ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
தேங்க்ஸ் ஃபார் த கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ்
ஹேப்பி ரீடிங் ஃப்ரெண்ட்ஸ்...
நன்றி
பிரவீணா
----------------------------------------
அத்தியாயம் 24 :
நாயகி:
/* மன்னவன் பேரை சொல்லி… மல்லிகை சூடி கொண்டேன்…
மன்மதன் பாடல் ஒன்று… நெஞ்சுக்குள் பாடி கொண்டேன்…
சொல்ல தான் எண்ணியும்… இல்லயே பாஷைகள்…
என்னவோ ஆசைகள்… எண்ணத்தின் ஓசைகள்…
சின்ன சின்ன வண்ண குயில்…கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா…
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்…
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்…
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா… */
“ஆரா” தன் பெயர் சொல்லி அழைத்த குரல் கேட்ட திசையை நோக்கித் திரும்பினாள் ஆராதனா… கல்லூரியின் உணவகத்தில் தனது கூட்டத்தினரோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்… அப்போதுதான் அவள் பெயர் அழைக்கப்பட்டிருந்தது
“ஆரா உன்னத்தான் சீனியர் கூப்பிடறாரு” ஆராவின் மற்ற நண்பர்கள் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்த போதே
”வர்றேண்ணா…” வேகமாக இவர்களிடமிருந்து நழுவி அந்த சீனியர் மாணவனின் அருகில் சென்றிருந்தாள் ஆராதனா …
அவனும் இவளிடம் சிரித்துப் பேசியபடி… டெய்ரி மில்க் சாக்லேட்டை நீட்ட அவனிடமிருந்து அந்த சாக்லேட்டை வாங்கியவள்… மீண்டும் தன் குழாமோடு இணைந்தவள்
“இன்னைக்கு சீனு அண்ணனுக்கு பேர்த்டே…” தன் நண்பர்களிடம் சொல்ல
“அவருக்கு பிறந்த நாள்னா உனக்கு எதுக்குடி சாக்லேட்… என்ன நடக்குது… மீராக்காவோட் ஆளுதானே அவரு” ஊர்விஷா அவள் காதில் ரகசியமாகப் பேச
“ஆமா… நானும் மீராக்காவும் இன்னைக்கு நைட் ட்ரீட்க்கு போறோம்… சீனு அண்ணா ட்ரீட்… ட்ரீட் முடிச்சுட்டு அவங்க படத்துக்கு போறாங்க… என்னையும் கூப்பிட்டாங்க… நான் வரலேன்னு சொல்லிட்டேன்” ஆராதனா தன் கையில் இருந்த சாக்லேட் பாக்கெட்டை திறந்து அதில் இருந்து ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டபடி… மீதியை அனைவருக்கும் கொடுக்க ஆரம்பிக்க…
“காலேஜோட டான்… உனக்கு அண்ணனா… கலக்குற ஆராதனா” நண்பர் கூட்டமும் அவளைக் கிண்டல் செய்து கொண்டிருக்க…
அப்போது ரதி… ஆராதனாவின் கல்லூரி விடுதியில் முதல் நாள் அவளைச் சீண்டிய சீனியர் …
“ஆரா கொஞ்சம் தனியா வர்றியா… ஒரு நிமிசம் உன்னோட பேசனும்…” அந்தப் பெண் அழைக்க… ஆராதனாவும் எழுந்தாள்….
“சொல்லுங்க சீனியர்…” ஆராதனாவும் இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக அனைவரிடமும் பேச ஆரம்பித்திருந்தாள்…
முதலில் இருந்த மாதிரியெல்லாம் சீனியர் ஜூனியர் பாகுபாடு பெரிதாக இல்லை என்றே சொல்லலாம்… கல்லூரிக்கு வந்த முதல் வாரத்தோடு சீனியர் கெத்தெல்லாம் பறந்து போயிருக்க… ஆராதனாவோடு பெரும்பாலான சீனியர்கள் இணக்கமாகவே பழக ஆரம்பித்திருந்தனர்…
இதில் முதல் நாளில் விடுதியில் அவளை மிரட்டிய கூட்டமும் அடங்கும்… அந்தக் கூட்டத்தின் தலைவிதான் இன்று ஆராதனாவை அழைத்தது…
“சொல்லுங்க சீனியர்… என்கிட்ட ஏதோ சொல்லனும்னு நினைக்கிறீங்க… எப்போதும் போல நரேன் மேட்டர்னா… என்னைக் கிண்டலாதானே கூப்பிடுவீங்க…”
ரதி இப்போதும் தீவிர பாவத்தோடே முகத்தை வைத்திருந்தாள்…
“ஆரா… சீனு கூட எவ்ளோ நாளா பழக்கம்… அவனோடெல்லாம் உனக்கு எப்படி பழக்கம்” படபடவென ஆரம்பிக்க…
“சீனு அண்ணா மீராக்காவோட பெஸ்டிதானே… அப்படித்தான் பழக்கம்…” ஆராதனா சொன்ன போதே
“ஆரா… அவன் காலேஜ் ஸ்டூடண்ட்ற பேர்ல இருக்கிற ரவுடி… அவங்க அப்பா சென்னைல பெரிய தாதா தெரியுமா… உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்… மீராகூட பழகாத… அவ நல்லவ கிடையாது…”
ஆராதனா அமைதியாக இருக்க
“மீராவோட கேரக்டர் சரி இல்ல ஆரா… பாதி நாள் ஹாஸ்டல்லயே தங்க மாட்டா அவ… அவனோடதான் ஸ்டே பண்றா… நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுக்கோ… இன்னசெண்ட்டா இருக்காத” ஆராதனாவுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்த போதே ஆராதனா அவளைப் பேச விடாமல்
“எனக்கும் தெரியும்… அது அவங்க லைஃப் அவங்க இஷ்டம் இதுல நான் என்ன தலையிட… ஏன் இங்க இருக்கிற எல்லோரும் ஒழுங்கா என்ன… நீங்க எல்லாம் கரெக்டா பண்றதுன்னு நினைப்போ… தோ உங்க ஃப்ரெண்ட்… அவங்க யூஜி ல வேற ஒரு பையன்… இங்க வந்து வேற பையன்…. அவங்க உங்க ஆப்போசிட் கேங்க்… அதனால உங்களுக்கு பிடிக்கல… மீராக்கா என்கிட்ட சீனியர்ன்ற கெத்தக் காமிக்காமல் என்கிட்ட பழகினாங்க… எனக்குப் பிடிச்சிருந்தது… அதே போல… சீனு அண்ணாவை என்கிட்ட இண்ட்ரட்யூஸ் பண்ணும் போது என் ஹஸ்பெண்ட்னு தான் சொன்னாங்க… சோ எனக்கு ஒண்ணும் தப்பா தெரியல… என்கிட்ட பழகுறவங்க எனக்கு எந்தக் கெடுதலும் பண்ணாத வரை… அவங்க நல்லவங்களா இருந்தாலும்… கெட்டவங்களா இருந்தாலும் எனக்கு அவங்க ஃப்ரெண்ட்ஸ் தான்….”
அந்த ரதி ஆராதனாவை எரிச்சலாகப் பார்க்க
“சீனு அண்ணாவும் மீராக்காவும் என்னை அவங்க தங்கச்சி மாதிரி பார்த்துகிறாங்க… சோ அவங்க எனக்குத் துரோகம் பண்ண மாட்டாங்க…. அண்ட் அட்வைஸுக்கு நன்றி….” என்றபடி ஆராதனா அங்கிருந்து விலகி நடக்க… அறிவுரை சொல்ல வந்த சீனியர் மாணவி ரதியும் எனக்கென்ன வந்தது என்பது போலச் சென்றுவிட… ஊர்விஷா இதை எல்லாம் கவனித்தபடி இருந்தவள்… ஆராதனா அருகில் வந்தவுடன்
“என்ன ஆச்சு… அந்த ரதியோட பலமான டிஸ்கஷன் போனது” என்று கேட்க
“மீராக்கா கூட பழகக் கூடாதாம்… அவங்க சீனு அண்ணா கூட லிவ்விங் டூகெதர் ரிலேஷன்ஷிப்ல இருக்காங்களாம்.. எனக்கு அட்வைஸ் பண்ணினாங்க…”
“ஹ்ம்ம்… இது ஹாஸ்டல்… காலேஜுக்கே தெரிஞ்ச விசயம் தானே… ” ஊர்விஷாவும் அலட்சியமாகச் சொல்ல
“அவங்க கூட நான் பழகுறதுதான் இப்போ இவங்களுக்குப் பிரச்சனை ஊர்வி… என் மேல எவ்ளோ அக்கறை பாரு…” ஆராதனா நக்கலாகச் சொல்ல
“விடு நீ ஒரு பச்சமண்ணுனு இந்த உலகம் நம்புது… உங்க குடும்பம் நம்புதே அந்த மாதிரி… முக்கியமா தானைத் தலைவன் செழியன் நம்புராறே… இவங்கள்ளாம் நம்புறது பெரிய விஷயமா என்ன” சொல்லி ஊர்விஷா சிரிக்க…
ஆராதனா சிரித்தபடியே ஊர்விஷாவின் தோள்பட்டையில் அடிபோட
“பாவம் அந்த செழியன் அவர்தான் உன்னை ரொம்பவே நம்புறாரு ஆராதனா” இப்போது ஊர்விஷா கவலையுடன் ஆரம்பித்தவள்…
“என்னாச்சு… 48 நாள் விரதம் முடியலயா பாஸுக்கு…. இன்னும் போனைக் காணோம்… “ ஆராதனாவிடம் செழியனைப் பற்றி விசாரிக்க…
ஆராதனாவும் செழியனைப் பற்றி பேச ஆரம்பித்த போதே அவளின் அலைபேசியில் “அண்ணா” என்ற பெயரில் இருந்து அழைப்பு வந்திருக்க…
“ஷ்ஷ்ஷ்…. ஊர்வி… ஊர்வி… அண்ணா பேசுது… இடையில பேசாத” ஊர்விஷாவை எச்சரித்து விட்டு அலைபேசியை வேகமாக எடுத்தவள்..
“சொல்லுங்க அண்ணா… செல்வி எப்படி இருக்கா… என்ன இந்த நேரத்துல” படபடவென கேட்க
“தனா… ஏன் இப்படி படபடக்கிற… செல்விலாம் நல்லாத்தான் இருக்கா… ஊருக்கு வர்றதைப் பற்றி சொல்றதுக்காக போன் போட்டேன்… மதுரைல நம்ம ஃப்ரெண்ட் ட்ராவெல்ஸ்ல பேசிட்டேன்… உங்க ஹாஸ்டல் பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்பும் போர்டிங் பாயிண்டா போடச் சொல்லிட்டேன்… சோ நீ வேற எங்கயும் போக வேண்டாம்… அவன் பஸ் ஸ்டாப் பக்கம் வரும் போது உனக்கு கால் பண்ணச் சொல்லிருக்கேன்… அதுக்கபுறம் ஹாஸ்டல் விட்டு வந்தா போதும்…”
“சரிண்ணா… டிக்கெட்லாம் வேண்டாமா…”
“அதெல்லாம் வேண்டாம்… ஒரு சீட் எப்போதுமே உனக்காக…. நீ ஊருக்கு வர்றதா இருந்தா போன் மட்டும் பண்ணிச் சொல்லிரு… அவ்ளோதான்…” கார்த்திக் சொல்ல…
“ஹ்ம்ம்… ” என்ற போதே… செல்வியின் கைக்கு போன் மாறி இருக்க… தோழியர் இருவரும் பேசிக் கலாய்த்து முடித்த போது…
“அண்ணாக்கு ஏதும் தெரியாது… நீதான் கூடப் போய் எடுத்துக் கொடுக்கனும் தனா…” செல்வி சொன்னவளாக
“நீ கண்டிப்பா வந்துருவ தானே… லீவ் எடுக்கனும் அதான் யோசிச்சேன்”
“நான் இல்லாம நம்ம வீட்ல ஃபங்ஷனா… வீட்டுக்கு வர்றதுக்கு என்னடா காரணம் கிடைக்கும்னு தேடிட்டு இருக்கேன்… உனக்கு ஏதோ அஞ்சு மாசம்னு விசேசம்னு சொன்ன உடனேயே இங்க ஊர்விஷாவை படுத்தி எடுத்துட்டு இருக்கேன்… எப்போடா ஊருக்கு போவோம்னு” ஆராதானா உற்சாகமாகத் துள்ளளுடன் பேசியவள்
“நானும் உங்க அண்ணாவும் நாளைக்கு கடைக்கு போனதும்…. உனக்கு கால் பண்றேன்… உனக்கு பிடிச்ச டிசைனே எடுத்துறலாம் சரியா… சரி வச்சுறவா… க்ளாஸ்க்கு டைம் ஆகிருச்சு” என்று அலைபேசியை வைத்தவள் ஊர்விஷாவிடம் திரும்பி…
“நீயும் என் கூட வந்திருக்கலாம் ஊர்வி… கிராமமே பார்த்தது இல்ல… நீ எப்போ போறியோ அப்போ உன் கூட வர்றேன்னு சொல்லிட்டு… இப்போ எங்க அம்மா வர்றாங்க வரலைனு சொல்ற…” ஊர்விஷாவிடம் ஆதங்கமாகச் சொல்ல… ஊர்விஷாவும் இப்போது
“என்ன பண்றது ஆரா… அம்மா வர்றாங்களே… அம்மாவைப் பார்த்து ஒன் இயர் ஆகிருச்சு… இப்போ விட்டா… அடுத்து ஆறு மாசம் இல்ல… நெக்ஸ்ட் இயர் தான்…” ஊர்விஷா சொல்ல
“சரி விடு… நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம்” ஆராதனா அவளைச் சமாதானமாக்க…
“நெக்ஸ்ட் டைம் மட்டுமல்ல… எப்போ நீ ஊருக்கு போனாலும் வர்ற ட்ரை பண்றேன்… சோறு போட மாட்டியா என்ன…” நக்கலாக ஊர்விஷா கேட்க
“ஊர்விக்கு இல்லாததா… செல்வியும் உன்னை பார்க்கனும்னு ஆர்வமா இருக்கா… நாம எல்லோரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்குறோம்… முடிஞ்சா உனக்கு ஒரு ஆளையும் செட் பண்ணி எங்க ஊரோடேயே செட்டில் பண்ணிருவோம் சரியா…” என்ற ஆராதனா… பின்… ஊர்விஷாவின் முறைப்பில்
“சும்மாடி… உன்ன மாதிரி சிட்டி கேர்ள் எல்லாம் எங்க ஊருக்கு செட் ஆகாது… எங்க ஊர்ல இருந்து போனவங்களே செட் ஆகல… “ என்றவளின் குரலில் கடுப்பும் அதே நேரம் ஏதோ ஒரு ஏமாற்றமும் சேர்ந்திருக்க… நொடியில் தன்னை மாற்றிக் கொண்ட ஆராதனா…
“ஊர்வி… உன் ஃபோனைக் கொடு” வாங்கியவள்… அடுத்து அதில் அழைத்தது செழியனைத்தான்
“ஆரா…” அலுவலகத்தில் இருந்தான் செழியன்…
அவள் குரலைக் கேட்ட சந்தோஷத்தில் உற்சாகமாக ஆரம்பித்தவன்…. தொடர்ந்தான்… ஆராதனாவைப் பேசவிடாமலேயே பேசினான்
“நாளையோடதான் 48 நாள் முடியுது… மறந்துட்டு பேசுறியா” ஆராதனாவே அழைத்த காரணத்தால் சந்தோசத்தில் துள்ளிக் குதிக்காத குறைதான் செழியனுக்கு…
இந்த 47 நாட்களும் அவள் சொன்னாள் என்பதற்காகவே அவளின் குட்மார்னிங்.. குட்நைட் மெஜேஜ்களில் மட்டுமே தன்னையும் தன் மனதையும் கட்டுப்படுத்தி இருந்தான்…
செழியனுக்கே ஆச்சரியம் இந்த அளவுக்கு தான் இருக்கிறோம் என்பதை நினைத்து… அதே நேரம் அவன் காதல் அவனை என்னவெல்லாம் பண்ண வைக்கும் என்பதும் தெரியும் அவனுக்கு… காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து தன்னையே சுயப்பரிட்சை செய்து கொண்டிருந்தவனுக்கு இதுவும் ஒரு பரிட்சையே… என்ன இந்தப் பரிட்சையை ஆராதனா வைத்திருந்தாள்
இத்தனை நாள் அவள் பேசாமல் இருந்தாள்… இப்போது அவள் பேசியும் அவளுக்காக… அவளை விட்டு தள்ளி இருப்பது… காட்டாற்று வெள்ளமாக ஆரம்பித்த அவனது காதலில் எப்போது புரிதல் ஏற்பட்டதோ… அதிலிருந்து அவன் காதல் காட்டாற்று வெள்ளம் அல்ல… அவன் உணர்வுகளை கட்டுப்படுத்தி வைக்கும் அவன் காதல் அவனுக்கு எப்போதும் பெருமைதான்… இன்றும் அந்தப் பெருமை அவனுக்குள் பொங்கியதுதான்…
“ஆரா… என்ன சத்தத்தையே காணோம்… ”
”தனா!…”
அவனையும் மீறி அவளை எப்போதும் அழைக்கும் பெயரில் அனைவரும் அழைக்கும் பெயரில் அழைத்தான் செழியன்…
“ஹ்ம்ம்ம்… கேட்டுட்டுத்தான் இருக்கேன்” என்று மட்டும் சொன்னாள் ஆராதனா
”தனான்ன்னு கூப்பிட்டாத்தான் கேட்குமா…” செழியனின் குரலில் கொஞ்சம் கடுமை இருந்ததோ என்னவோ…
“அப்படிலாம் இல்ல… இங்க ’ஆரா’ன்னு தான் எல்லோரும் கூப்பிடறாங்க… பழகிட்டேன் அந்தப் பேருக்கு… சோ நீங்க கூப்பிடறது வித்தியாசமா தெரியல…” ஆராதான் சொல்லி முடித்தபோது செழியனுக்குத்தான் மனம் கனத்திருந்தது…
“ஆரா… அவன் காதலியாக அவளை தனக்குள் அறிமுகம் செய்து விதைத்து வைத்த பெயர்… ஆனால் அவன் கூப்பிடும் போது அவளுக்கு வித்தியாசமாக இல்லை…. மனதில் சுருக்கென்று தைத்ததுதான்… ஆனால் அவளுக்கு எப்படி தெரியும்… இவன் அவளை ஆராவாக உருமாற்றி தனக்குள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றான் என்பது… அவள் எதார்த்தமாக சொல்கிறாள்… தனக்குள் சமாதானப்படுத்திக் கொண்டான்…
ஆனால் அங்கு ஆராதனாவோ… அதை வேண்டுமென்றே செய்திருந்தாள் என்பது அவனுக்கு தெரியுமா என்ன…
கல்லூரியில்… விடுதியில் அனைவரிடமும் தன்னை ’ஆரா’ வாகவே அறிமுகம் செய்து கொண்டாள் ஆராதனா… செழியன் ‘ஆரா’ என்று அழைக்கும் போது அது தனித்தன்மையாக தெரியக் கூடாது.. கூட்டத்தோடு கூட்டமாக அவன் அழைப்பதும் இருக்க வேண்டும்… அதற்காகவே இங்கு ‘ஆரா’ என்ற பெயரில் அனைவரையும் அவளை அழைக்க வைத்திருந்தாள்…
“ஹலோ இருக்கீங்களா… இப்போ நீங்க அமைதி ஆகிட்டீங்க… விரதம் இருக்கிறதுனால பேச முடியலையா… கஷ்டமா இருக்கா… என்னாலதானே எல்லாம்” ஆராதனா குரலில் குழைவைக் கொண்டு வந்திருந்தாள்… அவனுக்கு அது அக்கறையாகப் போய் சேர்ந்திருக்க
“சேச்சே… இதெல்லாம் ஒரு கஷ்டமா… என்ன விசயம்னா… எனக்காக நானே இருக்கிறதுதான் கடுப்பா இருக்கு….” என்றவன்…
“சரி அதெல்லாம் விடு… இதைக் கேட்கிறதுக்குத்தான் கால் பண்ணியா… இப்போ காலேஜ்ல இருப்பியே… போன் பேசுற…”
“லஞ்ச் ப்ரேக்…” சலிப்பாகச் சொன்னபடியே
“பேசனும்னு தோணுச்சு… இந்த வாரம் ஊருக்குப் போறேன்… உங்கள…. அத்தைய இந்த வீக் எண்ட்ல பாக்கனும்னு நெனச்சேன்… அத்தையக் கூட போன வாரம் பார்த்தேன்… நான் தானே உங்கள பார்க்கக் கூடாதுன்னு சொன்னேன்… 48 நாள் முடிஞ்சதும் பார்க்கலாம்னு சொன்னேன்” ஆராதனா வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லி்யபடியே…
“நாளைக்கு நான் ஷாப்பிங் போறேன்… செல்விக்கு தீர்த்தம் கொடுக்கிறாங்களாம்… அந்த ஃபங்சனுக்குத்தான் நான் போறேன்… நான் கண்டிப்பா வரனுமாம்… அதுக்குத்தான் பர்சேஸ் பண்ணப் போறேன்… நீங்களும் வர்றீங்களா.. கோல்ட் வாங்கனும்… அத்தையத்தான் கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன்… ஆனால் அவங்களுக்கு இங்க நகை வாங்கினா பிடிக்காது… எப்போதும் நம்ம ஊர்ல செய்யச் சொல்லித்தானே வாங்கிட்டு போவாங்க… நீங்க வர்றீங்களா… அப்புறம் புடவையும் வாங்கனும்… நாத்தனார் ஸ்தானத்துல இருக்கேன்ல… எங்க வீட்டு மஹாலெட்சுமி செல்விக்கு பார்த்து பார்த்து பண்ணனும்… ஊர்க்கண்ணே அண்ணன் மேலயும் செல்வி மேலயும் தான்… அதுலயும் செல்வி கன்சீவ் ஆனதுல இருந்து இன்னும் அதிகம்….“
செழியன் அவளின் தொடர்ச்சியான பேச்சை ரசித்தபடி இருந்தவனுக்கு… அவளின் பேச்சு வெள்ளந்தியாகவே பட… அதில் லயித்தபடி இருந்தவன்…
“நாளைக்கு நான் வரனும் அவ்ளோதானே… நீ சொல்லி நான் வராமல் போவேனா… நான் ஹாஸ்டலுக்கு வரவா… நானே பிக் அப் பண்ணிக்கிறேன்…” அவன் சொல்லி முடிக்கவில்லை…
”ஐயோ…. ஹாஸ்டலுக்கா… நேரா நான் சொல்ற நகைக்கடைக்கு வந்திருங்க…. ஊர்வியோட நானும் அங்க வர்றேன்” கடையின் பெயரை மட்டும் சொன்னவள்… ஏரியாவை வேண்டுமென்றே சொல்லாமல் விட்டாள்… செழியனுக்கும் ஏனோ கேட்கத் தோன்றவில்லை… அலைபேசி இருக்க கவலையேன் என்று நினைத்துவிட்டான்
“விரதம் முடிச்சுட்டு… மதியமா போகலாம்… சரியா… “ ஆராதனா சொல்ல
“சரிங்க மேடம்… அப்புறம் இன்னும் ஏதாவது அட்வைஸ்…” செழியன் பவ்யமாகக் கேட்க
“இப்போதைக்கு இவ்ளோதான்… ’அத்த புள்ள’ சொல்ற பேச்சை எல்லாம் கேட்குதே… அதுனால அட்வைஸ் தேவைப்படல… அவ்ளோதான்… நாளைக்குப் பார்க்கலாம்..” போனை வைக்க… ஊர்விஷா இப்போது
“ஏய் என்னடி… நான் நாளைக்கு வர மாட்டேனே… அம்மாவைப் பார்க்கப் போறேன்னு சொன்னேனே… நெக்ஸ்ட் வீக் வரைக்கும் அம்மா கூட ஸ்பெண்ட் பண்ணப் போறேன்னு சொன்னேனே… மறந்துட்டியா” ஆராதனாவிடம் கேட்டபடியே
“உங்க செல்வி அண்ணன் நரேன் கூடத்தானே கடைக்குப் போறேன்னு சொன்ன… இப்போ செழியன் அண்ணாவையும் வரச் சொல்ற… அவங்களுக்கு நீ செழியன் அண்ணா கூட பேசுறேன்னு தெரிஞ்சா உங்க அண்ணாகிட்ட சொல்லிற மாட்டாங்களா… மறந்துட்டு செழியண்ணாவை வரச் சொல்லிட்டியா…”
“இல்லையே நான் எதையும் மறக்கலையே… மறக்கவும் மாட்டேனே… ஆனால் எனக்காக ஒரு ஹெல்ப் பண்றியா… நான் சொல்ற வரைக்கும் இந்த செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வை அது போதும்… “ என்றவள்…
“செய்வதானே… நீ செய்யனும்.. செய்வ… எனக்குத் தெரியும்… “
ஊர்விஷா அவளை முறைக்க
”முறைக்காத… வா… வா கிளாஸ்க்கு டைம் ஆகிருச்சு…” தன் வகுப்பறையை நோக்கி தன் தோழியை இழுத்துக் கொண்டு நடந்தாள் ஆராதனா…
---
அடுத்த நாள்… காலை பத்து மணி அளவில்… சென்னையின் மிகப்பெரிய பிரமாண்ட நகைக்கடையில் நரேனும் ஆராதனாவும் அமர்ந்திருந்தனர்…
“நீயே செலெக்ட் பண்ணு தனா… வளையல்… ஆரம்.. அப்புறம்… இரு அம்மா லிஸ்ட் அனுப்பி இருக்காங்க… அது எல்லாம் எடுக்கனும்…” நரேன் அலைபேசியை எடுத்தான்… தாமரை ஒரு பெரிய லிஸ்ட்டே அனுப்பியிருந்தார் மகனுக்கு
“ஹ்ம்ம்… சரி… ஆனால் இதெல்லாம் இப்போ எதுக்கு… எங்க வீட்டுக்கு தெரிஞ்சா… முக்கியமா அண்ணனுக்கு தெரிஞ்சா திட்டுமே…”
“நீ எடு… பார்த்துக்கலாம்… என் மச்சானை நான் சமாளிச்சுக்கிறேன்…” நரேன் விடாப்படியாகச் சொல்லி விட… வேறு வழி இன்றி… ஆராதனாவும் நகைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாள்…
அவர்கள் வீட்டில் சொன்ன பொருட்களையும் வாங்கிக் கொண்டாள்…. இவள் அவளுக்காக வாங்கும் போது நரேன் அங்கிருந்த விற்பனையாளரிடம் இவளுக்கு கேட்காதது போல் ஏதோ பேசிக் கொண்டிருக்க… ஆராதனாவும் இதுதான் சமயம் என்று ஒரு டாலரை வாங்கி… நரேனுக்குத் தெரியாமல் அதை வாங்கி தன் கைப்பைக்குள் வைத்தும் கொண்டாள்…
ஒருவழியாக இப்போது நரேன் அவளருகில் வந்தவனாக
“அவ்ளோதானே தனா… உனக்கானது எல்லாம் பில் போடச் சொல்லலாமா…” என்றபடி நரேன் கேட்க ஆராதனாவும் தலை ஆட்டியவளாக
“நான் வாங்கினதுக்கெல்லாம் தனியா பில் போட்றலாம்… நாங்க எங்க வீட்டு மருமகளுக்கு செய்றது… புகுந்த வீட்ல இருந்து…” அவசர அவசரமாக ஆராதனா சொன்னாள்… இவள் சொல்லாவிட்டால் நரேனும் இவள் வாங்கியதற்கும் சேர்த்து பணம் கட்டி விடுவான் என்று தோணியதால்…
நரேனும் தலை ஆட்டியவனாக… அங்கிருந்த விற்பனைப் பெண்ணிடம்
“இதெல்லாம் தனியா பில் பண்ணிருங்க… இவங்க பேர்ல” என்றவன்
”அப்புறம் இந்த செட்… இதே மாதிரி இன்னொரு செட்… ரெண்டு செட்டுக்கும் சேர்த்து பில் பண்ணுங்க…. மேனேஜர்கிட்ட பேசிட்டேன்” என்று முடிக்க…
ஆராதனா விழித்தாள் இப்போது…
“செல்விண்ணா… எதுக்கு!!! இன்னொரு செட் எதுக்கு…” ஆராதனா புரியாமல் கேட்க
“அம்மா தான் சொன்னாங்க… செல்விக்கு என்ன எடுக்கிறியோ… அது அப்படியே ரெண்டா எடுன்னு சொன்னாங்க…”
அப்போதுதான் ஆராதனாவுக்கு மண்டையில் உரைத்தது…
“எனக்கு எப்போ நகை எடுக்கிறாங்களோ அப்போ எங்க கமலிக்காக்கும் அதே மாதிரி எடுப்பாங்க… அதேபோல கமலிக்காக்க்கு செய்யும் போது எனக்கும் எடுப்பாங்க” செல்வியிடம் சொல்லியிருக்கின்றாள் ஆராதனா… செல்வி இதை அவள் அன்னையிடம் சொல்லியிருப்பாள் போல…
முகம் வாடியது… ஆராதனாவுக்கு…
கமலியை நினைத்தா?… கமலியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஏனென்று தெரியாத ஒரு பாரம் நெஞ்சை அமிழ்த்தியது… அடுத்த நிமிடமே தன்னை மீட்டுக் கொண்டவள்… நரேனிடம் பேச ஆரம்பித்தாள்
“இதெல்லாம் வேண்டாம் செல்விண்ணா… நான் தாமரை அத்தைகிட்ட சொல்லிக்கிறேன்… ”
நரேன் மறுக்க… உடனடியாக செல்வியின் அன்னைக்கு அழைத்தவள்…
“அத்தை ப்ளீஸ்… இது என்ன… இப்போ இதெல்லாம் வேண்டாம்… வேணும்னா என் மேரேஜுக்கு பண்ணுங்க… அப்போ நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்…”
செல்வியின் தாய் தாமரையோ
“தனா… செல்விக்கு நாங்க முதன் முதலா சபையில வச்சு செய்யப் போற ஃபங்ஷன்… மேரேஜ்தான் அப்படி ஆகிருச்சி… ரிஷப்ஷன்ல பண்ண முடியல… ப்ளீஸ்டா… செல்வி எப்படியோ அப்படித்தான் நீயும் எங்களுக்கு… முதன் முதலா உங்க வீட்டுக்கு வந்த பின்னால செல்விக்கு கொடுக்கிற கிஃப்ட்… உனக்கும் கொடுக்கனும்னு எங்க ஆசைடா… உங்க திலகா அத்தையோ… இல்ல… பூர்ணிமாவோ கொடுத்தா வேண்டாம்னு சொல்வியா…” செல்வியின் தாய் ஆராதனாவை மடக்கி இருக்க
“நீங்க ஒரு லெக்சரர்னு ப்ரூஃப் பண்றீங்க அத்தை… என்னமா பேசுறீங்க… செல்விக்கு இவ்ளோ அறிவு எங்க இருந்து வந்திருக்கும்னு இப்போ புரியுது… சரி… வாங்கிக்கிறேன்… இதைக் கொடுத்துட்டு… என் கல்யாணத்துக்கு அம்போன்னு விட்ற மாட்டீங்களே…” ஆராதனா நக்கலாகக் கேட்க
நரேன் இப்போது…
“அம்மா… செல்விக்கு மேரேஜ்க்கு சேர்த்து வைச்சிருந்ததைப் போல… நம்ம தனாக்கும் இப்பொதே சேர்க்க ஆரம்பிச்சிருங்க… பட்ஜெட் பெருசா இருக்கும் போல” சிரித்தபடியே சொல்ல
“ஹான்… அதே… அதே… “ செல்வியின் தாயிடம் பேச ஆரம்பித்தவள்…. அதன் பிறகு நரேன் வாங்கிய நகைகளுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை…
“நீங்க சரியான ஆளு செல்விண்ணா… என்னையே செலெக்ட் பண்ண வச்சு… எனக்கே வாங்கிக் கொடுத்திட்டீங்க… எங்க வீட்ல என்னைதான் திட்டப் போறாங்க… அப்படி என்னைத் திட்டினாங்கன்னா… நேரா உங்ககிட்ட திருப்பி விட்ருவேன்.. வந்து வாங்கிங்க… “
“எங்க ’தனா’வுக்காக இந்த திட்டக் கூட வாங்கிக்க மாட்டேனா… நான் பார்த்துக்கிறேன் போதுமா…”
இருவருமாக சிரித்தபடி வெளியே வந்திருந்தார்கள்…
“அடுத்து எங்க ’தனா’… இங்கயே லேட் ஆகிருச்சு… லஞ்ச் சாப்பிட்டுட்டு… போகலாமா..”
“ஹ்ம்ம்… அடுத்து புடவைக்கடைதான்… ஆனால் சாப்பிட்டுப் போனாதான் தெம்பா சுத்த முடியும்…. அப்புறம் புடவைக்கடையிலும் செல்வி பட்ஜெட் தனாவுக்கும் அப்ளிக்கபிளா…” ஆராதனா நரேனுடன் அளவளாகிக் கொண்டிருக்க… அங்கு ஒரு ஜீவனோ.. அவளுக்குத் தொடர்ந்து அலைபேசியில் தொடர்பு கொண்டே இருந்தான்…
நகைக்கடைபெயர் என்று மட்டுமே தெரிந்திருக்க… எந்த ஏரியா என்று அவளும் சொல்லவில்லை… இவனும் கேட்க வில்லை… சென்னையில் மட்டும் அந்த நகைக்கடையின் கிளைகள் ஏராளம்…
வேறு வழியில்லை… ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று பார்ப்போம் என்று ஒவ்வொரு ஏரியாவுக்கும் போய்ப் பார்த்தபடி இருந்தவன்… ஒரு கட்டத்தில் தேடித் தேடிக் களைத்து சோர்ந்து அமர்ந்து விட்டான் தன் காரிலேயே…
ஆராதனா மீது கோபம் என்பதைக் காட்டிலும்…
“தன்னை ஆசையோடு வரச் சொன்னாளே… நகை எடுக்கத் தெரியாது என்றாளே… இந்த ஊர்விஷாவினால் தான் ஏதோ பிரச்சனை… அவள் போன் அணைத்து வைக்கப்பட்டிருக்கின்றதே “ தனக்குள் முடிவு செய்து கொண்டான்
“இந்த சூழ்நிலையில் கூட தன்னவள் அவள் அலைபேசியில் அழைக்க நினைக்கவேயில்லையே…”
ஆனாலும் அதேநேரம் இவன் அவள் அலைபேசி எண்ணுக்கு அழைக்க முயற்சிக்க… இவன் எண் அவள் அலைபேசியில் தடை செய்யப்பட்டிருக்க… வேறு வழி இன்றி… வேறொரு நபரின் அலைபேசியில் இருந்து தொடர்பு கொள்ள முயற்சிக்க…. அப்போதும் அவள் எடுக்க வில்லை…
“நம்பர்ல இருந்து வந்தா அண்ணன் எடுக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கு… சோ நீங்க ட்ரை பண்ணாலும் எடுக்க மாட்டேன்.. ஊர்வி நம்பர்க்கு மட்டும் கால் பண்ணுங்க “ அவள் சொல்லியிருந்தாள் அன்று பேசும்போது…
ஆனால் ஆராதனா வேண்டுமென்றே அன்று வெளி நம்பரில் இருந்து வந்த அத்தனை அழைப்புகளையும் எடுக்காமலேயே இருந்தாள்… அவளுக்குத் தெரியும் செழியன் ஏதாவது ஒரு எண்ணில் இருந்து அழைப்பான் என்று முன்கூட்டியே அனுமானித்தவளாக … தன் திட்டத்தை செயலாற்றிக் கொண்டிருந்தாள்…
“ச்சேய்…” கடுப்பாக வந்தது செழியனுக்கு…. ஆசை ஆசையாக அவளைப் பார்க்க வந்தான்… அவளுக்குப் பிடித்த நகை ஏதாவது எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தான்… அத்தனையும் வீணாகிப் போயிருக்க…
அதற்கு மேல் அவனுக்கு பொறுமை இல்லை… அவள் தங்கியிருக்கும் விடுதிக்கே போக முடிவு செய்தான்…
“எப்படியும் ஈவ்னிங் ரூம்க்கு வந்துதானே ஆக வேண்டும்…”
ஆராதனா என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளட்டும்… விடுதிக்கே செல்வோம்.. முடிவு செய்தவன்… ஆராதனாவைப் பார்க்க அவள் விடுதிக்குச் செல்ல முடிவு செய்திருக்க… அதே நேரம் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு… யோசனையுடனும் சந்தேகத்துடனும் செழியன் எடுத்தான் தான்… ஆராதனவாக இருக்குமோ என்ற அவனின் ஊகித்தது சரியாகத்தான் இருந்தது…
“ஹலோ… நான் தனா பேசுறேன்…” வேகவேகமாக படபடப்புடன் ஆராதனா பேச… இவனுக்கும் எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது… அவள் படபடப்பில்….
“ஏய்… ஆராம்மா… எங்க இருக்க… ஏன் இப்படி படபடன்னு பேசுற…” செழியனுக்கு சற்று முன் இருந்த எரிச்சல்… கோபம் எல்லாம் போய்… ஆராதனா ஏதாவது ஆபத்தில் மாட்டிக் கொண்டாளோ என்ற பதட்டத்தில் பேச…
“இல்ல எனக்கு ஒண்ணும் இல்ல… நான் இங்க ஒருத்தவங்ககிட்ட அவங்க செல் வாங்கிப் பேசுறேன்… அதான் இவ்ளோ வேகம்.. படபடப்பு… அதுமட்டுமில்ல.. செல்வி அண்ணனும் இங்க என் கூடத்தான் இருக்காங்க… அவங்களுக்குத் தெரியாம பேசுறேன்ல… அந்த படபடப்பு” ஆராதனா முடிக்க
”நரேன் இருந்தா என்ன… ஆரா… என்னைக் கடுப்பேத்தாத… “ செழியனின் குரலில் கடுமை வந்திருக்க
“ப்ளீஸ்… ப்ளீஸ்… என்னைப் புரிஞ்சுக்கோங்க… முதல்ல என்னைப் பேசவிடுங்க. எனக்கு டைம் இல்ல… ஊர்விஷா அவங்க அம்மா வந்துட்டாங்கன்னு திடீர்னு கிளம்பிப் போயிட்டா… அவ போனை பேக்லயே விட்டுட்டுப் போயிட்டாளாம்… அதுனால உங்களைக் கான்டாக்ட் பண்ண முடியல… யாரோ முன்னப் பின்னத் தெரியாதவங்ககிட்ட ஃபோன் வாங்கிப் பேசிட்டு இருக்கேன்…. ப்ளீஸ்… நான் சொல்றதை மட்டும் கேளுங்களேன்…” சுடுதண்ணீர் காலில் கொட்டியது போல படபடத்து செழியன் பேசுவதையும் நிறுத்தியவள்,
”நான் இங்க ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தாலும்… நான் உங்களதான் நெனச்சுட்டே சுத்திட்டு இருக்கேன் தெரியுமா… தெரியும்!!!… நீங்க எனக்காக காத்துட்டு இருப்பீங்கன்னு தெரியும்... என் மேல கோபமா இருக்கீங்கன்னும் தெரியும்… அதான் நானே பேசிட்டேனே… எனக்காக கேட்க மாட்டீங்களா” குரலை சட்டென்று மாற்றி இருந்தாள் ஆராதனா இப்போது
“சொல்லு” என்று மட்டுமே சொன்ன செழியன் இப்போது அமைதி ஆகி இருக்க…
“நானே எதிர்பார்க்கலை… செல்வி கால் பண்ணி அவங்க அண்ணா கூடப் போன்னு சொல்லிட்டா… எங்க செல்வி சொல்லி நான் மறுத்துப் பேசவே மாட்டேன்…. எனக்கும் வேற வழி இல்ல… நரேன் அத்தானுக்கும் அவங்க வீட்ல இருந்து ஹெவி லிஸ்ட் அனுப்பி இருக்காங்க… ஷாப்பிங் முடியவே நைட் ஆகிரும் போல… “ ஆராதனா வேண்டுமென்றே தெரியாதவள் பேச்சுவாக்கில் நரேனை அத்தான் என்று சொல்லி வைக்க… இங்கு செழியனுக்கு தலை முதல் கால் வரை திடீரென்று சூடான இரத்தம் பாய்ந்தது போல எரிய ஆரம்பித்திருந்தது…. கோபத்தை அடக்க முடியாமல் செழியனும் பேச ஆரம்பித்த போதே அவளது அழைப்பு நின்று போயிருக்க…
செழியனுக்குள் பலவித போராட்டம்… இரத்தம் கொதிப்பது போன்ற கோபம்… யார் மேல்… எதற்கு ஏனென்று தெரியாத கோபம் வந்திருந்தது…
“யாரோ ஒரு நரேன்… இன்று இவனை விட அதிக உரிமையுடன்… அவனுக்காகப் பயந்து இவனுடன் பேச பயமாம்… எனக்கும் என் ஆராதனாவுக்கும் இடையில் இவனெல்லாம் ஒரு ஆளா…. “ கார் ஸ்டியரிங்கில் ஓங்கி குத்திக் கொண்டவன் ரியர் வியு மிரரில் தன்னைப் பார்க்க… அவன் முகமே அவனைப் பார்த்து சிரித்தது போல் இருந்தது…
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சும்மாவா சொன்னாங்க… பெரிய இவன் மாதிரி அப்போ பூஜாவுக்கும் நரேனுக்கும் இடையில் நின்னேல்ல… அதான் இப்போ அனுபவிக்கிற… பண்ண பாவத்துக்கு அனுபவிக்கனும்ல…அனுபவி… சரி அதெல்லாம் விடு இப்போ என்ன?… உன் ஆராதனாவுக்கு நீதான் முக்கியம்னு சொல்லிட்டாள்ள… அவ உன்னையே நெனச்சுட்டு இருக்கேன்னு சொன்னாளே… அதைக் கேட்டு உனக்கு ஃபீல் இல்ல… அதை விட்டுட்டு… எவனையோ அத்தான்னு சொன்ன வார்த்தைய பிடிச்சுட்டு உனக்கு இரத்தம் கொதிக்குதா… ” அவனின் மனசாட்சி அவனையே குற்றம் சாட்டி அவனைப் பார்த்து கேள்வி கேட்க
செழியன் இதழ் மெல்ல புன்னகையில் விரிந்தது…
“ஆரா.. நீ ஜஸ்ட் இந்த 4 மணி நேரம் தான் என்னை நெனச்சுட்டு இருக்க … ஆனா நான் வருசக் கணக்குல… உன்னை!... உன்னை மட்டும்தான் மனசுல வச்சுட்டு சுத்திட்டு இருக்கேன் ஆரா… அது உனக்குத் தெரியுமா… என்னோட காதல் ஏக்கத்தை எப்படி உன்கிட்ட கொட்டுவேன்…” முன் உச்சி நெற்றிக் கேசத்தை கைகளால் ஒதுக்கியபடி… சீட்டில் சாய்ந்து கண் மூடியவன்… அவனையும் அறியாமல் ப்ளேயரில் தன் ப்ளே லிஸ்ட்டை ஓட விட்டு அதில் லயித்திருந்தான்…
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
கண்பாரயோ.. வந்து சேராயோ.. கண்ணம்மா.....
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்...
ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினே.........ன்...
அந்த இசையின் இதம் அவனுக்குத் தேவைப்பட்டது அவனிருந்த நிலைக்கு… அந்த இசையின் இதம் அவனை மீட்டெடுத்திருக்க மெல்ல மெல்ல இயல்புக்கு வந்திருந்தான்… அடுத்து என்ன செய்வதென்றும் யோசிக்க ஆரம்பித்திருந்தான்…
”நாளை ஊருக்குப் போகப் போவதாகச் சொன்னாளே… ஊர்விஷாவும் அவளோடு இல்லை… இனி அந்த அலைபேசியை நம்பியும் பிரயோஜனம் இல்லை… காலையில் நம்மாளு என்ன திட்னாலும்… நீயே சரணம்னு அவ ஹாஸ்டலுக்கு போயிற வேண்டியதுதான்… வேற வழி இல்ல…”
“உன்னையே நினச்சுட்டு இருக்கேனு சொன்னாளே…. இதுவே இன்னைக்கு போதும் செழியன்… நாளைக்கு காலை வரைக்கும் தாங்கும்டா செழியன்“ நரேனை எல்லாம் செழியன் தனக்குப் போட்டியாகவே நினைக்கவில்லை…
என்ன ஆராதனாவுக்கு தன்னை விட அவன் என்னமோ நெருங்கிய உறவினனாக காட்டிக் கொள்வதில் கடுப்பு… அதே போல் ஆராதனா பயப்படுகிறாள்… தங்கள் இரு குடும்பத்தையும் மீண்டும் சேர்க்க நினைக்கும் அவளது திட்டம் எல்லாம் வீணாகி விடுமோ என்ற பயமே அவளுக்கு… எல்லாம் புரிந்தும் ஏனோ மனம் சட்டென்று கோபமாகி விடுகிறது…
ஓரளவு சமாதானம் அடைந்தான் தான் ஆனாலும் அலுவலகத்துக்கும் செல்ல பிடிக்கவில்லை… அத்தனை முக்கியமான சந்திப்புகள்… அழைப்புகள்… அத்தனையும் ரத்து செய்து விட்டு தன்னவள் சொன்னாள் என்பதற்காகவே ஓடி வந்திருந்தான்… கடைசியில்…. பெருமூச்சு விட்டவனுக்கு ஏனோ ஓய்வு தேவைப்பட… வீட்டை நோக்கி காரைச் செலுத்தியவன் வீட்டினுள் நுழைய… வீட்டில் அவனது அன்னையோ சந்தோசமாக அவனை வரவேற்றராக… பால்பாயசம் செய்து அவனிடம் கொடுக்க…
“என்னம்மா… ஒரே சந்தோசமா இருக்கீங்க… 48 நாள் விரதம் நான் முடிச்சதுக்கா… “
“ஹான் ஹான் அதுக்குத் தான்” திலகா மழுப்பலாகச் சொல்ல…
“ஆனால் இன்னும் ஏதே ஸ்வீட்ஸ் வாடைலாம் வருதே… யாருக்காவது கொடுத்து விடப் போறீங்களா“ செழியன் நக்கலாக தன் அன்னையைப் பார்த்தான்…
திலகா அதிர்ச்சியுடன் மகனைப் பார்த்து பின் சமாளிக்க ஆரம்பித்தார்… ஆராதனா சில மணி நேரங்களுக்கு முன் செல்விக்கு ஐந்தாம் மாத விழா… தீர்த்தம் கொடுப்பது… அதனால் ஊருக்கு போவது பற்றியெல்லாம்… அலைபேசியில் அழைத்துச் சொல்லி இருக்க…
திலகா அப்போதே… செல்விக்கு கொடுத்து அனுப்புவதற்காக… பட்சணம் பலகாரம் செய்ய ஆரம்பித்திருந்தார்… நாளைக்கு ஆராதனா திலகாவைச் வந்து சந்தித்து வாங்கிச் செல்வதாக சொல்லியிருக்க… செல்விக்குப் பிடித்தவற்றை ஆராதனாவிடமே கேட்டு இருந்தார்… அதில் பாதியையும் செய்து முடித்திருந்தார்… இரவு இன்னும் கொஞ்சம் செய்ய வேண்டும்… இதில் இவன் இப்படி கேட்கிறானே… திணறியவராக
”அ… அடுத்த வாரம்… கமலியப் பார்க்கப் போகலாம்னு உங்க அப்பா சொன்னாரு… அதான்…” தடுமாறிச் சொல்ல…
“ஹ்ம்ம்… என்கிட்ட சொல்லவே இல்ல…”
“திடீர்னு… கமலியப் பார்ககனும்னு தோணுச்சு… அப்பாகிட்ட சொன்னேன் அப்பாவும் சரின்னு சொல்லிட்டாரு…”
செழியன் இப்போது
“முதல்ல அப்பா கமலியப் பார்க்கப் போகலாம்னு சொன்னார்னு சொன்னீங்க… அடுத்த ரெண்டு செகண்ட்ல உங்களுக்குப் பார்க்கத் தோணுச்சுனு சொல்றீங்க… கமலியப் பார்க்கப் போகனும்னு உங்களுக்குத் தோணுச்சா… அப்பாக்குத் தோணுச்சா… “
“செழியா… இப்போ உனக்கு என்ன பிரச்சனை… ஸ்வீட் சாப்பிட்டேல்ல… கிளம்பு… “ திலகா படபடக்க
“அம்மா.. இந்த பட்சணம்லாம் ஃப்ளைட்ல பறக்கப் போகுதா இல்ல… பஸ்ல தெற்கு நோக்கிப் போகப் போகுதா… எதுவா இருந்தாலும் சரியா பார்சல் பண்ணி வைங்க….” என்றவனைப் பார்த்து திலகா முறைக்க…
“அம்மாச்சி ஞாபகம் வந்திருச்சுமா… முன்னலாம் அம்மாச்சி அடிக்கடி பஸ்ல கொடுத்து அனுப்புவாங்கள்ள… மாமா கோபத்துல கூட நியாயம் இருக்கு… ஆனா அம்மாச்சி தாத்தா கூட நம்மள வெறுத்துட்டாங்கள்ளம்மா… அவங்களுக்கு அவங்க பையனோட பையன்… பொண்ணு மட்டும் தான் பேரன் பேத்திங்க… நான்லாம் யாரோ… பொண்ணு மேல கோபம்… பேத்தி மேல கோபம்… ஆனால் நான் என்ன பண்ணினேன்… உங்க அம்மா அப்பா சீக்கிரமா பேரனேன்னு வருவாங்க… அப்போ இருக்கு அவங்களுக்கு” செழியன் கிண்டலாகச் சொல்லி முடித்தாலும்… வருத்தமும் கோபமும் இருக்க
திலகா இப்போது…
”அதெல்லாம் பேரன் மேல பாசம் இல்லாமலா… டெய்லி உன்னைப் பற்றித்தான் பேசுவாங்களாம்..” தன்னையறிமால் சொல்ல
“என்னது டெய்லி பேசுவாங்களா… இதெல்லாம் யார் சொன்னது உங்ககிட்ட…” எல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே தன் தாயிடம் செழியன் வம்பிழுக்க… திலகா உடனே…
“என்னங்க… கூப்பிட்டீங்களா… தோ வர்றேன்…” அங்கிருந்து நழுவப் பார்க்க… செழியன் இப்போது…
“அம்மா… உங்க காதல் தெய்வீகக் காதல் தான்… எனக்கு அப்பா குரல் கேட்கல… உங்களுக்கு மட்டும் கேட்குதா” செழியனும் தன் அன்னையை விடாமல் கிண்டல் செய்தபடி… மகிழ்ச்சியுடன் தன் அறைக்கு மாடி ஏற… ஏனோ ஒரு நிம்மதி…
தன் அன்னையின் முகத்தில் இப்போதெல்லாம் கவலை இல்லை… வார்த்தைகளில் புலம்பல் இல்லை… எதையோ தொலைத்தவர் போல் பரிதவித்த பார்வை இல்லை… பழைய அன்னையைப் பார்ப்பது போல இருந்தது… இன்னுமே சில கவலைகள் இருந்தாலும்… முதலில் போல் ஏதோ இருக்கிறோம்… சமைக்கிறோம்… சாப்பிடுகிறோம்…. மக்கள்… கணவனோடு பேசுகிறோம்… என்று இல்லை… ஓரளவு மாற்றம் தெரிய… அதற்கெல்லாம் காரணம் அவனவள் என்பது இன்னும் ஒருபடி அதிக சந்தோசம்…
இரவு உணவு முடித்து அதே சந்தோசத்தோடு படுக்கையில் விழுந்தவன்… அலைபேசியை எடுத்துப்பார்க்க… சந்தோசத்தில் அதிர்ந்தான்…
’ஆராதனா’ விடமிருந்து குறுஞ்செய்தி…
ஆராதனா இப்போது வேறொரு எண்ணில் இருந்து அவனுக்கு செய்தி அனுப்பி இருக்க… அடுத்து இவனை அந்த எண்ணுக்கு அழைக்கவும் சொல்லி இருக்க… தாமதிக்கவெல்லாம் இல்லை உடனடியாக செழியனும் அழைத்திருக்க
“நான் ஆராவோட கஸின்… அவ மெசேஜ் பண்ணியிருந்தா இந்த நம்பர்க்கு கால் பண்ணச் சொல்லி…” தயங்கித் தயங்கி செழியன் பேச ஆரம்பித்திருந்தான் அந்த எண்ணின் உரிமையாளரான மீராவிடம்… அவனுக்கு இப்படி அடுத்த பெண்களின் அலைபேசிக்கு அழைப்பதெல்லாம் பிடிக்கவில்லைதான்… ஆனால் வேறு வழி இல்லையே… ஆராதனா சொல்லி விட்டாளே… ஏனோ அவள் சொல்லிவிட்டால் அதை மறுத்து அடுத்து செயலாற்றவே முடியவில்லை… இதுதான் காதல் படுத்தும் பாடா… பிடிக்காவிட்டாலும் அதையும் சந்தோசமாகவே அனுபவித்தான் செழியன்
“ஹான்… செழியன் அண்ணாவா… நான் ஆராவோட சீனியர்… மீரா… எனக்கும் சீனுவுக்கும் ஆரா ரொம்ப ரொம்ப செல்லம்… எங்க டியர் அவ… ஆராவோட அத்தை பையன் தானே நீங்க… இவ்ளோ தயங்கித் தயங்கி பேசனுமா நீங்க… இருங்க ஆராகிட்ட கொடுக்கிறேன்…” என்றபடி ஆராதனாவின் அறையை நோக்கி நடக்க
“மீரா… ஆரா ஓகே… அது யாருடா இடையுல சீனு… அவனுக்கு இவ செல்லமா…” செழியன் தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க..
“ஹலோ… “ ஆராதனாவின் குரல் அவனை அலைபேசியில் கவனம் வைக்க வைத்தது
“சொல்லு ஆரா… இது என்ன அடுத்த நம்பரா… இன்னும் என்ன மீரா… வீரான்னு லிஸ்ட் போயிட்டே இருக்குமா… இதுக்கு உன் நம்பர்ல என் நம்பரை ப்ளாக் லிஸ்ட்ல இருந்து எடுத்து விட்றலாம்ல” சலிப்பாகச் சொன்னவன்… அதே நேரம் நகைச்சுவையான தொணியில் பேச
“ஊர்வி நம்பர்ல பேச முடியலேன்னா… மீராக்கா நம்பர்க்கு ட்ரை பண்ணுங்க… ஆனா மீராக்கா சீனு அண்ணாக்கு டிஸ்டபர்ன்ஸ் இல்லாம… செகண்ட் ஆப்ஷனா வச்சுக்கங்க…” என்றபோது…. சீனு யாரென செழியனாலும் புரிந்து கொள்ள முடிய… அதே நேரம்… இத்துணுன்ட்டா இருந்தது…. இப்போ லவ்வர்ஸ்க்குலாம் தூது போகுதா… அவன் என்ணிக் கொண்டிருக்கும் போதே
“நான் உங்களப் பார்க்கனும்… இப்போவே… உடனே… ஹாஸ்டலுக்கு வர்றீங்களா… அங்க பக்கத்துல ஒரு பார்பிக்யூ இருக்கு… அங்க மீட் பண்ணலாமா…”
“என்னது”
படுத்திருந்தவன் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்து மணியைப் பார்க்க… அது 11 எனக் காட்ட…
“ஏய்… மணி என்ன… 11 மணி… இப்போ போய் வரச்சொல்ற… என்ன திமிரா… இதெல்லாம் உனக்கு யார் சொல்லிக் கொடுக்கிறது… இதுதான் சென்னை வந்து நீ கத்துகிட்டதா… எவ்ளோ தைரியம் உனக்கு… என்னை வேற வான்னு சொல்லி போன் பண்ற… உன்னை” அவனைக் காதலித்துக் கொண்டிருப்பவன் என்பது போய்… தன் மாமா மகள் என்ற உறவின் உரிமை வந்திருக்க… அதில் அவளை திட்ட ஆரம்பித்திருக்க
“ஹலோ… ஹலோ… இப்போ எதுக்கு திட்டறீங்க… என் அத்தை பையனத்தானே நான் கூப்பிடறேன்… என் அத்தை பையன நான் எப்போ வேணும்னாலும் எங்க வேணும்னாலும் கூப்பிடுவேன்… எனக்கென்ன பயம்.. இதுல என்ன தைரியம் வேணும்… இப்போ வருவீங்களா மாட்டீங்களா… ஆப்ஷன்லாம் இல்ல… வரனும்… வைக்கவா… வந்துட்டு மீராக்கா நம்பர்க்கு கால் பண்ணுங்க…” வைத்தும் விட…
“அடேங்கப்பா… காலையில இந்த தைரியம் எங்க போச்சாம்… இந்த வீராப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…” அவன் வாய் சொன்னாலும்… அவனது கால்கள் அனிச்சையாக கட்டிலை விட்டு இறங்கியிருந்தது… கைகளோ உடைகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்திருந்தது…. முடிவில்… கார்ச் சாவியை விரல்களில் சுற்றியபடி… அறையை விட்டு வெளியேறி…… தன்னவளின் விடுதிக்கும் காரைச் செலுத்த ஆரம்பித்திருந்தது
அவளைப் பார்த்துவிட்டு ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம் என்றுதான் அவன் சென்றது… ஆனால் அன்றிரவு முழுக்க அவளோடு தங்கப் போகிறான் என்பது அவன் அறியாதது…
Kanmani yen novel la varla .. epo varum .. any plans ??
Very nicr. En ippadi srxhiyana alsya vidara ars. Eppo svanofa feelind puriyum. Seekiram ethipsrkkirom
Lovely update paravee
Aaara nee pandrathu sari ila
Sezhiyan ku aara msttumtan triudu enga poi mudiumo
Aara enna nenachi pandralo athu nadakuma dout tan
Sis Yevlo days ku aparam ud kuduthalum eagerness kammiyagama readers ah padikavaikirathu than unga plus... But athukaga engala deal ah vidama konjam seekaram ud pota nangalum sandhoshapaduvomla?