”இதெல்லாம் அண்ணன்கிட்ட சொல்லிறாதா…. நாமளே பார்த்துக்கலாம்… அநேகமா அவங்க அப்பா அம்மா குடும்ப கௌரவம் அது இதுன்னு அவள்கிட்ட பேசி மாத்தப் பாக்க நினைக்கிறாங்க… அதுல அவ பயந்துருப்பா… அவங்க ஒண்ண மறந்துட்டாங்க… காயத்ரி ராஜாவோட மனைவி மட்டுமல்ல… அவரோட குழந்தையை சுமந்துட்டு இருக்கா…அவ்ளோ ஈஸியா அந்த பந்தத்தை விட்டுட்டு வெளிய வந்துர முடியுமா…”
சொல்லிக் கொண்டிருந்த போதே… அவளது அலைபேசி அதிர… கடுப்பாக அந்த அலைபேசியைப் பார்த்தவள்…
---
“சரி விடு… நான் லேட்டாதான் மண்டபத்துக்கு வந்தேன் காவேரி… நாளைக்கு எப்படியும் மேட்டரை கலெக்ட் பண்ணிருவேன்… மிஸ்டர் செழியனுக்கு ஆள் இருக்கா இல்லையான்னு… ஆள் இல்லைனா… நீதான் எங்க அத்தைக்கு மருமக” ஆராதனாவும் சந்தோஷமாகச் சொன்னவளாக
“இங்க பாரு…. இதெல்லாம் உனக்கு செமினார் கொடுத்த செழியனுக்காக இல்ல… எங்க அத்தைக்காக மட்டுமே… டீல் இதான்… எங்க அத்தைய எங்க வீட்டோட சேர்த்து வைக்கனும்.. அதுக்கு நீ ஹெல்ப் பண்ணனும்… உன்னால முடியலேன்னா… எனக்கு ஹெல்ப் பண்ணனும் அவ்ளோதான்…”
---
மேகலா புரியாமல் பார்க்க.... நரேன் அலுவலகத்தில் வேலை கேட்டிருப்பதை சொல்லி வைக்க… மேகலா வேறெதுவும் சொல்லவில்லை….
“நீ என்ன வேணும்னாலும் பண்ணும்… நம்ம குடும்பத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் உன்னால வந்துறக் கூடாதுமா… ஏற்கனவே உங்க சித்தப்பா பண்ணின வேலைல… நானும் அப்பாவும் ரொம்பவே கவலைல இருக்கோம் தனா… “
“அம்மா… என் மேல நம்பிக்கை இல்லைதானே… சரி உங்க கையைக் காட்டுங்க…”
---
“அண்ணா… அண்ணா அந்த போனை மட்டும் கொடுத்திருங்கண்ணா… நான் அவங்ககிட்டயே கொடுத்துறேன்…”
“அந்த அவங்க யாரு அதை மட்டும் சொல்லு… நானே அவங்ககிட்ட கொடுத்துறேன்… என்னை ஃபோட்டோ எடுக்கச் சொன்னது யாரு… ஏன் என்னை எடுத்தாங்கன்னு கேட்கனும்” செழியன் நக்கலாகக் கேட்க முகிலனோ இது என்ன புதுக்கதை என்பது போல செழியனைப் பார்க்க…
---
“நான் எங்க ஊர் மாப்பிள்ளை பக்கம்… அத்தான் பக்கத்திலதான் உட்காருவேன்…” என்ற படி வனிதாவின் கணவன் பக்கம் அமர்ந்தவள்…
“ஐயோ அத்தான் பயப்படாதீங்க.... எங்க ஊரு மாப்பிள்ளையா கெத்தா இருங்க…” என்றவளிடம்
“தனா…. இவ்ளோ பேசுவியா… நீரொம்ப அமைதினு நெனச்சேன்…” என்று வனிதாவின் கணவனும் அவளிடம் பேச ஆரம்பிக்க
--
“என்னது அத்தானா…” செழியன் சட்டென்று குரலை உயர்த்த…. ஆராதனா இப்போது நிமிர… எப்போதும் போலேயே மிரட்டல் தொணிதான்… ஆனால் அந்தக் குரலில்… அந்தப் பார்வையில்… அவனையே பார்த்தபடி இருந்தவள்… பார்வையை மாற்றாமல் செழியனை சில வினாடிகள் பார்த்தபடி இருந்தவள்… பின் பார்வையை மாற்றியபடி சட்டென்று எழுந்திருக்க
---
”அந்த அண்ணன் தான் சொன்னாங்க… அந்த அண்ணன் வேற அவர் ஃபோட்டோ தனியா கிடைக்காதாம்…. அவர் வைஃபோட சேர்ந்துதான் கிடைக்குமாம்…” அங்கு நடந்ததைச் சொல்ல…
கேட்ட ஆராதனா ஆச்சரியாமாக புருவம் உயர்த்தியவளாக… தனக்குள் யோசித்துக் கொண்டே... சிரித்துக் கொண்டவளாக...
“சாரி காவேரி... இனி நீ எனக்குத் தேவையில்லை...” அவளது உதடுகள் தானாகவே முணுமுணுத்துக் கொண்டது...
----
Nice