“ப்ச்ச்.. நேர்ல பார்த்தது இல்ல.. ஆனால் ஃபோட்டோல பார்த்திருக்கேன்… இந்த பொண்ணுக்கு கல்யாணம் பேசிருந்தாங்க போல… அத நிறுத்தனும்னு நம்ம ஸ்டூடியோக்கு ஒருத்தன் வந்தான்…”
---
“டேய் மச்சான்… அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்குடா… அவனும் சூப்பரா இருப்பான்… “ கோகுல் விஷ்வாவைப் பிடித்து நிறுத்த…
“ஆள் இருந்தா இங்க ஏண்டா வந்தா… அந்த லவ்வர் எத்தனாவது எக்ஸோ… வா பார்த்துக்கலாம்…” என்றபடி அடுத்து ஆராதனா முன் வந்து நின்றிருக்க… ஆராதனா புரியாமல் பார்த்தாள் தன் முன் வந்து நின்றவனை…
----
“அதான் என்னன்னு கேட்கிறேன்” விஷ்வா பொறுமை இழந்தவனாகக் கேட்க…
“சின்ன வயசுல எங்க வீட்ல ஒரு நாய் இருந்துச்சு… என்னோட பப்பி… அது நான் என்ன சொன்னாலும் கேட்கும்… நான் நிக்கச் சொன்னா நிக்கும்… போகச் சொன்னா போகும்… என் காலடியிலே கிடக்கும்… ஆனா அது செத்துப் போச்சு” ஆராதனா சோகமாக முகத்தை மாற்றி இருக்க
----
“பட்சி… நம்ம மாப்பிள்ளை ஸ்டூடியோல இருக்கிற கேமரால சிக்கிருக்குதுதானே… அதை வச்சு பெருசா சம்பவம் பண்ணுவோம்டா…. நாய்னு சொன்னால்ல… நாம் யார்னு காமிப்போம்… டேய்… கோகுல்… இவ நம்ம பக்கத்து ஊர்னு தானே சொன்ன… ஈஸியா கண்டுபிடிச்சிறலாம்… “
----
“தேங்க்ஸ்” என்றவளாக… ஊர்விஷாவின் அலைபேசி எண்ணிற்கு மீண்டும் அடித்துப் பார்க்க… அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்திருக்க… ஒரு மாதிரி கண்கள் கலங்கி விட்டது ஆராதனாவிற்கு…
“சம்திங் அவளுக்கு நடக்கப் போகுதுனு உனக்கு தோணியும்… முன்னெச்சரிக்கையா இல்லாம விட்டுட்டியே ஆராதனா…” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்ட போதே
----
“ஹான்… பேர்த்டே கிஃப்ட்டா… தாவணி கட்டனும்னு..” என்று ஆராதனா ஆரம்பித்த போதே…
“நீ கட்ற மாதிரி… உன்னோட ஸ்டைல்ல… தாவணி மட்டுமில்ல… ஹேர்ஸ்டைல்…. எல்லாமே…"
----
“ஏய் என்னாச்சு” ஆராதனா பதறியவளாக… தன் தோழியின் கண்களில் கசிந்த நீரை துடைத்த போதே…
“நீ மட்டும் அன்னைக்கு இல்லேன்னா… என்னோட நிலைமை… அந்த விபின்… அவன் நினைச்சத சாதிச்சிருப்பான்”
----
“சொல்லிக்கடி…” என்றபடி ஆராதனாவின் கைகளைப் பற்றி தன் அருகே கொண்டு வந்தவன்… அவள் முகபாவனையை நோட்டமிட்டமிட்டபடி
“இந்த மாதிரி… பிடிக்காத ஒருத்தி கூடவா ஜல்சா பண்றேன்… அவளுக்கும் பிடிச்சுதாண்டி வந்திருக்கா…” என்றவன்… ஆராதனாவையும் விட்டு வைக்கவில்லை… அத்துமீற ஆரம்பித்திருக்க… அடுத்த நொடி… ஆராதனா அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்திருக்க…
---
“மயக்கம் தெளிஞ்சு… அவனை இந்த நிலைமல பார்க்கிறப்போ அவமானத்துல செத்துறனும்… பொண்ணுங்கள எல்லாம் கிள்ளுக் கீரையா நினைக்கிறவங்களுக்கு எல்லாம் இப்படித்தான் அடி கொடுக்கனும்… கண்ணுக்கு கண்… பல்லுக்கு பல்… “ ஆராதனா வெறுப்போடு அவனை முறைத்தபடி ஊர்விஷாவிடம் திரும்பியவள்….
----
“உங்க அம்மாக்கு உடல்ல எந்த வியாதியும் இல்ல… அவங்க மனசுல மட்டும் தான் எல்லா குறையும்… குறைந்தபட்ச ஆசை கூட நிறைவேறாதோன்னு பயப்படறாங்க… செழியன் நீங்க மட்டும் தான் அவங்களோட கடைசி பிடிப்பா இருக்கீங்க…”
---
“எனக்குத் தெரியும்… நீ அப்படித்தான் பண்ணப் போற… உனக்கு நேரம் சரியில்லையாம்… நாகக் கன்னி தோஷம் இருக்காம்… “ என்ற போதே செழியன் முறைத்தபடி…
“நாக தோஷம் கேள்விப்பட்ருக்கேன்… அது என்ன நாகக் கன்னி தோஷம்… எங்க இருந்துதான் வர்றானுங்களோ….”
---
“சோ… அப்போ உங்க அம்மாக்கு கூடிய சீக்கிரம் சந்தோசத்தைக் கொட்டிக் கொடுக்கப் போறீங்க…”
“நான் இல்ல… என்னோட தேவதை… என் குடும்பத்துக்கு வரப் போற அதிர்ஷ்ட தேவதை…”
---
இது அவளது தோழி ஆராதனாவா… தன்னை ஒரு கயவனிடமிருந்து தைரியமாகக் காப்பாற்றிய வீராங்கனையா… இப்படி அழுவபளா இவள்…
“ஏய்… ஆர்… தனா… ஏன் அழற… இங்க பாரு…” அந்த இளைஞனின் குரலில் உரிமை மட்டுமே… இப்போது அவன் ஆராதனாவின் அருகில் சென்றிருந்தான்
----
“இல்ல நான் நிறுத்த மாட்டேன்… நான் இந்தக் கோவிலுக்கு அத்தையைத்தான் பார்க்க வந்திருக்கேன்னு நீங்க திட்டப் போறீங்க… எங்க அப்பாகிட்ட, மாமாகிட்ட சொல்லப் போறீங்க… அப்புறம் அப்புறம் என் அண்ணன் கிட்டலாம் சண்டை போடப் போறீங்க… அதுதானே நடக்கப் போகுது” இப்போது அவளால் பேச முடியவில்லை… தேம்ப ஆரம்பித்திருக்க
---
“இப்போ ஏன் அழற…” எனும் போதே… ஆராதனாவின் ஆட்காட்டி விரல் அவனைப் பார்த்து உயர்ந்திருக்க…
“என்னைப் பார்த்தா…”
“ஹ்ம்ம்ம்” வேகமாக ஆராதனா தலைஆட்டி இருக்க
----
“நீங்களும் வர்ரீங்களா… நாம ஜோடியா டீம் ஃபார்ம் பண்ணுவோம்… ப்ளான் சக்சஸ் பண்ணுவோம்…. என்ன வர்றீங்களா… என்னோட ப்ளானுக்கு நீங்க கோ ஆப்ரேட் பண்ணின போதும்… நான் சொல்றதை மட்டும் கேட்டா போதும்… எல்லாம் சுபம்… “ ஆராதனா சம்மனமிட்டு அவன் புறம் திரும்பி கேட்க…
---
“நானும் கேட்டுக்கிறேன் மேடம்… ஏன்னா எனக்கு எங்க பாஸ் முக்கியம்” செழியன் நக்கலாகச் சொன்னாலும் உள் அர்த்ததோடு சொல்ல… ஆராதனா இறங்கிக் கொண்டாள்… செழியனுக்கு ஊர்விஷாவை அறிமுகப்படுத்தவும் தவறவில்லை…
---
“ஓ… இப்போ உன்கிட்ட அந்த செழியன் பேக்கு… அக்கறைன்ற பேர்ல… எனக்கு ஒண்ணும் தெரியாது… நீதான் அவளைப் பார்த்துக்கனும்… அப்படி இருக்கனும்… அது இதுன்னு அட்வைஸ் பண்ணுச்சா….”
ஊர்விஷா… அவளை வித்தியாசமாகப் பார்க்க…
Adi paavi aarathana.. Ne killadi po...
Iva enna ilada vambellam vanguva pola
Sezhiyan bakaaaaa
Waiting ud