ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்.... இதுவும் பெரிய அத்தியாயம்..
செழியன் அண்ட் ஆராதனா இவங்களைப் பற்றின பார்வை நமக்கு இந்த எபிசோட்ல இருந்து மாறும்... ஆராதனாவோட கேரக்டர் ஓரளவு கேட்ச் பண்ணிருவீங்க... அதேபோல செழியன் அவனைப் பற்றி... படிச்சுட்டு நீங்களே சொல்லுங்க...
அண்ட் ஹெவி டைட் ஷெட்யூல் ஆஃபிஸ்லயும்... தமிழ்ல கதை எழுதுற புள்ளையைப் புடிச்சு... இங்க்லீஷ்ல ப்ராஜெக்ட் User story எழுதச் சொல்லி கொல்றாங்க...
ஆக மொத்தம் ஆஃபிஸ்லயும் , ஸ்டோரி அப்டேட் என்னாச்சுனு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க... என்ன கொடுமை வாருணி... நாமளே நம்மள சொல்லிக்க வேண்டியதுதான்... (செல்ஃப் ரோஸ்ட் பரிதாபங்கள்.... விடுங்க... இது என் கவலை... )
செழியன் ஆராதனா எபிசோட் ஸ்டார்ட் பண்ணிட்டா வேகமா அப்டேட் வரும்னு நினைக்கிறேன்... பார்க்கலாம்... படிக்கிற அண்ட் கமெண்ட் பண்ற அனைவருக்கும் ரொம்ப நன்றி...
ஸ்பெஷலா ஆராதனா பற்றி ப்ரைவேட்டா கமெண்ட் வருது... கண்மணி... கீர்த்தனா... இவங்கள விட அழுத்தமான கேரக்டர்னு... தேங்க்யூ சோ மச்...
ஓகே... நான் விடை பெறுகிறேஎன்.... ஹேப்பி ரீடிங்...
நன்றி
பிரவீணா
அத்தியாயம் 19:
ஆராதனா அவளது அன்னையுடன் தாமதமாக வந்த போதிலும்… மணப்பெண் வனிதா அறைக்கு நேராகச் சென்றவள்… அதன்பின் செல்வியுடன் சேர்ந்து கலாய்த்தபடி மணப்பெண் அறையிலேயே நேரத்தை கடத்தியவளாக அமர்ந்திருக்க… இதற்கிடையே அதிகாலை சீக்கிரம் எழ வேண்டும் என்று வனிதாவை அங்கிருந்தவர்கள் உறங்கச் சொல்ல… வேறு வழியின்றி செல்வியும் ஆராதனாவும் வனிதாவை விட்டு விட்டு வெளியே வந்தனர்….
வெளியே வந்து அவரவர் அறைக்குச் செல்லும் வழியில் ஆராதனா செல்வியை நோக்கி…
“செல்வி… காயுக்கு கால் பண்ணுனியா… நான் இங்க வந்ததிலருந்து கால் பண்றேன்… எடுக்கவே மாட்றா… நீ ட்ரை பண்ணுனியா…” காயத்ரியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த போதே… கார்த்திக் இருவரையும் நோக்கி வந்திருக்க… செல்வி இப்போது
“நா.. நான் பேசினேன்… அவ இங்க இல்லையாம்… அவங்க அம்மா வீட்ல இருக்காளாம்” தயங்கி பின் வேகமாகச் சொல்லி முடித்திருந்தாள்..
செல்வி சொன்னதைக் கேட்டு… ஆராதனாவின் முகம் காயத்ரி மீதான அதிருப்தியில் சுருங்கியது… அதே நேரம் செல்வியின் தடுமாற்றத்தையும் கண்டு கொண்டவளாக.. ஆனால் கார்த்திக் அவர்கள் முன் நின்றிருக்க… தன் அண்ணனின் மும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தவளாக… கார்த்திக் செல்வியிடம் பேசிக் கொண்டிருக்க… அவர்களைக் கவனித்தபடி நின்று கொண்டிருந்தாள்…
”சித்தப்பா கூப்பிடறாரு… ஏதோ கடை வரைக்கும் போகனுமாம்… நீ தனா கூட அம்மா ரூம்ல படுத்துக்கோ செல்வி… தனியா இருக்காத” கார்த்திக் மனைவியிடம் சொல்ல… அவளோ
“இல்ல நீங்க வர்ற வரை… நான் வனிதா ரூம்ல இருக்கேன்… வனிதா அம்மா ஹெல்ப் கேட்டாங்க” என்ற செல்வியின் வார்த்தைகளில்
“நீ என்னைக்கு சொன்னதைக் கேட்ருக்க… என்னமோ பண்ணு… வரும்போது போன் பண்றேன்” சுள்ளென்று மனைவியிடம் விழுந்த… கார்த்திக் அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்பியும் இருக்க…
தன் அண்ணன் செல்வியின் மேல் கோபமாகச் சொல்கிறானா… இல்லை அக்கறையாகச் சொல்கிறானா… ஆராதனாவுக்கு புரியவில்லை… செல்வியைப் பார்க்க
“இவர் அப்படியே… ரூம்ல இருந்துட்டாலும்…” என்றவள் அடுத்து என்ன சொன்னாளோ அவள் வாய்க்குள்ளேயே முணங்கிக் கொண்டவளைப் பார்த்த ஆராதனா சிரித்தபடி…
“நான் வேர்ட்ஸை ஃபில் பண்ணவா மேடம்… ஆமா அதெல்லாம் விடு… கொஞ்ச நேரத்துக்கு முன்னால வேலை பார்க்கக் கூப்பிட்டப்போ தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு வந்த இந்த பாப்பா, இப்போ பாப்பாவோட பாவாவுக்காக வெயிட் பண்ணப் போகுதோ” நக்கலாக ஆராதனா தோழியை ஓட்ட…
செல்வியோ… அவள் தோளிலேயே அடி போட்டவளாக
“உங்க மொத்த குடும்பமும் இன்னும் உன்னை சின்னக் குழந்தைனு நம்பிட்டு இருக்கு… பாவம் அதில மண்ணள்ளிப் போட்றாதா…”
கண் சிமிட்டிய ஆராதனா… வாயில் விரல் வைத்தபடி
“அம்மே… ஆரதனா பாப்பாவை திட்டாத செல்வி… இந்தப் பாப்பா பாவம்ல” என்று குழந்தைக் குரலில் பேசி நடித்துக் காட்டியவள்… அடுத்த நொடியே… தன் கிண்டலை எல்லாம் விட்டு விட்டு… தீவிர பாவத்திற்கு மாறியவள்…
”செல்வி… காயத்ரி என்ன சொன்னா… அண்ணே வந்துருச்சு அதான் நானும் விட்டுட்டேன்… கண்டினியூ பண்ணல… காயத்ரி நல்லா இருக்காதானே…” என்று செல்வியிடம் மீண்டும் காயத்ரியைப் பற்றி கேட்க…
“இல்ல ஒண்ணும் இல்ல… நல்லா இருக்கா… ராஜாண்ணா ஆன்சைட் போயிருக்காராம்… அதுனால அவங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டாளாம்… அதாவது ஊருக்கு வந்துட்டாளாம்…. ஆனா தனா அவங்க வீட்ல எப்போ சமாதானம் ஆனாங்க…” என்று தடுமாறி ஆரம்பித்த செல்வி முடித்த போது ஆராதனாவிடம் கேள்வியாகக் கேட்க
“அவங்க அம்மாகிட்ட பேசினது நான்… அவங்க பொண்ணு அவங்களைப் பார்க்க ஆசைப்பட்றான்னு… போய்ப் பார்க்கச் சொல்லிக் கெஞ்சிக் கேட்டேன்… ஆனால் ஊருக்கு வந்துட்டான்னு என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல அவங்கம்மா சொல்லலை… அவளும் சொல்லல… சம்திங்க் தப்பா இருக்கு செல்வி… அதான் நான் உன்கிட்ட கேட்கிறேன்… அவ ஏதாவது பதட்டமா பேசினாளா… இல்ல ஏதாவது சொன்னாளா… ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிறா” ஆராதனா படபடப்புடன் கேட்க… அவள் பதட்டம் காயத்ரியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து விட்டனரோ… என்றளவில் இருக்க… அடுத்து செல்வி காயத்ரியைப் பற்றி சொன்னவற்றைக் கேட்டு ஆராதனாவின் முகம் இறுகியது…
“என்னது… குழப்பத்தில இருக்காளாமா… கழுத்தில தாலிய வாங்கிட்டு… அதோட பிள்ளையையும் சுமந்துகிட்டு… இப்போ புருஷன் கூட வாழ்றதுல யோசிக்க வேண்டியதா இருக்கா… அவ மட்டும் என் கைல கெடச்சான்னு வச்சுக்க” ஆராதனா அந்த இருளிலும் குரலை உயர்த்தி இருக்க… செல்வி வேகமாக அவள் வாயை பொத்தியவளாக….
“ஏய் தனா… ஏன் இப்படி கத்துற… யாராவது வந்துறப் போறாங்க… அவ ராஜா அன்ணா கூட வாழ மாட்டேன்லாம் சொல்லல…. ஆனால் மேரேஜ் பண்ணது தப்போன்னு நினைக்கிறா… அவங்க அம்மா அப்பா இங்க ஃபேஸ் பண்ற சிச்சுவேஷனைப் பார்த்து…. நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற” என்று செல்வி ஆராதனாவைச் சமாதானப்படுத்த நினைத்த போதே
“என்ன செல்வி பேசுற… நல்லவளா இருந்திருந்தா.. மனசுல ஏதும் இல்லாம இருந்திருந்தால் என்கிட்ட பேசியிருக்கனும் தானே… ஏன் என்னைப் பார்த்து பயந்து ஓட்றா… அப்போ ஏதோ தப்பான எண்ணம் இருக்குதானே அவளுக்குள்ள… காதல்னா அவளுக்கு என்ன கிள்ளுக்கீரையா என்ன… யோசிக்கிறாளாம்… எப்போ யோசிச்சிருக்கனும்… தாலி கட்றதுக்கு முன்னால… பாவம் அந்த ராஜா அண்ணா… ” ஆராதனா படபடவென்று பேச
“அதெல்லாம் காயத்ரி அப்டிலாம் ராஜாண்ணனை விட்டுட்டு வர மாட்டாடி… “ செல்வி ஆராதனாவிடம் சொல்ல… ஆராதனாவின் முகம் அந்த இரவிலும் கோபத்தில் சிவந்திருக்க…
“ஓ அந்த எண்ணம் வேற மேடத்துக்கு இருக்கா.. அப்டிலாம் அவ்ளோ ஈஸியா அவ பண்ண முடியாது…. ஊருக்கு போனதும் நான் அவ வீட்டுக்கு போறேன்… பேசுறேன்… மேரேஜ் பண்ணினது தப்போன்னு இப்போ யோசிக்கிறாளாமா… அவளை…“என்றவள் ஏதோ யோசித்தவளாக… செல்வியிடம்
”இதெல்லாம் அண்ணன்கிட்ட சொல்லிறாதா…. நாமளே பார்த்துக்கலாம்… அநேகமா அவங்க அப்பா அம்மா குடும்ப கௌரவம் அது இதுன்னு அவள்கிட்ட பேசி மாத்தப் பாக்க நினைக்கிறாங்க… அதுல அவ பயந்துருப்பா… அவங்க ஒண்ண மறந்துட்டாங்க… காயத்ரி ராஜாவோட மனைவி மட்டுமல்ல… அவரோட குழந்தையை சுமந்துட்டு இருக்கா…அவ்ளோ ஈஸியா அந்த பந்தத்தை விட்டுட்டு வெளிய வந்துர முடியுமா…”
சொல்லிக் கொண்டிருந்த போதே… அவளது அலைபேசி அதிர… கடுப்பாக அந்த அலைபேசியைப் பார்த்தவள்…
“இந்த நேரத்துல யார்டி… நம்பர்ல இருந்து கால்…” என்ற செல்வியிடம்… தோளைக் குலுக்கியவளாக… மீண்டும் காயத்ரியைப் பற்றி பேச ஆரம்பிக்க… மீண்டும் அழைப்பு வர… ஆராதனாவுக்குள் சட்டென்று ஒரு மாதிரியான பதட்டம் வர ஆரம்பித்திருக்க… இப்போது சட்டென்று செல்வி அறியாமல் அழைப்பை கட் செய்தவள்… செல்வியிடம்
“செல்வி… தலை வலிக்குது… நான் தூங்கப் போறேன்… எனக்கு தனியா படுக்கனும்… ஆனா அம்மா விட மாட்டாங்களே… ” சொன்ன ஆராதனாவைப் கவலையாக பார்த்த செல்வி…
“காயத்ரி விசயத்தை நெனச்சு டென்ஷன் ஆகிட்டியா தனா….”
“ப்ச்ச் அதெல்லாம் இல்ல… “ என்றபடியே…
“அண்ணா வர்ற வரை… நான் உங்க ரூம்ல படுத்துக்கவா… அண்ணே வந்ததும் சொல்லு எங்க ரூம்க்கு போறேன்… அம்மா கேட்டா இங்கேயே தூங்கிட்டேன்னு சொல்லு…”
“அத்தை கேட்பாங்களே… என்னையும் தூங்கச் சொன்னாங்க… நான் சுத்திட்டு இருந்தா அத்தை திட்டுவாங்களே” செல்வி கேட்க…
“நீ வனிதாக்கா அம்மா கூட ஏதோ வேலை இருக்குனு சொன்னியே…… அண்ணன் வர்ற வரை… அவங்க ரூம்ல இருந்தேன்னு சொல்லிரு… ப்ளீஸ் 1 ஹவர்… நானே வந்து உன்ன கூப்பிட்டுக்கிறேன்… தலை வலிக்குதுடி… ப்ளீஸ் ப்ளீஸ்டி…” என்று அவசரப்படுத்திய தோழியை விசித்திரமாகப் பார்த்தவள்…. ஒன்றும் சொல்லாமல் தன் அறையின் சாவியைக் கொடுத்துவிட்டு செல்ல… சாவியை வாங்கியவள்… அறைக்குள் வேக வேகமாக நுழைந்து அறைக்கதவை மூடியபோதே… சற்று முன் வந்த அலைபேசி ஞாபகம் வந்திருக்க
“சித்தப்பாவா இருக்குமோ…” நினைத்த போதே ஆராதனாவின் முகம் வியர்த்துக் கொட்டியிருந்தது படபடப்பில்…
அவளை அதிக நேரம் படபடக்க வைக்காமல் மீண்டும் முன்பு வந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்க… வேகமாக எடுத்து காதில் வைத்தபோதே…
“ஏய் தனா… ஏண்டி… போனை எடுக்க மாட்டியா… எத்தனை தடவை போன் பண்றது… ”அவள் கல்லூரித் தோழி காவேரியின் குரல்
ஆராதனாவின் படபடப்பு அத்தனையும் உச்சத்திற்கு போய் தரை மட்டத்திற்கு இறங்கிய நிலை…
“ஏய் காவேரி… மணி என்ன ஆகுது இப்போ.. கிட்டத்தட்ட ஒண்ணாக போகுது…. உனக்கு நேரம் காலம் தெரியாதா…” என்று ஆராதனா திட்ட ஆரம்பித்த போதே
“காதலுக்கு எல்லாம் காலம் நேரம் கிடையாது தனா… நான் தான் இங்க இருக்கேன்… ஆனால் என் மனசெல்லாம் அங்கதான் இருக்கு…” காவேரி கிறக்கமான குரலில் சொல்ல ஆரம்பிக்க…
வேக வேகமாக ஆராதனா..
“அம்மா தாயே… உன் லவ் டையலாக் எல்லாம் கொஞ்ச நேரம் நிறுத்துறியா…”
“இங்க பாரு… ஏற்கனவே உனக்குச் சொன்னதுதான்… அந்த சைட் கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன்… பார்ட்டி ஏற்கனவே என்கேஜ்ட் ஆகி இருந்துச்சுனா… காதல் கத்தரிக்காய்லாம் மூட்டை கட்டிட்டு ஒழுங்க வீட்ல சொல்ற பையனப் பார்த்து போயிறனும்… ஆனால் ஏதும் கமிட் ஆகலைனா…நான் ஹெல்ப் பண்றேன்… ஓகேவா… அதுக்காக இப்படிலாம் மிட்நைட்லாம் தொல்ல பண்ணக் கூடாது” ஆராதனா இயல்பாகி இருந்தாள்.. அது அவளது குரலிலும் வந்திருந்தது…
“புரியுது தனா… ஆனால்… என்னமோ தெரியல… அட்லீஸ்ட் அவர் ஃபோட்டோவது அனுப்புவேன்னு பார்த்தேன்….” என்றவள் குரலில் உற்சாகம் திடீரென்று கூடியிருக்க…
“ஏய் அவரைப் பார்த்தியா… மேரேஜுக்கு வந்திருக்கார் தானே… அவர் க்ளோஸ் ஃப்ரெண்டோட அக்கா மேரேஜ்ல … வராமல் இருப்பாரா” என்றவளிடம்
“ஹான் வந்திருக்காங்க… ஆனால் நீ கொடுத்த ஃபோனை செல்வி அண்ணா வீட்ல வச்சுட்டு வந்துட்டேன் காவேரி… அதான் ஃபோட்டோ எடுக்க முடியல… நாளைக்கு காலை செல்வி அண்ணா வரும்போதுதான் உன் போன் என் கைக்கு வரும்… கண்டிப்பா காலைல அனுப்ப ட்ரை பண்றேன்… ஆனா ஃபோட்டோ வரலேன்னா… அவர் உன் ஆளு இல்ல… அதை மட்டும் மனசுல வச்சுக்க” ஆராதனா கறாரான குரலில் சொல்ல… காவேரி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல்
”அட்லீஸ் உன் ஃபோன்லயாவது எடுத்து அனுப்பியிருக்கலாமே” காவேரியின் குரலில் ஏமாற்றம் மட்டுமே இருக்க…
“இங்க பாரு… நான்லாம் என் போன்ல எடுக்க மாட்டேன்… அது மட்டுமில்ல… உன் போனையே யார்கிட்டயாவது கொடுத்து… யாருக்கும் தெரியாதபடி… க்ளிக் பண்ணலாம்னு நெனச்சிருந்தேன்.. ”
“சரி விடு… நான் லேட்டாதான் மண்டபத்துக்கு வந்தேன் காவேரி… நாளைக்கு எப்படியும் மேட்டரை கலெக்ட் பண்ணிருவேன்… மிஸ்டர் செழியனுக்கு ஆள் இருக்கா இல்லையான்னு… ஆள் இல்லைனா… நீதான் எங்க அத்தைக்கு மருமக” ஆராதனாவும் சந்தோஷமாகச் சொன்னவளாக
“இங்க பாரு…. இதெல்லாம் உனக்காகவோ… இல்லை செமினார் கொடுத்ததுலயே மயங்கி லவ்ல விழுந்து பினாத்திட்டு இருக்கியே அந்த செமினார் கொடுத்த செழியனுக்காகவோ இல்ல… எங்க அத்தைக்காக மட்டுமே… டீல் இதான்… எங்க அத்தைய எங்க வீட்டோட சேர்த்து வைக்கனும்.. அதுக்கு நீ ஹெல்ப் பண்ணனும்… உன்னால முடியலேன்னா… எனக்கு ஹெல்ப் பண்ணனும் அவ்ளோதான்…”
“கண்டிப்பா பண்ணுவேன் தனா… அக்கா மேரேஜ் அடுத்து ரெண்டு மாசத்துல… நான் செழியன எப்படியாவது லவ் பண்ண வச்சிருவேன்… “
என்ற போதே ஆராதனாவுக்கு செழியனின் முகம் ஞாபகத்துக்கு வந்து போக,,, அமைதி ஆகியிருக்க
“ஏய் தனா… என்னடி சைலண்ட் ஆகிட்ட… “
”ஒண்ணுமில்ல… நீ இவ்ளோ ஃபீலிங்க்ஸ்ல பேசுற… ஆனால் அந்த மூஞ்சிக்கு லவ் செட்டாகுமான்னுதான் தெரியல… அதேநேரம் உனக்கு வாய்ப்பு அதிகம் காவேரி… ஏன்னா எனக்குத் தெரிஞ்சு என் அத்தை மகனுக்கு லவ்வுக்கெல்லாம் நேரம் இருந்திருக்காது… அதுனால நீ ட்ரை பண்ணலாம்… ஆனாலும் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ… இந்த மாதிரி ஆளுங்கதான் டீப்பா லவ் பண்ணுவாங்களாம்… சோ நான் விசாரிக்கிறேன்… அந்தப்பக்கம் ஏதாவது காதல் மாளிகை இருக்கான்னு… அதுக்கப்புறம் நீ காதல் கோட்டை கட்டு… சரியா…” ஆராதானா சொன்னபடியே
“ஆனாலும் உங்க அக்கா அவங்களப் பற்றி அவ்ளோ சொல்லியும் நான் அவ்ளோ சொல்லியும் அந்த பெட்ரோமாஸ் லைட்டே வேணும்னு அடம்பிடிக்கிறியே தங்கம்… அப்படி என்ன செமினார் கொடுத்தார்… காலேஜ்ல பாதிப் பேர் என்கிட்ட வந்து உன் அத்தைப் பையானாமேன்னு என்னமோ உலக அதிசயத்தைப் பார்த்துட்டு வந்த மாதிரி விசாரிச்சாங்க… அதுல நீ அல்டிமேட்… ஆளே வேணும்னு வந்து நிக்கிற… என்ன பண்ண உன் விதி அப்படின்னா…யார் மாத்த முடியும்… என்னமோ நல்லா இரும்மா” ஆராதனா முடித்திருக்க…
“செழியனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தனா” காவேரியின் குரல் சிறு நடுக்கத்துடன் வந்திருக்க
“ஏய் ஏய் உடனே எமோஷனல் ஆகாதம்மா… புரியுது… புரியுது… உன் ஃபீலிங்க்ஸ் புரியுது… அதை என்கிட்ட ஒட்டி விட்றாதா… நீயாச்சு உன் செழியனாச்சு… உன் சைடே ஃபீலிங்க்ஸை வச்சுக்க “ என்றவள்… படுக்கையில் சாய்ந்தபடி
“எனக்கென்னமோ உங்க லவ் ஒர்க் ஆவுட் ஆகும்னு தோணுது காவேரி… உங்க ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்தால் ஏதோ முன் ஜென்ம விட்ட குறை தொட்ட குறை மாதிரி இருக்கு காவேரி…”
“அப்டியா தனா…. உண்மையாவா… உனக்கும் தோணுதா அது….” இப்போது காவேயிரின் குரல் காதல் பரவசம் மட்டுமே
“ஆமா காவேரி… பேர் பொருத்தம் போதுமே… காவேரி-செழியன்… சொல்லும் போதே ஜோடிப் பொருத்தம் அள்ளுதே… போன ஜென்மத்துல நீ சோழ நாட்டு இளவரசியா இருந்திருப்பியோ… செழியன் – பாண்டிய நாட்டு இளவரசனா இருந்திருப்பாரோ… ஒரு வேளை உங்க காதல் கை கூடாமா போயிருக்கும்… அந்த விட்ட குறை தொட்ட குறை கூட இந்த ஜென்மத்துல நீங்க ஜோடியாக காரணமா இருக்கலாம்” என்ற ஆராதனா உண்மையாகவே தீவிரமான குரலில் சொல்ல…
காவேரியோ அப்போதே கனவுலகில் பறந்திருந்தாள்… தன்னை இளவரசியாகவும்… செழியனை இளவரசனாகவும் கற்பனை செய்து…
“காவேரி… காவேரி” ஆராதனா இரண்டு முறை கூப்பிட… அப்போதுதான் காவேரி நனவுலக்குக்கு வர..
“ஹலோ மேடம் நீங்க மட்டும் லவ் பண்ணி கனவுக்கு போனா அது காதல் டூயட் கிடையாது… இந்த லவ்வை அந்தப் பக்கமும் கொண்டு வரனும்…”
“கண்டிப்பா தனா… நீயே பார்க்கத்தான் போற பாரு… உங்க அத்தைப் பையன் ஒரு நாள் சொல்வாரு… காவேரி என் உலகம்னு…”
“பார்க்கலாம் பார்க்கலாம்… செழியனை சேதுவா மாத்திருவியான்னு” ஆராதனா நக்கலாகச் சொல்ல…
“ஏண்டி நெகட்டிவா ‘சேது” அது இதுன்னு சொல்ற… ”
“காவியக் காதல் எல்லாமே நெகட்டிவ் தான்… எனிவே… இந்தக் காவேரி இல்லைனா செழியன் இல்லேன்னு சொல்ல வச்சிரு… காவேரின்ற ஒரு வார்த்தைல செழியனோட உலகம் அடங்கனும்… அது போதும் எனக்கு… அதுதான் வேணும் எனக்கு” ஆராதனா சொன்ன பாவனையில்
“உனக்கு என்ன அதில வேணும்” புரியாமல் காவேரி கேள்வியாகக் கேட்க…சட்டென்று ஆராதனா சுதாரித்தவளாக
“ஆமாம்… ஒரு வேளை என்னால எங்க அத்தைய எங்க வீட்டோட சேர்க்க முடியலேன்னா.... நீதான் உலகம்னு சொல்ற செழியன்கிட்ட நீதானே பேசனும்… சம்மதிக்க வைக்கனும்” ஆராதனா சரளமாகச் சொல்ல…
“ஹ்ம்ம்… அதுவும் சரிதான்… நான் கண்டிப்பா பண்றேன் தனா… கவலைப்படாத தனா…. “ என்ற போதே
“எனக்கு ஒரு டவுட்… உங்க அத்தைய உங்க வீட்டோட சேர்க்க… ஏன் நீயே உங்க செழியன் அத்தானை லவ் பண்ண ட்ரை பண்ணல…” என்றவளை முடிக்கவிட வில்லை ஆராதனா…
“அதையும் யோசிச்சேன் காவேரி… ஆனால் எந்தப் பக்கம் இருந்து யோசிச்சாலும் அதுக்கு எனக்கும் செட் ஆகல… அதான் விட்டுட்டேன்… எனக்கு என்ன உன்னை மாதிரி விட்ட குறை தொட்ட குறை பந்தம்லாம் இல்ல போல… அதான் அவர் மேரேஜ் பண்ற பொண்ணு நமக்குத் தெரிஞ்ச பொண்ணுனா கொஞ்சம் என் வேலை சுலபமா முடியும்ல… என்னோட கவலை… செழியன் வேற யாரையாவது லவ் பண்ணியிருந்தாங்கன்னா… அந்தப் பொண்ணை எப்படி கரெக்ட் பண்றதுன்றதுதான்… ஆனால் நான் கடவுள்ட்ட வேண்டிட்டிட்டு இருக்கேன்… நீ தான் அவருக்கு செட்டாகனும்னு…”
“தனா…” வெளியே இருந்து செல்வி அறைக்கதவைத் தட்டி அழைக்க…
“ஓகே… காவேரி… நாளைக்கு உனக்கு ஃபோடோ அனுப்புனா… செழியனுக்கு ஆள் இல்லை… நீ தான்னு முடிவு பண்ணீக்கோ… இல்லைனா… அவரை மறந்துடு… பை பை… செல்வி வந்துட்டா…” என்றபடி காவெரியின் பதிலை எதிர் பார்க்காமலேயே அலைபேசியை அணைத்தாள் ஆராதனா…
---
ஆராதனா கதவைத் திறக்க… உள்ளே வந்திருந்த செல்வி ஆராதனாதனாவை நோட்டம் விட்டபடியே…
“என்னடி தல வலிக்குது… தூங்கப் போறேன் அப்படி இப்படினு சொன்ன… பார்த்தா ஃப்ரெஷா இருக்க… தூங்குனியா தூங்கலையா”
“ப்ச்ச்… அப்போ தல வலிச்சது… இப்போ தல வலிக்கல… சரி சரி… உன் ஆத்துக்காரர் வந்துட்டாரா…நான் கெளம்புறேன்… என்னமோ ஃப்ரெண்டுக்கு தலவலின்னு ஓடி வந்து தைலம் தேச்சு விட்ட மாதிரி… புருசன் முக்கியம்னு போய்ட்டதான… வந்துட்டா” எனும் போதே செல்வி அவள் தோளிலேயே ஒரு அடி போடப் போக…
அவளிடம் மாட்டாமல் லாவகமாகத் தப்பித்து ஓடி வந்தவள்… தன் பெற்றோரின் அறைக்குச் சென்றடந்தாள்…
---
அதிகாலை திருமண வீடாக அந்த அந்த மஹாலே பரபரத்திருக்க… ஆராதனா அறையில் மட்டும் பரபரப்புக்கு பஞ்சமாவாக இருக்கும்….மேகலா எழுந்து குளித்து கணவன்… மகளை எழுப்பி விட… ராஜசேகர் முதலில் குளித்து விட்டு… திருமண வேலைகளைக் கவனிப்பதற்காக சென்று விட.. ஆராதனாவும் குளித்து விட்டு வந்தவள்… திருமண முகூர்த்தத்திற்கு கொண்டு வந்திருந்த பட்டுப் புடவையை அணியாமல்….
”அம்மா… நான் சுடிதாரே போட்டுக்கவா… என்னம்மோ புடவை கட்டப் பிடிக்கலம்மா”என்று ஆராதனா தன் அன்னையிடம் ஆரம்பித்திருக்க… அதேவேளை செழியன் முகிலனிடம் தன் அறையில் பேசிக் கொண்டிருந்தான்
“மச்சான் ரொம்ப நாளைக்கப்புறம் நானும் ஆராவும் ஒரே ஃபங்ஷன்ல இருக்கிறோம்… அவ வேற செம்ம க்ராண்டா ட்ரெஸ் பண்ணுவா… அவளுக்கு ஈகுவலா நானும் ரெடி ஆகனும்ல…. அதான் கிராண்டா பட்டு வேஷ்டி சட்டை…” என்றவனிடம்
“அதெல்லாம் சரிடா… கல்யாண மாப்பிள்ளைக்கு கூட இவ்ளோ பெரிய கரை இல்லையேடா… வர்றவங்களுக்கு மாப்பிள்ளை யாருன்னு சந்தேகம் வந்துரப் போகுதுடா…” முகிலன் வம்பிழுக்க… அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுபவனா செழியன்…
“ஆரா ரெடி ஆகியிருப்பாள்ள… நான் அவளப் பார்க்கப் போறேன்…” என்றபடி வெளியேறி இருந்தான்…
---
ஆராதனா விழாவுக்கு ஏதுவாக சற்று வேலைப்பாடுள்ள சல்வாரை … அணிந்து கண்ணாடி முன்னால் அமர்ந்து மிதமான ஒப்பனை செய்து கொண்டிருக்க…
மகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் மேகலா… பின்
“தனா” மகளை அழைக்க… ஆராதனாவும் தன் அன்னையைத் திரும்பிப் பார்க்க
“ஏண்டா… உனக்கு உன் மேரேஜ் நின்னதால யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா… ஏன் நீ புடவை கட்டல… உன் மனசுல என்னதான் இருக்கு தனா… அம்மாகிட்ட சொல்லிரும்மா… நீயா ஏதாவது நெனச்சு உன்னை வருத்திக்கிறாதடா…” மேகலா மகளின் அருகே வந்து நின்றிருக்க…
ஆராதனா அமைதியாக சில நொடி தன்னையேப் பார்த்தபடி இருந்தவள்… பின் அன்னையிடம்
“ஹான்… அதுவும் ஒரு ரீசன் தான்மா… ஆனா நான் வருத்தப்பட்றனா அப்டின்ற அந்தக் கேள்விக்கு பதில் ‘இல்ல’…… என்னமோ தெரியலம்மா… இப்போலாம் படிக்கனும்… என்னோட திறமைய அகாடமிக்ல காட்டனும் நினைக்கிறேன்மா… இந்த மாதிரி கல்யாணத்துல என்னைப் பார்த்துட்டு அடுத்து ரெண்டு வாரத்துக்கு ஜாதகத்தைத் தூக்கிட்டு வர்றது… நல்ல இடம் வர்றப்போ அது செட்டாகாமல் போறப்போ உங்களுக்கு அப்பாக்கும் வாக்குவாதம் வர்றப்போ… எல்லாமே கடுப்பாகுதுமா… சம் டைம் எனக்கும் ஏதாவது வரனைப் பார்த்து… இந்த இடம் செட்டானா நல்லாருக்கும்னு கூடத் தோணும்… ஆனால் இப்போ இந்த டிஸ்ட்ராக்ஷன்லாம் எனக்கு பிடிக்கலை… என்னோட ஒரே குறிக்கோள்… சென்னைக்கு வர்றது” என்ற போதே…மேகலா சுதாரிப்பதற்குள் சட்டென்று சுதாரித்து…
“அதாவது படிக்க வர்றது… ப்ளீஸ்மா… அதுக்கு சரின்னு சொல்லுங்கம்மா… நீங்க மட்டும் தான் இன்னும் ஓகே சொல்லல” தன் தாயிடம் கொஞ்சிக் கெஞ்சிக் கேட்க
மேகலா இப்போதும் மகளைச் சந்தேகமாகப் பார்த்தவள்…
“அன்னைக்கு நம்ம செழியன் … படிக்காத குடும்பம்னு சொன்னதுல வருத்தமா தனா… “
ஆராதானா இப்போது பதில் சொல்லாமல் இருக்க…
“சொல்லு தனா… மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா… அப்போ செழியன் தம்பி சொன்னதுல உனக்கு ரோஷம் வந்துருச்சா…” என்றவர்… தன் மகளை கவலையாக நோக்கியவள்…
“நீயும் கார்த்தி மாதிரி… வேற ஏதாவது…” என்ற போதே
“அம்மா… உங்க மேல சத்தியமா அப்படிலாம் எண்ணம் இல்லம்மா...” என்று உணர்ச்சி வசப்பட்ட மகளை நம்பிக்கையுடன் பார்த்தவர்…
“அந்தத் தம்பி சொன்னதுல… படிக்கனும்னு எண்ணம் வந்தது நல்லதுதான்… ஆனா அதுக்காக உன்னை வருத்திக்காத… உன்னால என்ன முடியுமோ அந்த அளவுக்கு மட்டும் முயற்சி செய்டா…. நீ இப்போ எழுதப் போற எக்ஸாம்ல செலெக்ட் ஆகலைனாலும் பரவால்ல… அதுக்காக வருத்தப்படக் கூடாது சரியா… “
“சரிம்மா… ஆனா நான் செலெக்ட் ஆகிறேனோ இல்லையோ என்னை சென்னை அனுப்புவீங்களா.. அதுக்கு மட்டும் ஓகே சொல்லுங்கம்மா… ப்ளீஸ்மா…”
மேகலா புரியாமல் பார்க்க.... நரேன் அலுவலகத்தில் வேலை கேட்டிருப்பதை சொல்லி வைக்க… மேகலா வேறெதுவும் சொல்லவில்லை….
“நரேன் தம்பி ஆஃபிஸ்லயா… வேணாமே தனா… யாராவது ஏதாவது சொல்லிடப் போறாங்க…”
”ப்ச்ச் அம்மா…. ஊர் ஆயிரம் சொல்லட்டும்… நீங்க .. அப்பா நம்ம குடும்பம் என்ன சொல்றீங்க… எனக்கு நீங்க… நீங்க மட்டும்தான்… முக்கியம்” ஆராதனா உறுதியாகச் சொல்லி தன் தாயைப் பார்க்க… மேகலா யோசித்தபடியே
“நீ என்ன வேணும்னாலும் பண்ணு… ஆனால் நம்ம குடும்பத்துக்கு எந்த ஒரு அவமானமும் அதுனால வந்துறக் கூடாதுமா… ஏற்கனவே உங்க சித்தப்பா பண்ணின வேலைல… நானும் அப்பாவும் ரொம்பவே கவலைல இருக்கோம் தனா… “
“அம்மா… என் மேல நம்பிக்கை இல்லைதானே… சரி உங்க கையைக் காட்டுங்க…” என்றவள்… தானாகவே தன் தாயின் கையைப் பிடித்து இழுத்தவளாக.. அவரின் உள்ளக்கையில் தன் உள்ளங்கையில் வைத்து
“என் அம்மா.. நீங்க சொல்ற பையனை… நீங்க கை காட்ற பையனை கண்ண மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணிப்பேன்… இது உங்க மேல சத்தியம் போதுமா…” என்று சிரித்தவள்…
“ஆனால் ரெண்டு வருஷம் போகட்டும்மா… இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்… சென்னைக்கு வரணும்… அப்பாகிட்ட நீங்கதான் சொல்லி சம்மதிக்க வைக்கனும்மா… ப்ளீஸ் ப்ளீஸ்ம்மா…”
மேகலா நிம்மதியான புன்னகையுடன் மகளைப் பார்த்து தலையாட்டினார்..
---
அடுத்த சில மணி நேரத்தில் வனிதாவின் திருமணம் முடிந்திருக்க… அந்த மஹால் எங்கும் ஆராவரவும்… கலகலப்புமாக இருக்க… செழியன் என்ற ஒருவன் மட்டுமே அந்த ஆராவராத்தில் எல்லாம் பங்கெடுக்காமல் கடுப்புடன் இருந்தான்…
“டேய் செழியா வாடா சாப்பிடப் போகலாம்…” முகிலன் அவனை அழைக்க…
”என் மாமா குடும்பத்துக்கு என்ன ஆச்சுடா… சரி அவங்களை எல்லாம் விடு…இவளுக்கு என்ன ஆச்சு… என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டேங்கிறா… பெரியவங்களுக்குள்ள பிரச்சனைனா… இவளுக்கு என்ன… என் கூட பேச மாட்டாளாமா… இவ என்ன பெருசா பேசுவா… என்னைப் பார்த்தா வாங்கனு சொல்லுவா… அந்த ஒரு வார்த்தை கூட இப்போ இல்லை… தனியா வருவாளான்னு பார்த்தா… ஒண்ணு அவங்க அம்மா இருக்காங்க… இல்லை கார்த்தி இருக்கான்…” நண்பனிடம் கத்தியவன்…
“நான்… நான் நெனச்சேன்னு வச்சுக்கோ… இப்படி இப்படி சொடக்கு போட்ற டைம்ல அவளை என் பொண்டாட்டி ஆக்கிருவேன்… போனாப் போகுதுன்னு விட்டு வச்சிருக்கேன்…”
“இப்போ எதுக்குட்டா இப்படி குதிக்கிற… அந்தப் புள்ள என்னைக்கு உன்கிட்ட பேசிருக்கு சொல்லு… உன்னைப் பார்த்தாலே … நீ வீட்டுக்கு வந்தாலே அடுத்த தெருலதான் இருக்கும்… “
“ஆமாம் நாங்க பூதம் ராட்சசன்ல…” செழியன் முறைத்தபடி சொன்னவன்….
”ஏதாவது ஃபங்ஷன்னா… தேவலோக அழகி மாதிரி மேக்கப் போட்டு சுத்துவாதானே…. இன்னைக்கு என்ன ஆச்சாம் அவளுக்கு… சரி விடு… அவ எப்படி இருந்தாலும் நான் பார்ப்பேன்… அது ஒரு விசயம் இல்ல… என்கிட்ட பேச… இல்ல… என்னப் பார்க்கவே மாட்டேங்கிறாடா…”
“என்னைப் பேச விட்றியா…” முகிலன் சொல்ல
“என்ன” செழியன் தலைக் கேசத்தை கடுப்போடு கோத
“தனா கல்யாண மாப்பிள்ளை –பொண்ணோட சாப்பிடப் போயிருக்கா… செல்வி மட்டும் தான் அவகூட இருக்கா… உனக்கு நல்ல சான்ஸ்… நீ போய் பேசு…”
“டேய் மச்சான்…” என்று செழியன் நண்பனைக் கட்டிப்பிடித்த போதே..
“இதச் சொல்ல வர்றதுக்குள்ள… என்ன ஒரு குதி குதிக்கி்ற… பொறுமையே இல்லடா உனக்கு… உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு… பாவம்டா அந்தப் புள்ள” எனும் போதே
“உன் தனா தங்கச்சியை சீக்கிரம் சட்டுபுட்டுனு எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு… அப்புறம் கேள்விலாம் கேளுடா…“ என்றவன் அடுத்து நண்பனுடன் செல்ல முயன்றபோதே செழியனை நோக்கி வந்தான் பதின்ம வயதில் இருந்த சிறுவன் பரிதாப முகத்தோடு…
செழியனும் அவனைப் பார்த்தவனாக…
“இன்னைக்கு இவனை…” என்று அந்த இளைஞனை நோக்கிப் போக… முகிலன் தடுத்து என்னவென்று கேட்ட போதே அந்த சிறுவன் அருகில் வந்தவனாக
“அண்ணா… அண்ணா அந்த போனை மட்டும் கொடுத்திருங்கண்ணா… நான் அவங்ககிட்டயே கொடுத்துறேன்…”
“அந்த ’அவங்க’ யாரு அதை மட்டும் சொல்லு… நானே அவங்ககிட்ட கொடுத்துறேன்… என்னை ஃபோட்டோ எடுக்கச் சொன்னது யாரு… நான் அவங்களைப் பார்த்து ஏன் என்னை எடுத்தாங்கன்னு கேட்கனும்” செழியன் நக்கலாகக் கேட்க முகிலனோ இது என்ன புதுக்கதை என்பது போல செழியனைப் பார்க்க…
“மச்சான்… இந்த மேரேஜுக்கு வந்த பொண்ணாம்… இந்த செல்ஃபோன்ல என்னை போட்டோ எடுத்துத் தரச்சொன்னுச்சாம்… இவரும் அந்த அம்மாக்கு அசிஸ்டெண்ட் வேலை பார்த்தார்…. கடைசியில என்கிட்ட மாட்டிக்கிட்டாரு…”
முகிலன் இப்போது…
”தம்பி… தொழிலுக்குப் புதுசு போல… நான்லாம் வருசக் கணக்கா உன் ஆளுக்குத் தெரியாமல் ஃபோட்டோ எடுத்து அனுப்புறேனே… பரவால்லடா நான் க்ரேட்ரா…” என்றவனைப் பார்த்து செழியன் பல்லைக் கடித்தபடி… நண்பனை முறைத்தபடி… வந்திருந்த அந்த பையனிடம்
“அவ பேரைச் சொல்லு… மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்…”
“அய்யோ அண்ணா… அந்த அக்காகிட்ட நான் வேற ஒரு விசயத்துல மாட்டிக்கிட்டேன்… ப்ளாக்மெயில் பண்ணினா கூட பரவாயில்ல.. எங்க வீட்ல சொல்லி என் வாழ்க்கையையே மாத்திரும்… “ பரிதாபமாகச் சொல்ல…
“டேய் பாவம்டா… கொடுத்து விடு…” முகிலன் அந்தப் பையனுக்கு ஆதரவாகப் பேச
“ஹான் அது எப்படி… யாரோ ஒருத்தவங்க என்னை ஃபோட்டோ எடுக்க என்ன ரைட்ஸ் இருக்கு… அதை இப்படியே விடச் சொல்றியா…” செழியனும் அடம் பிடிக்க…
முகிலன் இப்போது…
“அப்போ… அந்தப் பொண்ணு.. யாருன்னு சாருக்குத் தெரிஞ்சாகனும் போல… ரொம்ப ஆர்வமா இருக்க போல… “ முகிலன் விளையாட்டாகத்தான் செழியனிடம் கேட்டான்… ஆனால் செழியன் தான் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வில்லை… முகம் மாறி இருந்தது
சட்டென்று அதுவரை தான் தராமல் பிடிவாதமாக வைத்திருந்த அந்த அலைபேசியை அந்தப் பையனிடம் கொடுத்தவன்….
“அந்தப் பொண்ணு எந்த எண்ணத்துல என்னை ஃபோட்டோ எடுக்கச் சொன்னுச்சுனு எனக்குத் தெரியல… ஆனால் இதை மட்டும் சொல்லிரு… என்னோட ஃபோட்டோ தனியா கிடைக்காது... என் வைஃபோட சேர்த்து வேனும்னா கிடைக்கும்னு” என்று அந்த அலைபேசியை அவனிடம் அலட்சியமாக தூக்கிப் போட்டவன் முகத்தில் அப்படி ஒரு அனல்...
“தேங்க்ஸ்ணா” என்றபடி… அலைபேசியை வாங்கிக் கொண்டு அவன் பறந்திருக்க…
“டேய் செழியா… நான் சும்மா ஒரு கிண்டலுக்கு சொன்னேண்டா…” நண்பனின் முக மாறுதலை உணர்ந்தவனாக முகிலன் பேச ஆரம்பித்திருக்க
”ஆரா மட்டும் என் ஒவ்வொரு அணுவிலயும் இருக்கா… அவளைத் தவிர… வேற… ஏன் தேவலோக அழகியா இருந்தா கூட எனக்குத் தேவையில்லடா…”
“டேய்…”
“மத்தவங்க யார் என்ன சொன்னாலும் எனக்கு கோபம் வராதுடா… ’ஆராதனா’ இந்த ஒரு வார்த்தைதான் என் உயிர்னு… என் உலகம்னு எல்லாம் தெரிஞ்ச நீ கிண்டல் செய்ற பாறேன்… உனக்கே தெரியும்தானே… இதோ இப்ப வந்தானே அந்தப் பையன் வயசுல நான் பண்ணின பைத்தியக்காரத்தனம்லாம்… நீ மட்டும் சரியான நேரத்துல வரலேன்னா… நினைக்கும் போதே… அசிங்கமா இருக்குடா எனக்கு ” என்றவனின் குரல் நடுங்கியது மட்டுமின்றி முகமும் வெளிறியிருக்க…
”இப்பே உன் ஆள்கிட்ட பேச வர்றியா… இல்லேனா அவ சாப்டுட்டு போகப் போறா…” முகிலன் நண்பனைத் திசைமாற்ற
செழியனும்… முகிலனும் திருமணப் பந்தி நடக்கும் இடத்தை நோக்கிச் சென்றிருந்தனர்…
---
”ஹலோ வனிதாக்கா… இவ்ளோ சீன்லாம் வேண்டாம்… “
”அத்தான்… இவ வெட்கப்பட்றான்னு ஏமாந்திராதீங்க… பக்கா கேடி… ஃபோன்ல உங்க ஃபோட்டோஸை கேட்டுப் பாருங்க அது சொல்லும்…”
அப்போதுதான் பந்தியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்த மணமகன் மணமகள் முன்னால் நின்று ஆராதனா அவர்களை ஒட்டிக் கொண்டிருக்க…
”தனா… வா வந்து உட்காரு… அவங்களே இப்போதான் சாப்பிடப் போறாங்க… சாப்பிட விடுடி…” செல்வி சொல்ல….
“நான் எங்க ஊர் மாப்பிள்ளை பக்கம்… அத்தான் பக்கத்திலதான் உட்காருவேன்…” என்ற படி வனிதாவின் கணவன் பக்கம் அமர்ந்த ஆராதனா… வனிதாவின் கணவனின் முகத்தைப் பார்த்து
“ஐயோ அத்தான் பயப்படாதீங்க.... எங்க ஊரு மாப்பிள்ளையா கெத்தா இருங்க…” என்று சிரித்தபடி
“வாவ்… எனக்குப் பிடிச்ச ஐட்டமா இருக்கு…ஒண்ணு கூட மிஸ் ஆகாமல் எல்லாமே எனக்குப் பிடிச்சது… யார் மெனு போட்டது… எனக்கே எனக்காக போட்டது போல இருக்கு” தன் இலையில் வைத்திருந்த பதார்த்தங்களில் கவனம் வைத்தபடி
“தனா…. இவ்ளோ பேசுவியா… நீரொம்ப அமைதினு நெனச்சேன்…” என்று வனிதாவின் கணவனும் அவளிடம் பேச ஆரம்பிக்க
“அதெல்லாம் அப்படித்தான் அத்தான்… அடுத்து… அத்தான் முறைனு வந்துட்டா நாங்கள்ளாம் அப்படித்தான்… அதெல்லாம் ஒரு உரிமைத்தான்” என்றவள் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தவள் வார்த்தை அடுத்து வரவில்லை… சட்டென்று நின்றிருந்தது… தூரத்தில் வந்து கொண்டிருந்தவனைப் பார்த்ததும்…
எப்போது செழியனைப் பார்த்தாளோ… அந்த நிமிடமே… இலையில் கவனம் வைத்தவளாக சாப்பாட்டை மட்டுமே பார்த்து சாப்பிட ஆரம்பிக்க… வனிதாவின் கணவன் புரியாமல் ஆராதனாவைப் பார்க்க… அவனுக்குப் பதில் செல்விதான் சொன்னாள்…
“அண்ணா… என்னடா அந்நியன் மாதிரி பேசிட்டு இருந்தவ… அம்பி மாதிரி ஆகிட்டாளேன்னு பார்க்கறீங்களா…. அம்மணி அப்படித்தான்… அவங்க அண்ணன்… அப்பா… அம்மானு அவங்க வீட்டாளுங்க வந்தா அடக்க ஒடுக்கத்தின் சிகரம் ஆகிருவாங்க… “
“ஆனால் செழியன் தானே வர்றான்…” என்றபோதே செழியன் அங்கு வந்திருக்க… வந்தவன் ஆராதனாவின் அருகில் நின்றபடி… வனிதாவிடமும்… அவள் கணவனிடம் பேச ஆரம்பித்தவன்… ஆராதனா இலையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அதைப் பாதி குடித்து விட்டு மீதியை வைத்தபடி அவளைப் பார்க்க…. அவள் நிமிர்ந்து பார்த்தால் தானே…
“தனா” அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் அவளை அழைக்க… அவளோ நிமிராமல் சாப்பிட்டபடி அமர்ந்திருக்க… செழியனுக்குள் ரத்தம் அழுத்தம் மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது… அவளை மட்டுமே அவன் பார்த்துக் கொண்டிருக்க
“செழியா…” வனிதாவின் குரல் அவனை திசை திருப்ப…
”தேங்க்ஸ் செழியா… சாப்பாடு எல்லாம் நம்ம ஊர் பக்கம் மாதிரியே இருக்கு… சாப்பிட்டவங்க எல்லாம் ரொம்ம நல்லாருக்குனு நம்மாளுங்க சொன்னாங்க… முகிலன் சொன்னான் நீதான் எல்லாமே அரேஞ்ச் பண்ணேன்னு”
”இது கூடப் பண்ணலைனா என்ன வனிதா… எனக்காக என் ஃப்ரெண்ட் எவ்வளவோ பண்ணியிருக்கான்… பண்ணிட்டு இருக்கான்… “ ஓரக்கண்ணால் தன்னவளைப் பார்த்தபடியே…
”அவனுக்காக பண்ணாமல் நான் வேற யாருக்கு பண்ணப் போறேன்…” என்ற போதே
“அப்போ எனக்காக இல்லையா” வனிதா பொய்க் கோபம் கொள்ள…
“உனக்காகவும் தான்… அந்த ’உக்காரா ஸ்வீட்’ டேஸ்ட் பாரு… உனக்கு பிடிக்கும்னு மெனுல கண்டிப்பா வேணும்னு போடச் சொன்னேன்… ஆனால் ஸ்வீட் பத்தலைனு சொன்னாங்க சாப்பிடவங்க…” என்றவன்….
“மாப்பிள்ளை சார்…. என்ன என்னையே பார்த்துட்டு இருக்கீங்க… பொண்ணுக்கு பிடிச்ச ஸ்வீட்னு சொன்னேன்ல… ஊட்டி விடுங்க…” செழியன் மணமக்களை ஓட்டிக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் எல்லாம் அவனவளிடம் மட்டுமே…
”செல்வி… எங்க என் மச்சான்… ஆளக் காணோம்…. உன்னை தனியா விட்டுட்டு போயிட்டாரு… இதெல்லாம் கேட்க மாட்டியா… என்ன புள்ளம்மா நீ”
பேசியபடியே அங்கிருந்த மற்றவர்களை தன் பேச்சில் திசைதிருப்பி விட்டவனாக… ஆராதனாவின் இலையில் இருந்த ஸ்வீட்டை கைகளால் எடுக்க…. ஆராதனா இப்போது சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்க்க… அவனோ அவளையேப் பார்த்தபடி அந்த இனிப்பை வாயில் போட…
ஆராதனா அவனைப் பார்த்து முறைக்க முடியாமல் மீண்டும் இலையில் கை வைக்காமல் அப்படியே இலையைப் பார்த்தபடி இருக்க…
”ஏய் தனா” செழியன் அவளை அழைக்க… அவளோ நிமிராமல் இருக்க
“ஏய் உன்னைதான் கூப்பிடறேன்…”
”உனக்கு என்னோட என்ன பிரச்சனை… நீ ஏன் என்கூட பேச மாட்டேங்கிற… என்னைப் பாரு…”
ஆராதனா நிமிராமலேயே இருக்க…
இப்போது வனிதாவின் கணவன் ஆராதனாவைப் பார்த்து
“ஆராதனா… அத்தான் சொன்னாதானே சாப்பிடுவ….” என்று செழியனின் இரத்தக் கொதிப்பை ஏற்றி இருக்க…
“என்னது அத்தானா…” செழியன் சட்டென்று குரலை உயர்த்த…. ஆராதனா இப்போது நிமிர… எப்போதும் போலேயே மிரட்டல் தொணிதான்… ஆனால் அந்தக் குரலில்… அந்தப் பார்வையில்… என்ன உணர்ந்தாலோ அவனையே பார்த்தபடி இருந்தவள்… பார்வையை மாற்றாமல் செழியனையே சில வினாடிகள் பார்த்தபடி இருந்தவள்… பின் பார்வையை மாற்றியபடி சட்டென்று எழுந்திருக்க
“தனா… சாப்பிடலையா” என்று செழியன் அழைக்க… அழைக்க…. அங்கிருந்து செல்ல… செழியன் அவள் பின்னால் ஓடி சென்று அவளைப் பிடித்து நிறுத்த முயல… அதே நேரம் மேகலா ஆராதனா செழியனுக்கு இடையில் அங்கு வந்திருக்க…
“தம்பி நல்லா இருக்கீங்களா… இப்போதான் பார்க்கிறேன்…” என்ற போதே செழியன் மேகலாவுகு பதில் சொல்லாமல்… பேசாமல் அமைதியாக மீண்டும் தன் வந்த வழியே திரும்பி செல்ல…
மேகலா செழியனையேப் பார்த்தபடி யோசனையில் நின்றிருந்தவர்…. ஆராதனவை நோக்கிச் செல்ல முயன்றபோதே…
“அம்மா… ரூம்க்குப் போகலாமா… ட்ரெஸ் மாத்தனும்….ஃபோட்டோ ஷூட் இருக்காம்… வனிதாக்கா கூப்பிட்டாங்க... என்னோட புடவை… நகைலாம் தர்றீங்களா…. ஃபோட்டோக்கு இந்த ட்ரெஸ் நல்லா இருக்காது…” என்றவள் தன் அன்னையிடம் இதை அனுமதியாகக் கேட்கவில்லை…
அப்போது…
”அக்கா…” எங்கோ இருந்து குரல் கேட்க
“ஒரு நிமிசம்ம்மா… நான் வர்றேன்… புடவை ஜுவல் எல்லாம் எடுத்து வச்சுட்டு இருங்க… நம்ம சின்ராசு சித்தப்பாவோட பையன்… என்னம்மா வளர்ந்துட்டான்… அடையாளமே தெரியல… ரொம்ப நாளைக்கப்புறம் இந்த மேரேஜ்ல தான் பார்த்தேன்… நான் பேசிட்டு வந்துறேன்“ என்றபடி ஆராதனா குரல் வந்த திசையை நோக்கி போக… மேகலாவும் அங்கிருந்து சென்று விட்டார்…
---
”என்னடாஃபோனை வாங்கிட்டு வந்துட்ட போல.. ஹ்ம்ம்ம் திறமைசாலிதான்…” காவேரியின் அலைபேசியைக் கையில் வாங்கியபடியே… ஆராதனா அங்கிருந்த சுவரில் அமர்ந்து தோரணையுடன் சொல்ல…
“அந்தாளு தரவே இல்லை… அப்புறம் அந்த அண்ணாவோட… ஃப்ரெண்ட் தான் ஏதோ சொல்லி வாங்கிக் கொடுத்தாரு….”
“ஹ்ம்ம்ம்… அதெல்லாம் இருக்கட்டும்… என் பேரைச் சொல்லலதானே… மவனே சொன்ன… அதுக்கப்புறம் இருக்கு உனக்கு “ என்றவள்…
“12த் படிக்கிற வயசுலேயே உனக்கு என்ன லவ் வேண்டிக் கிடக்கு… ஒழுங்கா படிக்கிற வழியப் பாரு… இல்லை உன்னைய மதிக்கக் கூட மாட்டாங்க… இப்போ லவ் பண்றேன்னு சொல்லிட்டு… மேரேஜ் அப்போ நீ படிக்கலேன்னு கழட்டி விட்டுட்டுத்தான் போவாளுங்க… ஞாபகம் வச்சுக்கோ… ”
“அக்கா அக்கா ப்ளீஸ்க்கா… அப்பாகிட்ட சொல்லிறாதக்கா… அப்பா என்னை உரிச்சு தொங்கப் போட்ருவார்க்கா…. அந்தப் பொண்ணு இல்லைனா நான் இல்லவே இல்லக்கா…” அந்தச் சிறுவன் கெஞ்ச
”அப்டியே விட்டேன்னு வச்சுக்கோ… கன்னம் பழுத்திரும்… படிக்கிற வயசுல என்னடா லவ்வு… லவ் பண்றாராம்… அவ இல்லைனா நீ இல்லவே இல்லையா…” அவன் காதைத் திருகியவள்…
“இதுக்குப் பேர் லவ் இல்லடா… வேற பேர் இதுக்கு… அது தெரியுமா உனக்கு”
“இல்ல என்னோடது லவ் தான்” அந்தப் பையன் அடம் பிடிக்க…
ஆராதனா யோசித்தவளாக…
“நீ ஏன் லவ்னு திங்க் பண்ற தெரியுமா… ”
அவன் யோசிக்க
“இன்ஃபாக்சுவேஷன் ஸ்பெல்லிங் சொல்லு...” இவள் கேட்க
இப்போது அந்தச் சிறுவன் திருதிருவென்று விழிக்க
“இந்த வயசுல… லவ்க்கு மட்டும் தான் ஸ்பெல்லிங் தெரியுது உனக்கு… அதான் உன்னோட இந்த ஃபீலிங்க்ஸை லவ்னு நினைக்கிற… இப்போ புரியுதா… ”
“நீ என்னைக் குழப்புற அக்கா… ”
“நம் கன்ஃப்யூஸ் பண்ணலடா… யோசி… இன்னும் லைஃப்ல எவ்ளவோ நீ சந்திக்கனும்… நீயும் மெச்சூர்ட் ஆவ… அப்போ தெரியும்… அதுவரை இதை லவ்னு கன்ஃபார்ம் பண்ணாத… அக்கா சொல்றது புரியுதா…” ஆராதனா அவன் கன்னத்தைத் தட்டிச் சொல்ல…
தலை ஆட்டியவனாக… பின் ஞாபகம் வந்தவனாக…
“யக்கா… எனக்கு மட்டும் அட்வைஸ் பண்ற நீ… ஆனால் நீ மட்டும் அந்த அண்ணனை லவ் பண்ற… நான் உன் பேரை அவர்கிட்ட சொல்லியிருப்பேன்… நானும் கொஞ்சம் மெச்சூர்ட் தான்… ஆனால் நீ பாவம்க்கா… அவருக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிருச்சு…. நீ ஏதாவது மனசுல ஆசை வச்சிருந்தேன்னா இப்போவே அழிச்சிருக்கா…” அந்தச் சிறுவன் ஆராதனாவுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்திருக்க
“அடிங்… நான் உன்கிட்ட நான் லவ் பண்றேன்னு சொன்னேனாடா… “
“அப்போ எதுக்கு ஃபோட்டோ எடுக்கச் சொன்ன…”
”ஃபோட்டோ எடுக்கச் சொன்னா லவ் பண்றாங்கன்னு அர்த்தமா…”
“ஆமா பின்ன எதுக்கு அந்த அண்ணனை உன் மொபைல்ல எடுக்கச் சொன்ன… அப்போ அது லவ்தானே” என்றவனை பேச விடாமல்…
”அதெல்லாம் லவ் இல்லடா… அது வேற விசயம்… அதெல்லாம் விடு ஆமாம் அவருக்கு கல்யாணம் ஆகிருச்சுனு உனக்கு எப்படி தெரியும்” ஆராதனா கேட்க
”அந்த அண்ணன் தான் சொன்னாங்க… அந்த அண்ணன் அவர் ஃபோட்டோ தனியா கிடைக்காதாம்…. அவர் வைஃபோட சேர்ந்துதான் கிடைக்குமாம்… அவரே சொன்னாரு… அப்போ அவருக்கு கல்யாணம் ஆகியிருச்சுதானே” செழியனிடம் பேசிய விசயத்தைச் சொல்ல…
கேட்ட ஆராதனா ஆச்சரியமாக புருவம் உயர்த்தியவளாக… தனக்குள் யோசித்துக் கொண்டே... சிரித்துக் கொண்டவளாக...
“சாரி காவேரி... இனி நீ எனக்குத் தேவையில்லை...” அவளது உதடுகள் தானாகவே முணுமுணுத்துக் கொண்டது...
“என்னக்கா…. நீயா பேசிக்கிற…” ஆராதனாவைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுவன் கேட்க
“ஒண்ணுமில்ல… சரி சரி நீ போ… அப்புறம் இந்த ஃபோட்டோ மேட்டரை விட்ரு… நான் பார்த்துக்கிறேன்… இதுக்கப்புறம் உன்னைக் கேட்டா… அவங்க யார்னு தெரியாது… ஃபோட்டோ எடுக்கச் சொன்னாங்கன்னு இதைத்தான் சொல்லனும் எப்போதும் சரியா… இல்ல உன் லவ் மேட்டர் சித்தப்பா சித்திகிட்ட போயிரும்… போ” மிரட்டி அனுப்பியவள்… அடுத்த சில நிமிடத்தில் தேவதை போல புடவையில் வந்தவள்… நின்றது நடந்ததெல்லாம் செழியனின் கண்பார்வையில் மட்டுமே… அது மட்டுமல்லாது அவள் அழகில் செழியன் இன்னும் இன்னும் அவளுக்குள் தன்னை ஆழப் புதைந்துக் கொண்டிருந்தான் என்பதை தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன…
----
மதியம் 12 மணி ஆகி இருந்தது…
“செல்வி… இப்போ என்ன ஆச்சுனு இவ்ளோ அழற… அண்ணாக்கு சாதாரண ஃபீவர்னுதானே உங்கண்ணா சொல்றாங்க” ஆராதனா செல்வியைத் தேற்றிக் கொண்டிருக்க…
ஆராதனாக்கு பதில் சொல்லாமல்…. தன் அண்ணனிடம் திரும்பியவள்
“மேரேஜ் முடிஞ்சு… வேலை இருக்கு உன்கூட போயிட்டு வர்றேன் சொன்னார்… ஆனா நீ ஃபீவர்னு சொல்ற… ஃபீவர்னு உன்னைக் கூட்டிட்டுப் போனவர் என்கிட்ட கூட ஏன் சொல்லல… நீயும் ஏண்ணா சொல்லல… நானும் அப்போவே வந்துருப்பேனே… நான் மாமாகிட்ட போகனும்… என்னை வீட்டுக்கு கூட்டுட்டு போ” நரேனிடம் கண்கள் சிவந்து அழுதபடி கேட்டாள் செல்வி...
“கார்த்தி மாத்திரை போட்டு தூங்கிட்டுதான் இருக்கான்னு தம்பி சொல்லுதுல… மூணு மணிக்கு கிளம்பிறலாம் செல்வி….” மேகலா எவ்வளோ சொல்லியும் செல்வி கேட்காமல் அடம்பிடிக்க…
வேறு வழி இல்லாமல்.. இராஜசேகர் – மேகலா குடும்பம் மண்டபத்தை விட்டு கிளம்பி நரேன் வீட்டைச் சென்றடைந்தது…
---
அறையில் படுத்திருந்த கார்த்திக்…. காய்ச்சலில் அரற்றிக் கொண்டிருக்க… மற்ற அனைவரும் கார்த்தியைப் பார்த்துவிட்டு… செல்வியை மட்டும் அறையில் விட்டு விட்டு வெளியே வந்திருக்க... செல்விக்கு மொத்தமும் கலங்கிய நிலை… கணவனை இந்த நிலையில் கண்டவுடன்…
மெல்ல அவனருகில் அமர்ந்தவள்…
“மாமா… …” மெல்ல அழைக்க… அழைத்த போதே அவள் கண்கள் கலங்கி இருக்க… இப்போது கார்த்திக்கும் கண் விழித்திருக்க
“செல்வி…” ஹீனஸ்வரத்தில் முணங்கியவன்…. அவள் கண்ணீரைக் கண்டவுடன்… அவளைத் தன்னருகே அழைத்தவன்
“ஏய் லூசு… ஏன் அழற… எனக்கு ஒண்ணுமில்ல….சும்மா ஃபீவருக்கு போய் இப்படி அழற… எனக்கு என்னமோ பெருசா வந்த மாதிரி “ என்றவனின் வாயைக் கைகளால் பதறி மூடினாள் செல்வி…
கார்த்திக்கும் தன் தவறை உணர்ந்தவனாக…. அமைதியாக தன்னவளை தனக்குள் நிறைத்தபடி… அவள் கைகளில் மெல்ல தன் இதழைப் பதிக்க… செல்வியோ கோபமாக கைகளை விடுவித்தவளாக… அதே நேரம் அவனை விட்டு போகாமல் அவன் தோளில் தலை வைக்க… தன்னோடு அவளைச் சாய்த்துக் கொண்டவன்
”உனக்கு ஒரு விசயம் சொல்லவா செல்வி… இந்தக் காய்ச்சல் நான் விரும்பி அழச்சுக்கிட்டது தெரியுமா…” கார்த்திக் சிரிக்க முயன்றான்…. ஆனால் முடியவில்லை அவனால்…
செல்வி அவனைக் கோபமாகப் பார்த்து
“என்ன மாமா சொல்றீங்க… காய்ச்சலை பிடிச்சு வாங்குனீங்களா… லூசா நீங்க”
“ஹ்ம்ம்… என் பொண்டாட்டிக்காக… அவ பேருக்காக” என்ற கார்த்தியின் வார்த்தைகளைக் கேட்ட போதே… அவன் என்ன செய்து வைத்திருக்கின்றான் என்பது செல்விக்குப் புரிந்திருக்க... வேகமாக… போர்வையை விலக்கி… அவன் கையைப் பார்க்க… அதில் இப்போது கமலி என்ற வார்த்தை மாறி ‘தமிழ்செல்வி’ என்று இருக்க…
செல்வியின் கண்களில் கண்ணீர் மட்டுமே… வார்த்தைகளே வரவில்லை…
“உனக்கு அந்தப் பேர் என் கைல இருந்தது பெரிய விசயமே இல்லைதான்னு எனக்கு நல்லாவே தெரியும்… நீ என்ன சொன்ன செல்வி… கைல என்ன பேர் இருந்தா என்ன… உங்க மனசுல நான் தானே இருக்கேன்னு சொன்ன தானே… ஆனால் எனக்கு என் மனசுல இருக்கிறவதான் என் கைலயும் இருக்கனும் நினச்சேன்…. அன்னைக்கு கமலி பேரைக் கைல குத்திகிட்டது உன் மனசுல நான் இருக்கக் கூடாதுன்னு…. இன்னைக்கு உன் பேரை நான் குத்திக்கிட்டதுக்கு காரணம்… நீ மட்டும் தான் என் மனசுல இருக்கேன்னு காட்டனும்னு… நரேன் தான் கூட்டிட்டுப் போனான்…” என்ற போதே அவள் கண்ணீர் முத்துக்கள் அவன் கைகளில் பட்டு விழ…
“நான் உன்னை மட்டும் தான் செல்வி என் மனசுல வச்சிருக்கேன்... எனக்கு உன் மேல இருக்கிற அன்பை எப்படி காட்றதுன்னு தெரியல செல்வி…” என்றவனைக் கட்டிக் கொண்டவள்… அவன் மார்பிலேயே சாய்ந்து விசும்ப…
“ஐ லவ் யூ செல்வி… தமிழ்செல்வி” அவள் காதில் கார்த்திக் சல்லாபமாக காதலுடன் சொல்ல…
“நான் உங்கள ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன் மாமா…” சொன்ன செல்வியை தன்னுடன் இறுகக் அணைத்துக் கொண்டவனாக… அவள் நெற்றியில் முத்தமிட்டவனாக
”நாளைக்கு எக்சாம் இருக்குதானே… படிக்கனும் தானே… ஓடு ஓடு…” என்ற கார்த்திக் அந்த வார்த்தைகளையும் மனைவியை விடாமலேயேச் சொல்ல..
“ஐ லவ் யூ…” தமிழ்ச்செல்வி அவனைப் பார்த்துச் சொன்னவளாக… அவன் கைகளில் முத்தமிட…
”ஏய் என்னடி… என்னை நல்ல பையனா இருக்க விடு… எனக்கு அந்த மாத்திரைய கொடுத்துட்டு கிளம்பு முதல்ல…” கார்த்திக் இப்போது பயந்து விலகி அமர…
செல்வி ஏதும் பேசவில்லை…
“எந்த டேப்லட்…” என்று மாத்திரைக் கவரை எடுத்தவள்… அவனிடம் மாத்திரையைக் கொடுக்க… அவளது குரலில் வெறுமை மட்டுமே
”சாரிடா… படிக்கனும்ல…” கார்த்திக்கின் குரல் மனைவியிடம் கெஞ்சியது
”ஹ்ம்ம்ம்… தூங்குங்க…” என்றபடி…. அவனை படுக்க வைத்தவள்… போர்வையை போர்த்தி விட்டு வெளியே வர… செல்வி எப்போது வருவாள் என்று அவளுக்காகவே காத்துக் கொண்டிருந்தாள் போல ஆராதனா… செல்வி வெளியே வந்த அடுத்த நிமிடமே
“செல்வி… வா… வா… உனக்காகத்தான் காத்துட்டு இருந்தேன்… படிக்கப் போகலாம் வா… அண்ணாக்கு ஒகே தானே… நேத்து ஃபுல்லா தூங்காம வேல பார்த்தார்ல… அதான் காய்ச்சல் வந்திருக்கும்… தூங்கி எழுந்தா சரி ஆகிரும்…” என்றபடி செல்வியை இழுத்துக் கொண்டு படிக்கச் சென்றாள் ஆராதனா…
செல்வியும் வேறு வழியின்றி ஆராதனா பின்னால் சென்றாள்… கணவனின் எண்ணம் மட்டுமே தாங்கியவளாக
---
அன்று இரவு…
நரேன் வீட்டில் மேகலா கைகளால் தடபுடலாக சமைக்கப்பட்டிருந்தது…. கார்த்திக்கும் காய்ச்சல் இல்லை இப்போது… அதே நேரம் உடல் வலி இருக்க…. அறையிலேயே இருக்க… மற்றவர்கள்… சாப்பாட்டு மேஜையின் முன் குழுமி இருந்தனர்…
“அத்தை, ராஜா மாமா ரொம்ப லக்கி… அத்தை கைல ஒரு வேளை சாப்பிட்டா போதும் அடுத்த வேளைலருந்து அடிமை தான்…“ உணவின் சுவையில் நரேன் மேகலாவைப் பாராட்ட ராஜசேகரிடம்… ராஜசேகர் நரேனிடம்
“சமையல்ல மட்டுமில்ல தம்பி… எல்லாத்திலயும்… ஆனால் நான் மட்டுமல்ல… எங்க மொத்த குடும்பமும்… மேகலா கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்… என்னம்மா அப்படித்தானே“ என்ற ராஜசேகர் முகத்தில் பெருமை மட்டுமே
“நானும்” செல்வியும் மேகலாவைக் கட்டிக் கொள்ள… நரேன் மனநிறைவுடன் தங்கையைப் பார்த்திருக்க… அவனது பெற்றோர்களின் முகத்திலும் அதே மனநிறைவு…
இவர்கள் அத்தனை பேரும் பேசிக் கொண்டிருக்க… ஆராதனா மட்டும் தனது சாப்பாட்டில் கவனம் வைத்து மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்…
“தனா மேடம் நீங்க ஏதும் சொல்லாமல் சாப்பிட்டுட்டு இருக்கீங்க… “ நரேன் அவளைக் கிண்டல் செய்வது போன்ற பாவத்தில் சீண்ட… ஆராதனாவுகோ நரேனின் கிண்டல் எல்லாம் காதில் விழவில்லை போல… அவள் ஏதோ ஒரு நினைவில் சாப்பிட்டபடியே இருக்க….
“தனா…” மேகலாவின் குரல் உயர… இப்போது ஆராதனா நிமிர்ந்தவள்… அன்னை அழைத்த காரணம்… என்ன ஏதென்று தெரியாமல்… புரியாமல் தன் அன்னையைப் பார்த்து விழிக்க…
“உன் கவனம் எங்க இருக்கு… இங்க இல்லையே…” மேகலா மகளைப் பார்த்துக் கேட்க…
“என்ன… யார் என்ன கேட்டாங்க…” என்று அனைவரையும் பார்த்தவள்… மீண்டும் தன் அன்னையிடம் திரும்பியவள்…
“படிச்சதெல்லாம் ரிவைஸ் பண்ணிட்டு இருந்தேன்மா… அதான்… நீங்க பேசுறது காதில விழல” என்றவள்… அதன் பின் அனைவரிடமும் இயல்பாக பேச ஆரம்பித்திருந்தாள்…
மீண்டும் கலகலப்பு ஆரம்பித்திருக்க… ஒரு வழியாக அனைவரும் சாப்பிட்டு … உறங்கப் போக… அங்கிருந்தது செல்வியும் ஆராதனாவும் மட்டுமே…
“மாடில புக்ஸ்லாம் இருக்கு… அங்கேயே படிக்கலாம் தானே… இல்ல கீழ” ஆராதனா கேட்ட போதே…
“ஹான்… இல்ல கீழ வேண்டாம்… மேலேயே படிக்கலாம்… ஆனால் நான் இப்போ வரல… லேட்டா வர்றேன்… ”
“ஏன்...” ஆராதனா செல்வியைப் பார்க்காமல் இரவு படிப்பதற்கு தேவையான புத்தகங்களை எடுத்து வைத்தபடி கேட்க…
“அது....” என்று செல்வி இழுத்தவள்… அடுத்த நொடியே…
“கார்த்தி மாமா தூங்கின பின்னால வர்றேன்… ” என்றவளின் வார்த்தைகளில்… திரும்பி தன் தோழியைப் பார்த்தவள்… நக்கலாகச் சிரித்தபடியே…
“ஏன் உங்க மாமா நீங்க இல்லாம தூங்க மாட்டாங்களா என்ன… “ கண் சிமிட்டியவள்…
“என்னனமோ எங்க அண்ணாவை நீங்கதான் பிறந்ததுலருந்து தாலாட்டு பாடி தூங்க வச்ச மாதிரி பேசுறீங்க…. போ போ… தூங்க வச்சுட்டே வாங்க… இப்போலாம் லவ் மஸ்கிட்டோ தொல்லைலாம் தாங்க முடியலப்பா… அது பேசற லாங்குவேஜ்ஜும் புரியலப்பா”
“ச்சீ போ..” வெட்கப்பட்டிருந்தாள் செல்வி…
“அப்பப்பா… அடேங்கப்பா… இது வேறயா… ஐயோ ’ஆராதனா’ இதெல்லாம் நீ பார்த்தாக வேண்டிய கட்டாயம்…” ஆராதனா வாயே மூடாமல் தன் தோழியை ஓட்டிக் கொண்டிருக்க
”ஈவ்னிங் ஃபுல்லா தூங்கிட்டார்ல… தூக்கம் வரலேன்னு புலம்பிட்டு இருந்தாரு” எனும் போதே ஆராதனா ஏதோ சொல்ல வாயெடுக்கப் போக
அவள் வாயைப் பொத்திய செல்வி… பின் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தியவளாக
“அம்மா தாயே… ஆராதனா தோழியே… ஏதாவது சொல்லிட்டே இருக்காத… நீயும் கல்யாணம் பண்ணிப் பாரு… அப்போ புரியும்… இப்போ என்னை ஆள விடு…” செல்வி முடியாமல் தோழியிடம் கெஞ்ச…
“சரி சரி… பொழச்சுப் போ… ஆனா சீக்கிரம் வந்து சேரு… உனக்காக இல்லை எனக்காக… எனக்கு எக்கச்சக்க டவுட்ஸ் இப்போதான் வருது… ” என்ற போதே
செல்வி இப்போது
“எதுல டவுட் தனா…” கண்சிமிட்ட
“ஹ்ம்ம்… அதுசரி… நீ ஒரு ரேஞ்ச்லதான் இருக்க… இப்போ உன் பக்கத்துல இருக்க வேண்டிய ஆள் நான் இல்லை… தி க்ரேட் கார்த்திகேயன் மட்டுமே… போம்மா போ… இடத்தைக் காலி பண்ணு… நான் போய் என் வேலையைப் பார்க்கிறேன்… படிச்சுட்டு எதெல்லாம் டவுட் வருதோ நோட் பண்ணி வைக்கிறேன்… ”
என்றபடி மாடிப்படிகளில் ஏறியவள்… மீண்டும் திரும்பி… தன் தோழியைப் பார்த்தவளாக
“ஓய் பாப்பா…. உங்க மாமாவைத் தூங்க வைக்கிறேன்னு… நீ தூங்கிறாத… “ என்றவளை நோக்கி… செல்வி அருகில் இருந்த செடியில் இருந்த பூவைத் தூக்கி எறிய…
“ஏய்ய்… ஆக்சுவலா… வேற மாதிரி கிண்டல் பண்ணிருக்கனும்… ஆனால் அதெல்லாம் இப்போ வேலைக்காகாதுன்னு எனக்குத் தெரியும்…” இப்போது ஆராதனா மேல் கனமான ஏதோ ஒன்று விழ…
’ஆ…’ என்றவள்
”இதுக்கு மேல பேசுனா.. கொன்றுவா என் ஃப்ரெண்ட்.. எஸ்கேப் தனா…” வேகமாக ஆராதனா மாடிப்படிகளில் ஏறிச்சென்றிருக்க…
“வாய் வாய்… இருடி நீயும் ஒரு நாள் என்கிட்ட மாட்டுவ..” செல்வி தோழியைச் செல்லமாக திட்டியபடி கார்த்திக் இருந்த அறைக்குச் செல்ல…
“படிக்கப் போகலையா நீ…” என்று கேட்டபடியே எழுந்து அமர…
“ஃபீவர் எப்டி இருக்கு…”
“பரவாயில்ல… எனக்கு ஓகேதான் செல்வி… நீ போய் படி…”
செல்வி அதற்கெல்லாம் பதில் சொல்லாமல்
“கை எப்படி இருக்கு….” என்றபடி அவனருகே அமர…
“நீ கெளம்புடி… படிக்கப் போ… நிலைமை புரியாமல் படுத்தாத என்ன” தன் மனைவியின் நெருக்கம் தந்த அவஸ்தை அவனையுமறியாமல் மனைவியைக் கடுப்பாகப் பேச… செல்வியோ சாவகாசமாக
“ப்ச்ச்…. நான் படிச்சுட்டேன்… நாளைக்கு எக்சாம்க்கு நான் ரெடி…” என்றவள்… அவன் தோளில் சாய…
வேகமாக அவளை விட்டு கார்த்திக் தள்ளிப் போக… செல்வி அவனைப் பிடித்து இழுக்கவெல்லாம் இல்லை…. மாறாக
“மாமா எனக்கு ஃபீவர் வர்ற மாதிரி இருக்கே… உங்க ஃபீவரை எனக்கு ஒட்டி விட்டுட்டீங்களா என்ன” செல்வி இப்போது பாவமாக முகத்தை வைத்துச் சொன்ன போதே… கார்த்திக் அவசர அவசரமாக மீண்டும் அவளருகே வந்து அவள் கழுத்தில் கை வைத்து சரிபார்க்க… அவன் கைகளைத் தனக்குள் வைத்துக் கொண்டபடி… அவனைத் தனக்குள் சிறை வைத்து அவன் கண்களை நோக்க… அதில் ஆயிரம் வேண்டல்கள்…
“உள்காய்ச்சல் கார்த்தி மாமா… ரொம்ப நாளா இருக்கு….”
கார்த்திக் இப்போது அவளை அவஸ்தையுடன் பார்க்க…
“மாத்திரை உங்ககிட்ட மட்டும் தான் இருக்கு…” ஏக்கத்துடன் சொன்னவளைப் பார்த்தவன்…
“ஏய்… இப்டிலாம் பேசாதடி… எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்குடி… செல்லம்ல… நீயும் நானும் ஏற்கனவே பேசிட்டோம் தானே…. ஒரு ரெண்டு வருசம்…” என்றவனால் அந்த வார்த்தைகளை முடிக்க முடியவில்லை…. மென்மையான இதழ்களின் வசம் அவன் மொத்தமாக தன் வசம் இழந்திருக்க… அவள் இதழ்களின் ஆளுமைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவன் கரங்கள் அவள் தேகத்தில் தன் ஆளுமையை ஆரம்பித்திருக்க… அதன் பின் அங்கு யார் யாரை ஆள ஆரம்பித்தனர் பதில் அவர்களுக்கே தெரியாத ஒன்று…
---
”ஓகே… இந்த நோட்ஸெல்லாம் முடிச்சாச்சு… அடுத்து… இது” என்றபடி ஆராதனா அடுத்த தலைப்பை எடுத்தபோதே… இலேசான கொட்டாவி வந்திருக்க…
”மணி என்னாகுது… ஐயோ இன்னும் ரெண்டு சப்ஜெக்ட் பெண்டிங்க்ல இருக்கே… அது எல்லாமே செல்விதான் வந்து சொல்லிக் கொடுக்கனும்… இவ என்ன இன்னும் ஆளக் காணோம்… தூக்கம் வேற வருதே…. நேத்தும் தூங்கல… ” தனக்குள் பேசியபடியே தனது அலைபேசியை எடுத்தவள்…
”மணி 12.30 ஆகிருச்சு… இன்னும் வரலை… சும்மா நாம கிண்டல் பண்ணினோம்… ஆனால் உண்மையிலேயே தூங்கிட்டாளா…” என்றபடியே… அலைபேசியில் செல்விக்கும் அழைத்திருந்தாள் ஆராதனா….
ஆராதனா அந்த அளவுக்கு செல்வி-கார்த்திக் உறவில்… அதில் அவர்கள் வைத்திருந்த எல்லைக் கோட்டில் நம்பிக்கை வைத்திருந்தாள்… அதனால் தன் தோழியை அலைபேசியில் அழைக்கவும் தயங்கவில்லை அவள்…
இன்னும் சொல்லப் போனால்… சற்று தூக்க கலக்கத்தில் இருந்ததனால் அவள் கீழே இறங்கிப் போய் செல்வியை அழைக்கவில்லை… இல்லையென்றால் அறைக்கே போய் அறைக்கதவைத் தட்டி இருப்பாள்… அந்த அளவு நம்பிக்கை வைத்திருந்தவள்… செல்வியை அலைபேசியில் அழைத்ததில் ஆச்சரியம் இல்லைதான்…
----
செல்வி… கார்த்திக்… அவர்கள் வேறொரு உலகத்தில் பயணம் செய்து கொண்டிருக்க… அவர்களை… இந்த உலகத்திற்கு மீட்டு வந்தது செல்வியின் அலைபேசியில் வந்த அழைப்பு…
செல்விதான் முதலில் உணர்வுக்கு வந்து… மெல்ல கார்த்திக்கிடமிருந்து விலகி… தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தவள்… பின் கார்த்திக்கிடம் காட்ட…
கார்த்திக் அந்த அலைபேசியை அவளிடமிருந்து வாங்கி… சத்ததின் அளவை சுத்தமாகக் குறைத்துவிட்டு…
“அடிச்சுட்டு இருக்கட்டும் விடு…” என்று அசட்டையாக மனைவியிடம் சொன்னவனின் கவனம் முழுவதும் மனைவியிடம் மீண்டும் குவிய…
“ஐயோ… அவ கால் பண்ணிட்டு நேரா வந்துறப் போறா…” என்றபடி கணவனைத் தள்ளிவிட்டு எழுந்தவள்…
“பாருங்க மறுபடியும் கால் பண்றா பாருங்க…”
“இப்போ என்னதாண்டி என்ன பண்ணச் சொல்ற… இங்க பாரு சும்மா இருந்தவனை நீங்கதான் எனக்கு மருந்து மாத்திரைனு ஏத்தி விட்டுட்டு… ஃப்ரெண்டு கூப்பிடறான்னு போகப் போறியா…”
செல்வி பரிதாபமாக விழிக்க
“அப்படி ஒரு ஐடியா இருக்கா என்ன… என்ன முழிக்கிற… கொன்னுருவேன்…” என்றவன் அவளிடம் அவள் அலைபேசியைக் கொடுத்தபடி
“இந்தா பேசு… தூங்கிட்டேன்… காலையில படிக்க வர்றேன்னு சொல்லு” கார்த்திக் அவனின் மோகம் கலைந்த எரிச்சலோடு சொல்லி மனைவியைப் பார்க்க
“ப்ச்ச்…. தூங்கிட்டேன்னு நானே சொல்லவா… அதுமட்டுமில்லாமல்… உங்க தங்கச்சி உங்களுக்குத்தான் கங்கா… யமுனா சரஸ்வதிலாம்… அவளோட சந்திரமுகி தரிசனம்லாம் உங்களுக்குத் தெரியாது… நான் பேச மாட்டேன்பா… போனை எடுத்தேன்… பேயாட்டம் ஆடுவா…” வேகமாக மறுத்துச் சொன்னவள் முகத்தில் பளிச்சென்று மின்னல்…
“ஹான்… ஐடியா… நான் பேசுனாதானே உங்க தங்கச்சி சந்திரமுகியா மாறுவா… நீங்க பேசுனா பதில் கூட பேச மாட்டாள்… நீங்களே எடுத்துப் பேசுங்க… நான் தூங்கிட்டேன்னு சொல்லிருங்க…”
செல்வியின் யோசனை கார்த்திக்கும் சரியென்று பட…
“என்ன இருந்தாலும் என் பொண்டாட்டி புத்திசாலித்தனத்துக்கு ஈடாகுமா…” கார்த்திக் மனைவியைப் பிடித்து இழுத்து அவள் சுதாரிப்பதற்குள் அவள் இதழில் தன் பாராட்டை தன் இதழ்களால் காட்டியிருக்க
கைகளாலேயே அவனை அடி போட்டவளாக… அவனிடமிருந்து பொய்க் கோபத்துடன் விலகியவளாக
“இதான் சாக்குனு விடுங்க… பேசுங்க… போன் அடிக்குது பாருங்க…” என்றவளுக்கு மீண்டும் கன்னத்தில் முத்தக் கொடுத்துவிட்டுத்தான் தன் தங்கையின் அழைப்பை எடுத்தான் கார்த்திக்
---
”அண்ணா…” கார்த்திக்கின் குரலைக் கேட்டவுடன் தன் குரலை உயர்த்தாமல்… அண்ணனிடம் பேச ஆரம்பித்தாள் ஆராதனா
---
“தூங்கிட்டாளா… சரிண்ணா”
---
“இல்லண்ணா… இன்னும் கொஞ்ச படிக்கனும்…”
---
“சரிண்ணா… ரொம்ப நேரம்லாம் படிக்கல… இதோ ஒரு அரை மணி நேரம் தான்… தூங்கப் போயிருவேன்… உனக்கு ஃபீவர் எப்படி இருக்கு”
“வைக்கிறேண்ணா… ” ஆராதனா போனை வைத்து விட்டு… அந்த போனையே வெறித்திருந்தாள்… அதன் பின் அவள் படிக்கவில்லை… புத்தகங்களை மூடி வைத்தாள்…
ஆராதனாவின் குடும்பம் நம்புவது போல… செழியன் தன்னவளை எண்ணிக் கொண்டிருப்பது ஆராதனா ஒன்றும் வெகுளி இல்லையே… செல்வி கார்த்திக் தங்கள் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு சென்றதை அனுமானித்துக் கொண்டவளாக…
“ப்ச்ச்… செல்வி எதையும் முன்னெச்சரிக்கையாத்தான் பண்ணுவா… எனக்கு நம்பிக்கை இருக்கு… அவ படிப்புக்கு பிரச்சனை வராமல் தான் பார்த்துக்குவா…” தனக்குள் சொல்லிக் கொண்டவள்… அதற்கு மேல் யாரைப் பற்றியும் நினைக்காமல்… எதையும் நினைக்காமல்… மனதை அடுத்த நாள் தேர்வுக்கு தயார் படுத்தியவளாக… உறங்கச் சென்றிருந்தாள்…
கண்களை மூடியவளின் கண்களில்… செழியனின் பார்வையும்... காலையில் திருமண மண்டபத்தில் அவளை மட்டுமே தேடி அலைந்த அவனது பார்வையும் மட்டுமே…
சிறுமியாக இருந்த போது… அவன் கண்களில் இவளைப் பார்த்த போது இருந்த அலட்சியமும்… இப்போது குமரியாக இருக்கும் இவளைப் பார்த்த அந்தக் கண்களில் இருந்த ஆர்வமும்… நினைத்துப் பார்த்தாள்…
நினைத்துப் பார்த்த நிமிடங்கள்… காதல் என்று கணிக்கத் தவறிய நிமிடங்கள்…
யார் யாரையோ நம்பியோ செழியன் என்பவனுக்கு போட்டு வைத்த வலை அவள் கைகளில் இப்போது…
இனி காவேரி இல்லை மூன்றாம் நபர் யாரோ ஒருவரின் உதவி தேவையில்லை…
செழியன் என்ற வேங்கையை… தான் நினைத்தபடி எல்லாம் செய்ய வைத்து… தன் பின்னால் அலையும் நாய்க்குட்டி போல் ஆக்கும் விந்தை மிக சுலபம்…
மனம் நிம்மதி அடைய… கண்களில் உறக்கம் வரவில்லை… வெகு நாட்களுக்குப் பிறகு அவளே எதிர்பார்க்காத அவனின் அவள் மீதான அந்த ஆர்வம் கலந்த பார்வையில்…
அவள் நினைத்தது விரைவிலேயே நடக்கப் போகிறது…
அன்று தெருவில் அவனிடம் அவமானப்பட்டு வீழ்ந்து கிடந்த தன் அண்ணனின் நிலை காட்சியில் விரிய…
“செழியா… உன் பேர் சொல்லக் கூட பிடிக்கலைதான்… உன் கூட எப்படி பழகப் போறேன்… எப்படி உன் பக்கத்தில நிக்கப் போறேனோ எனக்கே தெரியல… ஆயிரம் கம்பளிப் பூச்சிக்கு நடுவுல நிக்கிற மாதிரி… ஆனால் வேறு வழியில்லை… உன்னை பழிவாங்க எனக்கு வேறு வழி தெரியலடா… சகிச்சுட்டுத்தான் ஆகனும்… ஆனால் உன்னை ’தனா’ ’தனா’ன்னு என்னை நினச்சு பைத்தியம் பிடிக்க வைக்கல… என் பேர் ஆராதனா இல்லை… சீக்கிரமா உன்னை சந்திக்கிறேன்” என்றபடி அடுத்த நிமிடம் உறங்கியும் இருந்தாள்…
அதே இரவு… சென்னையின் இன்னொரு புறம்…
“ஏய்… ஆரா… மறுபடியும் என்னை பைத்தியம் பிடிக்க வைக்கிறடி… இன்னைக்கு உன்னைப் புடவைல… அந்த அழகுல… பார்த்த உடனே எனக்குள்ள ஆயிரம் பட்டாம் பூச்சி பறக்குத்துடி… எங்க உன் பக்கத்துல வந்தா என்னையே மறந்துருவேன்னுதான் உன்கிட்ட தள்ளி நின்னேண்டி… எப்படி என்கிட்ட வந்து சேரப் போற… உன்னைப் பார்த்துட்டு வந்து இப்போ நீ இல்லாத நிமிசம் எல்லாம் நரக வேதனையா இருக்குடி… இனி உன்னை விட்டு விலகி இருக்க முடியாது போல ஆரா… நாளைக்கும் உன்னைப் பார்க்க மட்டும் தான் முடியும்… பேச முடியாதேடி… எப்போடி என் பக்கத்துல என் உரிமையா வந்து சேருவ… அந்த நாள் எப்போ வரும்…” தன் கட்டிலின் மறுமுனையை ஏக்கத்துடன் பார்த்தவன்… அவள் தன் அறையில் தன் அருகில் தன் அணைப்பில் வரும் காலம் ஏங்கியவனாக… தன் கையில் இருந்த புகைப்படத்தில் அவளைப் பார்த்தவன்…
“இன்னைக்கு என் ஆராவைப் நான் பார்த்த பார்வைல காதல் மட்டுமில்ல… ஆண்மகனா பெண்ணைப் பார்க்கும் பார்வையும்…”
”ஆனால் இந்த ஃபோட்டோ பார்த்தப்போ… இவ என்னோட ’ஆரா’ ன்னு.. எனக்கு… எனக்கு மட்டுமே சொந்தமானவன்னு என் பார்வை மாறிய நிமிடம்… இந்த ஃபோட்டோ ரொம்ப ஸ்பெஷல் ஆரா… உனக்குத் தெரியாது ஆரா நீ எனக்கு எந்த அளவு முக்கியம்னு… இன்னைக்கு யாரோ மூணாம் நபர் உன்கிட்ட’அத்தான்’ உரிமை கொண்டாடினப்போ… நான் எப்படி கோபத்தை அடக்கினேன் எனக்கே தெரியலடி… என் மனசுல இருக்கிற காதலை… உன்னைப் பார்க்கும் போது… காட்டமுடியலேன்னு நினைக்கிறப்போ… அதை நீ உணரலேன்னு நினைக்கிறப்போ… எனக்கு உன்கிட்ட கோபம்தான் வந்து நிக்குது… “ புகைப்படத்தைப் பிடித்திருந்த அவனின் கைகள் இப்போது நடுங்க ஆரம்பித்திருக்க
”முகிலன் சொல்வான்… ’டேய் செழியா… நீ ஆராதனா விசயத்துல மட்டும் கோழைனு’… அது உண்மைதான் ஆரா… உன்னை என் பக்கதில கொண்டு வந்து சேர்க்கிற வரை… எனக்குள்ள ஆயிரம் எரிமலை அடக்கி வச்சிருக்கிற மாதிரி தவிப்புதான்… அந்த நெருப்பை நீ மட்டும் தான் அணைக்க முடியும்… என் காதல் ஆழமானது ஆரா… உனக்கும் அது புரியும் தானே…. நாம் உன்கிட்ட சொன்னா புரிஞ்சுக்கிருவதான… என் அளவுக்கு வேண்டாம்… நான் உன் மேல வச்சிருக்கிற காதல் அளவுலாம் வேண்டாம்… கடுகளவு கொஞ்சமே கொஞ்சம் என்னை நீ நேசிச்சா போதும் உனக்கும் சேர்த்து நான் உன்னைக் காதலிச்சுக்குவேண்டி… ஏய் உனக்கு புரியுதாடி… உனக்கும் சேர்த்து நம்ம காதலை விருட்சமா வளர்த்து வச்சிருக்கேண்டி… அதுனால நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்… நீ என்கிட்ட வந்து சேர்ந்தா மட்டும் போதும்… உன்னைக் என் கண்ல வச்சுப் பார்த்துப்பேன்… சரியா…”
புகைப்படத்தில் இருந்த ஆராதானாவைப் பார்த்துக் கேட்டவன்…
“என்ன பேசிப் பேசி போரடிச்சுட்டேனா… பைத்தியக்காரனா இவன்னு யோசிக்கிறியா… இந்த செழியன் இருக்கான்ல அவன் காதல் பைத்தியம்… இல்லல்ல ஆராவோட பைத்தியம்.. நீ அவனைப் பார்த்தது இல்லைல.. இப்போவே இப்படின்னா… என்னோட பலவருசக் காதல்லாம் கேட்கனுமே… தயாரா இரு…” புகைப்படத்தில் இருந்த ஆராதனாவின் தலப்பாக்கட்டில் தன் நெற்றியை வைத்து முட்டியவன்… மீண்டும் அந்த புகைப்படத்தை மேஜை மேல் அது இருந்த இடத்திலேயே வைத்து விட்டு படுத்தவன் உறங்கியவன் எப்போது உறங்கினான் அவனுக்குத் தெரியவில்லை…
---
Yerkanave chezian aara aara nu than suthuran... Inum enalam andha aara palivanguren pervalinu senju vaikaporalo🤔🤔🤔🤔
Let us wait and see...
பெரிய எபிதான். ஆனா என்னவோபிடிக்கல.இந்த மாதிரி உங்க ஹீரோயின் கேரக்ட்டர் கண்மணிகீர்த்தனா போல இல்ல.. Let we see how do changechange thst character
I really dont like this Aradhana character from the begining. Her lecturer is right about her
Sezhiyan soldra " unakum sethu una nan kathalichikuvendi" arumaiyana varigal. Ara kum ulukulla sezhiyana pudichi iruku. But yen Avan pera keta kuda kambali puchi orra mathiri iruku nu soldra. Adi a ara una elam pethangala? Ila senjagala?
Lovely update pravee..
Annanukaga pazhivangal
Hoom aaaravoda plan oh god
Avan erkanave aaara pothiyama tan alanjitrukan chinna vayasula irunde
Nadanthathukellam pazhivanganumnu kelambita kadaisila onnume irukadu
Aaara ku purium Kalam varapo eduvum ila ma pogama irukanum.
Selvi mel vaitha nambikai odaum naaal varapoda
Inda Kaveri vera idaila ha ha