/* hai friends...
UNS - next epi pottuten. ரிஷி-கண்மணி கதை சீக்கிரமா போட ட்ரை பண்றேன்...
எபி படிக்கும் போது செல்வி- கார்த்திக் தான் ஹீரோ ஹீரோயினானு கேட்க தோணும்...
ஆராதனா-செழியன் தான் ஹீரோ ஹீரோயின்... கதை மெல்ல மெல்ல அவர்களை நோக்கிச் செல்லும் போது நீங்களும் உணர்வீங்க... இப்போதைக்கு செல்வி அட்ராசிட்டீஸ் மட்டுமே...
தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ்...
அன்புடன்
பிரவீணா விஜய்
*/
அத்தியாயம்:3
முதல் நாள்தான் ஆராதனா கல்லுரிக்குக்கு விடுமுறை என்றால்… அடுத்த நாளும் அவள் வரவில்லை …
‘தான் கல்லூரிக்கு வரவில்லை, விடுப்பு என்றும் தன்னை அழைக்க வர வேண்டாம் என்றும்’ செல்விக்கு ஆராதனா குறுஞ்செய்தி விடுக்க…. என்னவோ ஏதோ என்று தோழியை நேரில் காண ஓடோடி வந்து விட்டாள் செல்வி…
“இன்னும் உனக்கு ஃபீவர் சரியாகலையா” விசாரித்தபடியே உள்ளே நுழைந்த செல்வியை வரவேற்ற ஆராதனாவை பார்த்த செல்வி யோசனையுடன் புருவத்தை சுருக்கினாள்…
“என்னடி… நல்லாத்தானே இருக்க… அப்புறம் என்ன காலேஜுக்கு மட்டம்” ஆராதனாவிடம் அதட்டலாகக் கேட்டவளோ… “செழியண்ணா உன்னைத் திட்டறதும் தப்பே இல்ல…” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்…
“எனக்கு ஓகே…. நான் நல்லாத்தான் இருக்கேன்… வீட்ல யாரும் இல்லை…. ஒரு மேரேஜ்க்கு போய்ட்டாங்க… நான் இருக்க வேண்டிய சிச்சுவேஷன்” என்று அலுத்தவளிடம் செல்வி அடுத்து என்ன பேச நினைத்தாளோ… அதைப் பேசவிடாமல்… ஆராதனாவே தொடர்ந்தாள்…
“செல்வி…. என் அண்ணன் என்ன பண்ணிட்டு வந்திருக்கு தெரியுமா” என்று செல்வியின் காதுக்குள் அவசரமாக கிசுகிசுத்தாள் ஆராதனா…
முந்தைய தினம் அவள் அண்ணனுக்கும் தனக்கும் இடையே நடந்த வாக்குவாதங்கள் காட்சிப்படலங்களாக செல்விக்குள் விரிய ஆரம்பித்திருக்க… செல்வியின் மனதோ படபடக்க ஆரம்பித்திருந்தது… இருந்தும்
“என்ன என்னாச்சு” படபடத்த தன் மனதை அடக்கியவளாக செல்வி கேட்க….
“உஷ்ஷ்ஷ்….” என வாய் மேல் விரல் வைத்து செல்வியின் வார்த்தைகளை அடக்கிய ஆராதனா…
“வந்து நீயே பாரு…” என்று செல்வியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு… தன் அண்ணனின் அறைக்குள் நுழைந்தாள் ஆராதனா…
வழக்கமாக கார்த்திக்கின் அறை பக்கம் எல்லாம் செல்வி சென்றதில்லை… ஆராதனாவும் அழைத்துச் சென்றதில்லை… இன்று ஆராதனாவே அவன் அறைக்கு அழைத்துச் செல்கிறாள் என்றால்… என்னவாக இருக்கும்… செல்விக்கு இதயத்துடிப்பு எகிறியது…
கார்த்திக் அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவான் என்றுவரை தெரியும்…
நேற்று நடந்த சம்பவத்தால் தண்ணி அடித்து விட்டு வந்து ஏதாவது உளறி வைத்துவிட்டானா… செல்விக்கு ஏதேதோ எண்ணங்கள்… அந்த எண்ணங்களோடு உள்ளே நுழைய… இவளின் பதட்டம் எல்லாம் வீண் என்பது போல அங்கு கார்த்திகேயனோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்…
“பாரு… என்ன பண்ணிட்டு வந்திருக்குனு பாரு” என்று மட்டும் ஆராதனா சொல்ல… செல்விக்கு ஒன்றுமே புரியவில்லை… அவள் கண்ணுக்கு ஏதும் தெரியவில்லை… ஆராதனாவைப் பார்க்க…
“லூசு… என்னைப் பார்க்காத அண்ணனைப் பாரு…அது கையப் பாரு” என்று ஆராதனா விளக்கிச் சொல்ல … செல்வி இப்போது அவனை உற்றுப் பார்க்க….
கார்த்திக்கின் வலது கையில் ‘கமழி’ என்று பச்சைக் குத்தப்பட்டிருந்தது… இதுவரை படபடத்துக் கொண்டிருந்த மனதில் அப்படியே கனத்த அமைதி சுழ்ந்திருந்தாற்போன்று உணர்ந்தாள் செல்வி…
கண்கள் அந்தப் பச்சையிலேயே நிலைத்திருக்க… அவன் குத்தியிருந்த கமலி என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் செல்வியின் மனதை கூறாக கிழித்துச் செல்லும் தோட்டாக்கள் போலவே தோன்றியது…
கண்களில் அவளையுமறியாமல் நீர் கோர்க்க ஆரம்பித்திருக்க… ஆராதானா இருக்கின்றாள் என்று அதையும் நொடியில் தனக்குள் அடக்கி இருந்தாள் செல்வி
செல்வியின் நிலை எல்லாம் புரியாதவளாக… ஆராதனா அவள் பேச்சைத் தொடர்ந்தாள்…
“லூசு மாறி பண்ணிருக்கு பாரு… எந்த மாக்கான்கிட்ட குத்துச்சோ… இது சொன்ன ஸ்பெல்லிங்ல வேற… நைட் புல்லா காய்ச்சல்…” என்றவள்… தன் அண்ணன் குடித்து விட்டு வந்திருந்தான் என்பதைத் தவிர மற்றவற்றை எல்லாம் சொல்லி புலம்பியவள்…
“முக்கியமான விசேசம்… வீட்ல எல்லோரும் போய்ட்டாங்க… அண்ணன நான் தான் கவனிச்சுக்கனும்… அதுதான் லீவ்… காலேஜுக்கெல்லாம் மட்டம்லாம் போடல… நீயும் கண்டவங்க மாதிரி பேசாத” தோழியை முறைத்தவள்… மீண்டும் தன் அண்ணனிடம் வந்து நின்றாள்…
“ஊர்ல இருக்கிற காதலுக்குலாம் எதிரி… ஆனா இது என்ன பண்ணிட்டு வந்திருக்கு பாரு…. வீட்ல எல்லாரும் ஒரே திட்டு…” என்று கரகரத்த குரலில் சொன்னவளை தவிப்போடு பார்த்தாள் செல்வி...
இப்போது இருவரும் அறையை விட்டு வெளியே வந்திருந்தனர்…
“ஏன் திடீர்னு இப்படி பண்ணுச்சுன்னு நேத்து வீட்ல ஒரே கலவரம் ஆகிருச்சு செல்வி…..” என்று கவலையோடு சொன்ன ஆராதனா…
“சரி நீ கிளம்பு…. பஸ்ஸ மிஸ் பண்ணப் போற… அண்ணே கடுங்காப்பி கேட்டுச்சு… அதப் போடப் போறேன்…” என்று அடுப்பங்கறைக்குள் போனவளின் பின்னே செல்வியும் யோசனையோடே போனாள்…
“உங்க அண்ணனையே மிஸ் பண்ணிட்டேன்… இதுல அந்த பஸ் மிஸ்ஸான என்ன” தனக்குள் சொல்லிக் கொண்டவள்
“நம்மாலதானோ… அப்படி என்ன சொன்னோம்… என்னைப் பார்க்கறியானு கேட்டான்… ஆமான்னு சொன்னேன்… அதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா… இவன் பச்சைக் குத்திட்டு வந்தா பார்க்க மாட்டோமா என்ன… இவ்ளோ சீன் போடறான்…” என்று எரிச்சல் மனதுக்குள் வர… அமைதியாக வந்து கொண்டிருந்தாள் தமிழ்செல்வி
ஏதோ யோசனையுடன் அமைதியாகவே தன் பின்னால் வந்த செல்வியைப் பார்த்த ஆராதனா…
“கெளம்புடி… லேட்டாகப் போகுது… பஸ் வந்துரும்…”
“ப்ச்ச்… மூட் இல்ல… போ… நானும் போகல” என்று அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டாள் தமிழ்செல்வி…
“உனக்கென்னடி ஆச்சு… உன் மச்சான் காய்ச்சல்ல இருக்கானு ஃபீல் பண்றியா” என்று தன்னைப் பார்த்து குறும்பாகக் கண்ணடித்த தன் தோழியிடம்… அவள் அண்ணனுக்கும் அவளுக்கும் நேற்று நடந்த பிரச்சனை எதையும் சொல்லாமல்…
“நான் எதுக்கு ஃபீல் பண்ணனும்… அதுவும் அவரு வருங்கால பொண்டாட்டி பேர ஆசையோட குத்திட்டு வந்து ஆசையோட காய்ச்சல வாங்கிட்டு வந்திருக்கவங்க மேல நான் பரிதாபப்படனுமா போடி”
சலிப்புக் காட்டியவளைப் பார்த்து சிரித்த ஆராதனா…
“பையனுக்கு கல்யாண ஆசை வந்திருச்சு போல... கால்கட்டு போடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க வீட்ல… அத்தை வீட்டுக்கு நேத்தே போன் பறந்துருச்சு… தை மாச முகூர்த்தத்தில கல்யாணத்தை நடத்திறலாம்னு பேசிட்டு இருந்தாங்க” என்று காஃபியைப் போட்டபடியே நேற்று வீட்டில் எடுத்த முடிவுகளை சொன்னவள்… தோழியின் வார்த்தைகளை எதிர்பார்த்து அவளைப் பார்க்க… அவளோ கைவிரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்… பார்வை அதில் இருந்தாலும் எண்ணம் அங்கில்லை என்பது தெள்ளத் தெளிவாகவே ஆராதனாவுக்கு புரிந்ததுதான்…. முகமும் வாடிப் போயிருந்தது…
தோழியின் வாடிய முகத்தைப் பார்த்தவளுக்கு அதற்கான காரணம் தெரியாதா என்ன… காரணம் தெரிந்தவளுக்கு அதன் தீவிரம் தான் தெரியவில்லை… வழக்கம் போல செல்வியை ஓட்ட ஆரம்பித்தாள் ஆராதனா
“என்ன மேடம்… இனி உங்க மச்சானை சைட் அடிக்க முடியாதுன்னு ஃபீல் பண்றியா” என்று நக்கல் செய்ய வலியோடு புன்னகை புரிந்தாள் செல்வி…
‘ஏன் இந்த திடீர் வலி… வேதனை... இதெல்லாம் ஏன் என்று அவளுக்கே புரியவில்லை…. சும்மா கேலி கிண்டல் ஒரு ஜாலி என்று தான் இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தாள்... நேற்று அவனோடு வாக்குவாதம் செய்த போது கூட அவளுக்கு இந்த மாதிரி வலி இல்லை…. இன்று கமலி அக்காவின் பெயர் அவன் கைகளில் பச்சைக் குத்தப்பட்டிருந்ததைப் பார்த்த போது இவளுக்குள் சுருக்கென்று வலி வந்ததை தவிர்க்க முடியவில்லைதான்… ஆனால் முழுக்க முழுக்க இவள் தவறுதான் எனும் போது கார்த்திகேயன் என்ன செய்வான்…” ஆழ்ந்த பெருமூச்சை விட்டவள்
“இதுதான் நடக்கும் என்று தெரியும்…. பிறகு எதற்கு அசட்டுப் பெண்ணே உனக்கு இத்தனை கவலை…” என்று தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டவள்… வலிய புன்னகையை வரவழைத்துக் கொண்டவளாக நிமிர்ந்து ஆராதனாவைப் பார்த்து கண்ணடித்தப்படியே
“நான் உங்க அண்ணனை லவ்வா பண்ணினேன்… ஜஸ்ட் சைட் தான்.. உங்க அண்ணா யார் பேரைக் கைல குத்தியிருந்தால் என்ன…. கல்யாணம் நிச்சயம் பண்ணினால் என்ன… ஏன் கமலி அக்காவையே கல்யாணமே பண்ணினாலும் கூட சைட் அடிப்பேன்… இதுல என்ன தப்பு…. எனக்குனு ஒருத்தன் வருகிற வரை... நான் சைட் அடிக்கிறதை ஏன் நிறுத்தனும்” என்று அசால்ட்டாகச் சொன்னவளைப் பார்த்து வாய் பிளந்த ஆராதனா…
“அதானே… செல்வியா கொக்காவா… பார்த்துடி… எங்க அண்ணனுக்கு தெரியாமல் எதுவா இருந்தாலும் பண்ணு… தெரிஞ்சுச்சு உன்னை கொல்லுதோ இல்லையோ என்னைக் கொன்னுடும்”
இவளை ஓட்டுவதையே குறியாக இருந்து கொண்டிருந்தவளைப் பார்த்த செல்வி…
“உனக்குலாம் இந்த மாதிரிலாம் ஃபீல் வரலையா தனா …” செல்வி கேட்க
“எதுக்கு… இந்த வீட்ல பொறந்துட்டு அந்த ஆசைலாம் வரலாமா என்ன… நீ வேற… இவன்னு கை காட்டுவாங்க… பிடிக்குதோ இல்லையோ… அப்படின்னும் சொல்ல முடியாது… தேடிப் பிடிச்சுதான் கொண்டு வருவாங்க… 99 சதவிகிதம் பொருத்தமா… நல்ல இடமாத்தான் பார்ப்பாங்க… எங்க அத்தைங்களாம் நல்லாத்தானே சந்தோசமாத்தானே இருக்காங்க… அந்த மாதிரி எனக்கும் ஒரு நல்ல பையனக் காமிப்பாங்க… நாமளும் கழுத்தை நீட்டிட்டு வாழ்ந்துட்டு போய்ட்டே இருக்கனும்… நம்ம லைஃப்ல நாமே ட்ராஜெடிய தேடி வச்சுக்கக் கூடாது” அமைதியாக ஆனால் அழுத்தமாகச் சொன்னவளைப் பார்த்து சிரித்த செல்வியிடம்…
“எங்க சித்தப்பா லவ் பண்ணி மேரேஜ் பண்ணிட்டார்னு ஒட்டு மொத்தமா ஒண்ணா சேர்ந்து தள்ளி வச்சாங்களே.. இன்னைக்கும் என் கண்ல நிக்குது செல்வி…” என்றவளின் குரல் இலேசாக தழுதழுக்க ஆரம்பித்ததோ… சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டவளாக தன்னைச் சகஜமாக்கிக் கொள்ள முயற்சிக்க நினைத்த போதே….
“அடியேய் தனா…” எதிர் வீட்டு ருக்மணி பெரியம்மா அவர் வீட்டில் இருந்தபடியே இவர் வீட்டை நோக்கி கத்தி ஆராதனாவை அழைக்க…
“செல்வி… பெரியம்மா வீட்ல முருங்கைக்கீரை ஒடிச்சாங்களாம்… வாங்க வரச் சொன்னாங்க…. இரு வாங்கிட்டு வந்துறேன்” இவளிடம் சொன்னவள்…
“தோ…வரேன் பெரியம்மா…” என்று காஃபி இருந்த குவளையை கீழே வைத்துவிட்டு வெளியேறி விட்டாள் ஆராதனா…
---
“தனா காஃபி கேட்டேன்” என்ற தீனமான குரல்…. கார்த்திகேயனிடமிருந்து தான் வந்திருந்தது
“எழுந்துட்டான் போல…. கொண்டு போய் கொடுப்போமா…” முதலில் தயங்கியவள்… பின் வீட்டில் யாரும் இல்லை என்பதை உணர்ந்தவளாக…. அவனது அறைக்குள் மெதுவாக நுழைந்தாள்…
அவனது அறையின் அருகில்தான் கண்ணாத்தாள் கிழவி இருந்தார்…
இருந்தாலும் வீட்டிலிருப்போர் கணக்கில் அவரைச் சேர்த்துக் கொள்ளாமல்…. அவரை லட்சியம் செய்யாதவளாக… பூனைப் பாதம் எடுத்து வைத்து அறைக்குள் நுழைந்தவளைக் கார்த்திகேயனும் பார்த்து விட்டான் …
“இவ எங்க இங்க வந்தா” என்ற எரிச்சல் பார்வையில் இருந்தாலும்… தான் பச்சைக் குத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறாள் போல்… உம்மென்று இருக்கிறாள்… என்று புரிந்து கொள்ள… நக்கல் கலந்த சிரிப்பு அவன் உதடுகளில் விரிந்தது…
இருந்த காய்ச்சலின் வீரியத்தைத் தாண்டியும் சத்தமாக சிரித்தும் வைத்தவன் கெத்தாக அவளையும் பார்த்து வைக்க… இப்போது செல்வியோ உக்கிரமாக மாறியிருந்தாள்… அதில் இடம் பொருள்…. எதுவும் உணராமல்..
கட்டிலின் அருகில் இருந்த மேஜையின் மீது இருந்த நோட்டை எடுத்தவள்… கமலின்னா இபபடி எழுதனும்…. ’கமழி’ கிடையாது….” என்று அவனுக்கு எழுதிக்காட்டியவள்… கடுப்போடு நோட்டைக் கீழே எறிய…
கார்த்திகேயனோ அவளது கோபத்தில் இன்னுமே… முகம் விகசித்தான்
“அதனால எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை…. படிச்சு பார்க்கும் போது கமலிதானே வருது… போ…” என்று தன் கைகளில் இருந்த கமலி என்ற பெயரைக் காதலுடன் பார்த்தபடி இவளிடம் அசால்ட்டாகச் சொன்னவன் கண்களில் இருந்த காதல் இவளுக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டியது தான்…
ஆனாலும் என்ன செய்வது… தாங்கிக் கொண்டவளாக உதட்டைக் கடித்தபடி நின்று கொண்டிருந்தவளின் அமைதி கார்த்திகேயனை இன்னுமே பேசத் தூண்ட
“இதுக்கும் மேல… நான் அப்படித்தான் பார்ப்பேன்… பார்த்தா என்ன தப்புன்னு சொல்லிட்டு என் முன்னால வந்து நிப்ப… ” அவளின் திமிரை அடக்கிய வெற்றிக் களிப்பில் கார்த்திகேயன் கேட்க…
“ஓ அப்படியா… இப்படி பச்சை குத்திட்டு வந்தால் நான் உங்க பின்னால் வரமாட்டேன்னு எனக்கு கோபம் வரவைக்கனும்னு பண்ணிட்டு வந்துருக்கீங்க… அப்போ கமலி அக்கா மேல இருக்கிற லவ்ல இல்லையா” என்று செல்வியும் அவனை எகத்தாளம் செய்ய
தன்னையே எதிர்க் கேள்வி கேட்டவளைப் பார்த்து…கடுப்பாகி விட்டான் கார்த்திகேயன்…
கடுப்பானாலும் அவள் கேள்வியில் தடுமாறினான் தான்... இருந்தும் சமாளித்தவனாக
“எதுக்கோ… அது உனக்குத் தேவையில்லாதது… இந்த பெயரை மாத்த முடியாது… அவ்ளோதான்… உன் மரமண்டைக்கு புரியலேன்னா நான் ஒண்ணும் பண்ண முடியாது”
கார்த்திகேயனுக்கும் புரிந்தது… செல்வியிடம் அதிகமாக பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பது… ஆனால் பேசாமல் அவளுக்கு புரியவைக்க முடியாதே…
இவன் அப்படி இருக்க…
“ஓ அப்படியா… இதை மாத்த முடியாதா…. இதைத் ‘தமிழ்’ னு மாத்திக் காட்டவா” என்று அவன் முன் சவாலாக கேட்டவளின் பார்வை… அவனது கைகளில் படிய.. ஏதோ உணர்ந்தவனாக சட்டென்று அவசர அவசரமாக கைகளை தன் புறம் மடக்கியவனைப் பார்த்தவளுக்கு புன்னகைதான் வந்தது இருந்த கவலை எல்லாம்் மறந்து…
“அங்கெல்லாம் மாத்த மாட்டேன்… பயப்படாதீங்க” என்றபடியே… வீசி எறிந்த நோட்டை தேடி எடுத்தவள்… நோட்டில் தான் முன்னே எழுதிக் காட்டிய ‘கமழி’ என்ற பேரை அப்படியே ‘தமிழ்’ என்று மாற்றிக் காட்டியவள்….
“என்னை ஜெயிச்சுட்டீங்கனு நினைப்பில ரொம்ப ஆட வேண்டாம்…..” என்று அவன் கையைக் காட்டியபடியே
“நோட்ல மாத்தினதை இங்கயும் மாத்த ரொம்ப நேரம் ஆகாது… நீங்கதான் எனக்கு வேணும்னு நான் நெனச்சேன்னா இங்க யார் தடுத்தாலும் என்னை மாத்த முடியாது….. ஆனா எனக்கு அந்த எண்ணம் இல்லை…. போதுமா… அதுக்காக பார்க்கலாம் கூடாதுனு தடாலாம் எனக்கு போடமுடியாது” என்றபோதே அவள் குரல் கம்மத் தொடங்கி இருந்தது….
“இவளிடம் கேட்காமலேயே… பேசாமலேயே இருந்திருக்கலாமோ… தவறு செய்து விட்டோமோ…” என்று கார்த்திக் எண்ணத் தொடங்கி இருக்க…
“யாருடா அந்த சிறுக்கி….. இவ்ளோ பேச்சு பேசுறா…. என்னை வச்சுட்டே” திடீரென்று கேட்ட கண்ணாத்தாள் கிழவியின் குரலுல்… இருவரும் சுதாரித்து ஒருவரை ஒருவர் பார்க்க…
கார்த்திகேயன் கண்களாலேயே செல்வியை வெளியே போகச் சொன்னவன்… அவனும் அறையை விட்டு வெளியே வந்து… தன் பாட்டியின் அருகில் வந்து நின்றவனாக
“அய்யோ பாட்டி…. இத நான் பாத்துக்கிறேன்…. நீங்க வேற பிரச்சனை பண்ணாதீங்க….”
“யாருடா பிரச்சனை பண்ணினது… என் பேத்திக்கு சக்களத்தியா வந்துருவாளா இவ…” கண்ணாத்தாள் கிழவி கத்த ஆரம்பிக்க..
“இங்க பாருங்க சிறுக்கி சக்களத்தினு எதாவது வாய்க்கு வந்தத பேசுனீங்க …” என்று செல்வியும் வந்த சண்டையை விடாமல் பேச ஆரம்பிக்க… அவளைப் பேசவிடாமால் சட்டென்று எட்டி அவள் வாயைப் பொத்தியவன்… தன் கைப்பிடிக்குள் வைத்தபடி
“பாட்டி…. இவள நான் பார்த்துக்கறேன்… நீங்க வேற யார்கிட்டயும் உளறி வச்சுறாதீங்க” என்ற போதே…
“அவள நான் பார்த்துக்கிறேன்” என்ற கார்த்திக்கின் வார்த்தைகளில் செல்விக்கு இப்போது சிரிப்புதான் வந்தது…
அதுவும் அவனது கைப்பிடிக்குள் இருந்தது வேறு… அந்நிய ஆடவன் கைகளுக்குள் இருக்கின்றோம் என்ற எண்ணமே இல்லை... மாறாக அந்த உரிமையை தனக்குள் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு.... முதலில் இருந்த கோபம் எரிச்சல் எல்லாம் எங்கு போனதோ தெரியவில்லை…
“இவ எதுக்கு இப்போ சிரிக்கிறா” என்ற பார்வையோடு தன் பாட்டியைச் சமாதானப்படுத்த ஆரம்பித்திருந்தான்… கார்த்திகேயன்
“உன் பேத்திக்கெல்லாம் இவ ஈடாவாளா…. இவளெல்லாம் ஒரு ஆளே இல்ல… நீங்க இத இப்படியே விட்ருங்க…. அதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது… உனக்கு சொல்லனுமா… உன் பேரனுக்கு பேத்திக்கு அடுத்த மாதம் கல்யாணம்… சீக்கிரம் கொள்ளுப் பேரனோ பேத்தியோ வரப் போகுது…” என்று ஐஸ் வைத்துக் கொண்டிருக்க….
தன் வாயைப் பொத்தி இருந்த அவனது கரங்களை கடித்து வைக்க வேண்டுமென்ற ஆவேசம் தான் செல்விக்கு எழுந்தது… இருந்து அடக்கிக் கொண்டு இருந்தாள் செல்வி… இவளது எண்ணம் அவனுக்கும் புரிந்தததோ என்னவோ… அவனும் இப்போது கைகளை எடுத்திருந்தான் … அவளை விட்டு தள்ளியும் நின்றிருந்தான்
பேரனின் பேச்சைக் கேட்டபின்… தன் பேரனுக்கு தவறான எண்ணம் இல்லை என்பது நன்றாகத் விளங்கி விட…
“எங்க காட்டு என் பேத்தி கமலி பேர பச்சக் குத்திருக்கியா…. அத பாக்க இந்த கட்டையில போறவளுக்கு பாக்கியம் இல்லையே” என்று புலம்பத் தொடங்கியவரின்…. வாயில் வெற்றிலையை சுண்ணாம்போடு இடித்த பாக்கையும் மடித்து கார்த்திகேயன் வைக்க கண்ணாத்தாள் பாட்டியும் அமைதி ஆகிவிட்டிருந்தார் இப்போது….
“ஹப்பா” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவன்… இந்த விசயம் இனிமேலும் யாருக்கும் தெரியக்கூடாது என்று தனக்குள் உறுதி பூண்டவனாக… செல்வியைப் பார்க்க…
அவளோ கொஞ்சம் கூட கலவரம் என்பது முகத்தில் இல்லாமல்…. தைரியமாக நின்று கொண்டிருந்தாள் இவனைப் பார்த்தபடியே….
இவனால் முறைக்கத்தான் முடிந்தது இப்போது…
வேறேதும் பேசாமல்… தன் பின்னால் வரச் சொல்லி சைகையில் சொன்னவன்….. வீட்டின் முன் வாசலில் உள்ள வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று…
“இதெல்லாம் ஆராதனாக்கு தெரியுமா ” என்று அடிக்குரலில் உறுமினாலும்… எச்சரிக்கையாக இப்போது அமைதியாக கேட்க….
“கொஞ்சம் கொஞ்சம்” என்று மென்று முழுங்கியவளை….
“அப்படினா” என்று நெற்றி சுருக்கியவன்…. “ விளக்கமா சொல்லு?” என்று அதட்டல்குரலில் வினவ…
“சைட் அடிப்பேனு தெரியும்…. சீரியஸானு தெரியாது… நேத்து நடந்தது எதுவுமே அவளுக்கு சொல்லலை… “ தீவிரமாக இருக்கிறாளா என்று அவளுக்கே விளங்காத போது அவள் தோழிக்கு மட்டும் தெரியுமா என்ன…
“அப்படியே விட்ரு…. நானும் இதெல்லாம் மறந்திடுறேன்… உனக்கும் எனக்கும் தேவையே இல்லாத பிரச்சனை இது…. என்ன சரியா” என்றவன் குரலில் அக்கறை கலந்த அதட்டல் மட்டுமே இருக்க
பதிலேதும் சொல்லாமல் அமைதியாக தலை குனிந்து நின்றிருந்தாள் செல்வி… அவளின் அமைதியில்
“இந்த அளவுக்கு ஆராதனாவை உன் கூட கூட்டிட்டு வந்திருக்கேன்ற ஒரே காரணத்தினால அவளோட உன்னை பழக விடறேன்… இல்ல” என்று விரல் காட்டி எச்சரிக்கை செய்தபடியே
“அவளுக்கு படிக்கிற விசயத்தை தவிர…. வேற எந்த விசயத்தையும் கத்துக் கொடுத்துராத” என்றவனின் வார்த்தைகளில் இருந்த விசம் அவளைத் தாக்க…
“அவள் என்னோட ஃப்ரெண்ட்… அவளுக்கு எது நல்லதோ அதை மட்டும் தான் கொடுப்பேன் என்று நிமிர்ந்து கோபத்தோடு அவன் கண்களைப் பார்த்து… உளப்பூர்வமாகச் சொன்னவளின் வார்த்தைகள் அவனுக்கு பொய்யாகத் தோன்றவில்லை….
அதன் பிறகு இவன் வழிக்கு செல்வி வரவே மாட்டாள் என்றுதான் நினைத்தான்…. ஆனால் அவள் பார்வை இவனைத் தொடர்வதை விட்டால்தானே….. முதலில் கூட அவள் பார்வை இவன் பார்த்தவுடன் வேறு புறம் திசை மாறும்… இப்போது அதுவும் கிடையாது… நன்றாகவே பார்த்து வைக்க… இப்போதெல்லாம் இவன் தான் திரும்பிக் கொள்ள வேண்டிய நிலை… இல்லையென்றால் சில சமயம் பார்வையிலேயே யாரும் அறியாமல் அவளை முறைத்து வைப்பான்…. ஆக மொத்தம் கார்த்திகேயனை அவன் அறியாமலேயே… அவனையும் அவளைப் பார்க்கும்படி வைத்திருந்தாள் தமிழ்செல்வி… என்ன பார்வையாக இருந்தால் என்ன… நேர்க்கோட்டில் சந்தித்தால் போதும்… கிடைக்கிற வரை அனுபவித்து வைப்போம் என்ற எண்ணம் மட்டுமே செல்விக்கு… அனுபவித்துக் கொண்டிருந்தாள்…
Lovely
Wow, lovely 😍
Very nice and interesting sis. 😊
Hi Sis..
Epi ipadhan padika mudinjadhu..
Very interesting..
Neeya naana nu selviyum,karthiyum podra indha sandai lovely..
Nice ud sis.
அடேய் லூசு, சும்மா இருந்த சிங்கத்த சுரண்டி விட்ருக்க .
ஆராதனாவ பார்க்க ஏனோ பாவமா தெரியுது,வீட்ல அவ மேல யாராவது பாசமா இருக்குறாங்களா?
கமழி ன்னு வேணும்னு தான் பச்சை குத்திக்கொண்டானோன்னு டவுட்டா இருக்கே.தமிழை நினைச்சு தான் இப்படி பண்ணி இருக்கானோ ன்னு தோணுது😁
Very nice
Jii.. Selvi seems to be an adavadi character... Aaradhana seems to be a calm character... Let's see.. Waiting jii..