ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
தேங்க்ஸ் ஃபார் த கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ்
ஹேப்பி ரீடிங் ஃப்ரெண்ட்ஸ்...
நன்றி
பிரவீணா
----------------------------------------
அத்தியாயம் 22
”டேய் மச்சான்… என்னடா அந்தப் பொண்ணையே வெறிச்சு வெறிச்சுப் பார்த்துட்டு இருக்க” விஷ்வாவின் பார்வையைக் கண்டு கொண்டவனாக பாஸ்கர் தன் நண்பனைக் கேட்க
“அந்தப் பொண்ணு செமைய இருக்காடா… இந்த இடத்துல அவ மட்டும் வேற மாதிரி இருக்கா… தனியா வேற இருக்கா… பேசிப்பார்ப்போமா… நமக்கு செட் ஆகுமான்னு பார்க்கலாமானு திங்கிங்…. செட் ஆனா ஒரு நாலு மாசம் ஜாலியா ஓட்டலாமே…” விஷ்வா நக்கலாகச் சொல்ல
“உனக்கென்னப்பா… தாத்தா சொத்து… அப்பா சொத்து… ஹாபிக்கு வேலைனு இருக்கிற ஆளு… நடத்து நடத்து…” பாஸ்கர் ஒதுங்கிக் கொள்ள… கோகுல் மட்டும் எதோ சிந்தனையுடன் விஷ்வா பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் அதாவது ஆராதனாவைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தான்
“மச்சான் நீ மட்டும் ஏன் அமைதியா இருக்க… நீயும் உன் பங்குக்கு ஏதாவது சொல்லு… கூட நீ என் ஊர்க்காரன வேற போயிட்ட…” என்றபடி… பாஸ்கரிடம் திரும்பி…
“அப்புறம்… கம்பெனிலாம் செம ஃபார்வேர்ட்ல போகுதாமே கேள்விப்பட்டேன்… உங்களுக்கெல்லாம் டபுள் இன்கிரிமெண்டாமே… அவன் தரைமட்டமா போவான்னு பார்த்தா… கோபுரமா உயர்ந்துட்டே போறான்… ஆனால் ஒருநாள் என்னைக்காவது அவன் என்கிட்ட மாட்டுவான் பாரு… அப்போ இருக்கு அவனுக்கு…” செழியன் மீதான் வன்மத்தை விஸ்வா கக்கிக் கொண்டிருந்த போதே…
“டேய் மச்சான்… இந்தப் பொண்ணு நம்ம பக்கத்து ஊர்ப் பொண்ணுடா… எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு தோணுட்டே இருந்துச்சு…. கண்டுபிடிச்சுட்டேன்…” கோகுல் சொல்ல… மற்ற இருவரும் வியப்புடன் அவனைப் பார்க்க…
“ப்ச்ச்.. நேர்ல பார்த்தது இல்ல.. ஆனால் ஃபோட்டோல பார்த்திருக்கேன்… இந்த பொண்ணுக்கு கல்யாணம் பேசிருந்தாங்க போல… அத நிறுத்தனும்னு நம்ம ஸ்டூடியோக்கு ஒருத்தன் வந்தான்…”
”அவ லவ்வரா…” பாஸ்கரும்… விஷ்வாவும் ஒரே நேரத்தில் கேட்க
“இல்லல்ல… கொஞ்சம் நடுத்தர வயசானவர்… அந்தப் பொண்ணோட லவ்வரோட மாமான்னு சொன்னார்… அவ லவ் பண்ண பையன் வெளிநாட்டுல இருக்கான்னும்… உடனடியா வந்து மேரேஜை நிறுத்த முடியாதுன்னு… சொல்லிட்டு… அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிற போட்டோ மார்ஃபிங்க் பண்ணித் தாங்கன்னு கேட்டார்டா… இது நடந்து கிட்டத்தட்ட ரெண்டு வருசம் இருக்கும்….”
“பண்ணிக் கொடுத்தியா…” விஷ்வா கேட்க
“எனக்கு பிரச்சனை வராமல் இருக்கனும்னுன்ற கண்டிஷனோடத்தான் பண்ணேன்… “
”ஹ்ம்ம்… மேரேஜ் நின்றுச்சு போல… அதான் கிளி… இங்க உல்லாசம் பண்ணுது” என்றபடி விஷ்வா எழ… அவன் பார்வை முழுவதும் ஆராதனாவிடம் மட்டுமே இருக்க…
“டேய் மச்சான்… அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்குடா… அவனும் சூப்பரா இருப்பான்… அவன் பக்கத்துல எல்லாம் நீ நெருங்கவே முடியாது… “ கோகுல் விஷ்வாவைப் பிடித்து நிறுத்த…
“ஆள் இருந்தா இங்க ஏண்டா வந்தா… அந்த சூப்பர் லவ்வர் எத்தனாவது எக்ஸோ… வா பார்த்துக்கலாம்…” என்றபடி அடுத்து ஆராதனா முன் வந்து நின்றிருக்க… ஆராதனா புரியாமல் பார்த்தாள் தன் முன் வந்து நின்றவனை…
”கமிட்டட்?” சட்டென்று விஷ்வா கேட்க…
ஆராதனாவும் வேகமாக மறுத்து தலை ஆட்ட… அதுவும் அவள் கண்களை உருட்டி… அவனைப் பார்த்து மருண்ட விழிகளாக சொன்ன விதமே… விஷ்வாவுக்கு தைரியத்தைக் கொடுத்திருக்க… விஷ்வா எந்த வித பயமும் இன்றி
அடுத்து உடனே விஷ்வா தன் விருப்பத்தை சொல்ல… ஆராதனா விழி விரிக்க…
“நோ கம்பெல்… பழகிப் பார்ப்போம்…” என்றபடி ஆராதனாவைப் பார்க்க…
இப்போது ஆராதனா நக்கலாகப் பார்த்தவள்…
“ஓ… டேட்டிங்…” இன்னும் விழி விரித்து வியந்தவள்… தன் கையில் வைத்திருந்த குளிர்பான அடங்கியிருந்த கோப்பையை கவனமுடம் மேஜையில் வைத்து நிமிர்ந்தவள்…
”ஆனா… எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான்… அந்த கண்டிஷன் உங்களுக்கு ஒக்கேன்னா… எனக்கு சம்மதம்தான்…” அவனிடம் நிதானமாகச் நிறுத்தி சொன்னதோடு மட்டுமல்லாமல்… அந்த அந்நிய ஆடவனை நேருக்கு நேராகப் பார்த்து புருவம் உயர்த்தி புன்முறுவலும் பூத்தாள்…. அவள் உதிர்த்த அந்தப் புன்முறுவலின் ஓரத்தில் மில்லி மீட்டருக்கும் குறைவாக சிறு அளவு இருந்தது அவளின் எகத்தாளம் மட்டுமே…
“ஷ்யூர்… ஆராதனா… ” அவள் எதிர்புறம் இருந்த மேஜையில் அமர்ந்தான் விஷ்வா…
“விஷ்… விஷ்வா தானே உங்க பேரு… ஓகே எனக்கு வர்ற பார்ட்டனர் பற்றி எனக்கும் ஐடியா இருக்கே… அதைச் சொல்லட்டுமா…” நிமிர்ந்து அமர்ந்து அவனைப் பார்த்தவள் கண்களில் மிடுக்கான தெனாவெட்டு மட்டுமே…
”மலைய திருப்பனும்… குதிரைல வரனும்… அப்புறம் படிக்கட்டு தேகம் இருக்கனும்… ஆல்ஃபா மேனா இருக்கனும்… “ என்று அடுக்க ஆராதனா ஆரம்பித்திருக்க…
விஷ்வா கடுப்பாகப் பார்க்க…
“நோ நோ… இதெல்லாம் நான் எதிர்பார்க்கல…. ஒண்ணே ஒண்ணுதான்… ரொம்ப சிம்பிள்… என்னோட ஹஸ்பண்டா வரனும்னா ஒரே ஒரு குவாலிட்டிதான்…” என்றவளிடம்
“அதான் என்னன்னு கேட்கிறேன்” விஷ்வா பொறுமை இழந்தவனாகக் கேட்க…
“சின்ன வயசுல எங்க வீட்ல ஒரு நாய் இருந்துச்சு… என்னோட பப்பி… அது நான் என்ன சொன்னாலும் கேட்கும்… நான் நிக்கச் சொன்னா நிக்கும்… போகச் சொன்னா போகும்… என் காலடியிலே கிடக்கும்… ஆனா அது செத்துப் போச்சு” இப்போது ஆராதனா சோகமாக முகத்தை மாற்றி இருக்க
விஷ்வா குழம்பிய முகத்தோடு அவளைப் பார்க்க
“சிம்பிள்.. என்னோட பப்பி ப்ளேச ரீப்ளேஸ் பண்ணனும்… அவ்ளோதான்… நான் என்ன சொன்னாலும் கேட்கிற… என் காலடியில கிடக்கிற என் பப்பி மாதிரி எனக்கு வரப்போறவர் இருக்கனும்… அவ்ளோதான்…. இருப்பீங்களா… அப்போ நானும் டேட்டிங்க்கு ஓகே” ஆராதனா அப்பாவியாக முகத்தை மாற்றி அவனைப் பார்க்க
“என்ன நாயா இருன்னு சொல்லாமச் சொல்றியா…” விஷ்வாவிம் முகம் ஆத்திரத்துடன் கேட்க
“நேரடியாவேதான் கேட்கிறேன்… நாயா இருக்கியான்னு… இதுக்கே ஆத்திரப்பட்டா எப்படி… இன்னொரு கண்டிஷன் சொல்ல மறந்துட்டேனே… நாய நாயா பார்க்கிறதுல என்ன ஒரு திரில் இருக்கு… கொஞ்சம் ஃபார்வார்டா போய் என்னோட ஆசைய மாத்திக்கிட்டேன்… ஒரு சிங்கத்தை நம்ம காலடி விழ வைக்கனும்னு… உன்னைப் பார்த்தா… அந்த அளவுக்குலாம் ஒர்த் இல்ல… அதுனால கிளம்புறியா…” ஆராதனா இளக்காரமாகச் சொல்லி… விஷ்வாவப் பார்க்க… இதற்கிடையே அவனது நண்பர்களும் அங்கு வந்திருக்க
“ஏய் என்னடி… பெரிய இவளாட்டம் பேசுற… நீ யார்னு “ கோகுல் அவளை நோக்கிப் பாய ஆரம்பித்த போதே… விஷ்வா கோகுலின் கைகளை அழுத்தி அவனை அமைதிப் படுத்தியவனாக
“மச்சான்… இப்போ வேண்டாம்… இவளை… வேற மாதிரி டீல் பண்ணிக்கலாம்… சம்பவம் பெருசா இருக்கனும்… வா போகலாம்… பார்த்துக்கலாம்…” என்றபடி ஆராதனாவைப் பார்த்த முறைத்த பார்வையை மாற்றாமல் பாஸ்கர்… கோகுலை இழுத்துக் கொண்டு போக…
“ச்சீ… போடா… “ ஆராதனா முகத்தைச் சுளித்தபடி தன் பார்வையை மாற்றியிருக்க
“டேய்… என்னடா… இப்டி திமிரா பேசுறவளை ஒண்ணும் பண்ணாம விட்டுட்டு வரச் சொல்ற…” என்ற பாஸ்கரிடம்
“பட்சி… நம்ம மாப்பிள்ளை ஸ்டூடியோல இருக்கிற கேமரால சிக்கிருக்குதுதானே… அதை வச்சு பெருசா சம்பவம் பண்ணுவோம்டா…. நாய்னு சொன்னால்ல… நாம யார்னு காமிப்போம்… டேய்… கோகுல்… இவ நம்ம பக்கத்து ஊர்னு தானே சொன்ன… ஈஸியா கண்டுபிடிச்சிறலாம்… “
“என்னடா… இவ கதைய இன்னைக்கே முடிச்சுட்டு போறதை விட்டுட்டு… இழுத்துக்கிட்டு” கோகுல் கடுப்பாக நண்பனின் கையை உதற…
“சில சம்பவம்லாம் சிறப்பா பண்ணனும்… அவங்க எதிர்பார்க்காத நேரத்துல… இவன கேட்டுப் பாரு… இவன் முதலாளி… என்கிட்ட வாலாட்டி இருக்கான்… ஆனாலும் இன்னும் விட்டு வச்சிருக்கேன்…. ஏன்னு நினைக்கிற… அதெல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல சுபமா… நல்லா நச்சுனு நங்கூரம் மாதிரி பதிலடி கொடுக்கனும்… எழுந்துக்கவே முடியாதபடி… சமயம் வாய்க்கும்… அவனையும் கூடவே இப்போ இவளையும் பார்த்துக்கலாம்… அப்புறம் இவ கண்டிப்பா பெரிய வீட்ல இருந்துதான் வந்திருப்பா… பணம்… ஆள் இருக்கிற திமிர்லதான் அம்மணி இவ்ளோ தெனாவெட்டா பேசுது…. “ என்றவனிடம் அடுத்து இருவரும் பேசாமல் வர… அன்றைய பொழுது… ஆராதனாவிடம் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் கிளம்பியிருந்தான் விஷ்வா…
---
”ஆளும் மண்டையும்… வந்துட்டானுங்க கெளம்பி… டேட்டிங்க்… அது இதுன்னு” அலட்சியமாக தனக்குள் சொல்லிக் கொண்டவள்… தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க… அது சர்வ சாதாரணமாக 2:30 என்று காட்ட…
வேகமாக அவளை அழைத்து வந்திருந்த கூட்டத்தைப் பார்த்தாள்… அவர்களோ அங்கு நடனத்தில் மூழ்கி இருக்க…
“ப்ச்ச்… வீட்டுக்கு மட்டும் தெரிஞ்சது… முக்கியமா அண்ணனுக்குத் தெரிஞ்சது… செத்தோம்… ஆனாலும்… பரவாயில்ல… இதுவும் எக்ஸ்பீரியன்ஸ்தான்… பட் போரடிக்குது… எதுக்காக இங்க வர நினைச்சேன்” ஏதேதோ யோசித்தபடி வந்தவளுக்கு அப்போதுதான் தோன்றியது… அவள் கண்களில் ஊர்விஷா தென்படவே இல்லை… கடந்த அரை மணி நேரமாக… மனம் சட்டென்று பரபரக்க… அனிச்சையாகவே அவளது கை ஊர்விஷாவின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டாள்…
ஆனால் எதிர்முனை பதில் கொடுத்தால்தானே… யோசிக்கவெல்லாம் இல்லை…
வேக வேகமாக எழுந்தவள்… அவளுடன் வந்த மற்ற தோழியரிடம் சென்று ஊர்விஷா எங்கே என்று கேட்க… அங்கிருந்த இசை சத்தத்தில்… அவர்கள் சில நிமிடங்கள் கழித்து வேறு பதில் சொன்னார்கள்
“ஊர்வி… விபினோட இருக்கா” சத்தமாகச் சொன்னவர்கள் மீண்டும் தங்கள் துணைகளோடு நடனத்தில் மூழ்க…
“இங்க இல்லையே… ” என்றவளின் கேள்விக்கு அங்கு பதிலே இல்லை… ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது ஆராதனாவுக்கு…
வேகமாக அங்கிருந்து நகன்றவள்… அங்கிருந்த பணியாளர்களிடம்
“இங்க ஸ்டே பண்ற மாதிரி வசதி இருக்கா…”
“இல்ல மேடம்… ஜஸ்ட் … டைன்… அண்ட் ட்ரிங்க் மட்டும் தான்… மூணு மணிக்கு க்ளோஸ் பண்ணிருவோம்” என்று சொல்ல…
“தேங்க்ஸ்” என்றவளாக… ஊர்விஷாவின் அலைபேசி எண்ணிற்கு மீண்டும் அடித்துப் பார்க்க… அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்திருக்க… ஒரு மாதிரி கண்கள் கலங்கி விட்டது ஆராதனாவிற்கு…
“சம்திங் அவளுக்கு நடக்கப் போகுதுனு உனக்கு தோணினதுதானே ஆராதனா… முன்னெச்சரிக்கையா இல்லாம விட்டுட்டியே ஆராதனா…” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்ட போதே
“ஹேய்… கார் பார்த்தியா… டாடி பிரசண்ட் பண்ணினாரு… உனக்குப் பிடிச்ச மாடல் எடுத்தேன்… ஹாஸ்டலுக்கு போகும் போது நான் உன்னை ட்ராப் பண்றேன்… மத்தவங்க வந்த கார்ல போகட்டும்” விபின் சொன்ன ஞாபகம் வந்திருக்க…
“அவன் கூட… கெளம்பிப் போய்ட்டாளா… என்னை விட்டுட்டு போயிட்டாளா… ப்ச்ச்… அத சமாளிச்சிறலாம்… நான் போய்ப்பேன்… ஆனா இவளை அவன் ஹாஸ்ட்டல் கூட்டிட்டு போயிருப்பானா… இல்ல வேற எங்காவது” நினைத்த போதே அவளது தொண்டையில் முள் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு…
அந்த கேளிக்கை விடுதியின் வெளியே ஒரே நாளில் சந்தித்து தோழியான ஊர்விஷாவை நினைத்து தவித்துக் கொண்டிருந்தாள் ஆராதனா…
----
அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி…
“அப்படி என்ன கோவில்… ஆரா… ரொம்ப ஸ்பெஷலா…” கைகளில் வளையல்களை அடுக்கியபடியே ஆராதனாவிடம் கேட்க…
“ஆடாம இருடி…. உனக்குத் தாவணி கட்டி விட்றதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்து போயிருச்சு…” ஆராதனா செல்லமாக அவளை அதட்ட…
“ஏய் ஹேப்பி பேர்த்டே பேபிய திட்டாத” ஊர்விஷா கொஞ்சலாகச் சொல்ல…
“ஹான்… பேர்த்டே விஷ்ஷா… தாவணி கட்டனும்னு என்னைப் படுத்தற..” என்று ஆராதனா ஆரம்பித்த போதே…
“நீ கட்ற மாதிரி… உன்னோட ஸ்டைல்ல… தாவணி மட்டுமில்ல… ஹேர்ஸ்டைல்…. எல்லாமே… “
“அம்மா தாயே என்னோட ஜூவல்ஸ் முதற்கொண்டு போட்டு விட்றேன்… கொஞ்ச நேரம் பொம்பளப் பிள்ளையா அடக்க ஒடுக்கமா நிக்கிறியா… தாவணி கட்டனும்னு மட்டும் ஆசைப்படக்கூடாது… அதைக் கட்டுனா எப்படி நிக்கனும்… நடக்கனும்னு எல்லாம் கரெக்டா பண்ணனும்… மாடர்ன் ட்ரெஸ் போட்டு… ஹீல்ஸ் போட்டு இப்படித்தான் நடக்கனும்னு ஒரு ரூல்ஸ் இருக்குதுல்ல… அதே மாதிரிதான் புடவைக்கும் தாவணிக்கும்… சரியா… சரி திரும்பு…” என்றபடி ஆராதனா ஊர்விஷாவுக்கு ஒப்பனை செய்ய ஆரம்பித்தவள்… அவளுக்கு தலை அலங்காராமும் செய்து விட்டு… அணிகலன்களையும் அணிவித்தவள்… தன் தோழியை தன் முன் நிறுத்தியபடி… நெட்டி முறித்தவள்…
“அழகுடி நீ… இப்போ கண்ணாடில பாரு” என்று அவளைக் கண்ணாடி முன் நிறுத்த… ஊர்விஷாவே தன்னைப் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்க…
“சூப்பரா இருக்க… அப்புறம்… இந்த நகைலாம் கோவிலுக்கு மட்டும் போட்டுக்க… காலேஜ்க்கு சிம்பிளா ரெடி ஆகலாம்…” எனும் போதே… ஊர்விஷா வாய் திறக்கப் போக….
“தாவணிதான்… தாவணி தான்… அதை மாத்தல…. மேக்கப்… ஆர்னமெண்ட் மட்டும் லைட் ஸ்டைல்ல மாத்திக்கலாம்” என்றவள்… மேலும் தன் தோழியைச் சுற்றி வந்தவளாக…
“பூ மட்டும் மிஸ்ஸிங்… இந்த தேவதைக்கு… ரம்பை ஊர்வசிலாம் இனி ஊர்விஷா முன்னால கைகட்டி சேவகம் பார்க்கனும்” ஆராதனா பெருமையாகத் தன் தோழியின் அழகை புகழ… ஊர்விஷாவின் கண்கள் மெல்லக் கலங்க ஆரம்பித்திருந்தன…
“ஏய் என்னாச்சு” ஆராதனா பதறியவளாக… தன் தோழியின் கண்களில் கசிந்த நீரை துடைத்த போதே…
“நீ மட்டும் அன்னைக்கு இல்லேன்னா… என்னோட நிலைமை… அந்த விபின்… அவன் நினைச்சத சாதிச்சிருப்பான்”
“ஏய் லூசாடி… நான் இல்லேனாலும் உனக்கு ஒண்ணும் ஆகி இருக்காது… கடவுள் என்னை அனுப்பின மாதிரி வேற யாரையாவது அனுப்பி இருப்பாரு… ” என்ற ஆராதனா…
“ஆனா… எனக்கு ஒண்ணு மட்டும் புரியல ஊர்வி… கற்புன்றது பொம்பளைங்களுக்கு மட்டும்தானா என்னா… இல்ல அது உடலளவுல மட்டும் தானா… அந்த விபினுக்கு கற்பு இல்லையா… அவன் உடம்பும் அதே தோல் நரம்பு ரத்தம் சேர்ந்ததுதானே… அது என்ன பொண்ணுங்க மட்டும் ஏதாவது ஆகி இருந்துச்சுனா என்ன பண்றதுன்னு… கில்ட்டியா ஃபீல் பண்றோம்… என்ன பார்க்கிற… என்னையும் சேர்த்துதான் சொல்றேன்” என்றவளிடம் ஊர்விஷா பதில் சொல்லாமல் அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள்…
---
”ஏய் ஊர்வி… கதவைத் திறடி…” எங்கோ சொர்க்க லோகத்தில் இருந்து ஒலித்த குரலில்… ஊர்விஷா… தன் கிறக்கத்தில் இருந்து மெல்ல விடுபட ஆரம்பித்திருக்க… இருந்தாலும் விபினின் கட்டுப்பாட்டில் இருந்து அவளால் வெளியே வரமுடியவில்லை…
“வி…பி….ன்… விடு… யா.. ரோ கூப்பிடறாங்க” ஊர்விஷா தடுமாறி அவனை விட்டு விலக ஆரம்பித்து பேச ஆரம்பித்த போதே… ஊர்விஷாவின் இதழ்கள் அவனிடம் மீண்டும் சிறைப்பட்டிருக்க… அதன் பிறகு ஊர்விஷாவால் பேச முடியவே இல்லை… அவனிடம் முழுவதுமாக தன் வயம் இழந்திருக்க
ஆராதனா சத்தமாக கத்த ஆரம்பித்திருந்தாள்…. உள்ளே என்ன நடக்கிறது என்று அவளால் பார்க்க முடியாவிட்டாலும்… நடப்பதை ஓரளவு அனுமானித்தவளாக
“ஊர்வி… ப்ளீஸ்டி…கதவைத் திறடி… “ ஆராதனாவின் கெஞ்சல் குரல் ஊர்விஷாவைச் சென்றடையவே இல்லை…
ஆராதனாவுக்கு என்ன செய்வது… ஒன்றுமே புரியவில்லை… அந்த கேளிக்கை விடுதியை விட்டு இன்னும் அவர்கள் வெளியே போகவில்லை என்று தெரிந்தபின்… காரில் இருக்கலாம் என்று அனுமானித்து வந்தவளின் நம்பிக்கை வீணாகவில்லை… அந்த கார்ப்பார்க்கிங்கின் செக்யூரிட்டி… இவளை அப்படி இப்படி என்று பேச்சுக் காட்டி… அங்கிருந்து கிளம்ப வைக்க முயல… ஆராதனா விட்டு விடுவாளா என்ன… அவனை என்ன சொல்லி மிரட்டினால் பணிவான் என்று தெரிந்து… அந்த வழியில் சென்று மிரட்ட
“இங்க பாரும்மா… என் வேலைக்கு ஒல வச்சுறாத… அந்தப் பொண்ணும் சேர்ந்துதான் வந்துச்சு… அதுக்கும் சம்மதம் தான் போல… அந்தப் பையன் மேல ஒண்ணும் தப்பு இல்ல… ரெண்டு பேருக்கும் விருப்பப்பட்டுத்தான் போறோம்னு சொன்னான்மா…”
காவலாளியிடம் அதற்கு மேல் பேசவில்லை… வேகமாக கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு ஓடியவளுக்கு… அருகே போக பதட்டம் மட்டுமே… அதே நேரம் ஊர்விஷாவை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே… தன் பதட்டத்தை எல்லாம் கட்டுக்குள் கொண்டு வந்தவள்… காரைப் பார்க்க… அவள் நல்ல நேரமா… ஊர்விஷாவின் நல்ல நேரமா… ஓட்டுநர் இருக்கையின் சன்னல் கதவு பாதி திறந்திருக்க… மனதில் பெரும் நம்பிக்கை வந்திருக்க
“அவன் போதைல இருந்தது நல்லதா போச்சு… ராஸ்கல்… கதவைக் கூட மூட புத்தி இல்ல..” வேகமாக காரின் முன் சீட்டின் அருகே வந்தவள்… தன் தோழியைக் கத்தி அழைக்க… அவளிடமிருந்து ஒரு பதிலும் இல்லாமல் போக… அடுத்து விபின் பேரை சொல்லி அழைத்தவள்…
“விபின்… இப்போ நீ அவளை விடலைனா… போலிஸுக்கு போன் பண்ணிருவேன்…” என்ற போதே… விபின் இறங்கி வந்திருந்தான்…
“சொல்லிக்கடி…” என்றபடி ஆராதனாவின் கைகளைப் பற்றி தன் அருகே கொண்டு வந்தவன்… அவள் முகபாவனையை நோட்டமிட்டமிட்டபடி
“இந்த மாதிரி… பிடிக்காத ஒருத்தி கூடவா ஜல்சா பண்றேன்… அவளுக்கும் பிடிச்சுதாண்டி வந்திருக்கா…” என்றவன்… ஆராதனாவையும் விட்டு வைக்கவில்லை… அத்துமீற ஆரம்பித்திருக்க… அடுத்த நொடி… ஆராதனா அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்திருந்தாள்…
ஆனாலும் அவளால் அவனை விட்டு விலக முடியாமல் அவன் கைகளைப் பறிக்க முயன்று கொண்டிருக்க…
“ஏய்… என்னையே அறஞ்சுட்ட… உன்னை… அவள அப்புறமா பார்த்துக்கிறேன்… உன்னை மாதிரி பொண்ணுங்கள திமிரெடுத்து தெனாவெட்டா இருக்கிற பொண்ணுங்கள அடக்கிறதுதாண்டி திரில்லே…” விபின் இப்போது முற்றிலுமாக ஆராதனாவை தனக்கு கட்டுப்பட வைக்க ஆரம்பித்தவனாக… காரில் மீண்டும் ஏறி அமர்ந்து ஆராதனாவையும் உள்ளே இழுக்க… அப்போது…
“ஆ….” விபினின் கை… தானாகவே ஆராதனாவை விட்டு விலகி இருக்க…
“ஏய் என்னடி பண்ண…. ஐயோ… கண்ணு எரிச்சலா இருக்கே…” எனும் போதே
“ஹான் அந்தக் கண்ணு நல்லா இருக்கா… அப்போ இந்த ஃப்ளேவர் வாங்கிக்கோ…” என்றபடி… ஜாலியாக அவனது கண்களில் அந்த ஸ்ப்ரே முழுக்க அடித்திருக்க…
“ஏய் ஆரா… நீ… என்ன பண்ற…” ஊர்விஷா உளறிக் கொண்டிருக்க… ஆராதனா அவளைக் முறைத்தபடியே… விபினை நோக்கி…
“டேய்… இந்த ஆராதனாகிட்டயே உன் வேலையக் காட்டுறியா… நான்லாம் நட்ட நடு ராத்திரில நெல்லுக் கொல்லைக்குப் போறவளோட பொண்ணுடா… டெய்லி… நாலு சுடுகாட்டைத் தாண்டி வீட்டுக்கு போறவடா… என்னலாம் பார்த்தா பேயே பயந்து ஓடும்… நீயெல்லாம் எம்மாத்திரம்… “ கார் சீட் பெல்ட்டினால் அவனைக் கட்டியவள்… அடுத்து பரபரப்புடன் செயல்பட ஆரம்பித்தாள்…
ஊர்விஷா அமர்ந்திருந்த பக்கம் சென்று அவளின் ஆடைகளை சரி செய்ய முயற்சிக்க… அவளால் முடியவில்லை… வேகமாக தனது துப்பட்டாவை அவளைச் சுற்றி போட்டவள்… அங்கிருந்து அவளை இறக்கி… ஓட்டுநர் இருக்கையின் அருகில் அமர வைத்துவிட்டு…. அவளது முகத்தை தண்ணீரால் துடைத்து விட்ட போதே…. ஊர்விஷா… மெல்ல மெல்ல உணர்வுக்கு வருவது போல் இருக்க… அடுத்த நிமிடம் கார் அவர்களது விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது…
----
இப்போது நினைத்தாலும் ஊர்விஷாவின் தேகம் சிலிர்த்து அடங்க… அதே நேரம் தன் தோழியின் தைரியம் அவளிடம் வந்து சேர…. தன் தோழியை பெருமையுடன் பார்த்தாள்… அந்தக் கயவனுக்கு கொடுத்த தண்டனையும் ஞாபகம் வந்தது….
“ஊர்வி… இங்கேயே நிறுத்திக்கலாம்…. ஹாஸ்டல் வரைலாம் போக வேண்டாம்” என்று ஆராதனா தோழியைப் பார்க்க… ஊர்விஷா அழுது கொண்டிருக்க
“ஏய்… லூசு… இப்போ அழறதுக்கு நேரம் இல்ல… ரூம்ல டைம் எடுத்து அழு… முதல்ல இறங்கு…” மயக்கத்தில் இருந்த விபினைப் பார்த்தபடியே… காரை விட்டு இறங்கியவள்…
ஊர்விஷாவையும் இறங்கச் சொல்ல…
“நான் வரல… எனக்கு சாகலாம் போல இருக்கும்… நான் அலர்ட்டா இல்லாததுனால தானே எனக்கு இவ்ளோ பிரச்சனை… அவன் கொடுத்தான்னு இந்த ட்ரெஸ் போட்ருக்கக் கூடாது…. இந்த ட்ரெஸ்ல அவன் ட்ரக் ஸ்ப்ரே பண்ணிருக்கான்னு எனக்கு எப்படி தெரியும்… இந்த அசிங்கத்தை எப்படி துடைக்க…” ஊர்விஷா அழுது கொண்டே இருக்க
“ஊர்வி… முட்டாள் மாதிரி பேசாத… நடந்ததை எதுவும் மாத்த முடியாது… உனக்கு ஒண்ணும் நடக்கல… அவ்ளோதான்… அவ்ளோ டவுட் இருந்தா டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிக்க… இப்போ கீழ இறங்கி வா… கடுப்பேத்தாத… விடிஞ்சதுன்னா… எல்லாம் கெட்ரும்… இதுக்குத்தான் நான் போலிஸ் கூட போகாம காப்பாத்தி கூட்டிட்டு வந்தேனா….”
ஊர்விஷா ஏதும் பேசாமல் இப்போது இறங்கினாள் தான்… ஆனாலும் தலை குனிந்தபடி நின்றிருக்க…
ஆராதனா தோழியையே யோசனையுடன் பார்த்தவள்…
“உனக்கு அவமானம் ஆகிருச்சுன்னு ஃபீல் பண்றியா ஊர்வி…..” எனும் போதே ஊர்விஷாவின் கண்களில் இருந்து சட்டென்று நீர் கன்னத்தில் வழிந்திருக்க… வேகமாக அவள் கண்ணீரைத் துடைத்தவள்… அவளிடம் குனிந்து… காதில் கிசுகிசுக்க…
ஊர்விஷாவின் கண்கள் விரிய…
”போ… அவனைத் தொட்டு பேசியிருக்க தானே… இப்போ தண்டனை கொடுக்க வேற வழி இல்ல… “ என்ற போதே ஊர்விஷாவுக்கு எப்படி அப்படி தைரியம் வந்ததோ… ஆராதனா சொன்னவாறே செய்திருக்க…
கார் முன் சீட்டின் கீழே போடப்பட்டிருந்த விபினின் உடைகளைப் பார்த்தபடியே…
“போன் எதுக்கு இருக்கு… இந்தக் ஃப்ராடு… கழிசடைய போட்டு எடுத்து வச்சுக்கோ… நாளைக்கு நாம மிரட்டுறதுக்கு வேணும்ல…” என்று நக்கலாகச் சொன்ன ஆராதனா… யோசித்தபடியே
“வெயிட்;;;; இது மட்டும் பத்தாது….”
“எங்க அந்த மார்க்கர்…” என்றபடி… தன் பையில் தேடியவள்…
“ஹான் கிடச்சிருச்சு…”
“உனக்கு என்னென்ன தோணுதோ… அவன் முதுகுல எழுதி வச்சுட்டு வா… அதையும் கேப்சர் பண்ணிக்கோ… அப்புறம் நான் இந்த சட்டைய கட் பண்றேன்… உலகம் பார்க்கனும்ல…. நீ அச்சடிச்சத… ப்ச்ச்… பச்சை குத்துற மெஷினையும் கையோட எடுத்துட்டு வர முடிஞ்சா அதையும் பைல போட்டு வைக்கனும்…. சரி பரவால்ல நெக்ஸ்ட் அந்த மாதிரி எங்கயாவது கிடைக்குதான்னு பார்த்து வாங்கி வைக்கனும்… இப்போதைக்கு மயக்கம் தெளிஞ்சு… ட்ரெஸ்ஸ தேடியே அவமானத்துல தொங்கனும் இவன்… வா போகலாம்… ஆனால் நீ இவனுக்கு கருணை காட்டிட்ட… ***** இன்னர் வியர் கம்பெனி விளம்பரத்துக்கு ஆபர் வாங்கி கொடுத்துட்ட”
பக்கென்று சிரித்து விட்டாள் ஊர்விஷா….
”ஏய்.. என்னடி சிரிச்சிட்டு இருக்க… லேட்டாகிருச்சு வா கிளம்பனும்… நான் சென்னைக்கு வந்த மிஷனே வேற.. என்னோட மிஷனே இனிதான் ஸ்டார்ட் பண்ணனும்…. அந்த டென்ஷன்ல இருக்கேன்…” ஆராதனா கிளம்பி இருக்க…ஊர்விஷாவும் அவள் பின்னால் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்… அறைக்கும் வந்து சேர்ந்திருந்தனர் அன்று…
---
“ஆனால் நீ சொன்ன மாதிரியே அந்த விபின அடுத்த நாள் நாம மிரட்டினதுல பயந்துட்டானே அதுதான் செம்ம ஆராதனா… நீயெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல… “
தன் தோழியைப் பாராட்டியவள்…
“சத்தியமா உன்னை முதன் முதலா பார்த்தப்போ நான் வேற மாதிரி நினச்சேன்… ஆனா வேற லெவல்டி…. கொஞ்சம் பயமா இருக்குதான்” என்ற தோழியின் தலையில் தட்டியவள்…
“ஹேய் கேர்ள்… உனக்கு என்னைப் பற்றி தெரியல… ஆக்சுவலா எனக்கு விபின் காரைக் காமிக்கும் போதே அதை ஓட்டனும்னு ஆசை… வாய்ப்பு கெடச்சது யூஸ் பண்ணிகிட்டேன்… “ என்றவளைப் பார்த்த ஊர்விஷாவின் பார்வையில் கடுப்பே இருக்க
“ஓய் பெர்த்டே பேபி… இப்படி பேசிட்டே இருந்தா… எங்க அத்தை கோவில்ல பதினெட்டு சுத்து சுத்தி… பிரசாதத்தையும் வாங்கிச் சாப்பிட்டுட்டு மதிய சாப்பாடு செய்ய வீட்டுக்கே போயிருவாங்க போகலாமா… வா… வா உன் டூவீலர் ட்ரைவர் வேலை பாரு….” என்றபடி தோழியை இழுத்துக் கொண்டு… தன் அத்தை திலகா வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வரும் அம்மன் கோவிலை நோக்கிச் சென்றாள்…
---
“அம்மா… நான் கிளம்புறேன்… முதல் நாள் மட்டும் வான்னு சொன்ன வந்துட்டேன்… இனி கடைசி நாள்தான் வருவேன்… சரியா… சும்மா 48 நாள்…. ஒரு மண்டலம்னு சொன்னீங்க… கடுப்பாகிருவேன்” திலகா மகனின் வார்த்தைகளைக் கேட்டார் தான்… ஆனால் பதில் சொல்ல வில்லை… கர்ப்ப கிரகத்தையே பார்த்துக் கொண்டிருக்க…
“அம்மா…”
“ஏம்மா இப்படி இருக்கீங்க…”
“அப்பா பாவம்மா… அவருக்கு நீங்க தான் உலகம்… ஆனால் நீங்க” செழியனின் தொடர் பேச்சில்… ஒரு வழியாக பேச ஆரம்பித்தார் திலகா
“எனக்கு அப்படி இருக்க முடியலயே செழியா… உங்க அப்பா… நானா… இல்ல உங்க பிறந்த வீடான்னு கேட்கிறாரே…”
”சரி அதை விடு… செழியா எனக்கு பெருசா ஆசைலாம் இல்ல… நீ நம்ம ஊர்ப்பக்க பொண்ணப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கடா… அந்த சத்தியம் மட்டும் பண்ணிக் கொடு… அது போதும்… என் அண்ணன் குடும்பத்தை தூரத்தில இருந்து பார்க்கிறதுக்காவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் எனக்கு…”
செழியன் முறைத்தபடி…
“அம்மா… மறுபடியும் மறுபடியும் தப்பு பண்றீங்க… மேரேஜ்ன்றது ஒருத்தவங்களோட தனிப்பட்ட விசயம்… உங்க விருப்பத்தை சொல்லலாம்… ஆனால் திணிக்கக் கூடாது… ஆயிரம் தடவை சொல்லிட்டேன்… என்கிட்ட இந்த மாதிரி சத்தியம்… பாசத்தை வச்சு மிரட்டுறதுன்னு பண்ணாதிங்க… ஒரு போதும் நடக்காது… என்னோட பிடிவாதம் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்… செண்டிமெண்டல் இல்ல இமோஷனல் ப்ளாக்மெயில் எனக்குப் பிடிக்காது… உங்க முகத்துக்கு நேராவே சொல்லிட்டேன்… உங்க மன திருப்திக்காக… என் வாழ்க்கையை பணயம் வைக்கவே மாட்டேன்னு… என் வாழ்க்கை எனக்கு முக்கியம்.. “
“செழியா… அம்மா இவ்ளோ சொல்லியும் நீ பிடிவாதம் பிடிக்கிறேன்னா… நீயும் கமலி மாதிரியே இந்த ஊர்க்கார பொண்ண கூட்டிட்டு வரப் போற அப்படித்தானே…” என்றவர் குரல் கம்மியிருந்தது
“எனக்குத் தெரியும்… நீ அப்படித்தான் பண்ணப் போற… உனக்கு நேரம் சரியில்லையாம்… நாகக் கன்னி தோஷம் இருக்காம்… “ என்ற போதே செழியன் முறைத்தபடி…
“நாக தோஷம் கேள்விப்பட்ருக்கேன்… அது என்ன நாகக் கன்னி தோஷம்… எங்க இருந்துதான் வர்றானுங்களோ….”
“அந்த நாகக்கன்னி பார்வை படாம இருக்கத்தான் இந்த தோஷ பரிகாரம்… இது செய்யனும்னு நினைக்கும் போதே… அமெரிக்கா இனி போக மாட்டேன்னு சொல்லிட்ட.. அப்போ இந்த பரிகாரம் பண்ணி முடிச்சா… “ அவரின் எண்ணத்தில் முழுக்க முழுக்க பூஜாவே இருக்க…
செழியனின் நெற்றி நரம்பு விடைத்திருக்க சட்டென்று எழுந்தவன்… திலகாவை மேற்கொண்டு பேச விடாமல்…
“நான் போறேன்… இதுக்கு மேல இருந்தேன்னா… என்ன சொல்வேனோ எனக்கே தெரியல…” அதற்கு மேல் தன் தாயின் புறம் திரும்பவேயில்லை….
என்னதான் அன்னையின் மீது கோபம் இருந்தாலும்… மனம் முழுக்க தாயைப் பற்றி மருத்துவர் சொன்ன வார்த்தைகளியே எண்ணங்கள் சுற்றிக் கொண்டு இருந்தன…
மூன்று நாட்களுக்கு முன்… ஆராதனா தங்கியிருந்த விடுதி முகவரியை முகிலனிடம் வாங்கியவன்… சந்தோசமாக அவளைப் பார்க்க கிளம்பிசெல்ல… அதே நேரம் திலகா… அவரது மயக்கநிலையில் மூச்சு பேச்சிழந்து கிடக்க… வேறு என்ன செய்வது… ஆராதனாவை சந்திப்பதை எல்லாம் விட்டுவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்றிருந்தான்…
“உங்க அம்மாக்கு உடல்ல எந்த வியாதியும் இல்ல… அவங்க மனசுல மட்டும் தான் எல்லா குறையும்… குறைந்தபட்ச ஆசை கூட நிறைவேறாதோன்னு பயப்படறாங்க… செழியன் நீங்க மட்டும் தான் அவங்களோட கடைசி பிடிப்பா இருக்கீங்க…”
“எனக்கு இந்த அட்வைஸ் சொல்லப் பிடிக்கலைதான்… ஆனால் ஏன் உங்க அம்மா ஆசையை நிறைவேத்த இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிறீங்க… ஐ மீன் உங்க மனசுல எந்த விருப்பமும் இல்லேன்ற பட்சத்தில… வை ஷுட் நாட் ஃபுல்ஃபில் யுவர் மதர்ஸ் விஷ்…”
செழியன் ஏதும் பேசவில்லை…
“பெத்தவங்க பிடிவாதம் தவறுதான்… சரின்னு சொல்லல… ஆனால் உங்க லைஃப நீங்க நெனச்சா சொர்க்கமா மாத்திக்கலாமே… அம்மா சொல்ற பொண்ணு உங்களுக்கும் பிடிக்கும்னு நினைங்க… எல்லாமே சரி ஆகிரும்… அவங்க உங்கள எமோஷன் ப்ளாக்மெயில் பண்றாங்கன்னு நினைக்காதீங்க…
செழியன் அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருக்க… அந்த மருத்துவர் இப்போது பேச்சை வளர்த்தார்
“யோசிக்க ஆரம்பிச்சுட்டிங்கள்ள… கண்டிப்பா ஒரு நல்ல முடிவு வரும்னு நினைக்கிறேன்… செழியன்” சிரித்தபடி செழியனைப் பார்க்க… செழியன் இப்போது நிமிர்ந்திருந்தான்
“ஒருநாளும் நான் என் வாழ்க்கையோட முடிவை அடுத்தவங்க கைல கொடுக்க மாட்டேன்… அது அம்மா அப்பா யாரா இருந்தாலும்… எனக்கு முன் ஜென்மம்.. இல்ல ஏழேழு ஜென்ம இதுலலாம் நம்பிக்கை இல்ல… செழியனா வாழ்ற இந்த வாழ்க்கை எனக்கு முக்கியம்… ஏன்னா “ உணர்ச்சிவசப்பட்டு பேசியவன் சட்டென்று தான் இருக்குமிடம் உணர்ந்தவனாக நிறுத்தி இருக்க
“ஆர் யூ இன் லவ்…” மருத்துவர் இப்போது அமைதியான புன்முறுவலுடன் கேட்க…
செழியன் அவன் நண்பன் முகிலனுக்கு அடுத்து… அந்த மருத்துவரிடம் அவன் காதலை மறைக்காமல் ஒப்புக் கொள்ள
“கங்கிராட்ஸ்… பேரண்ட்ஸ்கிட்ட சொல்ல வேண்டியதுதானே மேன்… இப்போ பாருங்க எல்லாருக்கும் கஷ்டம்….”
“இல்ல சார்… என்னோட லவ் வரம் சார்… எங்க குடும்பத்தோட எல்லா பிரச்சனையையும் தீர்க்கப் போகும் வரம் சார்… அப்போ தெரியல… எனக்கு ஏன் ஆராதனா மேல லவ் வந்துச்சுனு… அவ்ளோ சின்ன வயசுல…” என்றபோதே மருத்துவர் யோசனையாக புருவம் நெரிக்க…
“யெஸ்… ஆராதனா என் மாமா பொண்ணுதான்… எந்த அண்ணன் வீட்டை விட்டு பிரிஞ்சுட்டோம்னு அம்மா இவ்ளோ கவலைல இருக்காங்களோ… அந்த அண்ணாவோட பொண்ணு…” செழியன் மனம் திறந்து சொல்ல… மனநல மருத்துவருக்கு விளக்கம் வேண்டுமா என்ன…
“சோ… அப்போ உங்க அம்மாக்கு கூடிய சீக்கிரம் சந்தோசத்தைக் கொட்டிக் கொடுக்கப் போறீங்க…”
“நான் இல்ல… என்னோட தேவதை… என் குடும்பத்துக்கு வரப் போற அதிர்ஷ்ட தேவதை…”
“கங்கிராட்ஸ் செழியன்… சீக்கிரம் வீட்ல சொல்லிருங்க… இல்ல… நான் உங்க அம்மாகிட்ட சொல்லிருவேன்… எனக்கு என் பேஷண்ட் ஹெல்த் முக்கியம்…”
“எங்க அம்மா… உங்ககிட்ட வந்தால் தானே… இனி அடுத்த சிட்டிங் வர மாட்டாங்க பாருங்க… அப்போ நீங்களே தெரிஞ்சுக்குவீங்க…”
இப்போது செழியன் மனம் எங்கெங்கோ போய்… ஆராதனாவிடம் வந்து நின்றிருந்தது
”டைம் இருக்குதானே… ஹாஸ்டல்ல போய் பார்க்கலாமா… இல்ல காலேஜ் வாசல்ல வெயிட் பண்ணலாமா… பேசுவாளா… எதுக்கு என்னைப் பார்க்க வந்தீங்கன்னு கேட்டா… என்ன சொல்றது…”
“என் மாமா பொண்ணு நீ… உன்னைப் பார்க்க வர்றதுக்கு எனக்கு எதுக்கு காரணம் வேணும்… அப்படின்னு ஒரு மிரட்டல் போட்டால் நம்மாளு எதிர்த்து பேசுமா என்ன…” செழியன் மனம் தாயை விட்டு… தன் மனம் கவர்ந்தவளிடம் சென்றிருக்க…. அதில் உல்லாசமும் வந்து சேர்ந்திருக்க… தன் வாகனம் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி அவன் பார்வை செல்ல… திடிரென்று பூமழை பொழிந்தார் போல… அப்படி ஒரு பரவசம்…
தன் காரின் முன் பக்கத்தின் பக்காவாட்டு பகுதியின் மேல் சாய்ந்து நிற்பவள்… முகம் தெரியவில்லை… தாவணி அணிந்து… ஆராவா அது… கனவா இல்லை நனவா… கண்களை கசக்கி நன்றாகப் பார்க்க
“ஆரா…”
ஆரா என்று நினைத்து பார்த்தவள்… எதிர்புறம் நோக்கி ‘ஆரா’ என்று அழைக்க… தாவணி அணிந்திருந்தவளை விடுத்து செழியனின் பார்வை எதிர்புறம் சென்றிருக்க… இப்போது பனிமழை அவன் மேல் பொழிந்தார் போல சில்லிட்டு நின்றிருந்தான்…
“அவன் ஆராவே… அதோ எதிர்புறம்… அவன் பார்வை வட்டத்தில்… அவன் கைக்கெட்டும் தூரத்தில்… அவன் காதலின் அழுத்தம் அவன் கண்களில் கசிவைக் கொண்டு வந்திருக்க… ஆராதனாவைப் பார்த்தபடி…. ஊர்விஷாவின் அருகே வந்து நின்றிருக்க…
”ஊர்வி… இதை வச்சுக்க… சாதிப்பூ சூப்பரா இருக்கும்…” தன்னை நோக்கி குரல் கொடுத்தபடி.. உற்சாகமாக வந்த ஆராதனாவின் பார்வை சட்டென்று அதன் உற்சாகமெல்லாம் வடிந்து… தன் அருகே ஒரு புள்ளியில் நிலைத்து… இப்போது அந்தக் கண்களில் பயம் மட்டுமே இருக்க… ஊர்விஷா அறியாத ஆராதனாவின் முகம் இந்த முகம்… ஊர்விஷாவை அவளையும் மீறி தன் பக்கவாட்டில் திரும்ப வைக்க…
அந்த இளைஞனும் அவளருகே வந்திருந்தான்…
அவனின் கண்களில் அதில் என்ன இருந்தது… இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த செழியனின் காதல் அன்று மறைக்கபடவில்லை அவன் கண்களில்… ஊர்விஷாவின் கண்களில் தப்பாமல் விழ… வேகமாக தன் தோழியைப் பார்க்க… ஆராதனாவும் அவள் அருகே வந்திருந்தாள்… அவள் பார்வையும் செழியனிடம் மட்டுமே இருக்க…
இவன்… ஆராதனாவுக்கு தெரிந்தவன் போல… ஆராதனாவின் பார்வையே ஊர்விஷாவுக்கு சொல்லியிருக்க… ஆராதனாவிடம் பேச நினைத்தபோதே… அழுகைக் குரல் மட்டுமே அவள் காதில் விழ.. ஊர்விஷாவின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தது…
இது அவளது தோழி ஆராதனாவா… தன்னை ஒரு கயவனிடமிருந்து தைரியமாகக் காப்பாற்றிய வீராங்கனையா…
“ஏய்… ஆர்… தனா… ஏன் அழற… இங்க பாரு…” அந்த இளைஞனின் குரலில் உரிமை மட்டுமே… இப்போது அவன் ஆராதனாவின் அருகில் சென்றிருந்தான்
”இல்ல… நான் மறுபடியும் ஊருக்கே போறேன்… நீங்க என்னைப் பார்த்துட்டீங்களே… இனி நான் எங்க அத்தைய பார்க்க முடியாது…. பேச முடியாது… அவங்களோட பழக முடியாது… எங்க அத்தை வீட்டுக்கு போக முடியாது… எங்க அத்தைய எங்க ஊருக்கு…. எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போக முடியாது… எல்லாமே கெட்ருச்சு… நான் எதுக்காக இந்த சென்னைக்கு வந்தேனோ… அந்த திட்டமே கெட்ருச்சு… இனி எதுக்காக நான் இங்க இருக்கனும்… நான் போறேன் எங்க ஊருக்கே” ஆராதனா பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருக்க… செழியனுக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியாத நிலை… சத்தியமாக இப்படி ஒரு சூழ்நிலையை அவன் எதிர்பார்க்கவே இல்லை…
ஆராதனா, வனிதா திருமணத்தில் பார்க்காது சென்றது போல சென்று விடுவாளோ என்றுதான் நினைத்திருக்க… அவள் இவ்வளவு பேசி… இப்படி அழுவாள் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை… வேகமாக அவள் தோழியைப் பார்க்க… அவளோ இவனை விட அதிர்ச்சியில் சிலை போல் நின்றிருக்க… வேறு வழி…
“தனா… ஃபர்ஸ்ட் அழுகையை நிறுத்து…. “
“இல்ல நான் நிறுத்த மாட்டேன்… நான் இந்தக் கோவிலுக்கு அத்தையைத்தான் பார்க்க வந்திருக்கேன்னு நீங்க திட்டப் போறீங்க… எங்க அப்பாகிட்ட மாமாகிட்ட சொல்லப் போறீங்க… அப்புறம் அப்புறம் என் அண்ணன் கிட்டலாம் சண்டை போடப் போறீங்க… அதுதானே நடக்கப் போகுது” இப்போது அவளால் பேச முடியவில்லை… தேம்ப ஆரம்பித்திருக்க
”ஐயோ ஆரா… ஏய் அழாத… உனக்கு அழுதா மூச்சு அடைக்கும்மா… “ வேகமாக அவள் கைகளை இழுக்கப் போக… சட்டென்று ஆராதனா அவன் தொட வந்ததைத் தவிர்த்து…
“எனக்குத் தண்ணி வேணும்…”
“தருவீங்க தானே… “
“எத்தனை தடவை என்கிட்ட தண்ணி வாங்கிக் குடிச்சிருக்கீங்க… ஆனால் என் மேல இல்லல்ல என் குடும்பத்து மேல கோபம் இருக்கிறதுனால தர மாட்டிங்க நீங்க”
செழியன் முறைக்க..
“பார்த்திங்களா பார்த்தீங்களா… நீங்க கோபப்பட்றீங்க… நான் பயப்படுவேன்னு தெரிஞ்சும் முறைக்கிறீங்க…” ஆராதனா விடாத மழையாக வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்திருக்க… செழியன் இப்போது…
“கார்ல ஏறு…” வழக்கமான அவன் அதட்டல் குரல் வந்திருக்க
“மாட்டேன்… அங்க வச்சு திட்டுவீங்க… இல்ல அட்வைஸ் மழை கொடுப்பீங்க… இது சென்னை… இப்படித்தான் இருக்கனும்.. இப்படி இருக்கக் கூடாதுன்னு…” ஆராதனா மீண்டும் அழ ஆரம்பித்திருக்க… ஊர்விஷா என்பவள் இருப்பெல்லாம் அவர்கள் இருவரின் கண்களுக்கே தெரியவில்லை என்பது போல உரையாடிக் கொண்டிருந்தனர்...
“இப்போ கார்ல உட்காருரியா இல்லையா… “ செழியன் அவள் அருகே வர முயற்சித்த போதே… ஆராதனா காரின் மறுபுறம் சென்றிருக்க…
செழியனும் புன்னகையுடன் காரில் அமர்ந்தவன்…. காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுக்க..
“தேங்க்ஸ்லாம் சொல்ல மாட்டேன்… அவ்ளோ கடன் கொடுத்திருக்கேன்…”
“சரி… எனக்கும் உன் தேங்க்ஸ் வேண்டாம்” செழியனுக்கு வந்த சிரிப்பை தன் உதட்டுக்குள் மறைத்திருந்தான்… அவனுக்கு எங்கோ பறப்பது போல் மட்டுமே உணர்வு… தன்னருகே தன்னவள்… அவனருகே அவனவள்… அதுவும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கின்றாள்… நானும் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்… நடப்பதெல்லாம் கனவா… இல்லை நனவா… நம்பிக்கை தந்தது… ஊர்விஷாவின் குரல் மட்டுமே…
“ஆரா… கோவிலுக்கு போகலாமா” அவள் தோழியின் குரல் கடுப்போடு ஒலித்தாற் போல உணர்வு செழியனுக்கு…
”நான் யார்னு தெரியுமா…” செழியன் மிரட்டலாக ஊர்விஷாவிடம் கேட்க
”தெரியும்… அவ அத்தைப் பையன்…” ஊர்விஷா மென்குரலில் சொன்னாள் இப்போது… செழியனின் குரலில் தானாகவே அவள் தணிந்த குரலில் சொல்ல
“தெரியுதுதானே…கொஞ்சம் வெயிட் பண்ணும்மா… இல்லைனா… கோவில்ல போய் சாமி கும்பிடு…” செழியன் அலட்சியமாகச் சொல்லிவிட்டு… ஆராதனாவைப் பார்க்க… அவள் இப்போது அழுகையை நிறுத்த வில்லை… மூக்கை உறிஞ்சிக் கொண்டிருக்க
“இப்போ ஏன் அழற…” எனும் போதே… அவள் ஆட்காட்டி விரல் அவனைப் பார்த்து உயர்ந்திருக்க…
“என்னைப் பார்த்தா…”
“ஹ்ம்ம்ம்” வேகமாக ஆராதனா தலைஆட்டி இருக்க
”நான் என்ன பண்ண போறேன் உன்னை….” செழியன் எப்போதிருந்து இப்படி பேச ஆரம்பித்தான்… உண்மையாகவே ஆராதனா அவனைப் பார்த்து விழிக்க..
அவனது கைக்குட்டையை எடுத்து… அவள் முகத்தை துடைத்து விட்டவனை தடுக்க முடியாமல் ஆராதனா திணறியவள்…
“கர்சீஃபைக் கொடுங்க… நானே தொடச்சுக்கிறேன்” சமாளிக்க முயல்…
செழியனுக்கு ஆராதனா யாரோ மூன்றாம் மனுசி… இல்லை அவளது மாமா மகள் என்ற எண்ணமெல்லாம் இல்லை… அவனவள்… அவன் கனவுகள் நனவுகளாகிப் போன தருணங்கள் என்பது போல இயல்பான உரிமையுடன் அவளிடம் அவன் நடந்து கொள்ள…
அவனறியாமல் விலகியவள்…
“இப்போ ஓகே… நான் நார்மல் தான்…” விலகி அமர்ந்தவளிடம்…
“அத்த… அத்தையப் பார்க்க வந்தேன்… உங்… உங்க யாருக்கும் தெரியாமல்… ஆனால்” மீண்டும் அழ ஆரம்பிக்கப் போக…
“சரி… சரி… உங்க அத்தையப் பாரு… எனக்குத் தெரிஞ்சா என்ன ஆகப் போகுது…” அக்கறையுடன் அவளின் கலைந்த கேசத்தை சரி செய்தவனை தடுக்காமல் பல்லைக் கடித்தவள்…
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து அவனைப் பார்த்து
“இப்போ தெரிஞ்சுருச்சே… அப்போ என் ப்ளான்லாம் அதோ கதிதானே…”
“என்ன பெரிய மாஸ்டர் ப்ளான் சொல்லுங்க… நாங்களும் கேட்கிறோம்…. எங்களையும் உங்க டீம்ல சேர்த்துக்கங்க… யாரு செல்விதான் உங்க தலைவரா” சிரித்தபடி கேட்க
“இல்ல இப்போ வரைக்கும் நான் மட்டும் தான் … டீம்லாம் இல்ல… சிங்கிள் தான்…” என்றவள்… சட்டென்று உற்சாகமானவளாக
“நீங்களும் வர்ரீங்களா… நாம ஜோடியா டீம் ஃபார்ம் பண்ணுவோம்… ப்ளான் சக்சஸ் பண்ணுவோம்…. என்ன வர்றீங்களா… என்னோட ப்ளானுக்கு நீங்க கோ ஆப்ரேட் பண்ணின போதும்… நான் சொல்றதை மட்டும் கேட்டா போதும்… எல்லாம் சுபம்… “ ஆராதனா சம்மனமிட்டு அவன் புறம் திரும்பி கேட்க…
கரும்பு தின்னக் கூலியா என்ன… அப்படி ஒரு நிலையில் செழியன் இருக்க… சந்தோசமாக செழியன் தலை அசைத்தான் தன்னவளிடம்…
“அவ்ளோதான்… இது போதும் எனக்கு… அத்தையை எங்க வீட்டோட சேர்க்கனும் அதுதான் நம்ம கோல் ஓகேவா…”
“உங்க வீட்டோட இல்ல… நம்ம குடும்பம் சேரனும்… அதுதான் கோல்…” செழியன் திருத்த
“அட பூவை பூவுன்னு சொல்லலாம்… புஷ்ப்பம்னு சொல்லலாம்… நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்பா” ஆராதனா ஹைஃபை கொடுக்க… செழியன் அசந்து போய் தன்னவளைப் பார்த்து மெய்மறந்து அமர்ந்திருக்க…
“ஹைஃபைக்கு கை காட்டினா… இப்படி ஹைஃபை கொடுக்கனும் அஸிஸ்டெண்ட்…” அவனது கைகளை தானாகவே எடுத்து ஹைஃபை கொடுக்க…
”என்னது அஸிஸ்டெண்ட்டா… ஹ்ம்ம்.. சரிங்க பாஸ்… நீங்க சொன்னா சரிதான்… அப்புறம் நம்ம ப்ளானோட அடுத்த ஸ்டெப் என்ன…” செழியனும் அவளுடன் அவளுக்குச் சரிசமமாக இறங்கிப் பேச ஆரம்பித்திருந்தான்… அது பிடித்திருந்தது அவனுக்கு…
அவளின் அந்த கள்ளங்கபடமற்ற!!! பேச்சும் மனதும் தானே அவள் பின்னால் அவனைச் சுற்ற வைத்துக் கொண்டிருப்பது… இன்றும் அதில் இலயித்துப் போய் அமர்ந்திருந்தவன்… பின் தன்னையே நிலைப்படுத்திக் கொண்டவனாக…
”உன் ஃப்ரெண்டா அது… பாவம் வெயிட் பண்ணுது… “
“ப்ச்ச் அதெல்லாம் பரவாயில்ல… நாம பேசனும்… பாஸோட திட்டம்லாம் தெரிய வேண்டாமா… அப்போதானே அஸிஸ்டெண்ட்டா ஃபாளோ பண்ண முடியும்”
“அதுவும் சரிதான்… அப்போ அந்தப் பொண்ணை ஹாஸ்டல்ல இறக்கி விட்டுட்டு… நாம ரெண்டு பேரும்… பேசுவோம்… பேசிட்டே இருப்போம்..” செழியன் காரை ஸ்டார்ட் செய்யப் போக…
“இல்லல்ல… இப்போ என்ன ப்ளான்னா… ப்ளான் நம்பர் 1 என்னன்னா… நான் அத்தையப் பார்க்கப் போறேன்… அத்தைகிட்ட உங்கள பார்த்ததை சொல்ல மாட்டேன்… அதே மாதிரி நீங்களும் என்னைப் பார்த்ததை… என்கிட்ட அஸிஸ்டெண்டா சேர்ந்ததை“
“ஏய்” அவள் தலையில் செல்லமாகக் கொட்ட
“ஓகே ஓகே… நீங்களும் என்னைப் பற்றி சொல்லக் கூடாது…”
“அதெல்லாம் சரி… அடுத்து நாம எப்படி பார்க்கிறது… உன் ஹாஸ்ட்டலுக்கு வரவா…” செழியன் ஆவலாகக் கேட்க
“நோ… நோ… நீங்க ஹாஸ்டலுக்கு வரக் கூடாது… என் போனுக்கு பேசக் கூடாது… நீங்க ட்ரை பண்ணினாலும் பேச முடியாது… அது பளாக் லிஸ்ட்ல இருக்கு…” என்றவள் அவனின் முறைப்பில்
“அண்ணனப் பற்றி தெரியாது… அவர் முன்னாடி நாம ஈஸியா மாட்டிருவோம்… செல்வி… எல்லோருக்கும் தலையிலதான் மூளை இருக்கும்… அவளுக்கு உடம்பெல்லாம்… ப்ரெய்னி கேர்ள்… சோ எச்சரிக்கையா இருக்கனும்… அப்புறம் முக்கியமா முகிலன் அண்ணாகிட்ட சொல்லக் கூடாது… அம்மாக்கு தெரிஞ்சிரும்”
“அப்போ எப்படி… நீயும் நானும் ஒண்ணா…” என்ற போதே ஆராதனா அவளையுமறியாமல் முகத்தைச் சுளித்திருக்க… சமாளிக்க ஆரம்பித்திருந்தான் செழியன்
“ஐ மீன்… பேசுறது… உன் மாஸ்டர் பிளான சக்ஸஸ் ஆக்குறது” செழியன் ஒன்றுமே அறியாதவன் போல கேட்க
“அதுக்குத்தான் பாஸ் சொல்றதை… அதாவது இந்த ஆராதனா சொல்றதை மட்டும் கேட்கனும்…”
“ஹான் சரிங்க பாஸ் சொல்லுங்க…”
“உங்க ஃபோன் கொடுங்க… பாஸ்வேர்ட் எடுத்துட்டு கொடுங்க…” என்று அவனிடம் வாங்கியவள்… அதில் எண்களை போட்டவள்… பாஸ் என்று பதிவிட்டும் கொடுக்க…
“ஊர்வி நம்பர் அது… நானே உங்களக் கூப்பிடுவேன்… நீங்க போடக் கூடாது சரியா..”
“ஹ்ம்ம்” செழியன் அவனையும் அறியாமல் தலை ஆட்டினான்…
“அப்புறம் என்ன… கிளம்பட்டா…”
செழியன் இப்போதும் அந்த எண்களையே பார்த்தபடி…
“இது எதுக்கு ஆரா… யார் என்ன சொல்லப் போறா… அப்படியே சொன்னாலும் நான் பார்த்துக்கிறேன்… ஹாஸ்டலுக்கு நான் வந்தா அந்த நரேன் என்ன சொல்லுவான்… அவன்லாம் எனக்கு சமமா” என்றவனிடம்
“சேச்சே… நீங்களும் செல்விண்ணாவும் சத்தியமா சமம் இல்ல…“ என்றவள் சட்டென்று தன் குரலை மாற்றியவளாக
“நான் சொல்றதை மட்டும் கேட்கிறேன்னுதான் நீங்க என் டீம்ல ஜாயின் பண்ணுனீங்க செழியன் சார்… அதுதானே அக்ரிமெண்ட்… இல்ல பிடிக்கலேன்னா… நான் என் வழில போய் எங்க அத்தைய எங்க குடும்பத்தோட சேர்த்துக்கிறேன்… நீங்க உங்க வழில வந்து நம்ம குடும்பத்தோட சேர்ந்துக்கங்க…” என்றபடி கைகளைக் கட்டிக் கொண்டு அதிருப்தியான பாவனையோடு நேராக அமர்ந்து ரோட்டைப் பார்க்க…
“ஓகே…ஒகே பாஸ்… என்ன பாஸ்… இப்படி கோபப்பட்டா எப்படி… “ வேகமாக அவன் முன் கைகளைக் கட்டியபடி தலை குனிந்து … புருவம் உயர்த்தி மனமெங்கும் எல்லையில்லா சந்தோஷத்துடன் செழியன் ஆராதனாவைப் பார்க்க
ஆராதனா பதில் சொல்லாமல் வெற்றிக் களிப்புடன் அவனைப் பார்த்தபடி…
“ஹ்ம்ம்… இந்தப் பணிவு மனசுல எப்போதும் இருக்கனும்… இப்போ நான் அத்தையப் பார்க்கப் போறேன்… நைட் உங்களுக்கு நானே கால் பண்றேன் அதுவரை..வெயிட் பண்ணுங்க… இடையில் எப்போதுமே என் கூட பேச ட்ரை பண்ணக் கூடாது… காலேஜ்க்கு வந்து நிற்கக் கூடாது… ஏன் நான் இவ்ளோ ஸ்ட்ரிக்ட்னா… எனக்கு எங்க அத்தை முக்கியம்”
“நானும் கேட்டுக்கிறேன் மேடம்… ஏன்னா எனக்கு எங்க பாஸ் முக்கியம்” செழியன் நக்கலாகச் சொன்னாலும் உள் அர்த்ததோடு சொல்ல… ஆராதனா இறங்கிக் கொண்டாள்… செழியனுக்கு ஊர்விஷாவை அறிமுகப்படுத்தவும் தவறவில்லை…
“செல்வி அளவுக்கு இல்லேனாலும்… இவளும் எனக்கு ஃப்ரெண்ட்தான்” காரிலேயே சொல்லியிருந்தாள்
ஆராதனா செழியனிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்ப… ஆராதனாவை முன்னே போகச் சொன்னவன்… ஊர்விஷாவை தனியே நிறுத்தி
“ஊர்விஷா… நீ செல்வி மாதிரின்னு அவ சொன்னா… செல்வி அவளுக்கு எப்போதுமே நல்ல ஃப்ரெண்டா… வெல்விஷரா இருந்தா… அதேபோல நீயும் இருப்பேனு நம்பறேம்மா… அவள் ரொம்ப ரொம்ப வெகுளி… அவளுக்கு யாரையும் எடை போடத் தெரியாது… இந்த சென்னை வாழ்க்கை அவளுக்கு ரொம்பப் புதுசு… பார்த்துக்கோம்மா… ரோட் கூட க்ராஸ் பண்ணத் தெரியாது அவளுக்கு… அந்த சின்ன ஊர்லயே திணறுவா… கைப் பிடிச்சு கூட்டிட்டு போ… வா… ” என ஆரம்பித்து ஊர்விஷா ஆராதனாவுக்கு செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் சொல்லி முடித்திருக்க
ஊர்விஷா திகைத்து நின்றிருந்தாலும்… வேறு வழியின்று தலையை ஆட்டி வைத்தவளாக
“நான் பார்த்துக்கிறேண்ணா” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று சென்றிருக்க
சந்தோசமாக காரை எடுத்திருந்தான் செழியனும்… அப்போது முகிலனும் அவனுக்கு அழைத்திருக்க…
“டேய் மச்சான்” செழியனின் குரலில் அப்படி ஒரு சந்தோசம் வெளிப்பட்டிருக்க
“என்னடா தனாவைப் பார்த்துட்ட போல” முகிலன் நக்கலாக வம்பிழுக்க
செழியன் சட்டென்று தன் குரலை மாற்றியவனாக
”இல்லடா… இனிமேலதான் பார்க்கனும்… ஒரே வேலைடா… அம்மாக்கும் உடம்பு சரி இல்லாமப் போயிருச்சு…” இதுநாள் வரை தன் காதல் பற்றி எல்லா உண்மைகளையும் சொன்ன தன் உயிர் நண்பனிடம் முதன் முதலாக பொய் சொல்ல ஆரம்பித்திருந்தான்…. சொல்ல வைத்திருந்தாள் அவன் நாயகி…
---
”ஹேய் ஆரா… நில்லு…”
“இந்த ட்ரெஸ்ல ஓடி வரக் கூட முடியல”
ஆராதனா இப்போது அவளுடன் சேர்ந்து நடந்தாள்… பெரிதாக பேசவில்லை
“என்னடி நடக்குது… சரி அதை விடு… அவர் உன்னை லவ் பண்றாரா…”
ஆராதனா அலட்சியமாக தோளைக் குலுக்கியவளாக
“அப்படியா… எனக்கு அப்படி ஏதும் தெரியல… உனக்கு ஏன் அப்படி தோணுது” என்று கேட்டவளாக
“ஓ… இப்போ உன்கிட்ட அந்த செழியன் பேக்கு… அக்கறைன்ற பேர்ல… எனக்கு ஒண்ணும் தெரியாது… நீதான் அவளைப் பார்த்துக்கனும்… அப்படி இருக்கனும்… அது இதுன்னு அட்வைஸ் பண்ணுச்சா….”
ஊர்விஷா… அவளை வித்தியாசமாகப் பார்க்க…
“இதெல்லாம் எப்போதும் நடக்கிறதுதான்… அவருக்கு அவர் மட்டும் தான் அறிவாளின்னு நெனப்பு…” வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவள்…
“ஊர்வி… அத்தையப் பார்த்து பேசிட்டு வந்தபின்னால அப்புறமா நாம இந்த கேசைப் பற்றி பேசலாம்… பேசனும்… எனக்கு உன் ஹெல்ப் வேணுமே… அதுனால உன்கிட்ட சொல்லித்தான் ஆகனும்… அப்புறம் எனக்கு நீ ஹெல்ப் பண்ணுவதானே… எனக்காக உயிரையே கொடுப்பேன்னு சொன்னதான் ஞாபகம்…” என்றவள் குரல் திடீரென்று நிறுத்தம் செய்திருக்க… ஊர்வி வேகமாக அவளைப் பார்க்க
“அத்தை” நெகிழ்ந்த குரலில் ஆராதனாவின் உண்மையான அழுகை… ஊர்விஷா கண்களில் நிரம்பியிருக்க… சற்று முன் செழியனிடம் அவள் நடித்தது நடிப்பு அப்பட்டமாக நடித்தது… அதற்கும் இதற்கும் வித்தியாசம் ஊர்விஷாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்க… ஆராதனா புரியாத புதிராக உருமாறியிருந்தாள் ஊர்விஷாவுக்கு
What are you come to saying?before have you written sories are very easy to can understand. But this is. What do I tellt.o. K let us see