாதான் வாழ்ந்துருவாளா” மூத்தவர்களாக இருந்தும் சாபம் விடுவது போல பேசி விட… இதெல்லாம் கேட்ட பின் முத்துராம் மட்டும் பொறுமையாக இருப்பாரா… முத்துராமும் பொறுமையாக இருக்க வில்லை… மீண்டும் சண்டை ஆரம்பிக்க
கார்த்திகேயன் -செழியன் – ராஜசேகர்-முத்துராம் என்ற இடத்தில் வந்து நிற்க…
”புள்ளைங்கள கண்டிச்சு வளர்க்கத் தெரியல… வந்துட்டார் பேச… வெளிய போய்யா… உன்னை மாதிரி மானங்கெட்டவனை எல்லாம்…. வீட்டுக்குள்ள வச்சு பேசுறதே எனக்கு அசிங்கம்” ராஜசேகர் முத்துராமின் மேலேயே கை வைத்து வெளியே தள்ள….
“என் புள்ளைங்களப் பற்றி… இன்னொரு தரம் பேசுனீங்க” முத்துராமும் அவமானம் தாங்க முடியாமல் தத்தளித்தார்…
“அப்படித்தாண்டா பேசுவேன்… ஆம்பளையத் தேடிப் போனவளை என்ன சொல்ல“ வார்த்தைகளை ராஜசேகர் விட… முத்துராம் இப்போது அடங்கிப் பேசவில்லை… ஆவேசமாகி இருக்க
“காட்டுமிராண்டி மாதிரி புள்ளையைப் பெத்தவன்லாம்… என் பொண்ணைப் பற்றி பேசத் தகுதி இல்ல” எனும் போதே…
“யார்டா காட்டுமிராண்டி…. உன் பொண்ணுதான் ஒழுக்கம் கெட்டவன்னா… உன் பையன்… மெத்தப் படிச்ச மேதாவி என்ன கிழிச்சான்… என் பொண்டாட்டியையே எதிர்த்து பேசினானே… அதுக்கு இருக்கு ஒருநாள் அவனுக்கு…” ராஜசேகர் அன்று செழியன் பேசியதை மனதில் வைத்திருந்தார்… அதைச் சொல்லியும் காட்டியவராக
“என் பையன் காட்டு மிராண்டியா… காட்டு மிராண்டிக்கு அர்த்தம் தெரியல உனக்கு… அதான் இப்படி பேசுற ... என் பையன் கார்த்திக் என் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருக்கான்… இல்லைனா உன் பொண்ணுக்கு என்னாகிருக்கும்னு தெரியுமா… காட்டுமிராண்டிக்கும் உனக்கு அர்த்தம் தெரிஞ்சிருக்கும்… ஊர்ல கேட்டுப்பாரு… கேட்டுப் பார்க்க என்ன… உனக்கே தெரியுமே… இப்படி ஓடிப் போனவளுக குடும்பத்துல என்ன ஆச்சுனு… அவளுங்கள இழுத்துட்டு வந்து நம்ம சாதிக்குள்ள கட்டி வச்சவன்…. இன்னைக்கு அவனுக்கு பார்த்த பொண்ணை அவனால இழுத்துட்டு வராமல் வீட்டுக்குள்ள இருக்கான்னா… என்ன காரணம்... அவன் என் பிள்ளை…என் சொல்லுக்கு கட்டுப் பட்டுஇருக்கான்… பார்த்து நடந்துக்க… எடுத்துட்டு போய்யா அந்தக் கல்யாணப் பத்திரிக்கையை… வந்துட்டான்… அழைக்க “
அதற்கு மேல் முத்துராமை யாரும் பேசவிடவில்லை… வீட்டின் பெரியவர்களாக வேலாயுதம் இடையில் வந்தவராக
“திலகா… என் புள்ளையும் என் பேரனும் இனி உன் குடும்ப விசயத்துக்கு வர மாட்டாங்க… ஏன் நாங்களுமே… எங்களுக்கு என் மகன் அவன் குடும்பம்… முக்கியம்…” என்று முடித்து விட…
அதுவரை அந்தக் பெற்றோரின் பாசத்தை… தன் அண்ணனின் பாசத்தை மட்டுமே பெற்றிருந்த திலகா மனதளவில் நொறுங்கினார்…. இருந்தும் கடைசி வாய்ப்பாகத் தன் பிறந்த வீட்டிடம் மன்றாட… ராஜசேகர் குடும்பத்தினர் பாறையாக இறுகியிருந்தனர்…
அந்த சம்பவத்துக்குப் பிறகு முத்துராம் தன் மனைவியிடம்…
“இன்னொரு தரம்… அம்மா அப்பா…. அண்ணா அண்ணின்னு… அந்த கூட்டத்தோட உறவு வச்சுக்க நினைச்ச அவ்ளோதான்… போதும் உன் பிறந்த வீடு பந்தம்…” என்று முத்துராமும் முடித்து வைத்துவிட்டார்… சென்னைக்கும் கூட்டிக் கொண்டும் வந்து விட்டார்…
செழியனும் வேறு வழியின்றி…. தன் தாய் அவர் பிறந்த வீட்டுக்குச் சென்றால் இன்னும் இன்னும் அவருக்கு வேதனைதான் என்பதை உணர்ந்து… தந்தையின் பக்கமே நின்றான்…
”அம்மா… அவங்கள விட்டு தள்ளி இருந்தால் தான் நமக்கு… நம்ம கமலிக்கும் நல்லது…. உங்களுக்கு நாங்க வேணுமா இல்லை அந்த குடும்பம் வேணுமா… முடிவு பண்ணிக்கங்க” என்று செழியனும் சொல்லிவிட
முதலில் தன் மகள்… பிறகு கணவர்…. இப்போது தன் மகன் என அனைவரும் தன் பிறந்த வீட்டை ஒதுக்கி வைத்து விட்டனரே… பிறந்த வீட்டினரும் தன்னை ஒதுக்கி விட்டனர்… தனக்குள் மறுகத் தொடங்க… அதுவே அந்தக் கவலையே அவரை கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைக்கத் தொடங்கியுமிருந்தது….
இரு குடும்பமும் இனி ஒட்டுவதற்கு வாய்ப்பே இல்லை எனும் நிலைக்கு வந்திருக்க… செழியன் மட்டும் நம்பினான்… தன்னால் அது முடியும் என்று… அப்போது கூட கார்த்திகேயனை அவன் நினைக்க வில்லை…
“காட்டுமிராண்டி” என்ற எண்ணம் தான் அவனுக்கு இருந்தது….
“ஆராதனா” மட்டுமே அவனின் வெளிச்சமாக இருக்க… அவளையும் அவனால் உடனே அணுக மனமில்லை… 18 வயதுதான் அவளுக்கு ஆகி இருந்தது என்றாலும் அதனால் எல்லாம் தன் விருப்பத்தை அவளிடம் சொல்ல அவனுக்கு தயக்கமில்லை… அதேநேரம் இந்த மாதிரி சூழ்நிலையில் அவளிடம் தன் மனதைச் சொன்னால்… கண்டிப்பாக இவனுக்கு பாதகமாகத்தான் முடியும்… இப்போது இந்தச் சூழ்நிலையில் அவளைக் குழப்ப அவனுக்கு விருப்பமில்லை… இப்போது அவன் ஆராதனாவிடம் அவள் மேல் உள்ள காதலைப் பற்றி பேசினால் இன்னுமே நிலைமை மோசமாகும் என்று உணர்ந்தவனாக அவளை விட்டு விலகி இருப்பது என்றே முடிவு செய்தான்…
ஆனாலும் கிணற்று தண்ணீர்தானே யார் கொண்டு செல்வார்கள் என்று அலட்சியமாகவும் அவன் இருக்க வில்லை…. இருந்ததும் இல்லை… இத்தனை வருடமாக முகிலன் மூலமாக தன்னவளின் விசயங்களைத் தெரிந்து கொண்டவன்…. இப்போது இன்னும் தீவிரமாகவவே தன்னவளை தன் வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தான்…
தான் கொஞ்சம் சுயநலமோ என்ற எண்ணம் தலைதூக்கினாலும்… ”அதற்கு என்ன பண்றது… அவனனவன் பொருளை அவனவன் தான் பார்த்துக்கனும்…” என்றும் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு தன்னையும் தேற்றிக் கொண்டான்….
இடைப்பட்ட இரு வாரத்தில் கமலி-மிதுன் திருமணமும் நடைபெற்றிருக்க… கமலியை கையோடு சிங்கப்பூர் அனுப்பி நிம்மதிப் பெருமூச்சு விட்டவனாக அந்த இரவுதான் நிம்மதியாக உறங்கினான்… அந்த நிம்மதியில் வந்ததுதான் ’ஆராதனா’ வின் விடிகாலை கனவுத் தரிசனம்
…
கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகி இருந்த நிலையில்…. இழவு விழுந்த வீடு கூட ஒரு வாரம் காரியம் முடிந்த கையோடு பழைய நிலைக்கு திரும்பி இருக்கும்… ஆனால் இங்கு இன்னும் நிலைமை மோசமாகத்தான் ஆகி இருந்தது…
நாட்கள் ஆமை போல் நகர்ந்தன…
ஆராதனாவும் கல்லூரி செல்ல ஆரம்பித்திருந்தாள்… அவளும் செல்வியும் தங்கள் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வில்லை…. அதேபோல் பெரிதாக இருவரும் பேசிக் கொள்ள முடியவும் இல்லை….. இன்னும் சொல்லப் போனால் கார்த்திக் பற்றிய பேச்சினை இருவருமே ஆரம்பிக்க வில்லை…
தன் அண்ணனைப் பற்றி யாரிடமும் புலம்ப ஆராதனாவும் தயாராக இல்லை… அதிலும் செல்வியிடம் அவனைப் பற்றி சொல்லி…. தன் அண்ணனை இன்னும் கீழிருக்க விரும்ப வில்லை….
ஆனால் கார்த்திக் பற்றிய தற்போதைய விசயங்கள் ஆராதனா சொல்லித்தான் செல்விக்கு தெரிய வேண்டியதில்லை…. அவர்கள் ஊரின் இப்போதைய ஹாட் டாபிக் அவன் தானே…
ஆராதனாவின் சுயமரியாதை அவள் உயிர்த் தோழி செல்வியிடம் இருந்தே அவளைத் தள்ளி வைத்திருந்தது… இததனை வருடங்களில் தன் விசயங்கள்… துக்கமாகட்டும்… ஆதங்கமாகட்டும் எதனையும் தன் தோழியிடம் இவள் மறைத்தது இல்லை…. மறைத்து வைக்க அவசியமிருந்ததும் இல்லை… இப்போது இருவரிடமும் ஒரு திரை விழுந்திருந்தது… இப்போதும் தோழியிடம் கூட தன் வேதனையைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் எது அவளை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது தெரியவில்லை… ஆராதனா தன் அறையில் யோசித்தபடி இருந்த போதே…
“நாளைக்கு எக்ஸாம்… முடிந்த அளவு படிச்சுட்டு வா ” என்ற செல்வியின் குறுஞ்செய்தி அவளுக்கு வர… அந்தச் செய்தியை கசப்பான இதழ் சுழிப்போடு அலட்சியத்துடன் பார்த்தபடி அலைபேசியை ஒரு ஓரமாகத் தள்ளிவைத்தவள்
’செல்வி’… தன் உயிர்த் தோழி - எனக்கு உன் அண்ணன் என்றால் மிகவும் இஷ்டம் எனத் தன்னிடமே சொல்லிச் சுற்றிக் கொண்டிருந்தவள்… தன் அண்ணனுக்கு நடந்தது ஏதும் அவளைப் பாதிக்கவில்லையே... தன் படிப்பு... தன் வேலை... தன் குடும்பம் என்று ஒதுங்கி விட்டாளே...
ஆக எல்லாமே ஜாலிக்குத்தான் என்பது இப்போது நன்றாகத் தெரிந்தது… செல்வி தன் இயல்பு வாழ்க்கை மாறாமல் நன்றாகத்தான் இருக்கிறாள்… காரணம் அவள் குடும்பம் வேறு தன் குடும்பம் வேறுதானே…
ஆராதனாவின் கண்கள் புத்தகத்தில் அலைபாய்ந்த போதே
கம்பீரமான தன் அண்ணனின் தோற்றம்… அந்தக் கம்பீரமான தன் அண்ணனின் அலங்கோலமான அன்றைய தோற்றம்… மறக்கவே முடியவில்லை…. இன்றும் அவள் மனதில் இருக்க… அன்று அரிவாள் வெட்டியதால் கையில் இருந்த பெரிய கட்டு… இப்போது சிறு பேண்ட் எய்டில் வந்திருக்க… அன்றைய தினத்தை விட்டு அவளால் வெளியே வரவே முடியவில்லை… மறக்க நினைக்கிறாள் தான்… ஆனால் நினைவுகள் அன்றைய தினத்துக்கு இழுத்து செல்வதை தவிர்கவே முடியவில்லை…
வழக்கம் போல ஆரம்பித்த அன்றைய பொழுது... வழக்கம் போல முடியவில்லை…. நினைத்த போதே… அவளையுமறியாமல் கண்களில் நீர் வடிந்தது…. அன்று முத்துராம் மாமா வந்து சென்ற பிறகு
”என்னை வெளிய விடறீங்களா… இல்லை நான் ஏதாவது பண்ணிக்கிறவா….” என்ற கார்த்திக்கின் வெறித்தனமான குரலில்…. பதறி பூட்டியிருந்த அறைக்கதவைத் திறந்து விட….
“என்ன அவங்க ரெண்டு பேரையும் என்கிட்ட இருந்து காப்பாத்திட்டோம்னு நினைப்பா… யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டான் இந்த கார்த்திக்… உன் மக பெத்த பொண்ணயும் விட மாட்டேன்… என் காலடியில இழுத்துட்டு வந்து அவளை போடாமல் விடமாட்டேன்… அந்த சுள்ளானையும் விட மாட்டேன்… அவன்லாம் என்னை அடிக்கிற அளவு வளந்துட்டானாமா… இனி இந்த ஊர் பக்கம் கால் வைக்கட்டும்…… அவனுக்கு இருக்கு” என்று கர்ஜித்தவன்… கண்களில் இப்போது அவன் கைகளில் எழுதப்பட்டிருந்த கமலி என்று பெயர் கண்களில் பட்டுத் தொலைக்க…
இதுவரை சிங்கமாக கர்ஜித்துக் கொண்டிருந்தவனின்… அப்படியே அமர்ந்து விட்டான்… அவளுக்காக…. என்னவெல்லாம் செய்ய நினைத்திருந்தான்…. ஏதேதோ எண்ணங்கள்…
இங்கு இருந்த வரை நன்றாகத்தானே இருந்தாள்.. தன்னைப் பார்க்கும் போது அவள் கண்களின் வரும் பயம் கலந்த நாணம்…. தன்னைத் தனியே கண்டாலே அவள் மருளும் விழிகளுடன் அவனை விட்டு வேகமாகக் கடப்பவள்… தன் மீது அவளுக்கும் விருப்பம் இருக்கிறது என்றுதானே நினைத்துக் கொண்டிருந்தான்…
தன் அன்னையின் முகத்தை இப்போது நிமிர்ந்து பார்த்தான்….
”எனக்கு என்ன தகுதி இல்லம்மா…” என்று புலம்பியவனாக தன் அன்னையிடம் கேட்டவன்… தாயின் பதிலுக்கெல்லாம் காத்திருக்கவில்லை
“எனக்கு படிப்பு வரலையேம்மா…. நான் என்னம்மா பண்ணட்டும்… அவ அவ்ளோ நல்லா படிக்கிறவளா போயிட்டாளே… அதுக்கும் நான் பண்ணட்டும்… அவளையும் படிக்காம..” என்றவன் என்ன நினைத்தவன்…
கமலியைப் பற்றி தவிர்த்தவனாக…
”என்னை அப்பவே அடிச்சு பள்ளிக் கூடத்துக்கு போகச் சொல்லி இருக்கலாமே…” என்று தன் அன்னையிடம் சிறு பிள்ளை போல… அழுதவனைப் பார்த்து…. கலங்கியது அந்த மொத்தக் குடும்பமும்…
கண்ணாத்தாள்பாட்டி ஒரு புறம் புலம்பியபடி இருக்க… ராஜசேகர்… மகனின் நிலை தாளாமல் அப்படியே அமர்ந்தவர்தான்… ஒரு வார்த்தை யாரிடமும் பேச வில்லை…
நீலவேணி-வேலாயுதம் தம்பதிக்கோ… குற்ற உணர்ச்சி…. அவர்களை மொத்தமாகத் தாக்க…. மேகலை தான் கொஞ்சம் தைரியமாக இருந்தர்…
“ஏம்ப்பா உனக்கென்ன ராஜாடா நீ… உன்னைக் கட்டிக்க அவளுக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லை…. என் சிங்கம் டா நீ” என்றவரிடம்
“உன் புள்ளைய அசிங்கமாக்கிட்டாங்கம்மா” என்ற போது அவன் கண்கள் சுவரை மட்டுமே வெறித்திருந்தன
”எனக்கு அவ வேணும்மா… கல்யாணம் பண்ணின பின்னால அவ மேல இருந்த என் காதல் ஆசை எல்லாம் சொல்லலாம்னு இருந்தேன்மா… எல்லாம் போச்சும்மா…. இனி எனக்கு என்ன இருக்கும்மா… நான் தோத்துட்டேன்… வாழத் தகுதி இல்லாதவனாகி போய்ட்டேனேம்மா” என்ற போது ஆராதனா அவனருகில் வந்து அமர்ந்தவளாக…
“அண்ணா விடுன்னா…. உனக்கு என்னனா குறைச்சல்… உன்னோட மதிப்பு என்னன்னு உனக்கே தெரியாது… அவங்க கிடக்கிறாங்க…“ ஆராதனா சொல்லும் போதே.. ஆராதனா அவன் கண்களுக்குத் தெரியவில்லை… மாறாக நரேனின் தங்கை செல்வியின் முகம் கார்த்திக்கின் முன் வந்து நின்று ஏளனமாகப் பார்ப்பது போலிருக்க…
அவன் உடலெங்கும் அவமானத்தில் தகித்தது…
தன்னைச் சுற்றி உள்ளவர்கள் அத்தனை பேரின் பார்வையிலும் அவன் ஏளனமும்…. பரிதாபமும் மட்டுமே இருப்பது போல் தோற்றம் அப்படியே மண்ணுக்குள் புதைந்து போயிருக்க கூடாதா என்று தோன்ற…. அங்கு இருக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை…
அவன் இருந்த கோபத்தில்… எங்கு சென்னை போய் தன் அத்தை மகளை பிடித்து இழுத்து வந்து விடுவானோ என்றுதான் நினைத்தனர்… அவனைப் பின் தொடர்ந்தனர்… நல்லவேளை அவன் நின்றது…. மதுக்கடையில் தான்
மதுக்கடையில்தான் கார்த்திக் இருக்கின்றான் என்று கேள்விப்பட்டு…. நிம்மதி பெருமூச்சுவிட்டது அந்தக் குடும்பமாகத்தான் இருக்கும்…
அன்றைய நினைவுகளின் தாக்கத்தில் உழன்ற ஆராதனாவின் கண்கள் புத்தகத்தில் இருக்க… மனமோ வெறுமையாக இருக்க… மற்றொரு அறையில்… மொத்த குடும்பமும் கூடி இருந்தனர்… தெளிவாக இல்லையென்றாலும்… அவர்கள் பேசிக் கொண்டிருந்தது ஓரளவு அவளுக்கும் கேட்கத்தான் செய்தது…
---
எப்போதும் அடிக்கும் நேரத்திற்கும் முன்னமே இன்றைய தினம் செழியனிடம் இருந்து போன் வந்திருந்தது…
”என்னடா… கல்யாண வேல எல்லாம் முடிச்சு… உங்க அக்காவை சிங்கப்பூருக்கு நாடு கடத்திட்ட போல… தப்பு செஞ்சிட்டோம்னு பயம் இருக்குதானே… அதானே இவ்ளோ அவசர அவசரமா கல்யாணம்… ”
முகிலனுக்குமே கமலியின் மேல் கோபம் தான்…. அதன் தாக்கம் அவன் குரலில் அப்பட்டமாக வெளிவர…
செழியன் அதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை… ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு புரியவில்லை… கமலி ஒன்றும் கார்த்திகேயனைக் காதலித்து விட்டு ஏமாற்றிச் செல்லவில்லையே… அப்படி பண்ணியிருந்தால்… அவனே அவளை தள்ளி வைத்திருப்பானே தவிர… அப்போது கூட கார்த்திக் சொன்னது போல கமலி மேல் கொலைவெறி அவனுக்கு ஏற்பட்டிருக்குமா… என்றால் வந்திருக்காது.... அது அவன் கற்ற கல்வி கொடுத்திருக்கலாம்…. இல்லை அவன் இருக்கும் நகர வாழ்க்கை…. இல்லை இயல்பாகவே அவனுக்குள் இருக்கும் காதல் மனம்… சூழ்நிலைமையை சமாளிக்கும் விதம் என எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்…
கமலி காதலித்தது தவறில்லை… அந்தக் காதலை அனைவருக்கும் புரியவைக்க முயலாததே தவறு…
நினைத்த அதேநேரம்…
“அப்படியே உன் மாமன் குடும்பம் புரிஞ்சுகிட்டு கமலி லவ்வை ஏத்துருந்துருப்பாங்க… உனக்கே நம்பிக்கை இல்லைதானே… பாவம் அவ என்ன பண்ணுவா…” மனசாட்சி அவர்கள் வீட்டுச் சூழ்நிலையைக் கணித்துச் சொல்ல… மௌனமே அங்கு ஆட்சி செலுத்தியது
முகிலனிடம் அவன் வேறெதுவும் பேசாமல்… சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன்… பின்
“டேய் ’ஆரா’ க்கு கைல அடிப்பட்டுச்சே… ஹாஸ்பிட்டல் போனாளா… ப்ச் அவ எங்க சொல்லப் போறா… அவங்க வீட்ல கூட்டிட்டு போனாங்களா….” என்று ஆராதனாவைப் பற்றி கேள்விகளை அடுக்கியவனிடம்…
“டேய் டேய் நிறுத்துடா…அவளுக்கு லைட்டா அடிப்பட்டதுதான் இப்போ முக்கியமா என்ன…. கார்த்திக்கைப் பற்றி கேட்டியாடா…” முகிலன் கடுப்பாக செழியனை நிறுத்த
“என்ன பண்ணியிருப்பான்…. நேரா டாஸ்மாக் போயிருப்பான்….” என்றான் வெறுப்படைந்த குரலில்…
”டேய் எப்படிடா இப்படிலாம் மனசாட்சி இல்லாம இருக்கறீங்க…. ஒருத்தனோட வாழ்க்கையே கேள்விக் குறியாகி நிக்குது…. உனக்கு தப்பாவே தெரியலையா…. வருத்தமாகவே இல்லையா…” என்றவன்… செழியனின் அமைதியில்…
“ஏண்டா மாப்பிள்ளை… இப்படி ஒருத்தனோட வாழ்க்கைய வீனாக்கிட்டீங்க… நான் உன்னை மட்டும் சொல்லலைடா.. உங்க ஒட்டு மொத்த குடும்பத்தையே… சொல்றேண்டா..” முகிலனின் குரல் தேய்ந்து ஒலித்தது
”உங்க சென்னை இல்லடா நம்ம ஊர்… ’ஓ’ இதான் பிரச்சனையான்னு… வேடிக்கை பார்த்துட்டு ’ஒகே’ அடுத்த வேலைய பார்ப்போம்னு யாரும் விட்ற மாட்டாங்க…. இங்க பேசியே….. இல்லையில்லை பார்த்தே அவன சாகடிச்சுருவாங்கடா…” முகிலன் ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“போனை வைக்கவா…” என்ற செழியனின் குரலில்…. ஆற்றாமையா… ஆத்திரமா… இல்லை தன் மேலும் குற்றம் இருக்கிறது என்ற உணர்வு தந்த அவமானமா… தெரியவில்லை… தங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்றும் நினைத்தான் செழியன்….. அதேநேரம் அவர்களை மீறி நடந்த அனைத்துக்கும் அவர்கள் மட்டுமே பொறுப்பு என்பது போல பேசிக் கொண்டிருக்குத் தன் நண்பனிடம் என்ன சொல்ல… கடுப்பாகத்தான் நண்பனிடம் பேசினான்
முகிலனுக்கும் அதை புரிந்து கொள்ள முடிந்தது தான்… ஆனால் அவன் மனம் தாங்கவில்லையே… கார்த்திக்கும் அவனது உறவினன் ஆகிற்றே… அந்த ஆதங்கத்தில் தன் மனதில் இருந்தவற்றைக் கொட்ட… முகிலனின் வார்த்தைகளில்… செழியனின் மனதுக்குள் கொஞ்சம் பதட்டம் வந்தது என்னவோ உண்மைதான்..
”என்னாச்சுடா…. கார்த்திக்குக்கு ஒண்ணும் இல்லையே” என்று முடிக்கும் போது அவன் குரலில் சற்று தயக்கம் வந்திருக்க….
”ஹாஸ்பிட்டல்ல இல்ல அவ்ளோதான்… டெய்லி ஒரு பிரச்சனை… நேத்து தண்ணி அடிச்சுட்டு அப்படியே வந்துருப்பான் போல… பைக்ல விழுந்து… கால் கைல பலமா அடி… நல்ல வேளை… எலும்பு கிலும்பு முறியல…” என்று சொல்லி முடித்த போது
“எமோசனல் இடியட்…. டாமிட்…” என்றான் அவனுக்கு புரியவில்லை…
“போடி என்று விட்டு விட்டு அவளுக்கு முன் நன்றாக வாழ்ந்து காட்டலாமே… அதிலல்லவா அவன் பெருமை…”
அதை முகிலனிடம் சொல்ல…
“உண்மையிலேயே எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறியாடா… நீ சண்டை போட்டுட்டு வந்து நிற்கிறது… நீ உன்னை விட அதிகமா நேசிக்கிறவளோட அண்ணன்… உன்னோட காதல் என்னாகும்னு ஒரு நிமிசம் யோசிச்சியாடா… ஆனால் நான் யோசிச்சேண்டா…” முகிலனின் குரல் தழுதழுப்பைக் கொண்டு வந்திருந்தது…
“உன்னோட காதலை ‘தனாகிட்ட’ சொல்லாதேன்னு சொல்லி தடுத்தவன் நான் தாண்டா… அதே மாதிரி எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு எனக்கு மட்டும் தாண்டா தெரியும்… கார்த்திக்குக்கு வந்த நிலைமை உனக்கு வந்துருமோன்னு மனசு பக்கு பக்குனு இருக்குடா… ஒருவேளை அப்போவே சொல்லி இருந்தால்… தனாவுக்கும் உன் மேல காதல் வந்திருக்கும்…” எனும் போதே
“நிறுத்துறியா… எனக்கு அப்படி நடக்காது… நடக்கவும் விடமாட்டேன்…” உறுதியாகச் சொன்னவன்…
“டேய்… நடக்கவே போகாத விசயத்தை எல்லாம் நான் ஏன் நி… நினைக்கனும்… இது மாதிரி இன்னொரு தடவை பேசின… நல்ல கனவு கண்ட மூடோட உன் கிட்ட வந்து பேசுனேன் பாரு… என்னைச் சொல்லனும்” செழியனின் குரல் ஆவேசம் அழுத்தமாக ஆரம்பித்து…மெல்லிய தடுமாற்றதுடன்… நண்பனை எச்சரித்தும் முடித்தவன்… அலைபேசி அழைப்பையும் முடித்திருந்தான்…
---
தன் சகோதரி கமலியால் செழியனின் சொந்த வாழ்க்கை மட்டுமல்ல… அவனின் அலுவல பணிகளுமே தேங்கி இருக்க… இதோ இன்று அலுவகலத்துக்கும் வந்திருந்தான் செழியன்… காலையில் முகிலனிடம் பேசிய தாக்கம் இன்னுமே அவனுக்குள் இருந்தது…
”எனக்கெதுக்கு கார்த்திக் நெலமை வரப்போகுது… வராது… வரவே வராது…” தனக்குள் ஆயிரம் முறை உருப்போட்டுக் கொண்டு… தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவனாக… அலுவல வேலையில் தன் கவனத்தைத் திசை திருப்பினான் செழியன்…
“இந்த கேண்டிடேட்ஸ்க்கெல்லாம் வெளிநாட்ல வேலை பார்த்த அனுபவம் இருக்கா... முக்கியமான போஸ்ட்டிங்… கிட்டத்தட்ட என்னோட அத்தாரிட்டி எடுத்து பண்ற வேலை” செழியன் கேட்டபடியே மடிக்கணியில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பெயர்களை நோட்டமிட்டபடியே ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜரிடம் கேட்க
“யெஸ் செழியன்… எல்லாருமே வெல் எக்பீரியன்ஸ்ட்…” என்ற போதே அவன் கண்கள் அந்தப் பெயரில் நிலைத்தது…
“பூஜா பத்ரிநாத்…” என்றபடியே… தன் மேலாளார் விஸ்வாவை நிமிர்ந்து பார்த்தவன்…
“ஃபீமேல் கேண்டிடேட் வேண்டாம் ரிஜெக்ட் பண்ணிருங்க… மத்தவங்கள மட்டும் நாளைக்கு ஃபைனல் இண்டெர்வியூக்கு வரச் சொல்லுங்க” செழியன் சொல்லி விட்டு … தனது கவனத்தை அடுத்த வேலைகளில் திருப்பி இருந்தான்…
“செழியன்... அவங்க ஒன் ஆஃப் தெ பெஸ்ட் கேண்டிட்டேட்… அதான்…”
“வேண்டாம்…” செழியன் குரல் அமைதியுடன் அழுத்தமாக முடிய
“இல்ல… அவங்க இதுக்கு முன்னால யூ எஸ்ல தான் “
“வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றவன் விஸ்வாவை நிமிர்ந்து பார்க்க…
“அட்லீஸ்ட் நீங்க இண்டெர்வியூ எடுத்துப் பார்த்…” விஸ்வா ஆரம்பித்த போதே… செழியன் அலைபேசியில் யாரையோ அழைத்திருந்தான்… வந்தவன் விஸ்வாவுக்கு கீழே அடுத்த நிலையில் இருப்பவன்… அறைக்குள் வந்திருந்தான்
”பாஸ்கர்… விஸ்வாக்கு நோட்டிஸ் பீரியட்க்கும் சேர்த்து அமௌண்ட் செட்டில் பண்ணிருங்க…
அதிர்ச்சியில் அந்த விஸ்வா உறைய…
“ஃபர்ஸ்ட் டைம் நீங்க சொன்னது… அந்தப் பொண்ணோட திறமைக்காக…. நான் சொன்னதும் அடுத்தும் ரெகமண்ட் பண்ணுனீங்க… உங்கள அறியாமல் வந்த சாஃப்ட் கார்னருக்காக… அடுத்தும் நீங்க ரெகமண்ட் பண்ணுனீங்கன்னா… என்னோட வார்த்தைக்கு மதிப்பில்லைனு அர்த்தம்… என்கிட்ட வேலை பார்க்கிறவங்களுக்கு அவங்களோட லிமிட் எதுவரைக்குனு தெரிஞ்சிருக்கனும்…”
“செழியன் சாரி… இனி பூஜாவைப் பற்றி… சாரி சாரி அந்தப் பொண்ணைப் பற்றி பேசலை… “
விஸ்வா சொன்னபோதே… செழியன் இப்போது…
”இனி உங்கள வேலைக்கு வைக்க முடியாது… இனிமேல நீங்க உண்மையான திறமையானவங்களைப் பார்த்தாலும்… எனக்காக சொல்ல மாட்டீங்க… பயப்படுவீங்க… உங்ககிட்ட எனக்கு பேச இஷ்டம் இல்லை… ஒரு தடவை நம்பிக்கை போயிருச்சுனா… அவ்ளோதான்…”
“பாஸ்கர்… இவரோட ரிலீவ் ப்ரொசீஜரை உடனே ஆரம்பிங்க” பாஸ்கருக்கு ஆணை பிறப்பிக்க… பாஸ்கரும் வெளியேறி இருக்க…
அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் செழியன் தன் வேலையில் கவனமாகி விட… விஸ்வாவும் செழியனிடம் பேச முடியாமல்… தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேறப் போனவன் கதவருகே சென்றவன்…
இப்போது கைச் சொடுக்கி அழைத்தான் செழியனை…
“என்ன… உன்கிட்ட வேலை பார்க்கிறேன்னு உனக்கு அடங்கிருவேன்னு நினச்சியா… ஜஸ்ட் எக்ஸ்பீரியன்ஸுக்குத்தான் வந்து சேர்ந்தேன்… ஊர்ல என் பேர்ல இருக்கிற சொத்து எவ்ளோ தெரியுமா…” விஸ்வாவும் திமிருடன் பதில் கொடுக்க…
செழியனும் சளைக்காமல் கை முஷ்டியை இறுக்கியபடி எழுந்தவனாக
“உன்னை இப்படி விட்டேன்னு சந்தோசப்பட்டுட்டு போ… பக்கத்து ஊர்க்காரன்னு ரெகமண்டேஷன்ல வேலையில சேர்த்தா… நீ நம்ம ஊர்பக்க பேரையை கெடுத்துருவ போல…”
”வெளிய பேசினதைக் கேட்டேன்… பொண்ணு… தனியா இருக்கான்னா… சிங்கிள் மதர்னா... உங்களுக்குலாம் அவ்ளோ ஈசியா என்ன…” சொன்ன செழியனைப் பார்த்த விஸ்வா முறைக்க…
“உன் பொண்டாட்டிய பற்றி பேசுனேன்... இல்ல அவ ஒழுக்கத்தைப் பற்றியா தப்பா பேசுனேன்… எவளோதானேடா… எவளையோ பத்திதானே பேசினேன்... உனக்கென்ன வந்தது… அவ்ளோ யோக்கியமானவனா நீ… பார்த்துக்கிறேன்“
செழியனின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்திருந்தது.... இவ்வளவு பேசியதற்குப் பிறகு அவன் அமைதியாக இருப்பானா என்ன...
”ஏய்…” பல்லைக் கடித்தவனாக.. ஒரே எட்டில்… அந்த விஸ்வாவை சுவற்றோடு தள்ளியவன்… அவன் பேசிய பேச்சுக்கெல்லாம் பதிலடி கொடுத்தும்… இருக்க… விஸ்வா… முகம் முழுவதும் ரத்தக் கறைகளோடு வெளியேறி இருக்க… அப்போதும் செழியனை முறைத்தபடிதான் வெளியேறி இருந்தான்…
செழியனின் அலுவலகம் முப்பது நபர்கள் கொண்ட சிறிய அலுவலகம்… அதில் மூன்றே மூன்று பெண்கள் மட்டுமே… அதில் ஒரு பெண்… செழியனிடம் வந்து விஸ்வா அவளிடம் நடந்து கொண்ட விதம் பற்றி சொல்ல… செழியன் அவளையும் முறைத்தான்… திட்டவும் ஆரம்பித்தான்
“இப்போ வந்து சொல்றீங்க… ஆரம்பத்திலயே சொல்ல என்ன பயம்… பொண்ணுங்களோட இந்தப் பயம் தான் இந்த மாதிரி பொறுக்கிகளெல்லாம் இவ்ளோ தைரியமா நடமாடக் காரணம்… போங்க வேலையைப் பாருங்க… ஃபர்ஸ்ட் ஆஃபிஸ்ல ஜாயின் பண்ணும் போது அங்க இருக்கிற எத்திக்ஸ்… ரூல்ஸ்லாம் படிங்க… இந்த மாதிரி நடந்தால் என்னென்ன பண்ணனும்… நம்ம ஆஃபிஸ்ல யார்கிட்ட ரிப்போர்ட் பண்ணனும்னு எல்லாம் இருக்கு… சரி சரி போங்க…” செழியன் அந்தப் பெண்ணை அனுப்பியவனாக…. பாஸ்கரை அழைத்தவன்…
“பாஸ்கர்… அந்தக் கேண்டிடேட் பூஜாக்கு… ஒரு அப்பாலஜி மெயில் அனுப்பிட்டு… அவங்க செலக்ஷன் ப்ராசஸை ஹோல்ட்ல போட்ருக்கோம்னு இன்னொரு செப்பரேஃட் மெயில் அனுப்பிருங்க”
முடித்தவனாக… தேங்கியிருந்த அடுத்தடுதடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருந்தான்
---
மேகலையும்… நீலவேணியும் மட்டுமே வீட்டில்… ஆராதனா கல்லூரிக்குச் சென்றிருக்க… அந்த வீட்டின் ஆண்களும் வீட்டில் இல்லை…
“மேகலை… தை முடியுறதுக்குள்ள நல்ல விசயம் நடக்கனும் நம்ம வீட்ல… எனக்கென்னமோ ஏதும் சரியாப் படலை…. கார்த்திக்குக்கு சட்டுபுட்டுனு வரனைப் பார்த்து முடிச்சுறனும்… “
மேகலை ஏதும் சொல்லவில்லை…
“வேண்டாத்தை… அதுவும் இப்போ அவன் இருக்கிற நிலைமல… பொண்ணு பார்க்கிறது ரொம்பத் தப்பு… அவனே மாறி வருவான்… ஒரு வருசம் பொறுமையா இருப்போம்… பொண்ணு கிடைக்கிறது பெரிய விசயம் இல்லைதான்… ஆனாலும் வேண்டாமே” மேகலை கண்டிப்பாகச் சொல்லிவிட… மேகலையின் பேச்சுக்கு எப்போதும் போல் இப்போதும் நீலவேணி மறுப்பு சொல்லவில்லை…
பெருமூச்சு விட்டவராக…
“நீ சொன்னா சரிதான்…. எதுக்கும் அடுத்த வாரத்துல ஜாதகத்தை எடுத்துட்டு போய் பார்த்துட்டு வந்துருவோம்…” என்றபடியே எழுந்தவர்…
“தனா’வோட ஜாதகத்தையும் எடுத்து வை… ” என்றவரிடம் மேகலை சம்மதமாக தலையை மட்டுமே ஆட்டி வைத்தார் மேகலை…
---
Lovely update Pravee
Karthi nizhai unaku varatha rasa
Varalana nalladu
Inda vishwa sarilaye
Deii karthi unna kattika avaluku kuduthu vaikla vittu thallitu poite irupaya Ada vititu enna da pannitrukka
Nice. What is next. Put soon
Nice.t தனாக்கு ஜாதகம் பார்க்கிறாங்களா?செழியனுக்கு தெனிஞ்சா என்ன ஆகுமோ.இவ்வளோ கலவர்துலயும் செழியனுக்கு romantica கனவு எல்லாம் வருது.
Nice
Nice ud sis.. Expecting more from u