ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
தேங்க்ஸ் ஃபார் த கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ்
ஹேப்பி ரீடிங் ஃப்ரெண்ட்ஸ்...
நன்றி
பிரவீணா
அத்தியாயம் 25:
செழியன் அவள் விடுதியின் அருகில் வந்து மீராவின் அலைபேசிக்கு அழைத்து தான் வந்ததைச் சொல்ல… மீராவும் ஆராதனாவிடம் தகவலைச் சொல்லியிருக்க… அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆராதனாவும் தன் அறையை விட்டு வெளியேறி செழியனின் கார் நின்ற இடத்தை நோக்கிச் நடக்க ஆரம்பித்திருந்தாள்…
அங்கு அவளுக்காகக் காத்திருந்த செழியனோ… மணியைப் பார்க்க… மணி 11.45 ஐக் கடந்திருக்க… ஆராதனாவைப் பார்க்கப் போகிறோம் என்ற துள்ளளை விட கோபம் மட்டுமே அவனிடம் இருந்தது…
விடுதிக்கு மிக அருகில் தான் செழியன் காரை நிறுத்தி இருந்தான்… விடுதியில் இருந்து அவன் நிற்கும் இடத்திற்க்கு வர வேண்டும் என்றால் ஐந்து நிமிடம் மட்டுமே ஆகும்… ஆனால் அந்த ஐந்து நிமிடம் அவள் தனியாகத்தானே நடந்து வரவேண்டும்… பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தை அடக்கியபடி அவள் வரும் வழியை அனுமானித்துச் செல்ல ஆரம்பித்திருந்தான் செழியன்….
இந்த மாதிரி யாரோ போல் பின்னிரவில் அவளைத் தனியாக சந்திக்க வேண்டும் என்பதெல்லாம் அவன் எண்ணங்களில் எப்போதும், இருந்ததில்லை… காரை விட்டு இறங்கி… அந்த இரவின் குளிர்காற்றை அனுபவித்தபடி கைகளைக் கட்டியபடி அவளை எதிர்நோக்கியபடி நடந்து கொண்டிருக்க… சில நிமிடங்களிலேயே அவனவள்… தூரத்தில் தரிசனம் தர ஆரம்பித்திருக்க அடுத்த நொடி… அவனது கோபமெல்லாம் எங்கு சென்றதோ தெரியவில்லை… ஆராதனாவை நோக்கி வேகமாக அவன் கால்கள் அடியை எடுத்து வைத்திருக்க… அவனது பார்வையிலும் அவன் எண்ணங்களிலும் ஆராவின் அழகு மட்டுமே ஆக்கிரமித்திருந்தது,…
அவளைத் தழுவி இருந்த மெல்லிய காட்டன் சுடிதார்… கணுக்கால் தெரியும் படி பலாசா வகைப் பேண்ட்… சாதாரண செப்பல்… கையில் சிறிய கைப்பை… ஒரு பக்கமாக போடப்பட்டிருந்த ஷார்ஜெட் துப்பட்டா… துப்பட்டா இல்லாத பக்கம் போடப்பட்டிருந்த கூந்தல் துப்பட்டாவின் வேலையைப் பார்க்க… ஆராதனாவின் இந்த அழகுக்கே அவன் கிறங்கியிருந்தான்… அந்த ரம்மியமான இரவின் அழகை அவள் அழகிலும் ஏனோ உணர்ந்தான் செழியன்… அவனையும் மீறி அவனது உடலில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டதுதான்….
“ராட்சசி… அழகிய ராட்சசி… இப்படி நைட் வரச் சொல்லி என்னை சோதிக்கிறா ” அவனது உதடுகள் அவனையுமறியாமல் முணுமுணுத்துக் கொண்டன…
ஆராதனா எப்போதும் இருக்கும் இடத்திற்கேற்ப உடை அணிவாள்… ஆனால் அந்த உடையிலும் நேர்த்தி என்பது அதிகமாகவே இருக்கும்… அதே நேரம் சிறு வயதில் அவளை அவள் அணியும் உடை ஞாபகம் வர… வேகமாக தான் அணிந்திருந்த டிஷர்ட்டைப் பார்த்து… கற்பனை செய்து பார்த்த போதே சிரிப்பு வந்தது அவனுக்கு… அதற்காக எத்தனை நாள் சண்டை போட்டிருக்கின்றான்… அப்படியெல்லாம் உடை அணிந்தவள் எப்படி இப்படி நளினமாக உடை அணிய ஆரம்பித்தாள்… அவனுக்கே ஆச்சரியம் தான்… அதேநேரம் அவன் எப்படி இப்படி மாறினான்… அவனும் அவனுக்கு ஆச்சரியம் தான்
”டேய் செழியா… பிடிக்கல பிடிக்கல்னு விழுந்து பல காலம் ஆகியிருச்சு… அதை விடு இப்போ… இன்னைக்கு நல்ல பிள்ளையா…. ஓவரா உரிமை எடுத்துக்காம கொஞ்சம் தள்ளி நின்னே பேசிட்டு போயிருடா…. அதுதான் உனக்கு நல்லது… உன் காதலுக்கும் நல்லது… ” மனம் எச்சரிக்க… செழியனும் தன்னைச் சுதாரித்து அவளருகில் சென்றான்
“ஹாய்…”என்றபடி ஆராதனா அவனருகில் வந்த ஆராதனா,…. “கார் எங்க… கார்ல வரலையா…” அவனை விட்டு அவன் காரைத் தேட.,… செழியனும் இப்போது தன்னைச் சமாளித்து.,…
“கார்… முன்னால இருக்கு… நீ நடந்து வருவேன்னு… உன்னைத் தேடி வந்தேன்…” இந்த வார்த்தைகளையே இயல்பாக சொல்ல முடியாமல் தடுமாறினான்… அவன் பார்வை மாற்றங்கள் அவளைச் சென்றடைந்திடுமோ… கலவரம் மூண்டது அவனுக்குள்…
அவனால் எந்தப் பெண்ணையும் நேருக்கு நேராகப் பார்த்து பேச முடியும்… ஆனால் ஆராதனாவிடம் ஏனோ முடியவில்லை… அவள் கண்களைப் பார்த்து பேசும் போதே… இவன் கண்களில் காதலும் அதன் தேடலும் அவனிடம் சேர்ந்திருக்க… அதை அவள் அறியாமல் மறைக்கவே பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்க…. அப்போதே முடிவு செய்தான்… தன் காதலை எந்த அளவுக்குச் சீக்கிரம் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சீக்கிரம் சொல்லி விட வேண்டும்… ஏனோ இந்த சித்திரவதை அவனுக்கு பிடிக்கவில்லை…. அதைத் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை…
அவளைப் பார்க்க முடியாமல் வேறு திசையில் கவனம் வைத்தபடி… இயல்பாகப் பேசுவது போல நடந்து வந்து காரில் ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர… ஆராதனவோ எந்த சஞ்சலமும் இல்லாமல்… அவன் எதிர்புறம் வந்து அமர்ந்தாள்… அவனுள் மட்டுமல்ல… அவனது காரிலும் அவளின் பிரசன்னம் மொத்தமாக ஆக்கிரமித்திருக்க…
“சொல்லு ’ஆரா’… ஏன் இப்போ வரச் சொன்ன… இதுதான் மீட் பண்ற டைமா… உன் ஹாஸ்டல்ல இதுக்கெல்லாம் அளோவ்டா… அப்படி என்ன ஹாஸ்டல் பார்த்து சேர்த்து விட்டுட்டு போயிருக்காங்க என் மாமாவும் உன் அண்ணனும்” படபடவென்று அவளிடம் பொரிந்து தள்ள
ஆராதனாவின் முகம் நொடியில் பாவம் போல் மாறியிருக்க….
“எனக்குத் தெரியும் நீங்க திட்டுவீங்கனு… ஆனா உங்களப் பார்க்கனும்னு நினச்சேன்.... இப்போதான் டைம் கெடச்சது…. ப்ச்ச்… திட்டுங்க… நல்லா திட்டுங்க… அதுதானே உங்களுக்குத் தெரியும்… ஆனா நான் பேச வந்ததை… ஏன் பார்க்க வந்தேன்றதை கேட்டுட்டு அப்புறமா திட்டுங்க சரியா…” அவன் புறம் திரும்பி அமர்ந்தவள்… தன் கையில் இருந்த சிறு கைப்பையில் இருந்து சிறு பெட்டியை எடுத்தபடி…
“சாரி… “ என்று சொன்னபடி அதை அவனிடம் நீட்ட… செழியன் என்ன ஏதென்று புரியாமல் அதே நேரம் அதை வாங்கியபடியே
“என்னது… எனக்கு பிறந்த நாள் கூட இல்லையே…” பிரித்துப் பார்க்க… பிறை நிலா வடிவில் தங்கத்தில் சிறிய டாலர்…
“பிறந்த நாள் கிஃப்ட்லாம் இல்லை… இன்னைக்கு உங்கள வரச் சொல்லிட்டு உங்க நாளை வேஸ்ட் பண்ணிட்டேன்ல… அதுக்கு சின்ன பரிகாரம்… கிஃப்ட்டுனும் சொல்லிக்கலாம்… நல்லாருக்கா… என்னை மன்னிச்சுட்டீங்களா… கோபம் இல்லைல… கொஞ்சம் சிரிக்கலாம்ல…. எப்போ பாரு… அப்படி இரு…. இப்படி இருன்ன்னு… ரூல்ஸ் பேசிகிட்டே… மாறுங்க பாஸ்…”
இப்போது செழியன் சிரிக்க
“ஹப்ப்பா… உங்களுக்கு பல்லெல்லாம் இருக்குனு… முதன் முதல்ல பார்த்துட்டேன்…”
“ஏய்… “ செழியன் பொய்க் கோபம் காட்டியபடி… மெல்ல அவன் கைகளை அவள் கன்னத்தில் செல்லமால அறையப் போனவன்… பின் தானகவே கைகளை இறக்கிக் கொண்டான்…
“நல்லா இருக்கு… தேங்க்ஸ் சொல்லனுமா என்ன” செழியனும் சந்தோசமாக ஏற்றுக் கொள்ள…
“நல்லா இருக்குனு மட்டும் சொன்னா பத்தாது…. அந்த நாய்ப்பட்டை மாதிரி கழுத்துல போட்ருக்கீங்களே… அதுல இதை மாட்டிக்கங்க… “ ஆராதனா அவன் கழுத்தில் போட்டிருந்த பட்டென்று சொல்லி… நாக்கைக் கடிக்க…
“உனக்கு இந்த மெலிசான செயின் நாய்பட்டை மாதிரி இருக்கா… ” செழியன் கடுப்பாகக் கேட்க…
”செயின் நார்மலாத்தான் இருக்கு… நான் அதைச் சொல்லல… அதைப் போட்ருக்க உன்னைத்தான் சொன்னேன்டா…” மனதுக்குள் நினைத்துக் கொண்டவள்….
”ஹி… ஹீ… சும்மா.. ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்… நீங்க அந்த செயின்ல இந்த டாலரைப் போடுங்கன்னு சொல்ல வந்தேன் சார்… மன்னிச்சு சார்….” ஆராதனா கொஞ்சம் கூட கண்டுபிடிக்க இடம் கொடுக்காமல் பதவிசான தொணியில் சொல்ல…
“ஹ்ம்ம்… அது… அந்த பயம் இருக்கட்டும்….” என்றபடி… தன் கழுத்தில் இருந்த சங்கிலியைக் கழட்ட… அது அவனின் கழுத்தை ஒட்டி இருந்ததால் கொஞ்சம் சிரமப்பட… கார்க் கண்ணாடியைப் பார்த்து கழட்ட முயல….
“நான் ஹெல்ப் பண்ணவா… “ ஆராதனா அவனருகில் நெருங்க… சட்டென்று செழியன் பதறியவனாக அவளை விட்டு விலகி அமர்ந்தவன்
“இல்லம்மா… நீ அந்த சீட்லயே இரு… நானே கழட்டிக்கிறேன்… உன் உதவிலா,ம் வேண்டாம்… “
“நான் இருக்கிற நிலம தெரியாம இவ வேற… படுத்துறாளே… செழியா சீக்கிரம் கெளம்புற வழியப் பாருடா” மனதுக்குள் புலம்பியபடியே டாலரை மாட்ட ஆரம்பித்தான்…
அடுத்த சில நிமிடத்தில் ஆராதனா கொடுத்த டாலர் அவன் கழுத்தில் இருக்க…
”இப்போ கொஞ்சம் பரவாயில்ல… நல்லாருக்கு….” சற்றும் யோசிக்காமல் அவளாகவே அவனருகில் நெருங்கி அதை சரி செய்து விட்டிருக்க… செழியனின் நிலைமைதான் சொல்லும்படி இல்லை…
“சரிஅப்போ… நான் கெளம்பவா…” செழியனின் குரல் அவனுக்கே கேட்காத நிலை… ஏனோ இந்த இரவு நேரம் அவளோடு தனியே இருக்க மனம் விரும்பவில்லை..,. அதை விட இத்தனை வருடங்களாக அவளை நினைத்து ஏங்கியது அவன் மனது மட்டுமல்ல… அவனின் இளமையும்… வாலிபமும்… அவன் மனைவியாக ஆராதனா… குழந்தை… நரை முடிக் காலம் வரை அவன் கற்பனைகள் எல்லைகளற்றது…
கற்பனைகள் கற்பனைகள் தான் என்பது இப்போது புரிந்தது… நிஜத்தில் அவளுக்கான அவனின் உரிமை எல்லைக்குள் நின்றது… கனவுகள் நனவாக காலம் இன்னும் இருக்கின்றது… என்ற நிதர்சனம் அவனுக்குமே புரிந்தது…
“என்னது… கெளம்புறீங்களா…. கிஃப்ட்லாம் கொடுத்து ,மன்னிப்பு கேட்ருக்கேன்… ‘ஆரா… இன்னைக்கு ஃபுல்லா என்னைக் காக்க வச்சதுக்கு…. பார்க்க வர்றேன்னு சொல்லிட்டு என்னை என் நேரத்தை வேஸ்டாக்கினதுக்கு கோபத்துல இருந்தேன்… இப்போ கோபம் இல்ல மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க…’ அப்போதான் எனக்குத் தூக்கம் வரும்”
“ஏய் லூசு… எனக்கு எப்போதுமே உன் மேல கோபம் இருந்தது இல்ல… உன் மேல இருக்கிற அக்கறையைத்தான்… உரிமைல கோபமா காட்டிடறேன் போதுமா… ”
“அப்போ அதெல்லாம் கோபம் இல்லயா…. ஆனா அப்படி தெரியலையே… “
“இல்லேன்னு எப்படி காட்டச் சொல்ற… சொல்லு…” செழியனும் இப்போது இயல்பாகி இருந்தான்…
”ஓகே ஒகே… நான் நம்பிட்டேன்…. சோ என் மேல கோபம் இல்லதானே…”
“இல்ல…” செழியன் சொல்ல
“கொஞ்சம் கூட… இத்துனூண்டு கூட… இவ்ளோ கூட” விரல்களில் அளவு காட்டி கேட்க…
இப்போது யோசித்தான் செழியன்…
“ஹ்ம்ம்ம்ம்,…. இருக்கு… ஆனால் சொல்லலாமா வேண்டாமான்னு தெரியல” இழுத்தான் எதையோ சொல்ல நினைப்பது போல
இப்போது ஆராதனா
“இன்னுமா… நான் என்ன பண்ணினேன் “ பரிதாமாக அவனைப் பார்க்க
“நீ ஒண்ணும் பண்ணல… ” என்றபடி… அவள் புறம் திரும்பியவன்
“சரி சொல்றேன்… அடிக்கடி உன்கிட்ட கேட்கிற வார்த்தைதான்… நான் யார் உனக்கு” செழியன் கேட்க
“என் அத்தை பையன்… ஏன் இதுல என்ன சந்தேகம்” ஆராதனா அப்பாவியாகக் கேட்க
“அத்தை பையன் தான்… ஆனால் அப்படி ஃபீல் பண்ண வைக்க மாட்டேங்கிறியே” செழியனின் குரல் அந்த இரவில் மென்மையாக மாறி இருக்க… மெல்ல மெல்ல அவளிடம் தன் மனதில் இருப்பதை பேச ஆரம்பித்தான்
“எப்படி ஃபீல் பண்ண வைக்கிறது… ” யோசித்தவள்…
“ஹான்… இப்படி உங்க கூட நைட் வந்து பேசிட்டு இருக்கேனே… இதே வேற யார்கிட்டயாவது நான் பேசுவேனா…. என் அத்தை பையன்ற உரிமைலதானே வந்து பேசிட்டு இருக்கேன்…”
அவளையே பார்த்தபடி இருந்தவன்…. சில நிமிடங்கள் யோசித்தபடி
“இதைச் சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்காத… அந்த நரேன் கூட உனக்கு’அத்தான்’ ஆகிட்டான்…. ஆனா நான்… என்னைக் கூட அவ்ளோ உரிமையா கூப்பிட்டதில்ல… அவனையெல்லாம் நீ அத்தான்னு சொல்வ… ஆனா என்னைய… ஏதோ வாங்க போங்கன்னு கூப்பிடற…. இல்ல ஐந்தறிவு ஜீவன் கிட்ட பேசுற மாதிரி இருக்கும்” கடுப்பாகச் சொல்ல
“ஹையோ… இதுதான் கோபமா உங்களுக்கு.. செல்வி அண்ணனை …. அவர் கிட்ட பேசும் போது… நான் அத்தான்லாம் சொல்ல மாட்டேன்,…. ஏதோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன் உங்ககிட்ட… சாரி…” எனும் போதே
”நீ அவனை அப்படிக் கூப்பிட்டது எனக்கு பிரச்சனை இல்ல… என்னை அப்படி கூப்பிடலேன்றதுதான் என் பிரச்சனை… உனக்கு புரியுதா இல்லையா” செழியன் ஒரு வழியாகத் தன் வெகுநாளைய ஆசையைச் சொல்லி அவளைப் பார்க்க…
இப்போது நீண்ட நேரம்அமைதியாகவே அமர்ந்திருந்தாள் ஆராதனா…
“என்னாச்சு…” செழியன் பதட்டத்தோடு கேட்டவனாக… அதே வேகத்தில் தன் ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கி… அவள் புறம் வந்தவன்… அவள் அருகில் அவள் அமர்ந்திருந்த இருக்கையிலேயே அமர…. ஆராதனா ஒன்றும் சொல்லாமல் அப்படியே சிலையென அமர்ந்திருக்க…
“என்னாச்சுமா… ஏன் … “ செழியன் அவளை அணைத்துக் கேட்க…
“கூப்பிட்டிருக்கேனே… ” ஆராதனா வெற்றுப் புன்னகையுடன் அவனைப் பார்த்தவள்…
”அப்போ அதுவும் முதன் முதலா நான் கூப்பிட்டப்போ… நீங்க என்னைப் பார்த்த பார்வை… அத்தனை பேருக்கு முன்னாடி என்னைத் திட்டினது… ஏனோ அதுக்கப்புறம் அப்படிக் கூப்பிட பயமாருக்கு….”
“ப்ச்ச் ஆரா…. அந்த சின்ன வயசுல… என் ஃப்ரெண்ட்ஸ் முன்னால அதுவும் ஸ்கூல்ல கூப்பிட்டது… திட்டிட்டேன்… எனக்கே தப்புனு புரியுது… ” செழியன் மனம் விட்டு பேச ஆரம்பித்த போதே… ஆராதனா வேகமாக…
“திட்டினது உண்மைதானே… நான் அந்த ’அத்தான்’ற உரிமையைச் சொல்லிக் கூப்பிட மாட்டேன்… ப்ளீஸ் கட்டாயப்படுத்தாதீங்க… மறுபடியும் பழச ஞாபகப்படுத்தாதீங்க… வேண்டாமே…” ஆராதனா தீர்க்கமாகச் சொல்ல
ஏனோ அவளின் படபட தீர்க்கமான தொணியில் இவன் மனம் கனத்தது…
“சரி விடு… நீ அப்படிக் கூப்பிடவேண்டாம்… நீ எப்போதும் போலவே பேசு… “ சட்டென்று சொல்லியவனாக…
“ஆனால் என்னைக்காவது எனக்காக என்னை அத்தான்னு கூப்பிடுவேன்னு எனக்குத் தெரியும்….” என்றவன்… என்ன நினைத்தானோ…. சட்டென்று அவள் கைகளைப் பிடித்தபடி…
“ஏய் ஆரா… நான் உன்கிட்ட ரொம்ப நாளா சொல்ல நினைச்சிட்டு இருந்தது… இன்னைக்கு அதைப் பற்றி பேசலாமா” செழியனின் முகம் தீவிரமாகி இருக்க… இது.. இந்த நொடியே அவன் காதலைச் சொல்லப் போகும் தருணம் என்று அவன் நினைத்திருக்க… ஆராதனாவுக்கு அவன் வார்த்தைகள் வேண்டுமா என்ன… ஆனால் அவன் காதலைத் தன்னிடம் சொல்ல விடக் கூடாதே…. வேக வேகமாக யோசித்தாள்
அடுத்த நொடி… அவன் பார்வையில் இருந்து தன் பார்வையை விலக்கி
“இந்தக் கார் இவ்ளோ காஸ்ட்லியா இருந்தும்… இன்னும் மேனுவல் கியர் இருக்கு… ஏன்… இந்த மாடல்ல ஆட்டோமேட்டிக் தானே…” அவன் பேச்சையே கவனிக்காதவள் போல வேறு ஒரு தலைப்புக்கு அவனை மாற்றியவளாகக் கேட்க
“சின்ன வயசுல இருந்தே இந்த கார் வாங்கனும்னு ஆசை… எனக்குப் பிடிச்ச மாடல்… சில ஆப்ஷன்ஸ் வாங்கிட்டு ஆல்டர் பண்ணினேன்… என்னோட ஃப்ரெண்ட் மாதிரி… எத்தனை மாடல்… எவ்ளோ பெரிய மாடர்ன்… காஸ்ட்லி கார் வந்தாலும் இதுதான் என்னோட ஃபேவரைட்… கிட்டத்தட்ட என்னோட ஒரு ஃப்ரெண்ட் மாதிரி… என் மனசு… அதுல இருக்கிற ஃபீலிங்… எல்லாமே இதுக்கும் தெரியும்… இன்னைக்கு அதுவும் என்னை மாதிரியே சந்தோசப்படும் தெரியுமா…” செழியன் தன்கைகளை தன் தலையின் பின்புறம் கட்டியபடி… தன் காரின் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து அனுபவித்துச் சொன்னவன் அதே நேரம் ஆராதனாவின்யும் அரவணைத்தார் போல அவன் கைகள் பட்டும் படாமலும் தனக்குள் கொண்டு வந்திருக்க… அந்த நிமிடத்தை தனக்குள் அணு அணுவாக பெரும் திருப்தியுடன் உள்வாங்க ஆரம்பித்த போதே
ஆராதனா அப்படி விட்டு விடுவாளா என்ன….
”எனக்கு கார் ஓட்டச் சொல்லித் தர்றீங்களா…. நான் ஓட்டவா….” சட்டென்று தான் இருந்த இருக்கையில் இருந்து…. அதாவது அவனிடமிருந்து நழுவி… ஓட்டுனர் இருக்கைக்கு மாறியிருந்தாள்…
“இப்படித்தானே ஸ்டார்ட் செய்யனும்” என்று வாகனத்தையும் இயக்க ஆரம்பித்திருக்க…. அவ்வளவுதான் செழியன் காதல் மொழியெல்லாம் மறந்தவனாக
“ஏய்… ஏய்… உனக்கு கார் ஓட்டத் தெரியுமா… அதை ஏன் ஸ்டார்ட் பண்ற… முதல்ல இந்தப் பக்கம் வா… இப்போதானே சொன்னேன்… என் கார் என் ஃப்ரெண்ட் மாதிரி…” செழியன் பதற
”ரொம்பத் தெரியாது… சொல்லிக் கொடுங்க… நான் கத்துக்கிறேன்… தெரிந்த வரை ஓட்டிக் காமிக்கவா…” வேகமாக கியரை மாற்ற முயற்சிக்க…
“அடிப்பாவி… கிளச்சை அழுத்தாம கியரை மாத்துற… முதல்ல இறங்கு நீ… எனக்கு என் கார் முக்கியம்” செழியன் இறங்க முயற்சிக்க…
“செல்வி அண்ணன்… அவங்க கார் ஆடிக் கார்… பிஎம்டபிள்யூ கார்… அதையே என்கிட்ட நான் கேட்ட கொடுப்பாங்க… இந்த டப்பா காரைக் கொடுக்கிறதுக்க்கு இவ்ளோ பில்டப்… இதுல நரேன் அத்தான் உரிமைனு கோபம் மட்டும் வருது… அத்தை மகன்ற உரிமைனு சீன் போட்றது….” ஆராதனா படபடத்திருக்க
“இப்போ என்னடி பண்ணச் சொல்ற…” செழியன் கடுப்பாகக் கேட்டதில் அவனையுமறியாமல் அவளை ’டி’ போட்டும் அழைத்துவிட்டான்
ஆராதனாவும் அதைக் கண்டு கொள்ளாமல்…
“உரிமையா ’டி’ போட்றீங்கள்ள… அந்த உரிமைய கார் ஓட்டவும் காட்டுங்க…”
“எனக்கு இப்போ கார் ஓட்டனும்… இப்போவே உடனே… சொல்லிக் கொடுப்பீங்களா மாட்டீங்களா… இல்லேன்னா… போங்க செல்விண்ணாகிட்டயே கத்துக்கிறேன்” ஆராதாவின் குரலில் கொஞ்சலும் உரிமைக் கோபமும் இருக்க…சொன்னவள் அதே வேகத்தில் இறங்கவும் போக
“சரி சரி… உட்காரு… சொல்லித்தரேன்… இறங்காத… முதல்ல சீட் பெல்ட்டைப் போடு” செழியன் சலிப்பாகச் சொன்னவன்
“சீட் பெல்ட் போடத் தெரியும் தானே… இல்ல அதுலருந்தே சொல்லித் தரனுமா…”
ஆராதனா முறைத்தபடியே
“ஹலோ… எங்க வீட்ல… ஒரு டிசையர்… ரெண்டு இனோவா… 1 டாட்டா சுமோ … அப்புறம் 3 ட்ராவெல் வேன் இருக்கு தெரியும் தானே… எங்க அண்ணா கியா கார்னிவல் வாங்கப் போகுது… எங்க ரோட்டுக்கு இதுதான் வாங்க முடியும்… அதுனாலதான் இந்த பட்ஜெட்…. இப்படி மாடல்… இல்லேன்னா நாங்களும் காசு பணம் பார்க்காமல இம்போர்ட் பண்ணுவோம்”
செழியன் சிரித்தவன்
“சரி சரி… அடேங்கப்பா… ரோஷம் வேற லெவல்ல வருது… “
“சரி சரி… க்ளட்ச்ச மிதி… நியூட்ரல் செக் பண்ணு…” என ஆரம்பித்து அவளுக்கு ஓரளவு சொல்லிக் கொடுக்க… இவளும் தெரியாதவள் போல அவனிடம் நடித்தாள்…
“ப்ரேக் எப்படி போடனும்… “
“ஹ்ம்…நடுவுல இருக்கிறதுதான் பிரேக்னு தெரிதுல்ல…. அதை மிதி”
’ஓட்டு டி…”
“ஒண்ணும் தேவையில்ல… இப்டிலாம் முகத்தை வச்சுட்டு ஒண்ணும் சொல்லித் தர வேண்டாம்…”
“ஹி ஹீ.. ஓட்டும்மா… ஓட்டுங்க மேடம் ஆராதனா ராஜாசேகர் அவர்களே… … போதுமா” செழியன் சொல்ல
“அது… அந்தப் பயம் இருக்கட்டும்… “
“எனக்கு என் காரை நெனச்சு இங்க கதி கலங்குது…” மனதில் இருந்ததை சொல்ல முடியாமல் தனக்குள் சொல்லிக் கொண்டவன்… அவளை ஓட்டச் சொல்ல… அவளும் ஓட்ட ஆரம்பித்தாள்… செழியன் பயந்தது போல அவள் ஓட்டத் தடுமாற வில்லை…. ஓரளவு நன்றாகவே ஓட்ட ஆரம்பிக்க… செழியனும் இப்போது பயம் இன்றி அவளுக்கு சொல்லிக் கொடுக்க… அவளும் சாலையில் ஓட்ட ஆரம்பித்தாள்… செழியனும் இயல்பாக அவளுடன் பேசியபடியே கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான்….
”பரவாயில்ல ஆரா… நல்லாத்தான் ஓட்ற… நான் கூட எடுத்தவுடனே இப்படி ஓட்டல…” சொல்லி முடிக்கவில்லை அவன்
“ஏய் ஏய்… திருப்புடி… டர்ன் வருது பாரு…. ஆரா ஸ்டாப் பண்ணு…” வேகமாக தன் கட்டுப்பாட்டுக்கு காரைக் கொண்டு வர முயற்சிக்க… ஆராதனாவோ அதற்கு முன்னரே.,… அங்கிருந்த பெரிய கம்பத்தில் முட்டி கார் நின்றிருக்க…
“ஏய்… ஏண்டி… உன்னை… ஏதாவது அடி பட்ருக்கா… காட்டு” பல்லைக் கடித்தவன் அவளைத்தான் முதலில் பார்த்தான்… அவளோ இவனை விட வேகமாக காரை விட்டு இறங்கி இருக்க…
அதில் அவளுக்கு ஒன்றுமில்லை என்று உறுதி செய்தவனாக…. காரின் முன்னால் போய் மோதிய பகுதியைப் பார்க்க.. கொஞ்சம் சிறிய சேதாரம் தான் ஆனாலும் காரை எடுக்க முடியாது… மெக்கானிக் ஷெட்டுக்கு சென்றால் மட்டுமே மீண்டும் காரை எடுக்க முடியும்…
அவளிடமும் கோபத்தைக் காட்ட முடியாதவனாக…. முன் உச்சிக் கேசத்தைக் கோதி தன் கோபத்தை அடக்க முயல
“சாரி… சாரி… உங்களுக்கு இந்தக் கார் ரொம்ப பிடிக்கும்ல… உங்க ஃப்ரெண்ட் மாதிரின்னு சொன்னீங்களே”
““ரொம்ப சந்தோசம் …. அதான் எல்லாம் பண்ணியாச்சே… அப்புறம் என்ன சாரி” காரைப் பார்த்துக் கொண்டே சொன்னவன்…. இப்போது அவளைப் பார்க்க…. கோபமாகத்தான் அவளைப் பார்த்தான் ஆனால்… அடுத்த நிமிடமே அவன் பார்வையில் பயம் கலந்த பதட்டம் வந்திருக்க… அவளின் நெற்றியைப் பார்த்தபோது…
கீறலாக நெற்றியிலிருந்து உதிரம் உறைந்து நின்றிருக்க…
”ஆரா” யோசிக்கவெல்லாம் இல்லை…. வேகமாக அவளைத் தன் புறம் கொண்டு வந்தவன்…. அவள் நெற்றியில் ஆராய…
“நெத்தில அடிபட்ருக்கு ஆரா… இரத்தம் வருதா என்ன” செழியனின் குரலில் பதட்டம், வந்திருக்க…
“இரத்தம் வருதா… எங்க…” ஆராதனா அவனது கைகளை விலக்கிவிட்டு தன் கைகளால் தொட்டுப் பார்க்க… இப்போது எங்கிருந்துதான் குருதி வந்ததோ… சர சரவென வழிய ஆரம்பித்திருக்க… செழியனுக்கே மயக்கம் வருவது போல இருந்தது… இருந்தாலும் பதட்டத்தைக் குறைத்தபடி…
“இங்க வா… உட்காரு…” ஆராதனாவை காரில் அமரச் செய்தவன்… அவளுக்குத் தண்ணீர் கொடுத்தபடியே
“மயக்கம் வர்ற மாதிரி இருக்கா… “ ஆராதனா இல்லையென்று தலை ஆட்ட… செழியன் தன் கைக்குட்டையால் அவள் தலையில் கட்டுப் போட்டவன்… தான் வழக்கமாக விடும் மெக்கானிக் ஷாப்பிற்கு அழைத்து விபரத்தைச் சொல்லி… தனது காரை எடுத்துப் போக ஏற்பாடு செய்தவன்… அடுத்து அருகில் இருக்கும் இருபத்துநான்கு மணி நேர அவசர சிகிச்சை மருத்துவமனையையை தன் அலைபேசி மேப்பில் குறித்துக் கொண்டவன்… வந்த ஆட்டோவை நிறுத்தி ஆராதனாவை ஏறச் சொல்லி விட்டு தானும் ஏறி அமர்ந்து… மருத்துவமனையின் பெயரைச் சொல்ல
“ஹாஸ்டலுக்கு போகலையா…. எனக்கு ஒண்ணும் இல்ல…”
“வாய மூடிட்டு வா…” இப்போதும் அவனின் அக்கறை கோபமாகத்தான் வெளி வந்தது…
“உங்களுக்கு கார் அப்படி ஆகிருச்சுனு என் மேல கோபம்…” ஆராதனா அழுவது போலச் சொல்ல
முறைத்தவன் இப்போது ஏதும் சொல்லாமல்… அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்ட… வேகமாகத் தட்டி விட்டவள்
“எனக்கு வேண்டாம்… அது உங்களுக்குத்தான் இப்போதைக்கு வேண்டும்” ஆராதனாவின் குரலில் இப்போது கோபம் மட்டுமே
“எனக்கு கோபம் உன் மேல இல்ல… இப்படி அடிபட்ருச்சேன்னூ பயமா இருக்கு…. ஆரா…. ப்ளீஸ் பேசாமா வா…”
“இது என்ன சின்ன அடிதானே…. உங்களுக்கு கூட ரெண்டு வருஷத்துக்கு முன்னால பெரிய ஆக்சிடெண்ட் ஆச்சே… அதை விட பெருசா என்ன…”
ஆராதனா கேட்க… செழியன் வேகமாக அவளைப் பார்த்தான்… அந்தப் பார்வையில் ஆச்சரியமும்… கேள்வியும் இருக்க
“நானும் அப்பத்தாவும் எவ்ளோ வேண்டிகிட்டோம் தெரியுமா… நான் ட சாமிக்கு காசு கூட நேந்து வச்சேன் உங்களுக்கு ஒண்ணூம் ஆகக் கூடாதுனு… அப்போ கூட எனக்கு மேரேஜ் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க….”
செழியன் இப்போது…
“அந்த ஆக்சிடெண்ட் எப்போ ஏன் ஆனுச்சுனு உனக்குத் தெரியுமா ஆரா…” என்று நிமிர… ஆராதனவோ கண்களை மெல்ல மூட ஆரம்பித்திருக்க…
“ஆரா…. ஆரா…” கன்னத்தைத் தட்ட…
“ட்ரைவர்… சீக்கிரம் பக்கத்தில இருக்கிற ஹாஸ்பிட்டலுக்கு போங்க…” செழியனின் குரல் உச்சஸ்தாயில் ஒலித்தது…
-----
“ஒண்ணும் இல்ல… ப்ளட் கொஞ்சம் அதிகமா வெளியேறி இருக்கு… அந்த மயக்கம் தான்… “
“கண்டிப்பா ஸ்டிச் போடனும்… ஆழமா இருக்கு காயம்… ஸ்கேன்ல எல்லாம் பார்த்துட்டேன்… பிரச்சனைலாம் இல்ல”
“என்ன ஆராதனா ஓகேவா ஸ்டிச் போடலாம் தானே…. சின்னதா கீறல் இருக்கும்… கொஞ்ச நாள்ல அந்தத் தழும்பும் மறஞ்சிரும்…” அந்த மருத்துவர் கேட்க… ஆராதனா தலையை ஆட்டினாள்…
அவளின் எண்ணமெல்லாம் செழியனிடமே இருந்தது இப்போது…. ஒரு காலத்தில்… ”அதெல்லாம் பெருசா அடிபடல… ரத்தம் வர்றதும் நின்றும்… சரியா வீட்ல சொல்லக் கூடாது… சொன்னேன்னு வச்சுக்க… அன்று மிரட்டியவனும்…”
இந்த சின்னக் காயத்துக்கே… ஆரா… ஆரா…” என்று பதட்டம் கலந்து நிற்கிறானே.. இவனும் ஒன்றா…
ஆட்டோவில் கண்களை மூடி மெல்ல மயங்கியவள்…முழுதாக மயங்கவில்லை…
முகத்தில் தண்ணீர் பட்டவுடன் ஓரளவு சரியாகி அவனைப் பார்த்தவள்…
“ஒண்ணுமில்ல…” என்று ஆட்டோவில் இருந்து தானே இறங்கி வந்தாள்… அவன் அருகில் வந்த போது கூட அவனைத் தவிர்த்து விட்டு இயல்பாக நடந்து வந்தாள்…
அதன் பிறகு இதோ…. சிறு தையல் போடப்பட்டும் விட்டது….
செழியன் மருந்து வாங்கி வரச் சென்றிருந்தான்…. இவள் மட்டும் அந்த அறையில் இருந்தாள்… ஏனோ அவளுக்குள் இயல்பாக இல்லாதது போல் தோன்றியது… நெற்றியில் வலி இல்லை என்றாலும் அதில் இருந்த கட்டு மனதில் பயத்தைத் தோற்றுவிக்க… முதலில் கூட அப்படித் தோன்றவில்லை… வேண்டுமென்றே தான் காரை இடித்தாள்… ஆனால் எப்படி அடிபட்டது…. யோசித்தபடியே
“நர்ஸ்…” அங்கிருந்த செவிலியரைக் கூப்பிட்டவள்…
“எனக்கு ஒண்ணும் இல்லதானே” ஏனோ அப்படி கேட்கத் தோன்றியது… மனதில் அவள் தாயும் தந்தையும் மின்னல் போல் தோன்றி மறைந்திருந்தனர்… ஏனோ அவர்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது அவர்கள் அருகாமை அவளுக்குத் தேவை போல் தோன்றியது
“ஒண்ணும் இல்ல சிஸ்டர்… ஏன் என்னாச்சு” அந்த செவிலிப் பெண் கேட்க
“இல்ல ஒரு மாதிரி கிடினெஸா இருக்கு…. தூக்கம் வர்ற மாதிரி இருக்கு… முதல்ல கூட அப்படி இல்ல” ஆராதனாவின் கலங்கிய குரலில் சொன்னவள்…
“இது என் அம்மாவோட நம்பர்…எனக்கு ஏதாவதுனா அவங்களுக்கு கால் பண்ணிருங்க… அப்புறம்…” என்ற போதே அந்தச் செவிலிப்பெண்….
“பயப்படாதீங்க… கொஞ்சம் ஹெவி டோஸ்… அந்த மருந்து… அதுனாலதான் அப்படி இருக்கும்… தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிரும்…. “
“ஹம்ம்… அப்புறம்… என்னோட வந்தார்ல… அவர் எனக்கு ஸ்ட்ரேஞ்சர் தான்… ஆக்சிடெண்ட் ஆனப்போ ஹெல்ப் பண்ணினார் அவ்ளோதான் அவருக்கும் எனக்கும் உள்ள பழக்கம்… ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆகிருச்சுனா… இந்த நம்பர்க்கு கால் பண்ணினா என் ஃபேமிலி வந்துருவாங்க…”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே செழியன் உள்ளே வர…பெண்கள் இருவரும் அமைதி ஆகி இருந்தனர்…
“ஆரா… கெளம்பலாமா…” என்றபடி அவள் அருகில் வந்து அவளை உரிமையுடன் கைபிடித்து தூக்க முயல… ஆராதனா சட்டென்று அவனை விட்டு விலகினாள்... நினைவோடு இருக்கும் போது அவன் தொடுதலை அருகாமையை தவிர்த்து விடலாம்… ஒரு வேளை மயங்கி விட்டால்… செழியன் என்ன செய்வான் என்பது ஆராதனாவுக்கே தெரிய…. ஆராதனாவுக்கு அந்த எண்ணமே கலக்கம் தந்திருக்க…
“கடவுளே… என் ஹாஸ்டல் வரைக்கும் இவன்கிட்ட இருந்து காப்பாத்தி… என்னை எப்படியாவது கொண்டு போய்ச் சேர்த்திரு…” அவளையுமறியாமல் வேண்ட… அவளின் வேண்டலுக்கு எதிர்மாறாக…
“என்னைப் பிடிச்சுக்க… கீழ விழுந்துறாத,…” விலகிய அவளை செழியன் இலகுவான இயல்போடு தனக்குள் கொண்டு வந்திருக்க…
“நான் ஓகே… நானே நடந்து வர்றேன்…” இப்போது அவனை விட்டு விலக முடியாமல்… ஆராதனா வேகவேகமாகப் படபடத்துச் சொன்னவள்..
”தேங்க்யூ சிஸ்டர்…” அந்த செவிலியரிடம் சொல்ல… ஆராதனாவின் பார்வையில் அந்தப் பெண் என்ன உணர்ந்தாளோ… அந்தப் பெண் இப்போது…
”சிஸ்டர்… நீங்க அட்மிஷன் போட்டு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு காலைல போங்களேன்… நீங்க இப்போ இவர் கூட போறது சரியாப் படல… இங்க இருந்தீங்கன்னா நாங்க பார்த்துக்குவோம்…”
ஆராதனாவுக்கும் ஏனோ அது சரியாகப் பட… செழியனிடம் திரும்பி
“நீங்க வீட்டுக்குப் போங்க… நான் காலைல ஹாஸ்டலுக்கு போய்க்கிறேன்… இங்க பக்கத்துலதானே” சொல்லும் போதே தடுமாற… வேகமாக செழியன் அவளைத் தாங்கிப் பிடிக்கப் போக… அந்தச் செவிலிப் பெண் அதை விட வேகமாக முன்னால் வந்தவளாக… ஆராதனாவைத் தன்புறம் கொண்டு வந்தவள்
“நாங்க பார்த்துகிறோம் சார்… அவங்களுக்கு இப்போ நல்ல தூக்கம் வேணும்… நீங்க ரூம் அட்மிஷனுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க…” ஆராதனாவை அழைத்துக் கொண்டு நடக்க… ஆராதனா அந்தச் செவிலிப் பெண்ணுக்கு கண்களாலேயே கோடி நன்றிகள் சொல்லி இருக்க செழியனோ இதெல்லாம் ஏதும் அறியாமல்… அறைக்கு பணம் கட்டச் சென்றிருந்தான்…
”சிஸ்டர்… நீங்க ஏன் பயப்பட்டீங்கன்னு எனக்கு இப்போ புரியுது… அந்தாளு ஓவராத்தான் அட்வாண்டேஜ் எடுத்துக்கிறான்… பயப்படாதீங்க… நான் பார்த்துகிறேன்… நீங்க நிம்மதியா தூங்குங்க…” என்று கட்டிலில் படுக்க வைக்க…. ஆராதனா இப்போது..
“அம்மா நம்பர்க்கு… எமர்ஜென்சினா மட்டும் போன் பண்ணுங்க… இவரைப் பற்றிலாம் சொல்லாதீங்க…” சொல்லி விட்டு… படுத்தவள்… அடுத்த நிமிடமே உறங்கியும் இருக்க…
செழியனும் இப்போது வந்திருந்தான்…. அறையில் ஆராதனா மட்டுமே இருக்க… அவளுக்கு அருகில் அங்கிருந்த நாற்காலியைப் போட்டு அமர்ந்தவன்… அவள் நெற்றிப் பொட்டைத் தொட்டுப் பார்த்து விட்டு…
அவள் கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்
“அன்னைக்கு மாதிரியே ஒரு நிமிசம் பயந்துட்டேண்டி… உனக்குத் தெரியுமா… நான் உன்னை எப்போதில இருந்து”
“சார்… நீங்க வெளில போங்க… அட்டெண்டர்லாம் உள்ள இருக்கக் கூடாது… பேஷண்டை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க… அவங்க கையை விடுங்க…. முதல்ல எழுந்து வெளிய போங்க” அந்த செவிலிப்பெண் செழியனை அதட்ட ஆரம்பித்திருந்தாள்அவள் நடவடிக்கைகளை பார்த்தும் கண்டுகொள்ளாமல் இருந்தவன்….… இப்போது செழியனும் எகிற ஆரம்பித்திருந்தான்
“என்ன சிஸ்டர்… என்னைப் பார்த்தால் தேர்ட் ரேட் மாதிரி தெரியுதா… இந்த ரூம்ல வந்ததில இருந்து ஒரு மாதிரி பேசுறீங்க… மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று தன் ஐடி கார்டை காட்டியவன்…
”இந்தக் கம்பெனியோட சியூஓ நான்… இவங்க என்னோட ரிலேட்டிவ்… இந்த ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட்கிட்ட என்கிட்ட இந்தமாதிரி பிகேஹ் பண்றீங்கன்னு ஒரு கம்ப்ளெயின்ட் பண்ணினா போதும்… உங்க வேலை காலி… என்ன நினச்சுட்டு என்கிட்ட இப்படி பேசுறீங்க…” செழியனின் குரல் உயர்ந்திருக்க… இப்போது அந்த செவிலிப் பெண் என்ன நினைத்தாளோ
”சார் அவங்களுக்கு பிபி செக் பண்ணனும்…. அதான்…” என்று பவ்யமாகச் சொல்லி விட்டு… எல்லாம் டெஸ்ட்டும் எடுத்து முடித்தவள்… இப்போது செழியனை வெளியே அனுப்பாமல்… அந்த அறையிலேயே இருந்த மேஜையில் தானும் ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்தும் விட்டாள்…
அந்தப் பெண்ணுக்கும் வேறு வழி தெரியவி்ல்லை….
”இவன் பணமும் அதிகாரமும் படைத்தவன்… இப்போதைக்கு அவனிடமிருந்து மயக்கத்தில் இருக்கும் இந்தப் பெண்ணைக் காப்பாற்ற அவளுக்கு தெரிந்த வழி இது ஒன்றே… கண் விழித்தபின் அவள் பாடு” என்று நினைத்தபடி… ஆராதனா கொடுத்திருந்த மேகலாவின் எண்ணுக்கும் அழைத்துச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசனையுடன் அமர்ந்திருந்தாள்…
---
இரண்டு மணி நேரம் கடந்திருந்தது…. மணி மூன்றைத் தொட்டிருக்க… ஆராதனாவும் கண் விழித்தாள்… அந்த அறையில் செவிலியர் மட்டுமே அமர்ந்திருக்க… கடினப்பட்டு எழுந்து அமர்ந்தவள்…
“தேங்க்ஸ்… எனக்காக இருக்கீங்களா” ஆராதனா குரலில் நன்றியுடன் கூடிய நெகிழ்ச்சி மட்டுமே
“நான் ரொம்ப சிரமப்படுத்திட்டேனா…” ஆராதனா கை கூப்ப
“ஒரு பொண்ணுக்கு இன்னொரு பொண்ணா செய்ற நன்றிக்கடன்மா… நீ நல்லவேளை அவனைப் பற்றி சொல்லிட்ட… இல்லேன்னா நானும் அஜாக்கிரதையா விட்ருருந்திருப்பேன்…. முதல்ல உன் கையைப் பிடிச்சிட்டு உன் பக்கத்துல உட்கார்திருந்தான்… நான் எப்படியோ பேசி சமாளித்து உன்னைத் தொடாம பார்த்துகிட்டேன். அப்புறம் நான் வந்ததும்… கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தான்…. நான் அடிக்கடி உன்னை செக் பண்ற மாதிரி வந்ததும் வெளிய போய் உட்கார்ந்துட்டான்… உதவி செய்றேன்ற பேர்ல இப்படி இருக்கானுங்க… பணத்திமிர் வேர” கடுப்பான குரலில் சொல்லி முடிக்க
ஆராதனா ஏதும் சொல்லவில்லை… அவளைப் பொறுத்தவரை…இந்தச் செவிலிப் பெண்ணைப் பயன்படுத்தி…. தான் மயக்கத்தில் இருக்கும் போது செழியனின் அத்தை மகன் என்ற உரிமையில் அதிகப்படியான உரிமையை தவிர்த்திருந்தாள்… அவ்வளவுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டவள்…
“தேங்க்ஸ்… நான் கெளம்புறேன்…. ரொம்ப நன்றி… உங்க உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்” அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே…. செழியனும் பேச்சுச் சத்தம் கேட்டு உள்ளே வந்தவன்…
”ஓகேவா…” அவள் நெற்றியில் தொட்டுப் பார்த்துக் கேட்க
“ஹ்ம்ம்… இப்போ ஓகே… நாம போகலாம்…” என்றபடி ஆராதனாவும் எழுந்து நடக்க… செழியனும்… ஆராதனாவோடு பேசியபடியே நடந்து போனான்
“இந்த சிஸ்டர்க்கு என்னைப் பார்த்தா எப்படித் தெரியுதுன்னு தெரியல ஆரா… என்னமோ உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்த வந்த ஆபத்வாந்தவன் மாதிரி முறைச்சிட்டே இருக்குது…. கடுப்பாகிருச்சு… “
“அதான் வெளில வந்து உட்கார்ந்துட்டீங்களா…” ஆராதனாவும் ஒன்றுமே தெரியாதவள் போல அவனுடன் பேசிக் கொண்டு வந்தாள்…
”ஏதாவது சாப்ட்டு போகலாம்…. சரியா”
“இல்ல வேண்டாம்” எனும் போதே
“இங்க பாரு… உன்கிட்ட யாரும் ஆப்ஷன் கேட்கல… வா” இழுத்துக் கொண்டு போனவன் அந்த மருத்துவமனையின் கேண்டினில் அவளை அமர வைத்திருந்தான்
“ரெண்டு தோசை.. ரெண்டு காஃபி…” அவனுக்கு அவளாகவே ஆர்டர் செய்தவன்…
“எனக்கு ஒரு தோசை போதும்… “ அவன் அவள் பதிலைக் கேட்கவே இல்லை…
“சாப்பிடு… இல்லனா நான் ஊட்டி விட்ருவேன்…” அடுத்த நிமிடம் ஆராதனா வேக வேகமாகச் சாப்பிட ஆரம்பித்தவள்
“ஒண்ணு மட்டும்தான் சாப்பிடுவேன்… சரியா”
“சரி… ஒரு தோசை மட்டும் நீயா சாப்பிடு… அடுத்ததை நான் ஊட்டி விட்றேன் பரவாயில்லையா” நாற்காலியில் சாவகாசமாக அமர்ந்து காஃபியைக் குடித்தபடி அவன் சொல்லி முடிக்கவில்லை அடுத்த நொடி ஆராதனா இரண்டு தோசையையும் சாப்பிட்டு முடித்தவள்… ஒரே மடக்கில் காஃபியையும் குடித்து முடிக்க…
“ஏய்…, காஃபிய மெதுவா குடிடி… “ சொன்ன போது அவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை…
அவனவள் அவனருகினில்…
அவன் வாழ்க்கையில் அவன் எதிர்பார்த்த தருணங்கள்… ஏங்கிய தருணங்கள்… மெல்ல மெல்ல நனவாகி வரும் தருணங்கள்
----
ஹாஸ்டலின் முன் வந்து ஆட்டோ நின்றது…
“நானும் வர்றேன்… வா”
“இல்ல வேண்டாம்…” செழியன் அவள் மறுத்துக் கூறிய வார்த்தைகளை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை
”வா” ஆராதனாவைக் கைப்பற்றி இழுத்துக் கொண்டு போனவன்… மீராவுக்குக் அழைக்க மறக்கவும் இல்லை…
“உங்க செல்வி அண்ணாவுக்கு எனக்கும் இதுதான் வித்தியாசம்… அவரால உன்கிட்ட உரிமையா பேச முடியாது… திட்ட முடியாது… நீ கேட்கிறதைத் தவிர்க்க முடி்யாது… நீ கார் ஓட்றேன்னு அவர்கிட்ட கேட்டா அவரால மறுக்க முடியாது… வேற வழி இல்லாம கொடுப்பாரு… ஆனால் எனக்கு… நீ தப்பு பண்ணினேன்னா அதை உரிமையோட திட்டி உன்னை மாத்தனும்னு நினைப்பேன்… இனிமேல் அந்த நரேனோட என்னைக் கம்பேர் பண்ணாத… புரிஞ்சதா… நான் வேற அவன் வேற… அவன் ஜஸ்ட் உன் அண்ணன் மனைவியோட அண்ணன்… ஆனால் நான் உன் உரிமைக்காரன்….”
“அவரோட நானும் ஒண்ணும் கம்பேர் பண்ணல… பண்ணவும் நினைக்க மாட்டேன்…. அவரெல்லாம் வேற லெவல்” மனதுக்குள் நினைத்துக் கொண்டபடி… ஆராதனா அமைதியா வர
“என்ன பேச்செல்லாம் காணோம்… “
“நீங்க அத்தைக்கு போன் பண்ணி சொன்னீங்களா…. நைட் வீட்ல இல்லேன்றது தெரியுமா…”
“இன்னும் சொல்லல… தேவையும் இல்ல”
முறைத்தாள் ஆராதனா
“இதையே நாங்க பண்ணினா… பொம்பளப் புள்ள… அது இதுன்னு டையலாக் வரும்… நைட் அந்த நேரத்துல அதுவும் உங்கள பார்க்க வந்ததுக்கே எங்க அப்பாவில இருந்து அண்ணன் வரைக்கு… இந்த ஹாஸ்டலையும் சேர்த்து திட்டுனீங்க… உங்களுக்கு அது அப்ளிக்கபிள் இல்லையா… “ ஆராதனா மனதில் இருந்ததைக் கேட்டு முடிக்க
“வாய் ஜாஸ்தி ஆகிருச்சுடி உனக்கு…. அதுவும் சென்னை வந்ததிலருந்து…”
“எப்போதும் எனக்கு வாய் ஜாஸ்திதான்… நீங்க இப்போதானே என்கிட்ட பேசுறீங்க…. அதை விடுங்க… சார்க்கு மட்டும் என்னவாம்… இன்னைக்கு மட்டும்.. 17 ’டி’ போருக்கீங்க… இந்த வாய் ஜாஸ்திக்கு என்ன பண்றதாம் “
செழியன் இப்போது…
“17 ’டி’ போட்டவன் தான்… ஒரு காஃபியும் வாங்கிக் கொடுத்திருக்கேன்… அதை விட்டுட்ட…” புன்னகையை உதட்டில் மறைத்தபடி… தீவிரமான குரலில் செய்தவனின் நக்கலில்… சட்டென்று நின்று ஆராதனா செழியனை பார்த்தாள்… இப்படியெல்லாம் செழியன் பேசுவானா…
”என்ன… பார்க்கிற… அதுவும் கண்சிமிட்டாம” இவன் கண்சிமிட்டிக் கேட்க… சட்டென்று சுதாரித்த ஆராதனா
“ஒண்ணும் இல்ல…” அமைதியாக ஆராதனா நடக்க..
“ஊருக்கு போகனுமா இன்னைக்கு…” செழியன் இப்போது தயங்கிக் கேட்க
“ஏன்” ஆராதனாவும் கேள்வியாக நிறுத்த
“இந்த நிலைமைல உன்னை அனுப்ப பயமாருக்கு ஆரா… நீ உன்னையப் பார்த்துக்க மாட்ட… உங்க வீட்ல சும்மாவே கண்டுக்க மாட்டாங்க… ஃபங்ஷன் வச்சுகிட்டு உன்னைப் பார்ப்பாங்களா… சுத்தம்… நீ ஊருக்கு போக வேண்டாமே… “
”ஹான் அப்புறம்… செல்வி என்னைக் கொன்னுருவா….”
“அதெல்லாம் எங்க வீட்ல என்னை நல்லா பார்த்துப்பாங்க… அதுல நீங்க குறை கண்டுபிடிச்சீங்க..”
“நீங்கதான் சின்னக் காயத்துக்கு இவ்ளோ பெரிய எஃபெக்ட் கொடுக்கிறீங்க… எங்க வீட்ல சொன்னாலும் உங்கள மாதிரியேதான் எஃபெக்ட் கொடுப்பாங்க… அதுனாலேயே சொல்ல மாட்டேன்….”
”ஏன்னு உனக்குத் தெரியாதா…” செழியன் கேட்க
“தெரியும் தெரியும்… அந்த சைக்கிள்ல விழுந்த காயத்தினாலதானே… ஹப்பா… எங்கம்மாவும் இப்போ வரை சொல்லுவாங்க… அவ்ளோ ஆபத்தான நிலைமைக்கு போயிட்டேனா என்ன… நான் பொழச்சது மறு பொழப்புனு சொல்வாங்க அம்மா..”
செழியன் அமைதியாக நடந்தான்…. அப்போது… ஆராதனாவின் அலைபேசியில் மேகலா அழைக்க… ஆராதனா அந்த செவிலிப்பெண்னை நினைத்தபடியே… தன் தாயிடம் பேச ஆரம்பிக்க… அதே நேரம் நரேனும் அவளுக்கு அடுத்த அழைப்பில் வந்திருக்க…
“என்னாச்சு தனா… ஆக்ஸ்டெண்டா… அந்த நர்ஸ் சொன்னுச்சு… எனக்கு ஒண்ணுமே ஓடல… நானும் அப்பாவும் கிளம்பிட்டோன்… நரேன் தம்பியும் உன்னைப் பார்க்கத்தான் வந்திட்டு இருக்கு…”
ஆராதனா அப்படியே… அந்த விடுதியின் மைதானத் தோட்டத்தில் அமர்ந்து விட… செழியனுக்கும் நிலைமை புரிய…
“சரி விடு… அந்த நர்ஸ் ஏதோ அதிகப்பிரசிங்கித் தனமா பண்ணிருச்சு…”
“செல்விண்ணா வந்துட்டுருக்காங்களாம்… ப்ளீஸ் நீங்க கெளம்புங்க…. இந்தக் காயத்துக்கு ஏதாவது காரணம் சொல்லிச் சமாளிச்சிப்பேன்… ஆனா உங்களப் பார்த்துட்டா அவ்வளவுதான்…. அடுத்து நான் சென்னைக்கே படிக்க வருவேனா அதுவே கேள்விக் குறியாகிரும்… நீங்க போங்க ப்ளீஸ்…” ஆராதனா அழுதே விட… செழியனும் தம் உறவு… உரிமை… நான் ஏன் போக வேண்டும் என அவளோடு விவாதம் செய்யவில்லை… மாறாக நிலைமையைப் புரிந்து கொண்டு மீராவிடம் அவளை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து சென்றவனுக்கு…
அவளை இந்த நிலைமையில் விட்டு விட்டு செல்கிறோம்… இனி ஒரு வாரம் அவளிடம் பேச முடியாது….. பார்க்க முடியாது… என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும்… இன்னொரு புறமோ.. அவன் கழுத்தில் அவள் கொடுத்த டாலர்…. அவனுக்கு சந்தோசத்தைக் கொடுத்திருக்க… காதல் காதல் மட்டுமே அவனிடம்… ஆராதனா சென்னை திரும்பி வரும் நாளுக்காகக் வழக்கம் போல தன் காத்திருப்பை ஆரம்பித்திருந்தான் செழியன்
---------
நாயகன்
/*கட்டுத் தறி இன்றி எனதுள்ளம்
உன்னை எண்ணிக் கொண்டு
அங்கும் இங்கும் கும்மிக்கொட்டுதே
சொல்ல மொழி இன்றி தமிழ் சொற்கள் என்னை
விட்டு விட்டு அந்தரத்தில் அம்மிக் குத்துதே
காதல் தெருவிலே எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல் கூட விலகுதே
அவள் நேரத்தில் வருவாளா
பார்க்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா
பால் போலே சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா
கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொல்வாளா*/
Thanks for sharing just a amazing thought. I think you should also be know that about our assignment writing services, At MyAssignmenthelp.Expert we offers top-quality assignment writing services designed to meet the unique needs of students across all academic levels. With a team of qualified experts in various fields, this platform ensures each assignment is thoroughly researched, well-structured, and 100% original.
From essays and research papers to case studies and projects, MyAssignmenthelp.Expert covers a wide range of subjects and formats, helping students achieve their academic goals. Plus, with timely delivery and affordable pricing, it’s easy to get the support you need without stress. Choose MyAssignmenthelp.Expert for reliable assignment writing services that deliver excellence every time.
Resource:
https://do-my-homework-7d668e.webflow.io/
Sis next epi podunga..
Next ud epo ithey mathiri sekeram ud thanga
Lovely update pravee
Ennena pandra hoom
Pinnala varuthapada vaipiruku
Thanks for your next epi.we are expected for this one. Very long epi. Nice going.
Sis ivlo villathanam heroin ku agathu pa... Iva act panrathellam chezianuku therinja paiyan ena avano?????
Fraud Aara.. pathi mayakathilum evlo villathanam pannuthu!
Nice sis