ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
ஹேப்பி ரீடிங்...
நன்றி
பிரவீணா
அத்தியாயம் 20
வாகனம் நிறுத்தும் இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு… செழியன் வேகமாக தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க… மணி 8.50 ஆகி இருக்க…
“10 மணிக்குத்தானே எக்சாம்னு சொன்னான்….” தனக்குள்ளே சொன்னபடி வேகவேகமாக அந்தக் கல்லூரியின் மைதானத்தை நோக்கிச் சென்றவன்…
“எந்த தைரியத்துல வந்தோம்… அவ எழுதப் போற செண்டர்னு தெரியும்… ஆனா எந்தப்பக்கம்… எந்த ஹால்.. எதுவும் தெரியாம எப்படி… சிங்கப்பூர்ல இருந்து காலைல வந்த கமலிட்ட கூட பேசாமல் வந்துட்டோம்… “ குழப்பத்துடன் வந்து கொண்டிருந்தவனின்… பார்வை அவனவளை சல்லடையாகத் அலசிக் கொண்டிருந்தது…
”எப்படியாவது நான் பார்த்துவிடுவேன்… என் கண்களில் படாமல் எப்படி…” மனதில் நம்பிக்கையோடு பார்த்தபடி அந்தக் கல்லூரியின் ஒவ்வொரு வளாகத்திலும் சுற்ற ஆரம்பித்தவன்… முகிலனையும் அலைபேசியில் அழைத்து திட்ட மறக்கவில்லை
“ஏண்டா… எல்லாம் கேட்டவன்… அவ எக்சாம் நம்பரையும் கேட்டிருக்கலாம்ல…. நம்பர் பேஸ் பண்ணித்தான் ஹால் அலார்ட் பண்ணிருக்காங்களாம்… பேரை எல்லாம் வச்சு தேட்றது வேஸ்ட்டுடா…”
”ஏண்டா நீ திட்ட மாட்ட… கல்யாண வேலைலயும் உனக்காக அவகிட்ட பேசி செண்டர் எங்கன்னு கேட்டு சொன்னேன்னு பாரு… எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்… நேர்ல பார்த்தா மட்டும் பேசிருவியோ… தனா போன் நம்பர் தான் இருக்கே பேச வேண்டியதுதானே… எங்க இருக்கன்னு கேட்க வேண்டியதுதானே… காலேஜ் முடிக்கிற வரை தொந்தரவு பண்ணமாட்டேன்னு… அப்புறம் என்ன… பார்க்க முடியலேன்னா கிளம்பு… ” முகிலன் பொங்க..
“டேய் நான் என்ன அவகிட்ட போய் என்ன பேச… ஜஸ்ட் தூரத்தில இருந்து பார்க்கலாம்னு வந்தேன்… சொல்லப் போனா என்னைப் பார்த்தா ஒழுங்கா கூட எக்சாம் எழுத மாட்டா…”
”தெரியுது தானே… அப்புறம் ஏண்டா… லவ்டுடே விஜய் மாதிரி அவ அலையுற… ஒண்ணு இப்பவே சொல்லப் போறேன்னு தேவையில்லாத இரண்டு கெட்டான் வயசுல பிடிவாதம் பிடிக்கிறது.. இப்போ சொல்லுடான்னா அவ படிக்கனும்… அவளுக்கு கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாதுனு…”
முகிலனுக்கு இப்போதெல்லாம் செழியன் மீது கோபமே…. காதலைச் சொல்லாமல் இழுத்தடிக்கிறான் என்று… அதுவும் ஆராதனாவுக்கு திருமண ஏற்பாடு நடந்து அது நின்ற பின்னாலும் இவன் இப்படி இருக்கிறான் என்ற கடுப்பில் முகிலன் நண்பனைத் திட்ட… செழியன் இப்போது
“தெரிலடா அப்போ அவ மனசைப் பற்றியெல்லாம் யோசிக்கல… சொல்லத் துடிச்சேன்… இப்போ ‘ஆரா’ கிட்ட வார்த்தையால என் காதலைச் சொல்றதைக் காட்டிலும் அதை அவளாவே புரிஞ்சுக்கனும்…. என்னையும் என் காதலையும் புரிஞ்சு என் கிட்ட பழகனும்னு நினைக்கிறேண்டா… நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்குடா… 9 வயசுலருந்து காத்துட்டு இருந்தவனுக்கு இன்னு ஒரு 6 மன்தஸ் பொறுக்க மாட்டேனா? ”
”என்னமோ பண்ணு… இப்போலாம் உன்னோட பொறுமை தான் எனக்கு பிடிக்கல… எனக்கென்னமோ அவகிட்ட சொல்ல பயப்பட்றியோன்னு தோணுது… வனிதா மேரேஜ்ல நீ அவகிட்ட பேசுவேன்னு நினச்சேன்… உன்னைப் புரிய வைப்பேன்னு நினச்சேன்… நேத்து ஒண்ணுமே நடக்கலை..”
சிரித்தான் செழியன்…
“இதுதான் உனக்கு எனக்கும் உள்ள வித்தியாசம்… அவ என்னைத் தேடுனாடா… கரெக்டா சொன்னா… நான் பந்தில வந்து அவகிட்ட பேச ட்ரை பண்ணேனே… அப்போ எழுந்து போயிட்டா தான்… ஆனா அதுக்கப்புறம் என்னைத் தேடுனாடா… எனக்கு அது நல்லாவே தெரியும்… காதல்னு நினச்சிருக்க மாட்டா… ஆனால் ஏதோ ஒரு வித்திசாயம் அவளுக்குமே ஃபீல் ஆகியிருக்குடா… “
செழியன் சொல்ல முகிலனுக்கு இப்போது நண்பன் மேல் இருந்த கோபம் போனவனாக
“ஹப்பாடா எப்படியோ அவளுக்காக நீ காத்துட்டு இருக்கேன்னு புரிய வச்சிருடா… எனக்கு ஒரு பெரிய மனபாரம் போகும்… ஆனாலும் லவ் பண்ற பொண்ணுகிட்ட இருந்து சிக்னல் வர்ற வரைக்கும் நண்பன்னு ஒருத்தன் ஞாபகம் இருக்கும்டா உங்களுக்கு… உங்க ஃபீலிங்க்ஸை எல்லாம் கொட்டோ கொட்டுவீங்க… பார்த்துட்டா… ஒண்ணு வெளில வராது…. இவ்ளோ பேசின பின்னால உன் ஆளும் உன்னை லைட்டா பார்க்கிறான்னு சொல்ற… இப்போ வனிதா மறு வீட்டு வேலைல பிஸியா இருக்கேன்… வந்து உன்னைக் கவனிச்சுக்கிறேன்” முகிலன் சொல்ல
அதற்கு மேலும் செழியன் அவனைத் தொந்தரவு செய்யவில்லை… முகிலனின் நிலையைப் புரிந்து கொண்டவனாக… போனை வைத்தவன் அதன் பிறகும் அந்த வளாகத்தை 4 முறை சுற்றி வந்தும்… கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகியும் ஆராதனாவைப் பார்க்க முடியாமல் போக… வந்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்வுக் கூடத்திற்கும் போயிருக்க… ஏமாற்றத்தில் மனமும் முகமும் சோர்வை ஒருசேரக் காட்டியிருக்க… அப்போது.. அவன் முகத்தில் பரவசம்…
அதற்கு காரணம் ஆராதனா இல்லை… செல்வி…
---
செல்வியும் கார்த்திக்கும்… அப்போதுதான் வளாகத்திற்குள் நுழைந்திருந்தனர்…..
சரியான நேரத்திற்கு வந்திருந்தாலும்… நேராக தேர்வுக் கூடத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இருவருக்கும் பதட்டம் இருக்க… இருந்தும் அதையும் மீறி… கார்த்திக்கும் செல்வியும் காதல் மொழி பேசிக் கொண்டிருக்க… அதே நேரம் நரேனும் அங்கு வந்திருந்தான்…
“இவங்க எல்லாரும் இருக்காங்க… ஆரா எங்க… எக்சாமுக்கு வரலையா…” அவர்கள் மூவரும் அறியாதவாறு செழியன் குழப்பத்துட மறைந்து நின்றிருந்தான்… அவர்கள் பேசிக் கொண்டே இவனை நோக்கி வர… இன்னும் தன்னை மறைத்து நின்றிருக்க
“செல்வி… உன்னோட ஹால்… அந்த கார்னர் லெஃப்ஃப் ப்ளாக்… சீக்கிரம் வா… ஹால் டிக்கெட் எங்க எடு” நரேன் செல்வி கார்த்திக்கை அழைத்துச் செல்ல…
“தனா உள்ள ஹாலுக்கு போயிட்டாளா…” செல்வி நரேனிடம் கேட்ட போது செழியனைக் கடந்து சென்றாள்…
அவர்கள் பேசிச் சென்றதில் முக்கால் வாசி காதில் விழ… அதில் இருந்து… ஆராதனா சீக்கிரமே வந்துவிட்டாள்.. செல்வி தாமதமாக வந்திருக்கின்றாள் என்பதை செழியன் புரிந்து கொண்டவனாக… அவளைப் பார்த்துவிட்டு அலுவலகம் கிளம்பிவிடலாம் என்று வந்தவன்… ஆராதனா எழுதி முடித்துவிட்டு வரும்போது பார்த்துவிட்டே செல்லலாம் என்று அலுவலகத்துக்குச் செல்லாமல்… மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தான்… கொஞ்சம் கூட யோசிக்காமல்…. முக்கியமான தொழில்முறைச் சந்திப்பை… ஆராதனாவின் தரிசனத்துக்காக ரத்தும் செய்திருந்தான் செழியன்….
----
செல்வி தேர்வறைக்குள் சென்ற பிறகு நரேன் மட்டுமே அங்கிருந்து சென்றிருக்க… கார்த்திக் செல்லவில்லை… கார்த்திக் செல்லாதது செழியனுக்கு ஒரு விதத்தில் கடுப்பாக இருந்தாலும் எப்படியும் அண்ணன் இருக்கும் இடத்திற்கு ஆராதனா வருவாளே… தேடத் தேவையில்லை… பரவாயில்லை பேச முடியாவிட்டாலும் பார்த்து விட்டாவது செல்வோம்… என்று கார்த்திக் பார்க்காதவாறு தள்ளி நின்று ஆராதனா வருகைக்காக காத்திருக்க…
நினைத்தது போலவே ஆராதனாவும் செல்வியும் தேர்வு எழுதி முடித்து விட்டு நேராக கார்த்திக் இருக்கும் இடத்திற்கு வந்திருந்தனர்…
ஆராதனா இளம் நீல வண்ண சார்ஜெட் சல்வாரில் தேவதை போல வந்து கொண்டிருந்தாள்… செல்வியெல்லாம் செழியன் கண்களுக்கு தெரிவாளா என்ன?
முகமெங்கும் உற்சாகம் ஆராதனாவிடம்… உற்சாகமாக சந்தோஷமாக அவன் தேவதையைக் கண்டதில் இவனின் முகமும் சந்தோசத்தை பரவவிட… ஆராதனா செல்வியோடு பேசிக் கொண்டிருந்த விதமே … இருவரும் தேர்வு நன்றாக எழுதி இருக்கிறார்கள் என்பது இவனுக்கும் புரிந்தாலும்…
“நம்மாளு சிரிக்கிறான்னு சந்தோஷமா இருக்கான்னு அவ நல்லா எழுதி இருக்கான்னு நம்ப முடியாதே…” என மனம் ஒருபுறம் நினைத்தாலும்..
“அதெல்லாம் செல்வி படிக்க வச்சிருப்பா…” என்றபடியே…
“இனி என்ன… பக்கத்துல போய் நின்னு பேச முடியாது… வில்லன் மச்சான் இருக்கான்… நாம போனா கண்டிப்பா பிரச்சனை ஆகும்… பார்த்தது வரை சந்தோசம்… இனி கிளம்பலாம் “ என்று கிளம்ப நினைத்த போதே…
செல்வியும் கார்த்திக்கும் ஆராதனாவை விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்ல… செழியனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை… கார்த்திக் அவன் தங்கையைத் தனியாக விட்டு விட்டு செல்கிறான்… கோபத்தில் ஆரம்பித்து… ஆராதனா தனியாக என்ற நினைவில்…
“ஆரா மட்டும் தனியா இருக்கா… அப்போ நான் பேசப் போறேனா… அவளோட டைம் ஸ்பெண்ட் பண்ணப் போறேனா… அவளுக்கு சந்தேகம் வராத மாதிரி எப்படி இங்க வந்தோம்னு சொல்றது… ப்ச்ச்… செல்வியை வச்சு ஏதாவது காரணம் சொல்லிக்கலாம்… சமாளிடா செழியன்” மனதுக்குள் குதியாட்டம் போட ஆரம்பித்தபடி… ஆராதனாவை நோக்கி உற்சாககமாக எட்டு வைத்த போதே… எங்கிருந்தோ வந்தது அந்த ஆட்டோ... அந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்த ஆராதனா மின்னல் வேகத்தில் மறைந்திருந்தாள் அவனை விட்டு…
-----------
ஆட்டோவில் ஏறி நிதானமாக நரேனை அழைத்தாள் ஆராதனா
“செல்விண்ணா… நான் அங்க வெயிட் பண்ணல…. நீங்க உங்க மீட்டிங்க முடிச்சுட்டு பதறாம வாங்க… எவ்ளோ நேரமானாலும் பராவாயில்ல… நான் கோவில்ல வெயிட் பண்றேன் ”
….
“ஹ்ம்ம்… அண்ணாவும் செல்வியும் ஈவ்னிங் வர்றதா சொல்லிட்டாங்க… நம்ம ரெண்டு பேரையும் வீட்டுக்கு போகச் சொல்லிட்டாங்க…”
…
“அதெல்லாம் பயம் இல்லை… நான் ஏற்கனவே சென்னை வரும் போதெல்லாம் அத்தை கூட அடிக்கடி போயிருக்கேன்…
---
“சரி… சரி… பத்திரமா இருக்கேன்…. நான் லைவ் லொகேஷனும் ஷேர் பண்ணியிருக்கேன்… போதுமா… எங்க போனாலும் உங்க போன்ல கேட்ச் பண்ணிட்டு வந்துற மாட்டீங்க..” என்றபடியே…
“அப்புறம் நம்ம டீல் ஞாபகம் வச்சுக்கங்க… மறந்துராதீங்க…” என்றவளிடம்
சரி என்று சொன்னவனாக…. அவள் பாதுகாப்பை உறுதி செய்தவனாக நரேனும் போனை வைத்திருந்தான்…
இங்கு அலைபேசியை அணைத்த ஆராதனாவின் மனதில் செல்வி… காயத்ரி… காவேரி என அலைபாய ஆரம்பித்திருக்க… மனதை திசை மாற்ற நினைத்தவள்… முன்னால் அமர்ந்திருந்த ஆட்டோ ஓட்டுனர் பெண்ணைப் பார்த்தவள்…
“நீங்க எவ்ளோ வருசமா ஓட்டறீங்க அக்கா… ”
“இதுதான் உங்க தொழிலா… இல்ல பார்ட் டைமா பண்றீங்களா” விசாரிக்க ஆரம்பித்திருந்தாள்…
---
கோவில் வாசலுக்கு முன் சரியாக வந்து ஆட்டோவை நிறுத்தியிருந்தாள் ….
“தேங்க்ஸ்…. என்னை நம்பி ஆட்டோவைக் கொடுத்ததுக்கு” என்றபடி ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கியவள்… பணத்தை நீட்ட…
“அம்மா தாயே… என் ஆட்டோவைத் திருப்பி என்கிட்ட கொடுத்தியே அதுவே போதும்… நான் வர்றேன்… ” என்றபடி அந்த ஆட்டோ ஓட்டுனர் பெண் கிளம்ப…
“அக்கா… ஸ்ட்ரீட் தெரியலேன்னு சொன்னதால… நான் ஓட்டுனேன்… அதுக்காக இவ்ளோ பயம் எதுக்கு… ஆட்டோவை பத்திரமா ஒப்படைச்சுட்டேந்தானே… அப்புறம் என்ன… சரி சரி… உங்க நம்பர் என்கிட்ட இருக்கு… எனக்கு எப்போ ஆட்டோ வேணுமோ… அப்போ கால் பண்றேன்… “ ஆராதனா சத்தமாகச் சொல்ல… அதெல்லாம் கேட்க அந்தப் பெண் அங்கு நின்றால் தானே… தப்பித்தோம் பிழைத்தோம் எனப் பறந்திருக்க…
ஆராதனாவும் கோவிலுக்குள் நுழைந்திருந்தாள்… சென்னை வரும் போதெல்லாம் அவள் அத்தை… கமலியோடு இங்கு வந்தது ஞாபகம் வந்திருக்க…. மனதில் பழைய நினைவுகள்…
“பாப்பா… அக்கா கையைப் பிடிச்சுக்கோ… “ கமலியின் வார்த்தைகள் இப்போதும் அவள் காதுகளில் ஒலிக்க… கண்கள் கலங்கிய நிமிடத்திலேயே தன்னை மீட்டெடுத்தவளாக… சன்னிதிக்கு சென்று கருவறையில் இருந்த அம்மனை தரிசித்து விட்டு… மற்ற தெய்வங்கள் வணங்கியபடியே பிரகாரத்தைச் சுற்றி வந்துக் கொண்டிருந்த போதே நரேனும் அழைத்திருந்தான்…
இன்னும் ஐந்து நிமிடத்தில் அங்கு வந்து சேர்வதாகச் சொல்லி விட்டு… போனை வைக்க… கோவில் வளாகத்தில் வந்து அமர்ந்தாள் ஆராதனா…
சொன்னபடியே சில நிமிடங்களில் நரேனும் உள்ளே வந்திருக்க…
”ஏன் உள்ள வரச் சொன்ன… சரி கிளம்பலாமா… அத்தையும் மாமாவும் எனக்கு போன் போட்டுட்டாங்க…” நரேன் சொல்ல…
“செல்விண்ணா கோவிலுக்கு வந்துட்டு வா வான்னா என்ன அர்த்தம்… சாமிக்கு ஒரு ஹாய் மட்டும் சொல்லிட்டு வாங்க…” என்றபடி அவனோடு மீண்டும் கர்ப்ப கிரகத்திற்குச் செல்ல… அங்கு தீபாராதனையும் நடக்க…
“மனசுல ஏதாவது நினச்சு வேண்டிக்கங்க…” என்றவளிடம்… நரேன் சிரித்தாலும்…
“நினச்சு வேண்டுற அளவுக்கு யாரும்… ஏதும் இல்லை…” மனதுக்குள் வெறுமையாக சொல்லிக் கொண்டவனுக்கு… அவனையுமறியாமல்…. ’பூஜா’ ஞாபகங்கள்…
“விலகி விலகி ஓடினாலும்… அவளின் மீதான ஒருதலைக் காதல்… செல்லாக் காசானா ஒருதலைக் காதல்… அனுதினமும் அவனைக் கொல்லும் நினைவு… ” விரக்தியுடன் கண்களை மூடித் திறந்தவன்… அர்ச்சகரிடம் பிரசாதத்தை வாங்கி நெற்றியில் வைத்துக் கொண்டவன்…
“போகலாமா…” என்று ஆராதனாவைக் கேட்க…
அவளோ தன் கையில் வைத்திருந்த சிவப்பு ரோஜாவை அவன் கையில் திணித்தாள்….
“செல்விண்ணா… உங்களுக்காக… வாங்கினேன்…. சிவப்பு பூ வந்தா உங்க மனசுல நினைச்சது நடக்கும்… நீங்க மனசுல நினச்சது உங்களை வந்து சேரும்”
இப்போது நரேன்…
”சரிங்க பெரிய மனுசி… நீங்க சொல்லிட்டீங்கள்ள… நடக்காம இருக்குமா… வாங்க போகலாமா” என்றவன் முன்னே நடக்க…
“டீல் ஞாபகம் இருக்குதானே… நான் தான் கார் ஓட்டுவேன்… ஆனால் வீட்ல யார்கிட்டயும் சொல்லக் கூடாது…” ஆராதனா பின்னால் இருந்து ஓடி வந்து அவன் முன் வந்து கேட்க
“அராத்து வா…“ என்றபடி முன்னே சென்றவனுக்கு கார்த்திக்கின் ஞாபகம் வந்தது…
இருவருமே ஆராதனா… செல்வி இவர்களைப் பற்றி பேசும் போதெல்லாம் பழகும் போதெல்லாம்.. குறும்பான குழந்தைகள் போலப் பாவித்துதான் பேசி வந்தனர்… பழகி வந்தனர்… ஆராதனா இப்போதும் அப்படித்தான் அவனிடம் பழகி வருகிறாள்… ஆனால் தன் தங்கை செல்வி கார்த்திக்கிடம் எங்கு தடுமாறினாள் தெரியவில்லை…. நரேனுக்கு நன்றாகவேத் தெரியும்… கார்த்திக் செல்வியோடு ஒரு போதும் தவறான நோக்கில் பழகியதில்லை… ஆராதனாவோடு இவன் பேசுகிற அளவுக்கு கூட கார்த்திக் செல்வியுடன் பேசியதில்லை…
“ஹ்ம்ம்… எல்லாம் முடிந்து விட்டது… இதோ நண்பனும்… சம்சார சாகரத்தில் இறங்கி விட்டான்… இருவரும் காதல் பறவைகளாகப் பறக்க ஆரம்பித்து விட்டனர்… இதில் முக்கியமாக கார்த்திக் இந்த வாழ்வை சந்தோசமாக ஏற்றுக் கொண்டு விட்டான்… அதுதான் நரேனுக்கு பெரிய சந்தோசம்… தங்கையின் சந்தோசம்… அவளது விருப்பம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நண்பனின் சந்தோசம் அவன் மனநிம்மதியும் முக்கியம்… தங்கை முகத்தில் இருந்த பூரிப்பை விட தன் நண்பன் கார்த்திக்கின் முகத்தில் இருந்த சந்தோசம்… தன் தங்கை செல்வி மீதான காதல்” என எல்லாமே நினைத்த நரேனுக்கு நிம்மதியைத் தர… அதில் நிம்மதிப் பெருமூச்சு வந்திருந்தது…
தன் நண்பன் கார்த்திக், தன் தங்கை என யோசிக்க ஆரம்பித்தவனுக்கு… திருமண வாழ்க்கை என்ன… அதன் புரிதல் என்ன… சிந்தனை ஓட ஆரம்பித்திருக்க… அவனையும் அறியாமல் முகத்தில் மலர்ச்சியைத் தந்திருக்க… புன்னகையுடன் தன் கையில் இருந்த ஆராதனா கொடுத்த ரோஜாவைப் பார்த்தபடி இருந்தவனிடம்…
“செல்விண்ணா சாவி சாவி…” என்றபடி செல்வி கையை நீட்ட…. நரேன் நடப்புக்கு வந்தவனாக… அவனின் கார்ச் சாவியை ஆராதனாவிடம் கொடுத்தான்…
“ஹேய்… தேங்க்யூ… தேங்க்யூ. எங்க காரை பார்க் பண்ணிருக்கீங்க… நானே எடுக்கிறேன்… அப்போதான் நம்புவீங்க…” வேகமாகத் திரும்பி உற்சாகமாக வாயிலை நோக்கி கிட்டத்தட்ட ஓடும் பாவனையில் எட்டெடுத்து வைக்க…
“பாப்பா…” தன் முன்னால் நின்று தன்னை அழைத்தவளின் மீது மோதாமல் நின்றவளிடம் மௌனம் மட்டுமே… நிமிர்ந்து கூட ஆராதனா கமலியைப் பார்க்கவில்லை…
”தனா…” என்று ஆராதனாவின் கைகளைப் பற்றிய கமலி… அதே நேரம் பின்னால் வந்த நரேனைப் பார்த்து விட்டு… குற்ற உணர்ச்சியுடன் சில நொடி தவித்தாலும்… பின் தன்னைச் சமாளித்துக் கொண்டவளாக புன்னகைத்தாள்…
இவள் ஊருக்கு வரும் போதெல்லாம் நரேன் வேண்டுமென்றே கார்த்திக்கை வைத்துக் கொண்டு… இருவரையும் கிண்டல் செய்து விளையாடுவான்…
“என்ன டாக்டரம்மா… எப்போ படிச்சு முடிப்பீங்க… லேட் ஆகும்னா சொல்லுங்க… என் ஃப்ரெண்ட் கார்த்திக்கை கம்பவுண்டர் போஸ்ட்டிங்க்கு ட்ரை பண்ணச் சொல்லிறேன்…” கார்த்திக் நண்பனை விளையாட்டாக அடித்தாலும் விடாமல் நரேன் கமலியைக் கேலி செய்வதை விடமாட்டான்…
“கமலி நீ போ” கார்த்திக் தான் காப்பாற்றி விடுவான்… அப்போதெல்லாம் கமலி பதில் பேசாமல் அவஸ்தையான புன்னகையுடன் கடந்து சென்றிருக்கின்றாள்… அந்த அவஸ்தையான புன்னகைக்குப் பதிலாக தன் விருப்பமின்மையை காட்டி இருக்கலாம்… பண்ணவில்லையே இவள்… நரேனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லைதான்… இருந்தும் வேறு வழி இன்றி பார்த்து வைத்தாள்
“நரேண்ணா நல்லா இருக்கீங்களா… செல்வி எப்படி இருக்கா…”
நரேனும் சில நிமிடம் தயங்கியவன் பின் என்ன நினைத்தானோ
“கமலி நல்லா இருக்கியா… சிங்கப்பூர்ல இருக்கேன்னு சொன்னாங்க” என்ற போதே…
ஆராதனா , கமலி பற்றியிருந்த தன் கையை… உதறியவளாக…
“செல்விண்ணா… நான் கார்ல வெயிட் பண்றேன்… பேசிட்டு சீக்கிரம் வாங்க…” அவளின் குரலில் அத்தனை வெறுப்பு படர்ந்திருக்க… அது அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது… ஆனாலும் ஆராதனா நிமிராததால் கமலியால் கண்டுபிடிக்க முடியவில்லை….
“ஏய் தனா… ஏய் பாப்பா” கமலி அவள் கைகளை மீண்டும் பிடிக்க…
“கையை விடுங்க… அதான் ஒரே அடியா விட்டுட்டு போயிட்டிங்கள்ள… இன்னும் என்ன இருக்கு…” என்றவள் படபடத்து சொன்னவள் அடுத்து ஒரு நொடி கூட நில்லாமல் வேகமாக ஓடியிருக்க…
கமலியின் கண்கள் அனிச்சையாகவே கண்கள் கசிந்து சிவக்க ஆரம்பித்திருந்தது…
”கமலிக்கா… கமலிக்கா…” வாய் ஓயாமல் அழைத்தவள்…
இவள் அருகே நின்றால்… இவள் கைகளை எப்போதும் பற்றியபடி கோர்த்துக் கொண்டே இருப்பவள்… ஒரு நொடிக்குள் ஆயிரம் வார்த்தை சரம் சரமாக கோர்த்து இவளோடு உரையாடுபவள்… இன்று தன்னை உதறிச் செல்கிறாள்…
சட்டென்று கண்களில் இருந்து கண்ணீர் கரை இறங்க… துடைத்தவள்… மீண்டும் ஆராதனாவை நோக்கிச் செல்ல… நரேன் தடுத்து நிறுத்தினான்…
“கமலி… விடு… நான் பார்த்துக்கிறேன்… சில விசயங்கள் சீக்கிரமா மனசை விட்டு போகாது… அவ உன் பின்னாலேயே சுத்திட்டு இருந்தவ… நீதான் அவ வீட்டுக்கு அண்ணியா வரப் போறேன்னு கனவுல இருந்தவ… அது நடக்காத கோபம்… மெல்ல மெல்லத்தான் சரி ஆகும்… ”
ஆராதனா போவதைப் பார்த்தபடியே ஆனால் அவளிடம் செல்லாமல் இப்போது நின்றிருந்தவள்…
“நான் பண்ணினது தப்புதான் அண்ணா.. பெரிய தப்புதான் அண்ணா… நீங்க கார்த்திக் அத்தானோடு என்னை சேர்த்து வச்சு உரிமையா பேசும்போது… நான் அதை என்கரேஜ் பண்ணியிருக்கக் கூடாது… மறுத்து பேசி இருக்கனும்… அட்லீஸ்ட் என்னோட பயத்தை உங்ககிட்டயாவது சொல்லி இருக்கனும்… நீங்களாவது கார்த்திக் அத்தான் கிட்ட சொல்லியிருப்பீங்க…” என்றவள்… என்ன நினைத்தாளோ
“கார்த்திக் அத்தான் ந… நல்லா இருக்காங்களா… செல்வி நல்லா இருக்காளா… நல்லா வச்சிருக்காரா…” தடுமாறி தயங்கித் தயங்கிக் கேட்க…
“அவங்க ரெண்டு பேரும் நல்லாருக்காங்க… நீ உன் லைஃப எந்த குற்ற உணர்ச்சியுமில்லாமல் வாழு கமலி…” என்றவனுக்கு.. அப்போதுதான் ஆராதனாவிடம் கார்ச் சாவியைக் கொடுத்த ஞாபகம் வந்திருக்க… காரை எடுத்து சென்றிருப்பாளோ…
கமலியிடமிருந்து அவசர அவசரமாக விடைபெற்று வெளியே வந்திருக்க… அவனது கார் அவன் நிறுத்திய இடத்திலேயே நின்றிருக்க… அப்போதுதான் அவன் மூச்சு திரும்பி வந்திருந்தது…
வேகமாக காரின் அருகே செல்ல… ஆராதனா ஓட்டுனர் இருக்கையின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்க… அவள் இறுக்கமாக… சாலையைப் பார்த்து அமர்ந்திருந்த விதமே அவள் கோபத்துடன் இருப்பது தெரிய… அவள் அமர்ந்திருந்த புறம் வந்தவனாக
“மேடம்… கார் ட்ரைவர் சீட் அந்தப் பக்கம்.. மறந்து இந்தப்பக்கம் இருக்கீங்க” என்று நரேன் அவளை கலகலப்பாக்க முயல…
சாவியை அவன் கையில் கொடுத்து விட்டு ஆராதனா அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் அமர்ந்து சாலையை மீண்டும் பார்க்க ஆரம்பிக்க… நரேனும் அதற்கு மேல் ஏதும் பேசாமல்… வண்டியை அங்கிருந்து கிளப்ப… அடுத்த சில நிமிடங்களில்… செழியனின் கார் நரேன் வாகனம் நின்ற இடத்தில் வந்து நின்றது…
---
“ஏய் கமலி…” ஏதும் பேசாமலே அமர்ந்திருந்த கமலியிடம் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவனாக செழியன் கடுப்பாக அழைக்க… கமலி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்… அவள் கண்கள் சிவந்திருந்தது செழியன் பார்வைக்குத் தப்பவில்லை
“என்னாச்சு…”
“சொன்னாதானே தெரியும்… காலையில வந்த… இப்போ கோவிலுக்கு மனசு சரியில்லேன்னு வந்து நின்னா என்ன அர்த்தம்… போன் பண்ணி ’மிதுன்’ போன் போட்டு என்னைத் திட்றாரு… என் பொண்டாட்டி மனசு சரியில்லேன்னு கோவிலுக்கு போயிருக்கா… உடனே கிளம்பிப் போன்னு…”
“அதான் உடனே வந்துட்ட போல… உனக்கு உன் ஆஃபிஸ் மீட்டிங்க் தானே முக்கியம்… பேசனும்னு சொன்னா… முக்கியமான மீட்டிங்… இன்னைக்கு ஃபுல் டே அப்பாயிண்ட்மெண்ட்… அக்ரிமெண்ட் சைன் அது இதுன்னு…” கமலி முறைக்க…
“சாரி… ” செழியன் அவளைப் பார்க்காமல் சொல்ல…
“இப்போ எப்படி வந்த… இப்போ எப்படி மீட்டிங் இடையில வந்த… மிதுன் சொன்னதாலயா…”
“ப்ச்ச்… அதெல்லாம் விடு… மீட்டிங்க கேன்சல் பண்ணிட்டேன்…”
“ஏன்… ஒன் மந்த் முன்னாடியே ஃபிக்ஸ் பண்ணது… க்ளைண்ட்ஸ்லாம் நேத்தே வந்து வெயிட் பண்றாங்கன்னு சொன்ன… என்னாச்சு” கமலி காரணம் கேட்க…
“அம்மா தாயே… எனக்கு அதை விட முக்கியமான மீட்டிங் வந்திருச்சு… சீக்கிரம் முடிஞ்சிரும்னு நெனச்சேன்.. கொஞ்சம் எக்ஸ்டண்ட் ஆகியிருச்சு.. என்னை விடு… உன் விசயத்துக்கு வா… என்னாச்சு… மிதுன் எல்லாம் சொன்னாரு… நீ இன்னமும் கிராமத்துல இருந்த கமலியாத்தான் இருக்க… ஹாஸ்டல்ல இருக்க பயமா இருக்கு… அங்க இருக்க பசங்களப் பார்த்தா பயமா இருக்கு… நா படிக்கலேன்னு வந்து வீட்ல அழுத பாரு… அதே கமலி… இன்னும் மாறவே இல்லை…”
கமலி அமைதியாக தரையைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்…
பதிலே பேசாமல் அவள் அப்படியே அமர்ந்திருக்க… செழியனுக்கோ கோபம் எகிற ஆரம்பித்திருக்க… இருந்த பொறுமை எல்லாம் பறந்து கோபப்பட்டு கத்த ஆரம்பிக்க எத்தனித்த போதே
“நான் எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்ல செழியா… நான் நம்ம ஊரை விட்டு வந்திருக்கவே கூடாது… அப்போ உங்கள ஊர்ல இருந்து பிரிச்சேன்… இப்போ நம்ம மாமா குடும்பத்துட்ட இருந்து பிரிச்சுட்டேன்… நானும் சந்தோசமா இல்ல… மிதுனையும் கஷ்டப்படுத்துறேன்” கமலியின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள்.. தரையில் விழுந்திருக்க…
செழியன் பதறவெல்லாம் இல்லை…
“இங்கபாரு கோவில்னு பார்க்கிறேன்… இல்லை… ஒரே அறைதான்… இன்னொருத்தர் மனைவி… வேறொரு வீட்டுக்கு போயிட்டன்லாம் பார்க்க மாட்டேன்… இப்போ என்ன பிரச்சனை உனக்கு… யாராவது ஏதாவது சொன்னாங்களா… சொல்லு… “ தன் சகோதரியின் முகத்தை நிமிர்த்த
“அதெல்லாம் இல்ல…” எங்கோ பார்த்தவள்…
“லாஸ்ட் வீக் டெஸ்ட் ரிப்போர்ட் வந்தது…” சொல்லி முடிக்கவில்லை… மீண்டும் அழ ஆரம்பித்திருக்க..
செழியன் இப்போது… நிதானமாக அழுத்தமாகப் பேசினான்…
“பாஸிபிலிட்டியே இல்லைனு வரலைல…” சொன்ன செழியனை நிமிர்ந்து வேகமாகப் பார்த்தாள் கமலி… தன்னைப் பார்த்த தன் சகோதரியிடம்
”மிதுன் எல்லாம் சொன்னாரு… நீயே ஒரு டாக்டர்… ஆனால் எனக்கு இப்போலாம் ஒரு சந்தேகம் வருது… நீ உண்மைலேயே டாக்டருக்கு படிச்சியான்னு… ’மிதுன்’ அவ்ளோ நம்பிக்கையா பேசுறாரு… உனக்கு என்ன ஆச்சு… நீ அவரையும் கஷ்டப்படுத்தி… உன்னையும் கஷ்டப்படுத்திக்கிட்டு… “என்றவன்… வேகமாக
“அம்மா அப்பாகிட்ட ஏதும் சொல்லி வைக்காத… முக்கியமா அம்மாகிட்ட… ஏற்கனவே அவங்க நொந்து போயிருக்காங்க”
“ஹ்ம்ம்… தெரியும்… சொல்லல” என்ற கமலியிடம்
“கமலி… ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற… மெடிக்கல் ஃபீல்ட் எங்கயோ போயிட்டு இருக்கும… சராசரி பொண்ணுங்க கூட தைரியமா இருக்காங்க…ஆனா அதே ஃபீல்ட்ல இருக்கிற நீ” என்ற போதே…
“ஆனால் நான்… பயமா இருக்கு செழியா… நம்ம மாமா குடும்பத்துக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேனே… அவங்க சாபம்… என்னை விட்ருமா… அதான் பயமா இருக்கு செழியா… ”
“ஹேய்…. கமலி…” என்றபடி… தன் அக்காவின் எழுந்து அக்காவின் அருகில் அருகில் அமர்ந்தவன்….
“நம்ம மாமா குடும்பம் அது… நம்ம மேல சாபம் விடுவாங்களா என்ன… ஆயிரம் கோபம் இருக்கும்… ஆனா நாம நல்ல இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறவங்களா அவங்க… சாபம் அது இதுன்னு பெரிய வார்த்தை பேசுற…”
கமலி இப்போது யோசித்தாள்… ஆராதனாவைப் பார்த்தது… அவளோடு பேசாமல் சென்றது … செழியனிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்தவள்…
“வேண்டாம்… இவளைப் பார்த்துவிட்டு ’தனா ’பேசாமல் சென்றாள் என்று தெரிந்தால் செழியன் ஆராதனாவின் மேல் கோபப்படுவான்… சும்மாவே அவளைத் திட்டுபவன்… நேரில் எங்காவது பார்த்தால்… என் அக்காவிடம் பேசாமல் சென்றாயாமே… அவ்ளோ திமிரா என்று மிரட்டுவான் அந்த அப்பாவிப் பெண்ணை… வேண்டாம் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தவளாக…
“சரி… கிளம்பலாமா…” என்று கமலி எழ... செழியனும் எழுந்தான்.. இருவருமாக கோவிலை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்திருந்தனர்…
“செழியா…” முன்னால் சென்ற செழியனை கமலி அழைத்தாள்…
செழியனும் திரும்பினான்…
“அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்கடா… நம்ம ஊர் பக்கத்தில இருந்து வந்த சம்பந்தம் வேண்டாம்னு நீ சொன்னதை நினச்சு… நீயும் என்னை மாதிரி நம்ம சொந்தமே இல்லாம வேற யாரையோ மேரேஜ் பண்ணிருவியோன்னு பயப்பட்றாங்கடா…”
செழியன் தன் சகோதரியைப் பார்த்தான்…
“இங்க பாரு கமலி… உனக்குச் சொன்னதுதான் எனக்கும்.. மேரேஜ்ன்றது குடும்பம் சம்பந்தப்பட்டதுதான்… ஆனால் அதுக்கும் மேல மேரேஜ் பண்ணிக்கப் போற அந்த ரெண்டு பேரும் முக்கியம்… உன்னோட உணர்வுகளை நான் மதிச்சேன்… அதுல யாரையும் தலையிட விடல… மேரேஜும் பண்ணி வச்சேன்… அதே மாதிரிதான் எனக்கும்… “
”புரியுது செழியா… ஆனால் நான் என்ன சொல்ல வர்றேன்னா..” என்ற போதே
“இங்க பாரு… என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியும்… சீக்கிரம் அம்மா சரி ஆவாங்க…”
“எப்படி” கமலி ஆர்வமாகக் கேட்க
“மாமா வீட்டோட நம்ம அம்மாவை பேச வச்சுட்டாலே போதும்.. எல்லாம் சரி ஆகிரும்…”
“ஹ்ம்ம்ம்… முதல்ல கூட ஓரளவு நம்பிக்கை இருந்தது… காரணம் சித்தி…. இப்போ அவங்களே நம்மகிட்ட பேச மாட்டேங்கிறாங்க… எங்க இருந்து…”
“அதெல்லாம் நடக்கும்… “ என்ற போதே
“அப்போ நான்…” கமலி கேட்க
“உன் பிரச்சனை அது… நீதான் அதை சரி பண்ணனும்… நீதான் உங்க அத்தையோட செல்ல மருமகளாச்சே… அவங்ககிட்ட நீ போய்ப் பேசுனா… எல்லாம் சரி ஆகிரும்” செழியன் நக்கலாகச் சொல்ல
”எங்க அத்தையைக் கிண்டல் பண்ணலேன்னா… எங்க தனாவை திட்டலேன்னா உனக்கு தூக்கமே வராதே…” என்ற போதே செழியனின் முகம் ஆயிரம் கதிரவனின் பிரகாசத்தைக் கொண்டு வந்திருக்க…
தன் தம்பியின் முகத்தில் இருந்த பிரகாசம்… கமலிக்கு வேறு ஒருவரை ஞாபகத்துக்கு கொண்டு வந்தது…
“பூஜா எப்படி இருக்கா… அடிக்கடி பேசுறியா… “ செழியனின் முகத்தைப் பார்த்தபடியே கமலி கேட்க
“அடிக்கடியா.. ஒரு நாளைக்கு பல தடவை பேசுவேன்… பேசாமl எப்படி இருக்க முடியும்…” செழியன் முகம் இப்போது இயல்பாக வந்திருந்தது… பூஜாவைப் பற்றி சொல்லி முடிக்கும் போது
கமலி இப்போது அவனைப் பார்த்த பார்வையில்…
“பூஜா எனக்கு எப்போதுமே ஃப்ரெண்ட்தான்… அம்மாகிட்ட ஆயிரம் தடவை சொல்லிட்டேன்… உன்னையும் இப்போ கிளப்பி விட்ருக்காங்க… அதே நேரம் என்னை அவங்க விருப்பத்துக்கு ஆட வைக்கவும் முடியாது…” என்றவனிடம்…
“செழியா… அதைத்தான் நானும் சொல்றேன்… அம்மா பார்க்கிற வரனை ஒத்துக்கோன்னு நானும் சொல்லல… உனக்கு யாராவது பிடிச்சிருந்தா சொல்லுனுதான் சொல்றேன்…”
“பூஜான்னாலும்” என்ற கமலியின் வார்த்தையில் செழியன் கண்கள் சிவந்து முறைக்க…
“சரி பூஜாவைப் பற்றி சொல்லல… வேற யாரையும்னாலும்… நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்…” தன் சகோதரனை இயல்பாக்கும் முயற்சியில் தன்னையும் இயல்பாக்கியவளாக… இருவரும் பேசியபடியே வெளியே வந்து காரில் வந்து அமர்ந்திருக்க…
“இனிமேல்தான் ஸ்டார்ட் பண்ணனும்…” கமலி கேட்ட கேள்விக்கு இப்போது பதில் சொன்னான்… சொன்னபோதே செழியனின் முகமெங்கும் புன்னகை விரவியிருக்க… கூடவே சின்னதாக படபடப்பும் இருந்ததோ… தன் உணர்வுகளை மறைக்க பெரும்பாடு பட்டு முயற்சித்துக் கொண்டிருந்தான்…
கமலி தன் தம்பியை குனிந்து பார்த்தவள்…
“செழியா பொண்ணு பார்த்துட்டியா… என்ன ஆஃபிஸ்லயா…”
செழியன் முறைத்தவனாக பதிலேதும் பேசாமல் இருக்க
“ஃப்ரெஷர்ஸ்லாம் கேம்பஸ்ல எடுத்திருக்கேன்னு சொன்னதானே… அதான் கேட்டேன்… நீ வேற ஸ்டார்ட் பண்றேன்னு சொன்னியா…” என்றவளிடம்
“ஹ்ம்ம்ம்… நான் காரை ஸ்டார்ட் பண்ணனும்னு சொன்னேன்… நீ தப்பா எடுத்துட்ட போல… போலாமாக்கா” என்ற செழியனைப் பார்த்த கமலி…
“காமெடிலாம் பண்றாரு என் தம்பி… அடடே ஆச்சரியக்குறி… ”
வாய் விட்டு சிரித்த செழியன்…
“அடிக்கடி ஆச்சரியக் குறி போட ரெடியா இரு…” என்றபடி தனது காரை ஸ்டார்ட் செய்திருந்தான்….
----
Weekly ud podunga praveena. Kathaiya manasula niruthavey mudiyala. Romba late ah ud kudukarenga. Epdi tan readers porumaiya masa kanaka varusa kannaka wait pandrangalo. Enaku kovama varuthu daily vanthu check Pani. Weekly once r twice ud kuduka try panunga 😁
Nice episode.
Nice episode.. Yepo aara chezian luv open pana porenga? Exicted....
Nice
Lovely update praveee
Pooja narenuku kidaicha
Naren ezhil problam solve agum
Iva athaya pukumam ana atha magala pazhivanga poralam gd joke
Kamazhi fell free ellam sariyagim
Ezhiluuu business la kotta vitratha jolliten