/* கண்மணி என் கண்ணின் மணி... எழுத மைண்ட் செட் ஆகலை... இங்க வந்துட்டேன்... நாளைக்கு கண்மணி எபிசோட்... போடறேன்... /
அத்தியாயம் 2
தொலைக்காட்சியில் ஒரு கண்ணும்…. தன் அலைபேசியில் மற்றொரு கண்ணுமாக இருந்து கொண்டிருந்தான் நரேன்…. ஆராதனாவின் தோழி செல்வியின் சகோதரன்…
இங்கு தன் குடும்பத்தைத்தை பார்க்க வரும் போது வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்தின் அவசரம்… செய்து கொண்டிருக்கும் தொழிலின் அழுத்தம் என அனைத்தையும் மறந்து… தாய் தந்தை தங்கை இந்தக் கிராமம் என நிம்மதியாக… ஓய்வாக நாட்களைச் செலவழிப்பான்…
இந்த முறையும் அப்படித்தான்
அதிகாலையிலேயே எழுந்தவன்… மொட்டை மாடியில் அந்தக் கிராமத்தின் தூய்மையான அமைதியான சூழ்நிலையை அனுபவித்தபடியே உடற்பயிற்சியை முடித்து வந்தவன்… தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த இனிமையான பாடல்களை ரசித்தபடியே.. அலைபேசியில் தனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனை…. திசை திருப்பியது ஆராதனாவிடமிருந்து வந்த அழைப்பு….
அவளின் அழைப்பை தனது அலைபேசியில் பார்த்தானோ இல்லையோ….. அடுத்த நொடியே அந்த அழைப்பு யாருக்கானது என்பதைப் புரிந்தவனாக தனது தங்கை அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தவன்… ஆராதனாவின் அழைப்பையும் ஏற்றிருந்தான் இப்போது
”உன் ஃப்ரெண்ட் தானே… இந்த டைம்லாம் அவள் சொர்க்கலோக வாசியாச்சே… வழக்கமா ஏழு மணிக்குதானே மேலதானே எழுந்து காலேஜ் கெளம்புவா… இன்னைக்கு என்ன ஸ்பெஷல் “
எதிர்முனையில் வந்த ஆராதனாவின் பதிலில்….
“அப்போ இன்னைக்கு அவ காலேஜ்க்கு வந்த மாதிரிதான்…. இன்னும் மேடம் எழவே இல்லை…. இதுல இது வேறயா” என்று அலுத்தபடியே செல்வியின் அறைக்குள்… நரேன் நுழைய…
அங்கே செல்வியின் அலைபேசி… தன் எஜமானியை எழுப்பும் விசுவாசத்தின் பொருட்டு தன் இன்னுயிரையும் இழக்க தயாராகிக் கொண்டிருந்தது….
அதாவது வைப்ரேசன் மோடில் இருந்ததால்… செல்வியின் மொபைல் மேசையின் விளிம்பிற்கு நகர்ந்து விழப் போக இருந்தது….
நல்ல வேளை சரியாக அந்த நேரத்திற்கு நரேன் வந்ததால் பார்த்து விட்டான்… சட்டென்று செல்வியின் அலைபேசியை பிடித்து தன் கைகளில் தாங்கி அதை விழாதாவாறு காப்பாற்றியவன்… ஆராதனாவிடம் சரியான நேரத்திற்கு செல்வியை அழைத்து வந்து விடுவதாகக்கூறி…. அவளைக் கிளம்புமாறு சொல்லி ஆராதனாவின் அழைப்பைக் கட் செய்து விட்டு….. தன் தங்கையை எழுப்ப ஆரம்பிக்க…. இப்போது நரேனின் கையில் இருந்த செல்வியின் விசுவாசி….. தன் எஜமானியை மீண்டும் எழுப்பும் பணியை ஆரம்பிக்க….
இடியே விழுந்தாலும் எழுந்துகொள்ளாத செல்வி…. அலைபேசியின் அதிர்வில் எழுவாளா என்ன…. அலார்ம் எல்லாம் சும்மா பேருக்குத்தான் செல்வியைப் பொறுத்தவரை…இத்தனை நாள் செல்வியின் பெற்றோரில் யாராவது ஒருவர்… அவளை வந்து எழுப்புவர்… இன்று அவளது சகோதரன் அந்தப் பணியைச் செய்து கொண்டிருந்தான்
“செல்வி” என்று சத்தமாக நரேன் அழைக்க…. போர்வையை விலக்கிபடியே.. சோம்பலாக இமைகளைத் திறந்தவள்… தன் அண்ணனைப் பார்த்துவிட்டு…
“குட்மார்னிங் டா அண்ணா” என்று மீண்டும் தூங்க ஆரம்பிக்கப் போக…
.
“தனா கிளம்பிட்டாளாம்… உன்னை காலேஜ்ல ட்ராப் பண்ண சொல்லிட்டா” என்று நரேன் சொல்லி முடிக்கவில்லை…
“என்னது… தனா கிளம்பிட்ட்ட்டாள்ள்ள்ளா…. “ என்று வார்த்தைகளில் இருந்த பதட்டமோ அவளது செய்கையில்தான் இல்லை…. நிதானமாக தன் அறையில் இருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தபடி தன் அண்ணனிடம் நக்கலான பார்வையை ஓட விட்டாள்…. அவன் தங்கை….
“என்னை விட்டுட்டு தனா காலேஜ் போய்ட்டாளா…. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும்” என்று தன் அண்ணன் போட்டப் பந்தைப் பிடித்து அவனையே அவுட் செய்தவள்….
“என் தனா என்னை விட்டுட்டுப் போவாளா” என்றவளைப் பார்த்து….
“ஹ்ம்ம்ம்… என்ன ஒரு நட்பு… என்ன ஒரு ஃப்ரெண்ட்ஷிப்” என்று கிண்டல் செய்தவனை முறைத்தவள்….
“எனக்கு லேட் ஆகுது… உன் பாராட்டு மழையெல்லாம் எனக்கு கேட்க டைம் இல்லை” இப்போது பரபரவென்று குளியலறைக்கு உள்ளே சென்றவள்… அடுத்த இருபது நிமிடங்களில்…. கிளம்பியும் இருந்தாள்…
செல்வி எப்போது எழுந்தாளோ அந்த நிமிடத்தில் இருந்து அந்த வீட்டின் மற்றவர்களது நேரத்தையும் தனக்கான நேரத்தோடு சேர்த்து சரியான நேரத்தில் கிளம்பியிருந்தாள்…
அவளது தந்தை… அவளுக்கு சாப்பாடு எடுத்து வைத்து அவளுக்கு ஊட்டியும் விட… அவள் தாய் அவளுக்கென்று நேற்றைய இரவில் வாங்கி வந்திருந்த லஹங்காவை நேர்த்தியாக அணிவித்து விட…. இவளோ….. அலங்காரத்தை முடித்து விட்டிருக்க….. அவள் அண்ணனோ காரை வீட்டின் செட்டில் இருந்து எடுத்து வெளியின் நிறுத்தி அவளுக்காக காத்திருக்க…. இளவரசி வாழ்க்கை என்றால் என்ன என்பதை செல்வியிடம் கேட்கலாம்…
அறையை விட்டு கிளம்புமுன் மீண்டும் ஒருமுறை தன்னை அந்த ஆளுயரக் கண்ணாடியில் பார்த்தவளுக்கு அவள் மட்டும் தெரிந்திருந்தால் அவள் செல்வி ஆவாளா… அனிச்சையாகவே தன் அருகில் வேஷ்டி கட்டி கிராமத்து முறுக்கோடு கார்த்திகேயனையும் கூடவே மனம் நிறுத்திப் பார்க்க…. மனம் ஒரு நிமிடம் ஆகாயத்தில் கோட்டை கட்டிப் பறந்ததுதான்… ஆனால் மறுநொடியே இது எப்போதுமே கனவு மட்டுமே என்ற உண்மையை அவள் மூளை சொல்ல… தானாகவே அவள் முகம் அனிச்சம் மலராகக் கூம்பியது
ஆனால் கண்ணாடியில் தெரிந்த வாடிய முகத்தினைப் பார்த்து…. தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்….
“காதல் காதல் டிங்டாங்…
கண்ணில் மின்னல் டிங்டாங்…”
கார்த்திகேயனை நினைத்தாலே ஏனோ இந்தப் பாடல் தான் அவளுக்குத் தோன்றும்… இன்றும் அதே உற்சாகமாக தலையை ஆட்டி பாடியவள்… மீண்டும் தன் முகத்தில் புன்னகையை நிலை நிறுத்திக் கொண்டாள்….
----
தன் அண்ணனோடு காரில் வந்துவிட்டதால் ஆராதனாவுக்கு முன்னதாகவே வந்த செல்வி அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்…. தோழியை எதிர்பார்த்து காத்திருந்தாலும்… தோழியின் அண்ணனைக் காணும் ஆவலைத்தான் அதிகமாக மனதோடு தேக்கினாள் செல்வி…
“எனக்கு முன்னால யாரோ கிளம்பிட்டாங்கனு சொன்ன… என்னாச்சு….” என்று நேரத்தைக் கடத்த… தன் அண்ணனிடம் வம்பளக்க ஆரம்பித்தாள்….
ஆனால் அவர்களை அதிக நேரம் காக்க விடாமல் கார்த்திகேயனும் ஆராதனாவும் வந்து சேர… நரேனைப்பார்த்து இல்லையில்லை…. அவனது காரைப் பார்த்து விழிகள் விரித்தாள் ஆராதனா….
“ஹேய் செல்வி… பிஎம்டபிள்யூ காரா… அதுவும் நம்ம ஊர்லயா… உங்க அண்ணா வாங்கி இருக்காங்கள” செல்வியைக் கூட பாராமல் சொன்னவள்…. இப்போது நின்றிருந்ததோ நரேனின் அருகில்
’செல்வி அண்ணா…. ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே ஒரு டைம்…. நான் இந்த காரை ஓட்டனும்” என்று ஆசையோடு சொன்னவளைப் பார்த்துச் சொன்னவள் தன் அண்ணனையும் கண்டு கொள்ளவில்லை… அவன் முறைப்பையும் சுத்தமாகக் கண்டு கொள்ளவேயில்லை
தங்கையை முறைத்தபடியே
”நரேன்… கார்க் கீய கைப்பத்திருடா…. இல்லை ஒன்னோட 1 கோடி எந்த வயலுக்குள்ளனாச்சும் சகதிக் குளியல் நடத்தப் போகுது” என்று தங்கையின் வாகனம் ஓட்டும் திருவிளையாடலை நினைத்துக் கூற….
அதைக் கேட்டு செல்வியும் நரேனும் வாய்விட்டுச் சிரித்தே விட்டனர்….
“யூ டூ ப்ரூட்டஸ்” என்று ரீதியில் தோழியைப் முறைக்க ஆரம்பித்தவள் …. அப்போதுதான் தோழிய லஹங்காவில் இருப்பதைப் பார்த்தாள்…
இது போல உடை அணிந்து இன்றுதான் அவளை முதல் முறையாக ஆராதனா பார்க்கின்றாள்… அந்த மகிழ்ச்சியி
“அழகுடி…. செல்வி நீ” என்று சுத்திப் போட்டவளாய்…. “ஊருக் கண்ணு ஒலகுக் கண்ணு நரிக்கண்ணு” என்று சொன்ன போதே… செல்வி தன் தோழியிடம்…
‘உன் அண்ணன் கண்ண மட்டும் விட்ருடி” என்று கிசுகிசுக்க… ஆராதனா கேட்டும் கேட்காதாவாறு நமுட்டுச் சிரிப்புடன் தன் சுற்றிப் போடும் படலத்தை முடிக்க… கார்த்திகேயனோ… மற்ற இருவரும் அறியாமல் தமிழ்செல்விக்கு மட்டும் தெரியும்படி…. அவளை முறைத்துக் கொண்டிருந்தான்
கார்த்திகேயன் அந்த ஊரின் கிராமத்து நாயகன் என்றால்… நரேன் அந்த ஊரின் நவின நாயகன்… அந்த ஊரிலிருக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஒன்று கார்த்திகேயன் ரோல் மாடல்… இல்லையென்றால் நரேன்…. அதே போல் தான் கன்னிப் பெண்களுக்கும்….
வருங்கால மாப்பிள்ளை என்றால் அது நரேன் போல… இல்லை என்றால் கார்த்திகேயன் போல… எனச் சொல்லும் அளவுக்கு அந்தக் கிராமத்தில் இருவரும் பிரபலமானவர்கள்…
---
பெண்கள் இருவரும் காரின் அருகில் நின்று கொண்டு இருக்க…. நரேனும் கார்த்திக்கும் சற்று தள்ளி…. பைக்கில் அமர்ந்தபடி….பேசத் தொடங்கினர்…
கார்த்திக் நரேன் இருவருக்கும் ஒரே வயது.,… ஒன்றாகத்தான் பள்ளியில் சேர்ந்தனர்… படித்தனர்… அதன் பின் கார்த்திக் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியபோதும் அவர்களின் நட்பு இடையில் நிற்க வில்லை… .இன்று வரை நெருங்கிய நட்பாக இருந்தது….
கார்த்திக், நரேனுக்கு அவனது தொழிலுக்கு அரசியல் ரீதியாக உதவிகள் செய்ய…. கார்த்திக் படிக்கவில்லை என்பதால் நவீன துறைகளில் என்னென்ன முன்னேற்றங்கள் உள்ளனவோ அத்தனை விசயங்களையும் தன் நண்பனுக்கு அறிமுகப்படுத்தி அவன் கேள்வி அறிவை வளர்க்க உதவினான் நரேன்.. ஆக அவர்கள் நட்புக்கு படிப்பு ஒரு தடைக்கல்லாக விளங்க வில்லை….
நரேன்…செல்வி இருவரின் பெற்றவர்களும்…. அந்த ஊரின் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்ற வந்தவர்கள்…. ஏற்கனவே பணி புரிந்த இடத்தில் காதல் பிறக்க திருமணம் செய்த… அவர்களை உறவுகள் எதிர்க்க… நாடோடி வாழ்க்கை வந்த அவர்கள்… இரண்டு பிள்ளைகளோடு இங்கு வந்தபோது இந்த ஊர் ஆதரிக்க…. இந்த ஊரிலேயே அவர்களின் வாழ்க்கையும் நிரந்தரமாகியது… செல்வியின் தந்தை அருகிலிருக்கும் கல்லூரியின் முதல்வர், தாய்…. இந்த ஊரின் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்..
நரேன்….. இந்த 27 வயதிலேயே மென்பொருள் நிறுவனத்தினை தன் நண்பர்களோடு கூட்டாக ஆரம்பித்து… அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தான்… அதோடு மட்டுமல்லாமல் அந்த ஊரின் புதிய பணக்காரன் ஆகியும் இருந்தான்… அந்த அளவுக்குய் அவனின் முன்னேற்றம் அசூர வளர்ச்சியாக இருக்க…. ஊருக்குள் சிலபேரின் பொறாமையைத் தவிர… மற்ற அனைவருக்கும் பெருமையே…
”ஏண்ட்டா இவ்வளவு காசப் போட்டு வாங்கி… இந்த ஊரு ரோட்லயா ஓட்டிட்டு வந்த…” உண்மையான அக்கறையோடு கேட்ட நண்பன் கார்த்திகேயனிடம்
“அம்மா அப்பாவை சென்னை வரச் சொன்னேன்… லீவ் இல்ல… அது இதுன்னு சாக்குப் போக்கு சொன்னாங்க… அதான் கோபத்தில எடுத்துட்டு வந்துட்டேன்,…. எங்க இந்த ஊரை விட்டு கடைசி வரைக்கும் வர மாட்டாங்க போல…. “ என்று லேசானக் கோபத்தோடு பேசிய நரேனைப் பார்த்து சிரித்தவன்….
“எல்லாம் இந்த ஊரோட மாயம்” பெருமையாகச் சொன்னான் கார்த்திக்
“ஹ்ம்க்கும்… ஆனா உங்க அத்தை குடும்பத்துக்கு ஊர் மாயம் பண்ணலயே” என்று கார்த்திக்கிடம் வம்பளக்க ஆரம்பிக்க…. கார்த்திக்கோ அமைதியாக ஆனான்…
அவனின் அமைதி கண்ட நரேனுக்கு என்னவோ போல் ஆகிவிட…
“எங்க போனாலும் இந்த ஊர் திருப்பி இழுத்துட்டு வந்துறாதா என்ன… சாருக்கு அடுத்த மாதம் மேரேஜாமே… உங்க டாக்டர் மேடத்தோட… எல்லாம் முடிவாகிருச்சாமே…. என்கிட்ட சொல்லவே இல்லைல…” என்று நக்கலோடு ஆரம்பித்து லேசான வருத்ததோடு நரேன் முடிக்க,,,
“எனக்கும் கமலிக்கும் மேரேஜ்ன்றது புதுசா என்ன…. அதை சொல்லலைனு உனக்கு கோபம் வேறயா” கார்த்திக் சாதரணமாக வாய் கேட்டுக் கொண்டிருந்தாலும்
”டிடெயில்டா வத்தி வச்சது யாரா இருக்கும்… நம்ம பயலுங்க யாருக்கும் இன்னும் சொல்லவே இல்லையே… யார் அது” என்று மூளைக்குள் சிந்தையைப் புகுத்தி நரேனிடம் தன் விசயத்தைச் அந்த புண்ணியவான் யார் என்று கார்த்திக் யோசிக்க ஆரம்பிக்க…
“நேத்து செல்வி சொன்னா… வீட்டுக்குள்ள நான் நுழைந்ததுமே… இதுதான் ஃபர்ஸ்ட் நியூஸ்” என்று சொன்னவனை விழி பிதுங்க நோக்கினான் கார்த்தி என்ற கார்த்திகேயன்… அதே நேரம் நரேனுக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு வர அதைத் தவிர்க்க முடியாத நரேன் சற்றுத் தள்ளிப் போய் பேச ஆரம்பிக்க..
இப்போது கார்த்திக்கின் பார்வை அவனையும் அறியாமல் செல்வியின் புறம் திரும்ப…. அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் போல…
இவன் பார்த்ததும் அவள் கண்களின் ஆயிரம் மின்னல் அந்த முகத்தில்…. இவனுக்கோ ரௌத்திரம் கண்களை சூழ்ந்தது,….
“என்ன ஒரு தைரியம்…. அத்தனை தூரம் சொல்லியும்…. கொஞ்சம் கூட தயங்காமல்… கூசாமல் நேர்ப் பார்வை பார்க்கின்றாள்… திமிர் பிடித்தவள்.. மனதினுள் நினைத்தபடி தன் கைகளில் இருந்த ’கமழி’ என்ற பெயரை மீண்டும் பார்த்தபடி… அவளை நோக்கியவன் … அது தன் கைகளில் வந்த நாளை நினைத்துப் பார்த்தான்….
---
செல்வியும் ஆராதனாவும் கல்லூரி சேர்ந்த ஆரம்ப நாட்கள்…. கல்லூரிப் பேருந்து ஊருக்குள் வராது என்பதால் அந்தக் கல்லூரியில் படிப்பவர்கள் எல்லாம் ஊருக்கு வெளியே இருக்கும் பேருந்து நிறுத்ததிற்குத்தான் வரவேண்டும்… எப்படியும் பத்து நிமிடம் ஆகிவிடும்… அதனால் செல்வி ஆராதனாவை தினமும் வீட்டிலிருந்து ஸ்கூட்டியில் அழைத்து சென்று அங்கிருக்கும் பைக் செட்டில் போட்டு விட்டு திரும்ப வரும் போது அதே போல் ஆராதனாவை வீட்டில் விட்டும் செல்வாள்… இதுதான் இவர்களின் தினசரி வழக்கம்…
நரேனோ… கார்த்திக்கோ நண்பர்களாக இருந்தாலும் அடுத்தவர் வீட்டுக்குள் அவசியம் இல்லையென்றால் செல்ல மாட்டார்கள்… ஆண்மகன்களாக அவர்களது நட்பு வீட்டை விட்டு வெளியிடங்களில் மட்டுமே…
அது மட்டுமல்லாமல்… கார்த்திகேயனின் வீட்டைப் பொறுத்தவரை… வெளி ஆண்கள் வருவது தடை செய்யப்பட்ட ஒன்று…
“பொண்ணு புள்ளைங்க இருக்கிற வீட்ல… ஃப்ரெண்டா இருந்தாலும் அடுத்த வீட்டுப் பசங்கள எல்லாம் வீட்டுக்கு கூட்டி வரக்கூடாது” கார்த்திக்குக்கு சிறு வயதிலேயே பதியவைக்கப்பட்டிருக்க… கார்த்திக் தன் வீட்டுக்கு நண்பர்களையும் வரவைக்க மாட்டான் மட்டுமல்லாமல்… அதே போல் நண்பர்களின் வீட்டுக்கும் போக மாட்டான்…
ஆண்களுக்கு மட்டும் தான் இந்தக் கட்டுப்பாடுகள்… ஏனோ பெண்களுக்கு அது இல்லாமல் போக செல்வி வீட்டுக்கு ஆராதனா செல்வாள்… ஆராதனா வீட்டுக்கு செல்வி வருவாள்…
அப்படி இருக்க…
முதலில் எல்லாம் கார்த்திக் பெரிதாக உணர வில்லை… ஆனால் மெல்ல மெல்ல செல்வியின் பார்வை மாற்றம் அவனுக்கு புரிய ஆரம்பிக்க….. புரிந்தாலும்… சின்னப் பெண்…. அது மட்டுமில்லாமல் தங்கையின் தோழி…. நண்பனின் தங்கை…. இரு குடும்ப பெரியவர்களின் நட்பு… என்று அவளைப் பெரிதாகக் கண்டு கொள்ள வில்லை….
ஆனால் நாளாக நாளாக அதையே பயன்படுத்திக் கொண்டு…. தைரியமாக செல்வி அவள் பார்வைக்கணைகளை அவன் மீது தொடுக்க…. இது தொடரக் கூடாது என்று முடிவு செய்தவனாக… தெரிந்தும் இதை வளர விட்டால் அதுதான் தவறு என்று உணர்ந்த கார்த்திக்… செல்வியைக் கண்டிக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தான்…
இரண்டு மாதங்களுக்கு முன்…. ஒருநாள்…
ஆராதனா உடம்பு சரி இல்லை என்று கல்லூரிக்கு விடுமுறை போட…. அதைச் சாக்காக வைத்துக் கொண்டு கார்த்திக்கைத் தேடி அவன் அரிசி மில்லிற்கே வந்திருந்தாள் செல்வி…
”நான் குறுக்குப் பாதைல போய்ருவேன்… ‘தனா’ வைப் பார்க்க வீட்டுக்கு போக முடியாது…. ‘தனா’ கிட்ட இந்த நோட்லாம் கொடுத்து காப்பி பண்ணச் சொல்லுங்க..” என்று நோட்டுக்களை கொடுத்தவள்… அவனையும் தன் கண்களுக்குள் நிரப்பியபடியே திரும்பிப் போக
“செல்வி… ஒரு நிமிசம்” என்றபடி அவள் முன்னே வந்து நின்றான் கார்த்திக்…
“என்னவா இருக்கும்… கார்த்திக் மச்சான் குரலே சரி இல்லையே… அழுத்தமா அமைதியா இருக்கு” மனதுக்குள் நினைத்தவள்…. அதை வெளிக்காட்டாமல் கார்த்திகேயனைப் பார்க்க ஆரம்பித்தாள்… கிடைத்த சந்தர்ப்பத்தை எதற்கு விடுவானேன் என்று….
கொஞ்சம் கூட பயமே இல்லாத அவளின் தைரியமான நேர்ப் பார்வையில் கார்த்திக்குக்கு இப்போது கோபம் தலைக்கு ஏறத்தான் செய்தது…. இருந்தும்
”அடுத்த வீட்டு புள்ளைகிட்ட கோபத்தை காட்டாகூடாது” தன் மனதுக்குள் சொல்லியபடி… தன் கோபத்தை தனக்குள் அடக்கியவனாக
“உன் மனசுல என்ன நெனச்சுட்டு இருக்க….” என்று நேருக்கு நேராக கேட்டவனைப் பார்த்து ஒரு வினாடி அதிர்ந்து பார்த்த செல்வியைப் பார்த்து கார்த்திகேயனுக்கு பாவமாகப் போக குழந்தையிலிருந்து அவளைப் பார்த்து பழகியவனுக்கு தாங்கமுடியவில்லை… மிரட்டத்தான் வந்தான்… ஆனால் முடியவில்லை… அதற்கு மேலும் அவளை வார்த்தைகளால் காயப்படுத்த விரும்பாமல்…
“ஒண்ணுமில்லை… கிளம்பு… போ” என்று அவளை விரட்ட ஆரம்பிக்க….
செல்வியோ நகலவில்லை….
”போ” என்று சற்று அதட்டலாகச் சொன்னவனை… அலட்சியமாகப் பார்த்தவள்…
“கேள்வி கேட்டிங்கள்ள… பதில் வேண்டாமா” என்று அமர்த்தலாகச் சொன்னவளின் குழந்தை முகம்….. குமரியாகி விட்டிருந்தது அவனுக்கும் புரிய …. முறைத்தான் கார்த்திகேயன்…
“எனக்கு பிடிச்சிருக்கு பார்த்தேன்… உங்கல லவ் பண்றேனு ஏதாவது சொன்னேனா.. இல்லை தொந்தரவு பண்ணினேனா…” என்று படபடத்த உள்ளத்தை படபட வார்த்தைகளால் மறைத்து நிதானமாகக் கேட்டாள் செல்வி….
”நான் இப்படித்தான்… அப்படித்தான் பார்ப்பேன் உங்களுக்கு மேரேஜ் ஆகிற வரை இப்படித்தான் பார்ப்பேன்… என்ன பண்ணுவீங்க” அதிரடியாகச் சொன்னவளை அதிர்ச்சியாகப் பார்த்தாலும்… கார்த்திகேயனுக்கு வந்த கோபத்தின் அளவைக் கேட்க வேண்டுமா என்ன???…
“இது மாதிரி எங்க ‘தனா’ பேசி இருந்தா என்ன ஆகி இருக்கும் தெரியுமா…. சொன்ன அடுத்த நிமிடமே அவள வெட்டி போட்ருப்பேன்…. “ தன் கோபத்தின் அளவை அவளுக்கு உணர்த்த….
“ஆனால் என் அண்ணன் உங்கள மாதிரி இல்லை…. யோசிப்பான்” என்று இவளும் தன் பதில் சொன்னாள் அவனின் வழியிலேயே போய்….
“ஒழுங்கா போயிரு…. அசிங்கமா பேசிறப் போறேன்…” என்ற அவனின் கர்ஜனையில் செல்விக்கும் சற்று பயம் வர…. கை நீட்ட மாட்டான் என்று தெரியும்…. கெட்ட வார்த்தை ஏதாவது பேசி விடுவானோ… என்று மனம் யோசிக்கத் தொடங்க…. அந்த நினைவு தந்த பயம் செல்வியின் கண்களிலே பீதியைக் கொண்டு வர… அதைப் பார்த்த கார்த்திகேயனுக்கு இப்போது கொஞ்சம் நிம்மதி…
”பயம் இருக்குள்ள…. நல்லா படிக்கிற புள்ள தானே…. புத்திய கடன் கொடுத்திட்டியா…” என்று நல்ல வார்த்தைகளை அவள் முன் கொட்ட… மீண்டும் ஆவென்று விழி கொட்டாமல் அவனைப் பார்த்தாள்…
இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவளை என்ன செய்வதென்று தெரியாமல் ஏதும் பேசாமல் முறைத்தபடி திரும்பியவனிடம்…..
“எனக்கு உங்கள விட கமலி அக்காவைத்தான் பிடிக்கும்…. அவங்க நல்லவங்க… அவங்களாம் உங்களுக்கு செட்டாக மாட்டாங்க…. நான் தான் உங்களுக்கு கரெக்ட்…. கோபத்துக்கு கோபம்… பதிலுக்கு பதில்.. கேள்விக்கு கேள்வி….கொஞ்சம் யோசிங்களேன்...” என்று சிறு பிள்ளை போல் பேசியவளை புரியாமல் பார்த்தான் கார்த்திகேயன்…
இது அவன் வழக்கமாக பார்க்கும் செல்வி இல்லை…. ஆராதனாவுக்குஅறிவுரை கூறும்… அவளை பலவிதங்களின் வழி நடத்தும் அனுபவசாலி இல்லை… செல்வியின் குணம் சிறுவயதில் இருந்தே கார்த்திகேயனுக்குத் தெரியும்… அவள் புத்திசாலித்தனமும் தெரியும்…
‘அவள் ஏதோ முடிவு செய்து விட்டாளோ….’ என்று கார்த்திகேயன் தான் கடைசியில் தனக்குள் புலம்பும் நிலை…
அதன் விளைவு செல்விக்கு… அவளின் புத்திக்கு தான் வேறொருத்திக்கு சொந்தமானவன் என்று உணர்த்த வேண்டுமென்று அன்றே அவன் கைகளில் ‘கமலி’யின் பெயர் குடியேறி இருந்தது….
அது அவன் உள்ளத்திலிருக்கும் கமலியை தமிழ்செல்விக்கு உணர்த்தவா??…. இல்லை தமிழ்செல்விக்கு பயந்தா??….. அவனுக்கே புரியவில்லை…
----
Ethana lv ah procha rasa ana unaku selvi tan ha
ஆனாலும் கார்த்திக் நீ நல்லவனா, கெட்டவனான்னு புரிஞ்சுக்கவே முடியல போ.
கதைல herosir இன்னும் entry குடுக்கல, ஆனா அவருக்கு முன்னாடியே இவங்க ரெண்டு பேரும் leading charecters ஆகிட்டாங்க.
So happy Sis..
UNS second epi ya padichadhil..kamali per pachai kuthiya karanam therinjadhil..
Selviyoda neradi thaakudhal super..like it..
(KmEKM update m seikiram podunga sis..Rishi,Kanmani konjam konjama thangala unarndhum,thavichum varadhu interesting a iruku)
Nice
nice intro sis.
Super
Aarathanavai Vida kanmaniye super sis still waiting for RK
Nice jii.. 'Nayagan', 'naveena nayagan' okay jii bt where's our nayagan.. Sry Aaradhana's nayagan jii😉.. Waiting for them sis.. Before this need RK.. Come soon jii..
azhakaana Kiraamiyak kathai, thanks varuni, irunthum manathum kankalum kek yaithan ovvoru naalum theduthe, plsss sis dont delay.