ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
தேங்க்ஸ் ஃபார் த கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ்
ஹேப்பி ரீடிங் ஃப்ரெண்ட்ஸ்...
நன்றி
பிரவீணா
---------------------------------------- அத்தியாயம் 23:
”என்னால இன்னுமே நம்பவே முடியல தனா…” திலகா ஆச்சரியமும் சந்தோசமும் கலந்த கலவையாக தன் மருமகளிடம் சொல்லிக் கொண்டிருக்க.. ஆராதனவோ தன் அத்தை கொடுத்த பிரசாத்தில் மூழ்கியிருந்தாள்…
“ஆவ்வ்வ்வ்… செம்ம டேஸ்ட்த்த…இந்த மாதிரி ஒரு புளியோதரை டேஸ்ட் எங்கேயுமே பார்த்தது இல்லத்த… நல்லாருக்குல… முதல்ல எல்லாம்… இதுக்காகவே இந்த கோவிலுக்கு வருவேன் தெரியுமா “ அத்தையிடம் அதுதான் முக்கியமென பேச… திலகா மீண்டும் அமைதி ஆனார்… அத்தையின் அமைதியில் ஆராதனாவே பேச ஆரம்பித்தாள்…
“அத்தை… இனி நீங்க கவலையே படாதீங்க… நம்ம வீட்டுக்கு மறுபடியும் உங்கள கூட்டிட்டு போறதுதான் என்னோட இலட்சியமே… அங்க அம்மா அப்பா… தாத்தா அப்பத்தா பாட்டி எல்லோருக்கும் உங்கள நினச்சுதான் கவலையே… ஆனால் வாயத் திறந்து ஒத்துக்க மாட்டேங்கிறாங்க… சீக்கிரம் எல்லாம் மாறும்… மாத்திக் காட்டுவோம் சரியா…”
“என் மருமகன நினச்சுதானே என் கவலையே தனா… கார்த்தி முகத்துல நான் எப்படி முழிக்கப் போறேன்னு…” திலகாவின் கண்கள் கலங்கி இருந்தது இப்போது
“அதெல்லாம் அண்ணே ஒண்ணும் நினைக்காது … யார் மேலயோ இருக்கிற கோபத்தை உங்ககிட்ட காட்டிட்டு இருக்காங்க…அவ்ளோதான்… அதுக்கு வெள்ள மனசு அத்தை”
”சரி… அதெல்லாம் விடுங்க… நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குதானே…. இப்போதைக்கு மாமாகிட்ட மட்டுமில்ல வீட்ல வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்… நான் உங்கள வந்து பார்த்ததை…. இனி பார்க்கப் போறத… கொஞ்ச நாள் ஆகட்டும் அத்தை….”
”சரிமா” திலகா தலை ஆட்ட
“மாத்திரைலா ஒழுங்கா எடுத்துக்கறீங்களா… டெய்லி… அம்மாவும் அப்பத்தாவும் மூணு வேளையும் உங்கள கெஞ்சிட்டு இருப்பாங்க…” ஆராதனா கவலையாகத் தன் அத்தையைப் பார்க்க
“இப்போ சுகர் பிபிக்கு மட்டும் இல்ல…. கூட எதெதுக்கோ எடுத்துட்டு இருக்கேன்… மனநிலை பாதிக்கபடலைனு சொல்லல… அவ்ளோதான்…. “ கண் கலங்கியவரின் கைகளைப் பற்றியவளாக…
“எதுக்கும் கவலைப்படாதீங்க அத்தை… ” கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கொண்டிருக்கும் போதே… கோவிலின் நிர்வாகி அங்கு வந்தவாராக
“திலகாம்மா…. இந்தாங்க லிஸ்ட்… டெய்லி இன்னைலருந்து 48 நாள்… விரதம் “ என்ற போதே திலகா வேக வேகமாக அவரைப் பேசவிடாமல் தடுத்தபடி…
“நான் போன்ல பேசறேன்….” என்று மருமகளுக்குத் தெரியாமல் தடுக்க நினைக்க… ஆராதனா கண்டுபிடிக்காமல் இருப்பாளா என்ன…
“என்னது…விரதமா… அத்தை நீங்களா…” கடுப்பான ஆராதனா அத்தையைக் கோபமாகப் பார்த்தபடி அந்த நிர்வாகியிடம்
“சார் அவங்க விரதம்லாம் இருக்கக் கூடாது… அவங்க உடம்பு அதுக்கு ஒத்துழைக்காது… “ என்றவள் திலகாவிடம் திரும்பி
“அத்தை இதெல்லாம் என்ன… அதுவும் 48 நாள்னு சொல்றாங்க….”
திலகா இப்போது…
“இல்ல தனா… செழியனுக்கு நேரம் கால சரியில்லையாம்… “ காரணத்தை மேலோட்டமாகச் சொல்லி தான் விரதம் இருக்கக் போகும் விசயத்தைச் சொல்ல
“அப்போ அவரை விரதம் இருக்கச் சொல்லுங்க… அதை விட்டுட்டு நீங்க இருக்கப் போறீங்களா…” ஆராதனா படபடத்திருக்க
”அவன் இருந்தா நான் ஏன் இருக்கப் போறேன்… அவனக் கோவிலுக்கு கூட்டிட்டு வந்ததே பெரிய விசயம்…” திலகாவின் குரலில் வருத்தமும் கவலையும் மட்டுமே மிஞ்சி இருக்க
”ப்ச்ச்…நீங்க விரதம் இருக்கப் போறேன்னு சொன்னா அவர் தானாவே விரதம் இருக்கப் போறாரு…. ஏன் அத்தை நீங்க உங்கள வருத்திக்கறீங்க” ஆராதனா திலகாவிடம் கேட்க
“அவனுக்கு மட்டும் விரதம் அதுன்னு தெரிஞ்ச்சா அவ்ளோதான் மொத்தமும் கெட்ரும்…. வீட்டுக்குத் தெரியாமல் தான் இந்த விரதம் தனா” திலகா சொல்லி முடிக்க
”ஆக மொத்தம் அத்தையும் மருமகளும் ஒரே மாதிரிதான்” சொன்னது வேறு யாராக இருக்கும் ஊர்விஷாவே…
ஆராதனா அவளைப் பார்த்த பார்வையில்
“தோணுச்சு சொன்னேன்… அவ்ளோதான்” ஊர்விஷா சமாளித்திருந்தாள்…
“வீட்டுக்கு நல்லது நடக்கனும்னா…இப்படி பண்றது தப்பில்ல…” ஊர்விஷாவின் வார்த்தைகளுக்கு பதில் சொன்ன திலகா, தன் மருமகளைப் பார்த்தவராக
”அண்ணி சொல்லியிருந்தா அண்ணன் கேட்ருப்பாரு… அண்ணிக்கு என் மேல கோபம்… அதான் அம்போன்னு என்னை விட்டுட்டாங்க…” திலகா விரதப் பேச்சை மாற்ற நினைத்தார்
“அத்தை பேச்சை மாத்தாதீங்க… விரதம் நீங்க இருக்கிறதா இருந்தா இந்த பூஜையே வேண்டாம்…. “ஆராதனா சொல்ல… பதறினார் திலகா…
“தனா அப்படிலாம் சொல்லாத…. எனக்கு… நம்ம குடும்பத்துக்கு இந்த பூஜை முக்கியம்ம்மா…”
தன் அத்தையின் பதற்றத்தில்… ஆராதனாவும் இப்போது யோசித்தாள்…
“சரி குடும்பத்துல யாராவது இருந்தா போதும் தானே… அப்போ நான் இருக்கிறேன்…”
“தனா…. செழியனுக்காக பண்றது….” தயங்கினார் திலகா…
”உங்களுக்காக பண்றேன்… அவ்ளோதான் எனக்குத் தெரியும்…” சொன்னபடியே அந்த நிர்வாகியிடம் திரும்பி்… அதற்கான தகவல்களை விசாரிக்க.,..
“நீ பண்ண முடியாதுமா… 48 நாள்… ஒரு மண்டலம்…”
“அத்தை அப்போ செழியன் அத்தானே பண்ணட்டும்… இல்லையா விட்ருங்க…” ஆராதனா இலகுவாக இப்போது சொன்னபடியே
“அட அத்தை பதட்டபடாதீங்க… செழியன் அத்தான் கிட்ட இன்னொரு தடவை பேசிப் பாருங்க.,.,.. சம்மதிப்பார்னு தோணுது… அவர் விரதம்லாம் இருப்பார்ல… செவ்வாய்க்கிழமை செவ்வாய்கிழமை சாப்பிடாம இருப்பார்த்தை….”
திலகா இப்போது சலிப்பாக…
“அவனும் அவன் விரதமும்… எதுக்கு இருக்கான்னே தெரியாது…. அதெல்லாம் சும்மாம்மா”
“நீங்க கடவுள நம்புறீங்க தானே… செழியன் அத்தானுக்கு ஒண்ணும் கெட்டது நடக்காது… பாருங்க அவரே அவருக்காக விரதம் இருக்கு சம்மதிப்பாரு… நாளைக்கே நீங்க என்கிட்ட வந்து சொல்வீங்க பாருங்க… செழியன் அத்தான் விரதம் இருக்கார்னு “ ஆராதனா நம்பிக்கையுடன் சொல்ல…
“என் தங்கம் நீ வந்ததுல இருந்து… உன் கிட்ட பேசுனதுலருந்து… எனக்கு எல்லா கவலையும் போன மாதிரி இருக்கு…” தன் மருமகளின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி… அவளுக்கு முத்தம் கொடுத்தவர்… ஊர்விஷாவைத் தன்னருகே அழைத்தவராக
“இந்தப் பொண்ணுக்கு பிறந்த நாள்னு சொன்னதானே தனா….” சற்றும் யோசிக்காமல் தன் வளையல் ஒன்றைக் கழட்ட
“ஐயோ ஆண்ட்டி… இதெல்லாம் வேண்டாம்…” ஊர்விஷா பதற
“பெரியவங்க போட்ருக்கத கொடுத்தா வாங்கிக்கனும்… இப்படில்லாம் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது…. எங்க பாட்டிதான் அப்போப்ப கொடுப்பாங்க… அப்பாத்தாலாம் புதுசுதான் கொடுப்பாங்க…. இது லக்கியான விசயம் ஊர்வி… வாங்கிக்க…” ஆராதனா எடுத்துச் சொல்ல… ஊர்வி தயங்கி கைகளை நீட்ட
இன்னொரு வளையலையும் கழட்ட ஆரம்பித்தார்…
“ஆண்ட்டி… ஆண்ட்டி ஒண்ணு போதும் ஆண்ட்டி…” பதறியிருந்தாள் ஊர்வி
“ரெண்டு கைக்கும் ஜோடியா கொடுக்கனும்…” திலகா யோசிக்காமல் ஊர்விஷாவுக்குப் போட்டு விட… ஊர்விஷாவும் இப்போது சந்தோசமாக வாங்கிக் கொண்டவளாக… அவரிடம் ஆசிர்வாதமும் வாங்கிக் கொண்டாள்…
“சரிங்கத்தை…. நானும் கிளம்புறேன்… காலெஜுக்கு லேட் ஆகிரும்… ஏற்கனவே இன்னைக்கு 2 சப்ஜெக்ட் கட்… “ எழுந்தவள்….
“என்னோட நம்பர் தெரியும் தானே… நானே கால் பண்றேன்… கவலைப்படாம போங்க… “ திலகாவை ஆட்டோவில் ஏற்றி விட்டு… தன் தோழியுடன் தங்கள் அறைக்கும் வந்து சேர்ந்திருந்தாள் ஆராதனா…
----
கோவிலுக்கு போய்விட்டு வந்ததில் இருந்து ஊர்விஷா ஏனோ அமைதியாகவே இருந்தாள்… ஆராதனாவிடம் பேசவே இல்லை…
“ஏய் என்னாச்சு… பேசிட்டே இருப்ப… “ ஒரு கட்டத்தில் ஆராதனாவே ஊர்விஷாவின் மௌனம் பொறுக்காமல் கேட்டு விட
“உன் மேல கோபமா இருக்கேன்னு அர்த்தம்” ஊர்விஷா கடுப்பாகப் பேச
“ஏன்… உனக்கு நான் என்ன பண்ணேன்” ஆராதனா அலட்சியமாகக் கேட்டபடியே
“உன் கோபம் எதுனாலேன்னு எனக்குத் தெரியும்… ”
“இங்க பாரும்… எனக்கு என் அத்தை பிடிக்கும்… என் அத்தை வேணும்… எனக்கு என் குடும்பத்துக்கு”
ஊர்விஷா ஏதோ பேசப் போக….
“அந்த செழியனப் பிடிக்காது… ஆனால் என்ன பண்றது… வேற வழி இல்ல… பேச வேண்டிய சூழ்நிலை…”
“ஆரா… உனக்கு உன் அத்தைய குடும்பத்தோட சேர்க்கிறதுக்கு ஈஸியான வழி நீயும் செழியனும் மேரேஜ் பண்றதுதான்… அவருக்கும் உன் மேல பாசம் இருக்குனு பார்த்த உடனே தெரியுதே… ஒரு வேளை”
ஊர்விஷா ஆராதனாவுக்கு எடுத்துச் சொல்ல முயற்சிக்க… ஆராதனாவுக்கு தெரியாத விசயம் என்றால் தானே ஆராதனா புரிய முயற்சிப்பாள்…
“தெரியும் ஊர்வி… எனக்கும் அந்த செழியனுக்கும் ஒரே எண்ணம்தான்… எங்க குடும்பம் சேரனும்னு….” ஆராதனா சொன்னபடியே
“என்ன ஒரே ஒரு வித்தியாசம்…. அவருக்கு எல்லோரும் சேரனும்… எனக்கு எங்க அத்தை மட்டும் எங்க கூட சேரனும்… செழியனும்… கமலியும் எங்க குடும்பத்துக்கு வேண்டாம்…” ஆராதனா உறுதியாகச் சொன்னவளாக
“அப்புறம் அந்த செழியன் லவ்வெல்லாம் பண்ணல… அவனுக்கு இருக்கிற ஒரே ஆப்ஷன் இப்போதைக்கு நான் மட்டும் தான்… அதாவது எனக்கும் அவருக்குமான மேரேஜ்… அதான்… அதுமட்டுமில்ல… இங்க சென்னைக்கு வரலேன்னா… படிக்கலேன்னா… அதோட முக்கியமா இந்த ஃபிசிக்கல் அப்பியரன்ஸ் இல்லேன்னா… என்னைலாம் திரும்பிக் கூட பார்த்திருந்துக்க மாட்டான்…. “
“என்னடி சொல்ற… அவரப் பார்த்தா அப்படிலாம் தோணலடி….”
“ஹ்ம்ம்…. என்ன தெரியும் அவனப் பற்றி உனக்கு…. சரி விடு… “ என்று கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள்…
“நான் அவனுக்கு மாமா பொண்ணுன்றதை விட… அவனோட இமேஜ்க்கு இந்த அப்பியரன்ஸ் மேட்ச் ஆகுது… மேரேஜ் பண்ணா செட் ஆகும்னு தோணியிருக்கும்… லவ் பண்ணலாம்னு முடிவெடுத்துருக்கான்….”
“எது எப்படிடோ…என்னவோ.... அவரும் உன்னை மாதிரியே யோசிச்சிருக்கார் தானே…”
“என்னை மாதிரியே இல்ல… அப்புறம் அது லவ்வே இல்ல…மேட்ச் ஃபிக்ஸிங் மாதிரி… ”
“ஆனால் அவனை உண்மையா லவ் பண்ண வைக்கிறதுதான் என்னோட ப்ளானே… எங்க குடும்பத்துக்காக என்னை லவ் பண்ண்லாம்னு நினைக்கிறான்ல… அதுக்கும் மேல என்னை அவன் லவ் பண்ணனும்… “
புரியாமல் ஊர்விஷா பார்க்க
“அவன் என்னை எனக்காக லவ் பண்ணனும்… பண்ணுவான் … அவன் வயசு அப்படி… விழாமா இருக்க மாட்டான்… அவன் விழனும்… எழுந்துக்கவே முடியாதபடி விழுவானா… அது தெரியல“ ஆராதனா தன்னைக் கண்னாடியில் பார்த்தபடியே சொல்லி முடிக்க… அவள் வார்த்தைகளில் இருந்தது கர்வமா… தி்மிரா… பழி உணர்ச்சியா…
”உன்கிட்ட வந்து உன்னை ப்ரப்போஸ் பண்ணினா… என்ன சொல்லுவ… பதில் சொல்லித்தானே ஆகனும்… அப்போ வேண்டாம்னு நீ சொன்னால்… உங்க அத்தை ஃபீல் பண்ண மாட்டாங்களா… மறுபடியும் உங்க குடும்பத்துக்குள்ள சண்டை வராதா” ஊர்விஷா அடுத்தடுத்து கேள்விகளை அடுக்க
ஆராதனா இதழ் ஓரம் புன்னகையை நிறுத்தியவள்…
“அவன் லவ் கடைசி வரை அவன் வாய்ல இருந்து வராது… சாகுற வரை அவனோட லவ் அவனோட மட்டுமே… என்னைத் தவிர வேற யாருக்குமே தெரியப் போறதில்ல… ”
”என் அண்ணன் மாதிரிலாம் அவன் காதலுக்காக உயிரைலாம் விடப் போறதில்ல… கஷ்டப்படப் படவும் மாட்டான்… ஆனா என் அண்ணன் பட்ட அவமானத்துல… வலில ஒரு பெர்சண்ட் அவன் கண்ல பார்க்கனும்… லவ் ஃபெயிலியர்னு அவன் ஃபீல் பண்ணலாம் மாட்டான்… ஆனால் இந்தச் சின்னப் பொண்ணுகிட்ட ஏமாந்துட்டோம்ன்றதுதான் பெரிய அவமானமா இருக்கும்… அதை மட்டும் கொடுத்திட்டேன்னா போதும்… அவ்ளோதான்…. காதலை வச்சு பெருசா அவனைலாம் பழி வாங்க முடியாது ஊர்விஷா… என் அண்ணா மாதிரி காதல்லாம் அவன் உயிர் இல்லை…. ஜஸ்ட் ஒரு ஃபீல் …. அடுத்து என்னன்னு போயிட்டே இருப்பான்…” என்றபடியே… கண்ணாடியில் இருந்து தன்னைப் பார்த்த பார்வையை மாற்றி… தன் தோழியைப் பார்த்தவள்…
“என்ன மேடம் செழியனுக்காக இவ்ளோ ஃபீல் பண்றீங்க…. அதுவும் ப்ரேக் அப்லாம் ஜஸ்ட் லைக் தேட்னு சொல்ற பொண்ணு நீங்க… நீங்கள்ளாம் யாரு சென்னைப் பொண்ணுங்க… அந்த செழியனும் இந்த சென்னைதான்… சோ உங்க ஊர்க்காரர் ஜாலியா கடந்துட்டு அடுத்த பொண்ண நோக்கிப் போயிருவாரு… நான் தான் இங்க ரிஸ்க் எடுக்கிறது… என் லைஃப் தான்… ஏற்கனவே ரிஸ்க் எடுத்துதான் பல வேளை பண்ணியிருக்கேன்…” ஆராதனா சாதரணமாகச் சொல்ல…
“ஒரு வேளை… செழியன் அண்ணாவை நீ உண்மையிலேயே விரும்ப ஆரம்பிச்சிட்டேன்னா… அப்போ கூட பழிவாங்க நினைப்பியா…”
ஊர்விஷா அடுத்த நொடி…. ஆராதனா
“இந்த ஜென்மம் மட்டுமில்ல… ஏழு ஜென்மம் எடுத்தாலும் வராது ஊர்வி…”
”ஒண்ணு சொல்லவா…. நான் யார்கிட்டயும் விரோதியா இருக்கனும்னு நினைச்சதே இல்ல… எல்லோரும் என்கிட்ட அன்பா இருக்கனும்னு நினைப்பேன்… நானும் அவங்ககிட்ட அன்பா இருக்கனும்னு நினைப்பேன்… என்னமோ தெரியல… இவன் மட்டும் தான்… நானும் பெருசா இவனைப் பற்றி யோசிச்சது இல்ல… ஆனா போன ஜென்மத்துல விட்ட குறை தொட்ட குறைனு சொல்வாங்கள்ள… அந்த மாதிரி… போன ஜென்மத்தில எதிரியா இருந்துருப்பான் போல…அதே நேரத்துல தப்பிச்சுட்டான் போல… அதான் இந்த ஜென்மத்தில என் அத்தை பையனா பொறந்து… என் அண்ணன்கிட்ட மோதி… அதுக்குப் பின்னாலதான் செழியன்னு ஒருத்தவன பற்றி நான் நினைக்க ஆரம்பிச்சதே…”
“அந்த செழியன இந்த மட்டில விட்டுட்டு போறது… ஏனோ போன ஜென்மத்துல பண்ண புண்ணியம்னு நினைக்கிறேன்… மேரேஜ்லாம் பண்ண நினைக்கலேன்னு நீ சந்தோசப் பட்டுக்க… இல்ல உங்க செழியன் அண்ணாவோட வாழ்க்கையே படுபாதளத்துள போயிருக்கும்… சோ உங்க அண்ணாக்கு பெருசா லாஸ்லாம் இல்ல..”
ஊர்விஷா இன்னுமே அமைதியாக இருக்க
“இங்க பாரு…. என்ன இவ்ளோ அமைதியா இருக்க,… உனக்கு நான் முக்கியமா இல்ல அந்த செழியன்… ஜஸ்ட் பத்து நிமிசம் பார்த்த செழியன்ற யாரோ ஒருத்தன் முக்கியமா…”
“எனக்கு நீ முக்கியம்னு நினைச்சதுனாலதான் அன்னைக்கு உனக்காக போராடினேன்… ஆனால் நீ யாரோ ஒருத்தனுக்காக என்கிட்ட இவ்ளோ பேசுற…”
ஊர்விஷா சிரித்தாள்… அவள் சிரிப்பில் வெறுமையே இருந்தது
“நீ எனக்கு ஃப்ரெண்டா நல்லது பண்ணின… ஆனால் நான் நல்லது பண்றேனா..” ஆராதனாவிடம் கேட்டவள்…
”நான் ஒண்ணு சொல்லவா ஆரா…”
”செழியன் அண்ணா லைஃப தலைகீழா மாத்துறேன்னு சொல்லிட்டு இருக்க… ஆனா உன்னோட லைஃப யோசிச்சியா நீ… அண்ணா வாழ்க்கை… அத்தை சந்தோசம்…இதெல்ல்லாம் ஓகே தான்… ஆனா உனக்குனு ஒரு வாழ்க்கை “ அவள் பேச ஆரம்பித்த போதே அவளிடம் குறுக்கிட்டவள்
“எனக்காக யோசிக்க என்ன இருக்கு… எனக்குனு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை… எனக்காக என் அப்பா அம்மா அண்ணா செல்வி எல்லாரும் இருக்காங்க… அவங்க என் வாழ்க்கையைப் பார்த்துப்பாங்க… என்ன பெருசா வாழ்க்கை… நல்ல மாப்பிள்ளை… நல்ல குடும்பம்... இதானே… அதல்லாம் எங்க வீட்ல பார்த்து வைப்பாங்க…. மேக்சிமம் எனக்கும் ஒத்துப் போயிரும்…. அப்புறம் என்ன பிரச்சனை… என்னோட ஹஸ்பண்ட்…. ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணுனு ரெண்டு குழந்தைங்க… அவங்க லைஃப்… இவ்ளோதான் வாழ்க்கை ஊர்விஷா…. என்ன உள்ளூர்காரனா இருந்தா அடிக்கடி அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாம்… வெளிநாட்டுக்காரனா இருந்தா அப்போப்போ வரலாம்… டெய்லி பேசிக்கலாம்… “
ஊர்விஷா கேட்டாள் இப்போது…
“சோ மேரேஜ் லைஃப்ன்றது பெரிய விசயமில்ல உனக்கு….”
“ஹ்ம்ம்ம்… அப்படித்தான்னு நினைக்கிறேன்…. யாரா இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணி குடும்பம் நடத்திப்பேன்… அதை விட என் அம்மா அப்பா எனக்கு சரியான வாழ்க்கையைத் தேடிக் குடுப்பாங்கன்ற நம்பிக்கை…. அந்த நம்பிக்கை எனக்கு நல்ல வாழ்க்கையை அதுவாவே கொடுக்கும்….”
“அந்த மாப்பிள்ளை… செழியனா இருந்தா” கேள்விக் குறியாக நிறுத்த….
ஆராதனா இப்போது
“ஹ்ம்ம்ம்… அந்த சிச்சுவேஷனும் வரலாம்… ஆனால் எங்க அப்பா அம்மா ஒருத்தனக் கை காட்டி நான் அவங்க கிட்ட மறுக்கிற ஒரு விசயம்னா அது அவன் மட்டுமே… எப்படி நாசுக்கா மறுக்கிறதுன்னு நான் யோசிச்சு வச்சுட்டேன்….” ஊர்விஷா ஆச்சரியமாகப் பார்க்க
“செழியனுக்கும் எனக்குமான மேரேஜ் பாஸிபிளிட்டிஸ் எந்த அளவு இருக்கும்னு எனக்குத் தெரியும் ஊர்வி… ஜஸ்ட் எங்க அப்பாவோ… எங்க அத்தையோ … அவ்வளவு ஏன் என் அப்பத்தா தாத்தாவோ யோசிச்சா போதும்… அவங்களுக்குள்ள இருக்கிற ஈகோ எப்போ வேணும்னாலும் உடையலாம்… அப்படி நடந்தா…செழியனுக்கும் எனக்கும் மேரேஜ் அடுத்த நொடி நடந்துரும்… நடக்கிறதுக்கு 100க்கு 99 சதவிகிதம் வாய்ப்பு இருக்கு… ”
“முதல்ல எப்படியோ தெரியல… அத்தை பையன கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லியிருந்தா கண்டிப்பா மறுத்திருக்க மாட்டேன்…. வாழ்ந்திருப்பேன்… எனக்கு ஒரு கவலையுமில்ல… எங்க அத்தை இருக்கும் போது எனக்கென்ன கவலை… ஆனால் இப்போ அது நடக்காத காரியம்... அவனை பிடிக்கலை அவ்ளோதான்…”
“ஹ்ம்ம்… பார்க்கலாம்… எனக்கென்னமோ… செழியன் செழியன்னு நீதான் லவ்ல விழப்போற மாதிரி இருக்கும்”
ஆராதனா அமைதியாக அமர்ந்திருந்தாள்… பின் தானாகவே
“கண்டிப்பா வரவே வராது ஊர்வி… முதல்லயும் அவன எனக்குப் பிடிக்காதுதான்… பிடிக்கலைன்றதுக்கு ஆயிரம் காரணம் இருந்தது… அது எல்லாம் அவனை வேண்டாம்னு தள்ளி வைக்கிற அளவுக்கு இல்லை… ஆனால் ஒரே ஒரு காரணம் என் அண்ணன அவமானப்படுத்தினது…. என் அண்ணன தற்கொலை வரைக்கும் தூண்டுனது… என் வாழ்நாள் முழுக்க என் நெஞ்சுக்கள்ள இருக்கும்… அந்த நெருப்பு எப்போதும் போகாது... என் அண்ணன் பிழச்சிட்டாங்க… நல்ல வாழ்க்கை என் செல்வியால கெடச்சிருச்சு… ஒருவேளை இதெல்லாம் நடக்காம போயிருந்தா… அவனும் அந்தக் கமலியும் என் அண்ணன திருப்பித் தந்திருபாங்களா… அதுக்காக ஃபீல் பண்ணியிருப்பாங்களா… அப்போ கூட என்ன சொல்லுவான் … என் அக்கா வாழ்க்கை எனக்கு முக்கியம்னுதான் சொல்லுவான்… “
“அதேதான் எனக்கும்… எனக்கு என் அண்ணன் வாழ்க்கை முக்கியம்… அவன் அக்கா சந்தோசத்துக்கு அவன் பாடுபட்டான்… என் அண்ணன் பட்ட கஷ்டத்துக்கு ஈடு கட்ட நான் பாடுபட்றேன்… எங்க அண்ணா பட்ட கஷ்டம் அவனும் படனும்னு நினைக்கிறேன்… “
“அதுக்கு உங்க அண்ணா மாதிரி செழியன்ய்ம் விசம் குடிக்கனும்னு நினைக்கிறியா…”
“குடிச்சா நல்லதுதான்… ரொம்ப ரொம்ப சந்தோஷப் படுவேன்… ஆனால் நடக்காதே…” நக்கலாகச் சொன்னவள்…
“சார் எஜுகேட்டட் பெர்சன்ல… அதெல்லாம் பண்ண மாட்டார்…. சரி இந்த டாப்பிக்கை விட்றலாமா… எனக்குப் பேசப் பிடிக்கல…“ சொல்லிவிட்டு அறையினை விட்டு வெளியேறி இருக்க…
செழியனைப் பற்றி யோசித்தாள் ஊர்விஷா இப்போது…. செழியனும் அப்படி ஒன்றும் முட்டாள் இல்லை… இவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் கிளிப்பிள்ளை போல் இருக்கும் ஆளாகவும் தெரியவில்லை… ஆராதனாவை சமாளிப்பான் என்று தோன்றியது…. எனவே ஊர்விஷாவும் விட்டு விட்டாள்…
அதை விட அவளுக்கு ஆராதனா முக்கியம்… அவளது நட்பு முக்கியம்…
ஆராதனா-செழியன் குடும்பத்துக்குள் நடக்கும் சண்டை…. இதில் தான் தலையிட வேண்டாம் என்றும் ஒதுங்கி விட்டாள்…
அதன் பிறகு இருவருமாக கல்லூரியும் கிளம்பி இருந்தனர்
---
அன்றைய இரவு… மணி பத்து மணி…. ஊர்விஷா மட்டும் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க… ஆராதனா எப்போதோ உறங்கி இருந்தாள்….
ஊர்விஷாவுக்கு பிறந்த நாள் என்பதால்…. அவளுக்கு அலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க… அவளும் பேசிக் கொண்டிருந்தாள்… ஆராதனா செழியனிடம் கொடுத்தது இந்த எண் இல்லை…
ஊர்விஷாவின் பெற்றோர்களோடு பேசுவதற்கென்று தனி அலைபேசி்… அந்த அலைபேசி எண்ணைத்தான் செழியனிடம் ஆராதனா கொடுத்திருந்தாள்… அந்த அலைபேசியை எப்போதோ இவளிடம் இருந்து ஆராதனா வாங்கி இருந்தாள்தான்… செழியன் காத்திருப்பான் என்று தெரியும் ஆனால் பேசவில்லை… வேண்டுமென்றே படுத்துவிட்டாள்….
இவளுக்கான அவனின் காத்திருப்பு எந்த அளவுக்கு என்று அவளுக்குத் தெரிய வேண்டும்…
“இவள் சொல்வதைக் கேட்பவன் என்றால்… அவன் அவளுக்கு அழைக்க மாட்டான்… அதையும் மீறி அழைத்தான் என்றால்… அதை வைத்து அவளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை யோசிக்க வேண்டும்…”
மணி பனிரெண்டை தொட்டிருக்க… செழியனிடமிருந்து அலைபேசி அழைப்பு வரவே இல்லை….
எழுந்து அமர்ந்தாள் ஆராதனா….
“தான் சொன்னதற்காக அழைக்கவில்லையா… இல்லை தன் அழைப்புக்காக அவன் காத்திருக்கவில்லையா….”
அவனை நோக்கி எடுத்து வைத்த முதல் அடியே குழப்பமாக இருக்க… இருந்தும்
”நாளைக்கு கால் பண்றேன்… ஊர்விக்கு வரிசையா கால் வந்துட்டே இருக்கு…. குட் நைட்…” அவனுக்கு அனுப்பி விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்….
---
காலை 8 மணியில் இருந்து… இதோ மணி 12ஐக் கடந்திருக்க… ஒவ்வொரு நொடியையும் யுகம் யுகமாக கடந்து கொண்டிருந்தான் செழியன்…
8 மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை கூட அவன் அலைபேசியைக் கண்டு கொள்ள வில்லை….. ஆராதனா பேசுவாள் என்ற எண்ணம் மட்டுமே அவனை இயக்கிக் கொண்டிருந்தது…
அதன் பிறகுதான் அவனுக்கு உண்மையான போராட்டமே ஆரம்பித்திருந்தது…
இதோ கல்லூரி முடியும் நேரம்…. இதோ இப்போது விடுதிக்கு வந்திருப்பாள்… எந்த நிமிடம் வேண்டுமென்றாலும் அவள் பேசுவாள்…. அந்த எண்ணம் மட்டுமே… நொடிக்கொரு தரம் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன்…அலுவலக வேலை… அனைத்தையும் மாலை ஐந்து மணியோடே முடித்துவிட்டு… வீட்டிற்கும் வந்திருக்க… வீட்டிலோ அவள் அன்னை திலகாவின் முகமெங்கும் சந்தோசம் மட்டுமே… அந்த குதூகலம் அவர் முகத்தில் மட்டுமில்ல… வீட்டிலும் எதிரொலித்தது…. தோட்டத்தில் இருந்து பூஜை அறை வரை… அதை விட சமையலறையில் அன்றையை இரவு உணவுக்கான ஏற்பாடு களை கட்டி இருக்க…செழியனுக்கு தாயின் மகிழ்ச்சிக்கான காரணம் தெரியாதா என்ன….
“என்னடா உங்க அம்மாவை இன்னைக்கு கைல பிடிக்க முடியல… கோவில்ல இருந்து வந்ததுல இருந்து றெக்கை கட்டி பறக்கிறா… வந்ததில இருந்து… ஒரே பேச்சுதான்… அது என்னடா பூஜை… என்னமோ உலகமே அவ வசம் வந்தது மாதிரி பம்பரமா சுத்துரா ” முத்துராம் சொல்லி முடிக்கவில்லை…. செழியன் இப்போது
“அப்பா… நான் அப்புறமா வந்து சாப்பிட்டுக்கிறேன்….. யாரும் எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்…. அம்மாகிட்ட சொல்லிருங்க… ” செழியனும் அங்கிருந்து பறந்திருக்க… முத்துராமோ மனைவியின் சந்தோசத்திற்கு காரணம் தெரியாமல் ஒருபுறம் தவித்திருந்தவர்…. இப்போது மகனின் துள்ளலுக்கு உற்சாகத்துக்கும் காரணம் புரியாமல் குழம்பியவர்… ஒருகட்டத்தில்…
“எப்படியோ… இந்த வீடு சந்தோசமா இருந்தா எனக்கு சந்தோசம்தான்” மன நிறைவோடு அவர் சென்று விட்டார்…
இதோ இப்போது… இந்த நள்ளிரவு வரை.. செழியன் இன்னுமே சாப்பிடவில்லை… ஆராதனாவிடம் பேசிய பிறகே சாப்பிட வேண்டும் என்று நினைத்திருக்க… அவளோ அழைக்கவே இல்லை…. அதே நேரம் அவளாக அழைப்பதாகச் சொல்லியிருக்க… அதை மீறவும் அவனுக்கு மனதி்ல்லை…. அவளே அழைப்பாள் என்ற நம்பிக்கை… எத்தனையோ நாட்கள் பொறுத்திருந்தாயிற்று… இப்போது என்ன அவசரம்… அதிலும் நான் பேசவே கூடாது… அவளே அழைப்பேன் என்று அறுதியிட்டு சொன்ன விதம்…
அலைபேசியைப் பார்த்தபடி படுத்திருந்தவனுக்கு ஏனோ ஏமாற்றமே மிச்சமாகி இருக்க… ஒரு கட்டத்தில் கோபம் கூட வந்தது…
“அப்படி என்ன …. என்னை விட அவளுக்கு முக்கியம்… “
“ப்ச்ச்… நீ முக்கியம் தாண்டா.,… ஆனால் வீட்டுக்கு பயப்பட்றா… அவளுக்கு என்ன பிரச்சனையோ… “ தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாலும்…. வெறுப்பாக வந்தது செழியனுக்கு… செய்தியாவது அனுப்பலாம் என்றால் அது ஆராதனா அலைபேசி இல்லை…. அவளது தோழியின் அலைபேசி… அதுவே அவனுக்குப் பிடிக்கவில்லை…
“இவளுக்கு நாமளே ஒரு போனையும் சிம்மையும் வாங்கிக் கொடுத்திருவோம்… அதுதான் நமக்கு நல்லது… ஆனால் வாங்கிக்கிக்க மாட்டாளே… அண்ணன்ல ஆரம்பிச்சு… பாட்டி வரை கதை சொல்வாளே…” தனக்குள் நக்கலாக சொல்லிக் கொண்டவன்….
மணி பனிரெண்டைக் கடந்திருக்க… அமைதியாக அலைபேசியை வைத்து விட்டு… கண்களைத் திறந்தபடி விட்டத்தை வெறித்திருந்தான் செழியன்… இத்தனை நாட்களாக அவள் நினைவுகளோடு நிம்மதியான உறக்கத்தில் இருந்தவனுக்கு இன்று மனம் முழுவதும் பாரம்…. ஆராதனாவைப் பற்றிய காட்சி நிழல்களும்… நினைவுகளும்… கனவுகளும் அவனைக் காப்பாற்றி வந்திருக்க… இன்று அவளே நிஜமாகி வந்திருக்க… நிஜத்துக்கான காத்திருத்தலில் அவனின் நினைவுகளும் கனவுகளும் அவன் அருகே வரவேயில்லை…
படபடப்பான உணர்வு… பசியாலா தெரியவில்லை…. அவளின் முதல் அலைபேசி அழைப்புக்காக காத்திருந்து சோர்ந்து போனவன்... உறக்கம் வராமல் தவித்திருக்க…. அப்போது… அவனின் அலைபேசியில் மெலிதான வெளிச்சம்…
ஆராதனாவின் செய்தியை எல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை…. விட்டேற்றியாக அலைபேசியை எடுத்தவனின் பார்வையில்…“பாஸ்” என்ற எண் பதிவில் இருந்து செய்தி வந்திருக்க… துள்ளிக் குதித்து எழுந்து அமர்ந்தவன்…. வேகமாக அதைத் திறந்து படிக்க… அவள் சொன்னாள் என்பதற்காக எல்லாம் காலை வரை அவன் காத்திருக்கத் தயாராகவில்லை…. வேகமாக அடுத்த நொடியே ஆராதனாவுக்கு அழைத்திருக்க… ஆராதனாவும் இப்போது எடுத்திருந்தாள்…
“ஹலோ….” என்ற அவளது குரலே பாதித் தூக்கத்தில் இருப்பதைக் காட்ட…. அவளைச் தொந்தரவு செய்கிறோம் என்று தெரிந்தும் அவனுக்கு வேறு வழி இல்லை… அவளிடம் பேசி ஆக வேண்டும்,… அவள் குரலைக் கேட்டாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க
“ஆரா… தூங்கிட்டியா…. “
“ஹ்ம்ம்ம்… “
“மணி என்ன… அத்தை எங்க… “ உளறினாள் போல பேசினாள் ஆராதனா… செழியனுக்கும் இப்போது தன் தவறு புரிய…
“சரி ஆரா… தூங்கிட்டு இருக்க போல நாளைக்குப் பேசுறேன்… நானே பேசுறேன்” ஏமாற்றம் இருந்தாலும் செழியன் அவளைத் தூங்கச் சொல்ல
“ஹ்ம்ம்ம்… “ என்ற ஆராதனாவும் அடுத்த நொடியே வைத்துவிட…
“ப்ச்ச்.. புள்ள நல்லா தூங்கிட்டு இருக்கு,… அதைப் போய் டிஸ்டர்ப் பண்ணிட்டோமே… “ செழியன் தன்னைத் தானே கடிந்து கொண்டவனாக…
“எப்படியோ பேசிட்டோம்… அவள் குரல் இவ்ளோ நாள் கனவுல… இதோ இப்போ நிஜமா…” செழியன் மனம் முழுக்க குதூகலித்துக் கொண்டிருக்க… அங்கு ஆராதனாவோ எழுந்து அமர்ந்திருந்தாள்… ஊர்விஷா நன்றாக உறங்கி கொண்டிருக்க… முகத்தை அலம்பி வந்தவள்… சத்தமின்று பால்கனிக்குச் சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடி….
அலைபேசியை எடுத்து செழியனின் எண்ணை எடுத்தாள்… அடுத்து அவனுக்கும் அடிக்க… செழியனுக்கு ஒரே ஆச்சரியம்… அவள் அடித்த அடுத்த நொடியே அவனும் எடுக்க
“ஏய் ஆரா…. தூங்கலையா நீ”
“இல்ல… நான் பேசுறேன்னு சொல்லிட்டு பேசலைல…. சொன்ன வாக்கு முக்கியம்ல… சாரி” ஆராதனா இப்போது தெளிவாகப் பேச…
“ஏய் இது என்ன பெரிய வார்த்தைலாம்… பராவாயில்ல… நாளைக்குப் பேசலாம்” செழியன் சொல்ல
“இல்ல… நான் பேசனும்… பேசலாமா…. பேசுவீங்களா… திட்டுவீங்களோன்னு பயந்தேன்” செழியன் என்ற சிங்கத்தை மெல்ல மெல்ல அவன் புறம் சாய்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா
“உனக்குத் தூக்கம் வரலைனா பேசும்மா…. எவ்ளோ நேரம்னாலும் பேசலாம்… நான் ஏன் திட்டனும் உன்னை” செழியனும் எழுந்து அமர்ந்தான் சந்தோசமாக
“எனக்குத் தெரியும் இப்படி இந்த டைம்ல பேசுறது தப்புனு...” ஆராதனா குரல் உள்ளே போயிருக்க
“ஹேய் லூசு… இதுல என்ன தப்பு… நீ என் மாமா பொண்ணு… உனக்கில்லாத உரிமையா… தப்பு கிப்புனு லூசு மாதிரி பேசுற…” செழியன் செல்லமாக அவளை அதட்ட
“இப்போ த,…ப்பில்லதான்… ஆனால் நாளைக்கு கல்யாணமாகியிருச்சுனா… இப்படிலாம் பேசுன … அதாவது இந்த டைமுக்கு தப்புதானே”
அவள் பேசியதைக் கேட்டு நினைத்துப் பார்த்த செழியன் வாய் விட்டு சிரித்தே விட்டான்…
“எதுக்கு சிரிக்கிறீங்க இப்போ” ஆராதனா பொய்க் கோபம் காட்ட
“ஏய் ஏய் ஆரா… ஆரா… சும்மா… நீ பேசுனதை நெனச்சு சிரிச்சேன்…. ஆமாமா எனக்கு கல்யாணம் ஆகியிருச்சுனா …. இந்த டைம்ல நீ என்கிட்ட பேசுறது தப்புதாண்டா…” நக்கலாகச் சொன்னவனின் வார்த்தைகளில் இரட்டை அர்த்தம் கலந்திருக்க… தெரிந்துதான் சொன்னான்…. அதேநேரம் அதைச் சொல்லிவிட்டு தன்னையே திட்டியும் கொண்டான்
“டேய் செழியா… சின்னப் புள்ளடா… நீ இப்படிலாம் பேசினா… பயந்துறப்போகுது…. பேசுற ரெண்டு வார்த்தையையும் பேசாமல் போயிறப் போகுது… பார்த்துப் பேசு” தன்னை நிதானப்படுத்திக் கொண்டு இருக்கும் போதே… எதிர்முனையின் மௌனம் உறுத்த
“ஆரா ஆரா” சத்தமாக இவன் அழைக்க…
“ஆரான்ற பேர் எனக்குப் பிடிக்காது…” ஆராதனா சொல்லியபடியே
“ஆனால் நீங்க ஆரான்னே கூப்பிடுங்க.. இங்க எல்லோரும் ஆரான்னுதான் கூப்பிடறாங்க…” சலிப்பாக ஆராதனா சொல்ல
“ஏன் ஆரா பிடிக்காது… “
“ஏன்னா… எனக்குப் பிடிக்காத ஒருத்தவங்கதான் என்னை ஆரான்னு முதன் முதல்ல ஆரான்னு கூப்பிட்டது…. அதுனால” ஆராதனா சொல்லி நிறுத்த
“அவன் எவன் அவன் எனக்கு முன்னாடி உன்னை ஆரான்னு கூப்பிட்டது…. ஹலோ நான் தானே உன்னை ஆரான்னு கூப்பிடுவேன்… ஓ உனக்குப் பிடிக்காததுனாலதான் ஆரான்னு கூப்பிட்டா திரும்ப மாட்டியா… யார் அந்த பிடிக்காத ஆளு” தான் தான் அந்தப் பிடிக்காதவன் என்ற ஆராதனாவின் வட்டத்திற்குள் போகவேயில்லை…
ஆராதனா இப்போது…
“இப்போ அது முக்கியமா… நான் எதுக்காக உங்ககிட்ட இந்த மிட்நைட்ல பேசிட்டு இருக்கேன் தெரியுமா… அதைச் சொல்ல வர்றேன்… கேட்கறீங்களா இல்லையா” ஆராதனாவின் அழகான மிரட்டலில் செழியன்
“பாஸ்… என்ன பாஸ் இப்படி மிரட்டறீங்க…”
கடுப்பாக அலைபேசியைப் பார்த்தாள் ஆராதனா…
“அத்தை 48 நாள் விரதம் இருக்கப் போறாங்க தெரியுமா… தெரியாதா….”
”விரதமா… கோவில்ல பூஜைனுதானே சொன்னாங்க…” செழியனும் தீவிரமாகப் பேச ஆரம்பித்திருந்தான்… அதன் பின் ஆராதனா மூலம் தன் அன்னையின் விரதம் பற்றியும் தெரிந்து கொண்டவன்…
“இல்ல ஆரா… அம்மா விரதம்னு சொல்லியிருந்தா நான் இந்த பூஜைக்கே சம்மதிச்சுருக்க மாட்டேன்… அம்மாவோட ஹெல்த் அதை விட மனசு சரியான நிலைல இல்ல…” செழியன் மனவருத்தத்துடன் சொல்ல
“ஹான்… இதான்… அம்மா மேல அக்கறை இருக்கு… ஆனா அதை அவங்க மனசு கோணாம எப்படி பண்றதுன்னு தெரியல உங்களுக்கு அதான் பிரச்சனையே..”
செழியன் அமைதியாக இருக்க
“அத்தைக்கு உடம்பு சரியில்ல… அதுனால விரதம் இருக்கக் கூடாதுன்றது உங்க எண்ணம்… ஆனால் அவங்க மனசுக்கு நிம்மதி என்ன… இந்த விரதம் இருக்கிறது…அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க… அவங்க மனசுக்கு நிம்மதி கொடுத்தா ஆட்டோமேட்டிக்கா உடல்நிலையும் சரி ஆகிரும்…”
“என்ன பண்ணச் சொல்ற… அதுக்காக அம்மா விரதம் இருக்கட்டும்னு விட்ற சொல்றியா…” செழியன் கோபமாகக் கேட்க
”அதுதான் இல்லை… அவங்களுக்கு பதிலா அதை யாராச்சும் செய்யலாம்ல… அதை ஏன் செய்யல..”
”ஆரா… எனக்கிருக்கிற பிஸி ஷெட்யூல்ல 48 நாள்ன்றதுலாம் சான்ஸே இல்ல… நீ வேற… “ செழியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“நான் பண்றேன்னு… “ ஆரா சட்டென்று ஆரம்பிக்க… பேசிக் கொண்டிருந்த செழியனுக்கு இன்ப அதிர்ச்சியில் அப்படியே பேச்சு நிற்க…
”ஹலோ… ஹலோ”
செழியனும் நிதானத்திற்கு வந்து….
“எனக்காகவா…” கேட்டான் தான் … ஆனாலும் அவன் குரல் அவனுக்கே கேட்காத நிலை… ஆராதனா அதை எல்லாம் கவனிக்காதவளாக
“நான் வேற… அத்தை வேறயா என்ன… நான் பண்றேன்னு சொல்லிட்டேன்… ஆனால் இது மண்டல பூஜையாம்… 48 நாள் இருக்கனுமாம்… ” ஆராதனா தயங்கி நிற்க
“இப்போ என்ன பண்ணலாம்ன்ற… அம்மாவும் இருக்க முடியாது… நீயும் இருக்க முடியாது… சரி விடு… நானே இருக்கேன் போதுமா….” ஏனோ ஆராதனா அவனுக்காக விரதம் இருக்க போகிறேன் என்ற இடத்திலேயே செழியன் மனம் சமாதனாமாகி இருக்க… தன் அலுவலக வேலைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளியிருந்தான் செழியன்
“உண்மையிலேவா… தேங்க்ஸ்… தேங்க்ஸ்… அத்தை இதைக் கேட்டா எப்படி சந்தோசப்படுவாங்க தெரியுமா” ஆராதனா உற்சாகத்தில் அது நள்ளிரவு என்று கூட பார்க்காமல் சந்தோஷத்தில் குதிக்க
அறையில் படுத்திருந்த ஊர்விஷாவே தூக்கம் கலைந்து… தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு… பின் மீண்டும் படுத்திருக்க… ஆராதனா அப்போதுதான் தான் இருக்கும் இடம் உணர்ந்தவளாக அமைதி ஆக முயல்
“ஏய்.. ஆரா… எதுக்கு இப்படி கத்துற… நடு ராத்திரில இந்த சத்தம் போட்ற… “ செழியனும் அவளைக் கட்டுப்படுத்த…
“சரி… சரி… சாரி சாரி…. அப்போ இப்போ சமத்தா படுப்பீங்களாம்… நாளைலருந்து விரதம் இருங்க… கோவிலுக்குப் போகனும்… ஐந்து மணிக்கெல்லாம் அங்க இருக்கனும்… அங்க இருக்கிற தெப்பக் குளத்துல குளிச்சுட்டுத்தான் பூஜை ஆரம்பிக்கனும்… அப்புறம்…” என வழிபாட்டுக்குத் தேவையான விபரங்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்திருக்க… செழியனுக்கு தன் அன்னை மேல் ஏனோ அப்படி ஒரு கோபம் வந்திருந்தது
“ஏன் ஆரா… இப்படி ஒரு கஷ்டமான விரதம் தேவையா அம்மாக்கு… இதெல்லாம் வீட்ல சொல்லாம செய்யனும்னு முடிவெடுத்திருக்காங்க… எனக்கு எப்படி கோபம் வருது தெரியுமா…”
“அந்த அளவுக்கு அவங்க மனசுல கஷ்டத்தோட நடமாடிட்டு இருக்காங்கன்னு புரிஞ்சுக்கோங்க.. அப்புறம்… அத்தை கூட நானும் கோவிலுக்கு வரனும்னு நினச்சேன்… இப்போ வர முடியாது போல… அத்தையும் உங்க கூட வருவாங்களே… அத்தை வரனுமா… “ ஆராதனா யோசனையோடு கேட்க…
”இல்லல்ல… நீயெல்லாம் வேண்டாம்… அவங்களும் வேண்டாம்… நீ வந்தா ஏதாவது ஒரு பரிகாரம்னு… நீயும் உன்னை வருத்திக்குவ… நான் பார்த்துக்கிறேன்…”
“ஹ்ம்ம்… ஆனால் பூஜைல… பரிகாரத்துல ஒரு குறையும் வைச்சுறக் கூடாதே… சாமிக் குத்தம் ஆகிருமே… அதான் யோசனையா இருக்கு…. “
“ஹலோ… அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்… “ செழியன் சொல்ல
“அப்புறம் இன்னொன்னும் இருக்கு… 48 நாள் விரதம் இருக்கிற வரை… எங்கிட்ட பேச வேண்டாம்…. எல்லா விதத்திலயும் சுத்த பத்தமா இருக்கனும்…. “
இப்போது செழியன் எதிர்முனையில் அமைதி ஆகி இருக்க
“நான் சொல்றது புரியுதா…” ஆராதனாவின் குரல் மெலிதாக வந்திருக்க…
”அதாவது மனசுல வேற எந்த எண்ணமும் இருக்கக் கூடாது… அ.. அதுனால சொன்னேன்…. 48 நாள் கழிச்சு நானே போன் பண்றேன் சரியா… நானே உங்கள வந்து பார்ப்பேன்…” அதன் பின் சில நிமிடங்கள் பேசி விட்டு ஆராதனா வைத்து விட… செழியன் அந்த அலைபேசியையே வெறித்துப் பார்த்தான்…
கண்களை மூட வழக்கம் போல் அவன் நினைவுகளில் வரும் ஆராதனா இன்று வர வில்லை… ஏனோ இனி நினைவுகள் சுகம் கொடுக்கும் என்று தோணவில்லை நிஜம் வந்த பின்… நிஜத்தின் தாக்கம் அதிகமாகி இருந்தது…. அதன் ஏக்கமும் ஏகத்துக்கு அதிகரித்திருக்க… இருந்தும்… தன்னவளின் குரலும் அதிலிருந்த உரிமையுமே…. அவனுக்கு நிம்மதியான நித்திரையைக் கொண்டு வந்திருக்க… கண் அயர்ந்தான் செழியன்…. இதழோரத்தின் சிறு புன்னகையும் ஏனோ அவனை தொட்டிருந்தது…..
---
செழியன் அங்கு நிம்மதியுடன் உறங்கி இருக்க… இங்கு ஆராதனவோ விழித்திருந்தாள்… பரபரப்பான எண்ணங்களுடன் யோசனையுடன் சுற்றிக் கொண்டிருந்தாள்….
“நெக்ஸ்ட் 48 டேஸ் நமக்கு இந்த லூசோட பேசனும்ன்ற தொல்லை இல்ல… ஓரளவுக்கு நம்ம வழிக்கு கொண்டு வந்தாச்சு… நாம என்ன சொன்னாலும் கொஞ்சம் கேட்கிறான்… இனி காலேஜ்.. ஹாஸ்டல்னு கான்செண்ட்ரேட் பண்ணலாம்… அத்தைக்கும் நம்ம வந்தத சொல்லியாச்சு… அப்புறம் அத்தை வீட்டுக்கு எப்படி போறது… அதைத்தான் யோசிக்கனும்…”
ஒரே ஒரு விசயம் மட்டும் அவளுக்கு இடித்தது
”அந்த செழியன் கொஞ்சம் உரிமை எடுக்க ட்ரை பண்றான்… அதை தவிர்க்கனும்… “ காலையில் அவன் தொட்ட கன்னத்தை மீண்டும் அழுந்தத் துடைத்தபடி யோசித்தபடியே இருந்தவள்… எப்போது உறங்கினாள் என்றும் தெரியவில்லை…
அடுத்த 48 நாட்களும் ஒவ்வொன்றாக கரையத் தொடங்கி இருந்தது…
Irundhalum chezian mela ivlo pali veri agathuma... But unmaya chezianoda luv ah ava feel panra anaiki aarathana nelamai than paavam...
Lovely update
Adeiii ooorvisa soldrapaditan nadaka podu
Romba thuldra
Sezhiyana pathi triya varapa ivloda nizhai ennavo